இந்த பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட , பகிரப்பட்டுக்கொண்டிருக்கின்ற நம்ம பசங்களோட ஆதங்கங்களையும் ஏக்கங்களையும் அத்தோடு எனது பிட்டுகளையும் ஒன்று சேர்த்து எழுதப்படுகின்றது. சும்மா ஒரு ஜாலிக்கு எழுதப்படும் பதிவே ஒழிய யாரையும் புண்படுத்த அல்ல என்று சொல்ல நினைத்தாலும் இந்த பதிவில் ஆங்காங்கே தலைவர் சிலைகளில் விழுந்திருக்கும் காக்கா எச்சங்கள் போல் ( இந்த அற்புதமான உவமைகளுக்காகவே உனக்கு முனைவர் பட்டம் கொடுக்கலாம் # முன்மொழிந்தவர் திரு.மண்ட கசாயம் அவர்கள்) உண்மைகளும் ஒட்டியிருக்கத்தான் செய்கின்றன.
ஃபேஸ்புக்கில சில பொண்ணுங்க அடிக்கிற அளப்பரைய தாங்க முடியலடா சாமீ! ( அதுங்க பேஸ் புக், அதுங்க அடிக்குதுங்க! உமக்கு ஏன் ஓய் எரியுது? # எரியணும் கட்டாயம் எரியணும், பிளாக்கர் ஐ.டி வச்சிருக்கவன் எல்லாம் சமூக போராளின்னு நம்ம அண்ணன் சரவவணா எனக்கு சொல்லியிருக்கார், ஒரு போராளியா என்னோட கடமைய செய்ய விடுங்க! விடுங்க! விடுங்க! விடுங்க!)
உலகத்தை ஆட்டிப்படச்ச ஆனானப்பட்ட சதாம் உசேனுக்கே ஏழு பேர்தான் நகல்களாய் இருந்தாய்ங்களாம், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு கூட மூணு பேர் தான் இருந்தாய்ங்களாம். ஆனா பகல் பூரா வெட்டியா இருக்கிறதுக்கு , காலங்காத்தால மூணுமணிக்கு அலாரம் வச்சி எழும்பி மேக்-அப் போட்டுகிட்டு பல்லுவெளாக்காம ஃபேஸ்புக் போறவளுக்கெல்லாம் பதினாறு புரஃபைல்! அதில ஒண்ணு கூட நெஜம் கிடையாது.
பார்ட்டியோட பெயர் அங்கமுத்து இல்லாங்காடி ராக்காயின்னு ஏதாச்சும் இருக்கும், அந்த பேர வச்சிகிட்டு உருவாக்குவாய்ங்க பாருங்கடா Fake புரஃபைலு! யப்பா........... கிரியேட்டிவிட்டில ஜேம்ஸ் கம்ரூன் கூட தோத்து போயிருவாண்டா! சுவிஸ் பாங்க்ல கருணாநிதிக்கு இருக்கிற அக்கவுண்டுகள விட இவளுக அக்கவுண்டுகள் நெறையவே இருக்கும். லேடி காகா படத்த போட்டு "ராக்ஸ் ரொக்ஸ்"ன்னு ஒரு புரொஃபைல், பூனகுட்டி படத்த போட்டு "சுவீட் ராஸ்கி"ன்னு ஒரு புரஃபைல், அப்புறம் பூவோட படத்த போட்டு "ராஸ்கி புஜ்ஜி"ன்னு ஒரு புரோஃபைல், அப்புறம் பாரதியார் படத்த போட்டு "ரசிக்கும் ரசிகை"ன்னு ( தமிழ் பற்றாமா!) ஒரு புரோஃபைல்ன்னு பொரட்டி எடுப்பாளுக, ஸுக்கர்பேர்க் கூட கண்டுபிடிச்சிர முடியாது அவளவு பக்காவா இருக்கும்! ஆனா இதில எதயுமே உண்மையா மெய்யிண்டெய்ன் பண்ண மாட்டாளுக அத்தனையும் At த டைம்ல ரன் பண்ணிக்கிட்டே இருக்கும்!
என்னோட ஃபிரண்டு ஒருத்தரு ஃபேஸ்புக் மூலமா ஒரு பொண்ண லவ் பண்ணினாரு. "கடைசில அது பொண்ணு இல்ல , அது ஒரு ஆம்பள" இல்லாங்காட்டி "அது Fake புரஃபைல்ல இருந்த அவரோட தங்கச்சி", இல்லாங்காட்டி "அது ஒரு பணம் பறிக்கிற கும்பல்னு" யூ டியூப்ல இருக்கிற அத்தன குறும்படத்தையும் பாத்துப்புட்டு நீங்க அதி மேதாவிதனமா யோசிச்சா இப்போவே அதுக்கு கேட்டு போட்டிருங்க!
அது பொண்ணுதான், அவன் தங்கச்சி கெடையாது, பணம் பறிக்கிற கும்பலும் கிடையாது. ஃபேஸ்புக் , அப்புறம் ஸ்கைப் அதுக்கும் அப்புறமா பார்க்குன்னு ஒரே மீட்டிங் தான் போ! நானே ஒரு தடவ நேரடியா பாத்திருக்கேன்! "என்னா பொண்ணுடாஆஆஆஆஆஆ........"ன்னு வாய் பொளக்கும் அளவுக்கு அழகு! ( நண்பனோட காதலி சிஸ்டர் என்ற கண்ணியத்தை மீறிட்டேன்# நண்பா மன்னிச்சூ) ரெண்டு பேரும் வேற வேற நகரத்தில இருந்தாய்ங்க , சனிக்கெழமையானா போதும் பெட்ரோல் விக்கிற விலைக்கு பைக்கு ஃபுல்லா நெரப்பிக்கிட்டு "பட் மேன் ரிட்டன்ஸ்"ங்குற ரேஞ்சுக்கு பறப்பாரு. அவுகள பிக்கப் பண்ணிக்கிட்டு மூன்றாம் உலகத்துக்கு போயிருவார். அப்புறம் திங்கள் கெழம காலேலதான் அண்ணன் றிட்டன்ஸ்!
இப்புடி நாளொரு லைக்கும் பொழுதொரு பின்னூட்டமுமாய் வளர்ந்துகொண்டிருந்தது அவர்கள் காதல். ஒரு நாள் விடுமுறைக்கு நான் வீடு சென்று திரும்பிய போது தான் விசயம் தெளிந்தது. நண்பர் ஃபேஸ்புக் பக்கம் போவதே இல்லை, விசாரித்தேன், "மச்சி அவள் யாரோ ஒரு போட்டோ கிராஃபர லவ் பண்ணுறாளாம், அவன் இந்தியா போன கேப்பில என்னோட டைம் பாஸ் பண்ணினாளாம்" அவன் அசால்டாக சொன்னான். சந்தோஷப்பட்டேன் "காதல் தோல்வி என்று வில்லங்கமாக ஏதும் முடிவெடுக்காத வரை நலம் என்று. பின்பொரு நாள் அவன் கட்டிலில் கிடந்து கதறி கதறி அழுதுகொண்டிருந்தான், மறுபடி விசாரணை!!!! " இல்ல மச்சி! அது அவளோட உண்மையான பேரில்லையாம், Fake புரோஃபைலாம் ,என்னைய லவ் பண்ணுறதுக்காகவே அந்த அக்கவுண்ட திறந்தாளாம். அவளோட ஃபிரண்டு சொன்னா" தேம்பி தேம்பி அழுதான். காதல் தோல்வி என்ற போது கலங்காத அந்த பிஞ்சு நெஞ்சு Fake புரஃபைல வச்சி தன்னய ஒருத்தி சாச்சுபுட்டான்னு தெரிஞ்சதும் நெலகொலஞ்சு போச்சு ( கொய்யாலே!)
ஆனாலும் என்னோட நட்பு என்னய சும்மா இருக்க விடலே! "மாணிக்கம் " என்ற என்னோட பேரு கூட ஒரு பொண்ணால ஏமாத்தப்பட்டு என் மார்புல சாஞ்சு அழுத என்னோட நண்பன் "பாட்ஷா" பேர சேத்துக்கிட்டு "மாணிக் பாட்ஷாவா" மும்பைல இருந்து சென்னைக்கு வந்தேன். அவளோட அக்கவுண்ட ஹேக் செய்தேன். தக்காளி! இந்த மாணிக் பாட்ஷாவோட வாயையே "கோணிக்"க வச்சுட்டாடா! அவளோட முதலாவது புரோஃபைல்ல "ரிலேஷன் ஷிப் வித் ஜீவிதன்னு " இருக்குது, அப்புறம் கடைசி புரோஃபைல்ல "ரிலேஷன் ஷிப் வித் பாட்ஷா"ன்னு இருந்திச்சு. கொய்யாலே! ஒவ்வொருத்தன செட் பண்ணும் போதும் ஒரு புரோஃபைல்! அந்தந்த அக்கவுண்டில் அவனவனுக்கு அவள் கண்ணகி! அப்புறம் ஒரு பதிமூணு அக்கவுண்ட் தான் அவள் பேர்ல இருந்திச்சு !!நெறைய இல்ல!!
இப்போ நம்ம பையனுக முழிச்சுக்கிட்டய்ங்க ! சன்ரைஸ் குடிச்சுகிட்டாய்ங்க ! ஆம்பளைய்ங்க Fake புரோஃபைல் தொடங்க கூடாதுன்னு ஸூக்கர் பேர்க் சொன்னாரா என்ன? சாவுங்கடி மக்களேன்னு நம்ம பயலுகளும் இப்போ ஏட்டிக்கு போட்டியா Fake புரோஃபைல் தொறக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க!
ஆனா ! நம்ம பயலுக புரோஃபைல் தொறக்கிறதுக்கு காரணம் தன்னோட ஸ்டேடஸ்சுக்கு தன்னோட Fake புரோஃபைல் மூலியமா தானே லைக் போட்டுக்கிறது. அப்புறம் தானே பின்னூட்டமும் போட்டிடுறது, அத்தோட நிறுத்திக்கிறது இல்ல இன்னொரு Fake புரோஃபைல் மூலியமா ஏதாவது வில்லங்கமான பின்னூட்டத்த தானே போட்டுப்புட்டு , தன்னோட ஒரிஜினல் புரோஃபைல் மூலியமா அந்த பின்னூட்டத்துக்கு தமிழிச்சி பெரியார் ரேஞ்சுக்கு விளக்கம் குடுக்கிறது ! ( தனக்கும் நாலு விசயம் தெரியும்னு காட்டுராமா!). டக்கால்டி வேலைய கூட ரொம்ப சூதனமா பண்ணுவாய்ங்க நம்ம பயலுக!
அதாவது தன்னோட புரோஃபைல் மூலியமா கேள்வி கேட்கும் போதும் சரி, ஏதாவது ஸ்டேடசுக்கு சம்மந்தமே இல்லாம பின்னூட்டம் போடும் போதும் சரி தனக்கு விடை தெரிஞ்ச கேள்வியாத்தான், கேட்டு வைப்பாய்ங்க! அப்போ தானே ஒரிஜினல் புரோஃபைல் மூலமா வந்து வண்டி வண்டியா விளக்கம் கொடுக்கலாம்.
"இந்த கரண்டு இல்லாம ஒரே தொல்லப்பா"ன்னு தன்னோட ஒரிஜினல் புரோபைல் மூலமா ஒரு ஸ்டேடஸ் போட்டுட வேண்டியது அப்புறம் தன்னோட Fake புரோஃபைல் வச்சி சம்மந்தமே இல்லாம "கச்சா எண்ண விலை கூடினது தான் காரணம்ன்னு " ஒரு பின்னூட்டம், உடனே ஒரிஜினல் புரோஃபைல் மூலமா உள்ள போயி " ஒபேக் நிறுவனத்த பத்தி உனக்கு என்ன தெரியும் ? ஆயிரத்தி தொளாயிரத்தி எழுபத்தி மூணுலே"ன்னு ஆரம்பிச்சு சின்னவயசில படிச்ச வரலாறு, புவியியல், கணிதம், சமூகக்கல்வி , அல்ஜீபிரா அல்லாத்தையும் யாருக்கும் புரியாத மாதிரி சுத்த தமிழ்ல எழுதி வச்சிர வேண்டியது. அப்புறம் மறுபடி ஒரு Fake புரோஃபைல் மூலமா போயி "பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக வந்தால் , தமிழீழம் கிடைக்கும் என்று கருணாநிதி மனப்பால் குடிக்கிறார்ன்னு" ஒரு பின்னூட்டத்த போட்டுட்டு வீல் சியாரில் கிடக்கும் தமிழ் தாத்தாவையும் பஞ்சாயத்துக்கு இழுத்திர வேண்டியது.
அப்புறம் மறுக்கா தன்னோட ஒரிஜினல் புரோஃபைல் மூலமா போயி "கருணாநிதியால் தமிழீழம் சாதிக்க முடியாது, அவர் சுவிஸ் வங்கியில் பணம் சேர்க்கவே லாயக்கு, தமிழீழம்ங்குறது "ன்னு ஆரம்பிச்சு கொல்லப்பட்டு மயானங்கள்ள புதைச்ச ஈழத்தமிழன வெளிய இழுத்து போட்டு விட்டுர்ரது, அத்தோட குத்துயிரும் குலையுயிருமா இருக்கிற மிச்ச தமிழனையும் பின்னூட்டம் போட்டே கொன்னுடுறது.
அப்புறம் மறுக்கா தன்னோட ஒரிஜினல் புரோஃபைல் மூலமா போயி "கருணாநிதியால் தமிழீழம் சாதிக்க முடியாது, அவர் சுவிஸ் வங்கியில் பணம் சேர்க்கவே லாயக்கு, தமிழீழம்ங்குறது "ன்னு ஆரம்பிச்சு கொல்லப்பட்டு மயானங்கள்ள புதைச்ச ஈழத்தமிழன வெளிய இழுத்து போட்டு விட்டுர்ரது, அத்தோட குத்துயிரும் குலையுயிருமா இருக்கிற மிச்ச தமிழனையும் பின்னூட்டம் போட்டே கொன்னுடுறது.
இப்பிடி பண்ணியே பிரபலமாயிருவாய்ங்க! இப்போ ஃபேஸ்புக்கில சண்ட போட்டுக்கிறது தான் ஃபேஷன் ஆயிட்டதினால, தானே ஏழுட்டு புரோஃபைல் கிரியேட் பண்ணி தானே ஸ்டேடஸ் போட்டு , தானே பின்னூட்டம் போட்டு தானே பதிலும் போட்டு, தானே சண்டையும் போட்டு தன்னத்தானே கெட்ட வார்த்தேல திட்டி பிரபலமாயிடுவாய்ங்க நம்ம பயலுக. நல்லா கவனிச்சு பாருங்கோ! பிரபலமாகிற நெறைய ஸ்டேடசுக்கு மாறி மாறி நாலுபேர் மட்டும் போட்டு வெளுத்து வாங்கியிருப்பாய்ங்க! சந்தேகமேயில்ல எல்லாம் சாட்சாத் அண்ணனே தான்! நம்ம மைந்தன் அண்ணன் போல நல்ல வழில பிரபலமாக மண்டைல சரக்கு வேணும், ஆனா இந்த வழில பிரபலமாக நாலு ஈ-மெயில் ஐ.டி போதும்! தக்காளி எப்பூடி? பொண்ணுங்க Fake புரோபைலுக்கும் , பசங்க Fake புரோஃபைலுக்கும் இது தேங் ..... வித்தியாசம்!இவிய்ங்க ஃபேஸ்புக்கில போடுற சண்டைய பாத்துப்புட்டு நாம ரெண்டு பேரும் பேஸ்புக்கில் சண்ட போட்டுக்கலாமான்னு அமேரிக்க அதிபர் ஒபாமா ஈரான் அதிபரை பாத்து கேட்டிருக்கிறதா ஒரு செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.
இன்னொரு கொடுமையிம் நடந்துகிட்டு இருக்கு! அது தாங்க இந்த லைக்கு, கொமண்ட்டு போடுற சமாச்சாரம், தக்காளி! எங்க இந்த பிரச்சினையாலேயே மூணாம் உலக யுத்தம் வந்திரும்கிற அளவுக்கு இருக்கு இந்த அக்கப்"போர்"!
கொஞ்ச காலமாவே ஃபேஸ்புக்கில நம்ம பசங்க பொலம்பிகிட்டு இருந்தாய்ங்க , இருக்கிறாய்ங்க! அதாகப்பட்டது ஒரு பையன் என்னதான் சாதனை பண்ணிப்புட்டு அத்த ஒரு போட்டோவா எடுத்டு போடிருந்தாலும் ஒரு நாயி வந்து நக்கி பாக்காது, ஆனா ஒரு பொண்ணு தெருவில போற சொறிநாய் கிட்ட நின்னு "புஜ்ஜுஜிஜ்ஜு "ன்னு வாய கோணலா வச்சிகிட்டு ஒரு போட்டா எடுத்து போட்டிருப்பா.... ஆயிரம் லைக்கு ரெண்டாயிரம் கொமண்டு இருக்கும் அங்க! "சூப்பர்"ங்கிறவனும், "கியூட்"ங்கிறவனும் ( இவன் அந்த நாய்க்கு எத்தினையோ தடவ கல்லால அடிச்சவனா இருப்பான், ஆனா இந்த நாய் இப்போ அந்த நாய கியூட்ங்குது), ஜொள்ளு வார்த்தைகளை எல்லாம் முன்னாடி பின்னூட்டம் போட்டவன் எல்லாம் போட்டிட்டு போய்ட்டாங்கன்னா "டைனோசர் இன்னும் உயிரோடதான் இருக்கு, ஆனா சின்னதா இருக்கு"ன்னு மரண மொக்கை போடுறவனும் , "உங்களது புகைப்படம் அழகாக உள்ளது தோழி, மேலும் இதுபோன்று சிறப்படைய வாழ்த்துக்கள்"ன்னு அங்கு வந்து தான் தமிழ் பற்று காட்டுறவனுமாக அந்த பக்கமே ஸ்தம்பித்து போகுமளவுக்கு பின்னூட்டம் போட்டு தள்ளியிருப்பாய்ங்க நம்ம பயலுக! ஆனா பஃபேஸ்புக்கின் ஏதோ ஒரு மூலையில் "தமிழ் நாட்டில் முதலிடம் " என்ற செய்தியோடு கையில் கோப்பைகளோடு அப்பாவியா போட்டோவில் சிரிச்சிக்கிட்டு இருப்பான் நம்ம பையன்! அவன் தானே தன்னோட Fake புரோஃபைல் மூலமா போட்டுகிட்ட மூணு லைக்கும் கீழே கெடந்து காத்து வாங்கும்.
அடுத்து இந்த பொண்ணுங்க பண்ணுற இன்னொரு அழிச்சாட்டியம் என்னான்னா, நாம ஒரு ஃபிரண்டு ரிக்குவஸ்ட் குடுக்குறோம்னு வையுங்க ஒடனே அவங்க கிட்டேர்ந்து பதில் வரும் "முன்னபின்ன தெரியாதவங்க கூட எல்லாம் நாங்க ஃபிரண்ட்ஷிப் வச்சுக்கிறதில்ல" யய்யாடி! ஆத்தா ! ராணி மங்கம்மா! முன்னபின்ன தெரிஞ்சவய்ங்க கூடத்தான் ஃபிரண்ட்ஷிப் வச்சுசுக்கோணுமின்னா எதுக்கு ஃபேஸ்புக் வர்ற? பேசாம ஸ்கூல்லையும் , காலேஜ்லயும் பாத்து பேசிக்க வேண்டியது தானே! வேற ஒண்ணுமில்லிங்..... சும்மா ஒரு வெட்டி பந்தா ! நாம வேற பல்ல இழிச்சிக்கிட்டு நாக்க தொங்க போட்டுக்கிட்டு ரிக்குவஸ்ட் பண்ணுறோமா... அந்த எடம் தான் அவிய்ங்க சிக்ஸர் அடிக்கிற எடம், நமக்கு கிளீன் போல்டு!
இல்ல தெரிஞ்சவய்ங்க கூடத்தான் ஃபிரண்ட்ஷிப் வச்சுக்குவேன்னு சொல்றீங்களே , அந்த தெரிஞ்சவய்ங்க என்ன உங்கம்மா கர்ப்பத்தில உங்கூட இருந்து காரப்பொடி வித்தவய்ங்க்ளா என்ன? நாங்க பசங்க அப்புடித்தான் இருப்போம், "இல்ல ! நீங்க எங்களுக்கு றிக்குவஸ்ட் அனுப்புறது புடிக்கல, இனிமே நீங்க அனுப்பாதிங்கன்னு' நீங்க நெனச்சிங்கன்னா கண்ணியமா நீங்களே எஙளுக்கு ஒரு றிக்குவஸ்ட் அனுப்பி விடுங்க அது மரியாத ! அத விட்டுப்புட்டு நாங்க நாளுக்கு நாலு வாட்டி றிக்குவஸ்ட் அனுப்பியும் கண்டுக்காம இருக்கிறது எந்த ஊர் நியாயம்? ( ஏய்! எதுக்கு டென்ஷன் ஆகுறே? பாடிய லூசா விடு ! ஷோல்டர இறக்கு! # இல்லிங்...... எல்லாம் ஒரு வவுத்தெரிச்சல் தானுங்.....)
அடுத்தது இன்னொன்னு அது தான் உலக மகா காமடி! இது பெரும்பாலும் பொண்ணுங்க பண்ணுறது தான்! இந்த பிரைவசி! பிரைவசின்னு ஒண்ணு இருக்கில்ல ( ஊர்வசியோட அக்கா பொண்ணுன்னு டாக்டர் டூலிட்டில் சொன்னாரு) அத குடுத்துவச்சி அடிப்பாளுங்க பாருங்க அலுப்பு....... யப்பா வேணாம்னு போயிரும்! அடி ஆத்தா! உனக்கு உன்னோட திருமுகத்த எங்களுக்கு காட்ட புடிக்கலன்னா ஓகே! ஆனா தயவு செஞ்சு உங்களோட அடிப்படை தகவல்களையாவது வெளிப்படையா வையுங்கடி! நீங்க ஆணா ? பொண்ணாங்கிறது எங்களுக்கு தெரியக்கூடாதா?
இப்புடித்தான் அன்னிக்கு ஒரு நாள் ஒரு பொண்ணோட புரொஃபைல பார்க்க நேரந்தது. அந்த பொண்ணோட பெயர் என்னோடு சிறுவயதில் படித்த பெண்ணின் பெயரை ஒத்திருக்கவே ஒரு றிக்குவஸ்ட் அனுப்பினேன், கண்ணியமான செய்தியுடன்! பயபுள்ள அப்பனும் ஆத்தாவும் மொளகா கடிச்ச நேரத்தில பொறந்திருக்கும் போல இருக்கு! ஒரு பொண்ணு இப்புடியெல்லாம் பேசுமாங்கிற அளவுக்கு சரமாரியா எனகு கெட்ட வார்த்தயில ஒரு செய்தி! வாழ்க வளமுடன்! மறுபடியும் மாணிக் பாட்ஷா! மறுபடி ஒரு ஹக்கிங்! தக்காளி! பிரைவசி கொடுத்து அப்புடி என்ன உடச்சகடலைய ( பருப்புன்னு சொல்றது இந்தியாவுல கெட்ட வார்தேன்னு டாக்டர் டூலிட்டில் தான் சொன்னாரு) ஒழிச்சு வச்சிருக்கன்னு பாப்போம்னு! அங்க நான் பார்த்த தகவல்கள் எல்லாம் "யப்பா..... அடுத்த பொம்பள ஐன்ஸ்டீன் ரெடி " அப்டீன்னு யோசிக்கவச்சுது........ கண்டிப்பா இந்த தகவல்களை யாரும் பாத்துராத மாதிரி ஒழிச்சு தான் வைக்கணும்.
பிடிச்ச பூ : செம்பரத்தை
பிடிச்ச நடிகர் : டி.ராஜேந்தர் , சமீபத்தில் பவர் ஸ்டார்
பிடித்த உணவு : ஓசியில் எது கிடச்சாலும்
விளையாட்டு : பச்சக்குதிரை
இசை : டி.ராஜேந்தர் சோக கானங்கள்
நண்பர்கள் :00
படங்கள் : 3 ( ஒரு திரிஷா , ஒரு சமந்தா , ஒரு பூனைக்குட்டி)
திரைப்படங்கள் : லத்திகா, குருவி, 3
இத பாத்ததூம் அப்புடியே ஒரு ஸ்கிரீன் ஷொட் எடுத்துகிட்டேன், அந்த படத்தோடு இப்படியொரு செய்தி அனுப்பினேன் அந்த மேரி கியூரி அம்மையாருக்கு "இந்த எழவ நாங்க பாத்திருவோம்னா பொத்தி பொத்தி வச்சிருக்க? இரு உன்னோட அக்கவுண்ட பிளாக் பண்ணிடுறேன்"
பதில் வந்தது
"எத்தன அக்கவுண்ட பண்ணுவ?"
நாராயணா ! ஃபேஸ்புக்கையும் , ஸூக்கர்பேர்க்கையும் நம்ம பசங்களையும் காப்பத்தப்பா!
சரி ! நாம வலிய போயி தான் எந்த பொண்ணும நம்ம கணக்கு பண்ணுறாளுக இல்லன்னு வருத்தத்தில இருந்தா, நமக்கும்சில "நோர்ட்டிபிகேஷன்ஸ்" வரும் அதுவும் பொண்ணுங்க சைட்ல இருந்து! சோறு தண்ணி பாக்காம விழுந்தடிச்சு போயி பாத்தா "மங்கம்மா உங்களை ஒரு படத்தில் குறியிட்டுளார்", " ராக்காயி உங்களை ஒரு படத்தில் குறியிட்டுளார்" அப்டீன்னு வந்திருக்கும் சரி நம்மளையும் மதிச்சு ஒரு ஃபிகரு "Tag" பண்ணியிருக்கேன்னு போயி பாத்தா "எலி, பூனை, சிங்கம், கரடி, வண்ணாத்திப்பூச்சி,தேவாங்கு, கருங்கொரங்கு" படங்கள "சோ கியூட்"ன்னு போட்டு நூத்தியொரு பேரு கூட நம்மளையும் சேத்து "Tag" பண்ணி விட்டிருப்பாளுக! சரி வந்ததுக்கு ஒரு "ஜொள்" வடிய கொமண்ட் போட்டு போவோம்னு பாத்தா அவனவனுக்கு அங்க போட்டி நடக்கும்! யாரு அந்த மானம்கெட்ட படத்துக்கு அதிக கொமண்டு போடுறதுன்னு!
சரி சில நேரம் அரைத்தூக்கத்தில் எழும்பி ஃபேஸ்புக் " பார்க்கும் போது "மங்கம்மா அழைத்துள்ளார்"ன்னு ஒரு செய்தி வரும் பாருங்க! உடம்பு நரம்பெல்லாம் அப்பிடியே முறுக்கேற , நாலு நாளா வெளக்காத அந்த பல்ல ரொம்ப கஷ்டப்பட்டு வெளக்கி, இப்போதான் சமீபத்தில் போன தீபாவளிக்கு துவச்ச சட்டைய எடுத்து மாட்டிக்கிட்டு , "செண்டு" இலாத குறைக்கு ராத்திரி நொளம்புக்கு அடிச்சது போக மீதி இருக்கிர மோர்டீன் ஸ்பிரேய எடுத்து ரெண்டு அக்குள்ளயும் விசிறி விட்டுக்கிட்டு , எந்த அட்ரசுக்கு வரச்சொல்லியிருக்கான்னு மறுபடி அந்த செய்திய வாசிச்சா "மங்கம்மா உங்களை "Barn Buddy" ஆட அழைத்துள்ளார்" , "ராக்காயி உங்களை "City vally" ஆட அழைத்துள்ளார்ன்னு வந்திருக்கும் பாருங்க! அப்புடியே பத்திக்கிட்டு வரும், ஆனாலும் மீசயில ஒட்டின மண்ண அப்புடியே லேக்கா வழிச்சு தொடச்சுபுட்டு மங்கம்மா கூட உக்காந்து பார்ன் படியில் வெவசாயம் பாக்க வேண்டியது தான் . ( எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழைப்புன்னு கேக்குறியளா? தப்பு .....தப்பு ....தப்பு...... நானூறு தடவைக்கு மேலா "றிக்குவஸ்ட்ஸ்" போட்டு கெடச்ச ஃபிரண்ட்ஷிப் மச்சி அவளவு லேசா விட முடியாது! # எவனோட Fake புரஃபைலோ?)
நான் கூட என்ன யோசிக்கிறேன்னா பேசாம ஒரு பத்து பிளாக்கர் ஐ.டிய தொறந்து நமக்கு நாமே ஓட்டும் போட்டி ஒவ்வொரு பதிவிலும் "சூப்பர்" , "கலக்கல்", "அருமை" "தொடருங்கள்","வடை", "பாயாசம்", "பொங்கல்", "புளியோதரை"ன்னு பின்னூட்டமும் போட்டி நம்மள நாமே பிரபலப்படுத்திக்கலாம்னு நெனைக்கிறென் நீங்க என்ன சொல்றீக?
செய்யுறது :P
ReplyDeleteஅண்ணே யார் செய்யுறது? ஹி...ஹி...ஹி....
Delete//என்னோட ஃபிரண்டு ஒருத்தரு ஃபேஸ்புக் மூலமா ஒரு பொண்ண லவ் பண்ணினாரு. //
ReplyDeleteமச்சி இவன் தான் எங்கயோ போயி உதை வாங்கிட்டு வந்துருக்கான்
யோவ்! உம்ம நான் என்ன சொன்னேன் , என்னோட பிளாக்கு பக்கம் வரவேணாம்னு சொன்னேனா இல்லையா? இப்போ யார கேட்டு உள்லே வந்தீர்? எங்கே ஓய் நாய் ஸ்டோரி?
Deleteஎன் கதையே periya சோக கதை.... எழுதுவோம் பொறுமையா...by the by
Delete//என்னோட ஃபிரண்டு ஒருத்தரு ஃபேஸ்புக் மூலமா ஒரு பொண்ண லவ் பண்ணினாரு. //
nee thaane athu ?
இப்புடியே பொரளிய கெளப்பி விடுங்கடா!
Delete//"டைனோசர் இன்னும் உயிரோடதான் இருக்கு, ஆனா சின்னதா இருக்கு"ன்னு மரண மொக்கை போடுறவனும் , "உங்களது புகைப்படம் அழகாக உள்ளது தோழி, மேலும் இதுபோன்று சிறப்படைய வாழ்த்துக்கள்"ன்னு அங்கு வந்து தான் தமிழ் பற்று காட்டுறவனுமாக//
ReplyDeleteஇது பரவால்ல ,... அடுத்த மதர் தெரசான்னு எல்லாம் கமண்ட்டு போடுரான்னுங்க தலைவா ...
புடிங்க சார் அவன... புடிச்சு மரத்தில கட்டுங்க சார்.... குஞ்சாங்கோட ஆவிய கூப்பிடுங்க சார், வந்து கொலையோட கவ்வின்னு போயிரட்டும்!
Delete//அவளோட அக்கவுண்ட ஹேக் செய்தேன்//
ReplyDeleteஉண்மையாவா?
நீங்கள் பெரிய அனோனி தான்..
தலைவா நான் பெரிய அப்பாட்டாக்கர் எல்லாம் இல்லீங்கோ! ஆனால் சில பொண்ணுஙளோட அக்கவுண்ட் ஹேக் பண்ணுவது அவளவு கஷ்டம் கெடையாது.
Deleteபாஸ் எனக்கும் ஒரு ப்ரோபிலே hack பண்ணனும் எவ்வளவு charge பண்ணுவீங்க.
ReplyDeleteவெத்தில , பாக்கு , பழம் கூட நூத்தி ஒருவா காசு! அமாவாச நடு ராத்திரில சுடுகாட்டுல என்னய வந்து பாருங்க! பண்ணிடலாம்!
Deleteஏதோ செய்வினை வைக்க கூப்பிடுற மாதிரி கூபிடுரீங்க.
Deleteஆமா ! ஆமா! இல்லையா பின்ன? செய்வினை வைக்காம இதுங்க புரோஃபைல வேற எப்புடி ஹாக் பண்ணுறதாம்?
Deleteசெய்வின வச்சி அது நமக்கே திரும்ப return ஆயிடாம பார்த்துக்கணும்
Deleteநாங்கெல்லாம் ரொம்ப கேர்ஃபுல்லா இருப்பம் டே.....
Delete# யய்யாடி! ஒரு வேள நமக்கு ஆப்ஸ் வச்சிருவாளுகளோ?
ஏலேய் ப்ளாக் ஒன்னும் உன்னோட டையரஜ இல்ல. சொந்தக்கதைகளை அடுத்தவங்க பேர்ல உல்ட்டா பண்ணி எழுதினா எங்களுக்கு தெரியாதா என்ன?
ReplyDeleteஆனா பாருப்பா அப்பிடியே என்னோட ஆதங்கத்தை எழுத்தில வடிச்சிருக்க பாரு..... எப்பிடித்தான் மைன்ட்வோய்ஸ் இப்புடி ஊருக்கெல்லாம் கேக்குதோ
///ஏலேய் ப்ளாக் ஒன்னும் உன்னோட டையரஜ இல்ல. சொந்தக்கதைகளை அடுத்தவங்க பேர்ல உல்ட்டா பண்ணி எழுதினா எங்களுக்கு தெரியாதா என்ன?////
Deleteஎன்னய என்ன குருஷேத்திரம் கோபிநாத்துன்னு நெனச்சியா? பக்கத்துவீட்டு சுவத்தில ஒண்ணுக்கு அடிச்சு செம அடிவாங்கி அப்புறம் உன் பிளாக்கில " ஒரு அப்பாவி நாய் கரண்டு போஸ்டில உச்சா அடிக்கிறது குத்தமா? அதுக்கு போய் அதோட வாயில சாணியவா கரச்சு ஊத்துவீய்ங்க?" அப்டீன்னு பதிவு போட்டவன் தானே நீயி! :-))
/////ஆனா பாருப்பா அப்பிடியே என்னோட ஆதங்கத்தை எழுத்தில வடிச்சிருக்க பாரு..... எப்பிடித்தான் மைன்ட்வோய்ஸ் இப்புடி ஊருக்கெல்லாம் கேக்குதோ////
ஹி...ஹி....ஹி..... உன்னோட மயிண்டு மானம் கெட்ட மயிண்டு மச்சான், நீ யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில இருந்து நெனைக்கிறது எனக்கு கொழும்பில கேக்குதுன்னா பாத்துக்கேயேன்!
https://www.facebook.com/photo.php?fbid=3376469383130&set=a.3270575615852.124906.1611235713&type=1&ref=nf
ReplyDeleteரொம்ப நன்றி நண்பா! இப்போவே இதையும் பதிவில சேத்துடறேன்! மிக்க நன்றி வருகைக்கும் , பின்னூட்டத்துக்கும், இந்த சி.ஐ.டி வேலைக்கும், ஹி...ஹி...ஹி...
Delete//கிரியேட்டிவிட்டில ஜேம்ஸ் கம்ரூன் கூட தோத்து போயிருவாண்டா!//
ReplyDeleteஎப்படி இந்த பேருக்கு நடுவுல ஃபுட்பால் பிளேயர்ஸ் பேர சேர்த்துக்கிறா மாதிரியா??
ராஜா என்னய போல ஒரு பிரபல பதிவர் தன்னோட பேரு கூட ஒரு பிளேயரோட பேர சேத்துக்கிட்டா அந்த பிளேயருக்கு தானே மச்சி பெருமை! அது போக இந்த மெஸ்ஸி வேற கெஞ்சி கேட்டுக்கிட்டாப்ல ! அது தான் போனா போகட்டுமேன்னு சேத்துக்கிட்டேன்!
Delete//ஒரு பத்து பிளாக்கர் ஐ.டிய தொறந்து நமக்கு நாமே ஓட்டும் போட்டி ஒவ்வொரு பதிவிலும் "சூப்பர்" , "கலக்கல்", "அருமை" "தொடருங்கள்","வடை", "பாயாசம்", "பொங்கல்", "புளியோதரை"ன்னு பின்னூட்டமும் போட்டி நம்மள நாமே பிரபலப்படுத்திக்கலாம்னு நெனைக்கிறென் நீங்க என்ன சொல்றீக?//
ReplyDeleteவாவ்.. வட் ஏ ஜடியா சர்ஜி!!!
அப்படியே அந்த அக்கவுண்டுகள் மூலமா உங்களுக்கு நீங்களே அவார்டுகள் கொடுத்து, பொன்னாடை போர்த்தி கெளரவப்படுத்தவும் முடியும்!!!
(அப்பவாவது நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த "இலக்கிய விருது" உங்களுக்கு கிட்ட மனமுவந்து வாழ்த்துகிறேன்)
வாழ்க வளமுடன்!!
இலக்கிய விருதெல்லாம் வேணாம் மச்சி ! எங்க பக்கத்து வீட்டு ஃபிகர் இலக்கியா கூட ஒரு விருந்து சாப்பிட்டா மட்டும் போதும் மச்சி! ஹி...ஹி...ஹி...
Deleteமாணிக் பாட்ஷாவின் சேவைகளை அணுகுவதற்குநாம் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம் தந்துதவ முடியுமா??
ReplyDelete#தமிழ்நாடே காத்துக்கிட்டிருக்காம் மை லார்ட்!
என்னைய சைபர் கிரைம்ல மாட்டி விடுறதுக்கு ஐடியா பண்ணுறங்கிறது மட்டும் எனக்கு நல்லாவே விளங்குது! வலையில சிறுத்த சிக்கும் சில்வண்டு சிக்காதில்லே!
Deleteசூப்பர் சரியா சொன்ன மச்சி
ReplyDeleteசூப்பர் சரியா சொன்ன மச்சி
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி நண்பா!
Delete*சொம்பு ரொம்ப அடி வாங்கியிருக்கோ?