கொசக்சி பசப்புகழ் பெரிய ஒரு விஞ்ஞானி. அவரு இருக்கிற எடம் தேடி அமரிக்க கப்பனிகளே அலையுது. இதிலயும் பஞ்சவேல் பாரிவேந்தனை பழிவாங்கி ரத்தம் குடிக்க அலையும் சத்தியன் கூட கொசக்சி பசப்புகழை தான் தேடித் திரிகிறார். அட அது கூட பரவாயில்லை இந்த ஜீவாவும், சிறீகாந்தும் கூட பஞ்சவேல் பாரிவேந்தனின் ஆருயிர் நண்பர்கள்.
அவர்கள் கூட தனது ஆருயிர் நண்பன் பாரிவேந்தனை தேடி அலைகிறார்கள். அப்புறம் காடு , மேடு, பனிமலை எல்லாம் அலைந்து திரிந்து எப்படியோ பஞ்சவேல் பாரிவேந்தன் தனது நண்பன் இல்லை என்று தெளிகிறார்கள். என்ன இவர்களது வழி பயணத்தில் டிஸ்கவரி சேனலின் "பியர் கைல்ஸ்சும்" , செத்துப்போன "ஸ்டீவ் எர்வின்" ஆவியும் கூட வந்து உயிர் காப்பு நெறிமுறைகளை சொல்லி தராதது தான் கொறை.
அது கூட பரவாயில்லை, அரை இஞ்சிக்கு இடுப்பு வெச்சிருக்கிற இலியானா பொண்ணுகூட , மூக்கும் மூக்கும் முட்டாம ஒரு முத்தம் குடுக்க முடியாம , தோத்து போய் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க துணிஞ்சிருது. அப்பொ முத்தம் குடுக்கும் போது வேற எதுவும் எதுவும் முட்டும்ன்னு எவனாச்சும் கேட்டீங்கன்னா மக்களே டாகுடரோட துப்பாக்கி படத்தோட முதல் ஷோ டிக்கட் எடுத்து கைல குடுத்திருவன் ஜாக்கிரத.
எனக்கு இங்க தான் மச்சி ஒரு டவுட்டு, இந்த பஞ்சவேலும் , அந்த பக்கி பயபுள்ளையும் பாய்ஞ்சு பாஞ்சு லவ் பண்ணினாய்ங்களே , அப்புறம் இந்த பஞ்சவேலு உன்ன கல்யாணம் பண்ண முடியாதுங்கிறான். இந்த பொண்ணும் ஒரு ஒப்புக்கு ஏன்னு கேட்டுப்புட்டு அப்புறம் கண்டுக்காம விட்டுரிச்சு.
அடங்கொன்னியா அவன் உஜிரோட இருக்கான இல்ல செத்து போய்ட்டானான்னு கூட தெரியாம, ஒரு அமெரிக்க மாப்பிள்ள கூட செட்டிலாக தயார் ஆகும் இடத்தில் பக்கா மாடன் பொன்னுன்னு நிரூபிக்குது.
அட இந்த பாரி பயல் கூட கண்டுக்கவே இல்ல இல்ல! என்ன லவ்வுடா இது?
ஆனா பாருங்க , ஒரு காமடி என்னன்னா நம்ம தமிழ் நாட்டு ஜேம்ஸ் கமரூன் ஷங்கர் இருக்காரில்ல , அவரு இன்னா சொன்னாரு ? தமிழுக்கு ஏத்தா மாரி படத்த மாத்தி இருக்கேன்னாரு.
பிரம்மாண்டம் பண்ணுகிறேன் பேர்வழின்னு படத்தோட இருநூறு கோடில நூறு கோடிக்கு பாட்டுக்கு எங்கனாச்சும் வனாந்தரத்துல செட்டு போடும் இந்த ரிச்சான பேரரசு இன்னா பண்ணினாரு? ஏன் இவர ரிச்சான பேரரசுன்னு சொல்றேன்னா , பெரிய ஆர்டிஸ்டுகளை வச்சுகின்னு மசால படம் தருகின்ற ஒருத்தர் தானே ஷங்கர். தன்னோட மொதல் மூணு படத்தில இவரு காமிச்ச நெஜமான தெறமையின் மேல் இன்னமும் சவாரி செய்கின்ற சரக்கில்லாத வியாபாரி.
அந்த பேர வச்சுகின்னு , இபோது பெரிய ஆர்டிஸ்டுகள வச்சி படம் பண்ணும் பிரம்மாண்ட வெங்கடேசு, ரிச்சான பேரரசு. பிரம்மாண்டம் ... பிரம்மாண்டம் ... அப்டீன்னு பேசுறீங்களே உங்க படத்துல செட்டு மட்டும் தானே பிரம்மாண்டமா இருக்கு, காட்சிகள்ள கெடையாதேன்னு கேட்டா , அவரும் அவரோட அடி பொடிகளும் தார பதில் இருக்கே யம்மா,,,,,, "அந்த காட்சிகளின் நுணுக்கம், அதில் உள்ள பிரம்மாண்டம் எல்லாம் சிறந்த கமிராமேன்களுக்கும், அந்தந்த துறைசார் வல்லுனர்களுக்கெ வெளங்கும்னு" ஒரு சப்ப கட்டு வேற.. வெளங்குமிடா....!
அப்டீன்னா உங்களோட படத்த ரிலீஸ் பண்ணிப்புட்டு நிரவ் ஷா, மகேந்திரன், பாலு மகேந்திரா, கே.வி.ஆனந்துன்னு நூறு நாளும் கேமிரா மேன்களுக்கே போட்டு காட்டி வெற்றி படம்னு அறிவிக்க வேண்டியது தானே, அத்த விட்டு புட்டு ஏய்யா.. காமிரா பத்தியோ, காமிரா கோணங்கள் பத்தியோ எதுவுமே தெரியாத சாணி தட்டுற முனியம்மாவுக்கும், ஆப்பம் விக்கிற ஆயாவுக்கும் , புண்ணாக்கு விக்கிற புஸ்பாக்கும் போட்டு காட்டுறீக.... # ஓவரா எமோஷன் ஆகிறனோ?
பாலா, வசந்த பாலன், பிரபு சாலமோன் எல்லாம் நல்ல டைரக்டர் அவைய்ங்களோட படத்தில புதுசா ஏதும் இருக்கும்ன்னு நான் ஏதாவது சொல்லப்போனா என்மேல சாணியடிக்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்கிறதால நான் எதுவும் சொல்லப்போவது இல்ல. ஷங்கர் வாழ்க... பிரம்மாண்டம் வாழ்க....
சரி என்னா பேசிக்கிட்டு இருந்தோம்? ஆ! கொசக்சி பசப்புகழ், இந்த கடைசி காட்சில பாருங்க தன்னோட நண்பன் தான் அந்த கொசக்சி பசப்புகழ்ன்னு எல்லோரும் தெரிஞ்சு கொள்ளும் காட்சி என்ன ஒரு பிரம்மாண்டம்?
இம்மாம் பெரிய விஞ்ஞானி இந்த கொசக்சி, அவரோட அக்ரிமென்ட் போடுறதுக்கு ஜப்பான் , அமெரிக்கா , பேரிக்கான்னு எல்லா நாடும் வரிசைல நிக்குது ஆனா பாருங்கோ , "கிஷோகர்ன்னு" கூகிள்ள சொடக்கினா, சுண்டக்கா பய என்னோட டீட்டெயில் கூட வந்து விழுற இந்த இன்டெர்னெட் யுகத்தில அவரோட ஒரு போட்டோ கூட கூகிள்ளையோ , பேப்பரிலயோ வராம போனது தான் ஷங்கரோட பிரம்மாண்டம் தெரியும் இடங்கள். கலக்குங்கள் ஷங்கர் சார்!
அது சரி இந்த பிரமாண்டத்தை கவனிக்க உங்களுக்கு மூடு இருந்திருக்காது , பின்ன என்ன முத்தமிடும் போது மூக்கும் மூக்கும் முட்டுமா? அப்டீன்னு சாலமன் பாப்பையாவே பட்டிமன்றம் நடாத்த மறந்த தலைப்பை இடுப்பழகி இலியான விஞ்ஞான பூர்வமாக நிறுவிக்காட்டும் போது , பிரம்மாண்டத்த யாருய்யா பாக்கிறது? பிரம்மாண்டம் வாழ்க! ஷங்கர் வாழ்க!
சரி கொசக்சி பசப்புகழ் யார்னு நமக்கு இப்பொ தெரியும் ! அது யார் சார் 'எல் கிளாசிகோ"?
சுட்டுக்கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் மெய்க்காப்பாளர்கள் எல்லாம் ஃபிகருகள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் ஒரு பிகரை நீண்ட நாட்களாக கடாபி இது பண்ணினார்.
அந்த பொண்ணு பேரு தான் "எல் கிளாசிகோ". சும்மா செம ஃபிகருப்பா. சும்மா சொல்ல கூடாது, பொண்ணு நின்னு வெளையாடும், அந்த கறுப்பு கலருக்கே கோடி குடுக்கலாம், என்னய விட்டா அந்த பொண்ணு பாட்டியாகும் வரைக்கும் பாத்துகின்னே இருப்பேன், அப்டீனு நான் சொன்னா இந்த JZஉம், மலேசியா குமரனும் வாயிலயே வெட்டுவார்கள்.
'எல் கிளாசிகோ" அப்டீன்னா ஸ்பெயினின் புகழ் பெற்ற உதைபந்தாட்ட கழகங்களான பார்சிலோனா மற்றும் ரியல் மட்ரிட் அணிகள் மோதும் இந்த போட்டிக்கு பேர் தான் "எல் கிளாசிகோ"
உலகத்தின் மில்லியன் கணக்கான உதைபந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த போட்டி இன்று இலங்கை இந்திய நேரப்படி 11.30க்கு ஆரம்பமாகிறது.
இந்த போட்டி அரசியல் மற்றும் இன்னமும் சிலபல காரணங்களால் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கட் போட்டி ரேஞ்சுக்கு பார்க்கப்படுகிறது. முடிஞ்சா நீங்களும் பாருங்கோ.
இன்றைய இந்த போட்டி பார்சிலோனாவுக்கு அரசியல் ரீதியான காரணங்ளையும் தாண்டி மிக முக்கியமான போட்டி. காரணம் ஏன் என்று அறிய இங்கே சொடுக்குங்கள்.
யோவ் JZ மற்றும் மலேசியா குமரா! இந்த போட்டி தொடர்பில் தனி பிரீவியூ போடத்தான் பிளான் பண்ணினேன். இந்த பாழா போன கரண்டு இப்போதான் வந்திச்சு. அதனால ஏற்கனவே கொசக்சிக்கு அனுப்ப வச்சிருந்த லெட்டர் கூட இதையும் அட்டாச் பண்ணி மேனேஜ் பண்ணிகிட்டேன். மன்னிச்சூ........
இந்த போட்டி இப்படி முடியலாம்....
2 - 0 பார்சிலோனா வெற்றி
அல்லது
2- 1 பார்சிலோனா வெற்றி
இந்த போட்டியில் எதிர் பார்க்கப்படும் பார்சிலோனாவின் லைன் - அப் |
ரியல் மட்ரிட் 2 - பார்சிலோனா 1
ReplyDeleteஎன்னங்கடா நான் சொன்னது எல்லாம் தலகீழா நடக்குது, பார்சிலோனா பங்காளிகளா, இருங்கடி வாறன் உங்களுக்கு! சுட சுட ஒரு பதிவு ரெடிபண்ணி தாண்டி ஒங்கள கலாய்க்கணும்.
இந்தப் போட்டி இப்படி நடக்கலாம் - //பார்சிலோனா வெற்றி// //பார்சிலோனா வெற்றி//
Deleteஎன்னடா இது.. ஆக.. உன் கண்ணுக்கு மேட்ச் ட்ராவில முடியும்னோ, மட்ரிட் ஜெயிக்கும்னோ தெரியலை..
'பக்கா' சார்பா எழுதினா இப்படித்தான் நடக்கும்.. சொந்த கிரவுண்டில் ஆடுறோம், பாட்டா போட்டுகினு ஆடுறோம்.. நடத்திட்டாங்ல்ல உங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்!!!
* இனி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுமாறு, செல்சீ அணிக்கு அன்பான வேண்டுகோளொன்றை விடுக்கிறேன்!
//சுட சுட ஒரு பதிவு ரெடிபண்ணி தாண்டி ஒங்கள கலாய்க்கணும்.//
Deleteஇது நியாயம்! நீ இன்னா நினைக்குறேன்னு தெரிஞ்சுபோச்சு..
மொதல்ல, சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில செல்சீ தோற்கும்னு கணிச்சு வைச்ச.. ஜெயிச்சாங்க!
லா லீகால மட்ரிட் தோற்கும்னு நடக்காததுக்குல்லாம் நிகழ்தகவு வைச்சுப் பேசின.. ஜெயிச்சாங்க!
இனி செல்சீயோட பார்சிலோனா தோற்கும்னு மட்டும் ஒரு பதிவை போட்டே.. ivory coastலருந்து துப்பாக்கி கொண்டார்ந்து ஒருத்தன் சுட்டுடுவான் பரவால்லியா??
/////இனி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுமாறு, செல்சீ அணிக்கு அன்பான வேண்டுகோளொன்றை விடுக்கிறேன்!///
Deleteஆனானப்பட்ட எம்.ஜி.ஆர் கூட மூணு அடி வாங்கிபுட்டு தான் திரும்ப அடிப்பாரு, பொறுத்திருந்து பாரு மச்சி!
/////இனி செல்சீயோட பார்சிலோனா தோற்கும்னு மட்டும் ஒரு பதிவை போட்டே.. ivory coastலருந்து துப்பாக்கி கொண்டார்ந்து ஒருத்தன் சுட்டுடுவான் பரவால்லியா??/////
Deleteநானே தும்பப்பூவில தூக்கு மாட்டி சாகுற ரேஞ்சில இருக்கிறன், அதுக்கு எதுக்குடா ஐவரிகோஸ்ட் வரைக்கும் போயி துப்பாக்கி வாங்கி வரணும்?
//எம்.ஜி.ஆர் கூட மூணு அடி வாங்கிபுட்டு தான் //
Deleteஉங்களுக்கு இப்போ ரெண்டு தான் விழுந்திருக்கு.. மூணாவது அடி ஆன் த வே!
அப்புறம் யாருக்குடா அடிப்பீங்க?.. real betisக்கா?
நாங்க ஒண்ணும் எம்.ஜி.ஆர் கெடையாது, அடித்த அடி செல்சிக்கு நிச்சயம், தப்பி தவறி கூட நீங்க முனீக்குக்கு அடிச்சி ஃபைனல் வந்தா ஒங்களுக்கும் அடி நிச்சயம். சும்மா ஒரு லேட்டஸ்ட் புள்ளிவிபரம் பாக்கிறியா மச்சி?
Deletehttp://www.facebook.com/photo.php?fbid=368505266518098&set=a.173289779372982.30821.173288939373066&type=1&theater
என்னம்மா கண்ண செளக்கியமா??.........................
ReplyDelete2009,2010,2011 - தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...
2012 தர்மம் மறுபடி வெல்லும்!!
நேத்து நைட்ல இருந்து லைட்டா , ஃபீவர், மத்தப்படி சௌக்கியம் தான்.
Deleteயோவ்! எதுக்கு எந்த உவமை சொல்றதுன்னு வெவஸ்த கெடையாதா?
நேற்றைய இரண்டு கோல்களுடன், ரியல் மட்ரிட் ஒரே சீசனில் அடித்த அதிகபட்ச கோல்களுக்கான (107) ரெக்கார்டை உடைத்து, 109 ஆக சாதனை புரிந்துள்ளது..
ReplyDeleteஇன்றைய ரியல் மாட்ரிட் ஸ்பானிஷ் லா லீகாவின் தலை சிறந்த தாக்குதல் ஆட்டத்தை கொண்ட அணியெனும் பட்டத்தை வாங்கிக் கொள்கிறது!!!
நூத்தி ஒம்போது கோல் சரி, அது என்னடா பட்டம்? நீங்களாவே உங்களுக்கு குடுத்துக்கிறதா?
Deleteஅந்த பார்சிலோனா புத்தி மட்டும் எங்களுக்கில்லை பாஸ்!!..
Deleteபட்டமெல்லாம் சொந்த உழைப்புல வாங்கிக்கறது..
இப்பிடியே சொல்லி ஊர ஏமாத்துங்கடா
Deleteஅண்ணன் ரொனால்டோவோட கோலைப் பார்த்தீங்களா? பூட்சைப் பார்த்தீங்களா??
ReplyDeleteஎன்னா ஒரு soft chip... வால்டஸ் வேலையே இல்லை!
கவுண்டர் அட்டாக்னா இன்னான்னு பார்த்தீங்கள்ல.. அதான்மே நம்ம mesut ozil! பொடியன் இருக்க வரைக்கும் ஒரு பயலும் தாண்டி போகமுடியாது!
நேத்து கிறிஸ்டினாவோட ஆட்டம் ஏதோ கொஞ்சம் எடுபட்டு போச்சு, ஓர்ஸில் உண்மையிலையே சிறப்பான ஆட்டக்காரன் தான், ஏன்னா அவன் என்னோட ஜேர்மன் டீம் ஆயிட்டே!
Deleteமெஸி vs ரொனால்டோ யுத்தத்துல யாரு ஜெயிச்சான்னு தெரிஞ்சுக்கனுமா?
ReplyDeletehttp://u.goal.com/128900/128957hp2.jpg
இண்டர்னெட்ல இது மாதிரி ஆயிரம் இருக்கு, அதிலும் இந்த கிறிஸ்டினா அசிங்க படுறது தான் அதிகம்.
Deleteடேய் இது அசிங்கப்படுத்துற படம் கிடையாதுடா.. கோல்.காமில் ஒவ்வொரு எல் கிளாசிக்கோ முடிந்தவுடனும், ரெண்டு பேரோடையும் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்து.. அன்றைய போட்டியில் யாரு வெற்றியாளர்னு தீர்மானிப்பாங்க!!
Delete//அதிலும் இந்த கிறிஸ்டினா அசிங்க படுறது தான் அதிகம்.//
ஃபேமஸ் ஆனவங்களை கலாயச்சாத் தான் அவங்களை பார்க்க நிறைய பேரு வருவாங்க!
////ஃபேமஸ் ஆனவங்களை கலாயச்சாத் தான் அவங்களை பார்க்க நிறைய பேரு வருவாங்க!////
Deleteஆமா ! ஆமா ! நீ சொல்றது உண்மதான் மச்சி, நம்ம வலையுலகத்தில கூட பவர் ஸ்டார், சாம் அண்டர்சன், கிறிஸ்டீனான்னு ரொம்ப பேமஸ்சானவங்கள தான் கலாய்ப்போம்.
உங்க காட்டுல (நியூ கேம்ப்) அடை மழை பெஞ்சும் என்ன பிரியோஜனம்.. நான் அப்பவே இடியமீன் வெதர் ரிப்போர்ட்டை வாசிச்சுட்டு வந்து சொன்னேன்..
ReplyDeleteநம்பினாத் தானே!
இப்போ லண்டன்ல சூறாவளியே அடிக்கப் போகுதாம்.. ரிசல்ட்டு எப்படி வருதுன்னு பார்ப்போம்!
அந்த சூறாவளியையும் பாத்துக்கலாம், நாங்க எல்லாம் தொடந்து சொதப்புறதுகு என்ன டாகுடர் விஜய் யா? ரஜினிட.. "பாபா" சொதப்பல்ன்னா, அதுக்கு அப்புறம் எல்லாம் மெகா மெகா மச்சி!
Deleteகடைச் சங்க காலம் - 21.04.2012 வரை...
ReplyDelete"அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்"
நேத்துலேர்ந்து...
"குத்து மேல் குத்துக் குத்தினால், அம்மி நொறுங்கி பீஸ் பீஸாகும்!!!"
பாக்கலாம்டா... பாக்கலாம்டா.. சம்பியன்ச் லீக்ல பாத்துக்கலாம்டா, நொருங்கிறது எந்த அம்மீன்னு... ( என்னாமா சமாளிக்க வேண்டியிருக்கு, பாவி பார்சிலோனா பசங்களா!)
Deleteபெட்றோவை போடக்கூடாதுன்னு சொன்னே.. எதிர்பார்க்கப்படும் line-up படத்துல அவன் இருக்கானே..
ReplyDeleteஆனா உங்க குவார்டியோலாவோட ஜீனியஸ் மூளையை பார்த்தியா.. பெட்றோவையும் போடாம, சான்ச்சேஸையும் போடாம..
டெல்லோ! சுண்டக்கா பய...
ஜெரார்ட் பிக்கைப் போட்டு இருக்க மொக்க டிஃபென்ஸை காப்பாத்துவோமேன்னு இல்லாம.. மஸிரானோ.. (அவன் லிவர்புல்லயே ஒண்ணுத்தையும் கிழிக்கல.. பார்சிலோனாவுக்கு யூஸ் ஆகவா போறான்?)
பப்படம் சுடவே லாயக்கிலாத பப்ரிகாஸை உள்ள எடுக்க அட்றியானோவை தூக்குறாராமாம்.. காரணம் தெரிமா?
"அவன் வருவான்.. வந்து விழுவான்.. அதை கண்டு ரெஃபரி yellow கார்டு தருவான்.." அந்த நினைப்புத்தானே.. இப்படி செஞ்கே எத்தனை நாளைக்குத் தாண்டா தோல்வியில இருந்து தப்பிக்க பார்ப்பீங்க..
நேத்து அதுக்கும் வேலையில்லாம போயிடுச்சு.. ஏன்னா விழுந்தா, "மழைத்தண்ணியில சறுக்கித்தான் விழுந்தான்"னு சொல்லி போய்க்கிட்டே இருக்கலாம்!!!
குவார்டியோலா என்ன தண்ணி அடிச்சுட்டா டீமை செலெக்ட் பண்ணான்??
நான் தான் பெட்ரோவ போட கூடாதுன்னு சொன்னேனே ஒழிய , அவனுக போடுவானுகன்னு நெனச்சேன்!
Deleteசும்மா கலாய்க்கணும்ங்கிறதுக்காக எல்லாத்தயும் கலாய்க்காத நண்பா, அந்த கோல் மிஸ் தவிர சின்ன பய டெயோ நல்லா தான் ஆடினான். ஆனா சனியாஸ ஆரம்பத்திலயே போட்டிருக்கலாம் தான்.
மஸிரானோ ஓக்கேன்னு தான் நான் சொல்லுவன், அவனுக்கு எனர்ஜிடிக்கான டிபண்டிங்க் ஸ்கில்ஸ் இருக்கு, ஆனா நீங்க சொல்ற மாதிரி பீகேவ போட்டு இருக்கலாம் புயோலுக்கு பதிலா.
யோவ் ! யோவ் ! பப்ரிகாஸ் பபடம் சுடக்கூட லாயக்கிலாதவன்னு நான் கூட ஒத்துக்கிறேன். உங்க கிரவுண்டில நீங்க ஒரு கோல் அடிச்சதுக்கு அப்புறமா வெரட்டி வெரட்டி மூணு கோல் அடிச்சமே அப்போ என்ன யெலோ காட்டா எங்களுக்கு கோல் அடிச்சு தந்திச்சு....?
உண்மைய சொல்ல போனா , குவர்டியோலா தன்னோட டீம் ஃபோர்மேசனை மாத்துறதுக்கு இது தான் சரியான நேரம், மறுபடி 3 - 3- 4 ஃபோர்மேசனுக்கு திரும்பணும். செல்சியாவோட என்ன போர்மேசன் அப்டீன்னு பாக்கலாம். அதுக்கு அப்புறமா இது பத்தி ஒரு பதிவு ரெடி பண்ணி போடணும். தலைவன் தனூஸ் புகழ் பாடும் ரெண்டு பதிவுக்கு அப்புறமா அத போஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன்.
ஆமாய்ய இவளவு காலமும் ஜோஸ் மொரின்கோ தண்ணியடிச்சான், நேத்து ஒரு சேஞ்சுக்கு குவாரியோலா அடிச்சிட்டு என் லைஃபில வாந்தி எடுத்து வச்சிட்டான்.
சம்பந்தம் இல்லாம நண்பனையும், எல் கிளாசிக்கோவையும் சேர்த்துட்டு..
ReplyDeleteஅதுல வேற சம்பந்தமே இல்லாம கடாஃபியும், அந்த உருண்டையும்.. ஏன்டா இப்படி படுத்துற..?
எச்சூஸ் மீ, அது "பஞ்சவன்" பாரிவேந்தன்னு நினைக்குறேன்..
அப்புறம் நண்பன் 3 idiotsஐத் தழுவி எடுத்தது.. 3 idiots, 'Five Point Someone' அப்படீங்கற நாவலைத் தழுவி எடுத்தது.. நாவல்ல லாஜிக் மிஸ்டேக் இருக்கறதாலதான், படத்துலயும் அப்படி இருக்கு..
என்னைப் பொறுத்த வரைக்கும் நண்பன் படம் நல்லது தான்.. ஆனா 'செம' ரேஞ்சுல இருக்கலை.. ஏன்னா த்ரீ இடியட்ஸுங்கற படம் எழுப்பிய அதிர்வுக்கு நண்பன் இருக்கலை..
விஜய் < அமீர்கான்
இலியானா < கரீனா கபூர்
ஸ்றீகாந்த் = மாதவன்
ஜீவா < ஷர்மன் ஜோஷி
சத்யன் = ஓமி வைத்யா
சத்யராஜ் > போமன் இரானி
ஷங்கர் < ராஜ்குமார் ஹிரானி
ஹாரிஸ் > சாந்தனு மொய்த்ரா
மொத்தத்துல 3 IDIOTS >> NANBAN
யோவ் ! சம்மந்தம் சம்மந்தமா பதிவு போட்டா மட்டும் இதுங்க படிச்சிட்டு என்ன பரசூட்ல ஃபாரினா போகப்போதுங்க? அது தான் நான் பதிவில சொன்னேன்ல.. எத எதையோ சம்மந்த படுத்தி இந்த பதிவு போடுரன் அப்டீன்னு. ஏய்யா உம் பேரையும் மலேசியா கொமரன் பேரையும் ரெண்டு எடத்தில குறிப்பிட்டு மன்னிப்பு வேற கேட்டிருந்தனே, அத படிக்கும் போது உம் முண்டக்கண்ண எங்கேய்யா வச்சிக்கிட்டு இருந்த....?
Deleteஎன்னையா இம்மாம் பெரிய பதிவரா இருக்கே, பதிவுலக விதி தெரியாம இருக்கியேய்யா.... டாகுடர் விஜய் படம் நடிக்கிறதே அத வச்சு நம்மள போல அப்பாவி பதிவருங்க நாலு பதிவு தேத்துறதுக்கு தான், நான் ஒன்னு போட்டதுக்கே இப்புடி ஷாக் ஆகிறியே, அங்கால போய் பாரு , பன்னிக்குட்டின்னு ஒருத்தன் வத வதையா போட்டு வச்சிருப்பான்..
யோவ் 3 இடியட்ஸ் படத்தோட கொப்பி தான் நண்பேன்னு எனக்கும் தெரியும்யா, என்னய ரொம்ப தான் கேவலப்படுத்திறியே நீயி... ம்ம்ம்ம்ம்ம் டேய் பார்சிலோனா பங்காளிகளா, பாருங்கடா நீங தோத்து போனதால நான் படாத வேதனையெல்லாம் பட வேண்டியதா இருக்கு. இந்த செல்சியாவுக்கு அடிங்கடா, இவனோட "டிம்மும் டெப்பும்" பதிவில போயி டப்பு டப்புன்னு கலாய்ச்சிட்டு வாரேன்.
இவன் இந்த படத்துல நடிச்சி நல்ல படத்த நாசமக்கிட்டான்.
Delete///இவன் இந்த படத்துல நடிச்சி நல்ல படத்த நாசமக்கிட்டான்.///
Deleteஅது வழமைமையா நடக்கிறது தானே பாஸ்!
நீங்க 2 பேரும் சண்ட பிடிக்கிரண்ட தனிய சண்ட போடுங்களன் ராஜா, இப்பிடி இதுக்குன்னு ஒரு பதிவு போட்டுதான் சண்ட போடனுமா?
ReplyDeleteஇதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா! கண்டுக்காதிங்க பாஸ்!
Delete