நான் பொதுவாக எந்த சினிமாக்களுக்கும் விமர்சனம் எழுதுவது கிடையாது, அந்த சினிமா எனது வாழ்வியலை பிரதிபலிக்கும் வரையில் அல்லது எனது மனதையோ எவ்விதத்திலேனும் பாதிக்காத வகையில். அப்படி பார்க்கப்போனால் இதுவரை நான்கு ஆங்கில படங்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதியிருந்தேன். அது பதிவுலகம் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்ட ஒரு விமர்சனமாக இருந்தது. கடைசியாக "பேட் மேன்" பார்த்து ,அது என்னை வேறு மாதிரி பாதித்துவிட்டதால் விமர்சனமும் வேறு மாதிரி ஆகிப் போனது சொந்தக் கதை சோகக்கதை! ஆனாலும் எனது "பேட் மேன்" விமர்சனம் கண்டு, எனது விமர்சனத்தின் தரம் கண்டு , பதிவுலகில் ஆங்கிலப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் அப்பாட்டாக்கர்களான JZ ,"சினிமா சினிமா ராஜ்", ஹாலிவுட் ரசிகன்","உலக சினிமா ரசிகன்", டோஹா டாக்கீஸ் ஓனரு " எல்லாம் பயந்து போய் இருக்காங்களாம்,அடடா போட்டிக்கு ஒருத்தன் வந்துட்டானேன்னு! பயப்படாதிங்க பசங்களா! உங்க பொழப்ப கெடுத்துர மாட்டேன்! # நல்ல மனசு!!
சரி இப்போ மேட்டருக்கு வாரேன்! அப்போ எனக்கு ஒரு பதினஞ்சு வயசு இருக்கும். எச்.பி.ஓ'ல (H.B.O) மிட் நைட்ல "அந்த" மாதிரி படங்கள் போடுவாங்க என்று ப்ள்ளிக்கூடத்தில மதியான பிரேயர் நேரத்தில் நண்பன் ஒருவன் சொன்னான் என்பதற்காக சாமம் சாமமாக "ஓம்! எச்.பி.ஓ சுவாகா " என்று கிடக்க ஆரம்பித்த காலம். # இன்னிக்கு வரைக்கும் "அந்த" மாதிரி ஒரு காட்சி வரவில்லை என்பதால் நண்பனுடன் ஏழு வருஷமா அன்னம் தண்ணி பொழங்கிறது இல்லங்கிறது வேற கதை!
அப்படி நாளொரு எச்.பி.ஓவும் பொழுதொரு எச்.பி.ஓ வுமாக போய்க்கொண்டிருந்த எனது கலைபயணத்தில் ஒரு நாள் "அலைவ் (Alive)"என்ற சினிமாவை பார்க்க நேர்ந்தது. குளிரும், மலையும், பனியும் பனி சார்ந்த இடமும் என்பதால் , நண்பன் சொன்ன "அந்த" படமாக இருக்கலாம் என்று அந்த அர்த்த சாமத்திலும் விழித்திருந்து பார்க்க தொடங்கினேன். படம் பாதிகூட முடியாத நிலை , என்னையறியாமல் தூங்கி போனேன். விடிய எழுந்தால் படத்தில் ஒரு காட்சி கூட ஞாபகம் இல்லை. .... அப்புறம் சைக்கிளை எடுத்து சுற்றினேன் எனக்கு இருபத்தியிரண்டு வயசாகிவிட்டது!
இப்போ இருபத்தியிரண்டு வயசான நான் , எச்.பி.ஓ தேவைப்படாத நான் சில நாட்களுக்கு முன்னர் மறுபடி இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்பதால் இந்த படத்தை பார்க்கவில்லை! ஏழு வருஷத்துக்கு முன்னர் தவறவிட்ட படம் என்பதால் பார்க்க ஆரம்பித்தேன். படம் ! தொடங்கியது! ஓடியது! முடிந்தது! இந்த படம் தொடர்பில் இந்த விமர்சனத்தை நான் எழுத பிரதான காரணம் என்னவெனில் "மனிதன் ஒரு விலங்கு" என்று நான் உறுதியாக நம்புவதையும், தனது வாழ்க்கை என்று வரும் போது மனித குலம் , பாசம், நாகரீகம், பண்பாடு, பழக்கவழக்கம் என்பனவற்றை மறந்துவிட்டு தனது உயிர்வாழ்தலில் மட்டும் கவனம் கொள்ளும் ஒரு கற்கால வாழ்க்கை முறைக்கு போகும் என்று நான் விசுவசிப்பதையும் இந்த படம் உறுதி செய்திருப்பது தான். நான் இப்படி எழுதியதை பார்த்ததும் "இந்த படம் ஏதோ ஹனிபல் ஹொலோகாஸ்ட் ( Cannibal Holocaust)" ரேஞ்சில் , மனிதை ஒரு மிருக ரேஞ்சில் வர்ணனை செய்திருக்கிறது என எண்ணிவிடாதீர்கள். படத்தில் எதுவும் தப்பாக காட்டப்படவில்லை, நாம் ஏற்க தயங்கும் யதார்த்தை காட்டியிருக்கிறார்கள். மேலதிக அலசலுக்கு முன்னர் படத்தின் கதையை பார்த்துவிடலாம்!
உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு 1974இல் வெளியான பியர்ஸ் போல் றீட் எழுதிய "அலைவ்: த ஸ்டோரி ஒஃப் த அந்தீஸ் செவைவர்ஸ்" என்ற நூலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு 1993இல் வெளியான படம் தான் "அலைவ்".
1972 ஒக்டோபர் 13 ! உருகுவே விமானப்படை விமானம் 571 , உருகுவே றக்பி வீரர்களை சுமந்து கொண்டு பறக்கிறது, அந்தீஸ் மலைத்தொடரை நெருங்குகையில் சீரற்ற காலைநிலை காரணமாக விமானம் அந்த மலைத்தொடரிலேயே விழுந்து நொருங்கிவிடுகின்றது. ஆரம்ப கட்ட பதறல்கள், கூச்சல் ,குழப்பம், உடனடியாக மீட்டப்படுவோம் என்ற நம்பிக்கை எல்லாம் முடிந்து ஓய்ந்து போன பிறகு வாழ்க்கை போராட்டம் ஆரம்பிக்கிறது. எப்போது வீடு போவோம் என்று தெரியாது , தெரியாத அந்த நாள் வரைக்கும் உயிரோடு இருந்தாக வேண்டும். தலைவர்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்பார்கள். அந்த சூழ் நிலையில் கதாநாயகன் என சொல்லப்படக்கூடிய ஒருவன் ( எதன் ஹவ்க் #ஹீரோயிசம் என்று இல்லாததால் அப்படி சொல்கிறேன்) அந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த குழுவுக்கு தலைமையேற்கின்றான்.
உடைந்து போன விமானத்தின் எச்சங்களையும், உடமைகளையும் கொண்டு ஒரு தங்குமிடம் அமைக்கப்படுகிறது, மீதமாக இருந்த சில சொக்லேட் துண்டுகளையும், ஒரு வைன் போத்தலையும் கொண்டு , ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஒரு துண்டு சொக்லேட்டும் ஒரு மூடி வைனும் என்ற விகிதத்தில் உணவு வழங்கப்படுகிறது. உணவுக்கு தட்டுப்பாடான நிலை, சீரற்ற காலநிலை, நாளுக்கு ஒருவராக சாகும் காயப்பட்டவர்கள் என நிலைமை உக்கிரமாகிறது. இந்த நிலையில் அவர்கள் விபத்துக்கு உள்ளான இடத்துக்கு மேலே ஒரு மீட்பு விமானம் பறப்பதை பாதிக்கப்பட்ட குழு பார்க்கிறது , மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறது. ஆனால் பனிமூட்டம் காரணமாக அந்த மீட்பு விமானத்துக்கு இவர்கள் இருப்பது தெரியாமல் போய்விடவே அவர்கள் திரும்பிச்செல்கிறார்கள். இது தெரியாத அந்த குழுவில் இருந்த கோபிநாத் போன்ற ஒரு சாப்பாட்டு ராமனும் , JZ போன்ற ஒரு குடிகாரனும் சேர்ந்து வெற்றியை கொண்டாடுகிறோம் பேர்வழியென்று மீதமிருந்த சொக்லேட்டையும், வைனையும் தீர்த்துவிடுகிறார்கள். இருந்த ஒரேயொரு நம்பிக்கையும் காலி!
மேலும் சாவு, பசி, பட்டினி! இந்த நிலையில் தான் உயிர் வாழ போராடும் அந்த குழு, இறந்தவர்களின் உடலை தின்று பசியாற முடிவுசெய்கிறது. சிலரின் எதிர்ப்போடும் பசித்திருந்த பலரின் ஒப்புதலோடும் அந்த குழுவில் உயிருடன் இருக்கும் ஒரிவரின் , இறந்து போன தங்கையின் உடலை உண்கிறார்கள் குழுவினர். முதலில் ஒத்துழைக்காத ஹீரோ உள்ளிட்ட சிலரும் நிலமை உணர்ந்து ஒப்புக்கொள்கிறார்கள். சில நாட்களின் பின் நான் இறந்தால் எனது உடலையும் நீங்கள் உண்ணலாம் என்ற இறுதிமொழியோடு ஹீரோவும் இறந்து போகிறார்.
மீண்டும் சில காலநிலை சீரின்மை, மீண்டும் போராட்டம் என அல்லல்படும் குழு மூன்று பேரை தப்பித்து போகும் வழி அறிந்துவர அனுப்பி வைக்கின்றது. பல போராட்டங்கள் ,தோல்விகளுக்கு பின்னர் அவர்கள் புறப்பட்ட பனிரெண்டாம் நாள் அந்த இரண்டு பேருக்கு ( மூன்று பேரில் ஒருவர் இடையில் திரும்பிவிடுவார்) வெளிஉலக தொடர்பு கிடைக்கிறது. பின் என்ன ? மீட்பு குழு வருகிறது , எஞ்சியிருந்தோரை மீட்கிறது. விமானம் விபத்துக்குளாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பின்னர் அந்த குழு மீட்கப்படுகிறது. இந்த விபத்திலும் , பின் தொடர் நிகழ்வுகளிலும் 29பேர் இறந்திருக்கிறார்கள், பதினாறு பேர் மீட்கப்பட்டார்கள். அவர்கள் ஞாபகமாக சம்பவ இடத்திலிருந்து அரைமைல் தொலைவில் ஒரு சிலுவை நாட்டப்படு இருக்கிறது.
முதலில் படத்தில் எனக்கு பிடித்த விடயங்கள், முதல் விடையமே ஒரு "செவைவல் மூவி ( Survival Movie ) என்பது தான். போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு மனிதன் ஜெயிப்பது என்பது எப்போதும் சுவாரசியமே! அது போக சில காட்சிகள் என் மனதில் இன்னமும் இருக்கிறது........
* முதன் முதலாக மனித இறச்சியை அனைவரும் உண்ண தயங்கி நிற்கையில் , அந்த திட்டத்தை முன்மொழிந்தவர் முதல் ஆளாய் சென்று , ஒரு தயக்கத்தோடு தசையை வெட்டி , வெறுப்போடு, உயிர் வாழவேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தில் அருவருப்பாய் அந்த இறைச்சியை உண்ணும் காட்சி!
* தனது தங்கையின் உடலை தின்று விட்டார்கள் என்று கோபப்படும் அண்ணன், பின்னர் நிலைமையை உணர்ந்து அழுகையுடன் சமாதானம் ஆவது.
* மனித தசை உண்ணத்தொடங்கிய முதல் சில நாட்களில் அனைவரது கைகளிலும் சிறு சிறு துண்டுகளாய் இருக்கும் மனித தசை, நாட்கள் கடந்ததும் பெரிய துண்டங்களாய் அவர்கள் கைகளிலும் , பயணப்பைகளிலும் இருக்கும். அந்த குழுவில் உள்லவர்கள் மனித தசை உண்பதற்கு பழக்கப்பட்டு போனார்கள் என்பதை இந்த காட்சி அழகாக காட்டியிருக்கும்.
* அடுக்கப்பட்டிருக்கும் பிணங்கள் முதலில் ( தசை உண்ணப்படுவதற்கு முன்பு) ஒழுங்காக இருக்கும், அவர்கள் தசையை உண்ண ஆரம்பித்த பிறகு படிப்படியாக அந்த உடலம் குறைவடைவது காட்சிகளின் பின்புலத்தில் காட்டப்படும். நாட்கள் நகர்ந்து போவதையும், அந்த குழுவினர் மனித இறைச்சி உண்பதற்கு பழக்கப்பட்டு போனதையும் காட்ட சிறந்த ஒரு காட்சியமைப்பு!
* வசந்தகாலம் வந்ததையுணர்த்த விமானத்தின் ஓட்டைவழி ஊடுரும் வெளிச்சமும் , அதனைத்தொடர்ந்த காட்சியமைப்பும்.
நெஞ்சையுலுக்கும் இப்படியான ஒரு உண்மைக்கதையை கதையை வைத்துக்கொண்டு இயக்குனர் சிக்சர் அடிக்கவேண்டிய இடத்தில் தட்டுத்தடுமாறி சிங்கிள் தான் எடுத்திருக்கிறார் என்று தான் சொல்லுவேன். படத்தின் இயக்குனர் "ஃபிராங் மார்ஷல்" !!! உலகபுகழ் வாய்ந்த "இண்டியானா ஜோன்ஸ்", த கியுரியஸ் கேஸ் ஒஃப் பெஞ்ஞமின் பட்டன்", "த சிக்ஸ்த் சென்ஸ்", "பக் ரூ த ஃபியூச்சர்", "த கலர் பேர்பிள்" ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.
1968இலிருந்து பதினேழு படங்களை தயாரித்த பிறகு 1990இல் "அரக்னோஃபோபியா" என்ற காமடி திரில்லர் படத்தை எடுத்து அது கொஞ்சம் வரவேற்பை பெற்றதும், இந்த படத்தை கையில் எடுத்திருக்கிறார் என நினைக்கின்றேன். இப்படியொரு பதறவைக்கும் உண்மைக்கதையானது பார்வையாளன் மனதில் அதே உணர்வோடு ஒட்டமறுப்பதற்கு முழுப்பொறுப்பு இயக்குனரே கூற வேண்டும். ஒரு உண்மைச்சம்பவத்தை யாரோ சொல்ல , அதை ஒரு சம்பவமாக கேட்டறியும் மனநிலை தான் இந்த படத்தை பார்க்கும் போது வருகிறதே ஒழிய , அந்த விபத்துக்குள்ளான மாந்தரின் மனநிலைக்கு எம்மை இழுத்து செல்ல இயக்குனர் ஏதோ தவறியிருக்கிறார்.
மனிதன் மனைதனின் இறைச்சியை உண்டு ,உயிர் வாழ்வது தான் உயிர் வாழும் போராட்டத்தில் உச்சக்கட்ட அவலமாக இருக்க வேண்டும், ஆனால் அப்படியான ஒரு கதை கிடைத்தும் அந்த அழுத்தத்தை எமது மனதில் பதிய வைக்கும் முயற்சியில் இயக்குனர் தோற்றுவிட்டர் என்றே சொல்வேன். முதன் முதலில் அந்த குழு மனித இறைச்சி உண்ண தொடங்கும் போது , ஒரு அழுத்தத்தோடு அந்த காட்சியும் , படமும் பயணிக்கப்போகிறது என்று நாம் கணக்கு பண்ணினால், அடுத்த சில நிமிடங்களில் அந்த அழுத்தம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......... !!! விமானம் விபத்துக்குளாகி சொக்லேட் காலியாகும் வரை விறுவிறுப்பாகவும் , படக்...படக்... மனதுடனும் நகரும் திரைக்கதை , அதன் பிறகு மகா மட்டம்... !!! பின்பாதியில் படத்தொகுப்பு யப்பா...... நத்தை வேகம்! அந்த உயிர் வழும் நிமிடங்களை பதபதைப்போடு காட்டவேண்டிய படத்தொகுப்பு , சில வாரங்கள் கழிந்துபோன பிறகு அவர்கள் ஏதோ பிக்னிக் வந்தவர்கள் போல ஒரு உணர்வை தரும்படி இருக்கிறது.
ஃபிளைட்ட கெளப்பியாச்சு, விழுத்தியாச்சு, சாக்லெட் தீர்ந்து போச்சு, நரமாமிசம் தின்னாச்சு! அப்புறம் என்ன செய்றது? என்று யோசித்துவிட்டு இயக்குனர் படத்தை இழுத்திருக்கிறாரோ தெரியவில்லை! தனி மனிதானக , சுற்றவர உணவு இருக்கின்ற , மோசமான காலநிலை இல்லாத ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ளும் ஒருவனது போராட்டத்தை கூட "காஸ்ட் எவே" திரைப்படம் மிக அழகாக பதிவு செய்து இருக்கும். அந்த பாத்திரமாகவே நாம் வாழ்ந்த ஒரு உணர்வையும் அந்த திரைப்படம் தந்திருக்கும், இவளவு ஏன்? அந்த 'வில்சன்" பந்து தொலைந்தபோது ஒரு நெருங்கிய நண்பனை தொலைத்ததாக நான் பதறியதும் உண்மை! அப்படியிருக்கையில் , நரமாமிசம் உண்டு உயிர் வாழ்தல் என்பதை எப்படி ஒரு அழுத்தத்தோடு காட்டியிருக்க வேண்டும்????
மெல்கிப்சன், கம்ரூன் கூட வேண்டாம், நம்ம பிரபு சாலமன், பாலா, வசந்தபாலன் வகையறாக்களிடம் கொடுத்திருந்தால் கூட பின்னி பெடல் எடுத்திருப்பார்கள் என்பது எனது கருத்து! ஃபிராங்க் மார்ஷலது இயக்கத்தை விட டிஸ்கவரியின் சர்வைவல் நிகழ்ச்சியான "ஐ ஷுடுண்ட் பீ அலைவ்" நிகழ்ச்சியின் இயக்கம் பரபரப்பாக இருக்கும். நான் பார்த்த சர்வைவல் படங்களில் மிக மோசமானது "127 ஹவர்ஸ்" , அடுத்து மோசமான ஒரு இயக்கத்தால், நல்ல கதையை கொண்ட இந்த படமும் அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறது.
சரி ! இந்த படத்தின் இயக்கத்தை இவளவு கழுவி ஊத்தியும் ஏன் அதை பற்றியே எழுதுகிறேன் என்றால், இந்த படத்தின் கதையும் அதன் அடக்கமும் தான்! இனி தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தெரிந்துவிட்டால், மனிதனின் மனம் நாகரீகங்களையும், பண்பாட்டையும் , பாசத்தையும், பழக்கவழக்கங்களையும் மீறுகிறது. அது பிழை சொல்லமுடியாதது, அது தான் இயற்கையின் நியதி. என்னதான் மனித குலம் ஆடை உடுத்துக்கொன்டு , செவ்வாயின் கதவுகளுக்கு சாவி தேடினாலும் தனக்கென்று ஆபத்தொன்று வரும் போது மனிதன் என்ற விலங்கு எல்லைகளை தாண்டுவதற்கு பயப்படாது, தயங்காது. அதுவே இயற்கையின் நியதியும் கூட ! அதில் பிழை ஏதும் இல்லை! அது நியதியும் கூட! அந்த கருத்தோடு நான் ஒத்துப்போவதால் தான் இந்த படம் கூட என்னை பாதித்தது, நான் உணர்ந்த உண்மையை மீண்டும் உணர்த்தியதால் சில பலகீனங்கள் இருந்தும் படம் எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது!
நீ இதை அமோதிக்கிறாயா? என்னடா! உனக்கு இப்படியொரு நிலை வந்தால் நீ மனித இறைச்சி உண்பாயா என்று கேட்கிறீர்களா? நீங்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை "ஆம்" என்பதே எனது பதில், அதுவே யதார்த்தமும். "உவ்வே" என்கிறீர்களா? கைகளில் பீட்சா இருக்கையில் பழையசோறு "உவ்வே" தான்! எனது கூற்றுத்தான் யதார்த்தம் என நீங்கள் உணர்ந்து கொள்ள இப்படியொரு சந்தர்ப்பம் உங்களுக்கு வராமல் இருக்கவே பிரார்த்திக்கிறேன், உங்களைப் பொறுத்தவரை நான் "உவ்வே"யாக இருந்துவிட்டு போனாலும் பரவாயில்லை!
டிஸ்கி: பதிவு நீளம்! மன்னிச்சூ! நண்பா JZ! ராஜ் அண்ணா, டோஹா ஓனரு, குமரன் தம்பி, ஹாலிவூட் ரசிகரே, உலக சினிமா ரசிகரே! உங்கள் அளவுக்கு என்னால் உலக சினிமா விமர்சனம் பண்ண முடியாது தான், ஏதோ உளறியிருக்கிறேன், ஏதும் பிழையிருந்தால் மன்னிச்சூ!
குறிப்பு : இந்த பதிவை பதிவிட்ட போது "உருகுவே" என்ற வார்த்தைக்கு பதில் "உக்ரேன்" என்று பதிவிட்டிருந்தேன். தவறை சுட்டிக்காட்டிய திரு . யோகன் ( பாரிஸ்) அவர்களுக்கு எனது நன்றிகள். அவர் சுட்டிக்காட்டிய தவறு சரிசெய்யப்பட்டதன் பின் இந்த பதிவு ( 31/07/2012) மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஸ் இருங்க கொஞ்சம் லேட் ஆகி வாறன்.
ReplyDeleteஏன்! லேட்? நான் காஜால் பத்தி ஏதுனாச்சும் பதிவு போடுவேன்னு, முனேற்பாடு பண்ண போனியாக்கும்? ஆனாலும் முதோ ஆளா வந்து அட்டெண்டன்ஸ் போடுறடா!!
Deleteகாஜல், சமந்த பத்தி பதிவு போடுறத விட்டுட்டு ஏன்யா இப்பிடி கொடூரமான விமர்சனம் உனக்கு???
ReplyDeleteஎப்போ பாரு காஜலையே புடிச்சு தொங்கீனு இருந்தா , அப்புறம் காஜலுக்கே கடுப்பாயிரும் மச்சி!
Deleteநண்பரே!
ReplyDeleteநீங்க எழுதியிருப்பதை வைத்து பார்க்கும் போது படத்தின் திரைக்கதை அமைப்பு...
கிளாஸ்டோ போபிக் எபக்டில் இருக்கிறது.
இதை சரியாக கையாண்ட ‘காஸ்ட் அவே’ படத்தையும் நீங்களே குறிப்பிட்டு விட்டீர்கள்.
கிளாஸ்டோ போபிக் எபக்டிலிருந்து ஆடியன்சை வெளியே கொண்டு வருவதில் ஹிட்ச்ஹாக் மாஸ்டர்.
நல்லா எழுதுகிறீர்கள்.
கமலை பற்றி மட்டும் எழுதினால்,காரிகனிடம் அனுமதி வாங்கி கொண்டு எழுதவும்.
நோலன் பற்றி நான் சொன்னது எனது தனிப்பட்ட கருத்து.
எனது கருத்து...உங்களை புண் படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
தலைவா உங்களோட வருகைக்கு ரொம்ப நன்றி! எனக்கு எழுத மட்டும் தான் தெரியும் அது என்ன எஃபக்டு ? கிளஸ்டோ போபிக்கா? க்கும்..... இப்போதான் அத கேள்விப்படுறேன். இத உச்சரிக்கவே ரெண்டு நிமிசம் பிராக்டீஸ் வேற பண்ணினேன். படம் நல்லதா? என்னோட பாஷைல நல்லதுன்னு எழுதுவேன், மொக்கையா தெரியுதா மொக்கைன்னு என்னோட பாஷைல தான் அதையும் எழுதுவேன். அது என்ன டெக்னிக்ன்னு சொல்றதுக்கு தான் உங்கள மாதிரி புத்திசாலிகள் இருக்கீங்களே! நமக்கு அதெல்லாம் சுத்தமா தெரியாது!
Delete////கமலை பற்றி மட்டும் எழுதினால்,காரிகனிடம் அனுமதி வாங்கி கொண்டு எழுதவும்.////
ஆமாண்ணே ரொம்ப சூதானமா இருக்கணும்! அவரோட பிளாக்கு போயி பாத்தேன், ஏதோ ரஷ்ய நாவலப்பத்தி எழுத போறதா ட்றெய்லர் விட்டிருக்காரு! பாவம் கமல் சார் மேல என்ன கோவமோ?
///நோலன் பற்றி நான் சொன்னது எனது தனிப்பட்ட கருத்து.
எனது கருத்து...உங்களை புண் படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.///
அண்ணே ! இது என்னாண்னே? அசிங்க படுத்துறீங்க பாத்தீங்களா? ஹாலிவூட் படங்களை பொறுத்தவரையில் என்னவிட உங்களுக்கு எவளவோ தெரியும். நீங்க சொல்லாம வேற யாரு சொல்லுவா? நீங்க எப்பவும் வெல்கம் அண்னே!
நண்பா..ஏற்கனவே பார்த்த படமிது.வெயிட் பண்ணுங்க படிச்சுட்டு வந்துருறேன்.
ReplyDeleteவாங்கோண்ணா! வாங்கோண்ணா!
Delete@ ஒரு பதினஞ்சு வயசு இருக்கும். எச்.பி.ஓ'ல (H.B.O) மிட் நைட்ல "அந்த" மாதிரி படங்கள் போடுவாங்க என்று ப்ள்ளிக்கூடத்தில மதியான பிரேயர் நேரத்தில் நண்பன் ஒருவன் சொன்னான் @@
ReplyDeleteஎன்னப்பா..சொன்னது இருக்கட்டும்..முதலில் அந்த நண்பன் பார்த்து இருக்காரானு கேட்டிங்களா ?
@@ "ஓம்! எச்.பி.ஓ சுவாகா @@
இது உங்களுக்கே ஓவரா இல்ல ? மந்திரம் ரொம்பவும் பாடுப்பட்டிருக்கு..போல.
@@ அப்புறம் சைக்கிளை எடுத்து சுற்றினேன் எனக்கு இருபத்தியிரண்டு வயசாகிவிட்டது! @@
சைக்கிள் எடுத்து சுற்றினா..வயசும் ஏறிருமா ? இது என்ன புதுக்கதை..
ஹீ..ஹீ..ஹீ
///என்னப்பா..சொன்னது இருக்கட்டும்..முதலில் அந்த நண்பன் பார்த்து இருக்காரானு கேட்டிங்களா ? ////
Deleteநல்லது சொல்றவன்கிட்ட கேள்வி கேட்ககூடாது அப்டீங்கிற நல்ல எண்ணத்தில அப்புடி ஒரு கேள்வி அவன பாத்து கேட்க தோணல நண்பா!
///இது உங்களுக்கே ஓவரா இல்ல ? மந்திரம் ரொம்பவும் பாடுப்பட்டிருக்கு..போல.////
விடுங்க பாஸ்! பொதுவாழ்கேல இதெல்லாம் சகஜம் தானே!
///சைக்கிள் எடுத்து சுற்றினா..வயசும் ஏறிருமா ? இது என்ன புதுக்கதை..///
யோவ்! என்னய்யா இப்புடி கேட்டுப்புட்ட!!! நீ ஆங்கில படம் மட்டும் தான் பாப்பியோ? ஒரு தமிழ் சினிமாவும் பாத்தது கிடையாதா? முதலில் தமிழ் திரைப்படங்கள் தொடர்பில் ஒரு தெளிவான அறிவான பெற "மிர்ச்சி சிவா" நடித்த "தமிழ் படம்" பார்த்துவிட்டு வரவும்!
எழுத தெரியாது தெரியாதுனு சொல்லியே நீங்க இவ்வளவு செம்மையா எழுதிட்டு இருக்கீங்களே..நீங்க ரொம்ப பெரிய ஆளு பாஸ்..
ReplyDeleteஇந்த படம் ஒரு முறைதான் பார்த்தேன்.."மனிதன் உயிர் வாழ்வதற்காக எதையும் செய்வான்" என்பதை மேலோட்டமாக சுட்டி காட்டும் படம்..திரைக்கதையை பொருத்தவரை பெரிய அளவில் எதுவும் கிடையாதுதான் பாஸ்..ஆனால் கதை..என்னை ரெண்டு நாட்களாக டிஸ்டர்ப் பண்ணது..நேரடியா என்னுடைய கற்பனை அந்த உண்மை சம்பவத்துக்கு போய்விட்டது..அவர்கள் எப்படியெல்லாம் இருந்திருப்பார்கள் என்பதை யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்..
இனி மனதை பாதிக்கும் படங்களா தேர்ந்தெடுத்து பார்த்து அடிக்கடி விமர்சனம் எழுதுங்க..ரொம்பவும் பிடிச்சிருக்கு.மிக்க நன்றி.
பாராட்டுகளுக்கு நன்றி ( நான் அதுக்கு தகுதியிலாதவன் என்ற போதும்) !!! கதை என்னையும் டிஸ்டர்ப் பண்ணியது உண்மை! அந்த டிஸ்டர்ப் எமது மனிதபிமானத்தின் விளைவாக வந்தது என்று தான் நான் நினைக்கிறேன். அந்த படத்தின் நிறைவில் , நமக்கும் அப்படியானால் ... என்று அந்த சம்பவத்துக்கு எமது மனம் செல்லும், அது எமது மனிதபிமானம். ஆனால் ஒரு படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே எமது மனம் பதபதைக்க வேண்டும், அது இயக்குனரின் சாமர்த்தியம். அந்த பதபதைப்பு எனக்கு காஸ்ட் எவே" பார்க்கும் போது வந்தது, ஆனால் இங்கு ப்ச்........... ஆனாலும் நல்லதொரு கதை தான்!
Delete///இனி மனதை பாதிக்கும் படங்களா தேர்ந்தெடுத்து பார்த்து அடிக்கடி விமர்சனம் எழுதுங்க..ரொம்பவும் பிடிச்சிருக்கு.மிக்க நன்றி.///
என்னய விமர்சனம் எழுத வச்சி காமடி பண்றது தானே உங்க பிளான்? எனி வே... வருகைக்கு நன்றி நண்பா!
சினிமா விமர்சனம், எழுதத் தெரியாது ... எழுதத் தெரியாதுன்னு சொல்லி என் மூணு பதிவு சைஸுக்கு விமர்சனம் எழுதிட்டியேப்பா. ஆகா ... டேஞ்சரஸ் ஃபில்லோ. இவன கேர்ஃபுல்லா ஹேன்டில் பண்ணனும். :P
ReplyDelete//நீ இதை அமோதிக்கிறாயா? என்னடா! உனக்கு இப்படியொரு நிலை வந்தால் நீ மனித இறைச்சி உண்பாயா//
கொஞ்சம் நெருப்பு இருந்தா ஓகே. :) :)
///ஆகா ... டேஞ்சரஸ் ஃபில்லோ. இவன கேர்ஃபுல்லா ஹேன்டில் பண்ணனும். :P//
Deleteஎன்னய ரொம்ப ஓவரா புகழ்ற மாதிரி தெரியுது! மறுபடி சொல்றேன், உங்க கால்குலேஷன் ரொம்ப தப்புண்ணே!
//கொஞ்சம் நெருப்பு இருந்தா ஓகே. :) :)///
இது யதார்த்தம்!!! அவய்ங்களுக்கு பரவாயில்லண்ணே! பனியில் கெடந்த சடலம் தானே!
யோவ் அதான் அருமையா விமர்சனம் எழுதுறாய்தானே. அந்த ஹிட்ஸ் உனக்கு போதாதா? போதாக்குறைக்கு ஏன் என்னையும் JZஐயும் கோர்த்துவிடுற. மரியாதையா கிடைச்ச ஹிட்ஸ்ல பாதிய எங்களுக்கு பகிர்ந்து கொடு.
ReplyDeleteமற்றபடி விமர்சனம் அருமை. நான் இன்னும் படம் பார்க்கல பார்த்துவிட்டு சொல்லுறன்.
படம் பாரு நண்பா பார்க்கவேண்டிய படம் தான்!
Deleteஅது என்ன ஹிட்ஸ் ??? ஏண்டா ? ஏன்? நல்லா வாயில வருது ! நான் பெரிய மதுரை ஆதீனம்! இவனுக ரெண்டுபேரும் நித்தியானந்தனுக! இளம் ஆதினம் சொத்துக்கள பிரிச்சி கொடுன்னு கேக்குறானுக!! போங்கடா ... போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்கடா!
//போதாக்குறைக்கு ஏன் என்னையும் JZஐயும் கோர்த்துவிடுற.//
Deleteஅதுதானே தல.. இப்பத்தான் அஸ்லாம் நானாகிட்ட பேசிட்டு வர்றேன்.. ஆளுங்கெல்லாம் ரெடி! கிசோகரு தலைமறைவாயிரு.. அப்புறம் உன் கதையை வைச்வே ஒரு Alive படம் எடுத்துருலாம்!
//மரியாதையா கிடைச்ச ஹிட்ஸ்ல பாதிய எங்களுக்கு பகிர்ந்து கொடு.//
எனக்கு ஹிட்ஸ் கொடுக்காட்டி பரவாயில்லை.. மருவாதையா உண்மையான காஜல் நம்பரையாவது சொல்லுடா!
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை! # ஆதவன் தான்டா மறையாது நான் மறஞ்சிருவேன்! அது சரி யாரு அஸ்லாம் நானா?
Delete///எனக்கு ஹிட்ஸ் கொடுக்காட்டி பரவாயில்லை.. மருவாதையா உண்மையான காஜல் நம்பரையாவது சொல்லுடா!////
காஜல் நம்பர் அடிக்கடி மாறிக்கிட்டு இருக்குப்பா! ஒரே குஷ்டமப்பா!
நல்ல விமர்சனம்...
ReplyDeleteபதிவு நீளமாக இருந்தாலும் O.K.
நன்றி...
வருகைக்கு ரொம்ப நன்றிண்ணே! ஆனாலும் உங்களுக்கு பொறுமை ஜாஸ்தி தான்!
Deletehbo ல முன்னலாம் போடுவான் தம்பி ஆனா இப்ப பய புள்ளங்க திருந்திட்டாங்க போல உங்கள மாறி நானும் வயிதேரிச்சள்ள இருக்கேன் இப்ப அது மாறி முக்கியமான காட்சி வரும் போது தான் விளம்பரத போடுறானுங்க அதான் வெறுத்து போயி tv பாக்குறதே இல்ல தம்பி
ReplyDeleteவர வர இந்த டி.வி காரய்ங்களுக்கு ஒரு சமுதாய அக்கறை இல்லாம போச்சுண்ணே! இது சம்மந்தமா நான் பிரதமர்க்கிட்டே பேசுறேன்!
Deleteநண்பா கிஷோகரா..
ReplyDeleteஇந்த படத்தை பார்த்தால் உச்சாவே வராது போல இருக்கே.
விமர்சனம் அருமை...நீங்கள் தொடர்ந்து எழுதினால் எங்களுக்கெல்லாம் டெபொசிட்கூட கிடைக்காது.
////.நீங்கள் தொடர்ந்து எழுதினால் எங்களுக்கெல்லாம் டெபொசிட்கூட கிடைக்காது.////
Deleteஇதெல்லாம் ரொம்ப ஓவரு! புகழ்றதுக்கு புழுகிறதுக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு மச்சி!
எத்தினையோ வாட்டி Bear Grylls பண்ணுறதைப் பார்த்து ரசிச்சிருந்தாலும், அப்படி ஒரு சான்ஸ் நம்மளுக்கு வராதான்னு நினைச்சாலும், மனித இறைச்சின்னா நமக்கு 'உவ்வே' தான்..
ReplyDeleteஅந்த சான்ஸ் வராமல் இருக்க வேண்டுமென்றே மன்றாடு! அப்புறம் "உவ்வே" உனக்கு உடுப்பி ஓட்டல் சாப்பாடு மாதிரி ஆகிவிடும்!
Delete//உங்களைப் பொறுத்தவரை நான் "உவ்வே"யாக இருந்துவிட்டு போனாலும் பரவாயில்லை!//
ReplyDeleteநீ உவ்வேயாவே இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை.. ஆனா பல பேரை 'உவ்வே' போட வைச்சுகிட்டிருக்கியாமே.. அதான் டப்பு!!
மேட்டர் புரியலயே!
Deleteவோய்,
ReplyDeleteசும்மா சொல்ல கூடாது.....படத்தை பத்தி ரொம்பவே உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிற....
ஆனா இந்த மாதிரி survival படங்கள் பார்க்கிறதுக்கு ரொம்பவே பொறுமை வேணும்...அது உங்களுக்கு ரொம்பவே இருக்கு...
மனுஷங்களை தின்கிற படம்ன்னு நினைக்கும் போது தான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு....survival படங்களில் எனக்கு ரொம்பவே பிடித்தது "Eight Below "....அண்டார்டிக்காவில் மாட்டி கொண்ட எட்டு நாய்கள் பற்றிய படம்.....ரொம்பவே நல்லா இருக்கும்....
நம்ம JZ குடிபாரா..நம்பவே முடியல....
அண்னே அந்த "எயிட் பிலோ" படத்தை எடுத்ததும் இதே ஃபிராங்க் மார்ஷல் தான்! ஒரு வேளை இந்த படத்தை பார்த்துவிட்டு என் போன்ற ஒருத்தன் புலம்பி தளியதால் தனது அடுத்த படத்தை நன்றாக எடுத்தாரோ என்னமோ? எனக்கு அந்த படம் மிகவும் பிடிக்கும்!
DeleteJZ.....குடிக்கமாட்டாரு நீந்துவாப்ல.....
டேய் நான் ஒரு Straight- edge ஃபாலோவர்டா... இப்படி அபாண்டமா சீன் போடுற!
Deleteநீ அடிக்கிற கள்ள சாராயம் மட்டும் கசக்காது மச்சி! இப்படியான உண்மைகளும் கசக்கத்தான் செய்யும்!
Deleteகள்ள சாராயம் கசக்கும்னு கிஷோகருக்கு எப்படி தெரியும்? :)
Deleteபோங்கண்ணே! சும்மா தெரியாத மாதிரியே கேக்குறது! ( நானா தான் சிக்கிட்டேனா?)
Deleteவிமர்சனம் அருமை....
ReplyDeleteநீண்ட நாடகளின் பின்னர் வந்திருக்கிறீர்கள் ! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றிண்ணே!
Deleteகிஷோகர்!
ReplyDeleteஇப்படம் உக்கிரேனில் நடந்ததல்ல!, தென்னமெரிக்க நாடான உருகுவேயில் , உருகுவே ரக்பி வீரர்களுடன் நடந்த உண்மைச் சம்பவம், பற்றியது.
இது பற்றி ஒரு விபரணச்சித்திரம் நான் பிரென்சுத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர்கள் முதல் சாப்பிடத் தொடங்கியதே! அந்த விமானவோட்டியை , அதற்காக விமானவோட்டியின் குடும்பத்தினர், தம்பியவர்கள் மேல் வழக்குத் தொடர்ந்து, அந்த வழக்கில் வக்கீல் " தேவாலயங்களில் ரொட்டியையும், வைனையும்- இயேசுவின் உடலாகவும், ரத்தமாகவும் நினைத்து உண்பதுபோல், இவர்கள் உண்டார்கள்.
என வாதிட்டு வென்றார்.
அந்த வழக்கில் ஏன்? விமானஓட்டியின் உடலை உண்டீர்கள் என்ற கேள்வி எழுந்தபோது,தப்பியவர்கள்
சொன்ன பதில். இறந்தவர்களில் இவரே அன்நியர்; ஏனையோர் தமது உறவினர்களும்; நண்பர்களும் அடங்குவோம்.
அதனால் அவர் உடலைச் சாப்பிட்டு உயிர் வாழ முயன்றோம்.
அத்துடன் பனியில் கிடந்ததால், அந்த சுமார் 70 கிலோ உடைய ஒருவர் உடல், அவர்களுக்குப் போதுமானதாக அது வரை இருந்துள்ளது.
ஏனைய உடல்கள், மீட்புப் பணியினரால் மீட்கப்பட்டது.
அதில் தப்பிய ஒன்றோ, இரண்டோ பேர், இன்னும் வாழுகிறார்கள் என நம்புகிறேன்.
சம்பவங்கள் பற்றிய என் புரிதலில் தவறிருக்கலாம். ஆனால் நாடு -உருகுவோ, உருகுவோ யிருந்து சிலி செல்லும்போது அஜன்ரீனா - சிலி எல்லையில் உள்ள பனிபடர்ந்த அன்டீஸ் மலைத் தொடரைத் தாண்டியே செல்ல வேண்டும். அப்போதே இது நடந்தது.
அண்ணே நீங்க சொன்னது சரிதான் அது உருகுவே தான், எனக்கும் தெரிஞ்சிருந்தது, ஆனாலும் இந்த யூரோ கிண்ண போட்டிகளுக்கு பதிவு எழுதி எழுதி அந்த உக்ரேன் மனதில் ஆழமா பதிஞ்சிருச்சு, தப்பு தான் மன்னிச்சூ! சுட்டிக்காட்டியதற்கு நன்றி!
Deleteயாரை உண்டார்கள் என்பது பற்றி நான் படத்தில் காட்டியதை தான் எழுதினேன். அதன் பின்புலம் எனக்கு தெரியாது. சுவாரசியமான பின்புல தகவலுக்கு மேலும் ஒரு நன்றி! தொடர்ந்து வாருங்கள் சந்திக்கலாம்!