தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படும் “Technical terms, Scene sequence ,
Shooting Methods , Screen play making Methods
போன்ற டெக்னிகல் விடயமெல்லம் எனக்கு தெரியாது. நான் உணர்ந்ததை வெறும் உணர்வு பூர்வமாகவே தந்திருக்கிறேன். படப்பிடிப்பு யுக்தி அல்லது காட்சிகளை செதுக்கும் யுக்திகள் தொடர்பான சந்தேகங்களுக்கு கருந்தேளையோ, மாஸ்டர் ஷிபுவையோ அணுகவும்.
தமிழனின் தற்கால பொழுதுபோக்குகளில் திரைப்படமும் திரைப்படம் சார் நிகழ்வுகளும் ஒரு பிரதான அம்சமாகிவிட்டிருக்கின்றது. சினிமா தொடர்பில்லாத பொழுதுபோக்குகளை ஒரு சாமன்ய தமிழன் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு எம்மிடையே சினிமா ஆக்கிரமித்திருக்கிறது.
அன்றிலிருந்து இன்றுவரை எம்மை ஆக்கிரமித்துஇருக்கும் தமிழி சினிமாவின் பரிமாணம் பெரிது, 75 ஆண்டுகளை கடந்தது. படத்திற்கு அறுபது பாடல் என்று பாகவதல் காலத்தில் தொடங்கி , தெருச்சண்டை
, காணிப் பிரச்சினை , வாய்க்கால் தகராறு போன்ற சின்ன விடையங்களை கூட வெற்றிப் படைப்புகளாக்கிய சிவாஜி, எம்.ஜி.ஆர் காலம் , ரஜினியும் கமலும் ஆக்கிரமிக்க
, பாலுமகேந்திரா,
பாரதிராஜா
, பாலச்சந்தர் போன்ற இயக்குனர்கள் மூலம் சற்றே எதார்த்த சினிமாவுக்குள் எட்டிப்பார்த்த இடைக்காலம்
, அஜித்
, விஜய்
, சூர்யா என்று இக்காலத்தின் பெரும் நடிகர்கள் எல்லாம் காதலாகி கனிந்துருகிப்பாடிய 90களும் , புதுமைகள் பல புகுத்த துடிக்கும் தற்காலமுமாக தமிழ் சினிமாவின் ஒவ்வொரு கால கட்டத்திலும் , தமிழ் சினிமாவானது ஒவ்வொரு படிகளை கடந்தே வந்துள்ளது.
சமகால சினிமாவை பொறுத்தவரையில் புதிது புதிதான தொழிநுட்பங்கள், கதை
சொல்லும் முறைகள் என்று சில இயக்குனர்கள் வித்தியாசமாக ஏதேனும் முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகத்தரத்தை எட்டுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் காலம் இதுவெனலாம்.
ஆனாலும் தொழினுட்பங்கள் மலினப்படும் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை உலகமே பேசும் படி படம் எடுப்பார்கள் என்று அவர்களது முதல் சில படங்களின் போது எதிர்வுகூறப்பட்ட இயக்குனர்கள் எல்லாம் , தங்களது சமீபத்தைய படைப்புகளின் மூலம் என்ற ரீதியில் படம் எடுத்திருந்தார்கள்.
ராவணன் என்றும் கடல் என்றும் தொடர்ச்சியாக இரண்டு கொட்டாவிகளை மணிரத்னமும் , "ஆயிரத்தில் ஒருவன் , மயக்கம் என்ன " என்று இரண்டு பேதி மாத்திரைகளை செல்வராகவனும் "எந்திரன் " என்ற காய்லா கடை குப்பையை ஷங்கரும் திரைக்கு அனுப்பி தொலைக்கவும் அட போங்கப்பா என சலித்துக்கொண்டது தமிழ் திரையுலகு. காரணம் இம்மூவர் மீதும் தமிழ் சினிமா வைத்திருந்த நம்பிக்கை அப்படி. ஓரிரண்டு படங்கள் மட்டுமே ஒரு இயக்குனரை பற்றி முடிவு செய்து விடுவதில்லை என்பதால் இவகளது அடுத்த படைப்புக்காக காத்திருப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
அதுபோல பிரபு சாலமனின் "கும்கி", பாலாவின் "பரதேசி" ஆகியன பலரால் ரசிக்கப்பட்டாலும் , இவர்களின் திறமைக்கும்,
மீது வைத்த நம்பிக்கைக்கும் இந்த படைப்புகள் இரண்டுமே மட்டமானவை என்பது எனது தனிப்பட்ட கருத்து.
சமகாலத்தில் தான் அங்காடித்தெரு , தென்மேற்கு பருவக்காற்று , ஆரண்யகாண்டம் , ஆடுகளம் , வாகை சூட வா , மைனா என்று தேசிய விருதுகளையும் ,சர்வதேச அங்கீகாரத்தையும் தமிழ் சினிமாவுக்கு பெருவாரியாக கொண்டுவந்த சேர்த்த திரைப்படங்களும் வெளிவந்தன.
ஆனாலும் வணிக ரீதியான வசூல் இல்லாத படியால் மேற்சொன்ன படங்களை தந்த இயக்குனர்கள் தமது அடுத்த படைப்பை வெளியிடுவதில் முட்டுக்கட்டை விழுந்திருப்பது நமது துரதிஷ்டம்.
மேற்சொன்னவாறு பரிமாணமடைந்த அனைத்து சினிமாக்களும் சரி , அந்த சினிமாக்களின் இயக்குனர்களும் சரி வெவ்வேறு கதையம்சங்களை மையமாக வைத்து இயங்கினாலும் அவர்கள் அனைவரது கோட்பாடுகளும் ஒன்று தான். சராசரியாக இரண்டரை மணி நேர சினிமா. அத்ற்கேற்ரால் போலவே சிந்தித்தார்கள், அதற்கேற்றால் போலவே இயங்கினார்கள் , அவர்களது காட்சி வடிவமைப்பு , திரைக்கதை , கதை சொல்லும் முறைமை போன்றனவற்றில் இயக்குனருக்கு இயக்குனர் சிறிய வித்தியாசம் இருந்தாலும் அந்த ரெண்டரை மணிநேரம் குறித்ததாகவே அனைத்து இயக்குனர்களின் இயக்கமும் இருந்தது. தங்களது முதல் படத்திலிருந்தே அப்படி சிந்தித்தே பழகியிருந்தார்கள் இந்த
75 ஆண்டுகால சினிமா இயக்குனர்கள்.
மேற்சொன்னவாறு பரிமாணமடைந்த அனைத்து சினிமாக்களும் சரி , அந்த சினிமாக்களின் இயக்குனர்களும் சரி வெவ்வேறு கதையம்சங்களை மையமாக வைத்து இயங்கினாலும் அவர்கள் அனைவரது கோட்பாடுகளும் ஒன்று தான். சராசரியாக இரண்டரை மணி நேர சினிமா. அத்ற்கேற்ரால் போலவே சிந்தித்தார்கள், அதற்கேற்றால் போலவே இயங்கினார்கள் , அவர்களது காட்சி வடிவமைப்பு , திரைக்கதை , கதை சொல்லும் முறைமை போன்றனவற்றில் இயக்குனருக்கு இயக்குனர் சிறிய வித்தியாசம் இருந்தாலும் அந்த ரெண்டரை மணிநேரம் குறித்ததாகவே அனைத்து இயக்குனர்களின் இயக்கமும் இருந்தது. தங்களது முதல் படத்திலிருந்தே அப்படி சிந்தித்தே பழகியிருந்தார்கள் இந்த
75 ஆண்டுகால சினிமா இயக்குனர்கள்.
இம் மாதிரியான செயற்பாட்டால் சிரப்பு தேர்ச்சு முறை என்ற நன்மையும் கூடவே ஒரே மாதிரியாக காட்சிகளை அமைக்க பழகிவிட்டதால் பார்வையாளனிடையே ஒரு சலிப்பு தன்மை என்ற தீமையும் கூடவே ஒட்டிக்கொண்டது.
ஆனால் தமிழ் சினிமாவின்
75 வயது பூர்த்தியாகிப்போன சில ஆண்டுகளில் வேறு மாதிரியான ஒரு சினிமா வடிவத்தை பின்னணியாக கொண்ட குழுவொன்று தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைக்கின்றது.
இந்த பதிவுக்கான விதை சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் விழுகிறது.
கி.பி
சுமார் இற்றைக்கு
நான்கு வருடங்களுக்கு
முன்னர்.........
இடம்
: தமிழ் நாடு……..
அமேரிக்காவின் அத்தனை நிகழ்ச்சிகளையும் அப்பட்டமாக கொப்பியடித்து நாசூக்காக பெயர் மாற்றி , கவர்ச்சியான
விளம்பரங்களோடு "நாம் புதுமை புகுத்திகள் " என்று விஜய் டி.வி தம்பட்டமடித்து ஹிட்ஸ்களை அள்ளிக்கொண்டிருக்க , கேவலம் அதை கூட செய்யத்தெரியாமல் விஜய் டி.வி பண்ணும் நிகழ்ச்சிகளை அப்படியே காப்பியடித்து ஓரிரண்டு சொற்களை மட்டும் மாற்றி ( "கலக்க போவது யாரு?" : விஜய் டி.வி , "அசத்தப்போவது யாரு?
: சன்
டி.வி ) தாங்களும் நிகழ்ச்சி செய்கிறோம் பேர்வழி என்று
சன் டி.வியும் , கலைஞர் டி.வியும் பிழைப்பு நடாத்திக்கொண்டிருந்த காலம்.
இந்த காலப்பகுதியில் தான் கலைஞர் டி.வி ஓர் உருப்படியான காரியம் செய்கிறது. "நாளைய இயக்குனர் " என்ற பெயரில் ஒரு புதுமையான , திறமைக்கு களம் அமைக்கும் நிகழ்ச்சியை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக அறிமுகம் செய்கிறது. ( இது எங்கேனும் மேற்குல நாடுகளில் சுட்ட் நிகழ்ச்சியோ அறியேன். ஆனால் காப்பியடித்து பண்ணும் மற்ற நிகழ்ச்சிகளோடு ஒப்பிடுகையில் மிகவும் மேலானது, போக தமிழ் சினிமாவுக்கு சில நல்ல சினிமாக்களை தருவதற்கு வழி செய்தது.)
"நாளைய இயக்குனர்" ஆரம்பித்த புதிதில் இருந்தே அதன் மீதான மக்களின் ஆர்வமும் அதிகரிக்க தொடங்கியது , கலைஞர் டி.வியின் ஹிட்ஸ் லிஸ்டில் போய் சேர்ந்து கொண்டது. ஆனாலும் இன்று வரை அந்த மானம் கெட்ட "மானாட மயிலாட" தான் முதலிடத்தில் நிற்பது உச்சக்கட்ட எரிச்சல்.
ஒவ்வொரு எபிஸோடிலும், ஒவ்வொரு சீசனிலும் தமிழ் சினிமாவின் எதிர் கால இயக்குனர்கள் இனங்காணப்பட ஆரம்பித்தார்கள். நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கும் பின்னர் தமிழ் பொழுதுபோக்கு உலகில் "குறும்படங்கள்" ஒரு தனியான பகுதியை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.
பத்தே நிமிடத்துக்குள் மனதை பதறவைக்கும் படைப்புக்களாகவும் , பத்தே நிமிடத்துக்குள் ஒருவனை நாண்டு கொண்டு சாகும் அளவுக்கு மரண மொக்கை போடுவனவுமாக அனைத்து ஊடகங்களையும் குறும்பட ஆதிக்கம் சூழ்ந்து கொண்டது. குறும்படம் எந்த தரத்தில் இருப்பினும் , குறும்படத்துக்கான ஒரு களத்தை கலைஞர் டி.வியின் நாளைய இயக்குனர் அமைத்துக்கொடுத்தது.
இவன் சரியாத்தான் பேசுறானா? |
"நாளைய இயக்குனரின்" தாக்கத்தால் தமிழின் வேறு ஊடகங்களிலும் பல்வேறு இளைஞர்கள் தமது குறும்படங்களை வெளியிட ஆரம்பித்தனர்.
கலைஞர் டி.வியின் "நாளைய இயக்குனருக்கு " முன்பே சில தொலைக்காட்சிகள் குறும்படங்களுக்கு களம் அமைத்து கொடுத்திருந்த போதிலும் , அதனை ஒரு செம்மையாக , பிரம்மாண்டமாக , அனைத்து தரப்பையும் போய் சேரக்கூடிய உத்தியோடு செய்தது என்னமோ கலைஞர் டி.வி தான்.
சுமார் 10 வருடங்களுக்கு முன்பே "துர்தர்ஷன் பொதிகையில் " நாள் ஞாபகம் இல்லை, குறும்படங்கள் ஒளிபரப்பாகிய ஞாபகம் எனக்கு. "காசு மரம்" என்று நான் பார்த்த அந்த குறும்படமும், "பிச்சை " என்ற அந்த செருப்பு தைப்பவன் தொடர்பான குறும்படமும் இன்னும் என் தொண்டைக்குழியை அடைக்கச்செய்யும் அளவுக்கு துக்கம் தருபவை.
சரி விடயத்துக்கு
வருவோம்... நாளைய இயக்குனரில் சோபித்த இளைஞர்கள் தமிழ் தயாரிப்பாளர்களின் கண்ணில் பட ஆரம்பித்தாரக்ள் . அல்லது தமது கதை மேல் அல்லது தமது கதை சொல்லும் திறமையின் மீது இருந்த நம்பிக்கையில் தமது திறமைகளை வெள்ளித்திரையில் காட்டுவதற்கு முயற்சிகளை தொடங்கினார்கள்.
விளைவு....
கி.பி : நிகழ் காலம்
....
பாலாஜி தரணி தரன் ( நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்) , கார்திக் சுப்புராஜ்
( பீட்ஸா
) , பாலாஜி மோகன் (காதலில் சொதப்புவது எப்படி ?) , நளன் குமாரசுவாமி
( சூது கவ்வும் ) போன்ற நான்கு குறும்பட பின்னணியை கொண்ட
இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டத்துக்கான படைப்புக்களை கொடுத்தனர்.
தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட படைப்புகள் என நான் மேற்சொன்ன நான்கு படங்களையும் குறிப்பிடக்காரணம் , அவை நான்கும் ஏதோ அடுத்தடுத்து ஆஸ்கார் அவார்டுகளை அள்ளும் என்பதற்காக அல்ல. மாறாக கதையை மூலதனமாக வைத்து , புது முகங்களை மட்டுமே நம்பி , சம கால தமிழ் சினிமா பாங்கிலிருந்து விலகி மிக சுவாரசியமாக எடுக்கப்பட்ட படங்கள் அவை.
சரி , குறும்படப் பின்னணிக்கும்
மேற்சொன்ன படங்களின் வெற்றிக்கும் என்ன சம்மந்தம்? மேற்சொன்ன நான்கு பங்களுமே குறும்படங்களையே தமது ஆரம்பகால முயற்சியாக மேற்கொண்டவர்களது பாசறையிலிருந்து வந்தது.
இந்த நான்கு இயக்குனர்களை பொறுத்தவரைக்கும் பத்து நிமிடம் தான் அவர்களது வாழ்வா ? சாவா
? நிமிடம்.
அந்த பத்து நிமிடங்களுக்குள் தாம் சொல்ல வந்ததை சொல்லியாகவேண்டும்
, கூடவே சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். ஆக அதியுச்சமான கற்பனை வளமும் , புத்தாக்க
திறனும் இங்கே தேவைப்படுகின்றது.
அப்படியிருக்கும் இவர்களுக்கு இரண்டரை மணிநேரம் என்பது மிகப்பெரும் வரப்பிரசாதம் போன்றது. ஆனாலும் குறும்படம் எடுக்கும் அனைவராலும் இரண்டரை மணிநேர படம் ஒன்றை எடுத்துவிட முடியுமா என்றால் விடை இல்லை என்பதாகத்தான் இருக்கும்.
மேற்சொன்ன நான்கு திரைப்படங்களையும் பாருங்கள், காட்சியமைப்பிலும், வசனங்களிலும் அப்படியே குறும்பட வாடை அடிக்கும். ஆனால் அது தான் அந்த படங்களின் வெற்றியே! ஏனென்றால்
இரண்டரை மணிநேர படத்துக்கே வாழ்நாள் முழுதும் திரைக்கதை பண்ணியவனுக்கும், இரண்டரை மணிநேரத்தை கூட பத்து பத்து நிமிடமாக உடைத்து ஒவ்வொரு பிரேமிலும் மெனக்கட்டிருப்பவனுக்கும் நம்மால் தொழிநுட்ப ரீதியாக வித்தியாசம் காண முடிகிறதோ இல்லையோ, படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்த நான்கு படங்களும் சாதாரண சினிமா இயக்குனர்களின் படங்களிலிருந்து வேறுபட்டு நிற்பதை
அனுபவரீதியாக உணர்ந்துகொள்ள முடியும்.
ஒரு கதையினை அல்லது ஒரு பொறியினை , குறும்பட பாணியில் ஒவ்வொரு பத்து நிமிடங்களையும் சுவாரசியம் குன்றாமல் செதுக்கி முடிக்க , ஒரு நேர்த்தியான திரைக்கதை தயார். இப்போது இவர்களுடைய திரைப்படங்களில் கதை தான் ஹீரோ , ஆக பிரேமுக்கு நான்கு சண்டை காட்சிகளும் , மூன்று குத்துப்பாடும் கேட்கும் எந்த மாஸ் ஹீரோவும் தேவையில்லாத படியால், இவர்களுடைய கதையில் எந்தவித அங்கப்பழுதுகழும் வராது. புது முகங்கள் ,அல்லது சிறிய நடிகர்கள் , குறைந்த பட்ஜட், நேர்த்தியான கதை , இது போதாதா இந்த நான்கு படங்களின் வெற்றிக்கும்?
அத்தோடு 2004 தொடக்கம் சுமார் பத்துவருடமாக சினிமவில் இருந்து சாதிக்க துடித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதியை "எலேய் எவன்டா அது விஜய் அவார்ட்ஸ்ல பெஸ்ட் என்டெர்டெயினர் விருதை விஜய் சேதுபதிக்கு குடுக்காமல், டாகுடர்.விஜய்க்கு குடுத்தது"? அப்படியென்று ரசிகர்கள் கோபக்குரல் எழுப்புமளவுக்கு வளர்த்துவிட்டிருக்கும் பெருமையும் இந்த குறும்பட குழுமத்தையே சாரும்.
விளைவு.. இப்போது இந்த நான்கு இயக்குனர்களிடமும்
கதை கேட்கும் நிலையில் மாஸ் ஹீரோக்களும் , கூடவே குறும்பட இயக்குனர்களை நம்பி பணம் போட தயாரிப்பாளர்களும் காத்துகிடக்கிறார்கள். மக்களிடையே கூட குறும்பட இயக்குனர்களின் படங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளதும் ஒரு ஆரோக்கியமான விடையம்.
இங்கு இன்னொரு விடயத்தை கவனித்தாக வேண்டும், அதாவது இந்த நான்கு இயக்குனர்களின் படங்களின் ஒவ்வொரு காட்சியமைப்பும், வசனங்களும் , காட்சிகளும் அவர்கள் இதுவரை சேர்த்துவைத்ததன் கூட்டு கலவையே. அவர்கள் இன்னுமொரு படத்திற்கு இது போன்ற சுவாரசியமான படமாக்கலை, காட்சிகளை அமைக்க வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு சிறிது காலம் கூட தேவைப்படலாம். இல்லை.... வந்த வெற்றியால் கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்துகிறேன் பேர்வழியென்று இவர்கள் திடுதிப்பென்று அடுத்த படத்திற்குள் இறங்கினால், அந்த படைப்புக்கள் முன்னைய படைப்புக்களை போன்றே சுவாரசியமாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இவர்களால் அவசர அவசரமாக இன்னுமொரு படத்தை எடுத்து வெற்றிப்படமாக்க கூட முடியும் ஆனால், இந்தளவு சுவாரசியம் + புதுமை இருக்குமா என்றால் விடை... ப்ச்...... ஆக கிடைத்த வெற்றியின் பொருட்டு அவசர படாமல் , நிதானமாக படமெடுப்பதே இவர்கள் அடைந்த புகழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் , நாங்கள் தியேட்டரில் கொடுக்கும் பணத்துக்கும் நன்மை பயக்கும்.
ஆனாலும் இந்த நால்வரின் வெற்றியால் களத்தில் நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியிருக்கும் ஏனைய குறும்பட இயக்குனர்களின் படங்கள் இன்னும் சுவாரசியத்தை காவி வரலாம். அந்த படங்களின் பேச்சு ஓய்கையில்
இந்த நால்வரும் தமது முந்தைய படங்களின் சுவாரசியத்தோடு அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய காத்திருப்பார்கள் என நம்பலாம்.
எல்லா புகழும் கலைஞர் டி.விக்கே !
செம அலசல் உண்மை தான்
ReplyDelete//எல்லா புகழும் கலைஞர் டி.விக்கே !// என்று போட்டு விட்டு எல்லாம் கழண்ட பெண்ணின் படமா ?கலக்கல்
அந்த புகழும் கலைஞர் டி.விகே என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். ஹி..ஹி..ஹி..
Delete"மயக்கம் என்ன", "பரதேசி" படங்களை மொக்கை லிஸ்டிலும், "காதலில் சொதப்புவது எப்படி?" படத்தை குட் லிஸ்டிலும் சேர்த்ததை தவிர மற்ற அனைத்திலுமே ஒத்துப் போகிறேன்.
ReplyDeleteimo அந்த நாலு படங்களிலுமே "பீட்ஸா" ஒன்றுதான் எனக்கு முழுத்திருப்தியளித்த படம். திரைக்கதை வித்தியாசம் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் முழு மேக்கிங்குமே கிளாஸாக இருக்கும்! "ந.கொ.ப.கா" முதல் பாதி டல்லடித்தாலும், செகன்ட் ஹாஃப்பில் ஈடுகட்டிவிடும், மற்றும் கான்செப்டே புதுசு என்பதால் முதல் தடவை பார்த்தபோது ஆர்வம் அப்படியே நிலைகொண்டிருந்தது..
"சூது கவ்வும்" பெருசா பிடிக்கவேயில்லை.. விஜய் சேதுபதியின் ஓப்பனிங் கிட்னாப்பிங் சீன்கள் சில கலக்கலாக இருக்கும். படத்தின் முன்துண்டோ, பின்துண்டோ அதுக்கு கிட்டவும் வராது. :(
என்னை பொறுத்தவரை "மயக்கம் என்ன" படத்தை பேரரசு எடுத்திருந்தால், ஆகா.. ஓகோ என்று எழுதியிருப்பேன். ஆனால் .. செல்வராகவன்... ப்ச்.. ரொம்ம்பச் சாரி சார்....
Deleteநான் சொன்ன நான்கு படங்களிலும் குறை நிறைகள் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் உருவாக்கத்தின் போது ஏனைய தமிழ் சினிமாக்களில் இருந்து வேறுபட்டு தெரிகின்றன.
# அதை டெக்னிக்கலா எப்புடி சொல்லுறது எண்டு தான் தெரியல..
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல அலசல்,வாழ்த்துக்கள்
ReplyDeleteநாளைய இயக்குனர்களை சரியாக பயன்படுத்திய,அல்லது நாளைய இயக்குனர்களால் சரியாக பயன்படுத்தப்பட்ட ஹீரோன்னா அது விஜய் சேதுபதி தான்...இவர் மாஸ் ஹீரோ ஆகவே வேணாம் .இது போல வித்தியாசமான கதைகளே இவரை இன்னும் உயரம் கொண்டு போகும்..களவானி விமலை புகழும் போதெல்லாம் எரிச்சல் தான் வரும் ..எல்லா படத்திலும் ஒரே ஸ்லாங்க்ள தான் பேசுவார்..ஆனா அது மாதிரி இல்லாம சிறந்த நடிப்பும் விஜய் சேதுபதி கிட்ட நிறையவே இருக்கு...ஒரு பெரிய ரவுண்டு வருவார்னு confirm பண்ணலாம்
வருகைக்கு மிக்க நன்றி, உண்மை தான் மாஸ் என்று போய் மட்டையாகி விடுவதை விட இப்படியான வித்தியாசமான முயற்சிகளில் இறங்குவதே விஜய் சேதுபதிக்கும், நம் போன்ற நல்ல சினிமா ரசிகர்களுக்கும் நன்மை பயக்கும்.
Deleteதங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteVisit : http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_6.html
ஆழமான அழகான அலசல் நண்பரே.தொடர்ந்து கலக்குங்கள்
ReplyDeleteஅன்பின் கிஷோகர் - நீண்டதொரு பதிவு - நன்று - வலைச்சரம் மூலமாக வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeletebossu this show is a poor copy of the show called GATEWAY which was shown in Sony Pix in 2008 ... Vijay Amritraj conducted an audition for his movie and picked the winner to direct his movie... not like these people who demanded 50000 entry for films to be selected for the first round
ReplyDelete