அது என்னான்னா இலங்கையில் இப்போ அடிக்கடி ஒரே மின்வெட்டு தொல்லையாக இருக்கிறது, இலங்கைன்னா சொன்னேன்? ஆங் திருத்தம்... ( இலங்கையிலா இருக்கு அப்டீன்னு ஒரே சந்தேகம் என்பதால் சின்ன கன்பியூசன்) அதாவது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சுமாரா ஒரு மாதமாகவே சீரில்லாத காலநிலை...சாரி.. சீரில்லாத மின்சார விநியோகம். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு,கிளிநொச்சின்னு எந்த் எடமும் பாக்கி கெடையாதாம்.
நான் விடுமுறையில் மன்னாருக்கு வந்த போது, நைட்டு ஆனா போதும், ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி கரண்டு வந்து வந்து போகும். அந்த களோபரத்திலேயே நெறைய பேரோட வீட்ல இருந்த டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெசின், பல்பு எல்லாமே சேந்து பல்பு வாங்க ஆரம்பிச்சிரிச்சி...... எனக்கு என்ன காண்டுன்னா அந்த நேரம் , யூரோ கப் ஃபுட்பால் வேற போய்க்கிட்டு இருந்திச்சா, ஒவ்வொரு வாட்டியும் கோல் போஸ்டுக்குள்ள பந்து போற நேரமா பாத்து , கரண்டு வாய பொளந்திடும். செம காண்டயிடுவேன். " இந்த மாதிரி கரண்டு தார்றதுக்கு, பேசாம தராமலே இருக்கலாம்னு " கோவமா நாலு வார்த்த பேசிப்புட்டேன். அது நம்ம ஈ.பி காரய்ங்களுக்கு கேட்டிரிச்சோ என்னமோ? ரோஷத்துக்கு பொறந்த பயபுள்ள ரெண்டு மூணு நாளைக்கு சுத்தமா கரண்டையே கட் பண்ணி விட்டாய்ங்க! நான் வேற பிரபல பதிவரா இருந்தேனா, அதுவும் யூரோ கப்பு பத்தி பதிவு வேற போட்டாகணும்ங்கிறதுக்காக , வேற வழியே இல்லாம மொழுகுதிரி கொழுத்தி டி.வி பாத்து பதிவு போட வேண்டியதா போச்சு! அதில சிக்கல் என்னான்னா பதிவு போடும் போது , என்னோட லேப் டாப்புக்கு பவரு கொஞ்சம் ஜாஸ்தியா தேவ பட்டிச்சி... பெரிய சைஸ் மொழுகு திரி வாங்க நான் அலைஞ்சது எனக்கு மட்டுமே தெரியும்! கலைத் தாய்க்கு எப்புடியெல்லாம் சேவை செய்ய வேண்டி இருக்கு!
இந்த பவர் கட்டு பிரச்சினையை ஆரம்பத்தில் நானும் பெருசா எடுத்துக்கல, தமிழ் நாட்டுக்கு பக்கத்தில இருக்கிற படியால அந்த வியாதி தொத்திரிச்சுன்னு தான் நெனச்சேன். ஆனா பாருங்க , எப்போ எங்களோட அமைச்சர் " இலங்கைல போதுமான அளவு மின்சாரம் இருக்கு, தமிழர் பகுதிகளுக்கு தங்கு தடையற்ற மின்சாரம் குடுக்குறோம். தேவைன்னா கருணாநிதி வீட்டு கக்கூசுக்கும் ஃபிரீயா லைட்டு போடுறோம்"னு சொன்னாரோ , அப்பவே புரிஞ்சிரிச்சு, அதாவது எங்களோட அமைச்சர் , எங்களுக்கு கொழும்புலேர்ந்து அனுப்புற கரண்ட , எவனோ பாதி வழில வச்சி ஆட்டைய போடுறான்னு. எனக்கு என்னமோ இக்கிரிகொலாவையில் இளநீர் விக்கும் அந்த ஐயா மேல செமையான சந்தேகம். ஏன்னா அவருதான் , அவரோட கடையில நெறைய எண்ணை விளக்கு வச்சிருந்தார். எண்ண இருந்தாலும் கரண்டு இல்லாம அந்த விளக்கில எப்புடி லைட்டு எரியும்? சந்தேகம் வலுக்கவே , மன்னார் மின்சார சபைக்கு ஃபோன் போட்டேன், நான் ஃபோன் பண்ணும் போது கரண்டு இருந்திச்சு , எனக்கு ஒரே கோவமா போச்சு "அண்ணே ! கரண்டு எப்போ போகும்னு " ஒரு கேள்வி தான் கேட்டேன். மறுமுனையில் " ச்த்க்ஃப்க் ஜ்ஹ்த்க்க்ஃப்ஜ் ஹ்ஜ்க்ஃப்க் டூஹ்ஃப் க்ஹ் க்ஃப்ய்ஹ்ஃப்க் , வைடா ஃபோனை" , காதும் மனசும் குளிர்ந்து போச்சு.
அவரை இதுக்காக பாராட்டியே ஆகணும்ங்கிறதுக்காக , மறுநாள் காலையில் ஒரு கும்பலோடு கிளம்பினேன், அதாவது சிங்கம் தான் கூட்டமா போகும் , பண்ணி சிங்கிளா தான் போகும் . அட! கோவப்படாதீக! உண்மை தானே? நீங்க டிஸ்கவரி பாத்ததில்ல? சரி... மேட்டருக்கு வாரேன்.. நாங்க கூட்டமா போனதும் , அந்த ஈ.பி அதிகாரி , நேத்தைய ஃபோன் மேட்டருக்காக , நாங்க ஏதோ அவரை செமத்தியா உதைக்க போறோம்னு , எங்களோட பவரை "அண்ட எஸ்டிமேட்" பண்ணி ஒரு உண்மையை தொறந்து விட்டாரு!
அதாவது வருகிற பத்தாம் மாதம் இலங்கையில் நடக்கப்போற வேர்ல்ட் டி20 சம்பியன் ஷிப் கிரிக்கட் போட்டிகளுக்காக அரசாங்கம் , இப்பவே மின்சாரத்தை சேமிக்கிறதாம். எனக்கு அப்பிடியே புல்லரிச்சிரிச்சி.... அட! என்ன சிக்கனமான, திட்டமிடக்கூடிய அரசாங்கம் எனது அரசாங்கம்? இப்படியாகப்பட்ட அரசாங்கத்தின் கீழ் ஒரு குடிமகனாக வாழுவதற்கு குடுத்து வச்சிருக்கணும்.
அதிலும் பாருங்கோ.... கிரிக்கட் மேட்சுக்காக மின்சாரம் சேமிக்கும் போது தமிழர் பகுதி மின்சாரம் தான் , சேமிக்கிறதுக்கு சூப்பரா இருக்குமாம். அவங்க மின்சாரம் சேமிச்சு வச்சிருக்கிற சுவிஸ் பேங்க்லயும் அத தான் சொன்னாங்களாம். கண்டி , கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை , அனுராதபுரம் போன்ற எடங்களில் இருக்கிற மின்சாரங்களிக்கு வட்டி வீதம் கொறைவாக இருக்கிறதால , தமிழர் பகுதிகளில் மட்டும் மின்சாரத்தை மட்டுப்படுத்தி , சேமிக்க சொல்லி மேலிட உத்தரவாம். அதனால கொழும்பு மற்றும் தென் பகுதி முழுக்க 24 ஹவர்ஸ் மின்சாரம் இருக்குமாம். தமிழர் பகுதியான வட மாகாண மின்சாரத்தை தான் தடை பண்ணி சேமிக்க சொல்லி இருக்காங்களாம் மேலிடம்! எனக்கு ஒரே பெருமையா போச்சு, வட்டி வீதம் கூடினது எங்க பகுதி மின்சாரம் தான் அப்டீங்கிறது பெருமை இல்லையா? அதனால தானே எங்களோட மின்சாரத்தை தடை பண்ணி , கிரிக்கட்டுக்காக சேமிக்கிறாங்கோ!
இன்னொரு மேட்டர் என்னான்னா , நாளை மறுநாள் உயர் தர பரீட்சைகள் ஸ்ராட் ஆகுது, ஆனா பாருங்க , எங்களோட மின்சாரம் , இப்போ சுவிஸ் பாங்ல சேமிக்க படுறதால , புள்ளைங்க எல்லாம் படிக்க முடியாம திண்டாடுறதா சில பெத்தவங்க எங்கிட்ட சொன்னாங்க! அதில காமடி என்னான்னா , படிக்கணுமின்னா நீங்க வட்டி வீதம் கொறைவா உள்ல தென்பகுதில பொறந்திருக்கணும், நல்ல விலைக்கு கரண்டு விக்கிற எடத்தில பொறந்திட்டு படிக்கணுமின்னா எப்புடி? இன்னிக்கு கிரிக்கட்டுக்கு சேமிப்பு, நாளைக்கு கார் ரேசுக்கு சேமிப்பு , அடுத்த நாள் கலைவிழாவுக்கு சேமிப்புன்னு , நம்ம மின்சாரத்த தான் கொழும்பில பயன்படுத்த போறாய்ங்க, அத நெனச்சு நாம பெருமை படணுமே ஒழிய கவலை பட கூடாது! தென் பகுதில உள்ளவன் படிச்சிட்டு போறான், நமக்கு படிப்பு ஒரு கேடா என்ன?
சரி.. இந்த கரண்டு சிக்கலால என்ன ஆவப்போது? நாளைக்கு வடக்கு மாகணத்திலேர்ந்து பல்கலை கழகம் போகும் மாணவர் தொகை குறையும், கொறஞ்சிட்டு போகட்டுமே , அந்த இடத்துக்கு யாராவது தென்பகுதி மாணவன் போய்ட்டு போவான் தானே, அதனால என்ன இப்போ? ஏன் வடக்கு மாகாணத்தில மாடுங்க இல்லையா? உங்க புள்ளைங்க மேச்சா மாடு ஒண்ணும் கோவிக்காது போயி மேய்க்க சொல்லுங்க!
அப்புறம் வடக்கில் கல்விமுறை சரிவு, கல்வி தரம் குறைந்தது அப்டீன்னு , ஆராட்சி பண்ணி, நம்ம வடக்கு மாகாணத்தில நாலஞ்சு சிங்கள ஸ்கூல் கட்டுவாய்ங்க , நெறைய சிங்கள் குடியேற்றம் வரும் . நமக்கு தானே நன்மை? நம்மோட எடத்தையெல்லாம் அவய்ங்களுக்கு குடுத்திட்டு , அவய்ங்க எப்புடி வாழுறாய்ங்கன்னு தூர நின்னு வேடிக்க பாக்கிறது எவளவு சுகம்? இந்த பின்நவீனத்துவங்கள் உங்களில் யாருக்காச்சும் புரியுதா மரமண்டைகளா? நம்மோட அரசாங்கம் நமக்கு வச்சிருகிற இந்த மாதிரி நல்ல திட்டங்கள பத்தி யாருக்காச்சும் தோணுதா பாரு! எதுக்கெடுத்தாலும் நொட்ட சொல்லுறது! வந்திட்டானுக .. எக்ஸாம் நேரத்தில பவரு கட்டு ஆகுதுன்னு கம்பிளையிண்டு குடுக்க! போயி டி.வி கனக்க்ஷன் எடுங்கடா! அப்பாலிக்கா கிரிக்கட்டு பாக்க உதவும்!
அப்புறம் இன்னோன்னு , மக்களே பவரு கட்டு ஆனா பரவாயில்ல, லாம்பு வெளிச்சத்தில படிச்சுக்கிறோம்னு வழமை போலவே படிச்சு , உயர் தர பரீட்சையில் இலங்கையிலேயே மொதலாவது ரெண்டாவது அப்டீன்னு ஒவ்வொரு வருஷம் வாறது போல எவனாச்சும் வந்தீங்க, அப்புறம் என்னய மனுசனா பாக்க மாட்டீங்கடா! சொல்லிட்டேன்!!! மருவாதையா போயி மாடு மேய்க்கிற வழிய பாருங்க!
ஆங்! கடைசியா...... இலங்கை அரசாங்கமானது தனியார் பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஆரம்பித்து , இலங்கையின் தரமான கல்விமுறையை கெடுக்கவே இந்த , இசட் ஸ்கோர் பிரச்சினையில் இழுத்தடிப்பு, பல்கலை கழக ஸ்ரைக் பிரச்சினையில் பாராமுகம் என்று அசட்டையாக இருக்கிறது என்று கம்பிளைண்டு பண்ணுறவன் எல்லாம் கேட்டுக்கோ!!! உனக்கு அவசரமா இருந்தா கம்பஸ் தொடங்க முன்னமே கல்யாணம் பண்ணிக்கோ! மறுபடி கம்பஸ் தொடங்கும் போது , முதலாம் ஆண்டு படிக்கிற உன்னோட புள்ளையோட நீ வந்தா , நாங்க ஒண்ணும் உன்னய கம்பஸ் வராதேன்னு சொல்ல மாட்டோம்!
புரிஞ்சவன் பொழச்சுக்கோ!!!
இந்த நாயின்களுக்கு எப்போ அறிவு வர போகுதோ
ReplyDeleteயாரு நாயி ? நான் தானே?
Deleteநான் அவங்களே சொன்னேன் மச்சி
Deleteஹி ஹி செம!
ReplyDeleteஅண்ணா !! இங்கதான் ஒலாத்திக்கிட்டு இருக்கீங்களா?
Deleteஐயா மின்சாரத்தை பத்தி மட்டும் பேசக்கூடாது அது ஒரு அபூர்வமான ஒன்னு எல்லாருக்கும் கிடைக்காது.
ReplyDeleteஅது என்னமோ உண்மை தானுங்க! அதிலும் இலங்கை வட பகுதிக்கு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்!
Deleteஆமா இப்போ மட்டும் எப்படி இருக்குதாம் நம்ம நாட்டு கல்வி முறை நாம படிச்சி பட்டம் எடுக்குரதுக்குல நமக்கு பிறகு படிச்சவன்லாம் டிகிரி முடிச்சிட்டு போயிடுறான் பிரைவேட் யுனிவர்சிட்டில.
ReplyDeleteஅத பத்தி படிக்கிறவன் தான் கவலை படணும் , நீ எதுக்கு சும்மா டென்ஷன் ஆகுற?
Deleteயோ நான் எவ்வளவு seriousa கமென்ட் பண்ணி இருக்கன் நீ என்னடானா என்ன டென்ஷன் ஆக்கிட்டு இருக்கா?
Deleteவிட்றா.. விட்றா... நமக்குள்ள இதெல்லாம் சகஜம் தானே!
Deleteஆகஸ்டு வந்து நாலு நாள் ஆவல.. அதுக்குள்ள மூணாவது பதிவா?? கலக்கறீங்க பாஸ்!
ReplyDeleteகாலத்தின் கட்டளை வேறு என்ன பண்ணுறது பாஸ்!
Deleteசமூகத்து மேல இவ்வளவு அக்கறையோடும், விழிப்புணர்வோடும் இருக்கியே பாஸு..
ReplyDeleteபேசாம நீயி சகுனி மாதிரி அரசியல்ல இறங்கிரு.. இல்லாட்டி 'தம்பி' மாதவன் மாதிரி தப்ப அங்கங்கயே வைச்சு தட்டிக் கேளு.. அதுவும் இல்லாட்டி புதுசா அந்நியன்.காம் ஒண்ணை தொறந்துரு தலைவா!!
ஒரு பிரபல பதிவரா , எனக்கும் சமூகத்தின் மேல் அக்கறை இருக்குன்னு காட்டிக்கிட்டு இருக்கேன் மச்சி!
Deleteசகுனி மாதிரி ஆகினா மரண மொக்கைன்னு சொல்லிடுவீங்க, தம்பி மாதிரி ஆகினா எவனாச்சும் கம்பிய காச்சி பின்னாடி சொருகிடுவான், அந்நியன் டாட்.காம் ஆரம்பிச்சா , நம்மாளுகளே காட்டி குடுத்திருவாய்ங்க, அதனால வாயையும் அதையும் பொத்திக்கொண்டு சும்மா இருத்தல் நலம். ( நல்லா கோத்து விடுறாங்கடா)
//இந்த பின்நவீனத்துவங்கள் உங்களில் யாருக்காச்சும் புரியுதா மரமண்டைகளா?//
ReplyDeleteவாவ்.. என்னாஒருமூளை.. ஆனா உன் பயா டேட்டால இப்படி அடிச்சு வுட்ருக்கியே கிசோக்கு..
//எனக்கு பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம், நடுநவீனத்துவம் எதுவுமே தெரியாது என்பதால்//
அதாவது மச்சி, எனக்கும் அது புரியல, உங்களில் யாருக்காவது புரியுதா? புருஞ்சா சொல்லுங்கோன்னு ஒரு கேள்வி! அவளவே!
DeleteThis comment has been removed by the author.
Deleteஇப்படி பொங்கிறியே கிஷோக்கு ... கம்பஸ் மூடியிருக்கிற டைம்ல அரசியல்ல ஏதாச்சு குதிக்கலாம்னு ப்ளானோ???
ReplyDeleteபவர்-கட்டிலும் பதிவு போட்டு சேவை செய்யும் எங்கள் வருங்கால ஜனாதிபதி கிசோகர் வாழ்க!!!
அரசியல்! இதபத்தி நான் யோசிக்கவே இல்லையே? ஹும்.... இப்போ இருக்கிறவய்ங்க மட்டும் உருப்படியாவா இருக்காய்ங்க? சோ.. நாம்மளும் போய் ஒரு ரவுண்டு வரலாம் தான், ஆனா எவன் ஓட்டு போடுவான்?
Delete///எங்கள் வருங்கால ஜனாதிபதி கிசோகர் வாழ்க!!!////
ஆ! இப்பிடியே சொல்லியே , எவனாச்சும் ராவோட ராவா போட்டுத்தள்ள ஐடியா குடுத்துரணும்! நீங்கெல்லாம் நல்லா வருவீங்க!