உதைபந்து

Friday, October 19, 2012

விபச்சாரத்துக்கு முன் அனுபவம் தேவையா? - பிச்சைகாரன் வாந்தி!
இரண்டு பிரபல பதிவர்கள்  சந்தித்துக்கொண்டால் .......

மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? : "இவனுகள் எப்ப பாரு சினிமாவ பத்தியே பேசுவானுகள்."

பொண்ணுங்க என்ன நினைக்கிறாளுக? : "ஏதோ சீரியசா பேசுற மாதிரி பில்டப்பு குடுத்து நம்மளத்தான்டி ஜொள்ளு ஒழுக பாக்குறானுக"

வீட்ல இருக்கிறவங்க என்ன நினைப்பாய்ங்க? : " விடிஞ்சா பொழுதுபட்டா இதே பொழப்பு, கண்ட கண்ட எழவ கதைக்கிற‌துக்கு ஒரு மீட்டிங்கு

வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள்? : "மச்சி !!! யாரோ இன்னொருத்தன கய்வி ஊத்துறதுக்கு பிளான் பண்ணுறாய்ங்கடா"

ஆனால் உண்மையில் என்ன பேசுவார்கள்? : அமேரிக்க அரசியலின் ஸ்திரத்தன்மை, ஒபாமா பதவியில் இருக்கலாமா வேண்டாமா? வட அமெரிக்க நாடுகளின் பொருளாதரத்தை தூக்கி நிறுத்த என்ன பண்ணலாம்? சமந்தா உண்மையில் அழகா இல்ல மேக்கப்பா மச்சி? கேத் மிடில்டனுக்கும் வில்லியமுக்கும் செட்டாகும்ங்கிற?

நீதி : பிரபல பதிவர்கள் ஒரு பின்நவீனத்துவமாய் சிந்திப்பவர்கள். ஒபாமா ஆட்சியில் இருக்கிறதும் இருக்காதும் அவரோட இஷ்டம், எங்கட பேச்சக்கேட்டு அவரு பதவி விலகி சோத்துக்கு சிங்கியடிசா.... அதுக்கு சங்கம் பொறுப்பாகாது.

# கொழும்பு முத்தமிழ் விழாவில் சந்தித்துக்கொண்ட சில பதிவர்கள்.

********************************************************************************


கிரிக்கட்டில் நடனம் ஆடும் பெண்கள் மொக்கையா இருந்தால் அவர்கள் முதற்கொண்டு அரசாங்கம் வரை திட்டி தீர்க்கிறோம். இன்று அழகுப் பதுமைகளாக ஏழெட்டு பெண்கள் ஆடி முடித்து போய்விட்ட பின்னர் அவர்கள் ஆடிச்சென்றது பரதமா , கதகளியா , குச்சிப்புடியா, டப்பாங்குத்தா என்று கூட தெரியவில்லை. அவர்கள் முகம் மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது. ஓவர் அழகாக இருந்தாலும் மனம் நடனத்தில் லயிக்குதில்லை!

#மானம் கெட்ட மனது! 


*********************************************************************************"ஒரே பெண்ணை இருவர் காதலிப்பதால் ஏற்படும் முரண்பாடுகளால் மோதிக்கொள்ளும் இளைஞர் குழுக்கள் கூட, மேடையில் ஒருவர் நின்று , உரையாற்றுகிறேன் பேர்வழியென்று அறுத்துக்கொண்டு இருந்தால் அவரை அவரது பேச்சின் இடைநடுவில் கைதட்டி வழியனுப்பி வைக்கும் சுப காரியத்துக்காக ஒன்று கூடி விடுகின்றார்கள்.

# கொழும்பு முத்தமிழ் விழா அனுபவம்

*********************************************************************************


நான் : தல! நானும் இந்த ரோட்ல தான் காலா காலமா சுத்துறேன், ஆனா இப்போ இந்த மேடையில ஆடுற அழகிகளை கண்டதே இல்லையே

விருது நாயகன் : சத்தியமா பாத்திருப்ப ......... ஆனா அழகிகள் என்று நினச்சிருக்க மாட்ட......

நான் : ஓ! சமந்தாவின் சகோதரிகள்.........

# இது ஒண்ணும் பின்னவீனத்துவ உரையாடல் கிடையாது. எல்லாம் ஃபுல் மேக்கப்புன்னு சொன்னேன்.*********************************************************************************"எனது தோல்விகளின் போதும், தடுமாற்றங்களின் போதும் நீங்கள் என்னுடன் கூட இருக்கவில்லையெனில், எனது வெற்றிகளின் போதும் என்னோடு கூட இருப்பதற்கு எதிர் பார்க்காதீர்கள். "

_இது வில் ஸ்மித் சொன்னது_

"நீ ஒரு அட்டுப்பிகரு போகும் போது கூட என்னிடம் அதை காண்பிக்காமல் ரகசியமாக பார்த்திருப்பாயானால், ஒரு சூப்பர் ஃபிகர் தெருவில் போகும் போது உன்னை சுரண்டி அவளை நான் காண்பிப்பேன் என நினைக்காதே."

_இது பதிவரு சொல்றது_

*********************************************************************************

"கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை யுத்தக்குற்றங்களுக்கு இணையான கண்ணோட்டத்துடன் சர்வதேசம் அணுகவேண்டும்."

_ஐ.நா. சொன்னது_

"க்கும்..... இங்க நடந்த யுத்த குற்றத்துக்கே சர்வதேசம் இன்னமும் ஒரு முடிவை கண்டபாடில்ல.. இதுக்குள்ள இது வேற‌.........""

_பதிவரு சொல்றது_*********************************************************************************கொழும்பின் கொம்பனித்தெரு 99 வருட குத்தகையின் கீழ் இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதற்காக வேண்டி  எட்டு ஏக்கர் பரப்பளவான பகுதியின் கீழ் குடியிருந்த 456 குடும்பங்கள் அந்த பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டும், அந்த பரப்பு முழுவதும் அரசுடமையாக்கப்பட்டு இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டுள்லது. துரத்தப்பட்ட மக்களுக்கு வெகு சீக்கிரத்தில் மாற்றிடங்கள் அதாவது இரண்டு வருடங்களில் மாற்றிடங்கள் அமைத்துக்கொடுக்கப்படுமென அரசு அறிவிப்பு. ( அது வரைக்கும் மக்கள் அனைவரும் தம்பனை மற்றும் வில்பத்து காடுகளில் வேடுவர்களோடு வாழவர் என எதிர்பார்க்கப்படுகிறது)

# செய்தியை படித்து விட்டு தூங்கிப்போனேன். கொழும்பில் வாழும் மக்கள் அனைவரினதும் கிட்னியை சீனாவுக்கு இலங்கை அரசு விற்றுவிட்டதாக கனவு வந்தது. உடனே செய்தியை பாக்கணும் , கனவுதானா இல்ல அதுவும் நடந்திருச்சான்னு பாக்க.

*********************************************************************************

உலகில் இந்த ஒரு தொழிலில் மட்டும் தான் அதிக தொழில் அனுபவம் உள்ளோருக்கு குறைவான ஊதியமும், குறைவான தொழில் அனுபவம் உள்ளோருக்கு அதிக ஊதியமும் கிடைக்கிறது. ஏனைய தொழில்களில் நேர்மாறான நிலை தான் இருக்கிறது.

# விபச்சாரம்

_என்னோட இன்றைய ஃபேஸ்புக் ஸ்டேடஸ்_

*********************************************************************************

எனக்கு உயிர்களை கொன்று பசியாற வேண்டும் என்ற எந்த எண்ணமும் கிடையாது. காட்டுப்பன்றி இறைச்சியும், கணவாயும், ஆட்டிறச்சியும் மரத்தில் காய்க்குமாக இருந்தால் வெஜிடேரியனாக இருப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது.

_என்னோட இன்றைய ஃபேஸ்புக் ஸ்டேடஸ்_*********************************************************************************


சைவ உணவுகள் அசைவ உணவுகள் தொடர்பில் எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு வாதம் போய்க்கொண்டிருந்தது. சில மணிநேர வாதத்துக்கு பின்னர் .......


" சேவல் மூலம் உற்றத்தியாகாமல் , ரசாயனங்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் கோழி முட்டைகளை சைவத்துக்குள் சேர்த்து உண்ணலாம் என்று சொன்னேன்.

அது எப்படி சைவமாகும் என்றான்.

அந்த முட்டையால் எந்த உயிரையும் உற்பத்தி செய்யமுடியாததால் , அதாவது அதன் சந்ததியான கோழி குஞ்சை பிறப்பிக்க  முடியாததால் அதனை சைவத்துக்குள் சேர்த்து உண்லாம் என்று சமாளித்து அனுப்பி வைத்தேன்.

சில நாட்களின் பின்னர் ஒரு சைவ விருந்து உண்ண என்னை வீட்டுக்கு அழைத்திருந்தான். எனக்கும் சைவத்துக்கும் சுத்தமாய் ஆகாது. ஆனாலும் நண்பன் அழைக்கிறான் என்று போயிருந்தேன். கண்டிப்பாக அந்த சைவ முடை விருந்தில் இருக்கும் என்று எனக்கு தெரியும்.

சைவ விருந்து என அழைக்கப்பட்ட எனக்கு ஆச்சரியம். என் உணவு தட்டு பூராவுமே ஊர்வன , பறப்பன, நகர்வன எல்லாம் செத்து கிடந்தது. 

எல்லாம் சைவம் தான் சாப்பிடு என்றான் நண்பன். 

எப்பிடிடா என்றேன் நான். 

அது ஆம்பிள நண்டு, அது ஆம்பிள ஆடு, அது ஆம்பிள மாடு, அது ஆம்பிள கணவாய் எல்லாமே ஆம்பிள மச்சி! எதுவுமே குட்டி போடாது, இனத்தை உற்பத்தி செய்யாது, சுத்த சைவம் சாப்பிடு மச்சி என்றான்.

அவனின் அறிவுத்திறனை வியக்கும் அளவுக்கு எனக்கு அவகாசம் இருக்கவில்லை. என் கவனம் பூராவுமே அந்த நண்டின் காலை உடைத்து உள்ளே தள்ளுவதிலேயே இருந்தது.டிஸ்கி : நண்பா ஹாரி! உன்னோட கதை ஞாயிறு விசேட வெளியீடாக வெளிவரும்.


21 comments:

 1. // எனக்கு உயிர்களை கொன்று பசியாற வேண்டும் என்ற எந்த எண்ணமும் கிடையாது. காட்டுப்பன்றி இறைச்சியும், கணவாயும், ஆட்டிறச்சியும் மரத்தில் காய்க்குமாக இருந்தால் வெஜிடேரியனாக இருப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது.//

  நம்ம ரெண்டு பேருக்கும் படம் டேஸ்டுல ஒத்துப் போகுதோ இல்லையோ,, இந்த விஷயத்துல நல்லா ஒத்துப் போகும் போலயிருக்கே??? :)

  ReplyDelete
  Replies
  1. நான் ஒரு அசைவ பட்சிணி தலைவரே! நீங்களும் அப்படியென்றால் ... ஆஹா பிரம்மாதம். எலெய்.. ஒரு ஆட்டு தொடை ஒண்ணு கொண்டுவாங்கடா

   Delete
 2. //உலகில் இந்த ஒரு தொழிலில் மட்டும் தான் அதிக தொழில் அனுபவம் உள்ளோருக்கு குறைவான ஊதியமும், குறைவான தொழில் அனுபவம் உள்ளோருக்கு அதிக ஊதியமும் கிடைக்கிறது. ஏனைய தொழில்களில் நேர்மாறான நிலை தான் இருக்கிறது.//

  இத ஏற்கனவே எங்கேயோ படிச்சா மாதிரி இருக்கு..ஆனாலும் உண்மையான மேட்டர் தான். ஆனாலும் இதில் வேறு காரணிகளுக்கும் செல்வாக்குண்டு என்பதை மறந்துவிடாதேயும்.

  30 வயசு சூப்பர் ஃபிகரு 5000ரூவா ... 20 வயசு அட்டு ஃபிகரு 1500 ரூவா. :)

  ReplyDelete
  Replies
  1. நானும் எங்கோ , எப்போதோ படித்த ஞாபகம் தான். இன்று கப்பஸில் ஒரு நண்பனின் அனுபவங்களை கேட்டுக்கொண்டிருந்த போது திடீரென தோன்றியது. அது தான் பிளாக்கிலும், ஃபேஸ்புக்கிலும் போட்டேன்.

   ///30 வயசு சூப்பர் ஃபிகரு 5000ரூவா ... 20 வயசு அட்டு ஃபிகரு 1500 ரூவா. :)////

   ரேட்டு எல்லாம் சொல்லுறத பாத்தா......... தலீவா.... என்ன நடக்குது? எங்கப்பா மிஸஸ். ஹாலிவுட் ரசிகன்?

   Delete
  2. ஹலோ ... பார்த்த வச்சு சொன்னேன்பா ... கூழுக்கே வழியக் காணோம். இதுல பிரியாணி ஒரு கேடா?

   Delete
  3. சரி சரி.. விடுங்கண்ணே. எது கூழு? எது புரியாணி?

   Delete
 3. //உன்னோட கதை ஞாயிறு விசேட வெளியீடாக வெளிவரும்//

  வீரகேசரியா தினக்குரலா?

  ReplyDelete
 4. ஹிஹி புது வித ஸ்டைலோ?
  நல்லா இருக்கு..
  முக்கியமா அந்த கடைசி சைவ சாப்பாடு :)

  ReplyDelete
  Replies
  1. எலாம் உங்க ஆசிர்வாதம் தல... நமெக்கெண்டு ஒரு பாணிய வகுத்துக்க வேண்டியது தான்.

   அண்ணே மேல நம்மோட சந்திப்பு பத்தி போட்டு இருக்கேனே அத பாக்கலியா? பதிவ முழுசா படிக்கல போல... ஹி..ஹி..ஹி..

   Delete
 5. ஒபாமா - ரூம்னி நேரடி விவாதம் பார்த்தீங்களா? எனக்கென்னமோ அல்கொய்தா தலைவர் பின்லேடனை அழித்த நன்றி கடனுக்காக அமெரிக்கா மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒபாமா மீண்டும் ஆட்சிகட்டிலில்(!!) அமருவார்ன்னு தான் தோணுது....

  ReplyDelete
  Replies
  1. ஆமா.. ஆமா நானும் பாத்தேன். ரெண்டாவது விவாதத்தில் ரூம்னிக்கு மரண அடி தான். அது போக அமெரிக்காவை ஆளும் தகுதி ரூம்னியை விட ஒபாமாவுக்கே அதிகம். தீவிர வாத அழிப்பு விசயத்தில் அமெரிக்கர்கள் எப்போதும் ஒபாமாவின் பக்கமே இருக்கிறார்கள். இது போல ஒரு சம்பவம் தான் புஷ்ஷுக்கும் நடந்தது. இரண்டாவது தடவை அதிபர் பதவிக்காக புஷ் போட்டியிட்ட வேளை அவரது செல்வாக்கு மிகவும் சரிந்து போய் இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் ஒசாமா விட்ட அறிக்கையொன்றில் "புஷ் இல்லையென்றால் அமேரிக்காவை எப்போதோ அழித்து இருப்பேன்" என்று கூறப்போக அமேரிக்கர்களின் மத்தியில் புஷ் ஹீரோவாகி , ஆட்சி கட்டிலில் அமர்ந்த அல்லது தூங்கிய கதை உலகறிந்தது.

   # இரண்டு பிரபல பதிவர்கள் சந்தித்துக்கொன்டால் உலக விடயங்களை பற்றி அலசுவார்கள்.

   Delete
 6. //ஒரே பெண்ணை இருவர் காதலிப்பதால் ஏற்படும் முரண்பாடுகளால் மோதிக்கொள்ளும் இளைஞர் குழுக்கள் கூட, மேடையில் ஒருவர் நின்று , உரையாற்றுகிறேன் பேர்வழியென்று அறுத்துக்கொண்டு இருந்தால் அவரை அவரது பேச்சின் இடைநடுவில் கைதட்டி வழியனுப்பி /////


  அட்ரா அட்ரா.. பேஸ்புக்ல பார்த்தேன்... அதுல கைதட்டுன ஒரு ஆளு நீங்க..அந்த பொண்ணு யாருன்னு தெரியும்.. மத்தவரு யாரு?

  ReplyDelete
  Replies
  1. ஒரு ஆளு நாந்தே.. மத்தவரு இலங்கையின் பிரபல பதிவர் மைந்தன் சிவா..... ஆமா யாரு சார் அந்த பொண்ணு!?

   Delete
 7. //பிச்சைக்காரன் வாந்தி//ன்னு லேபல் போட்டது ஏன் தல?
  நண்பன் வீட்டுல நண்டு ஒத்துக்கலியோ??

  சூப்பரா ஒரு மசாலா பதிவு நண்பா! கொழும்பு முத்தமிழ் விழாவிலேயே பி.பதிவராவதற்கு வேண்டிய பல அனுபவங்கள் கிடைச்சுட்டுது போல..

  ReplyDelete
  Replies
  1. /////பிச்சைக்காரன் வாந்தி//ன்னு லேபல் போட்டது ஏன் தல?///

   அதுவா ? ஒரு பிச்சைக்காரன் பல வீட்ல வாங்கி சாப்பிட்டிருப்பான், அவன் வாந்தி எடுத்தா அந்த வாந்தில பலதும் பத்தும் இருக்கும்ல.. அது மாதிரி தான். ஒண்ணுக்கு ஒண்ணு சம்மந்தம் இல்லாத சின்ன சின்ன மேட்டர் சிக்கும் போது இப்புடி "பிச்சைக்காரன் வாந்தி"ன்னு புது லேபிள்ள எழுதலாம்னு இருக்கேன். எற்கனவே ஒண்ணு எழுதிருகேனே... அந்த சிம்பு மேட்டர்.

   ///நண்பன் வீட்டுல நண்டு ஒத்துக்கலியோ??////


   இந்த புத்திசலித்தனம் தான் உங்கிட்ட புடிச்சதே....

   ///முத்தமிழ் விழாவிலேயே பி.பதிவராவதற்கு வேண்டிய பல அனுபவங்கள் கிடைச்சுட்டுது போல..///

   முத்தமிழ் விழாவில் முத்துமுத்தாய் பல அனுபவங்கள். அது பத்தி நிறைய எழுதலாம், அது போக நிறை எழுத் முடியாது. அம்புட்டு மேட்டர் இருக்கு.

   Delete
 8. //அது ஆம்பிள நண்டு, அது ஆம்பிள ஆடு, அது ஆம்பிள மாடு, அது ஆம்பிள கணவாய் எல்லாமே ஆம்பிள மச்சி! எதுவுமே குட்டி போடாது, இனத்தை உற்பத்தி செய்யாது, சுத்த சைவம் சாப்பிடு மச்சி என்றான்//
  நண்பனா இப்படியிருக்கணும்...

  அமலாபால் மேட்டரு காணோம்,போட்டோவும் காணோம்?

  ReplyDelete
  Replies
  1. அமலா பால் எப்போதும் கிடையாது மச்சி.. சங்கத்தில முதல் மெம்பர் காஜல் தான். அப்புறம் தான் அமலா!

   Delete
  2. அடுத்ததாக சமந்தாவை போடாதமைக்கு வன்மையாக எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

   Delete
  3. தலைவரே முதல் ரெண்டு படமும் சமந்தாவோடது தான்.. மேக்கப் கொஞ்சம் கம்மிங்கிறதால அடையாளம் காண்றது கொஞ்சம் கஷ்டமா இருக்கும் கோவிச்சுக்காதிங்க..

   Delete
 9. Naan English letters la eluthiraennu kovichikkatheenga... Aana Kishokenaan ungada theevira visiri aagalam ennu mudivu edithurukkan... Ellame super matters.. Enathu paarattukkal.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...