இந்த பதிவை படிக்கும் முன்னர் இந்த பதிவை படித்துவிட்டு வரவும், அந்த பதிவுக்கான எனது பின்னூட்டமே இந்த பதிவு!
என்ன இல்லை இலங்கையில்? மூடிவிட்ட பல்கலைக்கழகங்கள், கல்வியில் குளறுபடிகள் , இன்னமும் அபிவிருத்தியே காணாத வடக்கின் பிரதேசங்கள் என்று எல்லாமே இருக்கிறது என்று விசமிகள் சில விஷ கருத்துக்களை பரப்பிவருகிறார்கள். ஆனால் இலங்கை ஆசியாவின் அதிசயம்... கல்வியும் , வாழ்க்கைத்தரமுமா ஒரு நாட்டின் வளத்தை தீர்மானிக்கிறது.
இந்த ஆண்டுக்கான ஐ.நாவின் அறிக்கையில் இலங்கை தான் உலகின் தலைசிறந்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அட! இலங்கையில் இத்தனை குளறுபடிகள் இருப்பதாக ஜனநாயக விரோதிகள் வதந்திகளை பரப்பியுமா இந்த இடம் கிடைத்திருக்கிறது என அந்த அறிக்கையை விரிவாக வாசித்தேன். அதாவது இலங்கையில் நல்ல காடு இருப்பதாலும், குளிரத்து கிறங்கடிக்கும் மலைகள் இருப்பதாலும், குளிர் பிரதேசமான மத்திய மலைநாட்டில் இருந்து குளிருக்கு இதமாக ரெண்டு பெக் விஸ்கி அடித்துவிட்டு, ரெண்டே மணத்தியாலத்தில் சூடான பீச்கள் இருக்கும் தென்பகுதிக்கு போய் ஜில் என்று பீர் அடித்துவிடும் வசதி இருப்பதாலும். எட்டு ஒன்பது மணிநேரங்களில் இலங்கை முழுவதையும் சும்மா சொழட்டி சொழட்டி சுற்றிப்பார்த்து , அந்தந்த பிரதேசத்துக்கு ஏற்ப உற்சாக பானம் உள்ளே இறக்கும் வசதி இருப்பதால் , இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடுகலின் பட்டியலில் அவசர அவசரமாக சேர்த்திருக்கிறது.
ஐயா ராசா ! ஒரு நாட்டின் அதியுயர் கல்வி பீடங்களாக இருக்கக்கூடிய பல்கலைகழகங்களை இரண்டு மாதகாலமாக மூடி வைத்திருப்பது சின்ன பிரச்சினை தானே? நாட்டில் பார் திறக்கிறது, டிஸ்கோ கிளப் திறக்கிறது, கொல்லைப்புறத்தில் விபச்சாரவிடுதியும் திறந்து கிடக்கிறது. இவற்றைவிட வேறு முக்கியமாக என்ன வேண்டும்? இவை போதாதா இலங்கை ஆசியாவின் அதிசயம் என்று ஆவதற்கு?
இந்த மயிரைப்புடுங்கும் ஐ.நாவும் சில விசமி நாடுகளும் சேர்ந்து ஒரு நாட்டின் அபிவிருத்தியை கணக்கிலெடுக்க சில அடிப்படை கோட்பாடுகளை வைத்திருக்கின்றனவாம். அதாவது "பொருளாதார அபிவிருத்தி" மற்றது "வாழ்க்கை சுட்டெண்". இந்த வாழ்க்கை சுட்டெண்ணின் கீழ் கல்வி அறிவு, ஆயுள் எதிர்பார்ப்பு, அடிப்படை வசதிகள் இன்னும் சில இத்யாதிகளை சேர்த்து இருக்கின்றார்கள். அவையெல்லாம் இருந்தால் தானாம் அந்த நாடு ஒரு அபிவிருத்தியடைந்த , உலகின் வளம் மிக்க நாடாம். அந்த அடிப்படையில் அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆப்ரிக்காவில் தென்னாபிரிக்கா மட்டும், ஆசியாவில் ஜப்பான், மற்றும் சிங்கபூர் ஆகிய ஆடுகள் மட்டும் தான் அபிவிருத்தி அடைந்த நாடுகளாம். போங்கடா.. போங்கடா போக்கத்த பயலுகளா.... எந்த ஒரு நாட்டில் இயற்கை வலம் இருக்கிறதோ அந்த நாடுதான் சிறந்த வளமான நாடு... கம்பஸ் பூட்டியிருப்பது எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்று நான் ஒரு அறிக்கை விடவும் ஆடிப்போய் இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடுகள் பட்டியலுல் சேர்த்து, ஆசியாவின் அதிசயம் என்று அங்கீகாரமும் கொடுத்திருக்கிறது ஐ.நா. அதனை தொடர்ந்து சிங்கம், புலி, ஒட்டகச்சிவிங்கி, செங்குரங்கு போன்ற மிருக வளத்தையும், தங்கம் உட்பட்ட கனிமங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் எத்தியோப்பியா, நைஜீரியா, உகண்டா போன்ற நாடுகளையும் அவற்றின் வளத்தை கருத்தில் கொண்டு அபிவிருத்தி அடைந்த நாடுகள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எலேய் ! இலங்கை ஆரம்பம் முதலே ஆசியாவின் அதிசயம் தான்டே.. காடு, மலை, குளம், கால்வாய், கம்மா கரை, அதில் குளிக்கும் பெண்கள் என்று எங்களிடம் நிறைய வளம் இருக்கிறது. கருமம்.. நாட்ல கல்வி கெட்டுப்போனா நாங்க ஆசியாவின் அதிசயம் இல்லேன்னு ஆகிடுவமா? கொக்கா மக்கா.....
ஆங்... அப்புறம் சகோதரத்துவம்! எனக்கு ஒரு சிங்கள அல்லது முஸ்லிம் குடும்பம் மண்னாய்ப் போவதில் துளியளவு சம்மதமில்லை தான், சந்தோசமும் இல்லை. ஆனால் தமிழரது ஆதங்கம் எல்லாம் போரில் ராணுவத்தோடு எமது மக்களும் கொல்லப்பட்டிருக்கையில் , அழிவு தொடர்பான உதவிகள் மட்டும் ராணுவ குடும்பங்களுக்கு மட்டுமே போகிறதே! அப்போ தமிழர்கள் யாரும் இந்த நாட்டின் பிரஜைகள் கிடையாதா? என்று நான் கேட்கவில்லை இதோ வாழ வழியில்லாமல் யுத்தத்தில் அனைத்தையும் இழந்து இன்னும் சாகாமல் கிடக்கும் சில தரித்திரங்கள் கேட்கின்றன. அவர்களிடம் போய் சொல்லுவோம் "இலங்கை வளமான நாடு வாழுங்கள் என்று". அப்பால இன்னொன்று சொல்லியாவணும்... சண்டைன்னா சட்ட கிழியத்தான் செய்யும், அதனால என்ன இப்போ? இப்ப கூட சண்டைஅல செத்துப்போன ராணுவ சகோதரர்களுக்கு துரித கதியில் வீடு கட்டி குடுத்துக்கிட்டு இருக்கோம். எல்லாம் சும்மா அல்ரா மார்டன் வீடுகள். அதுக்கு பணம் சேர்க்க உள் நாட்டில் உள்ள அனைத்து சகோதரர்களிடமும் இருந்து ஏதோ ஒரு வகையில் நிதி திரட்டப்படுகிறது. எங்களது வெற்றி வீரர்களுக்கு நாங்களும் பணம் கொடுக்கிறோம்.யுத்தத்தில் எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள், அனைவரும் சமமான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டுமென்பதற்கு இத விட வேற என்ன உதாரணம் வேண்டும்.
அப்புறம் இந்த தமிழ் சகோதரர்கள்! என்னப்பா உங்களோட பெரிய ரோதனையா போச்சி... எப்போ பாரு வீட்ட இழந்தோம், அம்மாவ இழந்தோம், அப்பாவ இழந்தோம், தங்கச்சிய கெடுத்துட்டானுக, தம்பிய வெட்டிட்டானுக, உயிர கைல புடிச்சிக்கிட்டு வந்தோம், அநாதையா போயிட்டொம்னு பொலம்பிக்கிட்டு அலையுறீக? ஏன் நீங்க மட்டும் தான் பாதிக்கப்பட்டீங்களா ? நம்ம ராணுவம் சாகல? சும்ம எப்போ பாரு நொய்..நொய்ன்னு..... இந்தா பாருங்கோ நாமெல்லாம் சகோதரங்கோ.. நம்மாண்ட சண்ட கூடாது.. அப்பன் செத்தா என்ன .. அது போகட்டும் அழகா பரந்து விரிஞ்சி இருக்கிற இலங்கையோட அழகை பாருங்கோ.... ஜாலியா லைஃப எஞாய் பண்ணுங்கோ.... அட ! உங்களுக்கும் வீடு வேணுமா? இருங்கப்பா.. ஏதுனாச்சும் வெளிநாடுகள் நிதி கிதி குடுத்தா பாத்துக்கலாம். அதுவரைக்கும் இப்போ இருக்கிறாப்ல மரத்துக்கு கீழேயே இருந்து மண் சோறு தின்னுங்கோ....
சகோதரத்துவத்துக்கு ஒரு சமீபத்தைய உதாரணம் சொல்லணும் மச்சி உங்கிட்ட..... இந்த கம்பஸ் மூடி கிடக்கிறதால நான் அப்பா கூட கடல் தொழிலுக்கு போவது வழமை. அன்னிக்கு ஒரு நாள் நானும் அப்பாவும் தொழிலுக்கு போய்ட்டு ஒன்னுமே இல்லாம கெடந்த வலையை இழுத்து போட்டுக்கிட்டு கரைக்கு வந்தோம். அப்போ ஒரு ராணுவ சகோதரன் கரையில நின்னு என்னோட அப்பாக்கிட்ட "சிகரட் இருக்கா"ன்னு கேட்டாரு , அப்பாவும் இல்ல சார் பீடி தான் இருக்குன்னார். அதுக்கு அந்த சகோதரர் சொன்னார் "போய் வாங்கி கொண்டு வா" என்றார், அப்பா சொன்னார் " சேர் வலைய பாருங்க சேர் ஒண்டுமே இல்ல, அதோட என்னட்ட சுத்தமா காசு இல்லன்னு" அப்போ "சொன்னத செய்டா நாயேன்னு" எங்க அப்பா கன்னத்தில "பளார் பளார்" என்று ரெண்டு அறை விட்டார் அந்த ராணுவ சகோதரர். எனது முகமும் கை முஷ்டியும் மாறுவதை கவனித்த எனது மாமா என்னை வேறு பக்கமாக தள்ளிக்கொண்டு போய்விட அந்த சம்பவம் முடிந்தது.
வீட்டுக்கு வந்ததும் அப்பா சொன்னார் "தம்பி .. நீ இனி வர வேணாம், நீ இளம் பொடியன் வேற! ஏதாவது நடந்து போயிடும் வேணாம்" நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நாளை காலை மொதோ வேலையாக அப்பாவிடம் சொல்லுவேன் " அப்பா அதெல்லாம் சகோதரத்துவத்துக்குள்ள சகஜம், அடிச்சா என்ன அவன் உங்க தம்பி தானே ( அடித்த சகோதரருக்கு என்னை விட வயது குறைவாகவே இருக்கும்) அடியை வாங்குங்க, அண்ணன் தம்பிக்குள்ள இதெல்லாம் சகஜமப்பா!" என்ன சகோதரத்தும் சரி தானே!
அப்புறம்...... தனி நாடா? வேணாமய்யா.... இத்தனை காலமும் இந்த பெயரால் பட்டது போதும், ஆனால் ஒரு சமஷ்டி முறைக்காவது தயாராக இருக்கிறதா நம்ம சகோதரம்? உங்களுக்கொன்று தெரியுமா ? அமேரிக்காவில் நடைமுறையில் இருக்கும் சமஸ்டி முறையானது அந்தந்த மாநிலங்களை தாம் விரும்பினால் தனி நாடுகளாக பிரிந்து போகும் அதிகாரத்தை வழங்குகிறது. ஆனாலும் இன்னமும் அத்தகைய ஒரு முடிவை எந்தவொரு மாநிலமும் எடுத்ததாக தெரியவில்லை. காரணம் மத்திய ஆட்சி அந்த மாதிரியான ஒரு சுத்தந்திரமான ஆட்சியை நடாத்துகிறது. சிங்களவரே இல்லாத மன்னார் பகுதியில், சகோதர மொழி பேசும் ஒருவரை நீதிபதியாகவும், பிரதேச செயலாளராகவும் , அரச அதிபராகவும் நியமித்து அழகு பார்த்த எமது மத்திய அரசு , சமஸ்டி என்றால் என்ன விலை என்று கேட்பார்கள். அது சரி இத்தனை காலமும் பொலிஸ் அதிகாரமாவது தாருங்கள் என்று இந்த வாழ வழியில்லாத தமிழர்கள் கத்தி தானே பார்த்தார்கள். அது சரி அடி முட்டாள்களின் கைகளில் எதற்கு ஆராட்சி புத்தகத்தை கொடுப்பானேன்! அதனால் தான் வடக்கில் பாராளுமன்ற உறுப்பினர் தொகையும் குறைக்கப்படுகிறது போலும். இவர்கள் என்ன ஆணியா புடுங்குவார்கள். தமிழர் தரப்பில் ஒரு சிங்கள சகோதரர் பாராளுமன்றத்துக்கு போனார் என்ன குடியா முழுகிவிடும்? ஆனால் என்ன யாழ்ப்பாண மக்கள் சொல்வது அவருக்கு புரியாது. அதனால் என்ன ? அவர் தனது சிங்கள சகோதரர்களுக்கு ஏதாவது நல்லது செய்துவிட்டு போகட்டுமே! யார் நன்மை அடைந்தால் என்ன அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளே!
ஆங்.. அப்புறம் கருத்து சுதந்திரம்...... அமேரிக்காவின் வெள்ளை மாளிகையில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் பேச்சு மேடையில் ஏறி நின்று "ஒபாமா நீ ஒரு அடி முட்டாள் " என கத்தி அவரது அரசை விமர்சிக்கும் உரிமை அவர்களுக்கு இருகிறது. உங்களால் முடிந்தால் நமது ஜனாதிபதியின் அலரி மாளிகையின் முன்பு நின்று ஏதும் கத்தக்கூட வேண்டாம். "ஐ ஆம் ஃபிறம் யாழ்ப்பாணம்" என்று சொல்லிவிட்டு சில நிமிடங்கள் உங்களால் அந்த கதவருகில் நிற்கமுடிந்தால் அதுவே சாதனை தான்.
ஆமா! ஆமா ! தமிழர் யாருமே அழிந்துவிட மாட்டோம்.... காரணம் முல்லைத்தீவில் நாயாறு கழிமுகத்தில் இருந்த தமிழர் அப்புறப்படுத்தப்பட்டு , தென்னிலங்கயில் வாழ வழியில்லாமல் இருந்த 150 சிங்கள சகோதர குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டிருக்கின்றன. அங்கு வாழ்ந்த மீன்பிடி குடும்பங்கள் இப்போது ரோட்டு வேலை செய்கின்றன. ஆமா! ஆமா! நாம் எல்லோரும் சகோதரர்கள். இப்புடி பகிர்ந்து கொண்டு தான் வாழவேண்டும். நாம் அழிந்து போக மாட்டோம். இப்போ அந்த 53 குடும்பங்களுக்கு ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் இடம் கொடுத்து மீன் பிடிக்க விடுங்கள் என்று நான் கேட்கப்போனால் சகோதரங்களுக்கு இடையில் சண்டை மூட்டிகிறான் என்று என்னை பலி கடாவாக்கி விடுவீர்கள் என்பதால் , அந்த தமிழ் குடும்பங்கள் ரோட்டில் கல்லுடைத்து வாழுவதே இலங்கை இறையாண்மைக்கு பொருத்தமானதாக இருக்கும். யார் மீன் பிடித்தால் என்ன அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளே! அப்ப்டியே ஒரு எட்டு காலி துறைமுகத்துக்கு போய் நானும் இலங்கை தாயின் பிள்ளை தான் , எனக்கும் இந்த மீன்பிடி துறைமுகத்தில் இடமிருக்கிறது என்று கூறி, அந்த அனுமதியை வாங்கி வந்து யாரெல்லாம் தமிழ், தமிழர், தமிழீழம் என்று அலைகிறார்களோ அத்தனை பிரிவினை வாதத்தின் பிள்ளைகளுக்கும் , இலங்கையின் இறையாண்மைக்கும் சுபீட்ச ஆட்சிக்கும் எதிரான கலகக்காரர்களின் முகத்தின் மேல் விட்டெறியுங்கள். அது தான் இலங்கை ஒரு இறையாண்மை பொருந்திய நாடு என்பதற்கு தக்க ஆதாரமாய் இருக்கும்.
அப்படியே கொத்தலாவை ராணுவ பல்கலைகழகத்துக்கு போய் நான் தமிழன் தான், நானும் இலங்கை தாயின் புத்திரன் தான் நானும் ராணுவத்தில் சேருவேன் என்று அடம்பிடித்து ( அடம்பிடிக்க தேவை இருக்காது, காரணம் ஒவ்வொரு தமிழனும் இலங்கை தாயின் பிள்ளைகள் என்று ராணுவமும் கருதுவதால் இலகுவாக உங்களுக்கு இடம் கிடைக்கும்) நான்குவருட பயிற்சியை முடித்து , ராணுவ உயரதிகாரியாக உயர்ந்து காட்டியும் விடுங்கள். இந்த தமிழீழ கோஷம் போடுபவர்களின் காலிடுக்கில் நான் நெருப்பு வைக்கிறேன். யாரு கிட்ட? நாங்கெல்லாம் ஒரு தாயின் பிள்ளைகள், நாங்கெல்லாம் சகோதரர்கள்....... யாரு வேணும்னாலும் ராணுவத்தில் சேரலாம் எங்கள் நாட்டில்...... அதானே பிறந்த அனைவருக்கும் வாழ தெரியும்.. சர்வதேசமோ , ஐ.நாவோ எந்த ஆணியையும் புடுங்க வேண்டியதில்லை. மரங்களுக்கு கீழும், பற்ரை மறைவில் மலசலம் கழித்தும், மறைவிடங்களில் நடாத்தப்ப்டும் சில பல கற்பழிப்புகளோடும் தமிழினமும் இலங்கையில் தெருநாய்கள் போல், அல்லது காட்டு சிங்கங்கள் போல் தலை நிமிர்ந்து வாழும்! வாழ்க ஜனநாயகம்!
அப்புறம் இந்த இஸட் ஸ்கோர் . சிலருக்கு ஒன்று மட்டும் புரிவதே இல்லை. அதாவது இந்த இஸட் ஸ்கோர் பிரச்சினையை இப்போது மட்டுமல்ல அது ஆரம்பகாலம் தொட்டே கடும் சூடாக விவாதிக்கப்படுகிறது என்று. அது போக இலங்கையில் தமிழர் போராட்டம் ஆரம்பமவதற்கு இந்த இஸட் ஸ்கோர் முறை ஒரு பாரிய பங்களிப்பு செய்தது என்று. அதாவது இலங்கையில் இஸட் புள்ளி முறையில் பல்கலைகழகங்களுக்கு மாணவர்களை உள்ளெடுப்பதற்கு முன்னர் , நாடாளாவிய ரீதியில் தான் மாணவர் உள்வாங்கல் இடம்பெற்றது. அதாவது உதாரணமாக கணித பிரிவில் 200 பேர் பல்கலைகழகங்களுக்கு உள்வாங்கப்படுவார்களானால் , இலங்கையில் கணிதப்பிரிவில் முதல் 200 இடங்களுக்குள் வந்தோர் உள்வாங்கப்பட்டனர். இப்படித்தான் ஒவ்வொரு பிரிவுக்கும் உள்வாங்கல் இடம்பெற்றது. சில காலம் கழித்து பார்த்தார்கள், பல்கலைக்கழகங்களில் சகோதரத்துவ சமநிலை குழம்பி இருந்தது. அதாவது பல்கலைக்கழகங்களில் தமிழ் சகோதர்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்தது. அடடே! இது இலங்கையின் இறையாண்மைக்கு புறம்பாக தெரிகிறதே, பல்கலைக்கழகங்களில் அனைத்து சகோதரர்களும் சமமாக இருக்கவேண்டுமென்ற "ஒரே" நல்ல நோக்கத்தில் இந்த இஸட் ஸ்கோர் முறைமை கொண்டுவரப்பட்டு, தமிழ் சகோதரர்களின் உள்வாங்கலும் குறைக்கப்பட்டது. அப்புறம் கணிசமான சிங்கள சகோதரர்கள் அதிகளவில் உள்வாங்கப்பட்டார்கள். அவர்கள் தானே இலங்கை திருநாட்டில் அதிகம் வாழ்கிறார்கள், அதிகமானோருக்கு மதிப்பு கொடுப்பது தானே ஜனநாயகம்? அந்த வகையில் ஆசியாவிலேயே மிகச்சிறந்த ஜனநாயக நாடு இலங்கைஎன்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.
அப்புறம் சமீபத்தைய பிரச்சினை, அதாவது இந்த வினாத்தாள் திருத்தும் குளறுபடி , முதல் பெறுபேறின் அடிப்படையில் வைத்திய துறைக்கு தெரிவாகியவன் , மீள்திருத்தப்பட்ட இரண்டாம் பெறுபேற்றின் அடிப்படையில் வைத்தியசாலையின் வெளிவாசல் திறப்பதற்கு கூட தகுதி பெறாமல் போனது எல்லாம் சின்ன விசயம். முதுகு சொறிய நல்ல சொர சொரப்பான சுவர் இல்லாதவர்களும் , முனை மழுங்கிய கத்தி இல்லாதவர்கள் மட்டுமே இந்த விடையங்களை முதுகு சொறிய பயன் படுத்துகிறார்கள். இந்த சின்ன விடயத்தை எல்லாம் பெரிது படுத்தாமல் , இலங்கை ஆசியாவின் அதிசயம் என்பதிலும், ஹிக்கடுவையில் நல்ல மணலுடன் கூடி பீச் உள்ளது என்பதிலும், நுவரெலியாவில் நல்ல குளிரில் , ரெண்டு பெக் விஸ்கி அடிப்பது போன்ற அதிமுக்கியமான, இலங்கையை உலகின் அதிசயமாக மாற்றக்கூடிய விடயத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.
![]() | |
அடுத்து ஆடி வாங்கலாமா இல்ல லம்போகினி வாங்கலாமா? |
எவன்டா சொன்னது இலங்கை வங்கிகளில் காசு இல்லை என்று? இலங்கை ஒரு கடன் கார நாடு என்று? சொகுசு மாளிகைகள் இல்லையா? இங்கே கார் இல்லையா?
"ஆடி", "ஆவணி",
"ஜக்குவார்", "ஜக்குவார் தங்கம்" "தளபதி தினேஷ்"
"பி.எம்.டபிள்யூ", "எம்.பி.பி.எஸ்"
" பென்ஸ்" , "கலர் பென்ஸில்ஸ்"
"லம்போகினி" ," அம்சவர்தினி", "திலகாவதி" ,
"புகர்டி", " அன்டேட்டேகர்",
"அஸ்டர் மாட்டின்", "பொஸ்டன் சீனி டின்"
போன்று எவளவு அதிநவீன கார்கள் இலங்கையில் உலா வருகின்றன. மன்னாரில் பெட்டிக்கடையில் மீன் விற்கும் அந்தோனி "லம்போகினியில்" தான் கருவாடு சுமந்து சந்தைக்கு போகிறார். மட்டக்களப்பில் ஆட்டிறைச்சி விற்கும் கரீம் பாய் "அஸ்டன் மார்டின்' காரில் தான் அடுத்த தெரு போகிறார். ஹம்பாந்தோட்டையில் பேரிக்காய் விற்கும் மன்கலிகா வீட்டில் நான்கைந்து "டொட்ஜ் சேலேஞ்சர்" கார்கள் அணிவகுக்கின்றன. ஆக இலங்கையில் "பிராடோ " ரக சொகுசு கார்களை வைத்திருப்பது, பாராளுமன்றத்தில் இருக்கின்ற ஒரு சில ஃபிராடுகள் மாத்திரம் அல்ல. சாதாரண குடிமகனும் வைத்திருக்கிறான் என்பது தான் எமது தாய்த்திருநாட்டின் பெருமை. எமது நாட்டைப் போலவே ஆபிரிக்காவின் உகண்டா, கம்போடியா, சோமாலியா, நைஜீரியா போன்ற வளம்மிக்க நாட்டின் தலைநகரங்களிலும் சொகுசு கார்களும் அடுக்குமாடி குடிமனைகளும் உள்ளன. எனவே இலங்கை போல அந்த நாடுகளும் செல்வம் கொழித்து இருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியே! ஆனாலும் எமது "இலங்கை உலகின் அதிசயம்" நோக்கத்தில் அந்த நாடுகள் போட்டிக்கு நிற்பதால் சீக்கிரம் அந்த நாடுகளை பின்னுக்கு தள்ள பாடுபடவேண்டும். பொருளாதாரத்தைப் பற்றி வாய் கிழிய கத்தும் அற்ப பதர்களே உங்களுக்கு ஒரு உண்மையை உரைக்க விரும்புகிறேன். அமேரிக்கன் ஒரு டாலர் தான் கொண்டுவருவான் ஆனால் நாங்கள் அதுக்கு இணையாக அவனுக்கு 130 ரூபாய்களை கொடுப்போம். இனி வரும் நாட்களில் நாங்கள் கொடுக்கும் தொகை அதிகரிக்குமே ஒழிய குறையாது. இப்போது சொல்லுங்கள் பொறாமை பிடித்தவர்களே ஒரு அமேரிக்கன் கொடுக்கும் ஒத்தை டாலருக்கு 129 ரூபா பேலதிகமாக செலுத்தும் எங்களது செல்வ கொழிப்பையா ஏளனம் செய்கிறீர்கள்? ஒன்று பெரிதா 130 பெரிதா?
யுத்தம் நிறைவடைந்த பின்னர் மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளை பார்த்தீர்களா? சும்மா கண்ணை பறிக்குதுல்ல...... நானும் சில சர்வதேச பிரமுகர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீடுகளை பார்வையிட சென்றோம், உண்மையில் அழகாக நேர்த்தியாக இருந்தது. அப்போது நான் கேட்டேன் "முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், யாழின் சில பகுதிகள் , மன்னாரின் பல பகுதிகள்" இங்கெல்லாம் எங்களை கூட்டிப்போங்கள் என்று , அப்போது "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்று பதில் வந்தது. ஆகவே அந்த பகுதிகளில் மக்கள் நீச்சல் குளித்தில் குளித்து, சன் கிறீம் தடவி , சூரியக்குளியலும் செய்து பின்னர் வீட்டில் நீராவி குளியல் எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று எனக்கு நன்றாகவே புரிந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது.. தெற்கின் சகோதரர்களை போலவே வடக்கின் சகோதரர்களும் சமமாக கவனிக்கப்படுகிறார்கள். அப்புறம் இந்த கொள்ளை அடிக்கிற பயலுக எல்லாம் கொஞ்சம் தாங்கப்பா! அதாங்க... கல்விக்கு 6% பட்ஜெட்டில் ஒதுக்கினால் அங்கு கைவைத்து காசு அடிக்க முடியாது என்பதால் ( காரணம் அங்கு புத்தி ஜீவிகளது பார்வை அதிகம்), சண்டையே இல்லை என்றாலும் பாதுகாப்புக்கு மட்டும் பல கோடிகள் ஒதுக்கி அங்கே லவட்டும் ஜாம்பவான்களே கொள்லையடிப்பதில் கொஞ்சம் இங்கே குடுங்கப்பா.... அப்புறம் பாருங்க ஒபாமா வீட்லயே ஒண்ணுக்கு அடிக்கிற அளவுக்கு வளந்துரலாம்.
![]() |
கார்களை நிறுத்த இடம் தர கோரி ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள்! |
இறுதியாக இலங்கை ஒரு வளமிக்க நாடு. நாட்டின் வளர்ச்சியை அந்த வீணா போனா ஐ.நா கல்வியை வைத்துக்கொண்டு அளவிட்டாலும் அது கிடக்கட்டும் ஒரு பாட்டில். நாங்கள் வளம்மிக்கவர்கள் , அதனால் நாட்டின் புத்திஜீவிகளில் கணிசமானோர் குடியிருக்கும் பல்கலைக்கழகங்கள் பூட்டியே இருக்கும். தமிழர்கள் கொல்லப்பட்டதெலாம் அண்ணன் தம்பி சண்டையப்பா... அதுக்கு எதுக்கு ஐ.நாவும் அமேரிக்காவும், அத நாங்களே பாத்துக்கிறோம், எல்லா பொடி பசங்களும் தள்ளி நில்லுங்கோ! மரத்துக்கு கீழே மண்சோறு தின்னும் ஈனப்பட்ட தமிழருக்கு , மற்ற சகோதரங்கள் நாங்களா பாத்து ஏதாவது பண்ணுவோம் அது நல்லதோ கெட்டதோ, எவனும் உள்ளவராத! அப்புறம் தமிழ் நாட்ல இருந்துக்கிட்டு " எங்கள் உறவுகள், எங்கள் ரத்தம்" என்று குதிப்பதையும் நிறுத்திக்கோங்கோ. யாருய்யா நீங்க? தமிழ் நாட்டில் இருந்தால், தமிழ் கதைத்தால் நீங்கல் எங்கள் சகோதரர்கள் என்று ஆகிவிடுமா? என்னதான் அடித்தாலும், எங்கள் கழுத்தை அறுத்தாலும் , என் கண்முன்னே எனது அக்காவை கற்பழித்தாலும் சிங்களவெர்களே எங்களது சகோதரர்கள். அது மாற்ற முடியாதது.
நான் கொழும்பில் இருந்துகொண்டு, காலை மெக்டொனால்ட்ஸ் போய் தின்று , மதியம் கே.எஃப்.சியில் ஆகாரம் அருந்தி, பின்னேரம் தாஜ் சமுத்திராவில் டீ குடித்து இரவு கிளப்பில் ஆடிவிட்டு இப்போது ஏ.சி ரூமில் இருந்து இந்த பதிவை போடுகிறேன். இன்னமும் வடக்கில் கரண்டே காணாத சகோதரர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் இலங்கை ஆசியாவின் அதிசயம்! வாழ்க ஜனநாயகம்!
டிஸ்கி: விளையாட்டு வீரர்களையும், கலைஞர்களையும் சங்ககாலம் முதற்கொண்டே தூதுவர்களாகவே நமது பண்பாடு பார்க்க பழகியுள்லதால், நண்பரின் கிரிக்கட் ரசனை தொடர்பான கூற்றோடு நானும் ஒத்துப்போகிறேன்.
டிஸ்கி : அந்த பதிவுக்குரியவன் எனது நண்பனே! தயவு செய்து அவது பிளாக்கில் காரமான பின்னூட்டங்கள் ஏதும் இடவேண்டாம்!
டிஸ்கி: அவசர அவசரமா எழுதப்பட்ட பதிவு! ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிக்கவும்!