ரொம்ப நாளச்சுங்க நாம சந்திச்சு...........!!! கம்பஸ் என்று சொன்னால் எவளவு வேலை வரும் எண்டு அனுபவசாலிகளுக்கு நல்லாவே தெரியும் (அங்க நீ எந்த ஆணிய புடுங்கிற எண்டு தமிழ் கூறும் நல்லுலகம் கேள்வி கேக்க வேணாம் ). கொஞ்சம் நேரம் கிடச்சுது, அதனால உங்க தாலிய மறுபடியும் அறுக்கலாம் எண்ட முடிவோட எழுதுறன். எப்ப பாரு மொக்க பதிவாவே எழுதி தள்ள வேணாம், கொஞ்சம் பிரயோசனமா ஏதாவது எழுதலாமே எண்டு நிரூபன் அண்ணா போன்றோரது கோரிக்கைகள் + அறிவுரைகள் தொடர்கின்றது. அந்த ஒரு யோசனையும் மனதில் இருகின்றது என்பதை நிரூபன் அண்ணா போன்ற நல்ல உள்ளங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
அதற்கு முன்பு என்னை இந்த வலைப் பதிவராக தூண்டியதில் பங்களிப்பு செய்த முக்கியமான மூன்று பேரை எனது பார்வையில் "இந்த குளத்தில் பாறாங்கல் போட்டவர்கள் " என்ற தலைப்பின் கீழ் எழுதி வருகின்றேன். அந்த வகையில் இன்று எனது வலையில் சிக்கியிருப்பவர் பதிவுலக மூத்த பதிவர் சி.பி.செந்தில்குமார். (அண்ணே ...... !! உங்களுக்கு கல்யாணம் ஆச்சில்ல, அதுதான் மூத்த பதிவர் பட்டம்)
நான் கொழும்பிற்கு வருவதற்கு முன்னர் , இவ்வாறான வலைப்பூ இருப்பது தொடர்பில் நிரூபன் அண்ணா சொல்லி கேட்டிருக்கிறேனே ஒழிய , அப்போதைய காலகட்டத்தில் என்னிடம் இணைய வசதி இல்லாத படியால் அதை பரீட்சித்து பார்க்கவுமில்லை, அது போக எந்த வகையில் எழுத வேண்டுமென்ற ஒரு அடிப்படை அறிவும் இருந்திருக்கவில்லை. (யார் சார் அது "இப்ப மட்டும் உனக்கு வந்திருச்சாக்கும் ?" எண்டு கலாய்கிறது?)
நான் பல்கலைகழகம் வந்த புதிதில் எங்களுக்கு கணணி ஆய்வு கூடத்தில் ஒரு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு கணணி கற்கை ஒன்று நடைபெறுவது வழமை. அந்த நேரத்தில் விரிவுரையாளர் பாடம் நடத்திக்கொண்டிருக்க , எனது விரல்கள் கூகிளை தடவிக்கொண்டிருக்கும். ( காணாததை கண்டது தானே... அது தாங்க "காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி") . அந்த நேரத்தில் தான் அண்ணன் என்னிடம் சிக்கினார். அண்ணனை எனக்கு அறிமுகம் செய்த சுவாமி . நித்தியானந்தாவுக்கு நன்றிகள். (ஜயோ...!! யாரும் தப்பா நினைக்க வேண்டாம். மேற்கொண்டு படிங்க) நித்தியானந்தா + ரஞ்சிதா காணொளி வெளியாகி ஊடகங்களில் சக்கை போடு போட்டு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டு எல்லாம் எகிறி பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த சமயம்.
ஏறக்குறைய ஒரு அறுபது ஷோ பார்த்து, காட்சிகள் அனைத்தும் மனப்பாடமான நிலையில் , ஊடகங்களின் இதுபற்றிய நிலை அறிய கூகிளை தடவ ஆரம்பித்தேன். அனைத்து இணையதளங்களிலும் சமூக அக்கறையின் குரல் ஓங்கி ஒலித்துகொண்டிருந்தது. அனைத்து இணையதளங்களையும் மேய்ந்து முடித்த பிறகு, ஏதோ ஒன்று குறைவதாக பட்டது. யாராவது இதை வைத்து காமடி பண்ணியிருக்க மாட்டார்களா ? ஜாலியாக பார்க்கலாமே என்ற ஆவல் மேலொங்க மீண்டும் இணைய தளங்களை முற்றுகையிட இருந்த என்னை நிரூபன் அண்ணாவின் குரல் நிறுத்தியது. " சம்பவம் ஒன்றை செய்தியாக தருவது தான் இணையதளங்கள், ஆனால் இந்த காலகட்டத்தில் நல்ல விமர்சகர்களாக இருப்பது வலைப்பூ எழுத்தாளர்கள் தான்". உடனே ஓடினேன் ..... ஓடினேன்.... இண்ட்லியின் எல்லை வரை ஓடினேன். அங்கே தான் சிறுத்தை சிக்கியது.
"நித்யானந்தா , ரஞ்சிதா 18+ " என்ற தலைப்பை பார்த்ததுமே பேருவகை அடைந்தேன்+ அகமகிழ்ந்தேன்+ ஆனந்தபூச்சொரிந்தேன் + பிறவிப்பயன் அடைந்தேன் (தூ.....................!!!) அண்ணனின் ஒவ்வொரு வரிவரியாய் ரசித்து சிரித்தேன், அதன் பிறகு நித்தியானந்தா + ரஞ்சிதா தொடர்பில் அண்ணன் ஒரு தொகை பதிவு போட்டிருந்தார். அத்தனையும் ஒன்று விடாமல் ஓவர் டைம் செய்து வாசித்தேன். இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட அண்ணனின் அனைத்து பதிவுகளையும் வாசித்து முடித்திருந்தேன். எவ்வாறான ஜோக்குகளை நான் ரசித்து சிரிப்பேனோ, எந்த வசன நடை என்னை கவருமோ அத்தனை பத்து பொருத்தமும் அமைந்திருந்தது அண்ணனின் பதிவில்.
விமர்சனங்களில் நகைச்சுவையோடு வந்து விழுகின்ற சரியான பார்வை, மறக்காமல் படத்தோடு ஹீரோயினுக்கும் சேர்த்து மார்க்கு போடுகின்ற நல்ல மனப்பாங்கு (????) அது கில்மா படமாக இருந்தாலும் எங்கே பார்த்தேன் , எப்போது பார்த்தேன் , யாரோடு பார்த்தேன் என்று அண்ணன் வெள்ளந்தியாக சொல்லிவிட்டு மனைவியிடம் அடிவாங்க போவதை நினைக்கையில் எனக்குள் எழுந்த அனுதாப அலை என்று அண்னன் மீது எனக்கிருந்த அபிமானத்தை அதிகரித்தது.
அதன் பின்பு எனது இணைய உலாக்களின் போது தவிர்க்க முடியாத ஒரு தளமாக "அட்ராசக்க' மாறிப்போனது. எனக்கு எனது கைத்தொலைபேசியில் ஒவ்வொரு நாளும் 20 எம்.பி பக்கெஜ்களை தரவிறக்கி இணயத்தளங்களை பார்ப்பது எனது வழமை. தமிழ் வின் இணையத்திற்கு அடுத்தபடியாக எனது கைதொலைபேசியிலும் நான் உடனே பார்க்கும் தளமாக மாறிப்போனது "அட்ராசக்க". பேஸ்புக் கூட அதற்கு அடுத்தபடியாகத்தான் நான் பார்கிறேன் என்பது நானே இன்னும் நம்பாத ஆச்சரியம்.
எந்த வகையில் சி.பி என்னை கவர்ந்தார் யோசித்து பார்க்கின்றேன்...............
1. எனக்கு தேவைப்படுவது , ஒரு படம் படம் பார்ப்பதற்கு முன்னர் அது பற்றிய ஒரு கண்ணொட்டம் . தியேட்டரில் கொடுக்கப்போகும் 250 ரூபவிற்கு படம் பொருத்தமானதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு தான் படம் பார்க்க போவேன். (விதிவிலக்கு இயக்குனர் பாலாவின் படங்கள் மற்றும் யுவன் இசையில் வந்த படங்கள்) . ஆக ஒரு படம் வெளியான ஒரு வாரத்தின் பின்புதான் இங்குள்ள பத்திரிக்கைகளோ, இணையதளங்களோ விமர்சனத்தை வெளியிடுகின்றன. ஆக சூடாக விமர்சனம் தருபவர்கள் வலைப்பதிவர்கள் மட்டுமே....!!!! அதிலும் நம்ம அண்ணன் முதல் நாள் , முதல் ஷோ பார்த்துவிட்டு அடுத்த அரை மணி நேரத்தில் விமர்சனம் ரிலீஸ் பண்ணிவிடுகிறார். எனவே ஒரு படத்திற்கு 250 ரூபவை அழுவதற்கு முன்னம் அட்ராசக்க முன் அமர்வது வாடிக்கையாகி போனது. அதிலும் டாக்டர் படம் என்றால் சி.பி அண்னனின் ரேட்டிங் இல்லாமல் நகர்வது கிடையாது. குமுதம் , ஆனந்தவிகடன் ரேட்டிங் கணக்கில் இல்லை.
2.விமர்சனமாகட்டும், சாதாரண கட்டுரைகளாகட்டும் , நகைச்சுவையாகட்டும் சுற்றி வளைக்காமல் , வார்த்தகளை போட்டு அடுக்கி கொல்லாமல் (என்னைப் போல) சாமன்ய மொழிநடையில் , நகைச்சுவையாக கூறவந்த விடையத்தை கூறிவிடும் லாவண்யம். அதிலும் திரைப்பட வசனங்களுக்கு மட்டுமில்லாமல் தனது வசங்களுக்கும் அண்ணன் கவுண்டர் பாணியில் கவுண்டர் அடிப்பது சந்தானத்துக்கும் வராத கலை. (பன்னிகுட்டி ராமசாமியை அண்ணன் கொப்பி அடிக்கிறாரா இல்லை அண்ணனை ராமசாமி கவ்வுகிறாரா என்பதை யாராவது கண்டுபிடிச்சு ஒரு சூடான பதிவு போடுங்கப்பா #கோத்துவிடுறது)
3. நாட்டில் , உலகில் எந்த சீரியசான சம்பவம் நடந்தாலும் அதுபற்றி ஒரு பதிவை சீரியசாக போட்டுவிட்டு , அதன் பிறகு அதை காமடியாக்கி ஒரு பத்து பதிவு போட்டு வயிறுகளை புண்ணாக்குவது.
4.அண்ணனின் வசன நடை
5. எந்த சமகால நிகழ்வு தொடர்பாகவும் அண்ணனிடம் குறைந்தது ஒரு பதிவாவது இருக்கும்.
6.அண்ணன் பதிவில் போடுகின்ற புகைப்படங்கள் கொள்ளை அழகு. நடிகைகள் படம் மட்டுமில்லீங்க.... எல்லாம் தான்
7.சக பதிவர்களோடு நட்பு பாராட்டும் தன்மை
இப்போ எந்த வகையில் அண்ணன் என்னை பதிவெழுதுவதில் தாக்கம் செய்தார் என்று பார்ப்போமா????? (இவரு யுரேனியம் , சி.பி தைத்தேனியம் ரெண்டும் தாக்கமடைஞ்சு அணுகுண்டு பண்ணபோறாய்ங்க என்ற பன்னிக்குட்டி ராமசாமியின் குரல் எனக்கு கேட்கிறது)
லோஷன் அண்ணனை பார்த்து எப்படி எனது பன்முக அறிவை வளர்க்க வேண்டுமென்று கொஞ்சமாவது அதை வளர்த்து வைத்திருந்தேன். (நம்புங்க சார்....). நிரூபன் அண்ணாவின் வலைப்பூ பற்றிய அறிமுகம் என்னை தூண்டியிருந்தாலும் , எழுதுவதற்கான ஒரு அடிப்படை சிக்காததால் ஆரம்பித்திருக்கவில்லை. சி.பி அண்ணனின் பதிவுகளை வாசிக்க வாசிக்க அந்த பதிவுகளின் தாக்கம் என்னில் அதிகரித்தது. இந்த நிலையில் தான் "அட்ராசக்க" தளத்தின் மூலம் "பன்னிக்குட்டி ராமசாமியும்", 'சேட்டைகாரனும்", " மனோவும்" அறிமுகமாகி என்னை கவர்ந்தார்கள். இந்த வலைபதிவு கர்த்தாக்களின் (எனக்கு தெரிந்து, எனது ரேட்டிங்கில்) பதிவுகள் என்னையும் பதிவு போட தூண்டின. அதில் சி.பி அண்ணனின் அட்ராசக்க தளத்தின் ஆதிக்கம் அதிகம்.
ஆக அந்த தாக்கத்தின் விளைவு நானும் இப்போ ஒரு வலப்பதிவர் ஆகிவிட்டேன். தனது எழுத்துக்களால் என்னையும் பதிவாளனாக தூண்டியவர் சி. பி அண்ணன் அவர்கள்.
எனக்கு எனது நண்பர்களாலும் , தெரிந்தவர்களாலும் அறிமுகம் செய்யப்பட்ட வலைத்தளங்கள் பல. அவை வெறுமனே ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுபனவாகவும், புள்ளி விபர கோப்புகளாகவுமே இருந்தன ஒழிய , ஒரு ஜனரஞ்சக செறிவு நிறைந்தவையாக இருந்திருக்கவில்லை. அதனேலேயே அந்த தளங்களுக்கு எனது தேவை இருந்தால் ஒழிய , அந்த பக்கம் போவது கிடையாது. நாம் இருகின்ற சமூகம் எப்படிப்பட்டது என்றால் விருதுகள் வென்ற "காஞ்சிபுரம்" படத்தை விட சந்தானத்தையும், ஹன்சிஹாவின் தொப்புளையும் நம்பி வந்த "வேலாயுதத்தை" கொண்டாடும் சமுகத்தில் இருகின்றோம். ஆக ஜனரஞ்சகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போனது. அந்த ஜனரஞ்சக எழுத்து தான் சி.பி அண்ணனின் வெற்றிக்கு காரணம் என்பேன். அது தான் என்னையும் கவர்ந்தது.
அதற்காக புள்ளிவிபர+ ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் பதிவாளர்கள் எல்லாம் ஜனரஞ்சக எழுத்துக்களுக்கு சொந்தக்கரார்கள் இல்லை என்பதில்லை. அந்த மேட்டருக்கு பிறகு வருகின்றேன்.
அண்ணனிடம் சில கேள்விகள் சில ஆலோசனைகள்...........
வழமையா இந்த பகுது அண்ணனின் திரை விமர்சனத்தில் தான் வரும். ஒரு மாறுதலுக்கு நான் பண்ணிக்கிறேன்.
1. அண்ணே! எந்த படம் ரிலீஸ் ஆனாலும் (கில்மா படம் உட்பட) முதல் நால் முதல் ஷோ பாத்திட்டு விமர்சனம் போடுறீங்களே, உங்க ஆபீஸ்ல மேற்பார்வையாளர் , மனேஜர் எண்டு யேரும் இல்லையா? ஆபீசுக்கு ஒழுங்கா போறதுண்டா?
2. எந்த கில்மா படம் பாஎத்தாலும் எங்க ? எப்போ? யார் கூட? எண்ட புள்ளி விபரமெல்லாம் சொல்ரீங்களே, வீட்ல உங்க சம்சாரம் எதுவுமே சொல்றதில்லையா? ஒழுங்கா சாப்பாடு கிடைக்குதா?
3. ஒரு படம் தவற விடாம விம்ர்சனம் போடுறீங்களே, எல்லா படத்துக்கும் கோட்டா முறையில டிக்கட் கிடைக்குதா?
4. எனக்கு வாரம் ரெண்டு பதிவு போடுறதுக்கே டங்கு வாரு அந்து போகுது, இதில உங்களுக்கு நாளுக்கு ரெண்டு எப்பிடி சாத்தியம் ஆகுது?
5.படம் பார்க்க போகும் போது லப்-டொப் கூடவே எடுத்து போவீங்களா? ஒரு சீன் , ஒரு வசனம் தவறவிடுறதில்லையே எப்பிடி? (உண்மைய சொல்லுங்க , திருட்டு வி.சி.டி தானெ???)
இப்போ அண்ணனுக்கு சில ஆலோசனைகள்..............
எலேய்..... முழுசா பத்து பதிவு போடாத நீ , 1000 பதிவுக்கு மேல போட்ட எனக்கு அட்வைஸ் பண்ண வருதியோ எண்டு பெரியவா நீங்க கொவப்பட பிடாது.......... ஏதோ உங்க வாசகனா , ரசிகனா எனக்கு தோணுறத சொல்றன். பிடிச்சா ஏத்துக்கங்க, இல்லைன்னா ஃபிரண்ஸ்சாவே இருப்பம், என்ன நான் சொல்றது?
அண்ணே! உங்களுக்கு என்று ஒரு தனியான வாசகர் வட்டம் இருக்கு, நாளுக்கு ரெண்டாயிரம் ஹிட்ஸ் வருவது சாதாரணமில்ல. அந்த வாசகர் வட்டத்தில் என்னைப் போன்ற ஒரு சில வாசகர்களது எதிர் பார்ப்பு உங்களது வழக்கமான பாணியில் இருந்து வித்தியாசமான பதிவுகளை சில நேரத்தில் எதிர் பார்க்கும்.
அதாவது உங்களிடம் ஜனரஞ்சகமான முறையில் எழுதி வாசகரை கவரும் திறன் இருக்கின்றது. அவ்வாறான நீங்கள் சில விசேட தேவைகளின் போது உங்களது பாணியில் ஆய்வு கட்டுரைகளோ, புள்ளி விபர பதிவுகளோ இட்டால் ந்ன்றாக இருக்குமே? விசேட தேவை என்று நான் குறிப்பிட்டது , உதாரணமாக ஏழாம் அறிவு படம் வந்து போதி தர்மன் சர்ச்சை கிளம்பிய நேரத்தில் , அத்தனை பதிவர்களும் முருகதசையும், போதி தர்மனையும் கிழித்து தொங்க போட்டுகொண்டிருந்த நேரத்தில் அதற்கான உங்களது பங்களிப்பு ஏன் சொற்பமாகிப்போனது?
அனேக வலைத்தளங்கள் வெறுமனே தகவல்களை திரட்டி அடித்துக்கொண்டிருந்த படியால் அதை லயித்து வாசிக்க முடியவில்லை. இங்கு ஆய்வுக்கட்டுரை எழுத ஆரம்பிக்கும் சிலருக்கு , அதை வாசகனுக்கு ஏற்றால் போல் , எழுதும் திறன் வாய்ப்பதில்லை. (சுஜாதா எந்த விஞ்ஞான விளக்கமாக இருந்தாலும் சுவாரசியமாக சொல்லும் திறன் கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது)
அது போக வாரம் சராசரியாக நீங்கள் போடும் 15 பதிவுகளில் அனேகமனவை ஜோக்குகளாக இருக்கின்றன, ஒரே தளத்தில் ஒரே மாதிரியான பதிவுகளை பார்க்கும் போது ஒரு வித சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாதுள்ளது. சில வேளைகளில் சில ஜோக்கு பதிவுகளில் , நாளுக்கு ரெண்டு பதிவை போட்டு விட வேண்டும் என்ற முனைப்பு தெரியுமே ஒழிய, சிரிப்பை அந்த பதிவுகள் வரவழைப்பதில்லை.
என்னதான் வலைப்பதிவில் சி.பி அண்ணன் உயர்ந்து நின்றாலும் பத்து பதிவு தேத்தாத எனது தளத்திற்கு வந்து எனது பதிவொன்றில் பின்னூட்டம் இட்ட நாள் என்னால் மறக்க முடியாதது. இதே இன்ப அதிர்ச்சியை கொடுத்த இன்னொரு பதிவுலக கர்த்தா "பன்னிக்குட்டி ராமசாமி"
அட்ராசக்க இணைப்பு
பன்னிக்குட்டி ராமசாமி இணைப்பு
ங்ணா... வணக்கம்ணா........
ReplyDeleteநம்ம ஒரிஜினல் கடை இங்க இருக்குங்கோ..... http://shilppakumar.blogspot.com
ReplyDelete/// "இந்த குளத்தில் பாறாங்கல் போட்டவர்கள் " என்ற தலைப்பின் கீழ் எழுதி வருகின்றேன்.///
ReplyDeleteவிட்டா தலைல பாறாங்கல்லு போட்டவர்கள்னு எழுதி ஜெயிலுக்கு அனுப்பிடுவாரு போல?
////அந்த வகையில் இன்று எனது வலையில் சிக்கியிருப்பவர் பதிவுலக மூத்த பதிவர் சி.பி.செந்தில்குமார். ////
ReplyDeleteஆமா எல்லாருக்கும் மூத்தவரு......... வயசச் சொன்னேன்.....
///1. அண்ணே! எந்த படம் ரிலீஸ் ஆனாலும் (கில்மா படம் உட்பட) முதல் நால் முதல் ஷோ பாத்திட்டு விமர்சனம் போடுறீங்களே, உங்க ஆபீஸ்ல மேற்பார்வையாளர் , மனேஜர் எண்டு யேரும் இல்லையா? ஆபீசுக்கு ஒழுங்கா போறதுண்டா?////
ReplyDeleteமேனேஜருக்கு வாராவாரம் கில்மா டிவிடி கொடுத்துடுவாராம்.....
//அண்ணனை எனக்கு அறிமுகம் செய்த சுவாமி . நித்தியானந்தாவுக்கு நன்றிகள். ///
ReplyDeleteசபாஷ், சரியான காம்பினேஷன்........
///அத்தனை பதிவர்களும் முருகதசையும், போதி தர்மனையும் கிழித்து தொங்க போட்டுகொண்டிருந்த நேரத்தில் அதற்கான உங்களது பங்களிப்பு ஏன் சொற்பமாகிப்போனது? ////
ReplyDeleteஒரு நாளைக்கு மூணு பதிவு, வீக்கெண்டு பூரா படம், அதுக்கு மேலயும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம் கிடைச்சா கில்மா படம், அப்புறம் எங்க இதெல்லாம் பண்றது?
//இதே இன்ப அதிர்ச்சியை கொடுத்த இன்னொரு பதிவுலக கர்த்தா "பன்னிக்குட்டி ராமசாமி"//
ReplyDeleteஅடங்கொன்னியா..... யோவ் நான் என்ன கோர்ட்டா ஜட்ஜா?
//விட்டா தலைல பாறாங்கல்லு போட்டவர்கள்னு எழுதி ஜெயிலுக்கு அனுப்பிடுவாரு போல?//
ReplyDeleteண்ணா....... "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் " என்ற தலைப்பு ஏறகனவே வைரமுத்து சார் பதிவு பண்ணிட்டார். அது தானுங்ண்ணா..... இப்படி ஒரு வில்லங்கமான தலைப்பு.
@பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDelete//அடங்கொன்னியா..... யோவ் நான் என்ன கோர்ட்டா ஜட்ஜா?//
அதுகும் மேல ண்ணா....... டவாலி!!! சும்மா லொலலொலா....
@பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDelete//ஒரு நாளைக்கு மூணு பதிவு, வீக்கெண்டு பூரா படம், அதுக்கு மேலயும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம் கிடைச்சா கில்மா படம், அப்புறம் எங்க இதெல்லாம் பண்றது?//
இவ்ளோ பண்றவரு, அவரப் பத்தி எழுதின என்னோட கடைய ஒரு எட்டு பாக்கலியே ண்ணா......
@பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDelete//மேனேஜருக்கு வாராவாரம் கில்மா டிவிடி கொடுத்துடுவாராம்.....//
சார் ஸ்ரீ லங்காவுக்கு ஒரு பார்சல் கிடைக்குமா?
முதலில் உள்ள 3 பேனாக்களும் நல்ல இருக்கு...ஆயிரந்தான் ஆனாலும் இங்க் பேனா...இங்க் பேன்னாதான்
ReplyDeleteஆனாலும் நீங்க திண்டுக்கல் தனபாலன வென்ற ஆளுங்கணோய்....
Delete