உதைபந்து

Tuesday, September 18, 2012

பொய் சொல்லுவது கிட்னிக்கு நல்லது! ஆய்வில் தகவல்!என்னடா இந்த கத புதுசால்ல இருக்கு!! பொய் சொல்றது வாய் சம்மந்த‌ப்பட்ட விசயம். பொய் சொன்னா அது மூளை இல்லாங்காட்டி, அது சம்மத்தப்பட்ட இத‌யம் இப்பிடி எதுலயாவது தானே எஃபக்டு பண்ணணும். இது என்ன கிட்னி வரைக்கும் பாயுதுங்கிறீங்களா? விசயம் இல்லாமலா?

அதாவதுங்க... நீங்க ஒரு டாகுடர் ஃபேன்னு வச்சுக்கோங்க, ம்... வச்சாச்சா..? அது கூட இன்னொன்னையும் வச்சுக்கோங்க.. என்னான்னா, சில சுமார் ஃபிகருங்களும் பல மொக்கை ஃபிகருங்களும் ஒலாத்திக்கிட்டு திரியுற ஒரு தெரிவில குடியிருக்குறீங்கண்ணும் வச்சுக்கோங்க! நீங்க என்ன பண்ணுவீங்க? காலங்காத்தால ஒரு செமத்தியா அட்டு ஃபிகரு , இரவு வடிஞ்ச கடவாயும் தொடைக்காம , பிரிச்சு போட்ட பரட்ட தலையும் கையுமா , காலங்காத்தால கோலம் போட வெளிய வரும் . வீட்ல வெஸ்ரன் டாய்லெட்டே இருந்தாலும் பனமரத்து அடியில பரப்பிக்கிட்டு போற பழக்கத்தில வந்த நீங்க, அந்த நேரம் பாத்து , சொம்பு ஒண்ண தூக்கு அக்குள்ள வச்சிக்கிட்டு சாவகாசமா வெளிய வருவீக!

வந்த உங்களுக்கு எதிர் வீட்ல வடிஞ்ச கடவா தொடைக்காம ஒரு ஃபிகரு கோலம் போடுறதை கண்டதுமே, உங்க உங்களுக்குள்ள இருக்கிற "சச்சின் " வெளிய வந்திருவாரு. ஒடனே என்ன பண்ணுவீய்ங்க? ரெண்டு எட்டு வச்சு போற தூரத்த பில்டப்புக்காக நாலு எட்டு ஸ்லோ மோசனில் ஓடிப்போயி.....


 "எனக்கொரு கெட்ட பழக்கம்... எனக்கு எது பிடிச்சாலும் ஒடனே சொல்லிடுவேன்..... இப்போ கூட கோலம் போடும் போது , வழிஞ்ச கடவாய பொறங்கையால தொடச்சீங்களே அது ரொம்ப கேவலமா இருந்திச்சு.... அப்புறம் தலை கட்டிக்குதுன்னு தலைய போட்டு பொராண்டு பொராண்டுன்னு பொராண்டுனீகளே அது மகா கேவலமா இருந்திச்சு.... ஏதோ சொல்லணும்னு தோணிச்சு சொன்னேன்... மத்தப்படி உங்க பேர நீங்க சொல்லவேணாம்.. என்னோட பேரையும் நான் சொல்லல .. ஓக்க்கே.. பாய்...."


சொல்லிட்டு ஏதோ ஐ.நா சபைல உலக மயமாதல் பத்தி பேசிட்டு நாலஞ்சு அவார்டுகளை வாங்கி அக்குள்ள வச்சிட்டு போறாப்ல ,அந்த அடிபட்ட சொம்ப  ரைட்டு அக்குள்ள இருந்து மாத்தி லெஃப்டு அக்குள்ள வச்சிக்கிட்டு நீ கம்மா கரைக்கு போயிடுவ, ஆனா அந்த பொண்ணு சும்மா இருக்குமா? அழகா இருக்கீங்கன்னு சொன்னாலே அருவா மனையோட அலையுற அண்ணன கூட்டிவார பொண்ணுங்க நம்ம பொண்ணுங்க, உன் மூஞ்சிய நீயே கண்ணாடில பாக்க பயப்பிடுவ நீயி.. அப்புடி இருந்துக்கிட்டு... கம்மாய்க்கு போற நேரத்தில பொண்ணோட கடவாயி பத்தி கமண்டு குடுத்தா உன்னய சும்மா விட்ருவாளா ? உன்னோட பேர நீ சொல்லாட்டி என்னடா? அதான் எதிர் வீட்ல தானே குடியிருக்க மூதேவி..... நீ "போயிட்டு" கழுவிட்டு வாறதுக்குள்ள உன்னோட சாதகத்தையே வச்சிக்கிட்டு அவளோட அண்ணன் காத்துக்கிட்டு இருப்பான். அப்புறம் என்ன நீ கழுவாம விட்ட மிச்சத்தெயெல்லாம் அவனே கய்வி..கய்வி.. ஊத்துவான்! அப்போ பாரு உன்னோட அடிவவுத்த குறிவச்சே அடிப்பானுக... ரெண்டு ரவுண்டு ஆகுறத்துக்குள்ள உன்னோட கிட்னி சட்னியாயிடும்!


இது தான் அந்த நீதி.... சமயத்தில உண்மைய சொல்லாம பொய் சொல்றது கூட நம்ம கிட்னிய பாதுகாக்கும். என்னடா இவ்ளோ கடி கடிக்கிறானேன்னு சொரீரீங்களா? அப்பிடியே சொறிஞ்ச மேனிக்கு கீழ ஊள்ளதையும் படிச்சிருங்க!நம்மோட வீட்ல சரி.. அல்லது நம்மோட சொந்த காரய்ங்க வீட்ல சரி கொழந்த பொறந்திருக்கும். பொறந்த சில நாளிலேயே அது சிரிக்கும். ஆனா ! உண்மையிலேயே குழந்தை சிரிப்பது கிடையாது, பிறந்ததிலிருந்து தன்னோட தசைகளை அது அசைத்து சோதித்துக்கொள்ளும். இது ஒரு அனிச்சையான செயல். அப்படி சோதிக்கும் போது சிரிப்பதற்கு அசையும் தசைகளை அது சோதித்துப்பார்க்கையில் தான் அந்த "சிரிப்பு" நிகழ்கிறது.


அந்த சமயத்தில் அந்த குழந்தையின் அம்மாவோ அல்லது சொந்தங்களோ "பாரேன்.. அவருக்கு இப்பவே ஒரே சிரிப்பு.." அப்டீன்னு ஏதாவது டயலாக் சொல்லி சந்தோஷபட்டுக்கொள்வார்கள். சில நேரம் அந்த குழந்தையின் அப்பா அருகிருக்கும் போது அந்த சம்பவம் சில முறை நடந்தால் , சொந்தங்கள் அந்த குழந்தையை பார்க்க வரும் போதெல்லாம் "இவனுக்கு அப்பாவை இப்பவே அடையாளம் தெரிகிறது, நான் எல்லாம் இருந்தால் சிரிக்க மாட்டான், ஆனா அப்பனை பாத்ததும், ஒடனே சிரிப்புத்தான்" அப்டீன்னு அந்த அம்மா சொல்லிக்கிட்டு இருக்கும். தன்னோட புருஷனை பாத்து தான் தன் புள்ளை சிரிக்கிறான்னு சொல்றது அந்த அம்மாக்கு ஒரு அளவில்லாத சந்தோசம்.


இந்த இடத்தில நீங்க இருக்க போயி.. அந்த அம்மா ஏதும் சொல்லும் போது.. "அதெல்லாம் நெஜமான சிரிப்பு கெடையாது, அது அனிச்சை செயல் " அப்டீன்னு நேத்ராலயா சீஃப் டாக்டர் ரேஞ்சுக்கு விளக்கம் குடுக்கப் போவாதீங்க என்ன! அந்த சிரிப்பு அவய்ங்களுக்கு ஒரு சந்தோசம் , நீ இந்த ஒலக மகா ரகசியத்தை சொல்றதால ஒனக்கு என்ன மருத்துவத்துக்கான நோபல் பரிசு குடுக்கப்போறாய்ங்களா என்ன? முடிஞ்சா "ஆமா! அண்ணி அன்னிக்கு நான் கூட பாத்தேன், அண்ணன் வரும் போது தான் இவன் சிரிக்கிறான்" அப்டீன்னு உன் பங்குக்கும் அள்ளி விட்டிட்டு வா... அது ஒண்ணும் பாவம் கிடையாது.. இல்லையா மூடிக்கிட்டு குடுத்த காப்பிய வாயில ஊத்திட்டு வந்துக்கிட்டே இரு!

கொழந்தைன்னு சொன்னதும் இன்னொன்னு ஞாபகம் வருது.


பொதுவா கொழந்தைகள் இருக்கிற வீடுகள்ள பாத்தீங்கன்னா அந்த கொழந்த பத்தியே தான் எந்த பேச்சும் இருக்கும். "அவன் டாகுடர் பாட்ட கேட்டா போதும் எந்திரிச்சு ஆடுவான்", "அவன் அப்பா கூட தான் சேருவான்"," இப்பவே அவனுக்கு செல்போன்ல பாட்டு போட தெரியும்" அப்புடி இப்புடீன்னு தங்களோட கொழந்தைகள் பத்தி பெருமையா பேசிக்கிறதுல ஒரு அலாதி இன்பம் பெத்தவங்களுக்கு. அதுல முக்கியமான அம்சம் என்னான்னா "ஐயோ! இவனா , இவன் பயங்கர வாலு, எப்போ பாரு துடுக்குத்தனம், சரியான குழப்படி" அப்டீன்னு , தன்னோட கொழந்த சரியான வாலு, துடுக்கு தனம் நெறஞ்சவன்னு சொல்லுற போது பெத்தவங்க  காட்டிக்கொள்ளும் போலியான, சந்தோஷமான அந்த வெறுப்பு உணர்ச்சி அழகானது.  அந்த சிறுவயது குறும்பை ரசிப்பதில் பெத்தவங்க படும் சந்தோஷமே தனி!


தங்களோட குழந்தை குறும்புத்தனம் ஏதும் பண்ணாம இருந்தா கூட, "இவன் பரம சாது, பேசாம இருப்பான்" அப்டீன்னு சொல்றதுக்கு பெத்தவங்க விரும்புறது கெடையாது. சில வீடுகளில் குழந்தைகள் தேமே என்று தன் பாட்டில் இருக்கும், அழாது, ஆர்ப்பாட்டம் பண்ணாது, மூஞ்சி அடிபட கீழே விழுந்தாலும் தன் பாட்டுக்கு எழுந்திரிச்சு அடுத்த வேலைய பாக்க கெளம்பிடும். ஆனாலும் தன் குழந்தை துடுக்குத்தனம் நெறஞ்சது என்று சொல்லவே அந்த பெற்றோர் ஆசைப்படுவர். 


இந்த இடத்தில நீங்க இருக்கப்போயி , உங்க கிட்ட அந்த பெத்தவங்க "இவன் சரியான வாலு" அப்டீன்னு சொன்னா, "எங்க ? எப்போ பாரு எதுக்கும் வாயே தொறக்காத மன் மோஹன் சிங்கு மாதிரி இருக்கான், இவன போயி வாலு அப்டீன்னு சொல்றீங்களே! இவன் பரம சாது"ன்னு  ஏதோ அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டுக்காரன் கணக்கா உண்மைய பேசிர கூடாது. காப்பி பொடி கடன் வாங்க போன இடத்தில கமண்டு பண்ண கூடாது ஓக்கே. முடிஞ்சா "ஆமா ! அக்கா பாருங்க கூடாங்குளம் மேட்டர்ல அராஜகம் பண்ணும் நம்ம ஜெ ரேஞ்சுக்கு அட்டகாசம் பண்ணுறான்னு " ஒரு சர்ட்டிபெகேட் குடுத்துட்டு வரணும், அது வரவேற்கப்படும். இல்ல ... நீ அரிச்சந்திரன் பரம்பரைன்னா கொஞ்சம் மூடிக்கிட்டு, அவங்க சொல்லுறத அசால்டா கேட்டு தலைய ஆட்டிட்டு காப்பி பொடிய வாங்கிட்டு கம்பிய நீட்டிரணும்! புரியுதா.......

இன்னொரு மேட்டர்.. இது கொஞ்சம் வயதான குழந்தைகள் பத்தினது, அதாவது நம்ம வீட்ல இருக்கக்கூடிய நம்ம தாத்தா பாட்டி பத்தினது.


இவங்கள பாத்தோம்னா, சில விசயங்கள தாங்க நெனைக்கிறது தான் சரி, அல்லது அந்த மேட்டர் பத்தி தனக்கு தான் தெரியும்னு நெனச்சிக்கிட்டு இருப்பாங்க. அது அவங்க அனுபவத்தில கண்ட விசயமா இருக்கலாம், இல்ல அவங்களுக்கு கடத்தப்பட்ட செய்தியாக இருக்கலாம். அந்த மாதிரி விசயங்களை நம்ம கிட்ட சொல்லும் போது அவங்களக்கு ஒரு அளவு கடந்த சந்தோசம். "தம்பி ராசா.. இப்பிடித்தான் ஒரு நாளு , ராத்திரில சாப்பாடு கொண்டு போன ஒருத்தன கொள்ளிவாய் பிசாசு அடிச்சு கொன்னு அப்புறமா புளிய மரத்தடில போட்டிரிச்சு" அப்டீன்னு நம்ம கிட்ட சொல்லுவாங்க. 


"இல்ல அப்பத்தா... அது ஒன்னும் கொள்ளிவாய் பிசாசு கிடையாது, அது இரவில உருவாகிற மீதேன் வாயு, அவரு ஏன் செத்தாருன்னா, அவரு கொண்டு போன சாப்பாட்ல வேற மீதேன் வாயு பரவியிருக்கும், அதயும் தின்னிட்டு, புளியமரத்துக்கு கீழே போயி படுத்திருக்காரு, மரங்கள் இரவில காபனீர் ஒட்சைட நெறைய வெளிவிடும், அதுலையும் புளியமரத்து இலை கீழ் கலங்கள் நெறைய இருக்கிறதால அவருக்கு நெறைய காபனீர் ஒட்சைடு பாஞ்சி அவரு மூச்சு முட்டி செத்துப்போய்ட்டாரு" அப்டீன்னு விஞ்ஞானத்த வெளக்கி அப்பத்தாவ என்ன அணு விஞ்ஞானியாவா ஆக்கப்போற? காலம் முடியப்போற காலத்தில மீதேன் வாயுவ பத்தி தெரிஞ்சு அப்பத்தா என்ன பண்ணப்போது? 


இப்பிடித்தான்  என் பாட்டி, அவுங்க வைல்டு லைஃப் எக்ஸ்பர்ட்.  அவங்களோட  இளமைக்காலம் முழுக்க காடு சார்ந்த ஒரு கிராமத்திலேயே தான் கழிஞ்சுது. யானை, முதலை, பாம்பு பத்தெயெல்லாம் கதை கதையா சொல்லுவாங்க. இதில காமடி என்னன்னா எப்பெல்லாம் காடு பத்தின கதை வருதோ, அப்பெல்லாம் இந்த யானை, பாம்பு, முதலை கதைகள் ரிப்பீட் அடிக்கும், இதுவரைக்கும் அந்த கதைகளை நூறுக்கும் மேற்பட்ட தடவை கேட்டிருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு தடவை கேட்கும் போதும் ஏதோ அப்பதான் அந்த கதையை முதன் முதல் கேட்பது போல் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருப்பேன். இடை நடுவில் அவர் எதையாவது மறந்துவிட்டால் ( கதை தான் எனக்கு தலை கீழ் மனப்பாடமே) அவருக்கு அதை ஞாபகப்படுத்துவது மாதிரியான கேள்விகளை கேட்பேன். என்னோட தம்பிகளெல்லாம் என்னை அப்பிடியே கேவலமாக பாப்பார்கள்.ஆனாலும் இன்றைய காலத்தில் வாழும் ஒரு இளைஞனுக்கு தான் புதிதாக சில விடயங்களை கற்பிக்கின்ற ஒரு பெருமிதம் தெரியும் என் பாட்டியின் முகத்தில். அந்த பெருமிதத்தில் சூட்டில், என் முகத்தில் தம்பிகள் துப்பிய எச்சில்கள் காய்ந்து விட்டிருக்கும்.


அன்று ஒரு நாள் டிஸ்கவரியில் "டுவல் ச(ர்)வைவல்" நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது ச(ர்)வைவல் எக்ஸ்பேர்ட்டான கோடி "உலகின் அதிக விஷமுள்ள பாம்புகளில் இந்த பாலைவன வைப்பர் பாம்புக்கு ரெண்டாவது இடம்" என்று கூறியபடி அந்த பாம்பை கடித்து சுவைத்து தின்று கொண்டிருந்தார். உடனே எனது பாட்டி "தம்பி முதலாவது விஷ்முள்ள பாம்பு நாக பாம்புதான், இப்பிடித்தான் முந்தி சன்னாரில ( சன்னார் - எனது பாட்டி வாழ்ந்த கிராமம்) நாக பாம்பு கொத்தியே நிறையெ பேர் செத்திருக்கிறாங்க, அந்த தலைல இருக்கிற ரெத்தின கல்ல எடுக்க போன ஒத்தரும் உயிரோட வரவே இல்ல, பாம்பு ரெத்தின கல்லை துப்பு வச்சிட்டு அந்த வெளிச்சத்தில தான் இரை தேடும்........" நூத்தி ஒராவது தடவையா கதை ரிப்பீட் ஆனது, நானும் அப்பதான் கேட்பது போல ஆர்வமானேன். இந்த ரெத்தின கல்லி மேட்டரு இனிமே , அதை எப்படி சாணீயால் மூடி எடுப்பது, பின் பாலில் போட்டு ஏழு தரம் கழுவி விசத்தை போக்குவது அப்டீன்ற "ரெத்தின கல்லு எடுப்பது எப்படி" என்ற கோர்ஸ் ஆகிப்போகும் என்று ஏற்கனவே தெரிந்திருந்த படியால் , வழமை போலவே என் முகத்தில் காறி துப்பிவிட்டு தண்ணி குடிப்பதாக சொல்லி ஒரு தம்பியும், சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிவிட்ட போனில் கேம் விளையாடுவதாக ஒரு தம்பியும், வெளியே யாருமே கூப்பிடாத போதும் " என்ன.... இந்தா வாறன் " என்று ஒரு தம்பியுமாக கம்பி நீட்டினார்கள். சுமார் ரெண்டு மணீநேரத்தின் பின்னர் மூன்று பேரும் வந்த போது "நீயா" படக்கதை முன்னுறு நாளைக்கடந்து ஓடிக்கொண்டிருந்தது. அதே ஆர்வமான கண்களோடும்.... காதுகளோடும் நான், மீண்டும் என் முகத்தில் துப்பிவிட்டு அவரவர் வேலையை பார்க்க கிளம்பினார்கள்.


உலகின் கொடிய விசமான பாம்பு நாக பாம்புதான் என்று சொல்லும் போதே "இல்ல பாட்டி , உலகின் கொடிய விசமான பாம்பு கறுப்பு பாம்பா தான்" என்று ஏதோ பிராடி பார், பேர் கைல்ஸ் ரேஞ்சுக்கு உண்மையை சொல்லிவிட்டு என்னால் பாட்டியின் வாயை மூடிவிட்டிருக்க முடியும். ஆனால் கறுப்பு மாம்பா தான் உலகின் அதிக விசமுள்ள பாம்பு என்று தெரிந்து கொண்டு பாட்டி என்ன ஐ.நா போயி அவார்டா வாங்க போவுது?. தான் வாழ்ந்த சூழலில் அவருக்கு தெரிந்து நாக பாம்பு தான் அதிக விசமுள்ளது, அதையே நம்புகிறார், இருந்திட்டு போகட்டுமே! 


ஐந்தில் வளையவில்லை ஐம்பதில் வளைக்க முயன்றால் முறிந்திடாதா மனசு! நாம் உண்மையை சொல்லப்போக , இவளவு காலமும் தாங்கள் நம்பிக்கொண்டிருந்தது பொய் என்று அவர்கள் உணர்ந்தால அந்த வயோதிக மனது எவளவு கஷ்டப்படும்? அது போக நம் போன்ற இளைய தலைமுறை இப்படியான விசயங்களை அவர்களிடம் இருந்து கேட்டுத்தெரிந்து கொள்ளும் போது, ஏதோ கற்புக்கும் உணர்வு வந்து பெருமைப்படுத்திகிறது அவர்களை. அந்த உணர்வில் ஏன் மண்ணள்ளி போட வேண்டும்? அது போக இந்த அவசர யுகத்தில் கவனிக்கப்படாமல் போகும் அந்த அப்பாவி ஜீவன்களோடு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பாக கூட இந்த மாதிரியான தருணங்கள் அமைகின்றன. என்னை பொறுத்த வரை என் பாட்டி இருக்கும் வரை உலகின் அதிக விசமுள்ள பாம்பு கறுப்பு மாம்பா கிடையாது , நாக பாம்புதான்! 

கொழந்தைகள் , வயதான் கொழந்தைகள் பத்தி பேசியாச்சு, இப்ப நம்ம ஏரியாவுக்கு வருவோம்! இளைஞர்கள்!!

யாராவது நம்மாளுக்கு கல்யாணம் ஆயிரிச்சுன்னு வையுங்க, சொந்தக்காரய்ங்க வீட்லல்லாம் சாப்படு, ராஜ மரியாதை அப்புடி இப்புடீன்னு கொஞ்ச நாளு ஜாலியா போவும் லைஃபு, அப்புறம் சில நாளில குடும்ப பொறுப்பு, குடிக்கு போடப்பட்ட தடை, நண்பர்கள வட்டத்தில் சேரும் போது பாயும் குண்டர் சட்டம், முன்னெல்லாம் தெருவில போற ஃபிகருங்கள சுதந்திரமா சைட் அடிச்ச வட்டிக்கு இப்பெல்லாம் , யாராச்சும் சொந்தக்காரய்ங்க பாத்திட்டு வீட்ல போட்டு குடுத்திருவாய்ங்களோன்னு பயம் , அப்டீன்னு பையன் பயத்தில வெந்து சாவான். அவன் முகத்தில மரண பீதி தாண்டவமாடும்.

ரொம்ப நாளுக்கு அப்புறம் அவன பாக்கும் போது, "மச்சி என்னடா இப்பிடி ஆயிட்டே, ரெண்டு நாள்ள செத்திருவ போல இருக்கே" அப்டீன்னு ஊண்மைய சொல்லீராதீக! "மச்சி.... ஆகா.. ஆளே மாறிட்ட , முகத்தில குடும்பஸ்தன் களை வந்திடிச்சு,  மாமியார் வீட்ல கவனிப்பு அதிகமோ , தொப்பையெல்லாம் சின்னதா விழுந்திருக்கு ( அக்சுவலா அடி அடீன்னு பீர் அடிச்சு நம்ம பவர்ஸ்டார் ரேஞ்சுக்கே அவன் தொப்பை இருந்தாலும் , பொய் சொல்லுதல் தர்மமாம்!)
புது மாப்ள கலக்குற போ" அப்டீன்னு ஒரு பச்சை பொய்யை சொல்லிப்பாருங்கள், "போடா சும்மா நீ வேற அப்டீன்னு " அவன் பொய்யாய் சலிச்க்கு கொண்டாலும் உள்ளுக்குள் சந்தோஷப்படுவான்!


இப்படியாக சில சந்தர்ப்பங்களில் உண்மையை சொல்லுவதை விட பொய்யை சொல்லுதல் நமக்கும் , பிறருக்கும் நன்மையே பயக்கும். திருநெல்வேலி பிரபு மட்டும் நெஜ வாழ்வில இருந்திருந்தா ஒரு பயலு கிட்ட நல்ல பேரு வாங்கீருக்க முடியாது. ஆக முடிஞ்சவரை , இயன்ற போதெல்லாம் பொய் சொல்லி வாழப்பழகுவோம். 


ஆனாலும் நம்மூரு பொண்ணுங்களுக்கிட்டே என்ன சொல்றதுன்னு தான் இத்த வரைக்கும் புரியலே! உண்மை சொல்லுறதும் ஆகாது, பொய் சொல்லுறதும்ஆகாது. ஒரு வேளை இப்படியான இக்கட்டில் மாட்டிக்கிட்டா நமக்கு நாமே " இறுதி செபம் " சொல்லிக்கிறது இன்னமும் நல்லது. ஆனா உண்மைய மட்டும் சொன்னீங்க... அவளுங்க அண்ணன் கையாலே சிரிச்ச மேனிக்கே சாக வேண்டி வரும் பாத்துக்கங்க!
டிஸ்கி: ஃபுட்பால் பதிவு தான் இந்த மாசம் பூரா எழுதணூம் என்று சபதம் பண்ணிக்கிட்டு இருந்தேன், ஆனாலும் இந்தியா வந்திட்டதால அது முடியல. இலங்க திரும்பியதும் ஃபுட்பால் பத்தி பாத்துக்கலாம். ஆனாலும் நான் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதாக நண்பர் சிறின் கவலைப் பட்டார். அது தான் ட்ராஃட்டில் கிடந்த ஒண்ணை தட்டிவிட்டேன்.


டிஸ்கி: எனது வலைப்பூ நண்பர்களுக்கு நேரமின்மை காரணமாக நான் இந்தியாவில் நிற்கும் இந்த வாரம் முழுவதும் , தங்களது தளத்துக்கு வரமுடியாமல் இருக்கும். அந்த அசௌகரியத்துக்காக வருந்துகிறேன்.28 comments:

 1. அது சரி... அதுக்காக இவ்வளவு நிறைய பொய்யா சொல்லுறது...?

  ReplyDelete
  Replies
  1. ஆங்... வந்துட்டீங்களா அண்ணே! வடை, பாயாசம், பொங்கல் , புளியோதரை எல்லாம் உங்களுக்கு தான்! என்ன அண்ணே பண்ணூறது , பொய் சொல்லுறது தான் பொழப்புன்னு ஆகிப்போச்சே!

   Delete
 2. என்ன டைமிங்குவே இது? அவனவன் டி.20 மேட்சு பார்ப்பானா.. இல்லை வந்து வந்து பதிவை வாசிச்சுக்கினு இருப்பானா?

  ReplyDelete
  Replies
  1. தல ! தல! வா தல.. ரொம்ப நாளா உன்னய ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். நீ மேட்சு பாரு தல.. நானும் கொஞ்சம் பிஸியா தான் இருக்கேன். இப்போ இந்தியவில இருக்கேன். வர்ர சனிக்கெழம வந்துடுவேன். அப்புறம் ஜமாய்ச்சுடலாம்!

   Delete
 3. அடடா.. உன் 'கோடி கொடுத்தேனும்' பதிவை கம்ப்ளீட்டா மிஸ் பண்ணிட்டேன்.. இப்பதாம்லே பார்க்குறேன்!
  அடுத்த அண்ணனின் உதைபந்தாட்டப் பதிவுகளுக்கு காத்திருக்கும் அடிமட்ட தொண்டன்!

  ReplyDelete
  Replies
  1. இப்பவாவது பாத்தியே தல! ரொம்ப சந்தோசம், பதிவு போட்டு ரெண்டு நாளா பின்னூட்டம் போட ஆளே இல்லாம அனாதைய கெடந்திச்சு, அப்பதான் யோசிச்சேன் பங்காளி ஜே.ஸட் கூடவா எனக்கு துரோகம் பண்ணிட்டாருன்னு, தல நம்ம ரெண்டு பேருக்காகவாவது அடுத்தடுத்து புட்பால் பதிவு வந்து விழும்லே! சிங்கம் வந்திருச்சு.. நான் உன்னய சொன்னன் தல!

   என்ன தொண்டன் , நான் ஏதாவது மொக்கையா எழுதப்போக , அத கலாய்க்கணும் அது தானே தங்கள் பேரவா?

   Delete
  2. //அடுத்தடுத்து புட்பால் பதிவு வந்து விழும்லே//

   இந்த மன்செஸ்டர் சிட்டி- மட்ரிட் மேட்சு பத்தியே ஒரு 5,6 பதிவு வேணும்.. அதில் அண்ணனின் லாவகமான பந்து கையாள்கை, கடைசி நிமிடத்தில் ஆபத்பாந்தவனாய் வந்தமைந்த கோல் இப்படி புகழ்ந்து தள்ளிக்கிட்டே இருக்கனும், என்னா?

   Delete
  3. //சிங்கம் வந்திருச்சு.. நான் உன்னய சொன்னன் தல!//

   'பொய் சொல்லுவது கிட்னிக்கு நல்லது!' நல்லா கடைப்பிடிக்க தொடங்கிட்ட போலயே!

   Delete
  4. /////அதில் அண்ணனின் லாவகமான பந்து கையாள்கை, கடைசி நிமிடத்தில் ஆபத்பாந்தவனாய் வந்தமைந்த கோல் இப்படி புகழ்ந்து தள்ளிக்கிட்டே இருக்கனும், என்னா?///

   போய்யா யோ போய்யா,.... உங்க கிரவுண்ட்லயே அவிய்ங்க ரெண்டு அடிச்சிட்டு போய்ட்டாய்ங்க.... அப்புறம் ரொனால்டோ வேற இப்ப டீமோட ரொம்ப கறரா இருக்கிறாப்ல... சீக்கிரம் ஓல்ட் ட்ராம்ஸ்போர்டில் அவரை பார்க்கலாம் என்கிறது விக்கிலீக்ஸ். மெஸ்ஸி கூட போட்டி போட முடியது எங்கிறது பாவம் இப்பதான் புரியுது

   Delete
  5. ///பொய் சொல்லுவது கிட்னிக்கு நல்லது!' நல்லா கடைப்பிடிக்க தொடங்கிட்ட போலயே!///

   உண்மைய சொன்னாலும் ஏத்துக்க மாட்டேங்குறாங்கப்பா...!

   Delete
  6. //மெஸ்ஸி கூட போட்டி போட முடியது//
   என்ன காமெடி இது.. ஓ நீ இன்னும் அந்தக் காலத்திலேயேதான் இருக்கியா?

   கோல்.காம் தங்களோட வருடாந்த 'டாப் 50'ஐ ஆகஸ்ட் வெளியிட்டது.. தெரியுமா??
   அதுல டாப் 3-
   1.ரொனால்டோ
   2.கஸியஸ்
   3.மெஸ்ஸி

   *என்னைப் பொறுத்த வரைக்கும் ரொனால்டோவுக்கு இப்ப ஒரே போட்டி Falcao தான்! மெஸி எல்லாம் ஜுஜுபி..

   Delete
  7. http://www.goal.com/en-us/slideshow/69/50

   Delete
  8. //உங்க கிரவுண்ட்லயே அவிய்ங்க ரெண்டு அடிச்சிட்டு போய்ட்டாய்ங்க....//
   சேம் டூ யு மாமே.. எங்களுக்காவது அவிங்க அடிச்சாங்க.. உங்களுக்கு நீங்களே போட்டுக்கினீங்களே!

   Delete
  9. ஹி..ஹி... ஹி.. அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கியே! தொடர்ச்சியா மூணு சீசன் , கோலாகடும் சரி, அஸிட்ட்ஸ் ஆகட்டும் சரி மெஸி பக்கத்தில வரமுடியல கிரிஸ்டினாவால். போதாக்குறைக்கு கிரிஸ்டினாவை பக்கத்தில வச்சிக்கின்னே பலூன் டி ஓர்'ஐ மூணு தடவ கக்கத்தில வச்ச்சிக்கிட்டு வந்தாரு மெஸ்ஸி, பாத்துக்கிட்டு பல்ல மட்டுமே இளிக்க முடிந்தது, தோ... இந்த வாட்டி கூடா ஐரோப்பாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது எங்காளு இனியெஸ்டாவுக்கு குடுத்துட்டாய்ங்கன்னு மூக்கு சிந்தினாரு, கோல் அடிச்சிட்டு அத கொண்டாடும் மனநிலையிலேயே அண்ணன் இல்லன்னா பாத்துக்கோயேன். இந்த தடவ பலூன் டி ஓர் உம் எங்களுக்கு தான், பக்கத்தில நின்னு பல்லு இளிக்க மட்டுமே முடியும், ஏன்னா மெஸ்ஸியோட கடந்த சீஸன் பெர்ஃபார்மன்ஸ் அப்புடி, கோல் மத்தது அஸிட் ரெண்டிலயுமே ரொனால்டோ கிட்ட வரமுடியாது.

   கோல் டொட்.கொம் எல்லாம் ஒரு வென்சைடுன்னு அத போயி பெருசா எடுத்துக்குற! ஆமா நீயி சொல்லுறது வாஸ்தவம் தான் , இப்போதைக்கு பல்காவோவ தன்னோட போட்டியா நெனைகிறது தான் கிரிஸ்டினாவின் கிட்னிக்கு நல்லது, மெஸ்ஸி கிட்ட கூட வரமுடியாது.

   ///சேம் டூ யு மாமே.. எங்களுக்காவது அவிங்க அடிச்சாங்க.. உங்களுக்கு நீங்களே போட்டுக்கினீங்களே!///

   எங்களுக்கு நாங்களாவே அடிச்சிக்கிட்டாதான் உண்டு!

   Delete
 4. எனக்கென்னவோ நீதான் இந்த சயின்டிஸ்ட் மாதிரி விளக்கம் குடுத்து, வாதிட்டு பலவாட்டி பல்பு வாங்கியிருப்பியோன்னு தோணுது!

  ReplyDelete
  Replies
  1. பல்பு தானே ! அது நெறைய வாங்கி இருக்கன் , பட் இந்த வாட்டி நோ பல்பு தல!

   Delete
 5. ஹீ ஹீ.. அதெல்லாம் சரி, எதுக்கு சம்பந்தமே இல்லாம எங்கள டாகுடர் ஃபேன்னு வச்சுக்க சொல்றீங்க?
  அப்புறம் "பொய்", "பொய்" ன்னு அடிக்கடி சொல்றீங்களே, அப்புடின்னா என்னாது? பேசிக்கலா எங்க வீட்டுல எனக்கு அப்புடி ஒன்னு கத்தே தரல.. அது என்னான்னு கொஞ்சம் விளக்கி இருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. ///ஹீ ஹீ.. அதெல்லாம் சரி, எதுக்கு சம்பந்தமே இல்லாம எங்கள டாகுடர் ஃபேன்னு வச்சுக்க சொல்றீங்க?//

   ண்ணா.... ஒரு பேச்சுக்காவது வச்சுக்கோங்கண்ணா....

   //அப்புறம் "பொய்", "பொய்" ன்னு அடிக்கடி சொல்றீங்களே, அப்புடின்னா என்னாது? ///

   ஏய்! ஏய்! இது ஒலக மகா நடிப்புடா சாமீ!

   Delete
 6. அப்புறம் ஆங், ///எனக்கு தெரியாததை , நான் தவறவிட்டதை, தவறுகளாக விடுபவைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால்//
  ஒரு நண்பனாக எனக்கு ஒரு சின்ன கருத்து.. நீங்க எழுதுறது எல்லாமே செம இன்ட்ரெஸ்ட்டிங்.. ஆனா பதிவோட நீளம் தான் கொஞ்சம் ஜாஸ்தியோன்னு தோணுது.. மேட்டர் என்னன்னா, இந்த பாஸ்ட் புட் காலத்துல, ஒரு நகைச்சுவை பதிவை படிப்பதற்கு யாருமே, ரொம்ப டைம் எடுத்துக்க மாட்டாங்க... நமக்கு ஸ்க்ரோல் டவுன் பண்ணி,பண்ணி ,பண்ணி ,பண்ணி ..... அடபோங்க பாஸ்...

  ReplyDelete
  Replies
  1. ஏத்துக்கிறேன் தல! நானும் சில சமயம் நினைப்பது உண்டு... ஆனாலும் அதே மனம் சொல்லும் " சொல்லவந்ததை சுருக்கமாக சொல்லிவிடுவதால் ஏதேனும் தவறவிடப்பட்டால் என்ன பண்ணுவது?" அப்டீன்னு , சொல்லிட்டீங்கல்ல அதிகாலையில் எந்திரிச்சு ஓடி, ஜாக்கிங் பண்ணியாவது கொஞ்ச கொஞ்சமா கொறைக்க ட்ரை பண்ணூறேன்!

   ///நமக்கு ஸ்க்ரோல் டவுன் பண்ணி,பண்ணி ,பண்ணி ,பண்ணி ..... அடபோங்க பாஸ்...///

   அப்போ யாரும் முழுசா படிக்கிறது கிடையாதா?

   Delete
  2. ஹீ ஹீ.. ஒரு ஆர்வத்துல படிச்சி முடிச்சிறதுதான்...
   //அதிகாலையில் எந்திரிச்சு ஓடி, ஜாக்கிங் பண்ணியாவது கொஞ்ச கொஞ்சமா கொறைக்க ட்ரை பண்ணூறேன்///
   இதெல்லாம் ட்ரை பண்ணுற லெவல்ல தாண்டாது தம்பி.. அனுபவஸ்தன் சொன்னா கேட்டுகனும்..

   Delete
  3. சரிங்க அனுபவஸ்தன்.... கேட்டுக்கிறேன்! :)

   Delete
 7. நண்பா..
  ஏன் இந்த கொலைவெறி...
  ஏன் சமிப நாட்களில் பதிவு ரொம்ப குறைவாக இருக்கே??
  ரொம்ப பிஸியா??
  நல்ல இருந்தது நண்பா...சிரித்தேன் நல்லா

  ReplyDelete
  Replies
  1. தலைவரே வர வர நம்ம திண்டுக்கல் தனபால சார் மாதிரியே ஆகிட்டு வர்ரீங்க! பதிவ முழுசா படிக்கலியா? கடைசில போட்டிருந்தேனே காரணம்! என்ன பாஸ்....?

   Delete
 8. நீ டாக்குத்தர பத்தி சொன்னது மொக்கையா இருந்துச்ச்கி.
  அதுக்கு பிறகு உள்ளதெல்லாம் நல்லா இருந்துது மச்சி.

  ReplyDelete
  Replies
  1. இதோ பார்ரா... டாகுடர் ஃபேனுக்கு மூக்கில வேர்த்திடுச்சி....

   Delete

 9. "யாரேன தெரிகிறத"
  http://multistarwilu.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. தெரிஞ்சிக்கிட்டா போச்சி!

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...