உதைபந்து

Friday, August 10, 2012

விபச்சார வழக்கில் சிக்குமா சன் டி.வி குழுமம்?

இன்னிக்கும் மணி சரியா 6 மணித்துளிகள் 21 நிமிடங்கள் 49வது செக்கனகள் , துலா வருடம், கப்பி மாதம் சரியாக எம கண்ட நேரத்தில் சன் தொலைக்காட்சியின் பிரத்தியேக பிரம்மாண்டமான கன்டெய்னர் லாரி ஒன்று விருதம்பாக்கம் அருகே உள்ள மூத்திர சந்து ஒன்றில் வைத்து சென்னை மாநகர போக்குவரத்து பொலிஸ் அதிகாரி வசூல் ராஜவினால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. சென்னை மாநகர காவல் துறைக்கு வந்த ரகசியமான தொலைபேசி அழைப்பை தொடர்ந்தே , இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரி சுற்றிவளைத்து கைதுசெய்யும் படியாக அப்படி என்னதான் இருந்தது அந்த கன்டெய்னர் லாரியில். கைது செய்து அந்த கன்டெய்னரை திறந்தது தான் தாமதம், அந்த கன்டெய்னருக்குள் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அழகான இளம் பெண்கள் இருப்பதை கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடமை உணர்வு பொங்கிய போக்குவரத்து பொலிசார், தாம் போக்குவரத்து பொலிசார் என்பதையும் மறந்து சன் டி.வி மீது விபச்சார வழக்கு பதிவு செய்துள்ளனர். "ஐயா நீங்கள் போக்குவரத்து பொலிஸ் ஆயிற்றே, எங்களை நீங்கள் காவல் நிலையத்தில் அல்லவா ஒப்படைத்து வழக்கு போடவேண்டும் "? என்று அந்த கன்டெய்னரின் பைலட் கேட்டதுக்கு "கடமைய செய்ய காவலாளி கூட போதுமிடா " என்று பஞ்ச் அடித்ததாகவும் தெரிகிறது.

நீதிமன்றம் மூடிவிட்டதால் , பெஞ்சு கோட்டு டவாலி தலைமையில் சற்று முன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள‌ப்பட்டது. சன் டி.வி சார்பில் ஆஜரான வக்கீல் வண்டுமுருகன் இந்த மூவாயிரம் பெண்கள் தொடர்பான மர்மத்தை விளக்கினார்.

அதாவது "சில மணிநேரங்களாக எமது சன் தொலைக்காட்சியானது, ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பி வருகின்றது. எங்களது வித்தியாசமான அடுத்த நிகழ்ச்சிக்கான விளம்பரம் அதுவாகும். அதன் சாராம்சம் என்னவெனில் , உங்க்ளது வீட்டில் ஏதாவது பழைபொருள் இருந்தாலோ, அல்லது ஏதாவது பொருளை மாற்ற விரும்பினாலோ , சன்.டி.விக்கு அறியத்தாருங்கள் , நாங்கள் அதற்கு மாற்றீடாக புதிய ஒன்ற தருவோம், இது தான் அந்த விளம்பரம். விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு சில மணித்துளிகளில் தமிழ் நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான எஸ்.எம்.எஸ் க்கள் குவிந்துள்ளன. அத்தனையும் ஐயா ! எங்களது மனைவியை மாற்றி தாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளன. அது தான் முதற்கட்டமாக மூவாயிரம் பேரை சப்ளை செய்ய போய்க்கிட்டு இருக்கோம்" என்று விளக்கமளித்தார்.

பிரதிவாதியின் வாதத்தை கேட்ட நீதிபதி ( டவாலி) 2999 பெண்களை கொண்டு செல்லும்படியும் ,மீதமுள்ள ஒருவர் தொடர்பில் ,தான் ரீ-சார்ஜ் போடதும் சன் குழுமத்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து முதல் டெலிவரிக்காக கன்ட்ய்னர் மதுரை நோக்கி பயணமானதாக தெரிகிறது.

**********************************************************************************இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவை எழுதிக்கிட்டு இருக்கேன். என் தொலை பேசி அலறுகிறது.

நான் : ஹலோ....

எதிர் முனை : ( ஹொரர் குரலில்) உங்களுக்கு 21 கோடி ரூபாய் கிடச்சா என்ன பண்ணுவீங்க?

"யோவ் என்ன விளையாடுறியா? யாருடா நீ?

"நாங்க கலைஞர் டி.வில இருந்து பேசுறோம், சொல்லுங்க உங்களுக்கு 21 கோடி கிடச்சா என்ன பண்ணுவீங்க?"

"ஆங்! கலைஞர் என்ன பண்ணுறார்? அவரை நல்லா பாத்துக்கங்க, அப்புறம் டெசோ மாநாட்டு உரை எழுதிட்டாரா? ஆங்! ஏதோ கேட்டிங்களே, ம்ம்ம்ம்... 21 கோடிய வச்சு என்ன பண்ணலாம்? ஹும்ம்ம்ம் ... சென்னைல நல்ல எடமா ஒரு நாலு கிரவுண்டு வாங்கி போடுவேன்"

"வெரி சார்.. இருந்த இடத்தெயெல்லாம் எங்காளுகளே வளச்சு போட்டுட்டாங்க, சொந்த வீடு வச்சிருந்தவனே இப்போ தெருவில நிக்கிறான், உங்களுக்கு நாலு கிரவுண்டு எல்லாம் சரிப்படாது , வேற என்ன பண்ணுவீங்க?"

"அப்புடியா? வேற என்ன பண்ணலா? ம்ம்ம்ம்...... ஆங் ! டெசோ மாநாட்டுக்கு டிக்கட்டு போட்டு வந்து என்னோட தானை தலைவனை பாத்துக்கலாம்ன்னு இருக்கேன்"

"சாரி... டெசோ மாநாடு உண்மை தமிழர்களுக்கு மட்டும் தான், தமிழரளின் விடி வெள்ளிகள் மட்டுமே கலந்து கொளலாம். உங்களால முடியாது. வேற என்ன பண்ணுவீங்க?"

"அதுவும் உண்மை தான், ஈழத்தமிழர்கள் நாங்கெல்லாம் சாகும் வரை போராட்டம் நடத்தும் அய்யா தானே விடிவெள்ளி. அப்புறம் என்ன செய்யலாம்"? ஆங்.... தமிழ் நாட்டுக்கு வந்து ஒரு நல்ல படமா புரடியூஸ் பண்ணுவேன்"

"அதுமட்டும் முடியாது.... எந்த படம் எடுக்கிறதா இருந்தாலும் அது எங்க கிளவுட் நைன், ரெட் ஜெயன்ட் மட்டும் தான் எடுக்கும் . உங்களால அவளவு ஈசியா எடுத்திர முடியாது"

"அட என்ன சார்... வேற என்ன பண்ணலாம்? சரி நமக்கு தான் ஏதும் பண்ண முடியல, சரி சமூகத்து ஏதாவது பண்ணிட்டு போவமே, ! சார்.. என் சொந்த செலவில ரோடு எல்லாம் சுத்தம் பண்ணுவேன், ஒரு சின்ன கிளினிக் ஆரம்பிச்சு இலவச மருத்துவம் பண்ணுவேன்"

"இது தான் ரொம்ப தப்பு, ரோட்டு யாரு கிளீன் பண்ரதுன்னு காப்ரேஷனுக்கும், விஜய காந்து ஆளுங்களுக்கும் பெரிய பட்டிமன்றமே நடக்குது, அப்புறம் நீங்க கிளினிக் ஆரம்பிக்கணும்னா எங்க கட்சி ஆளுங்களுக்கு கமிஷன் வெட்டணும், கமிஷன் போக உங்களுக்கு வெறும் 21 ரூவா தான் குடுப்போம், அதனால அந்த ஐடியாவ விட்டுபுட்டு வேற ஏதாவது சொல்லுங்க? சொல்லுங்க உங்களுக்கு 21 கோடி கெடச்சா என்ன பண்ணுவீங்க?

"ட்ச்க்ஹ்ச்ஃப்க  கொய்யாலே !!!!!  என்னடா எங்கள பாத்தா உங்களுக்கு எப்புடிடா இருக்கு? தக்காளி கைல கெடச்சா சாவடிப்பன்டா பன்னாட ...... ஹ்க்த்க்ஹ்க்   ஹ் ஹ்வ்கு   க்ஹ்க்ன்ஹ்யெஉ  .. இன்னொரு தடவ இந்த கேள்விய கேட்டா உங்குடும்பத்தில உள்ள ஒருத்தன் விடாம திட்டுவன்டா..... எனக்கு அழுக அழுகையா வருதுடா.. போடா..... மரியாதையா ஃபோனை வையி! இல்லனா என்னோட சாவுக்கு நீதான் காரணம்னு எழுதி வச்சிட்டு செத்து போயிருவன்டா"!!!

ஆமா உங்களுக்கு 21 கோடி கெடச்சா நீங்க என்ன பண்ணுவீங்க?

**********************************************************************************படவா கோபி ஒரு நாள் தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு குடும்பபெண்பணி அவரை அழைத்தார்.

'என்ன சார்.. விம் வெளம்பரத்தில மட்டும் வந்து எல்லா வீட்டு சட்டி, பானை, பண்ட பாத்திரம் எல்லாம் கழுவி குடுக்குறீங்க, எங்க வீட்டையும் வந்து கொஞ்சம் கழுவி குடுங்களேன்"

படவா கோபி செம காண்டாயிட்டாரு.

"ஏன் அப்பிடியே வந்து உங்க வீட்டு டாய்லெட்டையும் கழுவி விட்டிர்றேனே?"

அந்த பெண்மணி கூலாக சொன்னாள்.

"அதுக்கு அப்பாஸும், விஜய் ஆதிராஜும் வந்துக்கிட்டு இருக்காங்க"


டிஸ்கி: சும்மாசிரிப்புக்காக‌ எழுதினது, எவனுக்காவது ஏதாவது சிந்திக்கணும் போல இருந்தா சிந்திச்சுக்கோ, நான் ஒன்னும் ஃபீல் பண்ண மாட்டேன்


12 comments:

 1. சண் டிவி மேட்டர் படிச்சு சிரிப்பை அடக்க முடியல பாஸ்

  ReplyDelete
  Replies
  1. நம்மாளுகள பத்தி தான் தெரியுமே! அவனவன் இத பத்தியே பேசிக்கிட்டு இருப்பான். வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 2. சிந்திக்கலீங்ஸ்.. ஆனா நல்லா சிரிச்சேங்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. அவனவனுக்கு வாறத தானே பண்ண முடியும்!! நாமெல்லாம் சிந்திச்சு.... ஹெஹ் ஹேய்.. ஹேய்....

   Delete
 3. //ஆங்.... தமிழ் நாட்டுக்கு வந்து ஒரு நல்ல படமா புரடியூஸ் பண்ணுவேன்"//

  நீ எந்த மாதிரி நல்ல படமா எடுப்பன்னு எங்களுக்கு தெரியாதா?? எது நீ எடுக்கற படத்தோட ஹீரோயினைத்தான் மேல ஃபோட்டோவுல போட்டிருக்கியா??

  ReplyDelete
  Replies
  1. நான் எப்பிடி படம் எடுத்தாலும் மொதோ ஆளா வந்து நீ பாத்திர மாட்டியா? அப்பிடியே கையோட விமர்சனமும் போட்டுடணும். அது டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் மச்சி, சமந்தா கூட என் டார்லிங் காஜலும் உண்டு!

   Delete
 4. இப்படியும் ஒரு கற்பனையா...? உண்மையில் பிரம்மித்தேன்

  ReplyDelete
  Replies
  1. நமக்கு உண்மையா எழுத தான் அண்ணே வராது, கற்பனை ரொம்ப நல்லாவே வரும்! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 5. நானும் என்னவோ ஏதோன்னு படிச்சா ஒரே காமேடி கலாட்டாவா இருக்கே! தொடர்ந்து கலக்குங்க.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அண்ணே! அடிக்கடி வாங்க சந்திக்கலாம்!

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...