உதைபந்து

Sunday, May 20, 2012

அது வேற வாயி! இது நாற வாயி!



எங்க ஊரில ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க ! "நாக்கு கறுப்பா இருக்கிறவன் சொன்னா , அது நடக்கும்னு". இந்த மாதிரி அனுமானுஷ விசயங்கள் பத்தி நீங்களும் கேள்விபட்டு  இருப்பீங்க. இந்த மாதிரியான மூட கதைகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இருந்தது கிடையாது. ஆனா சமீப காலமா என்னய சுத்தி நடக்கிற அனுமானுஷ விசயங்கள கூர்ந்து கவனிச்சு பாத்தா புதுசா ஒரு அனுமானுஷ பழமொழி உருவாகிவருவதை மனக்கசப்போடு ஏற்றுக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. அந்த புது பழமொழி என்னன்னா " ரெண்டு வாரம் பல்லு வெளக்காதவன் ஏதாச்சும் சொன்னா , அது தலகீழா நடக்கும்". அந்த பல்லு விளக்காத வாயன் யாருன்னா சாட்சாத் நானே தான்.
நான் சொன்னது போல எனக்கு இந்த குருட்டு வாதங்களில் எலாம் நம்பிக்கை இருந்தது கிடையாது. ஆனால் இப்போ எனது ஆரம்ப  காலத்தில் இருந்து , நான் சொல்லி சொதப்பிய சம்பவங்களை கோர்த்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ( ஏன்னா விழுந்த அடிகள் ரொம்ப பலம்).

நேத்தலேர்ந்து ஆரம்பிக்கிறேன். பார்சிலோனவும் , மட்ரிட்டும் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இருந்து வெளியேறி விட்ட பிறகு எனது மொத்த நம்பிக்கையும் பயன் முனீக் அணிமீது தான் இருந்தது. அந்த அணிதான் கிண்ணம் வெல்லும் அப்டீன்னு ஒரு பதிவு வேற போட்டு தொலச்சேன். விளைவு ஒண்ணுக்கும் உதவாத செல்சியா ( முனீக் அணியுடன் ஒப்பிடுகையில்) இப்போது சம்பியன்.

சொந்த மைதானம், உலக தரம் வாய்ந்த வீரர்கள் வரிசை, மட்ரிட்டின் கோட்டையில் அவர்களுக்கே ஆப்படித்த தன்னம்பிக்கை என்று அடுக்கடுக்கான சாதகமான வாய்ப்புக்களை கொண்டிருந்த முனீக் அணி மண்ணைகவ்வி இருக்கிறது. 83வது நிமிடத்தில் முல்லர் கோல் அடிக்க , யார் நினைத்தார் அந்த கிழவன் ட்ரக்பா அடுத்த மூன்றாவது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்வான் என்று? சரி அதுதான் போகட்டும்கொஞ்சம் யோசித்து பார்த்தீர்களா , இன்று உலகில் இருக்கக்கூடிய தலை சிறந்த வீரர்களில் ஒருவரான நெதர்லாந்தின் ரொபன் அந்த பெனால்டி வாய்ப்பை அப்படி செல்சியாவின் கோல் காப்பாளர் சேச்சின் வாய்க்குள் அடித்து நாசாமாக்குவான் என்று? அதை விடுவோம், ஆனானப்பட்ட கசியாசின் கைகளை தாண்டி பெனால்டி கோல் அடித்து மட்ரிட்டை மண்கவ்வ செய்த ஸ்டீன்ஸ்னேகர் தனது மைதானத்தில், பெனால்டியை கோல் கம்பத்தில் அடித்து கழுத்தறுப்பான் என்று சேச் கூட நினைத்திருக்க மாட்டான்.


அரையிறுதியில் மெஸ்ஸி தனது உதைபந்தாட்ட வாழ்க்கையிலேயே முதன் முதலாய் செல்சியாவுடன் ஆடும் போது பெனால்டியை சொதப்பியது, நேற்று ரொபன், ஸ்டீன்ஸ்னேகர் பெனால்டியை கோட்டைவிட்டு செல்சியாவுக்கு கிண்ணத்தை தாரை வார்த்தது என்று தொடர் சம்பவங்கள் எல்லாம் செல்சியாவின் அதிஷ்டம் என்று உதைபந்தாட்ட உலகு சொல்கிறது. ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால் அது எல்லாம் இந்த நாற வாயனால் வந்தது.

கிரவுண்டு எல்லாம் வெளிச்சமாதான் இருக்கு! ஆனா நடத்துறவன் மைண்டு இருட்டால்ல இருக்கு!


இதுமட்டுமில்லை எல்கிளாசிக்கோவில் பார்சிலோனா வெல்லும் என்றேன், விளைவு இந்த சீசனில் தனது சொந்த மைதானத்தில் தனது முதலாவது தோல்வியை பதிவு செய்தது பார்சிலோனா. ஜொஸ் மொரின்கோ நியூ கேம்பில் தனது முதலாவது வெற்றியை பார்த்தார். அத்தோடு நின்றதா எனது வாக்கின் சுத்தம்? சம்பியன் கிண்ண அரையிறுதியில் அரையிறுதியில் செல்சியாவை பார்சிலோனா தனது சொந்த மைதானத்க்டில் வைத்து வீழ்த்தும் என்றேன். விளைவு சமியன் கிண்ணத்தை விட்டு வெளியேறியது பார்சிலோனா! இத்தோடு நிறுத்திகொள் பாலகுமாரா என்று நண்பன் JZ எச்சரித்த போதாவது நிறுத்திக்கொண்டேனா? இல்லை... இல்லை... இல்லவே இல்லை..... அடுத்த அரையிறுதியில் முனிக் அணியை தனது சொந்த மண்ணில் வீழ்த்தி மட்ரிட் இறுதி போட்டிக்கு நுழையும் என்றொரு பதிவு போட்டேன் , முடிந்தது மட்ட்ரிட்டின் கதை! அவர்களது மைதானத்திலெயே அவர்களை வேழ்த்தி ஆப்படித்தது முனீக் அணி! "மவனே மாட்னா செத்தடா" என்று நண்பன் JZ  எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது தான் மிச்சம்.
இப்போது இன்னுமொரு முக்கியமான போட்டி வருகிறது, கோபா டில் ரே இறுதி போட்டியில் பார்சிலோனாவும் அத்லடிகா பில்பாவோ அணியும் மோத இருக்கின்றன. பார்சிலோனா வெல்லும் என்று சொல்லி , இந்த சீசனில் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதலையும் கெடுத்துக்கொள்ள விரும்பாமல் , இந்த போட்டியில் பில்பவோதான் வெல்லும் என்று கூறி கழன்று கொள்கிறேன்.


சரி இதுகளை தான் விடுவோம் . யாரோ விளையாடி யாரோ வென்று யாரோ சம்பாதித்துவிட்டு போகிறான். ஆனால் இன்னொரு துயரத்தையும் கேளுங்கள்.

எழுந்து நிற்பதில் குறிப்பிடபட்டிருக்கும் தம்பி தான் இலங்கை தேசிய அணியில் (17 வயதுக்குட்பட்ட) ஆடும் சஜீவன். அமர்ந்திருப்பதில் குறிப்பிடப்பட்டிருப்பவர் எனது தம்பி டெசில் மாவட்ட அனியில் ஆடுகிறார். அணியின் எஞ்ஞின்.! அது போக மேலும் ஏழு வீரர்கள் மன்னார் மாவட்ட அணியில் ஆடுகிறார்கள்.


பார்சிலோனாவுக்கும் அதிகமாக ஏன் நான் நேசிக்கின்ற முதல் உதைபந்தாட்ட அணி எங்களது பாடசாலையான புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியை தான். இலங்கையின் வட கிழகு மாகாணங்களில் கல்வி மற்றும் விளையாட்டில் தனித்த சிறப்பு கொண்டதும் , இலங்கையில் இருக்கின்ற சிறந்த உதைபந்தாட்ட அணிகளைகொண்ட பாடசாலைகளில் தனக்கென்று ஒரு தனியிடம் பிடித்ததும் என்று பல பெருமைகளை கொண்டது எங்கள் பாடசாலை.


ஒவ்வொரு வருடமும் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று வீரர்களை அனுப்பிக்கொண்டிருப்பது எங்கல் பாடசாலை. 2004இல் இலங்கையை பிரதிநிதுவப்படுத்தி உதை பந்தாட்ட தொடர் ஒன்ன்றுக்காக எங்கள் பாடசாலை கொரியா சென்றது. ( அந்த வருடத்தில் இலங்கையின் அத்தனை தேசிய கிணங்களையும் சுவீகரித்ததுதான் காரணம்). அங்கு முதலாவது போட்டியில் கொரிய அணி முதல் பாதியில் ஐந்து கோல்களை அடித்தும் சோர்வடையாமல் இரண்டாம் பாதியில் விரட்டி ஐந்து கோல்களை அடித்து சமன் செஇது அடுத்ட சுற்றுக்கு போனது. போட்டி நடந்தது 2002 உலககிண்ண இறுதி போட்டி நடந்த யோகறாமா மைதானத்தில். பின்னர் சிங்கப்பூர், மற்றும் ஜப்பான் அணிகளை வீஅத்தி மூனாமிடம் மற்றும் ஃபெயா பிளே ஆகிய கோப்பைகளோடு தாயகம் வந்த பெருமைகொண்டது எங்கள் பாடசாலை அணி.


அதுமட்டுமல்ல இலங்கையில் தேசிய ரீதியில் மூன்று பிரதான கிண்ணங்களுக்கான போட்டி நடைபெறுவது வழக்கம். மைலோ கிண்ணம், ஃபெடரேசன் கிண்ணம் மற்றும் அகில இலங்கை பாடசாலை கிண்ணம். இத மூன்று கிண்ணங்களில் ஏதாவது இரண்டை ஒவ்வொரு வருடமும் வீட்டுக்கு கொண்டுவருமளவிற்கு திறமையான உதைபந்தாட்ட அணி எங்களது அணி. அவ்வாறான அணிக்கு தான் எனது நாற வாயால் வந்தது வினை.


இந்த வருட தேசிய  போட்டிகளுக்காக கொழும்பு வந்திருந்தது எங்கள் அணி. பதினேழு வயதுக்குட்பட்ட அந்த அணியில் எனது தம்பியும் ஆடுகிறான். முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி. நொக் அவுட் போட்டி ஒன்றில் போன வருடம் சம்பியனான டிக்கோயா அணிக்கு ஐந்துக்கு பூச்சியம் என்று அடித்து அனுப்பினார்கள். இதன் பின்புதான் எனது வாசம் வரும் வாய் தனது வேலையை காட்டியது.

நான் போனேன்! பிடித்தது சனி. ( கறுத்த டி- சேர்டில் நான்) 


ஆர்வமிகுதியால் எனது ஃபேஸ்புக்கில் இந்தவருடமும் கிண்னமொன்று தயார் என்று நான் அப்டேற்றிவிட கால் இறுதி போட்டியில் ஒரு இனவெறி தாக்குதலுக்கு இலக்காகி போனது எங்கள் அணி... கால் இறுதியில் பெரும்பான்மை இனத்து பாடசாலை ஒன்றுடன் மோதியது எமது அணி. ஆட்டம் எங்கள் வசம் தான், எங்கல் கல்லூரியே ஆதிக்கம் செலுத்தியது. ( பார்சிலோனா செல்சியா அரைஇறுதி போல). போட்டி முடிவதற்கு சிலநிமிடங்களுக்கு முன்னர் எதிர் பாடசாலையின் வீரன் ஒருவன் தனது இரு கைகளாலும் பந்தை பிடித்து கோலுக்குள் போட்டான். போட்டவன் சிவப்பு அட்டை கிடைக்க போகிறதே என்ற பயத்தோடு தலையில் கையை வைத்துக்கொண்டு  சோகமாய் நடுவரை தேடி நடந்துவர , அவர்களது அணியின் தலைவரும் அந்த சிவப்பு அட்டையை தடுக்கும் நோக்கில் "சேர் சேர் எயா தகே நே.. ஏக்க அக்சிடன்ட் எகாக் பிளீஸ் " (சேர் ! சேர்! அவன் அதை பார்க்கவில்லை, அது ஒரு விபத்தாக அவனது கையில் பட்டு விட்டது) என்று கொண்டு கெஞ்சும் தோரணையில் ஓடி வர அந்த சம்பவம் நடந்து ஒன்ரரை நிமிடங்களுக்கு பிறகு நடுவர் அதை கோல் என்று தீர்பளித்து விசில் அடித்து விட போட்டியில் இருந்து வெளியேறியது எங்கள் அணி!


இந்த எதிர்பாராத சோகமுடிவு எங்களை மட்டுமல்ல போட்டியை பார்த்துகொண்டிருந்த வெளியாட்களையும் உலுக்கி போட்டது. அதில் மலையக பாடசாலைகளின் (தமிழ் பாடசாலைகள்) பயிற்சியாளர்கள் இருவர் அந்த நடுவரிடம் இதுபற்றி வாக்குவாதபட்டபோது "மெயாலாட்ட மேக்க அத்தி" (அவர்களுக்கு இதுவரை வந்ததே போதும்என்ற பதில் வந்திருக்கிறது.  "உங்களை வேண்டுமென்றே வெளியேற்றி இருக்கிறார்கள், அரையிறுதில் நீங்கள் மோத இருந்தது , உங்களிடம் லீக் போட்டியில் வாங்கி கட்டிய அணியுடன் தான். நீங்கள் இலகுவாக அதையும் வென்று விடுவீர்கள் என்று அவர்களுக்கு தெரியும் அதுதான் சந்தர்ப்பம் பார்த்து அடித்திருக்கிறார்கள்." என்றார் ஒரு பாடசாலையின் பயிற்சியாளர்.


எங்களது அணியின் பயிற்சியாளர் போட்டி ஏற்பாட்டு குழுவிடம் முறைப்பாடு செய்தபோது "அப்பீத் தக்கா, ஏவுனாட்ட அப்பி மொக்குத் கரன்ன பே, றெஃரி தமா ஏக்க டிசிசன் கரன்ன ஓனே, ஒயாலா கிகில்லா அப்பிட்ட லெட்டர் எகாக் எவன்ன , இட்ட பஸ்ஸே அப்பி பலமு" ( நாங்களும் அதை பார்த்தோம் ஆனால் எங்களால் ஏதும் செய்ய முடியாது, நடுவர்தான் அதற்கு பொறுப்பு. நீங்கள் ஒன்று செய்யுங்கல் ஊருக்கு போய் கடிதம் ஒன்று அனுப்புங்கள், அதன் பிறகு இதை பார்த்துக்கொள்ளலாம்" என்ற பதில் வந்திருக்கிறது.

இனவெறி தாக்குதல் என்பது ஆயுதத்தால் தாக்குவது மட்டுமல்ல!


"ஏகப்பட்ட கனவுகளோடு வந்த எனது பிள்ளைகளின் கோப்பை கனவு அநியாயமாக சிதைக்கப்பட்ட பிறகு, கடிதம் அனுப்பி அதற்கு கிடைக்கப்போகும் பதிலை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்ய" என்று வாக்குவாதப்பட்டு வந்திருக்கிறார் எங்கள் பயிற்சியாளர். "கோப்பை வெல்லும் அணியை இந்தியாவுக்கு சுற்றுலா அழைத்துச்செல்ல ஒரு திட்டம் இருக்கிறது, ஒரு தமிழ் பாடசாலையை அழைத்து செல்ல அவர்கள் என்ன மடையர்களா" என்று கொதித்தார் ஒரு பாடசாலை பயிற்சியாளர். "இப்படி அராஜகம் , வன்சகம் செய்து திறமை இல்லாத அணிகளை வெளிநாட்டுக்கு போட்டிகளுக்கு அனுப்புவதால் தான் இலங்கை உதைபந்தாட்ட அணி போகும் இடம் எல்லாம் வாங்கி கட்டுகிறது" என்றார் எங்களது வாகன சாரதி.


இப்படி பலரும் பல காரணங்களை சொன்னாலும் , இலங்கை தெசிய அணியில் விளையாடும் ஒரு வீரன், மாவட்ட அணிக்கு ஆடும் எட்டு வீரர்கள் என்று திறமையான அணி தோற்ரதற்கு காரணம் எனது நாற வாய் தான் என்று நினைக்கிறேன் நான். எனது நாற வாய் நடுவர் வடிவில் தனது வேலையை காட்டி இருக்கிறது.


இந்த வருடத்தில் ஒரு தேசிய கிண்ணம் கைப்பற்றி , இன்னொன்றை எனது நாறவாயின் காரணமாக கோட்டை விட்டு மீதமிருக்கும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கிண்ணத்தை சுவிகரிக்கும் நோக்கில் ஏற்கனவே மாவட்டம், மாகாணம் ஆகிய படிகளை தாண்டி தேசிய போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்ட எங்கள் அணி ஃபீனிக்ஸாய் கடும் பயிற்சி செய்கிறது, அவர்களை மனதார வாழ்த்திவிட்டு இருப்பதே நலம். எனது நாற வாயை திறந்து ..... யப்பா வேண்டவே வேண்டாம்...!

கவலை விடு சகோதரா.. அடுத்த போட்டியில் பாத்துக்கலாம்!


எனது நாறவாயின் மகிமையை காட்ட இன்னொரு சம்பவம். எனது நண்பர் (வயதில் மூத்தவர்) ஒருவர் ஒரு பெண்ணை காதலித்தார். அந்த அக்காவும் என்னோடு நல்ல பழக்கம். ஒரு நாள் என்னிடம் வந்து "நண்பா ஒருக்கா கேட்டு சொல்லேன் " என்றார். நானும் திருவாய் திறந்து, " கவலப்படாத நண்பா, நாளைக்கே உன்னோட வேல முடிஞ்சுது எண்டு நெனச்சுக்கோ" என்றேன். அடுத்த நாள் காலையில் அந்த வீட்டில் இருந்து அழுகுரல். அந்த அக்கா இரவோடு இரவாக யாரோடோ ஓடிவிட்டாராம். எனது நண்பர் இப்போது 32+ இன்னமும் திருமணத்துக்கு பெண்பார்த்துக்கொண்டு இருக்கிறார். இதுக்கப்புறம் நான் என்னத்த சொல்ல?


கடைசியாக நண்பன் டூலிட்டிலுக்கு ஒரு செய்தி சொல்ல ஆசைப்படுகிறேன். "நண்பா உனது ஒரு பதிவில் , உனது நண்பர்களுக்கு எல்லாம் நல்ல வேலை கிடைக்கும் என்று பின்னூட்டம் போட்டு இருக்கிறேன், அதை நான் வாபஸ் வாங்குகிறேன். பாவம் அவர்கள் யார் பெத்த புள்ளைகளோ?"

டிக்கோயா அணிக்கு அடித்த ஐந்து கோல்களில் முதல்லிரண்டு கோல்களையும் அடித்த எனது தம்பியுடன்!



13 comments:

  1. இனவெறி தாக்குதல் என்பது ஆயுதத்தால் தாக்குவது மட்டுமல்ல!

    அட்டகாச சிரிப்புக்குள் சிந்திக்க வைத்தவை...

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது நண்பா எல்லாம் விதி. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!

      Delete
  2. முதலில் உலக நன்மை ( மற்றும் எனது நன்மை ) கருதி பல் விளக்கவும் . வாயினால் கூறியது தான் வில்லங்கம் ஆகும் , கையால் தட்டச்சு செய்தால் ஒன்றும் ஆகாது என நம்புவோம் .

    ReplyDelete
    Replies
    1. சிங்கம் , புலி எல்லாம் பல்லா வெளக்குது நண்பா? சரி நான் சிங்கமாவே இருந்தாலும் எனக்கு டாக்டர் நீங்கதானே நண்பா, சோ.... இன்னேலேர்ந்து மூணுவேள பல்லுவெளக்கிறேன், ஆறுவேள குளிக்கிறேன். அப்பயாச்சும் நல்லது நடக்குதான்னு பாப்போம்.

      Delete
  3. ரொம்பவும் ஜாலியான பதிவு நண்பா..வாயில் ஆரம்பித்து..சாம்பியன்ஸ் கிண்ணத்தில் தொடர்ந்து முடிந்த விதம் அருமை..அருமை.. சந்தோஷமா படித்தேன்..நீங்க இங்க சொன்னதுக்கும் அங்க அவன் தோற்றதுக்கும் ஒன்னுமே சம்பந்தம் இல்ல..கவலையை விடுங்க..இதோ இப்ப போனா..ஆகஸ்ட் மாசம் அடுத்த சீஸன்..பார்சலொனா நல்ல ரொம்ப அதிகமான பலத்தோட வருமுனு எதிர்ப்பார்ப்போம்..இப்ப நடக்க போகிறா கோப்பையை கைப்பற்றினா..முதல் ஆடுற ஆட்டமே சூப்பர் கோப்பா..ரியல் மெட்ரிட்டோட..
    மேலும் எழுதுங்க..மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது தான். ஆனால் நடக்கும் சம்பவங்கள் என்னயும் இதெல்லாம் நம்பும்படி வைத்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

      பார்சிலோனா டிட்டோவின் தலைமையில் இன்னமும் மெருகேறும் என நம்புவோம். அடுத்த சீசன் பாத்துக்கலாம். அதுக்கு முன்னம் கோபா டில் ரேவில் நம்மை நிரூபிக்க வேணும். வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பா..

      Delete
  4. மவனுங்கள்ஸ்..
    நீங்க பில்பாவோட ஜெயிச்சாத்தானேடி, எங்களோட சூப்பர் கொப்பா ஆடுறதுக்கு?? பில்பாவோ ஏற்கெனவே யுரோப்பா லீக் தோத்த கவலையில இருக்கானுங்க! விடமாட்டாங்க பசங்க..
    உங்க புது மேனேஜர் தாக்குப்பிடிப்பானான்னு பார்க்கத்தான் ரொம்ப ஆசையாக் கீது!!

    எனக்கும் செல்சீக்கும் நோ காண்ட்ஸ்! என்ன மூனிக் ஜெயிச்சிருந்தானுங்கன்னா "சாம்பியன்கள்ட தானே அரையிறுதியில தோத்தோம்"னு பெருமையா சொல்லிக்கிட்டு திரியலாம்..இப்போ எல்லார் வாயிலயும் 'பன்'னை கொடுத்துட்டு செல்சீ அடிச்சிட்டு போய்டுச்சு!!

    உன் வாயால வந்த வினைகள் வாசிக்க நல்லாருக்கு.. ஆனாலும் அந்த ரெஃபரியைத் துக்காம எங்க சங்கம் ஓயாது!

    * பரம ஃபுட்போல் ஃபேமிலி போல!
    மச்சான்... Man U சேர்ட்டை போட்டுகினு அடிச்சா இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா நடக்கும்.. அடுத்த வாட்டிலேர்ந்து சேர்ட்டை Chelseaக்கு மாத்திர சொல்லு!!

    * இன்னொரு தடவை மட்ரிட் ஜெயிக்கும்னு சொன்னே?!?!

    ReplyDelete
    Replies
    1. இதாகப்பட்டது எட்டு பட்டிக்கும் நான் சொல்றது என்னன்னா ,மேற்குறித்த பின்னூட்டத்துக்கு நாற வாயன் நான் எனது திருவாய் மலர்ந்து சொல்லவதாவது....


      கோபா டில் ரேவில் பார்சிலோனா தோற்கும், அது போக பார்சிலோனாவை தொற்கடித்து மட்ரிட்டுடன் சூப்பர் கோபா ஆட போகும் பில்பாவோ அணியை மட்ரிட் அபார ஆட்டம் ஆடி வீழ்த்தும். இத நோட் பண்ணிவச்சுக்கங்க....

      பார்சிலோனாவின் புது மனேஜர் எல்லா போட்டிகளிலும் தோற்பாராக....

      ////எனக்கும் செல்சீக்கும் நோ காண்ட்ஸ்! என்ன மூனிக் ஜெயிச்சிருந்தானுங்கன்னா "சாம்பியன்கள்ட தானே அரையிறுதியில தோத்தோம்"னு பெருமையா சொல்லிக்கிட்டு திரியலாம்..////

      ஆனா மச்சி நாங்க சம்பியன் கூட தான் தோத்தோம்னு சொல்ல சுத்தமா மனசு இல்ல, அவனுக ஆடினது கேமா மச்சி, எப்போ பாரு பதினொரு பேரும் டிபண்ட் அடிச்சுகிட்டு...

      ////உன் வாயால வந்த வினைகள் வாசிக்க நல்லாருக்கு.. ஆனாலும் அந்த ரெஃபரியைத் துக்காம எங்க சங்கம் ஓயாது!///

      பாத்து மச்சி ராவோடு ராவா வெள்ள வானில நம்மள தூக்கிட போறானுக...

      ////பரம ஃபுட்போல் ஃபேமிலி போல! ///

      நாங்க எல்லாம் ரொம்ப சுமாரா தான் மச்சி ஆடுவோம் , ஆனா எங்க தம்பி சூப்பரா ஆடுவான். இப்போ பதினஞ்சர வயசுதான் ஆகுது, இன்னும் ஒரு வருசத்துல இலங்கை தேசிய அணியில் (17 வயது) ஆடும் அளவுக்கு ( அங்கும் ஏதாவது குளறுபடிகள் இல்லாத பட்சத்தில்) திறமையானவன்.

      ////மச்சான்... Man U சேர்ட்டை போட்டுகினு அடிச்சா இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா நடக்கும்.. அடுத்த வாட்டிலேர்ந்து சேர்ட்டை Chelseaக்கு மாத்திர சொல்லு!!////

      மச்சி நாங்க லக்கில அடிக்கிறவங்க கிடையாது , திறமையால அடிக்கிறவங்க . சோ.. நோ செல்சி ஜேர்சி....

      வருகைக்கு நன்றி , உன்னை பத்தின இரண்டு பதிவு தயார், சரியான கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும். ஹா ... ஹா... ஹா....

      Delete
    2. அடடா சொல்ல மறந்து போனேன் இன்னொரு பத்து வருஷத்துக்கு மட்ரிட்தான் அசைக்க முடியாத சம்பியன். மட்ரிட் வாழ்க....

      Delete
  5. இருந்தாலும் மொத ஃபோட்டோவுல வாயைத் தொறந்து வைச்சுகினு போஸ் கொடுத்து... கலக்குற கிஷோக்!

    ReplyDelete
    Replies
    1. நண்பா என்னோட வாயி என்ன அவளவு கேவலமாவா இருக்கும்னு நெனைக்கிற? இப்பிடி சொல்லிபுட்டியே நண்பா.... :(

      Delete
  6. நண்பரே,


    நல்ல பதிவு ...
    உங்கள் பதிவு மேலும் பலரை சென்றடைய
    முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
    பார்க்க

    தமிழ் DailyLib

    இந்த சேவை தொடர அவசியம்

    அவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்

    To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button


    Thanks,
    Krishy

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி, எனது பதிவுகளை உங்கள் தளத்தில் இணைத்துளேன், ஆனால் ஓட்டு பட்டை பெறுவது தான் சற்று சிக்கலாக உள்ளது.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...