உதைபந்து

Friday, September 28, 2012

இங்கே காண்டம் மொத்தமாக விற்கப்படும்! - அணுகவும்!!
எனக்கு நம்ம நாடு அடைஞ்சிருக்கிற வளர்ச்சிய பாக்கச்சொல்ல ரொம்ப சந்தோசமாக்கீது..... முன்னாடி எல்லாம் குடும்பக்கட்டுப்பாடு பண்ணிக்கோங்கோ... பண்ணிக்கோங்கோன்னு அரசாங்கம் ரேடியாவில கூவிக்கிட்டு இருந்திச்சு. அப்புறம் போஸ்டர் அடிச்சு ஒட்டிச்சு, அதுக்கும் அப்பால டி.வி இண்டெர்நெட்டு அப்டீன்னு வெளம்பரம் டெவலப்பு ஆகி இன்னைக்கு மக்கள் அதிகமா ரசிக்கிற சினிமா வரைக்கும் அந்த வெளம்பரம் பாஞ்சி இருக்குன்னா அதுவே பெரிய சாதனை தானே!  அதுவும் இப்பெல்லாம் பிரம்மாண்ட தமிழ் சினிமாக்களே நூறு கோடிக்குள் வந்துடுற போது , ஆயிரம் கோடிக்கும் மேல செலவழிச்சு , வெள்ளக்கார பயலுகள நடிக்கவிட்டது மட்டுமில்லாம, வெளிநாட்டு டெக்கினாலஜி எல்லாம் புகுத்தி படம் எடுத்து அரசாங்கம் ரிலீஸ் பண்ணுதுன்னா , கரண்டு பிரச்சினைய தூக்கி தூரத்தில போட்டிட்டு அரசாங்கத்துக்கு கோவில் கட்டுற வேலைய பாருங்கப்பா! 


இப்புடி அரசாங்கத்தோட ஐந்தாண்டு திட்டத்தில வந்த ஒரு குடும்பக்கட்டுப்பாடு படம் தான் "காண்டம் ஆஃப் ஹோல் சேல்ஸ்" ( சில இங்கிலீசு தெரியாதவங்க அல்லது பிரிட்டிஷ் இங்கிலீஸ் பேசுறவங்க இத்த "குவாண்டம் ஆஃப் சோல‌ஸ்" அப்டீன்னு வாசிச்சிருப்பாய்ங்க, கண்டுக்காதிங்க!) அட! இந்த காண்டம் படத்தை இங்கிலீசில போட்டிருக்காங்களே , தமிழ் தெரியாத பாமரன் என்ன பண்ணுவான்? ஒரு பிரபல பதிவரான , அதே நேரம் தமிழ் பற்று மெத்திப் போன , சமூக அக்கறை உள்ள ஒரு பதிவரா நான் தானே அத்த மொழி "பேர்ப்பு" செய்யணும்! அது என் சமூக கடமை ஆகிறது! அதனால "காண்டம் ஆஃப் ஹோல் சேல்ஸ் " அப்டீங்க்கிறத காண்டம் மொத்த விற்பனை நிலையம் அல்லது காண்டம் மொத்தமாக இங்கே விற்கப்படும் என மொழி பெயர்க்க தமிழ் இடம் கொடுத்ததால் ரெண்டாவது ஆப்ஷனையே செலக்டு பண்ணிட்டேன்! அப்புறம் அரசாங்கம் சேக்க மறந்த வார்த்தையான "அணுகவும்"ங்கிறத சமூக பருப்புணர்வோடு நானே போட்டுக்கிடேன்.இந்த காண்டம் வெளம்பரத்தில முக்கியமானது என்னான்னா, சுமார் ஒன்றரை மணிநேரம் ஓடுது... கடைசி வரைக்கும் கதநாயகனுக்கும் கதாநாயகிக்கும் கொழந்த பொறக்காம காட்டியிருக்கிறதிலேர்ந்து என்னா தெரியுதுன்னா , காண்டம் போடுக்கிட்டா என்ன கில்ம பண்ணினாலும் கொழந்த பொறக்காதுங்கீறது தான். அப்புறம் இன்னும் செல விஞ்ஞான உண்மைகளும் எனக்கு புரிஞ்சிது, என்னான்னு கேடீங்கன்னா... காண்டம் குடும்ப கட்டுப்பாட்டு முறை , எயிட்ஸ் தடுப்பு முறை அப்டீங்கிற கட்டத்தை தாண்டி  , காண்டம் போட்டுக்கிட்டா நல்லா காரு ஓட்டலாம், பயங்கரமா சண்டை போடலாம், வில்லனுகளை பொரட்டி பொரட்டி எடுக்கலாம்ங்கிற உண்மை எனக்கு தெரிஞ்சிது. அதிலும் குறிப்பா காண்டம் போட்டுக்கிட்டா மூளை நல்லா வேல செஞ்சி நல்ல ஞாபக சக்தி, கற்பனா வளம் அதீத யோசனை செய்யும் திறன் எல்லாம் வரும் அப்ப்டீன்னும் சொல்லபட்டிருக்கு.எக்ஸாமுக்கு படிகிறவய்ங்க, அப்புறம் வாய்க்கால் தகராறு இருக்கிறவய்ங்க, அப்புறம் இன்னமும் ஒழுங்க கார் ஓட்ட தெரியாம லைசென்சு எடுக்காதவய்ங்க எல்லாம் இந்த காம்ளான், சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் விட்டொழிச்சிட்டு ஆளாளுக்கு ஒண்ணு மாட்டிக்கிட்டு அலையிறது நன்மை பயக்கும்ங்கிற புது கண்டுபிடிப்பை இந்த வெளம்பரத்தோட டைரக்டரு சொல்லியிருக்காரு.

சேன் கொனேரே


அப்புறம் படத்தோட நாயகனை பத்தி சொல்லவே வேணும் டேனியேல் கிரேக் அப்டீன்னு ஒருத்தரு. கேட்டா ஜேம்ஸ் பாண்டு நட்கர் அப்டீன்னு சொன்னாய்ங்க! ஆள பாத்தா அப்டி தெரியவே இல்ல, நானும் நெறைய ஜேம்ஸ் பாண்டு படம் பாத்திருக்கேன். "சேன் கொனேரே" மொதோக்கொண்டு இப்ப இந்த கிரேக் வரைக்கும் பாத்துட்டேன். எனக்கு என்ன தோணுதுன்னா , இந்த காண்டம் வெளம்பரத்துக்கு மட்டுமில்ல ஜேம்ஸ் பாண்டு படத்துக்கே இந்தாளு லாயக்கு இல்ல.


ஜேம்ஸ் பாண்டு யாருன்னா ஒரு ரகசியா ஏஜெண்டு, புத்திசாலித்தனமான, ஹேண்ட்சமான, பெண்கள் விசயத்தில் ஒரு நித்தியானந்த தனமான ,என்னேரமும் தனது மிஷன் பற்றி எதையோ சிந்தித்துக்கொண்டு அதே நேரம் அதனை வெளியில் காட்டாமல் ஒரு மர்ம புன்னகையோடு வலம் வரும் திறமையான ஏஜெண்டு. இது இயன் பிளேமிங்கோட சிந்தனைல வந்தது. ஆரம்பத்தில சிறுகதை, அப்புறம் நாவல், இப்போ படம் வரைக்கும் வந்திரிச்சு.


பிளேமிங்கோட கற்பனைக்கும் அல்லது ஜேம்ஸ் பாண்டு தொடர்பில் நம்மளோட மைண்ட்ல உண்டாகி இருக்கிற இமேஜுக்கும் இந்தாளுக்கும் (டேனியல் கிரேக்) ரொம்ப தூரம். இவரோட ஜேம்ஸ் பாண்டு படங்களை விட இவரு நடிச்ச "டிஃபென்ஸ்" படம் சூப்பரா இருக்கும். அந்த மாதிரி ஏதாவது ட்ரை பண்ணி இருந்தா இன்னேரம் இதை விட பெரிய எடத்தில் இருந்திருப்பாரு. 


ஜேம்ஸ் பாண்டு அப்டீன்னா எனக்கு ஒடனே ஞாபகம் வாறது யாருன்னா அது "பேர்ஸ் ப்ரோஸ்னன்" தான். யப்பா! ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்காகவே செய்த மாதிரி ஒரு முகம், துறு துறுன்னு எதையோ தேடும் கண்கள், நித்தியானந்த தனத்துக்கு ஏத்த வாட்டமான முகம், சேசிங் பண்றதுக்கு வாகான கட்டுமஸ்தான் உடல் , யாரோடும் பேசு போதும் தனக்கு ஏதாவது பாயிண்டு சிக்குமாங்கிற ஜேம்ஸ் பாண்ட் தோரணை மேனரிசம், முகத்திலே தெரியும் ஒரு புத்திசாலித்தன களைன்னு ஒரு மார்க்கு கொறையாத ஜேம்ஸ் பாண்டு அவரு தான்.அவரோட "டை எனதெர் டே", "டுமாரோ நெவெர் டை" இந்த ரெண்டு படத்தையும் எத்தின வாட்டி வேணுமனாலும் பாக்கலாம், அவ்ளோ சுவாரசியமான நடிப்பு, மேனரிசம்!

பேர்ஸ் ப்ரோஸ்னன்

ப்ரோஸ்னனுக்கு முன்னாடி இருந்த ஜேம்ஸ் பாண்டுகளில் முதலாவது ஜேம்ஸ் பாண்டான சேன் கொனேரே கூட பரவாயில்லை, ஒரு ஜேம்ஸ் பாண்ட் களை இருந்தது, ஆனா என்ன , இன்வஸ்டிகேட் பண்ற மேனரிசத்தை முகத்திலும் கண்ணிலும் காடுகிறேன் பேர்வழின்னு அப்பப்பொ ஏதோ திருட்டு ஆட்ட இருட்ல சமச்சு தின்னவனாட்டம் ஒரு முழி முழிப்பாரு பாருங்க, ஏது இந்தாளே தன்னய காட்டி குடுக்கப்போறானே பாவம்னு ஒரு பரிதாப உணர்ச்சி வர்றத தவிர்க்க முடியிறது இல்ல. ஆனாலும் இவரோட இன்டியானா ஜோன்ஸ் நல்லாவே இருக்கும்!


 அது போல ரோஜர் மூர் கூட நல்ல தெரிவு தான் என்றாலும் ரொம்ப கிழண்டு பொனதுக்கு அப்புறமும் அவரு பண்ன ரவுசு + ஆக்ஷன் அதகளங்களை அவரு ஒரு ஜேம்ஸ் பாண்ட் ஏஜெண்ட்ன்ன போதும் ஏத்துகொள்ள முடியாம இருந்திச்சு. அவரு ரவுசு பண்ணும் போது சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு சம்பவம் தான் ஞாபகம் வந்திச்சு. ஆடு மேய்க்கப்போன இடத்தில் ஜாலியாக இருக்க அழைத்த போது வரமறுத்த 56 வயது மனைவியை மார்பு மற்றும் மர்ம ஸ்தானத்தில் கத்தியால் குத்திய 63 வயது கணவன் கைது!


இப்போ நம்ம டானியேல் கிரேக்கு! மொதோ படமான "கசினோ ரோயல்" படத்திலேயே மனிதரை பாக்க பாவமா இருந்திச்சு. ஜேம்ஸ் பாண்ட் என்றால் எந்த மிஷனையும் ஒரு ஜாலியாக அசால்ட்டாக , சாதூரியமாக செய்பவன் என்ற இமேஜ் இருக்க , பாவம் நம்மாளு ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க்றாப்ல மூஞ்சிய வச்சிக்கிட்டு இருந்தாரு. இந்த காண்டம் வெளம்பரத்தில கூட பாருங்க ஜேம்ஸ் பாண்டடின் அந்த பாடி லாங்குவேஜ் மேனரிசம் மிஸ்ஸிங். எதையோ இன்வஸ்டிகேட் பண்ணுவது போல் பாருன்னா , அவசரமா ஒன்னுக்கு வரும் போது , நாம எந்திரிச்சு போக முடியாத ஏதும் முக்கியமான மீட்டிங்கல இருந்தோம்னா , நெளிஞ்சுக்கிடே ஒரு ஃபேஸ் எக்ஸ்பிரஷன் குடுப்போம் பாருங்க... அந்த மாதிரி குடுத்திருப்பாரு. அதுவுமில்லாம அநியாயத்துக்கு ரொம்ப சீரியசா இருப்பாரு அண்ணன்! ஒரு வேள "தம்பி இது ஜொனி இங்கிலீஷ் கிடையாது, சீரியசான ஜேம்ஸ் பாண்ட் படம், சீரியசா நடிக்கணும்"ங்கிறத தப்பா புரிஞ்சிக்கிட்டாரோ என்னமோ? கிரேக் ஒரு நல்ல நடிகர் தான் ஆனா ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்துக்கு ரொம்ப ச்சாரி.......... பாப்போம் ஏதோ "ஸ்கை ஃபோல்" அப்டீன்னு ஒரு படம் பண்றாராம்... எது வுழப்போதோ?எனக்கு என்னான்னா , அந்த காண்டம் வெளம்பரத்தை இன்னும் கொஞ்சம் பெட்டரா எடுத்திருக்கலாமோன்னு தோணுது, இந்த வெள்ளக்காரனோட காண்டம் வெளம்பரத்துக்கு நம்மூரு "மூட்ஸ்" காண்டம் வெளம்பரம் எவ்வளவோ தேவல!

டானியேல் கிரேக்
17 comments:

 1. அணுகுவோம்ல..
  படம் நான் பார்க்கவேயில்லை.. ஏனோ பார்க்கத்
  தோணவும் இல்லை..

  இது குவான்டம் ஒஃவ் சோலஸுக்கு பிந்திய விமர்சனமா? இல்ல ஸ்கைஃபாலுக்கு முந்திய முன்னோட்டமா?

  டானியல் கிரேக் ஒரு டம்மி பீஸு என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. ///இது குவான்டம் ஒஃவ் சோலஸுக்கு பிந்திய விமர்சனமா? இல்ல ஸ்கைஃபாலுக்கு முந்திய முன்னோட்டமா?///

   அட ! இல்ல பாஸு... போரடிக்குதேன்னு படம் பாக்க முடிவு பண்ணினேன் , சரி ஜேம்ஸ்பாண்டு படமாச்சே, ரொம்ப நாளா பாக்கவேயில்லன்னு பாத்தா , இந்த மாதிரி பதிவு எழுதுற மாதிரி இருக்கு படம்!

   ////டானியல் கிரேக் ஒரு டம்மி பீஸு என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன்!///

   ஆனா அவரோட டிஃபன்ஸ் படம் சூப்பரா இருக்கும்!

   Delete
 2. பாண்டு'ன்னா கில்லில " அவன் நெருப்பு மாதிரி இருந்தான் சார் " ன்னு சொல்லுவாரே ... அவரா ? any way , அருமையான தகவல்கள் . பகிர்வுக்கு நன்றி . தி . மு . க . ஒட்டு எண் "௦ "

  ReplyDelete
  Replies
  1. யோவ் அவரு பீ.பாண்டுய்யா... இவரு ஜேம்ஸ் பாண்டு...!

   எனக்கு இப்போதைக்கு விஜய டி. ராஜேந்தரோட ல.தி.மு.க ஓட்டு தான் வேணும்!

   Delete
 3. யோவ் நீரெல்லாம் என்னாய்யா தமிழ் பற்று மெத்திப் போன பெரிய்ய்ய பதீவரு.. ஏற்கனவே தமிழ்ல சுந்தர"காண்டம்", ஆரண்ய"காண்டம்" ன்னு பல காண்டம் விளம்பர படங்கள் வந்துருக்கு,, அத பத்தி மொதல்ல சொல்லலும்..

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் நம்ம கம்பன் எழுதுன ராமாயணத்துல கூட பல காண்டம்கள் இருக்காம்...அத பத்தி ஒரு வரி கூட சொல்லலயே.. ஒரு வேளை திட்டமிட்ட புறக்கணிப்போ...

   Delete
  2. ///. ஏற்கனவே தமிழ்ல சுந்தர"காண்டம்", ஆரண்ய"காண்டம்" ன்னு பல காண்டம் விளம்பர படங்கள் வந்துருக்கு,////

   இப்போதைக்கு இந்த காண்டம் பத்தி தான் சொல்ல முடியும் ஆரண்ய காண்டம் பத்தி குமாரராஜாக்கிட்ட ஃபோன் போட்டு தெரிஞ்சிக்கோங்க! ( என்னாமா கோத்து விர்றாய்ங்க!)

   /////அப்புறம் நம்ம கம்பன் எழுதுன ராமாயணத்துல கூட பல காண்டம்கள் இருக்காம்...அத பத்தி ஒரு வரி கூட சொல்லலயே.. ஒரு வேளை திட்டமிட்ட புறக்கணிப்போ...///

   அதெல்லாம் பழைய காண்டமய்யா... இப்பெல்லாம் அது யூஸ் ஆவாது, நமக்கு புதுசுதானே உதவும்!

   Delete
 4. அடச்சே ... பயபுள்ள காம்பஸ்லாம் இழுத்து மூடினதால புதுசா சுயதொழில் ஆரம்பிச்சுடுச்சு...அப்பப்போ தேவைப்படும்போது வாங்கிக்கலாம்னு நம்பி வந்தா, இப்படி ஏமாத்திட்டியே கிசோகரு? அடப்போய்யா..

  ReplyDelete
  Replies
  1. செத்துப்போனா கிளிக்கு எதுக்கு கூண்டுன்னு நம்ம ஜே.ஸட் கேக்க சொன்னாரு! ஹி..ஹி..ஹி.. :)

   Delete
 5. ஹலோ ... இந்த காண்டம் ஒவ் ஹோல் சேல்ஸ் படத்துக்கு முன்னாடி காசினோ ரோயல் படத்துல நாக்காலில க்ரேய்க்கை உட்கார வச்சு கொஞ்சம் அடி கொடுப்பாங்க பாத்தியா? பாத்த எனக்கே அடிவயிற்றுல இருந்து அப்படியே ஏதோ வாய் வரைக்கும் வந்துடுச்சு...அப்படியெல்லாம் அடி வாங்கினப்பிறகு இந்தாளுக்கு காண்டம் தேவைப்படுமா?

  ReplyDelete
  Replies
  1. பாத்தேன்.. பாத்தேன்.. அந்த அடி விழுந்த பொறகும் இந்த படத்தில ஹீரோயின் கூட ரவுசு பண்றாரே! ஒரு வேள எம்16 குரூப் அடிஷனலா ஏதும் செஞ்சு பூட்டி விட்டிருப்பாய்ஙளோ?

   Delete
 6. Sean connery in Indiana Jones?, verify pl. Harrison ford is Indiana Jones.

  ReplyDelete
  Replies
  1. "Indiana Jones and the Last Crusade" என்ற படம் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் நண்பரே!

   Delete
 7. condom of hole sales- மச்சி ஓட்டை விழுந்த காண்டம வாங்கிரவைன்களும் இருக்க்காயங்கலாடா??

  ReplyDelete
  Replies
  1. உன்னய நான் சொல்லுறனான் எப்ப பாரு உன்னப்பத்தியே பேசுறத நிறுத்து எண்டு! :)

   Delete
 8. ஹாலிவுட் மொக்கைகள்...

  ReplyDelete
 9. 'பியர்ஸ் ப்ரெஸ்னன்' தான் என்னோட பேவரைட்டும்! அப்ப்ப்ப்பிடிப் பொருந்திப்போவார்.

  சமீப காலமாக என்னைக் கவரும் எழுத்து உங்களுடையது.. மைந்தன் சிவாவிடமும் உங்களைப் பற்றி பேசுவதுண்டு! கலக்குங்க! :-)

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...