உதைபந்து

Showing posts with label லாலீகா 2011/2012. Show all posts
Showing posts with label லாலீகா 2011/2012. Show all posts

Monday, January 7, 2013

2012இல் உலகின் தலைசிறந்த வீரர் யார்?




இன்னும்  சில மணிநேர காத்திருப்பு தான்., கடந்த வருடம் தொடர்பில் உலகம் கேட்டிக்கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான பில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைத்துவிடும். உதைபந்தாட்ட உலகமே ஆவலுடன் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வியான "2012இன் சிறந்த உதைபந்தாட்ட வீரர் யார்"? என்ற கேள்விக்கு இன்னும் சில மணி நேரத்தில் சூரிச்சில் நடைபெறப்போகும் "பலூன் டி ஓர் 2012" விருது வழங்கும் விழா பதில் சொல்லப்போகிறது.


"பலூன் டி ஓர்" விருதானது ஒவ்வொரு ஆண்டிலும் உதைபந்தாட்ட உலகில் பிரகாசித்த வீரருக்கு "ஆண்டின் தலைசிறந்த உதைபந்தாட்ட வீரர் " என்ற கௌரவத்தினை அளிக்கும் ஒரு விருதாகும். சினிமாவிற்கு ஒரு ஆஸ்கர் விருதை போல உதைபந்தாட்டத்தில் ஃபீஃபா அமைப்பு வழங்கும் இந்த விருதானது உயரிய ஒரு விருதாக கொளப்படுகின்றது. வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த விருதினை பெற்று விடுதல் என்பது ஒவ்வொரு உதைபந்தாட்ட வீரனதும் கனவாக இருந்து வருகிறது.


அந்த வகையில் கடந்த ஆண்டிற்கா உலகின் தலைசிறந்த வீரரை தெரிவுசெய்யும் நோக்கில் ஃபீஃபா அமைப்பானது முதலில் இருபத்து மூன்று பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை அறிவித்திருந்தது. இந்த குழுவில் ஸ்பெயினின் முன்னணி கழகமான பார்சிலோனாவின் எட்டு வீரர்கள் உள்ள‌டங்கியிருந்தனர்.பின்னர் அந்த இருபத்து மூன்று பேர் கொண்ட குழுவில் இருந்து வாக்கெடுப்பின் மூலம் மூன்று பேர் வடிகட்டப்பட்டு, இறுதியான போட்டியாளர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யார் "2012இல் உலகின் தலைசிறந்த வீரர்" என்பதனை எத்ர்வரும் 7ம் திகதி சுவிஸ்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறப்போகும் விருதுவழங்கும் விழா அறிவிக்கும்.


அந்த வகையில் கடந்த வருடத்தில் பிரகாசித்த வீரகளில் முதன்மையானோரும், விருதின் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றிருப்போருமென ஃபீஃபா அறிவித்திருக்கும் வீரர்கள் இவர்கள் தான்.



*ஆர்ஜன்டீனாவின் லியோனல் மெஸ்ஸி ( கழகம் பார்சிலோனா- ஸ்பெயின்)

*ஸ்பெயினின் அன்ட்ரஸ் இனியஸ்டா (கழகம் பார்சிலோனா -ஸ்பெயின்)

*போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ( கழகம் ரியல் மட்ரிட் - ஸ்பெயின்)


இப்போது இந்த மூன்று வீரகளினதும் கடந்த பருவகாலத்தின் பெறுபேறுகளை பார்த்துவிட்டுஎந்த வீரர் இந்த விருதினை பெற்றுக்கொளப்போகிறார் என்பது பற்றி அலசலாம்.


லியோனல் மெஸ்ஸி

நாடு : ஆர்ஜென்டீனா
கழகம் : பார்சிலோனா - ஸ்பெயின்
வயது : 25
நிலை : முன்கள வீரர்


பெறுபேறுகள்

*லீக் கோல்கள் : 50
*சம்பியன்ஸ் கிண்ண கோல்கள் : 14
*ஏனைய கோல்கள் : 09
*அஸிட்டுகள் ( கோலுக்கான உதவி) : 29

அணியுடனான சாதனைகள்

* கோபா டில் ரே வெற்றியாளர்கள். ( பார்சிலோனா)
* சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி ( பார்சிலோனா)

தனிப்பட்ட சாதனை

* லாலீகா வரலாற்றில் ஒரு சீசனில் அதிக கோல்கள் ( 50 கோல்கள்.)
* சம்பியன்ஸ் கிண்ண வரலாற்றில் ஒரு தொடரில் அதிக கோல்கள் ( 14 கோல்கள்)
* ஒரு சீசனில் அதிக கோல்கள் மற்றும் அதிக அஸிட்டுகள் செய்த சாதனை ( 73 கோல்கள் 29 அஸிட்டுகள்)
* லாலீகாவின் சிறந்த வீரருக்கான "தங்க பாதணி விருது"

அன்ட்ரஸ்ட் இனியஸ்டா

நாடு : ஸ்பெயின்
கழகம் : பார்சிலோனா - ஸ்பெயின்
வயது : 28
நிலை : மத்திய வரிசை வீரர்



அணியுடனான சாதனைகள்.

* கோபா டில் ரே வெற்றியாளர்கள். ( பார்சிலோனா)
* சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி  ( பார்சிலோனா )
* யூரோ கிண்ண வெற்றியாளர்க்ள் ( ஸ்பெயின்)


தனிநபர் சாதனை

*2011-2012ம் ஆன்டுக்கான சிறந்த சம்பியன்ஸ் கிண்ண வீரர்.
* 2012 யூரோ கிண்ணத்தின் சிறந்த வீரர்


கிறிஸ்டியானோ ரொனால்டோ

வயது : 27
நாடு : போர்த்துக்கல்
கழகம் : ரியல் மட்ரிட் ( ஸ்பெயின்)
நிலை : முன்கள வீரர்

பெறுபேறுகள்

*லீக் கோல்கள் 46
*ஏனைய கிண்ண கோல்கள் 14

அணியுடனான சாதனைகள்

*லாலீகா கோப்பை வெற்றியாளர் (ரியல் மட்ரிட்)
*சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி ( ரிய மட்ரிட்)
* யூரோ கிண்ண அரையிறுதி ( போர்த்துக்கல்)




மேலே சொன்னவாறு இறுதி சுற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வீரர்களில் அன்ட்ரஸ் இனியஸ்டா இரண்டாவது தடவையாக இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2010ம் ஆண்டில் சக கழக வீரர்களான மெஸ்ஸி மற்றும் சாபி ஹர்னாண்டஸ் ஆகியோருடன் பரிந்துரைக்கப்பட்டு இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.


கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்படுவது இது ஐந்தாவது தடவையாகும். 2007, 2008,2009, 2011 ஆகிய ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டு 2008ம் ஆண்டில் மட்டும் இந்த விருதினை வென்றுளார்.மிகுதி ஆண்டுகளில் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார். 2008இல் மன்செஸ்டர் அணிக்காக ஆடும் போது விருதினை பெற்றுக்கொண்ட ரொனால்டோவால் 2009இல் ரியல் மட்ரிட் அணியுடன் இணைந்து கொண்டதன் பிற்பாடு , குறிப்பாக லியோனல் மெஸ்ஸி இவரது பிரதான போட்டியாளராக உருவெடுத்ததன் பிற்பாடு பரிந்துரைக்கப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களிலும் மெஸ்ஸியை தோற்கடிக்க முடியாத இவரால இரண்டாம் இடங்களை மட்டுமே பெற முடிந்தது.


லியோனல் மெஸ்ஸியை பொறுத்தவரை 2007ம் ஆண்டு தொடக்கம் 2012 வரை இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுவருகிறார். 2007இல் மூன்றாம் இடத்தினையும் 2008இல் விருதினை கிறிஸ்டியானோ பெற்றுக்கொள்ள இரண்டாம் இடத்தினையும் பெற்றார். அதன்பின்பு அதாவது 2009 தொடக்கம் 2011ம் ஆண்டுவரையான தொடர்ச்சியான மூன்று வருட விருதுகளையும் வென்று நெதர்லாந்தின் "ஜொஹான் குரூயி, மார்கோ வான் பஸ்டன் " இத்தாலியின் மிச்சேல் பிளாட்டினி ஆகியோருடன் மூன்று தடவை இந்த விருதை வென்றவர்கள் என்ற பட்டியலில் இணைந்தார். இவர்களில் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிளாட்டினி ஆகியோர் மாத்திரமே தொடர்ந்து மூன்று தடவைகள் இந்த விருதினை வென்றவர்கள் என்ற பெருமையை பெறுகிறார்கள். இன்று மெஸ்ஸி இந்த விருதினை பெற்றால் தொடர்ச்சியாக நான்கு தடவை இந்த விருதை வென்ற ஒரே வீரர் என்ற தனிப்பட்ட சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.




சரி இந்த இந்த விருதிற்கான காற்று யார் பக்கம் அடிக்கிறது என்று பார்க்கலாம்.


கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் இந்த விருதிற்கு பொருத்தமானவர் என்று ரியல் மட்ரிட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜொஸ் மொரின்ஹோ தெரிவித்துள்ள நிலையில், இந்த விருதிற்கு தான் தான் பொருத்தமானவர் என்று ரொனால்டோவும் கூறியிருக்கிறார். போர்த்துக்கல் அணியின் தலைவராக இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் இந்த விருதிற்காக வாக்களிக்க முடியும். இந்த நிலையில் தனது ஓட்டு தனக்கே என்று கூறியிருக்கும் கிறிஸ்டியானோவுக்கான வாய்ப்பு எப்படி இருகிறது?


கடந்த பருவகாலத்தில் லா லீகா கிண்ண‌த்தை கைப்பற்றிய ரியல் மட்ரிட் அணியில் ஓர் முக்கிய வீரராகவும், அணி கிண்ணம் வெல்வதற்கு பெரும்பங்கினை ஆற்றிய ஒரு வீரராகவும் இருக்கும் கிறிஸ்டியானோவால் இந்த வருடம் விருதினை வெல்வதில் பலத்த சிக்கல் இருக்கின்றது. மிகப்பெரிய தடைக்கல் எதுவென்றால் அது மெஸ்ஸியாகத்தான் இருக்க முடியும். கடந்த பருவகாலத்தில் 60 கோல்கள் மற்றும் 13 அஸிட்டுக்களை செய்திருக்கும் கிறிஸ்டியானோவா அல்லது இரண்டு சாதனைகள் அடங்கலாக 73 கோல்கள் 29 அஸிட்டுகள்  செய்திருக்கும் மெஸ்ஸியா என்ற கேள்வி தெரிவுக்குழுவிற்கு வந்தால் தெரிவாகப்போவது மெஸ்ஸியாகத்தான் இருக்க முடியும்.


மெஸ்ஸியின் தனிநபர் சாதனைகளுக்கு மத்தியில் ரொனால்டோவின் லாலீகா கிண்ணம் பெற்றுகொடுத்த ஆட்டம் அடிபட்டுப்போனால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை. ரியல் மட்ரிட் லாலீகா கிண்ணம் வெல்வதற்கு ரொனால்டோ பங்காற்றியதை போன்றே பார்சிலோனா கோபா டில் ரே வெல்வதற்கு மெஸ்ஸியும் பெரும்பங்காற்றியுள்ளார்.


அத்தோடு இந்த விருதிற்கான இறுதிக்கட்ட வாக்கெடுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரமான கடந்த டிசெம்பர் மாதத்தின் போது உதைபந்தாட்ட உலகில் இருந்து வந்த 40 வருட சாதனையான முல்லரின் "ஒரு ஆண்டில் 85 கோல்கள்" என்ற சாதனையை 2012 கலண்டர் ஆண்டில் 91 கோல்கள் அடித்து முறியடித்து புது சாதனையை நிலைநாட்டியிருந்தார் மெஸ்ஸி. இந்த சாதனை அலை அனைத்து உதைபந்தாட்ட ஜாம்பவான்கள், பத்திரிக்கை மற்றும் அனைத்து ஊடகங்களில் புருவங்களையும் உயர்த்த வைத்தது. எனவே குறிப்பிட்ட அந்த நேரத்தில் வாக்களிக்க தகுதியான ஊடகங்கள் மற்றும் உதைபந்தாட பிரபலங்கள் அணியின் தலைவரளின் வாக்கு மெஸ்ஸியின் வாக்கு வங்கிக்கு சென்று சேர்ந்திருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம்.


பலூன் டி ஓர் குறித்து கருத்து தெரிவித்த பிரபலங்களில் ஜொஸ் மொரின்ஹோ, ரொனால்டோ, ஸிலாற்றன் இப்ரஹிமோவிச் தவிர்ந்த மற்ற அனைவரும் இந்த வருடத்திற்கான விருதினை மெஸ்ஸி வெல்வார் என்றே கூறியிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ரியல் மட்ரிட் அணியின் முன்னாள் வீரரும் பிரேசிலின் நட்சத்திரமுமான ரொனால்டோ லூயிஸ் " உதைபந்தாட்டத்தை புதிய ஒரு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் மெஸ்ஸி தான் இந்த விருதுக்கு தகுதியானவர்" என்று புகழாரம் சூட்டியுளார். மெஸ்ஸியை சிபாரிசு  செய்யும் பிரபலங்கள் பட்டியலில் முன்னால் உதைபந்தாட்ட ஜாம்பவானளான பிரேஸ்லின் பீலே, ஆர்ஜென்டீனாவின் மரடோனா , ஜேர்மனியின் முல்லர் பிரேஸிலின் ரொனால்டினோ ஆகியோரும் அடங்குவர். இந்த அனைவரும் இந்த விருதிற்காக வாக்களிக்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மெஸ்ஸி வெல்வார் என்று பரவலாக கூறப்பட்டு நம்ப‌ப்படுகின்ற போதிலும் சக வீரரான இனியஸ்டா ரூபத்தில் ஒரு ஆப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் 2012ன் ஐரோப்பாவின் சிறந்த வீரர் விருதிற்காக இதே மூவர் சிபாரிசு செய்யப்பட்டிருந்த போது மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை பின் தள்ளி விட்டு விருதினை தட்டிச்சென்றவர் இனியஸ்டா. அதற்கான பிரதான காரணம் ஸ்பெயின் அணி 2012இல் யூரோ கிண்ணத்தை கைப்பற்ற இனியஸ்டாவின் பங்கு அளப்பெரியதாக இருந்ததேயாகும். 'இந்த வருடத்திற்கான பலூன் டி ஓர் விருது இனியஸ்டாவுக்கு கிடைத்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் " என்று லியோனல் மெஸ்ஸியும் தனது கருத்தை இனியஸ்டாவுகு சார்பாக தெரிவித்திருக்கின்றார். ஆர்ஜன்டீனாவின் தலைவராக தனது வாக்கு இனியஸ்டாவிற்கே என்றும் மெஸ்ஸி மேலும் கூறியிருக்கின்றார்.


சிறந்த ஐரோப்பிய வீரருக்கான விருதில் ஐரோப்பா கிண்ணத்தின் செல்வாக்கு மிக அதிகமாக இருந்தபடியால் அந்த விருதுக்கான முழுப்பெருமையும் இனியஸ்டாவுக்கே போய் சேர வேண்டும். உலகின் தலை சிறந்த வீரர் என்று வருகின்ற போது என்னை பொறுத்தவரை கடந்த ஆண்டு சாதனை மேல் சாதனை செய்த லியோனல் மெஸ்ஸி தான் அது. எந்து வாக்கு கணக்கில் கொள்ளப்படாவிட்டாலும் என் வாக்கு மெஸிக்கு தான். 


இன்றைய விருது முடிவு இப்படி இருக்க வாய்ப்பு அதிகம்.

3


2



WINNER

















Sunday, May 20, 2012

அது வேற வாயி! இது நாற வாயி!



எங்க ஊரில ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க ! "நாக்கு கறுப்பா இருக்கிறவன் சொன்னா , அது நடக்கும்னு". இந்த மாதிரி அனுமானுஷ விசயங்கள் பத்தி நீங்களும் கேள்விபட்டு  இருப்பீங்க. இந்த மாதிரியான மூட கதைகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இருந்தது கிடையாது. ஆனா சமீப காலமா என்னய சுத்தி நடக்கிற அனுமானுஷ விசயங்கள கூர்ந்து கவனிச்சு பாத்தா புதுசா ஒரு அனுமானுஷ பழமொழி உருவாகிவருவதை மனக்கசப்போடு ஏற்றுக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. அந்த புது பழமொழி என்னன்னா " ரெண்டு வாரம் பல்லு வெளக்காதவன் ஏதாச்சும் சொன்னா , அது தலகீழா நடக்கும்". அந்த பல்லு விளக்காத வாயன் யாருன்னா சாட்சாத் நானே தான்.
நான் சொன்னது போல எனக்கு இந்த குருட்டு வாதங்களில் எலாம் நம்பிக்கை இருந்தது கிடையாது. ஆனால் இப்போ எனது ஆரம்ப  காலத்தில் இருந்து , நான் சொல்லி சொதப்பிய சம்பவங்களை கோர்த்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ( ஏன்னா விழுந்த அடிகள் ரொம்ப பலம்).

நேத்தலேர்ந்து ஆரம்பிக்கிறேன். பார்சிலோனவும் , மட்ரிட்டும் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இருந்து வெளியேறி விட்ட பிறகு எனது மொத்த நம்பிக்கையும் பயன் முனீக் அணிமீது தான் இருந்தது. அந்த அணிதான் கிண்ணம் வெல்லும் அப்டீன்னு ஒரு பதிவு வேற போட்டு தொலச்சேன். விளைவு ஒண்ணுக்கும் உதவாத செல்சியா ( முனீக் அணியுடன் ஒப்பிடுகையில்) இப்போது சம்பியன்.

சொந்த மைதானம், உலக தரம் வாய்ந்த வீரர்கள் வரிசை, மட்ரிட்டின் கோட்டையில் அவர்களுக்கே ஆப்படித்த தன்னம்பிக்கை என்று அடுக்கடுக்கான சாதகமான வாய்ப்புக்களை கொண்டிருந்த முனீக் அணி மண்ணைகவ்வி இருக்கிறது. 83வது நிமிடத்தில் முல்லர் கோல் அடிக்க , யார் நினைத்தார் அந்த கிழவன் ட்ரக்பா அடுத்த மூன்றாவது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்வான் என்று? சரி அதுதான் போகட்டும்கொஞ்சம் யோசித்து பார்த்தீர்களா , இன்று உலகில் இருக்கக்கூடிய தலை சிறந்த வீரர்களில் ஒருவரான நெதர்லாந்தின் ரொபன் அந்த பெனால்டி வாய்ப்பை அப்படி செல்சியாவின் கோல் காப்பாளர் சேச்சின் வாய்க்குள் அடித்து நாசாமாக்குவான் என்று? அதை விடுவோம், ஆனானப்பட்ட கசியாசின் கைகளை தாண்டி பெனால்டி கோல் அடித்து மட்ரிட்டை மண்கவ்வ செய்த ஸ்டீன்ஸ்னேகர் தனது மைதானத்தில், பெனால்டியை கோல் கம்பத்தில் அடித்து கழுத்தறுப்பான் என்று சேச் கூட நினைத்திருக்க மாட்டான்.


அரையிறுதியில் மெஸ்ஸி தனது உதைபந்தாட்ட வாழ்க்கையிலேயே முதன் முதலாய் செல்சியாவுடன் ஆடும் போது பெனால்டியை சொதப்பியது, நேற்று ரொபன், ஸ்டீன்ஸ்னேகர் பெனால்டியை கோட்டைவிட்டு செல்சியாவுக்கு கிண்ணத்தை தாரை வார்த்தது என்று தொடர் சம்பவங்கள் எல்லாம் செல்சியாவின் அதிஷ்டம் என்று உதைபந்தாட்ட உலகு சொல்கிறது. ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால் அது எல்லாம் இந்த நாற வாயனால் வந்தது.

கிரவுண்டு எல்லாம் வெளிச்சமாதான் இருக்கு! ஆனா நடத்துறவன் மைண்டு இருட்டால்ல இருக்கு!


இதுமட்டுமில்லை எல்கிளாசிக்கோவில் பார்சிலோனா வெல்லும் என்றேன், விளைவு இந்த சீசனில் தனது சொந்த மைதானத்தில் தனது முதலாவது தோல்வியை பதிவு செய்தது பார்சிலோனா. ஜொஸ் மொரின்கோ நியூ கேம்பில் தனது முதலாவது வெற்றியை பார்த்தார். அத்தோடு நின்றதா எனது வாக்கின் சுத்தம்? சம்பியன் கிண்ண அரையிறுதியில் அரையிறுதியில் செல்சியாவை பார்சிலோனா தனது சொந்த மைதானத்க்டில் வைத்து வீழ்த்தும் என்றேன். விளைவு சமியன் கிண்ணத்தை விட்டு வெளியேறியது பார்சிலோனா! இத்தோடு நிறுத்திகொள் பாலகுமாரா என்று நண்பன் JZ எச்சரித்த போதாவது நிறுத்திக்கொண்டேனா? இல்லை... இல்லை... இல்லவே இல்லை..... அடுத்த அரையிறுதியில் முனிக் அணியை தனது சொந்த மண்ணில் வீழ்த்தி மட்ரிட் இறுதி போட்டிக்கு நுழையும் என்றொரு பதிவு போட்டேன் , முடிந்தது மட்ட்ரிட்டின் கதை! அவர்களது மைதானத்திலெயே அவர்களை வேழ்த்தி ஆப்படித்தது முனீக் அணி! "மவனே மாட்னா செத்தடா" என்று நண்பன் JZ  எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது தான் மிச்சம்.
இப்போது இன்னுமொரு முக்கியமான போட்டி வருகிறது, கோபா டில் ரே இறுதி போட்டியில் பார்சிலோனாவும் அத்லடிகா பில்பாவோ அணியும் மோத இருக்கின்றன. பார்சிலோனா வெல்லும் என்று சொல்லி , இந்த சீசனில் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதலையும் கெடுத்துக்கொள்ள விரும்பாமல் , இந்த போட்டியில் பில்பவோதான் வெல்லும் என்று கூறி கழன்று கொள்கிறேன்.


சரி இதுகளை தான் விடுவோம் . யாரோ விளையாடி யாரோ வென்று யாரோ சம்பாதித்துவிட்டு போகிறான். ஆனால் இன்னொரு துயரத்தையும் கேளுங்கள்.

எழுந்து நிற்பதில் குறிப்பிடபட்டிருக்கும் தம்பி தான் இலங்கை தேசிய அணியில் (17 வயதுக்குட்பட்ட) ஆடும் சஜீவன். அமர்ந்திருப்பதில் குறிப்பிடப்பட்டிருப்பவர் எனது தம்பி டெசில் மாவட்ட அனியில் ஆடுகிறார். அணியின் எஞ்ஞின்.! அது போக மேலும் ஏழு வீரர்கள் மன்னார் மாவட்ட அணியில் ஆடுகிறார்கள்.


பார்சிலோனாவுக்கும் அதிகமாக ஏன் நான் நேசிக்கின்ற முதல் உதைபந்தாட்ட அணி எங்களது பாடசாலையான புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியை தான். இலங்கையின் வட கிழகு மாகாணங்களில் கல்வி மற்றும் விளையாட்டில் தனித்த சிறப்பு கொண்டதும் , இலங்கையில் இருக்கின்ற சிறந்த உதைபந்தாட்ட அணிகளைகொண்ட பாடசாலைகளில் தனக்கென்று ஒரு தனியிடம் பிடித்ததும் என்று பல பெருமைகளை கொண்டது எங்கள் பாடசாலை.


ஒவ்வொரு வருடமும் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று வீரர்களை அனுப்பிக்கொண்டிருப்பது எங்கல் பாடசாலை. 2004இல் இலங்கையை பிரதிநிதுவப்படுத்தி உதை பந்தாட்ட தொடர் ஒன்ன்றுக்காக எங்கள் பாடசாலை கொரியா சென்றது. ( அந்த வருடத்தில் இலங்கையின் அத்தனை தேசிய கிணங்களையும் சுவீகரித்ததுதான் காரணம்). அங்கு முதலாவது போட்டியில் கொரிய அணி முதல் பாதியில் ஐந்து கோல்களை அடித்தும் சோர்வடையாமல் இரண்டாம் பாதியில் விரட்டி ஐந்து கோல்களை அடித்து சமன் செஇது அடுத்ட சுற்றுக்கு போனது. போட்டி நடந்தது 2002 உலககிண்ண இறுதி போட்டி நடந்த யோகறாமா மைதானத்தில். பின்னர் சிங்கப்பூர், மற்றும் ஜப்பான் அணிகளை வீஅத்தி மூனாமிடம் மற்றும் ஃபெயா பிளே ஆகிய கோப்பைகளோடு தாயகம் வந்த பெருமைகொண்டது எங்கள் பாடசாலை அணி.


அதுமட்டுமல்ல இலங்கையில் தேசிய ரீதியில் மூன்று பிரதான கிண்ணங்களுக்கான போட்டி நடைபெறுவது வழக்கம். மைலோ கிண்ணம், ஃபெடரேசன் கிண்ணம் மற்றும் அகில இலங்கை பாடசாலை கிண்ணம். இத மூன்று கிண்ணங்களில் ஏதாவது இரண்டை ஒவ்வொரு வருடமும் வீட்டுக்கு கொண்டுவருமளவிற்கு திறமையான உதைபந்தாட்ட அணி எங்களது அணி. அவ்வாறான அணிக்கு தான் எனது நாற வாயால் வந்தது வினை.


இந்த வருட தேசிய  போட்டிகளுக்காக கொழும்பு வந்திருந்தது எங்கள் அணி. பதினேழு வயதுக்குட்பட்ட அந்த அணியில் எனது தம்பியும் ஆடுகிறான். முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி. நொக் அவுட் போட்டி ஒன்றில் போன வருடம் சம்பியனான டிக்கோயா அணிக்கு ஐந்துக்கு பூச்சியம் என்று அடித்து அனுப்பினார்கள். இதன் பின்புதான் எனது வாசம் வரும் வாய் தனது வேலையை காட்டியது.

நான் போனேன்! பிடித்தது சனி. ( கறுத்த டி- சேர்டில் நான்) 


ஆர்வமிகுதியால் எனது ஃபேஸ்புக்கில் இந்தவருடமும் கிண்னமொன்று தயார் என்று நான் அப்டேற்றிவிட கால் இறுதி போட்டியில் ஒரு இனவெறி தாக்குதலுக்கு இலக்காகி போனது எங்கள் அணி... கால் இறுதியில் பெரும்பான்மை இனத்து பாடசாலை ஒன்றுடன் மோதியது எமது அணி. ஆட்டம் எங்கள் வசம் தான், எங்கல் கல்லூரியே ஆதிக்கம் செலுத்தியது. ( பார்சிலோனா செல்சியா அரைஇறுதி போல). போட்டி முடிவதற்கு சிலநிமிடங்களுக்கு முன்னர் எதிர் பாடசாலையின் வீரன் ஒருவன் தனது இரு கைகளாலும் பந்தை பிடித்து கோலுக்குள் போட்டான். போட்டவன் சிவப்பு அட்டை கிடைக்க போகிறதே என்ற பயத்தோடு தலையில் கையை வைத்துக்கொண்டு  சோகமாய் நடுவரை தேடி நடந்துவர , அவர்களது அணியின் தலைவரும் அந்த சிவப்பு அட்டையை தடுக்கும் நோக்கில் "சேர் சேர் எயா தகே நே.. ஏக்க அக்சிடன்ட் எகாக் பிளீஸ் " (சேர் ! சேர்! அவன் அதை பார்க்கவில்லை, அது ஒரு விபத்தாக அவனது கையில் பட்டு விட்டது) என்று கொண்டு கெஞ்சும் தோரணையில் ஓடி வர அந்த சம்பவம் நடந்து ஒன்ரரை நிமிடங்களுக்கு பிறகு நடுவர் அதை கோல் என்று தீர்பளித்து விசில் அடித்து விட போட்டியில் இருந்து வெளியேறியது எங்கள் அணி!


இந்த எதிர்பாராத சோகமுடிவு எங்களை மட்டுமல்ல போட்டியை பார்த்துகொண்டிருந்த வெளியாட்களையும் உலுக்கி போட்டது. அதில் மலையக பாடசாலைகளின் (தமிழ் பாடசாலைகள்) பயிற்சியாளர்கள் இருவர் அந்த நடுவரிடம் இதுபற்றி வாக்குவாதபட்டபோது "மெயாலாட்ட மேக்க அத்தி" (அவர்களுக்கு இதுவரை வந்ததே போதும்என்ற பதில் வந்திருக்கிறது.  "உங்களை வேண்டுமென்றே வெளியேற்றி இருக்கிறார்கள், அரையிறுதில் நீங்கள் மோத இருந்தது , உங்களிடம் லீக் போட்டியில் வாங்கி கட்டிய அணியுடன் தான். நீங்கள் இலகுவாக அதையும் வென்று விடுவீர்கள் என்று அவர்களுக்கு தெரியும் அதுதான் சந்தர்ப்பம் பார்த்து அடித்திருக்கிறார்கள்." என்றார் ஒரு பாடசாலையின் பயிற்சியாளர்.


எங்களது அணியின் பயிற்சியாளர் போட்டி ஏற்பாட்டு குழுவிடம் முறைப்பாடு செய்தபோது "அப்பீத் தக்கா, ஏவுனாட்ட அப்பி மொக்குத் கரன்ன பே, றெஃரி தமா ஏக்க டிசிசன் கரன்ன ஓனே, ஒயாலா கிகில்லா அப்பிட்ட லெட்டர் எகாக் எவன்ன , இட்ட பஸ்ஸே அப்பி பலமு" ( நாங்களும் அதை பார்த்தோம் ஆனால் எங்களால் ஏதும் செய்ய முடியாது, நடுவர்தான் அதற்கு பொறுப்பு. நீங்கள் ஒன்று செய்யுங்கல் ஊருக்கு போய் கடிதம் ஒன்று அனுப்புங்கள், அதன் பிறகு இதை பார்த்துக்கொள்ளலாம்" என்ற பதில் வந்திருக்கிறது.

இனவெறி தாக்குதல் என்பது ஆயுதத்தால் தாக்குவது மட்டுமல்ல!


"ஏகப்பட்ட கனவுகளோடு வந்த எனது பிள்ளைகளின் கோப்பை கனவு அநியாயமாக சிதைக்கப்பட்ட பிறகு, கடிதம் அனுப்பி அதற்கு கிடைக்கப்போகும் பதிலை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்ய" என்று வாக்குவாதப்பட்டு வந்திருக்கிறார் எங்கள் பயிற்சியாளர். "கோப்பை வெல்லும் அணியை இந்தியாவுக்கு சுற்றுலா அழைத்துச்செல்ல ஒரு திட்டம் இருக்கிறது, ஒரு தமிழ் பாடசாலையை அழைத்து செல்ல அவர்கள் என்ன மடையர்களா" என்று கொதித்தார் ஒரு பாடசாலை பயிற்சியாளர். "இப்படி அராஜகம் , வன்சகம் செய்து திறமை இல்லாத அணிகளை வெளிநாட்டுக்கு போட்டிகளுக்கு அனுப்புவதால் தான் இலங்கை உதைபந்தாட்ட அணி போகும் இடம் எல்லாம் வாங்கி கட்டுகிறது" என்றார் எங்களது வாகன சாரதி.


இப்படி பலரும் பல காரணங்களை சொன்னாலும் , இலங்கை தெசிய அணியில் விளையாடும் ஒரு வீரன், மாவட்ட அணிக்கு ஆடும் எட்டு வீரர்கள் என்று திறமையான அணி தோற்ரதற்கு காரணம் எனது நாற வாய் தான் என்று நினைக்கிறேன் நான். எனது நாற வாய் நடுவர் வடிவில் தனது வேலையை காட்டி இருக்கிறது.


இந்த வருடத்தில் ஒரு தேசிய கிண்ணம் கைப்பற்றி , இன்னொன்றை எனது நாறவாயின் காரணமாக கோட்டை விட்டு மீதமிருக்கும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கிண்ணத்தை சுவிகரிக்கும் நோக்கில் ஏற்கனவே மாவட்டம், மாகாணம் ஆகிய படிகளை தாண்டி தேசிய போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்ட எங்கள் அணி ஃபீனிக்ஸாய் கடும் பயிற்சி செய்கிறது, அவர்களை மனதார வாழ்த்திவிட்டு இருப்பதே நலம். எனது நாற வாயை திறந்து ..... யப்பா வேண்டவே வேண்டாம்...!

கவலை விடு சகோதரா.. அடுத்த போட்டியில் பாத்துக்கலாம்!


எனது நாறவாயின் மகிமையை காட்ட இன்னொரு சம்பவம். எனது நண்பர் (வயதில் மூத்தவர்) ஒருவர் ஒரு பெண்ணை காதலித்தார். அந்த அக்காவும் என்னோடு நல்ல பழக்கம். ஒரு நாள் என்னிடம் வந்து "நண்பா ஒருக்கா கேட்டு சொல்லேன் " என்றார். நானும் திருவாய் திறந்து, " கவலப்படாத நண்பா, நாளைக்கே உன்னோட வேல முடிஞ்சுது எண்டு நெனச்சுக்கோ" என்றேன். அடுத்த நாள் காலையில் அந்த வீட்டில் இருந்து அழுகுரல். அந்த அக்கா இரவோடு இரவாக யாரோடோ ஓடிவிட்டாராம். எனது நண்பர் இப்போது 32+ இன்னமும் திருமணத்துக்கு பெண்பார்த்துக்கொண்டு இருக்கிறார். இதுக்கப்புறம் நான் என்னத்த சொல்ல?


கடைசியாக நண்பன் டூலிட்டிலுக்கு ஒரு செய்தி சொல்ல ஆசைப்படுகிறேன். "நண்பா உனது ஒரு பதிவில் , உனது நண்பர்களுக்கு எல்லாம் நல்ல வேலை கிடைக்கும் என்று பின்னூட்டம் போட்டு இருக்கிறேன், அதை நான் வாபஸ் வாங்குகிறேன். பாவம் அவர்கள் யார் பெத்த புள்ளைகளோ?"

டிக்கோயா அணிக்கு அடித்த ஐந்து கோல்களில் முதல்லிரண்டு கோல்களையும் அடித்த எனது தம்பியுடன்!



Saturday, April 21, 2012

உனக்கு கொசக்சி பசப்புகழ தெரியும் ஆனா எல் கிளாசிகோவ தெரியுமா?




கொசக்சி பசப்புகழ் பெரிய ஒரு விஞ்ஞானி. அவரு இருக்கிற எடம் தேடி அமரிக்க கப்பனிகளே அலையுது. இதிலயும் பஞ்சவேல் பாரிவேந்தனை பழிவாங்கி ரத்தம் குடிக்க அலையும் சத்தியன் கூட கொசக்சி பசப்புகழை தான் தேடித் திரிகிறார். அட அது கூட பரவாயில்லை இந்த ஜீவாவும், சிறீகாந்தும் கூட பஞ்சவேல் பாரிவேந்தனின் ஆருயிர் நண்பர்கள்.

அவர்கள் கூட தனது ஆருயிர் நண்பன் பாரிவேந்தனை தேடி அலைகிறார்கள். அப்புறம் காடு , மேடு, பனிமலை எல்லாம் அலைந்து திரிந்து எப்படியோ பஞ்சவேல் பாரிவேந்தன் தனது நண்பன் இல்லை என்று தெளிகிறார்கள். என்ன இவர்களது வழி பயணத்தில் டிஸ்கவரி சேனலின் "பியர் கைல்ஸ்சும்" , செத்துப்போன "ஸ்டீவ் எர்வின்" ஆவியும் கூட வந்து உயிர் காப்பு நெறிமுறைகளை சொல்லி தராதது தான் கொறை.

அது கூட பரவாயில்லை, அரை இஞ்சிக்கு இடுப்பு வெச்சிருக்கிற இலியானா பொண்ணுகூட , மூக்கும் மூக்கும் முட்டாம ஒரு முத்தம் குடுக்க முடியாம , தோத்து போய் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க துணிஞ்சிருது. அப்பொ முத்தம் குடுக்கும் போது  வேற எதுவும் எதுவும் முட்டும்ன்னு எவனாச்சும் கேட்டீங்கன்னா மக்களே டாகுடரோட துப்பாக்கி படத்தோட முதல் ஷோ டிக்கட் எடுத்து கைல குடுத்திருவன் ஜாக்கிரத.

எனக்கு இங்க தான் மச்சி ஒரு டவுட்டு, இந்த பஞ்சவேலும் , அந்த பக்கி பயபுள்ளையும் பாய்ஞ்சு பாஞ்சு  லவ் பண்ணினாய்ங்களே , அப்புறம் இந்த பஞ்சவேலு உன்ன கல்யாணம் பண்ண முடியாதுங்கிறான். இந்த பொண்ணும் ஒரு ஒப்புக்கு ஏன்னு கேட்டுப்புட்டு அப்புறம் கண்டுக்காம விட்டுரிச்சு.

அடங்கொன்னியா அவன் உஜிரோட இருக்கான இல்ல செத்து போய்ட்டானான்னு கூட தெரியாம, ஒரு அமெரிக்க மாப்பிள்ள கூட செட்டிலாக தயார் ஆகும் இடத்தில் பக்கா மாடன் பொன்னுன்னு நிரூபிக்குது.

அட இந்த பாரி பயல் கூட கண்டுக்கவே இல்ல இல்ல! என்ன லவ்வுடா இது?

ஆனா பாருங்க , ஒரு காமடி என்னன்னா நம்ம தமிழ் நாட்டு ஜேம்ஸ் கமரூன் ஷங்கர் இருக்காரில்ல , அவரு இன்னா சொன்னாரு ? தமிழுக்கு ஏத்தா மாரி படத்த மாத்தி இருக்கேன்னாரு.

பிரம்மாண்டம் பண்ணுகிறேன் பேர்வழின்னு படத்தோட இருநூறு கோடில நூறு கோடிக்கு பாட்டுக்கு எங்கனாச்சும் வனாந்தரத்துல செட்டு போடும் இந்த ரிச்சான பேரரசு இன்னா பண்ணினாரு? ஏன் இவர ரிச்சான பேரரசுன்னு சொல்றேன்னா , பெரிய ஆர்டிஸ்டுகளை வச்சுகின்னு மசால படம் தருகின்ற ஒருத்தர் தானே ஷங்கர். தன்னோட மொதல் மூணு படத்தில இவரு காமிச்ச நெஜமான தெறமையின் மேல் இன்னமும் சவாரி செய்கின்ற சரக்கில்லாத வியாபாரி.

அந்த பேர வச்சுகின்னு , இபோது பெரிய ஆர்டிஸ்டுகள வச்சி படம் பண்ணும் பிரம்மாண்ட வெங்கடேசு, ரிச்சான பேரரசு. பிரம்மாண்டம் ... பிரம்மாண்டம் ... அப்டீன்னு பேசுறீங்களே உங்க படத்துல செட்டு மட்டும் தானே பிரம்மாண்டமா இருக்கு, காட்சிகள்ள கெடையாதேன்னு கேட்டா , அவரும் அவரோட அடி பொடிகளும் தார பதில் இருக்கே யம்மா,,,,,, "அந்த காட்சிகளின் நுணுக்கம், அதில் உள்ள பிரம்மாண்டம் எல்லாம் சிறந்த கமிராமேன்களுக்கும், அந்தந்த துறைசார் வல்லுனர்களுக்கெ வெளங்கும்னு" ஒரு சப்ப கட்டு வேற.. வெளங்குமிடா....!



அப்டீன்னா உங்களோட படத்த ரிலீஸ் பண்ணிப்புட்டு நிரவ் ஷா, மகேந்திரன், பாலு மகேந்திரா, கே.வி.ஆனந்துன்னு நூறு நாளும் கேமிரா மேன்களுக்கே போட்டு காட்டி வெற்றி படம்னு அறிவிக்க வேண்டியது தானே, அத்த விட்டு புட்டு  ஏய்யா.. காமிரா பத்தியோ, காமிரா கோணங்கள் பத்தியோ எதுவுமே தெரியாத சாணி தட்டுற முனியம்மாவுக்கும், ஆப்பம் விக்கிற ஆயாவுக்கும் , புண்ணாக்கு விக்கிற புஸ்பாக்கும் போட்டு காட்டுறீக.... # ஓவரா எமோஷன் ஆகிறனோ?

பாலா, வசந்த பாலன், பிரபு சாலமோன் எல்லாம் நல்ல டைரக்டர் அவைய்ங்களோட படத்தில புதுசா ஏதும் இருக்கும்ன்னு நான் ஏதாவது சொல்லப்போனா என்மேல சாணியடிக்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்கிறதால நான் எதுவும் சொல்லப்போவது இல்ல. ஷங்கர் வாழ்க... பிரம்மாண்டம் வாழ்க....

சரி என்னா பேசிக்கிட்டு இருந்தோம்? ஆ! கொசக்சி பசப்புகழ், இந்த கடைசி காட்சில பாருங்க தன்னோட நண்பன் தான் அந்த கொசக்சி பசப்புகழ்ன்னு எல்லோரும் தெரிஞ்சு கொள்ளும் காட்சி என்ன ஒரு பிரம்மாண்டம்?

 இம்மாம் பெரிய விஞ்ஞானி இந்த கொசக்சி, அவரோட அக்ரிமென்ட் போடுறதுக்கு ஜப்பான் , அமெரிக்கா , பேரிக்கான்னு எல்லா நாடும் வரிசைல நிக்குது ஆனா பாருங்கோ , "கிஷோகர்ன்னு" கூகிள்ள சொடக்கினா, சுண்டக்கா பய என்னோட டீட்டெயில் கூட வந்து விழுற இந்த இன்டெர்னெட் யுகத்தில அவரோட ஒரு போட்டோ கூட கூகிள்ளையோ , பேப்பரிலயோ  வராம போனது தான் ஷங்கரோட பிரம்மாண்டம் தெரியும் இடங்கள். கலக்குங்கள் ஷங்கர் சார்!

அது சரி இந்த பிரமாண்டத்தை கவனிக்க உங்களுக்கு மூடு இருந்திருக்காது , பின்ன என்ன முத்தமிடும் போது மூக்கும் மூக்கும் முட்டுமா? அப்டீன்னு சாலமன் பாப்பையாவே பட்டிமன்றம் நடாத்த மறந்த தலைப்பை இடுப்பழகி இலியான விஞ்ஞான பூர்வமாக நிறுவிக்காட்டும் போது , பிரம்மாண்டத்த யாருய்யா பாக்கிறது? பிரம்மாண்டம் வாழ்க! ஷங்கர் வாழ்க!

சரி கொசக்சி பசப்புகழ் யார்னு நமக்கு இப்பொ தெரியும் ! அது யார் சார் 'எல் கிளாசிகோ"?



சுட்டுக்கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் மெய்க்காப்பாளர்கள் எல்லாம் ஃபிகருகள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் ஒரு பிகரை நீண்ட நாட்களாக கடாபி இது பண்ணினார்.

அந்த பொண்ணு பேரு தான் "எல் கிளாசிகோ". சும்மா செம ஃபிகருப்பா. சும்மா சொல்ல கூடாது, பொண்ணு நின்னு வெளையாடும், அந்த கறுப்பு கலருக்கே  கோடி குடுக்கலாம், என்னய விட்டா அந்த பொண்ணு பாட்டியாகும் வரைக்கும் பாத்துகின்னே இருப்பேன், அப்டீனு நான் சொன்னா இந்த JZஉம், மலேசியா  குமரனும் வாயிலயே வெட்டுவார்கள்.


'எல் கிளாசிகோ" அப்டீன்னா ஸ்பெயினின் புகழ் பெற்ற உதைபந்தாட்ட கழகங்களான பார்சிலோனா மற்றும் ரியல் மட்ரிட் அணிகள் மோதும் இந்த போட்டிக்கு பேர் தான் "எல் கிளாசிகோ"

உலகத்தின் மில்லியன் கணக்கான உதைபந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த போட்டி இன்று இலங்கை இந்திய நேரப்படி 11.30க்கு ஆரம்பமாகிறது.

இந்த போட்டி அரசியல் மற்றும் இன்னமும் சிலபல காரணங்களால் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கட் போட்டி ரேஞ்சுக்கு பார்க்கப்படுகிறது. முடிஞ்சா நீங்களும் பாருங்கோ.

இன்றைய இந்த போட்டி பார்சிலோனாவுக்கு அரசியல் ரீதியான காரணங்ளையும் தாண்டி   மிக முக்கியமான போட்டி. காரணம் ஏன் என்று அறிய இங்கே சொடுக்குங்கள்.



யோவ் JZ மற்றும் மலேசியா குமரா! இந்த போட்டி தொடர்பில் தனி பிரீவியூ போடத்தான் பிளான் பண்ணினேன். இந்த பாழா போன கரண்டு இப்போதான் வந்திச்சு. அதனால ஏற்கனவே கொசக்சிக்கு அனுப்ப வச்சிருந்த லெட்டர் கூட இதையும் அட்டாச் பண்ணி மேனேஜ் பண்ணிகிட்டேன். மன்னிச்சூ........

இந்த போட்டி இப்படி முடியலாம்....

2 - 0 பார்சிலோனா வெற்றி

அல்லது

2- 1 பார்சிலோனா வெற்றி

இந்த போட்டியில் எதிர் பார்க்கப்படும் பார்சிலோனாவின் லைன் - அப்



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...