உதைபந்து

Sunday, August 12, 2012

முகமூடி சினிமா விமர்சனம் - பிரீமியர் ஷோ!




அப்பிடி இப்பிடி என்று ஒரு மாதிரியாக நேற்று முகமூடி திரைப்படத்தை பிரீமியர் ஷோவுக்காக திரையிட்டார்கள். படத்தின் பிரீமியர் ஷோவுக்கான அழைப்பிதழ் ஒரு மாதத்துக்கு முன்னமே அனுப்பபட்டிருந்தாலும் போஸ்ட் புரட்க்க்ஷன் வேலைகளில் ஏற்பட்ட தாமதத்தால் தான் இந்த தாமதம் என்று, படத்தின் பிரீமியர் ஷோவுக்கு வ‌ந்திருந்த இயக்குனர் மிஸ்கினின் உதவி இயக்குனர் ஒருவர் தெரிவித்திருந்தார். படம் தொடங்கிச்சு... பாத்தும் முடிச்சாச்சு... இப்போ ஏற்பாட்டு குழு கேட்டுக்கொண்டதுக்கு இணங்க படத்துக்கான விமர்சனம் போடும் நேரம்......


முதலில் எத்தனை எதிர்மறை கருத்துக்கள், தாமதங்கள் இன்ன பிற இத்யாதிகள் இருந்தாலும் , தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்டுடன் துணிவாக களமிறங்கிய மிஸ்கினுக்கும் ஒரு சல்யூட். நமது நாயகர்கள் எந்த வித பவரும் இல்லாமல் பறந்து பறந்து அடிக்கையில் , அதே வேலையை சுப்பர் பவருடன் ஒருவன் செய்கிறார் என லாஜிக்குடன் சொல்கிறார் இயக்குனர். தமிழ் படங்களில் லாஜிக் கேப்பவனுக எல்லாம் , இந்த படத்தை பொறுத்த வரை மூடிக்கிட்டு பின்னால வாங்கப்பா.....

சரி படம் என்னதான் சொல்கிறது என்று பார்த்து விடலாம்.........


நண்பர்கள் சொந்தம் பந்தம் என்று சந்தோஷமாக இருக்கிறது ஜீவாவின் கால்கள். ஜீவாவின் கால்களுக்கு கராத்தே கற்பது என்றால் அலாதி பிரியம். அட !அது ஜீவாவின் கால்கள் தான் என்று எப்படி தெரியும் என்கிறீர்களா ரொம்ப ஸ்மார்ட்டா டெனிம் போட்டிருப்பதிலும், அழகாக  நடப்பதிலுமிருந்தே அது குறீயீடாக தெரிறது. ஜீவாவுக்கும் மொத்தமாய் மூன்று நண்பர்கள். அந்த எட்டுகால்களும் மிக சந்தோஷமாக சுற்றி திரிகின்றன. அடிக்கடி ஜீவாவின் கால்கள் கராத்தேவும் கற்கின்றன. கால்களில் ஸ்போர்ஸ் ஷீ, மற்றும் ஹா... ஹூ... ஹையா போன்ற சத்தங்களை வைத்து இதனை ஊகித்து கொள்ள முடிகிறது.


இந்த இடத்தில் தான் ஹீரோயின் பூஜாவின் கால்களை சந்திக்கிறது , ஜீவாவின் கால்கள். பூஜாவின் கால்களை கணுபிடிப்பதிலும் பெரிய சிரமம் இருக்காது, ஆடை ஏதும் இல்லாது ( யோவ் ! அந்த பொண்ணு முழங்காலுக்கு மேல ஏதுனாச்சும் போட்டிருக்குமய்யா!) , வழ வழவென்று இருப்பதிலேயே அது ஹீரோயின் கால் தான் என்று கண்டுகொள்ள முடிகிறது. அத்தோடு ஹீரோயினின் கால்களை காட்டும் போது, தூரத்தில் மங்கலாக ஹீரோ மற்றும் சகாக்களின் உருவங்களை காமிரா காட்டும். ஆக ஹீரோ ..ஹீரோயின் சந்திப்பும் முடிந்தது. சில பல காட்சிகள் , ரெண்டு மூன்று பாடல்களோடு காதலும்  ஓக்கேயாக , படம் பிரதான சாலையில் பயணிக்க தொடங்குகின்றது.


இங்குதான் அறிமுகமாகிற‌து வில்லன் நரேனின் கால்கள். மெதுவான நடை, இருண்ட பகுதிகளில் அடிக்கடி நிற்பது, முகம் காட்டப்படாமல் கீழே விழுந்து கிடக்கும் பிணத்தில் இருக்கும் ரத்தம் தோய்ந்த கத்தியை எடுத்துக்கொண்டு நகர்வது, போன்ற காட்சிகளில் அது வில்லனது கால் தான் என்று புலனாகிற‌து. தமிழ்நாடு முழுவதும் நின்று, நின்று நடந்தே சில பல அட்டூழியங்களை செய்கிறது நரேனின் கால்கள். களோபரமாகும் தமிழ்நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு , நாஸரின் சி.பி.ஐ கால்களுக்கு கொடுக்கப்பட அறிமுகமாகிறது நாஸரின் கால்கள். சாதாரண காட்டன் ஜீன்ஸ் போட்ட கால்கள், அப்புறம் தூரத்தில் மங்கலாய் காட்டும் போது நாஸர் கட்டம் போட்ட சட்டை அணிந்திருப்பது ( யுத்தம் செய் படத்தில் சேரனுக்கு தைத்ததாக இருக்க வேண்டும்) , அப்புறம் நாஸரின் நிழல் விழுகையில் அவருக்கு முன் விழும் அவரது மூக்கின் நிழல் போற குறியீடுகளின் மூலம் , அது சி.பி.ஐ நாஸர் தான் என புரிந்து கொள்ள‌ முடிகிறது.


ஜீவாவின் கால்களும், பூஜாவின் கால்களும் ஜாலியா இருந்து வருகையில், நரேனின் கால்கள்  செய்யும் நாச வேலைகளுக்கான பழியில் ஜீவாவின் கால்கள் சிக்கவைக்கப்பட, நாஸர் கால்கள் இன்னும் சில பல பொலிஸ் கால்களால் துரத்தப்பட்டு கொஞ்சநேரம்  ஓடிக்கொண்டே இருக்கிறது ஜீவாவின் கால்கள். இந்த துரத்தல்களின் போது , தன்னையும் அறியாமல் சில அசாதாரண வேலைகளை தனது கால்கள் செய்வதை உணருகிறார் ஜீவா. முதலில் தான் கற்ற கராத்தேயால் தான் இப்படி நடக்கிறது என சிந்திக்கும் ஜீவாவின் கால்கள், பின்பு கராத்தேயையும் தாண்டிய ஒரு அசாதாரணம் தனக்குள் ஒழிந்திருப்பதை உணருகிறது.



ஒரு கட்டத்தில் தனக்குள் இருக்கும் சக்தியையும், அதோடு எவரோ செய்யும் நாச வேலைகளுக்கு தான் சிக்குவதையும் ஜீவாவின் கால்கள் உணரும் போது தான் ஒரு சூப்பர் மேன் ஆகவேண்டிய அவசியத்துக்கு தள்ள‌ப்படுகின்றன‌ ஜீவாவின் கால்கள். சூப்பர் ஹீரோவானால் ஒரு பிரத்தியேக ஆடை வடிவமைக்க வேண்டுமென்ற , எழுதப்படாத உலக சினிமா விதிகளுக்கமைய ஜீவாவின் கால்கள் ஆடைத்தயாரிப்பில் இறங்குகின்றன. மோர்கன் ஃபிரீமென் ஆட்கள் எல்லோரும் அமெரிக்காவில் இருந்து வந்து வடிவமைத்து கொடுக்கும்வரைக்கும் பொறுமைஇல்லாத ஜீவாவின் கால்கள் , தாமே சுயமாக , கைநெசவு செய்து ஆடைகள் தயாரிக்கின்றன. கால்களே இந்த வேலையையும் செய்வது போல காட்டினால் , நாங்கள் கல்லாஇ எறிவோம் என தெரிந்து கொண்ட இயக்குனர், ஆடை தைப்பதை கைகள் எய்வது போலவே காட்டி இருக்கிறார். # மறுபடி மீறப்படாத லாஜிக்.


சரி... சக்தி இருக்கிரது, அதைவிட முக்கியமான பிரத்தியேக ஆடை தைத்து முடிந்தது. இனி என்ன ஆட்டம் ஆரம்பம்! நரேனின் கால்களை நாசரின் சி.பி.ஐ கால்கள் ஒரு பக்கத்தால் தேட, ஜீவாவின் சூப்பர் கால்கள் பறந்து பறந்து தேடுகின்றன். பிறகு என்ன ? ஆளுக்காள் கட்டிடம் தாவிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் தான் ஓசியில் வந்துவிட்டோமே , எந்திரிச்சும் போக முடியாதேன்னு பெடக்சில் பெவிக்கால் போட்டது போல உக்காந்தே இருக்கவேண்டியதாக இருக்கிறது. கடைசியில் நரேனின் காலும், நாசரின் காலும், ஜீவாவின் சூப்பர் காலும் என்னானது என்பதே மீதிக்கதை. உங்களுக்கு அதிச்க்டம் கிடைக்கும் போது பார்த்தறிக.....

சரி படம் எப்படியிருக்கிறது?

உண்மையை சொல்லியே ஆகவேண்டும் தமிழ் சினிமாவுக்கு சூப்பர் ஹீரோ கதையை துணிவுடன் சொன்ன மிஸ்கினுக்கு முதலில் பாராட்டுக‌ள் போயே சேரவேண்டும்.

அப்புறம் ஒளிப்பதிவு எப்படியிருக்கிறது? படம் பூரா இரவிலேயே நடப்பதால் ஒளிப்பதிவு பத்தி சொல்ல ஒண்ணுமேயில்லை. படம் பூரா இருட்டு மயம். அப்புறம் படத்தொகுப்பு , குகனின் படத்தொகுப்பில் கால்கள் மிகவேகமாக நகருகின்றன. 


படம் பூரா நிறைந்திருப்பது இசை தான். தியேட்டரை விட்டு வெளியில் வந்தும் கூட பின்னணி இசை இன்னும் காதிலேயே ஒலிக்கிறது. அதிலும் அந்த மூன்று பாடல்கள் . இந்த வருடத்தின் இளைஞர்கள் ஹிட்டுக்களில் இடம்பெறும் என்பது மட்டும் நிச்சயம். "வாயை மூடி சும்மா இருடா" பாடல் புதுசா எளசா நல்லா இருக்கு. மதன்கார்க்கியின் வரிகளுக்காகவே அந்த பாடலை எத்தனை தடவையும் கேட்கலாம். அந்த மெலோடி மெட்டு , விடுதலைப் புலிகளின் கேணல் கிட்டுவின் மறைவுக்கான பாடலை ஞாபகப்படுத்தினாலும் கூட ரசிக்கும் படியாக இருக்கிரது. இன்னும் முணுமுணுக்கிறேன். 

"கடிகாரம் தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு எதுவென்று தேடும்
அடிவானம் பணியாது போகும்
இவன் கடிவாளம் இல்லாத மேகம்
பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும்"

ஆகா! என்ன வரிகள்? பாடல் முழுக்க கவிதை மழை! மறக்காமல் ஓடியோவாவது கேளுங்கள்.



அடுத்து "மாயாவி " பாடல் மெலோடி ரசம்.... இதமாக இருக்கிறது. அந்த குடிகாரர்கள் கீதம் தான் இனி பார்களிலும் , நம்ம குடிமகன்கள் வாயிலும் தேசிய கீதமாய் இருக்கப்போகிறது. மிஸ்கின் பாடியிருக்கும் அந்த பாடலில் வரும் "அன்னக்கிளி உன்ன தேடுது.." என்ற இளைய ராஜாவின் இசையும், இடைநடுவில் மிஸ்கினின் குரலில் ஒலிக்கும் வசனங்களும் தூக்கல். அந்த பாருக்குள்ளும்  "கண்ணதாசன் காரைக்குடி" பாடலின் வாசம் அடிப்பதை மறைக்கமுடியவில்லை.  #அந்த பாடலின் வெற்றியின் பிரதிபலிப்பு????



அப்புறம் ஆங்... நடிகர்கள் பத்தி சொல்லியாகணுமே.


ஜீவாவின் கால்களின் நடிப்பு வழமைபோலவே பிரம்மாதம். தனக்கு அசாதாரண சக்திவந்திருக்கிரது என உணருமிடத்தில் ஆஸ்காருக்கும் மேல் நடித்திருக்கிறார். இந்த படம் ஜீவாவின் கால்களுக்கு ஒரு மைல்கல்லாக இல்லாவிட்டாலும் ஒரு எல்லைக்கல்லாகவாவது இருக்கும் என நம்பலாம்.


அப்புறம் நாயகி பூஜா ஹெட்ஜ், இந்திய அழகியாக வலம் வந்தவர்  , இப்போது முகமூடியில் நமது மூடுகளை கெடுக்க வருகிறார். சம்பளத்துக்கு ஏற்ப நடைத்திருக்கிறார். சும்மா காட்டு காட்டுன்னு காட்டுகிறார் காலை!! வழமை போல நாஸரின் கால்கள் மிடுக்கான நடிப்பு, ரோடுகளில் மட்டுமல்ல நமது மனதிலும் நிக்கிறது.


அடுத்து நம்ம நரேன் கால்கள். "யுத்தம் செய்" என்ற மொக்கை படத்தில் நடிக்க மறுத்துவிட்டு , "தம்பிக்கோட்டை" என்ற அவார்டு வின்னிங் படத்தில் நடித்தவர், இப்போது மறுபடி "முகமூடி "யில் என்னமோ மூடில் கள‌மிறங்கியிருக்கிறார். அஞ்சாதே பிரசன்னாவின் காலை பிரதிசெய்ய முற்பட்டிருந்தாலும், நரேனின் சுயமான கால்கள் ஆங்காங்கே தெரியாமலில்லை. நரேன் தனது சொந்தகாலிலேயே நடந்திருக்கலாம். தமிழ் சினிமாவுக்கு இன்னுமொரு ஆரோக்கியமான வில்லன் கால்கள்.


அப்புறம் படத்தில் எனக்கு பிடித்தது பாடல்கள் படமாகப்பட்ட விதம் தான். முகமூடி பாடல் வழமை போலவே ஒரு ஸ்லோமோஷன் பாடல், அப்புற‌ம் அந்த பார் பாடல் ( அஞ்சாதே எஃபக்டு) . அட! இவ்ளோ பண்றீங்களே , அந்த இந்திய அழகியை கொஞ்சம் "காட்டுங்கப்பா" என்று நாம் ஏங்கிய வேளையில் வந்தது அந்த ஐட்டம் சாங்!


பாடல் தொடங்கும் போதே கால்களிலேயே ஆரம்பிக்க , அட போங்கப்பா என நாம் சலித்து கொள்ள கேமிரா கொஞ்சம் கொஞ்சம் மேலே போகிறது. "ஆங்..ஆங்... அதே தான்... அப்பிடி அப்பிடி கொஞ்சம் மேல... கொஞ்சம் சைட்ல எடப்பா... இந்த இடத்தில கொஞ்சமா ஸ்லோவா போ ( ஸ்பீட் பிரேக்கர்) , அப்பா கழுத்து .. இன்னும் கொஞ்சம் ... மூஞ்சி தெரியப்போது... அந்தா.. இந்தா..."ன்னு நாங்க பாத்துக்கிட்டு இருக்க , கமிரா வேறு பக்கம் திரும்ப, அங்கே ஹீரோவும் ஹீரோயினும் ஆட்டுக்கால் பாயா சாப்பிட்டுக்கொண்டிருக்க, இங்க வேற ஒரு ஜில்பான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கு, எட்டுமுழம் பொடவையோட.... அந்த எடமே டெசோ மாநாடு போல மஞ்ச மஞ்ச தோரணமா தொங்குது. பொண்ணுங்க எல்லாம் மண்ட வளத்து ....... மண்ட மேல ஒரு கொண்ட வளத்து... கொண்ட மேல ஒரு பு.... ஏய்யா? பூவு வச்சு... முடியல! நல்லவேள தானைத்தலைவன் இல்லாததால தப்பிச்சோம்!




தொடர்ப்பாடல் வெற்றிகளால் அதே போல பாடல்களை அடுத்தடுத்த படங்களில் வைப்பதை மிஸ்கின் தவிர்க்கலாம். ஆனாலும் எல்லாம் நல்லாவே இருக்கு.

அப்புறம் இன்னொரு டவுட்டு. இந்த முகமூடி தொடக்கம் ஆங்கில படங்களின் ஆரம்பகால சூப்பர் மேன் வரைக்கும் , அந்த கெட்டப்பு எல்லாம் ஓக்கே. ஆனா அது என்னங்கடா தோளுக்கு கீழ கருப்பா ஒரு எட்டுமுழ வேட்டி தொங்குது? என்ன ரோட்டு கூட்டவா? சுப்பர் மேன் ஆளுங்க தான் ஒரு மூளையே இல்லாம சூப்பர் மேன் முதுகில துணி காய போட்டிருக்காய்ங்கன்னா மிஸ்கின் சார் நீங்களுமா? அப்புறம் ஜீவாவுக்கு அப்புடியெல்லாம் ஒரு அடுக்கான உடம்பு கிடையாது, பிறகு எப்புடி சூப்பர் டிரெஸ் தைத்ததும் செங்கல்லும் சல்லிகல்லும் வச்சு கட்டின மாதிரி கட்டி கட்டியா பாடி பில்டப்பு!

சில சில குறைகள் இருந்தாலும் மொத்தத்தில் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியை கொண்டுவந்த மிஸ்கினை பாராட்டலாம். முன்னணி நடிகர்களையும் வில்லனாக, வித்தியாசமாக காட்டுவது, திரைக்கதை, அது சொல்லப்படும் விதத்தை வித்தியாசமாக சொல்லுவது என மிஸ்கின் சிக்ஸர் அடிக்கிறார். ஆக மொத்தம் அனைவரும் பார்க்கவேண்டிய கால்கள் சே..... படம் தான் இந்த முகமூடி!

படம் முடியும் போது , இந்த படத்தை காப்பியடித்து இந்த வருடம் அமேரிக்காவில் வெளியிட்ட கிறிஸ்தோப்பர் நோலனை கண்டிக்கும் விதமாக ஆயிரம் தந்தி அடிக்கும் அறப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் அழைப்புவிடுக்கப்பட்டது.

க்கும்..... நந்தலாலாவை காப்பியடித்த "கிகுஜொரோ"படத்தின் டைரக்டர் டகிஷி கிடானோக்கு எதிரா அனுப்பின ரெண்டாயிரம் எஸ்.எம்.எஸ்சுக்கே இன்னும் பதில காணம். அதுக்குள்ள ஆயிரம் தந்தியா? வெள்ளைக்காரனின் கொடூர களவாணி புத்தியை நொந்துகொண்டே வெளியேறினேன்.







32 comments:

  1. தல,
    இந்த பதிவை காலால் எழுதினீங்களா ?? இல்ல கையால் எழுதினீங்களா..??
    வெறும் ட்ரைலர் வச்சே இப்படி ஒட்டி இருக்கேங்களே :)

    ReplyDelete
    Replies
    1. அட ! நான் பிரீமியர் ஷோ பாத்தனப்பா... உங்களுக்கெலாம் பொறாமை, அது தான் ஒத்துக்க மாட்டேங்கிறீங்க! படம் வரும் போது பாருங்க, இதில ஒரு அச்சும் பிசகாம இருக்கும்!

      #அப்புறம் ஆங்... கைல தான் எழுதினேன்.ஓக்கேவா!!

      *எங்க கொஞ்ச நாளா ஆளையே காணம்?

      Delete
    2. பணிச்சுமை தல..அதான் கொஞ்சம் நாள் காணாம போயிட்டேன்..

      Delete
    3. சரி விடுங்க ! நம்மள போல பிரபல பதிவர்களுக்கு நாலு எடத்தில நாலு வேல இருக்கத்தான் செய்யும், அதுக்காக நம்மளையே நம்பி இருக்கிற இந்த கோடான கோடி மக்களை கைவிட்டிட கூடாது. சரி.. இப்ப தான் வந்திட்டீங்க இல்ல.. ஜமாய்ங்க!!

      Delete
  2. ஆமா....யாரோ ஒரு அம்பியோட போட்டோ ப்ளாக் ஓபன் பண்ணிடவுடனேயே தெரியுதே? யாரது? திருஷ்டி கழிக்க போட்டிருக்கிங்களோ? :-)

    ReplyDelete
    Replies
    1. திருஷ்டி கழிய வேணாமா பின்ன? இம்மாம் பெரிய உலக புகழ் பெற்ற பிளாக்கில யாராச்சும் கண்ணுவச்சிர மாட்டாங்க!! அது தான் ஒரு சேஃப்டிக்கு!

      Delete
  3. காமிரா ஹீரோயின் காலோட ட்ராவல் பண்றது ஓகே? எங்கேயாவது குட்டைப் பாவாடை போட்டுட்டு இருக்கிறச்சே காமிரா மேலே கீழே பார்க்குமா???

    ReplyDelete
    Replies
    1. மேல கீழ போக மாட்டேங்கிறானே... வித்தியாசமா ஏதும் பண்ண மாட்டேங்கிறானே! அட அப்புடி மேல போறப்ப கூட , அங்கயும் குறியீடுன்னு டிவிஸ்டு வச்சி கடுப்பெத்துறாங்க மை லாட்!

      Delete
  4. பிரிமியர் சோவில தரை டிக்கெடா பெஞ்ச் டிக்கெட்டா.....

    ReplyDelete
    Replies
    1. நான் பிரபல பதிவர்ங்கிறதால தனியா ஏ.சி போட்ட சீட்டு குடுத்தாய்ங்க!

      Delete
  5. அப்படியே தாண்டவம் ட்ரைலரையும் பார்த்துட்டு, அதுக்கொாரு ப்ரீமியர் ஷோ விமர்சனம் எழுதினீங்கன்னா நல்லா இருக்குங்ணா!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இன்னும் அழைப்பு வரல , வந்தா பாத்துக்கலாம்!

      Delete
  6. //அப்புறம் ஜீவாவுக்கு அப்புடியெல்லாம் ஒரு அடுக்கான உடம்பு கிடையாது, பிறகு எப்புடி சூப்பர் டிரெஸ் தைத்ததும் செங்கல்லும் சல்லிகல்லும் வச்சு கட்டின மாதிரி கட்டி கட்டியா பாடி பில்டப்பு!//

    அண்ணனுக்கு "கேப்டன் அமெரிக்கா" மாதிரி ஆப்பரேசன் பண்ணியிருப்பாப்ல.. அதுல்லாம் ட்விஸ்டை கெடுக்கக்கூடாதேன்னு, ட்ரைலர்ல வைக்கல தல!

    ReplyDelete
    Replies
    1. அட! சூப்பர் ஹீரோவானா ஆப்பிரேஷன் எல்லாம் பண்ணுவாய்ங்களா? பாடி பில்டப் ஆப்பிரேஷன் மட்டும் தானா? இல்ல வேற எதுனச்சும் உண்டா?

      Delete
  7. ரொம்ப detailed ஆனா விமர்சனம்...
    படம் பார்த்தா தான் தெரியும் சூப்பர் ஹீரோ வா இல்ல ஜீரோ வானு....

    ReplyDelete
    Replies
    1. நம்ம மிஸ்கின் படமில்ல கட்டாயம் சுப்பரா தான் இருக்கும்! நம்புங்க பாஸ்! அப்புறம் எங்க போனீங்க இத்தின நாளா?

      Delete
  8. பிரீமியர் ஷோவிற்கே இவ்வளவு விரிவான விளக்கமான விமர்சனம்... பாராட்டுக்கள்...

    தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி நண்பரே...



    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

    ReplyDelete
    Replies
    1. அண்ணே நீங்க படிச்சு பாத்து தான் சொல்றீங்களா?

      Delete
  9. ம்ம் பாக்கலாம் வரும் போது

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் பாருங்க, வருகைக்கு நன்றி!

      Delete
  10. அப்ப படத்துல்ல காலத்தான் காற்றனுங்கள அப்ப படத்த எப்போ காட்டுவாங்க எப்டியோ படம் ஒசில பார்த்தாச்சு அவ்வ்

    ReplyDelete
    Replies
    1. எப்போ பாரு அதிலயே இருங்க, ஐ மீன் ஓசில ஆயில் குடிக்கிறது. சும்மா லொல லொளா,,.....

      Delete
  11. Replies
    1. அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கீங்க, வருகைக்கு நன்றி!

      Delete
  12. வணக்கம் விமர்சனப்பீரங்கி.......:)
    படம் வரட்டும்.பார்ப்போம்.வாழ்த்துகளும் நன்றியும்.சந'திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆகா! இந்த பட்டம் நல்லயிருக்கே! மிக்க நன்றி தோழி! நீங்க குடுத்துவச்சது அவளவு தான், படம் வந்ததும் தான் பாப்பீங்க, ஆனா நாங்க.. ஹெஹ் .. ஹேய்...

      Delete
  13. காலிலையே ஓட்டுரின்களே
    நீங்க படம் பார்த்தது மிஸ்கினுக்கு தெரியுமா ???

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்ணே! மிஸ்கினோட விசேட உத்தரவின் பேரில் தான் படம் பார்த்தேன். நம்ம மேட்டேங்கிறீங்களே! நன்றி வருகைக்கும், பின்னூட்டத்துக்கும்.

      Delete
  14. நீ நல்லா வரணும் மச்சான்.

    ///ஜீவாவின் கால்களின் நடிப்பு வழமைபோலவே பிரம்மாதம். தனக்கு அசாதாரண சக்திவந்திருக்கிரது என உணருமிடத்தில் ஆஸ்காருக்கும் மேல் நடித்திருக்கிறார். இந்த படம் ஜீவாவின் கால்களுக்கு ஒரு மைல்கல்லாக இல்லாவிட்டாலும் ஒரு எல்லைக்கல்லாகவாவது இருக்கும் என நம்பலாம். ///

    இந்த மாதிரி ஜீவாவ கலாயிக்கிரத இத்தோட நிறுத்திடு.

    ReplyDelete
    Replies
    1. எவன்டா அது? ஸ்கூலுக்கு வந்ததே லேட்டு! அதுக்குள்ள பாடம் நடத்துறது எப்புடின்னு வாத்யாருக்கே சொல்லிக்குடுக்கிறது?

      Delete
  15. இதுவும் FAKE பதிவா? ஆனாலும் படம் வர்றதுக்கு முன்னாடியே சரியா விமர்சனம் எழுதுன உங்க தீர்க்கதரிசனத்த கண்டு நா வியக்கேன்...
    அப்புறம் சமீபமா உங்களோட மத்த பதிவுகளையும் டைம் கெடைக்கும்போது படித்துக்கொண்டு இருக்கிறேன்.. ரொம்பவும் சுவாரசியமா எழுதுறீங்க.. கூடிய சீக்கிரமே முத்த கலை அல்லது டிவி அட்வர்டைஸ்மென்ட் கலைல நீங்க ஒரு பீ.எச்.டி எடுக்க போவது உறுதி..

    ReplyDelete
    Replies
    1. அண்ணே உங்களோட வரவு என்னோட பெரும் பாக்கியம்! ஏதோ நீங்க சொல்றாப்ல அந்த பி.எச்.டி மிட்டாயி கெடச்சா ரொம்ப சந்தோசம், ஆளுக்கு பாதியா சாப்பிடலாம் ஓக்கெவா?

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...