உதைபந்து

Sunday, February 26, 2012

ஆறிப்போன சட்டிக்குள் இன்னமும் சூடு அடங்காத கஞ்சி! ஏழாம் அறிவு தொடர்பில் நீடிக்கும் சர்ச்சை




ஏழாம் அறிவு என்று ஆரம்பித்தவுடனேயே எழுந்து ஓடிவிடாதீர்கள். படம் வந்த நாளிலிருந்து முருகதாசையும் , சூர்யாவையும் ,போதிதர்மனையும் அத்தனை வலைப்பதிவர்களும், தமிழ் ஆர்வலர்களும் அடித்து, துவைத்து, காயவிட்டு இஸ்திரி போட்டு தொங்கவிட்டாயிற்று. முருகதாசும் இப்போது டாக்டருடன் பிஸியாகி விட்டார். சூர்யாவும் அடுத்த வேலை பார்க்க கிளம்பிவிட்டார்.

இந்த நேரத்தில் நான்கு அறிவே இல்லாமல் வந்த  இந்த ஏழாம் அறிவை நான் வம்புக்கு இழுக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? காரணம் இருக்கிறது. இப்போது எனது பிரச்சினை எல்லாம் , தமிழின கொழுந்து முருகதாசுடனோ அல்லது தமிழின விடிவெள்ளி சூர்யவுடனோ இல்லை. எனது பிரச்சினை எல்லாம் எம்மவரோடு தான்.

வெட்கத்தை விட்டு சில விடயங்களை சொல்லியே ஆக வேண்டும். "தமிழன்,தமிழ், தமிழின உணர்வு" என்று யாராவது பேசினாலே மெய்சிலிர்த்து உணர்ச்சிவசப்படும் எனக்கு, ஏழாம் அறிவைப் பார்த்தவுடன் அதன் உள்நோக்கமோ , தார்ப்பரியமோ புரியாமல் கொஞ்சம் ஓவராகவே மெய்சிலிர்த்து,புல்லரித்தது.எனது ஃபேஸ்புக் நிலைகளிலெல்லாம் முருகதாசையும் , சூர்யாவையும் ஆகா ஓகோ என புகழப்போய் நிருபன் அண்ணா, வொல்ரன் அண்ணா போன்ற மோதிர கைகளால் குட்டுப்பட்டு உண்மைதெளிந்த கதையை இந்த தமிழ் கூறும் நல்லுலகு முன்பு ஏற்றுக்கொள்கிறேன்.

படத்தைப் பார்த்துவிட்டு முருகதாசையோ, சூர்யாவையோ தமிழின காவலர்களாக யாரும் நினைப்பார்களேயானால் அது மடமைத்தனம் தான். ஏழாம் அறிவு படமானது ஈழத்தமிழனதும், ஒட்டு மொத்த தமிழினத்தினதும் பெயரைச்சொல்லி பஞ்சம் பிழைக்க வ‌ந்ததேயன்றி, வேறேதுமல்ல என்பதை ஒட்டு மொத்தமாக ஒப்புக்கொள்கிறேன். (அதை நாங்கள் எப்பவோ ஒப்புக்கொண்டாயிற்று, நீ சொல்ல வந்தத சொல்லுடா மொதல்ல என்று பதிவர்களின் பல் நறநறப்பு கேட்கிறது)



சில நாட்களுக்கு முன்னர் , எனது அபிமான அறிவிப்பாளரும், முன்மாதிரியும் அத்தோடு இலங்கையின் முன்னணி தமிழ் ஊடகவியலாளருமான ஏ.ஆர்.வி. லோஷன் அண்ணாவின் டுவிட்டர் டுவிட்டுகளை தடவிக்கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்டது ஒரு டுவீட். இது லோஷன் அண்ணாவின் நண்பர் ஒருவரால் டுவீட் செய்யப்பட்டு லோஷன் அண்ணாவால் ரீடுவீட் செய்யப்பட்டிருந்தது. இதை லோஷன் அண்ணா தெரிந்து செய்தாரா அல்லது தனது அபிமானி ஒருவரது டுவீட் என்பதால் ஒரு ஜாலிக்கு ரீடுவீட்  செய்தாரா என்பது எனக்கு தெரியவில்லை. அனால் அந்த டுவீட் எனக்குள் நிறைய வாதங்களை கிளப்பி விட்டிருக்கிறது.

இது தான் அந்த டுவீட்.... "ஏழாம் எழவு கிளப்பி விட்ட தமிழ் உணர்வால், சிலர் லீற்றர் லீற்றராக கொப்ப‌ளிக்கிறார்கள்".

இந்த டுவிட்டில் தமிழின அல்லது, தமிழ் உணர்வுக்கெதிரான ஏள‌னம் தெரிந்தது. எனது கேள்வியெல்லாம் , படம் தமிழனை எமாற்ற வந்த போலியான ஒரு விளம்பரம் தான். ஆனால் அதற்காக அதன் மூலம் சில அடிமட்ட  மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற தமிழ் உணர்வுகளும் போலியானது, பொய்யானது என்று ஆகிவிடுமா?

உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன், வழிநெடுகில் வரிசையாக அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு விபச்சாரி பிச்சை போடுகிறள் என வைத்துக்கொள்வோம். அவளது நோக்கம் பிச்சையிடும் சாக்கில் வீதியில் பொலிஸ் காரர்களது நடமாட்டத்தை கண்காணிப்பதாக இருக்கின்றது. இந்த காட்சியைப் பார்கிறன் , வாழ்நாளில் தானம் செய்வது என்றால் என்னவென்றே அறியாத ஒரு உலோபி. அதைப் பார்த்தவுடன், "அட கேவலம் ஒரு விபச்சாரி தானம் செய்கிறாள் , நான் இப்படி உலோபியாக இருக்கிறேனே "என்று மனம் மாறி அவனும் தானம் செய்கிறான் என்றால், இங்கே அந்த விபச்சாரியின் செய்கையைப் பார்த்து வந்த உலோபியின் மனமாற்றத்தை பொய்யானது என்று கூறிவிட முடியுமா?



இன்னொரு வாதமும் வந்தது . "இத்தனை ஆயிரம் பேரை பலிகொடுத்து போராடிய போது வராத தமிழ் உணர்வு , ஒருவன் சிக்ஸ் பேக்ஸ் உடம்பை காட்டியவுடன் வந்துவிட்டதோ" என்று. இந்த கூற்றுடன் நூறு வீதம் ஒத்துப்போகிறேன். தமது இன்னுயிரை பணயம் வைத்து தமிழின விடிவுக்காய் போராடியவர்களின் தியாகம் எத்தனையோ பேரின் மரமண்டைகளை போய் சேராதது துரதிஷ்டமே.

ஆனால் இன்னொன்னொரு கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நாம் வாழும் சமூகம் எப்படிப்பட்டது எனில் "இன்று போலியோ தடுப்பு தினம், தவறாமல் உங்கள் பிள்ளைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து கொடுங்கள் " என்று வீடுவீடாக , சந்தி சந்தியாக நின்று வைத்தியர்கள் கத்தும் போதெல்லாம் கண்டுகொள்ளாமல், "இன்று போலியோ தடுப்பு தினம் எனது பிள்ளைக்கு நான் போலியோ சொட்டுமருந்து கொடுத்து விட்டேன் அப்போ நீங்க?" என்று சூர்யாவும் (அடுத்துவருவதை ஹிந்தி தமிழ் பாணியில் வாசிக்கவும்) "இன்று போல் இயோ தடுப்பு தினம், நான் எனது பேரனுக்கு போல் இயோ தடுப்பு மரு  ந்து கொடுத்து விட்டேன், நீங்    க கொடுக்கலயா?" என்று தனது பேரனை   கையில் வைத்துக் கொண்டு அமிர்தாப் பச்சனோ தொலைக்காட்சியில் தோன்றி சொன்னவுடன் ,தமது குழ‌ந்தைகளை வைத்திய சாலைக்கு கொண்டோடும் தாய்மார்கள் தான் அதிகம்.

இங்கு தமது பிள்ளைகளுக்கு போலியோ கொடுக்கவேண்டுமென்று தாய்மாருக்கு வந்த உணர்வு பொய்யாகிவிடுமா? அல்லது பிள்ளைகளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் தாய்மார்களை இடைமறித்து "நில்லுங்கள் வைத்தியர் சொல்லி கேட்காமல் , அமிதாப் சொன்னவுடன் வந்த உங்கள் அக்கறை உணர்வு போலியானது" என்று சொல்லி அவர்கள் தமது பிள்ளைகளுக்கு போலியோ கொடுப்பதை தடுத்து நிறுத்துவது தான் சிறந்ததென்று ஆகிவிடுமா?



எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான்,பெயர் கணேஷ்! பல்கலைகழகத்தில் என்னோடு கூட படிக்கிறான். அவனுக்கு தமிழின உணர்வோ அல்லது தமிழில் பேச வேண்டுமென்ற ஆர்வமோ சிறிதும் கிடையாதவன். மேற்கத்தேயமே கதி என்று  கிடந்தவன். தனது பிள்ளைகளுக்கு தமிழ் கறுத்தருவதை சாவான பாவங்களில் ஒன்றாக கருதியவன். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் எம்குல பெண்கள் மீது தேராத காதல் கொண்டவன். அவன் ஏழாம் அறிவு பார்கப்போனான். படம் முடிய வந்தான். வந்தவன் சொன்னான் "மச்சான் என்ர பிள்ளைகளுக்கு மட்டுமில்லடா, பேரப்பிள்ளைகளுக்கும் நான் தமிழ் கற்றுத்தருவேன்.அது போக தமிழ் இலக்கியங்கள் கொஞ்சம் சொல்லு மச்சான், நான் படிக்கணும். ஸ்ருதிஹாசன் என்னமா சொன்னாள் மச்சான். அவள் ஒரு அல்ரா மார்டன் பொண்ணு என்று நினைச்சன் மச்சான், ஆனா அவ தமிழ பத்தி சொன்ன ஒவ்வொரு வசனமும் என்னக்கே சொன்ன மாதிரி இருந்ததடா".

இதை என்னவென்று சொல்வீர்கள்? இத்தனை காலமும் இவனது தமிழ் ஆசிரியரும், ரூமில் நானும், தமிழ் தியாகிகளும் சொன்ன போது அவனுக்கு புரியாத தமிழின் அருமை, "ழ", "ள", "ட்",ற்" சரியாக உச்சரிக்கத் தெரியாத சுருதிஹாசன் சொன்னபோது புரிந்திருக்கிறது.

எங்கிருந்து வந்ததோ அந்த இடம் சரியானதாக‌ இல்லாது இருப்பினும், இவனுக்கு வந்திருக்கிற உணர்வு நியாயமானது தானே? அல்லது அவனிடம் போய் "மச்சி! ‍ஸ்ருதி பேசுறது ஒழுங்கான தமிழே இல்லடா, அது எல்லாம் பொய் உன்னோட உணர்வும் பொய். நீ தென்கச்சி கோ சுவாமிநாதன் அல்லது சாலமன் பாப்பையாவோட‌ இன்று ஒரு தகவல் பாத்து தெரிஞ்சுக்க என்று சொன்னால், மறிபடியும் முருங்கை மரம் ஏறிவிட மாட்டானா? அவரவர்க்கு அவரவர் ரசனைக்கு உரியவர் சொனனால் தான் உறைக்கிறது. உணர்வு எங்கிருந்து வந்தது என்பதை விட , வந்து சேர்ந்த உணர்வு சரியாக இருப்பின் அந்த உணர்வை கொச்சைப்படுத்த வேண்டிய‌  அவசியம் இல்லையே!



அது போக நான் விடுமுறைக்காக ஊருக்கு போயிருந்த போது ஏழாம் அறிவு விவாதங்கள் சிலதை காதால் கேட்டேன். சுய நன்மை கருதி அவற்றில் கலந்து கொள்லவில்லை. இளைஞர்கள் பலருக்கு முருகதாசின் கபடநாடகம் புரிந்திருந்தது.  அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள்  சொன்னது ஒன்று எனக்கு மிகவும் பிடித்துப் போனது "போதிதர்மன் என்ற வேற்றினத்தானை காட்டி லாபபம் பார்க்க முருகதாஸ் முயன்றிருந்தாலும், அந்த படத்திற்கு ,பிறகு நமக்கு பரிட்சயமில்லாத தமிழ் அறிஞர்களை பற்றி அறிய வேண்டுமென்ற ஆர்வம் வந்திருக்கின்றது. அறியாத ஒன்றை அறிந்ததுமாச்சு, நாளைக்கு இன்னொருவன் வந்து ஒரு ஜப்பானியனைக்காட்டி இவன் ஒரு தமிழன் என்று சொல்லும் போது அவன் கன்னத்தில் நாலு போடுவதற்கு வசதியாகவும் இருக்கும்". இந்த விழிப்புணர்வு நியாயம் தானே?

போதிதர்மன் தமிழனாக இல்லவிடினும் அவன் காரணமாக , உண்மைத் தமிழ் அறிஞர்களை தேடி அறிந்து கொள்ள வேண்டுமென்ற அவர்களது உணர்வு பொய்யாகிப் போகுமா? அல்லது அந்த இளைஞர்களிடம் போய் "ஏழாம் அறிவைப் பார்த்துவிட்டு , தமிழ் அறிஞர்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்று  நீங்கள் நீங்கள் எடுத்த முடிவு தவறானது. போய் ஒள‌வையார் படத்தைப் பார்த்துவிட்டு அந்தமுடிவை எடுங்கள் அப்போது ஏற்று கொள்கிறோம் என்று சொல்ல சொல்கிறீர்களா?

ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் ஒவ்வொருவருக்கு ஒரு உணர்வைக் கொண்டுவந்து சேர்கிறது. மொக்கையாய் வந்த இந்த ஏழாம் அறிவு சில ஏற்கத்தக்க மாற்றங்களை விதைத்து சென்றிருக்கிறது.  அதற்காக படத்தைப் போன்று அந்த உணர்வுகளையும் கொச்சைப் படுத்துவது நியாயமில்லை என்றே எனக்குப் படுகின்றது.



தலைநகரில் தமிழில் கதைக்ககூசும் பெண்கள் சிலரை எனக்கு தெரியும். ஏழாம் அறிவுக்கு பின்னர் கொஞ்சமாவது தமிழ் அவர்கள் பேச முயற்சி செய்கிறார்கள் . அவர்களிடம் போய் படத்தில் சொன்னதெல்லாம் பித்தலாட்டம் , நீங்கள் உங்கள் ஆங்கிலத்திலேயே கதையுங்கள் என்று சொல்வது தான் தியாயமாக இருக்குமோ?

இல்லாத பேய் குறித்து உண்மையான பய உணர்வு வருவதில்லையா? அது போல தான் இதுவும். படம் மொக்கை தான், வெறும் வியாபர நோக்கில் வந்த ஒரு பிறழ்வான தமிழ் வரலாற்று கதைதான். நிச்சயம் அந்த இயக்குனைரை கண்டிக்கத்தான் வேண்டும். அந்த படம் குறித்த கொச்சைப் படுத்துதல்கள் அவரையே சாரும். ஒரு வகையில் அது நியாயமும் கூட.



ஆனால் அந்த படத்தின் தாக்கத்தால் உண்மையாகவே சிலரின் மனதில் எழுந்த உணர்வலைகள் பொய்யென்று ஆகாது.அது அவர்கள‌து பிழையுமல்ல. உண‌ர்வென்பது எப்போதும் மிகச்சரியாக இயங்கும் இடத்தில் இருந்துதான் வரவேண்டுமென்பதில்லை. அது பிறழ்வான இடத்தில் இருந்தும் வராலாம், உணர்வை ஏற்படுத்திய சம்பவம் எதிர் மறையாக இருப்பினும் ஏற்படும் உணர்வுகள் உண்மையாகவே இருக்கும்.

ஏனென்றால் தெனாபிரிக்காவில் மக்கள் சந்தோஷமாக வாழ்வதைப் பார்த்துவிட்டு காந்திக்கு சுதந்திர உணர்வு வரவில்லை. மாறாக எதிர்மறையான அடக்குமுறையை பார்த்த பின்புதான்  அவருக்கு சுதந்திர தாகம் வந்தது. இதனால் காந்தியின் சுதந்திர உணர்வு பொய்யென்று ஆகிவிடுமா?

ஏதோ எனக்கு சரியென்று பட்டதை சொன்னேன். இதற்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்ன சொல்கிறது?

Saturday, February 25, 2012

ஆச்சியின் மகன் ஸ்கைப்பில் வருவான்!


(காய்ச்சல் காரணமாக எனது சகோதரன் ஒருவனை கொழும்பு நகரின் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துவிட்டு , அவனது அறையின் வெளியே காற்று வாங்கிக்கொண்டிருக்கிறேன். அப்போது என் காதில் கேட்ட முனகலுக்கு புதுக்கவிதை சாயம் பூசி தந்திருக்கிறேன்.)




ஆந்தைகளும் உறங்கிவிடும்
அர்த்த ஜாம நேரமிது!
நோயாளர் விடுதியொன்றின்
கதவருகே நான்!


அருகிருக்கும் அறையொன்றில்
குரல் மட்டும் கேட்கிறது!
முகம் காண முடியாவிடினும்...
உலகின் எழுபது வருடத்தை
எண்ணிப்பார்த்துவிட்ட அனுபவத்தாய் என்று
அவள் குரல் வந்து காதோரம்
சேதி சொல்லி சன்னமாய் மறைகின்றது!


அவளைச்சுற்றி 
இருட்டு மட்டும் திருட்டுத்தனமாய்
விழித்துக் கிடக்கிறது!


தம்பீ! தம்பீ! என்னும்
அவளது ஈனக்குரல்களில்
நோயின் வலியைவிட‌
வாழ்வின் வடுக்கள்
கனத்து கனத்து
காற்றில் வருகிறது!


உயிர் தேய உயிர் தேய‌
முனகிப் பார்த்தவளின்
அறையிலிருந்துஅலாரம் அடிக்கிறது.


அங்கு 
தாதி வருகிறாள்......
ஏதேதோ சேதி சொல்கிறாள்!


"சாப்பிட்டியா"
தாதியிடம் அவள் கேட்கையில்
விழுங்க மறந்து மருந்து ஒழுகும்
அந்த வயோதிப வாயில்
பாசம் வழிகிறது.


அடுத்து ஏதோ 
பித்துப் பிடித்தவளாய்
தம்பீ எங்கே?
தட்சனா எங்கே?
வந்தனா எங்கே?
வருண் எங்கே?


இத்தனை கேள்விக்கும்
கொச்சைத் தமிழில்
தாதியின் பதிலோ
"எல்லாம் வெளியில இருக்கு"


பாதி புரிந்ததும்
சோர்ந்த நரம்புகளில்
சோம பானம் பாய்ந்தவளாய்......
 தாதியின் கைபற்றி
காதலுடன் அவள் கையில்
முத்தமொன்றும் தந்து
விடைகொடுத்து மகிழ்கிறாள்!


விழித்துக்கிடந்த விள‌க்கணைத்து
 தாதி சென்றதும் 
மீண்டும் அறைக்குள்
குருட்டு இருட்டு 
குடிவருகிறது!


வெளிவந்த தாதி
விழி தூக்கி
என்னிடம் சொல்கிறாள்! 
"பிள்ளைகள் எல்லாம் 
வெளிநாடு தம்பி
ஆச்சி தான் "


அந்த அன்பு ஆத்மா
தன் கதவுக்கு பின்னால்
தன் பிள்ளையும் பேராரும்
காத்திருப்பதாய் நம்பி 
கதை சொல்லத் தொடந்குகிறது!


அதைக் கேட்க என்னையும் 
தந்தி அறுந்த காற்றையும் தவிர‌
வேறெவரும் அருகிலில்லை!


யார் கண்டார் ?
ஒருவேளை நாளை அவள் மகன்
ஸ்கைப்பில் வரலாம்!

Friday, February 24, 2012

எங்கடா வச்சிருந்தீங்க இத இத்தனை நாளா?


இன்றைய போட்டி (24/02/2012, இலங்கை எதிர் அவுஸ்ரேலியா) பற்றி இந்த பதிவை பதிவுபோடவில்லையென்றால் எனக்கு தூக்கம் வரப்போவதில்லை. "கம் பக்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே.... அதாவது மீள்வருகை, அது இலங்கை அணிக்கு நீண்ட காலத்தின் பின்னர் இன்று தான் நடந்திருக்கிறது என்பேன். கடந்த உலகக்கிண்ண போட்டிகளோடு சங்கக்கார அணித்தலைவர் பதவியில் இருந்து விலகியதயடுத்து இலங்கை அணியின் அனுபவங்கள் அனைத்தும் கசப்பானதாகவே இருந்தது.



ஒரு சிறந்த வீரராக இனம்கானப்பட்ட டில்ஷான் அணித்தலைவராக சொதப்பினார். விளைவு இங்கிலாந்து , தென்னாபிரிக்கா என்று வாங்கிக் கட்டினோம். இங்கிலாந்தில் சில ஆறுதல் வெற்றிகள் கிடைத்த போதிலும் ஒட்டு மொத்த பெறுபேறுகள் ரசிக்கும்படியாய் இருக்கவில்லை. அதுபோக குறுகிய காலத்தில் அடுத்த அணித்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையை உருவாக்கியது , இலங்கை அணியின் தென்னாபிரிக்க பயணம் தான். தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியாகவும், 2012 இல் இலங்கை அணி விளையாடும் முதல் போட்டியாகவும் அமைந்த அந்த போட்டியில் இலங்கை அணி தன‌து மோசமான தோல்வியை பதிவுசெய்தது. தனது இத்தனை வருட ஒருநாள் கிரிக்கட் வரலாறில் பெற்றுக்கொண்ட அதி குறைவான எண்ணிக்கையான 44 ஓட்டங்க்ளை பெற்று படுதோல்ல்வி அடைந்தது இலங்கை அணி. அடுத்து வந்த இரண்டு போட்டிகளிலும் கூட இரவு தூங்க விடாமல் துர்க்கனவு வ‌ருகிற மாதிரியான தோல்விகள் தான் கிடைத்தது.

இந்த சூழ் நிலையில் தான் இந்த தொடருக்கு பின்னர் தான் தொடர்ந்து அணித்தலைவராக நீடிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்தார்/ எடுக்க நிர்பந்திக்கப்பட்டார் டில்ஷான். டில்ஷான் ஒரு சிறந்த அணித்தலைவராக பரிமளிக்க தவறியதன் காரணம் , அவருக்கு அணி வீரர்களின் பூரண ஒத்துழைப்பு இருக்கவில்லை என்ற கூற்றிலும் உண்மை இல்லாமல் இல்லை. இதற்கு தென்னாபிரிக்க சுற்றுப்போட்டியே சான்று. முதல் மூன்று போட்டிகளிலும் எனக்கு என்ன போச்சோ.... என்று ஆடிய வீரர்கள் , மூன்றாவது போட்டியின் முடிவில் ,தான் அணித்தலைவராக நீடிக்கப் போவதில்லை என்று டில்ஷான் அறிவித்தபின்பு , அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவர்கள் உயிரைக் கொடுத்து ஆக்ரோஷமாக ஆடியது முதல் மூன்று போட்டியிலும் இலங்கை அணி வீரர்கள் ஆடிய ஆட்டமுறைக்கு முற்றிலும் முரணாக இருந்ததை எல்லோரும் உணர்ந்திருப்பார்கள். அந்த கடைசி  இரண்டு போடிகளின் ஆறுதல் வெற்றியோடு டில்ஷான் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விடைபெற இரண்டாவது தடவையாக அணித்தலமை பொறுப்பேற்றார் பல வெற்றிக் கோப்பைகளை இலங்கைக்கு பெற்றுத்தந்தவரும், 2007 உலகக் கிண்ண இறுதிப்போட்டி வரை இலங்கையை கொண்டுசென்றவருமான  அனுபவ வீரர் மஹேல ஜய‌வர்த்தன.



மஹேல ஒரு சிறந்த தலைவர் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக்கருத்து இருந்ததில்லை. ஆனால் அவரது இரண்டவது தடவையான தலைவர் நியமனம் குறித்து நிறையவே முரண்பட்டுக்கொண்டேன்.  இது புதியதொரு வீரரை அணித்தலைவராக நியமிக்கும் நேரம், அது அடுத்த உலகக்கிண்ண போட்டிகளுக்கு இலங்கை அணியை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்பதே எனது வாதமாக இருந்தது. ஆகவே எனது தெரிவெல்லாம் ஏஞ்சலோ மத்தியூஸை சுற்றி இருந்தது. ஆனாலும் உலகக்கிண்ணத்துக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருப்பதால் அதுவரை இலங்கை அணியை வழிநடத்த ஒரு அனுபவ வீரர் வேண்டும் எனவும், மத்யூசுக்கு அந்த அனுபவம் போதாது எனவும் சில கிரிக்கட் அவதானிகள் கூறியதில் ஏதோ சிறு நியாயம் இருப்பது போல் இருக்க ஏற்றுக்கொண்டேன். ஆனாலும் இன்னும் சில முரண்பாட்டு கருத்துக்கள் என்னுள் இல்லாமல் இல்லை.

சரி அதை வேண்டுமானால் இன்னொரு பதிவில் பார்த்துக்கொள்ளலாம். என்னவோ உப தலைவராக இருந்து மஹேலவிடம் மத்தியூஸ் அனுபவங்களை கற்றுக்கொண்டால் சரி தான். ஆனால் உலககிண்ணத்துக்க்கு ஒரு வருடம் முன்னதாக அணித்தலைவர் பதவியை மத்தியூஸ் ஏற்றுக்கொள்வது உசிதமாக இருக்கும். அது அவருக்கு முன்அனுபவத்தை கொடுப்பதோடு,  இறுதிநேர அணித்தலைவர் சுமையென்ற மனஇறுக்கத்தையும் குறைக்கும்.



சரி இப்போது இன்றைய போட்டியும் , இலங்கையின் மீள் வருகையையும் பற்றி பார்ப்போம். மஹேலவின் இரண்டாம் அணித்தலைவர் அவதாரத்தின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவருக்கும், ரசிகர்களுக்கும் விழுந்ததென்னவோ பேரிடிதான். அவுஸ்ரேலியா இந்திய அணிகளிடம் வாங்கி கட்டினோம்.

அதன் பின்பு கிடைத்த இந்தியாவுடனான் சமநிலை மற்றும் வெற்றி அவுஸ்ரேலியாவுடனான வெற்றி என்பனவற்றை  இலங்கையின் மீள் வருகை என கொண்டாடவோ அல்லது மஹேலவின் தலைமைத்துவ திறன் இன்னமும் அற்றுப்போகவில்லை என குதூகலிக்கவோ நான் விரும்பவில்லை.

காரணம் இந்தியாவுடன் கிடைத்த சமநிலையானது டோனி மைதானத்தில் நின்றதால் வந்தது. அதே இடத்தில் யூசுஃப் பதானோ அல்லது ஷெவாக்கோ களத்திலிருந்திருந்தால் கதை வேறு. போட்டி ஒரு ஓவருக்கு முன்னமே முடிவுக்கு வந்திருக்கும். எல்லா புகழும் டோனிக்கே! அது போக எமது பந்துவீச்சாளர்கள் கூட ஏதோ வெசாக் தினத்தில் தானம் கொடுப்பது போல் ஓட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது இலங்கை அணியின் கர்ச்சனையாக கருத்தில் கொள்ள முடியாது.




அடுத்து அவுஸ்ரேலியாவுகு எதிரான போட்டி நாம் பாதி ஆடி மழை பாதி ஆடிய போட்டி. ஆக, அதுவும் வெற்றியை மழையுடன் பகிர்ந்துகொண்ட போட்டியாகப் போனது.

அடுத்து இந்தியாவுக்கெதிரான வெற்றி..... அச்சுறுத்தும் எந்தவித பந்துவீச்சாளர்களும் இல்லாத இந்திய அணிக்கெதிராக 280+ ஓட்டங்களை எடுத்ததென்னவோ பெரிய சாதனை கிடையாது. அது போக தான் ஒரு ஃபோர்முக்கு வரும் வரை மலிங்கவின் பந்தை எதிர் கொள்வதில் இன்னும் தடுமாறும் ஷெவாக்கையும், அத்தோடு சதத்தில் சதமடிக்கும் சிந்தனையில் தனது ஃபோர்மை தொலைத்துவிட்ட சச்சினையும் ஆரம்பத்திலேயே பறிகொடுத்துவிட்டு, இப்போதேல்லாம் எப்போதாவது அணிக்கு உதவும் டோனியையும் மைதானத்துக்கு வெளியே வைத்திருந்த இந்திய அணியுடனான வெற்றி , உலகக்கிண்ண தோல்விக்கு ஒரு பழிதீர்ப்பாக இருந்ததே தவிர , எமது வலுவான மீள் வருகையை நிரூபிக்க போதுமனதாக இருக்கவில்லை.



அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது இன்று தான். நாணய சுழற்சியில் வென்று வெற்றிக்கனவுடன் கள‌மிறங்கிய அவுஸ்ரேலிய அணிக்கெதிரான வெற்றி, ஒரு சாலச்சிறந்த வெற்றி என்பதோடு , இலங்கை அணியின் ஃபோர்மை மீண்டும் உலகுக்கு காட்டியிருக்கிறது. இலங்கையின் பந்துவீச்சாளர்கள் தங்கள் கடமையை துல்லியமாக செய்தார்கள் என்றே சொல்ல வேண்டும். முதல் இன்னிங்ஸ்சின் சராசரி ஓட்டம் 250+ ஆக இருக்கக் கூடிய ஒரு மைதானத்தில் , அவுஸ்ரேலியா போன்ற ஒரு பலமான அணி 280 ஓட்டங்களை பெறுவது ஒன்றும் பந்துவீச்சாளர்களின் பிழையல்ல. ஆனாலும் அவுஸ்ரேலியாவின் ஆரம்ப விக்கட்டுக்களை போட்டியின் ஆரம்பத்திலேயே சாய்த்திருந்த போதும், இவள‌வு தூரம் அவர்களை ஓட்டம் பெற அனுமதித்தது , இலங்கையின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளருக்கு வேலை இருப்பதையே சொல்கின்றது. அதுவும் நன்மைக்கே! இந்த பாரிய இலக்குத்தான் இலங்கையின் துடுப்பாட்ட வரிசையால் இது போன்ற பெரிய இலக்கை , அதுவும் அவுஸ்ரேலியா போன்ற ஒரு வலுவான அணிக்கெதிராக துரத்தி வெல்லமுடியும் என்ற நம்பிக்கையை வலுப்பெற செய்திருக்கின்றது.

அவுஸ்ரேலியா அணியை பொறுத்தவரை , தற்போது ஹல்ஃபின்ஹாஸ் (எயார் ஸ்விங், ரிவேர்ஸ் ஸ்விங் என்று மனிதர் மிரட்டுகிறார்), கிறிஸ்டியன், ஹாரிஸ் அத்தோடு மின்னல் வேக லீ உட்பட மிகவும் பலமான துல்லியமான பந்துவீச்சு வரிசையை கொண்டிருகிறது. அவுஸ்ரேலிய மண்ணில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் கூட 230+ ஓட்டங்களை அடித்து விட்டு , எதிர் அணிக்கு நெருக்கடியை கொடுக்குமளவிற்கு அதன் பந்துவீச்சு வரிசை பலமாக இருக்கிறது.



அவ்வாறான அவுஸ்ரேலிய பந்துவீச்சு வரிசைக்கு பதிலடிகொடுத்த‌ இந்த இலக்கு துரத்தலானது , இலங்கை அணியின் துடுப்பாட்டம் மீண்டும் ஒரு ஸ்திரமான நிலையை அடைந்திருப்பதையே காட்டுகிறது.

ஆரம்பவீரராக களமிறங்கும் அணித்தலைவர் மஹேல ஒருநாள் போட்டிகளில் 33+ சரசரியை கொண்டிருக்கிறர். அதுபோக அணித்தலைவராக அவரது ஒருநாள் போட்டி சரசரி 32+ ஆக இருக்கின்றது. ஆக இது அவரது ஆட்டத்திற்கு அணித்தலைவர் பொறுப்பு ஒரு தடையல்ல என்பதையே காட்டுகிறது. அத்தோடு நான்காம் நிலை வீரராக ஆடுவதைவிட , ஆரம்பதுடுப்பாட்ட வீரராக ஆ டுகையில் மஹேலயின் ஆட்டம் மிளிர்வது அனுபவ உண்மை. அந்த வகையில் மஹேலயின் இன்றைய ஆட்டம் வெற்றிக்கு அற்புதமான ஒரு அடித்தளமாக இருந்தது.

உபுல் தரங்கவின் வரவுக்கு பின்னர் ஏற்படப்போகும் மாற்றம் குறித்து சற்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். தரங்கவை பொறுத்த வரையில் மத்திய துடுப்பாட்ட வரிசைக்கு பொருத்தமில்லாதவர். அவரது இடம் ஆரம்ப துடுப்பாட்டம் தான். மஹேலவால் மத்திய வரிசையிலும் நன்றாக ஆட முடியுமென்பதால் , மஹேல கீழ் இறங்குவது தான் நல்லது.




டில்ஷான் ! எதிர்பார்பதைவிட குறைவாகவே செய்கிறார்.அவரை .......................... கட்டி மலையை இழுப்பவர் வகையறாவுக்குள் தெரிந்தோ , தெரியாமலோ சேர்த்து விட்டதால், அவர் சோபித்தால் சந்தோஷபட்டுகொள்ள வேண்டியதுதான். அதைவிட அவரிடம் பெரிதாக எதையும் எதிர் பார்க முடியாது. ஆனாலும் டில்ஷான் அணிக்கு நல்லதொரு ஆரம்பம் தராமல் இப்படியே ஏமாற்றுவது அவருக்கும் அணிக்கும் நல்லதல்ல.

சங்கக்கார! எப்போதும் நம்பிக்கை வைக்க கூடிய ஒருவர். இந்த "லீடிங் எட்ஜ்சுகள்" தான் அவரை பாடாய் படுத்துகிறது. இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரர் மஹேலவாக அறிவிக்கப்பட்டாலும் எனது வாக்கு சந்திமாலுக்கு தான். மொத்தமாய் இன்னமும் நாற்பது போட்டிகள் விளையாடாத நிலையில் , அப்படியொரு அனுபவம். எனக்கு சந்திமாலின் ஆட்டத்தை  பார்த்துக்கொண்டிருந்த போது அப்படியே மஹேலவை பார்ப்பது போன்றதொரு உணர்வு.

அடிக்கும் ஒவ்வொரு ஷொட்டிலும் லாவகம் + அனுபவ முதிர்வு தெரிகிறது. பிரட் லீயின் பந்துகளை , ஏதோ முந்நூறு போட்டிகள் ஆடிமுடித்து அனுபவம் கண்டவர் போன்று அடித்தாடிய விதம் இலங்கைக்கு இன்னுமொரு மஹேல கிடைத்தாயிற்று என்ற நம்பிக்கையை தருகின்றது. என்ன ஒரு குறை இளம் கால்கள் கிறீசுக்குள் நிற்க கூசுகிறது. அந்த இக்கட்டான , விக்கட்டுகள் இழக்கப்பட்ட நேரத்திலும் எப்படியாவது ஒரு ஆறு ஓட்டம் அடித்துவிட வேண்டும் என்ற முனைப்பை அவதானிக்க முடிந்தது. இது அவ்வாறான இக்கட்டான நேரத்தில் அணிக்கு ஆபத்தாய் முடியலாம். அனுபவம் மூலம் சந்திமால் கற்றுக்கொள்வார் என நம்புவோமாக. அது தவிர மிகவும் திறமையான ஒரு வீரர் தினேஷ் சந்திமால் .நிச்சயம் ஒரு நாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக சந்திமால் வருவார்.



அடுத்து லஹிரு திரிமானே..... லாவகமான ஆட்டம்+அதிரடி . சிறந்த ஒரு வீரராக வலம் வர வாய்ப்புக்கல் ரொம்பவே அதிகம்.  கடந்த போட்டிகளின் போதும் தன்னை நிரூபித்திருக்கிறார் திரிமானே. இன்னுமொரு இளைய நம்பிக்கை! திஷார பெரேரா! இன்றைய போட்டியின் இன்னுமொரு நாயகன். கடைசி நிமிட இருக்கை நுனி வேளையில் ஆறும் , நான்குமாக அடித்து அணிக்கும் , ரசிகர்களுக்கும் உற்சாகபானம் ஊற்றியவர். பத்து பந்துகளில் இருபது ஓட்டங்கள் என்றால் சாதித்துவிடும் திறன் இருக்கும் இவர், நான்கு விக்கட்டுகள் கைவசம் உள்ள நிலையில், பத்து ஓவர்களில் அறுபது ஓட்டங்கள் எடுக்க வேண்டுமென்ற நிலைவந்தால் தாக்குப்பிடிப்பாரா என்பதே இப்போது கேள்வி. சகலதுறை வீரரான இவர் ,அதிரடி மட்டுமல்லாது, சிறிது நிதான ஆட்டத்தையும் சேர்த்துக் கொண்டால் அடுத்த ஜக் கலிஸ் தயாராகிவிடுவார்.

மத்தியூஸ்! உப தலைவர், சகலதுறைவீரர். இன்றைய போட்டியில் திசார பெரேரா அடித்த ஆறு , நான்குகளில் இவர் அடிப்பர் என்று எதிர் பார்த்த வேளையில் ஏமாற்றிவிட்டு போய்விட்டார். ஆனாலும் எப்போதும் நம்பிக்கை வைக்ககூடிய ஒருவர், அணியின் இக்கட்டான நேரங்களில் நிதானமாகவும், தேவைக்கேற்ற அதிரடியுடனும் ஆடக்கூடியவர். சிறிது காலத்திற்கு முன்னர் தடுமாறினாலும், சமீபத்தைய தரவுகள் இவர் தேறி வருவதையே காட்டுகின்றன.



ஆக இலங்கை அணியின் துடுப்பாட்டவரிசை நல்லநிலையில் இருப்பதோடு, தங்களால் எந்த அணிகெதிராகவும் , எந்த இல‌க்கையும் துரத்த முடியும் என்பதையே காட்டுகின்றது.

பந்துவீச்சு எப்போதும் போலவே நல்ல நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் ஃபர்வீஸ் மஹரூஃபின் தெரிவில் தான் எனக்கு உடன்பாடில்லை. துடுபாட்டத்தில் சொதப்பல், பந்து வீச்சை கூட வித்தியாசம் காட்டுகிறேன் பேர்வழி என்று ஓவருக்கு ஜந்து 'ஸ்லோ " போல் போடுகிறார். அதை என்னவோ சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது போல அவுஸ்ரேலியர்கள் ஆடுகிறார்கள். ஓவருக்கு ஒரு ஸ்லோ போல் போட்டால் பரவயில்லை. ஓவரே ஸ்லோ போலாக இருந்தால்?



இலங்கை தெரிவுக்குழு செய்யவேண்டியதெல்லாம் இன்னும் நல்ல சில சகலதுறை வீரர்களை தயார் செய்து உலககிண்ணத்துக்கு இப்போதிருந்தே தயாராவதுதான்.

எது எப்படியோ மிக நீண்ட நாட்களுக்கு பிறகு , போட்டியின் கடைசி ஓவர் வரை நீண்ட ஒரு புல்லரிக்கவைத்த போட்டியாக இது அமைந்தது. இந்த வலுவான அவுஸ்ரேலிய அணிக்கெதிராக கிடைத்த வெற்றியானது இலங்கை அணியின் பலமான மீள் வருகையை காட்டுகின்றது, இது இலங்கை அணிக்கு மட்டுமல்ல , இலங்கை கிரிக்கட்டை ஒரு மதமாக நேசிக்கும் எத்தனையோ ஆயிரம் ரசிகர்களுக்கும் ஒரு மனோதிடத்தை கொடுத்துள்ளது.


Thursday, February 23, 2012

நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி ! இப்போ கேக்கவா வேணும்? பாகம் 2


பாகம் ஒன்றின் தொடர்சி. (பாகம் ஒன்றை படிக்க இங்கே சொடுக்குங்கள் http://www.kishoker.blogspot.com/2012/02/1.html)

எறிபோல்.

இந்த விதி சர்வதேச கிரிக்கட்டின் முறையற்ற பந்து வகையறாவுக்குள் அடங்கும். அதாவது கிரிக்கட்டில் அனுசரிக்கப்பட்ட விதிகளுக்கு ஒவ்வாத முறையில் (கைகளை மட்டக்கி) பந்தை வீசுவது.  இந்த "எறிபோல்" விதி எங்களுக்கு கைகொடுப்பது ஆறாம் தரம் 'பி' வகுப்புடன் (நாங்க ஆறாம் தரம் "ஏ" வகுப்பு) கிரிக்கட் ஆடும் போதுதான்.

ஜந்தாம் ஆண்டிலேயே முறையாக பந்துவீச கற்றுக்கொண்டேன், (எப்படி என்று தெரியவில்லை). எனவே இந்த எறிபோல் விதியின் பக்கவிளைவுகளில் இருந்து நான் தப்பித்துவிடுவதுண்டு. நாங்கள் ஆறாம் ஆண்டு படிக்கும் போது எங்களது 'ஏ' வகுப்பில் என்னோடு சேர்த்து இன்னொரு பையனும் முறையாக பந்துவீசுவான். "பி' வகுப்பு தான் பாவம். எல்லோருமே "எறிபோலின்" வாரிசுகள் தான். இந்த விதி பயன்படுத்தப்பட்டவிதத்தை பாருங்கள்.




 "பி" வகுப்பில் யாருமே முறையாக பந்துவீச மாட்டார்கள் என்பதால், எறிபோல் போடுவது ஆட்டத்தில் முறையற்றது என்று தெரிந்தும் அது அனுமதிக்கப்படும். ஆனால் அதற்கு தண்டனை வேண்டாமா? வைத்திருந்தோம் பாருங்கள் ஒரு விதி! ஜ.சி.சி யும் யோசனை செய்திராத ஒரு விதி. அதாவது எறிபோல் போடும் ஒருவரது ஓவருக்கு எந்தவித ஆட்டமிழப்பும் கிடையாது. (ரன் அவுட் தவிர) . எங்களது வகுப்பில் நானும் , முறையாக பந்துவீச தெரிந்த எனது மற்றைய நண்பனும் மாறி மாறி பத்து ஓவர்களையும் முழுமூச்சில் போட்டு முடித்து விடுவோம்.

"பி" வகுப்பு களத்தடுப்புக்கு வரும் போதுதான் இருக்கிறது கதை. உடனே நாங்கள் கேட்போம் "மச்சான்! எறிபோலுக்கு நோபோல் பிடித்து ரன் சேர்ப்பதா? அல்லது நோபோல் பிடிக்காமல் , எந்தவித அவுட்டும் இல்லை என ஆடுவதா? என்று. எனக்கு தெரியும் நாங்கள் எதிர் பார்க்கும் பதில் தான் என்று. "இல்ல மச்சான்! நோ போலுக்கு அவுட் இல்லை என்றே விளையாடுவோம்" . ஏன் என்று சொன்னால் "எறிபோலை" நோபோலாக எடுத்துக்கொண்டால் பந்தும் கணக்கில் சேராது, அது போக ஒவ்வொரு பந்துக்கும் மன்னிக்கவும் எறிக்கும் நாங்கள் ஓட்டம் ஒன்றை சேர்த்துக்கொண்டே இருப்போம். ஆக எந்தவித பந்தும் வீசப்படாமல் போட்டியில் தோற்றுவிட்டுப் போக அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை.



பின்பு என்ன எங்கள் காட்டில் மழைதான். ரன் அவுட் தவிர எந்த அவுட்ட்டும் தான் கிடையாதே..! விருப்பம் போல ஆட்டத்தொடங்கிவிடுவோம். "டில்ஸ்கூப், பீற்ரர்சன் ரிவேர்ஸ் ஷொட், டோனி ஹெலிஹொப்டர் ஷொட் " என்பன இவர்கள் முயற்சி பண்னும் முன்னமே நாங்கள் அவற்றில் டிப்பிளோமா முடித்திருந்தோம். (எந்த அவுட்டும் தான் கிடையாதே , பின்பென்ன கவலை?) எங்களை வெல்ல வேண்டுமென்றால் அதிக ரன் அடித்து , அந்த ரன்களுக்குள் எங்களை சுருட்டினால் தான் உண்டு. எங்களை "ஓல் அவுட்டாகி" வெற்றி பெற்ற கதை எந்த சரித்திரம், பூலோகம் எதிலும் இருந்ததில்லை. அதே போல் எங்களது வெற்றிகள் எல்லாம் பத்து விக்கட்டுகளால் வென்ற கதையாகத்தான் இருக்கும். இந்த மானம் கெட்ட வெற்றியை வென்றுவிட்டு "இந்த அடி போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்ற நக்கல்கள் வேறு.

இந்த வெற்றி மிதப்பை அடுத்தநாள் பள்ளிக்கூடத்தில் மிதப்பாக எங்கள் வகுப்பு பெண்களிடம் சொல்லி, அவர்கள் "பி" வகுப்பு ஆண்களை நக்கல் அடிக்கப்போய், மைதானத்தில் நாங்கள் அடித்த நக்கல்களையெல்லாம் தலைகுனிந்து கேட்டுக்கொண்டிருந்துவிட்டு எங்கள் வகுப்பு பெண்கள் லேசாக நக்கலாய் சிரித்த காரணத்தால் உள்ளிருந்த மானம், ரோஷம், வெங்காயம், வெள்ளைப்பூடு எல்லாம் வெளிவர அந்த "பி" வகுப்பின் கவரிமான் குஞ்சுகள் , எங்களை அடி பிழிந்து எடுத்த கதைகளும் அடக்கம். இந்த அடிபிடியிலும் நாங்கள் தான் வெல்லுவோம். அவர்கள் எங்களை அடிக்கத்துரத்த நாங்கள் வெற்றிகரமாக அவர்களை முந்திக்கொண்டு முன்னே ஓடிக்கொண்டிருப்போம். திருப்பி அடிப்பதெல்லாம் ஹி....ஹி...ஹி... அத்தனை முரடர்களும் அவர்கள் வகுப்பில் இருந்தர்கள்.



ஒரு ஆளுக்கு மூன்று ஓவர்கள்.

கிரிக்கட்டில் ஜந்து பந்துவீச்சாளர்கள் கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டுமென்பது விதி. அது எங்களுக்கு அப்போது சுத்தமாக‌ தெரியாது. இப்போது கூட பல்கலைக்கழகத்தில் இந்த விதியை பெரும்பாலும் கடைப்பிடிப்பது இல்லை. ஆனால் விஷயம் அதுவல்ல. அது தொடர்பானது தான்.

எங்களது நம்பிக்கையெல்லாம் ஒரு பந்துவீச்சாளர் எத்தனை ஓவர் வேண்டுமென்றாலும் போடலாம். அது போக நாங்கள் வகுத்திருந்த அல்லது அப்படியொரு விதியிருப்பதாக நம்பிய விதியை கேளுங்கள். அதாவது ஒரு பந்துவீச்சாளரால் தொடர்ச்சியாக மூன்று ஓவர்கள் பந்து வீச முடியும். அதன் பின்பு அவரால் எந்தவித ஓவரும் போட முடியாது. உதாரணமாக அது ஜம்பது ஓவர்கள் கொண்ட போட்டியாக இருந்தால் , ஒரு பந்துவீச்சாளர் விரும்பினால் முதல் மூன்று ஓவர்களையும் தொடர்ச்சியாக வீசலாம். அதன் பின்பு அவருக்கு பூரண ஓய்வுதான். அவரால் மேற்கொண்டு பந்துவீச முடியாது. அப்படி இல்லை என்றால் அவரால் இருபத்தைந்து ஓவர்கள் அதிகபட்சமாக வீச முடியும்.



எனக்கு தெரிந்து இந்தவிதி எங்களது தப்பான விளக்கத்தால் வந்திருக்கவில்லை.இது எங்களது சுய லாபத்துக்காக நாங்களாக உருவாக்கியது. ஏனென்றால் "மடையன் சந்தி" ஏரியா அணியுடன் நாங்கள் போட்டிக்கு போன போதே இந்த விதி தொடர்பாக நான் அறிந்து கொண்டேன். அந்த அணியுடன் நாங்கள் எப்போதும் வென்றது கிடையாது. அந்த அணியில் ஆடும் சுமன் என்பவன் எமகாதகன், எப்படி பந்துபோட்டாலும் அடிப்பான். வயதிலும் பெரியவன். அவன் தான் அவர்களது ஒரே நம்பிக்கை. அன்றொருநாள் நண்டுவலை தெரிப்பதற்கு என்று அவன் போய்விட்டான். பந்தயதொகை வேறு பெரிதாக இருந்தது. ( இரண்டு பெப்ஸி). எங்களது அணியில் நான் , எனது மச்சான் சயந்தன் என்னும் இரண்டு பேர் நன்றாக பந்துவீசுவோம் (அதாவது எறிபோல் இல்லாமல்). அதிலும் எனது மச்சான் சயந்தன் என்னைவிட மூன்று வயது மூத்தவன் , அந்த வயதிலேயே எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்து வீசுவான்.


அவன் தான் அந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தினான். சுமன் இல்லாவிட்டால் ஒரு சிலரைத்தவிர அனைவரும் சொத்தைகள். உடனே இந் த விதியை கொண்டுவந்தான் சயந்தன். ஆரம்பத்தில் தயங்கிய அவர்களுக்கு , தானே பார்த்திராத ஒரு போட்டியை சொல்லி அந்தபோட்டியில் சமிந்த வாஸ் இவ்வாறு பந்துவீச நடுவர் அனுமதித்தார் என்று  போட்டான் ஒரு போடு. புதியதொரு விதியோடு ஆரம்பமானது ஆட்டம் தனது முதல் மூன்று தொடர்ச்சியான ஓவர்கள் நிறைவில் எதிரணியின் ஆறு விக்கட்டுக்களை சாய்ய்த்திருந்தான் சயந்தன். ஏற்கனவே சுமன் என்ற அஸ்திவார கல் இல்லாமல் ஆட்டம் கண்டிருந்த அவர்களது அணியின் முதல் முக்கிய ஆறு செங்கற்களை உருவிய பிறகு , மிச்சமாய் இருந்த சொத்தை சுவரை சாய்ப்பதற்கு சயந்தனுக்கு வாய்ப்பிருக்கவுமில்லை, தேவையுமிருக்கவில்லை. அந்த வேலையை நாங்களே செய்துமுடித்திருந்தோம்.




தொழிலால் வந்து சுமன் தங்களது அணிவீரர்களிடம் கத்திக்கொண்டிருக்க,  நாங்கள் கீதா அக்காவின் வெறிக்காய் மர நிழலில் உட்கார்ந்து , இரண்டு பெப்சியை சரிசமமாய் பிரிப்பதற்கு சண்டை போட்டுக்கொண்டிருந்தோம்.அதன் பின்பு அந்த விதி எங்கள் ஊர் முழுதும் பின்பற்றப்படலாயிற்று. சொத்தையாய் ஓரிரண்டு பேரை எதிரணியில் கண்டால் போதும்!  இந்த விதியை கையிலெடுத்துக்கொண்டு பந்துவீச்சாளர்கள் தங்கள் வீரத்தை காட்ட தொடங்கினார்கள். இரண்டு வருடத்துக்கு முன்னர் கூட நான் எனது சொந்த ஊருக்கு போன போதுகூட இந்தவிதி "கஸ்பார் பிட்டி" மைதானத்தில் நடைமுறயில் இருக்கக்கண்டு அதிசயித்து போனேன். என்னைகூட அந்தவிதியின் மூலம் பந்துவீச செய்து ஒரு வெற்றிக்கு அடித்தளம் போட்டர் ஒரு அணித்தலைவர். சிரித்துகொண்டே பந்துவீசினேன். உண்மையை சொல்லவில்லை ஏனென்றால் எதிரணியில் ஆடியவர்கள் அத்தனை பேரும் சொத்தையாய் இருந்தார்கள். ஹி..ஹி..ஹி..

அது போக ஆட்டமிழப்பு தொடர்பாக இன்னும்சில விதிகளுமிருந்தது. அதாவது ஒருவர் நான்கு ஓட்டங்களுக்கு மேல் ஓடிவிட்டால் ஒவர் ஆட்டமிழந்துவிடுவார். மற்றொன்று துடுப்பாட்ட மட்டையின் பின்புறத்தில் பந்து பட்டதை எதிரணி வீரர்கள் கண்டு விட்டால் "அம்பியார் பிற பெற்... அம்பியார் பிற பெற்...." என்று கத்திகொண்டே ஓரிவருவார்கள். நமது பக்கமாக இருந்தாலும் கூட கடமையே கண்ணியம் என்று ந‌டுவரும் ஈவு இரக்கமில்லாமல் ஆட்காட்டி விரலை தூக்கிவிடுவார்.அப்புறம் என்ன துடுப்பை தூக்கி அக்குளில் வைத்து நடக்கவேண்டியதுதான்.ஆக துடுப்பாட்ட மட்டையின் பின்புறத்தில் பந்துபடுவது விதிகளுக்கு முரணானது என்பதே எங்கள் நம்பிக்கை.



இன்னும் சில சுவாரசியமான விதிகள்.

ஒரு விக்கட்காப்பாளர் எந்த சூழ்நிலையிலும் பந்துவீச முடியாது. அதுபோல் பந்துவீசிய ஒருவர் எந்த சூழ் நிலையிலும் விக்கட் காப்பாளராக கடமையாற்ற முடியாது. அப்படி தப்பி தவறி இதில் ஏதாவது ஒன்று நடந்தால் கூட நடுவர் 'நோபோல்" பிடித்துவிடுவார்.

எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் "பிட்ச்' இல் வைத்து பிடியெடுப்பொன்றை நிகழ்த்த முடியாது. துடுப்பாட்ட வீரரால் அடிக்கப்பட்டு பந்து நேராக பிட்ச்சுக்கு மேலே எழும்பினால் , ஒரு களத்தடுப்பாளராக நீங்கள் செய்யவேண்டியது "தேமே" என்று பார்த்துக்கொண்டு நிற்பதுதான். பந்து நிலத்தில் விழுந்தவுடன் நீங்கள் ஓடிப்போய் பொறுக்கலாம். ஹி...ஹி...ஹி.... !!

அது போக இன்னுமொரு கொடுமை நடக்கும் ,  பந்து அடிக்கப்பட்டு பிட்சுக்கு வெளியே சற்று அருகில் மேலெழும்புகிறது என வைத்துக்கொள்வோம் . நீங்கள் அந்த பந்தை பிடியெடுக்க‌ முயற்சி செய்யாமல் இருப்பது அதி உத்தமம். நீங்கள் முயற்சி செய்வது கண்டால் , துடுப்பாட்ட வீரர் ஓட்டம் பெறுவது போல் ஓடிவந்து உங்களை இடித்து தள்ளி, அல்லது உங்களது முகத்துக்கு நேரே துடுப்பை உயர்த்தி , ஹீ ஹீ ஹீ ஹீ ஹா ஹா ஹா ஹா என்றெல்லாம் கத்தி காட்டாத விளையாட்டெல்லம் காட்டுவார். எங்களது விதிகளில் இது அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆக உங்கள் முகத்தை காத்துக்கொள்ளும் பொருட்டு அந்த பிடியெடுப்பை நழுவ விட்டு "கெட்ச்சை புடிடா நாயே" என்று தலைவரிடம் திட்டு வாங்குவது புத்திசாலித்தனம். நான் கூட நிறைய தடவை புத்திசாலி என்று நிரூபித்திருக்கிறேன்.



அது போக நீங்கள் பிடியெடுப்பொன்றை நிகழ்த்திவிட்டு ஆர்வமிகுதியால் பந்தை வீசியெறிய , அது போய் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். கதை அதோ கதி தான்.... அது ஆட்டமிழப்புமல்ல ,அத்தோடு அது ஆறு ஓட்டமாக கணக்கில் கொளப்படும். (இந்த விதியை சரியென நான் இலங்கை நடுவர் சம்மேளன போட்டிப்பரிட்சையில் சித்தியடையும் வரை சரியெனவே நம்பிக்கொண்டிருந்தேன்)

மேற்சொன்னவை எல்லாம் உண்மையாக கிரிக்கட்டில் விதிகளாக இருக்கின்றன என நாங்கள் நம்பியவை. இன்னும் சில விதிகள் எங்களுக்கு அவை விதிகள் அல்ல என்று தெரிந்தும், ஆடும் இடங்களை கருத்தில் கொண்டும், அல்லது ஆடும் நேரங்களை கருத்தில் கொண்டும் நாங்கள் உருவாக்கியவை. சொல்லப்போனால் இவை "கிரவுண்ஸ் ரூல்ஸ்" என்று சொல்லலாம்



மைதான விதிகள்.

பொது கீப்பர்.

இந்த விதியை நாங்கள் தர்மசங்கடமான நேரங்களில் தான் பயன்படுத்துவோம். அதாவது இரண்டு அணிகளிலும் சமமாக பிரிக்கப்பட்ட நேரத்தில் யாரவது இடையில் வந்து விலையாட்டுக்கு சேர்ந்தால் அவரை உடனே பொதுகீப்பராக்கி விடுவோம். எந்த அணி களத்தடுப்பில் ஈடுபட்டாலும் அவர் தான் விக்கட்காப்பாளராக இருப்பார். ரொமேஷ் களுவுதாரண விக்கட் காப்பாளராக புகழின் உச்சியில் இருந்த நேரத்தில், இவ்வாறாக பொது விக்கட் காப்பாலராக கடமையாறுவதில் எல்லோருக்கும் ஒரு சொல்லமுடியா கர்வம் இருந்தது.எல்லா புகழும் களுவுதாரணவுக்கே....!!  நான் கூட எங்காவது விளையாடப்போனால் நான் பொது கீப்பர் என்று ஓரத்தில் நின்று விடுவேன். ஆனால் துரதிஷ்ரவசமாக எனது பந்துவீச்சு காரணமாக யாரும் என்னை விக்கட் காப்புக்கு அனுமதிப்பதில்லை.



ஒரு அவுட்டுக்கு ரெண்டு அவுட்

இது பெரும்பாலும் நடைமுறைக்கு வருவது , எப்போதெல்லாம் எங்கள் அணியை வலுவாக வைத்திருக்க விரும்புகிறோமோ அப்போதெல்லாம் இந்தவிதி அறிமுகம் ஆகும். உதாரணமாக என்னோடு நன்றாக ஆடக்கூடிய ஆட்களை நான் சேர்த்துக்கொண்டு எதிர் அணிக்கு வெறும் மட்டை மட்டுமே பிடிக்க தெரிந்த ஆட்களை பிரித்துவிடுவது. கடுப்பாகும் அவர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பார்கள் உடனே "நீங்கள் ஒவ்வொருவரும் இரண்டு தடவை ஆடலாம்" என்று சொல்லி சமாளித்து விடுவோம் .அதாவது ஒருவர் ஆட்டமிழந்த பிறகு இன்னொருமுறை ஆடலாம் . இந்த சலுகை ஏலம் போல் நீளும் . எதி அணி எங்கள்து ஒன்ருக்கு இரண்டு கோரிக்கையை ஏற்கவில்லையானால் சலுகையை ஏற்ற வேண்டும்.எங்களை விட சிறுவர்களுடன் ஆடப்போனால் இந்த ஏலம் நீண்டு ஒன்றுக்கு ஜந்து என்ற கணக்கில் எல்லாம் வந்து நிற்கும். கடைசியில் விளையாட்டுக்கு ஆசைப்பட்டு அவர்களை ஒவ்வொருவரையும் ஜந்துமுறை ஆட்டமிழக்க வைக்க மூச்சிரைக்க பந்துவீசி , அந்த களைப்பில் ஒழுங்காக துடுப்பாட முடியாமல் தோற்று , எங்களை விட பொடிசுகளின் வாயால் "இந்த அடி போதுமா......" கேட்ட வரலாறுகளும் உண்டு.

பந்து தொங்கினால் இரண்டு ரன்.

எங்களது எந்த ஆடுகளமுமே ஒரு பொதுவான அம்சத்தை கொண்டிருக்கும். அது தான் வெறிக்காய் மரம். இலங்கை , இந்திய போன்ற நாடுகளில் இது காணப்பட்டாலும் வேறு வேறு பெயர்களால் இது அழைக்கப் படலாம். துர் அதிஷ்ரவசமாக உங்களுக்கு விள‌ங்க வைக்க எனக்கு வேறு பெயர்கள் தெரியவில்லை. எங்கள் ஊரில் இது "வெறிக்காய் மரம்" என் செல்லமாக அழைக்கப்பட்டது. இந்த மரத்தின் காய்களை நாங்கள் தின்று விடகூடாது என்பதற்காக "இந்த மரத்தின் காய்களை தின்றால் வெறி வரும் " என்று கால காலமாக கதை கட்டி விட்டிருந்தார்கள். எனவே அதற்கு இந்த பெயர்.



என்னதான் சொன்னாலும் எங்கள் மைதானம் முழுதும் தேசிய மரமாய் பரந்து இருப்பதெல்லாம் இந்த மரம் என்பதால் , இதன் காய்கள்தான் எங்களது "பபுள் கம்". கிழிந்து போன காற்சட்டை பைநிறைய இந்த காய்களை அடுக்கி வைத்துக்கொண்டு ஆட்டத்தின் போது பபுள் கம் போல மென்றுகொண்டிருப்போம். அதிலும் அந்த மரத்தின் காயோ, பழமோ உண்பதற்கு நன்றாக இருக்காது. காய் கசக்கும், பழம் ஒரு மாதிரி உலர்ந்து போய் சவ.. சவ என்றிருக்கும். ஆக எல்லோரது தெரிவும் செங்காய் தான். அதிலும் சப்பையாக இல்லாமல் முட்டியாக இருந்தால் விருந்து தான். சிறு புழிப்பும் இனிப்புமாக தேவாமிர்தமாக இருக்கும். அந்த மாதிரியான முட்டியாக பழங்கள் கொண்டிருக்கும் மரங்களை தேர்ந்து வைத்திருப்போம். அந்த அற்புதமான பழத்தை சாப்பிட்டால் ஏன் வீட்டில் அடிக்கிறார்கள் என்பதே எனது மில்லியன் டாலர் கேள்வி.

வெறிக்காய் மரம்


சரி விசயத்துக்கு வருவோம். அந்த வெறிக்காய் மரம் ஊசி இலைகளும் , முட்களுமாக  நிறைந்தது இருக்கும். அதில் போய் பந்து விழுந்தால் மறுபடி கீழே விழுவது வெறும் 5% சாத்தியம் தான். எனவே விதியொன்றை உருவாக்கினோம் பந்து மரத்தில் தொங்கிவிட்டால் மேலதிகாமக ஓட முடியாது. தொங்கிடிட்டால் இரண்டு ஓட்டங்கள் வழங்கப்படும். மெல்போர்ன் மூடுமைதானத்தின் கூரையில் பந்து பட்டுவிட்டால் ஆறு ஓட்டங்களும், ஸிம்பாப்வேயின் மைதானத்துக்கு நடுவே வளர்ந்திருக்கும் மரத்தின் வேரில் பட்டால் நான்கு ஓட்டங்களும் கொடுப்பதில்லையா ? அது போல் தான் இதுவும். இது மர‌த்துக்கு மட்டுமல்ல வேறெதிலும் பொருந்தும்.


வளவுக்குள் போனால் அவுட்.

இந்த விதியானது ஆட்ட மட்டுபத்தல் மற்றும் பந்து பாதுகாப்பு சட்டங்களுக்கு அமைய உருவக்கப் பட்டது. எங்களது கிரிக்கட் காய்ச்சல் ஊர் முழுதும் பரவிக்கிடந்தது என்னவோ சில பெரிசுகளை எரிச்சல் படுத்தியிருக்க வேண்டும். பந்துகளை நாங்கள் அடிக்கும் போது அவர்களது வளவுக்குள் (காணிக்குள்) போய்விட்டால் பந்தை எடுத்து ஒழித்து வைப்பதும் , அதன் பின்பு அடுத்தநாள் அதை இரண்டாய் வெட்டி எங்களது மைதானத்தில் எறிந்து "நீங்கள் யாருடன் மோதுகிறீர்கள் தெரியுமா?" என்ற தொனியில் எச்சரிக்கை செய்வதும் வாடிக்கையாகிப் போனது.

விளையாடுகிறோம் பேர்வழி என்று அவர்கள் யன்னல் கண்ணடிகளை உடைப்பதும், பந்து அவர்கள் வீட்டின் உள்ளே விழுந்தவுடன் தாம் தூம் என்று மதில் பாய்ந்து பந்து எடுக்கப் போய் அவர்கள் பூச்செடிகளை நாசம் பண்ணியதும் அவர்கள் கடுப்புக்கு காரணமாக  இருக்கலாம். ஆனால் சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கிறது? விளையாட்டு என்று வந்தால் கண்ணாடிகள் உடைவதும் , பூசட்டிகள் நொருங்குவதும் சகஜம் தானே? ஆக நான் இலங்கை அணியில் தலைவராக இல்லாமல் , இப்படி வெட்டியாக உக்கார்ந்து மொக்கை பதிவுகள் போடவேண்டுமென பதினைந்து வருடத்துக்கு முன்னமே எனது ஊர் சதி பண்ணி இருக்கிறது.



சரி அதை விடுவோம்..! எங்கள் அதிரடி மன்னர்கள் அடிக்கடி தங்கள் வீரத்தை காட்டப் போய் நாளுக்கு ஒரு பந்து தொலைவதை தடுக்க ஒரு விதியை அறிமுகம் செய்தோம். அதாவது எந்த வளவானது சர்ச்சைக்குரியதோ அதற்குள் பந்தை அடிக்கும் நபர் ஆட்டமிழந்துவிடுவார். அது போக அடித்தவரே பந்தையும் எடுத்து வரவேண்டும். அந்த வீட்டு நாயோ, வீட்டு உரிமையாளரோ பாராத சமயம், லாவகமாக  பந்தை எடுத்து வருவது அவரவர் சாமர்த்தியம்.

இந்த விதியை இப்போது கூட அனுசரிக்கின்றோம். நான் ஊருக்கு விடுமுறையில் போகும் போது எங்களது அண்டை வீட்டாருக்கு (முன்பு அங்கே எல்லா விதத்திலும் எனக்கு உற்சாகம் தரும் நிரூபன் அண்ணா குடும்பம் இருந்தது. இப்போது நிலமை தலை கீழ்) நாங்கள் அந்த தெருவில்  கிரிக்கட் ஆடுவது பிடிக்காது. காரணம் காண்ணாடி உடைவது ம‌ட்டுமல்ல. அவர்கள் வீட்டில் அத்தனையும் (ஆறு பிள்ளைகள்)  பெண்ண்கள். கேட்கவா வேண்டும்? ஏற்கனவே நாங்கள் எம்.பி.எல் (மூர்ஸ்ரீற் கிரிக்கட் லீக்) என்று ஒன்று தொடங்கி , அந்தன் சீசன் முடிவில் அனது நண்பன் ஒருவன் அந்த வீட்டின் மூத்த பெண்ணை தளிக்கொண்டு போய்விட்டான். அதன் பின்பும் அங்கே போன பின்பு பந்து திரும்பும் என்று எப்படி எதிர்பார்ப்பது?



எனது நண்பன் எம்.பி.எல் ஆட வரும்போது எல்லாம் . "நான் கீப்பர் நிக்கிறேன் மச்சான்" என்னும்போதே நான் சுதாகரித்திருக்க வேண்டும். ஏனென்றால் கீப்பர் நின்றால் அந்த வீட்டின் கதவு நேராக தெரியும். அப்படித்தான் அந்த காதால் காவியம் உருவாகி எனது பல "டன்லப்" பந்துகளுக்கு ஆப்பு வைக்க காரணமானது.இப்போது கூட இன்னுமொரு ஜந்து எம்.பி.எல் சீசனுக்கு திட்டமிட்டு இருப்பதாக நண்பர்கள் வட்டரத்திலிருந்து செய்தி. அதிலும் ரெண்டவது சீசன் ஆரம்பமாகி விட்டதாம்.  எனக்கென்னவோ ஆறாவது சீசன் முடிவில் அந்த வீட்டுக்காரரும் அவரது மனைவியும் தான் மிஞ்சுவார்கள் என நினைக்கிறேன். யார் கண்டார் ஏழாவது சீசன் நடத்தி அந்த வீட்டுக்காரரை மட்டும் மிச்சம் வைப்பார்கள் என நினைக்கிறேன்.

மிகச்சரியான விதிகளோடு விளையாடப்பட்ட கிரிக்கட்டைவிட , நாங்கள் விளையாடிய விருத்தறியா கிரிக்கட் எனக்கு  நிறைய சந்தோஷத்தை தந்தது அதைவிட நிறைய கற்றுத்தந்தது. அதை பகிரும் போது அதை மீண்டும் அனுபவித்த சுகம் எனக்கு. அவ்வாறான உங்களது பால்ய பருவ விளையாட்டு அனுபவத்தை இந்த பதிவு தரும் என்ற நம்பிக்கையில் நான்.
Local children play cricket on February 24, 2011 in Nagpur, India.


பாகம் ஒன்றை படிக்க இங்கே சொடுக்குங்கள்

Wednesday, February 22, 2012

நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி ! இப்போ கேக்கவா வேணும்? பாகம் 1


நமது வாழ்க்கையில் நாம் உண்மையென்று நம்பி கடைப்பிடித்த சில விடயங்கள், இப்போது நினைக்கையில் சிரிப்பை வரவழைக்கும். அது எப்போதும் பசுமையான நினைவுகளாகவே இருக்கும்.எனது ஆரம்பகால கிரிக்கட் விளையாட்டுக்கள் கூட அந்த ரகம் தான். இவைதான் விதிகள் என்று நாங்கள் கடைப்பிடித்த கிரிக்கட் விதிகள் வேடிக்கையானவை, இப்போது நினைக்கயிலும் அந்த நாட்கள் மீளாதா என ஏங்க வைப்பவை. எனது நண்பர்களிடம் விசாரித்ததில் அவர்களும் இம்மாதிரியான விதிகளை கொண்டு ஆடியவர்களாகவே இருக்கிறார்கள்.



இந்த பதிவின் நோக்கம் அவ்வாறாக நாங்கள் கடைப்பிடித்த எங்களது கிரிக்கட் விதிகளை சொல்லி, அதன் மூலம் நீங்கள் சிருவயதில் ஆடிய அந்த விருத்தறியா விளையாட்டு விதிகளின் பசுமையான நினைவுகளை மீள கொண்டு வருவதே.

அப்போது எனக்கு வயது ஏழு.1996 உலக கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியவுடன் தான் எங்களது கிராமத்தில் கிரிக்கட் காய்ச்சல் ஆரம்பமானது.ஏன் முழு இலங்கைக்குமே அதன் பின்புதான் கிரிக்கட் ஒரு மதமாய் மாறியது எனலாம். எனது கிராமம் நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 25 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் அமிந்திருந்தது. அது போக உள்நாட்டு யுத்த வேளைகளில் நாங்கள் ராணுவ கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் இருந்தோம். எனவே அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துமே மட்டுப்படுத்தப்பட்ட வரவுதான். எனவே ஒழுங்கான கிரிக்கட் உபகருணங்கள் (மென்பந்து உபகருணங்கள்) எங்களிடம் எப்போதுமே இருந்தது கிடையாது.



விதிவிலக்காக எங்களது ஊரின் விளையாட்டு கழகத்திடமும், நகர பகுதி பாடசாலைக்கு படிக்கச் சென்று விடுமுறையில் ஊருக்கு வரும் ஒருசிலரிடம் மட்டுமே ஒழுங்கான கிரிக்கட் உபகருணங்கள் இருந்தன. ஆனால் அவையும் வளர்ந்தோருக்கு மட்டும் என்று முத்திரை குத்தப்படிருந்ததால் எங்களால் அதை தூர நின்று ரசிக்க மட்டுமே முடிந்தது. ஆனாலும் எங்களுக்கென நாங்கள் உருவாக்கிக்கொண்ட கிரிக்கட் உபகருணங்கள் தான் எங்களுக்கு கை கொடுத்தன. இவைதான் அனேக ஏரியா அணிகளிகளுக்கு கை கொடுத்தன.

ஆடுகளங்கள்.

எங்கள் மைதனங்கள் சந்தர்பத்திற்கு ஏற்ப வேறு படும். அனேகமாக எங்களது மைதானம் எனது வீட்டிற்கு அருகில் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவில் முன்றல் தான். அது போக "புதுக்கட்டு" என்று ஒரு மைதானம் பிள்லையார் கோவிலின் அருகில் இருந்தது. அனேக நேரங்களில் அது வயதுக்குவந்தோர் வகயறாவினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் எங்களுக்கு அந்த மைதானம் ஒரு கனவு தேசனாகவே இருந்தது. ஆனாலும் அவ்வப்போது பெரியவர்கள் அணியில் ஆட்கள் குறைகயில் எங்களுக்கும் அந்த மைதானத்தில் ஆடும் பாக்கியம் கிடைத்தது. ஆனாலும் எங்களது கோடையாக இருந்தது என்னவோ பிள்ளையார் கோவில் முன்றல்தான்.



அது போக "கஸ்பார் பிட்டி" என்றொரு மைதானம், இங்கு தான் ஏரியா எதிர் ஏரியா போட்டிகள் நடக்கும். எனது அப்பா எங்கள் ஊரின் விளையாட்டு கழக தலைவராக இருந்த காலத்தில் எனது வகுப்பு அனைத்துமே எங்கள் வீட்டு முற்றத்தில் படையெடுக்கும்.காரணம் எமது கழகத்தின் கிரிக்கட் உபகருணங்களில் சில எங்களுக்கும் விளையாட கிடைக்கும். அது  ஒரு மாதகாலத்திற்கு நீடித்தது. பின்பு அனைத்து உபகருணங்களும் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுவிட்டன.

ஸ்டம்புகள்.

ஸ்டம்புகள் பெரும்பாலும் நேரான பூவரசு மர தடியாகவே இருக்கும். அல்லது மீன் வலைகள் அடைக்க பயன்படும் கம்புகளாக இருக்கும். கொஞ்சம் பணக்கார ஏரியா அணியாக இருந்தால் தும்புத்தடியோ , விளக்குமாறோ சமச்சீரான அளவில் வெட்டப்பட்டிருக்கும். அதைவிட நகரில் படிக்கும் ஒருவனை கொண்ட அணியாக இருந்தால் அவர்கள்தான் பில்கேட்ஸ் அணி. மூன்று ஸ்டம்புகள் கட்டாயம் இருக்கும். ப்ந்துவீச்சாளர் பக்கத்திற்கு ஒரு செருப்பு அல்லது கல்லு அந்த பக்கத்து ஸ்டம்புகளின் கடமையை செய்யும்.வீடுகளாக இருந்தால் தூண்கள், மரங்களில் ஸ்டம்புகள் வரைந்து ஆட்டம் களைகட்டும்.

துடுப்பாட்டமட்டை.

நான் சொன்னது போல முறையான துடுப்பாட்ட மட்டைகள் எங்களது ஊர் கழகத்திடமோ அல்லது நகர பாடசாலை வாசிகளிடமோ தான் இருக்கும். அதை கண்களால் காண்பது கூட அரிது. எங்களது கோக்கபுரா, ஜி.எம், புமா, அடிடாஸ் ரக மட்டைகள் எல்லாம் பனை பட்டைகளில் சீவியனவாகவோ அல்லது பழைய முட்டை பெட்டி பலகையில் வார்த்ததாகவோ இருக்கும். அனேகமாக பனை மட்டை ரக ஆட்ட மட்டைகளே எங்களிடம் இருந்தன. அதிஷ்ரவசமாக எங்களுக்கு ஒரு துடுப்பாட்ட மட்டை கிடத்தது. ஆட்ட சுவாரசியங்களில் அதை கடித்து கடித்தே அந்த மட்டையை இல்லாதாக்கி விட்டோம். ( அதன் பலகை கடிப்பதற்கு இலகுவாக , முருங்கை மரத்தின் தன்மையை ஒத்து இருந்ததே காரணம். தூ..........!!!)



பந்து.

டென்னிஸ் பந்துகளில் ஆடுவது என்பது எங்களுக்கு  எட்டா கனி. காரணம் எங்கள் ஊரில் டென்னிஸ் பந்து ஒன்று அந்நாளிலேயே 50 ரூபாய். 16 வருடங்களுக்கு முன்னர் 50 ரூபாய் என்பது இப்போதைய 500 ரூபாய்க்கு சமம். ஆக சிறுசுகள் எங்களுக்கு அந்த தொகை வெறும் கனவு மட்டுமே. ஆனால் நத்தார், கோவில் திருநாள் நாட்களில் டென்னிஸ் பந்து ஒன்றை வாங்குமளவிற்கு பணம் சேர்ந்தாலும் கூட  நாங்கள் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் இத்தனை தொகை கொடுத்து வாங்கப்பட்டாலும் டென்னிஸ் பந்துக்கு உத்தரவாதம் கிடையாது . எப்போது வேண்டுமானாலும் மட்டையில் உதை தாளாமல் வாயை பொளந்து விடும். ஆக எங்களது அபிமானம் எல்லாம் "ஆமை பந்து" தான்.
       
       ஆமை பந்து என்பது வெறும் ரப்பர் பந்து, எந்தவித வேறு அலங்காரமுமற்ற மொட்டையான ரப்பர் பந்து. எவ்வளவு அடிபட்டாலும் நெகிழ்ந்து கொடுத்து அடி வாங்குமே ஒழிய வாயை பொளக்காது.  துடுப்பு மட்டையின் விளிம்பில் பட்டு மேலெழுந்து பின் நிலத்தில் குத்திதால் , ஒரு சுழல் சுழன்று அடிக்கப்பட்ட திசையில் களத்தடுப்பாளர் காத்திருக்க அவரை ஏமாற்றி மற்படியும் அடித்தவரின் திசைக்கே சென்று விளையாட்டை சுவாரசியமாக்க கூடியது. அவ்வளவு நெகிழ்வாக கொழ கொழவென்றிருக்கும்.............. விலை வெறும் 10 ரூபய் தான். ஆமைப்பந்தும் கிடைக்காது போனால் சைக்கிள் ரியூப்பில் லாவகமாக சுற்றப்பட்ட "ஹாண்ட் மேட்' பந்து தயாராக இருக்கும். இந்த இரண்டு பந்துகளும் ரொக்கட் வேகத்தில் செல்பவை.



ஆட்ட விதிமுறைகள்.

இங்குதான் இருக்கிறது  சுவாரசியமே.  கிரிக்கட் ஆட தொடங்கி விட்டோம் ஆனால் விதிகள் தொடர்பில் எந்தவித விளக்கமும் இல்லை சில அடிப்படை விதிகள் தவிர. தொலைக்காட்சியில் போட்டிகளை பார்த்து நாங்களாகவே விதிகளை அனுமானித்து கொண்டோம். அதுவே சரியவவும் நம்பினோம். இவ்வளவு ஏன் அதில் சில விதிகளை நான் இலங்கை நடுவர் சம்மேளன போட்டி பரீட்சையில் சித்தியடையும் வரை சரியெனவே நம்பிக்கொண்டிருந்தேன். அவ்வாறாக நாங்கள் அனுசரித்த , சரியென்று நம்பி கடைப்பிடித்த விதிகள் சில .........

1.விக்கட்டுகளால் வெற்றி.

இந்த அணி அந்த அணியை இத்தனை விக்கட்டுகளால் வென்றது என்று கேள்விப்பட்டிருந்தோமே தவிர அது குறித்த விளக்கம் எங்களிடம் இருக்கவில்லை. ஆக வெற்றி பெறுவதில் விக்கட்டுகளுக்கும் கணிசமான பங்கு உண்டு என்பதே எங்களது திடமான நம்பிக்கை. அந்த விதி எவ்வாறு எங்களை வெற்றி பெற வைத்தது என்று பாருங்கள்.
         
ஞாயிற்றுகிழமையானால் ஏதாவது ஒரு ஏரியா அணியுடன் பந்தயம் கட்டி "கஸ்பார் பிட்டி" சர்வதேச மைதானத்தில் போட்டி தொடங்கும். பந்தயம் பெரும்பாலும் ஒரு 1 1/2 லீற்றர் பெப்சி அல்லது மெரிண்டாவாக இருக்கும்.  நாணயசுழற்சி எல்லாம் "இன்" அல்லது "அவுட்" முறையில் தான். அதாவது விரலிடுக்கில் ஒரு சிறிய கல்லை வைத்து ஒரு அணித்தலைவர் வேகமாக கையயை சுழற்றுவார். சுழற்றும் போது சிலநேரம் யாருமறியா வண்ணம் லாவகமாக கல்லை விடுவித்து விடுவார் அல்லது விரலிடுக்கிலேயே வைத்திருப்பார். இதை எதிர் அணி தலைவர் கவனமாக கவனித்திருந்து கல் விலலிடுக்கில் உள்ளதா (இன்) , அல்லது கால் வெளியேற்றப்பட்டு விட்டதா (அவுட்) என் சொல்லவேண்டும். யூகம் சரியானால், அந்த அணி நாணய சுழற்சியில் வென்றுவிடும்.

இவ்வாறு தொடங்கும் போட்டியில் நாங்கள் தோற்று விட்டால் இருக்கிறது கச்சேரி, உடனே நாங்கள் விக்கட்டுகளால் வென்றவர்கள் ஆகிவிடுவோம். அது எப்படி என்று பார்கிறீர்களா ? எங்களை பொறுத்தவரை வெக்கட்டுகளால் வெல்வது என்பது , எந்த அணி விக்கட்டுகளை (ஸ்டம்புகள்) போட்டிக்கு கொண்டுவருகிறார்களோ அவர்கள் தான் விக்கட்டின் சொந்தகாரர்கள். ஆக விக்கட் அவர்கள் அவ்ர்களுடையது என்பதால் அவர்கள் விக்கட்டுகளால் வென்றவர்கள் ஆகிறார்கள். அனேகமாக விக்கட்டுகளை (நாங்கள் கொஞ்சம் பணக்கார அணி என்பதால் துடைப்ப தடிகளை விக்கட்டுகளாக கொடிருந்தோம்) நாங்கள் தான் கொண்டுவருவோம். ஆக வெற்றி எப்பொதும் எங்கள் பக்கம் தான். அது ரன்களாலாகட்டும், அல்லது விக்கட்டுகளாலாகட்டும்.



2.எல்.பி.டபில்யு.

எங்களது மத்தியில் இது எல்.வி என்று வழக்கிலிருந்தது. இப்போது எங்கள் மத்தியில் இருந்த எல்.வி தொடர்பான சில விதிகள் .

*ஒரு துடுப்பாட்ட வீரர் விக்கட்டுகளை கால்களால் மறைத்து நிற்கின்றார் என்று கண்டு அவரை எல்.வி மூலம் ஆட்டமிழக்க செய்யவேண்டுமென்றால் நடுவரிடம் பந்துவீசமுன்னமே , இந்த வீரருக்கு நான் இப்போது வீசப்போகும் பந்து எல்.வி க்காக வீசுகிறேன் என்று சொல்ல வேண்டும்.உடனே நடுவர் அந்தவீரரை விக்கட்டை விட்டு விலகி நிக்கும் படி பணிப்பார் (இங்கே நடுவர் அனேகமாக துடுப்பாட்ட தரப்பு வீரராக தான் இருப்பார்). அப்படி பணித்த பின்பும் அவர் விக்கட்டுகளை கால்களால் மறைத்து நிற்பதை பந்துவீச்சாளர் கண்டுவிட்டால், பந்துவீச ஓடிவரும் போதே "அம்பியார் எல்.வீவீவீவீவீவீவீவீவீவீ என்று கத்திக்கொண்டே ஓடிவந்து துடுப்பாட்ட வீரரின் காலைக்குறிபார்த்து பந்தைவீசுவார். தப்பி தவறி கூட பந்து கால்களில் பட்டுவிட்டால் கதை முடிந்தது.... நீங்கள் ஸ்டம்புகளுக்கு எத்தனை கிலோமீற்றர் தூரத்தில் நின்று உங்கள் காலில் பந்து பட்டிருந்தாலும் , நீங்க்கள் அக்குளுக்குள் துடுப்பாட்டமட்டையை வைத்துக் கொண்டு வெளியேற வேண்டியதுதான். காரணம் அந்த பந்துவீச்சாளர் அந்த பந்தை எல்.வி சொல்லி போட்டார்.

*அதே போல் மிடில் ஸ்டம்புக்கு நேராக வந்த பந்தை நீங்கள் , உதை பந்து போல எட்டி உதைத்திருந்தாலும் , பந்துவீச்சாளர் "எல்.வி "சொலி அந்த பந்தை வீசியிருக்கவில்லையாயின் நீங்கள் தொடர்ந்தும் கம்பீரமாக கிறீசுக்குள் நிற்கலாம். எதிர் அணியின் கோபக்கணைகள் முழுதும் பந்துவீச்சாளர் மேல் பாய அவர் தலையில் கைவைத்துக்கொண்டு நிற்பார்.



*இன்னொரு முறை இருந்தது, இது துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலைய செய்வது. அதாவது ஒரு பந்து வீச்சாளர்  துடுப்பாட்ட வீரர் விக்கட்டுகளை கால்களால் மறைத்து நிற்கின்றார் என்று கண்டு அவரை எல்.வி மூலம் ஆட்டமிழக்க செய்யவேண்டுமென்றால் இன்னொரு தந்திரத்தையும் பயன்படுத்துவார். நடுவரிடம் ஆரம்பத்திலேயே சொல்லாமல் (சொன்னால்தான் அவன் எச்சரிக்கை பண்ணி அந்த எல்.வி யை இல்லாமல் செய்து விடுவானே) பந்து வீச ஓடிவரும்போது "அம்பியார் ஓவர் முழுக்க எல்.வீவீவீவீவீவீவீவீவீவீ " என்று கத்திகொண்டே ஒடிவந்து பந்தை போடுவார். அப்படி சொல்லிவிட்டால் முடிந்தது கதை. அந்த ஓவர் முழுவதும் துடுப்பாட்ட வீரர் கால்களை முதுகுக்கு பின்னால் ஒழித்து வைத்து ஆடவேண்டியது தான். அந்த ஓவரின் எந்த பந்து உங்கள் காலை தாக்கினாலும் , நீங்கள் காலி..! அது நீங்கள் ஸ்டம்பை விட்டு எத்தனை கி.மி தள்ளி நின்றாலும் சரி.

 இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் முன்பதிவில் எல்.வி சொல்வது. அதாவது அடுத்து பந்து வீசப்போகும் பந்துவீச்சாளர் கூட நடுவரிடம் "இவனுக்கு அடுத்த ஓவர் முழுக்க எல்.வி" என்று சொல்லி வைத்து விடுவார்கள். துடுப்பாட்ட வீரர் பொழைப்பு நாறிப்போகும். இந்த கொடுமையில் இருந்து தப்ப ஒரே வழி துடுப்பாட்ட வீரர் செய்ய வேண்டியது ஸ்டம்புகளை "பப்பரப்பே" என்று திறந்து காட்டிக்கொண்டு நிற்பது.



சுவாரசியமான விதிகள் இன்னமும் மீதமுள்ளன . பதிவு நீள்வதால் அதை பகுதி இரண்டாக நாளை தருகிறேன்..........
         
பாகம் 2 படிக்க இங்கே சொடுக்குங்கள்
http://www.kishoker.blogspot.com/2012/02/2.html

Tuesday, February 21, 2012

வெளிச்சத்துக்கு வந்த இருட்டு அறை மர்மங்கள்...!!!



இது ஒரு சினிமா விமர்சனமா அல்லது அந்த சினிமாவின் பாதிப்புக்களால் நான் எழுதிகின்றேனா என்பது எனக்கே இன்னும் புரியாத நிலையில் தான் இந்த பதிவு. படம் பார்த்தவுடன் என் மனதில் தோன்றியவைகளில் சிலவற்றை , என்னால் முடிந்தவரை அதே மனநிலையில் எழுத நினைக்கிறேன்.

"தி லாஸ்ட் கிங் ஒஃப் ஸ்கொட்லாண்ட்" படத்திற்கு பிறகு ஒரு சர்வதிகாரியின் அந்தரங்க விடயங்களை தோலுரித்து காட்டிய படம் என்றால் என்னை பொறுத்த வரை "தி டெவில்ஸ் டபுள்" என்பேன். படம் வெளியானது என்னவோ 2011 இன் ஆரம்பத்தில் என்றாலும் எனக்கு பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது சில நாட்களுக்கு முன்புதான். இந்த படம் பார்த்த பின்பு எனக்கென்னவோ சதாம் ஹிசைனும், உதேய் ஹிசைனும் இன்னும் வாழ்வதாக, அதுவும் எனக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நாட்டில் வாழ்வதாகவே எண்ணத் தோன்றுகிறது. பதிவு நீள்கையில் உங்களில் சிலருக்கும் அந்த எண்னம் வரும் என்பதில் எனக்கு சந்தேகமேதுமில்லை.



முதலில் படத்தின் சிறிய கண்ணோட்டம். மறைந்த ஈராக்கின் சர்வதிகாரி சாதம் ஹிஸைனின் மகன் உதேய் ஹுசைனின் வாழ்க்கை முறையை (????) சொல்கிறது படம். சதாம் ஹுசைனுக்கு அவரைப்போலவே தோற்றம் கொண்ட அவரது "போட்டோ கொப்பிகள்" இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏதாவது ஆபத்தான இடங்களுக்கு கூட்டங்கள் அல்லது நிகழ்வுகளுக்கு செல்வதாக இருந்தால் இந்த பலியாடுகளைத்தான் அவ‌ர் அனுப்புவாராம். இவாறான பிரபலங்களின் நகல்கள் ஒரு சில அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு கூட இருந்ததாக கேள்வி. இவ்வளவு ஏன் ? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் இவ்வாறான நகல்கள் இருந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இது தான் படத்தின் கதை.... உதய் ஹுசைனும் (டோமினிக் ஹீப்பெர்) , லதிஃப் யாஹியாவும் (அதுவும் டோமினிக் ஹீப்பெர் தான்.இரட்டை வேடம்) ஒரே பாடசாலையில் படித்தவர்கள், லதிஃப் ஈராக்கின் ராணுவத்தில் பணிபுரிகிறார். பாடசாலை நாட்களில் உதய் மற்றும் லதிஃப் க்கு இடையில் தோற்ற ஒற்றுமை இருப்பதாக சக மாணவர்கள் பேசிக்கொண்டதே லதிஃபின் தலையில் இடி இறங்க காரணமாகிறது. தனது தந்தையின் பாணியில் தனக்கும் நகல் ஒன்றை வைத்துக்கொள்ள ஆசைப்படும் உதய் , ராணுவத்தில் இருந்த லதிஃபை வரவழைத்து திட்டத்தை சொல்கிறார். உதேயின் போகில் கொஞ்சமும் விருப்பமில்லாத லதிஃப் மறுக்க , பிறகு என்ன வில்லன் பாணியில் குடும்பத்தை கொலைசெய்வேன், நாசம் பண்னுவேன் என்று மிரட்ட வேறு வழியின்றி பணிகிறார் லதிஃப். உதேய் அனுபவிக்கும் அனைத்து சுகபோக வாழ்க்கையை வாழவும் அனுமதி கிடைக்கிறது லதிஃப்க்கு. ஆனால் லத்ஃப்க்கு அதில் சிறிதளவும் நாட்டமில்லாமல், உதேய் இன் கைப்பொம்மையாய் ஆடுகிறார்.

டோமினிக் கூப்பர்
உதே ஹுசைன்


உதேயோடு இருந்த காலபகுதியில் அவன் பண்ணும் அட்டகாசங்கள் பொறுக்காமல் பலமுறை தப்பித்து போக முயன்று , பிடிபட்டு அடிபடுகிறார் லதிஃப்.

படத்தில் காட்டப்படுகின்ற உதேயின் அட்டகாசங்கள் , சர்வதேச நீதிமன்றத்தால் அவன் மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அண்ணனின் அட்டகாசங்களில் சில......


*அண்ணன் தனது ஆடம்பர கார்களில் (அது போர்சே, ஃபெராரி,பென்ஸ் அல்லது ரோல்ஸ் ரோயஸ்சாக இருக்கலாம்) வீதி உலா போகும் போது , தான் அழகாக இருக்கிறாள் என்று யாரை நினைக்கிறாரோ அத்தனை பேரையும் அலேக்காக தூக்கி காரில் போட்டு கதற கதற .................................. (இவரது கற்பழிப்புக்கள் தொடர்பில் ரைம்ஸ் பத்திரிக்கை 2003 இல் ஒரு அறிக்கை தயாரிக்கும் அளவிற்கு அண்னன் கற்பழிப்பில் பிரபலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்). இவரது கற்பழிப்புக்களில் (உலகு அறிந்து) 14 வயது பாடசாலை சிறுமி ஒருத்தியும் அடக்கம்.



*சமீபத்தில் பதவி விலகிய எகிப்திய ஜனாதிபதி ஹஸ்னி முபரக்கின் மனைவி ஸுஸைன் 1988இல் வழங்கிய விருந்து ஒன்றில் தனது காம களியாட்டத்திற்கு தொந்தரவு தந்தார் என்று  தனது தந்தையின் பிரத்தியேக மெய் பாதுகாவலர் கமால் ஹானாவை இலத்திரனியல் கத்தியால் கூறு கூறாக வெட்டிகொன்றார். ( உண்மையில் கமால் தனது தந்தை சதாமுக்கு மாமா வேலை பார்த்து தனது தாய்க்கு தனது தந்தை துரோகம் செய்ய காரணாமாக இருந்தார் என்ற கடுப்பு உதேய்க்கு கமால் மீது காலம் காலமாக இருந்தது). எட்டு வருடங்கள் சிறை இருக்கவேண்டிய இந்த குற்றச்செயலுக்காக உதேய் வெறும் மூன்று மாதம் அதிநவீன தனிப்பட்ட சிறைச்சாலை ஒன்றில் சிறைவைக்கப்பட்டார்/இருந்தார். பின்பு ஜோர்டன் மன்னர் ஹிசைனின் வேண்டுகோளுக்கிணங்க உதேயை விடுதலை செய்தார் சதாம். விடுதலை செய்த கையோடு அவனை சுவிஸ்ஸர்லாந்திற்கான ஈராக்கிய தூதுவராக நியமித்தார் . ஆனால் அண்ணன் சுவிஸில் உணவகம் ஒன்றில் செய்த குளறுபடியோடு அடுத்த விமானத்தில் அண்னனை ஈராகிற்கு திருப்பி அனுப்பியது சுவிஸ் அரசாங்கம்.

உதய் ஹுசன் (இடது) லதிஃப் (வலது)


*அதன் பின்னர் ஈராக்கிய ஒலிம்பிக் செயற்குழுவின் தலைமைப் பொறுப்பு, ஈராக் உதைபந்தாட்ட சம்மேளன தலைமை மற்றும் தனது பிரத்தியேக மெய்பாதுகாவலர் குழுவின் தலமைப் பதவிகளில் உதேயை அமர்த்தி அழகு பார்த்தார் சதாம். இங்குதான் ஈராக்கிய விளையாட்டு வீரர்களுக்கு வினை ஆரம்பித்தது. மெய்வல்லுனர் போட்டிகளில் சிறப்பாக செயற்படாத ஈராக்கிய வீரவீராங்கனைகளுக்கு சாட்டையடி, மின்சார தாக்குதல் என்று வகை வகையாக தண்டனை வழங்கினார் உதெய். உச்சக்கட்ட சோகம் ஈராக் உதைபந்தாட்ட வீரர்களுக்கு தான். 1994 இல் உலக கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெற தவறிய‌ ஈராக் உதைபந்தாட்ட வீரர்களை ஒரு அறையில் வைத்து கொங்ரீட் பந்துகளை உதைக்கச்செய்து வினோத தண்டனை நிறைவேற்றினார் உதெய். (தகுதி காண் போட்டிகளில் அந்நாள் ஜென்ம விரோதியான ஈரானிடம் (2-1) தோற்றது விசேட கடுப்பு). சில வீரர்களின் கால்கள் வெட்டப்பட்டு தெருநாய்களுக்கு கூட வீசப்பட்டிருக்கின்றன.(மூலம்:- பிபிசி 24-6-2010). பயிற்சிகளுக்கு வருகை தர தவறும் வீரர்கள் கூட தண்டனைக்கு உளாவார்கள். தனது பிள்ளையின் மரண சடங்கின் நிமித்தம் பயிற்சிக்கு வருகை தராத வீரர் கூட சவுக்கடி வாங்கியிருக்கிறார்.

        ஒரு போட்டியில் தோற்றாலோ அல்லது போட்டி சம‌நிலையில் முடிந்தாலோ வீரர்கள் மின்சார தாக்குதல் தண்டணைக்கு உள்ளாவார்கள் அல்லது மலக்குழியில் நீந்துவார்கள். அல்லது இரண்டுமே நடக்கும். அது அண்ணன் இருக்கும் மனநிலையை பொறுத்தது. அது தவிர வாகனத்தில் கட்டி கரடுமுரடான வீதிகளில் வீரர்களை இழுத்துச்செல்லும் சம்பவமும் நடந்தது. 2000 இல் லெபனானில் நடந்த ஏ.ஃஎப்.சி ஆசிய கிண்ண போடிகளில் ஜப்பானுடன் (4-1) ஈராக் தோற்றதையடுத்து அணியின் கோல்காப்பாளர் ஹசிம் ஹுசைன், பின்கள வீரர் அப்துல் ஜபர், முன்வரிசை வீரர் சாதிர் ஆகியோர் தோல்விக்கு காரணமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு மூன்று நாட்கள் உதய் இன் பிரத்தியேக சிறைச்சாலையில் வைத்து துன்புறுத்தப்பட்டார்கள்.

உதயின் ஆயுதங்கள்


*உதெய் சதாமின் மெய்பாதுகவலர்களின் தலமை பொறுப்பில் இருந்தபோது தனக்கு "சல்யூட்" அடிக்காத ராணுவ வீரர் ஒருவரை நையப்புடைத்த சம்பவமும் நிகழ்ந்தது. (திரைப்படம் முழுவதும் இவ்வாறான காட்சிகளை காணலாம்)

திரைப்படத்தில் காட்டப்படாத ஆனால் சதாமின் ஆட்சி வீழ்ச்சிக்கு பின் வெளியான உதெய்யின் சாகசங்கள்.....

*உதய் தனக்கு சொந்தமாக 1200 அதிசொகுசு கார்களை வாங்கி/திருடி வைத்திருந்தார். இதில் லம்போகினி, ரோல்ஸ் ரோய்ஸ், ஃபெராரி,பொர்சே,பென்ஸ் ஆகியனவும் அடக்கம். இதில் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி, உதெய்க்கு அன்பளிப்பாக கொடுத்திருந்த லம்போகினி எல்.எம்002 ரக கார், பின்நாளில் கார் குண்டுவெடிப்பின் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக அமெரிக்க படைகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

இந்த செல்லங்களையெல்லாம் குண்டு வச்சு தகர்க்க எப்பிடிடா மனசு வந்திச்சு?


*ஒரு ராணுவ வீரனை அவனுடைய‌ மனைவியை தன்னுடன் நடனமாட அனுமதிக்கவில்லை என்ற காரணத்திற்காக கடுமையாக தாக்கினான் உதய். சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த அந்த சிப்பாய் பின்பு இறந்து போனான்.

*பிந்திய தரவுகளின் படி 2000ம் ஆண்டில் தனது அரசியல் வாரிசாக தனது இன்னொரு மகன் கியுசே ஹுசைனை அறிவித்ததையடுத்துதனது தந்தையிடம் நன்மதிப்பு பெறும்பொருட்டு ஈராக் தேசிய காங்கிரஸ் தலைவர் அஹ்மத் சலாபியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினான் என தெரிகின்றது.

*ஈராக் அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் உதெயின் வீட்டு பதாள அறையில் சிங்கங்களும், சிறுத்தைகளும் நிறைந்த தனிப்பட்ட மிருகக்காட்சி சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அது போக ஏராளமான விலையுயர்ந்த சுருட்டு வகைகளும், அதி தரமான வைன் மற்றும் மதுபான வகைகளும் கண்ணுபிடிக்கப்பட்டுளன. அதிலும் முக்கியமாக என்னவென்றால் அண்ணனின் பாதாள அறையில் எயிட்ஸ் பரிசோதனை செய்யும் அங்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதாவது அண்ணன் இளம் பெண்களை சம்பவம் செய்ய முன்பு அவர்களை பரிசோதனை பண்ணி பாதுகாப்பானவர்களா என்று அறிந்து விட்டுதான் களத்தில் இறங்குவாராம்.

உதெயின் மிருககாட்சி சாலையில்....


ஒரு கட்டதில் லதிஃபின் தந்தையை உதெய் கொன்று விட, பொறுக்கமுடியாமல் ஒரு ராணுவவீரன் (இவனது மனைவியை அவர்களது திருமண வீட்டிலேயே வைத்து உதெய் கற்பழித்து, அடித்து துன்புறுத்தி அவள் அன்றைய தினமே அந்த வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைசெய்ய காரணமாக இருந்தான்) மற்றும் உதெயின் காரியதரசி ஆகியோரின் உதவியுடன் உதய் மீது லதிஃப் கொலைத்தாக்குதல் நடத்தினான். இதற்கு உதயின் மெய்பதுகாவலர் ஒருவரும் உடந்தையாக இருந்தார். இந்த தாக்குதல் இடம்பெற்றது 1996இல். இந்த தாக்குதலால் முள்ளந்தண்டு, கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் பலத்த காயமடைந்த உதய் பின்நாளில் சரிவர உடலியக்கமற்ற ஒருவராகவே 2003 இல் அமெரிக்க படைகளால் கொல்லப்படும்வரை வாழ்ந்தான். அதன் பின்பு லதிஃப் தலைமறைவானான். கடைசியாக அவனது நடமாட்டம் அயர்லாந்தில் இருந்ததாக கேள்வி. ஆனாலும் தான் உதேயுடன் இருந்த காலபகுதிகள், அனுபவங்கள் தொடர்பில் பிபிசி மற்றும் அல்-ஜசீரா தொலைக்காட்சிகளுக்கு பேட்டி வழ‌ங்கியிருந்தார்.

உதேய் ஹுஸைன் பிறந்தது 18 யூன் 1964இல். பஹ்தாத் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் வகுப்பிலேயே முதல் மாணவனாக வந்து பட்டம் வென்றார்.  ஆனால் சதாம் ஹுசைனின் மகன் என்ற தகுதியே அவருக்கு முதல் மாணவன் என்ற பட்டத்தை வாங்கி தந்தது என்கிறார்கள் பஹ்தாத் பல்கலைக்கழக விரிவிரையாளர்கள்.

உதெயின் மிருககாட்சி சாலையில்....


தந்தை ஜனாதிபதி என்ற ஒரே காரணத்தால் ஆடாத ஆட்டமெல்லாம் போட்டார், உலகின் அத்தனை சுகபோக வாழ்வும் காலடியில் கொட்டிக்கிடந்தது. தந்தை சதாம் ஹுசைன் தனது ஆட்சியின் ஆரம்பத்தில் மக்களிடையே நன்மதிப்பை பெற்றிருந்தார். ஈராக்கின் வளர்ச்சிக்கு கணிசமான பங்காற்றினார். ஆனால் பின்பு குர்திஷ் இன் மக்களின் படுகொலை, மகன் உதேயின் அடாவடித்தனம் போன்றவற்றால் சர்வதேசத்தில் மட்டுமல்ல தனது சொந்த மக்களிடத்திலும் செல்வாக்கையிழந்தார். அதுவே அமெரிக்க படைகள் ஈராக்கை கைப்பற்றியவுடன் தனது சொந்த மக்களே அவரது உருவச்சிலையை உடைத்தெறிய காரணமானது.கடைசியில் 2003 யூலை 22 இல் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.

தந்தை ஜனாதிபதி , தனக்கிருக்கும் அதிகார பலம் எனபன்வே உதே ஹுசைனின் மிருகத்தனமான வாழ்க்கைமுறைக்கும் ,அவனது அற்பத்தனமான சாவுக்கும் வழிகோலியது எனலாம். எவ்வளவுதான் மக்களின் நன்மதிப்பை பெற்று ஆட்சிக்கு வந்தாலும் பின்பு அதை தக்கவைக்க முடியவில்லையாயின் சதாம், உதேய் யின் நிலை தான் யாருக்கும்.

எனக்கு தெரிந்து கூட ஒரு நாட்டில் இப்போது ஒரு சிறு அச்சுக்கூட பிசகாமல் இது தான் நடக்கிறது. அது எந்த நாடு என்றுதான் மறந்து போனேன்.உங்களுக்கும் புரிந்திருக்குமே அது எந்த நாடு என்று?

இதில் ஒருவர் தான் சதாம் ஹுசைனாம்... கண்டுபிடியுங்கள்.... கண்ண‌க்கட்டுதே.!!


படத்தைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும் உதேயை போலவே தோற்றம் கொண்ட டோமினிக் கூப்பரை தெரிவுசெய்த இயக்குனர் லீயை பாராட்டியே ஆகவேண்டும். டோமினிக் கூப்பர் நடிக்கவேயில்லை , வாழ்ந்திருக்கிறார். அதிலும் எனக்கு உதெய் ஆகவரும் கூப்பரை தான் பிடித்திருக்கிறது. அப்படியே உதேய் ஹுசைனின் பக்கத்தில் இருந்து பார்த்த உணர்வு. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் கிறிஸ்டியன் ஹென்சன். சாம் மெக்கேர்டியின் கமரா யேமன் நாட்டை கூட அசல் பஹ்தாத் போலவே காடுகிறது. முடிந்தால் பாருங்கள் தவறவிட கூடாத படம்.

பதிவு கொஞ்சம் நீண்டு விட்டது தான், முடிந்தவரை படத்தின் சுருக்கத்தையும் , உதேய் ஹுசைனின் சிறு வரலாற்றையும் என்னால் முடிந்தவரை சுவாரசியமாக தரமுயன்றிருக்கின்றேன். பிழைகள் இருக்கலாம். பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டுங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...