உதைபந்து

Sunday, October 7, 2012

சத்தியமாய் நான் தேசத்துரோகி !!! - முல்லைத்தீவு இன்னமும் ஏதோ சொல்கிறது!




வரும்  வழியெல்லாம் பேராசிரியர் ஃபெர்னாண்டோவின் தொணதொணப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது.


 பேராசிரியர் ஃபெர்ணாண்டோ எங்களது பல்கலைக்கழக ஆர்க்கிடெக்ட் பீடத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இலங்கையின் அதி சிறந்த திட்டமிடலாளர். கொழும்பின் பிரபலாமான ஹவ்லொக் நகரத்தின் திட்டமிடலும் , வடிவமைப்பும் இவருடையதே! ஓய்வு பெற்றாலும் தன்விருப்பின் பேரில் இப்போதும் தொடர்ந்து எங்களது பீடத்தில் பணியாற்றி வருபவர். வயதானாலும் அந்த துறுதுறுப்பும் குறும்பும் இன்னமும் குறைவில்லாதவர், தமிழர்கள் மீது எப்போதும் ஒரு தனி மரியாதை வைத்திருப்பார். இந்த காரணங்களுக்காகவே அவரை எல்லோருக்கும் பிடிக்கும்.


ஆனால் சமீபத்தில் நாங்கள் முல்லைத்தீவு அபிவிருத்தி திட்டத்தின் இறுதி கட்ட வேலைகளுக்காக முல்லைத்தீவு போய் , இதோ இப்போது வந்து கொண்டிருக்கும் வரையிலும் பேராசிரியருடனான உறவு எங்களில் , குறிப்பாக ஆண்கள் யாருடனும் சுமூகமாக இல்லை.


இந்த தலைமுறை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொறுமை கிடையாது, எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. "அந்த காலத்தில் நாங்கள் கம்பஸ் படிக்கின்ற போது ஏது நடந்தாலும், அது பிரச்சினைக்குரியதாக இருந்தாலும் எப்போதும் அதை இலகுவாக எடுத்துக்கொள்வோம், எதையும் சீரியசாக பார்ப்பது கிடையாது" இப்படியே பேரூந்து நிறையுமளவுக்கு பேசிக்கொண்டே வந்தார்.


அப்படியெதுவும் தப்பாய் நடந்து விடவில்லை, நடந்தது என்னான்னா முல்லைத்தீவில் எங்களுடைய இறுதி பிரஷன்டேஷன் முடிவில் கடல் குளிக்க ஏற்பாடாகியிருந்தது. நாங்களும் திட்டமிட்டபடி அழகர் ஆற்றில் இறங்குவது போல ஆண்களும் பெண்ளுமாய் கடலில்  இறங்கி குளித்துக்கொண்டிருந்தோம்.



ஆண்கள் நாங்கள் எல்லோரும் கடற்கரை மணலில் ரக்பி ஆடிக்கொண்டிருக்க எங்கள் பெண்கள் அணி சற்று தள்ளி சில வொலி போல் விளையாடுவதும் சிலர் கடல் கடல் குளிப்பதுமாக இருந்தார்கள். சற்றைக்கெல்லாம் கடல் குளித்துக்கொண்டிருந்த எங்கள் பெண்கள் குழாமிலிருந்து "வீல்" என்ற சத்தம் வரவே சம்பவ இடத்துக்கு பார்வையை திருப்பினோம். சற்றி தள்ளி சில இளைஞர்கள் ( அவர்கள் உடையிலும் , பேச்சிலும் வெளிநாடு வாழ் எம்மவர்கள் என்று தெரிந்தது) பந்தொன்றை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் விளையாடிய பந்து எங்கள் பெண்கள் கூட்டத்தின் நடுவில் வந்து விழுந்ததற்கு தான் இந்த ஓலம்! நாங்கள் சிரித்து விட்டு மீண்டும் பந்தை கொண்டு ஓடுபவனின் காலை குறிவைத்து வீழ்த்தி கடலில் தள்ளுவதிலேயே குறியாய் இருந்தோம்.


சற்றைக்கெல்லாம் மறுபடியும் அந்த "வீல்" ஓசை வரவே, இப்போது கொஞ்சம் கிட்டப்போய் என்ன என்பது போல ஒரு பார்வை மட்டும் வீசிவிட்டு மறுபடி ரக்பி பந்தை எடுக்க குனிந்த போது தான் அந்த சுத்த தமிழில் வந்து கொட்டிய‌ கெட்ட வார்த்தைகள் என் காதில் விழுந்தது. அந்த வார்த்தைகள் எங்கள் பெண்களின் அங்கத்தை பற்றியதும், அவர்கள் நடத்தை பற்றியும் இனிமேல் என்று இல்லாமல் கேவலமாக சிலாகிப்பதாய் இருந்தது.


தமிழை படியுங்கள் என்று தலையால் அடித்தும் கேளாமல் சிங்களமே கதி என்று கிடக்கும் எங்களது அந்த பெண்கள் கூட்டம் , அதிச்டவசமாக அந்த வார்த்தைகளின் பொருள் அறியாமல் அடித்த பந்து இன்னா அவுட்டா என்று ஆளுக்காள் வாதம் செய்வதிலேயே குறியாய் இருக்க , அந்த இளைஞரணி இன்னமும் சில கெட்ட வார்த்தை பேசியபடி கொஞ்சம் நெருங்கி வந்து இருந்தார்கள்.


இதை கவனித்தோ என்னமோ எங்களுடைய பேராசிரியர் அவர்களிடம் சென்று அழகான ஆங்கிலத்தில் கொஞ்சம் தள்ளி நின்று ஆட முடியுமா? என்று கேட்டது தான் தாமதம் முகத்தை சிரித்த மேனிக்கே வைத்துக்கொண்டு அவரையும் அவரது மனைவியையும் இன்னமும் சில இலக்கிய நயம் தோய்ந்த கெட்ட வார்த்தையில் திட்டினார்கள். எங்களில் யாருக்கும் தமிழ் தெரியாது என்பது அவர்கள் கணக்காய் இருக்க வேண்டும்.


பேராசிரியரை திட்டியதும் எனக்கு பொத்துக்கொண்டு வந்தது கோபம், நேராக அவர்களிடம் போனேன்......

 'டேய்.. த்ஹுஎ உங்களுக்கு மூளை ட்ரெஉஎஒக்ஷ்  இல்லையா? இது என்ன உங்க அப்பன் ர்ர்யுஎர்ய்வ்வ்ட் வீட்டு இடமா? அந்தாளுட வயசுக்கு மரியாத வேணாம்?

எனக்கும் தமிழில் கெட்டவார்த்தை பேச நன்றாகவே தெரியும் என்று அவர்களுக்கு காட்டியாயிற்று!

நான் தமிழில் பேசியது அவர்களுக்கு அதிரிச்சியை தந்திருக்க வேண்டும். உடனே ஒருவன் எனக்கு தேசத்துரோகி பட்டம் தந்து தூசணத்தில் பேசினான். எனக்கு இப்போது யாரெல்லாம் தேசத்துரோகிகள் என்று சுத்தமாய் மறந்து போய்விட்டபடியால் அவன் சொன்னது எனக்கு உறைக்கவே இல்லை. 



எதையெல்லாம் இவர்கள் நமக்கும், நமது அக்கா தங்கச்சிக்கும் செய்தபோது அவர்களை காடையன் என்றோமோ அதை தானே இப்போது நீங்களும் செய்தீர்கள். அதை கேட்டால் நான் தேசத்தூரோகி! சரி இருந்துவிட்டு போகிறேன்! 

"ஓம்டா ஹ்க்ட்த் ! நான் துரோகி தான்.... இன்னொருக்கா இந்த பந்து இஞ்சால வந்தாலோ, இல்லாட்டி உன்ட வாயில இன்னொரு வார்த்தை வந்தாலோ உனக்கு செவில் உடையும்"

கொஞ்சம் காட்டமாகவே சொல்லிவிட்டேன். நான் சொல்லி முடித்தது தான் தாமதம், நான் சொன்னதை அந்த கும்பலில் ஒருவன் எனக்கே செய்து காட்டினான். என்ன நடந்தது என்று யூகிப்பதற்குள் என் காது "கொய்ய்ய்ய்ய்" என்று இரைய ஆரம்பித்தது. என் கையில் ரக்பி கோடு கீறுவத்ற்காக வைத்திருந்த தென்னை மட்டை இருந்தது. வெறி கொண்டவன் போல் என் முன்னே நின்றவனின் முகத்தில் ஓங்கி ஒன்று விட்டேன், அதற்குள் அவன் கூட நின்றவர்கள் ஓடிவர ஒவ்வொருவரையும் நோக்கி விசுக்கி அடிக்க ஆரம்பித்தேன். முப்பது செக்கனுக்குள்ளும் குறைவான நேரத்தில் இவளவும் நடந்து முடிய, எனது நண்பர்கள் , விரிவுரையாளர்கள் என எல்லோரையும் "ஓய்" என்று ஓலமிட்ட எங்களது பெண்கள் கூட்டிவிட்டார்கள்.


தள்ளு முள்ளு, சமரசம் , சமாதானம் எல்லாம் முடிவடைந்து போக "உனக்கு இருக்குடா" என்னிடம் அடிபட்டவன் மூக்கில் வழியும் ரத்தத்தை துடைத்த படியே கறுவிக்கொண்டு கரையேறினான்.


ஏன்? எதற்கு? என்ன நடந்தது? விரிவுரையாளர்களினதும் எங்களுக்கு பாதுக்காப்புக்கு அனுப்பப்பட்டிருந்த ராணுவ புலனாய்வு பிரிவினர்களினதும் கேள்விக்கு "இல்ல சேர் நான் தான் கொஞ்சம் பிழையா கதச்சிட்டன் " என்று சொல்லி சமாளித்தேன்.

"கதை வாக்கில் ஏதோ எல்.ரி.ரி எண்டு கதை வந்துதே"

காரியத்தில் கண்ணாயிருக்கும் ஒரு புலனாய்வு அதிகாரி கேட்டான். எனக்கு தூக்கிவாரி போட்டது.


"இல்ல சேர் , நான் ஏதும் கூட கதைச்சால் என்னை எல்.ரி.ரி எண்டு சொல்லி உங்களிட்ட புடிச்சு குடுப்போம் என்று சொன்னார்கள்" அப்பாடா சமாளித்தேன். 


அவர்கள் சொன்னதை அப்படியே சொல்லி அவர்களது இன்றைய இரவை பயங்கரமான இரவாக மாற்ற எனக்கு என்னமோ மனமிருக்கவில்லை. தூரத்தில் சிந்தக்க ( இளம் புலனாய்வு அதிகாரி) என்னை பார்த்து மர்மமாய் சிரித்தான் ..... அய்யோ அவனுக்கு என்னைவிட தமிழ் நன்றாகவே தெரியும் என்பதை மறந்தே போனேன்! அடி வயிற்றில் என்னமோ செய்தாலும் கடல் நீரில் முகத்தை நனைத்தி பதட்டத்தை கழுவினேன்.


சுற்றும் முற்றும் பார்த்தேன், அந்த இளைஞர் குழு யாரும் அங்கு இருக்கவில்லை, அது போக புலனாய்வு பிரிவினரின் வாகனங்களும் அங்கேயே அப்படியே நின்று கொண்டிருந்தன. எதுவும் புறப்பட்டு போயிருக்கவில்லை என்பதில் கொஞ்சம் திருப்தி!




இது தான் நடந்தது..... அன்றைக்கு முல்லைத்தீவு கடற்கரையில் தொடங்கியது இதோ இப்போது முன்னூற்றைம்பது மைல கடந்து கொழும்பு நாரஹேன் பிட்டி சந்தி வரை பேராசிரியரின் தொணதொணப்பு தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. திட்டு வாங்கிகொண்டேயிருக்கிறேன்... நடந்ததை சொல்லி எங்கள் மீது அவர் வைத்திருக்கும் மரியாதையை கெடுத்துக்கொள்ள விருப்பமில்லை!!


"கிஷோகர்... போற வாற இடத்தில் எல்லாம் இந்த மாதிரி நடந்து கொண்டால் உனக்கு மட்டுமில்ல, நம்மோட கம்பஸுக்கும் தான் கெட்ட பேர்"


தலையை குனிந்தபடி நரேஹன்பிட்டி சந்தியில் வீடு போவதற்காக இறங்கிக்கொன்டிருந்த தோழி ஈஷியை பார்த்துக்கொண்ட்டே மௌனமாயிருந்தேன்.  பைகளை எல்லாம் அப்பாவின் காரில் ஏற்றிவிட்டு போய்ட்டு வாரேன் என்று அவள் கையசைக்கவும் அந்த பயங்கரம் நடக்கவும் சரியாய் இருந்தது.


18 comments:

  1. /எதையெல்லாம் இவர்கள் நமக்கும், நமது அக்கா தங்கச்சிக்கும் செய்தபோது அவர்களை காடையன் என்றோமோ அதை தானே இப்போது நீங்களும் செய்தீர்கள்.//

    மச்சி சூப்பரா சொல்லி இருக்க மச்சி.. எனக்குள்ளும் அதிகமாய் இப்படி வரும்.. நம்மடவங்களுக்கு பாதிப்பு பற்றி கவலை இல்லை.. வேறவர்கள் நம்மை அடிக்க கூடாது.. ஆனால் நம்மை நாமே அடித்து கொள்வோம் என்ற மனநிலை.. ஆனால் வலி தான் தேவையற்றது என்பதை உணரும் வரை இது தொடரும் பாருங்க..

    அடுத்து வாசிக்கும் போது கோவம் வந்தது சரியான இரட்டை வெற்றி தான்.. ஒன்று உங்களுக்கு வந்தது (சம்பவத்தில் சரியான முடிவு).. அடுத்தது வாசிக்கையில் கோவம் (உங்க எழுத்து) எனக்கும் வந்தது..

    ReplyDelete
    Replies
    1. தல! இப்புடி எல்லாம் சொல்லாத.. அப்புறம் தேச துரோகிகள் பட்டியலில் நீயும் சேந்திருவ...

      Delete
  2. பல்கலை பெண்டிர் மானம் காக்க அவதரித்த கிஷோகர் நீவிர் வாழ்க..
    உங்க குளம் சாரி குலம் வாழ்க

    ReplyDelete
    Replies
    1. இப்புடியே சொல்லி உசுப்பேத்தி விட்டு, இன்னும் நாலு சாத்து வாங்க வச்சிருங்கப்பா... உங்களுக்கு புண்ணியமா போகும்!

      Delete
  3. வாழ்க கிசோகர்! அடியெல்லாம் வாங்கிட்ட.. கட்சியை எப்ப தொடங்குறது??

    நீ வழக்கமா இப்படி பாதிப் பதிவுல தொடரும் போடுறது இல்லையே.. அடுத்த பதிவு சீக்கிரம் வரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. என்னா நைனா ! எப்புடிக்கீற? ரொம்ப நாள் ஆச்சும்மா ..... கட்சி தானே நீ எப்போ நிதி கொண்டாந்து குடுக்கிறியோ அப்பவே ஆரம்பிச்சிரலாம்... நீயே ஜனாதிபதியா இருந்துட்டு போ...

      இல்ல தல.... இன்னும் கொஞ்சம் சம்பவம் பாக்கி இருக்கு.. ஆனா பதிவு நீண்டு போயிரும், அது போக அது கொஞ்சம் காமடியா வேற இருக்கும், அதான் இந்த பதிவ கொலாப்ஸ் பண்ண வேணாமேன்னு.......

      Delete
  4. நானும் வந்திட்டு போறன் சார்! கடைசி பயங்கரம் தான் புரியல்ல?!

    ReplyDelete
    Replies
    1. அது பார்ட் டூ ஜீ..... இனிமே தான் வரும்.. வந்ததுக்கு ரொம்ப நன்றி...

      Delete
  5. வழமை போலவே..!!

    ReplyDelete
    Replies
    1. மொக்கைங்கிறீங்களா? ரைட்டு விடுங்க....

      Delete
  6. எல்லாம் சரி,,, இது அனுபவ கதையா? இல்ல புனைவு கதையா? நல்லாருக்கே...

    ReplyDelete
    Replies
    1. சத்தியமா சுத்தமான புனைவுகதை கிடையாது ஜீ....

      Delete
  7. பொண்ணுகளுக்கு எங்கெல்லாம் அநியாயம் நடக்குதோ, அங்க எல்லாம் வாத்தியார் மாதிரி நம்ம கிஷோகரு போயிருவ்வாப்புல... அப்புறம் எனக்கு தெரிஞ்சு ஒரு பயபுள்ள, ஒரு பிளாக் வச்சிகிட்டு எப்ப பாரு நயன்தாரா உதட்ட கடிச்சத யாரு, குசுபு இடுப்ப கிள்ளுனது யாரு, ஆண்ட்ரியா, அக்குள் ன்னு ரவுசு பண்ணிக்கிட்டு திரியுது.. அதையும் கொஞ்சம் கண்டிச்சு வைக்கனும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைய சொல்லப்போனா நான் அங்க போகல அங்கயேதான் நின்னேன்! ( ரெண்டும் ஒண்ணுதானடா)

      நீங்க சொன்ன அந்த எச்சக்கல நாய புடிச்சு நானும் கேட்டேன், அதுக்கு சும்மா ஒரு ஜாலிக்கு பண்ணினேண்ணேன்னு சொல்லி எஸ்கேப் ஆயிடுச்சு..

      Delete
  8. சிறப்பான பதிவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. புரட்சி தளபதி கி.ஷோ.ஆர் வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. என்னடா ஏதோ ஜே.ஆர். மாதிரி சொல்லுற?

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...