இன்னும் சில மணிநேர காத்திருப்பு தான்., கடந்த வருடம் தொடர்பில் உலகம் கேட்டிக்கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான பில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைத்துவிடும். உதைபந்தாட்ட உலகமே ஆவலுடன் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வியான "2012இன் சிறந்த உதைபந்தாட்ட வீரர் யார்"? என்ற கேள்விக்கு இன்னும் சில மணி நேரத்தில் சூரிச்சில் நடைபெறப்போகும் "பலூன் டி ஓர் 2012" விருது வழங்கும் விழா பதில் சொல்லப்போகிறது.
"பலூன் டி ஓர்" விருதானது ஒவ்வொரு ஆண்டிலும் உதைபந்தாட்ட உலகில் பிரகாசித்த வீரருக்கு "ஆண்டின் தலைசிறந்த உதைபந்தாட்ட வீரர் " என்ற கௌரவத்தினை அளிக்கும் ஒரு விருதாகும். சினிமாவிற்கு ஒரு ஆஸ்கர் விருதை போல உதைபந்தாட்டத்தில் ஃபீஃபா அமைப்பு வழங்கும் இந்த விருதானது உயரிய ஒரு விருதாக கொளப்படுகின்றது. வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த விருதினை பெற்று விடுதல் என்பது ஒவ்வொரு உதைபந்தாட்ட வீரனதும் கனவாக இருந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டிற்கா உலகின் தலைசிறந்த வீரரை தெரிவுசெய்யும் நோக்கில் ஃபீஃபா அமைப்பானது முதலில் இருபத்து மூன்று பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை அறிவித்திருந்தது. இந்த குழுவில் ஸ்பெயினின் முன்னணி கழகமான பார்சிலோனாவின் எட்டு வீரர்கள் உள்ளடங்கியிருந்தனர்.பின்னர் அந்த இருபத்து மூன்று பேர் கொண்ட குழுவில் இருந்து வாக்கெடுப்பின் மூலம் மூன்று பேர் வடிகட்டப்பட்டு, இறுதியான போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யார் "2012இல் உலகின் தலைசிறந்த வீரர்" என்பதனை எத்ர்வரும் 7ம் திகதி சுவிஸ்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறப்போகும் விருதுவழங்கும் விழா அறிவிக்கும்.
அந்த வகையில் கடந்த வருடத்தில் பிரகாசித்த வீரகளில் முதன்மையானோரும், விருதின் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றிருப்போருமென ஃபீஃபா அறிவித்திருக்கும் வீரர்கள் இவர்கள் தான்.
*ஆர்ஜன்டீனாவின் லியோனல் மெஸ்ஸி ( கழகம் பார்சிலோனா- ஸ்பெயின்)
*ஸ்பெயினின் அன்ட்ரஸ் இனியஸ்டா (கழகம் பார்சிலோனா -ஸ்பெயின்)
*போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ( கழகம் ரியல் மட்ரிட் - ஸ்பெயின்)
இப்போது இந்த மூன்று வீரகளினதும் கடந்த பருவகாலத்தின் பெறுபேறுகளை பார்த்துவிட்டுஎந்த வீரர் இந்த விருதினை பெற்றுக்கொளப்போகிறார் என்பது பற்றி அலசலாம்.
லியோனல் மெஸ்ஸி
நாடு : ஆர்ஜென்டீனா
கழகம் : பார்சிலோனா - ஸ்பெயின்
வயது : 25
நிலை : முன்கள வீரர்
பெறுபேறுகள்
*லீக் கோல்கள் : 50
*சம்பியன்ஸ் கிண்ண கோல்கள் : 14
*ஏனைய கோல்கள் : 09
*அஸிட்டுகள் ( கோலுக்கான உதவி) : 29
அணியுடனான சாதனைகள்
* கோபா டில் ரே வெற்றியாளர்கள். ( பார்சிலோனா)
* சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி ( பார்சிலோனா)
தனிப்பட்ட சாதனை
* லாலீகா வரலாற்றில் ஒரு சீசனில் அதிக கோல்கள் ( 50 கோல்கள்.)
* சம்பியன்ஸ் கிண்ண வரலாற்றில் ஒரு தொடரில் அதிக கோல்கள் ( 14 கோல்கள்)
* ஒரு சீசனில் அதிக கோல்கள் மற்றும் அதிக அஸிட்டுகள் செய்த சாதனை ( 73 கோல்கள் 29 அஸிட்டுகள்)
* லாலீகாவின் சிறந்த வீரருக்கான "தங்க பாதணி விருது"
அன்ட்ரஸ்ட் இனியஸ்டா
நாடு : ஸ்பெயின்
கழகம் : பார்சிலோனா - ஸ்பெயின்
வயது : 28
நிலை : மத்திய வரிசை வீரர்
அணியுடனான சாதனைகள்.
* கோபா டில் ரே வெற்றியாளர்கள். ( பார்சிலோனா)
* சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி ( பார்சிலோனா )
* யூரோ கிண்ண வெற்றியாளர்க்ள் ( ஸ்பெயின்)
தனிநபர் சாதனை
*2011-2012ம் ஆன்டுக்கான சிறந்த சம்பியன்ஸ் கிண்ண வீரர்.
* 2012 யூரோ கிண்ணத்தின் சிறந்த வீரர்
கிறிஸ்டியானோ ரொனால்டோ
வயது : 27
நாடு : போர்த்துக்கல்
கழகம் : ரியல் மட்ரிட் ( ஸ்பெயின்)
நிலை : முன்கள வீரர்
பெறுபேறுகள்
*லீக் கோல்கள் 46
*ஏனைய கிண்ண கோல்கள் 14
அணியுடனான சாதனைகள்
*லாலீகா கோப்பை வெற்றியாளர் (ரியல் மட்ரிட்)
*சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி ( ரிய மட்ரிட்)
* யூரோ கிண்ண அரையிறுதி ( போர்த்துக்கல்)
மேலே சொன்னவாறு இறுதி சுற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வீரர்களில் அன்ட்ரஸ் இனியஸ்டா இரண்டாவது தடவையாக இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2010ம் ஆண்டில் சக கழக வீரர்களான மெஸ்ஸி மற்றும் சாபி ஹர்னாண்டஸ் ஆகியோருடன் பரிந்துரைக்கப்பட்டு இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்படுவது இது ஐந்தாவது தடவையாகும். 2007, 2008,2009, 2011 ஆகிய ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டு 2008ம் ஆண்டில் மட்டும் இந்த விருதினை வென்றுளார்.மிகுதி ஆண்டுகளில் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார். 2008இல் மன்செஸ்டர் அணிக்காக ஆடும் போது விருதினை பெற்றுக்கொண்ட ரொனால்டோவால் 2009இல் ரியல் மட்ரிட் அணியுடன் இணைந்து கொண்டதன் பிற்பாடு , குறிப்பாக லியோனல் மெஸ்ஸி இவரது பிரதான போட்டியாளராக உருவெடுத்ததன் பிற்பாடு பரிந்துரைக்கப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களிலும் மெஸ்ஸியை தோற்கடிக்க முடியாத இவரால இரண்டாம் இடங்களை மட்டுமே பெற முடிந்தது.
லியோனல் மெஸ்ஸியை பொறுத்தவரை 2007ம் ஆண்டு தொடக்கம் 2012 வரை இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுவருகிறார். 2007இல் மூன்றாம் இடத்தினையும் 2008இல் விருதினை கிறிஸ்டியானோ பெற்றுக்கொள்ள இரண்டாம் இடத்தினையும் பெற்றார். அதன்பின்பு அதாவது 2009 தொடக்கம் 2011ம் ஆண்டுவரையான தொடர்ச்சியான மூன்று வருட விருதுகளையும் வென்று நெதர்லாந்தின் "ஜொஹான் குரூயி, மார்கோ வான் பஸ்டன் " இத்தாலியின் மிச்சேல் பிளாட்டினி ஆகியோருடன் மூன்று தடவை இந்த விருதை வென்றவர்கள் என்ற பட்டியலில் இணைந்தார். இவர்களில் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிளாட்டினி ஆகியோர் மாத்திரமே தொடர்ந்து மூன்று தடவைகள் இந்த விருதினை வென்றவர்கள் என்ற பெருமையை பெறுகிறார்கள். இன்று மெஸ்ஸி இந்த விருதினை பெற்றால் தொடர்ச்சியாக நான்கு தடவை இந்த விருதை வென்ற ஒரே வீரர் என்ற தனிப்பட்ட சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
சரி இந்த இந்த விருதிற்கான காற்று யார் பக்கம் அடிக்கிறது என்று பார்க்கலாம்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் இந்த விருதிற்கு பொருத்தமானவர் என்று ரியல் மட்ரிட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜொஸ் மொரின்ஹோ தெரிவித்துள்ள நிலையில், இந்த விருதிற்கு தான் தான் பொருத்தமானவர் என்று ரொனால்டோவும் கூறியிருக்கிறார். போர்த்துக்கல் அணியின் தலைவராக இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் இந்த விருதிற்காக வாக்களிக்க முடியும். இந்த நிலையில் தனது ஓட்டு தனக்கே என்று கூறியிருக்கும் கிறிஸ்டியானோவுக்கான வாய்ப்பு எப்படி இருகிறது?
கடந்த பருவகாலத்தில் லா லீகா கிண்ணத்தை கைப்பற்றிய ரியல் மட்ரிட் அணியில் ஓர் முக்கிய வீரராகவும், அணி கிண்ணம் வெல்வதற்கு பெரும்பங்கினை ஆற்றிய ஒரு வீரராகவும் இருக்கும் கிறிஸ்டியானோவால் இந்த வருடம் விருதினை வெல்வதில் பலத்த சிக்கல் இருக்கின்றது. மிகப்பெரிய தடைக்கல் எதுவென்றால் அது மெஸ்ஸியாகத்தான் இருக்க முடியும். கடந்த பருவகாலத்தில் 60 கோல்கள் மற்றும் 13 அஸிட்டுக்களை செய்திருக்கும் கிறிஸ்டியானோவா அல்லது இரண்டு சாதனைகள் அடங்கலாக 73 கோல்கள் 29 அஸிட்டுகள் செய்திருக்கும் மெஸ்ஸியா என்ற கேள்வி தெரிவுக்குழுவிற்கு வந்தால் தெரிவாகப்போவது மெஸ்ஸியாகத்தான் இருக்க முடியும்.
மெஸ்ஸியின் தனிநபர் சாதனைகளுக்கு மத்தியில் ரொனால்டோவின் லாலீகா கிண்ணம் பெற்றுகொடுத்த ஆட்டம் அடிபட்டுப்போனால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை. ரியல் மட்ரிட் லாலீகா கிண்ணம் வெல்வதற்கு ரொனால்டோ பங்காற்றியதை போன்றே பார்சிலோனா கோபா டில் ரே வெல்வதற்கு மெஸ்ஸியும் பெரும்பங்காற்றியுள்ளார்.
அத்தோடு இந்த விருதிற்கான இறுதிக்கட்ட வாக்கெடுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரமான கடந்த டிசெம்பர் மாதத்தின் போது உதைபந்தாட்ட உலகில் இருந்து வந்த 40 வருட சாதனையான முல்லரின் "ஒரு ஆண்டில் 85 கோல்கள்" என்ற சாதனையை 2012 கலண்டர் ஆண்டில் 91 கோல்கள் அடித்து முறியடித்து புது சாதனையை நிலைநாட்டியிருந்தார் மெஸ்ஸி. இந்த சாதனை அலை அனைத்து உதைபந்தாட்ட ஜாம்பவான்கள், பத்திரிக்கை மற்றும் அனைத்து ஊடகங்களில் புருவங்களையும் உயர்த்த வைத்தது. எனவே குறிப்பிட்ட அந்த நேரத்தில் வாக்களிக்க தகுதியான ஊடகங்கள் மற்றும் உதைபந்தாட பிரபலங்கள் அணியின் தலைவரளின் வாக்கு மெஸ்ஸியின் வாக்கு வங்கிக்கு சென்று சேர்ந்திருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம்.
பலூன் டி ஓர் குறித்து கருத்து தெரிவித்த பிரபலங்களில் ஜொஸ் மொரின்ஹோ, ரொனால்டோ, ஸிலாற்றன் இப்ரஹிமோவிச் தவிர்ந்த மற்ற அனைவரும் இந்த வருடத்திற்கான விருதினை மெஸ்ஸி வெல்வார் என்றே கூறியிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ரியல் மட்ரிட் அணியின் முன்னாள் வீரரும் பிரேசிலின் நட்சத்திரமுமான ரொனால்டோ லூயிஸ் " உதைபந்தாட்டத்தை புதிய ஒரு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் மெஸ்ஸி தான் இந்த விருதுக்கு தகுதியானவர்" என்று புகழாரம் சூட்டியுளார். மெஸ்ஸியை சிபாரிசு செய்யும் பிரபலங்கள் பட்டியலில் முன்னால் உதைபந்தாட்ட ஜாம்பவானளான பிரேஸ்லின் பீலே, ஆர்ஜென்டீனாவின் மரடோனா , ஜேர்மனியின் முல்லர் பிரேஸிலின் ரொனால்டினோ ஆகியோரும் அடங்குவர். இந்த அனைவரும் இந்த விருதிற்காக வாக்களிக்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மெஸ்ஸி வெல்வார் என்று பரவலாக கூறப்பட்டு நம்பப்படுகின்ற போதிலும் சக வீரரான இனியஸ்டா ரூபத்தில் ஒரு ஆப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் 2012ன் ஐரோப்பாவின் சிறந்த வீரர் விருதிற்காக இதே மூவர் சிபாரிசு செய்யப்பட்டிருந்த போது மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை பின் தள்ளி விட்டு விருதினை தட்டிச்சென்றவர் இனியஸ்டா. அதற்கான பிரதான காரணம் ஸ்பெயின் அணி 2012இல் யூரோ கிண்ணத்தை கைப்பற்ற இனியஸ்டாவின் பங்கு அளப்பெரியதாக இருந்ததேயாகும். 'இந்த வருடத்திற்கான பலூன் டி ஓர் விருது இனியஸ்டாவுக்கு கிடைத்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் " என்று லியோனல் மெஸ்ஸியும் தனது கருத்தை இனியஸ்டாவுகு சார்பாக தெரிவித்திருக்கின்றார். ஆர்ஜன்டீனாவின் தலைவராக தனது வாக்கு இனியஸ்டாவிற்கே என்றும் மெஸ்ஸி மேலும் கூறியிருக்கின்றார்.
சிறந்த ஐரோப்பிய வீரருக்கான விருதில் ஐரோப்பா கிண்ணத்தின் செல்வாக்கு மிக அதிகமாக இருந்தபடியால் அந்த விருதுக்கான முழுப்பெருமையும் இனியஸ்டாவுக்கே போய் சேர வேண்டும். உலகின் தலை சிறந்த வீரர் என்று வருகின்ற போது என்னை பொறுத்தவரை கடந்த ஆண்டு சாதனை மேல் சாதனை செய்த லியோனல் மெஸ்ஸி தான் அது. எந்து வாக்கு கணக்கில் கொள்ளப்படாவிட்டாலும் என் வாக்கு மெஸிக்கு தான்.
இன்றைய விருது முடிவு இப்படி இருக்க வாய்ப்பு அதிகம்.
3 |
2 |
WINNER |
நல்ல அலசல் ... முடிவை பார்ப்போம்
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி..
Deleteஇன்று
ReplyDelete"பாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )":
வந்துடுறேன்...
Deleteதம்பி எனக்கு சச்சின் டெண்டுல்கருக்கு குடுகலன்னு தோணுது ஹிஹி
ReplyDeleteஅவருக்கு குடுத்த எம்.பி பதவி போதாதா?
Delete"போனா போகட்டும் போடா.."
ReplyDelete"இந்த பலூன் டி ஆர் நாலு வாங்குறதுல்லாம் ஒரு பொழப்பா?? 3 வாட்டி வாங்கின வான் பாஸ்டன், பிளாட்டினி.. இவனுங்களை யாரு கணக்கெடுத்தா.. இன்னமும் ஃபுட்பாலின் மந்திரச்சொற்களாக விளங்கும் பேலே, மரடோனாவைத்தானே ஞாபகம் வைச்சிருக்காங்க!!"
"FIFA கமிட்டியே பார்சிலோனாவுக்கு பக்கச்சார்பானதுதான்.. இதுல அவங்க அவார்டுக்குன்னு தனி வேல்யூ இருக்கா?"
"ஃபர்ஸ்டுல யாரு முன்னால போறாங்கன்னு முக்கியமில்லை. லாஸ்டுல யாரு பர்ஸ்டு வர்றாங்கறதுதான் முக்கியம்!"
"Striker positionல தொடர்ச்சியா (அதுவும் villaங்கற கோல் மெஷின் இல்லாததால்) அதிக மேட்சுகள் விளையாடின பயலால தானே, பென்ஸமாவையும், ஹிக்வாயினையும் முன்னுக்கு விட்டு அவங்களுக்கு பின்னால பக்கபலமா வெளையாடுற உயர்ந்த உள்ளத்தைக் காட்டிலும் அதிக கோல் போட முடியும்!?"
"இதே மாதிரி தானே 2010ல எங்க அண்ணன் மெஸ்ஸியை வுட கூட கோல் போட்டு, பிச்சிச்சி கோப்பையும் வாங்கி வைச்சுக்கினார்.. அப்போ அவரை ஃபைனல் மூணுல கூட போடலியே இந்த உலகம்??".........
... இப்படியெல்லாம் எழுதிவைச்சுட்டு போனா ரியாக்ஷன் எப்படியிருக்கும்னு யோசிச்சு பார்த்தேன்.. ச்சும்மா!
Deleteநானும் அக்டோபர் வரைக்கும் அண்ணனுக்குத்தான் கப்புன்னு கன்ஃபார்மா இருந்தேன்.. புது சீசன்ல மட்ரிட் வாங்கிக் கட்டுவதைப் பார்த்ததும் ஐடியாவை மூட்டை கட்ட வேண்டியதாயிவிட்டது! மெஸ்ஸி கோப்பைக்கு தகுதியானவரே!!
*பி.கு - பொறாமைன்னு ஒண்ணும் இல்லை.. ஆனா மெஸ்ஸி 4 கோப்பை வாங்கியிருக்கப்படாது.. அதுவும் முக்கியமா 2010 கோப்பை ஸ்னைடரைத் தவிர யாரு கையலயும் கொடுத்தேயிருக்கக்கூடாது.. ஃபீபா முன்கள வீரர்களை மட்டுமே கவனத்தில் கொள்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.. குறிப்பாக கோல் எண்ணிக்கையையும் தாண்டி மொத்தப் பந்துப் பரிமாற்றத்தில், தடுப்பில் அவர்களது influence எந்த அளவு வேல்யூவானது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்! ஏதோ அத்தி பூத்தாற் போல கனவெராவின் கையில் விருது 2006ல் வந்து சேர்ந்தது.. அதுவும் தங்களை யாரும் தப்பா நெனைச்சுக்க கூடாதேங்கற மாதிரித்தான் இருந்திச்சு..
மட்ரிட் என்பதால் சொல்லலை.. ஆனால் லாலீகா, சூப்பர்கப், யுரோ கப் என்று மூன்று முக்கிய போட்டிகளின் வெற்றிக்கு அணியை தலைமை தாங்கி சென்றதோடு வருடம் முழுதும் consistentஆக விளையாடிய கஸியஸுக்கு, இனியெஸ்டாவையோ, ரொனால்டோவையோ தாண்டி நாமினேஷன் கொடுத்திருக்கலாம்!! ஃபீபா ஸ்பெயின் பக்கமே பார்த்துக் கொண்டிருப்பதையும் நிறுத்திக் கொண்டால் நல்லது!!
///"இதே மாதிரி தானே 2010ல எங்க அண்ணன் மெஸ்ஸியை வுட கூட கோல் போட்டு, பிச்சிச்சி கோப்பையும் வாங்கி வைச்சுக்கினார்.. அப்போ அவரை ஃபைனல் மூணுல கூட போடலியே இந்த உலகம்??".........////
Deleteநீதி : கோல்களையும் தாண்டி , ஆட்ட நுணுக்கம், மற்றும் பிளே மேக்கிங்கும் கணக்கில் கொள்ளப்படுகிறது.
///குறிப்பாக கோல் எண்ணிக்கையையும் தாண்டி மொத்தப் பந்துப் பரிமாற்றத்தில், தடுப்பில் அவர்களது influence எந்த அளவு வேல்யூவானது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்///
Deleteஇந்த கருத்தை ஏற்கிறேன் , ஆனால் மெஸ்ஸியின் விடையத்தில் கடந்தவருடம் அவர் போட்ட கோல்களை விடு நண்பா.. பண்ணிய அஸிட்டுகள் அஸிட்மன்னர்களான சாபி, இனியெஸ்டா கூட பண்ணாதது.
////ஃபீபா முன்கள வீரர்களை மட்டுமே கவனத்தில் கொள்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.///
என்ற உனது வாதம் சரி.. ஆனால் மெஸ்ஸியை பொறுத்தவரை அவரது ஆட்டம் ஒரு ஸ்ரைக்கருக்கு மேலாக பிளே மேக்கராகவும் இருந்துவருகிறார். மெஸ்ஸி தனியே ஒரு ஸ்ரைக்கர் மட்டுமே என்ற வட்டத்திற்குள் உட்படமாட்டார்.
/// கஸியஸுக்கு, இனியெஸ்டாவையோ, ரொனால்டோவையோ தாண்டி நாமினேஷன் கொடுத்திருக்கலாம்!!////
நான் ஆரம்பத்தில் மெஸ்ஸி, கசியாஸ் இனியெஸ்டாதான் நொமினிஸ் ஆக வருவார்கள் என்று நினைத்தேன்.ஜஸ்டு மிஸ்.... அப்புறம் இந்த விருது தனியே பீஃபா மட்டும் முடிவெடுப்பதல்ல, இதனை வாக்கெடுப்புகள் தான் தீர்மானிக்கின்றன. வாக்களிப்போர் பத்திரிக்கையாளர்கள், அணிகளின் தலைவர்கள், மற்றும் பலர்
பதிவில் விடுபட்டுப் போன அண்ணனின் சாதனைகள்-
ReplyDeleteஅணியுடன் -
* சூப்பர் கப் வெற்றியாளன்!!
* லாலீகா வரலாற்றிலேயே 100 பாயிண்டுகளை எட்டிப் பிடித்த முதலாவது, ஓரே அணியின் முக்கிய மெம்பர்!!
* லாலீகா வரலாற்றிலேயே ஒரே சீசனில் அதிகளவு கோல்களைக் (121) குவித்த அணியின் attackல் முக்கிய மெம்பர்!!
தனிநபர் -
* லாலீகா வரலாற்றில் ஒரே சீசனில் லீகில் விளையாடிய ஏனைய எல்லா அணிகளுக்கெதிராகவும் குறைந்த பட்சம் தலா ஒரு கோலாவது அடித்த முதல் வீரர்!!
* தொடர்ச்சியாக அதிகளவு எல் கிளாசிக்கோ போட்டிகளில் (6 போட்டிகளில்) கோலடித்த வீரர்!!! (இது ஆளானப்பட்ட மெஸ்ஸி மாமாவுக்கே கடைசிவரை பிடுங்க முடியாமல் போகும் ஆணி என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் மை லார்ட்!)
அத்த எப்புடி பாஸ் நீங்க முடிவு பண்னலாம்? எங்களுக்கு இப்பதான் மாம்ஸ் 25 வயசு ஆகுது, ச்சும்மா பறந்து பறந்து அடிப்போம்ல.....
Deleteஅப்புறம் புடுங்க முடியாத ஆணி என்று நினைத்த ஆண்டில் அதிக கோல்கள், சம்பியன்ஸ் கிண்னத்தில் அதிக கோல்கள், எல்கிளாசிக்கோவில் அதிக கோல்கள் என்ற ஆணிகள் கொஞ்சம் கொஞ்சமாக புடுங்கப்படுகின்றன என்பதனை அன்புடன் அறியத்தருகிறோம்.
நான் 5 அல்லது ஆறாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே பார்சலோனாவின் ரசிகன்..அப்ப எங்க ஸ்கில் மன்னன் ரொனால்டிநோவின் ஆட்டத்துக்கு தீவிர ரசிகனானேன்..பின்னால வந்த மெஸ்ஸி என்னை இந்த அளவுக்கு இம்ப்ரஸ் பண்ணுவாருனு நெனைக்கல நண்பா..அந்த பயள நிற்ப்பாட்ட முடியல...ரொனால்டோ நல்ல வீரர்..மெஸ்ஸி விளையாடுற டைமில் இருக்குறதாலதான் அவருக்கு சரியான அளவில் பெருமைகள் சேர்லயோ என்ற பேச்சு உலகம் முழுவதும் இருக்கதான் செய்யுது..
ReplyDeleteஎப்படியோ மெஸ்ஸி தெய்ச்சாச்சு...இன்னிக்கு மலாகாவும் பார்சாவும் மோதுது நண்பா...போன கேம்ல விட்டது புடிப்பாங்களானு பார்ப்போம்.