உதைபந்து

Monday, May 21, 2012

"கொலைவெறி நாயகன்"தனுஸ் நிகழ்ச்சியில் பிரபலபதிவர்களுக்கு அனுமதி மறுப்பா? பாகம் 2

இவனோட பிளாக்குக்கா வந்தோம்? நம்ம பொழப்பு இனி நடந்தாப்புல தான்


"வணக்கம்... வந்தனம்.. நமஸ்தே.. வாலிப வயொதிப அன்பர்களே! அடச்சே .. என்ன இது இவன் புரோகிராம் பண்ணவந்ததுக்கு அப்புறம் என் பேச்சு என்ன மிட்நைட் பலான வைத்திய வெளம்பரம் பண்ணுறவன் போல ஆயிடுச்சு.... நேயர்களே இது உங்கள் மொக்காபிமான "கிஷோகரின் பக்கங்கள்" மொக்கை பதிவு, நான் உங்கள் அபிமான சந்தானம். இந்த மரண மொக்கை பிளாக்கை பிரபலபடுத்துகிறேன் பேர்வழி என்று இந்த வலைப்பூ அதிபர் ( பெரிய ஆயிரம் கோடி ரூவா கம்பனி அதிபர் இவரு) ஒரு மரண மொக்கை நிகழ்ச்சி நடத்தி வருவது நீங்கள் அறிந்ததே..! மீண்டும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன் "முடிஞ்சா ஜெயிச்சு பாரு ஒரு கோடி" நிகழ்ச்சியின் இரண்டாம் நாளுக்கு உங்களை வரவேற்கிறேன். பதிவுலகின் பிதாமகன் பன்னிகுட்டி ராமசாமி ஆடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டாவது கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இது தான் அந்த கேள்வி....."


2.தனது சினிமா வாழ்வின் ஆரம்பத்தில் கஸ்தூரி   ராஜா என்றொரு அப்பாவும் , செல்வராகவன் என்றொரு அண்ணாவும் இல்லாமல் போயிருந்தால், அல்லது திருMஅனத்துக்கு பின்னர்மொக்கை படங்களை திரைக்கு அனுப்பிய போதெல்லாம் "சுப்பர் ஸ்டார் மருமகன்" என்ற அந்தஸ்து இல்லாமல் இருந்திருந்தால் , தலைவர் தனூச் பின்வரும் தொழில்களில் எந்த தொழில் செய்திருப்பார்?

A)ராயபுரம் பஸ் ஸ்டாண்டில் ராப்பிச்சை எடுத்திருப்பார்

B)மாம்பலத்தில் மாமா வேலை பார்த்திருப்பார்

C)அண்ணா நகரில் அண்டங்காக்கா புரியாணி விற்றிருப்பார்

D)நமக்கல் காப்ரேஷன் வண்டியில் நாய் புடித்திருப்பார்


"சொல்லுங்க‌ மிஸ்ட‌ர் ப‌.கு.ரா இந்த‌ கேள்விக்கான‌ விடை எது? சொன்னா இப்போவே ஒரு கோடி."

ப‌.கு.ரா :- (ம‌ன‌துக்குள்) டேய் இதில‌ எந்த‌ வேலைக்கும் அவ‌ன் ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌மாட்டான். சில‌ வேளை இந்த‌ நாலு வேலையையும் ஒண்ணா ப‌ண்ணியிருக்குமோ என்ன‌மோ....

"என்ன‌ யோசிக்கிறீங்க‌ ப‌.கு.ரா? சொல்லுங்க‌.. எந்த‌ ப‌தில‌ நீங்க‌ சொல்ல‌ போறீங்க‌? ந‌ல்லா யோசிங்க‌..."


ப.கு.ரா :- என்னய ஒரு வழி பண்ணிடறதுன்ன முடிவுல தான் இங்க கூட்டியாந்து இருக்கீங்க ... எல்லாம் என்னோட விதி , அத யாரால மாத்த முடியி.. சத்திய சோதன. ஏனுங்க தம்பி இந்த கேள்விக்கும் விடை சொல்லாம நான் 'பாஸ்" பண்ணிவிடலாமா?

"ஓ! தாராளமா.. அப்போ நீங்க இந்த கேள்விய பாஸ் பண்ணிவிடுறீங்களா? ஏன் இந்த கேள்வி என்ன அவளவு கஸ்டமாவா இருக்கு? "

ப.கு.ரா:- மவேனெ நீ வெளிய வாடி அப்போ இருக்கு உனக்கு கச்சேரி, இந்த கேள்விக்கு மனுசன் பதில் சொல்லுவானாடா, இப்போ இந்த "மூணு" படம் பிளாப் ஆனதுக்கே அந்த நாயி எந்த சந்துல பிச்சயெடுக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கு, இதில இவங்க யாருமே இல்லன்னா அதோட கத அம்பேல்.. நீயி வேற அந்த நாய்க்கு ஐடியா தாறாப்ல நல்ல நல்ல தொழிலுகள அள்ளி விடற.. என்ன எல்லாருமா சேர்ந்து என்ன டபாய்க்கிறீங்களா? அடிச்சே கொன்னுடுவேன் படுவாக்களா....

"ஓகெ..ஓகே... கூல் கூல் மிஸ்டர் ப.கு.ரா, நாம  அடுத்த கேள்விக்கு போயிடலாம்."

ப.கு.ரா:- டேய் நிருத்துடா ! நான் அடுத்த கேள்விக்கு ஆடுறேன்னு சொன்னனா, இங்கபாரு பதிவுலகில நான் சாதிக்க வேண்டியது இன்னும் நெறய இருக்கு, உன்னயும் இந்த பிளாக்கு ஓனரையும் குரல்வளைய கடிச்சு கோன்னுபுட்டு ஜெஜிலுகு போக விரும்பல, நான் ஆடத்தில இருந்து விலகிக்கிறன்டா, (அழுகிறார்) ஆனா ஒண்டுடா மக்களா, நீங்க ரெண்டு பேரும் மறுக்கா என் கண்ணில பட்டீங்க அப்புறம் தமிழ் நாட்டு ஜெஜில்லா ஒரு எண்ணிக்க கூடும்டா.... உங்க ஏரியாவில இன்னமும் கொல விழலல்ல, இனி விழும்டா... இனி விழும்....! பொடி நடையா நடந்தே நான் இந்தியா போயிடுறேன்ட... ஆள விடுங்கடா அப்பா...

"ஐயோ பாவம், பன்னிகுட்டியார் இப்பிடியொரு முடிவை எடுத்துவிட்டதால் இப்போ நாங்க அடுத்த போட்டியாளரை களமிறக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறோம். டேய்! யார்ரா வர்ரீங்க? யோவ் JZ ! நீதாய்யா இருக்கிறதிலயே வயதில மூத்தவரு, என்ன சமஞ்ச புள்ளையாட்டம் பம்முற, வாய்யா , வந்து ஆடுய்யா.... நமது அடுத்த போட்டியாளர் மிஸ்டர். JZ!!!!!"

வெளிய வாடா ! உன்ன வாயிலேயே வெட்டுறேன்


JZ வந்து Hot Seatஇல் அமருகிறார்.....


"இப்போ நம்ம போட்டியாளரா இங்க உக்காந்து இருப்பவர்தான் பிரபல ஆங்கில படங்களை விமர்சனம் பண்ணுகிறேன் பேர்வழின்னு நாசம் பண்ணுகிற திரு JZ அவர்கள். எந்த ஆங்கில  படம் வந்தாலும் தியேட்டரில் பார்ப்பதை பாவம் என்று நினைத்து , கோல் மால் பண்ணி திருட்டுத்தனமாய் ஆன்லைனில் பார்த்துவிட்டு, ஏதோ அமரிக்கா போயி அங்கேயே வி.ஐ.பி ஷோ பார்த்தது கணக்கா விமர்சனம் பணுகின்ற பிரபல பதிவர். வணக்கம் JZ சார்!"

JZ:- வணக்கம் சந்தானம் , நீங்க என்னய ரொம்ப புகழுறீங்க..

"ஏது புகழுறனா, இந்த பிளாக்கு ஓனரு உன்னயா முடின்ச வரைக்கும் உன்னய கழுவி ஊத்த சொன்னானேடா அத தான் பண்ணினேன், நீ என்னடான்ன புகழுறேங்குற?"

JZ:- சார்! எங்க ஃபிரண்ட்ஷிப்பில இப்பிடிதான் ஆளை ஆள் புகழுவோம்...

"சுத்த மானங்கெட்ட ஃபிறண்ட்ஷிப்பால்ல இருக்கு... சரி நாம இப்போ அடுத்த கேள்விக்கு போயிடலாம். மிஸ்டர் JZ! உங்கலுக்கான முதல் கேள்வி!"


3.இசை உலகில் அழியா புகழ் பெற்ரவர்களில் இவர்களில் எவர் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்...

A)மைக்கல் ஜாக்சன்

B)பீத்தோவன்

C)பொப் மார்லி

D)தனூஸ்


"சொல்லுங்க மிஸ்டர் JZ... எத்தின லைஃப் லைன் வேணும்னாலும் நீங்க யூஸ் பண்ணிக்கலாம்."

JZ:- சார், விக்கிபீடியா பாக்கலாமா? ஏனா என்னோட "டிம்மும் டெப்பும்" அங்க பாத்த்டு தான் எழுதுவேன்.

"நீ விக்கிபீடியா பாப்பியோ இல்ல நக்கிபீடியா பாப்பியோ, பதில் சொன்னா போதும்டா சாமீ!"

கட கடவென்று கீ போர்டை தட்டியும் பதில் கிடைக்கததால் , முகத்தை சுழிக்கிறார் JZ! 

"என்ன சார் ஏதாச்சும் மாட்டிச்சா?"

JZ:- இல்ல சார் இந்த கேள்விய பாஸ் பண்ணி விட்டிருங்க.

"என்ன சார் தனூஸ் ரசிகன் நீங்க நீங்க கூட பதில் சொல்லலன்னா எப்பிடி, சரி ஓகெ, அடுத்த கேல்விக்கு போயிடலாம். உங்களுக்கான அடுத்த கேள்வி .... 

4.பின்வரும் பஞ்ச் டயலாக்குகளில் 21ம் நூற்றாண்டின் சிறந்த பஞ்ச் என்ற விருதுக்கு தகுதியானது எது?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்...

A)கொல கொலய முந்திரிக்கா.. பவர்ஸ்டார் அடிச்சா நீ கத்தரிக்கா...

B)ஏய் நான் பாக்கத்தான் சுள்ளான் .. சூடானேன் சுளுக்கு எடுத்துருவேன்....

C)ண்ணா.... ஒரு தடவ முடிவு பண்ணினா எம் பேச்ச நானே கேக்க மாட்டேன்.

D)ஏய்...ஏய்...ஏய்...ஏய்....ஏய்...ஏய்...ஏய்...

JZ:- சார் நான் லைஃப் லைன் யூஸ் பண்ணிக்கிறேன் சார், அந்த பாழா போன ஜீனியசிடம் சொல்லி ரெண்டு விடைய தூக்கிட சொல்லுங்க......

"என்ன JZ அசால்டா ஆள தூகிடுங்கன்னு சொல்றாப்ல சொல்றீங்க. சரி மிஸ்டர் ஜீனியஸ் நம்ம பிரபல பதிவர் JZகு ரொம்ப கன்ஃபியூசனா இருக்கிறதால ரெண்டு விடையா துக்கிட்டு நல்லதா ரெண்டு விடை சொல்லிடி யக்கம்மா.... அடச்சே மறுபடி மறுபடி பழைய தொழில் எல்லாம் ஞாபகம் வருதே, எல்லாம் இந்த பிளாக்கு ராசி..."

கிளிங்......

இதோ JZ உங்களுக்கான இரண்டு ஆப்ஷன்கள் ஃபில்டர் பண்ணி கிடச்சிருக்கு, இப்போ உங்களுக்கு ஒரு தெளிவு வந்திருக்கும்னு நெனைக்கிறேன். அந்த இரண்டு ஆப்ஷன்களும் இதோ....

A)கொல கொலய முந்திரிக்கா.. பவர்ஸ்டார் அடிச்சா நீ கத்தரிக்கா...

B)ஏய் நான் பாக்கத்தான் சுள்ளான் .. சூடானேன் சுளுக்கு எடுத்துருவேன்....



"இப்போ சொல்லுங்க மிஸ்டர் JZ! உங்களுக்கான வேலையை மிஸ்டர் ஜீனியஸ் இலகுவாக்கி இருக்கிறார். அந்த விடை எது? சொல்லிட்டு கோடி ரூவாவ அள்ளிகிட்டு போங்க."

உனக்கு வேட்டு கன்ஃபார்ம்!


JZ:- டேய்! கிஷோகரு எனக்கும் உனக்கும் ஆயிரம் ஆயிரத்தைநூறு இருக்கலாம், அதுக்காக இதெல்லாம் நல்லாவே இல்லடா... ஏதோ பூர்வ ஜென்மத்தில நான் பண்ணின பாவம், உன்னோட பிளாக்கில தெரியா தனமா வந்து மாட்டிகிட்டேன். இப்போ பாரு நான் படுற அவஸ்தய....

"மிஸ்டர் JZ எங்க முதலாளிய அப்பிடியெல்லாம் திட்டக்கூடாது."

JZ:- யாரு முதலாளி? அந்த நாயா? இவளவு காலமா ஃபுட்பால் பாக்குது ஆனா யாரு யெயிப்பாய்ங்கன்னு கணிச்சு சொல்ல தெரியாத நாயி எல்லாம் முதலாளியா? இந்த கேள்வி பாஸுடா.....


நான் உங்ககிட்டேர்ந்து நெறைய எதிர பாக்கிரேன் மிஸ்டர் JZ! நீங்க என்னடான்னா பாம்பு "உஸ்ஸு" உஸ்ஸுங்றாப்ல "பாஸு" 'பாஸு'ங்கிறீங்களே!

JZ:- இந்த பிளாக்கு ஓனருக்கு தான் வேற வேல இல்லன்ன உங்களுக்குமா சார்?

"எங்க ஓனர பத்தி அப்பிடி எல்லாம் தப்பா சொல்லாதிங்க மிஸ்டர் JZ"

JZ:- யாரு, காலா காலமா ஃபுட்பால் மாட்ச் பாத்தும் எந்த டீம் ஜெயிக்கும்னு சரியா சொல்லத்தெரியாதவன் எல்லாம் ஒரு ஓனரு.. தூ.........


"நீங்க ரொம்ப ஓவரா உணர்ச்சி வசப்படுறீங்க மிஸ்டர் JZ! நாம உங்களோட இறுதி கேள்விக்கு போகலாம். உங்களுக்கான இறுதி கேள்வி. நீங்கள் ஆங்கில படங்கள் அதிகம் பார்கிற படியால் அது சம்மந்தமாகவே கேட்கிறேன். இதோ உங்களுக்கான கேள்வி.....

5.கீழ் குறிப்பிடப்படும் திரைப்பட கதாநாயகர்களில் , யார் புவியீர்ப்பு சக்தியை மீறி ஆகாயத்தில் பறந்து பறந்து சண்டை போட்டு எதிரியை வீழ்த்த கூடியவர்கள்?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்.....

A)சூப்பர் மேன்


B)வான் HONG


C)தனூஸ்


D)பட் மேன்










என்ன JZ சார் ! இந்த கேள்விக்காவது விடை தெரியுமா இல்லயா?

JZ:- அது வந்து சார் நான் "டிம்மும் டெப்பும்" எழுதும் போது....

"டேய் நிறுத்துடா நானும் வந்தலேர்ந்து பாத்துகிட்டு இருக்கேன், ஏதோ அக்கா பொண்ணு பேர அடிக்கடி சொல்லூற மாதிரி டிம்மு டெப்பு , டிம்மு டெப்புன்னு அளந்துக்கிட்டு இருக்க.. ஏன் டிம்மையும் டெப்பையும் குத்தகைக்கு எடுத்து வாடகைக்கு விட்டிருக்கியா? இன்னொரு தடவ டிம்மு டெப்புன்னு ஏதாச்சும் சொன்ன டப்பு டப்பு வாயிலேயே அடிப்பேன்..."

JZ:- சாரி சார்! எனக்கு விடை தெரியும்.

'வெரி குட் வெரி குட்.. எங்க சொல்லுங்க பாக்கலாம், பிரபல பதிவர் ப.கு.ரா வால் முடியாதது நம்ம JZஆல் முடிந்திருக்கிறது, யோவ் பிளாக்கு ஓனரே ஒரு கோடிய ரெடி பண்ணுய்யா.... அம்மா மாரே அக்கா மாரே அண்ணன்மாரே எல்லாரும் ஒரு தடவ ஜோரா கைதட்டுங்க... என்ன குரங்கு வித்த காட்டுறவன் போல அயிட்டேன்.. சே.... சொல்லுங்க JZ!

JZ:- சார் அந்த கேள்விக்கு விடை ஆப்ஷன் A சூப்பர் மேன் சார்!

'ஆர் யூ ஷூர், லாக் பண்ணிடலாமா?


JZ:- பண்ணிடலாம் சார்...

"மிஸ்டர் ஜீனியஸ் சூப்பர் மேன் என்கிற விடையை லாக் பண்ணிபுட்டு மிச்சதை அவுத்து விடுங்க ஓடிரட்டும்."

"பாக்கலாம் JZ உங்க விடை சரியா தப்பான்னு.. இதோ வருகிறது ஜீனியஸன் பதில்"

'சூப்பர் மேன் என்கிற உங்களது பதில் ...........................................................................................................................................................................................................................................................................  படுபிழை என்கிறார் மிஸ்டர் ஜீனியஸ். கீழே சிறுகுறிப்பில் தனூஸ் நடித்த சுள்ளான் படத்து சண்டை காட்சிகளை பார்க்கும் படி உங்களுக்கு அறிவுரை தந்திருக்கிறார், அதனை பார்த்துவிட்டு இந்த கேள்விக்கு எந்த விடை வரும் என்று உங்களை வீட்டு உத்தரத்தை பார்த்து யோசனை செய்யும் படி ஆலோசனை கூறி இருக்கிறார்."

"ஆக இந்த போட்டியிலிருந்து பிரபல ஆங்கில படங்களின் பதிவர் JZ வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அடுத்து இந்த ஆசனத்தில் அமர்ந்து விளையாடி அந்த ஒரு கோடி ரூபாவை லவட்டிக்கொண்டு போவதற்காக வர இருப்பவர் , தெருவில் திரியும் நல்ல மாடுகளுக்கெல்லாம் ஊசிபோட்டு நாசமாக்குகின்ற டாக்டர். டூலிட்டில்..... வாங்க டாக்டர் டூலிட்டில்....

நம்மையும் சேத்து நாறடிக்கிறானே, இவன என்ன பண்ணலாம்?


பாங்......

இன்றைய நேரம் நிறைவுக்கு வருகிறது, இன்னமும் ஐந்து கேள்விகள் மீதமிருக்கின்றன. தொடர்ந்து ஆடுவதற்கு டாக்டர் டூலிட்டில் மற்றும் மலேசிய குமரன் ஆகியோர் காத்திருக்கிறார்கள். நாளைய தினம் எமது நிகழ்ச்சியின் இறுது தினமாகும். எங்கலுக்கு மட்டுமல்ல பதிவை படிக்கும் உங்களுக்கும் இறுதி தினமாக இருக்கும், எனவே நாளை உங்களை சந்திக்கும் வறை உங்களிடம் இருந்து வடை பெறும் நான் உங்கள் சந்தானம்!

பாகம் ஒன்று படிக்க இங்கே சொடுக்கவும்.
http://www.kishoker.blogspot.com/2012/04/blog-post_27.html

பாகம் மூன்று படிக்க

10 comments:

  1. நல்ல பதிவு ...
    உங்கள் பதிவு மேலும் பலரை சென்றடைய
    முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
    பார்க்க

    தமிழ் DailyLib

    இந்த சேவை தொடர அவசியம்

    அவசியம் logo ஐ side bar la இணைத்து கொள்ளுங்கள்

    To get the logo
    தமிழ் DailyLib Vote Button


    Thanks,
    Krishy

    ReplyDelete
  2. அருமையான கலக்கல். அதுசரி அவங்க சண்டைக்கு வரமாட்டாங்களா?

    ReplyDelete
    Replies
    1. யாரும் எதுவுமே சொல்ல மாட்டாங்க பாஸு, எல்லாருமே என்னோட கூட்டாளிங்க தான். கொஞ்ச நாள் போன உங்கள கூட கலாய்ப்பேன்! எப்பூடி? வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!

      Delete
  3. //ஏதோ அமரிக்கா போயி அங்கேயே வி.ஐ.பி ஷோ பார்த்தது கணக்கா விமர்சனம் பணுகின்ற பிரபல பதிவர்.//

    வாவ்! வாட் எ இன்ட்ரொடக்ஷன்!!

    "வாடா! பூரா வேர்லுடலேர்ந்தும் தனுஷ் ரசிகர்களை கூட்டியாந்து உன் கேம்பஸ் முன்னால இறக்குறேன்டா! பார்க்குறியா? பார்க்குறியா??"

    இப்படீல்லாம் சொன்னா மட்டும் நம்பவா போற..

    அவனே கொலைவெறியால வந்த கூட்டமெலலாம் 3 படத்தை பார்த்துட்டு ஓடிடுத்தேன்னு கவலையில இருக்கான்.. மிச்சம் மீதியிருக்கிற ஒண்ணு, ரெண்டையும் விரட்டுறதுதான் உன் வேலையா? கமான்.. டெல் மீ!

    சரி நம்மளை மட்டுந்தானே கலாய்ச்சே.. மொத முறையா மட்ரிடையும், ரொனால்டோவையும் இழுக்கலை.. அதுனால தப்பிச்சுக்கோ!
    ஆனா நம்மா "மலேசியா பவர் ஸ்டாரை" இத விட அழகா புகழனும்! இன்னா புரியுதா?

    ReplyDelete
    Replies
    1. /// வாவ்! வாட் எ இன்ட்ரொடக்ஷன்!!////

      நண்பா நான் உனக்கு பண்ணாம வேற யாருகு பண்ண போறேன்?

      ///// அவனே கொலைவெறியால வந்த கூட்டமெலலாம் 3 படத்தை பார்த்துட்டு ஓடிடுத்தேன்னு கவலையில இருக்கான்.. மிச்சம் மீதியிருக்கிற ஒண்ணு, ரெண்டையும் விரட்டுறதுதான் உன் வேலையா? கமான்.. டெல் மீ!///////

      இல்லாங்காட்டியும் அவனுக்கு ஏதோ மைக்கல் ஜாக்சன் கணக்கா ஃபான்ஸ் இருந்த மாதிரியெல்ல நீ பேசுற, என்ன சின்ன புள்ள தனமால்ல இருக்கு?

      ////சரி நம்மளை மட்டுந்தானே கலாய்ச்சே.. மொத முறையா மட்ரிடையும், ரொனால்டோவையும் இழுக்கலை.. அதுனால தப்பிச்சுக்கோ! ////

      அவனுகளும் எத்தன நாளுதான் என் கையால அடிவாங்குவானுக?

      /////ஆனா நம்மா "மலேசியா பவர் ஸ்டாரை" இத விட அழகா புகழனும்! இன்னா புரியுதா?////

      Delete
    2. /////ஆனா நம்மா "மலேசியா பவர் ஸ்டாரை" இத விட அழகா புகழனும்! இன்னா புரியுதா?////

      விடுவனா நானு? சும்மா வண்டி வண்டியா வரஞ்சு தள்ளிட மாட்டேன், நீ கவலய விடு நண்பா. இந்தா பாரு மலேசியா குமாரா! உனக்கு நம்ம JZ அண்ணனா பாத்து மலேசிய பவர்ஸ்டார்னு பட்டம் குடுத்திருக்காரு, அத நல்லா காப்பாத்திக்கோ என்னா? இந்த காலத்தில பட்டம் கிடைக்கிறது அத்த சுலபம் இல்லப்பா, பாத்து சூதானமா நடந்துக்கோ. அம்புட்டுத்தான் சொல்லிப்புட்டேன். அண்ணன் முன்மொழிந்ததை நானும் ஆர்த்மார்த்தமாக வழிமொழிகிறேன். மலேசிய பவர்ஸ்டார் குமரன் வாழ்க!

      Delete
  4. ஆனாலும் இந்தத் தொடருல தனுஷ் மானத்தைவிட சந்தானத்தோட இமேஜ்தான் ரொம்ப டேமேஜ் ஆவுறாப்ல தெரியுது...

    * அகில உலக சந்தான ரசிகர்களே.. பொங்கியெழுங்கள்!
    இவன் பெயரு கிஷோகர்.. இவன் இருக்கிற ஏரியா கொழும்புல exactly....

    ReplyDelete
    Replies
    1. சந்தானம் இமேஜ்ஜு டமேஜ் ஆகலேயே நண்பா, சந்தானத்த வச்சி, நம்மள கலாய்க்கத்தான் இந்த ஏற்பாடு. ஐயா, ராசா! சந்தானம் ரசிகர்களே பொங்குங்கோன்னு கெளப்பி விட்டீன்னா நான் அட்ரஸ்ஸு தெரியாம ஆயிடுவன்டா அப்பா, ரஜினிக்கு அடுத்ததா இப்போ சந்தானத்துக்கு தான் ரசிகர் ரொம்ப பேரு இருக்காய்ங்க.. இதில நீ அட்ரஸ் வேற குடுக்குற ராஸ்கல்!

      Delete
  5. தலைவா என்னை விட்டுடுங்க

    ReplyDelete
  6. அது எப்பிடி மச்சி! நீ என்னோட நண்பேன்டா! அப்புறம் நாளைக்கு வந்து "பாத்தியா நண்பா, என்னய மட்டும் உன்னோட நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு பெருமை படுத்தலயேன்னு" ஒரு கேள்வி என்னய நீங்க கேட்டுப்புட்டா அத ஜீரணிக்க என்னால முடியாதுப்பா..... என்னால முடியாது..... !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...