உதைபந்து

Showing posts with label மரண மொக்கை. Show all posts
Showing posts with label மரண மொக்கை. Show all posts

Friday, October 19, 2012

விபச்சாரத்துக்கு முன் அனுபவம் தேவையா? - பிச்சைகாரன் வாந்தி!




இரண்டு பிரபல பதிவர்கள்  சந்தித்துக்கொண்டால் .......

மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? : "இவனுகள் எப்ப பாரு சினிமாவ பத்தியே பேசுவானுகள்."

பொண்ணுங்க என்ன நினைக்கிறாளுக? : "ஏதோ சீரியசா பேசுற மாதிரி பில்டப்பு குடுத்து நம்மளத்தான்டி ஜொள்ளு ஒழுக பாக்குறானுக"

வீட்ல இருக்கிறவங்க என்ன நினைப்பாய்ங்க? : " விடிஞ்சா பொழுதுபட்டா இதே பொழப்பு, கண்ட கண்ட எழவ கதைக்கிற‌துக்கு ஒரு மீட்டிங்கு

வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள்? : "மச்சி !!! யாரோ இன்னொருத்தன கய்வி ஊத்துறதுக்கு பிளான் பண்ணுறாய்ங்கடா"

ஆனால் உண்மையில் என்ன பேசுவார்கள்? : அமேரிக்க அரசியலின் ஸ்திரத்தன்மை, ஒபாமா பதவியில் இருக்கலாமா வேண்டாமா? வட அமெரிக்க நாடுகளின் பொருளாதரத்தை தூக்கி நிறுத்த என்ன பண்ணலாம்? சமந்தா உண்மையில் அழகா இல்ல மேக்கப்பா மச்சி? கேத் மிடில்டனுக்கும் வில்லியமுக்கும் செட்டாகும்ங்கிற?

நீதி : பிரபல பதிவர்கள் ஒரு பின்நவீனத்துவமாய் சிந்திப்பவர்கள். ஒபாமா ஆட்சியில் இருக்கிறதும் இருக்காதும் அவரோட இஷ்டம், எங்கட பேச்சக்கேட்டு அவரு பதவி விலகி சோத்துக்கு சிங்கியடிசா.... அதுக்கு சங்கம் பொறுப்பாகாது.

# கொழும்பு முத்தமிழ் விழாவில் சந்தித்துக்கொண்ட சில பதிவர்கள்.

********************************************************************************


கிரிக்கட்டில் நடனம் ஆடும் பெண்கள் மொக்கையா இருந்தால் அவர்கள் முதற்கொண்டு அரசாங்கம் வரை திட்டி தீர்க்கிறோம். இன்று அழகுப் பதுமைகளாக ஏழெட்டு பெண்கள் ஆடி முடித்து போய்விட்ட பின்னர் அவர்கள் ஆடிச்சென்றது பரதமா , கதகளியா , குச்சிப்புடியா, டப்பாங்குத்தா என்று கூட தெரியவில்லை. அவர்கள் முகம் மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது. ஓவர் அழகாக இருந்தாலும் மனம் நடனத்தில் லயிக்குதில்லை!

#மானம் கெட்ட மனது! 


*********************************************************************************"



ஒரே பெண்ணை இருவர் காதலிப்பதால் ஏற்படும் முரண்பாடுகளால் மோதிக்கொள்ளும் இளைஞர் குழுக்கள் கூட, மேடையில் ஒருவர் நின்று , உரையாற்றுகிறேன் பேர்வழியென்று அறுத்துக்கொண்டு இருந்தால் அவரை அவரது பேச்சின் இடைநடுவில் கைதட்டி வழியனுப்பி வைக்கும் சுப காரியத்துக்காக ஒன்று கூடி விடுகின்றார்கள்.

# கொழும்பு முத்தமிழ் விழா அனுபவம்

*********************************************************************************


நான் : தல! நானும் இந்த ரோட்ல தான் காலா காலமா சுத்துறேன், ஆனா இப்போ இந்த மேடையில ஆடுற அழகிகளை கண்டதே இல்லையே

விருது நாயகன் : சத்தியமா பாத்திருப்ப ......... ஆனா அழகிகள் என்று நினச்சிருக்க மாட்ட......

நான் : ஓ! சமந்தாவின் சகோதரிகள்.........

# இது ஒண்ணும் பின்னவீனத்துவ உரையாடல் கிடையாது. எல்லாம் ஃபுல் மேக்கப்புன்னு சொன்னேன்.



*********************************************************************************



"எனது தோல்விகளின் போதும், தடுமாற்றங்களின் போதும் நீங்கள் என்னுடன் கூட இருக்கவில்லையெனில், எனது வெற்றிகளின் போதும் என்னோடு கூட இருப்பதற்கு எதிர் பார்க்காதீர்கள். "

_இது வில் ஸ்மித் சொன்னது_

"நீ ஒரு அட்டுப்பிகரு போகும் போது கூட என்னிடம் அதை காண்பிக்காமல் ரகசியமாக பார்த்திருப்பாயானால், ஒரு சூப்பர் ஃபிகர் தெருவில் போகும் போது உன்னை சுரண்டி அவளை நான் காண்பிப்பேன் என நினைக்காதே."

_இது பதிவரு சொல்றது_

*********************************************************************************

"கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை யுத்தக்குற்றங்களுக்கு இணையான கண்ணோட்டத்துடன் சர்வதேசம் அணுகவேண்டும்."

_ஐ.நா. சொன்னது_

"க்கும்..... இங்க நடந்த யுத்த குற்றத்துக்கே சர்வதேசம் இன்னமும் ஒரு முடிவை கண்டபாடில்ல.. இதுக்குள்ள இது வேற‌.........""

_பதிவரு சொல்றது_



*********************************************************************************



கொழும்பின் கொம்பனித்தெரு 99 வருட குத்தகையின் கீழ் இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதற்காக வேண்டி  எட்டு ஏக்கர் பரப்பளவான பகுதியின் கீழ் குடியிருந்த 456 குடும்பங்கள் அந்த பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டும், அந்த பரப்பு முழுவதும் அரசுடமையாக்கப்பட்டு இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டுள்லது. துரத்தப்பட்ட மக்களுக்கு வெகு சீக்கிரத்தில் மாற்றிடங்கள் அதாவது இரண்டு வருடங்களில் மாற்றிடங்கள் அமைத்துக்கொடுக்கப்படுமென அரசு அறிவிப்பு. ( அது வரைக்கும் மக்கள் அனைவரும் தம்பனை மற்றும் வில்பத்து காடுகளில் வேடுவர்களோடு வாழவர் என எதிர்பார்க்கப்படுகிறது)

# செய்தியை படித்து விட்டு தூங்கிப்போனேன். கொழும்பில் வாழும் மக்கள் அனைவரினதும் கிட்னியை சீனாவுக்கு இலங்கை அரசு விற்றுவிட்டதாக கனவு வந்தது. உடனே செய்தியை பாக்கணும் , கனவுதானா இல்ல அதுவும் நடந்திருச்சான்னு பாக்க.

*********************************************************************************

உலகில் இந்த ஒரு தொழிலில் மட்டும் தான் அதிக தொழில் அனுபவம் உள்ளோருக்கு குறைவான ஊதியமும், குறைவான தொழில் அனுபவம் உள்ளோருக்கு அதிக ஊதியமும் கிடைக்கிறது. ஏனைய தொழில்களில் நேர்மாறான நிலை தான் இருக்கிறது.

# விபச்சாரம்

_என்னோட இன்றைய ஃபேஸ்புக் ஸ்டேடஸ்_

*********************************************************************************

எனக்கு உயிர்களை கொன்று பசியாற வேண்டும் என்ற எந்த எண்ணமும் கிடையாது. காட்டுப்பன்றி இறைச்சியும், கணவாயும், ஆட்டிறச்சியும் மரத்தில் காய்க்குமாக இருந்தால் வெஜிடேரியனாக இருப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது.

_என்னோட இன்றைய ஃபேஸ்புக் ஸ்டேடஸ்_



*********************************************************************************


சைவ உணவுகள் அசைவ உணவுகள் தொடர்பில் எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு வாதம் போய்க்கொண்டிருந்தது. சில மணிநேர வாதத்துக்கு பின்னர் .......


" சேவல் மூலம் உற்றத்தியாகாமல் , ரசாயனங்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் கோழி முட்டைகளை சைவத்துக்குள் சேர்த்து உண்ணலாம் என்று சொன்னேன்.

அது எப்படி சைவமாகும் என்றான்.

அந்த முட்டையால் எந்த உயிரையும் உற்பத்தி செய்யமுடியாததால் , அதாவது அதன் சந்ததியான கோழி குஞ்சை பிறப்பிக்க  முடியாததால் அதனை சைவத்துக்குள் சேர்த்து உண்லாம் என்று சமாளித்து அனுப்பி வைத்தேன்.

சில நாட்களின் பின்னர் ஒரு சைவ விருந்து உண்ண என்னை வீட்டுக்கு அழைத்திருந்தான். எனக்கும் சைவத்துக்கும் சுத்தமாய் ஆகாது. ஆனாலும் நண்பன் அழைக்கிறான் என்று போயிருந்தேன். கண்டிப்பாக அந்த சைவ முடை விருந்தில் இருக்கும் என்று எனக்கு தெரியும்.

சைவ விருந்து என அழைக்கப்பட்ட எனக்கு ஆச்சரியம். என் உணவு தட்டு பூராவுமே ஊர்வன , பறப்பன, நகர்வன எல்லாம் செத்து கிடந்தது. 

எல்லாம் சைவம் தான் சாப்பிடு என்றான் நண்பன். 

எப்பிடிடா என்றேன் நான். 

அது ஆம்பிள நண்டு, அது ஆம்பிள ஆடு, அது ஆம்பிள மாடு, அது ஆம்பிள கணவாய் எல்லாமே ஆம்பிள மச்சி! எதுவுமே குட்டி போடாது, இனத்தை உற்பத்தி செய்யாது, சுத்த சைவம் சாப்பிடு மச்சி என்றான்.

அவனின் அறிவுத்திறனை வியக்கும் அளவுக்கு எனக்கு அவகாசம் இருக்கவில்லை. என் கவனம் பூராவுமே அந்த நண்டின் காலை உடைத்து உள்ளே தள்ளுவதிலேயே இருந்தது.



டிஸ்கி : நண்பா ஹாரி! உன்னோட கதை ஞாயிறு விசேட வெளியீடாக வெளிவரும்.


Friday, September 28, 2012

இங்கே காண்டம் மொத்தமாக விற்கப்படும்! - அணுகவும்!!




எனக்கு நம்ம நாடு அடைஞ்சிருக்கிற வளர்ச்சிய பாக்கச்சொல்ல ரொம்ப சந்தோசமாக்கீது..... முன்னாடி எல்லாம் குடும்பக்கட்டுப்பாடு பண்ணிக்கோங்கோ... பண்ணிக்கோங்கோன்னு அரசாங்கம் ரேடியாவில கூவிக்கிட்டு இருந்திச்சு. அப்புறம் போஸ்டர் அடிச்சு ஒட்டிச்சு, அதுக்கும் அப்பால டி.வி இண்டெர்நெட்டு அப்டீன்னு வெளம்பரம் டெவலப்பு ஆகி இன்னைக்கு மக்கள் அதிகமா ரசிக்கிற சினிமா வரைக்கும் அந்த வெளம்பரம் பாஞ்சி இருக்குன்னா அதுவே பெரிய சாதனை தானே!  அதுவும் இப்பெல்லாம் பிரம்மாண்ட தமிழ் சினிமாக்களே நூறு கோடிக்குள் வந்துடுற போது , ஆயிரம் கோடிக்கும் மேல செலவழிச்சு , வெள்ளக்கார பயலுகள நடிக்கவிட்டது மட்டுமில்லாம, வெளிநாட்டு டெக்கினாலஜி எல்லாம் புகுத்தி படம் எடுத்து அரசாங்கம் ரிலீஸ் பண்ணுதுன்னா , கரண்டு பிரச்சினைய தூக்கி தூரத்தில போட்டிட்டு அரசாங்கத்துக்கு கோவில் கட்டுற வேலைய பாருங்கப்பா! 


இப்புடி அரசாங்கத்தோட ஐந்தாண்டு திட்டத்தில வந்த ஒரு குடும்பக்கட்டுப்பாடு படம் தான் "காண்டம் ஆஃப் ஹோல் சேல்ஸ்" ( சில இங்கிலீசு தெரியாதவங்க அல்லது பிரிட்டிஷ் இங்கிலீஸ் பேசுறவங்க இத்த "குவாண்டம் ஆஃப் சோல‌ஸ்" அப்டீன்னு வாசிச்சிருப்பாய்ங்க, கண்டுக்காதிங்க!) அட! இந்த காண்டம் படத்தை இங்கிலீசில போட்டிருக்காங்களே , தமிழ் தெரியாத பாமரன் என்ன பண்ணுவான்? ஒரு பிரபல பதிவரான , அதே நேரம் தமிழ் பற்று மெத்திப் போன , சமூக அக்கறை உள்ள ஒரு பதிவரா நான் தானே அத்த மொழி "பேர்ப்பு" செய்யணும்! அது என் சமூக கடமை ஆகிறது! அதனால "காண்டம் ஆஃப் ஹோல் சேல்ஸ் " அப்டீங்க்கிறத காண்டம் மொத்த விற்பனை நிலையம் அல்லது காண்டம் மொத்தமாக இங்கே விற்கப்படும் என மொழி பெயர்க்க தமிழ் இடம் கொடுத்ததால் ரெண்டாவது ஆப்ஷனையே செலக்டு பண்ணிட்டேன்! அப்புறம் அரசாங்கம் சேக்க மறந்த வார்த்தையான "அணுகவும்"ங்கிறத சமூக பருப்புணர்வோடு நானே போட்டுக்கிடேன்.



இந்த காண்டம் வெளம்பரத்தில முக்கியமானது என்னான்னா, சுமார் ஒன்றரை மணிநேரம் ஓடுது... கடைசி வரைக்கும் கதநாயகனுக்கும் கதாநாயகிக்கும் கொழந்த பொறக்காம காட்டியிருக்கிறதிலேர்ந்து என்னா தெரியுதுன்னா , காண்டம் போடுக்கிட்டா என்ன கில்ம பண்ணினாலும் கொழந்த பொறக்காதுங்கீறது தான். அப்புறம் இன்னும் செல விஞ்ஞான உண்மைகளும் எனக்கு புரிஞ்சிது, என்னான்னு கேடீங்கன்னா... காண்டம் குடும்ப கட்டுப்பாட்டு முறை , எயிட்ஸ் தடுப்பு முறை அப்டீங்கிற கட்டத்தை தாண்டி  , காண்டம் போட்டுக்கிட்டா நல்லா காரு ஓட்டலாம், பயங்கரமா சண்டை போடலாம், வில்லனுகளை பொரட்டி பொரட்டி எடுக்கலாம்ங்கிற உண்மை எனக்கு தெரிஞ்சிது. அதிலும் குறிப்பா காண்டம் போட்டுக்கிட்டா மூளை நல்லா வேல செஞ்சி நல்ல ஞாபக சக்தி, கற்பனா வளம் அதீத யோசனை செய்யும் திறன் எல்லாம் வரும் அப்ப்டீன்னும் சொல்லபட்டிருக்கு.எக்ஸாமுக்கு படிகிறவய்ங்க, அப்புறம் வாய்க்கால் தகராறு இருக்கிறவய்ங்க, அப்புறம் இன்னமும் ஒழுங்க கார் ஓட்ட தெரியாம லைசென்சு எடுக்காதவய்ங்க எல்லாம் இந்த காம்ளான், சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் விட்டொழிச்சிட்டு ஆளாளுக்கு ஒண்ணு மாட்டிக்கிட்டு அலையிறது நன்மை பயக்கும்ங்கிற புது கண்டுபிடிப்பை இந்த வெளம்பரத்தோட டைரக்டரு சொல்லியிருக்காரு.

சேன் கொனேரே


அப்புறம் படத்தோட நாயகனை பத்தி சொல்லவே வேணும் டேனியேல் கிரேக் அப்டீன்னு ஒருத்தரு. கேட்டா ஜேம்ஸ் பாண்டு நட்கர் அப்டீன்னு சொன்னாய்ங்க! ஆள பாத்தா அப்டி தெரியவே இல்ல, நானும் நெறைய ஜேம்ஸ் பாண்டு படம் பாத்திருக்கேன். "சேன் கொனேரே" மொதோக்கொண்டு இப்ப இந்த கிரேக் வரைக்கும் பாத்துட்டேன். எனக்கு என்ன தோணுதுன்னா , இந்த காண்டம் வெளம்பரத்துக்கு மட்டுமில்ல ஜேம்ஸ் பாண்டு படத்துக்கே இந்தாளு லாயக்கு இல்ல.


ஜேம்ஸ் பாண்டு யாருன்னா ஒரு ரகசியா ஏஜெண்டு, புத்திசாலித்தனமான, ஹேண்ட்சமான, பெண்கள் விசயத்தில் ஒரு நித்தியானந்த தனமான ,என்னேரமும் தனது மிஷன் பற்றி எதையோ சிந்தித்துக்கொண்டு அதே நேரம் அதனை வெளியில் காட்டாமல் ஒரு மர்ம புன்னகையோடு வலம் வரும் திறமையான ஏஜெண்டு. இது இயன் பிளேமிங்கோட சிந்தனைல வந்தது. ஆரம்பத்தில சிறுகதை, அப்புறம் நாவல், இப்போ படம் வரைக்கும் வந்திரிச்சு.


பிளேமிங்கோட கற்பனைக்கும் அல்லது ஜேம்ஸ் பாண்டு தொடர்பில் நம்மளோட மைண்ட்ல உண்டாகி இருக்கிற இமேஜுக்கும் இந்தாளுக்கும் (டேனியல் கிரேக்) ரொம்ப தூரம். இவரோட ஜேம்ஸ் பாண்டு படங்களை விட இவரு நடிச்ச "டிஃபென்ஸ்" படம் சூப்பரா இருக்கும். அந்த மாதிரி ஏதாவது ட்ரை பண்ணி இருந்தா இன்னேரம் இதை விட பெரிய எடத்தில் இருந்திருப்பாரு. 


ஜேம்ஸ் பாண்டு அப்டீன்னா எனக்கு ஒடனே ஞாபகம் வாறது யாருன்னா அது "பேர்ஸ் ப்ரோஸ்னன்" தான். யப்பா! ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்காகவே செய்த மாதிரி ஒரு முகம், துறு துறுன்னு எதையோ தேடும் கண்கள், நித்தியானந்த தனத்துக்கு ஏத்த வாட்டமான முகம், சேசிங் பண்றதுக்கு வாகான கட்டுமஸ்தான் உடல் , யாரோடும் பேசு போதும் தனக்கு ஏதாவது பாயிண்டு சிக்குமாங்கிற ஜேம்ஸ் பாண்ட் தோரணை மேனரிசம், முகத்திலே தெரியும் ஒரு புத்திசாலித்தன களைன்னு ஒரு மார்க்கு கொறையாத ஜேம்ஸ் பாண்டு அவரு தான்.அவரோட "டை எனதெர் டே", "டுமாரோ நெவெர் டை" இந்த ரெண்டு படத்தையும் எத்தின வாட்டி வேணுமனாலும் பாக்கலாம், அவ்ளோ சுவாரசியமான நடிப்பு, மேனரிசம்!

பேர்ஸ் ப்ரோஸ்னன்

ப்ரோஸ்னனுக்கு முன்னாடி இருந்த ஜேம்ஸ் பாண்டுகளில் முதலாவது ஜேம்ஸ் பாண்டான சேன் கொனேரே கூட பரவாயில்லை, ஒரு ஜேம்ஸ் பாண்ட் களை இருந்தது, ஆனா என்ன , இன்வஸ்டிகேட் பண்ற மேனரிசத்தை முகத்திலும் கண்ணிலும் காடுகிறேன் பேர்வழின்னு அப்பப்பொ ஏதோ திருட்டு ஆட்ட இருட்ல சமச்சு தின்னவனாட்டம் ஒரு முழி முழிப்பாரு பாருங்க, ஏது இந்தாளே தன்னய காட்டி குடுக்கப்போறானே பாவம்னு ஒரு பரிதாப உணர்ச்சி வர்றத தவிர்க்க முடியிறது இல்ல. ஆனாலும் இவரோட இன்டியானா ஜோன்ஸ் நல்லாவே இருக்கும்!


 அது போல ரோஜர் மூர் கூட நல்ல தெரிவு தான் என்றாலும் ரொம்ப கிழண்டு பொனதுக்கு அப்புறமும் அவரு பண்ன ரவுசு + ஆக்ஷன் அதகளங்களை அவரு ஒரு ஜேம்ஸ் பாண்ட் ஏஜெண்ட்ன்ன போதும் ஏத்துகொள்ள முடியாம இருந்திச்சு. அவரு ரவுசு பண்ணும் போது சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு சம்பவம் தான் ஞாபகம் வந்திச்சு. ஆடு மேய்க்கப்போன இடத்தில் ஜாலியாக இருக்க அழைத்த போது வரமறுத்த 56 வயது மனைவியை மார்பு மற்றும் மர்ம ஸ்தானத்தில் கத்தியால் குத்திய 63 வயது கணவன் கைது!


இப்போ நம்ம டானியேல் கிரேக்கு! மொதோ படமான "கசினோ ரோயல்" படத்திலேயே மனிதரை பாக்க பாவமா இருந்திச்சு. ஜேம்ஸ் பாண்ட் என்றால் எந்த மிஷனையும் ஒரு ஜாலியாக அசால்ட்டாக , சாதூரியமாக செய்பவன் என்ற இமேஜ் இருக்க , பாவம் நம்மாளு ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க்றாப்ல மூஞ்சிய வச்சிக்கிட்டு இருந்தாரு. இந்த காண்டம் வெளம்பரத்தில கூட பாருங்க ஜேம்ஸ் பாண்டடின் அந்த பாடி லாங்குவேஜ் மேனரிசம் மிஸ்ஸிங். எதையோ இன்வஸ்டிகேட் பண்ணுவது போல் பாருன்னா , அவசரமா ஒன்னுக்கு வரும் போது , நாம எந்திரிச்சு போக முடியாத ஏதும் முக்கியமான மீட்டிங்கல இருந்தோம்னா , நெளிஞ்சுக்கிடே ஒரு ஃபேஸ் எக்ஸ்பிரஷன் குடுப்போம் பாருங்க... அந்த மாதிரி குடுத்திருப்பாரு. அதுவுமில்லாம அநியாயத்துக்கு ரொம்ப சீரியசா இருப்பாரு அண்ணன்! ஒரு வேள "தம்பி இது ஜொனி இங்கிலீஷ் கிடையாது, சீரியசான ஜேம்ஸ் பாண்ட் படம், சீரியசா நடிக்கணும்"ங்கிறத தப்பா புரிஞ்சிக்கிட்டாரோ என்னமோ? கிரேக் ஒரு நல்ல நடிகர் தான் ஆனா ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்துக்கு ரொம்ப ச்சாரி.......... பாப்போம் ஏதோ "ஸ்கை ஃபோல்" அப்டீன்னு ஒரு படம் பண்றாராம்... எது வுழப்போதோ?



எனக்கு என்னான்னா , அந்த காண்டம் வெளம்பரத்தை இன்னும் கொஞ்சம் பெட்டரா எடுத்திருக்கலாமோன்னு தோணுது, இந்த வெள்ளக்காரனோட காண்டம் வெளம்பரத்துக்கு நம்மூரு "மூட்ஸ்" காண்டம் வெளம்பரம் எவ்வளவோ தேவல!

டானியேல் கிரேக்




Monday, July 23, 2012

வெள்ளைக்காரனுக்கு மட்டுமே பல்லக்கு தூக்கும் தமிழ் பதிவர்கள்! "பேட் மேன்" விமர்சனம்!


படத்தில் பேட் மேன்!





இப்போ எந்த தமிழ் திரட்டியை திருப்பினாலும் ஆளாளுக்கு பேட் மேன் விமர்சனம் போட்டு அசத்துறாய்ங்க! அவனவன் ஹிட்ஸ் சும்மா எகிறுது! ஹிட்ஸ் எல்லாம் நமக்கு ஒரு பெரிய பொருட்டே கிடையாது என்றாலும் , ஃபேஸ்புக்கில் நண்பர் தினகரன் ரேணுகா ஒரு வேண்டு கோளை முன்வைத்தார்! அதாவது எனது பாணியில் பேட் மேன் விமர்சனம் எழுத வேண்டுமென்று. ஐம்பது பதிவு தான் எழுதியிருக்கேன், ஆனாலும் இன்னும் எனது பாணி என்னவென்று எனக்கே தெரியாது ! இருந்தாலும் கொழந்தை ( அண்ணே தினகரன் அண்ணே! இப்போ சந்தோசமா?) ஆசப்பட்டுச்சேன்னு நானும் பேட் மேன் விமர்சனம் போட்டுடலாம்ன்னு களத்தில குதிச்சிட்டேன்!

எமது மக்களாகட்டும் சரி , பதிவர்களாகட்டும் சரி ஆங்கில மோகத்துக்கு கொஞ்சம் அடிமையானவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமே! அதனால தான் இந்த வெள்ளைக்கார பேட் மேன் பற்றிய விமர்சனம் எங்கும் வியாபித்து இருக்கிறது. யாரோ கிறிஸ்டோப்பர் நோலனாம் ! பெரிய அப்பாட்டாக்கராம்! அவரது இயக்கத்தில் கிறிஸ்டியன் பேல் பேட் மேனாக நடித்து   வெளியாகி இருக்கிறது இந்த பேட் மேன்!

பிரம்மாண்டம், தொழிநுட்பம், அசத்தும் இசை, நேர்த்தியான ஒளிப்பதிவு , கிறிஸ்டியன் பேலின் அர்பணிப்பான நடிப்பு ஆகியவற்றால் இந்த பேட் மேன் அனைவரது வரவேற்பையும் பெற்றிருப்பதாக பலரும் தங்களது பதிவுகளில் வண்டி வண்டியாக எழுதி தள்ளுகிறார்கள். ஆனாலும் பேட் மேன் எதிர் பார்த்த அளவு இல்லை என்றும், சுமார் தான் என்றும் கிறிஸ்டோப்பர் நோலன் ஆதரவாளர்களே கூறியிருப்பதாகவும் படிக்கிறேன். சரி ! பாக்கலாம் எத்தனை கொம்பன்கள் பதிவு எழுதினாலும் , எனக்கு  அடுத்தவர் ஒரு ஆங்கில படத்தை சிபாரிசு செய்து ,அதை நான் பார்ப்பதாக இருந்தால் அது நம்ம JZ பதிவுல போட்ட படங்கள் மட்டுமே! ( நானாக சில நல்ல படங்களையும் பார்ப்பதுண்டு) . எனக்கு என்னமோ JZஇன் பதிவுகளில் அவ்ளோ நம்பிக்கை! பயலுக்கும் என்னோட டேஸ்டு!

எல்லோரும் பதிவு போடுறாய்ங்க என்பதாலும் , அபிமானிகள் விரும்பி கேட்டதாலும் JZ பதிவு போடுறதுக்கு முன்னமே பேட் மேனை பார்த்து தொலைத்து விட்டேன். பார்த்த பின்பு தான் புரிந்தது கிறிஸ்தோபர் நோலனின் ஆதரவாளர்கள் கூட ஏன் படத்தை மொக்கை என்கிறார்கள் என்று! சுத்தமாய் நேர்த்தியில்லாத திரைக்கதை , என்ன சொல்ல வருகிறார் என்று இயக்குனருக்கே தெரியாது போல! சொதப்பலோ சொதப்பல் மகா சொதப்பல்!

பேட் மேன் குறித்து மேலதிகமாக விமர்சிக்க முன்பு வெள்ளைக்காரன் என்ன எடுத்தாலும் காவடி எடுத்து அலகு குத்தி "ஆஹா ஓஹோ பிரம்மாதம்" என்று பதிவு போட்டுத்துலைக்கும் தமிழ் பதிவர்களே! இந்த நோலனின் பேட் மேன் தரத்துக்கு, தொழினுட்பத்திலும் சரி கிராபிக்ஸிலும் சரி ஒரு படத்தை எடுப்பதற்கு தமிழ் சினிமா இன்னமும் பக்குவப்படவில்லை என்பது உண்மை தான் . அதற்காக கதை என்னவென்று தனக்கே தெரியாமல் படமெடுத்திருக்கும் நோலனின் இந்த நொந்துபோன படத்தை நீங்கள் பிரபஞ்ச ஹிட் ரீதியில் பேசுவதை வன்மையாக கண்டிகிறேன்

படத்தின் கதை என்னவென்பதை விட படத்தின் மகா சொதப்பலை சொல்லிவிடுகிறேன் முதலில்! பகலில் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு சுத்தும் ஒருவன் இரவில் நம்ம முகமூடி ஜீவா ரேஞ்சில் முகத்தை எல்லாம் மூடி கட்டிக்கொண்டு அநியாயத்துக்கு எதிராக போராடுகிறான். வில்லன்கள், காதல், ரொமாண்டிக், ஆக்க்ஷன், சேசிங், பிரம்மாண்டம், வெடிக்கும் கட்டடங்கள், எரியும் கார்கள், இணையும் காதலர்கள் !! கடைசிலில் அந்த முகமூடி போட்டவன் ஜெயிக்கிறான், அந்த வாய் வெந்தவன் தோற்கிறான்! பிரம்மாண்டம், பிரம்மிப்பு எல்லாம் ஓக்கே!! ஆனால் அடிப்படையே இங்கு தப்பால்ல இருக்கு! எல்லோரும் அந்த முகமூடி போட்டவனைத்தான் பேட் மேன் என்கிறார்கள் , ஆனால் உண்மையில் வாயை கட்டிக்கொண்டு அலைகிறானே ஒருவன் அவன் தான் பேட் மேன்! கெட்ட வேலைகள் சகலமும் செய்வது அவன் தான்!! அப்படியிருக்க அந்த கறுப்பு உடை போட்டுக்கொண்டு சுத்துறவன் எப்படி பேட் மேன் ஆக முடியும்? இந்தப் பெரிய  லாஜிக் ஓட்டை ஒன்று இருப்பதை மறந்து நீங்களெல்லாம் அந்த மொக்கை படத்தை ஆஹா... ஓஹோ... என்று புகழ்ந்து தள்ளுகிறீர்கள்!! என்ன ஒரு மட்டமான ரசனை!

நிஜத்தில் பேட் மேன்!

ஆக மொத்தம் இந்த பேட் மேன் கதை என்னவென்றால், நல்லது செய்து எந்தவிதமான சத்திகளோ, தொழினுட்பமோ, பக்கபலமோ , துணையுமோ இல்லாமல் பறந்து பறந்து அடித்து எதிரிகளை தூள் தூளாக்கும் தமிழ் நாயகர்களை நாம் ஹீரோக்கள் என்போம். அவனுக்கு எதிராக நின்று கட்டப்பஞ்சாயத்து , கற்பழிப்பு , ஆள்கடத்தல் பண்ணிப்புட்டு கடைசில ஹீரோ கைல அடிவாங்கி சாவுறவன பேட் மேன் என்போம்! இங்கே அதை உல்டா பண்ணி பெயர்களை மட்டும் மாத்திவிட்டு நல்லது பண்றவன பேட் மேனாக சித்தரித்து தமிழ் சினிமாவை உல்டா பண்ணி அந்த நோலன் பயபுள்ள படமெடுத்திருக்கு, அத்த போயி நம்மாளுகளே அபாரம் ... அருமையின்னு புழுகுறீங்களேப்பா!

ஆனால் தமிழ் படங்களை பொறுத்தவரை எப்போதும் பேட் மேன்கள் வாயை இழுத்துக் கட்டி கொண்டு அலைவதில்லை! டாட்டா சியராவில் இடம் இருந்தாலும் வெளியே தலையை நீட்டிக்கொண்டு கையில் உள்ள பொருளை ஆட்டிக்கொண்டு "ஏய்... ஏய் .... ஏய்... " என்று உறுமிக்கொண்டு வருவதிலேயே பேட் மேன்களை பற்றி தெரியவந்துவிடும். ஆனால் இந்த படத்தில் நல்ல‌து செய்பவனை பேட் மேன் என்று சொல்கிறார்கள். தமிழ் சினிமாவில் அசோகன் முதல் லேட்டஸ்டாக மங்காத்தா அஜித் வரை எத்தனையோ பேட் மேன் கதைகள் சொல்லப்பட்டிருந்தும் கூட நாங்கள் இந்தளவுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணியதில்லை. ஆனா ஏதோ மூணு நாலு பாகம் பேட் மேன் கதைய எடுத்துப்புட்டு நீங்க பண்ற அலப்பர தாங்க முடியலட அய்ய்யா.... இத தான் எங்க ஊர்ல " ஆமை ஆயிரம் முட்டை போட்டிட்டு அமைதியா போகுமாம் , கோழி ஒத்த முட்டைய போட்டிட்டு கொக்கரிக்குமாம்" எம்பாய்ங்க!


இந்த திரைப்படத்தில் நல்லவன் ஒருவனை பேட் மேன் என்கிறார்கள் அதை ஆஹா.. ஒஹோவென்று எழுத எத்தனையோ பதிவர்கள் இருக்கிறார்கள். அது போல் தமிழ் படங்களில் வரும் பேட் மேன்களை பற்றி எழுதவும் அவர்களை விட அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் நமது கண்முன்னே அலையும் பேட் மேன்களை பற்றி யாருமே கண்டுகொள்வதில்லை. எனக்கு தெரிந்து எனது தெருவிலேயே நிறைய பேட் மேன்கள் குடியிருக்கிறார்கள். அது போக வேறு தெருவிலிருந்தும் , வேறு ஏரியாக்களிலிருந்தும் கூட பேட் மேன்கள் எங்களது தெருவுக்கு வருவதுண்டு.  அவர்கள் வயது வித்தியாசமின்றி இருப்பார்கள். முகங்களை மூடியெல்லாம் கட்டியிருக்க மாட்டார்கள், துணிஞ்ச பய புள்ளைங்க அவைங்க! 

பேட் மேன்களில் நெறைய வகைகள் உண்டு! பெரிய பேட் மேன், மீடியம் , பேட் மேன், சிமோல் பேட் மேன், அப்புறம் காமடி பேட் மேன் என்று நீட்டிக்கொண்டே செல்லலாம்! பெரிய பேட் மேன்கள் கொலை ,கொள்ளை மற்றும் கற்பழிப்புக்களில் டிகிரி முடித்தவர்களாக இருப்பார்கள் ஆனால் போலீசில் மாட்ட மாட்டார்கள். மீடியம் பேட் மேன்கள் அடிக்கடி ஜெயிலுக்கு போய் வருவார்கள். சிமோல் பேட் மேன்கள் தன் எனது தெருக்களில் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் இந்த காமடி பேட் மேன்கள் யாரென்றால் இடி இடிச்சு மழையே பெய்ஞ்சாலும் நடு ரோட்டில் நின்னு சிகரட் புடிக்கிறவன், "செருப்பால அடிப்பன்டா நாயே"ன்னு ஒரு பொண்ணு சொன்னதுக்கு அப்புறமும் " மச்சி அவ செருப்பால அடிப்பேன்னு சொல்லும் போது அவளோட கண்ணை கவனிச்சியா ? அதில காதல் தெரியுதுடான்னு" அநியாயத்துக்கு அப்பாவியா இருப்பவனும்,  எங்கேயோ போயி ஃபிரண்டுங்க கூட நல்லா தண்ணி அடிச்சுப்புட்டு , சரியா வீட்டுக்கு வந்ததும் அப்பா முன்னாடி வாந்தி எடுக்கிறவன் எல்லாம் காமடி பேட் மேன் லிஸ்டுக்குள் வருவார்கள்.

என்னய இந்த பதிவு போட சொன்ன பேட் மேன்! அண்ணன் தினகரன் ரேணுகா தன் குழந்தையோடு!

எனது தெருவில் திரியும் பேட் மேன்கள் எல்லாம் இரவில் மட்டும் வருவது கிடையாது. காலாங்காத்தால பல்லு வெளக்காம கடைக்கு வர்ரது ( நைட்டியோடு நிக்கும் எதிர்த்த வீட்டு ஃபிகர் லுக்கிங்) , அப்புறம் மத்தியானம் கறியோடு சோறு தின்னுட்டு முச்சந்தில உக்காந்து பல்லு குத்துறது, சாயுங்காலம் இவனுக தொல்ல தாங்க முடியாம ஆத்தாகாரி கூட அடுத்த தெரு போய்வரும் பொண்ணெயெல்லாம் ஜொள் ஒழுக பாத்து , அப்புறம் ஆத்தாக்காரி சுடுதண்ணிய மூஞ்சில ஊத்தினதுக்கு அப்புறமா சங்கத்தை கலைக்கிறதுன்னு பகலிலும் பந்தாடுவார்கள் இந்த பேட் மேன்கள்.

இரவில் அந்த வெள்ளைக்கார பேட் மேன் போலவே இவர்களது நடமாட்டமும் அதிகமாக இருக்கும் , ஆனால் அந்த வெள்ளைக்காரன் வருவது போல் கொள்ளைக்காரன் கெட்டப்பில் எல்லாம் வந்து பயமுறுத்த மாட்டார்கள்.  வெள்ளைக்காரனிடம் நிறைய பணம் இருக்கிறது அதனால் அவன் பேட் மேனுக்காக தனியான ஃபிளைட்டு, அப்பாச்சி அத்தாச்சி ரேஞ்சில் ஒரு பைக்கு, நவீன கருவி எல்லாம் குடுத்து இருக்கான். ஆனால் எங்கள் ஏரியா பேட் மேன்கள் அனேகமாக சைக்கிளில் தான் அலைவார்கள், கொஞ்சம் வசதி கொறஞ்ச பேட் மேன்கள் நடந்தும் தங்கள் கடமைக்கு போவார்கள்.

பதிவு போட்ட பேட் மேன் ! 

அடுக்குமாடி கட்டிடம் உடைதல், ஃபிளைட்டு கிராஷ், தீப்பிடித்து எரியும் டேங்கர் லாரி என்றில்லாமல் ஏதோ தங்களால் முடிஞ்ச அளவுக்கு சோடா பாட்டில் உடைக்கிறது, தீக்குச்சிய கொளுத்தி காரணமே இல்லாம தெருவில எறியிறது, முச்சந்தியில் ஃபிகர பாத்துக்கிட்டே வந்து ஆட்டோவில் மோதுவது என்று பிரம்மாண்டம் காட்டுவார்கள்இப்படி உங்கள் தெரிவிலும் நெறைய பேட் மேன்கள் இருப்பார்களே!!!

அடுக்கு பெட்டியில் அம்மா வச்ச அஞ்சு ரூபாவ திருடினப்பவே நானும் பேட் மேன் ஆயிட்டேன்! இனிமே எனக்கு சூப்பர் ஹீர்ரொ டிரஸ் தைக்கணும்ன்னா ரொம்ப செலவாகும் என்பதால், இப்போதைக்கு அழுக்கு லுங்கியோடு அலைவதே உலக பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும்! ஆமா! உங்கள்ள எத்தின பேரு பேட் மேன்?

டிஸ்கி : அது வந்துங்க , பாத்தீங்கன்னாக்கா இந்த டார்க் நைற் ரைசஸ் படத்த பாத்தவனுகள விட , அத பத்தி பதிவெளுதினவய்ங்க தொகை தான் அதிகமா இருக்கு! நான் மட்டும் என்ன புதுசா சொல்லிட போறேன்! அது தான் கொஞ்சம் வித்தியாசமா ஹி...ஹி...ஹி...

டிஸ்கி : என்ன தினகரன் அண்ணே! பேட் மேன் விமர்சனம் ஓக்கேவா? இப்போ சந்தோசமா? என்னோட பாணி வழிஞ்சு ஓடுதில்ல!!!!  இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

எனக்கு ஒண்ணுமே தெரியாது ! நான் அப்பாவி ! எல்லாத்துக்கும் காரணம் அண்ணன் தினகரன் தான்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...