இந்த வாட்டி என்னயா கூப்டீங்க? |
எனக்கு இந்த வாரம் முழுவதும் ஓயாத வேலை என் சகோதர சகோதரிகளே! இன்னமும் ஓரிரு வாரத்துக்கு என்னால் பதிவுலகத்தின் வேகத்துக்கு ஈடுகுடுக்க முடியுமா என்பது கூட தெரியாது. யுத்தம் தின்றது போக மீதமிருக்கும் எனது தமிழ் உறவுகளுக்கு ( முல்லைத்தீவு) அபிவிருத்தி திட்டம் ஒன்று வகுப்பதில் நான் கொஞ்சம், இல்லை ரொம்பவே பிஸி தான். ஆனாலும் கிடைத்த இடைவெளியில் இணையத்தை மேய்ந்த போது சிக்கிய ஒரு விடையம் என்னை இந்த பதிவை எழுத தூண்டியது. விடயம் ஒருவாரம் அல்லது பத்து நாள் பழசுதான். இது குறித்து எத்தனை பதிவர்கள் பதிவுகளை கண்டனங்களாகவோ, அல்லது காண்டாகவோ, அல்லது அதையும் வேடிக்கையாகவோ எழுதியிருக்கிறார்கள் என்று நான் அறியேன். ஆனாலும் எனது பதிவு நிச்சயம் ஒரு சாட்டையடியாக இல்லாவிடினும் ஒரு குண்டூசி குத்தாகவேனும் இருக்க வேண்டுமென்பதே எனது நோக்கம்.
பதிவை மேற்கொண்டு படிப்பதற்கு முன்னர் இங்கே சென்று இந்த காணொளியை சற்று பார்த்துவிட்டு வந்தால் எனக்கும் , படிக்கப்போகும் உங்களுக்கும் சற்று இலகுவாக இருக்கும்.
சமீப காலமாக 'நீயா நானா" கோபிநாத்தின் நடவடிக்கைகள் எனக்கு எரிச்சலையே தருகின்றது, எரிச்சல் என்பதற்கு மேலாய் அனேகமாக கோபத்தை கிளறுவதாய் உள்ளது. அவர் கலந்து கொண்ட " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியாகட்டும் சரி இப்போது பவர் ஸ்டாருடன் நடந்த "நீயா நானாவாகட்டும்" சரி ஒட்டுமொத்தமாய் எல்லோரது வசைபாடல்களையும் வாங்க்கிக்கொண்டிருக்கிறார் கோபிநாத். அதிலும் குறிப்பாக அவரது திறமைகளாலும் அணுகுமுறைகளாலும் ஈர்க்கபட்ட என்போன்ற ரசிகர்களது ஒட்டுமொத்தமான முகச்சுழிப்புக்கு காரணமாகி இருக்கிறார். இனிமேல் என்னைக் கேட்டால் , கோபிநாத்தின் ரசிகனாக இருப்பதை விட ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அவரை ரசிப்பது மட்டுமே எனக்கு நலம். தனது புகழுக்காகவும் தங்களது தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகவும் ஒரு தனிநபரின் சுயகௌரவத்தோடும் தன்நம்பிக்கையோடும் விளையாடும் , அல்லது இழிவுபடுத்தும் ஒருவர் எனது முன்மாதிரிகையாக இருப்பதில் எனக்கு துளியும் இஷ்டமில்லை.
கோபிநாத்தை கேள்விகேட்பதற்கு முன்னர் இங்கே ஒரு விடயத்தை நான் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். இதே எனது பதிவில் ஆங்காங்கே பவர் ஸ்டாரை நானும் கலாய்த்து இருக்கிறேன். அதே போல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பவர் ஸ்டாரை ஜாலியாக கலாய்க்கும் பதிவர்கள் ஏராளம். ஆனால் நானும் , பவர் ஸ்டாரை ஜாலியாக கலாய்க்கும் ஏனைய பதிவர்களும் கூட கோபிநாத்தின் செய்கைகளை ஒரு போதும் சரி என்று சொல்ல மாட்டோம். நீங்களும் அவ்வாறு செய்ய மாட்டீர்கள் என நினைக்கின்றேன்.
எங்களது பதிவுகளில் கலாய்க்கப்படுதல் என்பது ஒரு ஜாலியாக நடப்பது. அது போக நாங்கள் கலாய்ப்பது சும்மா ஒரு பொழுதுபோக்குக்கு என்பது வாசிக்கும் அனைவருக்கும் விளங்கக்கூடியதாக இருக்கும். அது போக எங்களது காலய்த்தல்கள் எல்லாமே ஒரு மொக்கை படத்தின் பெறுபேறாக இருக்குமே தவிர , குரிப்பிட்ட அந்த மனிதரின் திரையுலக பிரவேசம் குறித்ததாக இருக்காது. அப்படி சந்தர்பத்தில் இருந்தாலும் அது ஒரு ஜாலியான பதிவாகவே இருக்கும். இன்று அரசியல் கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்ற இளையதளபதி விஜய் கூட பதிவுலகை பொறுத்தவரை ஒரு கலாய்படுபொருளே! காரணம் அவர் தொடர்ச்சியாக திரைக்கு அனுப்பிய கொட்டாவிகள்.
எனது அபிமான நடிகரும் , தமிழ்திரையுலகின் பிதாமகனுமாகிய கமல்ஹாசன் கூட "மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு" போன்று நாலைந்து படங்களை தொடர்ந்து நடித்தால் அவரும் காலாய்படுபொருளே! நானே முதல் கலாய்த்தல் பதிவை போடத்தயார். இங்கு இன்னொன்று பவர் ஸ்டார்கூட "மைனா" போன்றோ அல்லது "அங்காடி தெரு" போன்றோ ஒரு படத்தை கொடுத்திருந்தால் பதிவுலகில் அவரது நிலை வேறு. ஆக அவர் இன்று ஜாலியாக கலாய்க்கப்படுதலின் காரணம் அவரது "லத்திகா" தான். பதிவுலகில் நாங்கள் கலாய்ப்பது ஒரு பொழுதுபோக்குக்காகவும், அத்தோடு அது சும்மா ஒரு விளையாட்டாக பண்ணுவது என்பது எவரும் அறிவர். அது போக எங்களது எழுத்துநடையில் "இந்த பதிவு சீரியசானது அல்ல" என்ற தொனி மாறாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வோம். ஆனால் கோபிநாத் ஒன்று சொன்னால் அது சரியாக இருக்கும், கோபிநாத்தின் வாதத்தில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று பொதுமக்கள் பேசும்படியாக பெயரெடுத்துவிட்ட கோபிநாத்தும், சமூக அக்கறைகொண்ட நிகழ்ச்சி என்ற கோணத்தில் பார்க்கப்படும் "நீயா நானாவும் " ஒன்றை பேசினால் அது விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாதது. இது ஒன்றும் விஜய் டி.வியின் "லொள்ளு சபா" அல்லவே! இதுவே சிவகார்த்திகேயன் ஷோவாக இருந்திருந்தால் நான் கண்டுகொண்டிருக்கவே மாட்டேன், மாறாக நானும் உக்காந்து சிரித்துவிட்டு போயிருப்பேன். காரணம் விஜய் டி.வியில் சிவாவின் ஷோக்களை யாரும் சீரியசாக பார்ப்பது கிடையாது. அதுபோக சிவா சீரியசாக ஷோ பண்ணுவதும் கிடையாது. ஆனால் சம்பவம் நடந்திருப்பது சீரியசான "நீயா நானாவில்" நடத்தியிருப்பது அறிவாளி (?????) என்று பேரெடுத்த கோபிநாத்.இந்த தெளிவுபடுத்தல்களோடு இப்போது கோபிநாத்தின் பக்கம் போகிறேன்.
முதலில் கோபி சார் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒன்றும் பெரிய பச்சிலை புடுங்கி கிடையாது. ஓட்டைத்தகரம் மேல் மழை விழுவதை போல தொண தொணக்கும் எத்தனையோ தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் மத்தியில் , நீங்கள் கொஞ்சம் வித்தியாசம், அவளவு தான். ஆனால் உங்கள் நினைப்பு என்னவோ நீங்கள் தான் இந்தியாவின் எதிர் காலம் போலவும், ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆலோசனை வழங்குபவர் போலவும் தான் நடந்து கொள்கிறீர்கள். எவரது எதிர் காலத்தையும் தீர்மானிப்பது நீங்கள் கிடையாது. அது அவரவர் எண்ணமும் விருப்பமும்.
பவர் ஸ்டாருடைய தனி அடையாளத்தை தேடிகண்டுபிடிக்க நீங்கள் யார்? அவர் தனது விருப்பத்துகிணங்க இந்த திரைத்துறையை தீர்மானித்திருக்கிறார். அது அவரது தனிப்பட்ட தீர்மானம். அடிக்கடி "உங்களுடைய உண்மையான முகத்தை உங்களுக்கு காட்டுவதற்கு முயற்சி செய்கிறேன், நீங்கள் தான் இறங்கி வரமாட்டேன் என்கிறீர்கள்" என்று சொல்கிறீர்களே, நீங்கள் யார் குறி சுடுபவரா? ஆளாளுக்கு அடையாளம் கொடுக்க! "நீங்கள் ஏன் ஒரு அக்குபஞ்சர் வைத்தியராகவே இருந்திருக்க கூடாது, திரைத்துறைக்கு ஏன் வந்தீர்கள் " என்று ஏதோ தமிழ் சினிமாவை ஆறுமாத குத்தகைக்கு எடுத்தவர் போலவே கேட்கிறீர்களே, இதே போல் ஒரு கேள்வியை சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் போய் அல்லது அவரை உங்களது நிகழ்ச்சிக்கு வரவழைத்து "சார்! நீங்கள் பஸ் நடத்துனர் தொழிலைவிட்டு சினிமாவுக்கு வந்தது தவறு சார்! வீணான இந்த பந்தா வேண்டாம், இது போலி கௌரவம்.உங்களது உண்மையான அடையாளத்தை நான் தருகிறேன், நீங்கள் போய் மீண்டும் பஸ் நடத்துனர் வேலையையே பாருங்கள் " என்று கேட்க முடியுமா? முடிந்தால் கேட்டுப்பாருங்கள். அடுத்த நாள் உங்களது உடம்பின் முக்கிய பாகங்கள் மூன்றும் வெவ்வேறு மூன்று சந்துகளில் கிடக்கிறதா இல்லையா என்று.
ஒரு துறையை விட்டு இன்னொரு துறையை தெரிவு செய்வது அவரவர் விருப்பம். அதை பிழை என்று சொல்ல நீங்கள் யார்? அப்படி பார்க்கப்போனால் உங்களது லட்சியம் வணிகத்துறையில் பெரிய ஆளாக வருவது ( பட்டப்படிப்புகளை மேற்கொண்டு) என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியானால் உங்களது உண்மையான துறையை விட்டுவிட்டு இப்போது போலி புகழுக்காகவும் , அற்ப பணத்துக்காகவும் நீங்கள் விஜய் டி.வி யுடன் ஒட்டியிருந்து கீழ்த்தரமான வேலைகளையெல்லாம் செய்து வருகின்றீர்கள் என்று நான் சொன்னால் , நீங்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்களா?
கொஞ்சம் அடக்கியே வாசிச்சிருந்திருக்கலாம், மைக்கு இருந்த தெனாவட்டு என்ன பண்றது? |
அடுத்து போலி கௌரவம் தொடர்பான ஒரு பேச்சை எழுப்பி இருந்தீர்களே, சரி வாஸ்தவம் தான் ஒரு மனிதனுக்கு போலி கௌரவம் ஒன்று அனேகநேரங்களில் தேவைப்படுவதில்லை தான் ஒத்துக்கொள்கிறேன். அதற்காக ஒரு சமூக அக்கறை கொண்டதாக நோக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ஒருவரை பலலட்சம் பேர் பார்க்கும்படியாக அவமானப்படுத்தியது எந்தவகையிலும் நியாயமாகி போகாது. சரி உங்களது வாதம் சரி என்று எடுத்துக்கொண்டால் அதற்கு எதிர்வாதமும் இல்லாமல் இல்லை, பவர்ஸ்டார் பத்துபதினொரு பேருடன் வருவதை போலி கௌரவம் என்கிறீர்களா? கொஞ்சம் சிந்தியுங்கள் ஒரு சாதாரண அக்குபஞ்சர் வைத்தியர், பத்துபடங்களுக்கு பூஜை போட்டு ( படத்தின் தரம் குறித்த விவாதம் இங்கு அவசியமில்லை) படப்பிடிப்பு நடத்திவருகிறார் என்றால் அவரிடம் அவளவு பணம் இருக்க வேண்டும். தனது பாதுகாப்பு கருதிகூட அவர் நாலைந்துபேரை தன்னோடு கூட வைத்திருக்கலாமே! அதுபோல் பவர்ஸ்டாருடன் வந்தவர்கள் அவரை வீடியோ பதிவு செய்ததை பெரிய இவராட்டம் கேலிசெய்தீர்களே, இந்த காலத்தில் முகம் தெரியாமல் தொலைபேசியில் பேசி பாடல் கேட்க முண்டியடிப்போர் எத்தனையோ ஆயிரம் பேர். தமது முகம் தெரியாமல் தமது குரல் வருவதற்கே இப்படி முண்டியடிக்கிறார்கள் என்றால், ஒரு பிரபலமான நிகழ்ச்சியில் தான் வந்து, பேசியதை ஒளிப்பதிவு செய்து நீங்கள் ஒலிபரப்பும் முன்பு எந்தவித எடிட்டிங்கும் இன்றி பார்க்கவேண்டுமென்ற அப்பாவித்தனமான ஆசை பவர்ஸ்டாருக்கு வந்திருந்தால் அது எந்தவகையில் தப்பென்று ஆகும்?
"பவர்ஸ்டார் கண்ணாடி போடலாமா ?" என்று ஒருவர் கேட்டுவிட்டு போனதாக கிண்டல் செய்தீர்களே, இது உங்களது நிகழ்ச்சி, உங்களிடம் கூறிவிட்டுத்தான் எதுவும் செய்ய வேண்டுமென்ற இங்கிதம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. முதலில் உங்களுக்கு "இங்கிதம்" என்றால் என்னவென்றாவது தெரியுமா? தெரிந்திருந்தால் அவர்கள் ரகசியமாக வந்து உங்களிடம் கூறிப்போனதை இப்படி பகிரங்கமாக கேலி பண்ணியிருக்க மாட்டீர்களே! அது போக கண்ணாடி அவர் போடுவது அவரது விருப்பம் , உங்களது நிகழ்ச்சி விதிமுறைகளின் பிரகாரம் அது முடியாது என்றால் அவர்களுக்கு அதை சொல்லி அணியவிடாமல் பண்ணியிருக்க வேண்டும். இல்லை அவர்கள் போட்டுத்தான் ஆகுவோம் என்று அடம்பிடித்திருந்தால் அவர்களை நிகழ்ச்சியில் அனுமதித்திருக்க வேண்டாமே. இப்படி எல்லா சூதையும் நீங்களே பண்ணிவிட்டு அப்பாவி அந்த பவர்ஸ்டாரை அவமானப்படுத்தி நீங்கள் "அப்ளாஸ்" வாங்கியது உங்களது ஈனப்புத்தி என்பதைவிட வேறு என்ன சொல்ல?
சரி இவையெல்லாம் விடுவோம் போலிகௌரவம் குறித்து பேசுவதற்கு தகுதியான ஆளா நீங்கள்? உங்களையே ஒரு கணம் உற்று பாருங்கள் உங்களது உடைகளே போலிகௌரவத்தின் பிரதிபலிப்புக்கள் இல்லையா? தமிழனது ஆடை வேட்டி , சட்டை. அதையா அணிந்து நீங்கள் நிகழ்ச்சி செய்கிறீர்கள்? நமக்கு சற்றும் தொடர்பில்லாத வெள்ளையனின் கோட்டை அணிந்திருப்பது உங்களுக்கு போலிகௌரவமாக தெரியவில்லையா. இந்த உலகுக்கு உங்களை ஒரு "கனவானாக " காட்டுவதற்கு உங்களது உண்மையான அடையாளத்தை நீங்கள் மறைப்பது போலிகௌரவம் இல்லையா? ஆரம்பகால நிகழ்ச்சிகளின் போது அவ்வப்போதுமட்டும் , தேவையானால் ஆங்கிலம் பேசிவந்த நீங்கள் இப்போது அவ்வப்போது மட்டும் தமிழ் பேசுவது உங்களுக்கு போலிகௌரவமாய் தெரியவில்லையா?
இதை கூட நான் பிழை என்று சொல்ல மாட்டேன். போட்டி நிறைந்த இந்த தொலைக்காட்சி சந்தையில் உங்களை சற்று மெருகுகூட்டி காட்டி உங்களை விளம்பரப்படுத்தி விற்பதில் குறியாய் இருக்கிறீர்கள். ( அந்நியனின் மொழியும் , ஆடைகளும் எங்களுக்கு விளம்பரமாய் ஆகிப்போனது எங்களது துரதிஷ்டம்). ஆக நீங்கள் பண்ணுவது விளம்பரம் என்றால் பவர்ஸ்டார் பண்ணுவதும் விளம்பரம் தான். போட்டி நிறைந்த இந்த சினிமா உலகில் தனக்கென ஒரு இடம் பிடிக்க விளம்பரம் செய்கிறார். "பிளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதிங்க" என்று ஒரு எதிர் மறையான விளம்பரம் பண்ணி உங்களது அந்த குறிப்பிட்ட புத்தகத்தை அதிக விற்பனையாக வைத்தவர் தானே நீங்கள்.உங்களுக்கு தெரியாத விளம்பர யுக்தியா? . இல்லை பவர்ஸ்டார் பண்ணுவது விளம்பரம் இல்லை போலிகௌரவம் என்றால் நீங்கள் பண்ணுவதும் போலிகௌரவம் என்பதே நீங்கள் ஜீரணித்தே ஆகவேண்டிய கசப்பான உண்மை.
சரி பவர்ஸ்டாரை ஒரு நடிகனாக பார்த்து அவமானப்படுத்தினீர்கள். அட! அநியாயமே, அந்த பவர்ஸ்டார் என்ற நடிகன் போர்வை போர்த்தியிருந்த சீனிவாசன் என்ற மனிதனின் மனநிலையை சற்று சிந்தித்து பார்த்தீர்களா? இப்போது கூட கோபிநாத் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளனுக்கு பின்னால் இருக்கின்ற சாதாரண மனிதனை கருத்தில் கொண்டுதான் முடிந்த வரை எனது வார்த்தைகளை அடக்கி எழுதுகிறேன். இல்லை, நானும் நீங்கள் அன்று நிகழ்ச்சி செய்த மனநிலையில் இருந்திருந்தால் இது பலர்பார்க்கின்ற பதிவென்றும் பாராது தமிழ்,ஆங்கிலம், சிங்களம் என்று எனக்கு தெரிந்த அத்தனை மொழிகழிலும் உள்ள திருவாய்ப்பாடுகளை உதிர்த்துவிட்டிருப்பேன்.
ஒரு நடிகனாக தனக்கு வரும் விமர்சன கணைகளை தாங்கிகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் , வீம்புக்கு அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகையில் சீனிவாசனாக அவரது மனநிலையை அல்லது அவரது சுயகௌரவத்தை சற்று நினைத்துப்பார்த்தீர்களா கோபிநாத்? நீங்கள் எப்படி அடுத்தவர் சுயகௌரவத்தை பற்றி நினைப்பீர்கள்? "ஒரு கோடி" நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் அழுதார் என்ற காரணத்துக்காக , தேவையே இல்லாமல் அழுதுவடித்து/நடித்து உங்களது சுயகௌரவத்தை குழிக்குள் தள்ளிய உங்களுக்கு அடுத்தவர் சுய கௌரவம் பற்றி கவனம் வர வாய்ப்பு இல்லை தான். உங்களது இந்த கீழ்த்தரமான வேலையை என்னவென்று சொல்வது?
செமத்தியா சிக்கினடா சேகரு! |
ஆனாலும் நீங்கள் என்னதான் தூண்டல் போட்டாலும் சிக்கியது என்னமோ நீங்கள் தான், சாணியை பவர்ஸ்டாருக்கு அடிக்க நீங்கள் கரைத்தாலும் அதை உங்களது முகத்தில் அடித்ததென்னவோ பவர்ஸ்டார் தான். அவரை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் உங்களது கேள்விகள் அமைந்திருந்தாலும் , அந்த கேள்விகள் அத்தனையையும் அவர் புன்னகையுடன் உள்வாங்கியது உங்களுக்கு விழுந்த முதல் அடி. பவர்ஸ்டார் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது பண்ணி உங்களது டி.ஆர்.பீ எகிறலுக்கு காரணமாக இருப்பார் என்ற எண்ணத்தில் நீங்கள் கரைத்த அத்தனை சாணிகளையும் 'சப்பு சப்பு" என்று உங்கள் மூஞ்சியில் சிரித்துக்கொண்டே பவர்ஸ்டார் அடித்ததை பார்த்து ரசிதேன். நீங்கள் தனக்கு குழிவெட்டுகிறீர்கள் என தெரிந்தும் , அத்தனை கேள்விகளுக்கும் அசராது அசால்ட்டாக பதில் சொன்னபோது உங்கள் மூஞ்சியும் , சாதுரியத்தனமும், எவரையும் எந்த உணர்ச்சிக்குள்ளும் கொண்டுபோய்விடும் உங்களது பேச்சும் மொத்தமாய் தோற்றுப்போனதை உணர்ந்தீர்களா? உங்களது பேச்சில் மயங்கி ரசிகனான நான் கூட , பவர்ஸ்டார் உங்களது கேள்விகளுக்கு "அட இது ஒரு கொசுத்தொல்லை ' என்ற தோரணையில் எந்தவித பதட்டமும் இல்லாமல் பதில் தந்த போது ஒருகணம் உங்களது தோல்வியை ரசித்தேன் கோபி சார்!
இங்கே தான் எனக்கு பவர்ஸ்டார் மீது ஒரு அநுதாபம் கூட வந்தது அந்த சிரிப்பில் எந்த கபடத்தையும் காணமுடியவில்லை. ஒரு குழந்தை தனமான சிரிப்பு அது. தன்னை அவமானப்படுத்துகிறார் கோபி என்று தெரிந்தும் எப்படித்தான் பின்னகையோடே பதில் தர முடிந்ததோ? அதிலும் "உங்களது எதிரிகள் யார்" என்று கோபி கேட்கவும் "முதலாவதே நீங்கள் தான் " என்று "சடார்" என்று ஒரு பதிலடி தந்தது தான் அந்த ஷோவின் ஹைலைட்.
மிஸ்டர் கோபிநாத்! "காமடி வட்டத்துக்குள் இருந்து வெளியே வாருங்கள், ஊடகங்களுக்கு சீரியசாக பதில் சொல்லுங்கள்" என்று பவர்ஸ்டாருக்கு அறிவுரை சொல்கிறீர்களே, ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் , அந்த காமடியான வேடம் பவர்ஸ்டார் அவராகவே விரும்பி அணிந்துகொண்டிருப்பது, அதை அவரே பலமுறை உங்களுக்கு கூறியும் நீங்கள் மூப்பர் முந்திதிரிக்கொட்டை வேலைக்குத்தான் போகிறீர்கள். அந்த காமடி இமேஜை தான் அவரும் விரும்புவதாக அவரும் சொல்கிறார். மக்கள் தன்னால் பொழுது போக்குகிறார்கள், சந்தோஷப்படுகிறார்கள் என்றால் அது போதும், தூற்றுவார் குறித்து கவலையில்லை என்று அவர் சொல்லியும் அவரது வேடத்தை மாற்றுகிறேன், இமேஜை மாற்றுகிறேன் என்று நீங்கள் இழவெடுத்தது கொஞ்சம் ஓவர் சார்!
அது போக ஒரு கலைஞன் என்பவன் மக்களை சந்தோஷப்படுத்தினால் அதுதான் அவனுக்கு வெற்றி, பவர்ஸ்டாரை பொறுத்தவரையில் அவர் ஏதோ ஒருவகையில் மக்களை சந்தோஷப்படுத்துகிறார், அதை அவரும் விரும்புகிறார். இடையில் போய் நீங்கள் ஒரு ஆணியும் புடுங்க தேவையில்லை. மூன்று நிமிஷம் முக்கிப்பிடித்து மூச்சுவிடாமல் பேசினால் நீங்கள் சொல்வது எல்லாம் சரியென்று ஆகாது கோபிநாத்! உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள எவளவோ இருக்கென்று நினைத்தேன், ஆனால் இப்போது நானே சொலிகிறேன் நீங்கள் இன்னும் வளரணும் கோபிநாத்! கத்துவதால மட்டும் வளந்திடமுடியாது, போய் அம்மாவ காம்பிளான் குடுக்க சொல்லி குடித்தாலும் வளர முடியாது. மாறாக உங்களில் பெரியவரோ சிறியவரோ முதலில் அவர்களை மதிக்க பழகுங்கள். அதுபோக உங்களுக்குள் சமீபத்தில் வளர்ந்திருக்கும் அந்திய கலாசார , மொழி மோகத்தையும் இந்த தலைக்கனத்தையும் முதலில் தூக்கிப்போடுங்கள். அப்புறம் என்ன காம்பிளான் சாப்பிடாமலேயே வளர்ந்து விடுவீர்கள்.
டிஸ்கி:- அந்த ஷோவை எத்தனை பேர் பார்த்தீர்களோ தெரியாது. எனது எழுத்துக்கள் அந்த சம்பவத்தின் கனாகனத்தின் பாதிதான், இங்கே போய் வீடியோவையும் பார்த்துவிடுங்கள், மனசாட்சி உள்ளவராக இருந்தால் எனது கூற்றோடு ஒத்துபோவீர்கள் என நம்புகிறேன்.
நச் போஸ்ட்............ இதை என் கூகிள் ப்ளஸ்சில் பகிர்கிறேன்
ReplyDeleteஅட ராமசாமி அண்ணே! நீங்க என்னோட பிளாக்குக்கு வந்ததே நான் பண்ணின புண்ணியம் அண்ணே! இதில என்னோட பதிவ நீங்க பகிர போறீங்களா? அடங்கொன்னியா..... குடுக்கிற தெய்வம் கூரைய பிச்சிகின்னு குடுக்கும்கிறது இதுதானா? சத்தியமா எனக்கு கூகிள் பிளஸ்னா என்னான்னே தெரியாதுண்ணே... ஆனா, ஒண்டுமட்டும் நிச்சயம், எனது பதிவை நான் மிகவும் நேசிக்கும் அல்லது மதிக்கும் ஒரு பிரபல பதிவர் தனது தளத்தில் பதிந்த நாள் எனது பதிவுலக வாழ்வில் ஒரு மைல் கல். இது எனது பிளாக்கில் நீங்கள் பின்னூட்டம் இடும் மூன்றாவது பதிவு. ரொம்ப தாங்க்ஸ்ணே!
Deleteகோபிநாத் பவர்ஸ்டாரை மட்டுமல்ல பல வேளைகளில் நிகழ்ச்சியில் பங்குபெறும் பலரையும் மட்டம் தட்டுவதில் வல்லவர். அவருக்கு நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் பெண்களை மிகவும் பிடிக்கும். நல்ல பதிவு.
ReplyDeleteஅண்ணே வந்தியத்தேவன் அண்ணே! பதிவுலகின் முன்னோடி பதிவர்களில் பன்னிகுட்டிராமசாமி, சி.பி வரிசையில் நான் மரியாதை வைத்திருக்கும் ஒரு பதிவர் நீங்கள். உங்களது வருகைக்கு ரொம்ப நன்றி, தாங்கள் எனது பதிவை பாராட்டியிருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம்.
Deleteஇந்த கோபிநாத் பயலின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே போகுதுண்ணே...... நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் பெண்கள் மட்டுமல்ல இப்போதெல்லாம் அன்ரிகளிடம் கூட வழிகிறார் மனிதர்.
மிகவும் திட்டமிட்டு பவர்ஸ்டார் அவமானப்படுத்தப்பட்ட தருணம். அதுபோக, பவர்ஸ்டாரை அவமானப்படுத்தினால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிற பருமட்டான எதிர்பார்ப்புடன் நிகழ்ச்சியை நடத்தி மோசமான கருத்துக்களை வாங்கியிருக்கிறது பார்வையாளர்களிடம் விஜய் ரீவி.
ReplyDeleteநிச்சயமாக கோபிநாத் வாய்ஜாலங்கள் நிறைந்த மனிதரே அன்றி; மிகச்சிறந்த தொகுப்பாளர் கிடையாது.
////மிகவும் திட்டமிட்டு பவர்ஸ்டார் அவமானப்படுத்தப்பட்ட தருணம். அதுபோக, பவர்ஸ்டாரை அவமானப்படுத்தினால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிற பருமட்டான எதிர்பார்ப்புடன் நிகழ்ச்சியை நடத்தி மோசமான கருத்துக்களை வாங்கியிருக்கிறது பார்வையாளர்களிடம் விஜய் ரீவி. //////
Deleteஅந்த நினைப்பில் தான் கோபி அத்தனை அழிச்சாட்டியமும் பண்ணினார். ஆனால் கொஞ்சம் பதிவுலகுக்கு வந்து பார்த்தால் கோபி தூங்குவதற்கு கூட நேரமிருக்காது போல இருக்கிறது, அந்தளவு பவர்ஸ்டாருக்கு ஆதரவும் கோபிக்கு அடியும் கொட்டி கிடக்கிறது இங்கு. வருகைக்கு நன்றி திரு மருதமூரான் அவர்களே. ஒரு வேடிக்கை பாருங்கள் , பவர் ஸ்டாரால் எனது தளத்துக்கு பிரபல பதிவர்கள் கூட்டமே வந்திருக்கிறது. ( பன்னிகுட்டி ராமசாமி, வந்தியத்தேவன், மைந்தன் சிவா, மருதமூரான்) பவர்ஸ்டார் வாழ்க!
கோபி நாத் பற்றி நீங்கள் சொன்னது அத்தனையும் ஏற்று கொள்ள தகுந்தது. எழுத்தாலன் சமூக சேவகன் என்ற பெயரில் செல்வபுவியரசு என்று ஒருவன் பேசினானே அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை? அடுத்தவர்கள் மேல் சாணி எறிவது என்பது சமீபத்திய தமிழக கலாசாரமாக மாறி வருகின்றது.
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோதரி! செல்வபுவியரசு!!!!????????? சத்தியமாக சொல்கிறேன் அவர் யார் என்று கூட தெரியாது, ஒரு பிரபல எழுத்தாளன் அல்லது யாராவது ஒரு பிரபலம் ஏதாவது சொல்லியிருந்தால் அதை பற்றி பேசுவது நியாயம். அந்த கொசு யார் என்றே சத்தியமாக எனக்கு தெரியாது. அதை பற்றி எழுதப்போய் , அந்த சாக்கடை புழுவை நாம் ஏன் பிரபலமாக்க வேண்டும் சொல்லுங்கள்?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநான் ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத்தின் நீயா நானவை பார்க்கும் ஒருவன்
ReplyDeleteஇறுதி நேரத்தில் அவர் எப்படியோ முடிவில் தனது சொன்ன கருத்தை தின்னித்து விடுவர்
இது அவர்க்கு நல்ல ஒரு சாட்டை அடி
நானும் உங்களை போல ஒருவனாகத்தான் இருந்தேன். அவரது ஆரம்பகால முடிவுகளின் திணிப்புகளிள் ஒரு நியாயம் இருந்ததாக எனக்கு பட்டது. ஆனால் இப்போது தனக்கு நியாயம் என்று படுவதை மட்டுமே திணிக்கிறார் இந்த கோபி... சாரி படு பாவி....
Deleteபாராட்டுகளுக்கும்,வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பா....
எனது நண்பர் ஒருவர் (சரவணா RSK ) அறிமுகபடுத்தியே நான் உங்கள் பதிவுலகத்திற்கு வந்தேன். உங்கள் பதிவு உண்மையிலேயே அருமை. முக்கியமாக மனதில் நினைத்ததை அப்படியே பதிவிட்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்தது.
ReplyDelete//நீங்கள் கரைத்த அத்தனை சாணிகளையும் 'சப்பு சப்பு" என்று உங்கள் மூஞ்சியில் சிரித்துக்கொண்டே பவர்ஸ்டார் அடித்ததை பார்த்து ரசிதேன்.//
//பவர்ஸ்டாரை பொறுத்தவரையில் அவர் ஏதோ ஒருவகையில் மக்களை சந்தோஷப்படுத்துகிறார், அதை அவரும் விரும்புகிறார்//
தலைக்கனம் ஏறியவர்களுக்கு (கோபிநாத்) இதெல்லாம் புரியாது. என்ன செய்வது? நானறிந்தவரை பவர் ஸ்டார் யாரையும் தனது பேச்சால் காயப்படுத்தியதில்லை. இந்த ஒரு விஷயம் போதாதா பவர் ஸ்டார் பற்றி தெரிந்து கொள்ள.
ஓ! நண்பர் சரவணா எனக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் செய்கிறாரா? ரொம்ப தாங்ஸ் அண்ணே! அது போக இந்த மொக்க பிளாக்குக்கு வந்து இத்தனை பதிவுகளையும் பொறுமையா படிச்ச உங்களுக்கு நன்றி தலைவா!
Deleteஉங்களை பிரபஞ்ச பவர்ஸ்டார் மன்றத்தில் வாண்டட்டாக இணைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
சம்மந்தப்பட்ட அந்த நிகழ்ச்சி பார்த்த கணத்தில் கோபிநாத்தின் மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் இருந்த இடம் தெரியாமல் போனதென்னவோ உண்மை...! அருமையான செருப்படி அறிவாளி(?!) கோபிக்கு...!
ReplyDeleteஅருமையான பதிவுக்கு நன்றி சகோ.