உதைபந்து

Monday, October 10, 2011

மானத் தமிழரும் Mastercard உம்...!

இந்த பதிவின் தலைப்பை பார்த்ததுமே , அனேகமான மக்கள் ஒரேயடியாக சாடுவது போல நான் ஒன்றும் புலம் பெயர் தமிழர்களை சாடிவிட போகிறேன் என்று கல் எடுக்க வேண்டாம். இலங்கையின் அரசியல் மாற்றத்திலும் சரி பொருளாதார மாற்றத்திலும் சரி புலம்பெயர் தமிழர்களின் பங்கு கணிசமானது. 




ஆனாலும் விடுமுறையில் வரும் சில புலம்பெயர் தமிழர்கள் அடிக்கும் காமடிகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அத்தோடு ஏற்கனவே மானாடவும் மயிலாடவும் பார்த்து ரம்பா அக்கா போலவும், நமீதா மச்சி போலவும் ஆடை அணிய ஆரம்பித்திருக்கும் எம் தமிழ்க் குல கொழுந்துகளை தூண்டி விடும் விதமாக , தாங்களும் தங்கள் பிள்ளைகளும் (ஒரு சிலர்) அரைகுறை ஆடைகள் சகிதம் நகர்வலம் வருவது நரகாம்சமாக இருக்கிறது.

அவர்கள் கேட்கலாம் "நாங்கள் எப்படி உடுத்த வேணும் எண்டு எங்களுக்கு தெரியும், உங்கட வேலய பாருங்கோ எண்டு". அப்படியானோர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் கலாசாரம் சீரழியுது, இந்த இலங்கை தமிழ் பெட்டையள் இப்ப சரியில்ல என்று குறைசொல்ல வேண்டாமே. (இது எப்படி இருக்கு எண்டா மகள் நீலாம்பரி பெருமாள் மலையாள படங்களில்  "ஜல்சா" பண்ணிக்கொண்டு இருக்க யாழ்ப்பாண பெண்களின் கலாசாரம் குறித்து கவலைப் படுகின்ற வரத ராஜ பெருமாளது நிலை போன்றது)

நீலாம்பரி பெருமாள்
அது போக வெளிநாடுகளில் நீங்கள் தான் ஏதோ கலாசார காவலர்கள் போல ஆர்ப்பாட்டங்கள் செய்யவேண்டாமே! "கற்றபின் அதன் படி ஒழுகுக" போல் சொல்வது போல் ஒழுக வேண்டாமா? இருந்தும் சிலர் உண்மையிலேயே கலாசாரத்தை பற்றி கவலையும் படுகிறார்கள். எனக்கு தெரிந்து ஒரு குடும்பம் "சுவிஸ்" இல் இருந்து அடிக்கடி இலங்கைக்கு விடுமுறையில் வருவார்கள். அவர்கள் சுவிஸில் இருக்கும் போது அனேகமாக "ஜீன்ஸ், டீ-சேர்ட்" தான் அணிவார்கள். ஆனால் இலங்கைக்கு வந்ததும் போகும் வரை பாவாடை, சட்டை தான். விடலை பருவத்தில் இருக்கும் மகள் கூட கணுக்கால் வரை பாவாடை அணிந்து ஆச்சரிய படுத்துவார்.  நான் ஒரு தடவை அவரிடம் "இது போல் ஆடை அணிந்து பழக்கமா? இதை ஒரு நாகரீக குறைவாக உணர்கிறீர்களா"  என்று. அந்த 16 வயது பெண்ணின் பதில் பக்குவமானது. "இங்கு இவ்வாறு அணியாமல் , அரை குறையாக உடுத்துவது தான் நாகரீக குறைவு". இந்த 16 இன் புத்தி சில 61 களுக்கு கூட வருவது கிடையாது.


அதுக்காக நான் உங்களை ஒளவையார் போல ஆடை உடுத்த சொல்லவில்லை. உங்கள் மார்புகளை ஃபிளாட் போட்டு விற்பதையாவது நிறுத்தலாமே.! தொப்புளில் நீங்கள் கடுக்கண் குத்தியிருந்தால் அதை உங்கள் கணவருக்கு மட்டும் காட்டினால் சந்தோஷ படுவார். எங்களுக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. அத்தோடு "நைட்டி" என்பது இரவில் போட்டு உறங்குவது. அதை வீதிகளில் போட்டு அலைவதை நீங்கள் நாகரீகம் என்றால், மன்னித்து கொள்ளுங்கள் நான் இன்னமும் கூர்ப்பே அடையவில்லை!

அடுத்தது இந்த வேற்று மொழி மோகம்! (இது பற்றி நிச்சயம் ஒரு தனி பதிவுக்கு தேவை இருக்கின்றது). நீங்கள் எங்கு வாழினும் தமிழர்கள். அந்தந்த நாட்டு மொழிகள் தமிழ் தெரியாத ஒருவனுடன் உரையாட மட்டுமே. அதை ஏன் நீங்கள் இங்கு வந்தும் , எம்மோடு பேசும் போதும் தொடர்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் தங்களுக்குள்ளேயே வேற்று மொழிகளில் உரையாட அனுமதிக்கிறீர்கள் அல்லது ஆசைப் படுகிறீர்கள்? இவ்வாறு நடந்து கொள்ளும் உங்களுக்கு ஏன் தனி நாடும்? , அதற்கான போராட்டங்களும்? 


எனது உறவுகளில் கூட இவ்வாறான மூளை சுகமில்லாததுகள் இருக்கின்றன. "அப்பம்மா ஸீ தெயா...." , "சே ஹலோ டூ அப்பப்பா.." என்று பிஞ்சு மனதுகளில் நஞ்சை விதைக்கும் இதுகளை காலிடுக்கில் சுட வேண்டாமா? (ஓவரா கடுப்பாகிறனோ?)

எனது உறவினர் சிலர் மலேசியா (கடல் மார்க்கமாய்)  மூலம் அவுஸ்ரேலியா சென்று ஒருவருடமும் ஆகவில்லை. "கிறிஸ்மஸ் தீவிலேயே " எட்டு மாதங்கள் இருந்தார்கள். இப்போது என்னவென்றால் கடைசி மகனுக்கு தமிழ் தெரியாதாம். 13 வயது மகனுக்கு தமிழ் மறக்கிறதாம். இதுகளை என்ன செய்வது ? எண்ணை கொப்பரையில் போட வேண்டாமா? (#####$$$***&^$% -கெட்டவார்த்தை தணிக்கை செய்யப்பட்டுள்ளது) 


எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் 17 வருடங்களின் பின்னர் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த வருடம் விடுமுறையில் வந்திருந்தார். அவரிடம் நான் உண்மையில் எதிர் பார்த்தது " திஸ் பிளேஸ் சோ ஹொட் யா.." , "நாங்க ஒன்லி பீட்சா பேர்கர் தான்", "அக்சுவலி றைஸ்ஸ நான் கண்டு ஃபிஃப்டீன் இயர்ஸ் ஆச்சு", "றூம்ல ஏசி இல்லயா". இதுகளை தான். ஆனால் நடந்ததோ எதிர்மாறு.  அவரது நடவடிக்கைகலள் கண்டு அதிர்ந்தே போனேன். ஒரு நாட்டுப் புற விவசாயின் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். வந்து நின்ற ஒரு மாதமும். அவரை பார்த்த பலர் சொன்னது இது தான், " 17 வருடம் வெளிநாட்டில் இருந்தீங்க எண்டு நம்ப முடியவில்லை, ரொம்ப எளிமையாக இருக்குறீர்கள்". புறப்படும் போது மறக்காமல் தனது இரண்டு வயது மகனுக்கு "தமிழ் அரிச்சுவடி" முதற்கொண்டு தமிழ் புத்தகங்களாய் வாங்கிச் சென்றார். 



அவர் இங்கிருந்த கால பகுதியில் தான் இது நிகழ்ந்தது இந்த காமடி....
     நானும் அந்த நண்பரும் தேனீர் குடிப்பதற்காக கடைத்தெருவுக்கு (மன்னார் நகரப்பகுதி) சென்றிருந்தோம். எனது அறிவுக்கு எட்டிய வரை மன்னாரில் இரண்டு பல்பொருள் அங்காடிகள் தவிர வேறு எதிலும் "கிரடிற் காட், வீசா காட்" மூலமாக பணம் செலுத்தும் வசதிகள் இல்லை. நாங்கள் போயிருந்தது நாளுக்கு சுமாராக ஆயிரம் ரூபா வியாபாரம் ஆகக்கூடிய ஒரு சிறிய கடை. 

அங்கு எங்களைத் தவிர வேறொரு புலம்பெயர் தமிழர் குடும்பம் ஒன்றும் இருந்து தேனீர் அருந்திக் கொண்டு இருந்தது. தேனீர் அருந்தி முடிந்ததும் கடைக்காரரை நோக்கி சென்ற அந்த குடும்பத்தின் தலைவர் என மதிக்கத்தக பெரியவர், "கான் யூ..... கான் யூ ப்ளீஸ்...." என்று இழுத்தார். அவரை கடைக்காரர் ஏதோ ஜந்துவைப் பார்ப்பது போல பார்த்தார். நானும் தான்! 


பின்பு அந்த கடைக்காரருக்கு ஆங்கிலம் விளங்காது எண்டு (கண்டுபிடிச்சிற்றாராம்) தெளிந்தவராய் (உண்மையில் அவர் ஆங்கிலம் பேச எத்தனித்தது எங்களுக்கு படம் காட்ட தான்.) தனது பையிலிருந்து பணத்தை எடுத்தவர் எங்களை பார்த்தவர் , ஏதோ நினைத்தவராய் தனது பண பையினுள் கைவிட்டு சில தகடுகளை எடுத்தார். (அத்தனையும் வீசா, டெபிற், கிரடிற் காட்டுக்கள்)  "எவளவு? நீங்க வீசா காட் எடுப்பியளா?" எனக்கு பகீர் என்றது. அந்த கடையின் முதலாளி மேசையில் இருந்தவை இவை தான் "பீடா தட்டு, ஒரு இனிப்பு போத்தல், சிகரட் பெட்டி". இவற்றில் எதை அவர் "காட் தேய்க்கின்ற இயந்திரமாக" நினைத்தாரோ எனக்கு இன்னமும் விளங்கவில்லை.

அதற்கு அந்த கடைக்காரரின் பதிலைக் கேட்க வேண்டுமே....! அந்த கடைக்காரரின் பேச்சு மொழி மட்டக்களப்பு பிரதேசச் சார்பானது. "யென்ன ஸார்...... எங்ட கடைய பாத்த ஒங்கலுக்கு வீசா காட் எடுக்கிர கட போலவா கிடக்கு..  சும்மா பகிடி விடாம காச தாங்க பொஸ்ஸா.... (சிரிக்கிறார்) நீங்க வெளிநாடு எண்டு உங்கட உடுப்ப பாக்கவே தெரியுது.இப்பிடி "காட்டை" காட்டி நிரூபிக்கணும் எண்டு இல்ல பொஸ்ஸா......" அந்த பெரியவரது மூக்கு உடைந்து விழுந்து எங்கோ தெறித்து ஓடியது. எனக்கு ஒரு நமட்டு சிரிப்பு தான் வந்தது.. ஆனாலும் ஏதோ ஒரு கொலைவெறி மேலிட பெரிதாய் "ஹா... ஹா..." என்று சிரித்து விட்டேன். எதற்கு இந்த வெட்டி பந்தா? வெளிநாட்டு வாழ்க்கை என்பது என்ன பி.எஸ்.சி யா? , எம்.கொம். மா? இஞ்ஞினியரிங்கா? பந்தா காட்டுவதற்கு?




இதை தவிர கூற முடியாத பல அட்டூழியங்கள்! இது போதாது என்று இங்குள்ளவர்கள் போடும் ஆட்டம் அப்பப்பா.... அதற்கு ஒரு தனி பதிவே வேண்டும்.

இங்கு நான் குறிப்பிட்டது 95% புலம் பெயர் தமிழர்களை பற்றித்தான், மிகுதியான் அந்த நல்வாழ்க்கை வாழும் 5% ற்குள் நீங்களோ , உங்கள் சொந்தங்களோ அடங்கினால், நீங்கள் நிம்மதியாக உறங்கலாம். ஏனென்றால்....

தமிழனின் கலைகள்
தலைவீழுமென்கில்....
தூக்கம் தொலைத்து
துரத்தி பிடிப்போம்
கலைகள் அழிக்கும் கள்வனை...

அப்படீங்கிறான் ஒரு கவிஞன். (ஹி ..... ஹி ... நான் தாங்க அது..) 
    


6 comments:

  1. come on Kisho.. add ur blog on indli & tamilmanam..

    ReplyDelete
  2. அன்பின் பீரிஸ்.. உங்கள் ஆதரவிற்கும் , பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி. இண்லியில் ஏற்கனவே பதிவு செய்து விட்டேன், தமிழ்மணத்தில் நிலுவையில் இருக்கின்றது. உங்கள் ஆதரவு தொடர்ந்தும் வேண்டும்

    ReplyDelete
  3. பொஸ்ஸா என்றால் என்ன ?

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ஊரில், மற்றும் இலங்கையின் பல பாகங்களில் "BOSS"என்ற ஆங்கில வார்த்தையை வர்த்தகர்கள் பொஸ்ஸா என்று பாவிப்பது வழக்கம்!

      Delete
  4. //அதுக்காக நான் உங்களை ஒளவையார் போல ஆடை உடுத்த சொல்லவில்லை. உங்கள் மார்புகளை ஃபிளாட் போட்டு விற்பதையாவது நிறுத்தலாமே.! தொப்புளில் நீங்கள் கடுக்கண் குத்தியிருந்தால் அதை உங்கள் கணவருக்கு மட்டும் காட்டினால் சந்தோஷ படுவார். எங்களுக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.// எனக்கும் மிகவும் பிடித்த கருத்து. என் கருத்தும் இதுவே.

    ReplyDelete
    Replies
    1. சேம் ஃபீலிங்கு மச்சி!

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...