நாதங்கள் பலவிதம்
என் காதோரம்
இரவெல்லாம் உன் நினைவில்!
தலையணையை கட்டி அணைத்தேன்...
புரண்டு படுத்தேன்.....
முடியவில்லை...
உன் நினைவில் தூக்கம் வரவில்லை......
உன் ஞாபக வண்டுகள்
என் தலைசுற்றி வரும் போதெல்லாம்
பொல்லாதோர் பயம் வந்து
போர்க்கொடி தூக்கும்....
சேதி சொல்லாமல் சிணுங்கும் சில்வண்டாய்
சில்லு சில்லாய் மூளை முனகும்.....
உன் காலை மாலை
தரிசனங்கள் பற்றி
வீதிகள் எங்கும் சேதிகள் பரவிக் கிடக்க
உன் ஞாபக நரைகளற்றிருக்க
நான் ஒன்றும் ஞானியல்லவே....
தூக்கம் நிரம்பி
பொங்கி பொங்கி வழிந்து...
இமைகள் இரண்டும் பாரம் நிறைந்து
தூங்கச் சொல்லி மூளை சொன்னாலும்
தூங்க விடாமல்
இழுத்துப் பிடிக்கிறது உன் ஞாபகம்
கடவுச் சொல் மறந்தவனை
உள் நுளையவிடா ஃபேஸ்புக் பக்கமாய்....
விடுமுறை நாள் விருந்துகள் முடிவில்
அரைத்தூக்க போதையில்
என்னை முதலிரவுக் காதலியாய்
ஆரத்தழுவும் தூக்கம்
இன்று ஏனோ
முழுதாய் மூன்று போத்தல்
உள்ளே போனபின்பும்
காலதாமதமான காதலனை
வெறித்து பார்க்கும் காதலியாய்
தூரத்தே நின்று முறைத்து பார்க்கிறதே.....
எந்த நினைவும் என்னை இவ்வாறு
இம்சை படுத்தியதில்லை
ஆனால் என்னவோ...
இரவெல்லாம் உன் எண்ணம்
நுளம்பே...
டிஸ்கி:- நுளம்புக்கு எதுக்குடா லவ் படமா போட்டன்னு கேக்கிறீங்களா? சும்மா ஒரு இதுக்கு தான். ஏன் ஒத்துக்க மாட்டீங்களா ? டாக்டர்.விஜய்க்கு எடிசன் பட்டம் குடுத்தப்போ மட்டும் ஏதோ சம்மந்தம் இருக்கிறாப்லயா நினைச்சீங்க? அது மாதிரி தான் இதுவும். எப்பூடீ?
Romba kuththeettenga poonga!!!!!!!
ReplyDelete