உதைபந்து

Monday, April 16, 2012

செய்வினை செய்வது எப்படி? செய்முறை விளக்கங்களுடன்!

இது ஒண்ணும் செய்வின இல்ல சார்! பையன் இன்னிக்கு கே. டீவில டாக்டரோட "சொறா" படம் பாத்திட்டாப்ல... கொஞ்ச நேரத்தில சரியாயிடும்!


நமது பண்டைய தமிழர்கள் முன்பிலிருந்தே அதாவது ஆதிகாலம் தொடக்கம் , அதுதாங்க எப்போது தமிழ் நாகரீகம் தொடங்கியதோ அப்போது இருந்தே பல கலைகளிலும் , கணிதம் , சாஸ்திரம் , கலை, கட்டுமானம், விஞ்ஞானம் என்று கிடைத்த பந்துகளில் எல்லாம் ஃபிரீ ஹிற்றோடு சிக்ஸர் அடித்தவர்கள். உலகத்துக்கே விஞ்ஞானம் , வித்தை எல்லாம் சொல்லிகொடுத்தவர்கள் என்று முருகதாஸ் சொல்லும் முன்பே சிலரும் , சொன்ன பின்னர் பலரும் அறிந்துவைத்துள்ளோம். இங்கு நான் பண்டைய காலம் என்று நான் குறிப்பிட்டுகொண்டிருபது "குமரிக்கண்ட" காலப்பகுதியை!

வானசாஸ்திரம், பூமிசாஸ்திரம், பூகோள சாஸ்திரம் என்று புகுந்த இடத்தில் எல்லாம் புகுந்து விளையாடிய தமிழனுக்கு அடிக்கடி தலைவலியாய் வந்தது அந்நிய நாட்டு படையெடுப்புக்கள் தான். ஒருபுறம் ஆபிரிக்க கண்டத்தின் பேரரசுகளின் படையெடுப்புக்கள், மறுபுறம் இப்போதைய சீனாவின் அப்போதைய குடியேற்றங்களின் சீற்றம், இந்த பக்கம் அவுஸ்ரேலியா பூர்வகுடிகளின் அத்துமீறல்கள் என்று ஒரே தலைவலியில், தென் மதுரையும் , கபடாபுரமும் தவித்துக்கொண்டு இருக்கையில்தான் மன்னரது அவையில் இருந்த ஞானிகள் + வில்லேஜ் விஞ்ஞானிகள் தயவில் ஒரு உபாயம் கிடைக்கிறது பண்டைய பாண்டியனுக்கு.

ஆபிரிக்கா, இந்திய பெருங்கண்டம், அவுஸ்ரேலியா ஆகிய பெரும் நிலப்பரப்புக்களோடு இணைந்திருந்த குமரிக்கண்டத்துக்கு இந்த மூன்று பகுதியிலுமிருந்து அடிக்கடி வரும் படையெடுப்புக்களை வெறும் படைபலத்தால் மட்டும் வெல்ல முடியாது என புரிந்துகொண்ட பாண்டியர்குலம் கண்கட்டிவித்தைகளை காட்டி எதிரிகளை சீரழிக்க திட்டமிடுகிறது. இனிமேல் குமரிகண்டம் மீது எவனாவது படையெடுக்க திட்டமிடும் பட்சத்தில் , குமரிக்கண்டத்தின் படைபலத்தையும் தாண்டி அது கொண்டுள்ள அனுமானுச சக்தி மீது அந்திய தேசங்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி தொடர் படையெடுப்புக்களை தடுப்பதே அக்கால தமிழ் பேரரசுகளின் திட்டமாக இருந்தது.

விளைவு, தமக்கு தெரிந்த விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு , அந்த விஞ்ஞானத்தின் உதவியால் , மனிதனது வாழ்வுக்கு , அவனது தன்னம்பிக்கைக்கு , அவனது துணிவுக்கு சவால்விடும் ஒரு உபாயத்தை கண்டறிந்தார்கள் தமிழ் அவையில் இருந்த ஞானிகள். தமிழர் பகுதியில் கிடைத்த சாதாரண பொருட்களின் விஞ்ஞான குணங்களை வேற்றினத்தவர் அறிந்திருக்க நியாயம் இல்லை என்பதாலேயே அற்ப பொருட்களை வைத்துக்கொண்டு அகிலத்தை ஆட்டுவித்த "கறுப்பு விஞ்ஞானத்தை" கண்டறிந்தார்கள் பாண்டியன் அவை தமிழ் கிழார்கள். இப்படித்தான் பிறந்தது இன்று நாம் எல்லோரும் கண்டு அஞ்சுகின்ற செய்வினை, பில்லி சூனியம் எல்லாம்.

இந்த மாதிரியான ஒரு சித்துவிளையாட்டு காட்சிகளை செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் பார்த்து இருப்பீர்களே! சித்த பிரம்மை பிடிப்பது போல் செய்வது, கடலில் பாம்புகள் போல ஏதோ ஒன்று துரத்துவது , புதைமணல்கள் இவையெல்லாம் இந்த செய்வினை சமாச்சாரங்கள் தான். ஆனால் ஒவ்வொரு செய்வினைக்கு பின்னாலும் ஒரு விஞ்ஞானம் இருந்து விளையாடிக் கொண்டிருந்தது. தமிழரின் இந்த அனுமனுச சக்திகளால் அந்திய படையெடுப்புக்கள் குறைந்து போனது. ஆனால் உள்ளூருக்குள் ஒருவன் மீது ஒருவன் இந்த கறுப்பு விஞ்ஞானத்தை அதுதாங்க செய்வினையை ஏவிவிட்டு கூத்து பார்க்க தொடங்கினார்கள். தமிழன் தான் நண்டு ஆயிற்றே தானும் ஏற மாட்டான், ஏறுபவனையும் விடமாட்டான்.

இவ்வாறு குமரிக்கண்டத்தில் தொடங்கிய இந்த கறுப்பு விஞ்ஞானம் காலப் போக்கில் எல்ல இடமும் பரவ தொடங்கியது. புத்தியுள்ள தமிழன் என்ன செய்தான்? இது வெறும் விஞ்ஞானம் தான் என்று சொல்லி கற்றுத்தந்தால் தம் மீது பகைவனுக்கு இருக்கும் பயம் போய்விடும் என்பதால் , இதை கெட்ட சக்திகளின் துணையோடு செய்து வருவதாக கூறி அதை செய்யும் முறையை மட்டுமே சொல்லி தந்தான். ஒவ்வொரு விஞ்ஞான சூத்திரத்தையும் ஒரு கெட்ட ஆவியின் பெயரால் அழைத்தான். அந்த விஞ்ஞான தாக்கத்தை ஏற்படுத்தும் சமன்பாடுகளை, கேட்டாலே பயம் வரவழைக்க கூடிய மந்திரங்களின் வடிவில் கற்றுத்தந்தான்.

இதனால் வேற்றுநாடுகளுக்கு தமிழ் பேரசுகள் மீது கால காலமாக பயம் இருந்துகொண்டே வந்தது. செய்வினை எடுக்கும் செய்வினை கூட ஒரு விஞ்ஞான ஃபார்முலாதான். ஒரு மருந்த முறிக்க இன்னுமொரு மருந்து. ஆனால் கற்று தரும் போது அதையும் ஒரு அனுமானுச செயற்பாடகவே கற்றுத்தந்தார்கள்.

குமரிகண்டத்தின் அமைவிடம்

இந்த செய்வினைகளை விஞ்ஞான செயற்பாடுகளாக ஆரம்ப கால தமிழர்கள் , அதாவது இதன் கண்டுபிடிப்பாளர்களும் அவர்களது வழிவந்த சில சிஷ்ய கோடிகளும் மட்டுமே அறிந்து வைத்திருந்தார்கள். தொழில் ரகசியம், தொழில் பாதுகாப்பு போன்ற காரணங்களால் பின்னளில் இதன் உண்மையான பொறிமுறை ரகசியங்களை பின்வந்த தலைமுறைக்கு சொல்லித்தராத காரணத்தால் பின்னாளில் இது வெறும் அனுமானுஷ சக்திகளின் வேலை என்று ஆகிப்போனது. விஞ்ஞானமக இருந்த தாக்கங்கள் இன்று சங்கிலி கறுப்பனாகவும், சுடலை முனியாகவும், ரத்த காட்டேறியாகவும் வலம் வந்துகொண்டிருக்கின்றது.

இன்று செய்வினைகளை பிரக்டிஸ் பண்ணுகின்ற ( டேய் ! என்னடா ஏதோ வக்கீலுக்கு ப்ரக்டிஸ் பண்ணுறவன், டாக்டருக்கு பிரக்டிஸ் பண்ணுறவன் ரேஞ்சுக்கு பேசுற) இந்த விஞ்ஞானிகள் (அட தெரிஞ்சு பண்ணினாலும் தெரியாம பண்ணினாலும் இது விஞ்ஞானம் தானுங்க) இன்று தாங்கள் பண்ணுவது என்ன என்று தெரியாமலேயே பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது இப்போது செய்வினை செய்பவர்களுக்கு தாங்கள் பண்ணுவது சங்கிலி கருப்பன் துணையுடனும், ரத்த காட்டேறி துணையுடனும் , மோகினி துணையுடனும் பண்ணுவதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கூட இந்த செய்வினையின் தோற்றமோ, அதன் உண்மையோ அதில் உள்ள விஞ்ஞானமோ தெரியாது. அவர்கள் சொல்கின்ற மந்திர உச்சாடனங்கள் , விஞ்ஞான சமன்பாடுகளின் மறைமுக வடிவம் என்று நான் சொன்னால் எனக்கு செய்வினை வைக்க வருவார்கள்.

இப்போது ஒரு சில செய்வினை வைக்கும் முறையினையும் அதன் விஞ்ஞான வடிவங்களையும் பார்க்கலாம். இதை வீட்டிலோ, பாடசாலையிலோ, பொது இடங்களிலோ முயற்சி செய்ய வேண்டாம். இந்த கறுப்பு விஞ்ஞான குறிப்புகள் கி.மு 14000ம் ஆண்டுக்கு முன்னர் குமரிக்கண்டத்தில் கபாடபுரம் தலைநகராக இருந்தபோது , பாண்டியனின் அரசவையில் அறிஞராக இருந்த சிறுகூடல் பாணன் என்பவரது குறிப்பேடான "கோன் கருங்காப்பு" அதாவது கோன் என்றால் அரசன் , கருங்காப்பு என்றால் அவனது எல்லைகளை கறுப்பு விஞ்ஞானத்தால் காப்பது என்று பொருள் படும். இந்த குறிப்பில் தான் சில செய்வினை செய்யும் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.மறுபடியும் சொல்கிறேன் , உங்களது நன்மை கருதியும் , பிறர் நன்மை கருதியும் இதை முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.

சாதாரணமாக செய்வினைகள் செய்யும் போது எலுமிச்சை, தேங்காய், கோழி இரத்தம், பூசணிக்காய், குங்குமம் போன்ற உள்ளூர் சரக்குகளை வைத்தே செய்வதை பார்திருப்பீர்கள். எனக்கும் கூட ஏன் ஆப்புள், செர்ரி பழம், தீக்கோழி ரத்தம் போன்ற சரக்குகளை வைத்தால் பேய் வந்து செய்வினை செய்விக்காதா என்றொரு சந்தேகம் வந்தது இந்த புத்தகத்தை படிக்கமுன்னர். இங்குதான் நான் ஆரம்பத்திலேயே சொன்ன விடயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும், ஏன் இந்த பேய்கள் உள்ளூர் சரக்குகளுக்கு மட்டும் தான் மடியுமா? ஆப்பிளுக்கு எல்லாம் ஆடாதா? ஆடாது, ஏனென்றால் இந்த கறுப்பு விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்பட்டது எலுமிச்சை, தேங்காய் போன்ற நமது உள்ளூர் சரக்குகளை நம்பி! அதனால் இன்று வரை எந்த முனியோ , மோகினியோ செர்ரி பழங்களுக்கு மடிவதில்லை.

சரி இப்போது அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்வினையின் செயன்முறைக்கு வருவோம், ஒரு செய்வினை உள்ளது, அதை வைத்துவிட்டால் , யாருக்கு செய்வினை வைக்கபடுகிறதோ அவனது வீட்டை சுற்றி பேய் நடமாட்டம் இருக்கும், அவனது வீட்டில் பேய் குடியிருக்கும். இந்த செய்வினையை ரத்தக்காட்டேறியின் துணைகொண்டு இப்போது செய்துவருகிறார்கள்.

இப்போது ரத்த காட்டெரி என அறியப்பட்ட இந்த செய்வினையின் விஞ்ஞான பெயர் (அது தாங்க இந்த கறுப்பு விஞ்ஞா செயன்முறைக்கு குமரிக்கண்ட தமிழன் வைத்த பெயர் ) "அம்பிறி". இந்த அம்பிறிதான் மருவி ரத்தகாட்டேறி ஆகி இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு.

ஐயா! அவசரத்துல உங்க ஐ-ஃபோனை தூக்கி அடுப்பில போட்டுட்டீங்க!


சரி இந்த அம்பிறியை, அதுதாங்க ரத்தகாட்டேறியை கொண்டுவரும் வழிமுறையை பார்க்கலாம். இந்த எலுமிச்சை இருக்கில்ல எலுமிச்சை அதில கொஞ்சம்,குங்குமத்தில் கொஞ்சம், இரண்டு கோழிகள், நான்கைந்து பூசணிக்காய்கள் கொஞ்சம் குங்குமம். அத்தனையும் ஒரு அக்கினி குண்டத்தின் முன்வைத்து கீழ்வரும் உச்சாடனத்தை இருபது நிமிடங்கல் ஓத வேண்டும்.

"ச்ர்ரி யாகி மாத் துகா ஸி
ஸரி ஸிகா மது காதி இஸ் ஸீ
ஓம் மியாகா டது வியா
ஸியா லிகீ தமூ ஸரி
திவ் தகி கிறீம் நது வி கா
அம்றி சிகா சர்ரி யாகி மாத் துகா ஸி
தவா ஓம் மியாகா டது வியா

இந்த உச்சாடனத்தை தொடர்ந்து இருபது நிமிடங்கள் ஓத வேண்டும். ஓதும் போது அத்தனை சொற்களும் அரை மாத்திரை வடிவில் வரும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஸ்,ஸி சொற்கள் வரும் போது ரெண்டு மாத்திரை வரும்படி பார்த்துக்கொள்ளுதல் அவசியம். இவற்றை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே எலுமிச்சையை வெட்டி அதில் குன்க்குமத்தை தடவி தீயில் போடவேண்டும். பின்னர் பூசணிக்காயை வெட்டி அதில் ஏற்கனெவே வெட்டப்பட்டு கிடக்கும் கோழியின் இரத்தத்தை பூச வேண்டும். அதன் பின்னர் அந்த பூசணிக்காயை சிறிதாக வெட்டி அதில் விபூதி சேர்த்து அந்த விபூதியை எந்த குடும்பம் செய்வினை செய்ய வந்திருக்கிறதோ அந்த குடும்பத்தின் மேல் தூவ வேண்டும்.இப்போது செய்வினை முடிந்தது. அந்த செய்வினை பூசணிக்காயை எதிரியின் வீட்டிலோ, அல்லது தோட்டத்திலோ, அல்லது சம்மந்தப்பட்ட எல்லையிலோ புதைத்து விட்டால் செய்வினை வேலை செய்ய தொடங்கி விடும். குறிப்பிட்ட இடத்தில் பேயின் நடமாட்டம் தொடங்கிவிடும்.

அந்த குறிப்பிட இடத்தில் நாய் உருவில், ஒரு பெண்ணின் உருவில், கிழவன் உருவில், கிழவி உருவில் பேய் நடமாடுவதை எதிரி வீட்டாரும் அந்த வழியால் கடந்து போவோரும் அல்லது அந்த இடத்துக்கு வருவோரும் காணத் தொடங்கி விடுவார்கள்.

இப்போது இந்த ரத்த காட்டேறியின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அதாவது "அம்பிறி' தாக்கத்தை பார்த்துவிடலாம்.


குறிப்பிட்ட அந்த மந்திரத்தை இருபது நிமிடங்கள் தமிழின் அரை, மற்றும் இரு மாத்திரை அளவில் உச்சாடனம் செய்யும் போது காற்ரலையில் "செரியா" என்றொரு எதிர்மறையான அழுத்தம் உண்டாகின்றது. ( இந்த எதிர் மறை அலைகளுக்கு இவ்வாறு உதாரணம் சொல்லலாம், சில இசைகளை கேட்கும் போது மனதுக்கு அமைதியும், சில இசைகளை கேட்கும் நம்மை அறியாமல் சங்கடம் மற்றும் துக்கம் தோன்றுவது இல்லையா? காரணம் அந்த இசை, காற்றலைகளில் எதிர் மறையான அலைகளை உண்டாக்குவது தான் .)

இந்த "செரியா" எதிர் அலைகள் காற்றில் இருக்கும் போது எலுமிச்சைகளை வெட்டி குங்குமத்தை தடவும் போது நிகழ்வது இதுதான். எலுமிச்சையில் அடிப்படையிலேயே "பிறிம்மி" என்ற ரசாயணம் இருக்கின்றது. குங்குமத்திலும் "ஈகலி" என்ற ரசாயணம் உள்ளது, இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து தீயிலிடும் போது அந்த வெப்பத்தின் விளைவால் இந்த கூட்டு ரசாயணம் "செரியா' எதிர்மறை அலைகளுடன் கலக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து உருவாகும் வலுவான எதிர்மறை அலைக்கு "சொய்" என்று பெயரிட்டுளான் பண்டை தமிழன்.

இப்போது பூசணிக்காய்க்கு வேலைவருகிறது, பூசணிக்காயில் இருக்கின்ற 'பன்ம" என்கிற செல்கள் இந்த எதிர் மறை அலைகளை சிறைவைக்க சரியான சிறைகள். ஆனால் இந்த செல்களை திறப்பதற்கு கோழியின் இரத்தத்தில் இருக்கின்ற "ஆடுடவிக்" என்ற ஊக்கி கொஞ்சம் தாராளமாக தேவைப்படுகின்றது. எனவே தான் வெட்டிய கோழி இரத்தம் பூசணிக்காய் மேல் தடவப்படுகிறது. இந்த செயற்பாட்டின் பின்னர் அந்த வலுவான "சொய்" எதிரலைகள் அந்த பூசணிக்காயின் "பன்ம' செல்களில் சிறைப்படுகின்றது. இந்த செயற்பாடு மின்சாரத்தை ரான்ஸ்போர்மர்களில் அடைக்கும் செயற்பாட்டை ஒத்தது. அடைபட்டிருக்கும் சிறிய அளவு சக்தியும் வெளியேறுகையில் பெரும் சக்தியாக வெளிவரும்.

இப்போது செய்வினை வைப்பவனின் குடும்பத்தை பாதுகாக்கவேணுமே! அதுக்கு தான் இந்த விபூதி இருக்கிறது. விபூதியில் இருகின்ற "சரகாம்" என்ற வேதியல் பொருள் இந்த எதிர்மறை அலைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த கூடியது. இதை தான் அந்த குடும்பத்தின் மீது தெளிக்கவும் அந்த அலைகளின் தாக்கம் அவர்களை விட்டு அகன்று விடுகிறது.

இப்போது "சொய்" என்ற வலுவான அலைகளை சுமக்கின்ற இந்த பூசணிக்காயை எதிராளியின் வீட்டில் புதைத்ததும் ஆட்டம் ஆரம்பமாகின்றது. ரத்த காட்டேரி தயார்! அவனவன் கண்ணுக்கு நாய் போலவும் , வெள்ளை உடையில் பெண்போலவும், கிழவி போலவும் தெரிய ஆரம்பிக்கின்றது. அது எப்படி என்று பார்க்கலாம், ஒவ்வொரு மனிதனுக்கும் அடிமனதில் ஏதோ ஒன்று தொடர்பில் உச்சா போகும் அளவுக்கு பயம் இருக்கும். அது நாய், அல்லது பாட்டி கதைகளில் வரும் இளம் மோகினி, கிழவி எதுவாகவும் இருக்கலாம். இவர்களது அடிமனதில் இருக்கும் இந்த பயங்களை இந்த "சொய்" எதிரலைகள் வெளியே உருவங்களாக நடமாட வைத்துவிடும், அடிமனது உருவங்களை கண்முன் உருவங்களாக கொண்டுவருவது தான் இந்த 'சொய்" அலைகளின் பிரதான வேலை.

சரியா எரியக்கூட மாட்டேங்குது, இன்னிக்கு நாள் வெளங்கின போலதான்!


அதிகபட்சமாக இந்த அலைகளின் தாக்குதல் வட்டத்தில் அதிகநேரம் இருந்தால் இருதய வால்புகளை வலுவிழக்க செய்யக்கூடியது, விளைவு வாயாலும் , மூக்காலும் ரெத்தம் வரும். இப்போது புரிகிறதா செய்வினை ரத்தகாட்டேரி ஒருவனுக்கு அடிப்பது எப்படி என்று.இப்போது ஒரு கேள்வி, அது எப்படி பகலில் அடக்கி வாசிக்கும் இந்த இரத்தகாட்டேரி இரவில் மட்டும் அடிப்பது எவ்வாறு? குட் கொஸ்டீன்.

பண்டை தமிழன் என்ன மாங்கா மடையனா? இவளவு யோசிப்பவன் அதை யோசிக்க மாட்டான? இரவு என்றால் சாதாரணமகவே அனைவருக்கும் பயம் இருக்கும். எனவே இரவில் இந்த அலைகள் அதிகம் தொழில்படும் வகையில் சூத்திரத்தை வகுத்தான். அதாவது இரவில் வெளியாகும் மீதேன் வாயுவுடன் இந்த சொய் அலைகள் தாக்கம் அடையும் போது தான் இதன் தாக்கம் வலுப்பெறுகிறது. ஆகவே இந்த சொய் அலைகளை இரவில் வெளியாகும் மீதேனுடன் தாக்கமடைவது போல் சூத்திரம் வகுத்து இந்த "அம்பிறியை" ஒரு இரவில் பயங்கரமாக அலைகின்ற ரத்தகாட்டேரியாக உருவாக்கினான்.

ஆரம்ப காலத்தில் யுத்த நாட்களின் போது எதிரி பாசறைகளில் இந்த அம்பிறியை அலையவிட்டு எதிரிகளை கிலிகொள்ளவைத்தான் தமிழன். இப்போது என்ன செய்கிறான்? மலிவு விலையில் ஒரு காணியை வாங்குவதற்கு இந்த அம்பிறியை குறித்த காணியில் ரத்தகாட்டேரியாக அலையவிட்டு அந்த காணியின் விலையை அடிமாட்டு விலைக்கு வாங்க பயன்படுத்துகிறான்.

இது தான் ரத்தக்காட்டேறியின் விஞ்ஞான சூத்திரம். இவ்வாறு ஒவ்வொரு செய்வினைக்கும் பின்னால் ஒரு விஞ்ஞானம் ஒழிந்துகொண்டிருக்கிறது. இதை செய்வினை வைப்பவனே அறியாதது நமது துரதிஷ்டம். இல்லையென்றால் இன்று விஞ்ஞானத்தில் கொடிகட்டி பறக்கும் வெள்ளயனே அறியாத 'அம்றி","பிறிம்மி", "பன்ம", "ஆடுடவிக்","ஈகலி" போன்ற ரசாயணங்கள், தாக்கங்கள்,எதிரலைகள் என்று எத்தனையோ புது விடயங்களை உலகுக்கு அறிமுகம் செய்திருக்கலாம்.

ஆத்தா நான் பண்ணுறது பக்கா ஃபிராடுதனம் எண்ணு யாரும் கன்டுபிடிச்சிராம காப்பாத்துடி யம்மா!



டிஸ்கி இலக்கம் 1:-கடலில் மூழ்கிகிடக்கும் குமரிக்கண்டத்தில் தமிழனது எத்தனையோ கலைகள்,விஞ்ஞானங்கள் தூங்குகின்ற. அதுகுறித்து எத்தனையோ பதிவர்கள் பதிவுகளை போட்டுவருகின்ற வேளையில் எனது பங்குக்கு இருக்கட்டுமே என்று தான் இந்த செய்வினை பதிவு.

டிஸ்கி இலக்கம் 2:- நான் இந்த பதிவில் குமரிக்கண்டத்தைப்பற்றி சொன்ன ஒருசில விடயங்களை தவிர எதுவுமே உண்மை கிடையாது. சிறுகூடற் பாணன் என்றால் எனக்கு யார் என்றே தெரியாது, அப்படியொருவர் இருந்தாரா என்பதே தெரியாது.

டிஸ்கி இலக்கம் 3:- விஞ்ஞான ரீதியிலும் , நாத்திக போக்கிலும் இந்த செய்வினையை எப்படி பாக்கலாம் என்ற எனது கேள்விக்கு நானே தந்த பதில் தான் இந்த மரண மொக்கை பதிவு.

டிஸ்கி இலக்கம் 4:- ஆனாலும் இது ஒரு ஊகம் தான் , இப்படியும் இருக்கலாம் தானே! (மொக்க போட்டுபுட்டு அத ஞாயம் வேற படுத்துறியா?) அது இல்லீங்க, ஆரம்பத்தில் நவகிரகம், வான சாஸ்திரம், துளசி வழிபாடு என்பன வெறும் மூடநம்பிக்கையாய் பார்க்கப்பட்டாலும் அதில் உள்ள விஞ்ஞானம் இப்போது தானே ஆதாரம், விஞ்ஞான விளக்கங்களோடு வெளியாகிறது. அது போல இந்த செய்வினை மாட்டரும் பின்னாளில் விஞ்ஞானம் என்று கண்டுபிடிக்கப்படால் , அதை முதலில் கண்டுபிடித்த பாதி பெருமையாவது எனக்கு கிடைக்குமே! (தூ! மூதேவி)


அட இன்னொரு மேட்டர் சொல்றேங்க, மீதேன் வாயு இரவில் எரிவதை கொள்ளிவாய் பிசாசு என்று சொன்ன கூட்டம் தானே நாம! அப்படி இருக்கயில் ரத்த காட்டேரி அம்பிறியாக இருக்க கூடாதா? (நீ அடிபட்டே சாக போறடா மவனே!)


செய்வினை செய்வோர் ஒருவேளை தாம் செய்வது விஞ்ஞானம் என்று அறியாமல் செய்கிறார்களோ என நான் சந்தேகிக்க காரணம் ( பன்னாட... பன்னாட... நீ போட்டது மரண மொக்க பன்னாட, அதுக்கு இப்போ உனக்கு ஆதாரம் வேற கேக்குதா?) இரவில் சாப்பாடு கொண்டு பிரயாணம் செய்வோர் எச்சிப்பேய் அல்லது கொள்ளிவாய் பிசாசு தங்களை தாக்காமல் இருக்க , சாப்பாட்டில் கரித்துண்டு வைத்து கொண்டு போவது வழமை. இது கிராமங்களில் இன்னும் தொடர்கிறது. இது ஒரு விஞ்ஞான செயன்முறை என்று தெரியாமலேயே இதை தொடர்ந்து செய்துவருவோர் இன்னும் அதிகம்.

இரவில் வெளியாகும் மீதேன் மற்றும் இதர உயிர்வாயுக்கள் சாப்பாட்டுக்குள் புகுந்து உணவை நஞ்சாக்கி விடாமல் தடுக்கவே கரித்துண்டை உணவுக்குள் புதைக்கின்றனர். கரி அந்த வாயுக்களை தான் உறிஞ்சி சாப்பாட்டை பாதுகாக்கும். இந்த விஞ்ஞான பொறிமுறை பண்டைய தமிழனுக்கு தெரிந்திருந்தது, ஆனால் ஏதோ சில காரணத்துக்காக அடுத்த தலைமுறைக்கு , பேயை தடுக்க கரி என்று சொல்லி பழக்கி விட்டன். இந்த அடிப்படை ஊகத்தில் நான் செய்வினை மேட்டரை சும்ம அடிச்சு விட்டேங்க....


டிஸ்கி இலக்கம் 5:- இந்த அம்பிறி, பிறிம்மி, ஈகலி, சொய், ஆடுடவிக் போன்ற வார்த்தைகள் எல்லாம் எனது கடைசி தம்பி , தான் சிறு வயதில் தனக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளையெல்லாம் கோர்த்து எங்கள் வீட்டு சுவரில் எழுதிய வார்த்தைகள். இவளவு நேரமும் உண்மையா இருக்குமோ என்ற தோரணையில் யாராச்சும் வாசிச்சு இருந்தா மன்னிச்சூ...

ஆனால் வார்த்தைகள் அர்த்தமில்லததாக இருந்தாலும் , எனது ஊகத்தில் துளியளவு உண்மையாவது இருக்கலம் என்று நம்புகிறேன்.யாரச்சும் குமரிக்கண்டத்த முழுசா தெரிஞ்சவன் சொல்லுங்கப்பா (டேய் மறுபடியும் முதல்ல இருந்தா?) நீங்க என்ன நெனைக்கிறீக? சும்மா பின்னூட்டம் போட்டுட்டு தான் போங்களன்.


இவங்க கூட அம்பிறியத் தான் try பண்ணுறாங்கோ... ஆ பண்ணுறாங்கோ.....









20 comments:

  1. நண்பா

    முதல்ல உனக்கு பதிவு எழுதின கை விளங்காம தான் செய்வின வைக்கணும்

    செம காமெடி

    சூப்பர் நண்பா

    ReplyDelete
    Replies
    1. ண்ணா .... சும்மா கூட அப்பிடி ஏதாச்சும் வில்லங்கம் பண்ணிடாதேங்கோ... பொழப்பு ஓடுறதே இந்த கைய நம்பி தானுங்கோ... ரெண்டு மூணு எக்ஸாம் வேற எழுத கிடக்கு.

      பாராட்டுகளுக்கும் உங்களது அன்புக்கும் குறிப்பா இந்த மொக்க பதிவுக்கு பின்னூட்டம் போட்ட தாராள உள்ளத்துக்கும் ரொம்ப நன்றி நண்பா!

      Delete
  2. நெஜம் போல நம்ப வைச்சுட்டியேப்பா

    ReplyDelete
    Replies
    1. ஏமாந்தியா? ஏமாந்தியா? ஐ! ஜாலி எனக்கும் ஒரு அடிமை சிக்கிதாய்யா இருக்கான்! :)

      Delete
  3. koiyala sikina setha machan

    any how u r a good writer

    oru kathai redi panungalen padam edukalam

    ReplyDelete
    Replies
    1. அண்ணே சும்மா ஜாலியா எழுதினது, என் மேலை கைவச்சீங்கன்னா அப்புறம் என்ன கொல கேசில உள்ள போயிடுவீங்க! ஹி..ஹி..ஹி..

      படம் எடுக்க கதை எழுதலாம் தான், எவன் தன்னோட காச கரியாக்க தயாராக இருக்கான்?

      Delete
  4. nalla manthravathiya pathu unaku first seivinai vaikanum

    ReplyDelete
  5. nalla manthravathiya pathu unaku first seivinai vaikanum

    ReplyDelete
  6. ச்சே.....அடபோங்கப்பா...

    ReplyDelete
  7. time waste pannitayae da kaena koodthi..

    ReplyDelete
  8. ஒரு பெரியார் இல்லை ஓறாயிரம் பெரியார் வந்தாலும் உங்களை திருத்தவே முடியாது

    வாழ்த்துக்கள் சகோ!

    தொடர்ந்து எழுதுங்கள் ...

    ReplyDelete
  9. Hey...nambiten pa...u made me mad...😁😁

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Hey...nambiten pa...u made me mad...😁😁

    ReplyDelete
  12. அட பண்ணாட பண்ணாட அறிவிருக்கா இப்படிலாம் பதிவிடுகின்றீர்கள் படிப்பவர்கள் ஆன்மீகத்தை பொய்னு தானே நினைப்பார்கள் உன்னோட கை கால் வெலங்காம போக நடுரோட்டுல நாய் மாதிரி அடிபட்டு சாவபோற நாசமா போ

    ReplyDelete
  13. இந்த உலகை ஆளும் திறமையும் தகுதியும் தமிழனுக்கு இருக்கு ஆனால் ஒற்றுமையின்மையால் பலம் குறைத்து நிக்கிறான்

    ReplyDelete
  14. செய்வினை என்பது இல்லை அதலாம் சும்மாயா

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...