உதைபந்து

Friday, July 27, 2012

சரவணன் மீனாட்சி சாந்திமுகூர்த்தமும் விஜய் டி.வியில் நேரடி ஒளிபரப்பாம்!
அப்புறம் கண்ணுங்களா! எல்லாரும் ரெடி ஆகியாச்சா, அதில பாருங்க இந்த சரவணன் மீனாட்சி கல்யாணத்துக்கு வாங்கன்னு எனக்கு இன்விஸ்டேஷன் குடுத்தாலும் குடுத்தாய்ங்க ஒரெ பரபரப்பா இருக்கு! என்ன பண்ரதுண்ணே தெரியல! பெரிய எடத்து கல்யாணம் ஆச்சே! அதனால ரொம்ப டீசெண்டா வேற உடுத்துக்கிட்டு போகணும், அது வேற இந்த விஜய் டி.வி காரய்ங்க எப்ப பாரு ஒரே புதுமையா புகுத்துவானுக. அதுலயும் இந்த தமிழ் தொலைக்காட்சிகளிலேயே அவனுக தான் முன்னோடிகள்னா பாத்துக்கோங்களேன். அமேரிக்கன் டி.வி ஷோக்களை பாத்துப்புட்டு இவனுக அப்புடியே பச்சையா கொப்பி அடிக்கிறானுகன்னு எவனாச்சும் சொன்னிங்கன்னா அப்புறம் காண்டயிருவன் ஆமா...... பொறாம புடிச்சவனுக! கொப்பி அடிக்கிறதும் எவ்ளோ கஷ்டம்னு இவய்ங்களுக்கு தெரியுமா என்ன? அது முக்கியம் கெடையாது, நாதாரித்தனம் பண்ணிக்கிட்டு இருந்தாலும் நாம தான் இப்போ நம்பர் வன்! புதுமை புயல்கள்! அந்த பட்டம் தான் முக்கியம் பாருங்க!

சரி !மேட்டருக்கு வந்திருவோம், நம்ம மாமன் மையன் சரவணாக்கும், அத்தை பொண்ணு மீனாட்சிக்கும் இன்னிக்கு கல்யாணம், அதுவும் மூணு மணிநேரமா நடக்கபோவுது. அதுலயும் பாருங்க டி.வில , பத்திரிக்கைல, அப்புறம் முட்டுசந்து, மூத்திர சந்து எல்லாத்திலயும் ஒட்டின போஸ்டர்களிலயும் "திருமணம் நடாத்த மக்கள் தீர்மானித்து இருப்பதால்"ன்னு  போட்டு எங்கள கௌவ்ரவ படுத்திட்டாய்ங்க‌, அதனால என்னதான் உயிர் போற‌ வேலயா இருந்தாலும் இந்த கல்யாணத்த முன் நின்னு நடத்திரதுன்ன முடிவில இருக்கேன். அதில பாருங்க இந்த சரவணன் மீனாட்சி சமாச்சாரம் இவ்ளோ நாளா டி.வில போய்க்கிட்டு இருந்திச்சில்லே , அந்த நிகழ்ச்சில வந்த பணத்தில அந்த நாடகம் பாத்த ஒவ்வொருத்தனோட வீட்டுக்கும் இலவச குடிநீர், பாடப்புஸ்தகம், அப்புறம் கொழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ், மருத்துவ செலவுக்கு பணம், அப்புறம் கஸ்டப்படுறவங்களுக்கு இலவச மளிகை சாமான்க‌ எல்லாம் வாங்கி குடுத்தாய்ங்க பாருங்க , அதனால தான் இந்த கல்யாணத்த எங்களோட அமோக ஆதரவில நடாத்திக் காட்டணும்கிற முடிவுக்கு வந்திருக்கோம்.

சில பேரு சொல்றாய்ங்க தங்களுக்கு அப்பிடி ஏதும் தரலன்னு சொல்லி, ஆனாலும் கூட‌ வீட்ல பண்டபாத்திரம் கழுவாம கெடந்தாலும், கொழந்தையோட மூத்திர துணி தொவைய்க்காம கெடந்தாலும் , வேலையால வந்த புருஷன் பட்டினி கெடந்தாலும் , கூரையே இடிஞ்சு பொடனில விழுந்தாலும் கூட , எட்டரலேர்ந்து பத்தர மணிவரைக்கும் எதயும் கணக்கே எடுக்காம கல்யாண வேலை செஞ்சே ஆகுவோம்னு ஜனங்கெல்லாம் ஆர்வமா நிக்குறத பாக்கும் போது அப்டியே எனக்கு கொமட்டீன்னு ......... சே..... ஆனந்த கண்ணீரா வருது!

சில பொறாமை புடிச்ச பதிவர்கள் மற்றும் மீடியாக்கள் சொல்லக்கூடும் , "விஜய் டி.வி ஜனங்களை புதுமை செய்கிறேம் என்ற‌ பெயரில் ஏமாற்றுகிறது " அப்டீன்னு. எங்களுக்கு அதுபத்தியெல்லாம் கவலயே கிடையாது, கண்ணுக்கு முன்னால கொலையே விழுந்தாலும் கல்யாணத்துக்கு போயே ஆகுவோம். இன்னொன்னும் சொன்னாய்ங்க , ஏதோ டி.ஆர்.பி ரேட்டிங் உயர்ந்தால் விஜய் டி.விக்கு நெறைய வருமானம் வருமாமே, அட வருமானம் வந்தா அவய்ங்க என்ன சுவிஸ் பாங்க்லயா போடப்போறாய்ங்க ? இலவச மின்சாரம், பள்ளிக்கூடம், மருத்துவமனைன்னு நமக்குத் தானே நல்லது செய்வாய்ங்க!?அட ! செய்யக்கூட வேணாமப்பா அந்த புள்ளைங்க நல்லா இருகட்டுமப்பா, போயி நாலு அட்சதைய போட்டுபுட்டு வந்திருவோம் ! அது தானே மொற!!!கல்யாணம் என்னும் போது தான் நெனப்புக்கு வருது என்னோட மாமா ஒருத்தருக்கும் எனக்கும் ஆகவே ஆகாது , அவரோட மகளோட கல்யாணத்துக்கு நான் வரணும்னு அவரே என்னோட வீடு தேடிவந்து பத்திரிக்கை வச்சாரு, என்னய‌ விட இருபத்தி ஏழு வயசு மூத்தவரு, நான் செஞ்ச பிழைக்கு அவரே மன்னிப்பும் கேட்டாரு , அதுக்காக அவரோட வீட்டு கல்யாணத்துக்கு போயிர முடியுமா? என்னோட கெவ்ரவம் என்னாவுறது? ஆனாலும் பாருங்க சரவணன் மீனாட்சி கல்யாணம் ரொம்ப முக்கியம்! இத்தன பப்ளிசிட்டி பண்ணி கூப்பிட்டும் போகலன்னா என்னய அவய்ங்க மதிப்பாய்ங்களா?  இலங்கைல தமிழன் செத்துக்கிட்டு இருக்கும் போது மக்கள் தொலைக்காட்சி அதை கடுமையா எதிர்த்துக்கிட்டு இருந்தப்போ, எங்களோட புதுமைப்புயல் விஜய் டி.வி ஜோடி நெம்பர் வன் போட்டுக்கிட்டு இருந்திச்சி.... அத ஏதோ கொல குத்தமா இந்த பசங்க எல்லாரும் திட்டுறானுக, சரிப்பா ... என்ன தான் இருந்தாலும் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னெயம் செய்துவிடுதல்" அப்டீங்கிறது தானே தமிழர் பண்பாடு! அதனால கட்டாயமா இந்த கல்யாணத்துக்கு போயே ஆவணும்!

நேத்தைக்கு துணிக்கடை போயிருந்தேன், வேற எதுக்கு எல்லாம் கல்யாணத்துக்கு துணி மணி வாங்கத்தான், அப்புடியே வர்ர வழியலதான் பாத்தேன் இந்த விடுதலை சிறுத்தை கட்சி காரய்ங்க ஒரு ஏழெட்டு பேரு எதுக்காகவோ சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கானுகளாம். நேத்தையோட ஏழாவது நாளாம், அவய்ங்கள பாக்கவே பாவமா இருந்திச்சி.... இவனுகளையும் பேசாம கல்யாணத்துக்கு கூப்பிட்டிருக்கலாம், பாவம் ஏழு நாளா சாப்பிடல இல்ல! வந்து கறிகஞ்சியோட சாப்பிடலாம் இல்ல! வீட்டுக்கு வந்தது வராததுமா எல்லா பேப்பரையும் பொரட்டினேன் , அந்த உண்ணா விரதம் பத்தி ஒரு பிட் நோட்டீஸ் கூட கெடையாது, எந்த பேப்பரை பாத்தாலும் நம்ம வீட்டு கல்யாணத்தபத்தி தான் இரே நியூசு போங்கள்! இணையத்தில் கூட பாத்துட்டேன், பிரபலமான சில இணையளங்களில் கூட இன்னிக்கு நடக்கப்போகும் கல்யாணத்த பத்தி தான் ஒரே பேச்சு, மனசு குளிர்ந்து போச்சு! என்ன இருந்தாலும் எங்க வீட்டு கல்யாணம் இல்லையா? இந்த மாதிரி  கல்யாணம் , மங்களகரமான  , முக்கியமான விசயங்கள பத்தி தான் மொதல்ல பேப்பரில போடணும், உண்ணாவிரதம், போராட்டம்ன்னு போட்டா நல்லாவா இருக்கும்? அவய்ங்க செத்துப்போனா ஒரு மூலைல‌ அப்புறமா போட்டுக்கலாம். நாம கூட  அப்புறமா போயி ஒரு மாலய வாங்கி போட்டுட்டு வரலாம். அட! அதுக்கும் இந்த கட்சிக்காரங்க அடங்கலன்னா நம்ம அண்ணன் கோபிநாத்த விட்டு "அநியாயமாக செத்துப்போன அப்பாவிகள்!!! யாருடைய அசமந்த போக்கு காரணம்? மீடியாவினதா இல்லை அரசாங்கதினுடையதா?ன்னு அடித்தொண்டைல கத்த வச்சி நீயா நானாவில் ஒரு புரோக்கிராம் பண்ணி சமூக அக்கறையை காட்டமுடியும் என்பதால், பேசாமல் வந்துவிட்டேன்.

இந்த கல்யாணத்துக்கு மாலை வாங்குறதுக்காக இன்னிக்கு பூக்கடைக்கு போயிருந்தேன். அப்பொ ரெண்டு பேரு பேசிக்கிட்டிருந்தானுக , யாரோ பள்ளிக்கூட கொழந்தையாம் பேரு ஸ்ருதியாம். ஸ்கூல் பஸ் ஓட்டையா இருந்ததனால கீழே விழுந்து செத்திருச்சாம், ஆபாச போஸ்டரை கண்டா கிழிக்கிறதுக்கு அணிதிரளும் இந்த சமூக அமைப்புகளும் , மாதர் சங்கங்களும் தாயுள்ளத்தோடு இந்த மேட்டருக்கு ஆர்ப்பாட்டம் நடத்தலன்னு " ரொம்ப கொதிப்பா பேசிக்கிட்டு இருந்தாய்ங்க ,  "அட போங்கட, மாதர் சங்க தலமைகள் எல்லாம் இப்போ நம்ம வீட்டு கல்யாணத்து ரிஷப்ஷன், அப்புறம் இன்னிக்கு நடக்கப்போற கல்யாணத்தில ரொம்ப பிஸியா இருக்காய்ங்க! கல்யாணம் முடிஞ்சு அப்புறம் சாந்தி முகூர்த்தமும் ஆனதுக்கு அப்புறமும், எங்களுக்கு அந்த கொழந்த ஞாபகம் வந்தா ஆர்ப்பாட்டம் பண்றத பத்தி யோசிக்கிறோம்"ன்னு சொல்ல தான் வாயெடுத்தேன், அப்புறம் ஏற்கனவே என்னோட ரெண்டு பல்லு ஆடிக்கிட்டு இருந்திச்சு, அவிய்ங்களோட முஷ்டி வேற பல்க்கா இருந்திச்சு மாலைய மட்டும் வாங்கிட்டு வீடு வந்துட்டேன்!அது போக அந்த பஸ்ஸுக்கு அனுமதி குடுத்த ஆபிசருங்களுக்கு தண்டணை குடுக்கணுனெல்லாம் பேசிக்கிட்டு அலையிறாய்ங்க, இந்தியன் தாத்தா வந்து செய்ய வேண்டிய வேலை எல்லாம் எங்கள பண்ண சொன்னா நாங்க என்ன பண்றது? மொதல்ல எங்க வீட்டு பிரச்சினைய பாக்கலாம், நமக்கு இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்! அம்புட்டுதேன், அதுக்கு தான் மாரியாத்தாவுக்கு நேத்தி வச்சிருக்கேன்.


எப்பவும் புதுமை பண்ணுற விஜய் டி.வி கல்யாணத்துக்கு அப்புறமா சாந்திமுகூர்த்தம் நடக்கிறதையும் லை டெலிகாஸ்ட் பண்ணுவாய்ங்களாம், அது போக சாந்தி முகூர்த்தம் நடக்கும் ரூமில் முதல் ரோவில் இருபது சீட்டு போட்டிருக்காம். வி.வி.ஐ.பி க்கள் நேரடியாக கண்டுகளிக்க இந்த ஏற்பாடாம். இந்த பதிவுக்ககவே எனக்கும் ஒரு சீட்டு தருவாய்ங்கன்னு நம்புறேன். விஜய். டி.வின்னாலே ஒரே புதுமை தான் போங்க,,,........


நேத்து வட நாட்லே ஒரு வெவசாயி 200 ரூபா கட்டாததனாலே , பொறந்து ஐஞ்சு நாளேயான அவரோட கொழந்தைய ஐ.சி.யூ விலேர்ந்து அப்புறப்படுத்தியிருக்காய்ங்க அந்த ஆஸ்பத்திரியோட டாக்டருங்க!  கொழந்த செத்து போச்சி!!!  கல்யாணத்துக்கு வேட்டி வாங்கின கடையில ஒருத்தர் சொல்லிக்கிட்டு இருந்தாரு. 200 ரூவா கட்ட வழி இல்லாதவன் எல்லாம் ஏன் புள்ள பெக்குறான்? எங்க விஜய் டி.வி கிட்ட காசு இருக்கு அவிய்ங்க  இப்புடி புரட்சிகரமா கல்யாணம் பண்ணுவாய்ங்க! இப்புடி பண்ணியே நாங்க தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்மையானவைய்ங்க ஆயிடுவோம்! இந்த இடத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசப்படுறேன், அதாவது இந்த புதிய தலைமுறை டி.வி தான் தமிழ் டி.வி களில் முதன்மையா இருக்குன்னு சில பேரு பொரளிய கெளப்பின்னு அலையுறான், அதை நான் வன்மையா கண்டிக்கிறேன். இப்பிடியாக புரட்சிகரமாக கல்யாணம் நடாத்தும் எங்க விஜய் டி.வி தான் தமிழ் நாட்டின் உயர்ந்த டி.வி என்பதை எந்த கோயிலிலும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்ய நான் தயார்! சமுதாயத்தை பத்தி எங்களுக்கு கவல கெடையாது அதை பாலிமர் டி.வியும் , புதிய தலைமுறை டி.வி யும், மக்கள் தொலைக்காட்சியும் பாத்துக்கும், ஆனா விஜய் டி.வி தான் எப்பவும் நெம்பர் வன்! ஆமா.... பக்கத்து வீட்ல பிரச்சின, நாட்ல கொழப்பம்ன்னா அத இந்தியன் தாத்தா இல்லாங்காட்டி அந்நியன்னு எவனாவது வந்து தீர்த்து வச்சிடுவான், ஜனங்களாகிய எங்களுக்கு நாங்க வேல வெட்டிய விட்டிட்டு நடாத்துற எங்க வீட்டு கல்யாணம் தான் ரொம்ப முக்கியம்!

என்னோட கெட்டப்பு எப்புடி? பெனியன்+ஜட்டி+ சப்பாத்து + கழுத்தில டை!!! விஜய் டீவிக்கு ஈக்குவலா நானும் புதுமை செய்தாகணும் இல்ல! அது தான் அந்த கெட்டப்பு!!! விஜய் டி.வின்னா லே சும்மா அதிருதில்ல! சரிப்பா கல்யாணத்துக்கு எவ்ளோ மொய் வைக்கலாம்?


28 comments:

 1. உன்னுடைய இந்த பதிவுக்கு பின்னூட்டம் இடும் அருகதை எனக்கு இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்! .ஏனெனில் நான் விஜய் டி.வி.யின் பரம ரசிகன். என்னை சமீப காலத்தில் மிகவும் யோசிக்க வைத்த, ஆனால் வழக்கம்போல் யோசிக்க மட்டுமே வைத்த இந்த பதிவை நான் முழு மனதோடு வழிமொழிகிறேன்....மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சி தம்பி..

  ReplyDelete
  Replies
  1. அட விடுங்கண்ணே ! ரசனை என்பது பின்விளைவுகளையோ திரைக்கு பின்னால் நடக்கும் சங்கதிகளையோ அறியாதது. எனக்கு என்ன ஆதங்கம் என்றால் , இந்தியாவில் அப்படியெல்லம் நடக்கும் போது, அதை கண்டுகொள்ளாத மீடியாவும், ஜனங்களும் ஒரேடியாக தங்களை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள் என்பது தான். இந்த விஜய் டி.வி களோ[பரத்தில் அந்த ஏழெட்டு பேரின் உயிர் அங்கே ஊசலாடுவது மறைக்கப்பட்டது தான் எனக்கு பெரும் வருத்தம்!

   Delete
 2. இப்போ இந்த கல்யாணத்தை பார்த்துட்டு இருக்கேன்...சமூகத்துல என்ன நடந்தாலும் கண்டுக்காம இருப்பது தானே நம்ம பழக்கம்...

  ReplyDelete
  Replies
  1. அது தானே! நாம மாறவே கூடாது... மறந்தும் மாறிடக்கூடாது , அப்புறம் இந்தியா வல்லரசாகிடும், எங்க டி.வி? எங்க ரிமோட்டு? எங்க விஜய் டி.வி? கெளப்புரா ....கெளப்புரா ராசா.... என்சாய்....

   Delete
  2. தம்பி கிஷோகர்...இங்க கமென்ட் போட பயமாயிருக்கு...
   காரிகன் வாசம் அடிக்கே...
   ஒஹோ...கரிபியன் ஜானி வந்திருக்காக...

   கமலை துண்டு போட்டு மசாலா இல்லாம சாப்பிடும் நர மாமிச பட்சிணிகள்.
   பாரா உஷார்...சிக்கிராதே கிஷோகர்.

   Delete
  3. அண்ணே வேணாம்ணே! நீங்க பாட்டுக்கு ஏதும் கெளப்பிட்டு போக , அவனவன் எம்மேல பாய நான் தான் திரு திருன்னு முழிக்கணும்! உங்களுக்காவது நாலு விசயம் தெரியும் , ஏதாவது பதில் சொல்லி சமாளிச்சிருவேள். ஆனா நானு ????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........... வெட்ட தல குடுத்த ஆடு கதையா ஆயிடும்ணே என் பொழப்பு! ஹி..ஹி...ஹி.,.. ஆனாலும் வலையில சிலந்தி சிக்கும், சில்வண்டு சிக்கதுண்ணே!

   வருகைக்கு ரொம்ப நன்றிண்ணே!

   Delete
 3. //நேத்தைக்கு துணிக்கடை போயிருந்தேன், வேற எதுக்கு எல்லாம் கல்யாணத்துக்கு துணி மணி வாங்கத்தான்//
  தம்பி உங்களுக்கு துணி மட்டும் வாங்கினா போதாதா??

  ReplyDelete
  Replies
  1. தம்பி ! மணி வாங்கிறதும் அத ஆட்டிக்கிட்டு திரியிறதும் என் இஷ்டம் , அங்க ஏன் ஓய் போய் நோண்டுறீரு?

   Delete
 4. //வி.வி.ஐ.பி க்கள் நேரடியாக கண்டுகளிக்க இந்த ஏற்பாடாம். இந்த பதிவுக்ககவே எனக்கும் ஒரு சீட்டு தருவாய்ங்கன்னு நம்புறேன். //
  சரவணன்ட சீட்டே இன்னும் ஃப்ரீயாத்தான் இருக்காம்.. போகலையா??

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே காஜல் பக்கத்தில உக்காந்திட்ட படியால, எனக்கு அந்த சீட்டு வேணாம்பா!

   Delete
 5. //பெனியன்+ஜட்டி+ சப்பாத்து + கழுத்தில டை!!!//
  ஐயே பட்ஜெட் போட்டு ட்ரெஸ்ஸு வாங்க மாட்டியா நீயி.. இப்படி செலவு செஞ்சா நாட்டோட பொருளாதாரத்துக்கு என்ன ஆவுறது..

  பேசாம தாத்தாவோட பழைய கோவணத்தை எடுத்துண்டு போ.. தேவைப்பட்டா ஜட்டியாவும், தேவைப்பட்டா கழுத்துல டையாவும் யூஸ் பண்ணிக்கலாம்!!

  #இந்த வருஷ பொருளாதாரத்துக்கான நோபிள் பரிசு எனக்குத்தான்.. ஐயா ஜாலி!

  ReplyDelete
  Replies
  1. ///ஐயே பட்ஜெட் போட்டு ட்ரெஸ்ஸு வாங்க மாட்டியா நீயி.. இப்படி செலவு செஞ்சா நாட்டோட பொருளாதாரத்துக்கு என்ன ஆவுறது..////

   என்ன பண்றது மச்சி ? ஜமீன் பரம்பரல பொறந்துட்டேன், செலவு பண்ணித்தானே ஆகணும், எங்க செல்லவச் செழிப்பு வெளிய தெரிய வேண்டாமா?

   ///பேசாம தாத்தாவோட பழைய கோவணத்தை எடுத்துண்டு போ.. தேவைப்பட்டா ஜட்டியாவும், தேவைப்பட்டா கழுத்துல டையாவும் யூஸ் பண்ணிக்கலாம்!!////

   வட் அன் ஐடியா சர் ஜி?

   ///இந்த வருஷ பொருளாதாரத்துக்கான நோபிள் பரிசு எனக்குத்தான்.. ஐயா ஜாலி!///

   நானும் அது தொடர்பில் நோபல் கமிட்டிகிட்டே பேசுறேன்!

   Delete
 6. அட இன்னுமா இந்த உலகம் இவுங்களை நம்புது..

  ReplyDelete
  Replies
  1. நம்புறாங்க நண்பா ! நம்புறாய்ங்க!

   Delete
 7. ரொம்பவே கோபமான பதிவு....இவனுகளை விட்ட மீனாச்சிக்கு சாந்திமுகுர்த்தம், வளைகாப்பு, குழந்தை பிறக்கிறது இதை எல்லாம் கூட காட்டுவாங்க.
  நான் விஜய் டிவிய பார்க்கிறதை விட்டு ரொம்ப வருஷம் ஆச்சு. நமக்கும் கொஞ்சம் மனசாட்சி இருக்கு பா..

  ReplyDelete
  Replies
  1. ///இவனுகளை விட்ட மீனாச்சிக்கு சாந்திமுகுர்த்தம், வளைகாப்பு, குழந்தை பிறக்கிறது இதை எல்லாம் கூட காட்டுவாங்க///

   சரியா சொன்னீங்க அண்ணே!

   தமிழ் தொலைக்காட்சிகளின் வழமையான அளப்பரைகளிலிருந்து சற்று மாறுபட்டு நிகழ்ச்சிகளை கொடுத்து மக்கள் மனதில் விஜய் டி.வி இடம் பிடித்ததென்னவோ உண்மைதான், ஆனால் அந்த மாறுதல்கள் என்ற பெயரில் இப்போது அவர்கள் அடிக்கும் அளப்பரைக்கு அளவு இல்லாமல் போய் விட்டது! "அளவுக்கு மிஞ்சினால்........

   Delete
 8. வணக்கம்.நண்பர் கோபி மூலமாக தங்கள் தளம் பார்க்க கிடைத்தது மகிழ்ச்சி.
  அண்ணே இவனுக தீருந்தவே மாட்டாங்க..நாம என்ன கத்தினாலும் கண்டுக்கவும் மாட்டாங்க..என்ன பண்ண????:)
  நம்ம நாட்ல இருக்காங்க பாருங்க ரசிகர்கள் இதே நிலம தான்.
  வாழ்த்துக்கள் தங்கள் பதிவிற்காய்.சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. முதலில் உங்களது மேலான வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி! துப்பாக்கியோடு கள்ளன் வந்தாலும் கத்துவது நாயின் கடமை, நாம் கத்திவிட்டு போவோம்! சத்தம் கேட்டு ஒருவனாவது விழிக்காமலா போய்விடுவான்?

   சந்திக்காலாம் தோழி‍!!! !!!!!!!!11!111111`!

   Delete
 9. யோ! அடுத்த வாரம் சாந்தி முகூர்த்தம் ஸ்பெஷல் நீ இப்படி பதிவு போடுறது விஜய் டிவி கு தெரிஞ்ச நிப்பாட்டிருவாணுக.

  ReplyDelete
  Replies
  1. எப்போ பாரு அங்கயே குறியா இரு!

   Delete
 10. நமக்கு விஜய் டீவின்னாலே நீயா நானா மட்டும் தான். மற்றபடி வீட்டுல தமிழ் சேனல்னா ஆதித்யா, சிரிப்பொலி, சன் மியுசிக் மட்டும் தான் ஓடும்.

  அந்த சாந்திமுகூர்த்தம் எப்போ டெலிகாஸ்ட் பண்ணுவாங்களாம்? அத மிஸ் பண்ணாம பார்க்கணுமே?

  ReplyDelete
  Replies
  1. நாமளும் காமடி பீஸ் என்ற படியால் சேம் ஆதித்யா மற்றும் சிரிப்பொலி தான், அனேக நேரங்களில் எனது சொந்த பந்தங்களை தரிசிக்கும் டிஸ்கவரி அல்லது நட் ஜியோ வைல்ட்!

   ////அந்த சாந்திமுகூர்த்தம் எப்போ டெலிகாஸ்ட் பண்ணுவாங்களாம்? அத மிஸ் பண்ணாம பார்க்கணுமே?///

   அது அப்புறமா தெருத்தெருவா சிடி போட்டு விப்பாய்ங்களாம் # இன்னொரு புதுமை!

   Delete
 11. // ஒண்ணும் வெட்டி முறிக்க நான் வலைப்பூ ஆரம்பிலக்கல அண்ணாச்சி..! சும்மா வெட்டியா தானே இருக்கம் , மொக்க போடுவம் எண்ட நல்ல எண்ணத்தில தானுங்கோ...! //

  அப்ப ஒரு தொடர்கதையில் ஒரு பகுதியை எழுதலாமே? (நாங்களும் கோர்த்து விடுவோம்ல)

  http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_27.html

  ReplyDelete
  Replies
  1. கோத்துவிட்டதுக்கு ரொம்ப நன்றி! அற்புதமான வாய்ப்பு தான் , எனது தளத்தில் கூட ஒரு கதை எழுத சிந்தித்துக்கொண்டு தான் இருக்கிறேன், நேரம் வரும் போது எழுதி அதை இங்கேயும் கோத்துவிட வேண்டியது தான்! மறுக்கா நன்றிண்ணே!

   Delete
 12. அடகோதாரி அவனுக பேஸ்புக்ல போட்டத பார்த்து நானும் ஏதோ நிசத்துல கல்யாணம் என்று நினைச்சன். சரியான சாட்டையடி மச்சி. விஜய் ரீவில மட்டும் பிழை சொல்லி பயனில்லை. மூக்கு சிந்திக்கிட்டு ரீவி பார்க்குற நம்ம சனங்களை மிதிக்கனும்.

  ReplyDelete
  Replies
  1. குத்துங்க எசமான் குத்துங்க! அந்த ரெண்டு பேரையும் வாயிலையே குத்துங்க!

   Delete
 13. என்னப்பா...இது..நான் தலைப்பை படிச்சுட்டு ஏதோ வில்லங்கமா நடந்துருச்சோனு வரேன்..நீ என்னானா ?
  நம்மளுக்கு விஜய் டிவி எல்லாம் ஆகாது நண்பா..அதுவும் இங்க விஜய் டிவி சேனல் இல்ல..அப்பப்ப அந்த சேனல் பிராக்ரம்ஸ், சீரியல் போடுவாய்ங்க..அம்புட்டுதான்..
  வர வர உங்க பதிவுகள் எல்லாம் சூடேரிட்டே போகுது..(எதுக்கும் Fire station பக்கத்துல எங்காவது இருக்கானு பார்த்துக்குங்க)..
  வாழ்த்துக்கள்..தொடருங்கள்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உண்மைய சொல்லு! ஏடாகூடமா ஏதாச்சும் நடந்திருச்சோன்னு பதறியடிச்சு வந்தியா? இல்ல ஏடாகூடமா ஏதும் நடந்திருக்கு போயி ஒரு எட்டு பாத்திட்டு வந்திருவோம்ன்னு ஜாலி மூடில் வந்தியா?

   பிரபல பதிவர்ன்னா ஒரு Fire இருக்கணும்ன்னு எல்லாரும் சொல்றாங்க மச்சி! அது தான்! ஹி...ஹி...ஹி... நன்றி வருகைகும் பின்னூட்டத்துக்கும்!

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...