உதைபந்து

Friday, October 14, 2011

ஜேம்ஸ் கமறூன் படத்தில் டாக்டர் விஜய் !!! ந‌டந்தது என்ன?
டாக்டர் விஜய் ஜெயம் ராஜா இயக்கத்தில் "அசாசின் கிரீட் " என்ற படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்த விடயம். இந்த நிலையில் அண்ணனின் அசாசின் படத்தைப் பற்றிய செய்திகள் , படம் ஆரம்பித்த நாளிலிருந்து பரபரப்பை கிளப்பி வருகின்றது. சுறா, குருவி, கொக்கு, காடை, கவுதாரி, கோட்டான், கோழி என பாக்ஸ் ஆபீஸ் ஹிட்களை கொடுத்த அண்ணனின் அடுத்த அதிரடி தான் இந்த "அசாசின் கிரீட்".

ஜேம்ஸ் கமரூனின் அவதார் -2 படத்தை விட எதிபார்ப்பை கிளறியிருக்கும் இந்த படம், தீபத்திருநாளன்று வருவதில் எழுந்துள்ள சிக்கல் , இதய பலகீனம் உள்ளோர் தியேட்டருக்கு போகக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், எத்தனையோ சாகச விரும்பிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பஞ்சு ட‌யலாக் பேசியே பத்துப் பேரைக் கொல்வது, பக்கத்து வீட்டில் இழவே விழுந்தாலும் குத்துப் பாட்டு ஆடுவது, கானா பாட்டில் மட்டுமல்லாமல் டூயட் பாட்டிலும் டான்ஸ் மாஸ்ரருடன் தரையில் விழுந்து (கோட் சூட் சகிதம்) ஆடுவது என்று , தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத எத்தனையோ புதிய விட‌யங்களை டாக்டர். விஜய் இந்த படத்தில் முயற்சித்திருப்பதாக விக்கிலீக்ஸில் செய்தி கசிந்துள்ளது.இறப்பதற்கு முன்னம் பார்க்க வேண்டிய பத்து படங்கள் பட்டியலில் இடம்பெறப்போகும் அண்ணனின் இந்த "அசாசின் கிரீட்" திரைப்படம் ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை சர்ச்சை தான்.

பட அறிவிப்பு வெளியாகி சில நாட்களில் அண்ணனின் "அசாசின்" திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான "வேலாயுதம்" படத்தின் கொப்பி என்று , வழமைபோலவே எவனோ ஒரு மொக்கை பதிவர் எழுதிவிட துடிதுடித்து போனார் படத்தின் இயக்குனர் ராஜா. இதுவரை அவர் கொடுத்த ஹிட் படங்கள் எல்லாம் கொப்பி படங்களாகவோ, பிற மொழி தழுவல்களாகவோ இருக்கவில்லை. அப்படியிருக்க இந்த படம் மட்டும் எப்படி வேலாயுதம் படத்தின் தழுவலாக இருக்க முடியும்? அது போக இந்த படத்தின் கதையை தான் முன் பள்ளி பருவத்திலேயே தனது நண்பர்களுக்கு கூறியிருந்ததாக சத்தியம் செய்திருக்கிறார் இயக்குனர் ராஜா.அது போக இந்த படத்தின் கதை உலக சினிமாவுக்கு புதுசு என்றும், விஜய் தனது வாழ்நாள் சாதனைப் படம் என்று சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கும் என்றார் இயக்குனர் ராஜா. டாக்டர் விஜய் இதுவரை நடித்திராத கதையாக இது இருக்கும்..... கதைச் சுருக்கம் இதுதான்

 "ஒரு அழகிய கிராமம் ஒன்றில் தனது தாய், தந்தை, தங்கையுடன் வாழ்ந்து வருகின்றார் டாக்டர்.விஜய். ஒரு குடும்ப பாட்டு உண்டு நிச்சயமாக. திருவிழா, சில்மிஷம் என தமிழன் தன் வாழ்நாளில் கண்டிராத அற்புதமான விடயங்களை சொல்கிறது படம். இடையில் இரண்டு ஹீரோயின்களோடு ரொமான்ஸ், டுயட் பாட்டு என்று "மெல் கிப்ஸ்சனே" பார்த்து பாடம் படிக்க வேண்டிய வகையில் விரிகிறது திரைக்கதை. இடைவேளை வரை எங்கோ ஒரு சந்தியில் மப்படித்து விட்டு மயக்கத்தில் கிடந்த வில்லன் கூட்டம் (மூன்று பிரதான வில்லன்கள் சகா முந்நூறு அடியாட்கள்) விடிந்தும் தாங்கள் மப்பில் கிடப்பதை உணர்ந்து நேரம் பார்ப்பதற்கு கடிகாரத்தை தேடினால் காணோம்.என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க , அந்த வழியால் அண்ணனின் தங்கை போகிறார், அப்போது ஒரு வில்லன் "ஏம்மா நேரம் என்ன"?  என்று கேட்க, ஒரு வில்லன் தன்னிடம் நேரம் கேட்டுவிட்டானே என்ற அவமானத்தில் டாக்டர் விஜய் இன் தங்கை துடிக்க, இதைப் பார்த்து பொறுக்க முடியாத ஹீரோவின் அப்பாவும் , அம்மாவும் ஓட்டை சிரட்டையில் தண்ணி ஊற்றி தற்கொலை செய்கிறார்கள். உடனே அவர்களுக்கு கொள்ளியை வைத்து விட்டு வேட்டைக்கு கிளம்புகிறார் அண்ணன்.

நேரே வில்லனிடம் போய் "உன்னோட கடிகாரம் காணாம போனது உன்னோட கெட்ட நேரம். அப்போ என் தங்கசிட்ட நீ நேரம் கேட்டது என்னோட நல்ல நேரம்டா"ன்னு பஞ்ச் ஒன்றை அடிக்க என்ன சொல்கிறான் என்று புரிய முயற்சி செய்து, மூளை குழம்பி  வில்லன் நம்பர் -1 செத்துப் போகிறான். அடுத்த டயலாக் பேசுவதற்கு முன்னமே தங்களது களுத்தை அறுத்துக் கொண்டு சாகிறார்கள் அடியாட்கள் நூறு பேர். "நல்ல வேளை நீ செத்துப் போய்ட்ட, நீ மட்டும் உயிரோட இருந்திருந்தா உன்ன கொண்ணுருப்பன்டா" என அண்ணன் மறுபடி பஞ்ச் அடிக்கும் நேரத்தில் ரசிகர்கள் யாரும் கைகளில் கூரிய ஆயுதங்களை வைத்திருக வேண்டாம் என நேட்டோ கூட்டு படைகளின் தளபதி எச்சரித்துள்ளார்.இப்படி பஞ்ச் "கள்" அடித்தே அத்தனை பேரையும் பலிவாங்கும் ஹீரோ (பார்வையாளர்கள் உட்பட) இறுதிகட்டத்தில், தான் தூக்கிய அருவாளுக்கு வேலை இல்லாமல், பேசியே அனைவரையும் கொன்று விட்ட படியால் இப்படி ஒரு பஞ்ச் அடிகிறார். "ஆரம்பத்திலேர்ந்து அருவா கொண்டு அலையிறவன் நல்லவனா இருக்கலாம், இடையில அருவா தூகின நான் கெட்டவண்டா.. என்று மீண்டும் பிணத்தைப் பார்த்து பஞ்ச் அடிக்க, வில்லனின் கூட இருக்கும் வளர்ப்பு நாயும் வெறி பிடித்து ஓடுகிறது". அப்போது அங்கு வரும் ஹீரோயின்கள் தலைவரை கட்டிப்பிடித்து ஆட இறாந்து கிடந்த வில்லன்கள் எல்லாம் கிராபிக்ஸ் மூலம் மம்மியாகி ஆடுகிறார்கள். "தி எண்ட்" போடு படம் முடிகின்றது.இந்த மாதிரியான ஒரு புத்தம் புது கதையுடன் தான் களம் கண்டிருக்கிறார்கள் அண்ணனும், இயக்குனர் ராஜாவும்.

படப்பிடிப்பின் போது நடிகைகளான ஹன்சிகா மற்றும் ஜெனிலியா ஆகியோர் தங்கள் உள் பாவாடை கிழியும் வரை சண்டை போட்டதாக பேட்டிகளில் தெரிவித்திருந்தார் இயக்குனர் ராஜா. இது, மொக்கை படத்தை பிரபல்ய படுத்தும் முயற்சி என்று சில குரோதம் கொண்ட இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனாலும் தனது கூற்றில் இருந்து மாறாத இயக்குனர் "ஜெனிலியா, ஹன்சிகாவின் தொடையில் பிராண்டியதும், ஹன்சிகா , ஜினிலியாவின் முதுகில் கடித்ததும் உண்மை என்று தந்து பெரியம்மாவின் மேல் சத்தியம் செய்தார்.பின்பு பேட்டியளித்த ஹன்சிகா, மற்று ஜெனிலியா அவ்வாறு எந்த சம்பவங்களும் இடம் பெறவில்லையெனவும், தாங்கள் படப் பிடிப்பில் மிகுந்த ஒற்றுமையாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். இதனால் இயக்குனர் ராஜா மப்பில் உளறினாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

அது போக படத்தில் மொத்தம் முப்பது காமடியன்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகையில் அண்ணன் விஜய் யும் உள்ளடக்கமா என்பது "சஸ்பென்ஸ்சாம்". படம் நடிக்கிறேன் பேர்வழி என்று அண்ணன் சந்தானதையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு காமடி பண்ணியிருப்பதை நாசாவின் விண்வெளி ஓடம் ஒன்று உறுதி செய்துள்ளது. அத்துடன் கடந்த வார இணையத்தள செய்திகளின் படி படப்பிடிப்பில்  டாக்டர்.விஜய் க்கு ஆடைகள் பற்றாகுறையாம் என்று படித்தேன். எனதருமை இந்திய பதிவர்களிடம் நான் கேட்பது என்னவெனில் ஆடைக் களஞ்சியமான தமிழ்நாட்டில் , அண்ணனின் தொடையில் கட்ட ஒரு கர்ச்சீப்புக்கும், களுத்தில் சொருக ஒரு பெட் சீட்டுக்கும், இடுப்பில் கட்ட ஒரு சால்வைக்குமா பஞ்சமாகிவிட்டது? சோ சாட்... சோ சாட்...தீபத்திருநாளன்று "அசாசின் கிரீட்" வெளிவராமல் பம்முவதற்கு காரணம், சூர்யாவின் ஏழாம் அறிவின் ஆதிக்கம் என்கிறார்கள் சிலர். ஹிம்.... ஆணானப் பட்ட சுப்பர் ஸ்ராரின் படமான ச‌ந்திரமுகியுடன், தனது சச்சினை சேஸுக்கு விட்டவர்ரா எங்க டாக்டர். அவர் இந்த சுண்டைக்காய் சூர்யாவிற்கு பயப்படுவதா? நெவர்..... தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தனது அப்பவை வைத்து காய் நகர்த்தி தனது படத்தை வெளியிடுவார் என்று கூற முடியாது. ஏனென்றால் இதுவரை கால தனது சினிமா பயணத்தில் தனது அப்பாவின் மூச்சு காத்து கூட படாமல், சுயமாக உயர்ந்தவர் டாக்டர்.

ஆக தீபாவ‌ளியன்றோ , அல்லது அதற்கு பின்னரான சில நாட்களிலோ உலக சினிமா இதுவரை கண்டிராத ஒரு கலைப் படைப்பை காண தயாராகின்றது. அட நான் இன்னமு மேட்டருக்கு வரவில்லையோ.....??????தற்போது அவதார் பாகம் இரண்டை எடுத்துவரும் ஹாலிவூட்டின் பிரம்மா ஜேம்ஸ் கமரூன் , அவதார் பாகம் மூன்று ஆரம்பிப்பதற்கு இடையில் ஒரு திரைப் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த கதை தெற்காசிய நாடுகளை மையமாக கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த படத்தில் நடிக்க பிரபல நடிகர் ஜாக்கி சானை சம்மதிக்க வைத்துவிட்ட கமரூனுக்கு இரண்டு, தெற்காசிய நாட்டு நடிகர்கள் தேவைப்படவே அவரது பார்வை இந்தியா மேல் விழுந்திருகிறது. ஷாருக் கான் மற்றும், நம்ம டாக்டர் விஜய் தான் கமரூனின் இலக்குகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன் இந்தியாவிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட கம்ரூன் டாக்டரை சந்தித்திருப்பது நல்ல செய்தியாகவே இருக்க முடியும். குருவி படத்தில் டாக்டர் இரண்டு கட்டடங்களுக்கு இடையில் எந்தவித பிடிமானமும் இன்றி பத்து நிமிடங்கள் பறந்து நடித்த நடிப்பாலேயே தான் கவரப்பட்டதாக கம்ரூன் தெரிவித்தார். தன‌து அவதார் பத்திரங்கள் கூட செய்யமுடியாத சாகசம் அது என மேலும் தெரிவித்தார். எனக்கெனவோ ஷாருக்கனை தூகிவிட்டு டாக்டரையும் எங்கள் தலைவர் "பவர் ஸ்ராரையும் " போடலாம் என்று நினைக்கின்றேன்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் விஜய் மற்றும் ஜேம்ஸ் கம்ரூன்


டிஸ்கி:- "உண்மையென்று நீங்கள் நினைக்கும் அத்தனையும் உண்மை, மொக்கை என் நீங்கள் நினைக்கும் அத்தனையும் மொக்கை, மொக்கை மட்டுமே....."10 comments:

 1. அப்போ அசாசின் கிரீட், நாகர்ஜுனாவோட ஆசாத் ரீமேக் இல்லையா? வேலாயுதம் ரீமேக்கா?

  ReplyDelete
 2. @dr.Butti paul
  என்னதிது சின்ன புள்ள தனமான கேள்வி..... தெரியாத உங்களுக்கு? அட என்னமோ பண்ணுறாங்க .... நமக்கு எதுக்குப்பா? எங்க தலைவன் சந்தானத்துக்காக நான் "அசாசின் கிரிட்" பார்க்க தியேட்டர் போவேன்.. நீங்க?

  ReplyDelete
 3. டைட்டில்ல குற்றம் நடந்தது என்ன? போட்டிருக்கலாம்.. நல்ல அலசல்

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்
  எனது பதிவினை ,தங்களை போன்ற தமிழ் பதிவுலக ஜாம்பவான்கள் பார்ப்பது எனக்கு பெரும் சாதனை. அது போக தங்களை போல சூப்பர் டைட்டில் வைக்க என்னால முடியாது சி.பி சார்..... நாங்க இன்னும் சின்ன பசங்க...

  ReplyDelete
 5. அண்ணே.... டாகுடர வெச்சே டாகுடர் ஆகிடுவீங்க போல.....?

  ReplyDelete
 6. தொடர்ந்து எழுதுங்க... வாழ்த்துக்கள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...