டேய் வேணாம்டா! வலிக்கும்டா |
ஒரு சில ஜந்துக்கள் இருகுதுங்க இந்த உலகத்தில! ஓவர் நைட்ல புகழ் வ ந்துட்டா போதும், தாங்க எப்பிடி இருந்தோம்? என்ன பாதயில வந்தோம்? யாரால இந்த ஒசரத்தில இருக்கம் அப்டீங்கிற எல்லாமே மறந்து போயிடும். சொல்லப்போனா அது எதுவுமே மறக்கிறது கிடையாது, இதுங்களே அதுகளை மறந்தது போல நடிக்க ஆரம்பிச்சிடும். "அற்பனுக்கு வாழ்வு வந்தா அத்த ராத்திரியில் கொட புடிப்பான்" அப்டீனு சொல்லுவாய்ங்களே, இதுகள் அத்த ராத்திரி மட்டுமில்ல, பெட் ரூமூ, கக்கூசு, கொல்லப்புறம் , முட்டுசந்து எல்ல இடமும் கொடயோடவே போகுங்க! அந்த அளவு அளப்பறைங்க!
அட என்ன இது அது இதுன்னு அலட்டிகிட்டு, நேரா விஷயத்துக்கு வாறேங்க! நம்ம தனுசு இல்லீங்க தனுசு, அந்த பொடிசு போடுற ஆட்டம் தாங்க முடியலீங்க ! "நாராயணா இந்த கொசுவ அடிங்கடா" அப்டீன்னு எல்லா பதிவர்களும் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அட எனக்கு கூட அப்பிடிதான் தோன்றியது, ஆனாலும் பதிவுலகின் பிரம்மாக்கள் சிலரே அந்த பதிவுகளை போட ஆரம்பித்திருந்ததால் சரி போகட்டும் என்று விட்டிருந்தேன். என்னால இதுக்கு மேல பொறுக்க முடியாது அண்ணாத்த! இந்த தனுசு பண்ணுற அளப்பறை தாங்க முடியல! இத்தனக்கும் இவரது "பொல்லாதவன்" படத்தில் இருந்து நான் ரசிக்கும் நடிகர்களில் ஒருவராக ஆகியிருந்தவர் இந்த தனுஸ்! ஆனால் இப்போது எனது வெறுப்பு பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறர்.
தான் கடந்து வந்த பாதைகளையும் , தன்னை துக்கிவிட்ட ஏணிகளையும் மறந்துவிட்டு எல்லாமே தான் தான் என்ற அகம்பாவம் அவரது சமீப கால செயற்பாடுகளில் அப்பட்டமாக தெரிறது. தொடர்ந்து நான் எழுத போவது தனுஷை கொச்சை படுத்துவதற்கு இல்லை, மாறாக அவர் எப்படி இருந்தார் என்று மறந்துவிட்ட அவருக்கு அவரை மீண்டும் ஞாபகப்படுத்தவே! இதை தனுஷ் பட்டிக்கவா போகிறார் என்ற கேள்விக்கு இல்லை என்ற விடை தான் நானும் சொல்லுவேன். ஏதோ எனக்கு அணத்தவேண்டும் போல் உள்ளது அணத்திவிட்டு போகிறேன்.
"நாராய்! நாராய் ! செங்கால் நாராய்...." என்று வறிய தமிழ் கிழவன் தனது வறுமை குறித்து நாரைகள் மூலம் மன்னனுக்கு தூதுவிட , எப்படியோ அதை மன்னன் அறிந்து புலவனுக்கு உதவியாதாக கவி கூறும் தமிழ் , நாரை மூலமே சம்பவம் காவும் என்றால் அதிவேக இணையம் மூலம் காவிச்சென்று தனுஷ் காதில் சேர்க்காதா?
சரி விடயத்துக்கு வருவோம்! முதலில் தனுசின் பயணம் ஒரு பார்வை, இன்று ஒத்தை பாட்டினால் உலகம் அறிந்த ஒருவராக மாறியிருக்கும் தனுஷ் தனது தனிப்பட்ட திறமையால் மட்டும் முன்னுக்கு வந்தாரா என்றால் தைரியமாக இல்லை என்று சொல்வேன்! தனுஷின் திறமையை அவமானம் செய்ய நான் இதை சொல்லவில்லை. தனுஷ் ஆரம்ப காலத்தைப் போன்று தனது வெற்றிகளுக்கு பின்னர் பொத்திக்கொண்டு இருந்திருப்பரேயானால் , நானும் அவரது வெற்றி அவரை மட்டுமே சார்ந்து இருக்கவில்லை என்று குத்தி காட்டியிருக்க மாட்டேன். ஆனால் இது அவரது காதுகளுக்கு உண்மைச்சங்கு ஊதும் நேரம்! காதை பொத்திக்கொண்டாலும் கையை இழுத்துவிட்டு ஊதும் நேரம்!
நான் எப்பிடியோ போறன், நீ பொத்திகின்னு போடா! |
கஸ்தூரி ராஜா என்ற ஒரு அப்பாவும் செல்வ ராகவன் என்ற ஒரு அண்ணனும் இல்லாவிட்டால் நீங்கள் வெறும் பிரபுவாக வீட்டில் இருந்திருக்க வேண்டி வந்திருக்குமே ஒழிய , எங்களுக்கு தெரிந்த நடிகர் 'தனுஷ்' ஆக ஆகியிருப்பீர்களா என்றால் அதற்கான சாத்தியக்கூறு நூற்றுக்கு பத்து சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்திருக்கும். அந்த பத்து சதவீதம் வாய்ப்பு கூட வேறு யாரவது இயக்குனர்கள் , இயக்குனர்/தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அந்தஸ்தில் உங்களுக்கு தந்திருப்பதாகவே இருந்திருக்கும். அதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.
அப்படி நீங்கள் உங்களது குடும்ப அடையாளம் இல்லாமல் நடிக்க வந்திருந்தால் இதுவரைக்கும் நீங்கள் தமிழ் சினிமாவில் நிலையானதொரு இடம் பிடிக்க போராடிக்கொண்டிருக்கும் ஒரு சராசரி நடிகாராகவே இருந்திருப்பீர்கள். ஏனென்றால் உங்களை வைத்து அதிக வெற்றிப்படங்கள் கொடுத்தவர் உங்கள் சொந்த அண்ணன் செல்வராகவன் மட்டுமே. உங்கள் அண்ணன் செல்வராகவன், அப்பா கஸ்தூரி ராஜா மட்டும் இல்லை என்றால் இன்று உங்கள் அறிமுகமும் இல்லை, இந்த இடமும் உங்களுக்கு இல்லை என்பதை மறக்க வேண்டாம்.
உங்களை விட நடிப்பில் திறமையான பலர் ஓரிரண்டு வெற்றிகளுக்கு பின்னரும் கொடுத்த ஓரிரு தோல்விகளால் ,இன்று சரியான வாய்ப்பு இல்லாமல் கிட்டத்தட்ட காணாமல் போய் விடும் நிலையில் இருக்கிறார்கள். அந்த நடிகர்களுக்கும் உங்களுக்கு இருப்பது போல ஒரு அப்பாவோ, அண்ணாவோ இருந்தால் இன்று உச்சம் தொடுவார்கள். ஏனெனில் அவர்கள் உங்களை விட திறமையானவர்கள்.
உதாரணமாக நடிகர் பரத்தை சொல்கிறேன்,போய்ஸ், செல்லமே, காதல், எம்மகன் , பட்டியல், என்று யார் தயவும் இன்றி வெற்றிக்கொடி கட்டியவர், உங்களை விட திறமையான நடிகர், இதை ஏன் சொல்கிறேன் என்றால் "காதல்" பட கதையை அதன் இயக்குனர் பாலாஜி ஷக்திவேல் முதலில் உங்களிடம் சொன்னபோது "இந்த மாதிரியான வெயிட்டான பாத்திரம் இப்போது என்னால் பண்ண முடியாது, ரெண்டு சண்டைக்காட்சிகள் இருந்தால் கூட பரவாயில்லை" என்று கேட்டு அந்த பாத்திரத்தின் கனா கனத்தை பார்த்து பயந்து , ஓடி ஒழிந்தவர் தானே நீங்கள்.("கோ" படத்தை ஜீவாவிடம் கோட்டை விட்டு விட்டு இப்போது அழும் சிம்பு போல) பின்னர் அந்த பாத்திரமாகவே வாழ்ந்து , பரத் சாதித்து காட்டியது தமிழ் நாடும் அறிந்த , நீங்கள் மறந்து போன உண்மை.
அப்படிப்பட்ட பரத் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பின்னர், ஓரிரண்டு கொட்டாவிகளை திரைக்கு அனுப்ப தொடங்கியதும் ஒரு சரியான பிரேக் இன்றி தவிக்கிறார். அவருக்கு கஸ்தூரி ராஜா போல ஒரு அப்பாவோ, அல்லது செல்வராகவன் போல ஒரு அண்ணாவோ இருந்திருந்தால் இன்று அவரும் உங்களை போல ஏன் உங்களுக்கு மேலேயே இருந்திருப்பார். காரணம் பரத்துக்கு ஆரம்பத்தில் நேர்ந்த கதி உங்களுக்கும் நேர்ந்ததை நாங்கள் மறக்கவில்லை , நீங்கள் மறந்ததால் தன் இந்த எடுப்பு உங்களுக்கு, இல்லையா?
அடிக்கடி என்னய காப்பாத்துடா அண்ணா! |
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி என்று வெற்றிகளை கொடுத்துவிட்டு (முதல் இரண்டு படங்களும் குடும்ப படங்கள்) புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சுள்ளான், ட்ரீம்ஸ் (இந்த ட்ரீம்ஸ் உங்களது முதலிரண்டு தோல்விகளை சரிபண்ண உங்கள் அப்பா எடுத்து , அவராலேயே உங்களை காப்பாற்ற முடியாமல் போன படம்) தேவதையை கண்டேன், அதுஒரு கனா காலம் என்று நாங்கள் தியேட்டரை வெறுக்கும் அளவுக்கு படங்கள் தந்தவர் நீங்கள்.
அப்போது ஐயோ பாவம் என்று வந்த உங்கள் அண்ணன் செல்வராகவன் படாத பாடுபட்டு, இல்லாத பொல்லாத வெளம்பரம் பண்ணி, சந்து பொந்துகளில் உள்ள தொலைக்காட்சி, பத்திரிக்கை அனைத்திலும் பேட்டியோ பேட்டி என்று கொடுத்ததன் விளைவாக "புதுப்பேட்டை" என்று ஒரு சுமார் படம் தந்து உங்களது நிலையை உறுதி செய்யவில்லை என்றால், இன்று ஒருவேளை உங்களைப்பற்றி நான் கதைத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக் காது என்பது எனது கருத்து.
பின்னர் பொல்லாதவன் என்று ஒரு வெற்றி, சும்மா சொல்லகூடாது நல்ல நடிப்பு உங்களிடமிருந்து, அதன் பிறகு மீண்டும் உங்களது அண்ணனின் தயவில் ஒரு வெற்றி கிடைக்கிறது உங்களுக்கு.என்னைக் கேட்டால் உங்களது திரை வாழ்வில் இதுவரை நீங்கள் நடித்த படங்களில் சிறந்த படம் என நான் சொல்லக்கூடிய "யாரடி நீ மோகினி" படமும் உங்களது அண்ணன் மூலம் தான் கிடைத்தது. செல்வராகவன் 2007இல் தெலுங்கில் இயக்கி வெற்றி அடைந்த "ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே" திரைப்படத்தின் ரீமேக்கை தமிழில் "யாரடி நீ மோகினி" என்று உங்கள் அண்ணன் செல்வராகவனின் உதவி இயக்குனர் ஜவகர் இயக்க, படம் சூப்பர் டூப்பர் வெற்றி! இதுவும் உங்கள் அண்ணனின் தயவால் கிடைத்தது, நேரடியாகவோ, மறைமுகமகவோ!
அடுத்து குட்டி, உத்தமபுத்திரன், படிக்காதவன் என்று மரணமொக்கை போட்டீர்கள். தமிழனது சகிப்பு தன்மைக்கு எவளவு கொடுத்தாலும் தகும். பின்னெ படம் பார்க்க போகிறோம் பேர்வழி என்று அந்த மூன்று படங்களையும் எங்கள் சொந்த காசை கொடுத்து நாங்கள் சூனியம் வைத்துகொண்ட கதையை என்னவென்று சொல்வது?
பின்னர் உங்கள் வாழ்வின் மைல்கல், அதுதான் 'ஆடுகளம்" திரைபடத்துக்காக உங்களுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த இடத்தை கொஞ்சம் குறிப்பெடுத்து கொள்ளுங்கள். இந்த இடத்தில் தான் நிறைய பேர் உங்களை நல்ல நடிகராக ஏற்றுக்கொண்டார்கள். இப்போதைய உங்களது புகழ் கொலைவெரியோடு ஆரம்பிக்கவில்லை, இந்த தேசிய விருது தந்த புகழின் தொடர்ச்சியோடுதான் உங்களது கொலைவெறி புகழும் சேர்ந்துகொண்டுள்ளது. இளம் தலைமுறை நடிகர்களோ அல்லது இப்போதைய சாதரண இளம் தலைமுறையோ வேண்டுமானால் கொலைவெறி பாடல் மூலம் உங்களை ஒரு திறமையாளனாக இனம்கண்டிருக்கலாம். ஆனால் திரைஉலக பிரம்மாக்கள், பத்திரிக்கை உலகு, நடிப்பை மட்டுமே நம்பி ஒரு நடிகனை மதிப்பிடும் விமர்சகர்களுக்கு உங்களை ஒரு திறமையாளனாக அடையாளம் காட்டியது உங்களது தேசிய விருதுதான்.
நாங்க எல்லாம் அப்பவே அப்பிடி! |
உங்கள் தேசிய விருது தொடர்பில் உங்களை புகழ்ந்து தள்ளிய மசாலா தவிந்த ஊடகங்கள் , விமர்சகர்கள் கொலைவெறி தொடர்பில் உங்களை பொளந்து தள்ளினார்களே தவிர யாரும் உங்களை பாராட்டவில்லை. உங்கள் தமிங்கிலம் தொடர்பில் எழுந்த சர்ச்சைகள் எண்ணில் அடங்காதவை. ஆக உங்களது உண்மையான அடையாளத்துக்கு காரணம் அந்த தேசிய விருதுதான் ஒழிய கொலைவெறி இல்லை. இன்னொரு ஒரு வருடத்தின் பின்னர் அந்த கொலைவெறி புகழின் மேல் உங்களால் சவாரி செய்யமுடியாது, தமிழ்நாடு அதை மறந்து போய்விடும், நீங்களும் தான்.
"வாழை மீனுக்கும் வெலங்கு மீனுக்கும்", " நாக்கு மூக்க",'மன்மதராசா',"டாக்சி டாக்சி" எல்லாம் இப்போது எங்கே போனது? நீங்கள் கேட்பது புரிகிறது, இவை கொலைவெறி அளவுக்கு பிரபலம் ஆனதா என்று உண்மை தான் இவை கொலைவெறி அளவுக்கு உலக பிரபலம் ஆகவில்லை தான். அதற்கு காரணம் அந்த பாடல் வரிகள் தமிழில் இருந்தன, கொலைவெறி ஆங்கிலத்தில் இருந்ததால் வேற்று மொழியினரும் கேட்டார்கள். பிரபலமானது! இல்லை, பாட்டின் "கானா" மெட்டு தான் அந்த பாட்டின் வெற்றிக்கு காரணம் என்றால் அது உங்களது வெற்றி இல்லை. அதுக்கு சொந்தகாரர் அந்த பாடலின் இசையமைப்பாளர்கள் தான். என்னைக் கேட்டல் இது ஒரு கூட்டு வெற்றி என்பேன் உங்களது தமிங்கில வரிகள் 60% வெற்றியை பெறுகின்றன. மீதி 40% அந்த இரு இசையமைப்பளர்களை சாரும். உங்களது வரிகளை "சாம் அன்டர்சனின் " "ராசாத்தி" பாடல் மெட்டில் சேர்த்து இருந்தால் என்னவாகியிருக்கும் என்று எண்ணிப்பார்தீகளா? அல்லது அந்த மெட்டில் "ராசாத்தி" பாடல் வரிகளை சேர்த்திருந்தாலும் கோளாறு ஆகியிருக்கும். இந்த கூட்டு வெற்றியை நீங்கள் பார்க்கும் விதம் எப்படி இருக்கிறது?
கொலைவெறி மீதான உங்களது சவாரி இன்னும் சிறிது காலம் தான். கொலைவெறி நம்பிக்கையில் 'பூஸ்ட்" நிறுவனம் உங்களுக்கு சச்சின் பாடலை ஒப்பந்தமாக தந்தது. என்ன ஆச்சு? அந்த பாடல் ஆண்டின் "சொதப்பல் ஒஃப் த இயர்" ஆகி போனது. கொலைவெறி தந்த வெற்றி மிதப்பில் ஆடிய உங்கள் ஆட்ட பலூன் "புஸ்" என்றது. இவையெல்லாம் அற்பம். நான் உங்கள் வெற்றியை கொச்சைபடுத்தவில்லை, இந்த புகழ் பருவகாலத்தில் வரும் வியாதிகளை போன்றது. காலம் முடிய கடந்து போய்விடும். ஆனால் நீங்கள் ஒரு தேசிய விருதுக்கு சொந்தக்காரர் என்று எப்போதும் சொல்லலாம், அந்த புகழ் தான் நிதந்தரமானது. அந்த புகழ் வந்தது இயக்குனர் வெற்றிமாறனால், அதை எப்போதாவது, குறிப்பாக இந்த புகழ் போதையில் நீங்கள் நினைத்துப் பார்ப்பதுண்டா? சில சமீபத்தய பேட்டிகளில் ஒப்புக்கு சும்மா ஒப்பித்து இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதில் "இவனுக எல்லாம் சுண்டக்கா பசங்க, நான் தான் கிங்கு, கிங் மேக்கர்" என்ற அகம்பாவம் தெரிந்தது.
சரி எத்தனை விமர்சனம் வந்தாலும், தமிங்கில வரிகளே இங்கு வென்றிருந்தாலும், அத்தனை விமர்சன கணைகளையும் தாண்டி ஜெயித்து இருக்கிறது உங்களது கொலைவெறி. கொலைவெறி மீதான எதிர்கோஷங்களை , பட்டிதொட்டி எங்கும் ஒலித்த கொலைவெறி பாடல் சத்தம் அடக்கிவிட்டது. ஒத்தப் பாட்டில் உச்சம் போனீர்கள். வராதபுகழ் வந்து சேர்ந்தது. பிரதமர் வீடு வரை போய் கை நனைத்து வந்தீர்கள். ஆரோக்கியமான விடயம் தான். ஒரு தனுஷ் ரசிகனாக அத்தனையும் பெருமிதமாக ரசித்துகொண்டு இருந்தேன்.
அதன் பின்பு நடந்த சம்பவங்கள் உங்கள் முகத்தில் காறி உமிழ வேண்டும் போன்ற ஒரு எண்ணத்தை என்னுள் உண்டாக்கியது. புகழ் சேரச் சேர உங்களது நடவடிக்கையில் நிறைய மாற்றம் தெரிந்தது. ரொம்ப அலட்ட ஆரம்பித்தீர்கள் , உங்கள் பேச்சில் ஒரு இனம்புரியாத கர்வம் தெரிந்தது. ஒருவன் ஒரு விடயத்தை சாதித்து விட்டால் இவை எல்லாம் அவனையே அறியாமல் வருவது தான். ஆனால் உங்கள் விடயத்தில் நீங்கள் வேண்டுமென்றே ஆணவ ஆட்டம் போட்டது அப்பட்டமாக தெரிந்தது. ஆரம்பத்தில் உள்ளூர் மீடியாக்கல் உங்களை பேட்டி கண்டபோது , ஒப்புக்காக அந்த இசையமைப்பாளரையும் ஒரு ஒப்பேற்றலுக்காக கூட வைக்த்துக் கொண்டு நீங்களும் , உங்கள் மனைவியும் மட்டுமே கொலைவெறியின் நாயகர்கள் போல கதைத்துக்கொண்டிருந்ததை யாரும் மறக்கவில்லை.
உங்க சங்காத்தமே வேண்ணம்டி யம்மா! |
சரி , அந்த பாவப்பட்ட ஜீவனை (இசையமைப்பாளர் அனுருத்) பக்கத்திலாவது வைத்திருக்கிறாரே என்று பார்த்தல், சர்வதேச மீடியாக்கள் தனுசை பேட்டிக்காக அணுகிய போது "நான் தான் தனிக்காட்டு ராஜா" என்ற ரீதியில் பேட்டிகொடுத்துவிட்டு வந்தார். இந்த இசையமைப்பாளரைப் பற்றி கிட்டத்தட்ட வாயே திறக்கவில்லை. ஒரு நடிகன் என்பதால் ஊடகங்களும் தனுசுக்கே குடை பிடித்தன, அந்த வெற்றிக்கு அடிப்படை காரணமானவன் மறைக்கப்பட்டான்.
புகழ் ஏற ஏற உங்கள் போக்கில் எத்தனை மாற்றம். ஆரம்பத்தில் அதாவது உங்கள் திரைஉலக பிரவேசத்தின் ஆரம்ப காலங்களில், வெற்றி மேல் , வெற்றி கொடுத்த போதெல்லாம் நல்ல பையனாக "இதுக்கு எல்லாம் காரணம் ஒரு டீம் ஒர்க்கு தாங்க, நான் மட்டும் காரணம் இல்லை" என்று சமூக நாகரீகம் அறிந்து பதிலளித்து வந்தீர்கள். அதே காலப்பகுதியில் "கோவில்" போன்ற மொக்கை படங்களை கொடுத்டுவிட்டு கூட சிம்பு கொக்கரக்கோ என கொக்கரித்த வேளையில் , மூன்று வெற்றிகளை கொடுத்துவிட்டு நீங்கள் நாவடக்கம் காத்தது , எத்தனையோ நாகரீகமான திரை ரசிகர்களை கவர்ந்தது.
ஆனால் இப்போது நடப்பது தலை கீழ், "விண்ணைத்தாண்டி வருவாயா" வெற்றிக்குபின்னர் சிம்பு பேச்சை குறைத்து கொண்டு நல்லபிள்ளை என பெயர் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். நீங்கள் எங்களை போன்ற ரசிகர்களின் எரிச்சலை வாங்கி கட்ட தொடங்கியிருக்கிறீர்கள். முன்பெல்லாம் "நாங்கெல்லாம் லோ கிளாசு மச்சி... என்று மச்சான் தமிழ் பேசி அடிமட்ட தமிழ் ரசிகனது நண்பனாக பார்க்கப்பட்ட நீங்கள் , இந்த கொலைவெறி கொடுத்த ஒத்தை வெற்றியோடு "என்கு தமில் தெரியது, ஐம் ஒன்லி பிட்சா , பர்கர் தான் ஈட்டிங்" என்று பீட்டர் விட ஆரம்பித்திருப்பதை என்னவென்று சொல்ல?. தனுசோ , தனுசின் தீவிர ரசிகர்களோ அல்லது வேறு யாரோ இந்த கூற்றொடு உடன்படவில்ல என்றால் , தயவு செய்து தனுசின் ஆரம்பகால பேட்டிகளின் வீடியோக்களையும், கொலைவெறிக்கு பின்னர் வந்த பேட்டிகளின் வீடியோகளையும் பாருங்கள், உங்களுக்கே புரியும். அதிலும் புதுவருடத்தன்று , விஜய் டீவியின் நிகழ்ச்சியில் தம்பதி சகிதம் நீங்கள் பேசிய தமிழ், மன்னிக்கவும் ஆங்கிலம்!! யப்பா !! இது பி.பி.சி பேட்டியோ என சந்தேகப்பட வைத்தது.
புகழ் வந்தால் தமிழ் மறந்து ஆங்கிலத்தில் பேசவேண்டுமென்று இருந்தால், கமலகாசன் எப்போதோ தமிழ் மறந்து, இன்னும் பல மொழிகளை கற்றிருக்க வேண்டும்.
புகழ் வந்தால் தமிழ் மறந்து ஆங்கிலத்தில் பேசவேண்டுமென்று இருந்தால், கமலகாசன் எப்போதோ தமிழ் மறந்து, இன்னும் பல மொழிகளை கற்றிருக்க வேண்டும்.
அடுத்தடுத்து மாப்பிள்ளை, வேங்கை , யப்பா ! முடியல . அப்போதும் "மயக்கம் என்ன" கொடுத்து மறுபடியும் அண்ணன் செல்வராகவன் தான் காப்பாற்றினார். இப்போது மறுபடியும் பலத்த எதிர்பார்ப்புக்குள்ளான "3" படம் புஸ்வாணமாகியிருக்கிறது. கொலைவெறியால் கூட படத்தை காப்பாற்ற முடியவில்லை. இது எல்லாம் உங்களது வெற்றிப்பயணம் (உங்களது மட்டுமல்ல யாரோடதும்) நிதந்தரமானதில்லை, அத்தோடு நீங்கள் பல சந்தர்பங்களில் உங்கள் குடும்பத்தால் தான் காப்பாற்றப்பட்டிருக்கிறீர்கள். அதனால் தான் நிலைத்தும் இருக்கிறீர்கள், என்பதையே காட்டுகின்றது. இதை இப்போது நீங்கள் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. உங்களது கால்கள் ஆணவத்தில் ஆடுவது அப்பட்டமாக தெரிகிறது. எல்லா புகழும் எனக்கே என்று கூறிக்கொண்டு அலைகிறீர்கள்.
வெளியதானே வருவ? மவனே வாடி வாய்க்குள்ள வேல்கம்ப விட்டு ஆட்டுறன் |
அன்பின் தனுசு! ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு ஏ.ஆர்.ரகுமானை தெரியுமா?.உங்களுக்கு அவரை தெரிந்திருக்க நியாயம் இல்லை தான். ஏனென்றால் அவரது பாடல்கள் யூ.டியூப்பில் பத்து மில்லியன் பார்வையிடல்களை பெறவில்லை. உங்களது ஆர்பாட்டத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் உங்கள் அளவுக்கு இசைத்துறையில் ஒன்றும் சாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவளவு பிஸியாக இருக்கும் உங்களுக்கு சின்னப் பயல் அவரையெல்லாம் தெரிந்திருக்க நியாயம் இல்லை தான். ஆனால் எனக்கு தெரிந்த ஒன்றை உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன் . ஏதோ "ஒஸ்கார் ' அவார்டாமில்ல, அத வாங்கிறதுக்கு அவனவன் அலைவானாமே? அம்மாம் பெரிய அந்த விருதை ஒரு மூட்டை நிறைய கொண்டு வந்த அந்த ரகுமான் அதை வாங்கும் போது , அந்த ஆங்கில மேடையில் அவர் சொன்னது "எல்லா புகழும் இறைவனுக்கே". அதுவும் தமிழில் , மன்னிக்கவும் , உங்களுக்கு தான் தமிழ் மறந்துவிட்டதே!
அந்த வார்த்தைக்கு பிறகு , எத்தனியோ பாராட்டு மேடைகள் அவர் ஏறினாலும் அவர் பதிலாய் தந்தது ஒரு புன்னகையும், மீண்டும் "எல்லா புகழும் இறைவனுக்கெ" என்ற வாசகமும் தான். வெளிவந்த ஒரு சில வார்த்தைகளில் கூட "விருத்துக்கு உரியவன் நான் அல்ல, என்னை உருவாக்கியவர்கள் தான்" என்ற தொனியே இருந்தது. தேசிய விருதுகளை வீடுமுழுவதும் நிறைத்து வைத்திருக்கும் அந்த மேதை , இது வரை தன்னை மெத்தியது கிடையாது. இதை தான் எங்களூரில் "ஆமை ஆயிரம் முட்டை போட்டு விட்டு அமைதியாக இருக்குமாம், இந்த பொட்டைக்கோழி ஒத்தை முட்டை போட்டு விட்டு கொக்கரித்து ஊரை கூட்டுமாம் ' என்பார்கள்.
ரகுமான் விசுவாசிகள் தயவு செய்து மன்னிக்கவும். இசைத்துறையியில் ரகுமானின் செருப்புக்கு பெறாத தனுசை அவருடன் ஒப்பிட்டதுக்கு. இதை விளங்க வைக்க வேறு உபயம் சிக்கவில்லை.
தமிழன் சாதிதான் , தமிழன் சாதித்தான் என்று ரகுமான் ஒஸ்கார் எடுத்த போது தமிழ் ஆர்வ அமைப்புகள் எல்லாம் அவருக்கு விழா எடுத்தன, அந்த பாணியில் உங்கள் தரப்பிலும் "தமிழனுக்கு கிடைத்த வெற்றி" என்று ஆங்கில பாடலுக்கு தமிழனை அப்பாவாக்க பார்த்தீர்கள். எந்த தமிழ் ஆர்வ அமைப்பாவது கண்டுகொண்டதா? (யோசிக்க வேண்டிய விசயம் இல்ல?) இப்போதும் சொல்கிறேன் , ஒரு இளம் தலைமுறையாய் 100% அந்த பாட்டை விரும்புகிறேன், ஆன்னல் ஒரு தமிழனின் வெற்றி என்று கொண்டாட முடியாத பாடல் என்பதும் 100% உண்மை.
அத நெனச்சு நான் ரொம்ப ஃபீல் பண்ணுறங்க! |
இப்போது உங்களுக்கு ஒரு புது வியாதி ஆரம்பித்திருக்கிறது. "என்னை ரஜனியின் மருமகனாக பார்க்கதீர்கள், எனக்கு அந்த அடையாளம் வேண்டாம்" என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். இங்கு தான் எனக்கு கடுப்பு அதிகமாகி இருக்கிறது. ஒவ்வொருவனுக்கும் தனித்தனி அடையாளம் இருக்கிறது, அதன் மூலமே அவன் நோக்கப்படவேண்டுமே தவிர , அவன் சார்ந்திருக்கும் ஒருவரது அடையாளத்தின் கீழ் பார்க்கப்படுதல் அவனது சுய கௌரவத்துக்கு இழுக்கு தான், ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்த சிந்தனை உங்களுக்கு இப்போது வந்திருப்பது தான் என்னை கடுப்பேற்றியிருக்கிறது. "ரஜினியின் பேர் இல்லமல் சாதிக்க ஆசைப்படுகிறேன்" என்று சவடால் விடும் உங்களிடம் சில கேள்விகள்.
"படிக்காதவன்", "பொல்லாதவன்" என்று உங்களது படங்களுக்கு ரஜினியின் பெயர்களை வைத்து விளம்பரம் தேடும் போது, நீங்கல் ரஜினியின் பெயரால் விளம்பரம் தேடுவதாகவும், ரஜனியின் புகழ் இந்த படங்களுக்கு மறைமுகமாக விளம்பரம் சேர்ப்பதை உணரவில்லையா? அந்த விளம்பரங்களை கண்டுகொள்ளாமல் அனுமத்தித்தவர் தானெ நீங்கள்?
இந்த மொக்கை '3' படம் மரண மொக்கையாக இருப்பதை உணர்ந்துகொண்டு ரஜினிக்கு விசேட காட்சி காண்பித்து விட்டு "ரஜினி படம் பார்த்தார்", "ரஜினி கண்கலங்கினார்", "கடைசி காட்சியை ரஜினி மாற்றச் சொன்னார்" என்று அவர் வாயால் சொல்லாமலே கதைகளை அள்ளிவிடும் போது , அது உங்கள் படத்துக்கு ரஜினி பெயரால் கிடைக்கும் புகழ் என்று தெரியவில்லையா?
ரஜினி மருத்துவமனையில் இருந்த போது , ஒரு விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்த நீங்கள், ரஜினிக்கு எந்திரன் படத்திற்காக சிறந்த வில்லன் நடிகர் விருதும், பின்னர் சிறந்த நடிகர் விருதும் வழங்கப்பட்ட போது, அவர் தனது கைப்பட எழுதிய கடிதத்தை சுமந்து மேடைக்கு வந்து அப்படியே அந்த கடிதத்தை உயர்த்து காட்டும் போது ஒரு பெருமிதம், நான் தான் அந்த கடிதத்தை படிக்கும் உரிமையுடையவன் என்ற ஒரு உரிமைக் கர்வம் உங்கள் முகத்தில் தெரிந்ததே, அப்போது எங்கே போனது உங்களது இந்த வார்த்தைகள்?
இதே வார்த்தைகளை குட்டி, வேங்கை,மாப்பிள்ளை என்று வரிசையாக மரண மொக்கைகளை கொடுகும் போது ஏன் சொல்லவில்லை? சொல்லியிருகலாமே "என்னை ரஜினி ரசிகனாக பார்காதிர்கள் எனக்கு தனிப்பட்ட அடையாளம் இருக்கிறது" என்று.
தலைவா ! எனக்கு உங்க ஆதரவு தேவையில்ல |
ஆக உங்களுக்கு நீங்கள் அடிமேல் அடி விழும் போது ரஜினியின் நிழலில் குளிர்காய வேண்டியிருக்கிறது. இந்த ஒத்தை பாட்டை நம்பி நான்கைந்து கம்பனிகள் பேரம் பேச வரும் போது உங்களுக்கான தனி அடையாளத்தை தேட தொடங்கியிருக்கிறீர்கள். இப்போது சச்சின் பாட்டு ஊத்தியதை தொடர்ந்து இந்த தனி அடையாள பேச்சை காணோம். என்னவொரு சந்தர்ப்பவாதி நீ தனுஷ்?
உங்களது எத்தனையோ படங்கள் ரஜினி ரசிகர்களால் காப்பாற்றப்பட்டு இருப்பதை மறந்துவிட வேண்டாம். உனது தனி அடையாளத்தை நீ தேடுவது பிழை அல்ல, மாறாக இனிமேலாவது ரஜினி பேரை பயன் படுத்தாமல், ஒரு பேட்டியிலாவது அவரைப்பற்றி பேச்செடுக்காமல், ஒரு படத்துக்காவது அவரை அழைத்து விளம்பரம் தேடாமல் உனது அடையாளத்தை நிருபித்து காட்டு அதன் பிறகு உனது அடையாளத்தைப் பற்றி நாங்கள் சொல்கிறோம்.
அதற்கு முன்னர் இந்த புதுப்புகழ் போதையால் வந்த வேண்டாத குணத்தையெல்லாம் விட்டுவிடுவது கிட்னிக்கு நல்லது.
சுப்பர்ஸ்டார் மருமகனா எல்லாம் என்னால இருக்க முடியாது, நான் சைகிள்ள தான் போவேன்! |
அப்பா என்ன ஒரு கொலவெறி, ஆனால் உங்கள் புலம்பல் நியாயமானதே.
ReplyDeleteமறுபடியும் கொலவெறியா.(சும்மா). நம்மால புலம்ப மட்டும் தானே முடியும். தங்களது பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா, அடிக்கடி வாருங்கள்.
Deleteஅடேயப்பபா . . . . . . . . நல்ல காச்சு காச்சுன்னு காச்சிடீங்க சார்
ReplyDeleteதனுஷை கய்ச்ச வேண்டுமென்ற நோக்கம் எனக்கு இருந்தது இல்ல நண்பா! ஆனால் சமீப காலமாக இவரது செயற்பாடுகள் ரொம்ப மோசம். வடிவேல் பாணியில் சொல்வதானால் "கொஞ்சம் ஓவராதான் போய்கிட்டு இருக்க நீயி" தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி சகோதரா!
Delete///அன்பின் தனுசு! ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு ஏ.ஆர்.ரகுமானை தெரியுமா?.உங்களுக்கு அவரை தெரிந்திருக்க நியாயம் இல்லை தான். ஏனென்றால் அவரது பாடல்கள் யூ.டியூப்பில் பத்து மில்லியன் பார்வையிடல்களை பெறவில்லை. உங்களது ஆர்பாட்டத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் உங்கள் அளவுக்கு இசைத்துறையில் ஒன்றும் சாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவளவு பிஸியாக இருக்கும் உங்களுக்கு சின்னப் பயல் அவரையெல்லாம் தெரிந்திருக்க நியாயம் இல்லை தான். ஆனால் எனக்கு தெரிந்த ஒன்றை உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன் . ஏதோ "ஒஸ்கார் ' அவார்டாமில்ல, அத வாங்கிறதுக்கு அவனவன் அலைவானாமே? அம்மாம் பெரிய அந்த விருதை ஒரு மூட்டை நிறைய கொண்டு வந்த அந்த ரகுமான் அதை வாங்கும் போது , அந்த ஆங்கில மேடையில் அவர் சொன்னது "எல்லா புகழும் இறைவனுக்கே". அதுவும் தமிழில் , மன்னிக்கவும் , உங்களுக்கு தான் தமிழ் மறந்துவிட்டதே! ///
ReplyDeleteக்ளாஸ்!!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி அண்ணே! பெரிய பதிவர் நீங்க , என்னோட இந்த மொக்க பிளாக்குக்கு வந்து பின்னூட்டம் போட்டது ரொம்ப சந்தோசம்!
Deleteஅடி அடி நெத்தி அடி சூப்பர்அ சொனீங்க போங்க பாஸ்... தனுசு சோத்துல உப்பு போட்டு சாப்டால் இனிமேலாவது திருந்தனும். ஆனா அந்த உப்பு அவன் அண்ணனுதும் அப்பவடதும்னு மறந்திடகூடது. சிம்பு மனுஷனே கிடையாது!!! ஒரு உண்மை பரத் நல்ல திறமைசாலி, வரணும் மேல இன்னும் திறமையானவர்கள் வரணும்னு சொல்லி விடை பெறுகிறேன்.
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றிண்ணே!
Deleteஎனக்கென்னவோ தனுசுக்கு இதெல்லாம் இப்போ புரியும் என்பதில் உடன்பாடே இல்லை, பட்டுத்தான் திருந்துவேன் என்று அடம் பிடிக்கிறது கொழந்தை, பட்டே திருந்தட்டும் , விட்டு விடுவோம்! அடிக்கடி வருங்கள் சந்திக்கலாம்!