உதைபந்து

Friday, April 27, 2012

"கொலைவெறி நாயகன்"தனுஸ் நிகழ்ச்சியில் பிரபலபதிவர்களுக்கு அனுமதி மறுப்பா?


இன்னும் எத்தன பதிவுடா மிச்சம் வச்சிருக்க?


எந்த பக்கம் திரும்பினாலும் நம்ம சூர்யா அறிவு பூர்வமாக நடத்திக்கொண்டிருக்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி செம சூடா போய்க்கிட்டு இருக்கு. விஜய் டிவியோட டி.ஆர்.பி ரேட்டிங் சும்மா பவர் ஸ்டார் புகழாட்டம் உச்சத்தில ஏறி நிற்பதில் இந்த அறிவியல் நிகழ்ச்சிக்கு ஒரு பங்கு இருக்குன்னா அது மிகையில்லை, குறையில்லை ஒண்டுமே இல்லை. 

அட ! நாம கூட இவ்ளோ நாளா பதிவு எழுதுறமே ஒரு ஈ, காக்க கூட வந்து நம்மோட பதிவில கக்கா , மூச்சா கூட போகுதில்லையே , என்னா பண்ணலாம்னு நான் தெருமுனையில நடு உச்சி வேளையில வேல வெட்டி இல்லாம யோசிச்ச போது தான் எனக்கு இந்த ஐடியா வந்திச்சி! நாமளும் ஒரு காசு நிகழ்ச்சி பண்ணி என்னோட பி.ஆர்.பி ( அதாவது பிளொக் ரேட்டிங் பாயிண்ட்) ஐ சும்மா எகிற வச்சி சி.பி செந்தில்குமாருக்கே சவால் விடணும்ன்னு முடிவு பண்ணினேன். என்னோட பதிவுக்கு கிடைக்கிற hits களை பார்த்துவிட்டு என்னோட பங்காளிகளான JZ , குமரன், டூலிட்டில் எல்லாம் பதிவுலகத்தை விட்டு துண்டக்காணம் துணியக்காணம்னு ஓடனும்னா என்ன மெரட்டு மெரட்டணும்?


இப்பிடி நாலஞ்சு நாளா சிந்திச்சு சிந்திச்சு எனக்கு பேதியே வந்திரிச்சு, பேதி வந்து ஆறாம் நாள் ஐடியாவும் வந்திச்சி! இப்போ டாப்புல இருக்கிற சூர்யாவ வச்சி நிகழ்ச்சி பண்ணி விஜய் டிவி பேர் வாங்றாப்புல நாமளும் டாப்ல உள்ள ஒருத்தர வச்சி இந்த நிகழ்ச்சியை நடத்தணும்னு முடிவு பண்ணினேன். ஒடனே நம்ம சந்தானத்துக்கு போன் போட்டு "அண்ணே பாவம்ணே நான் , வந்து ஒரே ஒரு நிகழ்ச்சி மட்டும் பண்ணி குடுங்கணே, அப்புறம் நான் நெம்பர் வன் பதிவர் ஆயிடுவேன்னு" சொல்லி கெஞ்சி பாத்தேன். ரொம்ப பிஸியா இருந்ததனால அவரு என்னய கண்டுக்கல. ஒடனே என்னோட பிரம்மாஸ்திரத்த கையில எடுத்தேன். அவரு கிட்ட ஒரு வார்த்த தான் சொன்னேன் , ஒடனே ஒத்துகிட்ட அவரு அடிச்சு பிடிச்சு ஓடியந்திட்டாரு, 

"என்ன சொன்னீங்க பாஸ்"

"உண்மைய சொன்னேன்"

"டேய் மொக்கைய போடம சொல்றா"

"அது வந்துங்க , இத தான் சொன்னேன். சார் நான் பிரபஞ்ச ஸ்டார் தனூஸ் பத்தி தான் நிகழ்ச்சி பண்ண போறேன், இதில நீங்க கலந்துக்கலன்னா அப்புறம் உங்களுக்கு தான் நஷ்டம்னேன். ஒடனே அவரு , யோவ் இதெல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டியா நீயி , இதோ வந்துடரேன்னு வந்துட்டாரு" 

நீங்க தான் அந்த கூட்டத்திலயே நல்ல சிரிச்ச முகமா இருந்தீங்க... 


சந்தானம் வந்துட்டாலும் இப்பொ இன்னொரு சிக்கல், என்னதான் சூர்யா நிகழ்ச்சி பண்ணினாலும் விஜய் டிவியோட டி.ஆர் .பி ரொம்ப எகிறினது எப்போன்னா சிவகார்திகேயன் அண்ட் கோ ஆடிய போது தான் , சொ அப்பிடியொரு ஸ்டார் நிகழ்ச்சியா இது இருக்கணுன்னு முடிவு பண்ணினேன். அது சரி ஸ்டார் ஓகே, எந்த ஸ்டார கூப்பிடுறது? ஒடனே ஞாபகம் வந்தது என்னான்னா நம்ம பதிவுலகில பட்டைய கெளப்புற பதிவர்கள் நாலு பேர கூட்டியாந்திர வேண்டியது தான்னு. ரொம்ப பேமஸான ஆட்களை கூட்டியர வேணுமே, எனக்கு தெரிந்த அந்த மூன்று பிரபல பதிவர்களுக்கு ஃபோன் பண்ணினேன். என்னதான் ஈ மொய்க்காத பதிவுகள போட்டு புட்டு நாளுக்கு நாலு பேராவது தங்களோட பதிவுகளை பாக்கமாட்டாய்ங்களான்னு நாளுக்கு ஒம்போது தடவை பதிவ தொறந்து தங்களோட stasஐ பாத்துகிட்டு , எவனாச்சும் பின்னூட்டம் போட்டிர மாட்டாய்ங்களான்னு நாக்க தொங்கப்போட்டுகிட்டு கெடக்கிற அந்த மூணும், நானா வலிய போயி கேட்டதும் ஏதோ நாளுக்கு நாப்பதாயிரம் hits வாங்குற பிரபல பதிவர்கள் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணிச்சுங்க. அப்புறம் குவாட்டரும் கோழி புரியாணியும் தாரேன்னதும் அத்தனையும் அரங்கில் ஆஜர்!

இதோ அந்த மூன்று பிரபல பதிவர்கள்.

1. கொழும்பில் இருந்து JZ....... (கைதட்டல் காதை பொளக்கிறது. பூரா ரெக்கார்டிங்கு)

2. மலேசியாவில் இருந்து குமரன். ( கைதட்டல்.......)

அப்புறம் இந்தியாவில் இருந்து டாக்டர் டுலிட்டில். ( கைதட்டல்..........)

அப்புறம் விசேட விருந்தினரா பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமியை கூப்பிட்டேன், ஆனால் குவாட்டருக்கும் கோழி புரியாணிக்கும் தல மசியிறாப்ல தெரியல. காரணம் தல ஏற்கனவே நாலஞ்சி ஃபுல்லும் ஏழெட்டு மட்டன் புரியாணியையும்  ஒள்ள எறக்கிட்டு  மல்லாக்க படுத்திரிந்திச்சி. அப்புறம் அவரு கிட்டேயும் ஒரு உண்மைய சொன்னேன் , ஒடனே மப்பு தெளிஞ்சு குடுகுடுன்னு ஓடியாந்திட்டாரு. அந்த உண்மை எதுன்னு கெஸ் பண்ணி பின்னூட்டத்தில போடுங்கோ.......

சரி இப்போ எல்லாம் ரெடி, நிகழ்ழ்ச்சி பண்ணும் பொறுப்பை சந்தானத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒரு மூலையில் ஒதுங்கி நின்று உங்களோடு ஒருவனாக நின்று நிகழ்ச்சி பார்க்க போகிறேன். ( என்னது எங்களோட நின்னு நிகழ்ச்சி பாக்க போறியா? சனியனே குளிச்சி எத்தன நாளுடா? தள்ளி நில்ராங் கொய்யாலே!)

ஆய்! வணக்கம் வந்தனம் நமஸ்தே, ஆ! குஜால் , குஜால்! எனதருமை சூப்பர் ஃபிகர்களே, இந்த பதிவை படிக்கும் வாசக வாலிபர்களின் அருமையான அட்டு ஃபிகர்களே! இல்லாத்துக்கும் இந்த காட்டு பூச்சியின் வணக்கம். அப்பா அம்மா கூட வந்த ஃபிகருங்க எல்லாம் வன் ஸ்டெப் பாக்கில போங்கடி, சனிக்கெழம ஃபப்புக்கு போய்ட்டு , ஃபுல்லா மப்படிச்சிட்டு, அந்த ஊத்த வாய கழுப்வாம , தலவிரிகோலமா டிவில உங்க கேவலமான மொகத்த காட்டணும்கிற அல்ப புத்தில இங்க வந்திருக்கிற ஆல் இன்டியா அல்ரா மார்டன் ஃபிகருங்க எல்லாம் என்னோட மொகத்துக்கு முன்னாடி உக்காருங்க. ஏய், நீ தள்ளி போடி ரொம்ப நாறுது, என்ன ராவா அடிச்சியா? 

நான் உங்க காட்டு பூச்சி, இது உங்கள் அபிமான "முடிஞ்சா ஜெயிச்சு பாரு ஒரு கோடி" நிகழ்ச்சி. பல வாரங்களா வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சின்னு அந்த அல்ப சொல்ல சொல்லிச்சி, சொல்லிட்டங்கோ..... போட்டியின் விதி முறைகள் ரொம்ப சிம்பிள். விதிகள் இதோ....

* அனைத்து கேள்விகளும் அனைத்துலக சுப்பர் ஸ்டார் தானை தளபதி தனுஸ் பற்றியதாகவே இருக்கும்.


*ஒரு போட்டியாளருக்கு மூன்ரு கேள்விகள் அதிகபட்சமாக கேட்கப்படும்.

*ஒரு கேள்விக்கு சரியான பதில் சொன்னாலே ஒரு கோடி ரூபாய் நீங்கள் ஜெயித்து அடித்த காந்தி ஜெயந்திக்கு கடை பூட்டும் வரை தண்ணியடிக்கலாம்.

* விடை தெரியா விட்டால் உங்களால் இரண்டு கேள்விகளை "பாஸ்" பண்ண முடியும். அதாவது தொடர்ந்து இரண்டு கேள்விகளுக்கு நீங்கள் விடை சொல்லாமல் மூன்றாவ்து கேள்விக்கு  போக முடியும். மூன்றாவது கேள்விக்கும் பதில் சொல்லாம 'பாஸ்" அப்டீன்னு சொன்னீன்னா மவனே சாணிய கொண்டே அடிப்பேன் , ஜாக்கிரதை.

* ஏதாவது ஒரு கேள்விக்கு பிழையான விடை சொன்னாலும் மவனே , ஓடிப்போய் மறுபடி இது மாதிரி ஏதாவது மொக்க பதிவு எழுதி பிழச்சுக்கொள்ள வேண்டியது தான்.

* உங்களுக்கு இருக்கிற லைஃப் லைனுக்கு அளவே கெடையாது, நீங்க யாருகிட்ட வேணும்னாலும் பதில் கேட்டுக்கலாம். வேணும்னா தனூஸ் கிட்ட கூட ஃபோன் போட்டு கேக்கலாம்.

இது தான் இந்த போட்டிக்கான விதிகள். ரொம்ப சிம்பிளா இருக்கில்ல? ஓகே வாங்க வெளையாடலாம். இதுல போட்டி எல்லாம் கெடையாது யாரச்சும் ஒருத்தர் முன்னாடி வந்து சூடான இருக்கையில் (hot seat)  அமருங்கள். உங்களுக்காகவே ஸ்பெசலா முனியாண்டி விலாஸ் கொத்து பரோட்ட பிளேட்ட சுட சுட எடுத்தாந்து வச்சிருக்கோம். hot சீட்னா சூடா இருக்கணும்ல அது தான்.

என்னய வச்சு தான் நீ HITs வாங்கணும்னா கெளப்புரா கெளப்புரா ராஜா என்சாய்...


மொதல்ல யாரு வர்ரது? டேய் என்னாங்கடா ஆளாளுக்கு பின்னாடி ஓடுரீங்க , டேய் குவாட்டருக்கு ஆசப்பட்டு உங்க குடிய கெடுத்துக்க வந்துட்டீங்க இல்ல, அப்புறம் என்னடா  ஜெயலலிதாவ கண்ட எம்.எல். ஏ வாட்டம் பம்முறீங்க. வாங்கடா டேய். ! இப்போ வரலேன்னு வச்சுக்கோ அப்புறம் பவர் ஸ்டார் படத்த நாள் பூரா பாக்கும் படி பண்ணிடுவேன் ஜாக்கிரதை!

அண்ணே ! பன்னிக்குட்டி அண்ணே , அவனுக தான் சில்றப்பசங்க பம்முறாய்ங்கன்னு பாத்தா , பதிவுலகுக்கு வந்து ஏழு கழுத வயசாகுது நீங்கழுமா? 

"டேய் படவா, அப்டியே சப்புன்னு அறைஞ்சிடுவேன் ஜாக்கிரத, ஏதோ டாகுடர் விஜய் பத்தின்னா ஏதோ சொல்லிக்குவேன் , இந்த ஓணான் பயல் எப்போ எத பேசும்னு அந்த நாய்கே.  தெரியாது அவனபத்தி எனக்கு என்னடா தெரியி... இந்த தரித்திரம் புடிச்ச பிளாக்கு ஓணரு,  என்னோட வீக்னஸு தெரிஞ்சு வச்சிகிட்டு அதில டச்சு பண்ணி என்னய வர வச்சிட்டாய்யா... ஆனாலும் இது ரொம்ப அநியாயம்டா.... ஒரு பிஸியான பதிவர இப்டியெல்லாம் டாச்சர் பண்றது அக்கிரம்ம்டா டேய்... நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டிங்கடா......'

"அது என்னாணே அந்த வீக்கினசு?'

"டேய் ல்கலரிங்க தலையா, இந்த டக்கால்டி வேலையெல்லாம் எங்கிட்ட ஆகாது மகனே, அத தெரிஞ்சுகிட்டு நீயி என்னய மெரட்டலாம்னு பாத்தியா, யாருகிட்ட ரவுசு பண்ற பிச்சுபுடுவேன் பிச்சு. தமிழ் நாட்டு மானத்த நானே தான் காப்பாத்தணுமா? காந்த கண்ணழகி ஃபாலோ மீ யா... ஸ்ராட் த மியூசிக்...... டேய் தள்ளி உக்கார்ரா...."

"அண்ணே மப்பு இன்னமும் தெளியல போல .. உங்க சீட்டு அங்க இருக்குண்ண" 

"ஓ! சத்திய சோதனை, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ...... ஆஆஆஆஆஆஆ... அட நாய்ங்களா என்னடா சீட்டு இந்த சூடு சுடுது?"

'அது தாண்னே சீட்டு"

" நீ வெளிய வாடி உனக்கு அங்கயே குறி வச்சுடறேன்..... ஆஸ்க் மீத கொஸ்டீன் மேன்"

"இப்போ நம்ம பன்னிக்குட்டி ராமசாமி அண்ணே ஆட போறாரு , இவர பத்தி சொல்லணுமின்னா , பதிவுலகின் பிதமகர்களில் ஒருவர், பதிவுலகில் இவரை பின் தொடராதவன் ரசனை கெட்டவன்னு கூட சொல்லலாம். பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லாத ஒரு பிரபலம் இவரு, அவர் தான் நம்மோட மொதல் போட்டியாளர். அண்ணே உங்கள பத்தி ஏதாச்சும் சொல்லுங்களேன்"

"நான் தான் அமேரிக்க அதிபர் ஒபாமான்னு சொன்னா நம்பவா போறாய்ங்க, படிக்க வேற எதுவுமே இல்லாம இந்த மொக்க பிளாக்க படிச்சிகிட்டு இருக்குது இந்த பன்னாடைய்ங்க இதுகளோட என்ன பேச்சு. யூ ஸ்டார்ட் த கொஸ்டீன்யா"

(டங்கர டிங்கர டங்கர டிங்கர டாண் டாண் .... டங்கர டிங்கர........# டெரர் சவுண்டு எஃபக்ட்டு)

"ஓகே மிஸ்டர் ப.கு.ரா, உங்களுக்கான முதல் கேள்வி .......

1. பின்வரும் தலைவன் தனூஸ் படங்களில் எந்த படம் அட்டர் பிளாப் அல்லாதது? (கேள்வியை இங்கிலிபிஸ்ஸில் ரிப்பீட் செய்கிறார்)

உங்களுக்கான ஆப்ஷன்ஸ் .....

A)சுள்ளான்

B)ட்ரீம்ஸ்

C)புதுக்கோட்டையிலிருந்து சரவணன்

D)படிக்காதவன்

'நல்ல யோசிச்சு சொல்லுங்க , எத்தன லைஃப் லைன் வேணும்னாலும் நீங்க யூஸ் பண்ணிக்கலாம். பதில் சரியா இருந்த கைல ஒரு கோடி இப்பவே குடுத்துருவோம். நல்லா யோசிங்க ராமசாமி!

ப.கு.ரா :- டேய் ! இதெல்லாம் ரொம்ப அநியாயம்டா... என்னோட பதிவு எதுனாச்சும் உனக்கு புடிக்கலன்ன அங்க வெச்சி மூஞ்சில அடிச்ச மாதிரி "சப்பு சப்புனு" நாலு காமன்டு போட்டுட்டு வேணும்னா வா, ஆனா அதுக்காக இப்பிடி சிலோன் வரைக்கும் கூட்டியாந்து , வித்தியாசம் வித்தியாசமா பழி வாங்கிறது நல்லா இல்லடா.... இருந்தாலும் நீங்க ரொம்ப லொள்ளு புடிச்ச ஃபாமிலில பொறந்தவங்கடா.... 

எல்லாம் என்னோட நேரம்...


"அவசரப் படாதிங்க மிஸ்டர் பன்னிக்குட்டி நிதானமா யோசிங்க "

ப.கு.ரா :- எந்திரிச்சு ஓடிப்போயிரு நாயே.. படுவா மறுக்கா பேசின லேப் டாப்லயே அடிச்சு சாகடிச்சிருவேன். ஒரு திட்டத்தோட தான்டா நீங்க வேல செய்றீங்க... அம்மா தாய் குலமே. உங்க கைல மொபைல் ஃபோன் இருக்கில்ல , அத மிஸ்டு கால் குடுக்க மட்டும் தான் யூஸ் பண்ணுவீய்ங்களா? இந்த பாவப்பட்ட ஜென்மத்துக்கு உதவ பயன் படுத்த கூடாதா...? எந்த ஆப்ஷன்னு கொஞ்சம் எஸ்.எம்.எஸ் பண்ணுங்கடி ஆத்தா.....

"ராமசாமி லைஃப் லைன யூஸ் பண்ணிக்கிறாரு"

ப.கு.ரா :- டேய் நீயி பேசாம இர்ரா வண்டுருட்டி தலையா... ஏய்! என்னங்கடி எல்லாரும் நாலு ஆப்ஷனையும் அனுப்பி இருக்கீங்க , இந்த லட்சணத்தில உங்களுக்கு மூஞ்சு மறையிறாப்ல மேக் அப்பு.. எந்திரிச்சு ஓடுங்கடி... டெய்ய் சந்தானம் பையா, நல்லா பாத்து சொல்ல்ரா , ஒரு வெடையா இல்லாங்காட்டி நாலு வெடையான்னு பாத்து சொல்லுடா....

"மிஸ்டர் ஜீனியஸ் சொல்ராரு நீங்க ஒரு விடைதான் தரணும்னு சொல்லி....."

ப.கு.ரா :- டேய் என்னடா பெரிய பொடலங்கா ஜீனியஸ்ஸு? மூணாம் வகுப்பில பதிம்மூணு தடவ உக்காந்துஇக்காந்து படிச்சவன் எல்லாம் ஜீனியஸ்ஸா? அப்போ அப்துல் கலாம் , ஐன்ஸ்டீன், தோமஸ் அல்வா எடிசன் எல்லாம் யாருடா? நானும் ரொம்ப நாளா பாத்துகிட்டு இருக்கேன் , நீயும் தான் , அந்த சூரியா பயலும் தான் ஆ, ஊன்னா மிஸ்டர் ஜீனியஸ் அக்கா பொண்ணு சமஞ்சிருச்சான்னு பாத்து சொல்லுங்க , மிஸ்டர் ஜீனியஸ் ஆட்டுக்கால் வெந்திடுச்சான்னு பாத்துசொல்லுங்க ,மிஸ்டர் ஜீன்யஸ் அய்யனார் கோயில்ல கூழ் ஊத்துராய்ங்களான்னு பாத்து சொல்லுங்க, மிஸ்டர் ஜீனியஸ் பரிமளா பக்கத்து வீட்டுக்காரன் கூட ஓடி போய்ட்டாளான்னு பத்து சொல்லுங்கன்னு அளப்பரைய குடுக்கிறீங்கடா... அந்த நாயி மூஞ்சிய எங்கயும் காட்டமாட்டேங்கிறாய்ங்களே... இன்னிக்கு எனக்கு தெரிஞ்சாகணும்டா அந்த பேரிக்கா மண்டயன் யாருன்னு? அவன் நடு மண்டைல நச்சுன்னு ஒண்ணு போடாம நான் இங்கிருந்து நவர மாட்டன்டா...

"கோவப் படாதிங்க மிஸ்டர் ப.கு.ரா , நிகழ்ச்சி முடிவில அந்த ஜீனியஸ்ஸ கட்டாயம் கண்ணில காட்டுவோம். அப்போ வேணும்னா நீங்க அவர காட்டு காட்டுன்னு காட்டிக்கலாம், இப்போ உங்களோட முடிவு என்னான்னு சொல்லுங்க. பிழையா சொன்னா பஸ்ஸுக்கு கூட காசு இல்லாம இருக்கிறது பூரா உருவிகிட்டு தான் அனுப்புவம்....

ப.கு ரா :- "டேய் நான் சிலோன்ல இருக்கிறன்டா, கோடி ரூவா தாறாய்ங்க என்னதும் நான் "எமு" கோழி வித்த காச பூரா போட்டு "கிங்க் பிஷர்"ல பர்ஸ்ட் கிளாஸ்ல வந்தேன் பாரு எனக்கு இதுவு வேணு இன்னமும் வேணு...

"இட்ஸ் ஓக்கே சார், கவல படாதிங்க , நம்ம பிளாக்கு ஓனர் உங்கள பத்திரம அனுப்புறதுக்கு கள்ள தோணி ஏற்பாடு பண்ணியிருக்கார்....

ப.கு.ரா :- யாரு அவனா? கடல முட்டாய்க்கு வழியில்லாத நாஉய் அது , அது கள்ள தோணிக்கு ஏற்பாடு பண்ணுதா? இந்த கேள்வி பாஸுடா...

"ஓக்கே..... மிஸ்டர் ஜீனியஸ் , நம்ம ப.கு ரா இந்த கேள்விக்கு தன்னால விடை சொல்ல முடியாதுங்கிறதால அடுத்த கேள்விக்கு போயிடலாம்....." மிஸ்டர் ப.கு.ரா உங்களுக்கான இரண்டாவது கேள்வி...

2.தனது சினிமா வாழ்வின் ஆரம்பத்தில் கஸ்தூரி   ராஜா என்றொரு அப்பாவும் , செல்வராகவன் என்றொரு அண்ணாவும் இல்லாமல் போயிருந்தால், அல்லது திருMஅனத்துக்கு பின்னர்மொக்கை படங்களை திரைக்கு அனுப்பிய போதெல்லாம் "சுப்பர் ஸ்டார் மருமகன்" என்ற அந்தஸ்து இல்லாமல் இருந்திருந்தால் , தலைவர் தனூச் பின்வரும் தொழில்களில் எந்த தொழில் செய்திருப்பார்?

A)ராயபுரம் பஸ் ஸ்டாண்டில் ராப்பிச்சை எடுத்திருப்பார்

B)மாம்பலத்தில் மாமா வேலை பார்த்திருப்பார்

C)அண்ணா நகரில் அண்டங்காக்கா புரியாணி விற்றிருப்பார்

D)நமக்கல் காப்ரேஷன் வண்டியில் நாய் புடித்திருப்பார்

பாங்........ 

"ஓ! மை காட் , துரதிஷ்ட வசமாக இன்றைக்கான நேரம் முடிவுக்கு வருகிறது"

ப.கு.ரா :- ( தனக்குள் ) அது என்னோட அதிஷ்டம்டா..... 

"இரண்டாவது கேள்வி கேட்கப்ப்ட்டிருக்கிறது பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராமசாமியிடம், அவர் விடை சொல்வதற்கு முன்னமே இரவு சோத்துக்கு பெல் அடித்துவிட்டதால் அரக்கப் பரக்க ஓட வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கிறோம். காரணம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அந்த மூன்று பதிவர்களும் பானைக்குள் விழுந்து அத்தனை பழைய சோத்தஒயும் பதம் பார்த்துவிடும் அபாயம் இருப்பதால் இந்த இடத்தில் இன்றைய நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வருகின்றோம். பதிவுலகின் பிதாமகர் ப.கு.ரா ஆடிக்கொண்டு இருக்கிறார் அவரது சுவாரசியாமான பதில்கள் நாளைக்கு வர இருக்கிறது. அது போக பதிவுலகின் சேது JZ , பதிவுலகின் நந்தா குமரன் , பதிவுலகின் ராமராஜன் டாக்டர் .டூலிட்டில்ஆகியோர் தொடர்ந்து நாளைக்கு ஆட இருக்கிறார்கள். இன்னமும் தலைவன் தனூச் பற்றிய எட்டு கேள்விகல் மீதமிருகின்றன, ஆகவே தொடர்ந்து இணைந்திருங்கள் , நாளை சந்திக்கலாம்..... இது உங்கள் அபிமான "முடிஞா ஜெயிச்சு பாரு ஒரு கோடி".....

டிஸ்கி:- பதிவு நீண்டு விட்டதால் பிரேக் விட்டுள்ளோம், பகுதி இரண்டு நாளை....

பாகம் இரண்டு படிக்க

Tuesday, April 24, 2012

கனத்த மனதுடன் பதிவுகளில் இருந்து வெளியேறுகிறேன்!லா லீகா கிண்ணமிழப்பு + சம்பியன்ஸ் லீக் தோல்விக்கு பின்னரும்  பார்சிலோனாவை இன்னமும் அதிகமாக  நேசிக்கிற ஒரு சராசரி இல்லை இல்லை , ஒரு பார்சிலோனா வெறியனாக உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்.. 

இது ஒரு பதிவாக இல்லாமல் எனது ஒரு பிரியாவிடையாக கொள்ளுங்கள்.


இன்று சம்பியன்ச் கிண்னத்தின் இரண்டாம் அரையிறுதியில் செல்சியாவிடம் வீழ்ந்தது பார்சிலோனா. செல்சியா சூப்பர் கேம் மச்சி! அதுவும் பத்து பேருடன்! தவளை தன் வாயால் கெடும்ங்கிற மாதிரி பார்சிலோனா கெட்டது அதுவாலே தான், மெஸ்ஸி தனது வாழ்வின் முதல் பெனால்டி வெளியில் அடித்தார், சொதப்பல் ஸ்ரார்ட். சும்மா சொல்லக்கூடாது செல்சியாவோட தடுப்பு ஆட்டம் பிரம்மாதம். முதல் பாதியில் பார்சிலோனா காட்டிய வேகம் இரண்டாம் பாதியில் காட்டாததால் வந்தது பரிதாபம். செல்சியாவோ மட்ரிட்டோ அல்லது முனீக்கொ எல்லாருக்கும் பெஸ்ட் ஆஃப் லக். 

நாளை இடம்பெறப்போகும் போட்டியில் தனது சொந்த மண்ணில் முனீக் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைவது மட்ரிட் அணிக்கு பெரிய சவாலாக இருக்கப்போவது இல்லை. ஒன்றுக்கு பூச்சியம் என்று கோல் அடித்தாலே போதுமானதாக இருக்கும் காரணம் மட்ரிட் ஏற்கனவே முனீக்கில் நடந்த போட்டியில் ஒரு "away" கோல் போட்டு இருப்பதால். 

ஆக எனது கணிப்பின் படி இறுதிப்போட்டியில் ஆடப்போவது செல்சியா மற்றும் மட்ரிட் அணிகள் தான். இரு அணிகளையும் பார்க்கப்போனால்  செல்சியாவைவிட மட்ரிட் பலம் கூடிய அணியாக இருக்கின்றது.எனது கணிப்பின் படி  செல்சியா மற்றும் மட்ரிட் ஆகிய அணிகள் முனீக்கில் இறுதிப்போட்டி ஆடும் பட்சத்தில் , அந்த மைதானம் இரு அணிகளுக்கும் பொதுவானது. என்ன? தங்களது அணியான முனீக் அணியை தோற்கடித்த கடுப்பில் , முனீக் ரசிகர்களது ஆதரவு செல்சி பக்கம் சாயலாம். அது மட்டும் தான் மட்ரிட்டுக்கு பாதகமான ஒன்றாக இருக்கப்போகிறது.

ஆனால் முனீக் அணிக்கு எதிராகவே அவர்கள் மைதானத்தில் கோல் போட்ட மட்ரிட் அணிக்கு இந்த உளவியல் சவால் ஒன்றும் பெரிய எதிர் தாக்கமாக இருக்கப்போவதில்லை. அது போக சாதரணமாகவே மட்ரிட்டுடன் ஒப்பிடும் பொழுது சற்று நலிந்த கழகமான செல்சியாவை இன்றைய போட்டி மேலும் நலிவடைய வைத்திருக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால் இன்று கோல் போட்டு செல்சியாவின் வெற்றியை உறுதி செய்த மியரல்ஸ், அணியின் பிரதான பின்கள வீரருமான ஜோன் டெர்ரி, இன்னொரு முக்கியமான  பின்கள வீரரான ரமிர்ஸ் ஆகியோர் சிவப்பு அட்டை காரணமாக அடுத்த போட்டியில் விளையாட முடியாது. இது உண்மையில் செல்சியாவின் பலத்தை பாதியாக குறைத்திருக்கிறது எனலாம். மியரல்ஸின் இடத்துக்கு டொரைஸ் வரலாம் என எதிர் பார்கிறேன். இவையெல்லாம் கிட்டத்தட்ட மட்ரிட்டின் பத்தாவது தடவை இண்ணம் வெல்லும் கனைவை நனவாக்கும் என நம்புகிறேன்.

இத்தனையும் பொய்த்துப்போய் நாளை முனீக்கிடம் மட்ரிட் வாங்கி கட்டினாலோ அல்லது இறுதிபோட்டிக்கு நுழைந்து அங்கு நலிந்து, போய் இருக்கும் செல்சியாவிடம் வாங்கி கட்டி உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை செல்சியாவிடம் மட்ரிட் தாரை வார்த்தாலோ, சீசனின் ஆரம்பத்தில் நன்றாக ஆடி இறுதியில் சொதப்பிய பார்சிலோனாவை விட சொதப்பல் அணி மட்ரிட்டாக இருக்கும் என்றால் மறு பேச்சில்லை.

நாளைய தினம் தப்பி தவறி மட்ரிட்டை முனீக் வீழ்த்தினால் கிண்னம் முனீக் வசமாகும் என்பது எனது கணிப்பு. எழுத எழுத நிறைய எழுத வேண்டும் போல் உள்ளது. சீரியசாகவே சொல்கிறேன் , மனது கனத்துப்போய் உளது. ஒரு ரசிகனாக நிறைய நொந்து போய் உள்லேன். இப்போதே நிறைய எழுதிவிட்டதாக உணர்கிறேன். தனியே கீழே உள்ள பந்தியை பதிவாக இட்டு முடிக்கத்தான் ஆரம்பத்தில் எண்ணம். ஆனாலும் இந்த அரையிறுயின் முடிவிலும் அடுத்து நடைபெறப்போகும் இறுதிப்போட்டி தொடர்பிலும் கருத்தறிய, எனது உதைபந்து பதிவுகளை எதிர் பார்த்திருக்கும் யாரேனும் இருந்தால் அவர்களை ஏமாற்ற வேண்டாமே என்று தான் மேலே உள்ள போட்டிக்கான் சிறு குறிப்பு தந்தேன்.

அடுத்த லா லீகா சீசன் வரைக்கும் அனேகமாக இனி உதைபந்து பதிவுகள் என்னிடம் இருந்து வராது என்பது எனது 99% கருத்து`. எவராச்சும் ஏமாந்து போனா அடியேனை மன்னிச்சூ.... எனது உதை பந்து பதிவுகளில் பின்னூட்டமிட்டும் , பதிவுகளை வரவேற்று படித்து  ஆதரவளித்த சகல வாசகர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள். 

இப்போது நண்பன் JZ உடன் சில வார்த்தைகள்....  உன்னோட செம ஃபன்னு மச்சி, எல்லா சப்போர்ட்டுக்கும் தாங்க்ஸ். நமது பின்னூட விவாதங்களில் நிறைய கலாய்ச்சோம் நிறைய கத்துக்கிட்டோம்.பார்சிலோனா இல்லாத மட்ரிட்டையும் மட்ரிட் இல்லாத பார்சிலோனாவையும் நினைத்தாலே கடுப்பா இல்ல???? இந்த இரண்டுக்கிடையான போட்டி தான் லாலீகாவை அழகாக்குகிறது, ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்பது எனது கருத்து நண்பா. ரொம்ப நன்றி நண்பா.... ஆனாலும் சோகமா போனாலும் சும்மா போகல... அடுத்த லா லீகா + சம்பியன்ஸ் கிண்ணம் என்று விட்டதை பிடிப்போம் என்று இவ்விடத்தில் கூறி எனது இதர பதிவுகளுக்கு இதே சுவாரசியத்துடன் நமது பின்னூட்டங்கள் தொடரும் என்ற நம்பிக்கையிலும் கனத்த மனதுடன் வெளியேறுகிறேன்.....! மீண்டும் அடுத்த லா லீகாவில் சந்திப்போம் !!!

Saturday, April 21, 2012

உனக்கு கொசக்சி பசப்புகழ தெரியும் ஆனா எல் கிளாசிகோவ தெரியுமா?
கொசக்சி பசப்புகழ் பெரிய ஒரு விஞ்ஞானி. அவரு இருக்கிற எடம் தேடி அமரிக்க கப்பனிகளே அலையுது. இதிலயும் பஞ்சவேல் பாரிவேந்தனை பழிவாங்கி ரத்தம் குடிக்க அலையும் சத்தியன் கூட கொசக்சி பசப்புகழை தான் தேடித் திரிகிறார். அட அது கூட பரவாயில்லை இந்த ஜீவாவும், சிறீகாந்தும் கூட பஞ்சவேல் பாரிவேந்தனின் ஆருயிர் நண்பர்கள்.

அவர்கள் கூட தனது ஆருயிர் நண்பன் பாரிவேந்தனை தேடி அலைகிறார்கள். அப்புறம் காடு , மேடு, பனிமலை எல்லாம் அலைந்து திரிந்து எப்படியோ பஞ்சவேல் பாரிவேந்தன் தனது நண்பன் இல்லை என்று தெளிகிறார்கள். என்ன இவர்களது வழி பயணத்தில் டிஸ்கவரி சேனலின் "பியர் கைல்ஸ்சும்" , செத்துப்போன "ஸ்டீவ் எர்வின்" ஆவியும் கூட வந்து உயிர் காப்பு நெறிமுறைகளை சொல்லி தராதது தான் கொறை.

அது கூட பரவாயில்லை, அரை இஞ்சிக்கு இடுப்பு வெச்சிருக்கிற இலியானா பொண்ணுகூட , மூக்கும் மூக்கும் முட்டாம ஒரு முத்தம் குடுக்க முடியாம , தோத்து போய் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க துணிஞ்சிருது. அப்பொ முத்தம் குடுக்கும் போது  வேற எதுவும் எதுவும் முட்டும்ன்னு எவனாச்சும் கேட்டீங்கன்னா மக்களே டாகுடரோட துப்பாக்கி படத்தோட முதல் ஷோ டிக்கட் எடுத்து கைல குடுத்திருவன் ஜாக்கிரத.

எனக்கு இங்க தான் மச்சி ஒரு டவுட்டு, இந்த பஞ்சவேலும் , அந்த பக்கி பயபுள்ளையும் பாய்ஞ்சு பாஞ்சு  லவ் பண்ணினாய்ங்களே , அப்புறம் இந்த பஞ்சவேலு உன்ன கல்யாணம் பண்ண முடியாதுங்கிறான். இந்த பொண்ணும் ஒரு ஒப்புக்கு ஏன்னு கேட்டுப்புட்டு அப்புறம் கண்டுக்காம விட்டுரிச்சு.

அடங்கொன்னியா அவன் உஜிரோட இருக்கான இல்ல செத்து போய்ட்டானான்னு கூட தெரியாம, ஒரு அமெரிக்க மாப்பிள்ள கூட செட்டிலாக தயார் ஆகும் இடத்தில் பக்கா மாடன் பொன்னுன்னு நிரூபிக்குது.

அட இந்த பாரி பயல் கூட கண்டுக்கவே இல்ல இல்ல! என்ன லவ்வுடா இது?

ஆனா பாருங்க , ஒரு காமடி என்னன்னா நம்ம தமிழ் நாட்டு ஜேம்ஸ் கமரூன் ஷங்கர் இருக்காரில்ல , அவரு இன்னா சொன்னாரு ? தமிழுக்கு ஏத்தா மாரி படத்த மாத்தி இருக்கேன்னாரு.

பிரம்மாண்டம் பண்ணுகிறேன் பேர்வழின்னு படத்தோட இருநூறு கோடில நூறு கோடிக்கு பாட்டுக்கு எங்கனாச்சும் வனாந்தரத்துல செட்டு போடும் இந்த ரிச்சான பேரரசு இன்னா பண்ணினாரு? ஏன் இவர ரிச்சான பேரரசுன்னு சொல்றேன்னா , பெரிய ஆர்டிஸ்டுகளை வச்சுகின்னு மசால படம் தருகின்ற ஒருத்தர் தானே ஷங்கர். தன்னோட மொதல் மூணு படத்தில இவரு காமிச்ச நெஜமான தெறமையின் மேல் இன்னமும் சவாரி செய்கின்ற சரக்கில்லாத வியாபாரி.

அந்த பேர வச்சுகின்னு , இபோது பெரிய ஆர்டிஸ்டுகள வச்சி படம் பண்ணும் பிரம்மாண்ட வெங்கடேசு, ரிச்சான பேரரசு. பிரம்மாண்டம் ... பிரம்மாண்டம் ... அப்டீன்னு பேசுறீங்களே உங்க படத்துல செட்டு மட்டும் தானே பிரம்மாண்டமா இருக்கு, காட்சிகள்ள கெடையாதேன்னு கேட்டா , அவரும் அவரோட அடி பொடிகளும் தார பதில் இருக்கே யம்மா,,,,,, "அந்த காட்சிகளின் நுணுக்கம், அதில் உள்ள பிரம்மாண்டம் எல்லாம் சிறந்த கமிராமேன்களுக்கும், அந்தந்த துறைசார் வல்லுனர்களுக்கெ வெளங்கும்னு" ஒரு சப்ப கட்டு வேற.. வெளங்குமிடா....!அப்டீன்னா உங்களோட படத்த ரிலீஸ் பண்ணிப்புட்டு நிரவ் ஷா, மகேந்திரன், பாலு மகேந்திரா, கே.வி.ஆனந்துன்னு நூறு நாளும் கேமிரா மேன்களுக்கே போட்டு காட்டி வெற்றி படம்னு அறிவிக்க வேண்டியது தானே, அத்த விட்டு புட்டு  ஏய்யா.. காமிரா பத்தியோ, காமிரா கோணங்கள் பத்தியோ எதுவுமே தெரியாத சாணி தட்டுற முனியம்மாவுக்கும், ஆப்பம் விக்கிற ஆயாவுக்கும் , புண்ணாக்கு விக்கிற புஸ்பாக்கும் போட்டு காட்டுறீக.... # ஓவரா எமோஷன் ஆகிறனோ?

பாலா, வசந்த பாலன், பிரபு சாலமோன் எல்லாம் நல்ல டைரக்டர் அவைய்ங்களோட படத்தில புதுசா ஏதும் இருக்கும்ன்னு நான் ஏதாவது சொல்லப்போனா என்மேல சாணியடிக்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்கிறதால நான் எதுவும் சொல்லப்போவது இல்ல. ஷங்கர் வாழ்க... பிரம்மாண்டம் வாழ்க....

சரி என்னா பேசிக்கிட்டு இருந்தோம்? ஆ! கொசக்சி பசப்புகழ், இந்த கடைசி காட்சில பாருங்க தன்னோட நண்பன் தான் அந்த கொசக்சி பசப்புகழ்ன்னு எல்லோரும் தெரிஞ்சு கொள்ளும் காட்சி என்ன ஒரு பிரம்மாண்டம்?

 இம்மாம் பெரிய விஞ்ஞானி இந்த கொசக்சி, அவரோட அக்ரிமென்ட் போடுறதுக்கு ஜப்பான் , அமெரிக்கா , பேரிக்கான்னு எல்லா நாடும் வரிசைல நிக்குது ஆனா பாருங்கோ , "கிஷோகர்ன்னு" கூகிள்ள சொடக்கினா, சுண்டக்கா பய என்னோட டீட்டெயில் கூட வந்து விழுற இந்த இன்டெர்னெட் யுகத்தில அவரோட ஒரு போட்டோ கூட கூகிள்ளையோ , பேப்பரிலயோ  வராம போனது தான் ஷங்கரோட பிரம்மாண்டம் தெரியும் இடங்கள். கலக்குங்கள் ஷங்கர் சார்!

அது சரி இந்த பிரமாண்டத்தை கவனிக்க உங்களுக்கு மூடு இருந்திருக்காது , பின்ன என்ன முத்தமிடும் போது மூக்கும் மூக்கும் முட்டுமா? அப்டீன்னு சாலமன் பாப்பையாவே பட்டிமன்றம் நடாத்த மறந்த தலைப்பை இடுப்பழகி இலியான விஞ்ஞான பூர்வமாக நிறுவிக்காட்டும் போது , பிரம்மாண்டத்த யாருய்யா பாக்கிறது? பிரம்மாண்டம் வாழ்க! ஷங்கர் வாழ்க!

சரி கொசக்சி பசப்புகழ் யார்னு நமக்கு இப்பொ தெரியும் ! அது யார் சார் 'எல் கிளாசிகோ"?சுட்டுக்கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் மெய்க்காப்பாளர்கள் எல்லாம் ஃபிகருகள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் ஒரு பிகரை நீண்ட நாட்களாக கடாபி இது பண்ணினார்.

அந்த பொண்ணு பேரு தான் "எல் கிளாசிகோ". சும்மா செம ஃபிகருப்பா. சும்மா சொல்ல கூடாது, பொண்ணு நின்னு வெளையாடும், அந்த கறுப்பு கலருக்கே  கோடி குடுக்கலாம், என்னய விட்டா அந்த பொண்ணு பாட்டியாகும் வரைக்கும் பாத்துகின்னே இருப்பேன், அப்டீனு நான் சொன்னா இந்த JZஉம், மலேசியா  குமரனும் வாயிலயே வெட்டுவார்கள்.


'எல் கிளாசிகோ" அப்டீன்னா ஸ்பெயினின் புகழ் பெற்ற உதைபந்தாட்ட கழகங்களான பார்சிலோனா மற்றும் ரியல் மட்ரிட் அணிகள் மோதும் இந்த போட்டிக்கு பேர் தான் "எல் கிளாசிகோ"

உலகத்தின் மில்லியன் கணக்கான உதைபந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த போட்டி இன்று இலங்கை இந்திய நேரப்படி 11.30க்கு ஆரம்பமாகிறது.

இந்த போட்டி அரசியல் மற்றும் இன்னமும் சிலபல காரணங்களால் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கட் போட்டி ரேஞ்சுக்கு பார்க்கப்படுகிறது. முடிஞ்சா நீங்களும் பாருங்கோ.

இன்றைய இந்த போட்டி பார்சிலோனாவுக்கு அரசியல் ரீதியான காரணங்ளையும் தாண்டி   மிக முக்கியமான போட்டி. காரணம் ஏன் என்று அறிய இங்கே சொடுக்குங்கள்.யோவ் JZ மற்றும் மலேசியா குமரா! இந்த போட்டி தொடர்பில் தனி பிரீவியூ போடத்தான் பிளான் பண்ணினேன். இந்த பாழா போன கரண்டு இப்போதான் வந்திச்சு. அதனால ஏற்கனவே கொசக்சிக்கு அனுப்ப வச்சிருந்த லெட்டர் கூட இதையும் அட்டாச் பண்ணி மேனேஜ் பண்ணிகிட்டேன். மன்னிச்சூ........

இந்த போட்டி இப்படி முடியலாம்....

2 - 0 பார்சிலோனா வெற்றி

அல்லது

2- 1 பார்சிலோனா வெற்றி

இந்த போட்டியில் எதிர் பார்க்கப்படும் பார்சிலோனாவின் லைன் - அப்Friday, April 20, 2012

சூடுபிடிகிறது தனுஷின் தாடிவிவகாரம், ஐ.பி.எல் போட்டியில் பாடியதால் வந்த வினை!


அப்பாடா! எனக்கு டெம்பரறியா லீவு வுட்டிருக்கானுக, தனுசு! யூ என்சாய்...


நேத்துங்க , இந்தியன் முன்னணி சுற்றுப்போட்டி பாத்துக்கிட்டு இருந்தேங்க, சென்னை சிறந்த அரசர்களும் , புனே போராட்டக்காரர்களும் ஆடிக்கிட்டு இருந்தாங்கோ! ஆட்டத்த நான் ரசிச்சு பத்துகிட்டு இருந்தேங்க , இந்த காமிரா பய புள்ளய்ங்களும் கெடச்ச காப்பில எல்லாம் சொழட்டி சொழட்டி மைதானத்த எடுத்துக்கிட்டு இருந்தாய்ங்க! அட திடீர்ன்னு பார்த்தா அகோரி ஆர்யாவாட்டம் ஒரு மூஞ்சி! பக்கத்துல திருவிழாவைல புள்ள புடிகிறவன் போல ஒரு செம (ஆம்பள) ஃபிகர். இந்த ரெண்டு மூஞ்சிகளையும் எங்கயோ பாத்திருக்கிறனேன்னு கடுமையா யோசிச்சா, அட நம்ம சுப்பர் ஸ்டார் மருமகபுள்ள (சாரி டனுசு , உங்களுக்கு தான் அந்த அடையாளம் புடிக்காது இல்ல, அப்போ இப்படி வச்சிக்கலாமா? இவரோட மாமா தான் ரஜினி) பக்கத்தில நம்ம சோனியா அக்காவோட முனாள் புருஷன். ஆனாலும் என் தலைவன் தனுஷை கண்டுவிட்ட பேருவகையில் அந்த கிரிக்கட் மேச்சு ருசிக்கவெ இல்ல.

 மேட்ச்சு ருசிக்காம போனதுக்கு காரணம் வேற ! யாருடா இந்த சியர் லீடர்ஸ் பொண்ணுங்களுக்கு கதகளி ட்ரெஸ்ஸு குடுத்தது? கொய்யாலே கைல கெடச்சே , கைமா பண்ணிடுவன் ஜாக்கிரத.சரி அத்த விடுவம் பாஸு, நம்ம சுப்பர் ஸ்டாருக்கே அடையாளமாக  இருக்கிற தலைவன் தனுச கண்ணுல கண்டபொறகு சியர் லீடர்ஸ் யாருக்கு வேணும்? ஆனாங்காட்டியும் மக்களே இந்த சிய லீடர்ஸ் துஷ்பிரயோக விவகாரத்த பத்தி பதிவு போடாம நாளைக்கு காலேல சாப்பிட மாட்டேண்டா. இது பன்னிகுட்டி ராமசாமி மேல சத்தியம்.

சரி அப்டியா பட்ட பெருமை உடைய தனுசை பேட்டி காண மாட்டாங்களா? வேட்டி உருவ மாட்டாங்களான்னு உள்மனசு தவிச்ச தவிப்பு எந்த பாரதிராஜா பட நாயகியும் தவிக்காதது. கண்ன்டாங்களே, பேட்டி கண்டாங்களே, செக்கண்டு பேட்டிங் தொடங்க மொதல்ல கெடச்ச பத்து நிமிஷ கேப்பில நாலு வெளப்பரம் போட்டு லாபம் பாக்கிறத விட்டுபுட்டு உங்களுக்கு ஏன்டா இந்த வெல்லங்கம் புடிச்ச வெச பரீட்சைன்னு கேள்விய எவனாச்சும் கேட்பான்னு தெரிஞ்சும் , ரிஸ்க் எடுத்த சோனி மேக்ஸ் தொலைக்காட்சிக்கு எங்கள் வீட்டு கொல்லைபுறத்தில் கோயில் கட்டுவேன்னு இத்தால் உறுதி அளிக்கிறேன்!

செவமணி ட்ரம்ஸ் வாசிக்க , அது என்ன ஒரு பாட்டு ? யம்ம சும்ம நாவிக்கமலத்தில இருந்து ஒடம்பில இருக்கிற அத்த நரம்பு, நாடி , நாளம் வழியா ஓடி இருகிற அத்தனை ஓட வழியாவும் வெளிய வந்திச்சு உற்சாகம். மொதல்ல அந்த கொரலுக்கே  குடுக்கலாம்யா பத்து கோடி, இத பாக்கணும்யா யூ டியூப்ல பத்துலட்சம் வாட்டி. சும்மா உடன் கள்ளு இருக்கில்ல உடன் கள்ளு அதில ஒரு பத்து பானைய , சைடிஷுக்கு கருவாடு சுட்டு அடிச்சா ஏறும்ல ஒரு மப்பு அது என்ன மப்பு இது தான்ட மப்பு! நான் பாட்ட கேக்கிறதா இல்லாங்காட்டி அந்த பாடும் போது அந்த பாடி லாங்குவேஜ் பாகிறதான்னு கொழம்பியே போயிட்டேன்.

என்னா டெரெஸ்ஸிங் சென்ஸு ! என்னா ஸ்டைலு! என்ன விட்டா அடுத்த ஐ.பி.எல் வரைக்கும் பாத்துக்கிட்டே இருப்பேன். சொல்றேன்னு தப்பா நெனைக்க கூடாது, அட அவனா நீயின்னு கலாய்க்க கூடாது, ஆனாலும் சொல்லாம இருக்க முடியல. அந்த காலு இருக்கே காலு , யம்மா வாழ மட்ட என்ன மயித்துக்கா? அந்த ஒதடு இருக்கே யம்மா! சகாரா பலவனத்தில நடு உச்சி வெய்யில்ல நாக்கு வரண்டு கெடக்கு போது எவனாச்சும் கொணாந்து கூலா ஒரு பீர் தந்தா எப்டி இருக்கும், அந்தா மாதிரி ஒரு ஒதடு. செம போதப்பா! அத்த நெனனச்சா இப்பவே வந்திரும் போல இருக்கு , அட உற்சாகம்க, எப்போ பாரு கெட்ட எண்ணமும் கீழ்தரமான சிந்தனைகளும்! 

மறுபடியுமாடா? இந்த மாதம் தானடா கலாய்ச்ச...

இப்டியே நான் ரசிசுகிட்டு  இருக்கும் போது கவுண்டு கெடக்கிற ஓட்ட கொடத்துக்குள்ள கெடந்து , படாத இடத்தில அடிபட்ட வெறிப்புடிச்ச சொறி நாய் வலியில மொனகி மொனகி கொடத்த பெராண்டுற மாதிரியே சவுண்டு வந்திச்சு! கூ  இஸ் த டாக் வாய்ஸ்? யார்ரா குறுக்க பேசுறதுனு திரும்பி பாத்தா நம்ம தனுசு பாடுறாப்ல! சாரி சார் நான் அந்த ஐ.பி.எல் காமின்றி பண்ணுற பொண்னு இங்கிலிபிஸ்ஸில செமத்தியா பாட்டு பாடுறதில முழ்கி போனதில நீங்க பக்கத்தில நின்னத கூட கவனிக்கல!

அந்த காமின்றி பண்ணுற பொண்ணு என்னாமா இருக்கிறா! என்னாமா பாடுறா! எவனுக்கு குடுத்து வச்சிருக்கோ. சாரி தல, அந்த பொண்ண ஜொள்ளு விட்டதில உங்க கதைய மறந்து போனேன்.

அது சரி நீங்க இங்க இன்னா பண்றீங்கன்னு கேட்டா , தல பாட்டு பாட வந்துச்சாம்ல, அந்த செம ஃபிகரு இங்கிலிபிஸ்ஸில பாடும் போது குறுக்க நின்னு தலைவர் "ரேப்" பண்ணினார் பாரு , அரங்கமே அதிர்ந்திச்சு.(டேய் நாயே அது ரேப்பு இல்லடா "ராப்" எங்க சொல்லு ராப்? # "ரேப்பு" , ஆமா அதே தாண்டா வெளங்கிரும்)

செம ஸ்பீடில அவரு 'வை திச் கொல வெறி கொல வெறின்னு " ரேப்பு பண்ணும் போது குறுக்க கவுண்டரு மட்டும் பூந்து "என்னட கரடி கக்கூஸ் போற மாதிரி ஒரு சவுண்டு"னு கமன்டரி பண்னலேன்னா சும்மா பிச்சு மேய்ஞ்சிருப்போம்ல! அது சரி தலைவரே இந்த வை திஸ் கொலவெறி பாட்டு நீங்க தான் பாடுனீங்களா? என்ன சார் 100% வேற எவனோ பாடினாப்ல இருந்திச்சு.

எச்சுகுச்சு மீ.... மே ஐ கம் இன்?

எவன்டா அது , உள்ள வந்துட்டு வரவான்னு கேக்குறது? வாடா டேய்! யார்ர நீ?

"நாந்தாங்க யுவன் ஷங்கர் ராஜா"

"டேய் தனுசு மாதிரி ஒரு இசை மேதை, இசை ஞானிகளின் ஞானி, மெல்லிசை , வல்லிசை, துளிசை, கில்மா இசை மன்னர், இசை புயல் , இசை சூறாவளி, இசை கதரீனா , இசை ரீட்டா, இசை சுனாமி இருக்கிற எடத்தில உனக்கென்ன மேன் வேலை"?

"இல்ல , இந்த கொலவெறி பாட்ட யாரு பாடினதுன்னு யாரு கேட்டது?"

'நான் தான் மேன் கேட்டேன். அதுக்கு என்ன இப்போ?"

"நான் ஒரு உண்மை சொல்லியாகணும்"

"டேய்! முனேல்லாம் எனக்கொரு உண்ம தெரிஞ்சாகும்னு அலைஞ்சீங்க , இப்பொ என்னடா புதுசா கெளம்பி இருக்கீங்க. பராவாயில்ல சொல்லு மேன்"

"உங்களோட தலைவரோட படம் ஒண்னுவந்துச்சே, பேரு கூட ஏதோ சரவணன்னு"

"ஆமா, கீழ்பாக்கத்தில் இருந்து சரவணன்"

"அதுக்கு நான் தான் மியுசிக் பண்ணினன் சார்"

என்னய பத்தி என்னதான் சொன்னாலும் நம்பாதிங்க!


"இன்சல்ட் , இன்சல்ட் கிரேட் இன்சல்ட், பீத்தோவன் வீட்ல ராப்பிச்சகாரன் கச்ச்சேரி பண்றதா, ஜேம்ஸ் கமரூன் வீட்ல  சாம் அன்டர்சன் படம் ஓடுறதா? அவமனம் வெட்கம். தன்னோட தாடி மசிருக்குள கூட மியூசிக்க வளத்து வச்சிருக்கிர என்னோட தலைவன் , பாவம் வளர்ற புள்ளையாச்சே, உன்னோட அப்பா இத்தன காலம் மியூசிக்  பீல்டில  இருந்து சாதிக்க முடியாம போனத நீயாவது ஏதோ தன்னோட அளவுக்கு இல்லன்னாலும் சும்மா ஏதோ சோத்துக்கு சிங்கியடிக்காத அளவுக்கு  பாவம் ஏதோ சம்பாதிச்சுக்கோன்னு   உனக்கு அந்த படத்தில சான்ஸ் தந்தவர்றா என்னோட தலைவன் . சரி அதுக்கு என்ன இப்போ?"

"அந்த படத்தில 'நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்குன்னு' ஒரு பாட்டு வருமே"

"ஆமாய்யா யோவ் ,நானும் ரொம்ப நாளா கேக்கணும்னு இருந்தேன், என்னய்யா பெரிய புடுங்கி மியூசிக் டைரடக்கர் நீயி? இதுக்கு தான் நாட்டுக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா எங்க தனுசு வேணும்கிறது. அவரளவுக்கு உனக்கு ஞானம் இல்லன்னு அந்த பாட்டே காட்டி குடுத்திருச்சேய்யா, யாருக்கு எந்த பாட்டு குடுக்கணுங்கிற இங்கிதம் தெரியாத நீயெல்லாம் ஒரு மியூசிக் டைரடக்கர், எவன்ட அந்த பாட்டு பாடினது ? பயபுள்ள நாலுநாள் வச்ச பழைய சோத்த தின்னு பேதியாகி கம்மாக்கர பக்கம் ஒதுங்கி "என்வயார்மென்ட் பொலியூசன்" பண்றாப்ல ஒரு கொரலு, அப்பிடி ஒரு நரகாம்சமான கொரல் வச்சிருக்கிற ஒருத்தனுக்கு சான்ஸு கொடுத்துப்புட்டு நீயெல்லாம் இங்க வந்து பேசுற , யோவ் வாச்மேன்! யாருய்யா இசைமேதை குடியிருக்கிற இந்த இடத்தில இந்த சில்லற பசங்கள உள்ளவிட்டது? டேய் யுவன் ! சில்லறப் பையா இங்க  நிக்காத ஓடிப்போயிர்"

"சார்"

"டேய் ! நீ இன்னும் போகலயா?"

"இல்ல சார் அந்த பாட்ட பாடினதே உங்க இசை மேதை தனுசு தாங்க"

"நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ! என்னடா சொல்லுற? டேய் அவரளவுக்கு உனக்கு மியூசிக் பத்தி எதுவுமே தெரியாதுங்கிறதால, பொறாமேல சொல்லாதடா. அவரோட கொலவெறி சாங்கில இருக்கிற கிக்க பாத்தியாடா, அத பாத்துமா இப்பிடி பேசுற? ராஸ்கல் , அந்த 'நாட்டு சரக்கு' பாட்டு என்னடா, எங்க அடிபட்டாலும் கால தூக்கி கத்துற சொறி நாய் கத்துறாப்ல இருக்கு. கொல வெறி சாங்க் கேட்டியா ? கரிகரனே பிச்ச எடுக்கிற காந்த கொரலுடா . இல்ல.. இல்ல... நீ பொய் சொல்ற! " 

"இல்ல சார் , நான் உண்மைய தான் சொல்லுறன் சார், அந்த படம் வந்த நாளில 'சவுண்டு மிக்ஸிங்' அப்டீங்கிற டெக்னாலஜி ரகுமான் சார் மட்டும் தான் வச்சிருந்தாரு. எங்க கிட்ட இருக்கல. அப்போ தனுசு ஒரு பாட்டு பாடனும்னு கேட்டாரு , சரி டெமோ காட்டுங்கன்னு சொன்னன் . அப்போ அவரு எந்த மியூசிக், சவுண்டு மிக்சிங் எதுவுமே இல்லாம் பாடினத கேட்டதும், வட பழனி முருகன் கோயில் மொட்ட அடிச்சுக்கிட்டு , தென் மதுர பஸ்ஸ்டாண்டில பிச்ச எடுக்கலாமன்னு கூட தோணிச்சு. நான் எவளவோ நாசூக்கா சொல்லி பாத்தேன் கேக்குற மாதிரி தெரியல, அப்புறம் அந்த நேரத்தில என்னோட பெஸ்டு பிரண்டா இருந்த செல்வராகவன் கிட்ட சொல்லி சிபாரிசில ஒரு மாதிரி தான் நெனச்சத ஒப்பேத்திட்டாய்ங்க"

"டேய் என்னடா இடிய எறக்குற" 

"அதனால தான் சார் ஐ.பி.எல் போட்டில அவரு இந்த மிக்ஸிங் எதுவுமே இல்லாம அவரு பாடினப்ப , கவுண்டமணிசார் வந்து 'கரடி கக்கூஸ் போன மாதிரினு' கமண்ட் அடிச்சிட்டு போனாரு. நீங்க கூட அந்த ரெண்டு பாட்டையும் கேட்டுப்பாருங்க உண்ம புரியும் குரலு 30% மிக்சிங்கு 70%. அப்போ நான் வாரன் சார்"

"டாய் நில்றா "

"என்ன சார்"

"மவனே , இந்த உண்மையெல்லாம் வேற எங்கயாவது போய் சொன்னேனு வச்சுக்க , எங்க  தலைவர் அடுத்து ஆஸ்கர் அவார்டுகளை ஒரு கண்டெய்னர் நெறைய அள்ளிக்கிட்டு வரும்போது ஒபாமா தலமையில பாராட்டு விழா நடக்கும், உலகத் தலைவர்கள் எல்லாம் வந்து பேசுவாய்ங்க , ஆனா  அந்த மேடைல உன்ன பேச விடமாட்டன் ஜாக்கிரத"

"நான் அப்பவே சொன்னன், சவுண்டு மிக்சிங் இல்லாம நான் கொலவெறி பாட்டு பாடமாட்னேனு, கேட்டீங்களா? இப்பொ பாரு யாரு பெத்த புள்ளைங்களோ வெறிப்பிடிச்சு போய்ட்டீகளே பக்கிகளா!"


அடங்கொன்னியா ! இந்த மேட்டர பன்னிக்குட்டி, பட்டாபட்டி வகையறாக்கள் கேள்விப்பட்டா, இத்த வச்சே பத்து பதிவு தேத்தி என்னோட தங்க தலைவன் தனூச மானபங்க படுத்திடுவாய்ங்களே! தலீவா நீ கவலய வுடு, நாம எல்லாம் நாதாரித்தனம் பண்ணிநாலும் நாசூக்க பண்ணுறவைங்க! அந்த பக்கி பய யுவன் சொன்னது இப்பொதான் எனக்கு இடிக்குது. முன்னாங்காட்டி ஒரு நாள் நீயி ஃபெப்சி கூட்டத்தில பேசுறப்போ , ஆனந்த கண்ணன் உன்ன பாட சொல்லி  கேட்கச்சொல்ல நீயி ஜகா வாங்கினியே , அப்போ "புலி பதுங்கிறது பாயிரதுக்கின்ல நெனச்சேன்" இப்போதும் அந்த வைர வரிகள், பட்டசாராயம் அடிச்சவன் வாந்தி பத்து வீட்டுக்கு மணப்பது போல  என் காதில் கிடந்து மணக்கிறது. "சார் ரெக்கார்டிங்ல ஏதாச்சும் பிழையாச்சுன்னா , திருத்தி ஷேப் பண்ணிடலாம், ஆனா இங்க ஏதாச்சும் பிழைய போச்சுன்னா  அவளவு தானா தனுசுன்னு கணக்கு பண்ணிடுவீங்க"ன்னு நீங்க அப்போ சொன்னதுக்கு அப்போ அர்த்தம் புரியல!

ஆனா ஐ.பி.எல்ல பாட கூப்பிடுறாய்ங்கன்னு வாய பொளந்துகிட்டு, நீங்க பாடப் போய் இப்போ என்னாச்சு? நீல சாயம் பூசிக்கிட்டு இருந்ததை மறந்து ஊளவிட்டு செமத்தியா அடிவாங்கின நரி கதையா ஆயிடுச்சு உங்க கத தலைவா! என்ன கர்ண கொடூரமா பாடினீங்க தெரியுமா? ஆனாலும் வலிக்கவே இல்ல!

நீ கவலப்படாத தலைவா! என்னதான் அக்குபன்சர் டாக்டர் பவர்ஸ்டாரும் , நம்ம ரியல் டாகுடர் விஜய்யும் போட்டிக்கு வந்தாலும் உன்னோட புகழ் சரியாம நான் பாத்துக்கிறேன் தலீவா!

யோவ்! பரிணாமம் பத்தி பதிவுபோடுற பதிவரே டூலிட்டில், எங்க தலைவனின் தாடிக்கும் அவனோட பாட்டோட பரிமாண வளர்ச்சிக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இருக்கா? அல்லது அது அவனோட வளர்ச்சியில் எந்தமாதிரி பாதிப்பை ஏற்படுத்தும்ன்னு ஒரு பிரத்தியேக பதிவு போட்டு , 

தலைவர்,
ஆஸ்கார் நாயகன் தனுஷ் கொலைவெறி ரசிகர்மன்றம்,
அகில உலகம்,
பிரபஞ்சம்.

என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு வற்புறுத்தப்படுகிறீர்கள். மீறும் பட்சத்தில் "3"பட கிளைமாக்ஸ் காட்சியை தனியாக உக்காந்து பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகவேண்டி வரும் என்பதை மனவருத்ததுடன் தெரிவித்துகொள்கிறேன். அனுப்பும் போது கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் அடைப்பு குறிக்குள் (தானை தலைவன் தனுஷ் தாடி விவகாரம்) என்று குறிப்பிட மறக்க வேண்டாம். பிரபஞ்ச பவர் ஸ்டார் ரசிகர் மன்ற தலைவர் , டாக்டர் விஜய் மன்ற கொள்கை பரப்பு செயலாளர்  மற்றும் இப்போது "தனுஷ் தாடி விவகார தலைவர்" ஆகிய பொறுப்புக்களை சுமப்பதால், எந்த விடயம் தொடர்பாக கடிதம் வருகிறது என அறிந்து கொள்ள இந்த ஏற்பாடு. நான் சொன்னவாறு குறிப்பிட மறந்தால் அடுத்த கணமே 'சுள்ளான்" படத்து வீசிடி உங்கள் வீட்டுக்கு பார்சலில் அனுப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

நீ கவலைப்படாத தல! யாரு என்ன சதி வேல பண்ணினாலும், எத்தனை சக்திகள் வந்து தடுத்தாலும், சவுண்டு மிக்ஸிங் இல்லாம நீங்கள் பாடும் பாட்டுக்களை கேட்டு எத்தனை பெண்களின் கர்ப்பம் கலைந்தாலும் சரி , எத்தனை பேர் ரத்தவாந்தி எடுத்தாலும் சரி , அடுத்து நீங்கள் உலகில் இசைக்காக உலகில் வழங்கப்படும் அத்தனை விருதுகளையும் வீட்டில் குவிக்கும் வரையிலும், டாக்டர் விஜய்க்கு போட்டியாக நீங்கள் அடுத்து அரசியலில் இறங்கி ஆட்சியை புடிக்கும் வரையும் கடுமையாக உழைப்பேன் என்று இத்தால் உனது மர்மயோகி தாடி மீது சத்தியம் செய்கிறேன். 

கெளப்புரா... கெளப்புரா.... ராஜா என்சாய்....
யூ ஆல் வேய்ஸ் ராக் தலீவா! இவனுக எல்லாம் சுண்டக்கா பயபுள்ளைங்க!


Thursday, April 19, 2012

ரஜினியின் "பாபா' தோல்விக்கும் பார்சிலோனாவுக்கும் என்ன சம்மந்தம்? - நான் சப்பைக்கட்டு கட்டுகிறேன் அல்லது உண்மையை சொல்கிறேன்!


இந்த பஞ்சாயத்துக்கு என்ன எதுக்குடா இழுக்கிற?உதை பந்து தொடர்பில் பதிவுகளை எழுதும் உத்வேகத்தில் நான் எழுத ஆரம்பித்திருந்லும் அது எந்தளவிற்கு வரவேற்பை பெறும் என்பது எனக்கு ஒரு கேள்வியாகவே இருந்தது. நான் எழுதிய முதல் உதைபந்து பதிவில் ஒரு பின்னூட்டம் + 100 ஹிட்ஸ் கூட கிடைப்பது சந்தேகம் என்று எழுதியிருந்தேன். ஆனால் இதுவரை எழுதிய இரண்டு உதை பந்து பதிவுகளும் பலத்த வரவேற்பை பெற்றிருக்கின்றது என்று பொய் சொல்லவில்லை சுமாராக ஒரு 400- 500 ஹிட்ஸ் கிடைக்கிறது, அத்தோடு பின்னூட்டங்களும் வருகிறது. "அருமை நண்பா' ரக பின்னூட்டங்களை தாண்டி சிறந்த உதைபந்தாட்ட ரசிகர்களிடமிருந்து பிரயோசனமான பின்னூட்டங்கள் வந்திருப்பது எனக்கு தொடர்ந்தும் அவ்வப்போது உதை பந்து பதிவுகளை எழுத ஊக்கம் தருகிறது.

இது ஒரு பதிவாகவே எழுத எண்ணம் இருக்கவில்லை. (அப்போ என்ன வெண்ணைக்கு எழுதின என்று நீங்கள் கேட்பதி நியாயம் இல்லாமல் இல்லை. #இருக்கு எண்டுறியா? இல்ல எண்டுறியா?). சரி மேட்டருக்கு வருவோம் நேற்று இடம்பெற்று முடிந்த சம்பியன்ஸ் கிண்ண போட்டி தொடர்பில் நான் எழுதிய முன்னோட்டப் பார்வை பதிவை பார்த்துவிட்டு , நடந்து முடிந்த போட்டி தொடர்பில்  நண்பர் JZ தந்த பின்னூட்டங்களுக்கு பதில் தர ஆரம்பித்தேன் , கொஞ்சம் எழுத தொடங்கி விட்டு பார்த்தால் அது ஒரு பதிவு ரேஞ்சுக்கு நீண்டிருந்தது. சரி வந்தவரைக்கும் லாபம் என்று , கொஞ்சம் மேலதிக பிட்டுக்களும் சேர்த்து ஒரு பதிவாக தயாரித்து விட்டேன். (எப்படி என் சாமர்த்தியம்? # உன் சாமர்த்தியத்தை நாய் விறாண்ட) இதை நண்பர் JZ தனக்குரிய பதிலாக பார்க்கலாம், ஏனையோர் "பார்சிலோனா எதிர் செல்சியா நடந்தது என்ன ?" ரீதியில் படித்துக் கொள்ளலாம்.

இது ஒரு பின்னூட்டமாக தயாரிக்கப்பட்டு பின்னர் பதிவிடும் நோக்கத்தில் தொகுக்கப்பட்டது. எடிட்டிங்கில் ஏதாவது கோளாறாகி தொடர்புத்தன்மை எங்காவது காணாமல் போயிருந்தால் மன்னிச்சூ....

நண்பரே தங்களது வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்! தொடர்ந்து உங்களது ஆதரவு எனக்கு வேண்டும். 
2009 என்பது முடிந்து போனது அதைப்பற்றி இப்போது பேசுவது அர்த்தமற்றது என்பது எனது தாழ்மையான கருத்து, அத்தோடு நடுவரின் பிழையான தீர்ப்பு என்பது பார்சினோலாவின் தவறில்லையே! இதை பதிலடியாக நீங்கள் எடுத்துகொண்டால் அதை இல்லை என்றும் மறுக்க முடியாது. நான் பார்சிலோனாவின் தீவிர ரசிகன் தான் , ஆனால் நடுநிலமையான உதைபந்தாட்ட ரசிகன். எனது பதிவைப் பார்த்தால் அது உங்களுக்கு புரிந்திருக்கும். நான் செல்சியாவை குறைத்து மதிப்பிடவில்லையே! நேற்றைய போட்டியில் செல்சியா வெல்லும் அல்லது சமநிலை என்று தானே குறிப்பிட்டிருந்தேன்.ஆனால் நேற்றைய போட்டியை நீங்கள் பார்த்திருந்தால் புரிந்திருக்குமே, யார் பக்கம் ஆட்டம் இருந்தது என்று! 80% பந்து பார்சிலோனாவின் பக்கமே இருந்தது, அது போக நேற்றைய ஆட்டத்தில் அறிவிப்பாளர்கள் கூட பார்சிலோனா தான் ஃகோம் டீம் போல ஆடுவதாக குறிப்பிட்டிருந்ததை அவதானித்திருப்பீர்கள். உங்கள் மன சாட்சிக்கு தெரியும் எந்த அணியின் ஆட்டம் நேற்று சிறப்பாக இருந்தது என்று. சனியாஸ் ஒன்று , பண்ணாட ஃபப்ரிகாஸ் இரண்டு இறுதி நிமிடத்தில் பெட்ரோ ரொட்ரீகஸ் ஒன்று என்று இலகுவாக அடித்திருக்க வேண்டிய நான்கு கோல்களை பார்சிலோன தவறவிட்டது காலக் கொடுமை என்பதை விட வேறு என்ன சொல்வது?


ஸ்பெயின் டீமில இடம் கெடச்ச மாதிரி தான்!செல்சியாவின் மைதானத்தில் இவ்வாறான ஒரு சிறந்த ஆட்டத்தை பார்சிலோனாவால் வெளிப்படுத்த முடிந்திருகிறது என்றால் அவர்களது கோட்டையான நியூ கேம்பில் அவர்களது ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. நான் எனது பதிவில் கூறியது போல இரண்டு கோல்களுக்கு அதிகமான கோல் அடித்து பார்சிலோனா வெல்வது உறுதி. இதை பார்சிலோனா ரசிகனாக சொல்லவில்லை ஒரு உதைபந்தாட்ட ரசிகனாக சொல்கிறேன்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?சொல்லப்போனால் செல்சி நேற்று ஆடிய தற்காப்பு ஆட்டம் அர்த்தமற்றது, காரணம் தங்களது சொந்த மைதானத்தில் தாக்குதல் ஆட்டம் ஆடி எதிரணிக்கு குறைந்தது இரண்டு கோல்களாவது அடித்தால் மட்டுமே பார்சிலோனா போன்ற வலிமையான அணிக்கு எதிராக அவர்கலது மைதானத்தில் தாக்குபிடிக்க முடியும். 

செல்சியாவின் தடுப்பு ஆட்டம் அவர்கள் திட்டமிட்டு செய்தது இல்லை, வெளி மைதானத்தில் தடுப்பு ஆட்டம் ஆட வேண்டிய பார்சிலோன யாரும் எதிர் பார்க்காத வண்ணம் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியதால் செல்சியா தடுப்பு ஆட்டத்துக்கு நிர்பந்திக்கப்பட்டது எனலாம். ஏன் சொல்கிறேன் என்றால் போட்டியின் முதல் பதினைந்து நிமிடங்கள் செல்சியா தாக்குதல் ஆட்டத்துக்கு முனைந்ததை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் பார்சிலோனாவும் தாக்குதல் ஆட்த்தை தொடரவும் வேறு வழியின்றி தனது துருப்புக்களை பின் நகத்தியது செல்சியா. செல்சியாவின் நோக்கம் தாக்குதல் ஆட்டம் ஆடி பார்சிலோனாவின் பலவீனப்பட்ட பின்களத்தை ஊடுருவி  இரண்டு கோல்களாவது போடுவதாகதான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் செல்சியாவின் இந்த நோக்கத்தை அறிந்து தானோ என்னமோ பார்சிலோனா தடுப்பில் இறங்காமல் தாக்குதல் ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. சும்மா சொல்லக்கூடாது நான் குறைத்து மதிப்பிட்ட கிழட்டு சிங்கம் புயோலின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. யாரும் எதிர் பாராமல் ட்ரகோபா அடித்த அந்த கோல் தவிர செல்சியாவின் எந்தவொரு வீரரும் ஆடுவதற்கு புயோல்+ பார்சிலோனாவின் பின்களம் இடம் தரவில்லை என்றால் மிகையாகாது.

வட போச்சே!


நான் எதிர் பார்த்த அளவுக்கு செல்சியாவின் ஆட்டம் அவளவு சிறப்பாக இல்லை என்று தான் சொல்லுவேன். வயதாகி விட்டது அவர்கள் உடல் தகுதி போதாது என்று நான் குறிப்பிட்ட ட்ரக்கொபா கிஷோகர் சொன்னது நியாயம் என்பதை நேற்று நிரூபித்தார், பார்சிலோனாவின் பின்களவீரர்களது (நியாயமான + நியாயமற்ற) தாக்குதல்கள சமாளிக்க முடியாமல் திணறினார், அது போக தானே சில வேளைகளில் யாரும் தட்டி விடாமலே கீழே விழுந்தார். இந்த திணறல் ஆட்டம் நியூ கேம்பில் சுத்தமாக எடுபடாது. ஆனாலும் ஒரு கோல் அடித்து ரசிகர்களின் நாயகனாகி போனார்.


லம்பார்ட் மைதானத்தில் இருந்தாரா , இல்லைய என்பதே எனக்கு தெரியவில்லை. ஆஸ்லே கோல் சுமார், டெர்ரி எதிர் பார்த்ததைவிட சொதப்பல் ரகம் தான். ஆனால் செல்சியாவின் அசத்தல் இளம் வீரர் மியரல்ஸின் ஆட்டம் பிரம்மிக்கவைத்தது. அடுத்து அணியின் கோல் காப்பாளர் பீட்டர் சேச், மனிதர் இல்லாவிட்டால் பார்சிலோனாவுக்கு இரண்டு கோல் உறுதியாகியிருக்கும். அது போல் நடுக்கள வீரர் ரமிர்ஸ், மற்றும் மிகெல் ஆகியோரது ஆட்டமும் கவனிக்கப்பட வேண்டியது.


பார்சிலோனா தோற்றதற்கு செல்சியா காரணம் இல்லை. பார்சிலோனாவே தான் காரணம். நான் சொதப்பும் என எதிர் பார்த்த பார்சிலோனாவின் பின் களம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த சிறந்த முன்களம் என பெயர் வாங்கிய முன்வரிசை சொதப்பியது. முன்வரிசை என ஒட்டு மொத்தமாக பழி போடுவதை விட ஃபப்ரிகாஸ் என பச்சையாக சொல்லலாம். ஆர்சனலில் இருந்து ஸ்பெயின் அணியில் தனக்கு இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் இடைவிலகி பார்சிலோனாவுடன் சேர்ந்து ஆடும் இந்த பக்கிக்கு ஸ்பெயின் அணியில் இடம் குடுக்க கூடாது என்று பரிந்துரை செய்கிறேன்.

இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கு ஆடும் ஸ்பெயின் வீரர்களுக்கு ஸ்பெயின் தேசிய அணியில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைப்பது அரிது என்பதால் , ஃபப்ரிகாஸ் பார்சிலோனாவுக்கு மாறினார். ஆர்சனலின் பள்ளியில் இருந்து தெரிவான இந்த ஃபப்ரிகாஸ் ஆர்சனலுடனான தனது ஒப்பந்த காலம் முடிவைவதற்கு முன்னமே இடைவிலகியிருப்பதால் ஆர்சனல் இவருக்கு செலவழித்த செலவீங்களை பார்சிலோனா வழங்கும் சம்பள பணத்தில் கட்டி கட்டி கடனைத்து கொண்டிருக்கிறார் இந்த கடன்காரன்.

அந்த பன்னாடை நேற்று ஆடிய ஆட்டம் பார்சிலோனாவின் தோல்வியை உறுதி செய்தது எனலாம். மெஸ்ஸி கொடுத்த பந்தை "சிப்" பண்ணுகிறேன் பேர்வழி என்று கோட்டை விட்டதும், இடது காலால் அடிக்கப் போய் இன்னொரு பந்தை வெளியால் அடித்ததும் சொதப்பலின் உச்சக் கட்டம். இவரது பாஸ்களும் சொதப்பல் ஒஃப் த இயர். முதலாவது பாதியில் சனியாஸ் அடித்த பந்தும் இரண்டாம் பாதி இறுதியில் தியாகோ அடித்த பந்தும் கோல் கம்பத்தில் பட்டு திரும்ப வந்தது துரதிஷ்டத்தின் உச்சக்கட்டம்.

அது போல் எதிர் பார்த்த அளவு மெஸ்ஸி மற்றும் சனியாஸ் கூட சோபிக்கவில்லை.மெஸியின் தவறு தான் கோல் ஆகிப்போனது குறிப்பிடத்தக்கது.இதுவரை 243 கோல்களை  அடித்திருக்கும்  லியோனல் மெஸ்ஸி செல்சியாவுக்கு எதிராக கோல் ஏதும் அடிக்காமல் சொதப்பிய தொடர்ச்சியான ஏழாவது போட்டி இது. ஆனால் மெஸ்ஸி சில கோலுக்கான உதவிகளை (அஸிஸ்ற்) செய்தார், அதை பம்பிலிமாஸ் சாரி ஃபப்ரிகாஸ் மண்ணாக்கினார்.


நான் முதலில் குறிப்பிட்டது போல நேற்றைய தினம் தாக்குதல் ஆட்டம் ஆடியிருக்க வேண்டிய செல்சியா தடுப்பு ஆட்டம் ஆடியது அல்லது ஆடுவதற்கு நிர்பந்திக்கபட்டது எதுவானாலும் அது பார்சிலோனாவுக்கு கிடத்த முதல் வெற்றி எனலாம். போட்டிக்கு முன்னர் பார்சிலோனாவின் முகாமையாளர் பெப் குவாரியோலா சொன்னது நினைவிருக்கிறதா? "நாங்கள் ஒரு சமநிலைக்கோ அல்லது ஒன்ரு அல்லது இரண்டு என்ற குறைந்த எண்ணிக்கையிலான கோல்களோடோ போட்டியை முடித்து கொள்ளவே போராடுவோம்". இது நியூ கேம்பில் அதற்கு மேலதிகமாக கோல்களை பார்சிலோனா அடிக்கும் என்ற தன்நம்பிக்கையே காட்டுகிறது.

உனக்கு வட போச்சு எனக்கு வாழ்க்கையே போச்சு!


 செல்சியா நேற்று தாக்குதல் ஆட்டம் ஆடியிருந்தால் கூட  இரண்டு கோல்களை போட்டிருக்கலாமா என்பது சந்தேகமே. காரணம் பார்சிலோனாவின் ஆட்டம் அவளவு சிறப்பாக இருந்தது. என்ன தான்  நேற்றைய தினம் செல்சியாவின் பதினொரு வீரர்களும் தடுப்பு ஆட்டத்தில் பிஸியாக இருந்திருந்தாலும் பார்சிலோனா அவர்களது கோல் பகுதில் வாழைப்பழம் போல நான்கு கோல் வாய்ப்புக்கள் உள்ளடக்கமாக பந்துகளை கொண்டுவந்ததை அவர்களால் தவிக்க முடியாது போனது. . செல்சியாவின் மைதானத்திலேயே இந்த நிலை என்றால் எந்த முறையான செல்சியாவின் தடுப்பு ஆட்டமும் பார்சிலோனாவின் மைதானமான நியூ கேம்பில்  பார்சிலோனாவை  தடுத்து நிறுத்துமா  என்பது கேள்வியே!

இதை ஒரு பார்சிலோனா ரசிகனாக் சொல்லவில்லை நேற்றைய போட்டியில் செல்சியாவின் அற்புதமான ஆட்டம் ஒன்றை எதிர் பார்த்து ஏமாந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நேற்ரைய போட்டியின் புள்ளிவிபரங்களையும் , செல்சியா ஆடிய ஆட்டத்தையும் பார்த்த உங்களுக்கெ அது புரிந்திருக்கும்.பந்து கால்களில் இருந்த விகிதம் செல்சியா 20% , பார்சிலோனா 80%. இது நேற்றைய ஆட்டம் பாசிலோனா கைகளில் இருந்ததையே காட்டுகிறது.

20%
Possession
80%
209
Passes attempted
814
159 (76%)
Passes completed (success rate)
757 (93%)
Xavi (134)
Top individual passer
Jon Obi Mikel (32)
4
Attempts on goal
24
1
Attempts on target
6
(source BBC sports 18 April 2010)
  
இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும் முதல் 17/04/2010 நடந்த இன்னொரு அரையிறுதியில் ஃகோம் டீமாக ஆடிய பயன் முனீக் அணி ஒரு மூர்கத்தனமாக, நாங்கள் ஃகோம் டீம் என்ற ஆதிக்கத்தில் பலம் வாய்ந்த மட்ரிட் அணிக்கெதிராக  சிறந்ததொரு  தாக்குதல் ஆட்டம் ஆடி இரண்டு கோல்கள் அடித்தது நினைவிருக்கலாம்.

இரண்டாவது சுற்று அரையிறுதி செல்சியாவுக்கு ஸ்டாம்ஃபோர்ட் பிறிட்ஜ் போல் கடினமானதாக  இருக்க போவதில்லை மாறாக மிகக் கடினமானதாக இருக்கப்போகிறது. அது போல் என்னதான் பார்சிலோனா தனது சொந்த மைதானத்தில் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் , தப்பி தவறி கூட செல்சியா நியூ கேம்பில் ஒரு கோலை போடும் பட்சத்தில் பார்சிலோனா மூன்று கோலகள் அடிக்கவேண்டிய கட்டாயம் உருவாகும். அது கொஞ்சம்  கடினமான பணியாக கூட இருக்கலாம்.

(இந்த பந்தியை ஒரு பொதுவான விமர்சனமாக பார்க்க வேண்டாம், இதை பார்சிலோனா ரசிகனாக எழுதுகிறேன்) ஒரு நடுநிலமையான உதைபந்தாட்ட விமர்சகனாக நான் அது ஒரு கடுமையான பணியாக இருக்கலாம் என கூறினாலும் ஒரு பார்சிலோனா ரசிகனாக , நியூ கேம்பில் பார்சிலோனாவுக்கு மூன்று கோல்கள் என்பது சாதாரணம் என்கிறது உள் மனது. மூன்று என்ன? செல்சியா நேற்று ஆடிய ஆட்டத்துக்கு நான்கே சாத்தியம் என்கிறது பட்சி. நேற்றே நான்கு அடித்திருக்க வேண்டியது! என்ன தான் "பாபா" படம் ஃபிளாப் என்று பொது இடத்தில் ஏற்றுக்கொண்டாலும், ஒரு ரஜினி ரசிகனாக அதை ஏற்றுக்கொள்ளாத மனநிலைதான் இதுவும்.

அது போக எதிர்வரும்  21ம் திகதி பார்சிலோனா , மட்ரிட் அணிகள் மோதும் லா லீகாவின் "எல் கிளாசிக்" ஆட்டம் வேறு வருகிறது. அதன் காய்ச்சல் இப்போதே பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்த வருட லா லீகாவின் ஆரம்ப கட்டத்தில் மட்ரிட்டின் மைதானத்தில் 1 - 3 என்று  மட்ரிட்டை வீழ்த்திய  பார்சிலோனா தங்களது மைதானத்தில் சோடை போகாது என நம்புகிறேன்.

இவ்விடத்தில் , பார்சிலோனா ரசிகனாக , அந்த அணிமீது இருந்த அசாத்திய நம்பிக்கையில், நேற்று செல்சியாவின் மீது பெட் கட்ட இருந்து , என் பேச்சைக்கேட்டு கட்டாமல் விட்டு பண் நஷ்டமான டென்மார்கில் இருக்கும் எனது மச்சான் உஷாந்தன் ஜகநாதனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.அரசியல்ல இதெல்லாம் சாதரணம் அப்பா! ஹி....ஹி...ஹி.....ஹி...

அட! மேற்சொன்ன ஏதாவது எதிர் வரும் 24ம் திகதி நியூ கேம்பில் பிழைத்தும் போகும் பட்சத்தில் மீண்டும் ஒரு உண்மைசொல்லும் பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். அது வரையில் தொடர்ந்து இணைந்திருங்கள். பின்னூட்டம் தாருங்கள்! நன்றி வணக்கம்.ஹி....ஹி...ஹி.....ஹி...யம்மா சகிரா! ஏதோ நீ என்னோட கேர்ள் ஃபிரண்டா இருக்கிறதால அடிக்கடி தோத்து இப்பிடி கட்டிப்பிடி வைத்தியம் வாங்கலாம் போல இருக்கே!


Wednesday, April 18, 2012

பக்கத்து வீட்டில் பாச்சா பலிக்குமா? சூடு பிடிக்கிறது லண்டன்!இந்த பதிவு நேற்று போட்டிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். உதை பந்தாட்ட ரசிகர்களின் திருவிழாவின் இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதுதாங்க யுஏஃபா சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான அரையிறுதிப்போட்டிகள் நேற்று ஆரம்பித்திருக்கின்றது. அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கியிருக்கின்றது. ஒரு முனையில் ஜேர்மனியின் பிரபல அணியான பயன் முனீக்  எதிர் ஸ்பெயினின் ரியல் மட்ரிட் அணிகள் மோத , மறுமுனையில் இங்கிலாந்தின் செல்சியா அணியை ஸ்பெயினின் பார்சிலோன எதிர் கொள்கிறது.

நேற்றைய தினம் பயன் முனீக் அணியின் மைதானத்தில் இடம்பெற்ற முதல் அரையிறுதி  போட்டியில், மட்ரிட் அணியை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முனீக் அணி. இரண்டாவது அரையிறுதி மட்ரிட் அணியின் மைதானத்தில் எதிர்வரும் 23ம் திகதி இடம்பெற இருக்கின்றது.மட்ரிட் அணி தனது மைதானத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய அணி என்பதால் முனீக் அணி இப்போது பெற்றிருக்கும் இந்த தற்காலிக வெற்றியை தக்கவைக்க  சற்று கடுமையாக போராடவேண்டியிருக்கும். ஏற்கனவே முனீக் அணி ஒரு கோல் முன்னணியில் இருப்பதால் பின்வரிசையை சற்று பலப்படுத்தி , தடுப்பு ஆட்டத்தில் ஆடுவது இப்போது பெற்றிருக்கும் தற்காலிக வெற்றியை தக்கவைக்க  பொருத்தமானதாக இருக்கும்.

மாறாக மேலதிக கோல் போடும் அவாவில் அதிகபட்ச தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும் பட்சத்தில் , ரியல் மட்ரிட்டின் ஊடுருவல் தாக்கத்தை தடுக்க முடியாது போய்விடும். பின்வரிசை சற்று அசந்தாலும் சந்து பொந்துகள் கிடைக்கும் போதெல்லாம் சிந்து பாட காத்திருக்கும் கிறிஸ்டியானோ ரொனல்டோ,பென்ஸமா, ஓர்ஸில் ஆகியோருக்கு, பின்வரிசையை பலவீனப்படுத்தி இடம் கொடுப்பது முனீக் அணியை அதால பாதாளத்தில் தள்ளிவிடும்.

முனீக்கின் றிபறி, குரூஸ், ரொபன் போன்றோர் தமக்கு கிடைக்கும் பந்துகளை தவறவிடாமல் கோல் அடிப்பது அவசியம். நேற்றைய தினம் , குரூஸ் கோல் அடிக்கக்கூடிய சில பந்துகளை விரயமாக்கியது குறிப்பிடத்தக்கது. முல்லர், அலபா, குஸ்டாவா ஆகியோரது திறமான ஆட்டம் ரியல் மட்ட்ரிட்டின் மைதானத்தில் அளவுக்கு அதிகமாகவே தேவைப்படும். நேற்றைய போட்டியில் தடுமாறிய ஸ்டிவீன்ஸ்டேஜரது ஆட்டம் இன்னும் மெருகுபடாவிட்டால் , முனீக் அணி, பழுதுபட்ட அணியின் எஞ்ஜினுடன் தூரப்பிரயாணம் செய்யும் வண்டிக்கு சமனாகிவிடும். லாம் தலமையில்  இயங்கும் பின்வரிசை தடுப்பாட்டம் ஓக்கே ரகம் தான். மட்ரிட்டுடனான போட்டியில் கொஞ்சம் ஓவர்டைம் செய்யவேண்டியிருக்கும். 

இவையெல்லாம் சரியாக இயங்கும் பட்சத்தில் தமது சொந்த மைதானத்தில் வேறு இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் ஆடுவதை பார்க்கும் துரதிஷ்டத்தை முனீக் அணி தடுக்கலாம். (சம்பியன்ஸ் கிண்ண இறுதிபோட்டி முனீக் நகரில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.)மட்ரிட் அணியை பற்றி சொல்லவே வேண்டாம், தங்களது சொந்த மைதானத்தில் பின்னி பெடல் எடுப்பார்கள் என நம்பலாம். நேற்றைய போட்டி வெளி மைதான போட்டி என்பதால் கொஞ்சம் அதிக வேலை செய்த மட்ரிட்டின் பின்வரிசை தங்களது சொந்தமைதானத்தில்  கொஞ்சம் ஓய்வு எடுத்து விளையாட சந்தர்ப்பம் கிடைக்கும். 23ம் திகதி போட்டி தனியே கிரிஸ்டியானோ ரொனால்டோ, பெஸ்ஸமா, ஓர்சில்,காகா ஆகியோரின் ஷோவாகவே இருக்கும் என நம்பலாம். 

இதுவரை இடம்பெற்ற யுஏஃபா சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் அதிக தடவை சம்பியனாக வந்த மட்ரிட் அணியும் (9 தடவைகள் , கடைசியாக  2002 இல்), இதுவரை நான்கு தடவைகள் சம்பியனாக  வந்துள்ள முனீக் அணியும் (கடைசியாக 2001இல்) உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தை தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.இப்போது இன்று நடைபெறவிருக்கும் அதிமுக்கியமான போட்டி பற்றி பார்க்கலாம். நடப்பு சம்பியனான பார்சிலோனா அணியும் ( இதுவரை பார்சிலோனா நான்கு தடவைகள் சம்பியனாக வந்துள்ளது,கடைசியாக 2011இல்), இதுவரை கிண்ணமே கைப்பற்றாத செல்சியா அணியும் ( 2008இல் இரண்டாமிடம் மட்டும் கிடைத்தது, சக நாட்டு அணியான மன்செஸ்டர் யுனைட்டட் அணியுடன் பரிதப தோல்வி கிடைத்தது.) செல்சியாவின் மைதானத்தில் மோதுகின்றன. 

செல்சியாவின் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியே இரு அணிகளின் வாழ்வா சாவா போட்டியாக இருக்கும். இரு அணிகளின் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியாக இந்த போட்டி இருக்கும். காரணம் இரண்டாவது அரையிறுதி பார்சிலோனாவின் மைதானத்தில் இடம்பெற இருந்தாலும் அந்த போட்டியில் பார்சிலோனாவின் வெற்றி உறுதி. செல்சியாவால் பார்சிலோனாவை நியூ கேம்பில் வீழ்த்துவது என்பது முடியாத காரியம். தனது சொந்த மைதானமான நியூ கேம்பில் பார்சிலோனாவின் பலம் எப்படியானது என்பது உலகு அறிந்த செய்தி. 

ஆக இன்று செல்சியாவில் இடம்பெறவிருக்கும் இந்த போட்டிதான் செல்சியாவில் ஒரேயொரு அதிகபட்ச நம்பிக்கையாகவிருக்கும். அதே போல் பார்சிலோனாவும் இரண்டோ அல்லது அதற்கு மேலதிகமாக கோல்களை வாங்காமல் பார்த்துக்கொள்ளுதல் அவசியம். காரணம் இரண்டு அல்லது அதற்கு மேலதிகமாக கோல்களை செல்சியா அடித்துவிடும் பட்சத்தில் பார்சிலோனாவுக்கு கஷ்டகாலம் ஆரம்பித்துவிடும். நியூ கேம்பாகவே இருந்தாலும் , இரண்டு கோல்களை முன்னணியில் வைத்துக்கொண்டு பலமான பின்கள வரிசையை கொண்ட செல்சியா தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட தொடங்கினால் மூன்று கோல்களை அடித்து அந்த அணியை வீழ்த்துவது என்பது சற்று கடினமானது என்பதைவிட, இயலாத காரியமாகவே இருக்கும். தனது மைதானத்தில் பார்சிலோனா நிச்சயம் செல்சியாவை வீழ்த்தும், ஆனால் இரண்டுக்கு மேலதிகமாக கோல்கள் இருக்கும் பட்சத்தில், மொத்த கோல் அடிப்படையில் வீழ்த்தமுடியுமா என்பது கேள்விக்குறியே! ஆக மொத்தத்தில் செல்சியாவை விட ஒரு கோல் பின்னணியில் அல்லது  சமநிலையில் போட்டியை முடித்துக்கொள்வதே பார்சிலோனாவின் கிட்னிக்கு நல்லது. அதற்காகவே பார்சிலோனாவும் போராடும் என்பது எனது கணிப்பு, ஒரு கோல் பின்னணி என்பது பார்சிலோனாவுக்கு பெரிய தாக்கமாக இருக்காது. செல்சியாவுக்கு எதிராக தனது மைதானமான நியூ கேம்பில் இரண்டு கோல்களை அடிப்பது என்பது பார்சிலோனாவுக்கு கஷ்டமான வேலையாக இருக்கப்போவது இல்லை.. இப்போது பார்சிலோனா இருக்கும் ஃபோர்மில் இரண்டென்ன மூன்றும் சாத்தியம் தான். அதற்காக செல்சியாவிடம் இன்று இரண்டு அல்லது அதற்கு மேலதிகமாக வாங்கிகட்டினால்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!இப்போது இந்த போட்டியில் இரு அணிகளின் சாதக பாதக  நிலைகளை பார்க்கலாம்.முதலில் செல்சியாவின் பக்கம் போகலாம்.

முதலில் இது செல்சியா அணியின் மைதானம், பழக்கப்பட்ட மைதானம்  ஆர்பரிக்கும் ரசிகர்கள் இவை போதும் ,செல்சியா அவர்களது மைதானத்தில் ஒரு உத்வேகத்துடன் ஆடுவதற்கு, இதுவே அவர்களது முதல் பலம், இது ஒரு சின்ன சைக்காலஜி!

அடுத்து செல்சியாவின் பலம் வாய்ந்த வீரர்கள் வரிசை. டொரைஸ், டிரக்பா, கோல், டெர்ரி, மிகேல், கலோவு, லூகாகு, லம்பார்ட் என்று மிரட்டும் வீரர்களைக்கொண்ட அணியாக இருகிறது செல்சியா! சமீப கால போட்டிகளில் செல்சியாவின் முன்கள வீரர்களது ஆட்டம் பிரம்மாதமாக இருகிறது. கடந்த ஃஎப்.ஏ கிண்ண டோடின்காமுடனான போட்டியில் 5 கோல்கள் அடித்து அசத்தியதை மறக்க முடியாதது.

பார்சிலோனாவின் வயதான புயோல் வகையறாக்கள் நெருங்கமுடியாத வேகத்தில் ஓடும் டிரக்பா, டொரைஸ், மிகேல் ஆகியோர் கூடுதல் பலம், பார்சிலோனாவின் பின்வரிசை சற்றே கண் அசந்தாலும் அந்த செக்கனில் கோல் போடும் அசகாய சூரர்களை கொண்டது செல்சியா. "லம்பார்ட்"  செல்சியாவின் தூண் , முன்வரிசை வீரர்களுக்கு சரியான் முறையில் பந்துகளை பகிர்வதிலிருந்து , சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கோல் அடித்து அசத்தும் அசகாய சூரன். இவர் மீது பார்சிலோனாவின் ஒரு கண் இருக்க வேண்டியது அவசியம்.

 செல்சியாவின் உச்சக்கட்ட பலம் அதன பின்வரிசை தான் என்றால் மிகையாகாது. கோல், டெரி, லுவிஸ் என்று மெஸ்ஸி, பெட்ரோ, ஃபபிரிகாஸ் வகையறாக்களுக்கு சவால் விடும் அளவுக்கு திறமையான வீரர்கள். இவர்களது கண்களில் மண்ணைத்தூவி விடு கோல் போடுவது மெஸ்ஸி வகையறாக்களின் மேலதிக தகமையால் தான் முடியும். கோல் போடனும்ன்னா கொஞ்சம் ஓவர் டைம் பார்க்கணும் பாய்ஸ்!

செல்சியாவின் பலகீனம் என்றால் சற்று வயதான வீரர்கள். சூடான ஆட்டத்தில் ஈடுகுடுக்காத இவர்களது உடல்தகுதிதான் சற்று பிரச்சனைக்குரியது. டெர்ரி, லம்பார்ட், டரகோபா போன்றோர் சிறந்த ஆட்டக்காரர்களாக இருக்கின்ற அதே வேளை வேகமான ஆட்டத்தின் போது இவர்களது பூஸ்ட் இறங்கி விடுவது ஒரு மைனஸ் என்று சொல்லலாம்.


அடுத்து சாபி, இனியெஸ்டா வகையறாக்களை சமாளிக்க ஒரே ஒரு லம்பார்ட் போதாது, இந்த இரு இமயங்களையும் சமாளிக்கும் அளவுக்கு மத்திய வரிசையில்  போதுமான தகுதியான ஆட்பலம் இல்லாமை. இந்த இருவருக்கும் இடம் கொடுக்கும் பட்சத்தில் மெஸ்ஸி அல்லது அலக்சிஸ் கோல் போடுவது உறுதி.

இப்போது பார்சிலோனாவின் பக்கம் வரலாம் பலம் என்று பார்க்கப்போனால் , பார்சிலோனாவுக்கு அதன் வீரர்கள் மட்டுமே பலம். உளரீதியாக எந்த பலமும் கிடைக்கப்போவது இல்லை. ஏனெனில் இது செல்சியாவின் மைதானம். வேண்டுமானால் கடந்த போட்டிகளில் லண்டனில் வைத்து செல்சியாவை வீழ்த்திய ஒரு நம்பிக்கை மட்டுமே ஒரே ஒரு உள ரீதியான நம்பிக்கையாக இருக்கலாம்.

மெஸ்ஸி, சாபி, இனியெஸ்டா, ஃபப்ரிகாஸ், டானி அல்விஸ் ,சேர்ஜியோ, பெட்ரோ, அலக்ஸிஸ், தியாகோ, பீகே போன்ற வீரர்கள் நல்ல ஃபோர்மில் இருப்பது பார்சிலோனாவின் பலம். இனியெஸ்டா + சாபியின் உதவியுடன் மெஸ்ஸி ஒரு கோல் போட்டால் அதுவே பார்சிலோனாவுக்கு போதுமானதாக இருக்கும். ( செல்சியா இரண்டு கோல்களுக்கு மேல் அடிக்காத பட்சத்தில்) இடைவேளையின் பின்பு களமிறங்கும் கொயக்கா, டெல்லொ போன்றோர் தங்கள் பங்குக்கு, தங்களது இளமை துள்ளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அது கூடுதல் பலமாக இருக்கும். ஆனால் டெல்லோ இந்த போட்டியில் ஆடும் சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறேன்.பார்சிலோனாவின் பலவீனம் என்று பார்க்கும் போது முதலாவது வேற்று மைதானம் என்பது தான். அந்த மன உளைச்சலுடன் ஆடுவது சற்று சவாலான காரியம் தான்.

அதைவிட அணிரீதியில் பார்சிலோனாவின் பலகீனம் என்றால் அதன் பின்கள வரிசை தான். அபிடால் புற்று நோய் என்று வைத்தியம் பார்க்க கிளம்பிவிட்டதால், அல்லாடுகிறது பார்சிலோனாவின் பின்வரிசை. இன்று எதிர் பார்க்கப்படும் பின்கள வரிசை புயோல்,அண்ரியானோ, பீகே, டானி அல்விஸ். இதில் இடது பக்க பிகள வீரராக இருக்கும் டானி அல்விஸ் அதிகமான நேரங்கள் இடது பக்க முன்கள வீரர்களுக்கு உதவும் பொருட்டு அவரது பொசிசன் அமைக்கப்பட்டு இருப்பதால் , டிரகோபா, காலோஉ போன்றோர் அந்த பக்கமாக ஊடுருவும் அபாயம்ம் அதிகம். 

அடுத்டு அண்ரியானோ, துடிதுடிப்பான வேகமான பின்கள வீரர், செல்சியாவின் அதிவேகமாக ஓடும் முன்கள வீரர்களை துரத்தக்கூடிய ஒருவர். ஆனால் மனிதர் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதால் மஞ்சள், சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டு வெளியேறும் அபாயம் அதிகம்.

அடுத்து புயோல்,உலகின் தலைசிறந்த சிறந்த பின்களவீரர், அணியின் தலைவர். ஆனால் சிங்கத்துக்கு வயசாகிவிட்டது. சீறி ஓடும் செல்சியாவின் சிறுத்தைகளை துரத்தி அடிக்க வேகம் காணாது. இவரை களமிறக்காமல் அந்த இடத்துக்கு மஸ்கரானோவை களமிறக்குவது உத்தமம்.

அடுத்து பீகே! பார்சிலோனாவின் பின்களத்தில் ஒரேயொரு நம்பிக்கை இவர் தான். இவரும் பல்பு வாங்கும் பட்சத்தில் கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!இப்போது சமீபத்தைய போட்டிகளில் இந்த இரு அணிகளும் சந்தித்துக்கொண்ட போது எத்தனை ஆணிகள் பிடுங்கப்பட்டது என்று பார்க்கலாம்.

21 பெப்ரவரி 2006 பார்சிலோனா வெற்றி 2 - 1 (செல்சியா)
08 மார்ச் 2006 போட்டி சமநிலை 1 - 1 (பார்சிலோனா)
18 ஒக்டோபர் 2006 செல்சியா வெற்றி 1 - 0 (செல்சியா)
31 ஒக்டோபர் 2006 போட்டி சமநிலை 2- 2 (பார்சிலோனா)
28 ஏப்ரல் 2009 போட்டி சமநிலை 0 - 0 (பார்சிலோனா)
06 மே 2009 போட்டி சமநிலை 1 - 1  (செல்சியா)

அடைப்புக்குள் இருப்பது போட்டி நடந்த மைதான அணி அது தாங்க ஃகோம் டீம்.

இந்த தரவுகளின் அடிப்படையில் இரு அணிகளும் சம பலம் கொண்டிருப்பதையே காட்டுகின்றது. ஒரு சின்ன முன்னேற்றம் மட்டுமே மாற்றமாகியிருக்கின்றது. அதாவது இந்த போட்டிகள் இடம்பெற்ற காலப்பகுதிகள் 2006 - 2009 வரையானதாகும். இக் காலப்பகுதியில் செல்சியாவின் பலம் ஓங்கி இருந்தது நிதர்சனம். ஆனால் 2010 உலக கிண்ண போட்டிகளின் பின்னர் பார்சிலோனாவின் பலமானது சற்று அதிகரித்திருக்கிறது. 2010 உலக கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின் அணியின் அனேக வீரர்களை தன்னகத்தே கொண்டிருக்கும் பார்சிலோனா அணி உள ரீதியிலும் , வீரர்களின் செயற்திறனிலும் கூடுதல் பலம் பெற்றிருக்கிறது. இதை 2010,2011,2012 சீசன்களில் பார்சிலோனாவின் சாதனைகளை வைத்தே கூறிவிடலாம்.

ஆக இன்று சமபலம் கொண்ட உலகின் தலைசிறந்த இரு அணிகள் மோதுகின்றன. இன்று எதிர் பார்க்கும் கோல் விபரம். 
(1,1) அல்லது 
(2,1) செல்சியா வெற்றி.

24ம் திகதி பார்சிலோனாவின் மைதானமான  நியூ கேம்பில் எதிர் பார்க்கப்படும் கோல் விபரம்
(2,0) பார்சிலோன வெற்றி
அல்லது
(3,1) பார்சிலோனா வெற்றி

இன்றைய போட்டி இலங்கை , இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15கு ஆரம்பமாகிறது. இலங்கை மற்றும் இந்தியாவில் டென் அக்ஷன் அலைவரிசையில் போட்டியை பார்க்ககூடியதாக இருக்கும். ஒன்லைனில் போட்டியை காண்பதற்கு www.livetv.ru/en என்ற இணையத்துக்கு செல்லுங்கள்.

உங்களது கருத்துக்களை தயவுசெய்து பின்னூட்டமாக இடுங்கள்
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...