உதைபந்து

Tuesday, April 24, 2012

கனத்த மனதுடன் பதிவுகளில் இருந்து வெளியேறுகிறேன்!



லா லீகா கிண்ணமிழப்பு + சம்பியன்ஸ் லீக் தோல்விக்கு பின்னரும்  பார்சிலோனாவை இன்னமும் அதிகமாக  நேசிக்கிற ஒரு சராசரி இல்லை இல்லை , ஒரு பார்சிலோனா வெறியனாக உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்.. 

இது ஒரு பதிவாக இல்லாமல் எனது ஒரு பிரியாவிடையாக கொள்ளுங்கள்.


இன்று சம்பியன்ச் கிண்னத்தின் இரண்டாம் அரையிறுதியில் செல்சியாவிடம் வீழ்ந்தது பார்சிலோனா. செல்சியா சூப்பர் கேம் மச்சி! அதுவும் பத்து பேருடன்! தவளை தன் வாயால் கெடும்ங்கிற மாதிரி பார்சிலோனா கெட்டது அதுவாலே தான், மெஸ்ஸி தனது வாழ்வின் முதல் பெனால்டி வெளியில் அடித்தார், சொதப்பல் ஸ்ரார்ட். சும்மா சொல்லக்கூடாது செல்சியாவோட தடுப்பு ஆட்டம் பிரம்மாதம். முதல் பாதியில் பார்சிலோனா காட்டிய வேகம் இரண்டாம் பாதியில் காட்டாததால் வந்தது பரிதாபம். செல்சியாவோ மட்ரிட்டோ அல்லது முனீக்கொ எல்லாருக்கும் பெஸ்ட் ஆஃப் லக். 

நாளை இடம்பெறப்போகும் போட்டியில் தனது சொந்த மண்ணில் முனீக் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைவது மட்ரிட் அணிக்கு பெரிய சவாலாக இருக்கப்போவது இல்லை. ஒன்றுக்கு பூச்சியம் என்று கோல் அடித்தாலே போதுமானதாக இருக்கும் காரணம் மட்ரிட் ஏற்கனவே முனீக்கில் நடந்த போட்டியில் ஒரு "away" கோல் போட்டு இருப்பதால். 

ஆக எனது கணிப்பின் படி இறுதிப்போட்டியில் ஆடப்போவது செல்சியா மற்றும் மட்ரிட் அணிகள் தான். இரு அணிகளையும் பார்க்கப்போனால்  செல்சியாவைவிட மட்ரிட் பலம் கூடிய அணியாக இருக்கின்றது.எனது கணிப்பின் படி  செல்சியா மற்றும் மட்ரிட் ஆகிய அணிகள் முனீக்கில் இறுதிப்போட்டி ஆடும் பட்சத்தில் , அந்த மைதானம் இரு அணிகளுக்கும் பொதுவானது. என்ன? தங்களது அணியான முனீக் அணியை தோற்கடித்த கடுப்பில் , முனீக் ரசிகர்களது ஆதரவு செல்சி பக்கம் சாயலாம். அது மட்டும் தான் மட்ரிட்டுக்கு பாதகமான ஒன்றாக இருக்கப்போகிறது.

ஆனால் முனீக் அணிக்கு எதிராகவே அவர்கள் மைதானத்தில் கோல் போட்ட மட்ரிட் அணிக்கு இந்த உளவியல் சவால் ஒன்றும் பெரிய எதிர் தாக்கமாக இருக்கப்போவதில்லை. அது போக சாதரணமாகவே மட்ரிட்டுடன் ஒப்பிடும் பொழுது சற்று நலிந்த கழகமான செல்சியாவை இன்றைய போட்டி மேலும் நலிவடைய வைத்திருக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால் இன்று கோல் போட்டு செல்சியாவின் வெற்றியை உறுதி செய்த மியரல்ஸ், அணியின் பிரதான பின்கள வீரருமான ஜோன் டெர்ரி, இன்னொரு முக்கியமான  பின்கள வீரரான ரமிர்ஸ் ஆகியோர் சிவப்பு அட்டை காரணமாக அடுத்த போட்டியில் விளையாட முடியாது. இது உண்மையில் செல்சியாவின் பலத்தை பாதியாக குறைத்திருக்கிறது எனலாம். மியரல்ஸின் இடத்துக்கு டொரைஸ் வரலாம் என எதிர் பார்கிறேன். இவையெல்லாம் கிட்டத்தட்ட மட்ரிட்டின் பத்தாவது தடவை இண்ணம் வெல்லும் கனைவை நனவாக்கும் என நம்புகிறேன்.

இத்தனையும் பொய்த்துப்போய் நாளை முனீக்கிடம் மட்ரிட் வாங்கி கட்டினாலோ அல்லது இறுதிபோட்டிக்கு நுழைந்து அங்கு நலிந்து, போய் இருக்கும் செல்சியாவிடம் வாங்கி கட்டி உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை செல்சியாவிடம் மட்ரிட் தாரை வார்த்தாலோ, சீசனின் ஆரம்பத்தில் நன்றாக ஆடி இறுதியில் சொதப்பிய பார்சிலோனாவை விட சொதப்பல் அணி மட்ரிட்டாக இருக்கும் என்றால் மறு பேச்சில்லை.

நாளைய தினம் தப்பி தவறி மட்ரிட்டை முனீக் வீழ்த்தினால் கிண்னம் முனீக் வசமாகும் என்பது எனது கணிப்பு. எழுத எழுத நிறைய எழுத வேண்டும் போல் உள்ளது. சீரியசாகவே சொல்கிறேன் , மனது கனத்துப்போய் உளது. ஒரு ரசிகனாக நிறைய நொந்து போய் உள்லேன். இப்போதே நிறைய எழுதிவிட்டதாக உணர்கிறேன். தனியே கீழே உள்ள பந்தியை பதிவாக இட்டு முடிக்கத்தான் ஆரம்பத்தில் எண்ணம். ஆனாலும் இந்த அரையிறுயின் முடிவிலும் அடுத்து நடைபெறப்போகும் இறுதிப்போட்டி தொடர்பிலும் கருத்தறிய, எனது உதைபந்து பதிவுகளை எதிர் பார்த்திருக்கும் யாரேனும் இருந்தால் அவர்களை ஏமாற்ற வேண்டாமே என்று தான் மேலே உள்ள போட்டிக்கான் சிறு குறிப்பு தந்தேன்.

அடுத்த லா லீகா சீசன் வரைக்கும் அனேகமாக இனி உதைபந்து பதிவுகள் என்னிடம் இருந்து வராது என்பது எனது 99% கருத்து`. எவராச்சும் ஏமாந்து போனா அடியேனை மன்னிச்சூ.... எனது உதை பந்து பதிவுகளில் பின்னூட்டமிட்டும் , பதிவுகளை வரவேற்று படித்து  ஆதரவளித்த சகல வாசகர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள். 

இப்போது நண்பன் JZ உடன் சில வார்த்தைகள்....  உன்னோட செம ஃபன்னு மச்சி, எல்லா சப்போர்ட்டுக்கும் தாங்க்ஸ். நமது பின்னூட விவாதங்களில் நிறைய கலாய்ச்சோம் நிறைய கத்துக்கிட்டோம்.பார்சிலோனா இல்லாத மட்ரிட்டையும் மட்ரிட் இல்லாத பார்சிலோனாவையும் நினைத்தாலே கடுப்பா இல்ல???? இந்த இரண்டுக்கிடையான போட்டி தான் லாலீகாவை அழகாக்குகிறது, ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்பது எனது கருத்து நண்பா. ரொம்ப நன்றி நண்பா.... ஆனாலும் சோகமா போனாலும் சும்மா போகல... அடுத்த லா லீகா + சம்பியன்ஸ் கிண்ணம் என்று விட்டதை பிடிப்போம் என்று இவ்விடத்தில் கூறி எனது இதர பதிவுகளுக்கு இதே சுவாரசியத்துடன் நமது பின்னூட்டங்கள் தொடரும் என்ற நம்பிக்கையிலும் கனத்த மனதுடன் வெளியேறுகிறேன்.....! மீண்டும் அடுத்த லா லீகாவில் சந்திப்போம் !!!

15 comments:

  1. //கனத்த மனதுடன் பதிவுகளில் இருந்து வெளியேறுகிறேன்!//
    பொடியனுக்கு ரோஷம் ஏதும் வந்திருச்சா என்ன?
    .
    .
    .

    //அடுத்த லா லீகா சீசன் வரைக்கும் அனேகமாக இனி உதைபந்து பதிவுகள் என்னிடம் இருந்து வராது என்பது//
    அடப்பாவி.. 'உதைபந்து பதிவு எழுத மாட்டேன்'னு சொல்றதுக்கு, ஏதோ பதிவுலகத்தை விட்டே போற மாதிரி பில்டப் கொடுக்கற??

    *அண்ணன் தனுஷ் பத்தின பதிவு வரும்ல.. அது போதும், நம்மளுக்கு!!

    ReplyDelete
    Replies
    1. ////பொடியனுக்கு ரோஷம் ஏதும் வந்திருச்சா என்ன?////
      .
      .
      யோவ் ! யோவ் ! நானே சிவனேன்னு தானே போய்க்கிட்டு இருக்கேன், எதுக்குய்யா என்னோட வாய கிண்டுற?

      /////அடப்பாவி.. 'உதைபந்து பதிவு எழுத மாட்டேன்'னு சொல்றதுக்கு, ஏதோ பதிவுலகத்தை விட்டே போற மாதிரி பில்டப் கொடுக்கற??/////////


      ஆ! பெரிய நாமெல்லாம் பெரிய இவனுக ... நான் பதிவுலக விட்டு போனா மட்டும் என்ன நித்தியானந்தா ரஞ்சிதா கூட ஜல்சா பண்ணாம இருந்துடுவானா? இல்ல அம்பானி வீட்ல எவனாச்சும் ஆணிய புடிங்கிடுவானா? நீ ஒரு இத்தது.. நான் வெந்தது... நாமெல்லாம் பதிவுலக விட்டு போனா அகில உலகுக்கு சமாதானம் வந்திடுமா?

      ////அண்ணன் தனுஷ் பத்தின பதிவு வரும்ல.. அது போதும், நம்மளுக்கு!!/////

      என் நெஞ்சில பால வார்த்திட்டடா ராசா...

      * ஒரு டவுட்டு, நீங்க இப்பிடி ஆர்வமா வழி அனுப்புறத பாத்தா "எப்படா இந்த நாயி இந்த ஃபுட்போல் பதிவு எழுதுறத நிறுத்தும்ன்னு" எதிர பாத்து காத்திட்டிருந்தாப்ல இல்ல இருக்கு

      Delete
  2. அதுவும் சூட்கேஸை புடிச்சிக்கிட்டு, போட்டோவுக்கு "போஸ்" கொடுக்கிற பாரு.. சூப்பர்!

    வயித்துல என்ன? Goodbyeன்னு tattoo அடிச்சிருக்கே.. நல்லாவே இல்லை!
    அடுத்த முறை ஃபொன்டை மாத்தி அழகா அடிக்கனும்.. புரியுதா?

    ReplyDelete
    Replies
    1. ///// அதுவும் சூட்கேஸை புடிச்சிக்கிட்டு, போட்டோவுக்கு "போஸ்" கொடுக்கிற பாரு.. சூப்பர்!

      வயித்துல என்ன? Goodbyeன்னு tattoo அடிச்சிருக்கே.. நல்லாவே இல்லை!
      அடுத்த முறை ஃபொன்டை மாத்தி அழகா அடிக்கனும்.. புரியுதா? ////////

      நான் சோகமா கெளம்பிட்டு இருக்கேன் , அதில நீயி வந்து அது நொட்ட இது சொட்டன்னா சொல்ற? டேய் மனுசன பீல் பண்ண விடுங்கப்பா.......

      Delete
  3. //பார்சிலோனா இல்லாத மட்ரிட்டையும் மட்ரிட் இல்லாத பார்சிலோனாவையும் நினைத்தாலே கடுப்பா இல்ல??//
    இருக்காதா பின்ன? போட்டி இருக்கதால தான் ரெண்டு டீமாலயும் தங்களோட பெஸ்டை வெளிப்படுத்த முடியுது!!

    'மட்ரிடுக்கு போட்டியா லா லீகால, வாலன்சியா தான்'னு இருந்திச்சுன்னா.. எவனாவது 80 மில்லியன் செலவழிச்சு ரொனால்டோவை கூட்டிட்டு வந்திருப்பானா? இல்லை ஜோஸே மொரின்ஹோதான் வர வேண்டிய அவசியம் இருந்திருக்குமா?
    எல்லாம் நல்லதுக்கே!!!

    ReplyDelete
    Replies
    1. ////// மட்ரிடுக்கு போட்டியா லா லீகால, வாலன்சியா தான்'னு இருந்திச்சுன்னா.. //////

      பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்...

      Delete
  4. விடுங்க விடுங்க பாஸ்..எல்லாம் கிரக நிலைகள்னாலதான் பார்செலொனா தெய்க்கிலனு, இங்க அரச மரத்து அஸ்ட்ர்லோஜி சொன்னாரு..கேம்ஸ்னு இருந்தா வெற்றி தோல்வி சகஜம்தான்..எத்தனை வருஷமாதான் பார்செலோனாவே எல்லாவத்தையும் அடிக்கிறது.மற்ற டீம்ஸ்க்கு பாவம் விட்டுக்கொடுத்துருவோம்//

    பாஸ்..அப்புறம் ஒரு ரகசியம்..இதுல இருந்து என்ன தெரிது..சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ணாம அப்படியே கவ்விக்குனும்.இல்லனா பானைய கவுத்துப்போட்ட தவள மாதிரி அலைய வேண்டியதுதான்.இதுல ஒரு ஆறுதல் என்ன தெரிமா நண்பரே..மென்சேஸ்டர் சிட்டி..லீக்கை போடுறதுக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு.30 ஆம் தேதி டார்பி மேட்ச்/நம்ம டேவஸ் வேற மறுப்படியும் களமிறங்கிருக்காரு.

    இன்னொரு ஆறுதல் 2 : அடுத்த மாசம் கோப்ப டெல் ரே கிண்ணப் போட்டி இருக்கு சாரே,//பார்செலோனா இந்த ஸீசன்-ல வெற்றிக்கொள்றதுக்கு இருக்கிற ஒரே கப்பு..மீண்டும் வருவோ..பார்சலோனா என்றே வாழ்வோம்

    பதிவு அருமை,,மிக்க நன்றி. .

    ReplyDelete
    Replies
    1. யோவ் JZ! இந்தாள பாருய்யா..... அவனவன் ஆப்பிள் லாப் டாப் வச்சு அதில ஏதேதோ டெக்னாலஜி எல்லாம் வச்சி எந்த டீம் ஜெயிக்கும், எவன் கோல் அடிப்பான்னு ஆராஞ்சிக்கிட்டு இருக்காய்ங்க, ஆன இந்தாளு மலேசியாவில எங்கேயோ ஒரு ஆலமரத்த கண்டுபிடிச்சு, அதில கிளி யோசியம் பாத்திட்டு வந்திருக்காரு, எதுக்குய்யா இந்த வேல உமக்கு குமரா? ( சும்மா)

      கோபா டில் ரே தான் பார்சிலோனாவுக்கு இருக்கிற ஒரே ஆறுதல், பாக்கலாம் . அப்புறம் பார்சிலோனா ஜெயிக்கும்ன்னு நான் ஒரு பதிவு எழுத போக ,அப்புறமா பில்பாவோ கையாலயும் பார்சிலோனா வாங்குற மாதிரி ஆயிடும். பேசாம நான் வாயையும் அதையும் பொத்திக்கொண்டு இருப்பது தான் பார்சிலோனாவின் கிட்னிக்கு நல்லது.

      Delete
    2. //பேசாம நான் வாயையும் அதையும் பொத்திக்கொண்டு இருப்பது தான் பார்சிலோனாவின் கிட்னிக்கு நல்லது.//
      அதே தான்... இனி மட்ரிடுக்கும் நல்லது! ப்ளீஸ்..

      Delete
  5. FREE ஆ விடு நண்பா , கபடில யாரு ஜெயிப்பாங்கன்னு ஒரு பதிவ போட்டுறலாம் ,

    ReplyDelete
    Replies
    1. ஏது கபடியா? ரொம்பத்தான் லொள்ளுங்க உங்களுக்கு, இப்போ ஐயா செம ஜாலி மூட்ல இருக்கேன். காரணம் எங்களோட எதிரி ரியல் மட்ரிட்டுக்கு பயன் முனீக் அல்வா குடுத்துட்டாய்ங்க இல்லே....

      Delete
    2. அதானே பார்த்தேன்!!! படவா ராஸ்கல்..
      //பார்சிலோனா இல்லாத மட்ரிட்டையும் மட்ரிட் இல்லாத பார்சிலோனாவையும் நினைத்தாலே கடுப்பா இல்ல????// இதுல இப்படியொரு டயலாக் வேற! அமைதியாவும், சுமூகமாவும்... ஏதோ ரெண்டு டீமும் அண்ணன்-தம்பி மாதிரி!!!

      எல்லாம் நீ இந்தப் பதிவுல மட்ரிட் ஜெயிக்கும்னு சொன்னதால தான்டா வந்திச்சு!! வாயை குளோஸ் பண்ணிக்கிட்டு இருக்க முடியாதா? உன்னை சும்மாவே விடாட்டேன்.,,,

      *போனாப் போகட்டும்..மூனிக் சொந்த மண்ணுல கப்பைத் தூக்கினா எனக்கும் சந்தோஷம் தான்! நம்மளுக்கு லா லீகா இருக்குல்ல.. அதுவே போதும்!!

      Delete
    3. அது தான் சொன்னனே மட்ரிட் இல்லத பார்சிலோனாவும் , பார்சிலோனா இல்லாத மட்ரிட்டையும் நெனச்சு பார்க்க முடியாது என்று. அவனவன் தோற்கும் போது அவனவன் தேவை மச்சி! எவன் சொன்னான் நங்களும் மட்ரிட்டும் அண்ணன் தம்பின்னு? கலாய்க்கிறதுக்கும் ஒரு டீம் தேவை தானே மச்சி!

      ///////எல்லாம் நீ இந்தப் பதிவுல மட்ரிட் ஜெயிக்கும்னு சொன்னதால தான்டா வந்திச்சு!! வாயை குளோஸ் பண்ணிக்கிட்டு இருக்க முடியாதா? உன்னை சும்மாவே விடாட்டேன்.,,,///////

      நானும் ஒரு குருட்டு மூட நம்பிக்கையில தான் போட்டு பாத்தேன், அது வொர்க் அவுட் ஆயிடிச்சி,..... ஐ! ஜாலி!

      /////போனாப் போகட்டும்..மூனிக் சொந்த மண்ணுல கப்பைத் தூக்கினா எனக்கும் சந்தோஷம் தான்!///////

      இப்போ பயன் என்னோட டீம், காரணம் பார்சிலோனாவுக்கு அடுத்த படியா எனக்கு பிடிச்ச டீம் பயன் முனீக் தான். காரணம் எனது அபிமான அணியான ஜேர்மன் அணி வீரர்கள் அதிகம் ஆடும் கழகம்.

      *பை தி பை எங்களோட கிங்கு பெப் குவாரியோலா இந்த சீசனோட பார்சிலோனாவ விட்டு போறாரு, புதுசா நாங்க "டிட்டோ விலானோவா" வ புடிச்சிருக்கோம் என்பதை என் இனிய தமிழ் மக்களுக்கு அறியத்தருகிரோம்!

      Delete
    4. ஒண்ணுத்துக்கும் வேலையில்லாமயிருந்த பார்சிலோனாவை இவ்வளவு தூரம் தூக்கிவிட்டு, பின்பு அதே பழைய கன்டிஷனில் விட்டுச் செல்லும் குவார்டியோலாவுக்கு வாழ்த்துக்களுடனான பிரியாவிடைகள்!

      புதுசா வர்றவனுக்காவது புத்தியிருக்கான்னு "டெஸ்டு" பண்ணிட்டீங்களா??

      Delete
    5. ரியல் மட்ரிட் மட்டும் என்னாத்துக்கு உதவுதாம்? நாங்க டெஸ்டு பண்ணிக்கிறோம். ஆனா நீங்க கோட்ட விட்டுட்டீங்களேப்பு, மண்டையில மூளை மட்டுமில்ல களிமண் கூட இல்லாத ஜோஸ் மொரின்கோ கூட காலம் தள்ளுற நீங்க எல்லாம் தியாகிங்கடா!

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...