உதைபந்து

Friday, April 20, 2012

சூடுபிடிகிறது தனுஷின் தாடிவிவகாரம், ஐ.பி.எல் போட்டியில் பாடியதால் வந்த வினை!


அப்பாடா! எனக்கு டெம்பரறியா லீவு வுட்டிருக்கானுக, தனுசு! யூ என்சாய்...


நேத்துங்க , இந்தியன் முன்னணி சுற்றுப்போட்டி பாத்துக்கிட்டு இருந்தேங்க, சென்னை சிறந்த அரசர்களும் , புனே போராட்டக்காரர்களும் ஆடிக்கிட்டு இருந்தாங்கோ! ஆட்டத்த நான் ரசிச்சு பத்துகிட்டு இருந்தேங்க , இந்த காமிரா பய புள்ளய்ங்களும் கெடச்ச காப்பில எல்லாம் சொழட்டி சொழட்டி மைதானத்த எடுத்துக்கிட்டு இருந்தாய்ங்க! அட திடீர்ன்னு பார்த்தா அகோரி ஆர்யாவாட்டம் ஒரு மூஞ்சி! பக்கத்துல திருவிழாவைல புள்ள புடிகிறவன் போல ஒரு செம (ஆம்பள) ஃபிகர். இந்த ரெண்டு மூஞ்சிகளையும் எங்கயோ பாத்திருக்கிறனேன்னு கடுமையா யோசிச்சா, அட நம்ம சுப்பர் ஸ்டார் மருமகபுள்ள (சாரி டனுசு , உங்களுக்கு தான் அந்த அடையாளம் புடிக்காது இல்ல, அப்போ இப்படி வச்சிக்கலாமா? இவரோட மாமா தான் ரஜினி) பக்கத்தில நம்ம சோனியா அக்காவோட முனாள் புருஷன். ஆனாலும் என் தலைவன் தனுஷை கண்டுவிட்ட பேருவகையில் அந்த கிரிக்கட் மேச்சு ருசிக்கவெ இல்ல.

 மேட்ச்சு ருசிக்காம போனதுக்கு காரணம் வேற ! யாருடா இந்த சியர் லீடர்ஸ் பொண்ணுங்களுக்கு கதகளி ட்ரெஸ்ஸு குடுத்தது? கொய்யாலே கைல கெடச்சே , கைமா பண்ணிடுவன் ஜாக்கிரத.சரி அத்த விடுவம் பாஸு, நம்ம சுப்பர் ஸ்டாருக்கே அடையாளமாக  இருக்கிற தலைவன் தனுச கண்ணுல கண்டபொறகு சியர் லீடர்ஸ் யாருக்கு வேணும்? ஆனாங்காட்டியும் மக்களே இந்த சிய லீடர்ஸ் துஷ்பிரயோக விவகாரத்த பத்தி பதிவு போடாம நாளைக்கு காலேல சாப்பிட மாட்டேண்டா. இது பன்னிகுட்டி ராமசாமி மேல சத்தியம்.

சரி அப்டியா பட்ட பெருமை உடைய தனுசை பேட்டி காண மாட்டாங்களா? வேட்டி உருவ மாட்டாங்களான்னு உள்மனசு தவிச்ச தவிப்பு எந்த பாரதிராஜா பட நாயகியும் தவிக்காதது. கண்ன்டாங்களே, பேட்டி கண்டாங்களே, செக்கண்டு பேட்டிங் தொடங்க மொதல்ல கெடச்ச பத்து நிமிஷ கேப்பில நாலு வெளப்பரம் போட்டு லாபம் பாக்கிறத விட்டுபுட்டு உங்களுக்கு ஏன்டா இந்த வெல்லங்கம் புடிச்ச வெச பரீட்சைன்னு கேள்விய எவனாச்சும் கேட்பான்னு தெரிஞ்சும் , ரிஸ்க் எடுத்த சோனி மேக்ஸ் தொலைக்காட்சிக்கு எங்கள் வீட்டு கொல்லைபுறத்தில் கோயில் கட்டுவேன்னு இத்தால் உறுதி அளிக்கிறேன்!

செவமணி ட்ரம்ஸ் வாசிக்க , அது என்ன ஒரு பாட்டு ? யம்ம சும்ம நாவிக்கமலத்தில இருந்து ஒடம்பில இருக்கிற அத்த நரம்பு, நாடி , நாளம் வழியா ஓடி இருகிற அத்தனை ஓட வழியாவும் வெளிய வந்திச்சு உற்சாகம். மொதல்ல அந்த கொரலுக்கே  குடுக்கலாம்யா பத்து கோடி, இத பாக்கணும்யா யூ டியூப்ல பத்துலட்சம் வாட்டி. சும்மா உடன் கள்ளு இருக்கில்ல உடன் கள்ளு அதில ஒரு பத்து பானைய , சைடிஷுக்கு கருவாடு சுட்டு அடிச்சா ஏறும்ல ஒரு மப்பு அது என்ன மப்பு இது தான்ட மப்பு! நான் பாட்ட கேக்கிறதா இல்லாங்காட்டி அந்த பாடும் போது அந்த பாடி லாங்குவேஜ் பாகிறதான்னு கொழம்பியே போயிட்டேன்.

என்னா டெரெஸ்ஸிங் சென்ஸு ! என்னா ஸ்டைலு! என்ன விட்டா அடுத்த ஐ.பி.எல் வரைக்கும் பாத்துக்கிட்டே இருப்பேன். சொல்றேன்னு தப்பா நெனைக்க கூடாது, அட அவனா நீயின்னு கலாய்க்க கூடாது, ஆனாலும் சொல்லாம இருக்க முடியல. அந்த காலு இருக்கே காலு , யம்மா வாழ மட்ட என்ன மயித்துக்கா? அந்த ஒதடு இருக்கே யம்மா! சகாரா பலவனத்தில நடு உச்சி வெய்யில்ல நாக்கு வரண்டு கெடக்கு போது எவனாச்சும் கொணாந்து கூலா ஒரு பீர் தந்தா எப்டி இருக்கும், அந்தா மாதிரி ஒரு ஒதடு. செம போதப்பா! அத்த நெனனச்சா இப்பவே வந்திரும் போல இருக்கு , அட உற்சாகம்க, எப்போ பாரு கெட்ட எண்ணமும் கீழ்தரமான சிந்தனைகளும்! 

மறுபடியுமாடா? இந்த மாதம் தானடா கலாய்ச்ச...

இப்டியே நான் ரசிசுகிட்டு  இருக்கும் போது கவுண்டு கெடக்கிற ஓட்ட கொடத்துக்குள்ள கெடந்து , படாத இடத்தில அடிபட்ட வெறிப்புடிச்ச சொறி நாய் வலியில மொனகி மொனகி கொடத்த பெராண்டுற மாதிரியே சவுண்டு வந்திச்சு! கூ  இஸ் த டாக் வாய்ஸ்? யார்ரா குறுக்க பேசுறதுனு திரும்பி பாத்தா நம்ம தனுசு பாடுறாப்ல! சாரி சார் நான் அந்த ஐ.பி.எல் காமின்றி பண்ணுற பொண்னு இங்கிலிபிஸ்ஸில செமத்தியா பாட்டு பாடுறதில முழ்கி போனதில நீங்க பக்கத்தில நின்னத கூட கவனிக்கல!

அந்த காமின்றி பண்ணுற பொண்ணு என்னாமா இருக்கிறா! என்னாமா பாடுறா! எவனுக்கு குடுத்து வச்சிருக்கோ. சாரி தல, அந்த பொண்ண ஜொள்ளு விட்டதில உங்க கதைய மறந்து போனேன்.

அது சரி நீங்க இங்க இன்னா பண்றீங்கன்னு கேட்டா , தல பாட்டு பாட வந்துச்சாம்ல, அந்த செம ஃபிகரு இங்கிலிபிஸ்ஸில பாடும் போது குறுக்க நின்னு தலைவர் "ரேப்" பண்ணினார் பாரு , அரங்கமே அதிர்ந்திச்சு.(டேய் நாயே அது ரேப்பு இல்லடா "ராப்" எங்க சொல்லு ராப்? # "ரேப்பு" , ஆமா அதே தாண்டா வெளங்கிரும்)

செம ஸ்பீடில அவரு 'வை திச் கொல வெறி கொல வெறின்னு " ரேப்பு பண்ணும் போது குறுக்க கவுண்டரு மட்டும் பூந்து "என்னட கரடி கக்கூஸ் போற மாதிரி ஒரு சவுண்டு"னு கமன்டரி பண்னலேன்னா சும்மா பிச்சு மேய்ஞ்சிருப்போம்ல! அது சரி தலைவரே இந்த வை திஸ் கொலவெறி பாட்டு நீங்க தான் பாடுனீங்களா? என்ன சார் 100% வேற எவனோ பாடினாப்ல இருந்திச்சு.

எச்சுகுச்சு மீ.... மே ஐ கம் இன்?

எவன்டா அது , உள்ள வந்துட்டு வரவான்னு கேக்குறது? வாடா டேய்! யார்ர நீ?

"நாந்தாங்க யுவன் ஷங்கர் ராஜா"

"டேய் தனுசு மாதிரி ஒரு இசை மேதை, இசை ஞானிகளின் ஞானி, மெல்லிசை , வல்லிசை, துளிசை, கில்மா இசை மன்னர், இசை புயல் , இசை சூறாவளி, இசை கதரீனா , இசை ரீட்டா, இசை சுனாமி இருக்கிற எடத்தில உனக்கென்ன மேன் வேலை"?

"இல்ல , இந்த கொலவெறி பாட்ட யாரு பாடினதுன்னு யாரு கேட்டது?"

'நான் தான் மேன் கேட்டேன். அதுக்கு என்ன இப்போ?"

"நான் ஒரு உண்மை சொல்லியாகணும்"

"டேய்! முனேல்லாம் எனக்கொரு உண்ம தெரிஞ்சாகும்னு அலைஞ்சீங்க , இப்பொ என்னடா புதுசா கெளம்பி இருக்கீங்க. பராவாயில்ல சொல்லு மேன்"

"உங்களோட தலைவரோட படம் ஒண்னுவந்துச்சே, பேரு கூட ஏதோ சரவணன்னு"

"ஆமா, கீழ்பாக்கத்தில் இருந்து சரவணன்"

"அதுக்கு நான் தான் மியுசிக் பண்ணினன் சார்"

என்னய பத்தி என்னதான் சொன்னாலும் நம்பாதிங்க!


"இன்சல்ட் , இன்சல்ட் கிரேட் இன்சல்ட், பீத்தோவன் வீட்ல ராப்பிச்சகாரன் கச்ச்சேரி பண்றதா, ஜேம்ஸ் கமரூன் வீட்ல  சாம் அன்டர்சன் படம் ஓடுறதா? அவமனம் வெட்கம். தன்னோட தாடி மசிருக்குள கூட மியூசிக்க வளத்து வச்சிருக்கிர என்னோட தலைவன் , பாவம் வளர்ற புள்ளையாச்சே, உன்னோட அப்பா இத்தன காலம் மியூசிக்  பீல்டில  இருந்து சாதிக்க முடியாம போனத நீயாவது ஏதோ தன்னோட அளவுக்கு இல்லன்னாலும் சும்மா ஏதோ சோத்துக்கு சிங்கியடிக்காத அளவுக்கு  பாவம் ஏதோ சம்பாதிச்சுக்கோன்னு   உனக்கு அந்த படத்தில சான்ஸ் தந்தவர்றா என்னோட தலைவன் . சரி அதுக்கு என்ன இப்போ?"

"அந்த படத்தில 'நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்குன்னு' ஒரு பாட்டு வருமே"

"ஆமாய்யா யோவ் ,நானும் ரொம்ப நாளா கேக்கணும்னு இருந்தேன், என்னய்யா பெரிய புடுங்கி மியூசிக் டைரடக்கர் நீயி? இதுக்கு தான் நாட்டுக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா எங்க தனுசு வேணும்கிறது. அவரளவுக்கு உனக்கு ஞானம் இல்லன்னு அந்த பாட்டே காட்டி குடுத்திருச்சேய்யா, யாருக்கு எந்த பாட்டு குடுக்கணுங்கிற இங்கிதம் தெரியாத நீயெல்லாம் ஒரு மியூசிக் டைரடக்கர், எவன்ட அந்த பாட்டு பாடினது ? பயபுள்ள நாலுநாள் வச்ச பழைய சோத்த தின்னு பேதியாகி கம்மாக்கர பக்கம் ஒதுங்கி "என்வயார்மென்ட் பொலியூசன்" பண்றாப்ல ஒரு கொரலு, அப்பிடி ஒரு நரகாம்சமான கொரல் வச்சிருக்கிற ஒருத்தனுக்கு சான்ஸு கொடுத்துப்புட்டு நீயெல்லாம் இங்க வந்து பேசுற , யோவ் வாச்மேன்! யாருய்யா இசைமேதை குடியிருக்கிற இந்த இடத்தில இந்த சில்லற பசங்கள உள்ளவிட்டது? டேய் யுவன் ! சில்லறப் பையா இங்க  நிக்காத ஓடிப்போயிர்"

"சார்"

"டேய் ! நீ இன்னும் போகலயா?"

"இல்ல சார் அந்த பாட்ட பாடினதே உங்க இசை மேதை தனுசு தாங்க"

"நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ! என்னடா சொல்லுற? டேய் அவரளவுக்கு உனக்கு மியூசிக் பத்தி எதுவுமே தெரியாதுங்கிறதால, பொறாமேல சொல்லாதடா. அவரோட கொலவெறி சாங்கில இருக்கிற கிக்க பாத்தியாடா, அத பாத்துமா இப்பிடி பேசுற? ராஸ்கல் , அந்த 'நாட்டு சரக்கு' பாட்டு என்னடா, எங்க அடிபட்டாலும் கால தூக்கி கத்துற சொறி நாய் கத்துறாப்ல இருக்கு. கொல வெறி சாங்க் கேட்டியா ? கரிகரனே பிச்ச எடுக்கிற காந்த கொரலுடா . இல்ல.. இல்ல... நீ பொய் சொல்ற! " 

"இல்ல சார் , நான் உண்மைய தான் சொல்லுறன் சார், அந்த படம் வந்த நாளில 'சவுண்டு மிக்ஸிங்' அப்டீங்கிற டெக்னாலஜி ரகுமான் சார் மட்டும் தான் வச்சிருந்தாரு. எங்க கிட்ட இருக்கல. அப்போ தனுசு ஒரு பாட்டு பாடனும்னு கேட்டாரு , சரி டெமோ காட்டுங்கன்னு சொன்னன் . அப்போ அவரு எந்த மியூசிக், சவுண்டு மிக்சிங் எதுவுமே இல்லாம் பாடினத கேட்டதும், வட பழனி முருகன் கோயில் மொட்ட அடிச்சுக்கிட்டு , தென் மதுர பஸ்ஸ்டாண்டில பிச்ச எடுக்கலாமன்னு கூட தோணிச்சு. நான் எவளவோ நாசூக்கா சொல்லி பாத்தேன் கேக்குற மாதிரி தெரியல, அப்புறம் அந்த நேரத்தில என்னோட பெஸ்டு பிரண்டா இருந்த செல்வராகவன் கிட்ட சொல்லி சிபாரிசில ஒரு மாதிரி தான் நெனச்சத ஒப்பேத்திட்டாய்ங்க"

"டேய் என்னடா இடிய எறக்குற" 

"அதனால தான் சார் ஐ.பி.எல் போட்டில அவரு இந்த மிக்ஸிங் எதுவுமே இல்லாம அவரு பாடினப்ப , கவுண்டமணிசார் வந்து 'கரடி கக்கூஸ் போன மாதிரினு' கமண்ட் அடிச்சிட்டு போனாரு. நீங்க கூட அந்த ரெண்டு பாட்டையும் கேட்டுப்பாருங்க உண்ம புரியும் குரலு 30% மிக்சிங்கு 70%. அப்போ நான் வாரன் சார்"

"டாய் நில்றா "

"என்ன சார்"

"மவனே , இந்த உண்மையெல்லாம் வேற எங்கயாவது போய் சொன்னேனு வச்சுக்க , எங்க  தலைவர் அடுத்து ஆஸ்கர் அவார்டுகளை ஒரு கண்டெய்னர் நெறைய அள்ளிக்கிட்டு வரும்போது ஒபாமா தலமையில பாராட்டு விழா நடக்கும், உலகத் தலைவர்கள் எல்லாம் வந்து பேசுவாய்ங்க , ஆனா  அந்த மேடைல உன்ன பேச விடமாட்டன் ஜாக்கிரத"

"நான் அப்பவே சொன்னன், சவுண்டு மிக்சிங் இல்லாம நான் கொலவெறி பாட்டு பாடமாட்னேனு, கேட்டீங்களா? இப்பொ பாரு யாரு பெத்த புள்ளைங்களோ வெறிப்பிடிச்சு போய்ட்டீகளே பக்கிகளா!"


அடங்கொன்னியா ! இந்த மேட்டர பன்னிக்குட்டி, பட்டாபட்டி வகையறாக்கள் கேள்விப்பட்டா, இத்த வச்சே பத்து பதிவு தேத்தி என்னோட தங்க தலைவன் தனூச மானபங்க படுத்திடுவாய்ங்களே! தலீவா நீ கவலய வுடு, நாம எல்லாம் நாதாரித்தனம் பண்ணிநாலும் நாசூக்க பண்ணுறவைங்க! அந்த பக்கி பய யுவன் சொன்னது இப்பொதான் எனக்கு இடிக்குது. முன்னாங்காட்டி ஒரு நாள் நீயி ஃபெப்சி கூட்டத்தில பேசுறப்போ , ஆனந்த கண்ணன் உன்ன பாட சொல்லி  கேட்கச்சொல்ல நீயி ஜகா வாங்கினியே , அப்போ "புலி பதுங்கிறது பாயிரதுக்கின்ல நெனச்சேன்" இப்போதும் அந்த வைர வரிகள், பட்டசாராயம் அடிச்சவன் வாந்தி பத்து வீட்டுக்கு மணப்பது போல  என் காதில் கிடந்து மணக்கிறது. "சார் ரெக்கார்டிங்ல ஏதாச்சும் பிழையாச்சுன்னா , திருத்தி ஷேப் பண்ணிடலாம், ஆனா இங்க ஏதாச்சும் பிழைய போச்சுன்னா  அவளவு தானா தனுசுன்னு கணக்கு பண்ணிடுவீங்க"ன்னு நீங்க அப்போ சொன்னதுக்கு அப்போ அர்த்தம் புரியல!

ஆனா ஐ.பி.எல்ல பாட கூப்பிடுறாய்ங்கன்னு வாய பொளந்துகிட்டு, நீங்க பாடப் போய் இப்போ என்னாச்சு? நீல சாயம் பூசிக்கிட்டு இருந்ததை மறந்து ஊளவிட்டு செமத்தியா அடிவாங்கின நரி கதையா ஆயிடுச்சு உங்க கத தலைவா! என்ன கர்ண கொடூரமா பாடினீங்க தெரியுமா? ஆனாலும் வலிக்கவே இல்ல!

நீ கவலப்படாத தலைவா! என்னதான் அக்குபன்சர் டாக்டர் பவர்ஸ்டாரும் , நம்ம ரியல் டாகுடர் விஜய்யும் போட்டிக்கு வந்தாலும் உன்னோட புகழ் சரியாம நான் பாத்துக்கிறேன் தலீவா!

யோவ்! பரிணாமம் பத்தி பதிவுபோடுற பதிவரே டூலிட்டில், எங்க தலைவனின் தாடிக்கும் அவனோட பாட்டோட பரிமாண வளர்ச்சிக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இருக்கா? அல்லது அது அவனோட வளர்ச்சியில் எந்தமாதிரி பாதிப்பை ஏற்படுத்தும்ன்னு ஒரு பிரத்தியேக பதிவு போட்டு , 

தலைவர்,
ஆஸ்கார் நாயகன் தனுஷ் கொலைவெறி ரசிகர்மன்றம்,
அகில உலகம்,
பிரபஞ்சம்.

என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு வற்புறுத்தப்படுகிறீர்கள். மீறும் பட்சத்தில் "3"பட கிளைமாக்ஸ் காட்சியை தனியாக உக்காந்து பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகவேண்டி வரும் என்பதை மனவருத்ததுடன் தெரிவித்துகொள்கிறேன். அனுப்பும் போது கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் அடைப்பு குறிக்குள் (தானை தலைவன் தனுஷ் தாடி விவகாரம்) என்று குறிப்பிட மறக்க வேண்டாம். பிரபஞ்ச பவர் ஸ்டார் ரசிகர் மன்ற தலைவர் , டாக்டர் விஜய் மன்ற கொள்கை பரப்பு செயலாளர்  மற்றும் இப்போது "தனுஷ் தாடி விவகார தலைவர்" ஆகிய பொறுப்புக்களை சுமப்பதால், எந்த விடயம் தொடர்பாக கடிதம் வருகிறது என அறிந்து கொள்ள இந்த ஏற்பாடு. நான் சொன்னவாறு குறிப்பிட மறந்தால் அடுத்த கணமே 'சுள்ளான்" படத்து வீசிடி உங்கள் வீட்டுக்கு பார்சலில் அனுப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

நீ கவலைப்படாத தல! யாரு என்ன சதி வேல பண்ணினாலும், எத்தனை சக்திகள் வந்து தடுத்தாலும், சவுண்டு மிக்ஸிங் இல்லாம நீங்கள் பாடும் பாட்டுக்களை கேட்டு எத்தனை பெண்களின் கர்ப்பம் கலைந்தாலும் சரி , எத்தனை பேர் ரத்தவாந்தி எடுத்தாலும் சரி , அடுத்து நீங்கள் உலகில் இசைக்காக உலகில் வழங்கப்படும் அத்தனை விருதுகளையும் வீட்டில் குவிக்கும் வரையிலும், டாக்டர் விஜய்க்கு போட்டியாக நீங்கள் அடுத்து அரசியலில் இறங்கி ஆட்சியை புடிக்கும் வரையும் கடுமையாக உழைப்பேன் என்று இத்தால் உனது மர்மயோகி தாடி மீது சத்தியம் செய்கிறேன். 

கெளப்புரா... கெளப்புரா.... ராஜா என்சாய்....
யூ ஆல் வேய்ஸ் ராக் தலீவா! இவனுக எல்லாம் சுண்டக்கா பயபுள்ளைங்க!


36 comments:

 1. நண்பரே, முதலில் ஒரு சந்தேகம்..இவ்வளவு நீண்ட நல்ல பதிவு எழுத எம்புட்டு நேரம் ஆகுது. ?. சரளமான எழுத்து நடை..அதில் சுவைக்கு பஞ்சமில்லை.மிக்க நன்றி.

  குறிப்பு : நண்பரே, நீங்கள் கேட்ட தளங்களில் ஒன்றிது எனக்கு தெரிந்தது : 1) http://oldmoviesdownload.blogspot.com/search/label/Western (டிரை பண்ணிப்பாருங்க) நல்ல வெஸ்டர்ன் படங்கள் லிஸ்ட்டுக்கு இங்க போங்க : http://www.imdb.com/list/cM8txmgpCuk/ :

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் உங்களது வருகைக்கு நன்றி! நல்ல பதிவுன்னா சொல்றீக? நீங்க சொன்ன சரித்தான்.... அந்த நேரத்த ஏன் கேக்கிறீக, ஒரு ஒண்ரை மணிநேரத்தில முடிச்சிரணும்ன்னு தான் ஆரம்பிபேன், ஆனா பாருங்க அது இதுன்னு ஏதாச்சும் வேல வந்து மூணுமணிநேரமாவது ஆயிடும். இந்த மொக்க பதிவுக்கு மூணு மணிநேரம் என்றது ஓவரா இல்ல?

   உங்களது பேருதவிக்கு மிக்க நன்றி நண்பா! தொடர்ந்தும் சந்திப்போம்!

   Delete
  2. இதுக்கு எல்லாம் எதுக்கு நண்பா "பேருதவி" என்ற பெரிய வார்த்தை எல்லாம்.நட்புக்குள்ள இது எல்லாம் சாதாரணப்பா..

   Delete
  3. உங்களுக்கு பெரிய மனசு தான். அது சரி நான் டவுன்லோட் பண்ணுவது "ரார்" ஃபைலாக தான் இருக்கிறது. ஒவ்வொன்றின் அளவும் கிட்டத்தட்ட 100மெகா பைட்ஸ் தான். அது அப்படித்தானா? அது போக அதை பிளே பண்னவும் முடியவில்லை.

   Delete
  4. அது அப்படிதான் நண்பா..எல்லா ரேர் பைல்களையும் டவுன்லோடு பண்ணிக்கிங்க..ஒரு படம்னா மொத்தம் ஏறக்குறைய 700MB வரும்.அதை அத்தனையும் Extract பண்னனும்.கடைசில AVI Format - ல ஒரே ஒரு பைல்லா கிடைக்கும்.
   அதுக்கு சில இலவச மென்பொருள்கள் இருக்கு..டிரை பண்ணிப்பாருங்க. (இலவசமானு ஒரு முறை செக் செய்துக்குங்க)
   1) http://free-rar-extract-frog.pwpw.de/

   நான் பயன்ப்படுத்துவது WinRAR..அது Full Free Version கிடைக்குமானு தெரில..எதுக்கும் இந்த லிங்கை யூஸ் பண்ணிப்பாருங்க.முதலில் டிரையல் வெர்ஷன் என்று வந்தாலும் Full Version - தான்.

   http://www.rarlab.com/rar/wrar351.exe மேல் உதவிகளுக்கு கண்டிப்பாக இங்க போங்க : http://www.thefreewareforum.com/index.php?showtopic=3567

   Delete
 2. நண்பரே நாளைக்கு பிக் மேட்ச்..ஒரு விமர்சன பதிவு முடிந்தா போடுங்க..வருறேன்.

  ReplyDelete
  Replies
  1. போட்ட மூன்று பதிவுகளிலும் நாளைய "எல் கிளாசிகோ" பற்றி குறிப்பிட்டு விட்டேன், பார்க்கலாம், நாளைய நடப்பை பொறுத்து இன்னுமொரு பதிவு குறித்டு யோசிக்கலாம். இவளவு நேரம் பின்னூட்டத்தை சுவாரசியமாக்கியதற்கு நன்றி. நாளை சந்திப்போம்!

   Delete
 3. //யாருடா இந்த சியர் லீடர்ஸ் பொண்ணுங்களுக்கு கதகளி ட்ரெஸ்ஸு குடுத்தது?//
  இந்த வரியில இருந்து தொடர்ந்து சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.. ரகளையான பதிவு..தனுஷ் மேல உங்கள் கொலவெறி இன்னும் அடங்கலைப் போல.. நானு ஐ.பி.எல் பார்க்குறதை season 2வோட நிறுத்திக்கிட்டேன்.. இதை வாசிச்சதுக்கப்புறம் மிஸ் பண்ணிட்டோமோன்னு கவலையாக்குது..

  அதுவும் யுவனோட பேட்டி, கலக்கலின் உச்சம்!
  //இத்த வச்சே பத்து பதிவு தேத்தி என்னோட தங்க தலைவன் தனூச மானபங்க படுத்திடுவாய்ங்களே!// பன்றதுல்லாம் பண்ணிட்டு, பாரசூட்ல எஸ்கேப்பாலாம்னு பாக்குறியா.. வெட மாட்டோம்..

  தனுஷ் மாதிரி ஒரு தாடி, ஒரு பொண்டா..டி, அவுங்க டேடி, 3 படத்தோட ஒரிஜினல் சீ.டி...
  -இதுல்லாம் இல்லைங்கற வயித்தெரிச்சல்ல தானே மேன் எழுதுற.. சரி, சரி... பொழைச்சுப் போ!

  * ஆமா commentary பண்ணுற பொண்ணை நீ டாவடிக்குறதுக்கு, நாங்க ஏம்ப்பா "அவனா நீயி?"ன்னு கேக்கனும்? லாஜிக்கு எங்கேயோ..... இடிக்குதே!

  ReplyDelete
  Replies
  1. வாப்பா தம்பி எங்கடா கடை பக்கம் ஆளையே காணோம்னு பாத்தேன் சரியா சாப்பாட்டு டயத்துக்கு அட்டெண்டன்ஸ் போடுற!

   Delete
  2. ////இந்த வரியில இருந்து தொடர்ந்து சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.. ரகளையான பதிவு..தனுஷ் மேல உங்கள் கொலவெறி இன்னும் அடங்கலைப் போல.. நானு ஐ.பி.எல் பார்க்குறதை season 2வோட நிறுத்திக்கிட்டேன்.. இதை வாசிச்சதுக்கப்புறம் மிஸ் பண்ணிட்டோமோன்னு கவலையாக்குது..//////

   யார் சொன்னது தனுசு மேல எனக்கு கோவம்ன்னு? அது என்னோட செல்லம் , அதுக்கு சப்போர்ட் பண்ணி தானே பதிவு போட்டிருக்கேன், இத போயி ஏன் கொலவெறி அப்டி இப்டின்னு பொரளிய கெளப்பி விட்டு எனக்கும் தனுசுக்கும் இருக்கிற அன்பை பிரிக்க பாக்கிறீங்களா? அது மட்டும் முடியாது. இப்பிடி எல்லாம் பண்ணினா என்னோட தலைவன பாராட்டி நான் தயார் பண்ணி வச்சிருக்கிற இன்னும் ரெண்டு பதிவ நான் போட மாட்டேன்னு உங்களுக்கு ஒரு நப்பாச! விட மாட்டேனே, என்னோட பதிவின் மூலமா அண்ணன அமெரிக்க சனாதிபதி ஆக்காம ஓய மாட்டன் பாத்துக்க!

   Delete
  3. //////பன்றதுல்லாம் பண்ணிட்டு, பாரசூட்ல எஸ்கேப்பாலாம்னு பாக்குறியா.. வெட மாட்டோம்../////

   மறுபடியும் சொல்லுறன் நான் தலைவன் தனூச கலாய்க்கல , கலாய்க்கல கலாய்க்கல, இது எங்க மாமியார் மங்கம்மா மேல சத்தியம்.

   Delete
  4. ////தனுஷ் மாதிரி ஒரு தாடி, ஒரு பொண்டா..டி, அவுங்க டேடி, 3 படத்தோட ஒரிஜினல் சீ.டி...
   -இதுல்லாம் இல்லைங்கற வயித்தெரிச்சல்ல தானே மேன் எழுதுற.. சரி, சரி... பொழைச்சுப் போ!////


   தனூசு மாதிரி தாடி எனக்கு வேனாம் , ஆனா அது மாதிரி ஒரு பொண்டாட்டி இருந்தா எவலவு நல்லம், தெனம் தெனம் ஒரு பொண்ணு கூட குஜாலா இருக்கலாம், அவளே கூட இருந்து வெளக்கு புடிப்பா அப்டீன்னு சொல்லுவேன்னு எதிர்பாத்தீங்களா? சொல்லமாட்டனே, நான் எல்லாம் என்னோட தலைவன் தனுசோட நம்பிக்கையன ஆளுடா, என்னோட வாய புடுங்க முடியாது. யாரு கிட்ட வெவ்வ்வே! ஏன் மச்சி நான் ரியல் மட்ரிட்டுக்கு சப்போர்ட் பண்ணலங்குற ஒரே காரணத்துக்காக "3" ஒரினல் சிடி போட்டு காட்டி என்னய கொல்ல பாக்கிறியா மச்சி, இது சொறா, உன்னோட தூண்டில்ல சிக்காது!

   Delete
  5. ////ஆமா commentary பண்ணுற பொண்ணை நீ டாவடிக்குறதுக்கு, நாங்க ஏம்ப்பா "அவனா நீயி?"ன்னு கேக்கனும்? லாஜிக்கு எங்கேயோ..... இடிக்குதே!////

   யோவ் ஏய்யா தப்பா நெனைக்கிறே? ஒரு தாய் கொலத்தபத்தி நான் எழுதும் போது அப்பிடி சொல்லுவீங்களோ எண்ட பயத்தில சொல்லிட்டன். அதுக்கு போயி... சே.....

   Delete
 4. ஏய்.. ரெண்டு பார்சிலோனா பங்காளிகளே!! நாளைக்கு மட்ரிட் பக்கம்தான் காத்து வீசுதாம்.. இப்பத்தான் இடியமீனோட weather report வாசிச்சுனு வாறேன்!!
  என்றும், எதிலும் ஜெயிப்பது நாங்களே...
  அண்ணன் ரொனால்டோ புது பூட்சு வாங்கிக்கினாரு..
  நாளைக்கு பறந்து பறந்து கோலடிப்பாரு!

  அப்படியே புயோலோட அடிடாஸ் கான்ட்ராக்ட் முடியுறதால, நைக்கோட புது ரிலீசான Nike Nasama-ponia 250 ஷுஸுக்கு அவரை ஒப்பந்தம் செய்யுறாங்கன்னு செய்தி அடிபடுது...

  நாளைக்கு மாலைக்குள்ள (பக்கச் சார்பிலலாம) ஒரு ப்ரிவியூ பதிவு வரணும்.. அதுக்கு ஆவலோடு வெயிட்டிங்!!

  ReplyDelete
  Replies
  1. நண்பரே பூட்ஸு வாங்கினா என்ன..கோல்ஸ் அடிக்குனுமே..பார்ப்போம்..ஆமா, நீங்களும் உதைப்பந்து வெறியரா ? சொல்லவே இல்ல ?

   Delete
  2. நானும் வலையுலகத்துக்கு வந்து, ஆசை ஆசையா புட்பால் பிளாக் ஆரம்பிச்சு, எவனுமே கண்டு கொள்ளாம, ஙாலிவுட் வந்து
   அந்தகதையெல்லாம் சொன்னா மட்டும் புரியவா போவுது..

   நானு 2006 வேர்ல்டு கப் காலத்துல இருந்து, கிரிக்கெட்டிலிருந்து ஃபுட்போலுக்கு மாறிட்டேன்.. சுமாராவும் விளையாடுவேன்.. defensive midfielder நம்ம ஏரியா!
   எனக்கு முதல்ல ஃபுட்போல், ரெண்டாவது - ரெஸ்லிங், மூணாவதுதான் கிரிக்கெட்!

   Delete
  3. நீங்க defensive midfielder ?? நான் வெறும் டிஃபேண்டர்தான்..பள்ளி டைம்ல சும்மா விளையாடுவேன்..அவ்வளவுதான்..மற்றப்படி நம்மகிட்ட சரக்கு எதுவும் இல்ல.உங்க தளத்துக்கு நான் வந்திருக்கிறதா ஞாபகம்..ஏன் எழுதுறத விட்டுட்டீங்க ?

   Delete
  4. யோவ் என்னய்யா கத பேசுர ? மட்ரிட்ல காத்தே இல்லயாம், மட்ரிட் பய புள்ளைக ஜோச் மோரின்கோ தலமையில மொட்ட மாடில அம்மணக்கட்டையா கெடந்து காத்து வாங்கிறாங்களாம். இப்போதான் "ஆல் இன் ஆல் அழகு ராஜா' சொன்னாரு.

   யோவ் பறந்து பறந்து கோல் அடிக்க ரொனால்டொ என்ன எங்க டாகுடர் விஜய் யா? நாளைக்கு புயோல் பாட்டா போட்டுகிட்டு தான் ஆடுறாரு. உங்களுக்கு அது போதும்.

   இந்த போட்டி தொடர்பான பிரீவியூக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக போட்டு தொலைத்துவிட்டதால் நாளைக்கு பக்கச்சார்பில்லாமல் எல்லாம் பதிவு போட முடியாது, வேணும்னா "பக்கா சார்பா" ஒரு பதிவு போடுறேன்.

   Delete
  5. வருகைக்கு மீண்டும் நன்றி நண்பா, இந்த போட்டி தொடர்பில் கொஞ்சம் ஏற்கனவே அலசி விட்டதால், நாளைய திஅனம் இன்னொரு பிரீவியூ தொடர்பில் சிந்திக்கவில்லை, ஆனாலும் முயற்சி செஇகிறேன். நான் பதிவு போட வேணாம்னாலும் பய புள்ளைக விட மாட்டாங்க போலைருக்கெ, என்ன ஒரு வழி பண்ணாம ஓய மாட்டீங்க போல இருக்கே!

   Delete
 5. ////JZ said நானு 2006 வேர்ல்டு கப் காலத்துல இருந்து, கிரிக்கெட்டிலிருந்து ஃபுட்போலுக்கு மாறிட்டேன்.. சுமாராவும் விளையாடுவேன்.. defensive midfielder நம்ம ஏரியா!///////

  ///// kumaran said நீங்க defensive midfielder ?? நான் வெறும் டிஃபேண்டர்தான்..பள்ளி டைம்ல சும்மா விளையாடுவேன்..அவ்வளவுதான்..////


  யேய் பங்காளிகளா! உங்க ரெண்டு பேரும் சும்மா புட்போல் ரசிகர்கள் தான்னு நெனச்சேன். ஆடக்கூட செய்விங்களா? செம ஆக்கள் தாம்பா ரெண்டு பேரும். நமக்கும் ஏதோ சுமார வருமுங்க நம்ம ரைட்டு ஃபோர்வேர்ட் தாங்க, இப்போ எங்க கம்பஸ் டீம்ல ஆடுறன். தம்பி குமரன் போனவருஷம் கூட மலேஷியாவில் இருக்கிற UiTM அப்டீங்கிற யுனிவர்சிட்டி நடாத்திய ஃபுட்போல் மேட்சுக்கு வந்திருந்தேன். ஏதோ ஷா - அலாம் அப்டீங்கிற ஒரு சிட்டி.

  பந்து பொறுக்க தானே போன அப்டீன்னு எல்லாம் கேக்க கூடாது!

  ReplyDelete
  Replies
  1. சேச்சே..அப்படி எல்லாம் நினைப்பேனா ?

   தம்பி குமரன் போனவருஷம் கூட மலேஷியாவில் @@
   இதுல எனக்கு நீங்க அண்ணனா ? செறிங்கண்ணா..ஓகேண்ணா//பை..பைண்ணா

   ஷா அலாம் - சிலாங்கூர் -ல இருக்குங்கண்ணா. எதுக்குண்ணா வந்தீங்க..அப்ப நீங்க கிரேட் பிளேயருனு சொல்லுங்க..

   Delete
  2. பாத்தியா இந்த டக்கால்டி வேல தானே நம்மகிட்ட வேணாம்கிறது. கலாய்க்கிற பாத்தியா? சத்தியமா நான் வந்தேன் மச்சி! நம்பு, ஏதோ "புட் சால்"லோ புருட் சலட்டோ அப்டீன்னு ஒரு இன்டோர் கேமு! அதுக்கு தான் வந்தோம். நம்பலன்ன என்னோட ஃபேஸ் புக்கு போயி மலேசியா அல்பம் பாரு மச்சி!

   ஆமா! ஆமா! நான் கிரேட் பிளேயர் தான். இல்லாம பின்ன ? இல்லாங்காட்டி அவளவு தூரம் வந்து தாய்லாந்து கிட்ட பதிமூணு கோல் வாங்கி திரும்பி வந்திருப்போமா? எனக்கு என்ன கவலைன்னா, தாய்லாந்து காரங்க ரொம்ப நல்ல பசங்கப்பா, எங்களுக்கு பதிமூணு குடுத்தாய்ங்க , கர்ணன் பரம்பரப்பா அவைய்ங்க! ஆனா அவங்களுக்கு எங்களால எதுவும் திருப்பி குடுக்க முடியலயே அப்டீன்னு நெனைக்கும் போதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு.

   ஆனாலும் சிறி லங்காவுல நாங்க கிங்கு, கொழும்பு சொக்கர் , இன்டர் யுனிவெர்சிட்டி கோப்பைன்னு செமத்தையான ஆட்டம் ஆடுறோம். இங்க தாய்லாந்து காரன் எவனும் வரமாட்டான்ல, கேட்டு சொல்லப்பு!

   Delete
 6. @jz

  ஏம்பா நீங்க இன்னமும் கொழும்பில ஆடுறது உண்டா?

  ReplyDelete
 7. @JZ

  /////எனக்கு முதல்ல ஃபுட்போல், ரெண்டாவது - ரெஸ்லிங், மூணாவதுதான் கிரிக்கெட்!///

  யேலேய்! ஃபுட்போல் சரி அது என்ன மச்சி ரெஸ்லிங்க இந்த வரிசைல சேத்திருக்க? பக்கா புராட்டு பசங்க பாஸு அவைய்ங்க! நான் எல்லாம் பத்தாம் ஆண்டு படிக்கும் போதே அந்த பக்கம் போறத நிறுத்திக்கின்னேன், ஒரு பேச்சுக்கு கூட அதப்பத்தி பேசுறது கெடையாது. நீங்க என்னடான்னா, இன்னும் சின்ன புள்ளையாட்டம். சே ... இத மனுசன் பாப்பானா.... அதுசரி பாஸு ! ஜோன் சீனாவுக்கு இப்போ யாருகூட சண்டைன்னு மட்டும் சொல்லுங்க , அப்டியே இந்த அன்டெர்டேக்கர் இனி வருவாரா மாட்டாரான்னும் சொல்லுங்கக வேற எதுவும் வேணாம். (ரகசியமா சொல்லுங்கோ,ஏன்னா ரெஸ்லிங் நான் பாக்கிறது கெடையாது அது அழுகுணி ஆட்டம்.)

  ReplyDelete
 8. 9.30க்கு மேல இனியெஸ்டாவுக்கு "பந்தேயில்லாமல் ஃப்ரீகிக் அடிப்பது எப்படி"ங்கற செல்போன் கோர்ஸ் நடத்துறேன்..
  அதுனால வந்து கமெண்டிட முடியாம போயிடுச்சு..

  ஸ்கூலுக்காக விளையாடியிருக்கேன்.. பிறகு எப்பவாவது ப்ரென்ட்ஸோட விளையாடுவேன்.. கடைசியா விளையாடுனது டிசெம்பர்தான் ... :(

  ReplyDelete
  Replies
  1. நானு சொதப்பாம கோல் அடிக்கிறது எப்டீன்னு கிறிஸ்டினாவுக்கு போஸ்டு காட் மூலமா வகுப்பு எடுத்துக்கிட்டி இருந்தேன். ஒரே பிஸியப்பா......

   நீங்க ஆடும் போது என்னயும் ஒரு எட்டு கூப்பிடுங்களேன், அது சரி கொழும்பில எந்த இடத்தில ஆடுறது?

   Delete
 9. நீ இன்னா மேன்.. ஆப்போசிட்லேயே இருக்கே!
  மட்ரிடை கலாய்ச்சே.. தனுஷை கலாய்ச்சே.. இப்போ ரெஸ்லிங்கயே கலாய்க்குறியா?

  ரெஸ்லிங் அம்புட்டுமே scripted தான்.. அதுல sportsmanship கெடயாது.. திறமை இல்லாட்டிக்கும் 'கிங்' ஆவலாம்.. அதுக்காக "அழுகுணி ஆட்டங்கறியா?"

  கேர்ள்ஸ்ஸுக்கு எப்படி மெகாசீரியலோ, அதே மாதிரி தான் பாய்ஸுக்கு ரெஸ்லிங்..!! அதுல்லாம் தொர்ந்து பார்த்தா நிறுத்த கஷ்டம்!

  அண்ணன் ஜான் சீனாவுக்கும், Brock Lesnarக்கும் தான் இப்போ கேஸு..
  அண்டர்டேக்கர் திரும்பி வருவாரு.. ஆனா அதுக்கு இன்னும் 4 மாசமாவது ஆவும்..

  ReplyDelete
  Replies
  1. நான் யாரையும் கலாய்க்கல மச்சி! எதுக்கும் ஒரு போட்டி வேணும்ல, தல இல்லாத தளபதி படங்கள் இன்னாத்துக்கு? அது போலதான் இதுவும்.

   தலைவன் தனூசு மேட்டர்ல நான் ஒண்ணும் கலாய்க்கல, தலைவனுக்கு தனி அடையாளம் கெடைக்கும் வரைக்கும் அவன் கூட இருந்து போராடுவேன். இதுகே அரண்டு போனா எப்பிடி மச்சி, இன்னொரு ஆறு போஸ்டு ஏற்கனவே தயாரிச்சு வச்சிருக்கேன். சரியான கால இடைவெளிகளில் வெளியிட்டு தலைவன் தனூசு புகழ் பாடுவேன். மே மாதத்தின் மொதல் வாரத்தை "தனூஸ் வாரமா" பெரகடனம் பண்ணி, ஒரே தனூஸ் பொகழ் தான் போங்கள்.

   ஏது ரெஸ்லிங்க , மெகா சீரியல் மாதிரி பாப்பியா? மகா கேடியா இருப்ப போல இருக்கே!

   Delete
 10. இந்த ஏப்ரல்ல ஃபுளோரிடாவுல Sun-Life Stadium-ல "ரெஸ்ட்ல்மேனியா 28" நடந்தப்போ அட்டென்டன்ஸ் ரெக்கார்டு 78,363..
  இதுக்கு முன்னால அங்க எத்தனையோ ஃபுட்போல், பேஸ்போல், ரக்பி மேட்ச்ஸ் நடந்திருக்கு.. எதுக்குமே இவ்வளவு கூட்டம் வந்ததில்லை..

  //இதை மனுசன் பார்ப்பானா?//ன்னா.. அங்க வந்த நாயையும், பூனையும் விரல் விட்டு எண்ணியா ரெக்கார்டு வைச்சாங்க??

  ReplyDelete
  Replies
  1. ஓ ! அதுவா உங்கள போல மண்டை காய்ஞ்சதுகள் அங்கயும் இருக்குது போல. (காமடி, நோ கார்ஷ் ஃபீலிங்ஸ் ஓக்கே!)

   ////அங்க வந்த நாயையும், பூனையும் விரல் விட்டு எண்ணியா ரெக்கார்டு வைச்சாங்க??///

   இந்த இடம் செம பஞ்சு!

   Delete
 11. அந்த தனுஷ் கார்டூன் உங்க அண்ணன் வரஞ்சது தானே

  ReplyDelete
  Replies
  1. அது யார் வரஞ்சதுன்னு எனக்கு தெரியாது கூகிள்ள சுட்டது., பை தி பை நீங்க ஃஏஸ்புக்ல பாத்த ட்ரோவிங்ஸ் எல்லாம் என்னோட தம்பி வரஞ்சது, நாட் அண்ணன்.

   Delete
 12. // எங்க தலைவனின் தாடிக்கும் அவனோட பாட்டோட பரிமாண வளர்ச்சிக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இருக்கா? அல்லது அது அவனோட வளர்ச்சியில் எந்தமாதிரி பாதிப்பை ஏற்படுத்தும்//

  இதுல ஒரு பெரிய பரிணாம ரகசியம் ஒளிந்துள்ளது ,

  அவரோட தாடியில் வெளிநாட்டில் இருந்து வாங்கி வரப்பட்ட நல்ல உயர் ரக பேன்களை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார் , அது தொண்டைக்கும் அதை சுற்றயுள்ள பகுதிகளையும் குறிப்பாக கடித்து அரிப்பை ஏற்படுத்துமாறு பரிணாம வளர்ச்சியடைந்த பேன்கள்.

  மேலும் அவை கடிப்பது கடல்கன்னிகள் மசாஜ் செய்வதை போல இருக்குமாம் ( இது தனுசே கூறிய தகவல் ?) , இப்படியாக மசாஜின் மூலம் அவரது தொண்டை பரிணாம வளர்ச்சி அடைந்து , ஏற்கனவே கரடி கக்கூஸ் போவது போல இருந்த அவரது குரல் ( நாட்டு சரக்கு பாடலில் தாங்கள் கேட்டிருக்கலாம் ), இப்போது பரிணாம வளர்ச்சியால் கரடி டயேரியாவில் கழிவதை போல அதிசயத்தக்க வகையில் மாறிவிட்டது .

  இது குறித்து ஏற்கனவே nature ஜர்னலில் "கரடியின் கழிச்சலும் கருவாயனின் தொடையும் - ஒரு பரிணாம பயணம் " எனும் தலைப்பில் வெளிவந்துள்ளதை நண்பர்கள் மறந்திருக்க மாட்டார்கள் .

  ( இந்த பின்னூட்டத்தை தலைவர் ரஜினி பார்க்காமல் இருக்கணும் )

  ReplyDelete
  Replies
  1. யோவ் டாக்டரே! நீரும் செம காமடியான ஆள் தான் போல! நான் என்னமோ ஏதோன்னு நெனச்சேன்! நீங்க சாணி மட்டும் தான் அள்ளுவீங்கன்னு பாத்தா (வெளையாட்டுக்கு) கரடி கக்கூஸ் வரைக்கு போயி பிரிச்சு மேயிறீங்களே, பேசாம இத கூட ஒரு பதிவா நீங்க போடலாம்.

   உம்மோட பின்னூட்டத்த பாத்து சிரிச்சு வயிறு புண்னாகி விட்டது போங்கள். அதிலும் ///மேலும் அவை கடிப்பது கடல்கன்னிகள் மசாஜ் செய்வதை போல இருக்குமாம் ( இது தனுசே கூறிய தகவல் ?) , இப்படியாக மசாஜின் மூலம் அவரது தொண்டை பரிணாம வளர்ச்சி அடைந்து , ஏற்கனவே கரடி கக்கூஸ் போவது போல இருந்த அவரது குரல் ( நாட்டு சரக்கு பாடலில் தாங்கள் கேட்டிருக்கலாம் ), இப்போது பரிணாம வளர்ச்சியால் கரடி டயேரியாவில் கழிவதை போல அதிசயத்தக்க வகையில் மாறிவிட்டது . //// , //// "கரடியின் கழிச்சலும் கருவாயனின் தொடையும் - ஒரு பரிணாம பயணம் "/// என்ற இடங்கள் உச்சக்கட்டம். உக்காந்து யோசிப்பீங்களோ?

   Delete
 13. //செம ஸ்பீடில அவரு 'வை திச் கொல வெறி கொல வெறின்னு " ரேப்பு பண்ணும் போது குறுக்க கவுண்டரு மட்டும் பூந்து "என்னட கரடி கக்கூஸ் போற மாதிரி ஒரு சவுண்டு"னு கமன்டரி பண்னலேன்னா சும்மா பிச்சு மேய்ஞ்சிருப்போம்ல!// Super Comment.

  கெளப்புரா... கெளப்புரா.... ராஜா என்சாய்....

  ReplyDelete
  Replies
  1. தலைவா நீங்களே சொல்லிட்டீங்க! கெளப்பிருவோமில்ல!

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...