உதைபந்து

Thursday, June 7, 2012

குஷ்புவின் இடுப்பை கிள்ளியது யார்? அவிழும் முடிச்சுக்கள்!
உலகின் மிகப்பெரிய ஜனனாயக நாட்டில் இப்படியொரு கொடூரமா? ஐயகோ நெஞ்சு பொறுக்கவில்லையே, அதுவும் கலாசாரம் , பண்பாடு என்றால் என்னவென்று உலகுக்கு கற்றுத்தந்த தமிழ்நாட்டிலா இது நடந்தது? அதிலும் "அஹம் பிரம்மாஸ்மி" ரேஞ்சில் நான் தமிழ் என கூறிக்கொண்டிருக்கும் தமிழின் காவலர், தமிழின் சேவகன், தமிழின் வாரிசு, முப்பதுவருடங்களாக ஆயிரமாயிரம் மாவீரர்களோடு போராடியும் பிரபாகரனால் அடையமுடியாமல் போன ஈழத்தமிழர்களின் விடிவை நான்கே மணத்தியாலங்களில் பெற்றுத்தந்த   என்றும் குமரன் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவிலா இது நடந்தது? வானகமே! வையகமே ! என்னை வாழவைக்கும் தமிழகமே ! எங்கே இருந்தீர்கள் இது நடக்கும்  போது?

தமிழுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற வந்த "கற்பு" குஷ்புவின் இடுப்பை யாரோ கிள்ளியிருக்கிறார்கள். உலக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் இந்த வரலாறு சம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டிய பொறுப்பு யாருக்குமே இல்லை என்பது தான் என் வெறுப்பு. ( என்ன டி.ஆர் மாதிரி ஆயிட்டேன்) தமிழுக்கு வயதென்னவென்று யாராவது உங்களைக்கேடால் எண்பத்தியொன்பது என்று தயங்காமல் கூறுங்கள். காரணம் அது தான் எம் பெருமான் கலைஞரின் வயது, தமிழே அவர்! அவரே தமிழ்! அந்த தமிழின் விழாவில் தான் இப்படியொரு சோகம்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கருணாநிதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அலையோ அலையென்று அலைந்து ஒருவழியாக கருணாநிதி நகர் பேரூந்து நிலையத்தில் தமிழைக்கண்டு தலையால் வணங்கி அந்த விழாவில் "முதல் வரிசையில்" ( நோட் த பாயிண்ட் யுவர் ஆனார்) அமர்ந்து இருந்தார் கற்புக்கரசி குஷ்பு. விழா முடிவில் மேடையிலிருந்து வெளியேற முயன்றவரின் இடுப்பு எதிர்பாராத சமயத்தில் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின்றது. இதனால் குறித்த பிரதேசத்தில் பரபரப்பு நிலவியது. அட ! குறித்த பிரதேசம்ன்னு நான் சொன்னது விழா மேடையை.

அப்புறம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குசுபு சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அழகிய கிழ மகனின் நற்பெயர் (?????) கெட்டுவிடும் என்பதாலும் , குசுபுவின் கற்பு போய்விடும் என்பதாலும் இப்படியொரு சம்பவமே நடக்கவில்லையென தலையால் அடித்துகொள்கிறது கோபாலபுரம். ஆனாலும் நம்பவம் நடந்திருப்பது உண்மையென்பதால் தலைவர் டாக்டர்.மு.கலைஞர் தலைமையில் பஞ்சாயத்து நடந்து முடிந்திருக்கிறது. நடந்த கட்சி கூட்டத்தில் ( ஏது கட்சி கூட்டமா? # பின்ன என்ன எட்டு எம்.எல்.ஏ க்களை வச்சுகிட்டு என்ன ஆட்சியா நடத்த இயலும்? இந்த மாதிரி இடுப்பு கிள்ளின கேஸ் , உள்பாவாட உருவின கேஸ்னு ஏதாச்சும் பஞ்சாயத்து பண்ணினா தானே பெருசுக்கு பொழுது போகும்) சாதகமான முடிவுகள் எட்ட‌ப்படாததால் , காதும் காதும் வைத்தால் போல் விசயத்தை ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸ் வரை கொண்டுபோயிருக்கிறார்கள்.

இன்று காலை விசேட விமானத்தில் சென்னை வந்த ஸ்கொட்லாண்ட் பொலிசார் கோல்கேற், பெப்சோடண்ட், டாபர் அப்டீன்னு இந்தியாவில இருக்கிற எல்லா டூத்பேஸ்ட்டுகளையும் போட்டு துலக்கு துலக்குன்னு துலக்கி நிறைய துப்பு துலக்கியிருக்கிறார்கள். அவைங்க என்ன ஐபதுரூவா வாங்கிட்டு ஆள விடுற பொலிசா? ஸ்கொட்லாண்ட் பொலிஸ் ஆச்சே , காலையில் வந்து துப்பு துலக்கி துப்பிவிட்டு மாலை விமானத்தில் மங்கோலியா போய்விட்டார்களாம். இப்போது விடயம் என்னவென்றால் இந்த அறிக்கையை பார்த்து அதிர்ந்து போன கோபாலபுரம் & கோவினர் , ஒரு கண்துடைப்புக்காக ஸ்கொட்லாண்ட் பொலிசை கூப்பிட்டால் இப்படி சங்கத்து ரகசியங்க‌ளை சந்தியில் விட்டு போயிருக்கிறர்களேன்னு அதிர்ந்து போனாய் அத்தனை அறிக்கை விபரங்களையும் உதயநிதி ஸ்டாலினின் ஆப்பிள் லாப் டாப்பில் சேமித்து வைத்திருக்கிறார்கள். இங்கு தான் நடந்திருக்கிறது மற்ருமொரு துயரம், ஒபாமாவின் அட்டாச் பாத்றுமுக்குள் புகுந்தே தகவல் திரட்டும் விக்கிலீக்ஸ் , நம்ம கருணாநிதியின் கதவே இல்லா கக்*சுக்குள் நுளையாதா என்ன? விளைவு விக்கிலீக்ஸ் திருடிய அந்த ஆய்வு அறிக்கையின் நகல் ஒன்றை எனக்கு அனுப்பினார் யூலியன் அசேஞ்சின் அஸிஸ்டெண்ட்.  இதோ அந்த அறிக்கையின் அடுத்த நகல் எனது கோடான கோடி வாசகர்களுக்காக....

From,
6/6/2012
ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸ்
வழக்கு எண் 420.
இறுதி அறிக்கை.
To,
கருணாநிதி
வருங்கால இந்திய பிரதமர்,
தமிழின காவலர்,
கோபாலபுரம்.


குஷ்புவின் இடுப்பை கிள்ளிய சூத்திரதாரி தொடர்பான அறிக்கை.
 (தங்களுக்குரியதும் ரகசியமானதும்)

மேற்படி சம்பவம் தொடர்பாக, குறிப்பிட்ட அந்த மர்ம நபர் குறித்தும், இந்த சம்பவத்தின் பின்னணி பற்றியும் எங்களுக்கு கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த அறிக்கையை சமர்ப்பிக்கிறோம்.

முதலில் , தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் நபர் விழா மேடையில் அமர்ந்திருந்த இடம் , முன்வரிசை! அதாவது , தங்களது கட்சியின் வேர்கள், தூண்கள், துடைப்பகட்டைகள் எல்லாரும் அமர்ந்திருந்த இடம். கோடிகளை அடித்த கேடிகளும், அபகரிப்பு அப்பாட்டாக்கர்களுமே அங்கே இருந்திருக்கிறார்களே ஒழிய , வேறு வேலைவெட்டிகளை விட்டு கட்சிக்காக உழைத்த உண்மையான சேவகர்கள் யாரும் அங்கு அமர்ந்திருக்கவில்லை. ஆக‌ வேறு எவரும் உள்நுழைந்திருக்க முடியாத அந்த அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் , குஷ்புவில் இடுப்பை கிள்ளியது நிச்சயம் கட்சியின் அதியுயர் பீடத்தில் அமர்ந்திருக கூடிய ஒருவரே என்பது தெள்ளத்தெளிவாகிறது. இந்த சந்தேகம் உங்களுக்கும் வந்து , கோபால புரத்தில் உள்ள உங்களது கட்சி தலைமை அலுவலகத்தில்  "கள்வனைக்க் கண்டுபிடி"  என்ற ஆய்வு நடத்தி சூத்திரதாரியை கன்டுபிடிக்க நீங்கள் எடுத்திருந்த முயற்சியையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சூத்திரதாரி யார் என்ற எங்களது ஊகத்துக்கோ அல்லது உறுதியான முடிவுக்கோ போவதற்கு முன்னர் இந்த கிள்ளலுக்கு பின்னால் என்னவெல்லாம் சதிவலைகள் அல்லது திட்டமிடல்கள் மறைந்துள்ளன என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

குஷ்பு இலக்கு வைக்கப்பட காரணம் என்ன?

முதலில் தாக்குதலுக்குள்ளான குஷ்புவை பற்றி இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டுவது அவசியமாகின்றது, தற்போதைய கணவர் சுந்தர்.சி தவிர தனது சினிமா வாழ்க்கையில் வேறு எவருடனும் இணைத்து கிசுகிசுக்கப்படாதவர் இந்த குஷ்பு. அது போக வேறு எந்த நடிகருடனும்  சேர்ந்து வாழ்ந்திராதவர் குஷ்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது போல ஒரு முற்போக்கு வதியும் பெண்ணிய விடுதலை நாயகியுமான இவர் வாழ்வில் பல அற்புதமான கொள்கைகளை கடைப்பிடித்தவர் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது. திருமணத்துக்கு முன்னர் செக்ஸ் தப்பில்லை என்ற அதீத உத்தமமான கோட்பாட்டை இந்தியாவுக்கு அறிமுகம் செய்த பெருமைக்கு இரியவர். இந்த கொள்கைகள் இவரது வாழ்வில் இருந்து இவரால் எடுக்கப்பட்டதா என்பது இப்போது நமக்கு அவசியம் இல்லாத ஒரு தலைப்பு, ஆகவே அதை விடுவோம். ஆக சூத்திரதாரி குஷ்புவை இலக்கு வைத்ததற்கு அவரது இம்மாதிரியான முன்மாதிரி வாழ்க்கையும் , அவரது சிறந்த கொள்கைபிடிப்பும் முதல் காரணமாக இருந்திருக்கலாம். கொள்கை பிடிப்பு மட்டுமல்ல தி.மு.க வில் இப்போது இருக்கின்ற உயர் மட்ட அரசியல் புள்ளிகளில் நல்ல "தசைபிடிப்பு" இருப்பதும் இந்த கிள்ளல் சம்பவத்துக்கு தூண்டுகோலாய் இருந்திருக்கும் என்பதும் ஒரு வலிதான வாதமாய் இருக்கிறது.தாக்குதலுக்கு விழா மேடையை சூத்திரதாரி இலக்கு வைக்க காரணம் என்ன?

ஜெயா டிவியில் "ஜாக்பாட்" பண்ணும் போதும் சரி, இப்போது முதுகில் பச்சை குத்திக்கொண்டு ஜாக்கட்டை திறந்துவிட்டு அலையும் போதும் சரி, குஷ்பு எப்போதும் நாகரீகமான உடையிலேயே வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் இலக்கு வைக்கப்பட முடியாத குஷ்பு இந்த விழா மேடையில் இலக்கு வைக்கப்பட காரணம் தி.மு.க வின் உள்துறை சமாச்சாரங்கள் பெரும்பாலும் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பதன் காரணமேயாகும். வெளிவந்த லஞ்ச , ஊழல், அபகரிப்பு தவிர இன்னும் வெளிவராத எத்தனையோ கோடிகள், மற்றும் கேடிகளது கணக்குகள் இதற்கு காரணம். ஆக தனது விரலுக்கு விருந்து கொடுக்க நினைத்த சூத்திரதாரி விழா மேடையை பயன் படுத்தக் காரணம் மேடை அமுக்கத்துக்குள் கமுக்கமாக காரியம் முடித்துவிடலாம் என்ற எண்னத்தில் தான் இந்த மேடையில் தனது நாடகத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவருகிறது.

இடுப்பு மேட்டர் அடுப்பு புகையாய் வெளிவர காரணம் என்ன?

விழா மேடையில் இடுப்பு கிள்ள‌ப்பட்டதும் ஆரம்பத்தில் அப்படி எதுவுமே நடக்காதது போன்று  அடக்கி வாசித்த குஷ்புவும் மற்றும் கோபாலபுரம் கோஷ்டியினரும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த இடுப்பு தாக்குதலை மீடியாக்களுக்கு கசிய விட்டதன் காரணம் என்னவென்று பார்த்தோமானால் ஈழத்தமிழர் பிரச்சினையை காரணம் காட்டி சரிந்து போன அரசியல் செல்வாக்கை , இந்த இடுப்பு பிரச்சினையை கிளப்பிவிட்டு தமது அரசியல் இருப்பை தொடர்ந்து காட்டி ஆதாயம் தேடுவதற்கு தமிழ் குமரன் முனைவதாக ஹெவியாக நம்புகிறோம்.

பவர் ஸ்டார் பிரச்சினைக்கு அடுத்தபடியாக பதிவுலகில் இந்த பிரச்சினையும் பதிவுலகில் பட்டையை கிளப்ப தொடங்கியிருப்பதால் இண்லி, தமிழ் மணம், உடான்ஸ் ஆகிய திரட்டிகளில் விழும் ஓட்டுக்கள் தமக்கும் வந்து சேரும் என தமிழ் காவலன் கணக்குபோடுகிறார் என்பது எங்களுக்கு புரிகிறது.

ஆகவே வரும் வாரங்களில் விழுப்புரம், வண்ணாரப்பேட்டை, தென்மதுரை, காசிமேடு, நொச்சிக்குப்பம் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தி விழா முடிவில் இடுப்பு கிள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சரிந்த செல்வாக்கை பிடிக்க தமிழின விடிவெள்ளி காய் நகர்த்திவருகிறார். இதன் அடுத்த கட்டமாக எதிர்வரும் உள்ளூரட்சி தேர்தல்களில் பணம் கொடுத்து வாக்குகளை வாங்காமல் ஒரு ஓட்டுக்கு இரண்டு கிள்ளல் என்ற அடிப்படையில் வீடுவீடாக சென்று இடுப்பு காட்டும் வைபவமும் அரங்கேற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கள்ள ஓட்டுக்கு கொல்லைப்புறத்தில் வைத்து கள்ளக்கிள்ளல் வசதியும் செய்து தரவும் ஏற்பாடாகியுள்ளது. இதற்காக விசேட ஆடைவடிவமைப்புக்களும் மேற்கொள்ள‌ப்படவுள்ளன. இந்த‌திட்டத்தை அழகிரி தலைமையிலான திட்டகமிட்டி தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் கோப்பு , ஒப்பமிடலுக்காக கருணாநிதியின் மேசையில் வைக்கப்பட்டுள்ள‌து. 

அடுத்த பொதுக்கூட்டத்துக்கு அழகிரி & கோ வடிவமைத்த ஆடை


ஆக இந்த இடுப்புக் கிள்ளலானது ஒரு காமவெறியின் வெளிப்பாடாக இருந்த போதிலும் அதை அப்படியே விட்டுவிடாமல் அரசியலாக்கி ஆதாயம் பார்க்கிறார் அரசியல் சாணி நக்கியார், சாரி... சாணக்கியர். இதைத்தான் ஸ்கொட்லாண்டில் " ஒரு இடுப்பில் இரண்டு கிள்ளல் " என்பார்கள்.

இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதா அல்லது சடுதியான முடிவின் விளைவா?

எங்களது ஆய்வின் அடிப்படையில் இந்த தாக்குதல் கிட்டத்தட்ட முப்பது வருட திட்டமிடலின் வெளிப்பாடாகவே கருதுகின்றோம். சின்னத்தம்பி திரைப்படத்தில் இருந்தே சூத்திரதாரிக்கு குஷ்புமேல் ஒரு கண் இருந்திருக்க வேண்டும், தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்த சூத்திரதாரிக்கு ஜெயா டிவியின் "ஜாக்பாட்" நிகழ்ச்சியை விட்டு வெளியேறி குஷ்பு கோபாலபுரத்தில் குடியேறியது ஜாக்பாட் அடித்ததைப்போல ஆகியிருக்கிறது. எந்தவித பதவியும் வழங்கப்படாத ஒரு அடிப்படை உறுப்பினருக்கு ( ஆரம்பத்தில்) மேடைகளில் ஏறி பேசவும், வி.ஐ.பி வரிசைகளில் அமர இடம் கொடுக்கப்பட்டதும் இந்த "ஒப்பிரேஷன் இடுப்பு" தாக்குதலின் ஒரு அம்சமாகவே கருதுகின்றோம். ஒரு முப்பது வருட கச்சிதமான திட்டமிடல் இப்போது நிறைவேறியிருக்கின்றது.

யார் அந்த கிளு கிளு கில்மா மன்னன்?

வாதங்கள் , ஊகங்கள் மற்றும் சம்பவங்களின் கோர்வையை வைத்துப் பார்க்கும் போது எங்களால் இந்த இடுப்பைக் கிள்ளிய விரலுக்குரியவனை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இந்த முடிவுக்கு வருவதற்கு எங்களால் இரண்டு சம்பவங்களை ஆதாரமாக முன்வைக்க முடியும்.

முதலாவது, குறித்த இந்த சம்பவம் இடம் பெற்று முடிந்தவுடன் எங்களது உதவியை நாடுவதற்கு முன்னர், உங்களது தலமை செயலகத்தில் "கள்வனைக்க் கண்டுபிடி" என்ற பெயரில் ஒரு மிஷன் நடத்தி இடுப்பு கிள்ளியவை கண்டுபிடிக்க முயறி செய்து தோற்றிருக்கிறீர்கள், இங்கு தான் எங்களது சந்தேகம் வலுக்கிறது. இந்த மிஷனில் நீங்கள் பயன்படுத்திய நுட்பம் சரிதான் ஆனால் அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது தான் கேள்வியே!

குஷ்புவை கண்ணை மூட சொல்லிவிட்டு , அந்த விழா மேடையில் இருந்த அனைவரையும் வரிசையில் வரச்சொல்லி  கிள்ள விட்டு "இவனா?" "இந்த கிள்ளலா?" என்று கேட்டிருக்கிறீர்கள். சுந்தர் .சி யைத்தவிர வேறு யாரும் கைவைத்திராத ந்த இடுப்பில் இன்னொரு அந்நிய கை படும்போது குஷ்புவால் இலகுவாக அடையாளம் கண்டு சொல்ல முடியும் என்ற உங்களது எண்ணம் சரியாக இருந்த போதிலும் , இங்கும் ஒரு தவறு நடந்திருக்கிறது அல்லது வேண்டுமென்றே தவற‌ விடப்பட்டிருகிறது. அதாவது விழாவுக்கே வராத சமயல் காரன் , வேலைக்காரன் எல்லாம் வந்து கிள்ளிவிட்டுப்போக "அடுத்து நீ வா, நீ வா" என்று கட்டளையிட்டுக்கொண்டிருந்த கோபாலபுரத்தின் காவலன் மட்டும் மிஸ்ஸிங்...... அவர் விழா மேடையில் இருந்தவரும் கூட..... இது தவறாக நடந்ததா? அல்லது தவறவிடப்பட்டதா?

அடுத்து, குஷ்புவின் உடம்பில் அவர் பச்சை குற்றிக்கொண்டு அதை காட்டவேண்டும் என்பதற்காக காற்றாட ஆடையுடுத்தி அங்கங்கே திறந்து விட்டிருக்கையில் இடுப்பு மட்டும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது "கொழுக் மொழுக்" என்று இருப்பது மட்டும் தான் காரணமா அல்லது இடுப்பைத்தவிர மற்ற ஏனைய பிரதேசங்கள் எட்டாக்கனியாக இருப்பதுவா?

ஏன் என்றால் எழுந்து நிற்கக்கூடிய ஒருவருக்கு தாகுதல் இலக்காக இருக்க கூடியது எது என்பது யூ டியூப்பில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட ஜோதிகாவின் "ராஜா" பட சீனில்ஆகட்டும் சரி, சமந்தாவின் கடைதிறப்பு காணொளிலாகட்டும் சரி தெள்லத்தெளிவாக புரிந்திருக்கும். ஆனால் இங்கு வயது போன , அடுப்பு போன்ற ஒரு இடுப்பு இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கான காரணம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும், அதாவது தனது கைக்கு இடுப்பு மட்டுமே எட்டக்கூடிய ஒருவரே இந்த கில்மா செயலை நிகழ்த்தியிருக்கிறார். 

எழுந்து நிற்க முடியாத ஒருவர் அல்லது நாற்காலியில் உட்கார்ந்திருந்திருக்கக்கூடிய ஒருவரே இந்த சம்பவத்தின் சூத்திரதாரியாக இருக்கிறார். குஷ்புவின் இடது பக்கமாக அமர்ந்திருந்த அந்த மர்மமனிதனின் விரல்களே இந்த விபரீத விளையாட்டை விளையாடியிருக்கிறது. காரணம் அந்த கைகளுக்கு இடுப்பு மட்டுமே எட்டக்கூடிய தொலைவில் இருந்திருக்கிறது. வேறு இடங்கள் இலக்குகளாக இருந்திருந்தாலும் இயலாமை காரணமாக "சீ..சீ..இந்த பழம் புழிக்கும் என்று கணக்குப் போட்ட அந்த நரி , இடுப்பில் சொம்பு உருட்டி விளையாடியிருக்கிறது என்பதே நிதர்சனம்" அந்த நரி யாரென்றால்...... சே... பேனாவுக்கு மை இல்லை பின்பு இன்னொரு அறிக்கையில் சொல்கிறோம்.

தங்கள் உண்மையுள்ள‌
பற்றிக் ஷன் மாயத்தேவன்
துணை ஆய்வாளர்
ஸ்கொட்லாண் யார்ட் காவல்த்துறை.


தம்பீ...  தமிழ்க்கவிதை தும்பீ.. இது மாசு படாத கையப்பா....

டிஸ்கி: சொன்னதெல்லாம் உண்மையும் கிடையாது, பொய்யும் கிடையாது.

டிஸ்கி : ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே, வேறு எந்த நோக்கமும் கிடையாது. 


  


37 comments:

 1. இடுப்பு மேட்டரை இவ்வளவு விளக்கமா எழுதியது சரிதான்.ஆனால் இதில் கருணாநிதியை கோர்த்து விட்டிருப்பது நாகரிகமற்ற எல்லை மீறிய செயல்.அவரது வயதுக்காவது மதிப்புக் கொடுங்கள்.அல்லது மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  (பதிவு சுவாரஸ்யமா இருக்கு சார்...ஆனால் விஷயம் கேவலமா இருக்கு...)

  ReplyDelete
  Replies
  1. ஈழத்தமிழருக்கு கருணாநிதி பண்ணிய கேவலமான வேலைக்கு அவரை கற்பழிப்பு கேசில் கூட மாட்டி விடலாம், கருணாநிதிக்கு மரியாதை குடுப்பதற்கு எதுவுமே இல்லை, அவரது வயதையும் சேர்த்துதான். இது நகைச்சுவையாக எழுதப்பட்டது என்றாலும் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன், தனது சுய லாபத்துக்காக ஒருலட்சம் தமிழரர் பலியாவதை பார்த்துக்கொண்டிருந்த அந்த கிழம், பப்ளிசிட்டிக்காக இந்த வேலையை செய்யாது என்று என்ன நிச்சயம்?

   உங்களது கருத்துக்கு எதிர் வாதம் செய்கிறேன் என்று கோவிக்க வேண்டாம், உங்களது கருத்தை நீங்கள் சொன்னீர்கள், எனது கருத்தை நான் சொன்னேன், எனது மனதில் கருணாநிதிக்கு எந்த அடிப்படையிலும் மரியாதை கிடையாது.தங்களது வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி சகோதரரே!

   Delete
  2. ஆமோதிக்கிறேன் ....வயதுக்கு மரியாதை தரவேண்டும் தான் ஆனால் மரியாதை பெறுவதற்கு தரம் வேண்டும் , தமிழ் தாய்மார்களின் கண்ணீரில் பயணித்த கட்டுமரம் அவர்

   Delete
  3. சரியாக சொன்னீர்கள் டாக்டர்! மணிமாறனின் கருத்தை நாம் பிழை என்று சொல்லமுடியாது, அவரது கருத்தை சொல்ல அவருக்கு உரிமை உண்டு. அதற்காக கருணாநிதிக்கு மரியாதை கொடுக்க நான் உட்பட எந்த ஈழத்தமிழனும் தயாராய் இல்லை.

   ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்கு எனக்கு டாக்டருக்கும் சேம் ஃபீலிங்கு!

   *என்ன இடையில் வந்து இணைந்துள்ளீர்கள் டாக்டர்/

   Delete
  4. பல ஆயிரம் மக்கள் சாகும்போது, பிரபாகரன் உயிரோட இருக்கும்போது கண்டுக்காத இவர், எல்லாம் முடிஞ்சபிறகு இப்போ அறிக்கை விடறாரு...

   ...... தமிழ் ஈழம் வராம நான் சாக மாட்டேன் ...

   வயசானவர் இல்ல... இவர் எல்லாம் ஒரு மனிதனா கூட மதிக்க தகுதி இல்லாதவர்...!!!

   Delete
  5. ஆனானப்பட்ட அப்துல் கலாமையே இப்போ கலககாரன் என்று அறிக்கை விட்டிருக்காரு, அப்பாவி ஈழத்தமிழர்கள் எம்மாத்திரம் இந்த கரி நாய்நிதிக்கு?

   Delete
 2. அடப் பாவி! உனக்குல்லாம் எங்கேர்ந்து மேன் இப்படிப் பட்ட டாபிக்குகள் மாட்டுது? உன் காமெடி டோனை ரொம்பவே ரசித்தேன்!!

  * ஆமா, கொடுக்குற விளக்கமெல்லாம் ஏதோ பிறந்தநாள் விழாவுக்கே போய் முன்வரிசைக்கு பக்கத்துல இருந்து பார்த்துட்டு வந்தா மாதிரி இருக்கே..

  ReplyDelete
  Replies
  1. ///அடப் பாவி! உனக்குல்லாம் எங்கேர்ந்து மேன் இப்படிப் பட்ட டாபிக்குகள் மாட்டுது? உன் காமெடி டோனை ரொம்பவே ரசித்தேன்!!////

   அதுவா மாட்டுது நண்பா நான் என்ன பண்ண?

   ///ஆமா, கொடுக்குற விளக்கமெல்லாம் ஏதோ பிறந்தநாள் விழாவுக்கே போய் முன்வரிசைக்கு பக்கத்துல இருந்து பார்த்துட்டு வந்தா மாதிரி இருக்கே../////

   யோவ்! யோவ் ! யோவ்! இவளவு நாளும் ஆளு எங்கேய்யா போயிருந்த? சரி போனது தான் போனே, அப்பிடியே போக வேண்டியது தானே, இப்ப என்ன குறுக்க பூந்து இன்வஸ்டிகேஷன் பண்ணுற ராஸ்கல்?

   எங்க மச்சி ! என்ன ஆச்சு? ரொம்ப நாளா ஆளையே காணோம்?

   Delete
  2. சிம்புவின் "வாலு" ட்ரெயிலரைப் பார்த்துட்டு ரெண்டு நாளா ஆஸ்பத்திரியில கெடக்கேன்.. திரும்பி வந்துடுறேன்.. டோண்ட் யு வொர்ரி!!

   Delete
  3. ட்ரெய்லர் பாத்ததுக்கே இந்த கதியா? அப்போ படம் பாத்தா என்ன கதியாகும்? நான் இன்னும் அத பாக்கலியே, ஒரு வாட்டி அந்த விஷ பரீட்சையில எறங்கித்தான் பாப்போமா?

   Delete
 3. கருணாநிதியைப் பற்றி எழுதியது கூட எனக்கு கவலை இல்லை. ஆனால் உங்கள் கருத்து மிகவும் தவறானது. பதிவில் கூறியிருந்த நிறைய விடயங்கள் நடிகையின் இடுப்பைக் கிள்ளுவது ஒன்றும் அவ்வளவு பாரதூரமான விடயம் அல்ல என்பது போல இருந்தது. பாலியல் தொழிலாளியை கூட யாரும் பாலியல் வல்லுறவு செய்ய முடியாது.புரிந்து கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன். பதிவு எழுதப்பட்டுள்ள நடை என்பது சுவாரசியமே என்ற போதிலும்)

  ReplyDelete
  Replies
  1. நண்பா தங்களுக்கு அந்த மாதிரி ஒரு புரிதல் ஏற்பட்டிருந்தால் என்னை மன்னிக்கவும், நான் அந்த நோக்கத்தில் எழுதவில்லை தவிர , அப்படி எழுத வேண்டுமென்ற அவசியமும் எனக்கு கிடையாது. தெரிந்தோ தெரியாமலோ எனது பதிவு அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக பகிரங்மாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் குஷ்புவை பற்றி ஆரம்பத்தில் கொடுத்த அந்த அறிமுகத்துக்கு காரணம் சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டே அவர் தெரிவித்த "கற்பு" கருத்தின் கோவம் தானே ஒழிய, ஒரு நடிகை என்ற கோணத்தில் அவமானப்படுத்த‌ அல்ல. தங்களது சுட்டிக்காட்டலுக்கு நன்றி நண்பரே!

   Delete
  2. அத்தோடு எனது இன்னொரு நோக்கம் தனது அரசியல் இருப்புக்காககவும், அரசியல் லாபத்துக்காகவும் தி.மு.க எந்தவிதாமான இழிசெயலையும் செய்ய தயங்காது என்பதை சுட்டிக்காட்டவே சில எக்ஸ்ரா பிட்டுகளை போட்டுவிட்டேன், நீங்கள் சொல்வது சரி தான் ஒரு கோணத்தில் பார்க்கையில் நான் குஷ்புவை அவமானம் செய்வது போல என் பதிவு இருக்கும், ஆனால் என் பிரதான கோபம் எல்லாம் தி.மு.க மீதும் அதன் அல்பத்தனமான அரசியலின் மீதும் தான். துரதிஷ்டவசமாக இங்கு குஷ்புவும் மாட்டிக்கொண்டார். குஷ்பு மீதிருந்த "கற்பு" கோபத்தில் அவரும் கலாய்க்கப்பட்டாரே ஒழிய எனது இலக்கு எல்லாம் திமுக வாகவே இருந்தது. என்ன செய்வது "பன்றியோடு சேர்ந்து கன்றும் மலம் தின்கிறது"

   *என்னை நியாயப்படுத்த நான் இதை சொல்லவில்லை

   Delete
 4. ஈழப்பிரச்சனையில் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அவர் மீது கோபம்தான்.அதற்கு அவரை விமர்சிக்கும் முறை இது தானா? சரி நண்பரே உங்களுக்கு தெரிந்த நாகரீகம் இதுதான் என்றால் உங்களிடம் வாதிட நான் விரும்பவில்லை....

  ReplyDelete
  Replies
  1. செல்லப்பிராணிகளை கொஞ்சலாம் வெறிநாயிடம் போய் கொஞ்சமுடியாது திரு . மணிமாறன் அவர்களே! கருணாநிதி ஒரு வெறி நாய், செருப்பாலோ , கல்லாலோ தான் அடிக்க வேண்டும். கருணாநிதி ஒரு அல்பத்தனமான அரசியல் வாதி! தன் மலத்தை தானே உண்ணும் பன்றி! அவருக்கெல்லாம் மரியாதை என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த 89 வயதுக்கு "அவர்" என்ற வார்த்தை பிரயோகத்துக்கு மேல் வேறு மரியாதை பெற தகுதியானவர் அவரல்ல. அது போக எனக்கும் நாகரீகம் தெரியும் ஆனால் அதை யாரிடம் காட்டவேண்டுமென்பது அதைவிட நன்றாக தெரியும், அது போக யாரிடமும் வாதம் செய்ய வேண்டுமென்ற எண்ணமும் எனக்கு இல்லை அன்பரே! மறுபடி வந்து பின்னூட்டமிட்டதற்கும் , சரியோ பிழையோ எனது குறைகளை சுட்டிக்காட்ட முனைந்ததற்கும் மிக்க நன்றி.

   Delete
 5. dmk வையும் கருணாநிதியையும் ஆரம்ப காலத்திலிருந்தே அறிந்தவர்களுக்கு நீங்கள் எழுதியது எதுவும் கற்பனையாக படவில்லை.

  ReplyDelete
  Replies
  1. கருணாநிதி ஒன்றும் உத்தமரல்ல என்பது ஊர் அறிந்த சங்கதி. மேலான ஆதரவுக்கும் தங்களது பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி அன்பரே!

   Delete
 6. ”பவர் ஸ்டார் பிரச்சினைக்கு அடுத்தபடியாக பதிவுலகில் இந்த பிரச்சினையும் பதிவுலகில் பட்டையை கிளப்ப தொடங்கியிருப்பதால் இண்லி, தமிழ் மணம், உடான்ஸ் ஆகிய திரட்டிகளில் விழும் ஓட்டுக்கள் தமக்கும் வந்து சேரும் என தமிழ் காவலன் கணக்குபோடுகிறார் என்பது எங்களுக்கு புரிகிறது.”

  அட்டகாசம். என்ர ஓட்டும் அவருக்குத்தான்

  ReplyDelete
  Replies
  1. வாங்கய்யா கோபிநாத்து, எங்க ஆள காணோமேன்னு பாத்துகிட்டு இருந்தேன். வந்துட்டீங்களா? நல்லா கரிநாய்நிதிக்கே உங்க ஓட்ட போடுங்க , அப்போதான் மிச்சமிருக்கிற நம்ம சனங்களையும் பலிகுடுக்க சரியா இருக்கும்.

   *என்ன கஸ்பர்ஸ்கைக்கு அப்புறமா எதையுமே காணோம்?

   Delete
 7. காமெடி நன்றாகவே இருந்தாலும் ஒரு முதியவரையும் (அயோக்கியனாகவே இருந்தாலும்) ஒரு பெண்ணையும் இவ்வளவு தரக்குறைவாக வர்ணித்திருக்க வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி, நீங்கள் குறைநினைக்கவில்லையெனில் தயவு செய்து மேலே நான் மனிமாறன் அவர்களுக்கும், முன்பனிக்காலம் அவர்களுக்கும் கொடுத்த பதிலை தயவுசெய்து படித்து பாருங்கள், அந்த பதில்கள் திருப்தி இல்லையெனில் மேலும் பதில்கள் தர நான் தயார், மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி!

   Delete
 8. இந்த இடுப்பு மேட்டர பத்தியெல்லாம் நமக்கு ஒண்ணும் தெரியாதுப்பா நான் கிள்ளவும் இல்ல!! ஆனா உங்க நகைச்சுவை சிரிக்க வைத்தது :)) உண்மையான அறிக்கை கூட இவ்வளவு விபரமா இருக்காது போல!!

  ReplyDelete
  Replies
  1. ஏன் கருணாநிதிக்கு மட்டும் தான் வண்டி வண்டியா அறிக்கை விட தெரியுமா? நாங்களும் விடுவோமுல்ல! வருகைக்கும் உங்களது ரசிப்புக்கும் நன்றி நண்பா! அடிக்கடி வாங்கோ! ஹி..ஹி..ஹி..

   Delete
 9. பாஸ்,
  சும்மா கிழி கிழின்னு கிழிச்சுட்டேங்க போங்க..
  தாத்தாவுக்கும் குஷ்பு ஆண்டிக்கு கெமிஸ்ட்ரி தான் கொஞ்சம் இடிக்குது..
  நல்ல நகைச்சுவை.. ரொம்பவே ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. விடுங்க பாஸு! இந்த கரிநாய்நிதி நெனச்சா கெமிஸ்ரி , ஃபிசிக்ஸ்க், பயொலாயி எல்லாம் வொர்க் அவுட் பண்ணுவான், பலே கேடி அவன். அது போக இது சும்மா ஜாலிக்கு தானே! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பா!

   Delete
 10. செம..செம....நல்ல நகைச்சுவை ..டாக்டர் புண்ணியத்தில் இங்கு வந்தேன்.நன்றாக எழுதி உள்ளீர்..வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஓ! நம்ம மாட்டு டாக்டர் தான் இங்க உங்கள அனுப்பிச்சாரா? நானும் உங்களோட பின்னூட்டங்கள அவரோட பதிவில பாத்திருக்கேன், இனிமே நாமளும் சந்திப்போம்! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிண்ணே!

   Delete
 11. ஈழ தமிழ் மக்களுக்கு ஈன தமிழன் கருணாநிதியும் அவரது தி .மு .க (திருத்த முடியாத கழுதைகள் ) கட்சியும் செய்த துரோகத்துக்கு உங்கள் எழுத்துகள் நிச்சயம் பதில் சொல்லும் நண்பா!

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னாய் நண்பா! இந்த கிழவன் கருணாநிதி இயற்கை எய்தமுன்பு தனது துரோகத்துக்கெல்லாம் அனுபவித்து விட்டு தான் சாக வேண்டும்.

   தொடர்ச்சியா நம்ம தளத்துக்கு வர்ரீங்களே வேற நல்ல பிளாக்கு ஒண்ணும் சிக்கலயோ? ஹி...ஹி..ஹி...

   Delete
 12. Replies
  1. ரொம்ப நன்றி தல வருகைக்கும் , பின்னூட்டத்துக்கும்!

   Delete
 13. 6 vayathu sirumiyai karpalitha 60 vayathu kilavanukku kodukkum mariyathai than ivanukkum....

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. nanbargale please vist; http://thalaiyangamm.blogspot.in/2013/03/blog-post_6.html

  ReplyDelete
 16. உண்மை நண்பா எனது ப்ளாக் இல் டெசோ பற்றி கட்டுரை எழுதி உள்ளேன் வருக படித்து பார்க்கவும்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...