ராவா அடிக்கும் ரங்கீலாஸ்! |
பதிவு கொஞ்சம் நீளம் தான், ஆனால் நீங்கள் ஒரு தேசப்பற்றாளராகவோ , கலாசார அக்கறைஉள்ளவராகவோ, தமிழ் உணர்வாளராகவோ இருந்தால் இந்த பதிவை தொடர்ந்து படிக்க சிபாரிசு செய்கிறேன். இல்லை கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் ஜனரஞ்சகம் தேடுபவராக இருந்தால் இந்த வசனத்தோடு வேறு பிளாக் பார்க்கவும்.
இந்த பதிவு எழுதப்படுவதன் காரணம் இரண்டு வகையான பெண்கள்/பெண். ஒன்று இலங்கை பெண்கள், இன்னொன்று ஒரு இந்திய குஜராத்தி பெண்.
போன வாரம் இடம்பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் எனது முழங்கால் பெயர்ந்து போனதை தொடர்ந்து நடக்கவே கஷ்டப்பட்டு , நகர முடியாமல் மூன்று நாட்கள் அறையினுள்ளே முடங்கி கிடந்தேன். நேற்று நண்பகல் நண்பன் விக்டரிடமிருந்து அழைப்பொன்று வந்தது. விக்டர் !!!எனது பிரஞ்சு நண்பன். வயது இருபத்து நான்கு தான் ஆகிறது. ஆனால் ஒரு கலாநிதி, அது போக இன்னமும் மூன்று பட்டப்படிப்புகளுக்கு சொந்தக்காரன். இப்போது இலங்கையில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உதவி பிரான்ஸ் தூதுவராக இருக்கிறான், தோலைப்போலவே வெள்ளை மனதுக்கும் சொந்தக்காரன். எனது பெரும்பாலான வாரஇறுதி நாட்கள் அவனது வீட்டில் தான் செலவாகும். பிரான்ஸின் உயர்ஸ்தானிகர் பதவியில் இருக்கின்ற படியால் எப்போதும் தல காட்டில் பார்ட்டி மழை தான். தலையின் விருந்தினராக இந்த வாலும் சேர்ந்து கொண்டு நம்மால் நுழையவே முடியாத நட்சத்திர விடுதிகளுக்கு சென்று ஒரே அமர்க்களம் தான்.
நேற்று வந்த அழைப்பும் அந்த வகையறா தான், ஆனால் எனது காலின் கவலைக்கிடமான நிலையால் எனக்கு போவதற்கு சுத்தமாய் மனமில்லை. விக்டர் வற்புறுத்தியதால் சம்மதித்தேன். ஆனால் உண்மை காரணம் ஷோலற் வருவது தான். ஷோலற் ! விக்டரின் அலுவலகத்தில் பணிபுரியும் இன்னொரு பிரஞ்சு நண்பி, அழகி! அவளுக்கு முன்னாலேயே "நீ எங்களுள் யாரை கல்யாணம் பண்ணிக்கொள்வாய் ?" என்று நானும் விக்டரும் ஜாலியாக சண்டை போட்டுக்கொள்வதுண்டு. "அப்பா எனக்கு இந்த பிரஞ்சு சகவாசமே வேண்டாம்" என்று அவள் ஜாலியாக கூறும் போதெல்லாம் மனதுக்குள் "ஆயிரம் தாமரை மொட்டுக்களே " என்று ராஜா சிம்பொனி வாசிப்பார். சரி ! விடயம் அதுவல்ல.
குறிப்பிட்ட அந்த மியூசிக் பார்ட்டி நடந்த இடம் "கொழும்பு பூங்கா வீதி குதிரை லாயத்தில்" . ( பார்க் ஸ்ரீற் மியூல்) . பார்க் வீதி என்றாலே நுனி நாக்கில் ஆங்கிலம் குதப்பி துப்புவோரும், கைகளில் கோடி புரண்டாலும் கிழிந்த , பற்றாத ஆடைகள் அணிவோரும் பெருக்கெடுத்து ஓடும் இடம். அங்குள்ள உணவகங்கள் விடுதிகள் எல்லாம் சிங்கிள் இட்லிக்கு சில கோடிகள் கேட்பன. ( இட்லி என்றால் என்னவென்று கேட்பார்கள் அங்கே. ஜஸ்ட் ஒரு உதாரணம்). அங்கு போவதற்கு முன்னரே அங்கு நடக்கப்போவதையும், அங்கு வரப்போகும் ஆட்களை பற்றியும் எனக்கு கற்பனையில் பார்க்க முடிந்தது. ஆனால் அங்கு போனது எனது கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஆப்புக்கள் கத்திருந்தது. வாசலில் போனதுமே ஒருத்தி பல்லை இழித்துக்கொண்டு நின்று "எஸ்கியூஸ் மீ சேர்! ஜஸ்ட் 39999 ருபீஸ் ஒன்லி " என்றாள் உண்மையில் அந்தளவு தொகை இல்லை என்றாலும், கிட்டத்தட்ட அதே தொகை தான், அத்தோடு எனக்கு சிம்பு+சந்தானத்தின் ஞாபகம் வேறு வந்து தொலைத்தது. எனக்கு கணேஷ் மாமாவையும் தெரியாது , செயின் அறுக்க தைரியமும் கிடையாது. என்னடா செய்வது என்று முழித்த வேளையில் தான், அதுவரை யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஷோலற் வந்தாள். ஏதோ பிரஞ்சில் பேசினாள். அப்புறம் அந்த மங்கம்மா எங்கள் மூவரையும் உள்ளே விட்டாள்.
நேற்று நீங்க ரெண்டுபேரும் இல்லன்னா நான் இன்னும் மாவாட்டிகிட்டு இருபேன்! விக்டர் + ஷாலற் |
உள்ளே போன எனக்கு பேரிடி! கூட்டம் + கூட்டம் = கூட்டம். தலையை விரித்து விட்ட பெண்களின் தொகை தான் அதிகமாக இருந்தது. அவர்களில் அனேகமானோர் கொழும்பு -7ஐ சேர்ந்தவர்கள் என என்னால் கண்டுகொள்ள முடிந்தது. அது ரொம்ப சிம்பிள்! இலங்கையில் இப்படி உடை உடுத்தும் கூட்டம் அது தான், இவளவு தொகை கொடுத்து ஒன்றுமே இல்லாத இந்த நிகழ்ச்சிக்கு வர பணம் படைத்தவர்களும் அவர்கள் தான். அர்த்த் ராத்திரியில் வயதுப்பெண்களை இங்கே அனுப்பும் முற்போக்கு பெற்றோர்கள் வாழுவதும் அங்கே தான்.
முதலில் இந்திய வாசகர்களுக்காக இந்த கொழும்பு -7 பற்றிய ஒரு அறிமுகம் தராலாம் என்று நினைக்கிறேன். காலனி ஆட்சியின் போது இந்த கொழும்பு-7 ஒரு கறுவா தோட்டமாக இருந்தது. வெள்ளயர்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட பயிராக அது இருந்த படியால் இந்த இடம் முக்கிமான ஒரு இடமாக மாறத்தொடங்கியது. அதிக விலைக்கு கறுவா கொள்வனவு செய்யப்பட்டதால் , இந்த இடம் செல்வத்தில் புரண்டது. எனவே 1930களிலேயே தங்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிப்பிக்கக்கூடிய செல்வம் படைத்த சமூகம் ஒன்று இங்கே வளர்ந்தது. அந்த கல்வியின் காரணத்தால் அன்று இலங்கைக்கு படித்த ஒருசமுதாயத்தை தந்த கொழும்பு-7 இன்று மிகையான பணம், மற்ற சமுகங்கள் மீதான கண்ணோட்டத்தில் ஒரு மெத்தன போக்கு என்பவற்றால் இன்று கழிசடைகளையும் , கலாசார கொலைகாரர்களையும் தந்து கொண்டு இருக்கின்றது.
நுனிநாக்கு ஆங்கிலம், கலாசார கொலை, அவுத்துவிட்ட ஆடைகள், இரவு நேர பார்ட்டிகள், நட்சத்திர விடுதிகளில் ஆட்டம் ! பாட்டம் ! கர்ப்பம்! இலங்கையின் அரச கல்வி முறையோடு போட்டி போட முடியாமல் ( காரணம் இலங்கையில் தனியார் துறையை விட அரச கல்லுரிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களின் தரம் அதிகமானது. பணம் குடுத்து நுழைய முடியாது. அங்கு நுழைய வேண்டுமானால் உங்களுக்கு அறிவு இருக்க வேண்டும், அரசாங்க்ம் நிர்ணயிக்கும் புள்ளிகளுக்கு மேல் பெற வேண்டும்) பணத்தைக்கொட்டி சர்வதேச பள்ளிகளில் காலம் தள்ளும் கலாசாரம், படிப்பே வரவில்லை என்றாலும் ஃபாரின் போய் படிப்பென்ற பேரில் குப்பைகொட்டும் கௌரவம் என்பன இந்த சமுகத்துக்கு இந்த காலகட்டத்தில் கொடுக்கப்படும் வரைவிலக்கணம். இந்த வரைவிலக்கணம் கொழும்பு-7இல் இருக்கக்கூடிய விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரைத்தவிர அனைவருக்கும் பொருந்தும்.
இலங்கையின் கலாசாரம் , பண்பாடு போன்றவற்றுக்காக இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் , ஒரு வேளை தவறுதலாக ஹவாய், தாய்லாந்து, ஹொங்கொங் போன்ற நாடு ஏதாவதுக்கு வந்துவிட்டோமா என குழம்பிப்போகும் அளவுக்கு ஆடை அணிந்து அசத்தும் இந்த நவ நாகரிக கொழுந்துகள் வீட்டில் இருக்கும் பாட்டியை கவனிப்பது கூட கிடையாது ஆனால் இந்த இரவு நேர பார்ட்டிகளுக்கு தவராமல் வரவு வைப்பார்கள்.
இவர்கள் அணியும் ஆடைகள், நடந்துகொள்கின்ற விதம் என்பனவற்றைப் பார்த்தால் நமக்கே கூசும், இவர்கள் முன்னிலையி அமர்ந்து இலங்கையின் கலாசாரம் பற்றியோ பண்பாடு பற்றியோ விக்டருடனோ, ஷாலற்றுடனோ பேசுவதற்கு கூசுவேன். வெள்ளையர்களது கலாசரம் வேறு எம்முடைய கலாசாரம் பண்பாடு வேறு. இவர்கள் சேலையோ அல்லது சிங்கள பாரம்பரிய ஆடைகளுடனோ வரவேண்டும் எனக்கூட நான் சொல்லவில்லை. இப்படி உடலை பிளாட்டு போட்டு விற்கும் ஆடைகளுடன் வர அவசியம் என்ன? ஒரு ஆணாக அழகிய பெண்ணை ரசிப்பதைத் தாண்டி , சில பெண்களைப்பார்த்து நான் அருவருப்படைந்தேன்.
உடலில் சிலர் பச்சை குற்றியிருந்தார்கள் , ஆமாம் ! பெண்களே தான்! அது கூட இந்த நவநாகரிக உலகின் மாற்றம் என்று ஏற்றுக்கொள்ள நான் தயார். அதில் இரண்டு பெண்கள் குற்றியிருந்த பச்சை , என்னை பச்சை பச்சையாய் கெட்டவார்த்தை சொல்லத் தூண்டியது. ஒருத்தி நின்றிருந்தாள், பேரழகிதான், நம்ம லக்ஷ்மிராய் கலரில் இருந்தாள். அனேகமாக அவள் தான் அடுத்த பாலுமகேந்திரா பட ஹீரோயினாக இருப்பாள் என நினைக்கின்றேன். ஒரு ஷேர்ட் மட்டும் தான் அணிந்திருந்தாள். எனக்கு முதுகை காட்டியபடி நின்றிருந்தாள்.அவளது ஷேர்ட் இடுப்பிலிருந்து ஒரு அடிக்கும் குறைவான உயரத்திலேயே கிடந்தது. அவளது நோக்கம் அந்த பச்சையை பிறர் பார்க்க வேண்டும் என்பதாகத் தான் இருக்க வேண்டும். அவளது வலது பின்பக்க தொடையில் " Main Gate Is Booked " என்று எழுதியிருந்தது இடது பின்பக்க தொடையில் " Wanna Try Backyard ?" என்று எழுதி சாணி வரும் துவாரத்தை நோக்கி ஒரு அம்புக்குறி வரையப்பட்டிருந்தது. ஒரு கணம் அதிர்ந்து போனேன். நான் இருப்பது இலங்கையா இல்லை லாஸ் வேகாஸ்சா என்று குழம்பியே போனேன். பின்னர் நல்லவேளை "தமிழ் எம்.ஏ" ஜீவா இங்கு இல்லை என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன், மனுஷன் இதை படித்து விட்டு "“Backyard ஐ முயற்சி பண்ணுவோம் வாடி" என்று ஆரம்பித்துவிட்டால் அதகளமாகியிருக்கும். "டேய்! Main Gateஐ வாடைகைக்கு எடுத்தவனே, ஜாக்கிரதடா! எவனாவது பின்னாடி குடிவந்திடப் போறான்" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.
இன்னொருத்தி லோ-நெக் சட்டை அணிந்திருந்தாள் என்று சொல்வது நாகரீகமாக போய்விடும். லோ-நெக் சட்டை ஒன்றை எவளவு மோசமாக கற்பனை செய்ய முடியுமோ அவளவுக்கு கற்பனை செய்து கொள்ளுங்கள். அவளது மார்பில் ஒரு பச்சை குற்றியிருதாள் , அது இப்படி இருந்தது " " . இவளையெல்லாம் பின்னாளில் ஒரு தாயாக எப்படி கற்பனை செய்து பார்க்க இயலும்? இதை எப்படி நான் படித்தேன் என்று கேட்கிறீர்களா? அந்த குலவிளக்கு குடித்துவிட்டு அரைமயக்கத்தில் எனது மேசையில் தான் விழுந்து கிடந்தது. வெளங்கிடும்!!!!
இன்னும் ஆங்காங்கே வாயால் , மூக்கால் ரவுண்டு ரவுண்டாக புகைவிடு படலமும் நடந்தேறி கொண்டிருந்தது. அதற்கும் ஒரு குடும்ப குலவிளக்குத்தான் தலமையேற்று நடாத்திக்கொண்டிருந்தது. நான் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு என்ன கொடும சரவணா என்று தலையில் அடித்த்துக்கொண்டு ஷாலற்றிடம் பேச்சுக்கொடுக்க முயன்ற போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. ஷாலற் தனது வைன் கிண்ணத்தில் அப்போது தான் சிவப்பு வைனை நிரப்பி அவளது வாயருகே கொண்டு போனாள்,. சடுதி நேரத்தில் "சடார்" என்று அவள் மேல் ஒரு பன்னி வந்து விழுந்தது. அட! அதுவும் ஒரு பொண்ணுதான் , இதுங்களுக்கெல்லாம் என்ன மரியாதை? உடனே அவளது நண்பி ஓடிவந்தாள், ஆங்கிலத்தில் சிரித்தாள். பவ்வியமாக ஷாலற்றிடம் மன்னிப்பு கேட்டவள், இப்போது விழுந்து கிடந்த தனது நண்பியை திட்ட தொடங்கினாள். " Your mom told me to not give lot of beers to you, this was my fault. Errrrrrrrrr!” . ( “உனது அம்மா சொன்னாள் உனக்கு அளவுக்கு அதிகமாக பியர் கொடுக்க வேண்டாம் என்று , இது என்னுடைய தப்பு தான் , எனக்கு நல்லா வேணும்”)
அந்த தாயை இன்று முழுக்க தேடினேன், அளவு எடுக்க வேண்டும், கொழும்பின் மத்தியில் கோவில் கட்டி சிலைவைக்கலாம் என்று இருக்கிறேன். நிதி கொடுக்க விரும்புவோரும், கோவிலில் பூஜைகள் செய்ய விரும்புவோரும் என்னை தொடர்புகொள்ளவும்.
அங்கு வந்திருந்தேரில் என்னையும் நிரஞ்சனையும் தவிர அனைவரும் எப்படியாவது பணத்தை செலவழிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் வந்திருந்தவர்கள் என்று அப்பட்டமாக தெரிந்தது. இதை புரிந்து கொண்டுதானோ என்னமோ அந்த விடுதி நிர்வாகமும் ஒரு உருளைக்கிழங்கு அறுநூறு ரூபா, சிங்கிள் ஆம்லெட் நானூறு ரூபா, சிக்கனோட றெக்கை தொள்ளாயிரம் ரூபா என்று மிரட்டினார்கள். இந்த செல்வ சீமாட்டிகளும் சும்மா புகுந்து வெளையாடினார்கள். அப்போது தான் நிரஞ்சன் சொன்னான் " இந்த விடுதியில் இருந்து முந்நூறு மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய ஒரு சமுதாயம் மூன்று வேளை உணவுக்காக ஒரு நாள் முழுதும் உழைக்கிறது. இவர்கள் அவர்களது மூன்று மாத உழைப்பை ஒரு இரவில் செலவழித்துவிட்டு போகிறார்கள்." என்று
என்னைக்கேட்டால் அதை பிழையென்று சொல்ல மாட்டேன். இந்த உலகில் ஒவ்வொரு வைகையான சமுதாயம் இருக்கத்தான் செய்கிறது. அவரவர் உழைப்பிற்கேற்ப அவரவர் செல்வநிலை அமைகின்றது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கு அறிமுகம் செய்யப்பட்ட "சோசலிச" கொள்கை தோற்றுப்போன உலகம் இது, ஆகவே இவனிடம் நிறைய இருக்கின்றது, அவனிடம் குறைவாக இருக்கின்றது என்ற வாதத்தில் எனது நிலை கொஞ்சம் வித்தியாசமானது. அதை விடுவோம், ஆனால் நிரஞ்சன் சொன்னதை முற்றாக மறுக்கும் மனநிலையிலும் நான் இல்லை. சரி! இது அவர்களது அப்பன் காசு அவர்கள் கரியாக்குகிறார்கள், நமக்கு என்ன வந்தது? ஆனால் காசு - கலாசாரம், பணம்- பண்பாடு என்பன வேறு வேறு விடயங்கள். ஒன்றுக்காக இன்னொன்றை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. அளவுக்கதிகமாக பணம் இருக்கிறது என்பதற்க்காக அவுத்துப்போட்டு அலைய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தொளயிரம் ரூபா கொடுத்து ஒரு துண்டு சிக்கன் வாங்கி , அதிலும் கலாசாரம் என்ற பேரில் சிறுதுண்டை கடித்து மீதையை எறிந்த இந்த பூர்சுவா கூட்டத்தில் எத்தனை பேர் , வெளியே மாற்றுத்திறனாளிகள் கண்காட்சிக்காக விற்கப்பட்ட ஐம்பதுரூபா பெறுமதியான கூப்பனை வாங்கினார்களோ அறியேன்!
மூலையில் நின்று முடாக்கணக்கில் குடிப்போர் சங்கம்! |
இங்கு ஷாலொற் கேட்ட ஒரு கேள்வி என்னை இன்னும் துளைக்கிறது. "நான் இலங்கைக்கு வேலைக்கு வருவதற்கு முன்னர் எனக்கு மூன்று நாட்கள் பயிற்சி தந்தார்கள், உங்களது நாட்டின் பண்பாடு, கலாசாரம், உடுத்தும் ஆடைகள் என்பன பற்றி சொல்லித்தந்தார்கள். எங்களது தூதரகம் சம்மந்தப்பட்ட விழாக்கள் ஒழிய வேறு இடங்களிலோ, கடற்கரை தவிர்ந்த பொது இடத்திலோ நான் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் எனக்கு பெரும் கட்டளைகளே இருக்கின்றன. உங்களது கலாசரத்தின் படி நான் ஆடை அணிய வேண்டும் என்பது எனது மேலிட உத்தரவு. ஆனால் இங்கு பார்த்தால் நான் பிகினி அணிந்து வரலாம் போல் உள்ளது. இலங்கையில் எல்லோரும் இப்படித்தானா? மாறிவிட்டார்களா? இப்போது சொல்லுங்கள் கலாசாரம் மற்றும் பண்பாடு என்பனவற்றால் அறியப்பட்ட இலங்கைக்கு இப்படியொரு தவறான சித்தரிப்பொன்றை வழங்கும் இவர்கள் மீது எனது கோபம் நியாயம் தானே? “its complicated , I’ll explain it later “என்ற பதிலுடன் “washroom போய்வருகிறேன்” என்று கழன்று கொண்டேன்.
எங்களது மேசையின் அருகில் ஒரு குடும்பம் இருந்தது. செல்வக்கொழிப்பு அவர்களது ஆடைகளில் தெந்தது. அங்கு அரு சுட்டிப்பெண் "பாப்பா"" என்று தனது தந்தையை அழைக்க அவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்க வேண்டுமென்ற வலிதான ஊகத்தில் பேச்சுக்கொடுத்தேன். எனது ஊகம் சரியானதாகவே இருந்தது. அவர்கள் இருவரும் வைத்தியர்கள். இலங்கையில் எட்டு வருடமாக இருக்கிறார்கள். அந்த குடும்ப தலைவன் மும்பையை சேர்ந்த ஒரு இந்து. பெண் பஞ்சாபி. சில நிமிட வழமையான அரட்டைகளுக்கு பின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் "எட்டு வருடங்களாக இலங்கையில் இருக்கிறீர்களே உங்களது இரண்டு பெண்களுக்கும் பஞ்சாபி மறந்து போய்விடவில்லையா?" என்று கேட்டே. தொடர்ந்து இந்த உரையாடலை கேளுங்கள்.
அந்த பெண்:- இங்கே பாருங்கள் கிஷோகர்! இந்த உலகம் மாறிக்கொண்டு இருக்கின்றது, நாகரீகம் வளர்கிறது, ஆங்கிலம் தான் எல்லாமே. எனது பிள்ளைகள் பஞ்சாபி படிப்பது எனக்கு அறவே விருப்பம் இல்லை. அதை நான் கற்றுக்கொடுக்கப் போவதும் இல்லை.
நான்:- என்ன சொல்கிறீர்கள்? ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளை படிப்பது சிறந்தது தான். வேற்று மொழி அறிவு கட்டாயம் நமக்கு வேண்டும். அதற்காக ஒரு இந்தியர் நீங்கள் உங்களது தனித்துவமான கலாசாரத்தை விட்டுக்கொடுப்பதா?
பெண்: தயவு செய்து என்னை ஒரு இந்தியன் என்று அழைக்க வேண்டாம், நான் ஒரு இந்தியனாக பிறந்ததில் வெட்கப்படுகிறேன். என்ன சாத்தித்துவிட்டார்கள் இந்தியர்கள் என்று அதைப்பற்றி நான் பெருமைப் படுவதற்கு?
நான்:- என்ன இப்படி சொல்கிறீர்கள்? உலகுக்கு நாகரீகம் சொல்லித்தந்தது இந்தியா தானே? அறிவியல் சொல்லித்தந்தது இந்தியா, ஆன்மீகம் சொல்லித்தந்தது இந்தியா, கலைகள் , வித்தைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாமே... இவையெல்லாம் நீங்கள் பெருமைப்பட போதாதா?
பெண்:- அது எல்லாமே ******************* ( மாட்டுசாணி) , இப்படி சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டுகிறார்கள் *************! ( சோம்பேறிகள் என்று நாகரீகமாக மொழிபெயர்க்கிறேன்)
நான் :- ( சற்று கோபமாக) ஆங்கிலம் ஒன்றும் இத்தனை புகழுடன் தொப்பென்று வானில் இருந்து விழவில்லை, அந்த மொழி பேசுபவர்கள் தங்களது வாழ்க்கை முறையால் அந்த மொழியை புகழுக்குரியதாக , அல்லது உலகு பேசும் மொழியாக ஆக்கியிருக்கிறார்கள். ஆக உங்களது பஞ்சாபி மொழி வெள்ளையனுக்கு தெரியமல் இருக்குமானால் அது அந்த மொழியின் தவறல்ல, உங்களைப் போன்ற வசை பாடிகளின் தவறு. நீங்கள் உங்கள் மொழியை உலகு அறிய கொண்டு போய்சேர்க்க தவறிவிட்டீர்கள். அது தான் உண்மை.
சோஃபி ( ஷாலற்றின் நண்பி) :- எனக்கு இந்திய மொழிகள் , கலாசாரம் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது, உங்களது கலாசாரம் அழிந்து போக நீங்கள் ஒரு போது அனுமதிக்க கூடாது.
நிரஞ்சன்:- நாளைக்கு உங்களது தலைமுறை தாங்கள் எந்த பின்புலத்தில் இருந்து வந்தோம் என்று அறியாமல் வளர வேண்டுமா?
நான்:- உங்களது பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்பது உங்களுடைய பிரச்சினையும் உரிமையும், ஆனால் ஒரு இந்தியராக நீங்கள் பெருமைப்பட எவளவோ இருக்கின்றது. அதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். இந்தியர்கள் தான் இந்த உலகத்தில் தேசப்பற்று மிகுந்தவர்கள் என்று படித்திருக்கின்றேன்.
பெண்:- தயவுசெய்து, எனது பிள்ளைகள் முன்னால் எங்களை இந்தியர்கள் என்று விளிக்க வேண்டாம், அவர்களுக்கு அது தெரியாமல் இருக்கவும், அதை மறக்கடிக்கவும் நாங்கள் கடும் முயற்சி செய்கிறோம். இந்தியன் என்று அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நீங்கள் வேண்டுமென்றால் உங்களது பிள்ளகளுக்கு சிங்களம் சொல்லிக்கொடுத்து வளருங்கள்.
நான்:- நான் சிங்களம் அல்ல தமிழ்!
பெண் :- (பெரிதாக சிரிக்கிறார்) அது தானே பார்த்தேன், தமிழர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் என எனக்கு நன்றாகவே தெரியும், அது தான் தமிழ் நாடும், நீங்களும் இப்படி இருக்கிறீர்கள்.....
எனக்கு அவர் என்ன சொல்ல வந்தார் என்று தெரியவில்லை, ஆனால் அந்த சிரிப்பிலும் வார்த்தையிலும் ஒரு ஏளனம் இருந்ததை என்னால் தெளிவாக உணர முடிந்தது. எனக்கு கோவம் பொத்துக்கொண்டு வந்தது. அதை உணர்ந்து என்னை தூரே அழைத்துக்கொண்டு போய் விட்டான் நண்பன் விக்டர்.
நானோ, நிரஞ்சனோ, சோஃபியோ பஞ்சாபிகள் அல்ல, இந்தியரும் அல்ல ! ஏதோ அவர்களது மொழிமீதும் கலாசாரம் மீதும் அவர்களை விட எமக்கிருந்த அக்கறையால் தான் இவற்றை சொன்னோம். இதில் உண்மையை நான் கொஞ்சம் உறைக்க சொன்ன படியாலா அந்த ஏளன சிரிப்பு அவரிடமிருந்து வந்தது?
இப்போது ஒரு கேள்வியுடன் இந்த பதிவை முடிக்கிறேன்.
எந்த வகையில் நாங்கள் (இலங்கை + இந்திய தமிழர்கள்) ஏளனமாகி போனோம்?
டிஸ்கி :-கொழும்பு-7ஐத் தவிர இம்மாதிரியான பெண்களோ அல்லது கலாசார கொலைகாரர்களோ வேறு எங்கேயும் இல்லை என்பதற்கில்லை. நான் நேற்று கண்ட , கேட்ட , விசரித்தவரையில் அங்கிருந்த வெளிநாட்டவரையும் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச்சிலரையும் தவிர அனைவரும் கொழும்பு-7இன் மக்களே!
கருத்துக்கள் அருமை..அதைவிட உங்கள் எழுத்து நடைக்கு நான் அடிமை :)
ReplyDeleteதல என்னது? எனது எழுத்து நடைக்கு நீங்கள் அடிமையா? இந்த மாதம் எனக்கு நல்ல மாதமோ? #பதிவுகின் பெருந்தலைகளால் பாராட்டு பெறுகிறேன்.
Deleteதமிழர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் என எனக்கு நன்றாகவே தெரியும், அது தான் தமிழ் நாடும், நீங்களும் இப்படி இருக்கிறீர்கள்.....
ReplyDeleteபெரும்பாலான ஏனைய மாநிலத்தவர்கள் இப்படித்தான் நினைக்கிறார்களோ! தமிழ்நாடு இந்தியாவை பிடித்து தொங்கி கொண்டிருந்தால் இப்படித்தான்! நல்ல பதிவு!
////தமிழ்நாடு இந்தியாவை பிடித்து தொங்கி கொண்டிருந்தால் இப்படித்தான்! /////////
Deleteஏது நீங்களும் தனி நாடு கேட்க போகிறீர்களா? நல்ல விடயம் தான். ஹி... ஹி.... ஹி.....
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பா!
// தயவு செய்து என்னை ஒரு இந்தியன் என்று அழைக்க வேண்டாம், நான் ஒரு இந்தியனாக பிறந்ததில் வெட்கப்படுகிறேன். என்ன சாத்தித்துவிட்டார்கள் இந்தியர்கள் என்று அதைப்பற்றி நான் பெருமைப் படுவதற்கு?
ReplyDelete//
இவனுங்க குடியுரிமையை பறித்து விட்டு விட்டால் தெரியும் சேதி
// அது தானே பார்த்தேன், தமிழர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் என எனக்கு நன்றாகவே தெரியும்,//
நிச்சயம் அவர்கள் நமது தனித்தன்மையை பொறாமை கண்ணோடு பார்க்கும் வாடா இந்தியர்களில் ஒருவர் தான் .
இனி அங்க எல்லாம் போகாத நண்பா , ஆயுதகிடங்கு ஓட்டலில் ஆப்பாயிலும் ஆப்பமும் , சிலோன் பரோட்டாவுமே நமக்கு போதும்
பல்கலைக்கழக ஊழியர்களின் காலவரையரையற்ற பல்கலைக்கழக பகிஸ்கரிப்பு போராட்டத்தின் விளைவாக காலவரையறையின்றி இலங்கை பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் அதை நம்பி கடை போட்ட நமது "அம்பாள் ஆயுதக்கிடங்கின்" உரிமையாளர் திரு.சந்தனத்தேவன் காலவரையறையின்றி தலைமறைவு. இன்டர் போல் பொலிஸார் வைவீசி தேடி வருகின்றனர்.
Delete"அது தானே பார்த்தேன், தமிழர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் என எனக்கு நன்றாகவே தெரியும், அது தான் தமிழ் நாடும், நீங்களும் இப்படி இருக்கிறீர்கள்....."
ReplyDeleteதனது பண்பாட்டை மறக்காதவன்தான் தமிழன் என்பது அவர்களுக்கு வேண்டுமானால் ஏளனமாக இருக்கட்டும். ஆனால் நாங்கள் நெஞ்சை நிமிர்த்திக்கொள்வோம். ஒரு பஞ்சாபிக்கே எங்களை பற்றி நன்கு தெரிந்திருக்கிறது என்று...
/////ஆனால் நாங்கள் நெஞ்சை நிமிர்த்திக்கொள்வோம். ஒரு பஞ்சாபிக்கே எங்களை பற்றி நன்கு தெரிந்திருக்கிறது என்று...//////
Deleteஅட இது கூட நல்லயிருக்கே.... உங்களுக்கும் அப்பப்போ இப்படி சிந்தனைகள் வரத்தான் செய்கிறது மிஸ்டர் கோபிநாத்.
இன்றும் இப்படி ஒரு சிலர் சிந்திப்பது கண்டு சந்தோசபடுகிறேன். ஒவ்வொரு நாட்டினரும் பார்த்து வியந்து பாராட்டும் கலாச்சாரம் நமது. ஆனால் நாம் மட்டும் அதை புரிந்துகொள்ளாமல் ஏளனப்படுத்துகிறோம்.
ReplyDeleteமற்ற நாட்டினர் பின்பற்ற துடிக்கும் நம் பண்பாட்டை, கலாச்சாரத்தை நாம் பின்பற்றினால் மற்றவர்கள் நம்மை பெருமையுடன் பார்ப்பவர்கள்.
இன்று தான் உங்கள் வலைப்பூ பார்த்தேன்
நல்ல பதிவு, பாராட்டுகள்.
http://dreamofindian.blogspot.com/
வருகைக்கும் பின்னூட்டத்துக்கு பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அன்பரே! நமது கலாசாரம் தனித்துவமானது, அழகானது. அனைவரும் சிந்திக்க வேண்டிய இந்த விடயத்தை நம்மில் ஒருசிலர் மட்டுமே சிந்திப்பது வேதனைக்குரியது.
DeleteColombo 7 நம்ம ஏரியா இல்லைப்பூ.. ஆனா இந்த கதாவ நெறைய கேட்ருக்கோம்...
ReplyDeleteஅடுத்தவாட்டி போகும் போது "தம்பி", "எவனோ ஒருவன்" படம் பார்த்து மாதவன் கேரக்டரை பழகிட்டு போங்க பாஸ்!
நாம எங்க இருந்தாலும் நம்ம கலாசாரத்த விட்டுக்குடுக்காத ஆளுங்க பாஸு..... ! நான் தம்வி படத்த பாத்துட்டு போய் அவளுகள மிரட்ட அவளுக "ரோங் டேர்ன்" பத்திட்டு வந்து என்னய வெட்டி தின்னுட்டாளுகன்னா என்ன பண்றது?
Deleteஅப்பாவிப்புள்ள உனக்குல்லாம் முழங்கால் பெயர்க்குது..
ReplyDeleteஅந்த நேரத்துக்கு இந்த வெட்டிப்பய "டொரஸ்"ஸுக்கு இழுத்துக்கிட்டு போயிருந்தா இத்தாலி மேட்சை சரி முடிச்சிருக்கலாம்!! :(
என்ன பண்றது மச்சி எல்லாம் விதி! இப்போ பாரு நம்ம நெதர்லந்துக்கு இன்னிக்கோ நாளைக்கோன்னு இளுத்துக்கிடு கெடக்கு, ஆனா ஒன்னு மச்சி டென்மார்க் கூட ரொனால்டோ மயிரிழையில் உயிர் தப்பி இருக்காரு!
Deleteஅதுவும் யாருமே இல்லாத அந்த கோல் போஸ்டில் அந்த பந்தை அழகாக வெளியே அடிச்ச விதம் இருக்கே... அடா அடா அடா... அதுக்கு இன்னொரு ரொனால்டோ தான் பொறந்து வரணும். தூ..... அவனெல்லாம் ஒரு பிளேயர்...... அவனுக்கு நீங்க ஒரு ரசிகர். சொழன்னு சொழன்னு கோல் அடிக்க நம்ம குரூஸ் கிட்ட பழகிக்கங்கப்பா.....
//எந்த வகையில் நாங்கள் (இலங்கை தமிழர்கள் + இந்திய தமிழர்கள்) ஏளனமாகி போனோம்?// தமிழ் அரசியல்வாதிகளாலும் நான் என் குடும்பம் என்று மட்டுமே சிந்திக்கும் என்னைப் போன்ற தமிழர்களால்தான் இந்த நிலை.
ReplyDeleteநண்பரே தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், என்னவோ தெரியவில்லை. உங்களது பின்னூட்டம் "ஸ்பாம்" வகையில் இருந்தது.
ReplyDelete///நான் என் குடும்பம் என்று மட்டுமே சிந்திக்கும் என்னைப் போன்ற தமிழர்களால்தான் இந்த நிலை.///
அப்படி சொல்லவேண்டாம், நாமெல்லாம் ஒரு நாள் வெல்வோம். எமது கிழக்கும் விடியும்
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்த பதிவில் கொழும்பை பற்றி எங்களால் அறிந்து கொள்ள இயலாத தகவல்கள் அறிந்து கொண்டேன், அருமையான பகிர்வு. குறிப்பாக >
ReplyDelete//இலங்கையின் அரச கல்வி முறையோடு போட்டி போட முடியாமல் ( காரணம் இலங்கையில் தனியார் துறையை விட அரச கல்லுரிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களின் தரம் அதிகமானது. பணம் குடுத்து நுழைய முடியாது. அங்கு நுழைய வேண்டுமானால் உங்களுக்கு அறிவு இருக்க வேண்டும், அரசாங்க்ம் நிர்ணயிக்கும் புள்ளிகளுக்கு மேல் பெற வேண்டும்) //
//முதலில் இந்திய வாசகர்களுக்காக இந்த கொழும்பு -7 பற்றிய ஒரு அறிமுகம் தராலாம் என்று நினைக்கிறேன். காலனி ஆட்சியின் போது இந்த கொழும்பு-7 ஒரு கறுவா தோட்டமாக இருந்தது. வெள்ளயர்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட பயிராக அது இருந்த படியால் இந்த இடம் முக்கிமான ஒரு இடமாக மாறத்தொடங்கியது. அதிக விலைக்கு கறுவா கொள்வனவு செய்யப்பட்டதால் , இந்த இடம் செல்வத்தில் புரண்டது. எனவே 1930களிலேயே தங்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிப்பிக்கக்கூடிய செல்வம் படைத்த சமூகம் ஒன்று இங்கே வளர்ந்தது. அந்த கல்வியின் காரணத்தால் அன்று இலங்கைக்கு படித்த ஒருசமுதாயத்தை தந்த கொழும்பு-7 இன்று மிகையான பணம், மற்ற சமுகங்கள் மீதான கண்ணோட்டத்தில் ஒரு மெத்தன போக்கு என்பவற்றால் இன்று கழிசடைகளையும் , கலாசார கொலைகாரர்களையும் தந்து கொண்டு இருக்கின்றது.//
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete