உதைபந்து

Friday, September 28, 2012

இங்கே காண்டம் மொத்தமாக விற்கப்படும்! - அணுகவும்!!
எனக்கு நம்ம நாடு அடைஞ்சிருக்கிற வளர்ச்சிய பாக்கச்சொல்ல ரொம்ப சந்தோசமாக்கீது..... முன்னாடி எல்லாம் குடும்பக்கட்டுப்பாடு பண்ணிக்கோங்கோ... பண்ணிக்கோங்கோன்னு அரசாங்கம் ரேடியாவில கூவிக்கிட்டு இருந்திச்சு. அப்புறம் போஸ்டர் அடிச்சு ஒட்டிச்சு, அதுக்கும் அப்பால டி.வி இண்டெர்நெட்டு அப்டீன்னு வெளம்பரம் டெவலப்பு ஆகி இன்னைக்கு மக்கள் அதிகமா ரசிக்கிற சினிமா வரைக்கும் அந்த வெளம்பரம் பாஞ்சி இருக்குன்னா அதுவே பெரிய சாதனை தானே!  அதுவும் இப்பெல்லாம் பிரம்மாண்ட தமிழ் சினிமாக்களே நூறு கோடிக்குள் வந்துடுற போது , ஆயிரம் கோடிக்கும் மேல செலவழிச்சு , வெள்ளக்கார பயலுகள நடிக்கவிட்டது மட்டுமில்லாம, வெளிநாட்டு டெக்கினாலஜி எல்லாம் புகுத்தி படம் எடுத்து அரசாங்கம் ரிலீஸ் பண்ணுதுன்னா , கரண்டு பிரச்சினைய தூக்கி தூரத்தில போட்டிட்டு அரசாங்கத்துக்கு கோவில் கட்டுற வேலைய பாருங்கப்பா! 


இப்புடி அரசாங்கத்தோட ஐந்தாண்டு திட்டத்தில வந்த ஒரு குடும்பக்கட்டுப்பாடு படம் தான் "காண்டம் ஆஃப் ஹோல் சேல்ஸ்" ( சில இங்கிலீசு தெரியாதவங்க அல்லது பிரிட்டிஷ் இங்கிலீஸ் பேசுறவங்க இத்த "குவாண்டம் ஆஃப் சோல‌ஸ்" அப்டீன்னு வாசிச்சிருப்பாய்ங்க, கண்டுக்காதிங்க!) அட! இந்த காண்டம் படத்தை இங்கிலீசில போட்டிருக்காங்களே , தமிழ் தெரியாத பாமரன் என்ன பண்ணுவான்? ஒரு பிரபல பதிவரான , அதே நேரம் தமிழ் பற்று மெத்திப் போன , சமூக அக்கறை உள்ள ஒரு பதிவரா நான் தானே அத்த மொழி "பேர்ப்பு" செய்யணும்! அது என் சமூக கடமை ஆகிறது! அதனால "காண்டம் ஆஃப் ஹோல் சேல்ஸ் " அப்டீங்க்கிறத காண்டம் மொத்த விற்பனை நிலையம் அல்லது காண்டம் மொத்தமாக இங்கே விற்கப்படும் என மொழி பெயர்க்க தமிழ் இடம் கொடுத்ததால் ரெண்டாவது ஆப்ஷனையே செலக்டு பண்ணிட்டேன்! அப்புறம் அரசாங்கம் சேக்க மறந்த வார்த்தையான "அணுகவும்"ங்கிறத சமூக பருப்புணர்வோடு நானே போட்டுக்கிடேன்.இந்த காண்டம் வெளம்பரத்தில முக்கியமானது என்னான்னா, சுமார் ஒன்றரை மணிநேரம் ஓடுது... கடைசி வரைக்கும் கதநாயகனுக்கும் கதாநாயகிக்கும் கொழந்த பொறக்காம காட்டியிருக்கிறதிலேர்ந்து என்னா தெரியுதுன்னா , காண்டம் போடுக்கிட்டா என்ன கில்ம பண்ணினாலும் கொழந்த பொறக்காதுங்கீறது தான். அப்புறம் இன்னும் செல விஞ்ஞான உண்மைகளும் எனக்கு புரிஞ்சிது, என்னான்னு கேடீங்கன்னா... காண்டம் குடும்ப கட்டுப்பாட்டு முறை , எயிட்ஸ் தடுப்பு முறை அப்டீங்கிற கட்டத்தை தாண்டி  , காண்டம் போட்டுக்கிட்டா நல்லா காரு ஓட்டலாம், பயங்கரமா சண்டை போடலாம், வில்லனுகளை பொரட்டி பொரட்டி எடுக்கலாம்ங்கிற உண்மை எனக்கு தெரிஞ்சிது. அதிலும் குறிப்பா காண்டம் போட்டுக்கிட்டா மூளை நல்லா வேல செஞ்சி நல்ல ஞாபக சக்தி, கற்பனா வளம் அதீத யோசனை செய்யும் திறன் எல்லாம் வரும் அப்ப்டீன்னும் சொல்லபட்டிருக்கு.எக்ஸாமுக்கு படிகிறவய்ங்க, அப்புறம் வாய்க்கால் தகராறு இருக்கிறவய்ங்க, அப்புறம் இன்னமும் ஒழுங்க கார் ஓட்ட தெரியாம லைசென்சு எடுக்காதவய்ங்க எல்லாம் இந்த காம்ளான், சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் விட்டொழிச்சிட்டு ஆளாளுக்கு ஒண்ணு மாட்டிக்கிட்டு அலையிறது நன்மை பயக்கும்ங்கிற புது கண்டுபிடிப்பை இந்த வெளம்பரத்தோட டைரக்டரு சொல்லியிருக்காரு.

சேன் கொனேரே


அப்புறம் படத்தோட நாயகனை பத்தி சொல்லவே வேணும் டேனியேல் கிரேக் அப்டீன்னு ஒருத்தரு. கேட்டா ஜேம்ஸ் பாண்டு நட்கர் அப்டீன்னு சொன்னாய்ங்க! ஆள பாத்தா அப்டி தெரியவே இல்ல, நானும் நெறைய ஜேம்ஸ் பாண்டு படம் பாத்திருக்கேன். "சேன் கொனேரே" மொதோக்கொண்டு இப்ப இந்த கிரேக் வரைக்கும் பாத்துட்டேன். எனக்கு என்ன தோணுதுன்னா , இந்த காண்டம் வெளம்பரத்துக்கு மட்டுமில்ல ஜேம்ஸ் பாண்டு படத்துக்கே இந்தாளு லாயக்கு இல்ல.


ஜேம்ஸ் பாண்டு யாருன்னா ஒரு ரகசியா ஏஜெண்டு, புத்திசாலித்தனமான, ஹேண்ட்சமான, பெண்கள் விசயத்தில் ஒரு நித்தியானந்த தனமான ,என்னேரமும் தனது மிஷன் பற்றி எதையோ சிந்தித்துக்கொண்டு அதே நேரம் அதனை வெளியில் காட்டாமல் ஒரு மர்ம புன்னகையோடு வலம் வரும் திறமையான ஏஜெண்டு. இது இயன் பிளேமிங்கோட சிந்தனைல வந்தது. ஆரம்பத்தில சிறுகதை, அப்புறம் நாவல், இப்போ படம் வரைக்கும் வந்திரிச்சு.


பிளேமிங்கோட கற்பனைக்கும் அல்லது ஜேம்ஸ் பாண்டு தொடர்பில் நம்மளோட மைண்ட்ல உண்டாகி இருக்கிற இமேஜுக்கும் இந்தாளுக்கும் (டேனியல் கிரேக்) ரொம்ப தூரம். இவரோட ஜேம்ஸ் பாண்டு படங்களை விட இவரு நடிச்ச "டிஃபென்ஸ்" படம் சூப்பரா இருக்கும். அந்த மாதிரி ஏதாவது ட்ரை பண்ணி இருந்தா இன்னேரம் இதை விட பெரிய எடத்தில் இருந்திருப்பாரு. 


ஜேம்ஸ் பாண்டு அப்டீன்னா எனக்கு ஒடனே ஞாபகம் வாறது யாருன்னா அது "பேர்ஸ் ப்ரோஸ்னன்" தான். யப்பா! ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்காகவே செய்த மாதிரி ஒரு முகம், துறு துறுன்னு எதையோ தேடும் கண்கள், நித்தியானந்த தனத்துக்கு ஏத்த வாட்டமான முகம், சேசிங் பண்றதுக்கு வாகான கட்டுமஸ்தான் உடல் , யாரோடும் பேசு போதும் தனக்கு ஏதாவது பாயிண்டு சிக்குமாங்கிற ஜேம்ஸ் பாண்ட் தோரணை மேனரிசம், முகத்திலே தெரியும் ஒரு புத்திசாலித்தன களைன்னு ஒரு மார்க்கு கொறையாத ஜேம்ஸ் பாண்டு அவரு தான்.அவரோட "டை எனதெர் டே", "டுமாரோ நெவெர் டை" இந்த ரெண்டு படத்தையும் எத்தின வாட்டி வேணுமனாலும் பாக்கலாம், அவ்ளோ சுவாரசியமான நடிப்பு, மேனரிசம்!

பேர்ஸ் ப்ரோஸ்னன்

ப்ரோஸ்னனுக்கு முன்னாடி இருந்த ஜேம்ஸ் பாண்டுகளில் முதலாவது ஜேம்ஸ் பாண்டான சேன் கொனேரே கூட பரவாயில்லை, ஒரு ஜேம்ஸ் பாண்ட் களை இருந்தது, ஆனா என்ன , இன்வஸ்டிகேட் பண்ற மேனரிசத்தை முகத்திலும் கண்ணிலும் காடுகிறேன் பேர்வழின்னு அப்பப்பொ ஏதோ திருட்டு ஆட்ட இருட்ல சமச்சு தின்னவனாட்டம் ஒரு முழி முழிப்பாரு பாருங்க, ஏது இந்தாளே தன்னய காட்டி குடுக்கப்போறானே பாவம்னு ஒரு பரிதாப உணர்ச்சி வர்றத தவிர்க்க முடியிறது இல்ல. ஆனாலும் இவரோட இன்டியானா ஜோன்ஸ் நல்லாவே இருக்கும்!


 அது போல ரோஜர் மூர் கூட நல்ல தெரிவு தான் என்றாலும் ரொம்ப கிழண்டு பொனதுக்கு அப்புறமும் அவரு பண்ன ரவுசு + ஆக்ஷன் அதகளங்களை அவரு ஒரு ஜேம்ஸ் பாண்ட் ஏஜெண்ட்ன்ன போதும் ஏத்துகொள்ள முடியாம இருந்திச்சு. அவரு ரவுசு பண்ணும் போது சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு சம்பவம் தான் ஞாபகம் வந்திச்சு. ஆடு மேய்க்கப்போன இடத்தில் ஜாலியாக இருக்க அழைத்த போது வரமறுத்த 56 வயது மனைவியை மார்பு மற்றும் மர்ம ஸ்தானத்தில் கத்தியால் குத்திய 63 வயது கணவன் கைது!


இப்போ நம்ம டானியேல் கிரேக்கு! மொதோ படமான "கசினோ ரோயல்" படத்திலேயே மனிதரை பாக்க பாவமா இருந்திச்சு. ஜேம்ஸ் பாண்ட் என்றால் எந்த மிஷனையும் ஒரு ஜாலியாக அசால்ட்டாக , சாதூரியமாக செய்பவன் என்ற இமேஜ் இருக்க , பாவம் நம்மாளு ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க்றாப்ல மூஞ்சிய வச்சிக்கிட்டு இருந்தாரு. இந்த காண்டம் வெளம்பரத்தில கூட பாருங்க ஜேம்ஸ் பாண்டடின் அந்த பாடி லாங்குவேஜ் மேனரிசம் மிஸ்ஸிங். எதையோ இன்வஸ்டிகேட் பண்ணுவது போல் பாருன்னா , அவசரமா ஒன்னுக்கு வரும் போது , நாம எந்திரிச்சு போக முடியாத ஏதும் முக்கியமான மீட்டிங்கல இருந்தோம்னா , நெளிஞ்சுக்கிடே ஒரு ஃபேஸ் எக்ஸ்பிரஷன் குடுப்போம் பாருங்க... அந்த மாதிரி குடுத்திருப்பாரு. அதுவுமில்லாம அநியாயத்துக்கு ரொம்ப சீரியசா இருப்பாரு அண்ணன்! ஒரு வேள "தம்பி இது ஜொனி இங்கிலீஷ் கிடையாது, சீரியசான ஜேம்ஸ் பாண்ட் படம், சீரியசா நடிக்கணும்"ங்கிறத தப்பா புரிஞ்சிக்கிட்டாரோ என்னமோ? கிரேக் ஒரு நல்ல நடிகர் தான் ஆனா ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்துக்கு ரொம்ப ச்சாரி.......... பாப்போம் ஏதோ "ஸ்கை ஃபோல்" அப்டீன்னு ஒரு படம் பண்றாராம்... எது வுழப்போதோ?எனக்கு என்னான்னா , அந்த காண்டம் வெளம்பரத்தை இன்னும் கொஞ்சம் பெட்டரா எடுத்திருக்கலாமோன்னு தோணுது, இந்த வெள்ளக்காரனோட காண்டம் வெளம்பரத்துக்கு நம்மூரு "மூட்ஸ்" காண்டம் வெளம்பரம் எவ்வளவோ தேவல!

டானியேல் கிரேக்
Wednesday, September 26, 2012

அவய்ங்க என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டாக்கருங்களா?


மாற்றம் ஒன்று தான் இந்த உலகில் மாற்றம் இல்லாதது இது வடிவேலு டயலாக். மாற்றங்கல் சிறியதோ பெரியதோ அது "பட்டாம்பூச்சி விளைவு" கோட்பாட்டுக்கு அமைய பெரியளவு மாற்ற‌ங்களுக்கு அடிப்படையாக அமைந்து விடுகின்றன. அது சாதகமானதாகவோ பாதகமானதாகவோ இருக்கலாம். ஆக மொத்தம் மாற்றம் தான் உலகில் மாற்றம் இல்லாதது.


உதைபந்தாட்ட வீரர்கள் பரிவர்த்தனை தொடர்பான கடந்த பதிவின் இறுதியில் பத்து வீரர்களின் பரிவர்த்தனை ஏதோவொரு வகையில் உதைபந்தாட்ட உலகில் முக்கியத்துவம் பெறுகிறது ( என் ஊகமாக இருந்த போதிலும், உண்மை இல்லாமல் இல்லை)  என எழுதியிருந்தேன். உண்மையில் இந்த பரிமாற்றங்கள் பெருத்த சாதகமான மாற்றத்தை தரவேண்டுமென்ற எதிர் பார்ப்பிலேயே நிகழ்த்தப்படுகின்றன். ஆனால் சில நேரங்களில் எவளவு பெரிய அட்டாவதானியின் அவதானங்கள் கூட சொதப்பலாகிவிடுவதும் உண்டு. கடந்த சீசனில் பெப் குவாரியோலாவின் பலத்த எதிர் பார்ப்பான ஃபப்ரிகாஸ் சொதப்பியது போல. ( இந்த சீசன் செஸ்க்குக்கு மங்களகரமாக தான் இருக்கிறது, காரணத்தை பின்பொரு பதிவில் ஆராயலாம்) . இப்போது நான் சொன்ன அந்த பத்து வீரர்களின் பரிமாற்ற‌ம் முக்கியத்துவம் பெறும் விதத்தை பார்த்துவிடலாம்.

ஏடன் ஹஸார்ட்  & ஒஸ்கர் 

ஏடன் ஹஸார்ட்

ஒஸ்கர்
கடந்த பருவகாலத்தில் சம்பியன்ஸ் கிண்ணத்தில் எதிர்பாரா வெற்றியை செல்சியா அடைந்திருந்தாலும் ( நான் எதிர்பாரா வெற்றி என சொல்ல காரணம் லீக்கிலும் பெரிய சவாலான அணிகள் இல்லை, அதே போன்று நொக் அவுட் போட்டிகளிலும் செல்சியாவுக்கு அதிஷ்டமே கைகொடுத்தது எனலாம், இறுதி போட்டி அடங்கலாக) ஆனால் 38 போட்டிகள் நிறந்திருந்த இங்கிலாந்தின் பிராந்திய போட்டியான பாஸ்லேஸ் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் நிலைத்து ஆடுவதற்கு செல்சியாவால் முடியாமல் போனது. பிரீமியல் லீக்கில் 2009/2010 பருவகாலத்தில் சம்பியனாகவும், 2010/2011 பருவகாலத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்ற செல்சியா கடந்த பருவகாலத்தில் முதல் ஐந்து இடங்களையும் கோட்டைவிட்டு ஆறாவது இடத்தை மட்டுமே பெற முடிந்தது. இந்த நிலையில் தான் சம்பியன்ஸ் கிண்ண வெற்றி வந்து சேர்ந்தது . ஆக வந்து சேர்ந்த இந்த கௌரவத்தை காப்பாற்றவும், பிரீமியர் லீக்கில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டிய நிர்பந்தமும் செல்சியின் நிர்வாகத்தின் முன் இருந்த சவால்களாக இருந்தன. அத்தோடு செல்சியாவின் வெற்றிப் பக்கங்களை எழுதிய டடியர் ட்ரக்பாவின் பிரியாவிடையும் பலத்தை சவால் எனலாம்.


இந்த சவால்களை எதிர் கொள்ள செல்சியாவினால் பல முன்னணி வீரர்கள் இலக்குவைக்கப்பட்டார்கள். அதில் கிடைத்த முதல் வெற்றி தான் லிலே அணியின் அட்டாக்கிங் மிட்ஃபீல்டரான பெல்ஜியத்தின் ஏடன் ஹஸார்ட்.  டொரைஸ் , மிகேல் போன்ற திறமையான முன்கள வீரர்கள் உள்ள செல்சியாவிற்கு , முன்களத்துக்கு அதிக அஸிட்டுகளை செய்யவும் , தேவைப்பட்டால் முன்களத்தில் ஆடி கோல் போடவும் அட்டாக்கிங் மிட்ஃபீல்டரான ஹஸார்ட் சிறந்த தெரிவு தான். இவரின் கொள்வனவானது செல்சியாவுக்கு பயனுள்ளதாகவே இருக்கின்றது என்பதற்கு இதுவரை செல்சியா ஆடிய ஐந்து பிரீமியர் லீக் ஆட்டத்தில் செல்சியா சார்பில் போடப்பட்டுள்ள ஒன்பது கோல்களில் ஒரு கோலை போட்டும், அதேநேரம் நான்கு கோல்களுக்கு காரணமாகவும் ( அஸிட்ட்கள்) இருக்கின்றார் ஹஸார்ட். பிரீமியர் லீகின் டொப் அஸிட் பட்டியலில் முதல் இடத்தில் இருந்துவரும் ஹஸார்ட் இதுவரை செல்சியாவை பிரீமியர் லீக்கின் அட்டவணையில் முதல் இடத்தில் வைத்திருப்பதற்கு பெரும் பங்கு வகித்திருக்கிறார். வகித்து வருகிறார்!


ஒஸ்கரை பொறுத்தவரை அட்டாக்கிங் மிட்ஃபீல்டர் என்ற அடிப்படையில் வாங்கப்பட்டவர் தான், பலத்த எதிர் பார்ப்பு இவர் மீது இன்னமும் இருக்கின்றது, ஆனாலும் ஹஸார்ட் அளவுக்கு இன்னமும் செல்சியாவுக்கு பயன்பட தொடங்கவில்லை என்றாலும் , 21 வயதேயான ஒஸ்கர் ஒரு உறங்கும் எரிமலை , எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். இந்த பருவகாலத்தின் இறுதியில் செல்சியா எதேனும் சாதனைகளை பதிவுசெய்யும் பட்சத்தில் , பருவகால இறுதியில் பார்க்கையில் அங்கு ஒஸ்கரின் பங்கு கணிசமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். அந்த வகையில் செல்சியாவின் இந்த பருவகாலத்துக்கான  பிராதான வீரர் கொள்முதலானது பயனுள்ள ஒன்றாகவே படுகின்றது.

வான் பெர்ஸி & அலெக்ஸ் சோங்

பெர்ஸி


சோங்
இந்தஇருவரும் வெவ்வேறு அணிகளில் 
தற்போது ஆடிவந்தாலும் , ஒரே பட்டறையில் இருந்து வெளியேறியவர்கள் தான் அது தான் ஆர்சனல். இவர்களது புதிய வருகை மன்செஸ்டர் யுனைட்டட்டுக்கோ ( பெர்ஸி) பார்சிலோனாவுக்கோ ( சோங்) நன்மையாக இருப்பதற்கு அதிகமாக ஆர்சனலுக்கு குந்தகமாக அமைந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். காரணம் கடந்த சில பருவகாலங்களாக ஆர்சனலின் இரு பிரதான , தவிர்ர்க்க முடியாத வீரர்களாக இருவர் இருந்தார்கள் என்றால் அது சோங் மற்றும் பேர்ஸியாகத்தான் இருக்க முடியும்.சோங்கின் கணக்கில் கடந்த பருவகாலத்தில் 14 அஸிட்டுகள், பெர்ஸியின் கணக்கில் 37 கோல்கள் , இவை ஆர்சனலுக்காக இந்த இருவரும் பதிவு செய்த சாதனைகள். கடந்த பருவகாலத்தில் ஆரம்பத்தில் சொதப்பிய ஆர்சனல் இறுதியில் மீண்டுவந்து மூன்றாமிடத்தை பெற்றதற்கு இந்த இருவரது பங்கும் கணிசமானது.ஆனாலும் இந்த பருவகாலத்தில் இருவரையும் விற்றிருக்கின்றது ஆர்சனல். பிரீமியர் லீக்கில் தனது சக போட்டியாளர்களான மன்செஸ்டர் யுனைட்டட், செல்சியா , போன்றவைகள் இந்த பருவகாலத்துக்காக அதிமுக்கியமான வீரர்களை வாங்கி குவித்துள்ள நிலையில் தனது நட்சத்திர , கள அனுபவமுள்ள வீரர்களை விற்றிருக்கின்றது ஆர்சனல். அதுவும் தனது நட்சத்திர வீரரான பெர்ஸியை சக போட்டியாளரான மன்செஸ்டர் அணியிடமே தாரை வார்த்திருக்கிறது ஆர்சனல்.


சோங் மற்றும் பார்சிலோனா பஞ்சாயத்தை விரிவாக இன்னொரு பதிவில் பார்க்கலாம், இப்போது பெர்ஸி விடயத்தை பார்ப்போம். பொதுவாக ஒரு பிராந்தியத்தில் கள அனுபவமுள்ள , நட்சத்திர வீரரை அதே பிராந்திய அணிக்கு அதுவும் தனது போட்டியாளருக்கு எந்த அணியும் விற்பது கிடையாது. காரணம் இந்த அணியின் ஆட்ட நுணுக்கம் அத்தோடு களத்தின் தன்மை பற்றி அந்த வீரருக்கு நன்கு பரீட்சயம் இருக்கும் என்பதால் அது இவர்களுக்கே ஆப்பாகி விடும் என்பதால். ஆனால் ஆர்சனல் பெர்ஸி விடயத்தில் துணிந்து அந்த வேலையை செய்ததற்கு காரணம் வயது அதிகமாகின்றமையும் ( 29 வயது) அதே நேரம் இந்த வயதிலும் கிடைத்த 24 மில்லியன் யூரோ பணமும் என கொள்ளலாமா? காரணம் அதுவாகத்தான் இருக்க முடியும். முப்பது வயது கடந்த வீரருக்கு , அவர் எவளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் உதைபந்தாட்ட களங்களில் அவளவு எளிதில் நல்ல விலை கிடைக்காது. ( விதிவிலக்கு பார்சிலோனாவில் சாபி ஹர்னாண்டஸ் மற்றும் அண்ட்ரஸ் இனியஸ்டா) ஆக தருணம் பார்த்து பெர்ஸியை தள்ளிவிட்டிருக்கிறது ஆர்சனல். ஆனாலும் இந்த முடிவு ஆர்சனலுக்கு அத்தனை சுவாரசியமாக‌ இருக்கப்போவதில்லை. 


பொடொலஸ்கி, ஒலிவர் கிரோட், சன்டிக் கஸோலா  ( பையனின் ஆட்டம் கொஞ்சம் பரவாயில்லை) ஆகிய வீரர்களை ஆர்சனல் கொள்வனவு செய்திருந்தாலும் பெர்சியின் இழப்பு ஈடுகட்டமுடியானதாகவே இருக்கிறது. இப்போது பிரீமியர் லீக்கில் ஆர்சனலின் நிலை சற்று திருப்தி அளித்தாலும் இன்னமும் நீண்ட தூர பயணம் இருக்கிறது. அதற்கு ஆர்சனல் தாக்கு பிடிக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.  வேணாம் வெளியே போ என்று அனுப்பப்பட்ட பெர்ஸி மன்செஸ்டர் சார்பில் ஆறு போட்டிகளில் ஐந்து கோல்களை அடித்து பிரீமியர் லீக் அதிக கோல் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆர்சனலின் முகாமையாளர் ஆர்சன் வெங்கரின் மனதில் புளியை கரைத்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.


ஆனாலும் எந்த அணியும் ஒரே வீரரின் தயவில் எப்போதும் இருக்க முடியாது தான், மாற்றம் என்பது நிச்சயம் தேவை தான், ஆனால் எனது கருத்து என்னவென்றால் பெர்ஸி, சோங் ஆகியோரை ஆர்சனல் இழக்கும் நேரம் இதுவல்ல என்பது தான்.

ஸிலாற்ர‌ன் இப்ரஹிமோவிக் & தியாகோ சில்வா

இப்ரஹிமோவிக்

தியாகோ சில்வா

இந்த இரண்டு வீரர்களை பொறுத்தவரை ஆர்சனலின் நிலை தான் இத்தாலியின் ஏ.சி.மிலன் அணிக்கும் என்பேன். மிலன் அணியின் அதிமுக்கிய வீரர்களான இந்த இருவரது விற்பனையும் மிலன் அணிக்கு பாரிய இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். காரணம் பார்சிலோனாவில் இருந்து இப்ரஹிமோவிக் மிலன் அணி சார்பில் வாங்கப்பட்ட பிறகு , சீரி ஏ ஆட்டங்களிலும் சரி பிற தொடர்களிலும் சரி மிலன் சார்பில் இப்ரஹிமோவிக் காட்டிய திறமை அபரிமிதமானது. இப்ரஹிமொவிக்கின் உதவியால் மிலன் அடைந்த அடைவு மட்டங்கள் மிகப்பெரியன. இந்த நிலையில் இப்ரஹிமோவிக்குக்கு சரியான பிரதியீடு ஒன்று இல்லாத நிலையில் அவரை மிலன் இழந்திருப்பதானது இந்த பருவகாலத்தை கடும் சவால்களுக்கு மத்தியில் மிலன் கடக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 


அது போல முன்களத்தில் இப்ரஹிமோவிக் என்றால் பின்களத்தில் தியாகோ சில்வா! உலகின் சிறந்த பின்கள வீரர்களை பட்டியலிட்டால் அதற்குள் தனியிடம் பெறும் திறமை வாய்ந்த தியாகோ சில்வாவையும் மிலன் இழந்திருக்கின்றது. தியாகோ சில்வாவை விற்றதனால் மிலன் அடைந்தது ஒரு பெருமை தான் , அதாவது இந்த பருவகாலத்தின் அதிகூடிய விலைக்கு விற்க்கப்பட்ட  வீரர் (42மில்லியன் யூரோ) என்ற அற்ப பெருமை மட்டுமே. சரி ! இந்த இருவரையும் விற்று 65 மில்லியன் யூரோ பணம் பார்த்த மிலன் உருப்படியான ஏதேனும் வீரர் கொள்வனவை செய்த்தா என்றால் அதுவும் கிடையாது.


இந்த இருவரும் இல்லாமல் இதுவரை ஆடிய ஆட்டங்களில் மிலனின் நிலை என்ன தெரியுமா, சீரி ஏ நிலையில் 15வது இடத்தில் இருக்கிறது. முடிவுக்கு இன்னமும் தூரம் அதிகம் இருக்கிறது என்றாலும் , பிறின்ஸ் போட்டெங்கையும், ஃபிலிப் மாக்ஸிசையும் வைத்து தனது சக போட்டியாளர்களான யுவன்டஸ், உடேன்ஸ்,நபோலி ஆகிய அணிகளை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது தான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி. எது என்னமோ இந்த இரண்டு வீரர்களையும் வாங்கிய பாரிஸ் செயிண்ட் ஜேர்மன் அணிக்கு வழமை போலவே இந்த பருவகாலமும் தீபாவளி தான்!


சாபி மார்டீனஸ் & ஜோர்டி அல்பா

மார்டீனஸ்

ஜோர்டி அல்பா
இந்த இரு வீரர்களும் இருவேறு அணிகளில் இருந்து இரு வேறு அணிகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் இந்த இருவரையும் இணைத்து வைத்து பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது. இவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருமே ஸ்பெயினின் பிரதான லீக்கான லா லீகாவில் ஆடும்


அத்லடிக் பில்பாவோ ( மார்டீனஸ்) , வலன்சியா ( ஜோர்டி அல்பா) ஆகிய
கழகங்களுக்காக ஆடியவர்கள். 


இந்த இருவரையும் இணைத்து பார்ப்பதன் தேவை என்னவென்றால் ரியல் மட்ரிட் அணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோ தெரிவித்திருந்த கருத்து தான். இந்த பருவாகாலம் ஆரம்பிக்க முன்னர் " இந்த பருவகாலத்தில் லாலீகாவின் சரித்திரம் மாறும், பார்சிலோனா மற்றும் மட்ரிட் அணிகள் லா லீகாவில் ஆதிக்கம் செலுத்தும் நிலை மாறும். வேறு ஏதாவது ஒரு அணி இந்த இரண்டு அணிகளில் ஏதேனும் ஒன்றை பிந்தள்ளும்" என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வகையில் பார்க்கும் போது அவரது கருத்து இந்த பருவகாலத்தில் சாத்தியப்படாதது என்றாலும் பார்சிலோனா மற்றும் மட்ரிட் அணிகளுக்கு சவால் விட்டு ஆடக்கூடிய அணிகள் பட்டியலில் வலன்சியா , அத்லடிக் பில்பாவோ அணிகள் தனியிடம் பெறுகின்றன. அவ்வாறான அணிகளின் முக்கிய வீரர்களை அந்த அணிகள் இழந்திருப்பதானது ஸ்பெயினின் இரு பிரதான அணிகளை மேலும் பலமுள்ளதாக ஆக்குமே ஒழிய ஒரு போது சவாலுக்கு உட்படுத்தாது.


ஜோர்டி அல்பாவை பார்சிலோனா கொள்வனவு செய்திருப்பதன் காரணம் இப்போது எரிக் அபிடாலினால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பவும் அதே நேரம் எதிர் காலத்தில் வெற்றிடமாகலாம் என எதிர் பார்க்கப்படும் டானி அல்விஸின் இடத்தை நிரப்பவுமே. இப்போது அதிக நேரம் மைதானத்தில் ஆடுவதற்கு ஜோர்டி அல்பாவுக்கு இடம் கிடைக்காத போதும் , பார்சிலோனா சார்பில் கணிசமான பங்கை அவர் ஆற்றும் காலம் வெகு அருகில் இருப்பதால் ஜோர்டி அல்பாவின் கொள்வனவு பார்சிலோனாவை பொறுத்தவரை முக்கியத்துவம் பெறுகிறது.


மார்டீனஸின் பயன் முனீக் பிரவேசமானது அவரது ஆட்டம் இன்னமும் மெருகுபட்டதாக இருப்பதற்கு வழிசெய்யும் என நம்பலாம்.தொடர்ச்சியாக இரண்டு பருவகாலத்தில் விட்ட இடத்தை பிடிப்பதற்கு பயன் முனீக் அணிக்கு சாபி மார்டீனஸ் ஒரு சிறந்த தெரிவு தான்.லூக்கா மொட்ரிக்

மொட்ரிக்


இங்கிலாந்தின் பிரீமியர் லீக் ஆட்டத்தில் இதுவரை முதலிடம் வந்து கோப்பையை கைப்பற்றியிராத போதும் டோட்டின்ஹாம் ஹொட்ஸ்பர் அணி மீது எப்போதும் ஒரு எதிர் பார்ப்பு எல்லா தரப்பிலுமிருந்தும் இருக்கும். அந்த அணியின் போராடும் குணமும், துறு துறுவென்ற துடிப்பான ஆட்டமும் எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடிக்கும். கடந்த மூன்று பருவகாலங்களாக முதல் ஐந்து இடங்களுக்குள் டோட்டின்ஹாம் அணியானது இருந்து வந்திருக்கின்றது. இந்த அடைவுக்கு பின்னால் இருந்த மிக முக்கியமான வீரர் தான் லூக்கா மொட்ரிக். அத்தகைய ஒரு வீரரை தான் டோட்டின்ஹாம் அணி ரியல் மட்ரிட் அணிக்கு தாரைவார்த்திருக்கிறது.


 ரியல் மட்ரிட் அணியை பொறுத்தவரை மொட்ரிக்கின் வருகை ஒன்று அத்தகைய பெரும் பரிசு கிடையாது. காரணம் அங்கே ஏற்கனவே மொட்ரிக்கை விட இருமடங்கு திறமையான மிட்ஃபீல்டரான மெர்சுற் ஓர்ஸில் இருப்பது தான். ஆனால் மொட்ரிக்கின் இழப்பு டோட்டின்ஹாம் அணிக்கு பேரிழப்பு என்று தான் சொல்லவேண்டும். இதுவரை கடன் அடிப்படையில் ஆடிக்கொண்டிருந்த இம்மானுவேல் அடபயோரை டோட்டின்ஹாம் அணி இந்த பருவகாலத்தில் விலை கொடுத்து வாங்கியிருந்தாலும் , அடபயோரின் கோல்களுக்கு பின்னால் இருந்து அஸிட் செய்த மொட்ரிக்கை கோட்டை விட்டிருகிறது.


மொட்ரிக்கின் வருகை மைதானத்தில் மட்ரிட்டின் சார்பாக‌ இதுவரை குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் நிகழ்த்தியிராத போதும் அணியில் ஓர்ஸிலின் இருப்பு தொடர்பில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. நெருப்பே இல்லாமல் பத்திரிக்கையாளர் மாநாட்டில் ஓர்ஸில் அப்படி புகைய வேண்டிய அவசியம் இருக்காது. அது பற்றி பின்னர் ஒரு பதிவில் பார்க்கலாம்.
மய்க்கொன்

மய்க்கொன்


மய்க்கொன்னை பொறுத்தவரை இப்போதைய தேதியில்  உலகு தேடும் நட்சத்திர வீரர் கிடையாது, முப்பது வயது தாண்டியாகிவிட்டது! ஆனாலும் இவரது விற்பனை எனக்கு முக்கியமாக ஏன் படுகிறது என்றால் அவர் இணைந்திருக்கும் அணியும் அதன் ஏனைய வீரர்கள் மற்றும் ஃபோர்மேஷனும் தான். மன்செஸ்டர் அணியை பொறுத்தவரை மிட்ஃபீல்டர்கலுக்கும் சரி முன்கள வீரர்களுக்கும் சரி பின்களத்தில் இருந்து கிடைக்கும் உதவி கணிசமாக இருக்கும். ( தக்க உதாரணம் காலோ டுரே) பலோடெலி, சமிர் நஸ்ரி ஆகியோருக்கு பந்து காவுவதில் இந்த பின்கள வீரர்களின் பங்கு அதிகம்.

அப்படியான ஒரு பணியை செவ்வனே செய்யும் வலது பக்க விங் பெக்கானா மய்க்கொனின் கொள்வனவானது பிரீமியர் லீக் ஆட்டங்களில் மன்செஸ்டர் சிட்டி அணியின் ஆதிக்கத்துக்கு உதவும் என்பதில் ஐயமில்லை. எனினும் மய்க்கொனிடமிருந்து இன்னமும் முழு அளவிலான பங்கும் சிட்டி அணிக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லவேன்டும். ஆனால் அந்த நாள் தூரத்தில் இல்லை!

எனது சமீபத்தையா ஆச்சர்யம் மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக ஆடும் ஜப்பானின் ககாவா! அடுத்தடுத்த பதிவுகளில் இவரையும் பற்றி அலசலாம்!

ககாவா
Tuesday, September 18, 2012

பொய் சொல்லுவது கிட்னிக்கு நல்லது! ஆய்வில் தகவல்!என்னடா இந்த கத புதுசால்ல இருக்கு!! பொய் சொல்றது வாய் சம்மந்த‌ப்பட்ட விசயம். பொய் சொன்னா அது மூளை இல்லாங்காட்டி, அது சம்மத்தப்பட்ட இத‌யம் இப்பிடி எதுலயாவது தானே எஃபக்டு பண்ணணும். இது என்ன கிட்னி வரைக்கும் பாயுதுங்கிறீங்களா? விசயம் இல்லாமலா?

அதாவதுங்க... நீங்க ஒரு டாகுடர் ஃபேன்னு வச்சுக்கோங்க, ம்... வச்சாச்சா..? அது கூட இன்னொன்னையும் வச்சுக்கோங்க.. என்னான்னா, சில சுமார் ஃபிகருங்களும் பல மொக்கை ஃபிகருங்களும் ஒலாத்திக்கிட்டு திரியுற ஒரு தெரிவில குடியிருக்குறீங்கண்ணும் வச்சுக்கோங்க! நீங்க என்ன பண்ணுவீங்க? காலங்காத்தால ஒரு செமத்தியா அட்டு ஃபிகரு , இரவு வடிஞ்ச கடவாயும் தொடைக்காம , பிரிச்சு போட்ட பரட்ட தலையும் கையுமா , காலங்காத்தால கோலம் போட வெளிய வரும் . வீட்ல வெஸ்ரன் டாய்லெட்டே இருந்தாலும் பனமரத்து அடியில பரப்பிக்கிட்டு போற பழக்கத்தில வந்த நீங்க, அந்த நேரம் பாத்து , சொம்பு ஒண்ண தூக்கு அக்குள்ள வச்சிக்கிட்டு சாவகாசமா வெளிய வருவீக!

வந்த உங்களுக்கு எதிர் வீட்ல வடிஞ்ச கடவா தொடைக்காம ஒரு ஃபிகரு கோலம் போடுறதை கண்டதுமே, உங்க உங்களுக்குள்ள இருக்கிற "சச்சின் " வெளிய வந்திருவாரு. ஒடனே என்ன பண்ணுவீய்ங்க? ரெண்டு எட்டு வச்சு போற தூரத்த பில்டப்புக்காக நாலு எட்டு ஸ்லோ மோசனில் ஓடிப்போயி.....


 "எனக்கொரு கெட்ட பழக்கம்... எனக்கு எது பிடிச்சாலும் ஒடனே சொல்லிடுவேன்..... இப்போ கூட கோலம் போடும் போது , வழிஞ்ச கடவாய பொறங்கையால தொடச்சீங்களே அது ரொம்ப கேவலமா இருந்திச்சு.... அப்புறம் தலை கட்டிக்குதுன்னு தலைய போட்டு பொராண்டு பொராண்டுன்னு பொராண்டுனீகளே அது மகா கேவலமா இருந்திச்சு.... ஏதோ சொல்லணும்னு தோணிச்சு சொன்னேன்... மத்தப்படி உங்க பேர நீங்க சொல்லவேணாம்.. என்னோட பேரையும் நான் சொல்லல .. ஓக்க்கே.. பாய்...."


சொல்லிட்டு ஏதோ ஐ.நா சபைல உலக மயமாதல் பத்தி பேசிட்டு நாலஞ்சு அவார்டுகளை வாங்கி அக்குள்ள வச்சிட்டு போறாப்ல ,அந்த அடிபட்ட சொம்ப  ரைட்டு அக்குள்ள இருந்து மாத்தி லெஃப்டு அக்குள்ள வச்சிக்கிட்டு நீ கம்மா கரைக்கு போயிடுவ, ஆனா அந்த பொண்ணு சும்மா இருக்குமா? அழகா இருக்கீங்கன்னு சொன்னாலே அருவா மனையோட அலையுற அண்ணன கூட்டிவார பொண்ணுங்க நம்ம பொண்ணுங்க, உன் மூஞ்சிய நீயே கண்ணாடில பாக்க பயப்பிடுவ நீயி.. அப்புடி இருந்துக்கிட்டு... கம்மாய்க்கு போற நேரத்தில பொண்ணோட கடவாயி பத்தி கமண்டு குடுத்தா உன்னய சும்மா விட்ருவாளா ? உன்னோட பேர நீ சொல்லாட்டி என்னடா? அதான் எதிர் வீட்ல தானே குடியிருக்க மூதேவி..... நீ "போயிட்டு" கழுவிட்டு வாறதுக்குள்ள உன்னோட சாதகத்தையே வச்சிக்கிட்டு அவளோட அண்ணன் காத்துக்கிட்டு இருப்பான். அப்புறம் என்ன நீ கழுவாம விட்ட மிச்சத்தெயெல்லாம் அவனே கய்வி..கய்வி.. ஊத்துவான்! அப்போ பாரு உன்னோட அடிவவுத்த குறிவச்சே அடிப்பானுக... ரெண்டு ரவுண்டு ஆகுறத்துக்குள்ள உன்னோட கிட்னி சட்னியாயிடும்!


இது தான் அந்த நீதி.... சமயத்தில உண்மைய சொல்லாம பொய் சொல்றது கூட நம்ம கிட்னிய பாதுகாக்கும். என்னடா இவ்ளோ கடி கடிக்கிறானேன்னு சொரீரீங்களா? அப்பிடியே சொறிஞ்ச மேனிக்கு கீழ ஊள்ளதையும் படிச்சிருங்க!நம்மோட வீட்ல சரி.. அல்லது நம்மோட சொந்த காரய்ங்க வீட்ல சரி கொழந்த பொறந்திருக்கும். பொறந்த சில நாளிலேயே அது சிரிக்கும். ஆனா ! உண்மையிலேயே குழந்தை சிரிப்பது கிடையாது, பிறந்ததிலிருந்து தன்னோட தசைகளை அது அசைத்து சோதித்துக்கொள்ளும். இது ஒரு அனிச்சையான செயல். அப்படி சோதிக்கும் போது சிரிப்பதற்கு அசையும் தசைகளை அது சோதித்துப்பார்க்கையில் தான் அந்த "சிரிப்பு" நிகழ்கிறது.


அந்த சமயத்தில் அந்த குழந்தையின் அம்மாவோ அல்லது சொந்தங்களோ "பாரேன்.. அவருக்கு இப்பவே ஒரே சிரிப்பு.." அப்டீன்னு ஏதாவது டயலாக் சொல்லி சந்தோஷபட்டுக்கொள்வார்கள். சில நேரம் அந்த குழந்தையின் அப்பா அருகிருக்கும் போது அந்த சம்பவம் சில முறை நடந்தால் , சொந்தங்கள் அந்த குழந்தையை பார்க்க வரும் போதெல்லாம் "இவனுக்கு அப்பாவை இப்பவே அடையாளம் தெரிகிறது, நான் எல்லாம் இருந்தால் சிரிக்க மாட்டான், ஆனா அப்பனை பாத்ததும், ஒடனே சிரிப்புத்தான்" அப்டீன்னு அந்த அம்மா சொல்லிக்கிட்டு இருக்கும். தன்னோட புருஷனை பாத்து தான் தன் புள்ளை சிரிக்கிறான்னு சொல்றது அந்த அம்மாக்கு ஒரு அளவில்லாத சந்தோசம்.


இந்த இடத்தில நீங்க இருக்க போயி.. அந்த அம்மா ஏதும் சொல்லும் போது.. "அதெல்லாம் நெஜமான சிரிப்பு கெடையாது, அது அனிச்சை செயல் " அப்டீன்னு நேத்ராலயா சீஃப் டாக்டர் ரேஞ்சுக்கு விளக்கம் குடுக்கப் போவாதீங்க என்ன! அந்த சிரிப்பு அவய்ங்களுக்கு ஒரு சந்தோசம் , நீ இந்த ஒலக மகா ரகசியத்தை சொல்றதால ஒனக்கு என்ன மருத்துவத்துக்கான நோபல் பரிசு குடுக்கப்போறாய்ங்களா என்ன? முடிஞ்சா "ஆமா! அண்ணி அன்னிக்கு நான் கூட பாத்தேன், அண்ணன் வரும் போது தான் இவன் சிரிக்கிறான்" அப்டீன்னு உன் பங்குக்கும் அள்ளி விட்டிட்டு வா... அது ஒண்ணும் பாவம் கிடையாது.. இல்லையா மூடிக்கிட்டு குடுத்த காப்பிய வாயில ஊத்திட்டு வந்துக்கிட்டே இரு!

கொழந்தைன்னு சொன்னதும் இன்னொன்னு ஞாபகம் வருது.


பொதுவா கொழந்தைகள் இருக்கிற வீடுகள்ள பாத்தீங்கன்னா அந்த கொழந்த பத்தியே தான் எந்த பேச்சும் இருக்கும். "அவன் டாகுடர் பாட்ட கேட்டா போதும் எந்திரிச்சு ஆடுவான்", "அவன் அப்பா கூட தான் சேருவான்"," இப்பவே அவனுக்கு செல்போன்ல பாட்டு போட தெரியும்" அப்புடி இப்புடீன்னு தங்களோட கொழந்தைகள் பத்தி பெருமையா பேசிக்கிறதுல ஒரு அலாதி இன்பம் பெத்தவங்களுக்கு. அதுல முக்கியமான அம்சம் என்னான்னா "ஐயோ! இவனா , இவன் பயங்கர வாலு, எப்போ பாரு துடுக்குத்தனம், சரியான குழப்படி" அப்டீன்னு , தன்னோட கொழந்த சரியான வாலு, துடுக்கு தனம் நெறஞ்சவன்னு சொல்லுற போது பெத்தவங்க  காட்டிக்கொள்ளும் போலியான, சந்தோஷமான அந்த வெறுப்பு உணர்ச்சி அழகானது.  அந்த சிறுவயது குறும்பை ரசிப்பதில் பெத்தவங்க படும் சந்தோஷமே தனி!


தங்களோட குழந்தை குறும்புத்தனம் ஏதும் பண்ணாம இருந்தா கூட, "இவன் பரம சாது, பேசாம இருப்பான்" அப்டீன்னு சொல்றதுக்கு பெத்தவங்க விரும்புறது கெடையாது. சில வீடுகளில் குழந்தைகள் தேமே என்று தன் பாட்டில் இருக்கும், அழாது, ஆர்ப்பாட்டம் பண்ணாது, மூஞ்சி அடிபட கீழே விழுந்தாலும் தன் பாட்டுக்கு எழுந்திரிச்சு அடுத்த வேலைய பாக்க கெளம்பிடும். ஆனாலும் தன் குழந்தை துடுக்குத்தனம் நெறஞ்சது என்று சொல்லவே அந்த பெற்றோர் ஆசைப்படுவர். 


இந்த இடத்தில நீங்க இருக்கப்போயி , உங்க கிட்ட அந்த பெத்தவங்க "இவன் சரியான வாலு" அப்டீன்னு சொன்னா, "எங்க ? எப்போ பாரு எதுக்கும் வாயே தொறக்காத மன் மோஹன் சிங்கு மாதிரி இருக்கான், இவன போயி வாலு அப்டீன்னு சொல்றீங்களே! இவன் பரம சாது"ன்னு  ஏதோ அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டுக்காரன் கணக்கா உண்மைய பேசிர கூடாது. காப்பி பொடி கடன் வாங்க போன இடத்தில கமண்டு பண்ண கூடாது ஓக்கே. முடிஞ்சா "ஆமா ! அக்கா பாருங்க கூடாங்குளம் மேட்டர்ல அராஜகம் பண்ணும் நம்ம ஜெ ரேஞ்சுக்கு அட்டகாசம் பண்ணுறான்னு " ஒரு சர்ட்டிபெகேட் குடுத்துட்டு வரணும், அது வரவேற்கப்படும். இல்ல ... நீ அரிச்சந்திரன் பரம்பரைன்னா கொஞ்சம் மூடிக்கிட்டு, அவங்க சொல்லுறத அசால்டா கேட்டு தலைய ஆட்டிட்டு காப்பி பொடிய வாங்கிட்டு கம்பிய நீட்டிரணும்! புரியுதா.......

இன்னொரு மேட்டர்.. இது கொஞ்சம் வயதான குழந்தைகள் பத்தினது, அதாவது நம்ம வீட்ல இருக்கக்கூடிய நம்ம தாத்தா பாட்டி பத்தினது.


இவங்கள பாத்தோம்னா, சில விசயங்கள தாங்க நெனைக்கிறது தான் சரி, அல்லது அந்த மேட்டர் பத்தி தனக்கு தான் தெரியும்னு நெனச்சிக்கிட்டு இருப்பாங்க. அது அவங்க அனுபவத்தில கண்ட விசயமா இருக்கலாம், இல்ல அவங்களுக்கு கடத்தப்பட்ட செய்தியாக இருக்கலாம். அந்த மாதிரி விசயங்களை நம்ம கிட்ட சொல்லும் போது அவங்களக்கு ஒரு அளவு கடந்த சந்தோசம். "தம்பி ராசா.. இப்பிடித்தான் ஒரு நாளு , ராத்திரில சாப்பாடு கொண்டு போன ஒருத்தன கொள்ளிவாய் பிசாசு அடிச்சு கொன்னு அப்புறமா புளிய மரத்தடில போட்டிரிச்சு" அப்டீன்னு நம்ம கிட்ட சொல்லுவாங்க. 


"இல்ல அப்பத்தா... அது ஒன்னும் கொள்ளிவாய் பிசாசு கிடையாது, அது இரவில உருவாகிற மீதேன் வாயு, அவரு ஏன் செத்தாருன்னா, அவரு கொண்டு போன சாப்பாட்ல வேற மீதேன் வாயு பரவியிருக்கும், அதயும் தின்னிட்டு, புளியமரத்துக்கு கீழே போயி படுத்திருக்காரு, மரங்கள் இரவில காபனீர் ஒட்சைட நெறைய வெளிவிடும், அதுலையும் புளியமரத்து இலை கீழ் கலங்கள் நெறைய இருக்கிறதால அவருக்கு நெறைய காபனீர் ஒட்சைடு பாஞ்சி அவரு மூச்சு முட்டி செத்துப்போய்ட்டாரு" அப்டீன்னு விஞ்ஞானத்த வெளக்கி அப்பத்தாவ என்ன அணு விஞ்ஞானியாவா ஆக்கப்போற? காலம் முடியப்போற காலத்தில மீதேன் வாயுவ பத்தி தெரிஞ்சு அப்பத்தா என்ன பண்ணப்போது? 


இப்பிடித்தான்  என் பாட்டி, அவுங்க வைல்டு லைஃப் எக்ஸ்பர்ட்.  அவங்களோட  இளமைக்காலம் முழுக்க காடு சார்ந்த ஒரு கிராமத்திலேயே தான் கழிஞ்சுது. யானை, முதலை, பாம்பு பத்தெயெல்லாம் கதை கதையா சொல்லுவாங்க. இதில காமடி என்னன்னா எப்பெல்லாம் காடு பத்தின கதை வருதோ, அப்பெல்லாம் இந்த யானை, பாம்பு, முதலை கதைகள் ரிப்பீட் அடிக்கும், இதுவரைக்கும் அந்த கதைகளை நூறுக்கும் மேற்பட்ட தடவை கேட்டிருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு தடவை கேட்கும் போதும் ஏதோ அப்பதான் அந்த கதையை முதன் முதல் கேட்பது போல் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருப்பேன். இடை நடுவில் அவர் எதையாவது மறந்துவிட்டால் ( கதை தான் எனக்கு தலை கீழ் மனப்பாடமே) அவருக்கு அதை ஞாபகப்படுத்துவது மாதிரியான கேள்விகளை கேட்பேன். என்னோட தம்பிகளெல்லாம் என்னை அப்பிடியே கேவலமாக பாப்பார்கள்.ஆனாலும் இன்றைய காலத்தில் வாழும் ஒரு இளைஞனுக்கு தான் புதிதாக சில விடயங்களை கற்பிக்கின்ற ஒரு பெருமிதம் தெரியும் என் பாட்டியின் முகத்தில். அந்த பெருமிதத்தில் சூட்டில், என் முகத்தில் தம்பிகள் துப்பிய எச்சில்கள் காய்ந்து விட்டிருக்கும்.


அன்று ஒரு நாள் டிஸ்கவரியில் "டுவல் ச(ர்)வைவல்" நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது ச(ர்)வைவல் எக்ஸ்பேர்ட்டான கோடி "உலகின் அதிக விஷமுள்ள பாம்புகளில் இந்த பாலைவன வைப்பர் பாம்புக்கு ரெண்டாவது இடம்" என்று கூறியபடி அந்த பாம்பை கடித்து சுவைத்து தின்று கொண்டிருந்தார். உடனே எனது பாட்டி "தம்பி முதலாவது விஷ்முள்ள பாம்பு நாக பாம்புதான், இப்பிடித்தான் முந்தி சன்னாரில ( சன்னார் - எனது பாட்டி வாழ்ந்த கிராமம்) நாக பாம்பு கொத்தியே நிறையெ பேர் செத்திருக்கிறாங்க, அந்த தலைல இருக்கிற ரெத்தின கல்ல எடுக்க போன ஒத்தரும் உயிரோட வரவே இல்ல, பாம்பு ரெத்தின கல்லை துப்பு வச்சிட்டு அந்த வெளிச்சத்தில தான் இரை தேடும்........" நூத்தி ஒராவது தடவையா கதை ரிப்பீட் ஆனது, நானும் அப்பதான் கேட்பது போல ஆர்வமானேன். இந்த ரெத்தின கல்லி மேட்டரு இனிமே , அதை எப்படி சாணீயால் மூடி எடுப்பது, பின் பாலில் போட்டு ஏழு தரம் கழுவி விசத்தை போக்குவது அப்டீன்ற "ரெத்தின கல்லு எடுப்பது எப்படி" என்ற கோர்ஸ் ஆகிப்போகும் என்று ஏற்கனவே தெரிந்திருந்த படியால் , வழமை போலவே என் முகத்தில் காறி துப்பிவிட்டு தண்ணி குடிப்பதாக சொல்லி ஒரு தம்பியும், சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிவிட்ட போனில் கேம் விளையாடுவதாக ஒரு தம்பியும், வெளியே யாருமே கூப்பிடாத போதும் " என்ன.... இந்தா வாறன் " என்று ஒரு தம்பியுமாக கம்பி நீட்டினார்கள். சுமார் ரெண்டு மணீநேரத்தின் பின்னர் மூன்று பேரும் வந்த போது "நீயா" படக்கதை முன்னுறு நாளைக்கடந்து ஓடிக்கொண்டிருந்தது. அதே ஆர்வமான கண்களோடும்.... காதுகளோடும் நான், மீண்டும் என் முகத்தில் துப்பிவிட்டு அவரவர் வேலையை பார்க்க கிளம்பினார்கள்.


உலகின் கொடிய விசமான பாம்பு நாக பாம்புதான் என்று சொல்லும் போதே "இல்ல பாட்டி , உலகின் கொடிய விசமான பாம்பு கறுப்பு பாம்பா தான்" என்று ஏதோ பிராடி பார், பேர் கைல்ஸ் ரேஞ்சுக்கு உண்மையை சொல்லிவிட்டு என்னால் பாட்டியின் வாயை மூடிவிட்டிருக்க முடியும். ஆனால் கறுப்பு மாம்பா தான் உலகின் அதிக விசமுள்ள பாம்பு என்று தெரிந்து கொண்டு பாட்டி என்ன ஐ.நா போயி அவார்டா வாங்க போவுது?. தான் வாழ்ந்த சூழலில் அவருக்கு தெரிந்து நாக பாம்பு தான் அதிக விசமுள்ளது, அதையே நம்புகிறார், இருந்திட்டு போகட்டுமே! 


ஐந்தில் வளையவில்லை ஐம்பதில் வளைக்க முயன்றால் முறிந்திடாதா மனசு! நாம் உண்மையை சொல்லப்போக , இவளவு காலமும் தாங்கள் நம்பிக்கொண்டிருந்தது பொய் என்று அவர்கள் உணர்ந்தால அந்த வயோதிக மனது எவளவு கஷ்டப்படும்? அது போக நம் போன்ற இளைய தலைமுறை இப்படியான விசயங்களை அவர்களிடம் இருந்து கேட்டுத்தெரிந்து கொள்ளும் போது, ஏதோ கற்புக்கும் உணர்வு வந்து பெருமைப்படுத்திகிறது அவர்களை. அந்த உணர்வில் ஏன் மண்ணள்ளி போட வேண்டும்? அது போக இந்த அவசர யுகத்தில் கவனிக்கப்படாமல் போகும் அந்த அப்பாவி ஜீவன்களோடு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பாக கூட இந்த மாதிரியான தருணங்கள் அமைகின்றன. என்னை பொறுத்த வரை என் பாட்டி இருக்கும் வரை உலகின் அதிக விசமுள்ள பாம்பு கறுப்பு மாம்பா கிடையாது , நாக பாம்புதான்! 

கொழந்தைகள் , வயதான் கொழந்தைகள் பத்தி பேசியாச்சு, இப்ப நம்ம ஏரியாவுக்கு வருவோம்! இளைஞர்கள்!!

யாராவது நம்மாளுக்கு கல்யாணம் ஆயிரிச்சுன்னு வையுங்க, சொந்தக்காரய்ங்க வீட்லல்லாம் சாப்படு, ராஜ மரியாதை அப்புடி இப்புடீன்னு கொஞ்ச நாளு ஜாலியா போவும் லைஃபு, அப்புறம் சில நாளில குடும்ப பொறுப்பு, குடிக்கு போடப்பட்ட தடை, நண்பர்கள வட்டத்தில் சேரும் போது பாயும் குண்டர் சட்டம், முன்னெல்லாம் தெருவில போற ஃபிகருங்கள சுதந்திரமா சைட் அடிச்ச வட்டிக்கு இப்பெல்லாம் , யாராச்சும் சொந்தக்காரய்ங்க பாத்திட்டு வீட்ல போட்டு குடுத்திருவாய்ங்களோன்னு பயம் , அப்டீன்னு பையன் பயத்தில வெந்து சாவான். அவன் முகத்தில மரண பீதி தாண்டவமாடும்.

ரொம்ப நாளுக்கு அப்புறம் அவன பாக்கும் போது, "மச்சி என்னடா இப்பிடி ஆயிட்டே, ரெண்டு நாள்ள செத்திருவ போல இருக்கே" அப்டீன்னு ஊண்மைய சொல்லீராதீக! "மச்சி.... ஆகா.. ஆளே மாறிட்ட , முகத்தில குடும்பஸ்தன் களை வந்திடிச்சு,  மாமியார் வீட்ல கவனிப்பு அதிகமோ , தொப்பையெல்லாம் சின்னதா விழுந்திருக்கு ( அக்சுவலா அடி அடீன்னு பீர் அடிச்சு நம்ம பவர்ஸ்டார் ரேஞ்சுக்கே அவன் தொப்பை இருந்தாலும் , பொய் சொல்லுதல் தர்மமாம்!)
புது மாப்ள கலக்குற போ" அப்டீன்னு ஒரு பச்சை பொய்யை சொல்லிப்பாருங்கள், "போடா சும்மா நீ வேற அப்டீன்னு " அவன் பொய்யாய் சலிச்க்கு கொண்டாலும் உள்ளுக்குள் சந்தோஷப்படுவான்!


இப்படியாக சில சந்தர்ப்பங்களில் உண்மையை சொல்லுவதை விட பொய்யை சொல்லுதல் நமக்கும் , பிறருக்கும் நன்மையே பயக்கும். திருநெல்வேலி பிரபு மட்டும் நெஜ வாழ்வில இருந்திருந்தா ஒரு பயலு கிட்ட நல்ல பேரு வாங்கீருக்க முடியாது. ஆக முடிஞ்சவரை , இயன்ற போதெல்லாம் பொய் சொல்லி வாழப்பழகுவோம். 


ஆனாலும் நம்மூரு பொண்ணுங்களுக்கிட்டே என்ன சொல்றதுன்னு தான் இத்த வரைக்கும் புரியலே! உண்மை சொல்லுறதும் ஆகாது, பொய் சொல்லுறதும்ஆகாது. ஒரு வேளை இப்படியான இக்கட்டில் மாட்டிக்கிட்டா நமக்கு நாமே " இறுதி செபம் " சொல்லிக்கிறது இன்னமும் நல்லது. ஆனா உண்மைய மட்டும் சொன்னீங்க... அவளுங்க அண்ணன் கையாலே சிரிச்ச மேனிக்கே சாக வேண்டி வரும் பாத்துக்கங்க!
டிஸ்கி: ஃபுட்பால் பதிவு தான் இந்த மாசம் பூரா எழுதணூம் என்று சபதம் பண்ணிக்கிட்டு இருந்தேன், ஆனாலும் இந்தியா வந்திட்டதால அது முடியல. இலங்க திரும்பியதும் ஃபுட்பால் பத்தி பாத்துக்கலாம். ஆனாலும் நான் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதாக நண்பர் சிறின் கவலைப் பட்டார். அது தான் ட்ராஃட்டில் கிடந்த ஒண்ணை தட்டிவிட்டேன்.


டிஸ்கி: எனது வலைப்பூ நண்பர்களுக்கு நேரமின்மை காரணமாக நான் இந்தியாவில் நிற்கும் இந்த வாரம் முழுவதும் , தங்களது தளத்துக்கு வரமுடியாமல் இருக்கும். அந்த அசௌகரியத்துக்காக வருந்துகிறேன்.Tuesday, September 4, 2012

கோடி கொடுத்தேனும் கோமகனை கொண்டுவா!
வாசக கோடிகளுக்கு (????) பிரபல பதிவரின் இனிய வணக்கங்கள்! கொஞ்ச காலமாக எனக்கு கிடைத்துவந்த நாலைந்து ஹிட்ஸ்களும் கிடைக்காமல் போவதற்கான பதிவுகளை நான் எழுதும் காலம் வந்தாச்சு. அதாங்க உலகின் உன்னத விளையாட்டாக கருதப்படும் உதைபந்தாட்டத்தின் பிராந்திய உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ஹிட்ஸ் கிடைக்காது என தெரிந்தும் , உதைபந்தாட்ட பதிவுகளை நான் எழுதுவதன் காரணம் உதைபந்தின் மேல் நான் கொண்ட தீரா காதல். அப்பிடித்தான் வெளியில் சொல்லுவேன், அதுவாக இருந்தாலும் , தமிழில் நல்ல உதைபந்தாட்ட பதிவுகளை நான் இதுவரையில் கண்டது கிடையாது. அதற்காக எனது பதிவுகள் தமிழில் வெளியாகும் மிகச்சிறந்த உதைபந்தாட்ட பதிவுகள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனாலும் எதுவுமே இல்லாத இடத்தில் எனது பதிவாவது இருந்துவிட்டு போகட்டுமே என்பது தான். நான் உதைபந்தாட்ட பதிவுகளை எழுத தீர்மானித்தது பற்றி அறிய இங்கே சொடுக்கவும்! 


வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்! நான் மொக்கையாக எழுதிய எத்தனையோ பதிவுகளை உலக மகா ஹிட்டுக்கள் ஆக்கி இருக்கிறீர்கள். இங்கே எனது தளத்தில் வலது மூலைய்ல் "பிரபலமானவை" பட்டியலில் இருக்கின்ற பத்து பதிவுகளையும் எழுதுவதற்கு நான் இரண்டு அல்லது மூன்று மணிநேரங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது கிடையாது. ஆனாலும் உங்களது அமோக ஆதரவினால் அவை பிரபலமாகியிருக்கின்றன. ஆனால் ஒரு உதை பந்து பதிவை எழுதுவதற்கு நான் இரண்டு அல்லது மூன்று நாட்களை எடுத்துக்கொள்கிறேன். சமயத்தில் எழுதப்படும் பதிவினை பொறுத்து அது ஒரு வாரமாகவும் ஆகிவிடும். குறிப்புக்களை எடுப்பதற்கே எனக்கு நாக்கு தள்ளிவிடும். அத்தனை சிரமப்பட்டும் நான் உதைபந்து பதிவுகளை எழுத காரணம் நான் அலைந்தது போல் யாரும் அலைய வேண்டாமே என்பதற்காகத்தான். எனது மொக்கை பதிவுகளை நீங்கள் சிபாரிசு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எனது உதைபந்து பதிவுகளை ஆர்வமுள உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அது எனகு உற்சாகமாகவும், எனது குறை நிறைகளை அலச கூடிய வாய்ப்பாகவும் இருக்கும். 


சரி விடயத்துக்கு வருவோம், நான் கடந்த 2011-2012 பருவகாலத்துடனேயே தான் உதைபந்தாட்ட பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். நான் எதிர்வுகூறியவற்றில் சொதப்பலோ சொதப்பல் ஏராளம் என்று எனக்கே தெரிந்த போதிலும், எனது அலசல்கள் மற்றும் விமர்சனங்கள் நன்றாக இருப்பதாக எனது உற்ற நண்பர்களான ஜே.ஸட், டாக்டர் டூலிட்டில் , குமரன் ஆகியோரும் , இலங்கையின் பிரபல பதிவர் மைந்தன் அண்ணாவும் தந்த உற்சாகத்தையும் , ஊக்கத்தையும் நன்றியோடு நினைத்து பார்க்கிறேன். அந்த ஊக்கம் இந்த பருவகாலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கையில் இந்த பருவ காலத்தையும் இனிதே ஆரம்பிக்கிறேன். ஆனானப்பட்ட ஜோய் மொறிசன் கணிக்கிறதே அப்பப்போ சொதப்பிடுது, இதில நான் எம்மாத்திரம்? # எஸ்கேபிஸம்


இந்த பருவகாலத்துக்கான "வீரர்கள் விற்பனை சந்தை" அனைத்தும் கிட்டத்தட்ட மூடிவிட்ட நிலையில், ( ரஸ்ய சந்தை இன்னமும் விழிப்பு நிலையில் இருக்கிறது) ஒவ்வொரு நாட்டுகளினதும் பிராந்திய அணிகள் தத்தம் தேவைக்கு ஏற்பவும், தேவை இருந்தும் கையில் டப்பு இல்லாத அணிகள் தமது பொருளாதார நிலைக்கு ஏற்பவும் வீரர்களை வாங்கி குவித்திருக்கிறார்கள். இந்த விற்பனை சந்தை கிட்டத்தட்ட நமது ஐ.பி.எல் போல தான். ஒவ்வொரு வருடத்துக்கும் அணிகள் வீரர்களை வாங்குவதும், ஏலத்தில் எடுப்பதும் ஐ.பி.எல் பார்க்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும், அதனை ஒத்த செயற்பாடு தான் இங்கும் . ஆனால் இங்கு புரளும் பணத்திற்கு கிட்டக் கூட ஐ.பி.எல் வந்துவிட முடியாது. சில நேரங்களில் ஒரு வீரருக்காக ஒரு அணியின் முகாமைத்துவம் செலுத்தும் தொகையானது, ஒரு ஐ.பி.எல் அணியை வாங்குவதற்கு போதுமானதாக இருக்கும். அடுத்த வருடத்தின் கோடைகாலம் வரை தொடரப்போகும் உதைபந்தாட்ட அரங்க ஆதிக்கங்களில் இந்த வீரகளே அந்தந்த அணிகளின் பிரதான காய் நகர்த்தல்களாக அல்லது முக்கிய புள்ளிகளாக இருக்கப்போகிறார்கள். அந்த நம்பிக்கையிலேயே அவர்கள் வாங்கப்பட்டிருக்கிறார்கள்.


பெரும் விலை கொடுத்த ரெய்னா போன ஐ.பி.எல் இல் சொதப்பியதும், மேற்கிந்திய கிரிக்கட் நிர்வாகம் "போடா கிழட்டுப்பயெலே என்று ஒதுக்கிய கெய்லை நம்பிக்கையில் வாங்கில மல்லையா காட்டில் அடைமழை பெய்ததும் ஐ.பி.எல் வரலாறு. அது போலவே இங்கும்  பெரும் எதிர்பார்ப்பில்  வாங்கப்படும் வீரர்கள் சொதப்புவதும், சுண்டக்கா என கணிக்கப்பட்டவன் சூறாவளி ஆவதும் இயல்பு.. சரி அதுபற்றி காலப்போக்கில் அலசலாம். இப்போது இந்த வீரர்கள் விற்பனை சந்தை பற்றி பார்க்கலாம். 


உண்மையை சொல்லப்போனால் இந்த வீரர்கள் சந்தை நிலவரம் குறித்து எழுதுவது எனக்கு துளியும் இஷ்டம் கிடையாது. காரணம் இங்கே உள்ளதை உள்ளவாறே ஒப்பித்து எழுதவேண்டி இருக்கும். அதில் எந்தவிதமான "இரியேட்டிவிட்டியும் " கிடையாது. சரியோ பிழையோ... அது நடக்குமோ நடக்காதோ.. உதைபந்தை எனது பாணியில் விமர்சனம் பண்ணவே எனக்கு பிடிக்கும். ஆனாலும் அடுத்தடுத்து நான் எழுதவிருக்கும் பதிவுகளை விளங்கிக் கொள்வதற்காகவும், இலைமறைகாயாக இந்தியா மற்றும் இலங்கையில் மறைந்திருக்கும் அடிமட்ட உதைபந்தாட்ட ரசிகனுக்கும் இந்த வீரர்களின் விற்பனை தொடர்பான செய்தியை கொண்டு சேர்ப்பதற்காகவுமே இந்த பட்டியலை தயார் செய்தேன். நம்முள்ளும் உதைபந்தை ரசிக்கின்ற, அது போல் தனக்கு பிடித்தமான வீரரின் கழக மாற்றத்தை அறிந்து ஒள்ளவேண்டுமென்ற அவாவுடைய ரசிகன் இருந்தால் அவன் ஒருவனாவது பயன் பெற்று போகட்டுமே.


உதைபந்தாட்ட வீரர்கள் விற்பனை சந்தையை பொறுத்த வரையில் விற்பனை இடம்பெறும் காலப்பகுதியில் பின்வரும் முக்கியமான செயற்பாடுகள் நடக்கும்.

1. வீரர்களை வாங்குதல்

2.வீரர்களை விற்றல்

3. வீரர்களை கடன் அடிப்படையில் வேறு அணிகளுக்கு விளையாட அனுமதித்தல் (Loan Out)

4.கடன் அடிப்படையில் வீரர்களை அணிக்குள் உள்வாங்குதல் (Loan In)

5. ஒப்பந்த காலம் நிறைவடைந்ததும், மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பாத வீரரை இலவச சந்தைக்கு அனுமதித்தல் ( தானாகவே அவர் இலவச சந்தைக்குள் நுழைவார்) Free Agents / Free Transfers 

6. பருவகால முடிவில் ஓய்வு பெறும் வீரர்கள். 

இந்த செய்யற்பாட்டின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பரிமாற்றம் குறிப்பிட்ட அந்த காலப்பகுதிக்குள் இடம்பெறும். அவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக இங்கு தரமுடியாது . விற்பனை பெறுமதியிலோ அல்லது வீரரின் செயல்திறன் அடிப்படையிலோ முக்கியமானது என நான் கருதுகின்ற ( சற்று பிரபலமான வீரர்களின் தகவல்கள்) வீரர்களின் பரிமாற்றத்தை மட்டும் இங்கே தருகின்றேன்.


* ஒன்றிரண்டு வீரர்கள் என்றால் பரவாயில்லை, இங்கே பெருந்தொகையான அதேவேளை உச்சரிப்பில் மாறுபாடுகளை ஏற்படுத்திவிட கூடிய வீரர்களின் பெயர்கள் மற்றும் கழக பெயர்கள் இருப்பதால் விபரங்களை ஆங்கிலத்திலே தருகின்ட்றேன். உங்கள் கருத்தை சொல்லுங்கள்.  

* m = மில்லியன் யூரோக்கள்.

* வீரர்களின் விலைகள் தொடர்பில் தளத்துக்கு தளம் வேறுபாடு காணப்படுகிறது. ( சில இடங்களில் அண்ணளவான விலையே தரப்பட்டுளது.)

இங்கிலாந்தின் சந்தை


Player Name

From
To
Fee
1
Werder Bremen
Chelsea
32 m
2
Lens
25 m
3
Chelsea
Shanghai Shenhua
Free
4
Lille
Free
5
Fenerbahce
8 m
6
Borussia Dortmond
Manchester United  

7
Vitesse
24 m
8
Queens Park Rangers

9
Koln
Arsenal
11 m
10
Montpellier
13 m
11
Malaga
16.5 m
12
Arsenal
Barcelona
15 m
13
Benfica
Manchester city
17 m
14
Everton
12 m
15
Manchester City
Tottenham Hotspur
5 m
16
Swansea City
Liverpool
15 m
17
Roma
10 m
18
Liverpool
Fenerbahce

19
Olympique Lyonnais
Tottenham Hotspur
8 m
20
Fullham
15 m
21
Tottenham Hotspur
Real Madrid
33 m
22
Hamburg SV
10.3 m
23
Sunderland
Free
24
Inter
ManchesterCity
5 mஅடுத்து ஸ்பெயினின் லா லீகா பக்கம் போகலாம்.Player
From
To
Fee
1
Valencia
Barcelona
14 m
2
Villarreal
Dynamo Kyiv
10 m
3
Al Rayan sports Club
8 m
4
Atletico de Madrid
Benfica
10 m
5
Malaga
Rubin Kazan
10 m
6
Alex Song
Arsenal
Barcelona
15 m
7
Luca Modric
Tottenham Hotspur
Real Madrid
33 m
8
Atletico de Madrid
Bayern Munich  
40 m
9
Olympique Lyon
Valencia
7 m
10
Real Madrid
Anzhi Makhachkala
5 m
11
Valencia
Swansea City
7 m
12
Real Madrid
Queens Park Rangers
8 m


இன்னும் சில ஐரோப்பிய சந்தைகள்Player
From
To
Fee
1
Napoli
Paris Saint – German  
30 m
2
Milan
42 m
3
Milan
23 m
4
Pescara
12 m
5
Ajex
6 m
6
Fc Twente
Borussia Monchengladbach
15 m
7
Borussia Dortmond
Borussia Monchengladbach
17 m
8
Real Madrid
Bayern Leverkusen

9
Bayern Munich
VFL Wolfsburg

10
Rafel van der vaart
Tottenham Hotspur
Hamburg SV

11
Werder Bremen
Bayern Munich

12
Porto
FC Zenit Saint Petersburg
40 m
13
SL Benfica
FC Zenit Saint Petersburg
40
மேற்படி வீரர்களின் பரிமாற்றங்கள் எதோவொரு வகையில் உதைபந்தாட்ட உலகில் பிரபலமாக இருக்கிறது. இவை தவிர்ந்த முக்கியமான ஏதேனும் வீரரது பரிமாற்ரத்தை நான் குறிப்பிட மறந்திருப்பின் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டவும்.


நான் மேற்குறிப்பிட்டிருந்த வீரர்கள் பரிவர்த்தனை அனைத்துமே முக்கியமானவை என நான் கருதியவை தான். அவற்றிலும் குறிப்பிட்ட சில வீரர்களின் பரிவர்த்தனைகள் இந்த பருவகாலத்துக்கான உதைபந்தாட்ட அரங்கில் சில மாற்றங்களை கொண்டுவரலாம் என நினைக்கின்றேன். அதாவது குறித்த ஒரு வீரரை வாங்கியதால் ஒரு அணியின் அதிகரிக்கப்பட்ட பலமாக இருக்கட்டும், அல்லது குறிப்பட்ட ஒரு வீரரை இழந்தமையால் குறைக்கப்பட்ட பலமாக இருக்கட்டும் ஏதோ ஒரு வகையில் அதி முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களின் பரிவர்த்தனைகள் என நான் நினைக்கும் சில பரிவர்த்தனைகளை கீழே தருகின்றேன்.

1. Edan Hazard
2.Van Persie 
3.Alex Song
4.Luka Modric
5.Oscar
6.Maicon
7.Jordi Alba
8.Javi Martinez 
9.Thiago Silva 
10.Zlatan Ibrahimovic

இந்த பத்து வீரர்களினதும் பரிவர்த்தனைகள் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணத்தை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...