மசாலா , பழிதீர்த்தல் எல்லாவற்றையும் தாண்டி இன்று வியக்கத்தக்கதாக வளர்ந்துவரும் தமிழ் சினிமாவில் சில காட்சிகளை அல்லது வேறேதும் சம்பவங்களை பார்க்க நேருகையில் எனக்கு சில சமயம் சிரிப்பாகவும் , சில சமயம் "கொய்யாலே" என்றும் , சில சமயம் "தக்காளி டேய்" என்று எண்ணத்தோன்றும்.
தமிழ் சினிமாவில் சில இடங்களில் ஒரு காட்சியை விளங்கச் செய்வதற்கு அல்லது ஒரு காட்சியின் கனத்தை காட்டுவதற்கு இயக்குனர் குட்டிக்கரணம் எல்லாம் அடிக்க வேண்டி இருக்கும். சிலர் "ஐயையோ ! அது ஆபாசமாக போய் விடும் " என்று தேவையான இடத்தில் தேவையான காட்சியை வைக்காது போய்விடுவார்கள், கடைசியில் அந்த காட்சி பார்வையாளனை தொட்டுவிடாமலே போய்விடும் , காட்சியும் படமும் சப்பென்று ஆகிவிடும். இன்னொரு சாரார் கதைக்கு "சதை" தேவையென்று எடுத்தேன் என்று உலகத்தில் உள்ள அத்தனை மீடியாக்களுக்கும் "பப்பரப்பி" ( தமிழில் புது வார்த்தை # தம்பட்டம் அடித்தல்) படம் முழுவது ஒரே அசைவமாக இருக்கும், விரசம் நிரம்பி வழிவதால் , காட்சியும் படமும் ஊத்திக்கொள்ளும். இன்னொரு சாரார் இருக்கிறார்கள், இவர்கள் மகா காமடியான ஆட்கள்! கதைப்படி ஏதாவது காட்டியும் ஆகவேண்டும், ஆபாசமாகிவிடுமோ என்ற பயமும் வேறு, ஆனாலும் காட்டவேண்டும்! எனவே இவர்கள் என்ன செய்வார்கள் என்றால் சிம்பாலிக்கா காட்டுகிறேன் பம்பாலி என்று காமடி பண்ணியிருப்பார்கள்.
ஒருசிலர் இருக்கிறார்கள் ஆபாசமாகவே இருந்தாலும் விரசம் தெரியாமல் ரசனையோடு படமாக்குபவர்கள். அந்த டெக்னிக் எல்லாருக்கும் தெரிவதுமில்லை, தெரிந்தவன் அதை சரியாக செய்துவிடுவதுமில்லை. ஆக இப்படியான இக்கட்டான நிலைகளில் என்ன செய்யலாம் என்று நான் இப்போது பாடம் எடுக்கப் போகிறேன். அதன் மூலம் தெளிவான ஒரு அறிவை தமிழ் இயக்குனர்களுக்கு வழங்கி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோய் விடுவது என்ற தீர்க்கமான முடிவில் இருக்கின்றேன். ஆகவே தமிழ் சினிமாவில் எனக்கு தெரிந்த சில இடங்களில் தமிழ் சினிமா எவ்வாறு நடந்துகொண்டது, எவ்வாறு நடந்து கொண்டால் சர்வதேச தரத்துக்கு போகலாம் என்று விளக்கம் தரலாம் என்று நினைக்கின்றேன் ( இயக்குனர்களுக்கு பாடநெறி இலவசம்).
அதற்காக தமிழ் சினிமா கையாளும் சில மரபுகளை தூசு தட்டி , அதனை அலசி ஆராய்ந்து அதன் ஊடாக ஹாலிவுட் தரத்துக்கு தமிழ் சினிமாவை கொண்டுபோய் விடலாம். "ஓ மக ஸீயா" பாடலுக்காக உரையெழுதியதைத் தொடர்ந்து நான் செய்யப்போகும் இன்னுமொரு கலைச்சேவை இது என்பதால் இந்த தடவையாவது எனக்கு முனைவர் பட்டம் கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த முத்தக்காட்சி என்பது அன்று முதல் இன்று வரை ஒரு சர்ச்சையான சமாச்சாரமாகவே இருந்து வருகின்றது. நான் ஏற்கனவே சொன்னது போல் இந்த முத்தக்காட்சியை பொறுத்தவரை அதனை படமாக்கும் விதத்தை வைத்துக்கொண்டு இயக்குனர்களை நான்கு வகையாக பிரித்துவிடலாம்.
1. ஆபாசமாகுமோ என்று பயந்து , தேவையான இடத்திலும் கூட முத்தக்காட்சியை தவிர்த்து விடுவோர்.
2. தேவையோ இல்லையோ, பச்சை பச்சையாக முத்தக்காட்சி உட்பட "மொத்தக் காட்சியையும்" வைத்துவிடுவோர்.
3.ரெண்டும் கெட்டான் நிலையில் "சிம்பாலிக்கா" (symbolic) காட்டுபவர்கள். ( தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை இவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்)
4. காட்சிக்கும் தேவையாயின் ஆபாசம் இல்லாமல் , முத்தக்காட்சிகளை பக்காவாக படமாக்குபவர்கள்.
இந்த கட்டுரை இதுவரை நான் பார்த்த சினிமாக்களின் அடிப்படையிலேயே எழுதப்படுகின்றது. எனது குறுகிய அறிவு வட்டத்துக்கு அப்பால் பரந்து விரிந்த தமிழ் சினிமாவை நான் தவறவிட்டிருப்பின் மன்னிச்சூ........... இப்போது தமிழ் சினிமாவில் இந்த முத்தக்காட்சிகளின் பரிமாணத்தை பார்த்துவிடலாம்.
நான் அறிந்து, அல்லது நான் பார்த்து தியாகராஜர் பாகவதர் காலத்தில் முத்தக்காட்சி இடம்பெற்றதை இதுவரை பார்த்திருக்கவில்லை. நான் அறிய சிவாஜி, எம்.ஜி.ஆர் கால சினிமாவில் தான் இந்த முத்தக்காட்சிகளை பார்த்திருகிறேன். அதை இப்போது பார்த்தாலும் செம காமடியாக இருக்கும்.
நாயகனும் நாயகியும் டூயட் பாடிக்கொண்டு இருப்பார்கள் , திடீரென்று நாயகன் "அரை" அடித்த மப்பில் கண்களை சொருகுவது போல சொருகிக்கொண்டு நாயகியை பார்ப்பார். உடனே இந்தம்மா ஒத்தை கையால் முகத்தை பொத்திக்கொண்டு , வாயை ஒரு பக்கமாக கெழித்து வைத்துக்கொண்டு ( வெக்கப் படுறாங்களாமா) தலையை வேண்டாம் என்ற பாணியில் அங்கும் இங்கும் ஆட்டும். அதுக்கு பிறகு என்ன சொல்லி நாயகியை நாயகன் "அமைத்தார்" என்ற வாதத்துக்கு இடமில்லாமல் உடனே கமிரா வானத்தை நோக்கி திரும்பும் . ரெண்டு செக்கனுக்கு பிறகு முதலில் நாயகன் எழுவார். எழுந்த கையோடு "என்ன கப்புடா யப்பா...... நாலஞ்சு நாளா பல்லுவெளக்காம இருந்திருப்பா போல......" என்ற தோரணையில் தனது உதட்டை ஒருகையால் வழித்து "தொலஞ்சு போ சனியனே" என்று பக்கத்து வரப்புக்குள் எறிவார். அந்த கண் இன்னமும் "அரை" அடித்த போதையில் சொருகியபடியே இருக்கும். அதன் பின்னர் அந்த அம்மா எழும்பும் , அதே ஒத்தை கை, அதே கோணல் வாய், அதே தலையாட்டு ! தான் கொடுத்த முத்தத்தை வழித்து நாயகன் எறிந்து விட்டார் என தெரிந்தும் வெட்கமே இல்லாமல் வெட்கப்பட்டு சிரிக்கும்.
அதன் பிறகு இந்த முத்தக்காட்சியை காட்டுவதற்கு புதரை ஆட்டுவது, பூக்களை கசக்குவது, புல்லுவெட்டுவது, மரம் அரிவது என்று புதுசு புதுசாக யோசித்தார்கள். அதிலும் இந்த இடைக்கால படங்களில் நாயகனும் நாயகியும் பாலைவனத்திலே நின்று டூயட் பாடினாலும் , இந்த முத்தக்காட்சி என்று ஆகிவிட்டால் எங்கு தான் ஒரு புதரை கண்டு பிடிக்கிறார்களோ? இது செம காமடியாக இருக்கும், நாயகன் நாயகியை தர தரவென்று இழுத்துக்கொண்டு காலையில் எதுக்கோ செம்புடன் ஓடுவது போல் ஓடுவார். ஒரு புதரை கண்டால் போதும், சடார் என்று உள்ளே போவார்கள் , புதர் எவளவு சிறிதாகவே இருந்தாலும்! அதன் பின்பு அந்த புதர் அருள் வந்த சாமியார் போல் பரபரவென்று ஆடும். அதன் ஆணி வேர் பெயர்ந்து போகும் படி ஆட்டிவிட்டால் முத்தம் முடிந்துவிட்டாதாக அர்த்தமாம்! தக்காளி டேய் !!!!
இந்த புதர் ஆட்டு படலத்தை நான் ஆரம்பகாலத்தில் பார்க்கும் போது பலத்த சந்தேகங்களுக்கு ஆளானதுண்டு. ஒரு வேள அந்தம்மாவ இவன் கூட்டிக்கொண்டு போயி "வாயில கடிச்சு வச்சிர்ரானோ? அது தான் வலி அதிகமாயி அந்தம்மா ஒரு பிடிமானத்துக்கு பொதர ஆட்டுது போல " என்று நினைத்தது உண்டு. அது போக முத்தம் போட போனால் மக்களே ஏன்டா பொதர புடிச்சு ஆட்டுறீக? ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிடும் போது தழுவிக்கொள்வதற்கு உடலில் இத்தனை பாகங்களை இயற்கை சிருஷ்டித்திருக்கிறதே, அத்த விட்டிட்டு எதுக்குடா சிவனேன்னு மொளசிருக்கிற அந்த பொதரோட பஞ்சாயத்துக்கு போறீக? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் நாயகனும் நாயகியும் ஒருவர் உதட்டை ஒருவர் கவ்வியபடி, தங்களது இரண்டு கைகளாலும் அருகில் இருக்கும் புதரை பிடித்து சர சரவென ஆட்டிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்று? சுத்தம், வெளங்கிரும்!!!!!
அதன் பின்பு எண்பதுகளிலும் இதே நுட்பமுறைதான் தொடர்ந்தது ( சில இடங்களில் கமலஹாசன் விதிவிலக்கு). தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் வேறு ஒரு நுட்பமுறையை கையாண்டார்கள். அதாவது நாயகனது அல்லது நாயகனது "பொடனியை ( பிடரி) " காட்டி இருவரும் முத்தமிடுவது போல் காட்டுவது. இது இன்னும் செம காமடியாக இருக்கும்.
நாயகனோ நாயகியோ முத்தமிடவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் , தனது துணை எந்த நிலையில் நின்றாலும் சரி , தலையை சூரத்தேங்காயை பிடிப்பது போல ஒரு மரணப்பிடி பிடிப்பார்கள் பாருங்கள், அந்த பிடியிலேயே பாதி சீவன் போயிரும் அந்த அம்மாவுக்கு. அதை பார்த்தால் அன்பாக முத்தமிடுவதற்கு பிடித்தது போல இருக்காது, ஏதோ நாலணாவை திருடியவனுக்கு ரெண்டு கையாலும் செவிளைப் பொத்தி "சளார்" என்று அறைவதைப் போல இருக்கும். பிடித்தது தான் அப்படி கொடூரமாக இருக்கும் என்று பார்த்தால் முத்தமிடுவது இன்னமும் கர்ணகொடூரமக இருக்கும். அந்தம்மாவின் தலையை அய்யனார் கோயிலில் பலிகொடுக்கும் கோழியின் தலையை திருகுவது போல் "சடக்கென்று" ஒரு முறி முறித்து இடது பக்கமாக திருகி , காய்ஞ்ச மாடு கம்பில பாயிறது போல அந்தம்மா வாயி மேல பாய்ஞ்சு , மூணந்தெரு பூசாரி சேவலோட கொரவளய கடிச்சு ரத்தம் குடிப்பது போல் அந்தம்மா வாய கடிச்சு வைப்பான் பாருங்க , அந்த காட்சியை பார்த்தால் அன்பான ஒரு முத்தக்காட்சி கொடுப்பது போல் இருக்காது , ஏதோ நரபலி கொடுப்பது போல் இருக்கும். இந்த காட்சி பெரும்பாலும் நாயகனின் பொடனி பக்கத்தால் தான் காட்டப்படும்.
சரி நாயகன் இந்த ரத்தக்குடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்க நாயகியின் ரியாக்க்ஷன் எப்படி இருக்கும், அந்தம்மா கண்ணுக்குள் ஏதோ தூசி விழுந்ததை போல படபடவென்று கண்ணை அடிக்கும், அல்லது அது ஒரு எதிர் பாராத முத்தமாக இருந்தால் , அறுக்கப்போகிறார்கள் என்று தெரிந்து விட்டால் மாடு முழியுமே ஒரு முழி அப்புடி ஒரு முழி முழியும் அந்தம்மா, சில வேளை நாயகனும் இதே நவரசத்தை தான் வெளிப்படுத்துவார் !
இந்த மாதிரியான முத்தக்காட்சிகளை பார்த்தால் அது காதலர்கள் கொடுத்துக்கொள்ளும் பரஸ்பர அன்பு முத்தமாகவே இருந்தாலும் , இவர்கள் கொடுக்கின்ற ரியாக்க்ஷனில் அது ஏதோ கற்பழிப்பு காட்சி ரேஞ்சுக்கு இருக்கும். "கண்ணே ! மணியே !முத்தாரமே ! உன்னை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கணும் போல இருக்கென்று " வசனமெல்லாம் பேசி காதலிப்பார்கள். ஆனால் முத்தம் போடுகையில் " என்னடா மூஞ்சி இது , தேஞ்சி போன டயராட்டம் இருக்கு" என்ற ரேஞ்சில் கண்களை அந்த மாதிரி இறுக்கி மூடிக்கொள்வார்கள். சாதாரணமாக ஆங்கிலப் படங்களில் கூட அனேகமாக முத்தமிடும் போது லேசாக கண்களை மூடிக்கொள்வார்கள், ஆனால் அதை பார்த்தால் ஒரு காதலாக , ஒரு கவிதையாக , அந்த முத்தத்தை அனுபவித்து அந்த ரசனையில் கண்களை மூடி இருப்பது போல் தெரியும் . ஆனால் நம்மாளுக கண்ணமூடியிருக்கிற தோரணைய பாத்தா முத்தமிடும் போது கால்ல ஆணி பாய்ஞ்ச மாதிரி ஒரு ரியாக்க்ஷன் குடுப்பாய்ங்க. நம்ம ஹீரோ முத்தம் குடுக்கும் போது அந்தமா குடுக்கிற ரியாக்க்ஷன் இருக்கே !!எதோ ரெண்டுவாரம் பழைய அண்டாவில் இருந்து கெட்டுப்போன சோத்த தின்ன மாதிரி ஒரு எஃபக்டு குடுக்கும்.
அது போக முத்தக்காட்சிகளில் நாயகி கண்ணையும் , முகத்தையும் வைத்திருக்கின்ற தோரணையை பார்த்தால் ஏதோ அந்த நாயகன் அந்த நாயகியின் வாய்க்குள் தனது வாயினால் வேல்கம்பை நுழைப்பது போன்ற ஒரு மாயையை உண்டாக்கும். இவளவு வில்லங்கப்பட்டு ஒரு முத்தம் தேவையா மக்களே?
சில படங்களில் பார்த்திருக்கிறேன், நாயகன் அல்லது நாயகியின் பிடரியூடாக முத்தக்காட்சியை பதிவு செய்திருப்பார்கள். ஆனால் நாயகனின் உதடு நாயகியின் உதட்டுக்கு நேராக இருக்காது, நாயகியின் மூக்குக்கு நேரே இருக்கும். "எலேய் ! நீ என்ன முத்தம் போட வந்தியா இல்லாங்காட்டி அவளோட மூக்க நக்க வந்தியா?ன்னு கேள்வி கேக்கிற மாதிரி இருக்கும் அந்த காட்சியமைப்பு. அது போதாதென்று நாயகன் பகீரத பிராயனத்தனப்பட்டு முத்தம் இட்டுக்கொண்டு இருக்கையில் , அந்தம்மா வேற நாயகனோட பொடனி மயிர புடிச்சு இழு இழுன்னு இழுத்து பிச்சு எடுத்திரும். பிரபு தேவா, ராஜ்கிரண் போன்று சுருளாக தலை முடி வளர்த்திருக்கும் நாயகர்களுக்கு உயிரே போகும்.அங்க என்ன முத்தம் போடுறாய்ங்களா இல்ல மொளகா பஜ்ஜி தின்னுறானுகளான்னு ஒரே குழப்பமாயிரும்!
இதே போன்று கிராமத்து திரைப்படங்களில் ஒரு முத்தக்காட்சி இருந்தால் , அது இதைவிட படு பயங்கரமாக இருக்கும். நாயகன் நாயகியை அவளது வீட்டில் வைத்து அட்டாக் பண்ணிருவார். என்னென்னமோ பேசி கடைசியில் முத்தமிடுவார். அந்தமாவும் ஏதோ வெந்தபுண்ணில் வேல் பாய்ஞ்ச மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு அந்த முத்தததை அனுபவித்துக்கொண்டு இருக்கும். அதில் நடக்கும் அதியுச்ச காமடி என்னவென்றால் நன்றாக கட்டப்பட்டிருக்கும் அந்தம்மா வீட்டு சுவத்துக்கு ஹீரோ முத்தமிடும் போது , தன்னோட ஒரு காலை தூக்கி முட்டுக்கொடுக்கும் பாருங்க, அங்க நிப்பாருய்யா டைரக்டரு! முத்தம் போட வந்தானா இல்ல கொத்தனாரு வேலைக்கு ஆளெடுக்க வந்தானான்னு எனக்கு நானே கேட்டுப்பேன்!
சரி முத்தமிடும் லட்சணம் அல்லது முத்தக்காட்சியை எடுக்கும் வாவண்யம் தான் இந்த நிலையில் இருக்கிறது என்றால் , முத்தமிட்டு (?????) முடிந்தவுடன் நம்ம ஹீரோக்கள் கொடுக்கும் முக பாவங்கள் இருக்கிறதே , ஐயோ நாமெல்லாம் பாவம் என்று நமக்கு நாமே அனுதாபப்படும் படி ஆகிவிடும். புரட்சி தலைவர் முத்தமிட்டு முடிந்தவுடன் , அப்படியே எழுந்திருந்து தனது வலது கையின் இரண்டு விரல்களையும் ஒரு சுழட்டு சுழட்டி தானே மணந்து கொள்வார். நம்ம நடிகர் திலகம் முத்தம் முடிந்ததும் கண்னை கஞ்சா அடித்தவன் போல் வைத்துக்கொண்டு வாயை வழித்து வாய்க்காலுக்குள் எறிவார், ரஜினி முத்தம் முடிந்ததும் காலையில் எழுந்ததும் கடவாய் துடைப்பது போன்ற ஒரு ரியாக்க்ஷன் கொடுப்பார், விஜய் கொஞ்சம் வித்தியாசம் நம்ம சரோஜா தேவி அம்மா பண்ணுற மாதிரி ஒத்தை கையால் முகத்தை பொத்திக்கொண்டு , வாயை ஒரு பக்கமாக கெழித்து வைத்துக்கொண்டு அரவாணி ரேஞ்சுக்கு நின்று நெளிவார், சிம்பு !!! யப்பா சொல்லவே வேண்டாம் , இவன் பாவியை முத்தம் கொடுடா என்றால் வாயை கடித்து துப்பி வாய்க்கால் தகராறாக்கி விடுவான். தனுஷ்...! ஹீம்......... கொவ்வைப்பழம் போல அந்த சுருதிப்பொணோட உதடு இருக்க , மூக்கை நக்கினவன் தானே இவன்!!
முத்தம் முடிந்ததும் இவர்கள் நவரசங்களை காட்டுகையில் , ஏதோ செய்ய கூடாத தப்பை செய்துவிட்டு கோர்ட்டுக்கும் கேஸுக்கும் பயப்படுபவர்கள் போல் தோன்றும். அட ! முத்தம் என்பது நல்ல விசயம்பா! முத்தமிடும் போது உடலுக்கு தேவையான நெறைய அமிலங்கள் சுரக்கின்றது என்று எங்கயோ படிச்சிருக்கேன். அது போக கன்னத்தில் அனுமதிக்கப்படுகின்ற முத்தம் உதடு என்று வரும் போது ஏன் தடைசெய்யப்படுகிறது என்பது எனக்கு இன்னமும் விடை தெரியாத ஒரு கேள்வியாகவே இருக்கிறது! ஒரு வேளை தமிழ் கலாசாரத்துக்கு ஒவ்வாதது என்று நினைக்கிறார்களோ? ஆனாலும் தமிழ் இலக்கியங்களில் கூட உதட்டு முத்தம் என்பது நிறைய இடங்களில் செய்யுள்களாக கொட்டிக்கிடக்கின்றதே!

தம்பி கிஸ் ஒதட்டுல குடுக்கணும், மூக்கில இல்ல! |

சில நேரங்களில் உதட்டு முத்தம் என்பது நூறு காட்சிகளில் காட்டியும் சொல்லமுடியாத நாயகன் நாயகி அன்பை சொல்லிவிடக்கூடியது. உதரணமாக "சத்யா" படத்தில் வரும் "வளையோசை கல கலவென...." பாடலில் ஒரு கட்டத்தில் அமலாவின் உதட்டின் மேல் கமல்ஹாசன் முத்தமிடுவார் , அந்த முத்தம் ஆயிரம் கவிதைகள் சொல்லும், அந்த முத்தத்தில் எந்த விரசமும் இருக்காது. அதே போல் "ஹேராமில்" ராணிமுகர்ஜியை சேம் கமல் முத்தமிடுவார், அப்போது அந்தம்மா கமல் ஹாசனின் வாய் மணப்பது போலவோ அல்லது அக்குளில் குளவி குத்தியது போலவோ வழமையாக ஹீரோயின்கள் காட்டுகின்ற எந்த ரியாக்சனையும் காட்டாது. அந்த முத்தத்தை அனுபவித்து புன்சிரிப்போடு கூடிய ஒரு உணர்வை முகத்தில் காட்டும். அத்தோடு கமலின் பொடனி மயிரையும் பிய்த்து எடுக்காமல் , கமலின் கையோடு கைகோர்த்து அந்த காட்சி கவிதையாய் மாறும் படி செய்திருக்கும். (ஆனா நெறைய ஹீரோயினுங்க இந்த மாதிரி சீனில் கையில் உள்ள ஏதாவது ஒரு பொருளை 'சடார்ன்னு" ஒடைப்பாளுக! ( எங்க ஊரில் வலிப்பு வருபவர்கள் தான் இந்த மாதிரி எஃபக்டு குடுப்பார்கள்) , கிராமத்து ஹீரோயின் என்றால் கையில் இருக்கும் தக்காளியை பிதுக்கும்). ஆனால் ஹேராமில் கமல் முத்தத்தோடு பியானோ வாசிப்பது அந்த முத்ததை ஒரு இனிய இசைக்கு ஒப்பிடுவது போல இருக்கும்.
அதற்காக முத்தக்காட்சி எப்படியிருந்தாலும் அதை தமிழ் சினிமாவில் அனுமதித்துவிட வேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. காரணம் ஒரு காதலின் ஆழத்தை வெளிப்படுத்த ஒரு சிறந்த ஊடகமாக இருக்கக்கூடிய உதட்டு முத்தக்காட்சி , எல்லை மீறிப்போனால் ஆபாசமாகவும் முடிந்துவிடும். சத்யா, ஹேராம் ரக முத்தங்கள் ஓக்கே! ஆனால் சில ஆங்கில படங்களில் வருவது போல் நாயகனும் நாயகியும் ஒருவர் உதட்டை ஒருவர் கவ்விக்கொண்டு அவளது வாய்க்குள் தனது நாக்கை விட்டு, எண்ணை எடுக்கலாமா, யுரேனியம் இருக்கிறதா என்று நாயகனும், நாயகனின் வாய்க்குள் தனது நாக்கை விட்டு எரிவாயு கிடைக்குமா? தைத்தேனியம் தோண்டலாமா என்று நாயகியும் ஆய்வு செய்யும் வகையறா முத்தங்கள் நமக்கு சரிப்பட்டு வராது. அது போல "சும்மா தானே இருக்கு , பொறு கடிச்சு இழுத்து தூர துப்பிடறேன்னு" நயந்தாரா உதடுகடிக்கும் சிம்பு வகை முத்தங்களும் தேவையே இல்லை.
கதைக்கு தேவைப்பட்டால் விரசம் இல்லாத முத்தக்காட்சிகள் எடுப்பது தப்பேயில்லை. ஆனால் அது கத்தி மேல் நடக்கும் வேலை, சிறிது சறுக்கினாலும் ஒன்றில் சென்சார் கத்திரி போடுவார்கள், அல்லது சென்சாரில் தப்பித்தால் மக்கள் நம்மை டைரக்டர் சாமி லிஸ்டில் சேர்த்து விடுவார்கள். ரொம்ப சூதனாமா இருக்கணும்! எல்லாவற்றுக்கும் மேல் இயக்குனர் கேட்பதற்கு முன்னமே நான் முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என சனல் 4 'க்கு பேட்டி கொடுக்காத ஹீரோயின் படத்தில் இருக்க வேண்டும்.
ஆரம்ப காலங்களில் வந்த "சிம்பாலிக்கல் பம்பாலி" மூலம் முத்தக்காட்சிகளை காட்டி வந்தார்கள், இப்போதும் தமிழ் சினிமாவில் அநேகமாக குறியீடுகள் மூலமே முத்தங்களை காட்டி வருகிறார்கள். இன்றைய இயக்குனர்களில் அனேகமானோர் முத்தக்காட்சி எடுப்பதற்காக வாய்கழுவ வாய்க்கால் பக்கமோ அல்லது எங்காவது கள்ளிப் புதரைத்தேடியோ அல்லது தக்காளிகளையோ கசக்குவது கிடையாது. சுவாரசியமாக முத்தக்காட்சிகளை காட்டிவிட்டு போகிறார்கள். "நான் மகானல்ல" திரைப்படத்தில் வரும் "கண்ணோரம் காதல் வந்தால்..." பாடலில் கார்த்தியும் காஜலும் ஷொப்பிங்க் போவார்கள், அப்போது லிஃப்ட்டுக்குள் இருந்து இருவரும் வெளியே வருகையில் காஜல் தனது உதட்டை தூக்கி பார்த்தவண்ணம் வருவார், அந்த காட்சி இருவரும் முத்தமிட்டுக்கொண்டதை அழகாக காட்டும். ( காஜல் தனது உதட்டை தூக்கி பார்க்கும் தோரணையை பார்த்தால் ஏதோ , கார்த்தி உதட்டை கடித்து வைத்த மாதிரி ஒரு எஃபக்ட் வந்தாலும் கூட , அந்த காட்சி முத்தத்துக்கு ஒரு சிறந்த ஒரு குறியீட்டு காட்சி எனலாம்) இப்படியான சுவாரசியமான குறியீட்டு காட்சிகள் இந்த கால சினிமாவில் வருவதற்கும் , அந்த கால சினிமாக்களில் பயன்படுத்தப்படாததற்கும் இப்போது எமது கலாச்சாரம் மாறிவிட்டது தான் காரணம் எனலாமா? ( "டேய்! இது ஒண்ணும் தமிழ் பற்று பதிவோ, கலாசார காவல் பதிவோ கெடையாது, ஜாலியான பதிவு !! வில்லங்கம் பண்ணாம அடுத்த பந்திக்கு தாவுடா""ன்னு யாரோ பொடனில அடிக்கிறாப்ல இருக்கு யார்ரா அது?)
நடிகைகளின் சம்மதம், சிம்பாலிக்கல் பம்பாலி, சென்சார் போன்ற தடைகளையெல்லாம் தாண்டி வந்த சில நேரடி உதட்டு முத்த காட்சிகளும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறன. எனக்கு தெரிந்து கமல் படங்களில் தான் நான் ஆரம்ப காலங்களில் இந்த நேரடி முத்தக்காட்சிகளை பார்த்தேன். ( தியாகராஜ பாகவரது படங்களில் எதிலாவது முத்தக்காட்சி இருந்தால் தயவுசெய்து எனக்கும் சொல்லுங்கப்பா...). கமல் படத்து முத்தக்காட்சிகள் பெரும்பாலும் விரசம், மொக்கை, ஆபாசம், நேர்த்தியின்மை , போலி என்ற தடைகளை தாண்டியதாகவே இருக்கும். ( அதனால் தான் முத்த மன்னன் என்று பெயர் வந்ததோ?) ஆனாலும் (சிம்பாலிக்) முத்தம் ஒன்றை பெற்றபிறகு பிறகு , குமட்டில் குத்து வாங்கியது போல் ஒரு ரியாக்க்ஷனை கமல் கொடுத்த வரலாறும் உண்டு. படம் :- வசூல் ராஜா, பாடல் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு....
கமலுக்கு பின்பு நான் பார்த்த இன்னொரு நேரடி முத்தக்காட்சி "காதல் சடு குடு" படத்தில் விக்ரம் + பிரியங்கா ! இங்கு முத்தம் என்னமோ நேரடியாக கொடுக்கப்பட்டாலும் , அந்த முத்தம் கொடுக்கப்படுகையில் அந்த பொண்ணு காட்டும் ரியாக்ஷன்கள் தான் ஹைலைட்! கையை மடக்கும், கண்ணை "டப....டப.." என்று அடிக்கும், புளியங்காயை கடித்தது போல் முகபாவம் காட்டும் ( விக்ரம் !! யூ டூ நோ பல்லு வெளக்கிங்????) பின்னர் , பாக்ஸர் கிருஸ்ணனாட்டம் முஸ்டியை மடக்கி ஏதேதோ வித்தையெல்லாம் காட்டும் அந்த பொண்ணு! அது கூட பரவாயில்லை, ஆனால் முத்தப்படலம் போய்க்கொண்டு இருக்கையில் இடையில் கணுக்காலில் முண்டுகொடுத்து மேலே எழும்பும் அந்த பொண்ணு! எதுக்கு என்றெல்லாம் எனக்கு தெரியாது ....... பட்... ஒரு சிமோல் டவுட்..... அப்புடி எழும்பும் போது ரெண்டு பேரோட வாயும் வெலகிப்போய் அந்த கன்டினியூவிட்டி மிஸ் ஆகிடாது???????
அதுக்கு பின்னர் இன்னொரு உலகத்தரமான முத்தக்காட்சி பார்க்ககிடைத்தது, தமிழ் சினிமாவின் ரொம்ப மரியாதயான குடும்பமான கஸ்தூரிராஜாவின் குடும்ப வாரிசுகள் தான் அந்த வில்வித்தைக்கு சொந்தக்காரர்கள். காதல் கொண்டேன் படத்தில் வருகின்ற "தேவதையை கண்டேன் ..." பாடலில் சோனியா அகர்வாலும் அந்த செக்கண்ட் ஹீரோவும் ஒரு டெலிபோன் பூத்துக்குள் முத்தக்காட்சியில் நடிப்பதற்கு சோனியா அகர்வாலின் காதலனும் அந்தபடத்தின் இயக்குனருமாகிய செல்வராகவன் "ஏற்பாடு " செய்திருப்பார். நான் பார்த்த முத்தக்காட்சியிலேயே மிகக்காமடியானதும், மரண மொக்கையான முத்தக்காட்சி இதுதான். " 3 " படத்தை ரெண்டு தரம் பார்த்தவனை கூட நான் மன்னிப்பேன் . ஆனால் இந்த முத்தக்காட்சியை பார்த்து எவனாவது "ஜொள்" ஊத்தினால் அப்புறம் "துப்பாக்கி" படத்தின் முதல் ஷோ பார்க்கும் நெருக்கடிக்கு ஆளாக வேண்டிவரும் ஜாக்கிறதை!
ஃபெவிக்கோல் விளம்பரத்துக்கு வாயை வாடகைக்கு விட்டது போல சோனியா பொண்ணு வாயை "உம்முன்னு " மூடி வைத்திருக்கும், அந்த பையன் வேற பிஞ்சுபோன செருப்பை தச்சு விட்டா மாதிரி வாயை வைத்துக்கொண்டு அடிப்பான் பாருங்கள் ஒரு கிஸ்ஸு... யப்பா.... ஜேம்ஸ் பாண்ட் எல்லாம் பிச்சை வாங்கணும்....! ரெணு பேரு ஒதடுமே மூடி இருக்கும் , அதில அந்த பையன் என்னமோ ஏசியன் பெயின்ஸ் ரோயல் பிளே வெளப்பரத்துல சயிப் அலிகான் குட்ட சொவத்தில சொழட்டி சொழட்டி பெயிண்ட் அடிப்பது போல ஒரு கிஸ்ஸு அடிப்பான் பாருங்க ......... ஐயையோ நல்ல சான்ஸ மண்ணாக்கிட்டியேடா பாவி என்று என்னால் கத்த மட்டுமே முடிந்தது! ஆனாலும் அவிய்ங்க கிஸ் அடிக்கும் போது மூக்கும் மூக்கும் முட்டும்! நன்றாக கவனித்து பாருங்கள்!
அதுக்கு அப்புறம் இன்னும் இரண்டு முத்தக்காட்சிகள் ஒன்று கந்தசாமியில் விக்ரம்+ ஸ்ரேயா, இன்னொன்று நண்பனில் விஜய் + இலியான்ஸ் ! கந்த சாமியில் "ஆமாய்யா அவிய்ங்க நெசமாலுமே லிப்டு ..லிப்டு கிஸ்ஸு தான் அடிக்கிறாய்ங்க"ன்னு காட்டுவதற்காக கமிராவை சொழற்றி சொழட்டி எடுத்தும், நண்பனில் உலகத்தரமான தொழிநுட்பங்களையெல்லாம் பயன்படுத்தி , பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் "கிஸ் அடிக்கும் போது மூக்கு முட்டுமா முட்டாதா" என்று நிறுவப்போயும் அந்த இரண்டு முத்தங்களுக்கான உண்மையான மதிப்பையும், கனத்தையும் குறைத்திருப்பார்கள்.
முத்தம் என்பது திரைப்படங்களில் ஆபாசத்துக்காக பயன்படுத்தப்படும் ஒரு வஸ்தாக இந்தக்காலத்தில் ஆகிவிட்ட போதும் , நேர்த்தியாக எடுக்கப்படும் ஒரு முத்தக்காட்சி ஆயிரம் ஃபிரேமில் சொல்லவேண்டிய அன்னியோனியத்தை ஒரே காட்சியில் சொல்லிவிடக்கூடியது. சினிமாவை பொறுத்தவரை முத்தக்காட்சி மட்டுமல்ல , எந்த காட்சியுமே சரியான பொறிமுறையுடன் நேர்த்தியாக செய்யப்பட வேண்டியது! சற்று தவறினாலும் பார்வையாளனுக்கு வேறொரு அர்த்தத்தை கற்பித்து விடும். அதுவும் என் போன்ற ஆட்களுக்கு மொக்கையாய் ஒரு பதிவு போடும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்துவிடும்.
அது போக முத்தம் என்பது ஒரு அன்பின் மொழி அது விரசமாகாத வரையில்!
"கற்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ
செம்பவள திருவாய் தான் தித்திக்குமோ?"
சடுதியாக எனக்கு நினைவில் வந்த உதட்டு முத்தத்தை நினைவுபடுத்தும் ஒரு ஆன்டாள் பாடல், தமிழ் இலக்கியத்தில் இருந்து!
ஆகவே நான் என்ன சொல்ல வாறேன்னா... ஐயய்யோ இந்தோ களோபரத்துல எதுக்கு இந்த பதிவு எழுதினேன், எப்புடி முடிச்சிருக்கேன்னு ஒன்னுமே புரியலயே! ஐயா ! புண்ணியவானுகளா, இதுவரை என்னோட பதிவுகளை ஏதுனாச்சும் புரிஞ்சா படிச்சீக ? அது போல இதையும் ஒரு குத்து மதிப்பா படிச்சிட்டு கெளம்புங்க!
photos எல்லாம் செம்மைய இருக்கு இருங்க வாசிச்சிட்டு வாறன்.
ReplyDeleteவாங்க ! வாங்க!
Deleteசப்பா முடியல, ஆனா இத பத்தி இவ்வளவு ஆராய்ச்சி செய்ற நீங்க இந்த உதட்ட வச்சி ஒரு உலக சினிமா ஏன் எடுக்க கூடாது.......????
ReplyDeleteதாராளமா எடுக்கிறேன், நீங்க கட்டாரிலிருந்து பணம் அனுப்புவதாக இருந்தால்!
Deleteயோவ் நெசமாலுமே என்னய்யா ஆச்சு உனக்கு?ஒரு முத்தத்த பத்தி இவ்ளோ எழுதியிருக்காய் :ப
ReplyDeleteஆனா ஒன்னு மட்டும் புரியுதப்பா...சின்ன வயசில இருந்து ஒரு கிஸ்ஸிங் ஸீன் கூட மிஸ் பண்ணினது கிடையாதுன்னு.
அண்ணே தெரியல அண்ணே! ஏதேதோ ஆகுது, கொஞமா எழுதுவோம்னு தான் பாத்தேன் , ஆனா ரொம லெந்தியா ஆயிடிச்சு.
Delete///ஆனா ஒன்னு மட்டும் புரியுதப்பா...சின்ன வயசில இருந்து ஒரு கிஸ்ஸிங் ஸீன் கூட மிஸ் பண்ணினது கிடையாதுன்னு.///
ரொம்ப புகழாதிங்கண்ணே!
டேய்.. ஒரு முத்தத்துக்கு இவ்ளோ பெரிய பதிவா?? ரொம்ப ஏங்கியிருப்ப போல..?
ReplyDeleteஎல்லா முத்தக்காட்சிகளையும் அலசிய நீ நம்ம கேப்டன் சாரின் அட்டெம்டுகளை கண்டு கொண்டதாகதெரியவில்லையே..
http://www.youtube.com/watch?v=DpNJYJhGXCE
காதல் ஆராரோ பாட்டின் 0.20 தொடக்கம் 0.26வரையான அந்த காட்சியில கேப்டன் கிஸ் பண்ண வரும் காதலர்கள் இடையான அந்த தவிப்பையும், ஆர்வத்தையும் உதட்டிலேயே காட்டியிருப்பாரே நண்பா!
///டேய்.. ஒரு முத்தத்துக்கு இவ்ளோ பெரிய பதிவா?? ரொம்ப ஏங்கியிருப்ப போல..? ////
Deleteஇல்லையா பின்ன நாங்களும் எத்தன நாளு தான் இவைய்ங்க பண்ணுறத மட்டும் பாத்துக்கிட்டே இருக்கிறது?
///http://www.youtube.com/watch?v=DpNJYJhGXCE///
நண்பா! என்னய கொல பண்ண பாத்தியேப்பா!
முத்தத்தில இம்புட்டு Phd முடிச்சிருக்கியே மச்சி. ஆனா ரொம்பத்தான் கவனிச்சிருக்கிற. கண்டிப்பா ஒன்னோட கலைச்சேவைக்கு பட்டம் தரணும்.
ReplyDeleteஎங்க ??? அந்த வழுக்க மண்டையன் கருநாய் நிதிக்கு கண்டதுக்கெல்லாம் பாராடு விழா எடுக்கும் திரையுலகம், எனக்கு ஒரு விருது தர மாட்டேங்குதே!
Deleteமுத்தத்தைப் பற்றி மொத்தமான பதிவு.
ReplyDeleteநன்றி... தொடர வாழ்த்துக்கள்...
"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”
ரொம்ப நன்றிண்ணே வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்!
Deleteவயிறு வலிக்க சிரிச்சேன். தேங்க்ஸ்.
ReplyDeleteஉங்கள் சந்தோஷம் என் பாகியம். நன்றி வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்!
Deleteதம்பி இதெல்லாம் ஒரு பதிவுன்னு போங்க தம்பி நாங்களே இனும் வெள்ளைக்காரன் அளவு தமிழ் சினிமா வளரலையே நு வயிதேரிச்சல்ல இருகோம் வெள்ளை கரங்களா பாருங்க தம்பி சும்மா பிட் சீன கூட அழகா எடுத்து கண்ணுக்கு குளிர்ச்சியா காடுவணுக இவங்க வேஸ்ட் தம்பி அந்த ஜோலி பொண்ணு மோனிக்கா பெல்லுசி ஏனம்மா இருப்ப லுங்க ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்
ReplyDeleteண்ணே! உங்களுக்கு எது பிரச்சினை? நான் பதிவு எழுதினதா? இல்ல வெள்ளக்காரன் ரேஞ்சுக்கு நம்ம பயலுக பிட்டு சீன் காட்டாததா? ஏன்ணே அவல நெனச்சுக்கிட்டு உரல இடிக்கிறீக? ஹி...ஹி...ஹி...ஹி...
Deleteஹி ஹி ஹி ஹி சரியாய் கண்டுபிடிசிடிங்க
Deleteநாங்கெல்லாம் யாரு ? ஹெஹ் ஹேய்....
Deleteஅடேங்கப்பா
ReplyDeleteஎன்னண்ணே வியப்போட மட்டும் போய்ட்டீங்க!
DeleteGOOD JOB BRO IAM FROM SRI LANKA
ReplyDelete