வாசக கோடிகளுக்கு (????) பிரபல பதிவரின் இனிய வணக்கங்கள்! கொஞ்ச காலமாக எனக்கு கிடைத்துவந்த நாலைந்து ஹிட்ஸ்களும் கிடைக்காமல் போவதற்கான பதிவுகளை நான் எழுதும் காலம் வந்தாச்சு. அதாங்க உலகின் உன்னத விளையாட்டாக கருதப்படும் உதைபந்தாட்டத்தின் பிராந்திய உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ஹிட்ஸ் கிடைக்காது என தெரிந்தும் , உதைபந்தாட்ட பதிவுகளை நான் எழுதுவதன் காரணம் உதைபந்தின் மேல் நான் கொண்ட தீரா காதல். அப்பிடித்தான் வெளியில் சொல்லுவேன், அதுவாக இருந்தாலும் , தமிழில் நல்ல உதைபந்தாட்ட பதிவுகளை நான் இதுவரையில் கண்டது கிடையாது. அதற்காக எனது பதிவுகள் தமிழில் வெளியாகும் மிகச்சிறந்த உதைபந்தாட்ட பதிவுகள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனாலும் எதுவுமே இல்லாத இடத்தில் எனது பதிவாவது இருந்துவிட்டு போகட்டுமே என்பது தான். நான் உதைபந்தாட்ட பதிவுகளை எழுத தீர்மானித்தது பற்றி அறிய இங்கே சொடுக்கவும்!
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்! நான் மொக்கையாக எழுதிய எத்தனையோ பதிவுகளை உலக மகா ஹிட்டுக்கள் ஆக்கி இருக்கிறீர்கள். இங்கே எனது தளத்தில் வலது மூலைய்ல் "பிரபலமானவை" பட்டியலில் இருக்கின்ற பத்து பதிவுகளையும் எழுதுவதற்கு நான் இரண்டு அல்லது மூன்று மணிநேரங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது கிடையாது. ஆனாலும் உங்களது அமோக ஆதரவினால் அவை பிரபலமாகியிருக்கின்றன. ஆனால் ஒரு உதை பந்து பதிவை எழுதுவதற்கு நான் இரண்டு அல்லது மூன்று நாட்களை எடுத்துக்கொள்கிறேன். சமயத்தில் எழுதப்படும் பதிவினை பொறுத்து அது ஒரு வாரமாகவும் ஆகிவிடும். குறிப்புக்களை எடுப்பதற்கே எனக்கு நாக்கு தள்ளிவிடும். அத்தனை சிரமப்பட்டும் நான் உதைபந்து பதிவுகளை எழுத காரணம் நான் அலைந்தது போல் யாரும் அலைய வேண்டாமே என்பதற்காகத்தான். எனது மொக்கை பதிவுகளை நீங்கள் சிபாரிசு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எனது உதைபந்து பதிவுகளை ஆர்வமுள உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அது எனகு உற்சாகமாகவும், எனது குறை நிறைகளை அலச கூடிய வாய்ப்பாகவும் இருக்கும்.
சரி விடயத்துக்கு வருவோம், நான் கடந்த 2011-2012 பருவகாலத்துடனேயே தான் உதைபந்தாட்ட பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். நான் எதிர்வுகூறியவற்றில் சொதப்பலோ சொதப்பல் ஏராளம் என்று எனக்கே தெரிந்த போதிலும், எனது அலசல்கள் மற்றும் விமர்சனங்கள் நன்றாக இருப்பதாக எனது உற்ற நண்பர்களான ஜே.ஸட், டாக்டர் டூலிட்டில் , குமரன் ஆகியோரும் , இலங்கையின் பிரபல பதிவர் மைந்தன் அண்ணாவும் தந்த உற்சாகத்தையும் , ஊக்கத்தையும் நன்றியோடு நினைத்து பார்க்கிறேன். அந்த ஊக்கம் இந்த பருவகாலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கையில் இந்த பருவ காலத்தையும் இனிதே ஆரம்பிக்கிறேன். ஆனானப்பட்ட ஜோய் மொறிசன் கணிக்கிறதே அப்பப்போ சொதப்பிடுது, இதில நான் எம்மாத்திரம்? # எஸ்கேபிஸம்
இந்த பருவகாலத்துக்கான "வீரர்கள் விற்பனை சந்தை" அனைத்தும் கிட்டத்தட்ட மூடிவிட்ட நிலையில், ( ரஸ்ய சந்தை இன்னமும் விழிப்பு நிலையில் இருக்கிறது) ஒவ்வொரு நாட்டுகளினதும் பிராந்திய அணிகள் தத்தம் தேவைக்கு ஏற்பவும், தேவை இருந்தும் கையில் டப்பு இல்லாத அணிகள் தமது பொருளாதார நிலைக்கு ஏற்பவும் வீரர்களை வாங்கி குவித்திருக்கிறார்கள். இந்த விற்பனை சந்தை கிட்டத்தட்ட நமது ஐ.பி.எல் போல தான். ஒவ்வொரு வருடத்துக்கும் அணிகள் வீரர்களை வாங்குவதும், ஏலத்தில் எடுப்பதும் ஐ.பி.எல் பார்க்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும், அதனை ஒத்த செயற்பாடு தான் இங்கும் . ஆனால் இங்கு புரளும் பணத்திற்கு கிட்டக் கூட ஐ.பி.எல் வந்துவிட முடியாது. சில நேரங்களில் ஒரு வீரருக்காக ஒரு அணியின் முகாமைத்துவம் செலுத்தும் தொகையானது, ஒரு ஐ.பி.எல் அணியை வாங்குவதற்கு போதுமானதாக இருக்கும்.
அடுத்த வருடத்தின் கோடைகாலம் வரை தொடரப்போகும் உதைபந்தாட்ட அரங்க ஆதிக்கங்களில் இந்த வீரகளே அந்தந்த அணிகளின் பிரதான காய் நகர்த்தல்களாக அல்லது முக்கிய புள்ளிகளாக இருக்கப்போகிறார்கள். அந்த நம்பிக்கையிலேயே அவர்கள் வாங்கப்பட்டிருக்கிறார்கள்.
பெரும் விலை கொடுத்த ரெய்னா போன ஐ.பி.எல் இல் சொதப்பியதும், மேற்கிந்திய கிரிக்கட் நிர்வாகம் "போடா கிழட்டுப்பயெலே என்று ஒதுக்கிய கெய்லை நம்பிக்கையில் வாங்கில மல்லையா காட்டில் அடைமழை பெய்ததும் ஐ.பி.எல் வரலாறு. அது போலவே இங்கும் பெரும் எதிர்பார்ப்பில் வாங்கப்படும் வீரர்கள் சொதப்புவதும், சுண்டக்கா என கணிக்கப்பட்டவன் சூறாவளி ஆவதும் இயல்பு.. சரி அதுபற்றி காலப்போக்கில் அலசலாம். இப்போது இந்த வீரர்கள் விற்பனை சந்தை பற்றி பார்க்கலாம்.
உண்மையை சொல்லப்போனால் இந்த வீரர்கள் சந்தை நிலவரம் குறித்து எழுதுவது எனக்கு துளியும் இஷ்டம் கிடையாது. காரணம் இங்கே உள்ளதை உள்ளவாறே ஒப்பித்து எழுதவேண்டி இருக்கும். அதில் எந்தவிதமான "இரியேட்டிவிட்டியும் " கிடையாது. சரியோ பிழையோ... அது நடக்குமோ நடக்காதோ.. உதைபந்தை எனது பாணியில் விமர்சனம் பண்ணவே எனக்கு பிடிக்கும். ஆனாலும் அடுத்தடுத்து நான் எழுதவிருக்கும் பதிவுகளை விளங்கிக் கொள்வதற்காகவும், இலைமறைகாயாக இந்தியா மற்றும் இலங்கையில் மறைந்திருக்கும் அடிமட்ட உதைபந்தாட்ட ரசிகனுக்கும் இந்த வீரர்களின் விற்பனை தொடர்பான செய்தியை கொண்டு சேர்ப்பதற்காகவுமே இந்த பட்டியலை தயார் செய்தேன். நம்முள்ளும் உதைபந்தை ரசிக்கின்ற, அது போல் தனக்கு பிடித்தமான வீரரின் கழக மாற்றத்தை அறிந்து ஒள்ளவேண்டுமென்ற அவாவுடைய ரசிகன் இருந்தால் அவன் ஒருவனாவது பயன் பெற்று போகட்டுமே.
உதைபந்தாட்ட வீரர்கள் விற்பனை சந்தையை பொறுத்த வரையில் விற்பனை இடம்பெறும் காலப்பகுதியில் பின்வரும் முக்கியமான செயற்பாடுகள் நடக்கும்.
1. வீரர்களை வாங்குதல்
2.வீரர்களை விற்றல்
3. வீரர்களை கடன் அடிப்படையில் வேறு அணிகளுக்கு விளையாட அனுமதித்தல் (Loan Out)
4.கடன் அடிப்படையில் வீரர்களை அணிக்குள் உள்வாங்குதல் (Loan In)
5. ஒப்பந்த காலம் நிறைவடைந்ததும், மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பாத வீரரை இலவச சந்தைக்கு அனுமதித்தல் ( தானாகவே அவர் இலவச சந்தைக்குள் நுழைவார்) Free Agents / Free Transfers
6. பருவகால முடிவில் ஓய்வு பெறும் வீரர்கள்.
இந்த செய்யற்பாட்டின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பரிமாற்றம் குறிப்பிட்ட அந்த காலப்பகுதிக்குள் இடம்பெறும். அவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக இங்கு தரமுடியாது . விற்பனை பெறுமதியிலோ அல்லது வீரரின் செயல்திறன் அடிப்படையிலோ முக்கியமானது என நான் கருதுகின்ற ( சற்று பிரபலமான வீரர்களின் தகவல்கள்) வீரர்களின் பரிமாற்றத்தை மட்டும் இங்கே தருகின்றேன்.
* ஒன்றிரண்டு வீரர்கள் என்றால் பரவாயில்லை, இங்கே பெருந்தொகையான அதேவேளை உச்சரிப்பில் மாறுபாடுகளை ஏற்படுத்திவிட கூடிய வீரர்களின் பெயர்கள் மற்றும் கழக பெயர்கள் இருப்பதால் விபரங்களை ஆங்கிலத்திலே தருகின்ட்றேன். உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
* m = மில்லியன் யூரோக்கள்.
* வீரர்களின் விலைகள் தொடர்பில் தளத்துக்கு தளம் வேறுபாடு காணப்படுகிறது. ( சில இடங்களில் அண்ணளவான விலையே தரப்பட்டுளது.)
இங்கிலாந்தின் சந்தை
Player Name | From | To | Fee | |
1 | Werder Bremen | Chelsea | 32 m | |
2 | Lens | “ | 25 m | |
3 | Chelsea | Shanghai Shenhua | Free | |
4 | “ | Lille | Free | |
5 | “ | Fenerbahce | 8 m | |
6 | Borussia Dortmond | Manchester United | ||
7 | Vitesse | “ | 24 m | |
8 | Queens Park Rangers | “ | ||
9 | Koln | Arsenal | 11 m | |
10 | Montpellier | “ | 13 m | |
11 | Malaga | “ | 16.5 m | |
12 | Arsenal | Barcelona | 15 m | |
13 | Benfica | Manchester city | 17 m | |
14 | Everton | “ | 12 m | |
15 | Manchester City | Tottenham Hotspur | 5 m | |
16 | Swansea City | Liverpool | 15 m | |
17 | Roma | “ | 10 m | |
18 | Liverpool | Fenerbahce | ||
19 | Olympique Lyonnais | Tottenham Hotspur | 8 m | |
20 | Fullham | “ | 15 m | |
21 | Tottenham Hotspur | Real Madrid | 33 m | |
22 | “ | Hamburg SV | 10.3 m | |
23 | “ | Sunderland | Free | |
24 | Inter | ManchesterCity | 5 m |
அடுத்து ஸ்பெயினின் லா லீகா பக்கம் போகலாம்.
Player | From | To | Fee | |
1 | Valencia | Barcelona | 14 m | |
2 | Villarreal | Dynamo Kyiv | 10 m | |
3 | “ | Al Rayan sports Club | 8 m | |
4 | Atletico de Madrid | Benfica | 10 m | |
5 | Malaga | Rubin Kazan | 10 m | |
6 | Alex Song | Arsenal | Barcelona | 15 m |
7 | Luca Modric | Tottenham Hotspur | Real Madrid | 33 m |
8 | Atletico de Madrid | Bayern Munich | 40 m | |
9 | Olympique Lyon | Valencia | 7 m | |
10 | Real Madrid | Anzhi Makhachkala | 5 m | |
11 | Valencia | Swansea City | 7 m | |
12 | Real Madrid | Queens Park Rangers | 8 m |
Player | From | To | Fee | |
1 | Napoli | Paris Saint – German | 30 m | |
2 | Milan | “ | 42 m | |
3 | Milan | “ | 23 m | |
4 | Pescara | “ | 12 m | |
5 | Ajex | “ | 6 m | |
6 | Fc Twente | Borussia Monchengladbach | 15 m | |
7 | Borussia Dortmond | Borussia Monchengladbach | 17 m | |
8 | Real Madrid | Bayern Leverkusen | ||
9 | Bayern Munich | VFL Wolfsburg | ||
10 | Rafel van der vaart | Tottenham Hotspur | Hamburg SV | |
11 | Werder Bremen | Bayern Munich | ||
12 | Porto | FC Zenit Saint Petersburg | 40 m | |
13 | SL Benfica | FC Zenit Saint Petersburg | 40 |
மேற்படி வீரர்களின் பரிமாற்றங்கள் எதோவொரு வகையில் உதைபந்தாட்ட உலகில் பிரபலமாக இருக்கிறது. இவை தவிர்ந்த முக்கியமான ஏதேனும் வீரரது பரிமாற்ரத்தை நான் குறிப்பிட மறந்திருப்பின் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டவும்.
நான் மேற்குறிப்பிட்டிருந்த வீரர்கள் பரிவர்த்தனை அனைத்துமே முக்கியமானவை என நான் கருதியவை தான். அவற்றிலும் குறிப்பிட்ட சில வீரர்களின் பரிவர்த்தனைகள் இந்த பருவகாலத்துக்கான உதைபந்தாட்ட அரங்கில் சில மாற்றங்களை கொண்டுவரலாம் என நினைக்கின்றேன். அதாவது குறித்த ஒரு வீரரை வாங்கியதால் ஒரு அணியின் அதிகரிக்கப்பட்ட பலமாக இருக்கட்டும், அல்லது குறிப்பட்ட ஒரு வீரரை இழந்தமையால் குறைக்கப்பட்ட பலமாக இருக்கட்டும் ஏதோ ஒரு வகையில் அதி முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களின் பரிவர்த்தனைகள் என நான் நினைக்கும் சில பரிவர்த்தனைகளை கீழே தருகின்றேன்.
1. Edan Hazard
2.Van Persie
3.Alex Song
4.Luka Modric
5.Oscar
6.Maicon
7.Jordi Alba
8.Javi Martinez
9.Thiago Silva
10.Zlatan Ibrahimovic
இந்த பத்து வீரர்களினதும் பரிவர்த்தனைகள் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணத்தை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
எவனும் கமென்ட் கூட பண்ணவில்லை என்று பார்க்கும் போது தான் கவலையா இருக்கு..சினிமா+மொக்கை என்று அலைபவர்கள் இப்படியான நல்ல பதிவுகளை திரும்பி கூட பார்ப்பதில்லை.
ReplyDeleteபல புது விஷயங்கள் சகோ..உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு நிச்சயம் இப்பதிவுகள் விருந்து தான்.
நான் ஃபேஸ்புக்கில் புலம்பியதற்காக ஆறுதல் சொல்ல வந்தீர்களாக்கும். ஆனாலும் உங்கள் பின்னூட்டம் எனக்கு புது தெம்பை தருகின்றது. என்ன நடந்தாலும் நான் நேசிக்கும் , விரும்பி எழுதும் உதைபந்து பதிவுகளை நிறுத்தப்போவதில்லை. "போற்றுவோர் போற்றட்டும் , தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்" இது ஒரு பிரபல பதிவரின் மகுட வாசகம். இப்போதைக்கு என்னுடையதும் அது தான்!
Deleteமச்சி முக்கியமான ஒரு வீரர்ட பேர போட மறந்திட்டியேடா.என்னதான் நீ football ல ஆர்வமா இருந்தாலும் அந்த வீரர நீ எப்பிடி மறந்த.மறந்திட்டியா இல்லை அந்த ஹீரோவ புடிக்காதா உனக்கு.
ReplyDeleteயாரு நீதானா அது? உன்னய எவன்டா வாங்குவான்?
Deleteஎன்னடா இப்பிடி சொல்லிட்ட தம்பி ஆள பார்த்து திறமைய எடைபோட கூடாது அண்ணன் football ல கிங்கு மாமா கிங்கு.
Deleteஏது நீ கிங் கொங்கோட மாமாவா?
Deleteஅது சரி இது எப்படா தொடங்குது.இந்த மேட்ச் ஆவது பார்க்க கிடைக்குதா எண்டு பார்போம்.
ReplyDeleteமேட்ச் போனவாரம் தொடங்கிரிச்சு... வீரர்கள் பரிவர்த்தனை சந்தை தான் இப்போ மூடப்பட்டிருக்கு. அது தான் சந்த மூடும் வரை பொறுத்திருந்து இந்த பதிவை போட்டேன். அடுத்த பதிவுகளில் அணிகள் பற்றிய அலசல்களை பார்க்கலாம்.
Delete# ஆமா உனக்கு நெஜமாலுமே ஃபுட்பால் தெரியுமா இல்லாங்காட்டி தெரிஞ்சாப்ல நடிக்கிறியா? ;)
இல்லடா school ல O/L படிக்கும் போதுதான் கடைசியா விளையாடினது.அதுக்கப்புறம் இன்னும் கிரௌன்ட்ல கூட இறங்கினது இல்ல. அங்க இருக்கும் போது முக்கியமான மேட்ச் எல்லாம் பார்க்கிறதுதான்.இங்க வந்த பிறகு ஒன்னும் இல்லை.
Deleteஓ! அப்புடியா? முடிஞ்சா இங்கிலீஷ் பிரீமியர் அப்புறம் லா லீகா மேட்சுகள் பாரு செம்மையா இருக்கும். ESPN. Star sports, Ten Sports, Ten action இல் போடுவானுக!
Deleteஆமாண்டா இந்த முறை கட்டாயம் பாக்கணும்.. உன்னோட இந்த பதிவ பார்த்ததும் இப்போ திரும்ப பாக்கனும்னு ஆசை வந்திடுச்சு.
Deleteரொம்ப நல்லாவே பொய் சொல்லுறடா மச்சி!
Deleteஇதுக்கு முதல்ல நான் போட்ட கமென்ட் எங்க???
ReplyDeleteஇதுலயுமா சூனியம் வைக்கிறானுங்க.
மன்னிச்சு நண்பா அந்த கொமன்டு ஸ்பாமுக்கு போயிரிச்சு.
Delete# ஆமா இவரு பெரிய ஐநா சபை அதிபரு, இவருக்கு சூனியம் எல்லாம் வைக்கிறாய்ங்க.. நீயா உனக்கு வச்சிக்கிட்டத்த் தான் உண்டு!
இல்லை இல்லை நீதான் அந்த கமெண்டுக்கு ஏதோ சூனியம் வச்சிருக்க.
Deleteஆமா சூனியம் வைக்கிறது என்னோட பார்ட் டைம் வேல பாரு!
Delete# ஆமா நீயி இப்பெல்லாம் பிளாக் எழுதுறது இல்லையா?
எங்கடா நேரம் வேலை முடிஞ்சி வந்தா எவனாவது வந்து கடலைய போடுறானுங்க.ஐயாம் வெரி பிஸி.நோ டைம்.
Deleteஏது உனக்கு கடலைய போடுறானுகளா? ஏது சரியான உழுத்துப்போன கடலையா இருக்கும் !
Deleteசத்தியமா புட்பால்ல இன்ட்ரெஸ்ட்டே இல்ல.. இருந்தாலும் கிஷோகர் எதையுமே சுவாரசியமா எழுதுவாறேன்னு ஒரு நப்பாசைல வந்தேன்.. அடுத்தடுத்த பாகங்களையும் எழுதுங்க, வாசிக்கிறேன்... அப்புறம் நீங்க போடுற பதிவுகள் என்னோட ப்ளாகர் ஹோம் பேஜ்ல ரீடிங் லிஸ்ட்ல வர மாட்டேங்குதே, கொஞ்சம் என்னான்னு பாருங்க( அதுக்கு நீங்க என் பிளாக்க பாலோவ் பண்ணனும்னு மொக்க பதில் சொல்ல கூடாது, நானு பாலோவ் பண்ணி, என் பிளாக்ல லிங்க் கூட குடுத்துருக்கேன், அதுல கூட வர மாட்டேங்குது!! என்னான்னு பாருங்க
ReplyDeleteஎல்லாம் ஓ.கே
ReplyDeleteகாஜல் ஃபோட்டோ மிஸ்ஸிங்!
எலேய் இங்கயுமா? காஜல எவனாச்சும் ட்ரான்ஸ்பர் பண்ணும் போது போட்டுக்கலாம்!
Delete