உதைபந்து

Saturday, May 26, 2012

சியர் லீடர்ஸ் பெண்களுக்கு நிகழ்ந்த மற்றுமொரு துஷ்பிரயோகம்! ஐ.பி.எல் இல் தொடரும் அநியாயம்! -கழுகுக் கண்கள்!!!-


எங்கள நிம்மதியா இருக்க விடவே மாட்டீங்களா?

இன்று இந்தியாவின் எந்த மீடியாவை திருப்பினாலும் ஐ.பி.எல் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணமே தான் உள்ளது. விருந்தின் போது நடுவில் ஒரு சியர் லீடர் பெண்ணை நிறுத்தி வைத்து வீரர்கள் சுற்றிவர நின்று கண்ட இடத்தில் எல்லாம் தட்டினாகள், போதையில் வீரர் ஒருவர் சியர் லீடர் பெண்ணின் அறைக்குள் புகுந்து அத்துமீறல் , குடி , வெறி , களியாட்டம் மலிந்து போய் "என்ன கைய புடிச்சு இழுத்தியா?" ரேஞ்சில் பஞ்சாயத்து போய்க்கொண்டு இருக்கிறது.

ஐ.பி.எல் இன் ஆரம்பத்தில், அதாவது முதலாவது ஐ.பி.எல் இன் போது வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு முன்னர், இந்த பெண்களால் ஐ.பி.எல் அடையபோகும் நன்மைகளை தெரிந்து தானோ என்னமோ இந்த சியர் லீடர்களை குத்தகைக்கு (????) எடுத்திருந்தார் இப்போது கேடி என்று அறியப்பட்டிருக்கும் லலித் மோடி.

ஐ.பி.எல் இல் இந்த சியர் லீடர்கள் எந்தளவுக்கு முக்கியமாகி போனார்கள் என்றால், இன்று கிரிக்கட் தெரியாத கிழவன் கூட இந்த பெண்களின் "ரெக்கா டான்ஸ்" ( பெரிசுகள் அப்பிடித்தாம்பா சொல்லுதுங்க) பார்ப்பதற்ற்கு அலைகடலென அணிதிரண்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வந்து போனது பவுண்டரியா , சிக்ஸரா , அல்லது விக்கட்டா என்று கூட தெரியாமல் இந்த பொண்ணுங்க ஆடுகையில் ஆவென்று வாயை பொளக்குதுங்க.  ( ஏன் தெரியணும்ங்கிறேன்? இதில எது நடந்தாலும் ஏதோ ஒரு குரூப் ஆடுதில்ல, நீ மூடிக்கிட்டு எழுதுடா" என்று குரல்கள் எனக்கு கேட்காமல் இல்லை.) 

இந்த பெண்களின் பின்னால் உக்காந்து அவர்கள் ஆடுகையில் பப்பரப்பே என்று நம்மாளு பார்த்துக்கொண்டிருக்க, சீரியலுக்கு விட்ட இடைவெளையில் , பிரட் லீயை ஒரு ரவுசுவிடும் நோக்கில் டி.வி யை திருப்பும் அந்த ஆளின் வீட்டுக்காரம்மா , தன்னிலை மறந்து கணவன் தியான நிலையில் இருப்பதை துரதிஷ்டவசமாக பாழாபோன கமரா மேன் காட்டிகொடுத்துவிட வீட்டில் உருட்டுக்கட்டைகள் உருளும் சம்பவங்கள் நிகழுமழவுக்கு முக்கியமாகி இருக்கிறர்கள். 

சும்மா பூந்து வெளாயாடுவோமில்ல....


இரண்டாவது ஐ.பி.எல் பாதுகாப்பு காரணங்களுக்காக தென் ஆபிரிக்காவுக்கு இடமாற்றப் பட்டபோது ஒரு ஆங்கிலேயரை கண்ட பேட்டி இன்னமும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.

"சார் கிரிக்கட் எல்லாம் பாக்க வந்திருக்கீங்க. இன்று நடை பெறும் போட்டியில் யாரு ஜெயிப்பாங்கன்னு நெனைக்கிறீங்க? சென்னையா ? இல்லை மும்பையா?"

"ஓ! இன்னிக்கு ஆடுறது சென்னையும் மும்பையுமா?"

"என்ன சார் இப்பிடி சொல்றீங்க, யார் ஆடுறதுன்னு தெரியாமலா மேட்ச் பாக்க வந்தீங்க?"

"சார் சார் எனக்கு கிரிக்கட் அவளவா தெரியாது சொல்லப்போனா எனக்கு சுத்தமா தெரியாது I just came to hang out with Cheer leaders "

இத அப்பிடியே தமிழில் மொழிபெயர்த்தால் "நான் இந்த சியர் லீடர் பெண்களுடன் தொங்குவதற்கு வந்தேன் " என்று வேற மாதிரி ஒரு அர்த்தம் வந்துவிடுவதால், அவர் சொல்ல வந்த விடயத்தை நல்ல தமிழில் சொல்லிவிடுகிறேன்.

"எனக்கு கிரிக்கட் எல்லாம் தெரியாது, நான் வந்தது இந்த சியர் லீடர் பெண்களின் ஆட்டத்தை பார்க்கத்தான்"

இப்படி கிரிக்கட் என்றால் முடிவில் எத்தனை கோல் அடித்தார்கள் என்று கேட்பவனையெல்லாம் மைதானத்துக்கு வரவளைத்தது யாரென்றால், வீரர்களின் சூடான ஆட்டம் மட்டுமல்ல அதையும் தாண்டி புனிதமான இந்த சியர் லீடர்ஸ் தான்.


ஒருவர் சென்னை அணியின் யூனிபோர்ம் அணிந்து போட்டி பார்த்துக்கொண்டு இருந்தார், போட்டி செம டொக்கு ஆட்டமா போய்க்கொண்டு இருந்தது, இவர் ரொம்ப டென்ஷனாக இருந்தார், "அட அடிங்கப்பா, ரன் ரேட் சரியில்லப்பா"ன்னு செம கமண்டு வேற, திடீர்ன்னு சென்னை பட்ஸ்மென் ஆட்டமிழந்து வெளியே போனார்.  உடனே நம்மாளு "ஜே! யா.. ஜே!"ன்னு செவ்விந்தியன் கணக்காட்டம் கத்திக்கொண்டு ஓடினார், உடனே பக்கத்தில் இருந்தவர் கேட்டார் "யோவ்! சென்னைக்கு சப்போர்ட் பண்ணுற, ஆனா உங்க பட்ச்மென் அவுட்டா போனதுக்கு ரொம்ப சந்தோஷப்படுற?" நம்மாளு சொன்னார் "அவன் இருந்தும் என்னதுக்கு, ஒரு பவுண்டரி அடிக்கிறானா? இப்போ பாரு அவன் அவுட்டா போனதுக்கு மும்பையோட சியர் லீடர்ஸ் ஆடுவாய்ங்க". 

இப்படி கட்சி மாறி சப்போர்ட் பண்ணும் அளவுக்கு ஆட்களை வளைத்துப்போட்டுவிட்ட இந்த சியர் லீடர்ஸ்சுக்கு தான் இப்படியொரு கோர சம்பவம், அல்லது சியர் லீடஸ் துஷ்பிரயோகம் என்று கூட சொல்லலாம்.

இந்த பொது ஜனங்களை விடுவோம். என்னையே எடுத்துக்கொள்வோம், நான் இந்த டீமுக்கு தான் சப்போர்ட் என்று கிடையாது ஆனால் நன்ன்றாக வெளுத்து வாங்கும் அணிக்கு நல்ல ரசிகன், காரணம் ஒன்றுமில்லை அப்போ தானே அந்த அணியின் சியர் லீடர்ஸ் மெரிண்ட ஆட்டம் ஆடுவார்கள். அதுதாங்க "குதிச்சு குதிச்சு ஆடலாம்". சோ, இப்படியா ஒரு கலா+ கிரிக்கட் ரசிகனான நான் முதல் நான்கு ஐ.பி.எல் களையும் பெரும்பாலும் தவற விடாமல் பார்த்து வந்தேன். ஆனால் இந்த ஐ.பி.எல் இல் இந்த பெண்களின் துஷ்பிரயோகம் இடம்பெற்று இருப்பதால் நான் முதலிரண்டு போட்டிகளி தவிர வேறு போட்டிகள் பார்க்கவில்லை. நான் பார்க்காமல் இருப்பதால் இந்த துஷ்பிரயோகம் ஒன்றும் நின்றுவிடப்போவதில்லை. இது எப்படியென்றால்  இறைச்சி உண்ணாமல் ஒருவன்  இருப்பதால் இறைச்சி அறுப்பது நின்றுவிடப்போவதில்லை போன்று தான் இதுவும். ஒரு பகிஷ்கரிப்பு. அம்புட்டுத்தான். 

ஒரே புழுக்கமா இருக்கப்பா...

சரி அப்பிடி என்ன துஷ்பிரயோகம் என்கிறீர்களா? அட பின்ன என்னங்க? இன்று மிருகங்களுக்கு நல்ல காற்றோட்டமான இருப்பிடம் இருக்கிறதா, நல்ல வெளிச்சம் , உள்ளே வெளிச்சம் வருகிறதா என சரி பார்ப்பதற்கு சந்துக்கொரு அமிப்பு இருக்கிறது. ஆனால் இந்த பெண்களுக்கு? 

லலித் மோடி இருக்கும் போது இந்திய நாட்டின் பொருளாதார நெருக்கடி உணர்ந்து , ஆங்காங்கே கிடந்த மிச்ச மீதி துணிகளை எல்லாம் எடுத்து இந்த சியர் லீடர்ஸ்சுக்கு ஆடை தைத்து கொடுத்தார். அது இந்திய போருளாதரத்துக்கு பொருத்தமானதாகவும், நல்ல காற்றோட்டமானதாகவும், வெளிச்சம் விழக்கூடியதாகவும் இருந்தது. அது போக இந்தியாவில் இருந்த சிறிய சிறிய துண்டுகள் (துணிகள்) எல்லாம் இவர்கள் மேல் ஆடையாய் விழுந்ததால் இந்திய பட்ஜெட்டிலும் துண்டு விழவில்லை.

ஆனால் இப்போது நிர்வாகம் மாறிவிட்ட பிறகு யாருக்கும் பொறுப்பில்லை! இந்திய மற்றும் உலக பொருளாதாரம் மீது எந்தவிதமான கவலையும் இல்லை. அதுபோக இந்த சியர் லீடர்சின் உடல் நலத்திலும் எந்தவிதமான அக்கறையும் இல்லை. 

இந்த ஐ.பி.எல் இல் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறோம் பேர்வழியென்று பாவம் இந்த அப்பாவி சியர் லீடர்சுக்கு எட்டு முழம் , பத்து முழம் என்று புடவைகளை சுற்றிவிட்டிருக்கிறார்கள். லலித் மோடி காலப்பகுதியில் துணிக்கென்று மிகச்சொற்பமான தொகை செலவிடப்பட, இந்த நிர்வாகத்தில் பெருமளவான துணிப்பாவனையினால் , பட்டுப்பூச்சிகளால் அந்தளவு துணி உற்பத்தி செய்யமுடியாது போய்விட இந்தியாவின் கைத்தொழில் சரிந்தது, கைத்தொழில் சரிவால் பணவீக்கம் ஏற்பட்டுவிட சர்வதேச சந்தையிலும் அது எதிரொலித்தது, உடனே கச்சா எண்ணையின் விலை அதிகரித்துவிட விளைவு இன்று இந்தியாவில் ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 70+ ரூபாய்கள்!!!!!!! இந்த தாக்கம் எத்தனை பேருக்கு புரிந்திருக்கிறது?

எப்பிடி இருந்த நாங்க இப்பிடி ஆயிட்டோம்!

எண்ணைவிலை உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தும் சமூக அக்கறை கொண்ட அமைப்புக்களே உங்கள் பார்வையை உடனே இந்த சியர் லீடர்ஸ் துஷ்பிரயோக வழக்குக்கு திருப்புங்கள் அப்புறம் என்ன வருகின்ற செவ்வாய் கிழமைக்குள் இந்தியா வல்லரசாகிவிடும். இப்படி ஒரு ஆலஓசனை தந்ததற்காக எனக்கு நோபல் பரிசுகளோ, பணப்பரிசுகளோ, பொற்கிழிகளோ தரவேண்டியதில்லை, ஏதோ அண்டை நாட்டுக்கு என்னாலான உதவியாக இருந்துவிட்டு போகட்டுமே! 

சரி! இந்திய பொருளாதாரத்தின் மீது தான் யாருக்கும் அக்கறை இல்லை, அட அந்த பெண்களின் உடல் நலத்தின் மீதுமா இல்லை? இந்தா தண்டி ஆடையை சுற்றிக்கொண்டு ஆடுவது என்பது எவளவு கடினம் என்று மனிதாபிமானத்தோடு சிந்தித்து பார்த்தோமா? அதை தான் விடுங்கள், ஆரம்பாகால ஐ.பி.எல் சியர் லீடர் ஆடைகளில் இருந்த காற்றோட்ட + வெளிச்சம் விழும் வசதிகள் தான் இந்த ஆடைகளில் இருக்கிறதா? 

சற்று சிந்தித்து பார்ப்போம்! மதுரை ஆதீனமாக நித்தியானந்த பொறுப்பேற்ற பிறகு வரப்போகும் வீடியோவை பார்க்க இருக்கும் ஆர்வத்தில் பாதியாவது இந்த விடயத்தில் காட்டி சியர் லீடர்சின் இந்த சுமை பாதியாக குறைக்க ஒரு வழி பண்ணக்கூடாதா?

என்னால் இப்போதெல்லாம் கிறெஸ் கைல் மாங்கு மாங்கு என்று அடித்து நொருக்குவதை எல்லாம் ரசிக்க முடியவில்லை, அவர் அடிக்கும் போது காற்றோட்டம் இல்லாத இந்த ஆடையை தூக்கி கொண்டு இந்த பெண்கள் கஷ்டப்படுவதை பார்க்கும் போது என்னால் மூன்று தட்டு சோற்றுக்கு  மேல் சாப்பிட முடிவதில்லை!

இதுகுறித்து ஒவ்வொரு அணி தலைமைகளுடனும் வாக்குவாதப்பட்டு நான் எடுத்த எனது பகீரத பிரயத்தனத்தால், சில அணிகள் சற்று சிமைக்குறைப்பு செய்து காற்றோட்ட வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். சிலர் அவ்வாறு செய்வதாக கூறினாலும் இன்னும் திருந்திய பாடு இல்லை.

அதிலும் சிலர் இன்னொரு அநியாயம் வேறு செஇகிறார்கள். இந்த கலாசார உடைகள் காற்றொட்டத்தை தடுத்து உடலுக்கு தான் சுமை தருகிறது என்று பார்த்தால் சில அணி தலமைகள் இந்த சியர் லீடர்சை உள ரீதியாகவும் துன்புறுத்துகிறார்கள். எப்படி என்றால் ஒரு ஜீன்ஸ்சை அணியக்கொடுத்துவிட்டு அதற்கு மேல் ஒரு குட்டி ஷோர்ட்சை போட்டு விட்டிருக்கிறார்கள். கேட்டால அந்த ஜீன்ஸ் கழன்று விழாமல் இருக்கவாம். இது இந்த சியர் லீடர்ச் பெண்களின் மனதில் "நாங்கள் என்ன சின்ன பிள்ளைகளா? எங்களுக்கு எங்கள் ஜீன்ஸ்சை பார்த்துக்கொள்ள தெரியாதா? எங்களை சிறு பிள்ளை போல் நடத்துகிறார்கள்" என்று மனதளவில் குமுறி மனநிலை பாதிப்புக்களை ஏற்படுத்துமளவுக்கு ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாறிவிட்டிருக்கிறது.

ஆக நான் என்ன சொல்கிறேன் என்றால் அந்த ஷோர்ட்சை மட்டும் கொடுங்கள் அவர்கள் மனநிலையோடு விளையாடாதீர்கள்.

எனதருமை ஐ.பி.எல் ரசிகர்களே! சமூக தொண்டு நிறுவனங்களே! இந்திய பொருளாதார அமைச்சரே, பொருளாதார வல்லுனர்களே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த சியர் லீடர்ஸ் துஷ்பிரயோகத்துக்கு ஒரு முடிவு கட்டுவோமானால் இந்தியாவில் பாதி பிரச்சினை தீர்ந்து விடும் . இப்போதைக்கு இந்த பெட்ரோல் விலை குறையும். 

கேட்க செவியுள்ளோன் கேட்கட்டும்!

டிஸ்கி  :- ஐ.பி.எல் சியர் லீடர்ஸ் அணிந்திருக்கும் ஆடைகள் ( கலாசார ஆடைகள்) ஐ.பி.எல் இன் சுவாரசியத்தை குறைப்பதாக இருக்கிற படியால் இனிவரும் போட்டிகளில் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் ஆடை வடிவமைப்பு இருக்கும். 

- ஐ.பி.எல் அதிகாரி ஒருவர்-
(ஏதோ ஒரு ஊடகத்தில் படித்த ஞாபகம்) 

இந்தியாவில் இருக்கின்ற பிரச்சினைகளில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுள் இதுதான் முக்கியாமானதென்று அவர் கருதியிருப்பதால் , அண்ணலின் கருத்துக்கு நானும் வலுச்செர்த்து இருக்கிறேன்.
- வெளங்கிரும், நிச்சயம் வல்லரசு ஆயிடுவோம்- 

ஐ! வாண்ட் ஒன்லி காமார்ஷியல் , ஐ வாண்ட் ஒன்லி கமார்ஷியல்!



Friday, May 25, 2012

"கொலைவெறி நாயகன்"தனுஸ் நிகழ்ச்சியில் பிரபலபதிவர்களுக்கு அனுமதி மறுப்பா? பாகம் 3

இது எப்டி இருக்கு..... ஹா... ஹா... ஹா... ஹா...


அனைத்துலகம் வாழும் பதிவுலக நேயர்களே! அட்டுபிகரை கரக்ட் பண்ணும் நோக்கில் அலையும் லட்சியவாதிகளே, இளம் ஆதினமாக எம் தலைவன் நித்தியானந்தன் பொறுப்பேற்றபிறகு அதிநவீனமாக ரஞ்சிதாவுடனோ, ரகசியாவுடனோ இணைந்து எம் பெருமான் பூஜை செய்யும் காணொளி வந்துவிடாத என ஏங்கும் பக்த கோடிகளே! அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள். சி.பி. செந்தில்குமாருக்கு சவால்விடுகிறேன், சி.பி.ஐக்கு நூல் விடுகிறேன் என்று ஒரு மொக்கை தொடரை ஆரம்பித்த இந்த பதிவுபட்டறயின் (ஏது பட்டறையா?# புது வேர்ட், நோட் பண்ணுங்கப்பா)  ஓனர் இதுவரை வெளிவந்த இரண்டு பாகத்துக்கும் 1000+ HITZ வந்ததாக என்னை புழுக சொன்னாலும் , 200+  HITZ வாங்குவதற்கு அவர் மூக்கால் அழுத்தை கூட இருந்து பார்த்தவன் என்கிற முறையில் இந்த பாகத்தோடு நான் எஸ் ஆவதுதான் எனது கிட்னிக்கு நல்லது என நினைக்கிறேன். ஆனாலும் பிரபஞ்ச சூப்பர் ஸ்டார் அண்ணன் பவர் ஸ்டார் தனது லத்திக்காவை 300+ நாட்கள் ஓட்டிய தந்திரோபாயத்தை பயன்படுத்தி இந்த பிளாக் ஓனரும் ( அவர் பவர்ஸ்டார் கொ.ப.சே வாக இருக்கிற படியால்) இந்த பதிவை பிரபலப்படுத்தும் நோக்கில் இதே பிளாக்கில் ரிப்பீட் அடித்தால் சாணியை கொண்டு அவரது சரீரம் எல்லாம் அடிப்போம் என்று சத்தியம் செய்து கொள்வோமாக.


இன்றய நாள் தான் இந்த மரண மொக்கை பதிவான "முடிஞ்சா ஜெயிச்சுப்பாரு ஒரு கோடி" தனுஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சியின் இறுதி நாளாகும், சில வேளை இந்த மரண மொக்கையை படிக்கின்ற உங்களில் சில பேருக்கும் இறுதி நாளாக கூட இருக்கலாம். இன்றைய தினம் மிக முக்கியமானதாக இருக்கும், காரணம் பலரது கேள்வியாக இருக்கக்கூடிய "யார் அந்த ஜீனியஸ்" என்கிற கேள்விக்கு விடை தரப் போகிறோம், நிகழ்ச்சி முடியும் வரை காத்திருங்கள், இந்த மரண மொக்கையை படிக்கும் போது பாதியிலே உங்கள் உயிர் பிரிந்தால் அதற்கு கம்பனி பொறுப்பல்ல! நான் உங்கள் சந்தானம் , வாங்க டாக்டர் டூலிட்டில்!!!"

டூலிட்டில் கையில் பால் சொம்புடன் "செண்பகமே செண்பகமே " பாடியபடி வருகிறார்.

"என்ன டூலிட்டில் காலேல போறதுக்கு மறந்திட்டீங்களா, இது ஷூட்டிங் ஸ்பாட், இங்கெல்லாம் போக முடியாது"

டூலி:- இல்ல சார் ! ராமராஜனுக்கு அப்புறமா மாடுகளுக்கு எல்லாமே நான் தான், சோ ஒரு சின்ன காம்ளிமென்ட். இதில பால் இருக்கு பெரியவா நீங்க எடுத்துக்கணும்.

"ஏய் ! கடமைக்கு குறுக்க அமலா பாலே வந்தாலும் கண்டுக்காத பரம்பரடா நாங்க, நீ கேவலம் பசு பால குடுத்து ஒரு கோடிய கரக்ட் பண்ண பாக்கிறியா? ஒழுங்கா உக்காந்து கேள்விக்கு பதில் சொல்லுடா மேதை நம்பர் 2!"

" நேயர்களே , நமது போட்டியாளரா இப்போது வந்திருப்பவர் பிரபல டாக்டர் அப்டீன்னு சொன்னா , டாக்டருங்க எல்லாரும் கல்ல கொண்டே என்னய அடிப்பாய்ங்க, அதனால உண்மைய சொல்லிடறேன். நோய் வந்த மாடுகள விட்டுப்புட்டு, சும்மா திரியுற நல்ல மாடுகள புடிச்சு ஊசி போடுகிற வேலயத்த வேல பண்ணுகின்ற டாக்டர் டூலிட்டில் அவர்கள்."

ஆணிய புடுங்க வேணாம்!


"டாக்டர் டூலிட்டில் உங்களுக்கான முதல் கேள்வி. உங்களது துறை சம்மந்தமகவே ஆரம்பிக்கிறேன்.

6.ஆத்திர அவசரத்துக்கு எங்காவது எந்தவித சவுண்டு எஃபக்டும் இன்றி கொலைவெறி பாடல் பாடவேண்டிய சந்தர்ப்பம் தனுசுக்கு ஏற்பட்டால், சவுண்ட் மிக்க்சிங்க் இல்லாத தனூஸின் குரல் எப்படி இருக்கும்? 

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்.....

A)கரடி கக்கூஸ் போவது போல்

B)நடுச்சாமத்தில் பூனை "அதுக்கு" முனகுவது போல்

C)"ஆய்" போகும் துவாரத்தில் பட்டாசு கொழுத்தப்பட்ட நாய் கத்துவது போல்

D)டயரியா வந்த செம்மறி ஆடு கத்துவது போல்


டூலி:- சார் ! நான் லைஃப் லைன் யூஸ் பண்ணிக்கிறேன் சார், என்னோட குருநாதர் ராமராஜன் கிட்ட கேட்டு சொல்றேனே.....

"'ஷூர்... தாரளமா"

டூர்... டூர்...     டூர்... டூர்.... ( ஃபோன் ரிங் போகுதுப்பா)



ராமராஜன்:- ( ஃபோனில்) யாருங்க?

"சார்! நான் சந்தானம் பேசுறேன், ஒரு நிகழ்ச்சி  சம்மந்தமா உங்களோட உதவிய ஒருத்தர் கேட்டு இருக்காரு, அவருக்கு உங்களோட உதவி தேவை"

ராமராஜன்:- சரி பண்ணிடலாம், எனக்கு கொஞ்சம் அவசரம், எல்லா மாடும் பால் கறக்குது ஆனா ஒரு காள மாடு மட்டும் கறக்க மாட்டேங்குது , அது ஏன்னு தெரியல. நானும் எவளவோ புடிச்சி புடிச்சி இழுத்து பாக்குறேன், இதோட பால் மட்டும் வெறும் தண்ணீயா வருதுப்பா, என்ன அதிசயமோ தெரியல..... அது சரி என்ன கேள்வி தம்பி?

டூலி:- அது வந்துண்ணே....

"டேய் நிறுத்துடா, அவன் என்னமோ காள மாட்டில பால் கறக்கிறேன்னு எத எதயோ புடிச்சு இழுத்துக்கிட்டு இருக்கான், அதில பால் தண்ணியா வருதுன்னு பீலிங்கு வேற, டேய் பன்னாட காள மாட்டோட அதுல புடிச்சு இழுத்தா தண்ணி வராம பின்ன என்ன ஐஸ்வர்யா தனுசா வருவாங்க..... இந்த லட்சணத்தில நீ அவனுகிட்ட டவுட்டு வேற கேக்குறேங்கிற.... உருப்படும்டா... அதுசரி முதலாவது செமஸ்டர் முடிய முன்னமே பெரிய உடச்ச கடலயாட்டம் ( "பருப்பு" என்ற வார்த்தையின் நாகரீக வடிவம்) தொழில் கத்துக்க போறேன்னு கெளம்பி போயி மாட்டோட பின்பக்கமா கையவிட்டு சாணி வாரினவன் தானே நீயி. இது எல்லாம் எனக்கு ஒரு பொழப்பு. நீ என்னடா சொல்றது, நான் சொல்லுறன்டா உனக்கு இந்த கேள்வி பாஸுடா....."

இதனால் தெரிவிப்பது என்னவென்றால் தர்ப்பூசணி உடலுக்கு குளிர்ச்சியை தரும், வேற ஏதாச்சும் கற்பனை பண்ணி அது உங்களுக்கு அது கிளிர்ச்சியை தந்தால் அது தற்செயலானதே!

"மிஸ்டர் டூலிட்டில் உங்களுக்கான இரண்டாவது கேள்வி"

7.2012 இல் உலகம் அழியும் பட்சத்தில் , 2012 என்ற திரைப்படத்தின் அடிப்படையில் ஒரு கப்பல் கட்டப்பட்டால் அங்கு பாதுகாத்து வைக்கப்படவேண்டிய உலகத்தின் மகத்தான சொத்து எது?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்....

A) மோனாலிஸா ஓவியம்

B) ஷேக்ச்பியரின் படைப்புக்கள்

C) பியாட்டா

D) கொலைவெறி சி.டி

டூலி:- அது வந்து சார் பரிணாமத்தின் அடிப்படையில்......

"ஏய்! என்னடா கேள்வி கேட்டா பரிணாமம் நிர்வாணம்ன்னு அலம்பிக்கிட்டு இருக்க, ஒழுங்க பதில் சொல்லுறியா இல்ல நீயி கொண்டுவந்த மாட்டு ஊசிய எடுத்து உனக்கே அடிக்கட்டுமா?"

டூலி:- அதாவது இந்த கேள்விக்கான விடை எனது ஷேவிங் செய்த குரங்குன்ன பதிவில இருக்கு.....

'டேய்! உன்னய மாட்டுக்கு ஊசி போடுறவன்னு தான்டா நெனச்சேன், நீயி குரங்குகளுக்கு ஷேவிங்கும் பண்ணுவியா? அப்பிடீன்னா இந்த பிளாக்கு ஓனருக்கும் பண்ணிவிடுப்பா...."

டூலி:- சார் இந்த கேள்வி பாஸு சார்......

"ஓகெ, உங்களுக்கான இறுதி கேள்வி"


8. 2017 இல் தனூஸ் ......

A) தமிழக முதல்வர் ஆவார்.

B) சில பல ஆஸ்கார் அவார்டுகளை அள்ளுவார்

C) அமெரிக்க ஜனாதிபதியாவார்

D) இன்னும் நாலைந்து குழந்தைகளுக்கு அப்பா ஆவார்.

'சொல்லுங்க மிஸ்டர் டூலிட்டில் , சொல்லுங்க"

டூலி:- அதாவது ஒரு மிருக வைத்தியனா நான் சொல்ல வாறது என்னன்னா, அதாவது என்னோட கணிப்பின் படி தனுஸ் இன்னும் நாலைந்து குழந்தைகளுக்கு அப்பா ஆவார்ன்னு நெனைக்கிறேன், சோ ஆப்ஷன் 'D" யை லாக் பண்ணிடுங்க சார்.

" ஆப்ஷன் "D" யை லாக் பண்ண கூடாதுடா , நீ சொல்லுறத பாத்தா தனுச தான் வண்டலூர்ல லாக் பண்ணி வைக்கணும். ஒரு மிருக வைத்தியனா தனுசுக்கு இன்னும் நாலைந்து கொழந்த பொறக்கும்ன்னு சொல்ரியா? ராஸ்கல் டேய், அப்போ தனுஸ் என்ன மிருகமா....?"

"மவனே அந்திரிச்சு ஓடிப்போயிரு, போயி ஏதாச்சும் மாட்டுக்கு பின்னால கைய வுட்டு "சொலிட் மாஸ்" எடு, மறுபடி உன்ன இந்த ஏரியாவில பாத்தேன், மவனே அடிச்சே கொன்னுடுவென்"

டூலி:- சார்! "சந்தானத்துக்கும் சக்கரவியாதிக்கும் என்ன சம்மந்தம்ன்னு" பரிணாமத்த பேஸ் பண்ணி ஒரு பதிவு எழுதிருக்கேன், பாக்கிறீங்களா?

"மவனே இனி ஒரு செக்கன் என் முன்னாடி நின்ன, தேங்காயாலேயே அடிச்சு கொன்னுபுட்டு "கொப்பரதேங்காய்க்கும் கொலைக்கும் என்ன சம்மந்தம்னு" பதிவு நான் போட்டிருவேன் ஜாக்கிரத"

சினிமாவில சரி, நெஜத்தில சரி இந்த பொண்ணுங்களுக்கு எண்ணை வைக்கத தலையோட இருந்தா தான் பிடிக்கும் போல!

"நேயர்களே! போட்டியிலிருந்து டாக்டர் டூலிட்டில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுளதை தொடர்ந்து , மீதமிருக்கும் இரண்டு கேள்விகளுக்கும் ஆடப்போவது யாருன்னா மலேசியாவிலிருந்து குமரன்........!"

"இவர பத்தி சொல்லணுமின்னா கிட்டத்தட்ட மூணுவருசமா பதிவு எழுதுறாரு, ஆனா தன்னோட குறிப்பில அப்பொலேர்ந்து இப்ப வரைக்கும் "எனக்கு பத்தொம்போது வயசுதான் ஆகுதுன்னு" எழுதி வச்சிருக்கிறவரு. செக்கனுக்கு ஒரு தடவ ஃபேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட் பண்ணுற இந்த காலத்துல மூணு வருசமா ஒருத்தரு தன்னோட வயச அப்டேட் பண்ணாம பத்தொம்பது வயசிலேயே வச்சிருக்காருன்னா அது நம்மோட போட்டியாளர் குமரன் தான். ஒரு வேள பெப்ரவரி 29 பொறந்தாரோ என்னமோ? சமீபத்தில கூட எங்களது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் JZரிடமிருந்து "மலேசிய பவர் ஸ்டார்" அப்டீங்கிற பட்டம் வென்று உற்ற்சாகமா இருக்காரு. அவராவது இந்த ஒரு கோடிய சுருட்டுவாரான்னு பாக்கலாம். வாங்க மிஸ்டர் குமரன் சன் ஆஃப் மலேசியா.

குமரன்:- வணக்கம் சார்!

"வணக்கம் எல்லாம் இருக்கட்டும் , அது என்ன "மர்மத்தீவில் மாட்டி தவிக்கும் மனிதர்கள்" பதிவுக்கு அப்புறமா எதயுமே காணோம். ஏன் நீங்க எங்கினயாச்சும் காசு குடுக்காம சாப்பிட்டு மலேசியா பொலிஸ் கிட்ட எக்கச்சக்கமா மாட்டிகிட்டீங்களா? உண்மய சொல்லுங்க நீங்க யாரு? மலேசியாவில நீங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க? உங்கள பாத்து ஏன் பவர் ஸ்டார், ஜே.கே ரித்தீஷ், சாம் அண்டர்சன், டாக்டர் விஜய் எல்லாம் பயப்படறாங்க? சொல்லுங்க குமரன் சொல்லுங்க?"

"இப்பிடி ஏதாச்சும் பில்டப் போட்ட மட்டும் என்ன பாட்ஷா பட கிளைமாக்ஸ்சா சொல்லிட போறிங்க , வாறவன் போறவன் கிட்ட எல்லாம் கடன் கேட்டா பவர் ஸ்டார் மட்டுமில்ல பரவை முனியம்மாவானாலும் பயப்பிடத்தான் செய்வாங்க" ( என்ன நண்பா JZ! இது ஓகெ வா?) 

"சரி குமரன் உங்களுக்கான முதல் கேள்வி"


இவர்களில் யார் தனுஸுக்கு விளக்கு பிடிக்கவில்லை? 

குமரன் :- விளக்கு புடிக்கிறதின்னா என்ன சார்? 

"விளக்கெண்ண..... மூணுவருஷமா பத்தொம்பது வயசிலயே இருந்தா எப்புடி இதெல்லாம் புரியும்? இரு இரு ... உன்னபத்தி விக்கிபீடியாவில ஒரு தகவல் கசிஞ்சிருக்கு, அதாவது நீயி பதின்மூணு வயசில ஆறு வருஷமும், பதினஞ்சு வயசில பன்ரெண்டுவருஷமும், பதினேழு வயசில நாலு வருஷமும் இருந்திருக்க, இப்போ பத்தொம்பது வயசில மூணு வருஷமா இருக்க. டேய்! கணக்கு பண்ணி பாத்தா உன்னோட வயசு அம்பது தாண்டுதேடா! டேய் பவர் ஸ்டார் ! அம்பது வயசில விளக்கு புடிக்கிறதுன்னா என்னான்னு தெரியாத நீயி எல்லாம் ஒரு பெரிய மனுஷன். பை தி பை... 

"விளக்கு பிடித்தல் என்பது நமக்கு நெருக்கமானவர்களை வேறு யாருடனாவது நெருக்கமாக இருக்கவைத்து , கில்மா பண்ண வைத்து அழகு பார்த்து ரசிப்பது. சந்தர்ப்பத்தில் வீடியோவும் எடுத்து திரையிடுவது என பொருள் படும்"

இப்போ சொல்லுங்க குமரன் 


9.இவர்களில் யார் தனுஸுக்கு விளக்கு பிடிக்கவில்லை? 



உங்களுக்கான ஆப்ஷன்ஸ்

A) "அப்பா" கஸ்தூரி ராஜ

B) அண்ண" செல்வராகவன்

C) "மனைவி" ஐஸ்வர்யா

D) காமிரா மேன்.


குமரன்:- இந்த கேள்வியும் , அந்த குடும்பமும் உருப்பட்டாப்ல தான், சார் அந்த கொஸ்டீன் பாஸ் சார் , நீங்க அடுத்த கேள்விய கேளுங்க சார்

இந்த ஸ்கூல் உருப்பட்டாப்ல தான்!


"ஓக்கே, இந்த போட்டியின் இறுதி கேள்வி, இத்தோடு எனக்கு பிடிச்ச எல்லா பீடைகளும் தொலைய போகும் கேள்வி. நான் எஸ்கேப் ஆகப்போகும் கேள்வி. இதோ....."

10. தனுஸ் என்பவர்......

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்

A) இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன்

B) இயக்குனர் செல்வராகவனின் தம்பி

C) இயக்குனர் (?????) ஐஸ்வர்யாவின் கணவர்.

D) சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன்.

"ரொம்ப சிம்பிள் கேள்வி , சட்டுன்னு பதில சொல்லுங்க பட்டுன்னு பணத்த அள்ளுங்க குமரன்"

குமரன்:- சார்! இவளவு நேரமும் ஆடினவய்ங்க அடி முட்டாளுங சார், இப்போ பாருங்க சார் நான் பண்ணப்போற புத்திசாலித்தனமான காரியத்த, லைஃப் லைன் யூஸ் பண்ணிக்கிறேன் சார், தனுஸ் கிட்டயே ஃபோன் பண்ணி கேட்டுக்கிறேன்.

"எது இது புத்திசாலித்தனமான காரியமா? அவன்கூட ஃபோன் கதச்சு முடிய உன்னோட புத்தி பேதலிக்காம இருந்தா சரிதான்."

டூர்... டூர்... டூர்... டூர்....

தனுஸ்:- ஹலோ ஆஆஆஆஆ திவ்வியா.........

"பீட பீட... அதுதான் உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குட்டி போட்டுட்ட இல்ல , அப்புறம் என்ன திவ்வியா , அனுஷ்கா, இந்த கேள்விக்கு பதில் சொல்லு மொதல்ல.....


"நீயி கஸ்தூரிராஜா மகனா? இல்ல செல்வராகவன் தம்பியா? இல்ல ஐஸ்வர்யாவோட புருசனா? இல்ல சுப்பர்ஸ்டார் மருமகமுள்ளயா? சொல்லு..."

தனுஸ்:- இதில எதுவுமே நான் கெடயாது, எனக்குன்னு ஒரு தனி அடையாளம் இருக்கு, அதாவது அடையாளம்ன்னா மாட்டுக்கு குறி சுடுறாப்ல நல்லா சுட்டு அடையாளம் வச்சி ( சவுண்ட் மிக்ஸிங்க் இல்லாமல் பாடுகிறார்) வை திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி.......

குமரன்:- அம்மா ! அப்பா ! ஆள வுடுடி ஆத்தா, உயிர் தப்பினா போதும்டா சாமி.......

குமரன் தலை தெறிக்க ஓடுகிறார்.

"நேயர்களே இந்த பிளாகு ஓனர் பேரிக்கா மண்டயன் , பிளான் பண்ணியே இப்பிடி எல்லாம் கேள்வி ரெடி பண்ணி இருக்கான், கிழிஞ்ச வேட்டிக்கே வழீல்லாத இந்த நாயி ஒரு கோடிக்கு நிகழ்ச்சி பண்றேன்னு சொல்லவே நான் உசார் ஆகியிருக்கணும் , அது என்னோட தப்பு தான். இப்போ எங்களோட ஜீனியஸ் உங்கள் முன்னால் தோன்றும் நேரம், இந்த மாதிரியான அறிவு பூர்வமான நிகழ்ச்சிக்கு பின்னால் இருந்து வழி நடத்தும் ஜினியஸ் இதோ....

எங்கள் ஜீனியஸ் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்த போது எடுத்துக்கொண்ட படம்!


 மறுபடி உங்களை இந்த மாதிரி ஒரு மரண மொக்கை பதிவில் சந்திக்கவே மாட்டேன்னு கூறி தலை தெறிக்க ஓடும் நான் உங்கள் சந்தானம்."


டிஸ்கி:- இந்த தொடர் பதிவுகளில் என்னால் கலாய்க்கப்பட்ட அத்தனை பதிவர்களும் பதிவுலகில் தமக்கென தனியிடம் பிடித்தவர்கள்.  என்னால் கலாய்க்கப்பட்ட எனது இந்த மூன்று நண்பர்களான JZ, டூலிட்டில், குமரன் ஆகியோரது சிறு விபரம் இதோ... (இவர்களை பற்றிய அலசலை ஒரு பதிவாக தயார் பண்ணிகொண்டு இருக்கிறேன், விரைவில் வெளியிடுவேன்.)

JZ:- ஆங்கில திரைப்படங்கள் சம்மந்தமான எந்த பதிவுக்கும் எனக்கு தெரிந்து இவரது தளத்தை விட இதுவரை சிறந்த தளம் ஒன்றை நான் காணவில்லை, சூடான ஆங்கில சினிமா விமர்சனங்கள் + திரைக்கு பின்னால் நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள். அவ்வப்போது கிசுகிசுக்கள் வேறு. நீங்கள் ஒரு ஆங்கில பட பிரியராக இருந்தால் வேறெங்கும் போக வேண்டியதில்லை. இப்பவே கிளிக்குங்க....


டூலிட்டில்:- உயிரியல் , பரிணாமம் , விஞ்ஞானம் எல்லாவற்றையும் நித்திரையோடு சேர்த்து  மூளைக்குள் அனுப்பிய வரலாறுகளை கண்ட எனக்கு பரிணாமம் + உயிரியல் விடயங்களை சுவாரசியமாக எழுதுகின்ற ஒரே பதிவர் என்பதால் மிகவும் பிடித்துப்போனவர். ரசிக்க வைக்கும் எழுத்து நடை , எப்போதும் புரியாத உயிரியல் வார்த்தைகளை பிரயோகிக்குக்ம் தன்மை இல்லாமை, சுவாரசியமான படங்கள் மூலமே சொல்லவந்ததை 70% புரிய வைத்துவிடும் லாவகம் என்பன இவரது தனித்துவம். இவர் வைக்கும் பதிவு தலைப்புகளுக்கே இவரது பதிவுகளை படிக்கலாம். உதாரணத்துக்கு சில "ஷேவிங்க் செய்த குரங்கு, "திருடாதே குரங்கே திருடாதே", 'அப்பன்டிக்ஸ்ன்னா பெரிய அப்படாக்கரா?", "கத்தியின்றி , பிளேடு இன்றி ஷேவிங்க் ஒன்று நடந்தது". படிக்கவே சுவாரசியமா இல்ல? இதை விட சுவாரசியமான எழுத்துக்கு சொந்தக்காரர், நிஜ வாழ்வில் ஒரு வைத்தியர், இப்போது வைத்திய துறையில்  மாஸ்டர் செய்கிறார். ஒரு தடவை அந்த தளத்துக்கு போய் பாருங்கள், நிச்சயம் அவரை பாலோ செய்வீர்கள், அப்புறம் அடிக்கடி உங்களது டாஷ்போர்டில் இவரது பதிவுகளின் அப்டேட்டுகளை செக் பண்ணுவீர்கள், என்னைப்போல.... நிச்சயம் போலோ பண்ண வேண்டிய ஒரு பதிவர். தளத்தின் தலைப்பை பாருங்களேன்.


குமரன்:- இளம் வயதுகாரர் (?????) மறுபடி ஒரு சிறந்த ஆங்கில பட விமர்சகர், புதிய படங்கள் மட்டுமல்ல, சந்தர்பத்தில் 1920 வரை சென்று அலசுவார். அது போக கவிதை , சுவாரசியமான சம்பவங்கள் என்று அமர்களப்படுத்துபவர்.


எலேய் ! பாத்துடா... பாத்து வெட்டுடா... டேய்!  டி- ஷேர்ட்ட பாத்து வெட்டுடா... கொக்கா மக்கா!

பாகம் ஒன்று படிக்க

பாகம் இரண்டு படிக்க








Monday, May 21, 2012

"கொலைவெறி நாயகன்"தனுஸ் நிகழ்ச்சியில் பிரபலபதிவர்களுக்கு அனுமதி மறுப்பா? பாகம் 2

இவனோட பிளாக்குக்கா வந்தோம்? நம்ம பொழப்பு இனி நடந்தாப்புல தான்


"வணக்கம்... வந்தனம்.. நமஸ்தே.. வாலிப வயொதிப அன்பர்களே! அடச்சே .. என்ன இது இவன் புரோகிராம் பண்ணவந்ததுக்கு அப்புறம் என் பேச்சு என்ன மிட்நைட் பலான வைத்திய வெளம்பரம் பண்ணுறவன் போல ஆயிடுச்சு.... நேயர்களே இது உங்கள் மொக்காபிமான "கிஷோகரின் பக்கங்கள்" மொக்கை பதிவு, நான் உங்கள் அபிமான சந்தானம். இந்த மரண மொக்கை பிளாக்கை பிரபலபடுத்துகிறேன் பேர்வழி என்று இந்த வலைப்பூ அதிபர் ( பெரிய ஆயிரம் கோடி ரூவா கம்பனி அதிபர் இவரு) ஒரு மரண மொக்கை நிகழ்ச்சி நடத்தி வருவது நீங்கள் அறிந்ததே..! மீண்டும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன் "முடிஞ்சா ஜெயிச்சு பாரு ஒரு கோடி" நிகழ்ச்சியின் இரண்டாம் நாளுக்கு உங்களை வரவேற்கிறேன். பதிவுலகின் பிதாமகன் பன்னிகுட்டி ராமசாமி ஆடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டாவது கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இது தான் அந்த கேள்வி....."


2.தனது சினிமா வாழ்வின் ஆரம்பத்தில் கஸ்தூரி   ராஜா என்றொரு அப்பாவும் , செல்வராகவன் என்றொரு அண்ணாவும் இல்லாமல் போயிருந்தால், அல்லது திருMஅனத்துக்கு பின்னர்மொக்கை படங்களை திரைக்கு அனுப்பிய போதெல்லாம் "சுப்பர் ஸ்டார் மருமகன்" என்ற அந்தஸ்து இல்லாமல் இருந்திருந்தால் , தலைவர் தனூச் பின்வரும் தொழில்களில் எந்த தொழில் செய்திருப்பார்?

A)ராயபுரம் பஸ் ஸ்டாண்டில் ராப்பிச்சை எடுத்திருப்பார்

B)மாம்பலத்தில் மாமா வேலை பார்த்திருப்பார்

C)அண்ணா நகரில் அண்டங்காக்கா புரியாணி விற்றிருப்பார்

D)நமக்கல் காப்ரேஷன் வண்டியில் நாய் புடித்திருப்பார்


"சொல்லுங்க‌ மிஸ்ட‌ர் ப‌.கு.ரா இந்த‌ கேள்விக்கான‌ விடை எது? சொன்னா இப்போவே ஒரு கோடி."

ப‌.கு.ரா :- (ம‌ன‌துக்குள்) டேய் இதில‌ எந்த‌ வேலைக்கும் அவ‌ன் ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌மாட்டான். சில‌ வேளை இந்த‌ நாலு வேலையையும் ஒண்ணா ப‌ண்ணியிருக்குமோ என்ன‌மோ....

"என்ன‌ யோசிக்கிறீங்க‌ ப‌.கு.ரா? சொல்லுங்க‌.. எந்த‌ ப‌தில‌ நீங்க‌ சொல்ல‌ போறீங்க‌? ந‌ல்லா யோசிங்க‌..."


ப.கு.ரா :- என்னய ஒரு வழி பண்ணிடறதுன்ன முடிவுல தான் இங்க கூட்டியாந்து இருக்கீங்க ... எல்லாம் என்னோட விதி , அத யாரால மாத்த முடியி.. சத்திய சோதன. ஏனுங்க தம்பி இந்த கேள்விக்கும் விடை சொல்லாம நான் 'பாஸ்" பண்ணிவிடலாமா?

"ஓ! தாராளமா.. அப்போ நீங்க இந்த கேள்விய பாஸ் பண்ணிவிடுறீங்களா? ஏன் இந்த கேள்வி என்ன அவளவு கஸ்டமாவா இருக்கு? "

ப.கு.ரா:- மவேனெ நீ வெளிய வாடி அப்போ இருக்கு உனக்கு கச்சேரி, இந்த கேள்விக்கு மனுசன் பதில் சொல்லுவானாடா, இப்போ இந்த "மூணு" படம் பிளாப் ஆனதுக்கே அந்த நாயி எந்த சந்துல பிச்சயெடுக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கு, இதில இவங்க யாருமே இல்லன்னா அதோட கத அம்பேல்.. நீயி வேற அந்த நாய்க்கு ஐடியா தாறாப்ல நல்ல நல்ல தொழிலுகள அள்ளி விடற.. என்ன எல்லாருமா சேர்ந்து என்ன டபாய்க்கிறீங்களா? அடிச்சே கொன்னுடுவேன் படுவாக்களா....

"ஓகெ..ஓகே... கூல் கூல் மிஸ்டர் ப.கு.ரா, நாம  அடுத்த கேள்விக்கு போயிடலாம்."

ப.கு.ரா:- டேய் நிருத்துடா ! நான் அடுத்த கேள்விக்கு ஆடுறேன்னு சொன்னனா, இங்கபாரு பதிவுலகில நான் சாதிக்க வேண்டியது இன்னும் நெறய இருக்கு, உன்னயும் இந்த பிளாக்கு ஓனரையும் குரல்வளைய கடிச்சு கோன்னுபுட்டு ஜெஜிலுகு போக விரும்பல, நான் ஆடத்தில இருந்து விலகிக்கிறன்டா, (அழுகிறார்) ஆனா ஒண்டுடா மக்களா, நீங்க ரெண்டு பேரும் மறுக்கா என் கண்ணில பட்டீங்க அப்புறம் தமிழ் நாட்டு ஜெஜில்லா ஒரு எண்ணிக்க கூடும்டா.... உங்க ஏரியாவில இன்னமும் கொல விழலல்ல, இனி விழும்டா... இனி விழும்....! பொடி நடையா நடந்தே நான் இந்தியா போயிடுறேன்ட... ஆள விடுங்கடா அப்பா...

"ஐயோ பாவம், பன்னிகுட்டியார் இப்பிடியொரு முடிவை எடுத்துவிட்டதால் இப்போ நாங்க அடுத்த போட்டியாளரை களமிறக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறோம். டேய்! யார்ரா வர்ரீங்க? யோவ் JZ ! நீதாய்யா இருக்கிறதிலயே வயதில மூத்தவரு, என்ன சமஞ்ச புள்ளையாட்டம் பம்முற, வாய்யா , வந்து ஆடுய்யா.... நமது அடுத்த போட்டியாளர் மிஸ்டர். JZ!!!!!"

வெளிய வாடா ! உன்ன வாயிலேயே வெட்டுறேன்


JZ வந்து Hot Seatஇல் அமருகிறார்.....


"இப்போ நம்ம போட்டியாளரா இங்க உக்காந்து இருப்பவர்தான் பிரபல ஆங்கில படங்களை விமர்சனம் பண்ணுகிறேன் பேர்வழின்னு நாசம் பண்ணுகிற திரு JZ அவர்கள். எந்த ஆங்கில  படம் வந்தாலும் தியேட்டரில் பார்ப்பதை பாவம் என்று நினைத்து , கோல் மால் பண்ணி திருட்டுத்தனமாய் ஆன்லைனில் பார்த்துவிட்டு, ஏதோ அமரிக்கா போயி அங்கேயே வி.ஐ.பி ஷோ பார்த்தது கணக்கா விமர்சனம் பணுகின்ற பிரபல பதிவர். வணக்கம் JZ சார்!"

JZ:- வணக்கம் சந்தானம் , நீங்க என்னய ரொம்ப புகழுறீங்க..

"ஏது புகழுறனா, இந்த பிளாக்கு ஓனரு உன்னயா முடின்ச வரைக்கும் உன்னய கழுவி ஊத்த சொன்னானேடா அத தான் பண்ணினேன், நீ என்னடான்ன புகழுறேங்குற?"

JZ:- சார்! எங்க ஃபிரண்ட்ஷிப்பில இப்பிடிதான் ஆளை ஆள் புகழுவோம்...

"சுத்த மானங்கெட்ட ஃபிறண்ட்ஷிப்பால்ல இருக்கு... சரி நாம இப்போ அடுத்த கேள்விக்கு போயிடலாம். மிஸ்டர் JZ! உங்கலுக்கான முதல் கேள்வி!"


3.இசை உலகில் அழியா புகழ் பெற்ரவர்களில் இவர்களில் எவர் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்...

A)மைக்கல் ஜாக்சன்

B)பீத்தோவன்

C)பொப் மார்லி

D)தனூஸ்


"சொல்லுங்க மிஸ்டர் JZ... எத்தின லைஃப் லைன் வேணும்னாலும் நீங்க யூஸ் பண்ணிக்கலாம்."

JZ:- சார், விக்கிபீடியா பாக்கலாமா? ஏனா என்னோட "டிம்மும் டெப்பும்" அங்க பாத்த்டு தான் எழுதுவேன்.

"நீ விக்கிபீடியா பாப்பியோ இல்ல நக்கிபீடியா பாப்பியோ, பதில் சொன்னா போதும்டா சாமீ!"

கட கடவென்று கீ போர்டை தட்டியும் பதில் கிடைக்கததால் , முகத்தை சுழிக்கிறார் JZ! 

"என்ன சார் ஏதாச்சும் மாட்டிச்சா?"

JZ:- இல்ல சார் இந்த கேள்விய பாஸ் பண்ணி விட்டிருங்க.

"என்ன சார் தனூஸ் ரசிகன் நீங்க நீங்க கூட பதில் சொல்லலன்னா எப்பிடி, சரி ஓகெ, அடுத்த கேல்விக்கு போயிடலாம். உங்களுக்கான அடுத்த கேள்வி .... 

4.பின்வரும் பஞ்ச் டயலாக்குகளில் 21ம் நூற்றாண்டின் சிறந்த பஞ்ச் என்ற விருதுக்கு தகுதியானது எது?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்...

A)கொல கொலய முந்திரிக்கா.. பவர்ஸ்டார் அடிச்சா நீ கத்தரிக்கா...

B)ஏய் நான் பாக்கத்தான் சுள்ளான் .. சூடானேன் சுளுக்கு எடுத்துருவேன்....

C)ண்ணா.... ஒரு தடவ முடிவு பண்ணினா எம் பேச்ச நானே கேக்க மாட்டேன்.

D)ஏய்...ஏய்...ஏய்...ஏய்....ஏய்...ஏய்...ஏய்...

JZ:- சார் நான் லைஃப் லைன் யூஸ் பண்ணிக்கிறேன் சார், அந்த பாழா போன ஜீனியசிடம் சொல்லி ரெண்டு விடைய தூக்கிட சொல்லுங்க......

"என்ன JZ அசால்டா ஆள தூகிடுங்கன்னு சொல்றாப்ல சொல்றீங்க. சரி மிஸ்டர் ஜீனியஸ் நம்ம பிரபல பதிவர் JZகு ரொம்ப கன்ஃபியூசனா இருக்கிறதால ரெண்டு விடையா துக்கிட்டு நல்லதா ரெண்டு விடை சொல்லிடி யக்கம்மா.... அடச்சே மறுபடி மறுபடி பழைய தொழில் எல்லாம் ஞாபகம் வருதே, எல்லாம் இந்த பிளாக்கு ராசி..."

கிளிங்......

இதோ JZ உங்களுக்கான இரண்டு ஆப்ஷன்கள் ஃபில்டர் பண்ணி கிடச்சிருக்கு, இப்போ உங்களுக்கு ஒரு தெளிவு வந்திருக்கும்னு நெனைக்கிறேன். அந்த இரண்டு ஆப்ஷன்களும் இதோ....

A)கொல கொலய முந்திரிக்கா.. பவர்ஸ்டார் அடிச்சா நீ கத்தரிக்கா...

B)ஏய் நான் பாக்கத்தான் சுள்ளான் .. சூடானேன் சுளுக்கு எடுத்துருவேன்....



"இப்போ சொல்லுங்க மிஸ்டர் JZ! உங்களுக்கான வேலையை மிஸ்டர் ஜீனியஸ் இலகுவாக்கி இருக்கிறார். அந்த விடை எது? சொல்லிட்டு கோடி ரூவாவ அள்ளிகிட்டு போங்க."

உனக்கு வேட்டு கன்ஃபார்ம்!


JZ:- டேய்! கிஷோகரு எனக்கும் உனக்கும் ஆயிரம் ஆயிரத்தைநூறு இருக்கலாம், அதுக்காக இதெல்லாம் நல்லாவே இல்லடா... ஏதோ பூர்வ ஜென்மத்தில நான் பண்ணின பாவம், உன்னோட பிளாக்கில தெரியா தனமா வந்து மாட்டிகிட்டேன். இப்போ பாரு நான் படுற அவஸ்தய....

"மிஸ்டர் JZ எங்க முதலாளிய அப்பிடியெல்லாம் திட்டக்கூடாது."

JZ:- யாரு முதலாளி? அந்த நாயா? இவளவு காலமா ஃபுட்பால் பாக்குது ஆனா யாரு யெயிப்பாய்ங்கன்னு கணிச்சு சொல்ல தெரியாத நாயி எல்லாம் முதலாளியா? இந்த கேள்வி பாஸுடா.....


நான் உங்ககிட்டேர்ந்து நெறைய எதிர பாக்கிரேன் மிஸ்டர் JZ! நீங்க என்னடான்னா பாம்பு "உஸ்ஸு" உஸ்ஸுங்றாப்ல "பாஸு" 'பாஸு'ங்கிறீங்களே!

JZ:- இந்த பிளாக்கு ஓனருக்கு தான் வேற வேல இல்லன்ன உங்களுக்குமா சார்?

"எங்க ஓனர பத்தி அப்பிடி எல்லாம் தப்பா சொல்லாதிங்க மிஸ்டர் JZ"

JZ:- யாரு, காலா காலமா ஃபுட்பால் மாட்ச் பாத்தும் எந்த டீம் ஜெயிக்கும்னு சரியா சொல்லத்தெரியாதவன் எல்லாம் ஒரு ஓனரு.. தூ.........


"நீங்க ரொம்ப ஓவரா உணர்ச்சி வசப்படுறீங்க மிஸ்டர் JZ! நாம உங்களோட இறுதி கேள்விக்கு போகலாம். உங்களுக்கான இறுதி கேள்வி. நீங்கள் ஆங்கில படங்கள் அதிகம் பார்கிற படியால் அது சம்மந்தமாகவே கேட்கிறேன். இதோ உங்களுக்கான கேள்வி.....

5.கீழ் குறிப்பிடப்படும் திரைப்பட கதாநாயகர்களில் , யார் புவியீர்ப்பு சக்தியை மீறி ஆகாயத்தில் பறந்து பறந்து சண்டை போட்டு எதிரியை வீழ்த்த கூடியவர்கள்?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்.....

A)சூப்பர் மேன்


B)வான் HONG


C)தனூஸ்


D)பட் மேன்










என்ன JZ சார் ! இந்த கேள்விக்காவது விடை தெரியுமா இல்லயா?

JZ:- அது வந்து சார் நான் "டிம்மும் டெப்பும்" எழுதும் போது....

"டேய் நிறுத்துடா நானும் வந்தலேர்ந்து பாத்துகிட்டு இருக்கேன், ஏதோ அக்கா பொண்ணு பேர அடிக்கடி சொல்லூற மாதிரி டிம்மு டெப்பு , டிம்மு டெப்புன்னு அளந்துக்கிட்டு இருக்க.. ஏன் டிம்மையும் டெப்பையும் குத்தகைக்கு எடுத்து வாடகைக்கு விட்டிருக்கியா? இன்னொரு தடவ டிம்மு டெப்புன்னு ஏதாச்சும் சொன்ன டப்பு டப்பு வாயிலேயே அடிப்பேன்..."

JZ:- சாரி சார்! எனக்கு விடை தெரியும்.

'வெரி குட் வெரி குட்.. எங்க சொல்லுங்க பாக்கலாம், பிரபல பதிவர் ப.கு.ரா வால் முடியாதது நம்ம JZஆல் முடிந்திருக்கிறது, யோவ் பிளாக்கு ஓனரே ஒரு கோடிய ரெடி பண்ணுய்யா.... அம்மா மாரே அக்கா மாரே அண்ணன்மாரே எல்லாரும் ஒரு தடவ ஜோரா கைதட்டுங்க... என்ன குரங்கு வித்த காட்டுறவன் போல அயிட்டேன்.. சே.... சொல்லுங்க JZ!

JZ:- சார் அந்த கேள்விக்கு விடை ஆப்ஷன் A சூப்பர் மேன் சார்!

'ஆர் யூ ஷூர், லாக் பண்ணிடலாமா?


JZ:- பண்ணிடலாம் சார்...

"மிஸ்டர் ஜீனியஸ் சூப்பர் மேன் என்கிற விடையை லாக் பண்ணிபுட்டு மிச்சதை அவுத்து விடுங்க ஓடிரட்டும்."

"பாக்கலாம் JZ உங்க விடை சரியா தப்பான்னு.. இதோ வருகிறது ஜீனியஸன் பதில்"

'சூப்பர் மேன் என்கிற உங்களது பதில் ...........................................................................................................................................................................................................................................................................  படுபிழை என்கிறார் மிஸ்டர் ஜீனியஸ். கீழே சிறுகுறிப்பில் தனூஸ் நடித்த சுள்ளான் படத்து சண்டை காட்சிகளை பார்க்கும் படி உங்களுக்கு அறிவுரை தந்திருக்கிறார், அதனை பார்த்துவிட்டு இந்த கேள்விக்கு எந்த விடை வரும் என்று உங்களை வீட்டு உத்தரத்தை பார்த்து யோசனை செய்யும் படி ஆலோசனை கூறி இருக்கிறார்."

"ஆக இந்த போட்டியிலிருந்து பிரபல ஆங்கில படங்களின் பதிவர் JZ வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அடுத்து இந்த ஆசனத்தில் அமர்ந்து விளையாடி அந்த ஒரு கோடி ரூபாவை லவட்டிக்கொண்டு போவதற்காக வர இருப்பவர் , தெருவில் திரியும் நல்ல மாடுகளுக்கெல்லாம் ஊசிபோட்டு நாசமாக்குகின்ற டாக்டர். டூலிட்டில்..... வாங்க டாக்டர் டூலிட்டில்....

நம்மையும் சேத்து நாறடிக்கிறானே, இவன என்ன பண்ணலாம்?


பாங்......

இன்றைய நேரம் நிறைவுக்கு வருகிறது, இன்னமும் ஐந்து கேள்விகள் மீதமிருக்கின்றன. தொடர்ந்து ஆடுவதற்கு டாக்டர் டூலிட்டில் மற்றும் மலேசிய குமரன் ஆகியோர் காத்திருக்கிறார்கள். நாளைய தினம் எமது நிகழ்ச்சியின் இறுது தினமாகும். எங்கலுக்கு மட்டுமல்ல பதிவை படிக்கும் உங்களுக்கும் இறுதி தினமாக இருக்கும், எனவே நாளை உங்களை சந்திக்கும் வறை உங்களிடம் இருந்து வடை பெறும் நான் உங்கள் சந்தானம்!

பாகம் ஒன்று படிக்க இங்கே சொடுக்கவும்.
http://www.kishoker.blogspot.com/2012/04/blog-post_27.html

பாகம் மூன்று படிக்க

Sunday, May 20, 2012

அது வேற வாயி! இது நாற வாயி!



எங்க ஊரில ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க ! "நாக்கு கறுப்பா இருக்கிறவன் சொன்னா , அது நடக்கும்னு". இந்த மாதிரி அனுமானுஷ விசயங்கள் பத்தி நீங்களும் கேள்விபட்டு  இருப்பீங்க. இந்த மாதிரியான மூட கதைகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இருந்தது கிடையாது. ஆனா சமீப காலமா என்னய சுத்தி நடக்கிற அனுமானுஷ விசயங்கள கூர்ந்து கவனிச்சு பாத்தா புதுசா ஒரு அனுமானுஷ பழமொழி உருவாகிவருவதை மனக்கசப்போடு ஏற்றுக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. அந்த புது பழமொழி என்னன்னா " ரெண்டு வாரம் பல்லு வெளக்காதவன் ஏதாச்சும் சொன்னா , அது தலகீழா நடக்கும்". அந்த பல்லு விளக்காத வாயன் யாருன்னா சாட்சாத் நானே தான்.
நான் சொன்னது போல எனக்கு இந்த குருட்டு வாதங்களில் எலாம் நம்பிக்கை இருந்தது கிடையாது. ஆனால் இப்போ எனது ஆரம்ப  காலத்தில் இருந்து , நான் சொல்லி சொதப்பிய சம்பவங்களை கோர்த்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ( ஏன்னா விழுந்த அடிகள் ரொம்ப பலம்).

நேத்தலேர்ந்து ஆரம்பிக்கிறேன். பார்சிலோனவும் , மட்ரிட்டும் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இருந்து வெளியேறி விட்ட பிறகு எனது மொத்த நம்பிக்கையும் பயன் முனீக் அணிமீது தான் இருந்தது. அந்த அணிதான் கிண்ணம் வெல்லும் அப்டீன்னு ஒரு பதிவு வேற போட்டு தொலச்சேன். விளைவு ஒண்ணுக்கும் உதவாத செல்சியா ( முனீக் அணியுடன் ஒப்பிடுகையில்) இப்போது சம்பியன்.

சொந்த மைதானம், உலக தரம் வாய்ந்த வீரர்கள் வரிசை, மட்ரிட்டின் கோட்டையில் அவர்களுக்கே ஆப்படித்த தன்னம்பிக்கை என்று அடுக்கடுக்கான சாதகமான வாய்ப்புக்களை கொண்டிருந்த முனீக் அணி மண்ணைகவ்வி இருக்கிறது. 83வது நிமிடத்தில் முல்லர் கோல் அடிக்க , யார் நினைத்தார் அந்த கிழவன் ட்ரக்பா அடுத்த மூன்றாவது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்வான் என்று? சரி அதுதான் போகட்டும்கொஞ்சம் யோசித்து பார்த்தீர்களா , இன்று உலகில் இருக்கக்கூடிய தலை சிறந்த வீரர்களில் ஒருவரான நெதர்லாந்தின் ரொபன் அந்த பெனால்டி வாய்ப்பை அப்படி செல்சியாவின் கோல் காப்பாளர் சேச்சின் வாய்க்குள் அடித்து நாசாமாக்குவான் என்று? அதை விடுவோம், ஆனானப்பட்ட கசியாசின் கைகளை தாண்டி பெனால்டி கோல் அடித்து மட்ரிட்டை மண்கவ்வ செய்த ஸ்டீன்ஸ்னேகர் தனது மைதானத்தில், பெனால்டியை கோல் கம்பத்தில் அடித்து கழுத்தறுப்பான் என்று சேச் கூட நினைத்திருக்க மாட்டான்.


அரையிறுதியில் மெஸ்ஸி தனது உதைபந்தாட்ட வாழ்க்கையிலேயே முதன் முதலாய் செல்சியாவுடன் ஆடும் போது பெனால்டியை சொதப்பியது, நேற்று ரொபன், ஸ்டீன்ஸ்னேகர் பெனால்டியை கோட்டைவிட்டு செல்சியாவுக்கு கிண்ணத்தை தாரை வார்த்தது என்று தொடர் சம்பவங்கள் எல்லாம் செல்சியாவின் அதிஷ்டம் என்று உதைபந்தாட்ட உலகு சொல்கிறது. ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால் அது எல்லாம் இந்த நாற வாயனால் வந்தது.

கிரவுண்டு எல்லாம் வெளிச்சமாதான் இருக்கு! ஆனா நடத்துறவன் மைண்டு இருட்டால்ல இருக்கு!


இதுமட்டுமில்லை எல்கிளாசிக்கோவில் பார்சிலோனா வெல்லும் என்றேன், விளைவு இந்த சீசனில் தனது சொந்த மைதானத்தில் தனது முதலாவது தோல்வியை பதிவு செய்தது பார்சிலோனா. ஜொஸ் மொரின்கோ நியூ கேம்பில் தனது முதலாவது வெற்றியை பார்த்தார். அத்தோடு நின்றதா எனது வாக்கின் சுத்தம்? சம்பியன் கிண்ண அரையிறுதியில் அரையிறுதியில் செல்சியாவை பார்சிலோனா தனது சொந்த மைதானத்க்டில் வைத்து வீழ்த்தும் என்றேன். விளைவு சமியன் கிண்ணத்தை விட்டு வெளியேறியது பார்சிலோனா! இத்தோடு நிறுத்திகொள் பாலகுமாரா என்று நண்பன் JZ எச்சரித்த போதாவது நிறுத்திக்கொண்டேனா? இல்லை... இல்லை... இல்லவே இல்லை..... அடுத்த அரையிறுதியில் முனிக் அணியை தனது சொந்த மண்ணில் வீழ்த்தி மட்ரிட் இறுதி போட்டிக்கு நுழையும் என்றொரு பதிவு போட்டேன் , முடிந்தது மட்ட்ரிட்டின் கதை! அவர்களது மைதானத்திலெயே அவர்களை வேழ்த்தி ஆப்படித்தது முனீக் அணி! "மவனே மாட்னா செத்தடா" என்று நண்பன் JZ  எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது தான் மிச்சம்.
இப்போது இன்னுமொரு முக்கியமான போட்டி வருகிறது, கோபா டில் ரே இறுதி போட்டியில் பார்சிலோனாவும் அத்லடிகா பில்பாவோ அணியும் மோத இருக்கின்றன. பார்சிலோனா வெல்லும் என்று சொல்லி , இந்த சீசனில் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதலையும் கெடுத்துக்கொள்ள விரும்பாமல் , இந்த போட்டியில் பில்பவோதான் வெல்லும் என்று கூறி கழன்று கொள்கிறேன்.


சரி இதுகளை தான் விடுவோம் . யாரோ விளையாடி யாரோ வென்று யாரோ சம்பாதித்துவிட்டு போகிறான். ஆனால் இன்னொரு துயரத்தையும் கேளுங்கள்.

எழுந்து நிற்பதில் குறிப்பிடபட்டிருக்கும் தம்பி தான் இலங்கை தேசிய அணியில் (17 வயதுக்குட்பட்ட) ஆடும் சஜீவன். அமர்ந்திருப்பதில் குறிப்பிடப்பட்டிருப்பவர் எனது தம்பி டெசில் மாவட்ட அனியில் ஆடுகிறார். அணியின் எஞ்ஞின்.! அது போக மேலும் ஏழு வீரர்கள் மன்னார் மாவட்ட அணியில் ஆடுகிறார்கள்.


பார்சிலோனாவுக்கும் அதிகமாக ஏன் நான் நேசிக்கின்ற முதல் உதைபந்தாட்ட அணி எங்களது பாடசாலையான புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியை தான். இலங்கையின் வட கிழகு மாகாணங்களில் கல்வி மற்றும் விளையாட்டில் தனித்த சிறப்பு கொண்டதும் , இலங்கையில் இருக்கின்ற சிறந்த உதைபந்தாட்ட அணிகளைகொண்ட பாடசாலைகளில் தனக்கென்று ஒரு தனியிடம் பிடித்ததும் என்று பல பெருமைகளை கொண்டது எங்கள் பாடசாலை.


ஒவ்வொரு வருடமும் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று வீரர்களை அனுப்பிக்கொண்டிருப்பது எங்கல் பாடசாலை. 2004இல் இலங்கையை பிரதிநிதுவப்படுத்தி உதை பந்தாட்ட தொடர் ஒன்ன்றுக்காக எங்கள் பாடசாலை கொரியா சென்றது. ( அந்த வருடத்தில் இலங்கையின் அத்தனை தேசிய கிணங்களையும் சுவீகரித்ததுதான் காரணம்). அங்கு முதலாவது போட்டியில் கொரிய அணி முதல் பாதியில் ஐந்து கோல்களை அடித்தும் சோர்வடையாமல் இரண்டாம் பாதியில் விரட்டி ஐந்து கோல்களை அடித்து சமன் செஇது அடுத்ட சுற்றுக்கு போனது. போட்டி நடந்தது 2002 உலககிண்ண இறுதி போட்டி நடந்த யோகறாமா மைதானத்தில். பின்னர் சிங்கப்பூர், மற்றும் ஜப்பான் அணிகளை வீஅத்தி மூனாமிடம் மற்றும் ஃபெயா பிளே ஆகிய கோப்பைகளோடு தாயகம் வந்த பெருமைகொண்டது எங்கள் பாடசாலை அணி.


அதுமட்டுமல்ல இலங்கையில் தேசிய ரீதியில் மூன்று பிரதான கிண்ணங்களுக்கான போட்டி நடைபெறுவது வழக்கம். மைலோ கிண்ணம், ஃபெடரேசன் கிண்ணம் மற்றும் அகில இலங்கை பாடசாலை கிண்ணம். இத மூன்று கிண்ணங்களில் ஏதாவது இரண்டை ஒவ்வொரு வருடமும் வீட்டுக்கு கொண்டுவருமளவிற்கு திறமையான உதைபந்தாட்ட அணி எங்களது அணி. அவ்வாறான அணிக்கு தான் எனது நாற வாயால் வந்தது வினை.


இந்த வருட தேசிய  போட்டிகளுக்காக கொழும்பு வந்திருந்தது எங்கள் அணி. பதினேழு வயதுக்குட்பட்ட அந்த அணியில் எனது தம்பியும் ஆடுகிறான். முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி. நொக் அவுட் போட்டி ஒன்றில் போன வருடம் சம்பியனான டிக்கோயா அணிக்கு ஐந்துக்கு பூச்சியம் என்று அடித்து அனுப்பினார்கள். இதன் பின்புதான் எனது வாசம் வரும் வாய் தனது வேலையை காட்டியது.

நான் போனேன்! பிடித்தது சனி. ( கறுத்த டி- சேர்டில் நான்) 


ஆர்வமிகுதியால் எனது ஃபேஸ்புக்கில் இந்தவருடமும் கிண்னமொன்று தயார் என்று நான் அப்டேற்றிவிட கால் இறுதி போட்டியில் ஒரு இனவெறி தாக்குதலுக்கு இலக்காகி போனது எங்கள் அணி... கால் இறுதியில் பெரும்பான்மை இனத்து பாடசாலை ஒன்றுடன் மோதியது எமது அணி. ஆட்டம் எங்கள் வசம் தான், எங்கல் கல்லூரியே ஆதிக்கம் செலுத்தியது. ( பார்சிலோனா செல்சியா அரைஇறுதி போல). போட்டி முடிவதற்கு சிலநிமிடங்களுக்கு முன்னர் எதிர் பாடசாலையின் வீரன் ஒருவன் தனது இரு கைகளாலும் பந்தை பிடித்து கோலுக்குள் போட்டான். போட்டவன் சிவப்பு அட்டை கிடைக்க போகிறதே என்ற பயத்தோடு தலையில் கையை வைத்துக்கொண்டு  சோகமாய் நடுவரை தேடி நடந்துவர , அவர்களது அணியின் தலைவரும் அந்த சிவப்பு அட்டையை தடுக்கும் நோக்கில் "சேர் சேர் எயா தகே நே.. ஏக்க அக்சிடன்ட் எகாக் பிளீஸ் " (சேர் ! சேர்! அவன் அதை பார்க்கவில்லை, அது ஒரு விபத்தாக அவனது கையில் பட்டு விட்டது) என்று கொண்டு கெஞ்சும் தோரணையில் ஓடி வர அந்த சம்பவம் நடந்து ஒன்ரரை நிமிடங்களுக்கு பிறகு நடுவர் அதை கோல் என்று தீர்பளித்து விசில் அடித்து விட போட்டியில் இருந்து வெளியேறியது எங்கள் அணி!


இந்த எதிர்பாராத சோகமுடிவு எங்களை மட்டுமல்ல போட்டியை பார்த்துகொண்டிருந்த வெளியாட்களையும் உலுக்கி போட்டது. அதில் மலையக பாடசாலைகளின் (தமிழ் பாடசாலைகள்) பயிற்சியாளர்கள் இருவர் அந்த நடுவரிடம் இதுபற்றி வாக்குவாதபட்டபோது "மெயாலாட்ட மேக்க அத்தி" (அவர்களுக்கு இதுவரை வந்ததே போதும்என்ற பதில் வந்திருக்கிறது.  "உங்களை வேண்டுமென்றே வெளியேற்றி இருக்கிறார்கள், அரையிறுதில் நீங்கள் மோத இருந்தது , உங்களிடம் லீக் போட்டியில் வாங்கி கட்டிய அணியுடன் தான். நீங்கள் இலகுவாக அதையும் வென்று விடுவீர்கள் என்று அவர்களுக்கு தெரியும் அதுதான் சந்தர்ப்பம் பார்த்து அடித்திருக்கிறார்கள்." என்றார் ஒரு பாடசாலையின் பயிற்சியாளர்.


எங்களது அணியின் பயிற்சியாளர் போட்டி ஏற்பாட்டு குழுவிடம் முறைப்பாடு செய்தபோது "அப்பீத் தக்கா, ஏவுனாட்ட அப்பி மொக்குத் கரன்ன பே, றெஃரி தமா ஏக்க டிசிசன் கரன்ன ஓனே, ஒயாலா கிகில்லா அப்பிட்ட லெட்டர் எகாக் எவன்ன , இட்ட பஸ்ஸே அப்பி பலமு" ( நாங்களும் அதை பார்த்தோம் ஆனால் எங்களால் ஏதும் செய்ய முடியாது, நடுவர்தான் அதற்கு பொறுப்பு. நீங்கள் ஒன்று செய்யுங்கல் ஊருக்கு போய் கடிதம் ஒன்று அனுப்புங்கள், அதன் பிறகு இதை பார்த்துக்கொள்ளலாம்" என்ற பதில் வந்திருக்கிறது.

இனவெறி தாக்குதல் என்பது ஆயுதத்தால் தாக்குவது மட்டுமல்ல!


"ஏகப்பட்ட கனவுகளோடு வந்த எனது பிள்ளைகளின் கோப்பை கனவு அநியாயமாக சிதைக்கப்பட்ட பிறகு, கடிதம் அனுப்பி அதற்கு கிடைக்கப்போகும் பதிலை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்ய" என்று வாக்குவாதப்பட்டு வந்திருக்கிறார் எங்கள் பயிற்சியாளர். "கோப்பை வெல்லும் அணியை இந்தியாவுக்கு சுற்றுலா அழைத்துச்செல்ல ஒரு திட்டம் இருக்கிறது, ஒரு தமிழ் பாடசாலையை அழைத்து செல்ல அவர்கள் என்ன மடையர்களா" என்று கொதித்தார் ஒரு பாடசாலை பயிற்சியாளர். "இப்படி அராஜகம் , வன்சகம் செய்து திறமை இல்லாத அணிகளை வெளிநாட்டுக்கு போட்டிகளுக்கு அனுப்புவதால் தான் இலங்கை உதைபந்தாட்ட அணி போகும் இடம் எல்லாம் வாங்கி கட்டுகிறது" என்றார் எங்களது வாகன சாரதி.


இப்படி பலரும் பல காரணங்களை சொன்னாலும் , இலங்கை தெசிய அணியில் விளையாடும் ஒரு வீரன், மாவட்ட அணிக்கு ஆடும் எட்டு வீரர்கள் என்று திறமையான அணி தோற்ரதற்கு காரணம் எனது நாற வாய் தான் என்று நினைக்கிறேன் நான். எனது நாற வாய் நடுவர் வடிவில் தனது வேலையை காட்டி இருக்கிறது.


இந்த வருடத்தில் ஒரு தேசிய கிண்ணம் கைப்பற்றி , இன்னொன்றை எனது நாறவாயின் காரணமாக கோட்டை விட்டு மீதமிருக்கும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கிண்ணத்தை சுவிகரிக்கும் நோக்கில் ஏற்கனவே மாவட்டம், மாகாணம் ஆகிய படிகளை தாண்டி தேசிய போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்ட எங்கள் அணி ஃபீனிக்ஸாய் கடும் பயிற்சி செய்கிறது, அவர்களை மனதார வாழ்த்திவிட்டு இருப்பதே நலம். எனது நாற வாயை திறந்து ..... யப்பா வேண்டவே வேண்டாம்...!

கவலை விடு சகோதரா.. அடுத்த போட்டியில் பாத்துக்கலாம்!


எனது நாறவாயின் மகிமையை காட்ட இன்னொரு சம்பவம். எனது நண்பர் (வயதில் மூத்தவர்) ஒருவர் ஒரு பெண்ணை காதலித்தார். அந்த அக்காவும் என்னோடு நல்ல பழக்கம். ஒரு நாள் என்னிடம் வந்து "நண்பா ஒருக்கா கேட்டு சொல்லேன் " என்றார். நானும் திருவாய் திறந்து, " கவலப்படாத நண்பா, நாளைக்கே உன்னோட வேல முடிஞ்சுது எண்டு நெனச்சுக்கோ" என்றேன். அடுத்த நாள் காலையில் அந்த வீட்டில் இருந்து அழுகுரல். அந்த அக்கா இரவோடு இரவாக யாரோடோ ஓடிவிட்டாராம். எனது நண்பர் இப்போது 32+ இன்னமும் திருமணத்துக்கு பெண்பார்த்துக்கொண்டு இருக்கிறார். இதுக்கப்புறம் நான் என்னத்த சொல்ல?


கடைசியாக நண்பன் டூலிட்டிலுக்கு ஒரு செய்தி சொல்ல ஆசைப்படுகிறேன். "நண்பா உனது ஒரு பதிவில் , உனது நண்பர்களுக்கு எல்லாம் நல்ல வேலை கிடைக்கும் என்று பின்னூட்டம் போட்டு இருக்கிறேன், அதை நான் வாபஸ் வாங்குகிறேன். பாவம் அவர்கள் யார் பெத்த புள்ளைகளோ?"

டிக்கோயா அணிக்கு அடித்த ஐந்து கோல்களில் முதல்லிரண்டு கோல்களையும் அடித்த எனது தம்பியுடன்!



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...