உதைபந்து

Tuesday, June 26, 2012

நாலுலேர்ந்து ரெண்டு போனா மிச்சம் ரெண்டு! இது எங்களுக்கு தெரியாதா?என்னதான் பிரகாஸ்ராஜ் பெரிய வில்லனா இருந்தாலும் பவர்ஸ்டார் படத்தில நடிச்சா பவரு கைல அடி வாங்கியே ஆகணும். என்னதான் ரஜினி சுப்பர்ஸ்டாரா இருந்தாலும் படத்தில டுவிஸ்டு வேணும்னா சந்தர்ப்பத்தில சப்ப வில்லனுககிட்ட நாலு சாத்து வேண்டித்தான் தீரணும். மறுபடி என்னடா கொழப்புறேன்னு பாக்குறீங்களா? அதுசரி நான் எப்போ தெளிவா எழுதியிருக்கேன்? உங்களோட குழப்பம் நியாயமானது. ஆனாலும் மொக்க உதாரணம் சொன்னாலும் பக்கா மேட்டர் இல்லாம நான் சொல்ல மாட்டேன்னு பச்ச கொழந்தைக்கு கூட தெரியும். # முடியல படுத்தாம மேட்டருக்கு வாடா!

இங்க பிரகாஸ்ராஜ் யாரு , பவரு யாரு , சுப்பர்ஸ்டார் யாருன்னு எல்லாம் பஞ்சாயத்துக்கு வரப்படாது. அது தானா வாரது மெயின் மேட்டர் எதுவோ அத பட்டும் "பக்"ன்னு புடிச்சுகிட்டு "கப்"ன்னு போயிடனும். யூரோ கிண்னத்தின் பரபரப்பான தருணங்கள் தொடங்கி இப்போ பப்பரப்பான தருணங்கள் ஆரம்பமாகி இருக்கு.# அது தாங்க காலிறுதி முடிஞ்சு, நாளேலேர்ந்து ( 27/06/2012) அரையிறுதிக்கான போட்டிகள் ஆரம்பமாக இருக்கிறது.

அந்த அரையிறுதிக்குள் போவதற்கு முன்னம் , நாற வாயாக இருந்து இப்போது கிட்டத்தட்ட கணிப்புகள் சரியாகி வருவதால் சாதா வாயாக புரமோஷன் அடைந்திருக்கும் எனது வாய் சொன்ன காலிறுதி முடிவுகள் எப்படி சரியாக இருக்கிறது என்று பார்ப்போம். # யார் செய்த புண்ணியமோ, இந்த வாட்டி தப்பிச்சுட்டேன்.


முதல் காலிறுதி 

போர்த்துக்கல் எதிர் செக் குடியரசு

நான் சொன்னது : போர்த்துக்கல் வெற்றி , முடிவு : போர்த்துக்கல் வெற்றி ###எலேய் ரொனால்டோ! தாங்க்ஸ்சுப்பா....

நான் சொன்ன கோல் கணக்கு : 2-1 , போட்டி முடிவு : 1-0 ### லைட்டா மிஸ் ஆச்சு, டேய் செக்கு பசங்களா இருக்குடா உங்களுக்கு அப்புறமா!

இரண்டாம் காலிறுதி 

ஜேர்மனி எதிர் கிரீஸ்

நான் சொன்னது : ஜேர்மனி வெற்றி , முடிவு : ஜேர்மனி வெற்றி
எனது கோல் கணக்கு : (2-0), ( 3-1) , போட்டி முடிவில் : 4-2 ### இந்த ஜேர்மன் பயலுக ஜமாய்ச்சுட்டாங்க போ!


மூன்றாவது காலிறுதி.

பிரான்ஸ் எதிர் ஸ்பெயின்

நான் சொன்னது :ஸ்பெயின் வெற்றி , முடிவு : ஸ்பெயின் வெற்றி ### எலேய் JZ! சாரிப்பா ! நான் அப்பவே சொன்னேன்ல, நாம பிரார்த்தன பண்ணி என்ன பிரயோசனம் அந்த பக்கி பய புள்ளைக ஆடின ஆட்டம் அப்புடி!

எனது கோல் கணக்கு: (2-1), (1-0), போட்டி முடிவில் : 2-0 ### போடா பென்ஸமா ! நீயும் உன்னோட மண்டையும்! 


நான்காவது காலிறுதி 

இங்கிலாந்து எதிர் இத்தாலி

நான் சொன்னது : இங்கிலாந்து வெற்றி , முடிவு :இத்தாலி வெற்றி

# "ஐ! அசிங்கப்பட்டியா ...அசிங்கப்பட்டியா..." அப்டீன்னு எவன்டா ரொம்ப சந்தோஷத்தில துள்ளுறது ? மவனே மருவாதயா நான் முன்னாடி போட்ட பதிவ போய் பாரு  "பெனால்டி வரக்கூடும்னு" முன்னாடியே கணிச்சு போட்டிருக்கேன்டா! யாருக்கிட்ட ??? ஹெஹ்...ஹேய்........!! 

"கோபிநாத்து கோர்ட்டு போடுற மறந்தாலும் , சரியா கணிச்சு சொல்லுற தெறமைய மறந்திட மாட்டான்டா இந்த கிஷோகரு!"
 ### அப்பனே முருகா ஞானபண்டிதா! ஏதோ ரெண்டு மேட்சில நான் சொன்னது சரியா போனத வச்சி ஆணவத்தில என்னோட "டங்கு" (Tongue)  "டிங்கு...டிங்கு"ன்னு ஆடுது ஏழுகொண்டலவாடா! இந்த வாட்டியும் ஏதும் அசம்பாவிதம் நடந்திராம , நான் சொல்லப்போற குறி எல்லாம் சரியா போச்சுன்னா நம்ம "குருஷேத்திரம்" கோபிநாத்துக்கு அலகு குத்தி, டாக்டர் டூலிட்டிலுக்கு மொட்ட போடுறன்டா வெங்கட்ரமணா! 

எனக்காக இத கூட பண்ணமாட்டியா கோபிநாத்?


இப்போ மனசுக்குள் ஒரு கேள்வி , ஆகா ஓகோன்னு வந்து இப்போ புஸ்ஸுன்னு ஆகியிருக்கும் சகுனி பத்தி பேசுறதா ?இல்லாங்காட்டி வரப்போற பில்லா பத்தி பேசுறதான்னு? மறுபடியும் பப்படிச்சவன் போல பேசுறன் எண்டு தப்பா நினைக்காதிங்கோ, அதாவது காலிறுதியில் கழுத்தறுபட்ட அணிகள் எப்படி அறுபட்டது அப்டீன்னு பேசுறதா இல்லாங்காட்டி அரையிறுதியில் ஆடப்போகும் அணிகளை பத்தி பேசுறதான்னு! பல்பு வாங்கின அணிகளை பத்தி பேசுறத விட இப்போதைக்கு பிறைட்டா எரியும் அணிகளை பாத்துடலாம்.


ஆனாலும் காலிறுதியில் வெளியேறிய அணிகள் பத்தி ஒரு ஹைக்கூ வடிவில் சொல்லி பிரியா "வடை" குடுத்து அனுப்பலாம்ன்னு நினைக்கிறேன்.

செக் குடியரசு : நெனச்சமாதிரியே ஆடின! நான் நெனச்சமாதிரியே நடந்திச்சு, சோ........ குட் பை!

கிரீஸ் : நீ ஆடின ஆட்டத்துக்கு காலிறுதியே ரொம்ப ஓவர்! ஓடிப் போயிர்...........!பிரான்ஸ் : ஓ! நீங்க புட்பால் தான் ஆடினிகளா? நானும் ஏதோ ஸ்பெயினுக்கு பிராக்டிஸ் குடுக்க வந்திருக்கியன்னு நெனச்சேன். றிபரி, பென்ஸமா, மலுடா, ரமி மகா சொதப்பல். போங்கடா போய் புள்ள குட்டிங்களுக்காவது எப்பிடி ஃபுட்போல் ஆடுறதுன்னு சொல்லிக்குடுங்கடா!

இங்கிலாந்து : இந்த சுத்துபோட்டிலயே முந்தநாளுதான் ஒழுங்கா ஆடுனிக.....அதிலயும் பெனால்டி அடிக்கதெரியாம கோட்டவிட்டுட்டிகளே பக்கிகளா.......... ! எலெய் அஷ்லே யங், அஷ்லே கோல் இவளவு வெளிச்சத்தில இந்த பெரிய ஓட்டயா இருக்கிற கோல்போஸ்டுக்குள்ளாறயே கோல் அடிக்க முடியாம வெளிய அடிக்கிறிகளே.... நீங்க எல்லாம் எப்புடித்தான் அந்த இருட்டில....... ஹெஹ் ஹேய்....... ஹேய்........ யாரப்பா இவனோட பக்கத்து வீட்ல குடியிருக்கிறது? மச்சக்காரனப்பா நீ....... ரொம்ப சீக்கிரமே உனக்கு அதிஷ்டம் அடிக்கும் போ...........


இப்போ நேரடியா நாளை ஆரம்பமாகவிருக்கின்ற அரையிறுதிப் போட்டிகளுக்குள் போயிடலாம். முதலில் முதலாவது அரையிறுதியான போர்த்துக்கல் எதிர் ஸ்பெயின் போட்டியை ( 27/06/2012) பார்க்கலாம்.

செக்குக்கு செக் வைத்துவிட்டு போர்த்துக்கல்லும், பிரான்ஸை ஃபிரை பண்ணிவிட்டு ஸ்பெயினும் அரையிறுதியில் மோத தயாராக உள்ளன. ஸ்பெயினை பொறுத்தவரையில் குழுநிலை ஆட்டத்தின் போது முதலிரு போட்டிகளிலும் வியா, புயோல் இல்லாத குறை தெரிந்தாலும் அடுத்துவந்த அத்தனை போட்டிகளிலும் இவர்களது ஆட்டம் பின்னி பெடலெடுக்கிறது. லாலீகாவில் சொதப்பிய ஃபப்ப்ரிகாஸ் உட்பட இனியஸ்டா, சாவி, சாவி மர்டீனஸ், ஜோர்டி அல்பா, அலன்சோ என்று ஒரு பட்டாளமே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஸ்பெயினின் பொதுவான பலமே அவர்களது டிகி-டக்கா பாணியிலான ஆட்டமுறைதான். இந்த டிகி-டக்கா ஆட்டமுறை போர்த்துக்கல்லுடன் ஆடும் போது மேலும் பலமான ஒரு முறையாக இருக்கிறது. எப்படியென்றால் டிகி-டக்கா ஆட்டமுறையில் கோலுக்கான வேர் உருவாவது பெரும்பாலும் மிட்ஃபீல்டில் தான், அல்லது மிட்ஃபீல்டர்களே இந்த வேரினை உருவாக்குவபர்களாக இருப்பார்கள்.  டிகி-டக்கா ஆட்டமுறையில் முக்கோண வடிவில் அமைந்து மூன்று மிட்ஃபீல்டர்கள் தங்களுக்கிடையில் பந்தை பரிமாறி எதிரணியின் பின்கள வீரர்களை சற்று மிட்ஃபீல்ட் நோக்கி நகர்த்துவார்கள்.

இவ்வாறு இவர்கள் பந்தை பரிமாறுகையில் ஒருகட்டத்தில் மிட்ஃபீல்டில் பந்த தடுக்கும் நோக்கில் கவனத்தை எதிரணியின் பின்கள வீரர்கள் மிட்ஃபீல்ட் நோக்கி திருப்புகையில் எதிரணியின் பின்களத்தில் உருவாகும் வெற்றிடத்தை பயன்படுத்தி ஸ்பெயினின் "விங்குகள்" (wingers) இரண்டு பக்கத்தாலும் சிட்டாக பறப்பார்கள். உடனே பந்து மிட்ஃபீல்டிலிருந்து மைதானத்தின் இடது அல்லது வலது விங்குக்கு அனுப்பப்படும். எதிரணியின் பின்கள வீரர்கள் அசரும் கணப்பொழுதில் இது நடந்துமுடிந்துவிடும்.உடனே பந்தை கொண்டு மைதானத்தின் ஓரத்தை பிடித்து எதிரணி கோல் கம்பத்தை நோக்கி துப்பாக்கி சன்னமாய் பறக்கும் விங்குகள் ஒரு கட்டத்தில் எதிரணியின் கம்பத்துக்கு முன்னால் காத்திருக்கும் தமது அணியின் முன்கள வீரர்களுக்கு "கிராஸ் பாஸ்" (cross pass)  செய்வார்கள். அப்புறமென்ன எதிரணி வீரர்களுக்கு சோதனை தான்.

நேர்த்திகடனுக்கு பின்னர் டாக்டர் டூலிட்டில்!

ஒரு வேளை இரண்டு விங்குகளும் (இடது விங்க், வலது விங்க்) தடுக்கப்பட்டால் அல்லது குறிவைக்கப்பட்டு அவர்களது நகர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டால் இருக்கவே இருக்கிறது டிகி-டக்காவில் இன்னொரு முறை அதாவது பந்தை மிட்ஃபீல்டிலிருந்து தங்களுக்கிடையே பரிமாறி பரிமாறி எதிரணியின் கோல் கம்பத்துக்கருகில் வந்து இடைநடுவால் முன்கள வீரருக்கு பந்தை அனுப்புவது ( Break through passing method). இந்த முறையில் கோல்காப்பாளர் மிகக்க‌வனமாய் இருக்க வேண்டும். இந்த சீசனில் மெஸ்ஸி அடித்த 73 கோல்களில் பெரும்பாலானவை இம்முறையில் தான். மெஸ்ஸிக்கு இந்த முறையில் பந்த அனுப்பிய எமகாதகர்கள் இப்போது ஸ்பெயினில் இருக்கிறார்கள். இனியெஸ்டாவும் , சாபியும்!

இப்போது இந்த டிகி-டக்கா முறைதான் போர்த்துக்கல்லுக்கு பெரும் சவாலாய் இருக்கப்போகிறது. டி-டக்கா முறையின் முக்கிய தேவைகளான மிட்ஃபீல்டர்கள், விங்குகள், சிறந்த முன்கள வீரர்கள் அனைவரும் ஸ்பெயினின் கைவசம் இருக்கிறார்கள்.

இந்த டிகி-டக்கா முறையை எதிர்த்து அல்லது முறியடித்து ஆடவேண்டுமானால் இந்த முறையை மிட்ஃபீல்டிலிருந்து தடுத்தாகவேண்டும். இதற்கு சிறந்த டிஃபன்சிவ் மிட்ஃபீல்டர்கள் இருப்பது அவசியம். ஆனால் போர்த்துக்கல்லிடம் இனியஸ்டாவினதும் சாபியினதும் ஆட்டத்தை முறியடித்து ஆடக்கூடிய டிஃபன்சிவ் மிட்ஃபீடர்கள் இருக்கிறார்களா என்றால் விடை அவளவு சுவாரசியமாக‌ இருக்காது. சரி பின்கள வீரர்களை சற்று முன்நகர்த்தி இந்த மிட்ஃபீல்டர்களை கட்டுப்படுத்தலாம் என்று யோசனை அந்த யோசனை செய்யும் கணப்பொழுதை பயன்படுத்தி   கூட டேவிட் சில்வாவும்,ஃபப்ரிகாசும் , டொரைசும் கோல் அடித்துவிடுவார்கள்.

போர்த்துக்கல்லின் பின்கள வரிசை சற்று பலம் தான் என்ற போதிலும் ஜோஸ் மொரின்ஹோவின் வளர்ப்பான பெபேவும், ஃபபியோ கொயின்ராவோவும் சரியான சுடு தண்ணிகள். எந்த நேரத்தில் சிவப்பு மஞ்சள் அட்டைகள் வாங்கி ரொனால்டோவின் கழுத்தறுப்பார்கள் என்று சொல்லமுடியாது. ஆக மொத்தத்தில் பார்க்கா வேகமாகவோ , அதிரடியாகவோ , சுவாரசியமாகவோ இல்லாதபோதும், நுணுக்கத்தை பிரதானமாக கொண்ட  ஸ்பெயினின் டிகி-டக்கா ஆட்ட முறை போர்த்துக்கல்லுக்கு தலையிடியாக இருக்கப்போகிறது.ஆனாலும் இந்த முறைமையில் போர்த்துக்கல் பெற்றுக்கொள்ளக்கூடிய அனுகூலங்களும் இல்லாமல் இல்லை. டிகி-டக்கா முறையில் மிட்ஃபீல்டர்களால் முன்கள வீரர்களுக்கு அனுப்பப்படும் பந்து எதிரணியால் சரியான தருணத்தில் தடுக்கப்பட்டால் ஸ்பெயினின் பின்கள வரிசைக்கும் மிட்ஃபீல்டுக்கும் நடுவில் பெரியதொரு வெற்றிடம் உருவாகும். காரணம் முறையில் பந்த அனுப்புவதற்காக ஸ்பெயினின் அத்தனை மிட்ஃபீல்டர்களும் போர்த்துக்கல்லின் கோல் கம்பத்தை மொய்த்திருப்பார்கள். எனவே ஸ்பெயினின் பின்களத்துக்கும் மிட்ஃபீல்டுக்கும் இடையில் இருக்கும் வெற்றிடத்தை பயன்படுத்தி கோல் போட வாய்ப்பு அதிகம். ரொனால்டோ, நானி ஆகிய சிறந்த வீரர்கள் முன்களத்தில் இருப்பதால் இந்த வாய்ப்பை சாதகமாக பயன் படுத்திக்கொள்ளலாம். புயோல் இல்லாத ஸ்பெயின் பின்கலம் கூட கொஞ்சம் பல்கீனம் தான். ஆனாலும் சாபி அலன்சோவை தாண்டுவது அவசியம். அது போக கடினமான பந்துகளை கோலாக்கும் ரொனால்டோ இலகுவான பந்துகளை கோட்டை விடாமலும் இருக்கவேண்டும்.

இரண்டு அணிகளின் ஆட்டமுறை மற்றும் திறமையான வீரர்கள் என்ற அடிப்படையில் பார்க்கும் போது இந்த போட்டியில் ஸ்பெயின் அணிவெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். வெற்றிவிகிதம் 70% ஆக இருக்கின்றது. # மூலம்  விக்கிலீக்ஸ்.

எதிர் பார்க்கும் கோல்கள் : ( 2-1) அல்லது ( 1-0) ஸ்பெயின் வெற்றி.


ஸ்பெயினுடனான போட்டிக்கு பின்னர் அண்ணன் JZ!


அடுத்து  ஜேர்மனி எதிர் இத்தாலி மோதவிருக்கும்இரண்டாவது அரையிறுதி போட்டியை (28/06/2012) பார்க்கலாம்.

காலிறுதியில் நான் எதிர்பார்த்ததைவிட மிரட்டலாக ஆடியது இத்தாலி அணி. நான் எனது முன்னைய பதிவில் இத்தாலி இன்னமும் தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறியிருந்தேன். அது அவர்களுக்கு புரிந்து விட்டதோ என்னமோ ?  # யாருப்பா அது என்னோட பதிவுகள இத்தாலி மொழில மொழிபேர்த்து வெளியிடுறது?. காலிறுதியில் இத்தாலியின் ஆட்டம் விறுவிறுப்பாக அதே நேரம் சிறப்பாகவும் இருந்தது. "கசானா, பிர்லோ, பொலேட்டலி , இகான்ஸியோ அபாற்டே ஆகியொரது ஆட்டம் பிரம்மிப்பு. இங்கிலாந்துடனான ஆட்டத்தின் போது பொலேட்டலிக்கு வந்த இலகுவான இரண்டு வாய்ப்புக்களை பொலேட்டலி தவறவிட்டாலும் அந்த பிழையை ஜேர்மனுடன் விடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. காரணம் மனிதர் மிரட்டுகிறார், வேகம் + லாவகம்! # தம்பி லாம் + போடெங் உங்களுக்கு நெறைய வேல இருக்குப்பா!

அதுபோல் ஜேர்மனது ஆட்டம் இன்னமும் குறைசொல்லமுடியாத ஆட்டம். மத்திய களத்தில் ஸ்டீன்ஸ்னேகர், ஓர்ஸில் ஆகியோரது ஆட்டம் கனகச்சிதம். லாம் தலைமையிலான பின்களம் கூடுதல் பலம். சமயத்தில் லாம் மற்றும் போட்டெங் ஆகியோர் விங்குகளாக வேலை செய்து முன்களவீரர்களுக்கு உதவி செய்கிறார்கள். அது ஜேர்மன் அணியின் சிறந்த ஒரு ஆட்டமுறை என்று சொல்லலாம்.

எனது ரசனைக்குரியது ஜேர்மனின் முன்களம் தான். கோமஸ், முல்லர், இப்போ புதுசா ஒரு பயல் செமத்தயா ஆடுறாம்பா மார்கோ றியூஸ்ன்னு ! பய ரொம்ப நல்லா வருவான். என்னம ஷொர்ட் அடிக்கிறான். கிரீஸ் கூட அவன் ஆடின ஆட்டம் கண்ணுக்குள்ளயே நிக்குது. அதிலும் அந்த நாலாவது கோல்!!! உலகத்தரம்!!!லார்ஸ் பென்டர், லூகாஸ் பொடலொஸ்கி, சமி கதீரா , ஹும்மல்ஸ் ஆகியோரது ஆட்டம் இத்தாலிக்கு பெரும் சோதனை தான். இத்தாலி இஙிலாந்துடன் காலிறுதியில் ஆடிய ஆட்டம் ஆடினால் மட்டுமே ஜேர்மனுக்கு அழுத்தம் கொடுக்கமுடியும். காரணம் அசந்தால் ஆப்படிக்கும் பயலுகள் எல்லாம் ஜேர்மன் பக்கம் இருக்கானுவ. அட ! முப்பத்துநாலு வயசாகியும் இந்த கிளோஸ் பயல் என்னாமா ஆடுறாம்பா?

நான்கு காலிறுதிகளிலும் நான் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தது பிரான்ஸ் எதிர் ஸ்பெயின் ஆட்டத்தை தான். ஆனால் அந்த போட்டியில் பிரான்ஸ் பல்ப்பு வாங்கியதால் ஸ்பெயின் இலகுவாக வென்றுவிட போட்டி புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... என்று ஆகிப்போனது. ஆனால் மகா ரம்பமாக இருக்கும் என நான் நினைத்த இங்கிலாந்து எதிர் இத்தாலி போட்டி தான் காலிறுதிகளிலேயே பெஸ்ட் என்று சொல்வேன். அது போல் நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டிகளிலும் இத்தாலி எதிர் ஜேர்மனி போட்டிதான் சிறந்த , விறுவிறுப்பான போடியாக இருக்கும். # ஜேர்மன் செமயா ஆடுவாய்ங்கன்னு தெரியும், இங்கிலாந்துகூட நீங்க ஆடின ஆட்டத்த வச்சி , இப்பிடியொரு வார்த்தையை இந்த பயலுக முன்னாடி வார்த்தைய விட்டுட்டேன். எலேய்! இத்தாலி பயலுகளா கால வாரீடாதிங்கப்பா!என்னதான் இருந்தாலும் இந்த நிமிடம் வரை இத்தாலி அணியைவிட ஜேர்மன் அணிபலமாகவே இருக்கிறது. அரையிறுதிய்ல் இத்தாலி அதிசயிக்கத்தக்கவகையில் ஆடினால் ஒழிய வெற்றி ஜேர்மனிக்கு தான்.

எதிர் பார்க்கும் கோல் : (2-1) , ( 3-1) ஜேர்மனி வெற்றி.

மார்கோ றியூஸ் !!!இவன் நல்லா வருவான்டா!


டிஸ்கி: போட்டியில் அணிகள் ஆடும் ஆட்டமுறைமை தொடர்பான ( டிகி-டக்கா வகையானது) அலசல்கள் எனது பார்வையில் மட்டுமே. நான் ஒன்றும் உதைபந்து ஆட்டமுறைமை அலசலில் நிபுணன் கிடையாது. நான் பார்பதை வைத்துக்கொண்டு , எனக்கு ஒவ்வொரு ஆட்ட முறையிலும் சாதகமாக , பாதகமாக படும் விடயங்களின் அடிப்படையில் எழுதுகிறேன். ஆக இது எனது அலசலே .

டிஸ்கி: தலைப்புக்கு பதிவுக்கும் என்ன நம்மந்தம்ன்னு பாகுறீங்களா? மறுபடியும் சொல்றேன் சம்மந்தம் இல்லம எதையும் சொல்லமாட்டான் இந்த பம்பல் உவ்வே சம்மந்தம்! அதாவது அரையிறுதியில் ஆடப்போகும் நாலு அணியிலிருந்து ரெண்டு அணி வெளியேறப்போவுது இல்ல! அது தான்.

19 comments:

 1. நான் ஒன்றும் உதைபந்து ஆட்டமுறைமை அலசலில் நிபுணன் கிடையாது. நான் பார்பதை வைத்துக்கொண்டு , எனக்கு ஒவ்வொரு ஆட்ட முறையிலும் சாதகமாக , பாதகமாக படும் விடயங்களின் அடிப்படையில் எழுதுகிறேன்.

  பொய்யி.. பொய்யி... பொய்யி
  என்ன தல! தன்னடக்கம் இருக்கலாம்தான். அதுக்காக இம்புட்டு தேவையா!

  ReplyDelete
  Replies
  1. இது ஒன்னும் தன்னடக்கம் கெடையாது மச்சி, எனக்கு எதுவுமே தெரியாது அப்டீன்ற உண்மைய சொன்னன். அம்புட்டுத்தேன்.

   Delete
 2. //எலேய் ரொனால்டோ! தாங்க்ஸ்சுப்பா....

  ரொனால்டோ, நானி ஆகிய சிறந்த வீரர்கள் முன்களத்தில் இருப்பதால்

  அது போக கடினமான பந்துகளை கோலாக்கும் ரொனால்டோ //

  சச்சச்சச்சச்சுச்சுச்சுச்சு... யாரப்பா இவன். பெரிய ரொனால்டோ சப்போட்டராக்கியான்!

  தம்பி.. நீங்கள் இங்கு வந்தது அரையிறுதி பற்றி அலச.. ரொனால்டோ துதி பாட அல்லவே!!

  ReplyDelete
  Replies
  1. எலேய்! என்ன? ஒவ்வொரு வசனத்தில இருந்தும் பாதி பாதி டயலாக்குகள சுட்டு போட்டிருக்க? மீதி எங்க டா?

   Delete
 3. //சிறந்த முன்கள வீரர்கள் அனைவரும் ஸ்பெயினின் கைவசம் இருக்கிறார்கள்.//

  யாரு.. அந்த டொரஸ் தம்பியே! அவரு 3 மாசத்துக்கு ஒருவாட்டியல்லே நல்லா வெளாடுவாரு... கடைசியா அயர்லாந்து கூட வேற 2 கோல் போட்டாரே.. அப்படியென்னா அடுத்த செப்டெம்பர் 14ந்தேதி பி.ப 9.12வரைக்கும் அண்ணனிடம் ஒன்னித்தும் எதிர்பார்க்கேலாவே!!

  பேசாம "சிறந்த முன்கள் வீரர்கள் போல் விளையாடக்கூடிய மத்தியகள வீரர்கள் அனைவரும் ஸ்பெயினின் கைவசம் இருக்கிறார்கள்"ன்னு போடுவோமா??

  ReplyDelete
  Replies
  1. ///யாரு.. அந்த டொரஸ் தம்பியே! அவரு 3 மாசத்துக்கு ஒருவாட்டியல்லே நல்லா வெளாடுவாரு...////////

   நீயி சொறதும் சரிதான் மச்சி, ஆனா போர்த்துக்கல்லோட டிஃபென்சிவ் லைனை உடைக்கிறதுக்கு டொறைஸ் போதும்.

   ////பேசாம "சிறந்த முன்கள் வீரர்கள் போல் விளையாடக்கூடிய மத்தியகள வீரர்கள் அனைவரும் ஸ்பெயினின் கைவசம் இருக்கிறார்கள்"ன்னு போடுவோமா??////

   அது தான் ஸ்பெயினோட மிகப்பெரும் பலமே! எவன் எப்போ கோல் அடிப்பான்னு சொல்லவே முடியாது. இவனுக அமெரிக்கன் அலிகேட்டர் போல! பவ்வியமா படித்திருப்பானுக, ஆனா லைட்டா அசந்தா போதும் , பாங்........! கூத்து முடிஞ்சிரும்.

   Delete
 4. அப்படியே முதல் அரையிறுதி!

  நான் நம்பிய நெதர்லாந்து குரூப் ரவுண்டிலேயே குரூப்பாக அடிவாங்கியதனாலும், என் ஆசை அணி பிரான்ஸ் காலிறுதியில் காணாமல் போனதாலும்.. இப்போதைக்கு மலைபோல் நம்பிக்கொண்டிருக்கும் அணி போர்த்துக்கலே!!

  டிகி-டாக்காவுக்கு மேக்ஸிமம் தீர்வான ஆட்டம் "கவுண்டர் அட்டாக்" என்பதை அண்ணன் கவுண்டமனி வீடியோஸ் அல்லது எல் கிளாசிக்கோ வீடியோஸ் பார்த்த எவனுக்கும் விளங்கும்..

  போர்த்துக்கல்லும் அந்தப் பாணியையே பின்பற்றக்கூடும் என்று உங்கள் பப்ரிகாஸ் புலம்பித் தள்ளியுள்ளதாலும்...

  ரெண்டுபக்கமும் 3க்கு 3 என்ற வீதத்தில் ரியல் மட்ரிட் சிங்ககங்கள் விளையாடினாலும், ஸ்பெயின் பக்கம் கொஞ்சம், ஓவராவே கழுதை வாடை வீசுவதாலும்...

  ரேமோஸே வந்து ரொனால்டோவை மார்க் பண்ணினாலொழிய, (பொதுவாக இந்த மாதிரி வேலைகளை பலியாடு பீக்கேவிடம் ஒப்படைத்து விடுவார்கள்னு நினைக்குறேன்)அண்ணன் ரொனால்டோவை எவனும் தடுக்க முடியாது என்பதாலும்...

  (கசியஸ்.??..... கடமைன்னு வந்ததுக்கப்புறம் கசியஸாவது....... # டி.ஆர் ரைமிங்கில் வரக்கூடிய வார்ததை ஏதும் தெரிஞ்சா போட்டு விட்ருங்கோளேன்)

  #ஸ்டார்ட் மியுசிக் - "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்.. ஆதவன் மறைவதில்லை.. மறைவதில்லை!!!

  ReplyDelete
  Replies
  1. (ஆகா.. வசனத்தை முடிக்காம விட்டுட்டேனே!)

   வெற்றி போர்த்துக்கலுக்கே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   Delete
  2. பீக்கேவ தாண்டி ரொனால்டோ போயிருவானா? அது போக ஸ்பெயின் பக்கம் விளையாடுற மூணு பேரையும் வேணா நான் சிங்கம்னு குத்துமதிப்பா கூட ஏத்துக்குவேன். ஆனா எவன்டா அது போர்த்துக்கல்ல வெளையடுற சிங்கம்? அத நீயி குத்தி குத்தி கேட்டாலும் ஒத்துக்கமாட்டேன்.

   ///போர்த்துக்கல்லும் அந்தப் பாணியையே பின்பற்றக்கூடும் என்று உங்கள் பப்ரிகாஸ் புலம்பித் தள்ளியுள்ளதாலும்...////

   தம்பி நீங்க சொல்றது சரிதான், ஆனா கவுண்டர் அட்டாக் ஆடுறதுக்கு மொதல்ல நீங்க நல்ல டிஃபன்ஸிவ் டீமா இருக்கணும். ஆனா போர்த்துக்கல். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!

   Delete
 5. இதிலையும் அந்த பக்கி பய கோபிய விடலையே நீங்க.
  கோபி : like வடிவேல் அவ்வ்வ்வ்வ்வ்வ்...................................

  ReplyDelete
  Replies
  1. அவன் சாகும் வரைக்கும், அல்லது நான் சாகும் வரைக்கும் அவனுக்கு இனிமே விமோச்சனமே கெடையாது பாஸ்!

   Delete
 6. அப்புறம் நீங்க போர்த்துக்கலை ரொம்பவே குறைச்சு மதிப்பிடுறீங்களோன்னு ஒரு டவுட்டு, சார்......!!

  * ஸ்பெயினும், போர்த்துக்கலும் கடைசியா 2012 நவம்பர் மோதிய போது போர்த்துக்கல் ஸ்பெயினுக்கு 4-0 என மரண அடி கொடுத்து வெளியேற்றியது..
  ரெண்டு squadலும் ஆல்மோஸ்ட் அதே பிளேயர்ஸ் தான் இருக்காங்க.. சின்ன மாற்றங்கள்
  -ஸ்பெயினில் கப்டிவிலாவுக்கு பதிலாக ஜோர்டி அல்பா
  - போர்த்துக்கலில் கார்வால்யோவுக்கு பதிலாக கொயென்ராவோ... மார்டின்ஸுக்கு பதிலாக வெலோசோ!

  * எனக்கு தெரிஞ்சி போர்த்துக்கல் பக்கம் ரொம்ப சூடாக பெட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.. இதுவரை இந்த யுரோவில் ஸ்பெயினுடன் மோதிய மற்ற அணிகளிலும் பார்க்க போர்த்துக்கல் மீது மக்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

  (நெதர்லாந்து - டென்மார்க் தவிர இந்த கோப்பையில் பெரிய ஷாக்கர்கள் இல்லை என்பதால், இந்த ரிசல்டு கொஞ்சம் ஷாக்கிங்காக அமையலாம் என்ற நம்பிக்கையில்)

  * கோல்.காம்-இலும் ரசிகர் கணிப்புக்கள் போர்த்துக்கலையே கைகாட்டி நிற்கின்றன..
  போர்த்துக்கல் = 49.4%
  ஸ்பெயின் = 45.8%
  பெனால்டிஸ் = 4.8%

  * 82 மில்லியன் ஜேர்மானிய மக்களின் பிரார்த்தனைகளும் போர்த்துக்கல் பக்கம் போய்ச் சேர்வதாக சேதி.... #விக்கிலீக்ஸ்

  * போர்த்துக்கல் எப்படியாவது ஃபைனல் வரை வந்துட்டாங்கன்னா... (பைனல்ல ஜெயிப்பாங்களோ, தோப்பாங்களோ.. கவலையில்லை..)
  Ballon De 'Or ரொனால்டோ வசமாயிரும்!!

  ReplyDelete
  Replies
  1. ///
   * ஸ்பெயினும், போர்த்துக்கலும் கடைசியா 2012 நவம்பர் மோதிய போது போர்த்துக்கல் ஸ்பெயினுக்கு 4-0 என மரண அடி கொடுத்து வெளியேற்றியது..
   ரெண்டு squadலும் ஆல்மோஸ்ட் அதே பிளேயர்ஸ் தான் இருக்காங்க.. சின்ன மாற்றங்கள்
   -ஸ்பெயினில் கப்டிவிலாவுக்கு பதிலாக ஜோர்டி அல்பா
   - போர்த்துக்கலில் கார்வால்யோவுக்கு பதிலாக கொயென்ராவோ... மார்டின்ஸுக்கு பதிலாக வெலோசோ!/////


   தம்பி உதைபந்தில் இந்த மாற்றங்கள் நடப்பது தான், ஆனாலும் இப்போ இந்த ரெண்டு அணிகள் ஆடுற ஆட்டத்த வச்சி தான் இந்த கணிப்பு, அப்பிடி பார்த்தால் இப்போ போர்த்துக்கல் 30% ஸ்பெயின் 70%. அது போக நீங்க சொன்ன சின்ன மாற்றங்கள் தான் இப்போ பெரிய மாற்றஙளுக்கு காரணமாக இருக்கு. ஜோர்டி அல்பா! பார்த்தீங்க இல்ல பயல் பந்து கொணாந்து கிராஸ் பண்ணும் வேகத்தையும் லாவகத்தையும். அது போக வெலோசோ! இவன எதுக்கு டீமில எடுத்தாய்ங்க?

   //// எனக்கு தெரிஞ்சி போர்த்துக்கல் பக்கம் ரொம்ப சூடாக பெட்டிங் நடந்து கொண்டிருக்கிறது../////

   தம்பிக்கு பெட்டிங்க் பத்தி எதுவுமே தெரியாதுன்னு நெனைக்கிறேன். எப்பவும் இந்த அணி தோக்கும்ன்னு நெனைக்கிற அணிமீதுதான் அதிக பெட் கட்டுவார்கள். அப்போது தான் அதிஷ்டவசமாக அந்த அணி வென்றால் நிறைய பணம் கிடைக்கும். இலகுவாக வெல்லும் என்று நினைக்கிற அணிமீது பந்தயகாரர்கள் குறைவான தொகை தான் நிர்ணயிப்பார்கள். மைல்டா ஜெயிக்கும் என நினைக்கும் அணிமீது தான் பெட் கட்டுபவர்கள் அதிகமாக, அதிக பெட் கட்டுவது வழக்கம். # பெட் கட்டிய அனுபவம்.

   ///கோல்.காம்-இலும் ரசிகர் கணிப்புக்கள் போர்த்துக்கலையே கைகாட்டி நிற்கின்றன..
   போர்த்துக்கல் = 49.4%
   ஸ்பெயின் = 45.8%
   பெனால்டிஸ் = 4.8%/////

   இது தனிப்பட்ட ஒரு வீரரின் ரசிகர்களது ஆதரவாகவும் இருக்கலாம். சனத்தொகை சம்மந்தப்பட்ட விடயமாகவும் இருக்கலாம். அது போக புளிவிபரங்கள் பெரும்பாலும் பேப்பரிலே தான் விளையாடும் , ஆனால் களத்தில் நிலமை வேறு மாதிரி இருக்கலாம்.

   /// 82 மில்லியன் ஜேர்மானிய மக்களின் பிரார்த்தனைகளும் போர்த்துக்கல் பக்கம் போய்ச் சேர்வதாக சேதி.... #விக்கிலீக்ஸ்////

   இது வேணும்னா உண்மையா இருக்கலாம். ஏன்னா ஸ்பெயின் வந்தா ஜேர்மன் கொஞ்சம் போராட வேண்டியிருக்கும், ஆனா போர்த்துக்கல் வந்தா கோப்பை ஜேர்மனுக்குத்தான் என்று அவர்களுக்கு தெரியும்,

   ////Ballon De 'Or ரொனால்டோ வசமாயிரும்!!///

   ரெண்டு ரூவா பலூன் வேணும்னா அவர் வசமாகும்.

   Delete
 7. அப்புறம் ரெண்டாவது போட்டி!

  இத்தாலிக்கு அரையிறுதியுடன் டிக்கெட் கொடுத்தனுப்ப வேண்டியது மிகமிகஅவசியம் என்பதால் இப்போது நானும் ஜெர்மனிக டீமுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளேன் மாப்ளே!!!!

  Lets go GERMANY!! Lets go GERMANY!! Lets go GERMANY!!

  * பொசுக்கு பொசுக்குன்னு ஜேர்மனி கோல் போஸ்டை நோக்கி தாவி வரும் பொலட்டேலியை "போடாங்.. போடாங்.."னு திருப்பி அனுப்புவாருடா எங்க போடெங்!!!

  * நீங்க தும்மல்ஸ் போடுற கேப்புல பந்தை ஆட்டைய போட்டு முன்னுக்கு அனுப்பி, கடைசீயில உங்களை விம்மல்ஸ்போட வப்பாருடா எங்க ஹும்மல்ஸ்!!!

  * குளோஸ் ஆகுற வயசு மட்டும் கோல் அடிச்சே உங்களை குளோஸ் பண்ணுவாருடா எங்க கிளோஸ்!!!

  * கோலடிச்சு புஃபன் முஞ்சில பியூஸ் போக வைச்சு, நாளைக்கு ஹெட்லைனா நியூஸ்ல வருவாருடா எங்க றியூஸ்!!!

  * ஒத்தை பந்து கூட இத்தாலி கால்களுக்கிடையில் சிக்காமல் கண்ணாபின்னானு பாஸ் பண்ணி அஸிஸ்ட்போட வைப்பாருடா எங்க நாய்சேகர் தம்பி ஸ்டீன்ஸ்னேகர்!!!

  * பாஸில்லாமலே கோல் போடுவது எப்படின்னு, இந்த இத்தாலி பயபுள்ளைகளுக்கு ஃபீஸில்லாமலே சொல்லிக் கொடுப்பாருடா எங்க ஓர்ஸில்!!!


  (மேலுள்ள டஞ்சி டயலாக்குகளை அண்ணன் காப்பிரைட்ஸ் செய்திருக்கும் காரணத்தால், அவற்றை அப்படியே உருவியோ, உல்டா பண்ணியோ வாலு படக்குழுவினர் போடுமிடத்து.. சகுனி பட டி.வி.டிக்கள் வீட்டுக்கே அனுப்பப்பட்டு கடுமையான முறையில் தண்டிக்கப்படுவார்களென அறிவித்துக் கொள்கிறோம்)

  ReplyDelete
  Replies
  1. மேற்கண்ட பின்னூட்டத்துடன் முழுவதுமாக ஒத்து போகிறேன். ஆனால் எனது தளத்தில் இடப்பட்ட அனைத்து பின்னூட்டங்கள், படங்கள் , ஆக்கங்கள் அனைத்தும் எனக்கே சொந்தமானது என மூலைக்கடை வக்கீலிடம் சொல்லி நான் சட்ட ரீதியாக அனுமதி பெற்றிருப்பதால், இப்போது நீங்கள் அழுது எந்த பிரயோசனமும் இல்லை.

   சகுனி பட சி.டி யை எனக்கு நீங்கள் அனுப்பி கொலைக்கேசில் நீங்கள் உள்ளே போவதை உங்களது மனைவி விருப்மபாட்டார் என நினைக்கிறேன்.

   Delete
 8. ஏலேய் கிஷோரு நீ என்ற ப்ளாக்லதான் என்னைய மானத்தை வாங்குற என்று பார்த்தா இப்புடி பழிவாங்குறியே....

  உன்னோட நாற வாய்க்கு இனிமேல் ஒன்னுமே பலிக்காது
  இது என்னோட சாபம் :D

  ReplyDelete
  Replies
  1. எனக்கு குறுக்கால ஓடிய பூனையே செத்து போச்சு! தக்காளி ! நீங்க விடுற சாபம் என்னய என்ன பண்ணிரும் ? ஹெஹ்...ஹேய்.....!

   Delete
 9. சரியாப் போச்சு! இப்போ யாரு நாற வாயின்னு கன்ஃபார்மா வெளங்கிருச்சு!
  வாழ்க இத்தாலி.....

  ReplyDelete
  Replies
  1. அட விடு நண்பா! பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா! நாம பார்சிலோனாவும் , மட்ரிட்டும் சேந்து (ஸ்பெயின்) இந்த இத்தாலி பயலுகளுக்கு ஆப்பு அடிப்போம்!

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...