உதைபந்து

Saturday, March 17, 2012

சிம்புவுக்கு பெரிதாகப் போகும் "அந்த" உறுப்பு ! பரிணாம வளர்ச்சி கோளாறால் துயரம்! - ஒரு ஆய்வு, ஒரு வீடியோ, ஒரு விருது, ஒரு பொறம்போக்கு-


தப்பாகி போகுமா பரிணாம கோட்பாடு?

பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் எந்த  ஒரு உயிரினத்துக்கும் பாவனையில் இல்லாத உறுப்புக்கள் , குறுகி, சிறிதாகி பின்னர் முற்றாக அற்றுப் போய் விடுமாம். அதுபோல அதீத பாவனையில் இருக்கும் ஒரு உறுப்பானது தொடர்ந்து வளர்ச்சி அடைந்து பெரிதாகுமாம்.

அப்படி பார்க்கப் போனால் நயந்தாராவுக்கு மூளை இனிவரும் நாட்களில் இல்லாமல் போய்விடும். போகதா பின்ன ? சிம்புவுடன் பட்ட பிறகாவது புத்தி வேண்டாமா? சிம்பு ஒரு தேவதை என்று வல்லவன் படப்பிடிப்பின் போது கூறியவர் , வில்லு படத்துடன் பிரபுதேவா ஒரு தேன்வதை என்று கூடவே போய் இப்போது சக்கையாக திரும்பியிருக்கிறார்.

 சரி சக்கையாக திரும்பி இருப்பவர் திருந்தி இருக்கிறாரா என்று பார்த்தால், வாய்ப்பே கிடையாது என பதில் வருகிறது.  இப்போது ஜெயம் ரவியுடன் சுற்றுவதாக "பதிவுலக பிரம்மா", 'துப்பறியும் புலி" , சி.பி.செந்தில்குமாருக்கு தகவல் வந்திருக்கிறதாம். (அண்ணே புகழ்ந்ததுக்கு பேசினபடி பணத்த கொடுத்திருங்க அண்ணே!)

யம்மா நீ லவ் பண்ணின ஆக்களோட பெயரெல்லம் குத்தணுமிண்ணா உன்னோட முதுகு போதாது, சொன்னா புரிஞ்சுகோ!


அப்போ அதீத பாவனையில் இருக்கும் உறுப்பு பெரிதாகும் என்று பார்க்கப் போனால் அந்த உறுப்பு பெரிதாதல் நிகழப்போவது நம்ம சிம்புவுக்கு தான். (அட நயந்தாராவுக்கு ஒன்று நடந்தால் சிம்புவுக்கும் நடக்கணும் எண்டு சொல்ல அண்ணாத்த.. தொடர்ந்து படிச்சிட்டு அப்புறம் சொல்லுங்க)

சிம்புவுக்கு தான் ஒரு உறுப்பு எப்போதும் பாவனையில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கும் இந்த அளவில் அந்த உறுப்பு பாவனையில் இருந்தது இல்லை. "அலையில்" திரிசாவுடன் நடிக்கும் போதும், "சிலம்பாட்டத்தில்" சானா கானுடனும், "வல்லவனில்" நயன்ஸ்சுடனும் மன்மதனில் சிந்து துலானியுடனும் இவளவு ஏன் "மன்மதனில்" ஜோதிகாவுடன் கூட அண்ணனின் "அந்த " உறுப்பு ஒரே பாவனை தான் போங்கள். இந்தளவு பாவனை என்றால் பெரிதாகாமல் என்ன செய்யும்?


ஆனால் என்ன , அவ்வாறு அந்த பாகம் பரிமாணத்தில் பெருத்து விட்டால் பார்க்கவே சங்கடமாக இருக்கும். படப்பிடிப்புகளின் போது வழமைக்கு மாறாக துருத்திக்கொண்டு , மேலதிக நீளமாய் இருந்தால் நடிகைகளின் சங்கடங்களை தவிர்க்க , சிம்பு விசேட ஆடை ஏதும் தான் அணிய வேண்டி வரும். நினைக்கவே கர்ணகொடூரமாய் இருக்கிறது.

யார் கண்டார் ? அதையையே ஒரு கூடுதல் தகைமையாக எடுத்துக்கொண்டு அண்ணன் தனது ஆட்டத்துக்கு மேலும் சுதி சேர்த்தாலும் சேர்ப்பார். அவர் தான் மன்மதன் ஆயிற்றே!

எப்ப சார் எனக்கு பெருசாகும்?டாக்டர் எதிர் டாக்டர்

தமிழ் சினிமாவில் இரண்டு டாக்டர்கள் இப்போது பெரும் பிரபலம். ஒருவர் தொழில் முறையில் அக்குபஞ்சர் (அதுதாங்க குத்தி குத்தியே வைத்தியம் பண்றது) டாக்டராக இருந்து சினிமாவுக்கு வந்த பிரபஞ்ச சுப்பர் ஸ்டார் எங்கள் இளைய நாயகன் "பவர் ஸ்டார்".

ஏன் விஜய் நடிக்கும் போது நான் நடிக்க கூடாதா?


இன்னொருவர் திரைஅரங்குக்கு வரும் அனைவருக்கும் குத்தோ குத்தென்று குத்தி , அக்குபஞ்சர், ஆணிவேர் பஞ்சர் எல்லாம் பண்ணியதால் டாகுடர் பட்டம் வென்றவர் அல்லது பெற்றவர் அல்லது வரவழைத்தவர். (கண்மணி!....... கடிதம், கடதாசி, லெட்டரு, மடல்  எத வேணும்னாலும் போட்டுக்க) எடிசன் விருது வழங்கும் விழாவில் எதற்கு தனக்கு கொடுத்தார்கள் என்று புரியாமலேயே , "சிறந்த நடிகர்" விருதை வாண்டடாக போய் வாங்கிவந்த வருங்கால அமெரிக்க ஜனாதிபதி டாக்டர்.விஜய்.

இந்த இரு டாக்டர்களும் போட்டி போட்டு நடித்துகொண்டிருக்கும் படங்கள் தான் "ஆனந்த தொல்லை", மற்றும் "துப்பாக்கி". தனது லத்திகா படத்தை ஒரே தியேட்டரில் 200 நாட்களை தாண்டி ஓடவைத்துகொண்டிருகும் பவர் ஸ்டார் , அடுத்த படமான 'ஆனந்த தொல்லை' யை 375 நாட்கள் ஓட்டப் போவதாக சன் டீ.வி பேட்டி ஒன்றின் மூலம்  அறிவித்துள்ளதை தொடர்ந்து , தனது அடுத்தபடமான துப்பாக்கியை 50நாட்களேனும் ஓட்டி சாதனை புரிவேன் என்று டாக்டர்.இளையதளபதி கங்கணம் கட்டியிருக்கிறாராம். (படம் வெளியானவுடன் படத்தின் தயாரிப்பாளர் கோவணம் கட்டிக்கொண்டு அலைவார் என்ற கொசுறு தகவலை வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ்)

இப்பவே தூக்குறண்டா உன்ன!அடுத்த வீடியோ ரெடியா?

300 நாட்கள் தாண்டி ஓடிய நிக்தியானந்தா+ரஞ்சிதாவின் "இருட்டு அறைக்குள் தியானமே செய்தோம்" என்ற அவார்டு வின்னிங் திரைப்படத்தை தொடர்ந்து அமலா பாலும் அந்த அவார்டை வாங்குவார் போலதான் இருக்கிறது. அடிக்கடி கோவையில் உள்ள ஆச்சிரமத்தில் முகாம் இடுகிறாராம் அம்மணி! அங்கு தனக்கு அமைதியும் மன நிறைவும் கிடைப்பதாக சொல்லிவருகிறாராம். பாத்து அம்மணி , அப்புறம் எவனாச்சும் ஏதும் பண்ணின பிறகு "கோவை ஆச்சிரமத்துக்கு சென்றதன் மூலம் எனக்கு மனமும், வயிறும் நிறைந்தது" அப்டீன்னு சொல்ல வேண்டி வரும்.

"எலேய்! லெனின் போல வீடியோ எடுப்பதில் ஆர்வமுடைய சிஷ்யகோடிகள் யாராவது அந்த கோவை ஆச்சிரமத்தில் இருந்தால் இப்பவே சொல்லுங்கடா, ஒரு நல்ல 20 மெகா பிக்சல் வீடியோ கமிராவா வாங்கி தாறோம். போன தடவ வீடியோ கிளியாரிற்றி அவளவு சரியில்லப்பா...." அப்டீன்னு யாரோ ஒரு அப்பாவி அமலா பால் பக்தன் கூக்குரல் இடுவது எனது காதுகளுக்கு கேட்காமல் இல்லை. வாழ்க ஆச்சிரமங்கள்! வளர்க நடிகைகளின் ஆச்சிரம சேவை!

இப்பிடியே தான் நீங்க ஆச்சிரமத்துக்கு போவீங்கன்னா, நானும் கூட வாரன் மேடம்!யேய்! அது என்ன பொறம்போக்கு நெலமாடா?

தயாநிதி அழகிரி , மேத்வானி காதல் முற்றி வெடித்து , பழுத்து பஞ்சமிர்தமாகி, சிறப்பாகி சீழ்பிடித்ததை தொடர்ந்து மேத்வானியை அழைத்துகொண்டு அறிவாலயம் சென்றாராம் நம்ம புது கதாநாயகன் அழகிரி!

மேத்வானியை மேலும் கீழும் பார்த்த கலைஞ்ஞர் இலங்கை தமிழர் விடயத்தில் காத்த மௌனத்தை காத்துக்கொண்டு இருந்தாராம். பிறகு கலைஞரின் காலில் மேத்வானி விழவும் கடுப்பாகி போனாராம். உடனே தனது பினாமிகளை அழைத்து , பதிவாளர் அலுவலக ஆட்களை வரவைக்க சொன்னாராம். "அட!  காதலி என்று அறிமுகம் செய்ய அழைத்து வந்தால் , உடனே மனைவியாக்க சொல்கிறாரே தாத்தா" என்று புழுகத்தில் தயாநிதி காற்றில் பறந்துகொண்டிருக்க வந்தார்களாம் அதிகாரிகள்.

அவர்களிடர் கருணாநிதி சொன்னாராம் "இந்த மாநிலமே சொல்கிறது எனது ஆட்சியில் எத்தனையோ பொறம்போக்கு நிலங்கள் அபகரிக்கப்பட்டன என்று, அப்படியிருக்க ஒரு பொறம்போக்கு இடத்தை மட்டும் விட்டுட்டீங்களே" என்று கத்தினாராம். குழம்பி போன அதிகாரிகள் " தலைவரே! தங்களது நல்லாட்சியில் பல்கலைக்கழகம் தொடக்கம் , பாமரனது குடிசை வரை வளைத்து போட்டுவிட்டோமே, எதை விட்டு விட்டோம்" என்றார்களாம்.

இங்க ஒரு ரெண்டு கிரவுண்டு தேறும் போல இருக்கே! குத்துங்க எஜமான் குத்துங்க!


அது வரை நேரமும் குப்புற கிடந்த மேத்வானியின் முதுகை காட்டி இதை ஏனடா விட்டீர்கள் என்று காட்டு கூச்சல் போட்டாராம் கருணாநிதி. "தலைவரே! உ ங்ளுக்கு வயசாகி விட்டது, கண்பார்வை போகிறது, கூறு கெட்டு விட்டது. மக்கள் என்னை ஓய்வு எடுக்க சொல்கிறார்கள்  என்று தேர்தல் முடிய அறிக்கை விட்டதோடு சரி அடங்க மாட்டெங்கிறீங்களே? நல்லா பாருங்க அது நெலம் கெடையாது, முதுகு" என்றார்களாம் அவரது அடி பொடிகள். "டேய் தெரியும்டா ! எதுவா இருந்தாலும் பரவாயில்ல , துளியூண்டு இடம் காலியா இருந்தாலும் பட்டா போடிருவம் , அது தான் என்னோட பாலிசி" என்றாராம்.

இப்போது மேத்வானியோடு ஸ்ரேயா, சமீரா ரெட்டி, நயன்தாரா என்று ஒரு பட்டாளத்துக்கு பட்டா போடும் படலம் அறிவாலயத்தில் இடம்பெறுவதாக சொல்லுவது நான் இல்லைங்கோ, விக்கிலீக்ஸ்.. விக்கிலீக்ஸ்!


ஒரு விருது 

ஒவ்வொரு தடவையும் நோபல் பரிசை வென்றவர்களை தேர்ந்தெடுப்பதில் பலத்த சிக்கல்கள், கடும் போட்டிகள் இருக்குமாம். ஆனால் இந்த தடவை சமாதானத்துக்கான நோபல் பரிசை பெறுவது யார் என்ற சர்ச்சைக்கே இடமிருக்கவில்லையாம். ஏக மனதாக ஒருவரை ஏற்பாட்டு குழு தேர்வு செய்து இருக்கிறதாம். சக போட்டியாளர்கள் கூட "இவருடன் ஒப்பிடுகையில் நாங்கள் எல்லாம் தூசு" என்று ஒதுங்கியுள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இதற்கு முன்னர் இந்த விருதை வென்றதன் மூலம் இந்த தெரிவுக்குழுவின் அங்கத்தவர்கலாக நியமிக்கப்பட்ட  கிட்லர், கடஃபி, ஒசாமா , இடி அமீன் போன்றோரது ஆவிகள் கூட இவரது பெயர் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாளில் பேதியாகியவை தானாம். இன்னும் அலுவலக பக்கம் தலை கூட வைக்கவில்லையாம். அதிலும் இவரது சாதனைகளின் தொகுப்பு  வீடியோவை சானல் 14 வெளியிட்டதி இருந்து, இனி 'வாழ்நாள் சமாதான நோபல் பரிசுக்கு உரியவர் " என்ற விருது வழங்கி கௌரவிக்க முடிவு செய்திருக்கிறதாம் ஏற்பாட்டு குழு.

அந்த சமாதானத்துக்கான நோபல் பரிசை பெறுபவர் யார் என்று சொன்னால் , நான் சமாதானத்தில் இளைப்பாற வேண்டி வரும் என்பதால் முடிவை எடுப்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

விருதுக்குரியவரின் சிரிப்பை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா?


அது சரி பதிவின் சுவாரசியத்தில் நான் இப்போது தான் ஞாபக படுத்தி பார்கிறேன். பெரிதாகப் போகும் சிம்புவின் அந்த உறுப்பு எதுவென்று நான் சொல்லவே இல்லயே! அவரோட "விரல்" தாங்க அது! அத யூஸ் பண்ணாம அண்ணன் எந்த படத்தில நடிச்சிருக்கார். அத தானே அவர் அதிகம் யூஸ் பண்ணுறார். அப்போ விதிப்படி அது தானே பெருசாகணும். என்ன நான் சொல்றது? 

டிஸ்கி:- "மிருகங்கள் அழிவதில் ஆபிரிக்க கறுப்பின மக்களின் பசி கொடுமையின் பங்கு" தொடர்பில் ஒரு ஆய்வு பாணியிலான பதிவினை எழுத ஆயத்தமாகி இருந்தேன், அந்த பதிவு வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் இடை நடுவில் இரண்டு மரண மொக்கை பதிவுகளை போடுவதற்கு முடிவு செய்திருக்கிறேன் என்பதை பெருமையுடன் அறியத் தருகிறேன்.

எனது கடையை நீங்கள் மறக்காமல் இருப்பதற்கு இந்த ஏற்பாடு! எப்பூடி?


இது சும்ம போனஸ்சு!

Thursday, March 15, 2012

வலியப் போய் நரிகளிடம் கடிபடும் சிங்கம்!

இந்த பதிவு ஒரு ரசிகனாக , ஒரு ஆரோகியமான கிரிக்கட் வீரரை ரசிப்பவனாக எனது ஆதங்கத்தை கொட்டித் தீர்பதற்கு எழுதுகிறேன். இது குறித்து உங்களிடையே மாற்றுக் கருத்துக்கள் இருப்பதில் தவறில்லை. இது, ஒரு கிரிக்கட் வீரரின் ரசிகனாக  எனது கோணத்திலான பார்வை மட்டுமே! யாரையும் புண்படுத்தும் நோக்கமோ, எனது கருத்தை வலிந்து திணிக்கும் எண்ணமோ எனக்கு அறவே இல்லை என்பதை ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டி அடி உதை விழுவதில் இருந்து தப்பித்துகொள்ள ஆசைப் படுகிறேன்.

 இது கிரிக்கட் பதிவாக இருக்கின்ற போதும் , ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு என்கிற படியால் புள்ளி விபரங்களை அள்ளிவிட்டு இதை ஒரு கிரிக்கட் ஆய்வு பதிவு போல் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாய் இருக்கிறேன். ஒரு அடிப்படை ரசிகனின் ஆதங்கங்களுக்கு புள்ளிவிபரங்கள் அவசியமற்றவை என்பது எனது தனிப்பட்ட கருத்து.

ஆனாலும் தேவைப்படும் இடங்களில் சில புள்ளிவிபரங்களையும் தந்திருக்கிறேன். ஒரு சாதனை தனி நபரின் சாதனைகளை பட்டியலிட புள்ளிவிபரங்களுக்கு தேவையும் இருக்கிறது.
சனத் ஜயசூர்யா! ஒரு இமாலய சாதனையாளன். இந்த காலத்தில் அடித்து ஆடுவதற்கு எத்தனை கொம்பன்கள் வந்த போதிலும் அத்தனைக்கும் அப்பன் எங்கள் சனத் தான் என்பேன்.


ஓய்வை அறிவித்துவிட்டு சனத் இலங்கை கிரிக்கட் அணியை காலி செய்துவிட்ட பிறகு, எந்த பதிவரோ அல்லது கிரிக்கட் அவதானியோ சனத்தை தேடாத இந்த நேரத்தில் இந்த பதிவின் அவசியம் என்ன என்று தானே பார்கிறீர்கள்?  காரணம் இருக்கு அண்ணாத்த.ஓய்வுக்கு பின்னரும் ஆடுகிறேன் பேர்வழி என்று தான் சேர்த்துவைத்த நற்பெயர் கெட்டுவிடும்படி (ஏற்கனவே அண்ணன் அடித்த கூத்தில் பாதி கெட்டு போயாச்சு)ஆடிகிற ஆட்டம் தான் ஒரு பாமர ரசிகனான என்னை பத பதைக்க வைகின்றது.

இலங்கை அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமாகி, ஆரம்பத்தில் துடுப்பாட்ட வரிசையில் ஏழாம் நிலை வீரராக களமிறங்கி , தனது அதிரடி பாணியால் எதிரணியின் வயிறுகளையும், கிரிக்கட் ரசிகர்களின் மனங்களையும் ஒரு கலக்கு கலக்கியவர். தொடர்ச்சியான அதிரடிகளால் , இவரை ஒரு சிறந்த ஆரம்ப வீரர் என இனங்கண்டு கொண்ட இலங்கை கிரிக்கட் அணித் தலமை ஆரம்ப துடுப்பாட்டவீரராக களமிறக்கி அழகு பார்த்தது.

ஆரம்ப வீராராக பரிமாணம் கண்ட பிறகு கிரிக்கட் உலகின் அசைக்கமுடியாத ஒரு சக்தியாக வலம் வந்தார் சனத். துடுப்பாட்டம் பந்துவீச்சு என சகல துறைகளிலும் சாதனை நாயகனானார் சனத். இலங்கை 1996இல் உலகக்கிண்ணம் வென்றதில் சனத்தின் அதிரடிதான் அதி முக்கிய பங்குவகித்தது என்றால் மிகையாகாது. அந்த உலக கிண்ண தொடரின் தொடர் நாயகன் விருதும் வென்றார் சனத்.அந்த உலகக் கிண்ண தொடருக்கு பின்னர் சனத் காட்டில் ஒரே அடை மழைதான் போங்கள்! ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமான அரைச்சதம் (17 பந்துகள்), அதிவேகமான சதம் (48 பந்துகள்) , அதிவேகமான 150 (96 பந்துகள்) என தனது அதிரடியால் கிரிக்கட் உலகின் பந்து வீச்சாளர்களை நிலை குலைய செய்தார் சனத். (அதி வேகமான சனத்தின் சதமடித்த சாதனை அதே போட்டியில் பாகிஸ்தானின் சகிட் அஃப்ரிடியால் முறியடிக்கப்பட்டது. அஃப்ரிடி 38 பந்துகளில் சதம் கடந்தார். அது போல அதி வேக 150 என்ற சனத்தின் சாதனை பின்னாளில் அவுஸ்ரேலியாவின் ஷேன் வொட்சனால் முறியடிக்கப்பட்டது) ஆனால் இன்னமும் அதி வேக அரைச் சதத்துக்கு சொந்தக்காரராக மிளிர்கிறார் சனத்.

இது தவிர ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக மிளிர்கிறார் சனத். ஒரு நாள் கிரிக்கட் உலகில் 400 போட்டிகளை கடந்த முதல் வீரர் சனத்தே தான். அது போக உலகு கண்ட ஒரு சிறந்த சகல துறை வீரரும் சனத் தான் என்பேன். ஒரு நாள் போட்டிகளில் 14874 ஒட்டங்களும் 323 விக்கட்டுகளுமே இதற்கு சாட்சி. சச்சினுக்கு அடுத்த படியாக ஒரு நாள் கிரிக்கட் அரங்கில் அதிக பட்ச ஓட்டங்களை அடித்தவர் சனத் தான். டெஸ்ட் போட்டிகளில் அரு அணி இன்னிங்க்ஸ் ஒன்றில் பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையான 954 (1997இல்) ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக்கொண்ட போது அந்த போட்டியில் 340 ஓட்டங்கலை பெற்றிருந்தார் சனத் (இதுவே சனத்தின் அதிகூடிய டெஸ்ட் பெறுபேறு ஆகும்). இந்த போடியில் ரொஷான் மகாநாமவுடன் இணைந்து டெஸ்ட் அரங்கில் அதிகூடிய  இணைப்பாட்டமான 576 ஓட்டங்கள் என்ற சாதனையை செய்தார். பின்னாளில் (2005இல்)  இந்த சாதனை சகபாடிகளான மகேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்காரவினால் முறியடிக்கப்பட்டது (624 ஓட்டங்கள்) .

டெஸ்ட் போட்டிகளில் 6973 ஓட்டங்களும் 98 விக்கட்டுகளும் சனத்தின் டெஸ்ட் ஆதிக்கத்தையே காட்டி நிற்கின்றது. 

இலங்கை அணியின் தலைவராக , ஆசிய பதினொருவர் அணியின் வீரராக , மும்பை இந்தியன்ஸ் அணிவீரராக, எத்தனையோ இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் இலங்கைபிராந்திய அணிகளின் வீரராக வலம் வந்தவர் எங்கள் சனத்.

1996 இல் இலங்கை உலக கிண்ணத்தை வென்ற பிறகு, இலங்கையின் அடி நுனி சந்து பொந்துகள் எல்லாம் கிரிக்கட் உள்நுழைய தொடங்கிவிட்ட பிறகு எமது வாய்களில் எல்லாம் உச்சரிக்கப்பட்ட பெயராக இருத்து என்றால் அது சனத்தின் பெயர் மட்டுமே! 

ஷம்போவை எடுத்து தலையில் தேய்த்து , தலை முடியை நெற்றி தெரிய பின்னோக்கி இழுத்துக் கொண்டு "என்னை பார்க்க ஜேசூர்யா போல இருக்கா?" என நான் மைதாங்களில் அலையுமளவிற்கும், வழமையாக பால் தேனீர் குடிப்பதால் அன்றொருநாள் மட்டும் தாய் கொடுத்த  பிளேன் டீயை குடிக்க மறுத்த என் நண்பனிடம் "டேய் ஜேசூரியாவும் பிளேன்டீ தான்டா குடிப்பான் " என்று சொல்லி அவனை ஏமாற்றி அவனை அவன் தாய் பிளேன்டீ குடிக்க பண்ணுமளவிற்கு நாங்கள் எல்லோரும் ஜெயசூர்யா பைத்தியமாகி இருந்தோம்.

எங்கள் ஊரிலும் , நாட்டிலும் எத்தனையோ ஜெயசூரியா பைத்தியங்கள் அலைவதற்கு தனது துடுப்பாட்டத்தின் மூலம் காரணமாகிவிட்டிருந்தார்.

இவரது அதிரடி பொறுக்க முடியாமல் , எப்படியாவது இவரை மைதானத்தை விட்டு வெளியேற்ற வேண்டுமென்று "கருங்குரங்கு, தேவாங்கு" என்றெல்லாம் சனத்தை வெள்ளயர்கள் திட்டிய சம்பவங்களையும் கிரிக்கட் உலகு கண்டது. பந்து வீச்சு கைகொடுக்காத பட்சத்தில் , எதிரியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி ஆட்டமிழக்க வைப்பது அன்றிலிருந்து இன்று வரை மேற்குலக கிரிக்கட் அணிகள் கொண்டிருக்கும் மோசமான தந்திரோபாயம்.ஒரு காலத்தில் கிரிக்கட் உலகின் ஜாம்பவான்கள் என்று சொல்லபட்ட அத்தனை பந்துவீச்சாளர்களும் பந்து வீச பயந்த ஒரு துடுப்பாட வீரர் இருந்தாரென்றால்  அது சாட் சாத் எங்கள் சனத் தான். இதை அன்டெர்சன் , நியூசிலாந்தின் காரிஸ் , இந்தியாவின் வெங்கடேஷ் பிரஷாந்த் போன்றோரிடம் கேட்டால் நன்றாகவே சொல்வார்கள். இந்த பந்து வீச்சாளர்களை நிறைய போடிகளில் துவைத்து காயப் போட்டவர் சனத்."மச்சி எப்பிடி போட்டாலும் அடிக்கிறான் மச்சி .." என்று  பந்து வீச்சாளர்கள் புலம்பியதும் உண்டு. ஆனால் அது ஒரு காலம் , அழகிய காலம் காலம்..........

இந்த "ஒரு காலத்தில்....... " என்ற வரிகளோடுதான் ஆரம்பமாகிறது எனது ஆதங்கம். என்னைக் கேட்டால் 1996 களில் ஆரம்பித்த சனத்தின் அதிரடியும் அவர் மீதான பந்துவீச்சாளர்களின் பயமும் 2008 வரை தான் நீடித்தது என்பேன். அல்லது இன்னும் கொஞ்சம் அதிகரித்து கூறினால் முதலாவது ஜ.பி.எல் போட்டிகள் வரை சனத்தின் ஆதிக்கம் தொடர்ந்தது எனலாம். இந்த முதலாவது ஜ.பி.எல் தொடரில் தான் இறுதியாக சனத்தின் அதிரடியில் ஏதோ பாதியாவது பார்க்க கிடைத்தது எனலாம். சென்னை சுப்பெர் கிங்க்ஸ்கு எதிரான போட்டியில் அவர் சதம் விளாசியபோது சென்னையின் பந்துவீச்சு பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத் அதே பழைய மரண பயத்துடன் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. (இந்த சதம் விளாசலில் தன் சக இலங்கை கிரிக்கட் வீரர் சாமர கபுகெதரவின் ஓவரில் நான்கு சிக்சர்கள் விளாசியதும் அடக்கம்).

அந்த போட்டிக்கு பின்பு சனத்தின் அதிரடியையோ, பந்து வீச்சாலர்கள் மத்தியில் சனத் பற்றிய பயத்தையோ நான் பார்க்கவே இல்லை. சனத் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் காமடி பீஸ் ஆகிப்போனார். அதற்கு பல காரணங்கள்.சாதரணமாக் உடல் வல்லமையை நம்பி ஆடப்படும் ஒரு விளையாட்டை விளையாடும் ஒரு விளையாட்டு வீரரது உடல் நிலை சராசரியாக 35 - 40 வயதுக்குள் தனது வல்லமையை இழக்க ஆரம்பித்துவிடும். இது சாதாரண விஞ்ஞானம். இதனாலேயே அநேகமான உதைபந்தாட்ட வீரர்கள், அல்லது கிரிக்கட் வீரர்கள் தங்களது முப்பத்தைந்தாவது அகவை நிறைவடைந்ததும் ஓய்வு குறித்து சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். கிரிக்கட்டில் ஓய்வுக்காலம் என்பது இப்போது சராசரியாக 36,37 வயதாக இருக்கின்றது.

இந்த 37 வயதுக்கு பின்னர் கிரிக்கட் ஆடுவது என்பது சற்று குதிரைக் கொம்பான விசயம் தான். வயதேற்றம் , உடல் தளர்ச்சியால் உடல் சரிவர ஒத்துழைக்காது. கிரிக்கட் என்பது சரியான உடல் தகுதி, வலிமை என்பனவற்றோடு ஆடப்படுவது. மற்றும் கிரிக்கட் ஆடுவதற்கு அதி முக்கியமாக "டைமிங்" அவசியம். எகிறிவரும் வேகப்பந்துகளையும் , நொடியில் குழப்பிவிடும் சுழல் பந்துகளையும் சந்தித்து லாவகமாக ஆடுவதற்கு "டைமிங்" மிகவும் அவசியம். இந்த டைமிங்குக்கு உடல் தகுதி , வலிமை அத்தியாவசியமானது. இந்த வலிமை மற்றும் உடல் தகுதிகளை 37+ வயதில் எதிர் பார்க்க முடியாது.

உங்களது மனமும், ஆட்ட நுணுக்கமும் உங்களோடு கூடவே இருந்தாலும் இந்த "டைமிங்+உடல் தகுதி" இலாவிட்டால் சாலமன் பாப்பையா பாணியில் "வயசாச்சில்லே......." என்று கூறிவிட்டு போய்கொண்டே இருக்க வேண்டியது தான். டிராவிட் போன்று மட்டயடித்து ஆடும் வீரருக்கே நிலமை இதுவென்றால், அதிரடியையே அடையாளமாக கொண்ட சனத்திற்கு, உடல் தகுதியின்றி ஒரு ஆணியையும் புடுங்க முடியாதென்பது அவருக்கு ஆரம்பத்தில் விளங்காமல் போனது பெரும் துயரமே! 

 மனோதிடமும், தொடர்ந்து கிரிக்கட் ஆடும் ஆசையும் கொண்ட சச்சினுக்கு இப்போது நேரும் துயரம் கூட இந்த "டைமிங்" பிரச்சினை தான். இந்த "டைமிங்கை" மனிதர் தொலைத்து ரொம்ப நாள் ஆயிற்று. இது குறித்து இறுதியில் சற்று விரிவாக பார்ப்போம். இப்போது சனத்தின் கதைக்கு வருவோம்...சனத் தனது 38வது வயதுக்கு பின்னர் (2008 க்கு பின்னர்) கிரிக்கட் ஆடுவதற்கு தீர்மானித்தது தான் அவரது நற்பெயருக்கு களங்கம் கொண்டுவந்து சேர்த்தது என்பேன்.

எந்த பெரிய வீரராக இருந்தாலும் , எவளவு சாதனை செய்திருந்தாலும் ஒரு கட்டத்தில் ஓய்வு பெறுவதென்பது காலத்தின் கட்டாயமாகிறது. நல்ல நிலையில் ஆடிக்கொண்டிருந்தாலும் , நல்ல ஃபொர்மில் இருந்தாலும் , அடுத்து ஏறப்போகின்ற வயதையும் அதனால் உடலில் ஏற்பட போகும் மாற்றத்தால் ஆட்டத்தில் நிகழ போகிற இறங்கு நிலைகளையும் கருத்தில் கொண்டு தக்க தருணத்தில் ஓய்வை அறிவிப்பதே ஒரு சிறந்த வீரனின் சிறந்த முடிவாக இருக்க முடியும்.

இன்னும் கொஞ்சம் களத்தில் இருந்து ஆட மாட்டானா? அல்லது "அட இவன் ஏன் இப்போ ஓய்வை அறிவித்தான். நால்லா தானே ஆடிகொண்டு இருந்தான் " என மக்கள் பேசும் ஒரு ஓய்வு தான் ஒரு வீரனின்  சிறந்ததொரு ஓய்வாக இருக்க முடியும். இவ்வாறான ஓய்வைத் தான் முரளி தரனும், மத்யூ கெய்டனும்  அறிவித்தார்கள்.

இந்த இருவராலும் இன்னமும் குறைந்தது ஒரு வருட காலமேனும் விளையாடியிருக்க முடியுமென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அவர்களது ஃபோர்ம் மற்றும் உடல் தகுதி நல்ல நிலையில் தான் இருந்தது. கெய்டன் பந்துவீச்சாளர்களையும் முரளி துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்தும் நிலையில் தாங்கள் இருக்கும் போதே தங்களது ஓய்வை அறிவித்து கிரிக்கட் உலகில்  தங்களது பெயரினை பாதுகாத்து கொண்டார்கள்.

சனத் அந்த வரிசையில் இடம் பெற்றிருந்தால் அவரது புகழ் எப்போதும் மங்காமல் இருந்திருக்கும், அவர் எப்போது பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமான ஒருவராகவே கணிக்கப்பட்டு இருப்பார். 


ஆனால் சனத் சேர்ந்தது "எப்படா இவனுகள் வெளிய போவானுகள்?" என்று எல்ல தரப்பும் புலம்பி, வெளியேற்றப்பட்ட ஜாவிட் மியாண்டாட், கங்குலி, அனில் கும்ளே, அர்ஜுனா ரனதுங்க ஆகியோரது வரிசையில்.

கிரிக்கட் உலகில் பெரும் ஜாம்பவன்களாக திகழ்ந்து சில பல காரணங்களால் அணியில் இருந்து வெளியேறாமல் தொங்கிகொண்டிருந்து பின்னர் பல நிர்பந்தங்களுக்கு பின்னர் ஓய்வை அறிவித்தவர்கள் (பச்சையாக சொல்லப்போனால் வெளியேற்றப் பட்டவர்கள்) வரிசையில் தான் சனத்  சேர்ந்தார். 


2006 ஏப்ரலில் இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற சனத் அப்படியே போயிருக்கலாம். மறுபடியும் மே மாசத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் களமிறங்கியது அவரது அடி பொடிகளான எங்களுக்கு சந்தோஷமாக இருந்த போதிலும் கிரிக்கட் உலகில் அது ஒரு கேலிக்குரிய விடயமாகவே பார்கப்பட்டது.

அந்த தொடரில் அவரால் சரியாக ஆடக்கூட முடியவில்லை . கடைசியாக 2007 இல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அண்டர்சனுக்கு போட்டு விளாசிவிட்டு டெஸ்ட் அரங்கில் இருந்து நிஜமாகவே ஓய்வு பெற்றார் சனத். இந்த அவமானம் தேவயா?  என்று முணுமுணுத்தது கிரிக்கட் உலகம்.2007 உலக கிண்ண போட்டிகளுடனாவது அவர் ஒருநாள் அரங்குக்கு குட் பாய் சொல்லி இருக்கலாம். இறுதி போட்டியில் சிறந்ததொரு ஆட்டம் ஆடிவிட்டு ஓய்வு பெற்றார் சனத் என்று ஊர் சொல்லி இருக்கும். ஆனால் மனுசன் விட்டாரா? தான் சேர்த்துவைத்த நல்ல பெயர் கெடும்வரைக்கும் ஓயமாட்டேன் என சபதம் எடுத்தவர் போல அடித்து துரத்தும் வரைக்கும் அணியில் தொங்கிக் கொண்டே இருந்தர். 

2011 உலக கிண்ண போட்டிகளுக்கு முன்னரான இங்கிலாந்து தொடரில் அப்போதைய அணி தலைவர் சங்கக்கார , கிட்டத்தட்ட சனத்தை பகிரங்கமாகவே விமர்சிக்கும் அளவுக்கு அண்ணனின் தொங்கல் இருந்தது.

2010இல் அரசியலுக்கு போனார். அப்போதாவது கிரிக்கட்டை விடுவாரா என்று பார்த்தால் , தனது அரசியல் பலத்தை கொண்டு பின் கதவு வழியாக அணிக்குள் நிழையவே எத்தனித்தார். 2011 உலக கிண்ண அணியுஇல் இந்த இடம் பிடிப்பார் அந்தா இடம் பிடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளை அரவிந்தாவின் அணித்தேர்வு தலமை பொறுப்பு அதற்கு ஆப்பு வைத்தது.(உண்மையில் நான் கூட சனத்தின் உலககிண்ண வருகையை எதிர் பார்த்து தான் காத்திருந்தேன். என்ன செய்வது விமர்சனம் என்பது வேறு, ரசனை என்பது வேறு.

இறுதியில் உலககிண்ண தொடருக்கு பின்னர் இடம்பெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் , T20 தொடரிலும்  ஆடி தனது 22 வருட கிரிக்கட் வாழ்கையை முடித்துகொண்டது இந்த கிழசிங்கம். 

சரி அப்பாடா! இனியாவது இருக்கும் மானத்தை காப்பாற்றுவார் என்று பார்த்தால், இப்போது பங்களாதேஷ் லீக் ஆடுகிறேன் பேர்வழி என்று கிளம்பி இருக்கிறார். ஓய்வுக்கு பின்னர் உள்ளூர் போட்டிகலில் ஆடுவது கூட பரவாயில்லை. சர்வதேச கவனம் அதிகம் படாத இடம். அடிவாங்கினாலும் அசிங்க பட்டாலும் நம்மோடு போய் விடும். ஆனால் இது போன்ற சர்வதேச கண்கள் மொய்த்துள்ள இடத்தில் அடிபடுவதென்பது , நீங்கள் சேர்த்துவைத்த அத்தனை நற்பெயரையும் கெடுத்துவிடும் சனத் சார்!"நான் பணத்துக்காக ஆடவில்லை. எனது சுய விருப்பத்துக்காக ஆடுகிறேன்" என்று சொல்லி இருந்தீர்கள்.கிரிக்கட் ஆசை என்பது சரி தான். ஆனால் அதை உள்ளூரில் ஆடலாமே! ஏனெனில் சர்வதேச கிரிக்கட் உலகுக்கு உங்களை ஒரு சினம் கொண்ட சிங்கமாகவே மட்டுமே தெரியும். நீங்கள் இவ்வாறு பல்லும் விழுந்து, நகமும் கழன்ற பின்னர் வேட்டைக்கு கிளம்பி இருப்பது ஆபத்து சார்! 

பந்துவீச்சின் ஜாம்பவான்களையெல்லாம் வேட்டையாடிய உங்களை, நேற்று பொந்துக்குள் இருந்து வந்த நரிகள் எல்லாம் கடித்து , பிராண்டி காயப்படுத்துவது தெரியவில்லையா?

முன்பெல்லாம் சனத்துக்கு ஓஃப் திசையில் விக்கட்டுக்கு சற்று வெளியாக பவுண்ஸ் ஆகி பந்து வந்தால் தேர்ட் மேன் பகுதியில் அல்லது கவர் பொயிண்ட் பகுதில் சிக்ஸ் பறக்கும். அதுபோல் லெக் திசையில் ஓவெர் பிச் ஆக பந்து விழுந்தால் மிட் ஓன் பகுதியில் பந்து பவிலியன் கூரை தொடும்.

ஆனால் இன்று நடப்பதோ தலை கீழ் , பந்து வீச்சாளர்கலெல்லாம் அப்படித்தான் (வேண்டும் என்றே) பந்தை வீசுகிறார்கள். சனத்தும் அதே பாணியில் அடிக்கிறார், ஆனால் பந்து மட்டும் அந்த 15 யார் தூரத்தில் மேலெழும்பி சனத்தின் விக்கட் பறக்கிறது. இது காட்டுவது யாதெனில் சனத்தின் 'டைமிங்கும்" அவரது உடல் தகுதியும் முற்றாக இல்லை என்பதையே! 

சனத்துக்கு ஒரு ரசிகனாக சொல்லிக்கொள்ள விரும்புவது! நீங்கள் சிங்கம் தான், இன்னமும் உங்கள் கர்ச்சனையை எந்த பந்து வீச்சாளரும் மறந்துவிடவில்லை! ஆனால் பல் விழுந்த நகம் உடைந்த சிங்கம் வேட்டையாட முடியாதென்பது தான் காட்டின் விதி. நரிகளால் பிராண்டப்பட்டு அவமானத்துடன் காட்டில் அலைந்து இறப்பதை விட , வீரமுடன் வேட்டையாடி ஏற்கனவே சேர்த்துவைத்த இறைச்சிகளை உண்டு ஓய்வெடுப்பதே சிங்கத்துகு அழகு. அதுவே கௌரவமும் கூட!

இந்த கிரிக்கட் காட்டில் இன்னுமொரு கிரிக்கட் கிழம் சிங்கம் ஒன்று கூட தனது நூறாவது வேட்டைக்காய் அலைந்து கொண்டிருக்கிறது.

சச்சின் ! சாதனைகளுக்கு சொந்தகாரர். ஆனால் இந்த சதத்தில் சதமடிக்கிறேன் என்று சறுக்குகிறார்.சச்சினுக்கும் அவரது சரியான "டைமிங்" அவரைவிட்டு போய் ரொம்ப நாளாச்சு. அதனால் தான் ஒரு காலத்தில் சச்சினை ஆட்டமிழக்கவைக்க முரளிதரனும், ஷேர்ன் வோர்ன்னும், மெக்ராத்தும் தேவைப்பட்ட இடத்தில் இன்று நேற்று முளைத்த கல்ஃபின்காசும், ஸுவார்ட் புரோர்ட்டும்,பீட்டர் சிடிலும் , டோகர்ட்டியும் சச்சினை உண்டு இல்லை என பண்ணினார்கள்.(கடந்த இங்கிலாந்து அவுஸ்ரேலியா தொடர்கள் உதாரணம்)

சச்சினை நேசித்த பல கிரிக்கட் அவதானிகளே அவரது ஓய்வுக்கான அவசியம் குறித்து அறிக்கைகள் வெளியிட ஆரம்பித்துள்ள நிலையில் சச்சின் ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதே  அவரது புகழுக்கு இழுக்கிலாததாக இருக்கும். 

உஷாரா இருந்துக்கோ மச்சி....


சச்சின் கடைசியாக சதமடித்து ஒரு வருடமும் ஒரு வாரமும் ஆகிவிட்ட நிலையில் ஒருவேளை அடுத்து பாகிஸ்தானுடன் ஆசிய கோப்பையில் ஆடும் போது தனது 100வது சதத்தை அடித்துவிட்டால் , ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து "யாஆஆஆஆஆ கூஊஊஊஊஊ.. சச்சின் சதமடித்து விட்டார் " என்பதாக  இருக்காது. மாறாக 'அப்பாடா ஒரு வழியாக அடிச்சிற்றாரப்பா..." என்பதாகவே இருக்கும்.

இந்த வகை கருத்துக்கள் ஒரு புகழ் கொண்ட வீரனுக்கு ஆரோகியமான கருதுக்களாக இருக்காது. சச்சின் இந்த 100வது சதத்தை ஒரு வருடத்துக்கு முன்பே அடித்து இருந்தால் அதன் கனாகனமே வேறு, ஆனால் இனி அவர் அடித்தால் அது ரசிகர்களை ஒரு நிம்மதி பெருமூச்சு விடவைக்குமே ஒழிய அத்தனை உற்சாக படுத்துமா என்பது கேள்விக்குறியே!

இந்த சச்சினின் 100வது சதம் மீதான அழுத்தம் அவுஸ்ரேலிய , இங்கிலாந்து சுற்றுபயணங்களில் இந்திய வீரர்களது மனதில் எதிர்மரையான அழுத்தங்களை ஏற்படுத்தி ஒரு வகையில் அவர்களது தொடர் தோல்விக்கு காரணமாக இருந்தது என்பது பலர் ஏற்றுக்கொண்ட உண்மை.

தற்போதைய சச்சினை விட ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்களை இந்தியா கொண்டிருக்கிறது என்பது வெளிப்படை. வெறும் இரண்டு கோடி பேர் உள்ள இலங்கையில் சனத்தின் இடத்கிற்கு இத்தனை  போட்டி எழுந்திருக்கும் போது நூற்றியிருபது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா பற்றி சச்சின் யோசிப்பது அவசியம்.

சச்சின் சிறந்த ஒரு டெஸ்ட் வீரர். அவர் தனது நுறாவது சதத்தை டெஸ்டில் சாதிக்க முயற்சிப்பது அவருக்கும் இளம் தலைமுறைக்கும் நல்லது.

இல்லையென்றால் அவரும் அனில் கும்ளே, கங்குலி, ஜயசுரியா , கபில் தேவ், மியாண்டாட் வரிசையில் சேரும் நாள் தூரத்தில் இல்லை.


அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா....

Sunday, March 11, 2012

பண்றதெல்லம் நாதாரித்தனம்! ஆனா அவிய்ங்க சொல்றதெல்லாம் உண்மையாம்!

எனக்கு நாம இப்போ எங்கே போயிக்கிட்டு இருக்கம் ஒண்னுமே புரியல அண்ணாத்த.... எல்லாம் இந்த தமிழ் தொலைக்காட்சி ஒண்ணு பண்ணிக்கிட்டிருக்கிற அழிச்சாட்டியத்தோட பிரதிபலிப்புத்தான் இந்த புலம்பல் அண்ணாத்த.  இண்ணைக்கு டேட்டில எந்த தமிழ் தொலைக்காட்சியை திருப்பினாலும் எதாவதொரு ஒரு நிகழ்ச்சி அந்த தொலைக்காட்சியின் எல்.பி.எம் ரேட்டிங் எகிறுவதற்கு காரணமாக இருந்து வருகிறது. இந்த மாதிரியான கேம் ஷோவாகட்டும் இல்லாட்டி போனா ஏதாவது  ஒரு பொழுது போக்கு ஷோவாகட்டும் எல்லாம் சுட்ட பழம் தானுங்கோ

அதாவது தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்த வரை இந்த மாதிரி நிகழ்ச்சிகளின் முன்னோடியாக இருப்பது நம்ம விஜய் டி.வி தானுங்க. ஆனா விஜய் டி.வி யோட பெரும்பாலான நிகழ்ச்சிகள் மேல்நாட்டு நிகழ்ச்சிகளான "அமெரிக்கன் ஜடொல்" வகையறாக்களின் அப்பட்டமான கொப்பியடிப்புக்கள் என்று அனைவருக்குமே தெரியும். இவைய்ங்க அங்க சுட்டு இங்க ஒலிபரப்ப , அது கூட பண்ணமுடியாத சன் உம் , கலைஞ்ஞரும் விஜய்யை கொப்பியடித்து பெருமைப்பட்டதை பார்த்த பெருமைக்குரிய கண்களுக்கு சொந்தகாரர்கள் நாம

இந்த இழவுகளின் தாக்கத்தால் , இப்போது இலங்கையில் எந்த டி.வி யை தொறந்தாலும் ஒரே நரகாம்சமான நிகழ்ச்சிகள் தான் போங்கள். இப்போது வானத்தில உள்ள ஸ்டார்களை விட இலங்கையில் உலவித்திரியும் சுப்பர்ஸ்டார்களினதும், மெகா ஸ்டார்களினதும் தொகை அதிகம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இப்போது விசயத்துக்கு வருவோம். ரொம்ப நாளாகவே ஸீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்று குடும்பங்களின் குடிகெடுத்துவருவதாக எனக்கு பலர் சொல்லியிருந்த போதும் அந்த அற்புதமான நிகழ்ச்சியை பார்க்க எனக்கு ஆரம்பத்தில் குடுத்து வைக்கவில்லை

அன்றொருநாள் தான் எனக்கு அந்த வரலாற்று புகழ் மிக்க நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. "தன் மகளையே பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தகப்பன்" என்று பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை கூவிக்கொண்டிருந்தார்கள். என்ன இழவுடா இது என்று அதிர்ந்து போனேன். இது உண்மையில் ஒரு தமிழ் நிகழ்ச்சிதானா அல்லது ஆங்கில நிகழ்ச்சியின் மொழிபெயர்ப்பா என குழம்பியே போனேன்.

அந்த இரவுதான் அந்த சமூக அக்கறை(???) கொண்ட நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. சத்தியமா கடுப்பாகிப் போய் விட்டேன். என்ன கறுமம்டா இது? தங்களது  பிரபலத்துக்காக குடும்பங்களின் ரகசியத்தில் கைவைப்பது எந்த வகையில் நியாயமாகிப் போகிறது?பதிவை எழுத முன்பு ஒரு தடவை இந்த அதி உத்தம நிகழ்ச்சியின் ஆரம்ப அத்தியாயங்களை இணையம் மற்றும் சி.டி களின் (இந்த கறுமத்தை சி.டி வேறு போட்டு விற்கிறார்கள்) உதவியோடு பார்த்தேன். ஆரம்பம் என்னவோ ஏற்றுக்கொள்ளக்கூடிய  ரகம் தான். சிறு சிறு பிரச்சினைகளை, அதாவது மூன்றாம் நபர் தலையிட்டு தீர்க்கக்  கூடிய பிரச்சனைகளை  அலசியது இந்த நிகழ்ச்சி. உதாரணமாக  காதல் திருமணம் காரணமாக வீட்டைவிட்டு ஓடிப்போன ஜோடிகளை பெற்றொருடன் பேசி குடும்பத்தோடு சேர்த்து வைப்பது, கருத்து முரண்பாடான அப்பா , மகனை சேர்த்து வைப்பது போன்ற சம்பவங்களை சொல்லலாம். இவையெல்லாம் எப்படியோ குடும்பத்தின் மூத்தவர்களான பெரியப்பாவோ, தாத்தாவோ, சித்தப்பாவோ பேசி தீர்த்து வைக்க வேண்டிய பிரச்சினைகள் தான்.

இவற்றை தொலைக்காட்சியில் காண்பிப்பதன் மூலம் ஒரு சிலருக்கு விழிப்புணர்வு வராலாம் என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப ஒரு சில அத்தியாயங்களை  ஏற்றுக்கொள்ளலாம்

ஆனால் இப்போது நடப்பது எல்லாம், பெரியப்பா , சித்தப்பா மட்டுமல்ல சட்டமே தலையிட கூசுகின்ற தலைப்புகளை அசாலட்டாக ஏதோ "இன்று ஒரு தகவலில்" பாப்பையா திருக்குறளுக்கு விளக்கம் சொல்லுவதைப்போல பொதுசன ஊடகம் ஒன்றில் கதைத்துக்கொண்டிருப்பது தான் முகத்தை சுளிக்க வைக்கின்றது.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப அத்தியாயங்களை பார்க்கும் போது இது ஏதோ நல்ல நோக்கத்துக்காகவே ஆரம்பிக்கப்பட்டது என்றே எனது அவசர புத்தி சொன்னது. அதன் பிறகு சில அத்தியாயங்களை பார்க்கும் போது இதுவும்  "ரெஸ்லிங்" போல ஏதோ ஒரு வகையான நாடகமோ என எண்ணத் தோன்றியது

ஏனென்றால் அவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்புக்கள் அப்படி .  எமது சமூகத்தால் பொது இடங்களில் கதைக்க கூசும் விடயங்களே "பாடுபொருளாக " இருந்தது."கண் தெரியாதவரின் மனைவியும் அவளது கள்ள காதலனும்", மகளின் மாராப்பை விலக்கிய அப்பா", மனைவிக்கு மாமா வேலை பார்த்த கணவன்" இவ்வாறு பிட்டு பட ரேஞ்சுக்கு தலைப்புகளிட்டு நிகழ்ச்சி பண்ணி காசு பார்க்க தொடங்கியது ஸீ தமிழ்

இதில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரை பற்றி சொல்லியே ஆகவேண்டும். சன் டீவியின் "வணக்காஆஆஆம்" புகழ்  " நிர்மலா பெரியசாமி" தான் இந்த கலாசார காவல் நிகழ்ச்சிக்கு தலமை தாங்குகிறார்.இந்த ஸீ தமிழ் தொலைக்காட்சியின் எல்.பி.எம் ரேட்டிங் மற்றும் மக்களின் பி.பி எகிறுதல்களில் நிர்மலாவின் பங்கு கணிசமானது. ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் வெறும் செவிமடுப்பாளராகவும் , தேவையான போது ஆலோசனை வழங்குனராகவும் இருந்த இவர் இப்போது கோத்து விட்டு கூத்து பார்ப்பவராக மாறியிருகிக்கிறார்.

குடும்பங்களை பேச விட்டு இடைநடுவில் தான் குறுக்கிட்டு குண்டு போடும் வேலையை செவ்வனே செய்து வருகிறார் நிர்மலா

இவரது நிகழ்ச்சி நடத்தும் பாணி அலாதியானது. ஆரம்பத்தில் சாந்த சொரூபியாக நிகழ்ச்சியை ஆரம்பித்து பிரச்சனைக்குரிய இரு தரப்பையும் பவ்வியமாக பேச அழைப்பார். இரு குடும்பமும் அல்லது இரு தரப்பும் காரசாரமாக வாதத்தில் இருந்தால் பேசாமல் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்

வாதத்தின் சூடு தணிந்தாலோ அல்லது இரு தரப்பும் பேசி பேசி தாமகவே சமரசத்துக்கு வருவது போல தெரிந்தாலோ ( இது நிகழ்சியின் நேரத்தை பொறுத்தது.) நிகழ்ச்சி மொத்தமாக அறுபது நிமிடங்கள். சமரசம் கடைசி நிமிடங்களில் ஏற்பட்டால் பேசாமல் அது போக்கில் விட்டு விடுவார். மாறாக இடை நடுவில்  ஏற்பட்டு விட்டால் , யார் மிச்ச நிகழ்ச்சியை பரபரப்பாக நடத்துவது? உடனே அம்மணி குருக்கிட்டு ஏதாவது ஒரு குண்டைப் போட்டு மீண்டும் வாதத்தில் சூடு கிளப்பி விடுவார்.

உதாரணமாக தனது மனைவியின் கள்ள காதல் தொடர்பாக கதைத்துக் கொண்டிருக்கும் கணவன், நிகழ்ச்சியின் இடை நடுவில் சமரசமாகி "சரி நடந்தது நடந்து  போச்சு ... இனிமே ஒழுங்கா இரும்மா " என்று தனது மனைவியோடு சமரசத்துக்கு வருவது போல் இருந்தால் , உடனே இந்தம்மா "ஏம்மா உங்க புருஷன் வீட்ல இருக்கிறப்பவே இன்னொரு ஆளோட தொடர்பா இருந்திருக்கிறியே , ஏன் உம் புருஷன் ஆம்பள இல்லயா? அவருக்கு ஏதும் கொறயா ? " அப்டீன்னு கேட்கும் பாருங்க . அத்தோட முடிஞ்சுது கதை. இதுக்கு அப்புறம் அந்த புருஷன் சமரசம் ஆவான்னு நினைக்கிறீங்க

அது போக நிகழ்ச்சியை எப்படியாவது பரபரப்பாக ஓட்டியாக வேண்டும் என்பதற்காக கண்ட கண்ட கருமத்தையெல்லாம் அரங்கேற்றிக்கொண்டிருகிறது ஸீ தமிழ்.

அன்று ஒரு நாள் நிகழ்ச்சி ஒன்றில் யதார்த்தமக ஒரு பெரியவர் கையை ஓங்க போய் அதற்கு ரீ ரெக்கார்டிங்கில் "பளார் " என்றொரு சவுண்டை கொடுத்து மாமனார் மருமகளுக்கு அறைவது போன்று எஃபக்டை கொடுத்து அந்த குடும்பத்தின் ஒட்டு மொத்த நிம்மதிக்கும் ஆப்பு வைத்த கதைகளும் உண்டுஒரு குடும்பத்தின் தனிப்பட்ட விசயத்திற்கு தெருவில் போவோர் வருவோரையும் சாட்சிக்கு அழைத்து தெருச்சண்டை போல ஆக்கிவிடுவது அதி உச்ச கொடுமை.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது இருதரப்பையும் சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும்,இரு தரப்புமே யோசிக்காத கோணத்தில்  சந்தேகங்களை கிளப்பி விட்டு சண்டைக்கு சுதி சேர்த்து,   நிகழ்ச்சி முடிவைடைய போகிற நேரத்தில் அவசர அவரமாக இரு தரப்பையும் சமாதனத்துக்கு அழைப்பதும் தொடர்கிறது.

ஏற்கனெவே எரிகிற நெருப்பில் நிகழ்ச்சி என்ற பேரில் எண்ணையை ஊத்தி விட்டு திடுதிப்பென்று சமாதனத்துக்கு வா என்றால் நடக்கின்ற கதையா

உடனே அந்த நிர்மலா பெரியம்மாவும் "இரு தரப்பு சமாதனத்துக்கு வர தயங்குவதால் , இந்த நிகழ்ச்சியை இத்தோடு நிறைவு செய்து நாளை மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தோடு உங்களை சந்திக்கிறேன் வணக்கம்" என்னும் போது அந்த அரை கிரவுண்டு முகத்தில் "சப்பு சப்புன்னு " நாலு அறை போட சொல்லி மனம் சொல்லும்.

இல்லாவிட்டால் "நேயர்களே! இந்த நாதியத்த குடும்பத்திற்கு உங்களாலான உதவியை செய்யுங்கள்” என்று பிச்சையெடுக்க வைக்கின்ற நிலைமையும் அண்மைக்காலமாக நடந்தேறி வருகிறது.

பிரச்சினை தீர்த்து வைக்கிறேன் பேர்வழி என்று , ஒரு குடும்பத்தை அழைத்து அதன் அந்தரங்கத்தை எல்லாம் பகிரங்கப்படுத்தி, அந்த குடும்பத்தின் மானத்தை சந்திக்கிழுத்து பின்னர் "இது தீர்க்க முடியாத பிரச்சினையாக இருக்கிறது. நீங்கள் சட்டத்தின் மூலமாக தீர்வு பெறுவதுதான் நல்லது" இறுதியில் தீர்ப்பு வேறு. இந்த வெண்ணை அவர்களுக்கு தெரியாதா? பின்ன என்ன மயிருக்கு நீங்கள் ஆலொசனை என்ற பெயரில் வாயை பொளந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்?

சிறு பிரச்சினைகளையெல்லாம் ஊதிப் பெருசாக்கி, குடும்பங்களில் நிதந்தர பிளவை ஏற்படுத்தும் நிகழ்வுகளை தான் அரங்கேற்றி வருகிறது ஸீ தமிழின் "சொல்வதெல்லாம் உண்மை".

சும்மா இருந்தால் கூட ஆறு மாசமோ ஒரு வருஷமோ கழித்து தீரக்கூடிய பிரச்சினைகளை, நிகழ்ச்சியின் பர பரப்புக்காக ,இரு தரப்பையும் தூண்டிவிட்டு கோர்ட்டுக்கு அனுப்பும் வேலையை கன கச்சிதமாக செய்து வருகிறது இந்த நிகழ்ச்சி

சாதாரண பிரச்சினைகளுடன் வருவோர் கூட "கவுன்சிலர்" நிர்மலாவின் தூண்டுதலாலும் அல்லது உசுப்பேத்தலாலும் , அத்தோடு நமது குடும்ப விசயம் இப்போது சந்தி சிரிக்கிறதே இனி நடப்பது நடக்கட்டும் என்ற தோரணையிலும் பிரச்சினைகளை முற்ற விட்டு கோர்ட்டுக்கு போகும் சம்பவங்கள் அதிகரிக்கலாம்.எனக்கு தூக்கி வாரிப் போட்டது எப்போது என்றால் , தனது தந்தை தன்னிடம் தப்பாக நடந்து கொள்கிறார் என்று ஒரு மகள் பச்சையாக பேட்டி கொடுக்கிறாள். அந்த தாயும் உட்கார்ந்து இருந்து தனது மகளை தனது புருஷன் எங்கெல்லாம் தடவினார் என்ரு லிஸ்ட் போட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.  

அந்த பெண் படித்த அழகான இளம் பெண். இனி அவள் வெளியிடங்களில் நடமாடி திரிய வேண்டாமா? ஒரு கல்யாணம் பண்ண வேண்டாமா? இந்த கும்பத்தின் நிலை சமூகத்தில் இனி எவ்வாறு இருக்கும்? இந்த கேள்விக்கெல்லாம் ஸீ தமிழ் பதில் கூறுமா?

அந்த பெண் கூறுகிறாள் " எனக்கு என்னோட அப்பாவ ரொம்ப பிடிக்கும் மெடம், அவர் குடிச்சிட்டு அம்மா என்னு நெனச்சு தான் என்னோட தப்பா நடக்க முற்படார் அப்ப்டீன்னா, இனிமே அவர் குடிக்காம இருந்த அதுவே எனக்கு போதும் மெடம்.அதுக்கு பிறகு எனக்கு அப்பாவோட எனக்கு எந்த கோவமும் கிடையாது மெடம்". 

சரியான ஒரு தலைப்பு சிக்கிடுச்சு இதவச்சி  நெறய பணம் பண்ணலாம் அப்டீன்னு கணக்கு பண்ணிக்கிட்டிருந்த நிர்மலா பெரியம்மாவுக்கு இந்த பதில் பேரிடியா இருந்திருக்கணும். உடனே அந்த தடி மாடு கேக்குது" ஏம்மா இதுக்கு அப்புறமும் உங்க அப்பாவோட சேர்ந்து இருக்க உங்களால முடியுமா" அப்பிடி இப்பிடின்னு ஆயிரம் கத சொல்லி கடைசில " எனக்கு என்னோட அப்பா வேணாம் மெடம் " என்று அந்த பொண்ணோட வாயால சொல்ல வச்சு பெரும பட்டுச்சு அந்த எரும. அதுவும் இல்லாம கோர்ட்டுக்கு போங்க நீங்க என்ற "கைட் லைன்" வேற.

"மயுரி" என்றொரு மேற்கதேய நிகழ்ச்சி (இதை தான் இவர்கள் சுட்டிருக்கிறார்கள் என்று எனக்கு பலத்த சந்தேகம்) அதில் ஒரு தாய் தனது மகள் முந்நூறுக்கும் மேற்பட்ட தடவை செக்ஸ் வைத்திருக்கிறாள் என்று புலம்பி அழுகிறாள்

டேட்டிங், மீட்டிங் என்ற பெயரில் செக்ஸ் உறவு எல்லாம் சாதரணமாகிப் போன ஒரு சமூகத்தில் , ஒரு தாய் அது குறித்து இவளவு கவலைப்படுகையில் , கலாசாரத்தில் கட்டுக்கோப்பாக இருக்கும் எமது சமூகத்தில் ,  பெத்த தகப்பனே பெண்ணை கெட்ட எண்ணத்துடன் வருடுகிறார் என்று ஒரு தாய் வாக்கு மூலம் கொடுப்பதற்கு மேடை அமைத்துக் கொடுப்பது என்ன மாதிரியான ஒரு இழிச்செயல்?

இப்போது ஒரு கேள்வி எழலாம்! இவர்கள் தான் தங்களது தனிப்பட்ட சுயலாபத்துக்காக இப்படி கழிசடை வேலைகள் எல்லாம் பண்னுகிறார்கள் என்றால் இந்த மக்களுக்கு எங்கே போனது அறிவு என்று?  

மக்கள் மீதும் பிழை இல்லாமல் இல்லை. தங்களது முகங்கள் தொலைக்காட்சியில் தெரிய வேண்டும் என்பதே இவர்களது ஒரே நோக்கம்.எப்படியாவது டி.வி யி தங்களது முகத்தை காட்டிவிட வேண்டும். அது எந்த கறுமமாக இருந்தாலும் பிரசினை இல்லை. "புகழ் எனின் உயிரும் கொடுகுவர்....." என்ற சங்க கால பொன் மொழியை தப்பாக விளங்கி கொண்டார்களோ என்னவோ?

 புகழ் பெற வேண்டும் என்ற மக்களது வேட்கையை சரியாக ஒரு தப்பான நிகழ்ச்சிக்கு பயன் படுத்தி பணம் பண்னுகிறது ஸீ தமிழ். உண்மையில் சமூக அக்கறை இருந்தால் இவாறான குடும்பங்களுக்கு சரியான "கவுன்சிலிங்" வசதி செய்து கொடுக்கலாமே

இங்கு தான் எனக்கு ஒரு சந்தேகம்! மெத்த படித்து , தொழில் முறையில் கவுன்சிலிங் செய்து வரும் மருத்துவர்களே சில பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் தவிக்கையில் நிர்மலா பெரியம்மாவால் மட்டும் எப்படி முடியும்? ஒரு வேளை கவுன்சிலிங்கில் டாக்டர் பட்டம் முடித்துள்ளாரோ என்னமோ?எனது கோபம் எல்லாம் மக்கள் மீது அல்ல. பொது மக்களுக்கு எப்போதும் இம்மாதிரியான விழிப்புணர்வு இருக்கும் என எதிர் பார்க்க முடியாது.  ஆனால் ஒரு பொதுசன ஊடகம் அவ்வாறு இருந்துவிட முடியாது. படித்த பன்முக அறிவுடையோர் பணியாற்றும் அந்த மாதிரியான ஒரு ஊடகம் இவ்வாறான கீழ்த்தரமான நிகழ்ச்சிகளை வழங்குவதை வரவேற்க முடியாது

எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் " மது பானம் அருந்துவதற்கு குறைந்த பட்ச வயதெல்லை பத்து என அறிவித்துவிட்டு பின்னர் சிறுவர்களெல்லாம் மதுபானம் அருந்துகிறார்கள் என்று சிறுவர்களை சாட முடியாது, அது நியாயமுமில்லை. அவ்வாறான ஒரு சம்பவத்துக்கு மேடை போட்டுக் கொடுத்த அரசாங்கமே தான் முழுப்பழியும் ஏற்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சி தொடர்பில் எனது கருத்தும் அதுவே! நீங்கள் நிகழ்ச்சி நடாத்தினாலும் நடத்தாவிட்டாலும் கள்ளக்காதல், குடும்பச்சண்டை என்பன தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதை வெளிச்சம் போட்டு காட்டி அந்த குடும்பத்தில் உள்ள பிள்ளைகள், உறவினர்களின் நல் வாழ்க்கையை பாழாக்க வேண்டாமேஇல்லை இது போன்ற அதிசய நிகழ்வுகளை காட்டத்தான் போகிறீர்கள் என்றால் தயவு செய்து அந்த நபர்களின் முகங்களை மறைத்து விட்டாவது ஒளிபரப்புங்கள்.

ஒரு ஊடகம் என்பது தனிப்பட்ட நன்மைக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டியது. இல்லை தனிப்பட்ட நன்மைதான் முக்கியம். பரபரப்பாக ஏதாவது நிகழ்ச்சி செய்யவேண்டும் என்பதற்காக குடும்பங்களின் வாழ்க்கையில் குண்டு வைக்கும் இந்த மாதிரியான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது.

பரபரப்பாக ஏதும் செய்யவே வேண்டும் என்றால் பிட்டு படம் எடுத்து பிழைத்து கொள்ளுங்கள். அது ஒரு நல்ல வியாபாரம். பரபரப்பாகவும் இருக்கும். அதை விட்டு விட்டு இவாறான இழிவான வேலைகள் செய்வதை நிறுத்தி கொளுங்கள்.

பிறழ்வான செக்ஸ் உறவுகள் உலகில் ஏன் எமது சமுதாயத்தில் இருக்கிறது என தெரிந்திருந்தும் , அதை கௌதம் மேனன் வெளிப்படையாக "நடுநிசி நாய்கள்" என்று படமாக எடுத்த போது கலாசாரத்தை கருத்தில் கொண்டு கொத்தித்தெழுந்த தமிழ் கூறும் நல்லுலகுக்கு எனது ஆதங்கத்தை புரிந்துகொள்வதில் சிரமமிருக்காது என நினைக்கிறேன்.LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...