உதைபந்து

Tuesday, December 13, 2011

"அட்ராசக்க" சி.பி.செந்தில் குமார் நல்லவரா? கெட்டவரா? இந்த குளத்தில் பாறாங்கல் போட்டவர்கள்-2

ரொம்ப நாளச்சுங்க நாம சந்திச்சு...........!!! கம்பஸ் என்று சொன்னால் எவளவு வேலை வரும் எண்டு அனுபவசாலிகளுக்கு நல்லாவே தெரியும் (அங்க நீ எந்த ஆணிய புடுங்கிற எண்டு தமிழ் கூறும் நல்லுலகம் கேள்வி கேக்க வேணாம் ). கொஞ்சம் நேரம் கிடச்சுது, அதனால உங்க தாலிய மறுபடியும் அறுக்கலாம் எண்ட முடிவோட எழுதுறன். எப்ப பாரு மொக்க பதிவாவே எழுதி தள்ள வேணாம், கொஞ்சம் பிரயோசனமா ஏதாவது எழுதலாமே எண்டு நிரூபன் அண்ணா போன்றோரது கோரிக்கைகள் + அறிவுரைகள் தொடர்கின்றது. அந்த ஒரு யோசனையும் மனதில் இருகின்றது என்பதை  நிரூபன் அண்ணா போன்ற நல்ல உள்ளங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். 

அதற்கு முன்பு என்னை இந்த வலைப் பதிவராக தூண்டியதில் பங்களிப்பு செய்த முக்கியமான மூன்று பேரை எனது பார்வையில் "இந்த குளத்தில் பாறாங்கல் போட்டவர்கள் " என்ற தலைப்பின் கீழ் எழுதி வருகின்றேன். அந்த வகையில் இன்று எனது வலையில் சிக்கியிருப்பவர் பதிவுலக மூத்த பதிவர் சி.பி.செந்தில்குமார். (அண்ணே ...... !! உங்களுக்கு கல்யாணம் ஆச்சில்ல, அதுதான் மூத்த பதிவர் பட்டம்)



நான் கொழும்பிற்கு வருவதற்கு முன்னர் , இவ்வாறான வலைப்பூ இருப்பது தொடர்பில் நிரூபன் அண்ணா சொல்லி கேட்டிருக்கிறேனே ஒழிய , அப்போதைய காலகட்டத்தில் என்னிடம் இணைய வசதி இல்லாத படியால் அதை பரீட்சித்து பார்க்கவுமில்லை, அது போக எந்த வகையில் எழுத வேண்டுமென்ற ஒரு அடிப்படை அறிவும் இருந்திருக்கவில்லை. (யார் சார் அது "இப்ப மட்டும் உனக்கு வந்திருச்சாக்கும் ?" எண்டு கலாய்கிறது?) 



நான் பல்கலைகழகம் வந்த புதிதில் எங்களுக்கு கணணி ஆய்வு கூடத்தில் ஒரு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு கணணி கற்கை ஒன்று நடைபெறுவது வழமை. அந்த நேரத்தில் விரிவுரையாளர் பாடம் நடத்திக்கொண்டிருக்க , எனது விரல்கள் கூகிளை தடவிக்கொண்டிருக்கும். ( காணாததை கண்டது தானே... அது தாங்க "காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி") . அந்த நேரத்தில் தான் அண்ணன் என்னிடம் சிக்கினார். அண்ணனை எனக்கு அறிமுகம் செய்த சுவாமி . நித்தியானந்தாவுக்கு நன்றிகள். (ஜயோ...!! யாரும் தப்பா நினைக்க வேண்டாம். மேற்கொண்டு படிங்க) நித்தியானந்தா + ரஞ்சிதா காணொளி வெளியாகி ஊடகங்களில் சக்கை போடு போட்டு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டு எல்லாம் எகிறி பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த சமயம். 



ஏறக்குறைய ஒரு அறுபது ஷோ பார்த்து, காட்சிகள் அனைத்தும் மனப்பாடமான நிலையில் , ஊடகங்களின் இதுபற்றிய நிலை அறிய கூகிளை தடவ ஆரம்பித்தேன். அனைத்து இணையதளங்களிலும் சமூக அக்கறையின் குரல் ஓங்கி ஒலித்துகொண்டிருந்தது. அனைத்து இணையதளங்களையும் மேய்ந்து முடித்த பிறகு, ஏதோ ஒன்று குறைவதாக பட்டது. யாராவது இதை வைத்து காமடி பண்ணியிருக்க மாட்டார்களா ? ஜாலியாக பார்க்கலாமே என்ற ஆவல் மேலொங்க மீண்டும் இணைய தளங்களை முற்றுகையிட இருந்த  என்னை நிரூபன் அண்ணாவின் குரல் நிறுத்தியது. " சம்பவம் ஒன்றை செய்தியாக தருவது தான் இணையதளங்கள், ஆனால் இந்த காலகட்டத்தில் நல்ல விமர்சகர்களாக இருப்பது வலைப்பூ எழுத்தாளர்கள் தான்".  உடனே ஓடினேன் ..... ஓடினேன்.... இண்ட்லியின் எல்லை வரை ஓடினேன். அங்கே தான் சிறுத்தை சிக்கியது.




"நித்யானந்தா , ரஞ்சிதா 18+ " என்ற தலைப்பை பார்த்ததுமே பேருவகை அடைந்தேன்+ அகமகிழ்ந்தேன்+ ஆனந்தபூச்சொரிந்தேன் + பிறவிப்பயன் அடைந்தேன் (தூ.....................!!!) அண்ணனின் ஒவ்வொரு வரிவரியாய் ரசித்து சிரித்தேன், அதன் பிறகு நித்தியானந்தா + ரஞ்சிதா தொடர்பில் அண்ணன் ஒரு தொகை பதிவு போட்டிருந்தார். அத்தனையும்  ஒன்று விடாமல் ஓவர் டைம் செய்து வாசித்தேன்.  இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட அண்ணனின் அனைத்து பதிவுகளையும் வாசித்து முடித்திருந்தேன். எவ்வாறான ஜோக்குகளை நான் ரசித்து சிரிப்பேனோ, எந்த வசன நடை என்னை கவருமோ அத்தனை பத்து பொருத்தமும் அமைந்திருந்தது அண்ணனின் பதிவில். 


விமர்சனங்களில் நகைச்சுவையோடு வந்து விழுகின்ற சரியான பார்வை, மறக்காமல் படத்தோடு ஹீரோயினுக்கும் சேர்த்து மார்க்கு போடுகின்ற நல்ல மனப்பாங்கு (????) அது கில்மா படமாக இருந்தாலும் எங்கே பார்த்தேன் , எப்போது பார்த்தேன் , யாரோடு பார்த்தேன் என்று அண்ணன் வெள்ளந்தியாக சொல்லிவிட்டு மனைவியிடம் அடிவாங்க போவதை நினைக்கையில் எனக்குள் எழுந்த அனுதாப அலை என்று அண்னன் மீது என‌க்கிருந்த அபிமானத்தை அதிகரித்தது. 

அதன் பின்பு எனது இணைய உலாக்களின் போது தவிர்க்க முடியாத ஒரு தளமாக "அட்ராசக்க' மாறிப்போனது. எனக்கு எனது கைத்தொலைபேசியில் ஒவ்வொரு நாளும் 20 எம்.பி பக்கெஜ்களை தரவிறக்கி இணயத்தளங்களை பார்ப்பது எனது வழமை. தமிழ் வின் இணையத்திற்கு அடுத்தபடியாக எனது கைதொலைபேசியிலும்  நான் உடனே பார்க்கும் தளமாக மாறிப்போனது "அட்ராசக்க".  பேஸ்புக் கூட அதற்கு அடுத்தபடியாகத்தான் நான் பார்கிறேன் என்பது நானே இன்னும் நம்பாத ஆச்சரியம். 



எந்த வகையில் சி.பி என்னை கவர்ந்தார் யோசித்து பார்க்கின்றேன்...............

1. எனக்கு தேவைப்படுவது , ஒரு படம் படம் பார்ப்பதற்கு முன்னர் அது பற்றிய ஒரு கண்ணொட்டம் . தியேட்டரில் கொடுக்கப்போகும் 250 ரூபவிற்கு படம் பொருத்தமானதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு தான் படம் பார்க்க போவேன். (விதிவிலக்கு இயக்குனர் பாலாவின் படங்கள் மற்றும் யுவன் இசையில் வந்த படங்கள்) . ஆக ஒரு படம் வெளியான ஒரு வாரத்தின் பின்புதான் இங்குள்ள பத்திரிக்கைகளோ, இணையதளங்களோ விமர்சனத்தை வெளியிடுகின்றன. ஆக சூடாக விமர்சனம் தருபவர்கள் வலைப்பதிவர்கள் மட்டுமே....!!!! அதிலும் நம்ம அண்ணன் முதல் நாள் , முதல் ஷோ பார்த்துவிட்டு அடுத்த அரை மணி நேரத்தில் விமர்சனம் ரிலீஸ் பண்ணிவிடுகிறார். எனவே ஒரு படத்திற்கு 250 ரூபவை அழுவதற்கு முன்னம் அட்ராசக்க முன் அமர்வது வாடிக்கையாகி போனது. அதிலும் டாக்டர் படம் என்றால் சி.பி அண்னனின் ரேட்டிங் இல்லாமல் நகர்வது கிடையாது. குமுதம் , ஆனந்தவிகடன் ரேட்டிங் கணக்கில் இல்லை.

2.விமர்சனமாகட்டும், சாதாரண கட்டுரைகளாகட்டும் , நகைச்சுவையாகட்டும் சுற்றி வளைக்காமல் , வார்த்தகளை போட்டு அடுக்கி கொல்லாமல் (என்னைப் போல) சாமன்ய மொழிநடையில் , நகைச்சுவையாக கூறவந்த விடையத்தை கூறிவிடும் லாவண்யம். அதிலும் திரைப்பட வசனங்களுக்கு மட்டுமில்லாமல் தனது வசங்களுக்கும் அண்ணன் கவுண்டர் பாணியில் கவுண்டர் அடிப்பது சந்தானத்துக்கும் வராத கலை. (பன்னிகுட்டி ராமசாமியை அண்ணன் கொப்பி அடிக்கிறாரா இல்லை அண்ணனை ராமசாமி கவ்வுகிறாரா என்பதை யாராவது கண்டுபிடிச்சு ஒரு சூடான பதிவு போடுங்கப்பா #கோத்துவிடுறது)

3. நாட்டில் , உலகில் எந்த சீரியசான சம்பவம் நடந்தாலும் அதுபற்றி ஒரு பதிவை சீரியசாக போட்டுவிட்டு , அதன் பிறகு அதை காமடியாக்கி ஒரு பத்து பதிவு போட்டு வயிறுகளை புண்ணாக்குவது.

4.அண்ணனின் வசன நடை

5. எந்த சமகால நிகழ்வு தொடர்பாகவும் அண்ணனிடம் குறைந்தது ஒரு பதிவாவது இருக்கும்.

6.அண்ணன் பதிவில் போடுகின்ற புகைப்படங்கள் கொள்ளை அழகு. நடிகைகள் படம் மட்டுமில்லீங்க.... எல்லாம் தான்

7.சக பதிவர்களோடு நட்பு பாராட்டும் தன்மை




இப்போ எந்த வகையில் அண்ணன் என்னை ப‌திவெழுதுவதில் தாக்கம் செய்தார் என்று பார்ப்போமா????? (இவரு யுரேனியம் ,  சி.பி தைத்தேனியம் ரெண்டும் தாக்கமடைஞ்சு அணுகுண்டு பண்ணபோறாய்ங்க என்ற பன்னிக்குட்டி ராமசாமியின் குரல் எனக்கு கேட்கிறது) 

லோஷன் அண்ணனை பார்த்து எப்படி எனது பன்முக அறிவை வளர்க்க வேண்டுமென்று கொஞ்சமாவது அதை வளர்த்து வைத்திருந்தேன். (நம்புங்க சார்....). நிரூபன் அண்ணாவின் வலைப்பூ பற்றிய அறிமுகம் என்னை தூண்டியிருந்தாலும் , எழுதுவதற்கான ஒரு அடிப்படை சிக்காததால் ஆரம்பித்திருக்கவில்லை. சி.பி அண்ணனின் பதிவுகளை வாசிக்க வாசிக்க அந்த பதிவுகளின் தாக்கம் என்னில் அதிகரித்தது. இந்த நிலையில் தான் "அட்ராசக்க" தளத்தின் மூலம் "பன்னிக்குட்டி ராமசாமியும்", 'சேட்டைகாரனும்", " மனோவும்" அறிமுகமாகி என்னை கவர்ந்தார்கள். இந்த வலைபதிவு கர்த்தாக்களின் (எனக்கு தெரிந்து, எனது ரேட்டிங்கில்) பதிவுகள் என்னையும் பதிவு போட தூண்டின. அதில் சி.பி அண்ணனின் அட்ராசக்க தளத்தின் ஆதிக்கம் அதிகம்.



ஆக அந்த தாக்கத்தின் விளைவு நானும் இப்போ ஒரு வலப்பதிவர் ஆகிவிட்டேன். தனது எழுத்துக்களால் என்னையும் பதிவாளனாக தூண்டியவர் சி. பி அண்ணன் அவர்கள்.

எனக்கு எனது நண்பர்களாலும் , தெரிந்தவர்களாலும் அறிமுகம் செய்யப்பட்ட வலைத்தளங்கள் பல. அவை வெறுமனே ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுபனவாகவும், புள்ளி விபர கோப்புகளாகவுமே இருந்தன ஒழிய , ஒரு ஜனரஞ்சக செறிவு நிறைந்தவையாக இருந்திருக்கவில்லை. அதனேலேயே அந்த  தளங்களுக்கு எனது தேவை இருந்தால் ஒழிய , அந்த பக்கம் போவது கிடையாது. நாம் இருகின்ற சமூகம் எப்படிப்பட்டது என்றால் விருதுகள் வென்ற "காஞ்சிபுரம்" படத்தை விட சந்தானத்தையும், ஹன்சிஹாவின் தொப்புளையும் நம்பி வந்த "வேலாயுதத்தை" கொண்டாடும் சமுகத்தில் இருகின்றோம். ஆக ஜனரஞ்சகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போனது. அந்த ஜனரஞ்சக எழுத்து தான் சி.பி அண்ணனின் வெற்றிக்கு  காரணம் என்பேன். அது தான் என்னையும் கவர்ந்தது. 



அதற்காக புள்ளிவிபர+ ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் பதிவாளர்கள் எல்லாம் ஜனரஞ்சக எழுத்துக்களுக்கு சொந்தக்கரார்கள் இல்லை என்பதில்லை. அந்த மேட்டருக்கு பிறகு வருகின்றேன்.

அண்ணனிடம் சில கேள்விகள் சில ஆலோசனைகள்...........

வழமையா இந்த பகுது அண்ணனின் திரை விமர்சனத்தில் தான் வரும். ஒரு மாறுதலுக்கு நான் பண்ணிக்கிறேன்.

1. அண்ணே! எந்த படம் ரிலீஸ் ஆனாலும் (கில்மா படம் உட்பட) முதல் நால் முதல் ஷோ பாத்திட்டு விமர்சனம் போடுறீங்களே, உங்க ஆபீஸ்ல மேற்பார்வையாளர் , மனேஜர் எண்டு யேரும் இல்லையா? ஆபீசுக்கு ஒழுங்கா போறதுண்டா?

2. எந்த கில்மா படம் பாஎத்தாலும் எங்க ? எப்போ? யார் கூட? எண்ட புள்ளி விபரமெல்லாம் சொல்ரீங்களே, வீட்ல‌ உங்க சம்சாரம் எதுவுமே சொல்றதில்லையா? ஒழுங்கா சாப்பாடு கிடைக்குதா?

3. ஒரு படம் தவற விடாம விம்ர்சனம் போடுறீங்களே, எல்லா படத்துக்கும் கோட்டா முறையில டிக்கட் கிடைக்குதா?

4. எனக்கு வாரம் ரெண்டு பதிவு போடுறதுக்கே டங்கு வாரு அந்து போகுது, இதில உங்களுக்கு நாளுக்கு ரெண்டு எப்பிடி சாத்தியம் ஆகுது?

5.படம் பார்க்க போகும் போது லப்-டொப் கூடவே எடுத்து போவீங்களா? ஒரு சீன் , ஒரு வசனம் தவறவிடுறதில்லையே எப்பிடி? (உண்மைய சொல்லுங்க , திருட்டு வி.சி.டி தானெ???) 



இப்போ அண்ணனுக்கு சில ஆலோச‌னைகள்..............

எலேய்..... முழுசா பத்து பதிவு போடாத நீ , 1000 பதிவுக்கு மேல போட்ட எனக்கு அட்வைஸ் பண்ண வருதியோ எண்டு பெரியவா நீங்க கொவப்பட பிடாது.......... ஏதோ உங்க வாசகனா , ரசிகனா எனக்கு தோணுற‌த சொல்றன். பிடிச்சா ஏத்துக்கங்க, இல்லைன்னா ஃபிரண்ஸ்சாவே இருப்பம், என்ன நான் சொல்றது?

அண்ணே! உங்களுக்கு என்று ஒரு தனியான வாசகர் வட்டம் இருக்கு, நாளுக்கு ரெண்டாயிரம் ஹிட்ஸ் வருவது சாதாரணமில்ல. அந்த வாசகர் வட்டத்தில் என்னைப் போன்ற ஒரு சில வாசகர்களது எதிர் பார்ப்பு உங்களது வழக்கமான பாணியில் இருந்து வித்தியாசமான பதிவுகளை சில நேரத்தில் எதிர் பார்க்கும். 

அதாவது உங்களிடம் ஜனரஞ்சகமான முறையில் எழுதி வாசகரை கவரும் திறன் இருக்கின்றது. அவ்வாறான நீங்கள் சில விசேட தேவைகளின் போது உங்களது பாணியில் ஆய்வு கட்டுரைகளோ, புள்ளி விபர பதிவுகளோ இட்டால் ந்ன்றாக இருக்குமே? விசேட தேவை என்று நான் குறிப்பிட்டது , உதாரணமாக ஏழாம் அறிவு படம் வந்து போதி தர்மன் சர்ச்சை கிளம்பிய நேரத்தில் , அத்தனை பதிவர்களும் முருகதசையும், போதி தர்மனையும் கிழித்து தொங்க போட்டுகொண்டிருந்த நேரத்தில் அதற்கான உங்களது பங்களிப்பு ஏன் சொற்பமாகிப்போனது? 



அனேக வலைத்தளங்கள் வெறுமனே தகவல்களை திரட்டி அடித்துக்கொண்டிருந்த படியால் அதை லயித்து வாசிக்க முடியவில்லை. இங்கு ஆய்வுக்கட்டுரை எழுத ஆரம்பிக்கும் சிலருக்கு , அதை  வாசகனுக்கு ஏற்றால் போல் , எழுதும் திறன் வாய்ப்பதில்லை. (சுஜாதா எந்த விஞ்ஞான விளக்கமாக இருந்தாலும் சுவாரசியமாக சொல்லும் திறன் கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது)

அது போக வாரம் சராசரியாக நீங்கள் போடும் 15 பதிவுகளில் அனேகமனவை ஜோக்குகளாக இருக்கின்றன, ஒரே தளத்தில் ஒரே மாதிரியான பதிவுகளை பார்க்கும் போது ஒரு வித சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாதுள்ளது. சில வேளைகளில் சில  ஜோக்கு பதிவுகளில் , நாளுக்கு ரெண்டு பதிவை போட்டு விட வேண்டும் என்ற முனைப்பு தெரியுமே ஒழிய, சிரிப்பை அந்த பதிவுகள் வரவழைப்பதில்லை.



என்னதான் வலைப்பதிவில் சி.பி அண்ணன் உயர்ந்து நின்றாலும் பத்து பதிவு தேத்தாத எனது தளத்திற்கு வந்து எனது பதிவொன்றில் பின்னூட்டம் இட்ட நாள் என்னால் மறக்க முடியாதது. இதே இன்ப அதிர்ச்சியை கொடுத்த இன்னொரு பதிவுலக கர்த்தா "பன்னிக்குட்டி ராமசாமி"

அட்ராசக்க இணைப்பு

பன்னிக்குட்டி ராமசாமி இணைப்பு

Friday, October 14, 2011

ஜேம்ஸ் கமறூன் படத்தில் டாக்டர் விஜய் !!! ந‌டந்தது என்ன?




டாக்டர் விஜய் ஜெயம் ராஜா இயக்கத்தில் "அசாசின் கிரீட் " என்ற படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்த விடயம். இந்த நிலையில் அண்ணனின் அசாசின் படத்தைப் பற்றிய செய்திகள் , படம் ஆரம்பித்த நாளிலிருந்து பரபரப்பை கிளப்பி வருகின்றது. சுறா, குருவி, கொக்கு, காடை, கவுதாரி, கோட்டான், கோழி என பாக்ஸ் ஆபீஸ் ஹிட்களை கொடுத்த அண்ணனின் அடுத்த அதிரடி தான் இந்த "அசாசின் கிரீட்".

ஜேம்ஸ் கமரூனின் அவதார் -2 படத்தை விட எதிபார்ப்பை கிளறியிருக்கும் இந்த படம், தீபத்திருநாளன்று வருவதில் எழுந்துள்ள சிக்கல் , இதய பலகீனம் உள்ளோர் தியேட்டருக்கு போகக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், எத்தனையோ சாகச விரும்பிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பஞ்சு ட‌யலாக் பேசியே பத்துப் பேரைக் கொல்வது, பக்கத்து வீட்டில் இழவே விழுந்தாலும் குத்துப் பாட்டு ஆடுவது, கானா பாட்டில் மட்டுமல்லாமல் டூயட் பாட்டிலும் டான்ஸ் மாஸ்ரருடன் தரையில் விழுந்து (கோட் சூட் சகிதம்) ஆடுவது என்று , தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத எத்தனையோ புதிய விட‌யங்களை டாக்டர். விஜய் இந்த படத்தில் முயற்சித்திருப்பதாக விக்கிலீக்ஸில் செய்தி கசிந்துள்ளது.



இறப்பதற்கு முன்னம் பார்க்க வேண்டிய பத்து படங்கள் பட்டியலில் இடம்பெறப்போகும் அண்ணனின் இந்த "அசாசின் கிரீட்" திரைப்படம் ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை சர்ச்சை தான்.

பட அறிவிப்பு வெளியாகி சில நாட்களில் அண்ணனின் "அசாசின்" திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான "வேலாயுதம்" படத்தின் கொப்பி என்று , வழமைபோலவே எவனோ ஒரு மொக்கை பதிவர் எழுதிவிட துடிதுடித்து போனார் படத்தின் இயக்குனர் ராஜா. இதுவரை அவர் கொடுத்த ஹிட் படங்கள் எல்லாம் கொப்பி படங்களாகவோ, பிற மொழி தழுவல்களாகவோ இருக்கவில்லை. அப்படியிருக்க இந்த படம் மட்டும் எப்படி வேலாயுதம் படத்தின் தழுவலாக இருக்க முடியும்? அது போக இந்த படத்தின் கதையை தான் முன் பள்ளி பருவத்திலேயே தனது நண்பர்களுக்கு கூறியிருந்ததாக சத்தியம் செய்திருக்கிறார் இயக்குனர் ராஜா.



அது போக இந்த படத்தின் கதை உலக சினிமாவுக்கு புதுசு என்றும், விஜய் தனது வாழ்நாள் சாதனைப் படம் என்று சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கும் என்றார் இயக்குனர் ராஜா. டாக்டர் விஜய் இதுவரை நடித்திராத கதையாக இது இருக்கும்..... கதைச் சுருக்கம் இதுதான்

 "ஒரு அழகிய கிராமம் ஒன்றில் தனது தாய், தந்தை, தங்கையுடன் வாழ்ந்து வருகின்றார் டாக்டர்.விஜய். ஒரு குடும்ப பாட்டு உண்டு நிச்சயமாக. திருவிழா, சில்மிஷம் என தமிழன் தன் வாழ்நாளில் கண்டிராத அற்புதமான விடயங்களை சொல்கிறது படம். இடையில் இரண்டு ஹீரோயின்களோடு ரொமான்ஸ், டுயட் பாட்டு என்று "மெல் கிப்ஸ்சனே" பார்த்து பாடம் படிக்க வேண்டிய வகையில் விரிகிறது திரைக்கதை. இடைவேளை வரை எங்கோ ஒரு சந்தியில் மப்படித்து விட்டு மயக்கத்தில் கிடந்த வில்லன் கூட்டம் (மூன்று பிரதான வில்லன்கள் சகா முந்நூறு அடியாட்கள்) விடிந்தும் தாங்கள் மப்பில் கிடப்பதை உணர்ந்து நேரம் பார்ப்பதற்கு கடிகாரத்தை தேடினால் காணோம்.



என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க , அந்த வழியால் அண்ணனின் தங்கை போகிறார், அப்போது ஒரு வில்லன் "ஏம்மா நேரம் என்ன"?  என்று கேட்க, ஒரு வில்லன் தன்னிடம் நேரம் கேட்டுவிட்டானே என்ற அவமானத்தில் டாக்டர் விஜய் இன் தங்கை துடிக்க, இதைப் பார்த்து பொறுக்க முடியாத ஹீரோவின் அப்பாவும் , அம்மாவும் ஓட்டை சிரட்டையில் தண்ணி ஊற்றி தற்கொலை செய்கிறார்கள். உடனே அவர்களுக்கு கொள்ளியை வைத்து விட்டு வேட்டைக்கு கிளம்புகிறார் அண்ணன்.

நேரே வில்லனிடம் போய் "உன்னோட கடிகாரம் காணாம போனது உன்னோட கெட்ட நேரம். அப்போ என் தங்கசிட்ட நீ நேரம் கேட்டது என்னோட நல்ல நேரம்டா"ன்னு பஞ்ச் ஒன்றை அடிக்க என்ன சொல்கிறான் என்று புரிய முயற்சி செய்து, மூளை குழம்பி  வில்லன் நம்பர் -1 செத்துப் போகிறான். அடுத்த டயலாக் பேசுவதற்கு முன்னமே தங்களது களுத்தை அறுத்துக் கொண்டு சாகிறார்கள் அடியாட்கள் நூறு பேர். "நல்ல வேளை நீ செத்துப் போய்ட்ட, நீ மட்டும் உயிரோட இருந்திருந்தா உன்ன கொண்ணுருப்பன்டா" என அண்ணன் மறுபடி பஞ்ச் அடிக்கும் நேரத்தில் ரசிகர்கள் யாரும் கைகளில் கூரிய ஆயுதங்களை வைத்திருக வேண்டாம் என நேட்டோ கூட்டு படைகளின் தளபதி எச்சரித்துள்ளார்.



இப்படி பஞ்ச் "கள்" அடித்தே அத்தனை பேரையும் பலிவாங்கும் ஹீரோ (பார்வையாளர்கள் உட்பட) இறுதிகட்டத்தில், தான் தூக்கிய அருவாளுக்கு வேலை இல்லாமல், பேசியே அனைவரையும் கொன்று விட்ட படியால் இப்படி ஒரு பஞ்ச் அடிகிறார். "ஆரம்பத்திலேர்ந்து அருவா கொண்டு அலையிறவன் நல்லவனா இருக்கலாம், இடையில அருவா தூகின நான் கெட்டவண்டா.. என்று மீண்டும் பிணத்தைப் பார்த்து பஞ்ச் அடிக்க, வில்லனின் கூட இருக்கும் வளர்ப்பு நாயும் வெறி பிடித்து ஓடுகிறது". அப்போது அங்கு வரும் ஹீரோயின்கள் தலைவரை கட்டிப்பிடித்து ஆட இறாந்து கிடந்த வில்லன்கள் எல்லாம் கிராபிக்ஸ் மூலம் மம்மியாகி ஆடுகிறார்கள். "தி எண்ட்" போடு படம் முடிகின்றது.இந்த மாதிரியான ஒரு புத்தம் புது கதையுடன் தான் களம் கண்டிருக்கிறார்கள் அண்ணனும், இயக்குனர் ராஜாவும்.

படப்பிடிப்பின் போது நடிகைகளான ஹன்சிகா மற்றும் ஜெனிலியா ஆகியோர் தங்கள் உள் பாவாடை கிழியும் வரை சண்டை போட்டதாக பேட்டிகளில் தெரிவித்திருந்தார் இயக்குனர் ராஜா. இது, மொக்கை படத்தை பிரபல்ய படுத்தும் முயற்சி என்று சில குரோதம் கொண்ட இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனாலும் தனது கூற்றில் இருந்து மாறாத இயக்குனர் "ஜெனிலியா, ஹன்சிகாவின் தொடையில் பிராண்டியதும், ஹன்சிகா , ஜினிலியாவின் முதுகில் கடித்ததும் உண்மை என்று தந்து பெரியம்மாவின் மேல் சத்தியம் செய்தார்.



பின்பு பேட்டியளித்த ஹன்சிகா, மற்று ஜெனிலியா அவ்வாறு எந்த சம்பவங்களும் இடம் பெறவில்லையெனவும், தாங்கள் படப் பிடிப்பில் மிகுந்த ஒற்றுமையாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். இதனால் இயக்குனர் ராஜா மப்பில் உளறினாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

அது போக படத்தில் மொத்தம் முப்பது காமடியன்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகையில் அண்ணன் விஜய் யும் உள்ளடக்கமா என்பது "சஸ்பென்ஸ்சாம்". படம் நடிக்கிறேன் பேர்வழி என்று அண்ணன் சந்தானதையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு காமடி பண்ணியிருப்பதை நாசாவின் விண்வெளி ஓடம் ஒன்று உறுதி செய்துள்ளது. அத்துடன் கடந்த வார இணையத்தள செய்திகளின் படி படப்பிடிப்பில்  டாக்டர்.விஜய் க்கு ஆடைகள் பற்றாகுறையாம் என்று படித்தேன். எனதருமை இந்திய பதிவர்களிடம் நான் கேட்பது என்னவெனில் ஆடைக் களஞ்சியமான தமிழ்நாட்டில் , அண்ணனின் தொடையில் கட்ட ஒரு கர்ச்சீப்புக்கும், களுத்தில் சொருக ஒரு பெட் சீட்டுக்கும், இடுப்பில் கட்ட ஒரு சால்வைக்குமா பஞ்சமாகிவிட்டது? சோ சாட்... சோ சாட்...



தீபத்திருநாளன்று "அசாசின் கிரீட்" வெளிவராமல் பம்முவதற்கு காரணம், சூர்யாவின் ஏழாம் அறிவின் ஆதிக்கம் என்கிறார்கள் சிலர். ஹிம்.... ஆணானப் பட்ட சுப்பர் ஸ்ராரின் படமான ச‌ந்திரமுகியுடன், தனது சச்சினை சேஸுக்கு விட்டவர்ரா எங்க டாக்டர். அவர் இந்த சுண்டைக்காய் சூர்யாவிற்கு பயப்படுவதா? நெவர்..... தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தனது அப்பவை வைத்து காய் நகர்த்தி தனது படத்தை வெளியிடுவார் என்று கூற முடியாது. ஏனென்றால் இதுவரை கால தனது சினிமா பயணத்தில் தனது அப்பாவின் மூச்சு காத்து கூட படாமல், சுயமாக உயர்ந்தவர் டாக்டர்.

ஆக தீபாவ‌ளியன்றோ , அல்லது அதற்கு பின்னரான சில நாட்களிலோ உலக சினிமா இதுவரை கண்டிராத ஒரு கலைப் படைப்பை காண தயாராகின்றது. அட நான் இன்னமு மேட்டருக்கு வரவில்லையோ.....??????



தற்போது அவதார் பாகம் இரண்டை எடுத்துவரும் ஹாலிவூட்டின் பிரம்மா ஜேம்ஸ் கமரூன் , அவதார் பாகம் மூன்று ஆரம்பிப்பதற்கு இடையில் ஒரு திரைப் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த கதை தெற்காசிய நாடுகளை மையமாக கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த படத்தில் நடிக்க பிரபல நடிகர் ஜாக்கி சானை சம்மதிக்க வைத்துவிட்ட கமரூனுக்கு இரண்டு, தெற்காசிய நாட்டு நடிகர்கள் தேவைப்படவே அவரது பார்வை இந்தியா மேல் விழுந்திருகிறது. ஷாருக் கான் மற்றும், நம்ம டாக்டர் விஜய் தான் கமரூனின் இலக்குகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன் இந்தியாவிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட கம்ரூன் டாக்டரை சந்தித்திருப்பது நல்ல செய்தியாகவே இருக்க முடியும். குருவி படத்தில் டாக்டர் இரண்டு கட்டடங்களுக்கு இடையில் எந்தவித பிடிமானமும் இன்றி பத்து நிமிடங்கள் பறந்து நடித்த நடிப்பாலேயே தான் கவரப்பட்டதாக கம்ரூன் தெரிவித்தார். தன‌து அவதார் பத்திரங்கள் கூட செய்யமுடியாத சாகசம் அது என மேலும் தெரிவித்தார். எனக்கெனவோ ஷாருக்கனை தூகிவிட்டு டாக்டரையும் எங்கள் தலைவர் "பவர் ஸ்ராரையும் " போடலாம் என்று நினைக்கின்றேன்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் விஜய் மற்றும் ஜேம்ஸ் கம்ரூன்


டிஸ்கி:- "உண்மையென்று நீங்கள் நினைக்கும் அத்தனையும் உண்மை, மொக்கை என் நீங்கள் நினைக்கும் அத்தனையும் மொக்கை, மொக்கை மட்டுமே....."



Thursday, October 13, 2011

ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு பயங்கரம்! "THE RITE" சினிமா விமர்சனம்




பேயோட்டுதல் என்னும் வகையறாவுக்குள் அடங்குகின்ற இன்னொரு திகில் படம். நம்மவர்கள் பேய் என்றால் ஒரு பூசாரியை அடிப்படையாக கொண்டு எடுக்க , மேற்கத்தயவர்கள் கத்தோலிக்க குருவை கருவாக கொண்டு ( ஆஹா.. என்னவொரு எதுகை மோனை..!) களமிற‌ங்கியிருக்கிறார்கள். உண்மை சம்பவங்களின் தொகுப்பாக இந்த வருட ஆரம்பத்தில் வெளிவந்த இந்த படத்தை இயக்கியிருக்கிறார் மிகேல் ஹஃப்ஸ்ரோம்.



அமெரிக்க புறநகர் பகுதியொன்றில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார் கதாநாயகன் "மைக்கேல் கோவாக்" (கொலின் ஓ' டோனகியூ) . சவப்பெட்டி தயார் செய்வதும் , பிரேதங்களை சடங்கிற்காக ஒழுங்கு படுத்துவதும் தான் நாயகன் குடும்பத்தின் குலத்தொழில்.  ஒருகட்டத்தில் குருமடத்தில் சேர்ந்து குருவானவராக ஆசைப்பட்டு , சேர்ந்து குருவும் ஆகிறார் மைக்கல். சிறிது காலத்திற்க்கு பின்பு அவருக்கு மத சம்பிரதாயங்கள், சடங்குகளில் நம்பிக்கை அற்றுப் போக , தான் குருமடத்தில் இருந்து விலகுவதாக தனது மேலாளருக்கு (டொபி ஜோன்ஸ்)  கடிதம் அனுப்புகிறார் மைக்கல். இதனை ஏற்க்க மறுக்கும் ஜோன்ஸ் , ஒரு நாள் , நாயகன்மைக்கலுடன் உரையாடும் பொருட்டு வீதியை கடக்க முயற்சி செய்யும் போது , அதன் காரணமாக விபத்து ஒன்று நிகழ்கின்றது. அப்பொது அங்கு மரண‌த்தறுவாயில் இருக்கும் ஒருவர் , மைக்கலின் உடையை வைத்து அவரை ஒரு குரு என்று கண்டு கொண்டு , தனது பாவங்களுக்கு இறுதி மன்னிப்பு தருமாறு வேண்டுகிறார். முதலில் தயங்கும் மைக்கல் , பின்னர்  பாவமன்னிப்பு கொடுக்கிறார்.



இதனை பார்த்துக்கொண்டிருந்த மைக்கலின் மேலாளர் , மைக்கல் அந்த பதட்டமான சூழ்நிலையிலும் சாந்தமாக நிலமையை கையாண்டதை கண்டு மைக்கல் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவர் ஒரு குருவாக அழைக்கப்பட்டிருப்பதை உணர்கிறார். பின் மைக்கலுடன் உரையாடும் அவர் , மைக்கலை ஒரு லட்சம் டொலர் மாணவர் கடன் அடிப்படையில் சில நாட்களுக்கு இத்தாலியின் ரோமுக்கு சென்று பேயோட்டும் சடங்குகள் சம்ந்தமான வகுப்புகளில் கலந்து கொள்ள சொல்கிறார். அதன் படி ரோமுக்கு வரும் மைக்கல் வகுப்பறைகளில் ஆர்வமில்லதவராகவும் , சந்தேகத்துடனும் கலந்து கொள்கிறார். அவரது கருத்துப் படி அத்தனையும் "மனநோய்" பிரச்சினைகள் என்கிறார்.  இங்கு பத்திரிக்கையாளரான "ஏஞ்சலினாவை (அலிஸ் பிராகா) சந்திக்கிறார் .



இந்த சூழ்நிலையில் தனது ரோம் நகர மேலாளர் மதகுரு சேவியர் மூலமாக , பேயோட்டும் சடங்குகளில் பல வருடம் அனுபவம் கொண்ட மதகுரு " லூகாஸை " ( அன்ரனி ஹொபிங்ஸ்) சந்திக்கிறார். லூகாஸ் , சில காலமாக "தனது தகப்பனால் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமான ஒரு பதினாறு வயது பெண்ணிற்கு பிடித்திருக்கும் பேயை ஓட்டும் முயற்சியில் இருக்கிறார். இதனை பேய் பிடித்தல் என நம்ப மறுக்கும் நாயகன் "அந்த பெண் தனது தந்தையால் தான் கர்ப்பமான அவமானதில் இருந்து மீளவே இவ்வறு நாடகமாடுவதாக வாதிடுகின்றார்.



ஒரு நாள் தன்னுடன் இணைந்து பேயோட்டும் செபங்களை சொல்லுமாறு லூகாஸ் கேட்க, மைக்கலும் இணைந்து செபங்கள் சொல்லுகிறார், அப்பொது இத்தாலிய மொழி பேசுகின்ற அந்த பெண் ஆண் குரலிலும் , பெண் குரலிலும் மாறி மாறி ஆங்கிலம் பேச ஆரம்பிக்கிறாள். போதாதென்று நாயகனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் புட்டு புட்டு வைக்க குழம்பிப் போகிறார் மைக்கல். ஆனாலும் அவள் ஆங்கிலம் கதைப்பது "சின்ன வயதில் அவள் கேட்ட ஆங்கில பாடல்கள் அவள் அடிமனதில் பாடமாய் இருக்கின்றது என் வாதிடுகிறார் அண்ணாத்த.....

 அந்த பெண்ணின் நிலமை மோசமாக , அவளை வைத்தியசாலையில் அனுமதிக்கின்றனர். அவ்வாறு ஒரு நாள் அந்த பெண்ணுக்கு மீண்டும் நிலமை மோசமாக , இரவு அந்த பெண்ணும் குழந்தையும் இறந்து போகின்றனர். இதனால், தான் தோற்று போய்விட்டதாக மனமுடைகிறார் ஃபாதர் லூகாஸ். இந்த கால பகுதியில் நாயகன் மைக்கலின் தந்தையும் இறந்து போகிறார்.இந் நிலையில் ஃபாதர் லூகாஸிற்கு பேய் பிடித்துளதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.



அவ்வாறான ஒரு நாளில் லூகாஸின் வீட்டிற்கு வரும் மைக்கலிற்கும் , லூகாஸ் மீது ஏறியுள்ள பேய்க்குமிடையே முற்றுகிறது போர். லூகாஸ் மீது வந்துள்ள பேயை விரட்டுவதற்கு ஏஞ்சலினாவுடன் கூட்டு சேர்ந்து செபிக்க தொடங்கும் மைக்கல் பேயை விரட்டினாரா? கடவுள் நம்பிக்கை கொண்டாரா ? அனுபவசாலியான லூகாஸ் எத்தனையோ தடவை கேட்டும் தன் பெயர் சொல்லாத பேய் மைக்கலிடம் மடிந்து தன் பெயர் சொன்னதா ? என்பதை சுவாரஸியமாக சொல்லியிருக்கிறார்கள்.

வழமையான திகில் படங்களில் வரும் குரூர பேய்களோ, தடால் சடால் காட்சிகளோ இல்லாமல் , அமைதியாகவே பயத்தை நெஞ்சில் விதைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். விஞ்ஞானத்திற்கும் , மெய்ஞ்ஞானத்திற்கும் இடையில் குழம்பும் ஒரு இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார் நாயகன் கொலின் ஓ'டோனகியூ. மதகுரு பாடம் நடத்துகையில் தான் அதனோடு ஒத்து போகவில்லை என்பதை தன் சந்தேக கண்களாலேயே காட்டியிருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பு, பேய் பிடித்த பெண்ணுடன் உரையாடும் போது நம்பிக்கையற்ற ஒரு அலட்டல் பார்வை, தந்தை இறந்தது தன்னை சுற்றி நடக்கு விடையங்களை நம்புவதா , மறுப்பதா என்று குழம்பிப்போகும் நேரத்திலும் தேர்ந்த நடிப்பு. மைக்கல் பாத்திரத்துக்கு சிறந்த தேர்வு "கொலின் ஓ'டோனகியூ"



மேலாளர்களாக வரும் "ஷிலன் ஹைண்ஸ்", "டொபி ஜோன்ஸ்" ஆகியோர் தமது வேலைகளை திறம்பட செய்திருக்கிறார்கள். அலிஸ் பிராகாவின் ஏஞ்சலினா பாத்திரம் கதையில் பெண் பாத்திரம் ஒன்று தேவை என்பதற்காக திணிக்கப்பட்டது போல் உள்ளது.

இங்கு அன்ரனி ஹோபிங்ஸ் பற்றி சொல்லியே ஆக வேண்டும்....! மனிதர் சும்மா மிரட்டியிருக்கிறார்.... நம்ம பிரகாஷ் ராஜ் போல காட்சிக்கு காட்சி நடிப்பு..... எதை சொன்னாலும் நொட்டை சொல்லும் கொலினுக்கு எப்படி விளங்க வைப்பது என ஏங்கும் போதும், பேயோட்டுகையில் ஆரம்பத்தில் சாந்தமாகவும் பின்பு உக்கிரமடைந்து செபிக்கையிலும், தனது பேயோட்டும் முயற்சி தோற்றதை அடுத்து கலங்கிப் போய் உடக்காரும் போதும், பேய் பிடித்ததும் நம்ம அந்நியன் விக்ரம் போல் லூக்காஸ் ஆகவும் , "பால்" ஆகவும் மறும் போது என கிடைத்த இடத்தில் எல்லாம் சிக்சர் அடித்திருக்கிறார்.




அந்த பேய் பிடித்த பதினாறு வயது பெண்னாக வந்தவரின் நடிப்பு , தேர்ந்த நடிகை ஒருவரின் நடிப்பு, நமட்டு சிரிப்பும், உருட்டும் கண்களுமாக சும்மா பின்னியிருக்கிறார்.




ஒரு திகில் படத்திற்கு மென்மையான இசை மூலம மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் "அலைக்ஸ் ஹஃபஸ்", " பீட்டர் பொய்ல் " இன் படத்தொகுப்பு திகில் குறையாமல் படத்தை பயணிக்க வைக்கின்றது. "பென் டேவிஸ் " இன் நேர்த்தியான ஒளித்தொகுப்பு படத்திற்கு பக்கபலம்.



அந்த களோபரத்திலும் நான் ரசித்த காட்சிகளும் வசங்களும்......

1. படத்தின் ஆரம்பத்தில் நாயகன் ஒரு பெண்ணின் உடலத்தை தயார் செய்யும் காட்சி (நேர்த்தியான ஒளிப்பதிவு)

2. வைத்தியசாலையில் வைத்து அந்த பெண்ணுக்கு பேய் ஓட்டுகையில் பேய்க்கும் நாயகனுக்கும் இடையில் இடம் பெறும் வாதமும், காட்சி அமைப்பும்.

3. சிறுவன் ஒருவனுக்கு பேய் ஓட்ட செல்லும் லூக்காஸ் , அவனது தலையணையில் இருந்து தவளை ஒன்றை எடுத்து சாத்தான் என்று அடுப்பில் போடுவார். பின்பு லூகாசின் பையில் அது போல இன்னொரு தவளையை காணும் மைக்கல் சுற்றும் முற்றும் பார்க்கையில் அது போல நிறைய தவளைகள் தண்ணீர் தொட்டியிலிருப்பது.

4.தவளையை தானே காவிச் சென்று பேய் என்று ஏமாற்றுகிறார் என எண்ணும் நாயகன், தனது அறைக்கு செல்லும் போது , அறை முழுதும் அந்த தவளைகள் நிறைந்து இருப்பது.

5. நாயகனின் தந்தை இறந்த பின்னர் வரும் ஒரு காட்சியில் வெற்றுத்தரை பனிபடர்ந்தது போல இருப்பதும், அதில் சிவப்பு கண்களோடு கன்னங்கரேல் என் நிற்கும் குதிரையும், நாயகன் இது எவ்வறு வந்தது என் சுற்றும் முற்றும்  பார்க்கும் போதே குதிரையும், பனியும் மறையும் காட்சி (அற்புத்மான கிராபிக்ஸ்)



7.கிளைமக்ஸில் ஃபாதர் லூகஸின் முகம் சிவப்பாகி குரூரமாக பேயாக மாறும் காட்சியும், நாயகன் செபிக்கும் போது சாதாரணமாக மாறுவதும்.

8.பேயோட்டுவதற்காக நாயகன் செபித்துக்கொண்டிருக்க பேய் பிடித்த லூகாஸ் அசால்ட்டாக இருந்து "ஆமேன்" சொல்லும் காட்சி. (அன்டனி ஹொபிங்ஸ் நடிப்பு அபாரம்)

9.வளைந்த சிலுவையை நாயகன் மேலும் வளைப்பது போல காட்சி வைத்து ,மறு கோணத்தில் இருந்து பார்க்கும் போது அதை உண்மையில் நேராக்கியது போன்ற அருமையான காட்சி வடிவமைப்பு.

10. கிளைமாக்ஸில் நாயகன் நடக்கும்திசை எங்கும் லேசான தலை திருப்பலுடன், வாயில் ஒரு நக்கல் சிரிப்புமாக பேய் பிடித்த லூகாஸ் நடிக்கும் காட்சி.



11. பேய்:- உனக்கு என்னைப் பார்த்து பயம் இல்லையா அற்பனே?
     நாயகன்:- நான் ஏன் உன்னைப் பார்த்து பயப்பட வேண்டும்? எப்போதும் இந்த உலகத்தில் நீ வாழ்ந்த‌தில்லை என்னும் போது....

12. நாயகன் (பேயைப் பார்த்து) உனக்கு பைபிள் எல்லாம் தெரிந்திருக்கிறது...
      பேய்:- உங்களை விட எங்களுக்கு பைபிள் நன்றாக தெரியும்......

அலட்டல் இல்லாத திரைக்கதை, கோரம் அற்ற திகில் கதை, குறியீடுகள் மூலமே பேயை சித்தரிப்பது என் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பயம் வரவைக்கும் திரைப்படம் இந்த "RITE"



பின்குறிப்பு:- இந்த படத்தைப் பார்த்து நான் பட்ட அவஸ்தைகளை படிக்க இங்கே சொடுக்கவும்.http://kishoker.blogspot.com/2011/10/blog-post_13.html

                                                           

நாஸ்திகனுக்கு பேய் பயம் வருமா? பீதியில் உறைந்துள்ள பிரபல பதிவர்

நாஸ்திகர்களுக்கு பேய் பயம் இருக்குமா? இது என்னுள் இருக்கக் கூடிய ஒரு கேள்வி.... கிட்டத்தட்ட கோயில்கள் , பூசை புணஸ்காரங்களை விட்டு அதிக தூரம் விலகி வந்த பிறகு கடவுள், பேய் சம்மந்தமாக அதிகமாக அலட்டிக்கொண்டது கிடையாது. சாதாரணமாகவே ஒரு பேய் படம் பார்த்து விட்டால், அதன் தாக்கம் அந்த இரவு நீடிப்பது எனக்கு வழமை. (உன்ன எவண்டா பெரிய உடைச்ச கடலை போல இரவில பாக்க சொன்னது?) அந்த படத்தில் வந்த பேயின் உருவத்தையோ , காட்சிகளையோ மறப்பதற்கு நான் நமீதாவின் "அர்ச்சுனா.. அர்ச்சுனா அம்பு விடும் அர்ச்சுனா...." பாடலை நினைத்து கொண்டிருக்கும் போத்து நான் விரும்பாமலேயே, எனது அனுமதி இல்லாமலேயே என் கனவுக்குள் புகும் அந்த பேய் சரத்குமாருக்கு பதில் நின்று கொண்டு நமீதாவுடன் டூயட் பாடும்... இது வழமை! அடுத்த சில நாட்களில் நிலமை சகஜமாகிவிடும். ஆனால் ... அண்மையில் "காஞ்சனா" பார்த்த போது, சரத்குமார் தானே பேய், அதுவும் காமடி பண்ணியிருந்ததால் அதன் தாக்கம் தெரியவில்லை. அதனால் தட தடவென அடித்து பிடித்து ஓடாமல், ஆற அமர போய் நின்று "உச்சா" அடித்துவிட்டு வந்தேன்.



அத்தோடு நான் ஒரு "நாஸ்திகன்" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு , "பேயாவது.. பிசாசாவது.." என்று தெனாவட்டாக அலைந்து கொண்டிருந்தேன். எனது இந்த தெனாவட்டிலும், நிம்மதியிலும் மண்ணையள்ளி போட்டது "THE RITE" என்ற ஆங்கில திரைப்படம். அன்று படம் பார்த்துவிட்டு நான் தூங்கும் போது நேரம் விடியற்காலை 4.30...! படம் முடிந்தது 12.15 க்கு. நண்பர்கள் அனைவரும் லைற்றை அணைத்து விட்டு தூங்கிவிட நானும் கட்டிலில் தூங்கிவிட முயற்சி பண்ணினேன். கண் மூடினால் யாரோ முன்னே நிற்கின்ற போல் ஒரு பிரம்மை... விழித்து பார்த்தால் காயப் போட்டிருக்கும் ஜட்டி கூட பயம் காட்டுகிறது.... கொஞ்சம் கண்ணயர்ந்தால் மூச்சு முட்டி , யாரோ கழுத்தை அழுத்துவது போல ஒரு உணர்வு. இதயம் வேகமாக துடித்தது..... அன்று எனக்கு தடிமன் வேறு .. அதுகூட காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் மனது, இல்லை அது "BA'AL" (பேய்களின் தலைவன் என்று பைபிள் சொல்கிறது) என்றது.



நண்பர்கள் உறங்கிவிட கண்கள் சொருகி தூக்கம் துரத்த தூங்க பயந்தேன். பின்னே விழிக்கையில் அந்த பேய் முகத்திற்கு முன்னே நின்று சிரித்து கொண்டிருந்தால் என் கதை என்னாவது. ( ஒருவனை நேரே வந்து பயம் காட்டுவதற்கு முன்பு , "நாய் குலைக்க பண்ணுதல், காற்ற‌டிக்க பண்ணுதல், மல்லிகை பூ வாசம் வரவைத்தல்" என்று முன்னேற்பாடுகளை வழங்கி நம்மை எச்சரிக்கும் தமிழ் பேய்களின் நாகரீகம் தெரியாதவைகள் இந்த ஆங்கில பேய்கள்). சொன்னால் நம்ப மாட்டீர்கள் அதிகாலை 4.30 க்கு லைற்றை போட்டுவிட்டு உறங்க போனவன் நானாக தான் இருப்பேன். அதைவிட அசிங்கமான விடையம்.. (அப்போ கட்டாயம் சொல்லு...) சொன்னால் கேவலமாக நினைப்பீர்கள் (இப்போ மட்டும் என்ன ? உன்னோட மொக்க பதிவுகளை பாத்திட்டு உன்னை என்ன உத்தம புருஷன் எண்டா நினைச்சுக்குட்டு இருக்கம்? சும்மா சொல்லுடா...) அவசரமாக 'உச்சா " வர வெளியே போகும் பயத்தில் என் தம்பியை எழுப்பி துணைக்கு அழைத்துப் போன துயர சம்பவமும் நிகழ்ந்தது.(தூ.... நாயே..... பண்ணி , பரதேசி....). அவனை எழுப்பும் போது அவன் என்னை பார்த்த பார்வைக்கு பேயே தேவலாம் போல் இருந்தது. பின்பு என்னையறியாமல் நான் தூங்கி போக நேரம் அதிகாலை 4.30! 

இத்தனைக்கும் அந்த படத்தை பார்த்தால் நீங்கள் பயப்பிடுவீர்களா என்பது எனக்கு தெரியாது...! "மிரர்", "ஷட்டர்" போன்ற படங்களில் வருவது போன்ற பயங்கர காட்சிகளோ , உருவங்களோ இந்த படத்தில் கிடையாது. அப்படியிருந்தும் நான் ஏன் பயந்தேன் என்றால் (சொல்லித் துலையேண்டா...) .....



அந்த படத்தில் காட்டப்படும் கதாநாயகனின் கதாபாத்திரத்தை ஒத்த மன‌நிலையில் தான் நான் இருந்தேன். பேய் என்று சொல்லப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் "மனப்பிறழ்வு" என கூறும் கதாநாயகனின் மனநிலையில் தான் இருந்தேன். நீ என் இனமடா .. என்று பெருமையுடன் கூறிக்கொண்டேன்.  கடைசியில் அந்த பாழாய்ப் போன கதாநயகன் அந்தர் பல்டி அடித்து பேய் பிடிப்பது எல்லாம் உண்மை என்று கட்சி மாற , பாழாய்ப் போன பக்குவப்படாத நாஸ்திக ம‌னதில் பயம் தொற்றிக்கொண்டது. அதற்காக சினிமா நாயகனை பார்த்து அதை நம்பினாயா? என்ற உங்கள் கேள்வி புரிகிறது, என்ன செய்வது ? படத்தின் தொடக்கதில் "உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்று போட்டு தொலைத்து விட்டார்களே.. அது போக அந்த படத்தில் ஒலிபரப்பாகிய "பேய்பிடித்தோரின் கதறல்கள், போட்டோக்கள் " என்று அத்தனையையும் இந்த பாழாய்ப் போன இயக்குனர் எங்கிருந்தோ உண்மையானவற்றை போட்டு துலைத்திருக்கிறான்.

அவையெல்லாம் "அந்நியன் விக்ரம் " வேலைகள் என்று கதாநாயகன் ஆதாரங்கள் சிலவற்றை காட்டி மறுதலித்துவிட்டு , பின்பு பல்டி அடித்தால் என்ன செய்வேன் நான் பாவம்? 



அது போக என்னதான் பேய்களை நம்பக்கூடாது என் உள் மனதிற்கு நான் சொல்லிக்கொண்டாலும் , சின்ன வயதில் சோற்றை என்  வாயில் திணிக்கவும், தூங்கமறுத்து அராஜகம் பண்ணும் என்னை தூங்க வைக்கவும், "அ" எழுத அடம்பிடிக்கையில் அதட்டவுமாக பேய் கதைககளை சொல்லி சொல்லியே என் பெற்றோரும், சுற்றாரும் என்னை வளர்த்து விட்ட படியினால், என்னதான் மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட முயன்றாலும் , அந்த பாட்டி கதையின் மோகினிகள் சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் எட்டிப் பார்த்து விடுகின்றன. அதற்க்கு இந்த படம் நன்றாகவே வாய்க்கால் வெட்டிவிட்டது.  

நான் நாஸ்திகன் என்று என்னை குறிப்பிடுவது ஒரு பாதி நிலை தான். என் நம்பிக்கை இதுதான் "நான் எந்த சமயத்தையும் சாராத ஒரு கடவுளை நம்புகிறேன் " இப்படி இருக்கையில் அந்த கதாநாயகன் ஒரு காட்சியில் பேயிடம் " நான் கடவுளை நம்புவதால் , பேய்களையும் நம்புகிறேன் " என்று கிளப்பி விட , பேதியாகியது எனக்கு. 



அது போக பேய் வந்தால் அல்லது பேய் பயம் வந்தால் "ஏசப்பா" என்று சொன்னால் பேய் தலை தெறிக்க ஓடும் என்று என் கத்தோலிக்க வளர்ப்பு சொல்லியிருக்க, இந்த படத்தில் போப்பாண்டவர் இருக்கும் வத்திக்கானின் புனித.பேதுரு சத்துக்கத்தில் (அங்குதான் கதாநாயகன் தங்கியிருப்பார்) ஒரு அறையில் பேய் (இந்த காட்சியில் தவளையை பேயாக சித்தரித்து இருப்பார்கள்) சிலுவை, யேசுவின் திருவுருவம், மேரியின் சிலை என்று ஏறி குஸ்தி கரணமடித்து விளையாட குபீர் என்றது எனக்கு. பாடம் சொல்லி தந்த சுவாமி மட்டும் இப்ப என் கையில மாட்டினா......

அதைவிட  நாயகன் பேய்விரட்ட சீரியசாக செபங்களை சொல்லிக்கொண்டிருக்கும் போது பேய் கூலாக உக்கார்ந்துகொண்டிருந்து , ஒவ்வொரு செப முடிவிலும் அசால்ட்டாக "ஆமேன் ' சொல்லும் போது பயம் வருமா ?வராதா....? அது போக நாயகன் பேயை நோக்கி சிலுவையை நீட்டும் போது , அந்த சிலுவையை  சிரித்துக்கொண்டே பேய் வளைக்கையில் , என்ன நம்பிக்கையில் நான் தூங்க முடியும் சொல்லுங்கள். 

அதைவிட நான் கொஞ்சமாக பைபிள் வாசித்திருக்கிற படியால் அதில் பேய் பற்றி குறிப்பிடப் படுவன பற்றியும் , பேயின் நடவடிக்கைகள் பற்றியும் வாசித்து அறிந்திருக்கிறேன். இந்த படத்தில் அத்தனையும் தொட்டு படமாக்கியிருக்கும் விதமும் , பைபிளில் சொல்லப்பட்டுள்ள சில சம்பவங்கள் பேய்களுக்காகவே சொல்லப்படுள்ளன தெளியும் இடத்திலும்  "உங்களை விட எங்களுக்கு பைபிள் நன்றாக தெரியும் " என்று பேய் குருவைப் பார்த்து சொல்லுமிடத்தில் அது வாய்க்குள் சிரிக்கும் தோரணையையும் பார்த்தால்...... பைபிளை பற்றி தெரிந்த எவருக்கும் குலை நடுங்கும்.  (நீங்கள் பைபிளை மெத்தப் படித்தவராக இருந்தால் ..... சாரி ! உங்களை பற்றி எனக்கு சொல்ல தெரியாது) 



அது போக பேய் என்று ஒரு வெந்த முகத்தையோ, மண்டையில் இருந்து ஓடிவரும் வண்டை நாக்கால் உள் இழுத்து "நறக்' என கடிக்கும் ஒரு மம்மியையோ காட்டியிருந்தால் , கற்பனை உருவங்கள் என்று தெளிந்திருப்பேன். ஆனால் பேய் என்று காட்டியெதெல்லம் அன்றாடம் நான் காணும் "தவளை, குதிரை, சும்மா பார்த்தாலே பேய் போலிருக்கும் பெண், இவன் நல்லவனா? கெட்டவனா? எனக் கணித்து கூறமுடியாத முகத்தை கொண்ட ஒரு மதகுரு" போன்றன தான். இந்த படத்திற்கு பிறகு , நான் குளிக்கையில் (ஓ! நீ குளிப்பியா?) அடித்து வதை செய்யும் தவளை கூட என்னை தெனாவட்டாய் பார்ப்பதை உணர்கிறேன். 

BA'AL the demon


அது போக இந்த பதிவை எழுத முன்பு, அந்த படத்தில் வரும் "பால்" என்னும் பேயை பற்றி தகவல் தேடுவதற்காக சொடுக்கிய போது "பால் என்ற பேய் அதிக சக்தி கொண்டிருப்பது "ஒக்டோபர்" மாதத்தில் என்ற புது கிலியை கெளப்பிவிட்டிருக்கிறது விக்கிபீடியா...... என் விதியை என்ன சொல்வது....... 

'உச்சா போக வேண்டும் ...  என் இனிய சகோதரனை தேடுகிறேன் துணைக்கு...!!!!

டிஸ்கி:- என்னை நானே பிரபல பதிவர் என்றதற்கு (வேற எவனும் சொல்ல மாட்டேங்கிறானே) தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்கும் என நம்புகிறேன்.

"THE RITE" திரைப்பட விமர்சனம் படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, October 12, 2011

கோடி ரூபாய்க்கு கூப்பிட்ட "பவர் ஸ்ரார்".. ! பதறிப் போய் பதுங்கிய நித்யா மேனன் ! _ஒரு கண்டன அறிக்கை_

 நான் ரொம்ப கடுப்பில இருக்கனுங்க.... என்ன தைரியம் இருந்தா இவ எங்க தங்க தலைவன பத்தி அப்டி சொல்லலாம்? . எங்க தன் மான சிங்கத்து கூட நடிக்க இவளுக்கு தகுதியே இல்லாத போதும் மதிச்சு கூப்பிட்டதுக்கு பண்ணின காரியத்த பாத்தீங்களா? (டேய்.... ஏன் மப்படிச்சாப்ல  சலம்புற? மேட்டருக்கு வாடா..)



அது இல்லைங்க.... (எது??) "லத்திகா" படம் இமாலய வெற்றி பெற்றதை (என்னடா உலக உருண்டைய உள் பாவடைக்க மறைச்ச கதையா இருக்கேடா) அடுத்து எங்க தலைவன் "பவர் ஸ்ரார் " லூஸ் மோசன் ஆகுறாப்ல வரிசையா "மூலைக்கடை முருகேசன், "முட்டுசந்து கருணாகரன்", "திருமா" (என்ன கருமமோ?), 
"மன்னவன்" (யாரு நீயா ?) "ஆனந்த தொல்லை" (அட நாயே! நீ எப்பவும் தமிழ் நாட்டுக்கு தொல்ல மட்டும் தான்டா.. ஆனந்தம் எல்லம் கிடையாது " என்போரை அனைத்துலக பவர் ஸ்ரார் ரசிகர் மன்றம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.), "தேசிய நெடுஞ்சாலை" (ஆமா! உன்னோட படம் பாத்ததுக்கு அப்புறமா, அங்க போயி வர்ற பிரேக் இல்லாத லாரில அடிபட்டு தான் சாகணும் # எவன்டா மைண்ட்ஸ் வாஸ்ல பேசுறது?) அப்டீன்னு வரிசையா படம் அறிவிச்சிருக்கப்ல....




சரி மேட்டருக்கு வாறன் ( வந்து துலையேன்டா.....) அப்பிடி அண்ணன் அறிவிச்சிருக்கிற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ஒன்றில் நாயகியாக நடிப்பதற்கு கேரள நடிகை "நித்யா மேனனை" அண்ணாத்த அணுகியிருக்கிறார். எங்கள் தமிழர் குல கொளுந்தின் படத்தில் நடிப்பதற்கு மறுப்பு சொன்னதோடு மட்டுமல்லாது, "நான் சீனியர் சிட்டிசன்களோடு நடிப்பதில்லை " என்று வேறு கூறி ஏற்கனவே அசிட் வீசியது போல் இருக்கும் எங்கள் தலைவனின் மூஞ்சியில் கரி பூசியிருக்கிறார்.  அவ்வாறு நடந்து கொண்ட நித்ய மேனனுக்கு கண்டனம் தெரிவிப்பது அனைத்துலக பவர் ஸ்ரார் ரசிகர் மன்ற கொ.ப.சே என்ற முறையில் என் கடமையாகிறது.....

ஒரு படம் பாத்ததிலயே பேதியாகி கெடக்கு .. இதில நாலு வேறயா..

மக்களே ! எவனாச்சும் பதிவ பாதில நிறுத்திட்டு எந்த்ரிச்சு போனா, பவர் ஸ்ரார இன்றைக்கு உங்கட கனவில வந்து கானா பாட்டு பாட சொல்லிடுவன் ஜாக்கிரத....... . முதலில் நித்யா மேனனுக்கு எங்கள் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி பவர் ஸ்ராரை பத்தி தெரியவில்லை போலிருக்கிறது.... ("தெரிந்திருந்தால் , வாசலில் வைத்தே நாலணா, எட்டணா போட்டு அனுப்பியிருப்பர்" என்று முணுமுணுப்போருக்கு பவர் ஸ்ராரின் கிளோசப் போட்டோ இலவசம்)



எங்கள் அண்னன்  அக்கு பஞ்சர் வைத்தியராக இருந்து தன்னிடம் வருவோருக்கு மட்டும் உடம்பெல்லாம் பஞ்சர் பண்ணுவது போதாது , தானே திரையில் தோன்றி நடித்து (????) திரையரங்குக்கு வரும் அத்தனை பேருக்கும் உள் குத்து , வெளிக்குத்து , கும்மாங்குத்து எல்லம் குத்தி காது மூக்கால் ரத்தம் வரவைத்து வைத்தியம் பார்க்கும் நல்ல எண்ணத்தில் சினிமாவுக்கு வந்தவர். 

இதற்கு "லத்திகா" திரைப்படமே சான்று.... முதல் சீனில் அண்ணனை கிளோசப்பில் திரையில் பார்த்ததுமே எத்தனை பேர் வயிற்றை குமட்டி வாந்தி எடுத்தார்கள் தெரியுமா? அந்த சீனோடு அவர்களின் உடம்பில் இருந்த பித்தம், கபம் எல்லவற்றையும் போக்கியிருந்தார் அண்ணன். அது போக பேய் எப்படி இருக்கும் என்ற குழந்தைகளின் நீண்ட கால கேள்விக்கு விடை சொல்ல தெரியாமல் திணறிய எத்தனை பெற்றோர் அண்ணனை காட்டி "இது தாண்டா பேய், என்ன பேய் கொஞ்சம் பார்க்க சகிக்க கூடிய மாதிரி இருக்கும் " என்று கூறி பிள்ளைகளின் பொது அறிவை வளர்க்க காரணமாய் இருந்தவர் எங்கள் பவர் ஸ்ரார்.

எங்கேர்ந்துடா புடிச்சீங்க இவன?


கமல், ரஜினி போன்ற பெரும் நடிகர்கள் எல்லாம் (அண்ணன் மா பெரும் நடிகர் என்பதை இத்தால் கூறிக்கொள்வதில் எருமை அடைகிறேன்... சாரி பெருமை அடைகிறேன்) அடுத்தவன் பணத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது வீட்டில் இருந்த தட்டு முட்டு சாமன் (அண்னனின் பட்டாப் பட்டி உட்பட) முழுவது சேட்டு கடையில் அடகு வைத்து சொந்த பணத்தில் முதல் படம் நடித்து , இன்று கட்டண கழிவறைகளில் எல்லாம் ஆண் என்பதை அடையாளப் படுத்த அண்ணனின் போட்டோவை ஒட்டி வைத்திருக்கும் அளவிற்கு ஆண்மைக்கு இலக்கணமாக திகழ்கின்றார்.

கட்டண கழிப்பறை


அண்ணனோட மூஞ்சிய பாத்தா கிட்னி திருடுறவன் போல இருக்கிறது வாஸ்தவம் தான், அதுக்காக அண்னன் கிட்னி திருடிய பணத்தில் தான் படம் எடுத்தார் என்று கூறுபவர்களை அண்ணனின் முகத்தை கண்ணிமைக்காமல் இரண்டு நிமிடம் பார்க்க வேண்ணுமென தீர்பளிக்கின்றேன்.

அஜித் , சூர்யா, ஆர்யா, மாதவன், ஜீவா எல்லொரும் தமிழ் நாட்டின் தூக்கத்தை
 கெடுத்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போது ரசிகைகளின் தூக்கத்தில் டூயட் பாடுவதும் , ரசிகர்களின் தூக்கத்தை கலைப்பதும் அண்ணன் தான். அவர்கள் அழகாலும் , நடிப்பாலும் தூகத்தை கலைத்தார்கள், அண்ணன் தன்னோட திருமுகத்தால் பயம் காட்டி தூக்கம் கலைக்கிறார். எப்படி கலைகிறது எண்றது முக்கியம் இல்ல.. ஆக மொத்தத்தில் கலைகிறது தானே... # அர்த்த சாம நேரத்தில் குழந்தைகள் , அண்ணனின் மூஞ்சியை கனவில் கண்டு விட்டு 'அம்மா பூதம் " என்று அலறுவதற்கு ரசிகர் மன்றம் பொறுப்பல்ல.



இப்போது இருக்கும் நடிகர்கள் எல்லாம் , படத்தில் நடிக்கும் போது நல்லவர்களாகவும், கொடைவள்ளல்களாகவும் நடித்து விட்டு நிஜ வாழ்வில் அப்படி இருப்பது கிடையாது. ஆனால் அண்ணன் "லத்திகா" படம் வெளியான நாள் தொடக்கம் தெருவில் போவோர் வருவோர், அவசரமாக ஆபீஸ் போவோர், கையேந்து பவனில் சாப்பிட்டுவிட்டு கை கழுவ வெளியில் வந்தோர் என்று அனைவருக்கும் வலுக்கட்டாயமாக படத்தின் டிக்கட்டை கொடுத்து அவர்களை படம் பார்க்க சொல்லி அழகு பார்த்த பொது நலவாதி.. !!!. "அவர்கள் படம் பார்க்கையில் அண்ணனின் கொடுமை தாளாமல் கதறி அழுது வெளியில் ஓட முயற்சித்த வேளை , தியேட்டர் கதவுகளை வெளித் தாழ்பாள் போட்டு பூட்டி, அவர்கள் படம் முடிகின்ற வேளையில் குற்றுயிரும் குலையுயிருமாக வெளியில் வந்தார்கள் " என்று விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தியில் எந்த வித உண்மையும் இல்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.



ஓசி டிக்கட் எடுத்து கொடுத்தே "லத்திகா" படத்தை எங்கோ ஒரு முட்டு சந்தில் உள்ள தியேட்டரில் 175 நாட்கள் ஓடவைத்த மூளை அம்பானி, பில்கேட்ஸ்ஸுக்கும் இல்லாதது. எத்தனையோ வருடங்கள் சினிமாவில் இருந்து நடிகர்கள் பட்டங்கள் பெற, முதல் படம் ஸூட்டிங் ஆரம்பிக்க முன்னமே "பவர் ஸ்ரார்" என்று "வாண்டட்டாக" தனக்கு தானே பட்டப் பெயர் சூட்டிக் கொண்டு தமிழ் சினிமாவை ஒரு சர்வதேச தரத்திற்கு கொண்டு போனவர் எங்கள் வீர விளகெண்னை .. சாரி வீர விளக்கு "பவர் சார்"



மண்டையில் ஒரு சொட்டு மயிர் இல்லாத போதும் , முகத்தை மூடி புதர் போல வளர்ந்திருக்கும் மீசையை மூலதனமாக கொண்டே தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியிடம் பிடித்தவர். "இந்த நாய்க்கு யார் சார் இடம் குடுத்தது?  எங்க நடிகர் சங்க கூட்டம் நடந்தாலும் , தானும் நடிகன் தான்னு மன சாட்சியே இல்லம வந்து ஒட்டிக்குது நாயி...... எப்பிடித்தான் மோப்பம் புடிக்குதோ?" என்று புலம்புவோர் , அண்ணனின் ஆக்க்ஷனில் வெளிவர இருக்கும் அத்தனை படங்களது முதல் நாள், முதல் ஷோ.. முன் வரியில் இருந்து ( தனியாக) பார்க்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாவீர்கள் என்று எச்சரிக்கிறேன்.

எலேய்... ! நித்யா மேனன், எம் படம் "லத்திகாவ" 100 தடவ பாக்கணுமிடா.. இது தாண்டா அவளுக்கு தண்டண‌


அம்மணி...... முப்பது லட்சம் கூட சம்பளம் வாங்கியிராத உனக்கு அண்ணன் கோடிகளை கொட்டியும் நீ மறுத்திருப்பது, உனக்கு பெரும் இழப்பு. அண்ணன் ஏன் உன்னை நாயகியாக கேட்டார்???? ஏன் ? ஏன் ? ஏன்? ( "எத்தன தடவ கேட்டாலும் இந்த குள்ள கத்தரிக்கா கூட நடிக்க , தமிழ் நாட்ல ஒரு ஆயா கூட தயார் இல்ல" # எவண்டா அது? குறுக்க பேசுறது?)
 ஏன்னா மலையாள படத்தில நடிக்க உனக்கு தடை இருக்கிற படியால் , எங்கே நீ திசை மாறி "பிட்டு" படம் நடிக்க போயிடுவியோ எண்டுற நல்ல எண்ணம் தான். ( இவனே "பிட்டு "படத்தில வர்ற அங்கிள் போல தான் இருக்கான் # எவண்டா அது? மாட்னா செத்தடா) 

மவளே..! நித்யா மேனன்... மரியதையா அண்ணங்கிட்ட பொது மன்னிப்பு கேட்ரு.. இல்ல "பவர் ஸ்ராருடன் நித்யா மேனன் ஜல்சா..........."ன்னு குங்குமத்ல போட்டு உன்ன நாறடிச்சிருவன்.. இந்த அவமானம் உனக்கு தேவையா?

இவங்க யாரும் வேணா... நித்யா மேனன் தான் வேணூ........


அடுத்து அண்ணன் பவர் ஸ்ராருக்கு ! உங்கள் கோடான கோடி .... லட்ச்சாதி லட்ச .. ஆயிரம் ஆயிரம்..... நூற்றுக் கணக்கான....... ஏதோ இருக்கிற ஜந்தாறு ரசிகர்களில் ஒருவன் சொல்வது.... உங்களைப் பார்த்து " நாதாரி நாயே... குள்ள கத்தரிக்கா.... செனப் பண்ணி...., எந்த நம்பிக்கையில் நீ எல்லம் படம் நடிக்க வந்த ?, ஏண்டா உனக்கு கண்ணாடி பாக்குற பழக்கம் இருக்கா? , எங்கள பாத்தா பாவமா இல்லையாடா? ஏண்டா உயிர வாங்குற?" அப்ப்டீன்னு யாராவது கேட்டால் அதை கண்டு கொள்ள‌ வேண்டாம். 

அது எல்லாம் நீங்கள் 2017 இல் முதலமைச்சர் ஆவதையோ.... , அல்லது வெளியாக இருக்கும் உங்கள் நான்கு படங்களும் இந்த வருடத்துக்கான அத்தனை ஒஸ்கார் விருதுகளையும் அள்ளுவதையோ அல்லது நீங்கள் போட்டி இல்லாமல் அமெரிக்க ஜனாதிபதி ஆவதையோ விரும்பாத அந்நிய சக்திகளின் சதி என்பதைபுரிந்து கொள்ளுங்கள். அவ கெடக்குறா நித்யா மேனன் , உங்க ரேங்சுக்கு "ஜெசிக்கா அல்பா", " செரீனா கோமஸ்னு " ட்ரை பண்னுங்க தலைவா....

அடுத்த ராமராஜன்னு எவனாச்சும் சொன்னா .. இண்ணிக்கு கனவில வருவன் ஜாக்கிரத‌


அடுத்த தடவை உங்களின் படம் பார்க்க‌ யாராவது வந்து (எவனாச்சும் மப்பில் வருவான், புத்தி சுவாதீனம் உள்ளவன் உங்கள் படம் ஓடும் தியேட்டர் பக்கம் கூட வர மாட்டான்), நாய் வெறியில் பிராண்டியது போல் இருக்கும் உங்கள் முகத்தை பார்த்து விட்டு ரத்த வாந்தி எடுத்து இறந்தால், அந்த  புள்ளி விபரங்களை வெளியிடும் வரை உங்களிடம் இருந்து விடை பெறும் நான் 

மொக்கை சாமி
(பிரபஞ்ச "பவர் ஸ்ரார்" மன்ற தலைவர்)

ஜோடிப் பொருத்தம் சூபர்ல்ல..... பவர் ஸ்ரார் + நித்யா மேனன்





LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...