உதைபந்து

Friday, October 7, 2011

சார்! இவ‌ய்ங்க‌ள‌ என்ன‌ ப‌ண்ண‌லாம்?

வாழ்கையில நிறைய காமடி இருக்கு சார்! (அதுக்கு என்னங்கிற இப்ப?)அதிலையும் இந்த கம்பஸ்ல நடக்கிற காமடிகள் சொல்லி மாளாது. நான் இந்த கம்பஸுக்கு வந்ததே காமடிதான். அதை குறிப்பா சொல்லணும் எண்டா "பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான" கதை. (சும்மா இருங்த அவர நீ ஏன் பிடிக்க போன). "Law" வுக்கு போகணும் எண்டு லோ.. லோ.. எண்டு படிச்ச நான் இங்க வந்து சேர்ந்தது என் துர்அதிஷ்டம்.

யாரையும் எதையும் நான் குற்றம் சொல்லவில்லை. எனது ரசனைக்குரிய பட்டப்படிப்பு இதுவல்ல(அப்போ நேரா அமெரிக்க ஜனாதிபதி ஆகிடுறியா?). சரி அந்த சோகத்த பிறகு கதைப்பம். ( உயர் தர பரீட்சையில்இலங்கையிலேயே முதலாவதாக வந்தது கூட என்னொடுதான் குப்பை கொட்டுது).




















சும்மாவே எனக்கு லெக்சருக்கு போக பிடிக்கிறதில்ல. அதிலையும் ஒரு சில லெக்சரர்கள் படுத்துற பாட்டில் வாழ்க்கை வெறுத்து போகும். அன்றைக்கு அப்பிடிதான் நல்ல நித்திரை... (கனவில் கூட தப்ஸுயும்,தமன்னாவும் ஆடியதாய் ஞாபகம்). ஃபோன் கதறி என்னை எழுப்ப‌ அலறியடித்து எழும்பி பார்த்தால் " இன்று காலை உங்களுக்கு விரிவுரை இருக்கின்றது 8.00 மணிக்கு." இத்தனைக்கும் அந்த பாடம் இருப்பதாய் நேரசூசியில் கூட‌ இல்லை. சரி போய் துலைவோம் என்று நேரம் பார்க்கின்றேன் மணி சரியாக 8.23. அந்த "பங்சுவாலிற்றியின் குஞ்சுக்கு" என்ன பண்ணலாம்?

அதைவிட நடக்கும் உச்சக்கட்ட கொடுமை "மைண்ட் மப்பிங்" என்று தலைநகர வீதிகளை எல்லாம் கீறச் சொல்வார்கள். நாங்களும் எதோ பாலர் பாட சாலை பிள்ளைகளாக கிறுக்கி தள்ளுவோம். அடுத்த நாள் அத்தனை "மெப்பும்" எங்கோ மூலையில் கிடக்கும். அவ்ர்களுக்கு "கபீம்குபாம்" கொடுக்க மனசு தவிக்கும்.


நாங்க‌ள்(வழமைபோலவே) தூங்கி வ‌ழிந்து கொண்டிருக்கும் போது சில "க‌ட‌மையில் க‌ண்ணாயிர‌ங்க‌ள்" தாங்க‌ள் ஏதோ எங்க‌ளுக்கு புரியும்ப‌டியாய் தான் பாட‌ம் ந‌ட‌த்துவ‌தாய் நினைத்து "யெஸ் யூ" என்று ந‌ம்மை பார்த்து கேள்வி கேட்க‌, எத‌ற்கு கேட்கிறாள் என்று சிந்திப்ப‌த‌ற்கே (ஓ! நீ சிந்திப்பியா?) கால‌ம் ச‌ரியாக‌ இருக்கும். இதுக‌ள் தெரிந்து ப‌ண்ணுதுகளா? க‌லாய்க்குதுகளா? என்று என‌க்கு இன்னும் புரிந்த‌பாடு இல்லை.
அதை கூட‌ ம‌ன்னிக்க‌லாம், ஆனால் ச‌ரியாக‌ ம‌திய‌ நேர‌ம், ப‌சியில் உயிர் போய்க்கொண்டிருக்க‌, லெக்க்ச‌ரை முடிக்க‌ லெக்ச‌ர‌ரே முடிவு ப‌ண்ணினாலும் முன்னால் இருக்கும் சில‌ ஏ.கே க‌ள் (அட‌ ஆர்வ‌ கோளாறுக‌ள்) தாங்கள் ச‌ந்தேக‌ம் கேட்காவிட்டால் ஒபாமாக்கு "உச்சா" வ‌ராது என்ற‌ நினைப்பில் அரைம‌ணி நேர‌மாய் கேட்டு துலைக்கும். இதுக‌ளின் காதுக்குள் க‌ட்டெறும்பை விட்டால் என்ன‌?



அது போக‌ "டூ யு ஃஹாவ் எனி ட‌வுட்ஸ் ?" ( நீ இவ்வ‌ள‌வு நேர‌ம் ப‌டிப்பிச்சியா எண்டுற‌தே ட‌வுட்டு தாண்டி) என்று கேட்கையில் "என்ன‌ தைரிய‌த்தில் நீ இப்பிடி கேட்கிறாய் ?" என்று கேட்க‌ வாய் வ‌ந்தாலும் பாட‌த்தை கையில் த‌ந்து விடுவார்க‌ள் என்ற‌ ப‌ய‌த்தில் அடியேன் அட‌க்கியே வாசிக்கிறேன்.

இப்ப‌டியெல்லாம் துன்ப‌ங்க‌ள் நிக‌ழ்ந்தாலும் நான் ஏன் க‌ம்ப‌ஸ் போகிறேன் என்றால் "சீத்த‌ க‌ங்குலையில்" (அது க‌ம்ப‌ஸ்ல‌ ஒரு குட்டிச் சுவ‌ர்) உக்கார்ந்து போற‌ வாற‌ "ஆர்க்கிடெக்ச‌ர் டிப்ப‌ர்ற்மென்ட்" ஃபிக‌ருக‌ளை சைட் அடிக்கும் சுக‌ம் போல‌ ஒன்றை யான‌றியேன் ப‌ராப‌ர‌மே....."


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...