இந்த பதிவில் என்னை ஒரு இலக்கிய, ஆக்க துறைகளில் தூண்டிய நபர்களை பற்றி பேசலாம் என்று நினைக்கிறேன். "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்" என்ற தலைப்பு கவிஞர் வைரமுத்துவால் பதிவுசெய்யப்பட்டுள்ளதால் மேற் சொன்ன தலைப்பு.
முதலில் எனது முன்மாதிரி என்று நான் சொல்லகூடிய ஒருவர். இன்று தமிழ் வானொலி துறையிலும், ஊடகத்துறையிலும் முன்னணியில் இருப்பவர்.தற்ப்போது வெற்றி வானொலியின் பணிப்பாளராக இருக்கின்ற ஏ.ஆர்.வி.லோஷன்!
லோஷனது அறிமுகம் கிடைத்தது எனது அம்மாவால் தான். அப்போது எனக்கு வயது 10 இருக்கும், எமது பிராந்தியத்தில் யுத்தம் கடுமையாகியிருந்த சமயம். 'வானம்பாடி",இலங்கை வானொலி வர்த்தக சேவை" போன்ற வானொலி சேவைகள் எங்கள் வீட்டு சிறிய "சோனி" ரேடியோவில் ஒலித்துகொண்டிருந்த சமயம்.
எனது அம்மாவிற்கு அனேகமான அறிவிப்பாளர்களின் பெயர்கள் தெரிந்திருந்தது. ஒருதடவை கேட்டால் கண்டுபிடித்து விடுவார். "ராஜேஸ்வரி ஷண்முகம்", "அப்துல் ஹமீர்", "மோகன்" என உச்சரித்துக் கொன்டிருந்த அம்மாவின் வாயிலிருந்து புதிதாய் இரண்டு பெயர்கள் கேட்டேன்."எழில்","லோஷன்". ஆனந்த இரவு என்ற வானொலி நிகழ்ச்சி பற்றியும் சிலாகித்தார். ஆர்வம் மேலிட ஒரு சனிக்கிழமை இரவு அந்த நிகழ்ச்சியை கேட்டேன். அதன் பின் ஒரு சனிக்கிழமை தவறுவதில்லை.
நாங்கள் ஒரு சனிக்கிழமை இரவில் கடல் மார்க்கமாக இடம்பெயர்ந்து மன்னார் பட்டணத்துக்கு வந்த போது என் கையில் அந்த "சோனி ரேடியோ"
அதன் பின் லோஷனின் குரலை கவனிப்பதற்கு மேலாக, வேறு சில விடையங்களையும் நோட்டமிட்டேன். அவரது குரல் வளம் எனக்கு பிடித்து இருந்தாலும் , ஏனைய அறிவிப்பாலர்களிடமிருந்து எவ்வாறு தனித்து தெரிகிறார் என்று கவனிக்க ஆரம்பித்தேன்.
என்னை பொறுத்த வரையில் ஏனைய அறிவிப்பளர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே பாணியை கொண்டிருக்க ( யார் பேசுறது?, எங்க இருந்து பேசுறீங்க?, ஊர்ல காலநிலை எப்படி? யார் யாருக்காக பாட்டு கேக்கலாம்? # சலிப்பூட்டும் அதே பழைய கேள்விகள்) லோஷன் மட்டும் வானொலி உரையாடல்களின் போது பொது அறிவுகள், கவிதைகள் பற்றிய விசாரிப்பு, இலக்கிய பக்கம், மைதானதையும் தாண்டிய விளையாட்டு செய்திகள், தொப்புள், கவர்ச்சிகளையும் தாண்டிய சினிமா செய்திகள் என்பவற்றால் எனக்கு தனித்து தெரிய ஆரம்பித்தார்.
அவரது புகழுக்கு காரணம் குரல் மட்டுமல்ல , சிறந்த சிந்தனை வளமும் தான் என்பதை புரிந்து கொண்டு என்னை செதுக்க ஆரம்பித்தேன். காரணம் எனக்கும் ஒரு அறிவிப்பளராக ஆக வேண்டுமென்ற ஆசை இருந்துகொண்டே இருக்கின்றது. அவ்ர் சக்தியில் இருக்கும் போது அதன் எல்.பி.எம் தரவரிசை எகிறியது.
பின்பு சூரியனுக்கு மாறினார் லோஷன். உண்மையை சொல்ல போனால், யாரால் நான் ஒரு வானொலியை நேசிக்க ஆரம்பித்தேனோ, அந்த வானொலியைவிட்டு அவர் விலகியதை நான் ரசிக்கவில்லை. லோஷன் ஒரு சுயநலவாதி என என்காது பட என் நண்பர்கள் கூறுகின்ற போது என்னால் காதை மூடிக்கொண்டு அவ்விடத்தை விட்டு போக முடிந்ததே தவிர, "அது அவரது தனிப்பட்ட முடிவு, உயர் பதவி கிடைத்தால் ஒரு வங்கி அதிகாரி இன்னொரு இடத்துக்கு மாற்றலாகி போவது எவ்வகையில் நியாயமற்றதாகும்? அது போலவே இதுவும் . லோஷன் ஒன்றும் சக்தியை சதி செய்து கெடுத்துவிட்டு ஓடவில்லை. முறையான அனுமதியுடன் செல்கிறார் " என்று கூறக்கூடிய பக்குவம் எனக்கு அப்போது இருந்ததில்லை.
பின்பு சூரியனில் லோஷனின் நிகழ்ச்சிகள் தவறியதில்லை. அவரது காலகட்டத்தில் சூரியனின் எல்.பி.எம் உச்சத்தை தொட்டது. ஒவ்வொரு முறையும் லோஷனிடமிருந்து ஏதோவொன்றை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எவ்வாறெனும் எதோ எனக்கு இருக்கிற திறமைகளை (சுமாரா கவிதை, நாடகம்,சிறுகதைகள் எழுதுவது, இலகு தமிழில் பிழையற்ற அறிவிப்பு செய்வது என) வெளிக்கொணர தொடங்கினேன்.
கவிதை , சிறுகதைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்ப தொடங்கினேன். அவை வீரகேசரியையும், மெட்ரோ நியூசையும் ஆக்கிரமித்தன. கவிதைகளை வெளியிடும் நோக்கில் கொப்பிகளில் நிரப்ப ஆரம்பித்தேன். லோஷன் நேரடியாகவோ , மறைமுகமாகவோ என்னை உந்தகூடிய ஒரு சக்தியாக உருவெடுத்திருந்தார் எனக்கு.
நான் பல்கலைக்கழகம் கிடைத்து மொரட்டுவைக்கு வந்த போது லோஷன் வெற்றியின் பணிப்பளராகி விட்டிருந்தார். எப்படியேனும் லோஷனை சந்திக்க வேண்டும் என்பது எனக்குள் ஒரு வெறியாகவே இருந்தது எனலாம். இந்த நிலையி தான் எனது பால்யசினேகிதனும், பாடசாலை நண்பனுமான மரியசீலன் வெற்றி வானொலியில் அறிவிப்பாளர் என்று தெரிந்து கொண்டேன்.
அவன் மூலம் லோஷனை தொடர்பு கொள்ளலாம் என்று முயற்சித்தேன், சந்தர்ப்பம் வரும் போது நிச்சயம் மச்சான் என்றான். பல்கலைகழகத்தில் நண்பர்களோடு உரையாடுகையில் லோஷனை மேற்கோள் காட்டி குறந்தது ஒரு விடையமேனும் குறிப்பிடுவேன். அப்போதும் நண்பர்களில் சிலர் " நீ இப்படி அலைகிறாய், லோஷன் உன்னை ஒருவனாக மதித்து கதைத்தாலே பெரும் அதிசயம். அவர் ஒரு தற்பெருமை பிடித்தவர்" என்று வசை பாட .. அவர்களை நோக்கி நான் சொன்னது ஆங்கிலத்தில்" F" இல் தொடங்கும் ஒரு கெட்ட வார்த்தை
இந்த நிலையில் குடும்ப வறுமை கொஞ்சம் கடுமையாக , படித்துக் கொண்டே ஏதும் பகுதி நேர வேலை பார்க்க திட்டமிட்டு, செயலில் இறங்கினே." மக்டொனல்ட்ஸ்", "கார்மன்ஸ்" என்று ஆரம்பித்தேன், ஆனாலும் அதன் பின்னரான உடல் அலுப்பு என்னை படிக்க விடமாட்டேன் என்றது (இது அதுவும் அம்மவுக்கு தெரியாது. ரகசியம் காக்கவும்)
என் நண்பர்கள் என்னிடம் நீ தான் நன்றாக அறிவிப்பாயே தொலைக்காட்சி, வானொலி என்று முயற்சிபண்னு என்ற கூற லோஷனால் செதுக்கப்பட்டு எனக்குள் ஒளிந்து கிடந்த அறிவிப்பாளன் எட்டி பார்க்க ஆரம்பித்தான். அப்போது தீர்மானித்தேன் முதலில் லோஷன் அண்ணனிடம் கேட்டு விடுவது. நான் யாரை பார்த்து வளர்ந்தேனோ , யாரை எனது முனோடியாக கொள்கிறேனொ அவரின் பாசறையில் பணியாற்ற ஆசைப்பட்டேன். வேண்டாம் என்று யாரும் என்னை மறுப்பதாக இருந்தால் அது முதலில் என் குரு லோஷனாக இருக்கட்டும் என்று முடிவு பண்னிக் கொண்டேன்.
உடனே மரியசீலனிடம் தொடர்பு கொண்டு விருப்பத்தை சொல்லி உதவி செய்வாயா ? என்றேன். பார்க்கிறேன் என்றவன், ஒரு நாள் லோஷன் அண்ணாவிடம் உன்னை பற்றி சொல்லிவிட்டேன், உன்னை கூடிய சீக்கிரம் அழைப்பார் என்றான். மனதுக்குள் தேன் பாய்ந்தது. அவனுக்கு 1000 நன்றிகள்!!!
அன்று ஒரு நாள் வேலை விடயமாக வெள்ளவத்தை கே.ஃஎப்.சி இல் கதைத்து விட்டு திரும்பிய போது தமிழ் சங்கத்தடியில் லோஷனை கண்டேன். இந்த தடவை தயக்கம் என்னை முந்த நான் இடம் கொடுக்கவில்லை. நேரே சென்றேன் "அண்னா நான் உங்கட பெரிய ஃபான்.... உங்கள சக்தியில் இருந்து பின்தொடர்கிறேன். அப்பாடா.. ஒரு வழியாய் கதைத்தாகிற்று... இது லோஷன் அண்ணாவின் பதில் "ஓ! தாங்க்ஸ் அப்பன்..! கொஞ்சம் வேலையாக போகிறேன். என்னை தொடர்பு கொள்ளுங்கள் நிறைய கதைப்பம்."
ஒரு திறமையாளனாக எனக்கு லோஷனை தெரியும். அந்த " அப்பன்" என்ற வார்த்தை அவரை ஒரு பண்பாளனாக எனகு காட்டியது. மனதுக்குள் எனது சில நண்பர்களின் மூக்குகள் உடைந்து விழுவது தெரிந்தது.
அடுத்த நாள் , வெற்றி வானொலிக்கு ஃபோன் செய்தேன் . வரவேற்பாளரின் சில சம்பிரதாய கேள்விகளுக்கு பின் எதிர் முனையில் என் நாயகன்.... எனது ஆசையை சொன்னேன். தொடர்ச்சியாக மூன்று நிமிடங்களுக்கு நான் தான் பேசிக்கொண்டிருந்தேன். குறுக்கே எதுவும் பேசாது ஒரு"ம்", "ம்" மட்டும் போட்டு என் புலம்பல்களை கேடுக்கொண்டு இருந்தார். அறிவிப்பாளனாக வரவேண்டுமென்ற என் ஆசையை சொல்லி வாய்ப்பு கேட்டேன். மறுபடியும் அதே கனிவுடன் "அப்பன் இப்ப நாங்க கொஞ்சம் பிஸி, நீங்க ஒரு மாதம் கழித்து கூப்பிடுங்கள், நிச்சயம் உங்களை "வொய்ஸ் டெஸ்டுக்கு கூபிடுகிறேன்." எனக்கு வானம் கையில் இருப்பது போல ஒரு உணர்வு. பேசும் போது நான் நா தளதளத்து, கண்களில் நீர் கட்டியதன் காரணம், வானொலியில் அனைவருக்கும் பொதுவாக ஒலித்த குரல் , இன்று என்னோடு மட்டும் பேசியது என்பதாலா??????? லோஷன் அண்ண சொன்ன அடுத்த மாதம் இது தான். ஆவலோடு நான்!!!!
இப்போது லோஷன் அண்ணாவே எங்களது பல்கலைகழகத்துக்கு வாணிவிழா நிகழ்வுக்கு தலமை தாங்க வருகிறாராம். எனது புழுகம் எல்லாம் என்னவெனில் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் நான் தான். எதிர் வரும் ஞயிற்று கிழமையை ஆவலுடன் எதிர் பார்த்து நான்...... யாரைப் பார்த்து நான் கற்றுக் கொண்டேனோ, அவர் முன்நிலையில் அறிவிப்பாளராக நிற்கப்போகும் நிமிடங்களை எதிர் பார்க்கிறேன். ஒரு நப்பாசை .. நான் நன்றாக செய்தால் லோஷன் அண்னாவின் பட்டறையில் இடம் ஒன்று கிடைத்துவிடும் என்று.
எது எப்படியோ..... எனது திறமைகளை நான் உணர்ந்து கொள்ள லோஷன் அண்ணா ஆற்றிய பங்கு அளப்பெரியது.

லோசன் அண்ணா பற்றிய ஒரு அழகான தொகுப்பு.. எனக்கும் அவரை பிடிக்கும் ஓர் அறிவிப்பாளராக.. எத்தனை திறமை அவருக்குள்!
ReplyDeleteஉங்கள் ஆசையும் நிறைவேற வாழ்த்துக்கள்.. உங்கள் உண்மையான பெயருடனே பதிவெழுத ஆரம்பித்திருக்கலாம்,, எதற்கு முகமூடி,, மொக்கை என்ற தலைப்பு எதற்கு.?
தற்செயலாக தலைப்பை பார்த்து உள்நுழைந்தேன்,,
Hope Loshan will consider your request, as like u i also has very good opinion of Loshan, he is the one of the few announcer who has good versatile knowledge in most of the sectors. others are in my mind Kajamuhan & Hoshya Alfred but both are under utilized by their employers
ReplyDeleteAm also a fan of loshan anna. admiring his talents, voice and the flow of his speech. you r right,. me too following him from shakthi fm, sooriyan fm and now vettri fm. best of luck for ur dream to come true.. waiting to hear ur voice too..
ReplyDelete@ munna
ReplyDeletethanks for ur wishes and ur support. need ur support to my blog in future as well
@ RIPHNAS MOHAMED SALIHU
ReplyDeletethank you very much for ur support and wishes. hope u can hear my voice. thanks again for the love.
அன்பின் றியாஸ் ! தங்கள் அன்புக்கு நன்றி. உண்மையில் எனது பெயரில் எழுத ஆசை தான். நான் எழுதும் பதிவுகள் அனைத்தையும் எல்லோரும் ஒரு பதிவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே! யாரும் அதை பார்த்து மொக்கை என்பதற்குள் நான் முந்திக் கொண்டேன். ஹி... ஹி... எனினும் தலைப்பில் என் பெயரை சேர்ப்பதற்கு யோசிக்கிறேன். தங்களது மேலான கருத்துக்கு நன்றி. முகமூடியென்பதெல்லாம் நான் யோசிக்கவில்லை! சும்ம ஒரு ஜாலிக்கு தலைப்பு வைத்தேன். என்றும் உங்கள் ஆதரவு தேவை!
ReplyDeleteவெற்றி நிச்சயம் , இது வேத சத்தியம்
ReplyDeleteஆதரவுக்கு நன்றி சகோதரா!
Deleteலோசன் அண்ணா பற்றிய ஒரு அழகான தொகுப்பு.. எனக்கும் அவரை பிடிக்கும் ஓர் அறிவிப்பாளராக.. எத்தனை திறமை அவருக்குள்!
ReplyDelete