உதைபந்து

Saturday, June 23, 2012

அமலா பால் ! அஞ்சலி தேவி ! எந்த ஃபிகர் ஒஸ்தி?

உன்னய போயி யாரென்னு கேட்டுட்டாரே எங்க தாத்தா!


எனக்கு இந்த அமலா பாலை ரொம்ப பிடிக்கும் என்பதைவிட , ஒரு ஈர்ப்பு என்று சொல்லலாம். அந்த காந்த கண்களும் , அவித்த இறால் போல் இல்லாமல் நம்மில் ஒருத்தி போல் அந்நியமில்லாமல் இருக்கும் அந்ததோலின் நிறமும் , பக்கத்துவீட்டு ஃபாரின் ஃபிகர்போல அந்த பரிட்சையமான முகமும் ரொம்பவே அழகு. அன்று ஒருநாள் நானும் எனது தாத்தாவும் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது "வேட்டை" படத்தில் வரும் "பப்பரப்பா..." பாடல் போய்க்கொண்டிருந்தது. பாடல் முடியும்வரைக்கும் பேசாமல் இருந்த தாத்தா பாடல் முடிந்ததும் "கடைசிவரைக்கும் ஹீரோயினை காட்டாமல் கூட ஆடுற பொண்னை காட்டியே பாட்ட முடிச்சிட்டானேப்பா" என்றார். எனக்கு வந்ததே கோபம், "தாத்தா அவர் தான் ஹீரோயின் " என்று அமலா பாலை சுட்டிக்காட்டி சொன்னேன். அவர் அதை ஏற்கும் படியாய் இல்லை. திருவள்ளுவர் முப்பாலில் அமலா பாலைப்பற்றி பாடாதது ஒன்றைத் தவிர வேறு என்ன குறை காணமுடியும் அமலா பாலிடம். நானும் முடிந்தளவு வாதிட்டு பார்த்தேன் , முடியல!


ஆனால் தாத்தாவின் பார்வை வேறுமாதிரி இருந்தது. அவருக்கு அவரது காலத்து கனவுக்கன்னியான அஞ்சலி தேவிதான் அழகி, பேரழகி , உலகழகி எல்லாமே. அஞ்சலா தேவியிலிருந்து அங்குலம் நகரவில்லை தாத்தா. யோசித்துப் பார்த்தேன், என்னதான் காஜல் அகர்வால், அமலா பால் என தேவைதைகளாக வலம் வந்தாலும் எமது தாத்தாவின் தலைமுறை அவர்களை அழகிகளாகஏற்க தயாராகவே இல்லை.


அதுபோல என்னதான் பேரழகிகளாகவே இருந்தாலும் அந்த கறுப்பு வெள்ளை திரையைத்தாண்டி எனது தாத்தா காலத்து கனவுக்கன்னிகளை என்னாலோ அல்லது எமது தலைமுறையாலோ ரசிக்கமுடிவதில்லை. ரசிக்க விருப்பமும் இல்லை! எமது தலைமுறை சமகாலத்தில் நிகழ்கின்ற மாற்றங்களை ஏற்றுக்கொண்டு பயணிக்க தயாராய் இருக்கின்றது, அது எமக்கு தேவையாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால் எனது தாத்தாவின் தலைமுறையில் பலருக்கு தமது காலமே பொற்காலம்! அந்தக் காலத்திலிருந்து வெளிவர விருப்பமில்லை, இப்போதைய நடிகர்களோ அல்லது சினிமாவோ அவர்களது பார்வையில் வெறும் ஆடம்பரத்தையும், திறமையற்ற நடிக நடிகைகளைக் கொண்டிருக்கிறது என்பதே அவர்களது அனுமானம்.


இந்த நிலையில் நான் அஞ்சலி தேவியைப்பார்த்து "வாவ்வ்வ்வ்வ்வ்வ்.......... வட் எ ஃபிகர்?" என்று வாயைப்பொளந்தாலோ, அல்லது எனது தாத்தா தலைமுறை அமலா பாலைப்பார்த்து "என்ன பொண்ணுடா" என்று மெய்மறந்தாலோ எப்படி இருக்கும்? இந்த ஒரு தலைமுறை தாண்டிய ரசனையுணர்வை தந்தது சமீபத்தில் நான் பார்த்த "தி ஆர்டிஸ்ட்" திரைப்படம். பொதுவாக நான் எந்த படத்தின் விமர்சனமும் எழுதுவது கிடையாது. ( ஏன்னா எழுதத்தெரியாது) . ஏதாவது ஒரு படம் என்னை எந்தவகையிலாவது பாதித்தாலோ அல்லது எனது உணர்வுகளை தூண்டினாலோ ஒழிய ஒரு திரைப்படம் பற்றி நான் எழுதுவது கிடையாது. அந்தவகையில் நான் கடைசியும் முதலுமாக எழுதிய ஆங்கில பட விமர்சனம் "தி ரைற்". நம்ம JZ, குமரன் தம்பி (????) எல்லோரும் உலாவருகிற‌ இடத்தில நான் ஆங்கில படத்துக்கு விமர்சனம் எழுதினால் அப்புறம் அவய்ங்களுக்கு என்ன மரியாதை? ஆனாலும் இந்த படம் பாத்ததுக்கு அப்புறம் நானும் ஏதாவது இந்த படத்தை பத்தி விமர்சனம் சாரி... நாலு வரி வாந்தி எடுக்கலாம்னு நினைக்கிறேன். ஏம்பா JZ! கோவிச்சுகாத என்ன? உன் ரேஞ்சுக்கு என்னால முடியாதுன்னு எனக்கு தெரியும், ஆனாலும் நானும் ஏதாச்சும் ட்ரை பண்ணிட்டு போறனே!எனக்கு தமிழில் கறுப்பு வெள்ளை படம் பார்க்கவே பிடிக்காது. அதிலும் பாதி புரியாத ஆங்கிலப்படத்தில் கறுப்பு வெள்ளையென்றால் பொண்ணு சிரிச்சிடும் என்பதற்காகவே அந்த பக்கமே போவது கிடையாது. எனது ஆங்கில ரசனை இப்படியிருக்க எதுவுமே பேசாத படம் என்றால் அந்தப் பக்கம் போவேன்னு நெனைக்கிறீங்க? சத்தம் வராது என்ற காரணத்துக்காகவே உலகப்புகழ் "சார்ளி சாப்ளின்" வீடியோக்களை பார்ப்பதே கிடையாது. இந்த நிலையில் தான் எனது நண்பன் விக்கியின் உபயத்தில் அவனது வீட்டில் இந்த "தி ஆர்டிஸ்" பார்க்ககிடைத்தது. இப்போது படத்துக்குள் போகலாம்.

எல்லாரும் சீட் பெல்ட்டை போடுங்கப்பா.........


பிரஞ்சு திரைப்படமான இந்த படத்தி இயக்குனர்  ஹசானாவிசியஸ், வார்னர் பிரதர்ஸ் இந்த படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். 2011 வெளியான இந்த திரைப்படம் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில் பத்துபிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு ஐந்து விருதுகளை அதுவும் மிக முக்கியமான ஐந்து விருதுகளை வென்றிருக்கிறது. சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடைவடிவமைப்பாளர், சிறந்த பின்னணி இசை ஆகிய அதிமுக்கிய விருதுகளை அள்ளியிருக்கிறது இந்த ஆர்டிஸ்ட்.  இந்த "தி ஆர்டிஸ்ட் " படம் தான் சிறந்த படம் என்ற ஒஸ்கார் விருதை வெல்லும் முதலாவது பிரஞ்சு படம். அது போல் இந்த படத்தின் நாயகனான ஜேன் துயர்டன் தான் சிரந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வெல்லும் முதலாவது பிரஞ்சு நடிகராக இருக்கிறார். எனக்கொரு கவலை என்னவெனில் சிறந்த நடிகை விருதைக்கூட இந்த படத்தின் நாயகியான பெரனீஸ் பெஜோவுக்கு கொடுத்திருக்கலாம். தேர்ந்த நடிப்பு.


முதலில் படத்தின் பின்னணி பற்றி பார்த்துவிடலாம் . 1927க்கு முந்தைய காலகட்டத்தில் "பேசும் படங்கள்"  (சைலண்ட் மூவீஸ்) என்ற திரைப்படங்கள் தான் நடைமுறையில் இருந்தன. அதாவது கதாபாத்திரங்கள் பேசாது. தங்களது முகபாவனை, உடல் அசைவிகளின் மூலமே தங்களது உணர்வுகளை, தாங்கள் சொல்லவந்த விடயத்தை சொல்லியாகவேண்டும் என்ற சவாலான பணியை செய்துவந்த திரைப்படங்கள். இசை கூட எந்த திரையரங்கில் திரயிடுகிறார்களோ அந்த திரையரங்குகளில் நேரடியாக ( லைவ்வாக) வாசிப்பார்கள். இந்த விடயம் இந்த படத்தை பார்த்து தான் எனக்கு தெரியும்.

படத்தின் கதை இது தான் 1920களில் பிரபலமான ஹீரோவாக வலம் வருகிறார் ஜோர்ஜ் வலன்ரைன் ( ஜேன் துயர்டன்). கிட்டத்தட்ட தனிக்காட்டு ராஜாவாக புகழுடனும் செல்வத்துடனும் வலம் வருகிறார். செல்லுமிடமெல்லாம் விசிறிகள் கூட்டம், செல்வாக்கு. நம்ம சுப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு அண்ணனுக்கு புகழ். பொது இடமொன்றில் பேட்டி கொடுத்துக்கொன்டிருகையில் ஹீரோயின் பெப்பி மில்லரின் ( பெரனீஸ் பெஜோ) அறிமுகம் கிடைக்கிறது. அந்த இடத்தில் கொஞ்சம் கில்மாத்தனமாக ஒரு சம்பவம் நடந்துவிட ( ரொம்ப ஜோசிக்காதிங்க , ஜஸ்ட்டு ஒரு கிஸ்ஸு) மீட்டியாக்களில் இருவரும் கிசுகிசுக்கப்படுகின்றனர்.  சில நாட்களின் பின்னர் துணைநடிகையாக சினிமாவுக்குள் நுழையும் பெப்பி மில்லரோடு நம்ம ஹீரோ ஜோர்ஜுக்கு நட்பு மலர்கிறது. இருவரும் சேர்ந்து படங்களில் நடிக்கிறார்கள். நம்ம பசங்க சொல்லவது போல் ஜஸ்ட் நட்பாக இருந்த நட்பு காதலாக கனிந்து சிவந்து , வெடித்து, பழுத்து , பஞ்சாமிர்தமாகிறது. மில்லருக்கு ஜோர்ஜ் சினிமாவில் நடிக்க டிப்ஸ் எல்லாம் கொடுக்கிறார். அதிலும் பின்னாளில் பெப்பி மில்லர் பிரபலமாக காரணமாகவிருக்கும் "பியூட்டி டொட்" என்கின்ற உதட்டுக்கு மேல் ஒரு மச்சம் என்பதை செயற்கையாக வைத்துவிடுகிறார். ( போடா...! இதெல்லாம் நாங்க எங்க சிம்ரன் அக்கா கிட்டவே பாத்துட்டோம்)பின் 1927இல் சினிமாவிலும் ஜோர்ஜ் வலன்டைன் வாழ்விலும் பெரும் மாற்றம் ஒன்று நடக்கிறது. தொழினுட்ப வளர்ச்சியால் சினிமாவில் ஒலியையும் சேர்த்து படம் தயாரிக்க படத்தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட ஆரம்பிக்கின்றன. கிட்டத்தட்ட சைலண்ட் மூவிகளின் ஆட்டம் ஒரு முடிவுக்கு வருகின்ற காலப்பகுதி. வலன்டைனின் ஆஸ்தான படத்தயாரிப்பு நிறுவனமான கினோகிராஃப் ( கார்த்திக்கு ஸ்டூடியோ கிறீன் போல) இனிமேல் தாங்கள் சைலண்ட் மூவிகளை தயாரிப்பதில்லை என அறிவிக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளாத ஜோர்ஜ் "மக்கள் அதை விருப்ம மாட்டார்கள், அவர்களது விருப்பம் சைலண்ட் மூவிகள் தான்" என்று அதிருப்தியாகி கூறி அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார். அத்தோடு நிற்காமல் தனது சொந்த செலவில் ஒரு சைலண்ட் திரைப்படம் ஒன்றை தயாரிக்கவும் செய்கிறார். இந்த நிலையில் 1929களில் உலகில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு வலன்டைனும் பலியாகிறார். அவரது சொந்த தயாரிப்பு படம் வென்றால் மட்டுமே அவரது பொருளாதாரம் நிலைத்து இருக்கும். இல்லாவிட்டால் சோத்துக்கு சிங்கி என்ற நிலை! வலன்டைன் தனது தயாரிப்பில், தான் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் , பெப்பி மில்லர் நடிக்க கினொகிராஃப் தயாரிக்கும் முதலாவது ஒலி, ஒளி படம் வெளியாகும் நாளன்று வெளியாக இருக்கிறது.

இரண்டு படங்களும் வெளியாகின்றது. வலன்டைனுக்கு நமது மக்களை பற்றிய அறிவு குறைவு, பழைய ரொட்டி மேல் மிஞ்சிய மரக்கறிகளை போட்டு புதிய உணவு பிட்ஸா என்று கொடுத்தாலே பாய்ந்து பாய்ந்து வாய்க்குள் தள்ளுபவர்கள். உண்மையிலேயே புதிதாக ஒரு மாற்ற‌ம் வந்தால் விடுவார்களா என்ன? பெப்பி மில்லரின் படம் பிய்த்துக் கொண்டு போக வலன்டைனின் படம் "சகுனி" போல் காற்று வாங்க ஆரம்பிக்கிறது. ஒத்த படத்தில் தான் இதுவரை சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் புகழ் அத்தனையும் இழக்கிறார் வலன்டைன். உலகம் மாறி விட்டது என்று உணர்ந்தாலும் அந்த மாற்ரத்துக்குள் போகவிடாமல் அவரது பழமை விரும்பும் மனதும், சமுதாயத்தின் மேல் உள்ள கோபமும் தோற்று விட்டோமே என்ற தாழ்வு மனப்பான்மையும் தடுக்கின்றன. இந்நிலையில் வலன்டைனின் மனைவியும் அவரைவிட்டு பிரிந்து போய்விடுகிறார்.

சைலண்ட் மூவி என்ற வட்டத்தில் இருந்து வெளிவரமுடியாமல் தவிக்கிறார் வலன்டைன். 1927களில் படங்களில் ஒலி புகுத்தப்பட்டபோது சார்லி சாப்ளின் கூட " மௌனம் என்பது அழகானது , அதை உங்கள் ஒலிகளால் கெடுத்துவிடாதீர்கள்" என்று தனது பங்குக்கு புலம்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே மனநிலையில் தான் இருக்கிறார் வலன்டைனும்.

இந்த உலக மாற்றங்களாலும், தனது தோல்வியாலும் உடைந்து போகும் வலன்டைன் ரொம்பவே நொந்துபோகிறார். தனது ஆடைகள் உட்பட தனது சொத்துக்கள் அத்தனையும் விற்கிறார்.கிட்டத்தட்ட ஓட்டாண்டியாகிறார். தனது கடைசிபடம் வெளியாகி ஐந்துவருடங்களாகியும் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார். இந்த காலப்பகுதியில் பெப்பி மில்லர் "மச்சக்கன்னியாக" உலகப்பிரபலம் ஆகிறார். அதாவது ஜோர் வலன்டைன் எந்தளவு பிரபலமாக இருந்தாரோ அந்தளவு பிரபலமடைகிறார் மில்லர். நம்ம ஏஞ்சலினா ஜீலி போல்!  அத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் போராடிய வலன்டைன் ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்ற‌ப்படுகிறார். பின்னர் மில்லரால் அவர் சீர்திருத்தப்பட்டாரா? புதிய மாற்றத்தை ஏற்றுக்கொண்டு ஒலி ஒளி கொண்ட நவீன படத்தில் நடித்தாரா என்பதே மீதி கதை.1.       1. முதலில் இந்த 21ம் நூற்றாண்டில் , கிட்டத்தட்ட அழிந்துவிட்ட "பேசும் படம்" ஒன்றை கையில் எடுத்ததற்காகவே இயக்குனர் ஹசானாவிசியசுக்கு ஒரு சிலையே வைக்கலாம். காட்சிக்கு காட்சி இயக்குனர் கைவண்ணம். அந்தக்கால உடை, கட்டடங்கள், நடைஉடை பாவனை, வசன உச்சரிப்புக்கள் என்று மனிதர் ரொம்பவே மினக்கட்டிருக்கிறார். பாத்திரப்படைப்பு , காட்சியமைப்பு என்பன முதல் தரம். விருதுக்கு கேள்வியே இல்லாமல் தகுதியானவர்.2. அடுத்து பாத்திர தெரிவுகள்!  ஜோர்ஜ் வலன்டைன் பாத்திரத்துகென்றே பிறந்தவர் போல துயர்டன், பெப்பி மில்லர் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் பெரனீஸ் பெஜோவும் கண்ணுக்குள் நிற்கிறார்கள். துயர்டனுடன் வரும் அவரது நாய் கூட "அடடே" போட வைக்கிறது. அந்த வாகன ஓட்டுனர், துயர்டனின் ஆஸ்தான இயக்குனராக வருபவர் என அத்தனை பேரும் பாத்திரங்களுடன் கன கச்சிதமாக பொருந்துகிறார்கள்.

3. ஒளிப்பதிவாளர் கியுலோம் ஷிஃப்மன் விருது கிடைக்காவிட்டாலும் தன் கமிரா மூலம் நம் கண்களுக்கு விருந்து வைக்கிறார். கறுப்பு வெள்ளை படத்தை கூட கலர் கலராய் காட்டியிருக்கிறார். அன்னி சோஃபி பியான், மிஷேல் ஆகியோரது படத்தொகுப்பு படத்தின் ஓட்டத்துக்கு பக்கபலம். இயக்குனர் ஹசானவிசியஸ் கூட படத்தொகுப்பில் பங்காற்றியிருக்கிறார் ( டைரக்டர் டச் என்றது இது தானா?) . இசையமைப்பாளர் லூடோவிச் போர்ஸ் நிச்சயம் விருதுக்கு உரியவர். 1927களில் வாழ்ந்த அனுபவத்தை தருகிறது இசை.


4. படத்தை தூக்கி நிறுத்துவது  துயர்டன், பெஜோ ஆகியோரது நடிப்பு. முதலில் துயர்டன்..........

* பேசமுடியாது, கத்தமுடியாது, பஞ்ச் அடிக்க முடியாது ஆனால் சொல்லவந்ததை சொல்லியாகவேண்டும், சிவாஜிகணேசனையும், கமலஹாசனையும் தவிர எமது நடிகர்களில் எவருக்காவது இந்த நிபந்தனைகளை சொன்னால் அடுத்த ஃபிளைட்டில் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் துயர்டன் மிரட்டியிருக்கிறார். ஆச்சரியமாகட்டும் சரி, நக்கலாகட்டும் சரி, குழப்பநிலையாகட்டும் சரி அவரது உணர்வுகளை முகம் பேசுகிறது. இமைகளை தூக்கி , வாயை ஒரு பக்கமாக சுழித்து அவர் காட்டும் முகபாவனைகளுக்கே நாலைந்து ஆஸ்கார் குடுங்கப்பா.......

*அறிமுக காட்சியில் மேடையில் தோன்றி அட்டகாசம் பண்ணும் காட்சிகள் அற்புதம், திரையரங்குக்கு வெளியே பேட்டி கொடுக்கும் போது காட்டும் நகைச்சுவை முகபாவம் பழுத்த நடிப்பு. 

* ஒரு காட்சியில் திரைக்கு பின்னாலிருந்து பெப்பி  மில்லர் ஆடுவார் , அவரது கால்கள் மட்டுமே வெளியே தெரியும் . அந்த கால்களின் நடன அசைவுகளை பின்பற்றி துயர்டன் ஆடும் இடமும், துயர்டனை கண்டவுடன் பெஜோ காட்டும் அதிசயம் கலந்த முகபாவமும் கவிதை. அதோடு இவற்றை கவனித்த இயக்குனர் , துயர்டனோடு இணைத்து கிசுகிசுக்கப்பட்ட பெண் இவள் தான் என் தெளிந்து காட்டு முகபாவம் செம...செம...செம......


* தனது படம் தோல்வியானவுடன் தொடர்ந்து வரும்காட்சிகளில் காட்டும் சோகமும், ஒரு கட்டத்தில் தனது வீடு தீப்பிடிக்கையில் தானும் மில்லரும் சேர்ந்து நடித்த படத்தின் பிரதியை தேடி அதை அடைந்ததும் , கட்டிப்பிடித்துக்கொண்டு சாயும் காட்சியும் அற்புதம்.

* அது போக துயர்டன் வரும் ஒவ்வொரு காட்சியும் நடிப்பு...நடிப்பு...நடிப்பு மட்டுமே......!


5.அடுத்து நாயகி பெஜோ! அந்த குறும்புத்தனமான நடிப்புக்கு எவளவும் கொடுக்கலாம். ( நீ சொல்லுவ, பணம் குடுக்கிறது தயாரிப்பளர், அவர் சொல்லணுமிடா). கதாபாத்திரத்துகு கனகச்சிதமான நடிப்பு.

*அறிமுக காட்சியில் துயர்டனை இடித்துவிட்டு மிரளும் போதும் சரி , தன்னையும் துயர்டனையும் இணைத்து பத்திரிக்கையில் கிசு கிசு வந்த பொழுது அதை படப்பிடிப்பு தளத்தின் காவலாளியிடம் பெருமையாக காட்டுகையில் அதை அவன் கவனிக்காமல் நகரும் போது தனது மூக்கு உடைந்துபோனதை சமாளிக்கும் போது காட்டும் முகபாவமாகட்டும் சரி அம்மணி வரும் காட்சி எங்கும் வியபித்து இருகிறார்.


நான் ரசித்து , படம் சோகமாக போனாலும் சிரித்த காட்சிகள்........

* தனது ஆஸ்தான படப்பிடிப்பு தளம் மூடப்பட்டதும் மில்லரின் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வரும் துயர்டனை வழியில் கண்டு பேசும் பெஜோ, துயர்டன் விடபெற்று செல்லும் போது விசில் அடித்து கூப்பிட்டு ஒரு நடனம் ஆடி காட்டுவார், அழகு...அழகு...அப்படியொரு அழகு!

*தனது வாகன சாரதியிடம் துயர்டன் கேட்பார் "உனக்கு நான் எத்தனை மாதங்கள் சம்பளம் தரவில்லை?" அதற்கு சாரதி "சுமார் ஒரு வருடம்" என்று சொல்லிவிட்டு அசால்டாக தனது வேலைகளை செய்துகொண்டிருப்பார். எதிர்பார்த்திராத அதே நேரம் துயர்டன் மீது அந்த சாரதி கொண்டிருக்கும் விசுவாசத்தை காட்டும் காட்சியமைப்பு , பிரமாதம்.
* பெஜோவின் கால்களை கவனித்து துயர்டன் ஆடும் காட்சி!

* துயர்டனுக்கு வாய்ப்பு தராவிட்டால் நான் உங்களது படத்தில் நடிக்க மாட்டேன் என்ற தொனியில் தனது பட இயக்குனரிடம் கூறுவார் பெஜோ! இயக்குனர் மௌனமாக இருக்க தொடர்ந்து சில பேசும் பெஜோ ஒரு கட்டத்தில் முகத்தையும் சிறு பிள்ளைகள் கோவிப்பது போல் வைத்துக்கொண்டு 'நான் உன்னை மிரட்டுகிறேன், அது உனக்கு புரிகிறதா" என்பாரே ! சிரித்து களைத்துவிட்டேன்.

ஒரு காட்சியில் துயர்டனின் மேலங்கிக்குள் தனது ஒரு கையை விட்டு ( மேலங்கி மட்டும் தனியாக மாட்டியிருக்கும், நோ துயர்டன்) தன்னை துயர்டன் அணைப்பது போல் பெஜோ ஃபீல் பண்ணும் ஒரு காட்சி, செம ரொமான்டிக்.

இப்படியாக படத்தில் நான் ரசித்த காட்சிகள் ஏராளம். படத்தை பார்த்து முடித்ததும் ஒரு கறுப்பு வெள்லை படத்தை , அதுவும் வசனமே இல்லாத படத்தை நேரம் போவதே தெரிமாமல் நான் பார்த்துக்கொண்டு இருந்தேனா என்று எனக்கெ ஆச்சரியம். இங்கு தான் நான் ஆரம்பத்தில் சொன்ன "அஞ்சலி தேவியை பார்த்து வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....." என்கிற சம்பவம் ஒத்துப் போகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்றொரு பழமொழி சொல்வார்கள். பழமைய கழித்து விட முடியாத நாயகனின் மனப்போராட்டத்தை தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கிறது படம்.

என்னைக் கேட்டால் புதியன புகுதல் என்பதை ஏற்றுக்கொள்வேன் ஆனால் பழையன கழிதல் என்ற கருத்துக்கு சம்மதமாய் சாயமாட்டேன். காரணம் இந்த "தி ஆர்டிஸ்ட்" என்ற திரைப்படத்தை பொறுத்தவரை படத்தின் பாணி பழையது, படத்தின் போக்கு பழைய திரைப்படங்களின் போக்கை ஒத்தது ஆனாலும் அவற்றை கைவிடாமல் புதியனவற்றை புகுத்தி அதாவது புதிய தொழிநுட்பம், புதிய தொழிநுட்ப கருவிகள் என்பனவற்றை பயன்படுத்தி இதோ ஐந்து விருதுகளும் வென்று விட்டார்கள். ஆக நான் சொன்னது சரிதானே? புதியன புகுதல் நன்று பழையன கழிதல் நன்றன்று, காரணம் பழமைகள் எமது அடையாளம்.டிஸ்கி 1 : டேய் ! வெள்ளக்காரன் புதுமையை புகுத்தி பழமையை மீழ கொண்டுவந்தான் அப்டீன்றதுக்காக தமிழ்நாட்டுல  யாராச்சும் "1960 காலத்து நடிகைக்கு பிகினி போட்டு துபாயில சாங் எடுக்கிறேன் சார்ன்னு" கெளம்பிடாதிங்கடா.....


டிஸ்கி 2 : எனக்கொரு சந்தேகம் இப்போதும் இதே பேசும் படம் தான் நடைமுறையில் இருந்திருந்தால் இந்த பஞ்ச் அடிப்பவர்கள், ஏய்...ஏய்...ஏய்..ஏய்.... என்று ரயில் விடுபவர்கள் எல்லோரும் எப்படி பொழப்பு பார்த்திருப்பார்கள்?


டிஸ்கி 3 : நண்பா JZ!  நீயி இந்த படத்துக்கு பதிவு போட்டுருப்பன்னு தெரியும், ஆனாலும் எனக்கு புடிச்சிருந்து அது தான் நானும் போட்டேன். தப்பா ஏதாச்சும் இருந்தா கால வாரிவுட்டிராத  நட்பு!
16 comments:

 1. எனக்கு சார்லிசப்ளினை விட வேற ஊமைப்படங்கள் தெரியாது பாஸ். ஆனால் உன்னோட பதிவில இருந்து நல்லாத்தான் இருக்கும் என்று தெரியுது. கண்டிப்பா பார்க்கனும். இங்கிலிசு தெரியாத எனக்கு இப்பிடி படம் எடுத்தாங்க என்றால் ரொம்ப சந்தோசம் மச்சி.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொருத்தனோட ரசனையும் வேறும் படும் மச்சி, அதனால நான் சாதாரணமா எந்த படத்தையும் யாருக்கும் சிபாரிசு பண்றது கிடையாது. ஆனா இந்த படம் நீ கட்டாயமா பாக்கணும் நண்பா, நம்ம போல இங்கிலீசு தெரியாதவங்கள பத்தியும் யோசிச்சு படம் எடுக்க ஆள் இருக்கத்தான் செய்யுது.

   Delete
 2. இவ்வளவு அழகாகன விமர்சனமா? உங்கள் விமர்சனத்தை பார்த்தால் இப்போதே பார்க்கணும் போல இருக்கு பாஸ். வேறு இது போன்ற நல்ல படங்கள் இருந்தால் அதன் விமர்சனங்களையும் எழுதுங்கள் மிகவும் ரசனையுடன் எழுதுறீங்க பாஸ்.

  ReplyDelete
  Replies
  1. ஏது இது அழகான விமர்சனமா? போச்சுடா, ஆனாலும் தாங்ஸ்ணே, உங்க‌ளது பாராட்டுக்கும் பின்னூடத்துக்கும். கட்டாயம் பார்க்க வேண்டிய படம் தான், பார்த்து விடுங்கள். நமக்கு இந்த விமர்சனம் எழுத தெரியாது நண்பா. ஆனால் நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பேன்.எப்போதாவது எனக்கு மனதுக்கு எந்த படமாவது பிடித்திருந்தால் அல்லது என்னை பாதித்ஹ்டிருந்தால் இப்படித்தான் விமர்சனம் என்ற பெயரில் வாந்தி எடுத்து வைப்பேன்.

   Delete
 3. //நண்பா JZ! நீயி இந்த படத்துக்கு பதிவு போட்டுருப்பன்னு தெரியும், ஆனாலும் எனக்கு புடிச்சிருந்து அது தான் நானும் போட்டேன். தப்பா ஏதாச்சும் இருந்தா கால வாரிவுட்டிராத நட்பு!//

  இது என்ன கொடுமை நண்பா! நான் படம் பார்த்தேன், ரசித்தேன்.. ஆனா பதிவு எல்லாம் எழுதலை.. நீங்க கலக்குறீங்க!
  அடிக்கடி நல்ல படம் பார்க்க நேர்ந்தால் எழுதித் தள்ளுங்க பாஸ்! ரொம்ப சுவாரஸ்யமாக்கீது!!

  ReplyDelete
  Replies
  1. ஒரு ஆங்கில படத்து விமர்சனத்துக்கு JZ கைல பாராட்டா! எனக்கு இன்னிக்கு நாள் நல்லாயிருக்கு போல. நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பேன் நண்பா, ஆனால் எல்லாத்துக்கும் பதிவு எழுதணும்னு தோணுறது இல்ல. எழுதவும் தெரியாது.ஹி...ஹி...ஹி... அதுக்கு தான் ஜாம்பவான் நீ இருக்கியே!

   Delete
 4. என்னை படத்தில் மிகவும் கவர்ந்த விஷயம் பேர்ஸின் இசைதான்.. இந்த மாதிரி சைலன்ட் படம்னாலே அதுக்கு அழுத்தம் கொடுக்கறதும், காட்சிக்கு காட்சி பக்கபலமாக அமைவதும் இந்த அக்மார்க் இசையே!
  அதுக்கு BAFTA, Oscar, Golden Globe முணும் கிடைச்சது மிகப் பொருத்தம் :)

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் அமைச்சரே! க.க.க.போ

   Delete
 5. ஸ்பெயினிடம் பிரான்ஸ் படுதோல்வி... #வருத்தம்:(

  100வது மேட்சில் விளையாடி 2 கோல்களைப் போட்டிருக்கும், சத்தமில்லாமல் சாதிக்கும், சண்டை போடாமல் சமாதானம் காக்கும், ரியல் மட்ரினதும், ஸ்பெயினினதும் மத்தியகளத்தின் முதுகெலும்பாய் இருக்கும் அண்ணன் அலோன்சோவுக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. நானும் வீட்டில் கறுப்பு கொடி கட்டியிருக்கேன் # மீ டூ வருத்தம்

   ரியல் மட்ரிட்டில் எனக்கு புடிச்ச பய அலன்சோ தான், நல்லா ஆடுறான் பய புள்ள. எங்க பார்சிலோனா பயலுக இனியெஸ்டா, சாவி, பப்ரிகாஸ், சேர்யியோ எல்லோருமே என்ஞினாட்டம் வேல செய்றாங்க இல்ல, அப்போ ஸ்பெயின் நல்லா ஆடத்தானே செய்யும். பை திவே போர்த்துக்கல்லுக்கும் , ரொனால்டோவுக்கும் ஆப்பு கன்ஃபோர்ம்.

   Delete
 6. ரொம்ப நல்ல படம் பாஸ்.. ஆஸ்கார் வாங்குன அப்ப பார்த்தது...பதிவை படிக்கும் போது திரும்பவும் படம் பார்த்த மாதிரி இருந்திச்சு..
  இப்பவும் ஊமை படங்கள் இருந்திருந்தால் இப்ப இருக்கிற ஹீரோக்கள் யாருமே தலை எடுத்து இருக்க மாட்டார்கள்..

  ReplyDelete
  Replies
  1. அப்பிடியா தலைவா! உங்களது பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி.

   இந்த வசனத்தை ஊமைபடங்களில் எப்படி நடித்து காட்டியிருப்பார்கள்? "ண்ணா....... ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேங்கண்ணா..."

   Delete
 7. மத்த நண்பர்கள் சொன்னா மாதிரி விமர்சனம் அருமை நண்பா! தொடர்ந்து எழுதவும். ஆனால் அஞ்சலி தேவி போட்டோக்கு பதிலா வேற நடிகை போட்டோவ ஏன் போட்டிருக்கீங்க!

  ReplyDelete
  Replies
  1. ஹி...ஹி.... அதுவா ? அஞ்சலி தேவின்னு கூகிள்ள தேடினேன் , இந்த படம் தான் வந்துச்சு. அக்சுவலா.... எனக்கு அஞ்சலி தேவி எப்புடி இருப்பாங்கன்னே தெரியாது. ஹி...ஹி...ஹி....

   Delete
  2. very simple "அஞ்சலி தேவி" அஞ்சலி தேவி மாதிரி இருப்பாங்க

   Delete
  3. மூக்கு பொடப்பா இருந்தா இப்புடியெல்லாம் யோசிக்க தோணும், அறுத்துடுறேன் அறுத்து!

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...