உதைபந்து

Friday, October 19, 2012

விபச்சாரத்துக்கு முன் அனுபவம் தேவையா? - பிச்சைகாரன் வாந்தி!
இரண்டு பிரபல பதிவர்கள்  சந்தித்துக்கொண்டால் .......

மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? : "இவனுகள் எப்ப பாரு சினிமாவ பத்தியே பேசுவானுகள்."

பொண்ணுங்க என்ன நினைக்கிறாளுக? : "ஏதோ சீரியசா பேசுற மாதிரி பில்டப்பு குடுத்து நம்மளத்தான்டி ஜொள்ளு ஒழுக பாக்குறானுக"

வீட்ல இருக்கிறவங்க என்ன நினைப்பாய்ங்க? : " விடிஞ்சா பொழுதுபட்டா இதே பொழப்பு, கண்ட கண்ட எழவ கதைக்கிற‌துக்கு ஒரு மீட்டிங்கு

வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள்? : "மச்சி !!! யாரோ இன்னொருத்தன கய்வி ஊத்துறதுக்கு பிளான் பண்ணுறாய்ங்கடா"

ஆனால் உண்மையில் என்ன பேசுவார்கள்? : அமேரிக்க அரசியலின் ஸ்திரத்தன்மை, ஒபாமா பதவியில் இருக்கலாமா வேண்டாமா? வட அமெரிக்க நாடுகளின் பொருளாதரத்தை தூக்கி நிறுத்த என்ன பண்ணலாம்? சமந்தா உண்மையில் அழகா இல்ல மேக்கப்பா மச்சி? கேத் மிடில்டனுக்கும் வில்லியமுக்கும் செட்டாகும்ங்கிற?

நீதி : பிரபல பதிவர்கள் ஒரு பின்நவீனத்துவமாய் சிந்திப்பவர்கள். ஒபாமா ஆட்சியில் இருக்கிறதும் இருக்காதும் அவரோட இஷ்டம், எங்கட பேச்சக்கேட்டு அவரு பதவி விலகி சோத்துக்கு சிங்கியடிசா.... அதுக்கு சங்கம் பொறுப்பாகாது.

# கொழும்பு முத்தமிழ் விழாவில் சந்தித்துக்கொண்ட சில பதிவர்கள்.

********************************************************************************


கிரிக்கட்டில் நடனம் ஆடும் பெண்கள் மொக்கையா இருந்தால் அவர்கள் முதற்கொண்டு அரசாங்கம் வரை திட்டி தீர்க்கிறோம். இன்று அழகுப் பதுமைகளாக ஏழெட்டு பெண்கள் ஆடி முடித்து போய்விட்ட பின்னர் அவர்கள் ஆடிச்சென்றது பரதமா , கதகளியா , குச்சிப்புடியா, டப்பாங்குத்தா என்று கூட தெரியவில்லை. அவர்கள் முகம் மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது. ஓவர் அழகாக இருந்தாலும் மனம் நடனத்தில் லயிக்குதில்லை!

#மானம் கெட்ட மனது! 


*********************************************************************************"ஒரே பெண்ணை இருவர் காதலிப்பதால் ஏற்படும் முரண்பாடுகளால் மோதிக்கொள்ளும் இளைஞர் குழுக்கள் கூட, மேடையில் ஒருவர் நின்று , உரையாற்றுகிறேன் பேர்வழியென்று அறுத்துக்கொண்டு இருந்தால் அவரை அவரது பேச்சின் இடைநடுவில் கைதட்டி வழியனுப்பி வைக்கும் சுப காரியத்துக்காக ஒன்று கூடி விடுகின்றார்கள்.

# கொழும்பு முத்தமிழ் விழா அனுபவம்

*********************************************************************************


நான் : தல! நானும் இந்த ரோட்ல தான் காலா காலமா சுத்துறேன், ஆனா இப்போ இந்த மேடையில ஆடுற அழகிகளை கண்டதே இல்லையே

விருது நாயகன் : சத்தியமா பாத்திருப்ப ......... ஆனா அழகிகள் என்று நினச்சிருக்க மாட்ட......

நான் : ஓ! சமந்தாவின் சகோதரிகள்.........

# இது ஒண்ணும் பின்னவீனத்துவ உரையாடல் கிடையாது. எல்லாம் ஃபுல் மேக்கப்புன்னு சொன்னேன்.*********************************************************************************"எனது தோல்விகளின் போதும், தடுமாற்றங்களின் போதும் நீங்கள் என்னுடன் கூட இருக்கவில்லையெனில், எனது வெற்றிகளின் போதும் என்னோடு கூட இருப்பதற்கு எதிர் பார்க்காதீர்கள். "

_இது வில் ஸ்மித் சொன்னது_

"நீ ஒரு அட்டுப்பிகரு போகும் போது கூட என்னிடம் அதை காண்பிக்காமல் ரகசியமாக பார்த்திருப்பாயானால், ஒரு சூப்பர் ஃபிகர் தெருவில் போகும் போது உன்னை சுரண்டி அவளை நான் காண்பிப்பேன் என நினைக்காதே."

_இது பதிவரு சொல்றது_

*********************************************************************************

"கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை யுத்தக்குற்றங்களுக்கு இணையான கண்ணோட்டத்துடன் சர்வதேசம் அணுகவேண்டும்."

_ஐ.நா. சொன்னது_

"க்கும்..... இங்க நடந்த யுத்த குற்றத்துக்கே சர்வதேசம் இன்னமும் ஒரு முடிவை கண்டபாடில்ல.. இதுக்குள்ள இது வேற‌.........""

_பதிவரு சொல்றது_*********************************************************************************கொழும்பின் கொம்பனித்தெரு 99 வருட குத்தகையின் கீழ் இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதற்காக வேண்டி  எட்டு ஏக்கர் பரப்பளவான பகுதியின் கீழ் குடியிருந்த 456 குடும்பங்கள் அந்த பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டும், அந்த பரப்பு முழுவதும் அரசுடமையாக்கப்பட்டு இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டுள்லது. துரத்தப்பட்ட மக்களுக்கு வெகு சீக்கிரத்தில் மாற்றிடங்கள் அதாவது இரண்டு வருடங்களில் மாற்றிடங்கள் அமைத்துக்கொடுக்கப்படுமென அரசு அறிவிப்பு. ( அது வரைக்கும் மக்கள் அனைவரும் தம்பனை மற்றும் வில்பத்து காடுகளில் வேடுவர்களோடு வாழவர் என எதிர்பார்க்கப்படுகிறது)

# செய்தியை படித்து விட்டு தூங்கிப்போனேன். கொழும்பில் வாழும் மக்கள் அனைவரினதும் கிட்னியை சீனாவுக்கு இலங்கை அரசு விற்றுவிட்டதாக கனவு வந்தது. உடனே செய்தியை பாக்கணும் , கனவுதானா இல்ல அதுவும் நடந்திருச்சான்னு பாக்க.

*********************************************************************************

உலகில் இந்த ஒரு தொழிலில் மட்டும் தான் அதிக தொழில் அனுபவம் உள்ளோருக்கு குறைவான ஊதியமும், குறைவான தொழில் அனுபவம் உள்ளோருக்கு அதிக ஊதியமும் கிடைக்கிறது. ஏனைய தொழில்களில் நேர்மாறான நிலை தான் இருக்கிறது.

# விபச்சாரம்

_என்னோட இன்றைய ஃபேஸ்புக் ஸ்டேடஸ்_

*********************************************************************************

எனக்கு உயிர்களை கொன்று பசியாற வேண்டும் என்ற எந்த எண்ணமும் கிடையாது. காட்டுப்பன்றி இறைச்சியும், கணவாயும், ஆட்டிறச்சியும் மரத்தில் காய்க்குமாக இருந்தால் வெஜிடேரியனாக இருப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது.

_என்னோட இன்றைய ஃபேஸ்புக் ஸ்டேடஸ்_*********************************************************************************


சைவ உணவுகள் அசைவ உணவுகள் தொடர்பில் எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு வாதம் போய்க்கொண்டிருந்தது. சில மணிநேர வாதத்துக்கு பின்னர் .......


" சேவல் மூலம் உற்றத்தியாகாமல் , ரசாயனங்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் கோழி முட்டைகளை சைவத்துக்குள் சேர்த்து உண்ணலாம் என்று சொன்னேன்.

அது எப்படி சைவமாகும் என்றான்.

அந்த முட்டையால் எந்த உயிரையும் உற்பத்தி செய்யமுடியாததால் , அதாவது அதன் சந்ததியான கோழி குஞ்சை பிறப்பிக்க  முடியாததால் அதனை சைவத்துக்குள் சேர்த்து உண்லாம் என்று சமாளித்து அனுப்பி வைத்தேன்.

சில நாட்களின் பின்னர் ஒரு சைவ விருந்து உண்ண என்னை வீட்டுக்கு அழைத்திருந்தான். எனக்கும் சைவத்துக்கும் சுத்தமாய் ஆகாது. ஆனாலும் நண்பன் அழைக்கிறான் என்று போயிருந்தேன். கண்டிப்பாக அந்த சைவ முடை விருந்தில் இருக்கும் என்று எனக்கு தெரியும்.

சைவ விருந்து என அழைக்கப்பட்ட எனக்கு ஆச்சரியம். என் உணவு தட்டு பூராவுமே ஊர்வன , பறப்பன, நகர்வன எல்லாம் செத்து கிடந்தது. 

எல்லாம் சைவம் தான் சாப்பிடு என்றான் நண்பன். 

எப்பிடிடா என்றேன் நான். 

அது ஆம்பிள நண்டு, அது ஆம்பிள ஆடு, அது ஆம்பிள மாடு, அது ஆம்பிள கணவாய் எல்லாமே ஆம்பிள மச்சி! எதுவுமே குட்டி போடாது, இனத்தை உற்பத்தி செய்யாது, சுத்த சைவம் சாப்பிடு மச்சி என்றான்.

அவனின் அறிவுத்திறனை வியக்கும் அளவுக்கு எனக்கு அவகாசம் இருக்கவில்லை. என் கவனம் பூராவுமே அந்த நண்டின் காலை உடைத்து உள்ளே தள்ளுவதிலேயே இருந்தது.டிஸ்கி : நண்பா ஹாரி! உன்னோட கதை ஞாயிறு விசேட வெளியீடாக வெளிவரும்.


Tuesday, October 16, 2012

இங்கிலீஷ் விங்கிலீஷ்! ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு ஃபீல் குட் படம்!
தியேட்டர் போய் படம் பார்த்து நிறைய நாளாகிவிட்ட படியால் படம் ஒன்று பார்க்கலாம் என்று கடந்த திங்கட் கிழமை கிளம்பினேன். என்னால் தெரிவு செய்யப்பட்ட படம் தான் இங்கிலீஷ் விங்கிலீஷ். அந்த படத்துக்கு போனதற்கு மூன்று காரணங்கள். ஒன்று எனக்கு சமீபத்தில் இருந்த திரையரங்கான கொன்ங்கொட்டில் அந்த படம் ஓடியது, இரண்டு மாற்றான், தாண்டவம் தொடர்பில் எனக்கு கிடைத்த எச்சரிக்கைகள், மூன்று இது மிக முக்கியமானது அதாகப்பட்டது , படம் வெளிவருவதற்கு முன்னமே " ஆங்கிலம் தெரியாமல் ஒரு குடும்ப பெண் படும் அவஸ்தைகள்" என்ற ஒன்லைன். தக்காளி ! அரமேயம் தெரியல, உருது தெரியலன்னு எவனாவது அழுதானா? இந்த இங்கிலீஷுக்கு கொடி பிடிச்சு படம் மட்டும் இருந்தா ஸ்ரீதேவியை துவச்சு தொங்கப்போடுறது என்ற திட்டம் தான் மிக முக்கியமான முனைப்பாக இருந்தது.


சென்றேன் , பார்த்தேன் ஆனால் படம் என் எதிர் பார்ப்புக்கு மாறாக இருந்தது. இந்த வருடத்தின் தமிழ் சினிமாவை நம்பி நான் செலவழித்து ஏமாந்த பல நூறு ரூபாய்கள் போல் அல்லாமல் கொடுத்த காசுக்கு திருப்தியான , அதே நேரம் நிறைவான ஒரு படம். ஒளிப்பதிவு அப்படி, இசை அப்படி , எடிட்டிங் மொக்கை, நடிப்பு ஓக்கே என்று எழுத எனக்கு சுத்தமாய் விருப்பமில்லை. படம் முழுக்க நமக்கு மெச்செஜ் ஏதோ சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கயில் , படத்தின் தொழினுட்ப குறை நிறைகளை பற்றி யோசித்துக்கொண்டிருக்க நேரம் இருக்கவில்லை எனக்கு.


எங்கடா ஆங்கிலத்தின் புகழ் பாடி எனக்கு கடுப்பேத்தி விடுவார்களோ என்று பயந்துகொண்டிருக்க, அந்த மாதிரி ஒரு கதை களத்தை வைத்துக்கொண்டு  , இந்த நவீன இயந்திர உலகில் மாறிவரும் மனிதர்கள் மத்தியில் என்று மாறிவிடாத ஒரு பொறுப்பான குடும்ப தலைவியினதும் , பாசமான தாயினதும் பாசப்போராட்டத்தை சொல்லிப்போயிருப்பது படத்தின் பெரிய பலம்.


படம் வெளியாகி பலநாட்கள் ஆகிவிட்ட படியால் கதை களத்தை சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமிருக்காது என்று நினைகிறேன். ஆங்கிலம் தெரியாமல் ஒரு குடுபத்தலைவி படும் பாடு என்ற ஒன்லைனை மட்டும் கௌதம் மேனனிடமோ ,முருகதாசிடமோ குடுத்திருந்தால் அவர் ஆங்கிலத்திலேயே பாத்திரங்களை பேசவிட்டு ஒரு எங்கிலிஷ் படம் எடுத்திருப்பார், இவர் எவனாவது துருக்கியனை காட்டி தமிழன் என்று உங்களுக்கு மிஸ்பா உல் ஹக் தமிழர் என்று தெரியுமா என்று அலப்பரையை கூட்டியிருப்பார்கள். ஆனால் இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் ஒரு குடுபத்தலைவியின் பாசப்போரட்டத்தை காட்டியிருக்கும் இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.


படத்தில் காட்டப்பட்டிருக்கும் பல விடயங்கள் யோசிக்கவைப்பவை, ஒரு பிள்ளையாக அம்மாவின் உணர்வுகளையும் , ஒரு பிஸியான கணவனாக தனது மனைவியின் உணர்வுகளையும் நம்மில் எத்தனை பேர் மதிக்கின்றோம்? எத்தனை பேர் அது பற்றி யோசிக்கின்றோம்? 


இந்த கால டீன் ஏஜ் பிள்ளைகளின் உலகத்தோடு ஒன்றித்துப் போய் அவர்களுடன் மேலும் நெருக்கமாக , பாசப்பிணைப்புடன் இருக்க ஏங்கும் தாயாக வரும் ஸ்ரீதேவின் ஏக்கம் தற்கால தாய்மார்களில் பலருக்கு இருப்பது நிதர்சனம். என்ன செய்தாவது தன் பிள்ளைகளோடு அன்னியோன்யத்தை பேண ஏங்கும் தாயின் உணர்வும், அதற்கு விலையாக அவமானத்தையும், அசட்டு தனத்தையும் மட்டுமே பரிசாக தரும் வாலிப வயதுகளையும் கண்கூடே அன்றாடம் காண்கின்றோம்.முடிந்த வரை சுதந்திரம் கொடுப்பது, தனது பிள்ளையின் புகழை இன்னொருவர் பாடுகையில் புழங்காகிதம் அடைவது என ஸ்ரீதேவி இந்த கால நல்ல ஒரு தாயாக வாழ்ந்திருக்கிறார்.


மனைவி என்ன் யோசிக்கிறாள்? அவளது உணர்வுகள் என்ன ? என்பது பற்றி அறியாமல் வேலையே சரணம் என்று கிடக்கும் கணவ்ன்களை யோசிக்க வைக்கின்ற ஒரு படம். இந்த காலத்தில் காதலித்து கல்யாணம் செய்துகொண்டவுடன் பல ஆண்கள் காதலிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். பொருள் ஈட்டினால் போதும் என்ற அவர்களது மனநிலையில் , அன்புக்காகவும், சரியான மரியாதை + கரிசனைக்காக ஏங்கும் ஒரு மனைவியின் நிலைமை நிதர்சனமாக காட்டப்பட்டிருக்கிறது.


"முக்கியமான மீட்டிங் வந்திருது" என்ற கணவனின் பதிலுக்கு "இப்பெல்லாம் நான் முக்கியமில்லாம போய்ட்டன் இல்ல" என்ற பதில் சாட்டயடி. அது போல சக பெண் தோழியை தோழமையுடன் கட்டிப்பிடித்த கணவனை செல்லமாக அதட்டும் போது " அது ஒரு அன்னியோன்ய கட்டிப்பிடிப்பு தான் வேற ஒண்டும் கிடையாது" என்று கணவன் சொல்ல "நாம ரொம்ப அன்னியோன்யமா இருக்கிறோமோ? அது தான் என்னை கட்டிப்பிடிப்பதில்லையா? " என்ற ஸ்ரீதேவியின் நியாயமான கேள்விக்கு இங்கே பதில் சொல்ல வேண்டிய நிலையில் நிறைய கணவன்கள் இருக்கிறார்கள்.


மனைவியை பாராட்டுவதையே நம்மாளுகள் ஒரு ஈகோவாக நினைத்து , பிறகு மனைவியின் உண்மையான அன்புகும் கரிசனைக்கும் மரியாதை கொடுக்காமல் அவளை ஒரு வேலைக்கார இயந்திரமாக நினைத்து காதலை கோட்டை விட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இந்த இடத்தில் தான் வெள்ளைக்காரன் சிக்ஸர் அடித்துவிட்டு போகிறான். ஸ்ரீதேவின் கணவனும் ஸ்ரீதேவியின் ஆங்கில வகுப்பு தோழனாக வரும் பிரஞ்சுக்காரனும் இந்த இரண்டு பாத்திரங்களின் தக்க உதாரணங்கள்.


ஸ்ரீதேவின் ஆங்கில வகுப்பு கலகலப்பு, அந்த வகுப்பிலுள்ள ஒவ்வொரு பாத்திரமும் கொஞ்ச நேரமே காட்டப்பட்டாலும் உலகின் ஒவ்வொரு மூலையிலுமுள்ள மனிதர்களை பேசுகிறது. அதிலும் அந்த ஆபிரிக்கன் " நானும் ஒரு gay தான் " என்னும் இடம் எந்த வித உறுத்தலுமே இல்லாமல் மனதுக்குள் போய்விடுகிறது. ( உலகம் வளந்திட்டுதோ?)


தன் பிள்ளைகளிடம் நல்ல பேர் வாங்க ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும் ஸ்ரீதேவி அதுவே தன்னை குடும்பத்திடமிருந்து தூர கொண்டுபோகிறது என தெளியும் போது  மனம் வருந்து ஆங்கில வகுப்பை துறப்பது தாயுள்ளம்.


தல அஜித் வரும் அந்த மூன்று நிமிட காட்சியும் சொல்லி மாளாது, பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. அவ்ளோ அருமை, கலகலப்பு. 


"அமேரிக்காவை காப்பாத்த வந்திருக்கேன்" ," இந்த இங்கீஷை பாத்து பயப்பிட வேண்டாம்" இப்படியாக தல பேசும் ஒவ்வொரு வசனமும் நச்.காட்சிக்கு காட்சி கவிதை, அனைத்து நடிகர்களினதும் கைதேர்ந்த நடிப்பு சொல்லவருவதை தெளிவாக சொல்வதற்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாக அந்த சுட்டி பையன், ஸ்ரீதேவியின் மாமி, மௌனுமாகவே காதல் மொழி பேசும் அந்த பிரஞ்சுக்காரர் உட்பட அனைவருமே கைதேர்ந்த நடிப்புக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.


படத்தில் மூன்று துருத்தல்கள்.

ஒன்று ; ஸ்ரீதேவியின் மூக்கு. இவவுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை, நல்லாத்தானே இருந்திச்சு, முகத்துக்கும் மூக்குக்கும் சம்மந்தமே கிடையாது, ரெண்டும் வேறு வேறு திசைகளில் நிற்கின்றன. ( விருது நாயகன் மைந்தன் அவர்களே மன்னித்து அருள்க!)


இரண்டாவது : எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே நம்மாளுகள் பின்பற்றும் பாணி, அதாவது தான் படித்தவன் என்று காட்டிக்கொள்வதற்கோ அல்லது தனது இமேஜை உயர்வாக காட்டிக்கொள்வதற்கோ ஆங்கிலத்தில் பீத்தியடிப்பது. அதே கதை தான் இங்கேயும் தனது பிள்ளைக்கும், கணவனுக்கும்  ஆங்கிலத்தில் பேசித்தான் அன்பை புரிய வைக்கிறார் ஸ்ரீதேவி. அப்போ ஆங்கிலத்துக்காகத்தான் அவர்கள் இவரை நேசிப்பார்களா? ஆக மொத்தம் இவர்களுக்காக விழுந்து விழுந்து எவ்வளவோ செய்தும் ஆங்கிலத்தில் பேசியதும் அன்பு வந்து விடுகிறமாதிரி காட்டப்படிருப்பது .. ரொம்ப ச்சாரி.......  ( ஆங்கிலப்படங்களில் இப்படியொரு கதை காட்டப்பட்டிருப்பின் கடைசிவரைக்கும் அவர் ஆங்கிலம் கற்காமலே இருப்பார் , ஆனால் அந்த முயர்சியின் போது ஏற்படுகின்ற பாசத்தில் அவர்கள் குடும்பம் அவர்களை நேசிப்பது போல் காட்டப்பட்டிருக்கும். அப்படியான  உதாரணம் : டியர் ஜோன், லையர் லையர் )


மூன்றாவது : திருமண விழாவில் தப்பி தப்பி விழுங்கி விழுங்கி ஆங்கிலம் பேசும் ஸ்ரீதேவி , அடுத்த நாள் விமான பயணத்தில் நல்ல ஆங்கிலத்தில் தெளிவாக பேப்பர் கேட்பது எப்படி?


என்ன இருந்தாலும் அனைவரும் கட்டாயம் குடும்பத்துடன் , குறிப்பாக பிஸியான கணவன்கள் மனைவியுடனும் , டீன் ஏஜ் வயதினர் தங்கள் அம்மாவுடனும் இருந்து பார்க்க வேண்டிய அருமையான படம். 
**************************************************************************

மரணம் துரத்துகிறது : அதாகப்பட்டது , ஹாரியின் யுத்தம் ஆரம்பம் தொடரின் அடுத்த பாகத்தை நான் தான் எழுதுகிறேன். கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. முற்றாக முடிந்ததும் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும். சாவதற்கு தயாராய் இருக்கவும்.Tuesday, October 9, 2012

கொழும்பில்...நாரேஹேன் பிட்டியவில்.... நடுச்சாமத்தில்.....!!!


*இந்த பதிவை  கடந்த பதிவின் தொடர்ச்சி என்று கூட வைத்துக்கொள்ளலாம்நாரேஹேன் பிட்டி சந்தியிலுள்ள சமிக்கை விளக்கில் எரிந்துகொண்டிருந்த சிவப்பு நிறத்தை பார்த்தபடி எங்களது பேரூந்து நின்றுகொண்டிருந்த போது நேரம் சரியாக நள்ளிரவு 12.47........... சுத்தமாய் தூக்கம் வரவில்லை . காரணம் இரண்டு.... ஒன்று அன்றிரவு அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அடைந்த சுவாரசியமான வெற்றி, மற்றது முல்லைத்தீவு கடற்கரை சம்பவத்தை வைத்து இன்னமும் என்னை காய்ச்சி எடுத்துக்கொண்டிருந்த பேராசிரியர் ஃபெர்னாண்டோவின் தொணதொணப்பு.


எந்த அமைச்சரும் வராத அந்த நள்ளிரவு நேரத்தில் கூட , அமைச்சர்களின் பாதுகாப்புக்கான அதிரடிப்படை வண்டி ஒன்று அசுரகதியில் எங்களை கடந்து சென்றது சமிக்கை விளக்கில் கூட நிற்காமல். இப்படி போய் தான் ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனம் ஒன்று ரத்மலானையில் ஒரு அப்பாவியின் மீது ஏறி கொன்று போட்டது, இப்போது இங்கே...... யாருமே இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆத்தூறீங்கன்னு நினைத்துக்கொண்டேன். சமூகத்தின் மீது அக்கறை படும் நிலையில் நான் இல்லை...... 


பேரூந்து புறப்பட ஆய்த்தமானபோது தான் தோழி ஈஷி வந்தாள்.... தான் இங்கேயே இறங்கிவிட போவதாக ஓட்டுனருடன் பேசிக்கொண்டிருந்தாள். சற்றைக்கெல்லாம் அவளின் அப்பா ஒரு ஹுண்டாய் ரக காருடன் எங்கள் பேருந்தை நோக்கி வந்து சேர்ந்திருந்தார்.

பேராசிரியர் என்னை பார்த்தபடி தொடர்கிறார்.

"கிஷோகர்... போற வாற இடத்தில் எல்லாம் இந்த மாதிரி நடந்து கொண்டால் உனக்கு மட்டுமில்ல, நம்மோட கம்பஸுக்கும் தான் கெட்ட பேர்"


தலையை குனிந்தபடி நரேஹன்பிட்டி சந்தியில் வீடு போவதற்காக இறங்கிக்கொன்டிருந்த தோழி ஈஷியை பார்த்துக்கொண்ட்டே மௌனமாயிருந்தேன்.  பைகளை எல்லாம் அப்பாவின் காரில் ஏற்றிவிட்டு போய்ட்டு வாரேன் என்று அவள் கையசைக்கவும் அந்த பயங்கரம் நடக்கவும் சரியாய் இருந்தது.


ஒரு கண்டெய்னர் லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்து எங்கள் பேரூந்தை பக்கவாட்டாக மோதியது. ஒரு ரெண்டு அடி பக்கவாட்டில் தூக்கப்பட்டு தள்ளப்பட்ட எங்கள் பேரூந்து இடது புறமாக சரிய ஆரம்பித்தது. பஸ்ஸினுள் எழுந்த ஓலத்தில் மரண பயம் தெரிந்தது. பக்கவாட்டில் சரிந்த பேரூந்து அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி மீண்டும் இயல்புக்கு வந்தது. இவ்வலவும் நடந்தது இரண்டு மூன்று செக்கண்டுகளுக்கும் குறைவான நேரத்தில் தான். 


பேருந்தின் நடத்துனரும், பேராசிரியரும் முன்னால் சிக்னலில் மாட்டியிருந்த லாரியை மடக்குவதற்கு ஓடினார்கள்.


பேரூந்தினுள்ளே விரிவுரையாளர் ஷாலினியும் , கனிஷ்கவும் சேத நிலவரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். நான் முதலில் என்னை சோதித்துகொண்டேன். நடந்த த‌ள்ளுமுள்ளில் எங்கோயோ ஒட்டியிருந்த கிரீஸ் என் சட்டையை அழுக்காக்கி இருந்ததை தவிர வேறு சேதமில்லாததால் சமூக சேவைக்கு கிளம்பினேன். 


நதீஷவின் கைவிரல்கள் மடங்கியிருந்தது, டானியாவுக்கு நெத்தியில் அடிபட்டு லேசாக புடைக்க ஆரம்பித்திருந்தது,சஞ்சயவில் மூக்குகண்ணாடியில் மூக்கு மட்டும் தான் இருந்தது கண்ணாடியை காணோம், இடதுபக்க ஜன்னலோரமாய் இருந்தவர்கள் அனைவருக்கும் தோள்களில் இரண்டு மூன்று மூவ் தடவுமளவுக்கு வலி போக ரத்தப்பலி ஏதும் கிடையாது.இடதுபக்க கண்ணாடி நாலைந்து போச்சே என்று ஓட்டுனர் கவலைப்பட்டார், தான் கடற்கரையில் சேர்த்த சிப்பிகள் காலில் மிதிபட்டு நொறுங்கிப்போச்சே என்று திலினி குறைப்பட்டுக்கொண்டிருந்தாள். அவனவனுக்கு அவனவன் கவலை!

நான் வெளியே எட்டி மோதியிருந்த மின்கம்பத்தை பார்க்கிறேன், அது படுமோசமாக உடைந்திருந்தது. சரி விடு..... அது நாளை காலை மின்சார சபையின் கவலை!


ஆனால் அந்த கம்பம் மட்டும் இல்லை என்றால் எங்களில் சிலருக்கு காலையில் கம்பு கட்டவேண்டி வந்திருக்கும்.

பஸ்ஸினுளே நிலமையை ஆராய்ந்த பின்னர் வெளியே எங்களை அடித்த லாரியை நோக்கி எங்களது கவனம் திரும்புகிறது.

பேராசிரியரும் , நடத்துனரும் அந்த லாரி ஓட்டுனரை வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வருமாறு அதட்டிக்கொண்டிருக்கின்றனர். இப்போது விளக்கு பச்சையாய் எரிகிறது, அவன் இவர்கள் யாரையும் சட்டை செய்யாமல் வாரியை கடுகதியில் கிளப்பிக்கொண்டு மறைகிறான்.


எங்கள் பேரூந்தின் முன்னால் நின்ற தனது காரை எடுத்துக்கொண்டு எங்களை பின்தொடருமாறு கூறிவிட்டு ஈஷியின் அப்பா அந்த லாரியை சேஸ் செய்ய தொடங்குகிறார்.


பேரூந்தின் வேகம் நூறைத்தொடுகிறது. அந்த சாமத்தில் யாருமில்லாத வீதியில் அந்த மாதிரியான ஒரு சேசிங் ஏதோ கொஞ்சம் சுவாரசியமாகத் தான் பட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை லாரியும் இல்லை, ஈஷியின் காரும் இல்லை. ஐந்துநிமிட சேசிங்கின் பின்னர் நரேஹேன் பிட்டி சுப்பர் மார்க்கெட்டின் முன்னால் அந்த லாரி நிற்கின்றது. லாரியின் முன்னே குறுக்காக ஈஷியின் கார் நிறுத்தப்பட்டிருக்கிறது.


பக்கவாட்டில் வேகமாக வந்து , குறுக்காக நிறுத்தி பிரேக் போடப்பட்டிருக்கிறது என்பதை தேய்ந்திருந்த காரின் தடம் பதிந்த வீதி சொல்லியது.


காருக்குள் இருந்து ஈஷியின் அப்பா மிகுந்த கோவத்தோடு கதை திறந்தபடி வெளியே வந்தார். என் ஃபோனில் மங்காத்தா தீம் சற்றுமுன் தான் ஒலித்து ஓய்ந்திருக்க , இப்போது இளையராஜாவின் 'ஆயிரம் மலர்களே" போய்க்கொண்டிருந்தது. கொஞ்சம் முன்னாடி விபத்து நடந்திருக்கலாம்...... இது சந்தர்ப்ப சதி வேறு என்ன சொல்ல?


ஈஷி மென்மையானவள். முறைத்து பார்த்துக்கொண்டு அவள் பெயரை உச்சரித்தால் கூட அழுதுவிடும் சுபாவம் கொண்டவள். ஆனால் அவளது அப்பா எதிர் மாறாய் இருந்தார். நரைக்காத முடி, கட்டுமஸ்தான் உடல் கட்டம் போட்ட சட்டையும் , அரைக்காற்சட்டையுமாக ஒரு எடுப்பில் பார்ப்பதற்கு மேர்வின் சில்வா போலவே இருந்தார். அவரது கோபம் கூட அந்த மாதிரியே இருந்தது. ஆனால் அது நியாயமான கோபம்.....


அவரும் நாங்களும் பேராசிரியருமாய் அந்த நடத்துனரை வண்டியை விட்டு கீழே இறங்குமாறு அதட்டிக்கொண்டிருந்தோம். எங்களில் ஆண்கள் மட்டுமே சுமார் பத்திற்கும் அதிகமாய் இருந்தோம். அது போக ஈஷியின் அப்பா வேறு கொஞ்சம் பல்க்காக இருந்தார். 


அந்த லாரியின் முகத்தில் பய ரேகை ஓடியது நன்றாகவே தெரிந்தது. வண்டியை விட்டு கீழே இறங்கினால் தனது அங்கத்தில் ஆங்காங்கே கட்டுப்போட வேண்டி வரும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. பொலிஸ் வந்தால் ஒழிய வண்டியை விட்டு நான் இறங்க மாட்டேன் என்று அவன் அடம்பிடித்தான்.

உம்ப பஹினவாத நத்த? ( நீ இறங்கிறியா இல்லையா?)

நண்பன் நதீஷ கேள்வியை கேட்டது அவனது பதிலுக்காக அல்ல..... எங்கிருந்து கொண்டுவந்தானோ தெரியாது, கையில் இருந்த ஒரு இரும்பு கம்பியால் அந்த லாரியின் ஹெட் லைட்டில் ஒரே போடாய் போட்டான். 

"சளீர்"..... அந்த லாரி இப்போது ஒரு கண் குருடாக நின்று கொண்டிருந்தது.

இதற்கு பின்னும் அந்த ஓட்டுனரோ நடத்துனரோ கீழே இறங்குவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
பேராசிரியர் வந்து நதீஷவை தள்ளிவிட்டு `அந்த கம்பியை பறித்து தூர எறிந்து விட்டு.... "ஐ டோல்ட் யூ நோ......

விட்ட இடத்தில் இருந்து மங்களத்தை ஆரம்பித்தார் . நாசமா போக.... அப்பாட ஒருவழியாக இந்த விபத்தால் என்னை மறந்திடுவார் என்று நினைத்துக்கொண்டிருக்க, இந்த காலியின் மைந்தன் என்னை மொத்தமாய் காலி செய்துவிட்டான்.


பேராசிரியர் இப்போது லாரிக்காரனை மறந்துவிட்டார், எங்கல் இருவரையுமே ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருந்தார்.


"அது தான் சொன்னேனே , இந்த தலைமுறை பல்கலைகழக மாணவர்களுக்கு பொறுமை கிடையாது, எந்த சூழ் நிலையிலும் இலகுவாக இருக்கும் பக்குவம் தெரியாது, காட்டுமிராண்டிகள் போல ஆகிக்கொண்டு வருகிறீர்கள்."


என்னத்தை சொல்ல..... விடிந்திருந்தது...... ஓ! இன்று சனி அல்லவா? 


சைரன் அடித்தபடி 119இன் விசேட பொலிச் பிரிவு சம்பவ இடத்துக்கு வந்திருந்தது. சும்மா சொல்லக்கூடாது ஃபோன் பண்ணி ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்கவில்லை, அதற்குள் வந்திருக்கிறார்கள். ஆனாலும் காவல் துறையை பாராட்டும் மனநிலையின் நான் இல்லை. நானும் நதீஷவும் ஆளுக்காள் முகத்தை பார்த்துக்கொண்டோம்!


வந்து நின்ற பொலிஸ் காரர்களிடம் லாரிகாரன் எப்படி வேகமாய் வளைந்து வளைந்து ஓடினான், தங்களது கார் எவ்வளவு வேகத்தில் வந்து அவனை மடக்கிபிடித்தது, குறைந்த அளவு நேரத்தில் இவன் இவ்வளவு தூரம் வந்திருக்கின்றான் என்றால் அவன் எவ்வளவு வேகமாய் வந்திருப்பான் பாருங்கள் என்று பொலிஸ்காரன் மறந்து விட்ட கதி= தூரத்தின் கீழ் நேரம் என்ற வாய்ப்பாட்டை அவனுக்கு படிப்பித்துக்கொண்டிருந்தார் ஈஷியின் அம்மா.


அந்த களோபரத்தில் ஈஷின் அம்மாவை நான் கவனிக்கவேயில்லை. நதீஷவிடம் ஏதோ சொல்லுவதற்கு வாயெடுத்தேன். அதற்குள் அவன் சொன்னான்...

"மச்சான் ஈஷிய விட அவள்ட அம்மா நல்ல வடிவா இருக்கிறாடா...."

ஏதுமே சொல்லாமல் அவனை ஒருகணம் உற்று பார்த்தேன். உணர்ச்சி பொங்க அவனிடம் சொன்னேன்.

"என் இனமடா நீ....."


இந்த கால பல்கலைக்கழக மாணவர்கள் எப்போதுமே சீரியசாகவே இருக்கமாட்டார்கள் என்பதை அறிய முடியா தூரத்தில் நின்று பொலிசாருடன் உரையாடிக்கொண்டிருந்தார் பேராசிரியர் ஃபெர்னாண்டோ!


Sunday, October 7, 2012

சத்தியமாய் நான் தேசத்துரோகி !!! - முல்லைத்தீவு இன்னமும் ஏதோ சொல்கிறது!
வரும்  வழியெல்லாம் பேராசிரியர் ஃபெர்னாண்டோவின் தொணதொணப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது.


 பேராசிரியர் ஃபெர்ணாண்டோ எங்களது பல்கலைக்கழக ஆர்க்கிடெக்ட் பீடத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இலங்கையின் அதி சிறந்த திட்டமிடலாளர். கொழும்பின் பிரபலாமான ஹவ்லொக் நகரத்தின் திட்டமிடலும் , வடிவமைப்பும் இவருடையதே! ஓய்வு பெற்றாலும் தன்விருப்பின் பேரில் இப்போதும் தொடர்ந்து எங்களது பீடத்தில் பணியாற்றி வருபவர். வயதானாலும் அந்த துறுதுறுப்பும் குறும்பும் இன்னமும் குறைவில்லாதவர், தமிழர்கள் மீது எப்போதும் ஒரு தனி மரியாதை வைத்திருப்பார். இந்த காரணங்களுக்காகவே அவரை எல்லோருக்கும் பிடிக்கும்.


ஆனால் சமீபத்தில் நாங்கள் முல்லைத்தீவு அபிவிருத்தி திட்டத்தின் இறுதி கட்ட வேலைகளுக்காக முல்லைத்தீவு போய் , இதோ இப்போது வந்து கொண்டிருக்கும் வரையிலும் பேராசிரியருடனான உறவு எங்களில் , குறிப்பாக ஆண்கள் யாருடனும் சுமூகமாக இல்லை.


இந்த தலைமுறை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொறுமை கிடையாது, எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. "அந்த காலத்தில் நாங்கள் கம்பஸ் படிக்கின்ற போது ஏது நடந்தாலும், அது பிரச்சினைக்குரியதாக இருந்தாலும் எப்போதும் அதை இலகுவாக எடுத்துக்கொள்வோம், எதையும் சீரியசாக பார்ப்பது கிடையாது" இப்படியே பேரூந்து நிறையுமளவுக்கு பேசிக்கொண்டே வந்தார்.


அப்படியெதுவும் தப்பாய் நடந்து விடவில்லை, நடந்தது என்னான்னா முல்லைத்தீவில் எங்களுடைய இறுதி பிரஷன்டேஷன் முடிவில் கடல் குளிக்க ஏற்பாடாகியிருந்தது. நாங்களும் திட்டமிட்டபடி அழகர் ஆற்றில் இறங்குவது போல ஆண்களும் பெண்ளுமாய் கடலில்  இறங்கி குளித்துக்கொண்டிருந்தோம்.ஆண்கள் நாங்கள் எல்லோரும் கடற்கரை மணலில் ரக்பி ஆடிக்கொண்டிருக்க எங்கள் பெண்கள் அணி சற்று தள்ளி சில வொலி போல் விளையாடுவதும் சிலர் கடல் கடல் குளிப்பதுமாக இருந்தார்கள். சற்றைக்கெல்லாம் கடல் குளித்துக்கொண்டிருந்த எங்கள் பெண்கள் குழாமிலிருந்து "வீல்" என்ற சத்தம் வரவே சம்பவ இடத்துக்கு பார்வையை திருப்பினோம். சற்றி தள்ளி சில இளைஞர்கள் ( அவர்கள் உடையிலும் , பேச்சிலும் வெளிநாடு வாழ் எம்மவர்கள் என்று தெரிந்தது) பந்தொன்றை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் விளையாடிய பந்து எங்கள் பெண்கள் கூட்டத்தின் நடுவில் வந்து விழுந்ததற்கு தான் இந்த ஓலம்! நாங்கள் சிரித்து விட்டு மீண்டும் பந்தை கொண்டு ஓடுபவனின் காலை குறிவைத்து வீழ்த்தி கடலில் தள்ளுவதிலேயே குறியாய் இருந்தோம்.


சற்றைக்கெல்லாம் மறுபடியும் அந்த "வீல்" ஓசை வரவே, இப்போது கொஞ்சம் கிட்டப்போய் என்ன என்பது போல ஒரு பார்வை மட்டும் வீசிவிட்டு மறுபடி ரக்பி பந்தை எடுக்க குனிந்த போது தான் அந்த சுத்த தமிழில் வந்து கொட்டிய‌ கெட்ட வார்த்தைகள் என் காதில் விழுந்தது. அந்த வார்த்தைகள் எங்கள் பெண்களின் அங்கத்தை பற்றியதும், அவர்கள் நடத்தை பற்றியும் இனிமேல் என்று இல்லாமல் கேவலமாக சிலாகிப்பதாய் இருந்தது.


தமிழை படியுங்கள் என்று தலையால் அடித்தும் கேளாமல் சிங்களமே கதி என்று கிடக்கும் எங்களது அந்த பெண்கள் கூட்டம் , அதிச்டவசமாக அந்த வார்த்தைகளின் பொருள் அறியாமல் அடித்த பந்து இன்னா அவுட்டா என்று ஆளுக்காள் வாதம் செய்வதிலேயே குறியாய் இருக்க , அந்த இளைஞரணி இன்னமும் சில கெட்ட வார்த்தை பேசியபடி கொஞ்சம் நெருங்கி வந்து இருந்தார்கள்.


இதை கவனித்தோ என்னமோ எங்களுடைய பேராசிரியர் அவர்களிடம் சென்று அழகான ஆங்கிலத்தில் கொஞ்சம் தள்ளி நின்று ஆட முடியுமா? என்று கேட்டது தான் தாமதம் முகத்தை சிரித்த மேனிக்கே வைத்துக்கொண்டு அவரையும் அவரது மனைவியையும் இன்னமும் சில இலக்கிய நயம் தோய்ந்த கெட்ட வார்த்தையில் திட்டினார்கள். எங்களில் யாருக்கும் தமிழ் தெரியாது என்பது அவர்கள் கணக்காய் இருக்க வேண்டும்.


பேராசிரியரை திட்டியதும் எனக்கு பொத்துக்கொண்டு வந்தது கோபம், நேராக அவர்களிடம் போனேன்......

 'டேய்.. த்ஹுஎ உங்களுக்கு மூளை ட்ரெஉஎஒக்ஷ்  இல்லையா? இது என்ன உங்க அப்பன் ர்ர்யுஎர்ய்வ்வ்ட் வீட்டு இடமா? அந்தாளுட வயசுக்கு மரியாத வேணாம்?

எனக்கும் தமிழில் கெட்டவார்த்தை பேச நன்றாகவே தெரியும் என்று அவர்களுக்கு காட்டியாயிற்று!

நான் தமிழில் பேசியது அவர்களுக்கு அதிரிச்சியை தந்திருக்க வேண்டும். உடனே ஒருவன் எனக்கு தேசத்துரோகி பட்டம் தந்து தூசணத்தில் பேசினான். எனக்கு இப்போது யாரெல்லாம் தேசத்துரோகிகள் என்று சுத்தமாய் மறந்து போய்விட்டபடியால் அவன் சொன்னது எனக்கு உறைக்கவே இல்லை. எதையெல்லாம் இவர்கள் நமக்கும், நமது அக்கா தங்கச்சிக்கும் செய்தபோது அவர்களை காடையன் என்றோமோ அதை தானே இப்போது நீங்களும் செய்தீர்கள். அதை கேட்டால் நான் தேசத்தூரோகி! சரி இருந்துவிட்டு போகிறேன்! 

"ஓம்டா ஹ்க்ட்த் ! நான் துரோகி தான்.... இன்னொருக்கா இந்த பந்து இஞ்சால வந்தாலோ, இல்லாட்டி உன்ட வாயில இன்னொரு வார்த்தை வந்தாலோ உனக்கு செவில் உடையும்"

கொஞ்சம் காட்டமாகவே சொல்லிவிட்டேன். நான் சொல்லி முடித்தது தான் தாமதம், நான் சொன்னதை அந்த கும்பலில் ஒருவன் எனக்கே செய்து காட்டினான். என்ன நடந்தது என்று யூகிப்பதற்குள் என் காது "கொய்ய்ய்ய்ய்" என்று இரைய ஆரம்பித்தது. என் கையில் ரக்பி கோடு கீறுவத்ற்காக வைத்திருந்த தென்னை மட்டை இருந்தது. வெறி கொண்டவன் போல் என் முன்னே நின்றவனின் முகத்தில் ஓங்கி ஒன்று விட்டேன், அதற்குள் அவன் கூட நின்றவர்கள் ஓடிவர ஒவ்வொருவரையும் நோக்கி விசுக்கி அடிக்க ஆரம்பித்தேன். முப்பது செக்கனுக்குள்ளும் குறைவான நேரத்தில் இவளவும் நடந்து முடிய, எனது நண்பர்கள் , விரிவுரையாளர்கள் என எல்லோரையும் "ஓய்" என்று ஓலமிட்ட எங்களது பெண்கள் கூட்டிவிட்டார்கள்.


தள்ளு முள்ளு, சமரசம் , சமாதானம் எல்லாம் முடிவடைந்து போக "உனக்கு இருக்குடா" என்னிடம் அடிபட்டவன் மூக்கில் வழியும் ரத்தத்தை துடைத்த படியே கறுவிக்கொண்டு கரையேறினான்.


ஏன்? எதற்கு? என்ன நடந்தது? விரிவுரையாளர்களினதும் எங்களுக்கு பாதுக்காப்புக்கு அனுப்பப்பட்டிருந்த ராணுவ புலனாய்வு பிரிவினர்களினதும் கேள்விக்கு "இல்ல சேர் நான் தான் கொஞ்சம் பிழையா கதச்சிட்டன் " என்று சொல்லி சமாளித்தேன்.

"கதை வாக்கில் ஏதோ எல்.ரி.ரி எண்டு கதை வந்துதே"

காரியத்தில் கண்ணாயிருக்கும் ஒரு புலனாய்வு அதிகாரி கேட்டான். எனக்கு தூக்கிவாரி போட்டது.


"இல்ல சேர் , நான் ஏதும் கூட கதைச்சால் என்னை எல்.ரி.ரி எண்டு சொல்லி உங்களிட்ட புடிச்சு குடுப்போம் என்று சொன்னார்கள்" அப்பாடா சமாளித்தேன். 


அவர்கள் சொன்னதை அப்படியே சொல்லி அவர்களது இன்றைய இரவை பயங்கரமான இரவாக மாற்ற எனக்கு என்னமோ மனமிருக்கவில்லை. தூரத்தில் சிந்தக்க ( இளம் புலனாய்வு அதிகாரி) என்னை பார்த்து மர்மமாய் சிரித்தான் ..... அய்யோ அவனுக்கு என்னைவிட தமிழ் நன்றாகவே தெரியும் என்பதை மறந்தே போனேன்! அடி வயிற்றில் என்னமோ செய்தாலும் கடல் நீரில் முகத்தை நனைத்தி பதட்டத்தை கழுவினேன்.


சுற்றும் முற்றும் பார்த்தேன், அந்த இளைஞர் குழு யாரும் அங்கு இருக்கவில்லை, அது போக புலனாய்வு பிரிவினரின் வாகனங்களும் அங்கேயே அப்படியே நின்று கொண்டிருந்தன. எதுவும் புறப்பட்டு போயிருக்கவில்லை என்பதில் கொஞ்சம் திருப்தி!
இது தான் நடந்தது..... அன்றைக்கு முல்லைத்தீவு கடற்கரையில் தொடங்கியது இதோ இப்போது முன்னூற்றைம்பது மைல கடந்து கொழும்பு நாரஹேன் பிட்டி சந்தி வரை பேராசிரியரின் தொணதொணப்பு தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. திட்டு வாங்கிகொண்டேயிருக்கிறேன்... நடந்ததை சொல்லி எங்கள் மீது அவர் வைத்திருக்கும் மரியாதையை கெடுத்துக்கொள்ள விருப்பமில்லை!!


"கிஷோகர்... போற வாற இடத்தில் எல்லாம் இந்த மாதிரி நடந்து கொண்டால் உனக்கு மட்டுமில்ல, நம்மோட கம்பஸுக்கும் தான் கெட்ட பேர்"


தலையை குனிந்தபடி நரேஹன்பிட்டி சந்தியில் வீடு போவதற்காக இறங்கிக்கொன்டிருந்த தோழி ஈஷியை பார்த்துக்கொண்ட்டே மௌனமாயிருந்தேன்.  பைகளை எல்லாம் அப்பாவின் காரில் ஏற்றிவிட்டு போய்ட்டு வாரேன் என்று அவள் கையசைக்கவும் அந்த பயங்கரம் நடக்கவும் சரியாய் இருந்தது.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...