உதைபந்து

Monday, November 19, 2012

பேரூந்துக்குள்ளும் பேரழகிகள்!!! - யுத்தம் ஆரம்பம்-8

முன்னைய தொடரை படிக்க.... இங்கே சொடுக்கவும்.நேரம் இரவு 10.55 : நாள் ஞாயிறு : திகதி 21 : மாதம் ஐப்பசி : ஆண்டு 2012

திடுக்கிட்டு எழுந்தேன்என்ன மானம் கெட்ட கனவு இது!! பஸ் புறப்பட்டு இன்னமும் பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்கவில்லைஅப்படியிருக்க இப்படி உயர்ந்த லட்சியத்தோடு பயணிக்கும் நான் இப்படி தூங்கலாமா?  வந்த கனவு வேறு வில்லங்கமாக இருந்தது.

சும்மா இருத ரஜினியை முதல்வராக்கிபோட்டுத்தள்ளி , பழியை யார் யார் மேலோ போட்டுசும்ம இருந்த நடிகர்களையெல்லாம் வம்புக்கு இழுத்து ... சப்பா.. முடியல ஒரு வரைமுறை இல்லாத கனவு அதுபத்து நிமிடத்துக்குள் ஏழு தொடர்கதை எழுதுமளவுக்கு கனவின் நீளம் இருந்தது


வர.. வர என் கனவுகளுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டதுஒவ்வொரு நாளும் தூங்கப்போகையில் கூகிளில் இருக்கும் ஸ்ருதிஹாசனின் நடன ஒத்திகை படங்களை பார்த்துவிட்டு "ஓம்... ஸ்ருதிஹாசன் நமகஎன்று துங்கப்போனால்கனவில் எட்டுமுழ புடவைக்கு மேல் , பத்தடியில் ஒரு கம்பளத்தை போர்த்துக்கொண்டு ஒரு மலையின் உச்சியில் நிற்கும் அக்க்ஷரா ஹாசனுக்குநான் மேலும் நான்கைந்து மீட்டர் அளவில் பொன்னாடை போர்த்துவது போன்ற பன்னாடைக் கனவுகள் எல்லாம் வந்து துலைக்கிறது.

பிகினியுடன் நிற்கும் அக்காவை பார்த்துவிட்டு தூங்கப்போனால் , எட்டுமுழ புடவையில் தங்கை கனவில் வருகிறாள்அது தான் சொன்னேனே வர வர என் கனவுகளுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

என் கனவுகளின் அர்த்தங்கள் பற்றி விவாதிக்கவோ அல்லது அதன் ஆழம் அறியவோ எனக்கு அவகாசம் இல்லைஎனது நோக்கம் எல்லாம் இன்றாவது என் நெடுநாள் ஆசையை இல்லை ...இல்லை... லட்சியத்தை எட்டியாக வேண்டும்.

நேரம் : கிளுகிளுப்பான ஒரு நேரம் நாள்,திகதி,மாதம் : சரியாக ஞாபகம் இல்லை : ஆண்டு 2009

நான் கம்பஸ் வந்து முதல் வருடம்ஹாஸ்டலில் யரையும் தெரியாதுசுட்டுப்பொட்டாலோபொரித்து போட்டாலோஅவித்து போட்டாலோ , எப்படி போட்டாலும் எனக்கு கோமத ( எப்படி சுகம்?) என்பதை தவிர எந்த சிங்கள வார்த்தையும் வராதுஅது போக யுத்தம் முடிந்து சூடு தணியாத நேரம் வேறுமருந்துக்கும் தமிழ் கேட்கமுடியா ஒரு அறையில் ( உண்மையில் ஒரு டோம்என்னோடு சேர்த்து பதினொரு பேர்.

அன்றொரு நாள் எங்கள் விடுதியில் இருந்தவன் தனது சொந்த ஊருக்கு போய்விட்டு திரும்பியிருந்தான்அனைவரும் பரபரப்பாக லெக்சருக்கு கிளம்பிக்கொண்டிருந்த ஒரு காலை நேரம்வந்தவன் வேக வேகமாக சங்கத்தை கூட்டி வாயெல்லாம் பல்லாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்கேட்டுக்கொண்டிருந்த எல்லோருக்கும் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஜொள்ளாக ஊத்திக்கொண்டிருந்தது.

பல்லுவிளக்க போனவன் பாதியிலெ அதை நிறுத்திவிட்டு அவனை நோக்கி கேள்விகளாய் கேட்டுக்கொண்டிருக்ககாலைக்கடன் கழிக்கப்பொனவன் கூட காலை வயிற்றில் முண்டுகொடுத்துக்கொண்டு அவனது பேச்சில் லயித்திருந்தான்.

அவன் சொன்னவாக்கில் அவன் பேருந்தில் வரும் போது பகத்து சீட்டில் இருந்த பெண்ணுடன் சகவாசம் ஏற்பட்டு ஏதோ நித்தியானந்ததனம் நடந்துள்ளது சைகையில் தெரிந்ததுஆர்வமிகுதியில் இன்னொருவனிடம் மொத்த கதையையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தெரிந்து கொண்டேன்.

அன்றிலிருந்து இந்த பஸ்பயணத்தில் என்றாவது ஒருநாளாவது ஒரு பேரழகியுடன் என்றல்ல ஆயா அல்லாத சுமாரான ஒரு ஃபிகருடன் இன்ப பய|ணம் போக வேண்டுமென்பது என் லட்சியமாக மாறி போனது.

அன்றிலிருந்து எனது ஒவ்வொரு நடவடிக்கையும் எனது லட்சியத்தை நோக்கி நகரத்தொடங்கியது. இது எல்லாம் லட்சியம் என்று சொன்னால் கேட்பவன் காறித்துப்புவான் என்று தெரிந்திருந்தலும், நாளைக்கு நானும் இந்த மாதிரி அனுபவஸ்தனாக இருக்க வேண்டும் என்ற  ஒரே உயரிய நோக்கத்தின் கீழ் என் மேல் துப்பப்படபோகின்ற எச்சில்கள் ஒன்றும் பெரிய நாற்றமாக தெரியவில்லை.அது ஒரு நத்தார் விடுமுறைகாலம். இரண்டு வார விடுமுறை கிடைத்திருந்தது. அப்போதெல்லாம் எங்கள் ஊருக்கு நேரடியான பஸ் சேவைகள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. கொழும்பிலிருந்து வவுனியா வரை ரயிலில் போகவேண்டும். அப்புறம் வவுனியாவிலிருந்து எங்கள் ஊருக்கு பஸ் எடுக்க வேண்டும்.

ரயில்... நிறைய இடம், நிறைய ஆட்கள் , நிறைய  பெண்கள் , நிறைய காதல்.. சப்புக்கொட்டிக்கொண்டேன்.

"மச்சான் ரயில்ல நிறைய சனம் வரும். சீற் இல்லாம போக ஏலாது. செக்கண்ட் கிளாஸ்ல ரெண்டு சீற் புக் பண்ணிருவம்" அனுபவஸ்தனான  நண்பன் சொன்னான்.

"வேணாம் மச்சி ... தேர்ட் கிளாசில போவம் , சும்மா ஆத்தலா இருக்கும்."

தேர்ட் கிளாசில் நிறைய கூட்டம் வரும், அங்கே எனது லட்சியம் நிறைவேற வாய்ப்பு அதிகம் என்ற  உள் நோக்கம் புரியாத அந்த பலியாடும் ஆமாம் என்று அப்பாவியாய் மண்டையை ஆட்டியது.

ரயிலுக்கு ரெண்டு மணி நேரம் முன்பதாகவே போய் காத்திருந்து அடித்து பிடித்து ரயிலேறினோம். ஏறிய எனக்கு அதிர்ச்சி...அதுவும் இன்ப அதிர்ச்சி. பழம் நழுவி பாலில் அல்ல தேனில், பஞ்சாமிர்தத்தில், ஜானி வால்கரில் , விஸ்கியில் விழுந்திருந்தது.  அந்த பெட்டி முழுதுமே பெண்கள் கூட்டம். அழகிகள், பேரழகிகள், காஜல் அகர்வால்கள். இடையிடையில் சில நருத்தரவயது பெண்களும் ஆங்காங்கே சில ஆயாக்களும் அமர்ந்திருந்தார்கள். இருந்துவிட்டு போகட்டும். பீரின் மேல் நுரையிருந்தால் நமக்கென்ன? நமக்கு தேவை பீர் தானே!!

நடப்பது நிஜம் தானா? நிஜம் தான் என்று எனக்கு நானே கிள்ளிப் பார்த்து நிஜம் தான் என்று உறுதி செய்து கொண்டேன். நான் உறுதி செய்து கொண்ட பின்பும் வேறு யாரோ என்னை கிள்ளுவது தெரிந்தது.

ஒரு வேளை என் நண்பனும்  நிஜமறிவதற்காக தன் கை என்றுஎன் கையை கிள்ளுகிறானோ என்ற சந்தேகத்தில் கிள்ளிய கையைதட்டி விட்டேன்.  மிண்டும் கிள்ளல், ஆனால் இந்த தடவை கிள்ளல் கொஞ்சம் பலமாக இருந்தது,  வலிக்க வேறு செய்தது. கடுப்பாகி திரும்பி பார்த்தேன்.  அருகில் ரயில் நிலைய காவலர் நின்று கொண்டிருந்தார்.  கீழே இறங்கி வரும்படி சைகை செய்தார்.  ஏதுவும் புரியாமல் மெதுவாய் கிழே இறங்கினேன். வெளேயே என் நண்பன் உயிர் பயத்தில் உறைந்திருப்பது தெள்ளத்தெளியாவ் தெரிந்தது.

"மல்லி அஸ் பெயின் நத்த ?" ( தம்பி கண் தெரியாதா?) அவர் விரல் அந்த ரயில் பெட்டியை சுட்டிக்காட்டியது.  அப்போது தான் கவனித்தேன், "பட்டாசாலை சாவை "  என்று தமிழிலும் (???) , ஸ்கூல் சேர்வீஸ் என்று ஆங்கிலத்திலும்,  அதையே சுத்த சிங்களத்திலும் எழுதி வைத்திருந்தார்கள்.

மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு அடுத்த பெட்டியை நோக்கி நடக்க தொடங்கினோம். எங்களை முன்னே டக்கவிட்டு அந்த காவல் அதிகாரி ரெண்டு கெட்ட வார்த்தை  கூட  சொன்னார்.  எனக்கு அது கூட வலிக்கவில்லை. நான் இல்லாமல் அந்த பெண்கள் எப்படி வாழப்போகிறார்கள் என்று நினைக்கையில் லேசாய் வலித்தது.

அடுத்த பெட்டியில் கூட்டம் அலைமோதியது. அத்தனையும் அசிங்கமாய்... அசிங்கமாய் ஆண்கள். இருக்கைகள் நிறைந்து போய் தரையில் வேறு படுத்திருந்தார்கள். என் நண்பன் கறுவிக்கொண்டு என்னை பார்த்தான். மிதிபலகையில் தொங்கிக்கொண்டே பயணித்த அந்த முந்நூறு கிலோமீட்டரும் என் நண்பனின் முகத்தை பார்க்காமல் பயணித்தது சிரமமாய் இருந்தாலும் ,எங்கே கடித்து வைத்து விடுவானோ என்ற  பயத்தில் ஒருக்களித்தே பயணம் செய்தேன்.இப்படியாக நான் எனது லட்சியத்தை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எனக்கு தர்ம அடி விழுந்தது தான் மிச்சம்

இப்படித்தான் இடைநடுவில் ஒருநாள் ஊருக்கு போகையில் அருகில் அழகி ஒருத்தி அமர்ந்துவிட்டாள். மனம் ஆனந்த கூத்தாடியது. பஸ்ஸில் கூட்டம் வேற கொடூரமாய் இருக்க அது எனக்கு வசதியாகவும் போனது. பேருந்து ஆடும் ஒவ்வொரு தடவையும் கூட்டம் அவளை நெரிக்கும், அப்போதெல்லாம் அவள் என்மீது சாய்ந்து கொள்வாள். இந்த முறை நீ சாதிச்சிருவடா என்று எந்தோளை நானே தட்டிக்கொடுத்துக்கொண்டேன்.

எங்களுக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த தம்பதி ஒரு குழந்தையுடன் அமர்ந்திருந்தது. இவள் வேறு அந்த குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருக்க , அவளை இம்பிரஸ் செய்வதற்காக அந்த அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி அந்த குழந்தையை வாங்கி என் மடியில் இருத்திக்கொண்டேன். என்னிடம் குழந்தையை தந்த அந்த அம்மாவை அவளது கணவன் " அவனை பார்க்க பிள்ளை பிடி காரன் போல இருக்கிறான், அவனிட்ட ஏன் பிள்ளைய குடுத்தாய்" என்று கடிந்து கொண்டதையோ , அல்லது என் மீது வைத்த கண் வாங்காமல் அந்த தம்பதி பார்த்துக்கொண்டிருந்ததையோ நான் கவனிக்கவேயில்லை.

குழந்தையை மடியில் அமர்த்தியது தான் தாமதம், எவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்தானோ தெரியாது என் மடியில் நீரபிஷேகம் செய்துவிட்டான் அந்த கொடூர பாலகன். அடி மடி கொஞ்சநேரம் சூடாகி வெந்துவிட, அவசரப்பட்டு பேருந்தை நிறுத்தி ஆடைமாற்றி மீன்டும் வந்தால்.... என் இருக்கையில் வேறு எவனோ அமர்ந்திருந்தான். அருகில் சென்று எழுந்திருக்க சொல்லலாம் என்று பார்த்தால் ஆள் வேறு பல்க்காக இருந்தான். மறுபடி ஒரு இருநூறு கிலோமீட்டர் மிதிபலகையில் உட்கார்ந்தபடி இயற்கை காட்களோடு பயணம் செய்யவேண்டியதாய் போனது.

எனது எந்த முயற்சியும் கைகூடியதில்லை, கூடிவந்தாலும் ஏதாவதொரு ரூபத்தில் சனிவந்து சப்பணக்கால் போட்டு உட்கார்ந்து விடுவான். ஆனால் இந்த தடவை நான் வலு அவதானமாக இருக்கிறேன்

இன்று பேருந்தில் என் அருகில் ஒரு அழகி உட்காரப்போவதை யாராலும் தடுத்துவிட முடியாது. இருக்கையை புக் செய்யும் போது "அண்ணே என்னோட நண்பி ஒருத்திக்கு தான் இந்த சீற் புக் பண்ணுறேன். அருகில் ஒரு லேடி இருக்கும் இருக்கையாக பார்த்து புக் செய்து தாருங்கள்"  என்று ராஜதந்திரமாக கேட்டு வாங்கிக்கொண்டேன்.

"தம்பி உங்கட நண்பிட சீற் நம்மர் 6, ஏழாவது சீற் முருங்கனில் ஒரு லேடி புக்பண்ணி இருக்கிறா.. அவ அங்க நிண்டு தான் ஏறுவா.. உங்கட தோழியிடம் சொல்லிடுங்கோ" சீற் புக் செய்பவர் பொறுப்புணர்வோடு பதில் சொன்னார்.

மருந்துக்கும் கணக்கு போட தெரியாத என் மூளை இந்த மேட்டர் என்றதும் ராமானுஜரை விட அதிகமாக கூட்டிக்கழிக்க தொடங்கியது. முருங்கன் இங்கிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. முருங்கனில் இருந்து கொழும்பு சுமார் 260 கிலோமீட்டர். "ஆகா .. அழகியுடன் 260 கிலோமீட்டருக்கு ஒரு ஆனந்த பயணம்" நினைத்துப் பார்க்கவே ஏதோ செய்தது.

நேரம் இரவு 11.30 : நாள் ஞாயிறு : திகதி 21 : மாதம் ஐப்பசி : ஆண்டு 2012

பேருந்து முருங்கனை நெருங்கிக்கொன்டிருக்க எனக்கு உற்சாகம் தாளவில்லை. என் அருகில் அமரப்போகும் அந்த அழகியை கற்பனை செய்துகொண்டே நகத்தை கடித்துக்கொண்டிருந்தேன். இந்த நாப்பது கிலோமீட்டர்களும் ஏதோ நாலாயிரம் கிலோமீட்டர் அளவுக்கு ரணமாய் இருந்தது.

"அண்ணே முருங்கன் சந்தி ஆக்கள் ஏறுவினம் , பஸ்ஸ நிப்பாட்டுங்கோ... " நடத்துனர் ட்ரைவருக்கு குரல் குடுக்க நான் குதூகலமானேன்.

முதல் ஒரு ஆயா ஏறியது, தட்டுத்தடுமாறி என் சீற்றுக்கு பக்கத்தில் வர மனம் அலறியது. " ஐயய்யோ....."

"அம்மா .. உங்கட சீற்று பதினேழு நம்பர். அங்க போங்கோ..." ஆயாவை அப்பால் அழைத்துப்போன அந்த நடத்துனர் எனக்கு தேவதையாக தெரிந்தான்.

அடுத்து ஒரு ராணுவ வீரன், அடுத்து ஒரு ஆசாமி...... அடுத்து இன்னொரு ராணுவ வீரன் , அடுத்து ஒரு சிறுவன்.....

"ங்கொய்யாலே.... எங்கடா என் தேவதை?" மனம் துடியாய் துடித்தது.

பேருந்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடலின் "தந்தரன்னா... தானே.. தந்தரன்னா.... ஒலிக்க ஆரம்பித்த நேரம் என் பார்வை அந்த மேருந்தின் மிதிபலகையை விட்டு அகலாமல் அகல திறந்திருந்தது.

வந்தாள்... அவள் வந்தாள்..... அது தாமரைப்பாதங்கள் என்று சொல்லி அவள் பாதத்தை கேவலப்படுத்த முடியவிலை. அவள் உடலை இத்தனை காலமும் கவிஞர்கள் ஒப்பிட்ட வஸ்துக்ளுடன் ஒப்பிட்டால் அது அவளுக்கு செய்யும் அவமரியாதை.

எனக்கு பொதுவாய் சுடிதார் அணியும் பெண்களை பிடிப்பதிலை. காரணம் எனக்கு சுடிதார் பிடிப்பதில்லை. காஜல் அணிந்தால் மட்டும் சில நிமிடங்கள் பார்ப்பேன். இனி காஜல் அணியும் சுடிதார் கூட அழகாக இருக்கப்போவதில்லை, இவள் அத்தனை பேரையும் தூக்கி சாப்பிடும் அழகியாக இருந்தாள். இவள் பிறப்பாள் என்று தெரிந்து தானோ சுடிதாரை கண்டுபிடித்தர்கள் என்று மனம் ஹைக்கு கவிதையெல்லாம் சொன்னது. உடனடியாக 'சுடிதார் ஃபேன்ஸ்" என்று ஃபேஸ்புக்கில் சங்கம் அமைக்க திர்மானம் நிறைவேற்றிக்கொண்டேன்.

வந்தாள்.... தயங்கினாள்..... பின் அருகில் அமர்ந்தாள்....

"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ...." ரேடியோவில் உன்னிக்கிருஷ்ணன் எனக்காக கச்சேரியை ஆரம்பித்திருந்தார்.

"தங்கச்சி உங்கட சீற் நம்பர் ஏழு இல்லம்மா.. பதினேழு... அங்க அந்த பாட்டிக்கு பக்கத்தில..."

எனக்கு தலை சுற்றிப்போனது. இப்போது அந்த நடத்துனர் எனக்கு பேய்களின் தலைவனாக தெரிகிறான். அடிமனதின் ஆழத்தில் சனிபகவான் சிரிக்கும் சத்தம் எனக்கு தெளிவாக கேட்கிறது.

சரி... இவள் இல்லாவிட்டால் என்ன இந்த சீற்றை புக்பண்ணியவள் வந்துதானே ஆகவேண்டும். அவள் எங்கேயடா?நினைத்துக்கொண்டிருக்கயிலே "ஆயிரத்தில் ஒருவன்" பார்த்திபன் போலவே ஒருவன் எனக்கு அருகில் வந்து அமர்ந்தான். அமர்ந்தான் என்பதைவிட வந்து விழுந்தான் என்பதே பொருந்தும்.

"சார்.. இது லேடீஸ் சீற்" என்று சொல்லுவதற்கு வாயெடுத்தேன். அதற்குள் அவன் கேட்டான்.

"தம்பி இந்த உங்கட ஆறாம் நம்பர் சீற்றை யாரோ லேடி புக்பண்ணி இருக்கிறதா சொன்னாங்களே!!"

"உங்கட ஏழாம் நம்மர் சீற்று கூட லேடி புக்பண்ணி இருக்கிறதா தான் எனக்கும் சொன்னாங்க" முகத்தில் வழிந்த ஏமாற்றத்தை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே சொன்னேன்.

அதற்குள் அருகில் வந்த நடத்துனர்.. எங்கள் இருவரையும் கேவலமாக பார்த்தான். அவன் மனதில் "கூட்டு களவாணிகளாடா நீங்க" என்ற சத்தம் ஒலித்தது எனக்கு கேட்காமல் இல்லை. லேடி சீற் கேட்டு நானும், லேடி சீற் கேட்டு இந்த மாமிச மலையும் சீற் புக்பண்ணியிருப்பதை புரிந்துகொள்ளாமல் இருக்க அந்த நடத்துனர் ஒன்றும் மஞ்சமாக்கானாக இருக்க முடியாது.

ஒரு ஜந்துவை பார்ப்பது போல் எங்களை பார்த்துவிட்டு "ரை.. ரை.. " என்று குரல் கொடுக்க பேரூந்ந்து உறுமிக்கொண்டு கிளம்பியது.

எனக்கு அருகில் இருந்த அந்த மாமிச மலை தன் அக்குளில் கையை விட்டு "வராட்.. வராட்" என்று சொறிந்த படியே கேட்டது "தம்பி எங்க கொழும்புக்கா?"

ஜன்னல் பக்கம் தலை திருப்பியபடியே "ஓமோம்" என்றுவெறுப்பாய் சொல்லியபடி வெளியே பார்க்கிறேன். அறிவுப்புப்பலகை சொல்கிறது .....

கொழும்புக்கு இன்னும் 270 கிலோமீட்டர்கள்........


 டிஸ்கி : இந்த மொக்கை கதையை எழுதுவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் எடுத்த என்னை , இந்த வாய்ப்பை கொடுத்த நண்பன் ஹரி முதலில் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். என்னால் இந்த தொடரில் விழுந்திருக்கும் பாரிய இடைவெளி எதிர்காலத்தில் சமப்படும் என்று நம்புகிறேன். # சமாளிடா கொமாரு,,,,,,,!!LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...