உதைபந்து

Monday, July 9, 2012

பக்தைகளை கட்டிப்பிடிக்க முடியலயே! கண்கலங்கிய‌ நித்தியானந்தா!சில நாட்களுக்கு முன்னர் தனது சீடர்களுக்கு தீட்சை கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டாராம் நம்ம "கில்மா குமார்" நித்தியானந்தா! பூஜை புணஸ்காரங்கள் எல்லாம் முடிந்ததும் சீடக்கோடிகளுக்கு தீட்ஷை கொடுக்க ஆரம்பித்தாராம். தீட்ஷ கொடுப்பது எப்படியென்றால் , ஒரு ஆண்சீடரையோ இல்லை பெண் சீடரையோ ஆரத்தழுவிக் கொள்ளவாரம், அப்படி தழுவிக்கொண்டால் அவர்கள் தீட்ஷை பெற்று விட்டதாக அர்த்தமாம். ( இது எப்புடி இருக்குன்னா குஷி படத்துல விவேக் கட்டிப்புடிச்சு எல்லோருக்கும் பிரியாவிடை கொடுப்பாரே ! அந்த மாதிரி இருக்கு!)  ஆனால் சமீபத்தில் நடந்த தீட்ஷை விழாவில் கலந்து கொண்ட கில்மா குமார் "ஆண் சீடர்களை மட்டுமே கட்டிப்பிடிப்பேன், பெண்களை கட்டிப்பிடித்தால் அதையும் வீடியோ எடுத்து வெளியிட்டு விடுவார்கள், எனது பக்தைகள் என்மீது கோபம் கொள்ளவேண்டாம் " என்று சொல்லி ஆண்களை மட்டும் கட்டிப்பிடித்து , பெண்களுக்கு தலையை தொட்டு ஆசீர்வாதம் மட்டுமே வழங்கினாராம்!

மண்ட கசாயம் : "டேய் ! கில்மானந்தா! நீ பலே கேடிடா! ரஞ்சிதா, ஆர்த்தி அப்டீன்னு சூப்பர் ஃபிகருகளா இருந்தா கட்டிப்பிடிச்சு ராத்திரி ஆச்சிரம் போயி "கட்டி பிரிச்சும்" இருப்ப, ஆனா தீட்ஷை எடுக்க வந்தது எல்லாம் அட்டு ஃபிகருகளும் , ஆண்டிகளும் ஆயாவும்னு தெரிஞ்ச ஒடனே என்னாமா குடுக்கிறடா ஆக்ட்டு! "

**********************************************************************************


இந்த தி.மு.க ஆளுங்க எல்லாரும் சேர்ந்து சமீபத்தில சிறை நிரப்பு போராட்டம் , சிறை நிரப்பு போராட்டம்னு ஏதோ நடத்தினாங்க இல்லே! அது எதுக்கு நடாத்தினாங்கன்னு யாருக்காவது தெரியுமா? எனக்கென்னவோ நான் இன்னமும்  சாகல! உயிரோட தான் இருக்கேன்னு கருணாநிதியும், எங்க கிட்டவும் எட்டு எம்.எல்.ஏ க்கள் இருக்காய்ங்கன்னு காட்டவும் தான் இந்த போராட்டம் நடாத்தப்பட்டதா தோணுது. இந்த சிறை நிரப்பு போராட்டத்துக்கு பதிலா மக்களின் "குறை நிரப்பு போராட்டம்னு" ஏதாவது அறிவிச்சு ரெண்டு லட்சம் பேர் வேணாங்க யாராச்சும் ரெண்டு பேரு உள்ளே போயிருந்தா கூட தமிழீழம் எல்லாம் வேணாம் தமிழ் நாட்டுல இருக்கிற தமிழனாவது சரி சந்தோஷமா இருந்திருப்பான். அட ! அந்த ரெண்டு லட்சம் பேரும் ஒண்ணா திரண்டு சென்னையோட தெருக்கள்ள இறங்கி சிரமதானம் செய்திருந்தாலாவது , சென்னையோட குப்பை கொஞ்சம் குறைஞ்சிருக்குமே!

மண்ட கசாயம்: "டேய்! சிறைய நெரப்புறதெல்லாம் ஒரு போராட்டமாடா! டேய்! கரி நாய் நிதி விட்டா நீயி நாளைக்கு புள்ளை குடுக்கும் போராட்டம், கைய புடிச்சு இழுக்கும் போராட்டம்னு புதுசு புதுசா அறிவிப்ப போல! "

**********************************************************************************தமிழ்நாட்டை போல் இல்லாமல் நாங்கள் இலங்கையின் தமிழர் பகுதிகளுக்கு 24 மணிநேரமும் சீரான மின்விநியோகத்தை வழங்கி வருகின்றோம் என்று இலங்கையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கின்றார்.

மண்டக்சாயம் :  "எலேய்! தமிழ்நாட்டு அரசியல் வாதிகளே !இத கேட்டுப்புட்டு இன்னுமா நீங்க நாண்டுக்கிட்டு சாகல?"

**********************************************************************************


இன்று இணையத்தளங்களை டிஎன்எஸ் சேஞ்சர் என்னும் வைரஸ் தாக்கும் என்ற தகவல் வெளியானது,  இந்த வைரஸின் மூலம் எமது கணணியிலிருந்து தகவல்களை திருடிவிடமுடியும் என்றும் எனவே இணையத்துக்கு செல்லும்போது நமது ரகசியமான தகவல்கள் மற்றும் தேவையான அனைத்தையும் வேறு ஒரு ஊடகத்தில் சேமித்த பின்னர் இணையத்தளத்தை பார்வையிடுமாறு மக்கள் அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள். இதன் உண்மைத்தன்மை பற்றி ஏதும் தெரியாத போதிலும் அமிரிக்காவின்  எஃப்.பி.ஐ நிறுவனமானது இந்த வைரஸின் தாக்கத்தை அறிய ஒரு இணையத்தளம் ஒன்றை திறந்திருப்பதானது , சற்றே பீதியடையத்தான் வைக்கின்றது. http://dns-ok.us/ என்ற இந்த லிங்குக்கு போனால் உங்ளுக்கு பச்சை என்று பதில் கிடைத்தால் உங்கள் கணணி தப்பித்தது, இல்லை சிகப்பாக வந்தால்... கோவிந்தா... கோவிந்தா....

மண்டகசாயம் : "ஆமால்லே! சூதனாமா இருங்கோ, உங்களோட அண்டா , குண்டா அப்புறம் முக்கியமான சாமானுகளையெல்லாம் பத்திரமா வச்சுக்கோங்கோ...... பிரபல பதிவர்கள் மற்றும் இணையப் போராளிகள் எல்லோரும் உங்களோட பாஸ்வேர்டுகள் மற்றும் ஐ.டி களை பத்திரமா ஒரு பழைய துணியில கட்டி எங்கனயாச்சும் ஒரு மரத்தடில பொதச்சு வச்சிருங்கோ! ஏன்னா, இந்த வைரஸ உருவாக்கினவன் வேற வேல இல்லாம நம்மோட ஐ.டி யத்தான் ஹாக் பண்ணூவான் பாருங்க! சூதனாம இல்லாம இருந்துப்புட்டு அப்புறம் எவனாச்சும் வந்து கெணத்த காணம்.ன்னு கம்பிளைண்ட் பண்ணிங்க மக்களே ! அப்புறம் அவளவு தான் சொல்லிட்டேன்!"

**********************************************************************************

தனது மனைவி கீதாஞ்சலி தான் தன்னை நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தார் என்று தனது டுவீட்டரில் தெரிவித்திருக்கின்றார் இயக்குன்ர செல்வராகவன். திருமணமாகி தனது முதல் வருட நிறைவை கொண்ணாடிய வேளையிலேயெ இதனை தெரிவித்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

மண்டக்கசாயம் : ஆமா! ஆமா! சோனியா அகவர்வால் , ஆண்ட்ரியா எல்லாம் நீயி சும்மா இருக்க , இன்னய வந்து கைய புடிச்சு "தர... தர,ன்னு இழுத்துக்கிட்டு போயி நரகத்துல விட்டாளுகளாக்கும். நீயி வாயில வெரல வச்சா கடிக்க தெரியாதவன் பாரு! கொய்யாலே!!

**********************************************************************************


டிஸ்கி 1: எனது பிளாக்கில் அவ்வப்போது வந்து தலைகாட்டும் முனைவர் . திரு. மண்டக்கசாயம் அவர்கள் பகுதி நேர எழுத்தாளராக எனது பிளாக்கில் எழுதுவதற்கு ஆர்வம் காட்டி உள்ளார்.  எனது பிளாக் உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பதே இத்ற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ள போதும், நான் நான் புகழ்ச்சிக்கு மயங்காதவன் என்பதால், இன்னமும் அது பேச்சு வார்த்தை நிலையிலேயே உள்ளது. விரைவில் நல்ல செய்தி வரலாம்.

டிஸ்கி 2: என்னயும் ஒரு பிரபல பதிவர்ன்னு மதிச்சு மிஸ்கினோட " முகமூடி" திரைப்படத்தின் வி.ஐ.பி ஷோவிற்கு அழைத்திருக்கிறார்கள். இதுவரை நான் தமிழ் திரைப்படங்கள் எதற்கும் விமர்சனம் எழுதியிராத போதும் , இந்த திரைப்படத்துக்கு கட்டாயம் எழுத வேண்டுமென்பது அழைக்கப்பட்ட அத்தனை பதிவர்ககான கட்டளை. எனது கொள்கைக்கு முரணாக என்னால் நடந்து கொள்ளமுடியாது என்றாலும், ஓசியில் வரும்போது கொள்கையாவது கொள்ளுப்பேரனாவது. பல்லை இழித்துக்கொண்டு வருகிறேன்னு மண்டையை ஆட்டிவிட்டேன். என்னோடு இலங்கையின் சில பிரபல பதிவரக்ளும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மைந்தன் அண்ணே உங்களுக்கு அழைப்பு மெயில் வந்துச்சா? # இந்திய பதிவர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டாத பட்சத்தில் சி.பி செந்தில்குமாருக்கு முன்னமே ஒரு தமிழ் படத்தோட விமர்சனப் பதிவு போட்டவன் நானாகத் தான் இருப்பேன்.

21 comments:

 1. Replies
  1. என்னண்னே வந்து ஒரு "உம்" மட்டும் போட்டிட்டு போய்ட்டீக?

   # ஆமா உன்னோட மொக்க பதிவுக்கு கைல வைர மோதிரமா போடுவாய்ங்க?

   Delete
 2. "தழுவிக்கொண்டால் அவர்கள் தீட்ஷை பெற்று விட்டதாக அர்த்தமாம்."

  அப்போ ரஞ்சிதாக்கு இவன் முக்தியே குடுத்துட்டானா?

  ReplyDelete
  Replies
  1. முக்தி மட்டுமாய்யா குடுத்தான்? @#$%^ எல்லாம் குடுத்துட்டாய்யா!

   Delete
 3. மண்ட கசாயத்தை வருக வருக என வரவேற்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. அப்புடியெல்லாம் ஒடனே வரவேற்பு குடுத்திராதிங்க! என்னய விட படு பயங்கரமான ஆளப்பா அவரு!

   Delete
 4. தலைவன் எழுத்தில் தமிழ் விமர்சனமா?? எதிர்பார்த்திருக்கிறேன்!!

  ReplyDelete
  Replies
  1. காத்திருங்கள் ! காத்திருங்கள்!

   Delete
 5. பாஸ் ரஞ்சிதா ஏதோ படம் எடுக்குறாங்களாம் நித்தி பற்றி அதுல ஒரு சீடன் வேஷம் வாங்கி தர முடியுமா எண்டு பாருங்கோவன்.//

  ReplyDelete
  Replies
  1. யோவ்! ரஞ்சிதா நித்திய பத்தி படம் எடுத்தா அதுல என்னய்யா கிக்கு? ரஞ்சிதாவையும் நித்தியையும் வச்சு எவனாவது படம் எடுக்கணும், அதில தான் கிக்கு!

   *ஏய்யா சீடனா இருக்க ஆசப்படுற? நீயி பொம்பளயா இருந்தாலாவது நித்திக்கு பிரயோசனம்! உனக்கும் பிரயோசனம்!

   Delete
  2. இல்ல பாஸ் சீடன இருந்தா நிறைய பெண் சீடர்களுடன் சேர்ந்து முக்தி அடையலாம் என்றுதான்.

   Delete
  3. உங்க முக்தி அடையுற ஆர்வம் ரொம்ப நல்லாவே தெரியுது!

   * டேய் யார்கிட்ட உன்னோட டக்கால்டி வேலய காட்டுற?

   Delete
 6. தமிழ்நாட்டை போல் இல்லாமல் நாங்கள் இலங்கையின் தமிழர் பகுதிகளுக்கு 24 மணிநேரமும் சீரான மின்விநியோகத்தை வழங்கி வருகின்றோம் என்று இலங்கையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கின்றார்.

  மண்டக்சாயம் : "எலேய்! தமிழ்நாட்டு அரசியல் வாதிகளே !இத கேட்டுப்புட்டு இன்னுமா நீங்க நாண்டுக்கிட்டு சாகல?"//////////


  මල්ලි බලගනේ කතාකරන්න නෙත්තම් සුදු වෙන් කාරයෝ (வெள்ளை வான்) අල්ලනවා.

  ReplyDelete
  Replies
  1. யோவ்! ஏய்யா பயம் காட்டுற? நான் என்ன தப்பா ஏதும் சொன்னனா? நம்ம நாட்டப்பத்தி பெருமையா தானே சொன்னேன்!

   Delete
 7. ஃஃஃஃஆண்ட்ரியா எல்லாம் நீயி சும்மா இருக்க , இன்னய வந்து கைய புடிச்சு "தர... தர,ன்னு ஃஃஃஃ

  நல்லதொரு நெத்தியடியான கேள்வி சகோ..

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ!! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்!

   Delete
 8. hii.. Nice Post
  கட்டாயம் பாருங்கள் இந்த Movie. மிகவும் அழகான படம்!.
  உங்கள் ப்ளாக் மிகவும் அருமை.
  http://dohatalkies.blogspot.com/2012/07/hachi-dogs-story-tale-movie-review.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி பாஸ்! படம் தானே !!! பாத்துட்டா போச்சு!

   Delete
 9. நண்பா சூப்பர் சூப்பர் சூப்பர் நீங்க முக புத்தகத்துல இருகிங்கள நான் உங்க கூட தொடர்புல இருக்கணும்னு நெனைக்கிறேன் இருந்த எனையும் உங்க நண்பர்கள் லிஸ்ட் ல சேர்த்துகோங்க nabsafi@gmail.com

  ReplyDelete
  Replies
  1. இதோ ஒரு ரிக்குவஸ்ட் அனுப்புறேன்!

   Delete
 10. // அகவர்வால் , ஆண்ட்ரியா எல்லாம் நீயி சும்மா இருக்க , இன்னய வந்து கைய புடிச்சு "தர... தர,ன்னு இழுத்துக்கிட்டு போயி நரகத்துல விட்டாளுகளாக்கும். நீயி வாயில வெரல வச்சா கடிக்க தெரியாதவன் பாரு! கொய்யாலே!! //

  ...............நல்ல சிரிப்புதான்.நல்லாயிருக்கு.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...