உதைபந்து

Friday, June 8, 2012

எலேய் சின்ராசு! வண்டிய நேரா உக்ரேனுக்கு ஓட்ரா!



என்னதான் குஷ்புவின் இடுப்பை புடித்துக்கொண்டு தொங்கினாலும் , என்னதான் பவர்ஸ்டாரின் புராணத்தை வண்டி வண்டியாய் பாடினாலும் கூட இந்த சொந்த பழக்கம் வந்து பாடாய் படுத்துகிறது. கொஞ்ச நாள் வேண்டாமே என்று நான் வாண்டட்டாக ஒதுங்கினாலும் , நான் ஆடாவிட்டாலும் என் தசை ஆடுகிறது. நூறு ஹிட்ஸ் தேறாது என தெரிந்து நான் ஒரு பதிவை எழுத துணிகிறேன் என்றால் அது நிச்சயம் உதைபந்தாட்ட பதிவாகத்தான் இருக்கும். வேண்டாம் சாமி என்று இருந்த என்னை எழுதுடா பன்னி என்று அன்புக்கட்டளையிட்ட அருமை அண்ணன் டாக்டர் டூலிட்டிலுக்கு ரொம்ப நன்றி.

ஐரோப்பாவின் உக்ரைன் மற்றும் போலாந்து நாடுகளின் நகரங்கள் அல்லோல கால்லோலப்படுகிறது காரணம் வேறு ஒன்றுமல்ல, உதைபந்தாட்ட உலககிண்ணத்துக்கு அடுத்த படியாக இந்த உலகமே ஆவலுடன் எதிர் பார்க்கும் 15வது  ஐரோப்பா கிண்ணம் ( யூரோ கப்) இந்த ஆண்டு இந்த இரு நாடுகளிலும் நடைபெறுவது தான் காரணம். நடை பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை வெறும் சில மணித்துளிகளே உள்ளன. இலங்கை மற்றும் இந்திய நேரப்படி இரவு 9.30க்கு போட்டி ஆரம்பமாகின்றது. முதல் போட்டியில் போட்டி நடத்தும் நாடான போலாந்தும் கிரீசும் மோதுகின்றன. இந்த உதைபந்தாட்ட திருவிழா இன்று ( 8 யூன்)  தொடக்கம் எதிர்வரும் ஜூலை 1ம் திகதிவரை களைகட்டப்போகிறது.இந்த போட்டித்தொடர் உக்ரைன் மற்றும் போலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பிரபலமான எட்டு மைதானங்களில் நடைபெறவிருக்கிறது.



ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டுமே பங்குபற்றும் இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி உலகக்கிண்ணத்துக்கு அடுத்த படியாக உதைபந்து வெறியர்களால் நேசிக்கப்படுவதாகும்.  16 அணிகள் பங்குபெறும் இந்த சுற்றுப்போட்டியில் இந்த பதினாறு அணிகளும் குழுவுக்கு நான்கு அணிகள் வீதம் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்போது அந்த குழு விபரங்களை கொஞ்சம் காண்போம்.



குழு A

போலாந்து

கிரீஸ்

ரஸ்யா

செக் குடியரசு

குழு B

நெதர்லாந்து

டென்மார்க்

ஜேர்மனி

போர்த்துக்கல்

குழு C

ஸ்பெயின்

இத்தாலி

அயர்லாந்து

குரோஷியா

குழு D

உக்ரைன்

சுவீடன்

பிரான்ஸ்

இங்கிலாந்து


போட்டி அட்டவணை



இப்போது ஒவ்வொரு குழுவிலுமுள்ள அணிகளை பற்றி சற்று சுருக்கமாக பார்க்கலாம்.முதலில் குழு Aயினைப் பார்க்கலாம்.

போலாந்து : 
போட்டியை நடத்தும் நாடு என்ற ரீதியில் மனோரீதியாக இவர்களுக்கு கிடத்திருக்கும் பலமே இவர்களது மிகப்பெரிய பலமாய் அமைந்திருக்கிறது எனலாம். ஸ்சான்ஸ்னே, பிஸ்செக் ,ஆஸ்கிகொவ‌ஸ்கி போன்ற வீரர்கள் அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என நம்பலாம்.

இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில்:- வெற்றி 3 (பெலாரஸ், ஹங்கேரி, பொஸ்னியா), தோல்வி 1 (இத்தாலி) , சமநிலை 2 (கொரியா, போர்த்துக்கல்)

கிரீஸ்:
2004இல் போர்த்துக்கல்லை தங்களது மண்ணில் வீழ்த்தி அந்த 13வது ஐரோப்பிய சம்பியன் கிண்னத்தை கைப்பற்றியதோடு சரி அதன் பின்னர் கிரீசிடமிருந்து எந்த ஆக்கபூர்வமான ஆட்டமும் வெளிப்பட்டிருக்கவில்லை. கற்சோரானிஸ், அவராம் பபடோபோலொஸ், சமாராஸ்ஆகிய சிறந்த வீரர்களைக் கொண்ட இந்த அணி இந்த முறையும் கிண்ணம் வெல்லும் கனவோடு நுளைகிறது, பார்க்கலாம் அதன் கனவின் நீளம் எவளவு தூரம் என்று.


இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில்:-  வெற்றி 2 ( குரோஷியா, ஜோர்ஜியா) , தோல்வி 1 ( ருமேனியா), சமநிலை 3 (லத்வியா , ரஸ்யா, பெல்ஜியம்)

ரஸ்யா:
சோவியத் யூனியன் 1960இல் முதலாவது ஐரோப்பிய கிண்ணம் பிரான்ஸில் நடந்த போது கோப்பையை கைப்பற்றியது, அப்போது  ரஸ்யா அந்த சோவியத் யூனியனில் ஒரு பகுதியாக இருந்தது. அதன் பிறகு ஹூம்........ இகோர் அகின்ஃபீவ், அராஷ்வின், லிஸ்மைலொவ், ஷிகோர்கோவ் , ஷகிர்கோவ் ஆகியோர் ஏதாவது செய்தால் ரஸ்யாவின் கோப்பை கனவு சாத்தியமாகலாம்.

இறுதி ஆறு போட்டிகளில் :- வெற்றி 4 ( டென்மார்க், அண்டோரா, ஸ்லொவாகியா, ஃபைரோம்) , சமநிலை 2 (அயர்லாந்து, டென்மார்க்)

செக் குடியரசு:
1976இல் சம்பியன், அதன் பின்னர் 1996 இல் இரண்டாமிடம் என்று நம்பிக்கையூட்டும் ஒரு அணி . உலக கிண்னப்போட்டிகளின் போது கூட பிரபல ஜாம்பவான் அணிகளின் கண்களில் மண் அள்ளிப்போட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அணி. பேட்டர் சேச், தோமஸ் நெசிட், தோமஸ் ரொசிக்கி, மிலான் பரோஸ் என்று திறமையான வீரர்களை கொண்ட அணி . 
இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில்:-  வெற்றி 4 ( மொன்டினெக்ரோ, லித்துவேனியா, உக்ரேன்,  மொன்டினெக்ரோ ), தோல்வி 1 ( ஸ்பெயின்), சமநிலை 1 (அயர்லாந்து)


இப்போது குழு Bஇல் உள்ள அணிகளைப் பார்க்கலாம். என்னைக் கேட்டால் இந்த முறை யூரோ கிண்னத்துக்கு பிரிக்கப்பட்ட குழுக்களில் இந்த குழுதான் மிகவும் பலம் வாய்ந்த குழு என்பேன். இந்த குழுவுக்குள் கடும் போட்டி நிலவலாம். 

நெதர்லாந்து:
கடந்த உலககிண்ணத்தில் அபார ஆட்டம் ஆடி மயிரிழையில் கிண்ணத்தை கோட்டைவிட்ட அணி, அது போக 1988இல் ஐரோப்பா கிண்ணத்தை தன் வசப்படுத்திய அணி. சமீபத்தைய பெறுபேறுகளும் ஓக்கே ரகம் தான். ரொபன், குயிற், வன் டெர் வீல், டீ ஜொங், வெஸ்லி ஸ்னைடர், பௌமா, வான் டிர் வார்த், இப்ராஹிம் அஃபேலே, வான் பேர்சி என்று நட்சத்திரப்பட்டாளம் குவிந்து கிடக்கின்ற அணி. இந்தவருட கோப்பையின் விளிம்புவரையாவது வந்து போகும் வாய்ப்பு அதிகம்.


நெதர்லாந்து அணி



இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில்:-  வெற்றி 3 ( மொல்டோவா, பின்லாந்து, இங்கிலாந்து) , தோல்வி 2 (சுவீடன், ஜேர்மனி), சமநிலை 1 (சுவிச்சர்லாந்து)

டென்மார்க்:-
குட்டி அணியென்று ஒதுக்கிவிட முடியாத அணி. காரணம் கடந்த போட்டிகளில் சுவீடன், போர்த்துக்கல், பின்லாந்து ஆகிய அணிகளை விரட்டி விரட்டி அடித்திருக்கிற‌து. டானியல் அகர், கிரிஸ்டியன் எரிக்சன், நிகொலை பொய்ல்சன் , வில்லியம் கிவிஸ்ட் ஆகிய திறமையான வீரர்களை கொண்ட அணி.1992இல் ஐரோப்பா கிண்ணத்தின் சம்பியன்கள் வேறு! இந்த குழுவில் உள்ள உதை பந்து ஜாம்பவான்களுக்கு தலைவலியாக இருக்கும் என்று நம்பலாம். 

இறுதியாக ஆடிய நான்கு போட்டிகளில் :- வெற்றி 3 ( போர்த்துக்கல், சுவீடன், பின்லாந்து) தோல்வி 1 (ரஸ்யா)

ஜேர்மனி: 
உதை பந்து பிரியர்களின் விருப்பத்தெரிவுகளில் தனியிடம் பிடித்த அணி, 2006, 2010 உலக கிண்னப்போட்டிகளி மூன்றாமிடம் 1970, 1980, 1996 ஆகிய வருடங்களில் ஐரோப்பா கிண்ன சம்பியன் ( ஜேர்மனிதான் அதிக தடவை ஐரோப்பா கிண்னத்தை கைப்பற்றியுள்ளது) அது போக 1976,1992,2008 ஆகிய வருடங்களில் இரண்டாமிடத்தையும் பெற்றிருக்கிறது. அசத்தலான ஆட்டம் இளம் வீரர்கள் என்பன இந்த அணியின் பலம்.  மனுவல் நொயர், பஸ்டியன் ஸ்டீன்ஸ்னேகர், பொடலஸ்கி, தோமஸ் முல்லர், போட்டங், பிலிப் லாம், ஹும்மல்ஸ், ஓர்ஸில், குரூஸ் என்று உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் வரிசையை கொண்டது . இந்த தடவை கோப்பையை வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள அணிகளில் இதுவும் ஒன்று.

இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில் :-  வெற்றி 3 (துருக்கி, பெல்ஜியம், நெதர்லாந்து) , தோல்வி 1 (பிரான்ஸ்), சமநிலை 2 (போலாந்து, உக்ரேன்)



போர்த்துக்கல்:
திறமையான அணியென்று அடையாளம் காணப்பட்ட போதிலும் இன்னமும் சர்வதேச அளவில் பேசும்படியாய் ஒன்றும் சாதிக்காத அணி. உலகக்கிண்ண‌த்தில் 1966இல் மூன்றாம் இடமும் ஐரோப்பா கிண்னத்தில் 2004இல் இரண்டாம் இடமுமே கிடைத்துள்லது. இந்த முறையாவது சாதிக்குமா? இவர்கள் கைகுடுக்கும் பட்சத்தில் கிரிஸ்டியானோ ரொனால்டொ, நானி, பெப்பே,மியரல்ஸ்.

இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில்:- வெற்றி 3 (சைபிரஸ், ஐஸ்லாந்து, பொஸ்னியா), தோல்வி1 (டென்மார்க்), சமநிலை 2( பொஸ்னியா, போலாந்து)


இப்போது குழு Cயைப் பார்க்கலாம்.

ஸ்பெயின்:
நடப்பு உலககிண்ண சம்பியனும் , நடப்பு ஐரோப்பா கிண்ண சம்பியனும் இந்த ஸ்பெயின் பயபுள்ளைக தான். பார்சினோனா, மட்ரிட், மன்செஸ்டர் சிட்டி என்று ஒரு கலக்கு கலக்கிய பிரபல வீரர்களை கொண்டு களம் காண்கிறது ஸ்பெயின். அரையிறுதி உறுதி, இந்த வீரர் வரிசையை கொஞ்சம் பாருங்களேன். கசியாஸ்,பீக்கே, சேர்ஜியோ ராமோஸ், ஜோர்டி அல்பா, சாவி மார்டினஸ், இனியஸ்டா, ஃபப்ரிகாஸ்,சாவி ஹெர்னாண்டஸ்,மற்டா, சாபி அலன்சோ, சேர்ஜியோ புஸ்டீகஸ், பெட்ரோ ரொட்ரீகஸ், டொரைஸ், டேவிட் சில்வா,லொரன்டே,கார்லஸ் புயோல் யப்பா கண்ண கட்டுதடா சாமீ........

இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில் :- வெற்றி 4 ( லிச்செஸ்டின், செக் குடியரசு, ஸ்கொட்லண்ட், வெனிசுவெலா), தோல்வி 1 ( இங்கிலாந்து), சமநிலை 1 (கொஸ்டாறிக்கா)


ஸ்பெயின் அணி



இத்தாலி:
2006ம் ஆண்டின் உலககிண்ண சம்பியன்கள், 1968இல் ஐரோப்பா கிண்னத்தின் சம்பியன்கள் அப்புறம் 2000இல் இரண்டாமிடம் கிடைத்தது. உலகின் சிற‌ந்த பின்வரிசை வீரர்களை கொண்ட அணியென்று பெயரெடுத்த இத்தாலிக்கு இந்த முரை கிண்னம் வாய்க்குமா? இந்த அணியின் பஃபோன், பிர்லோ, டீ ரோஸி ஆகிய பிரபல வீரர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில்:- வெற்றி 3 (வடக்கு அயர்லாந்து, போலாந்து, ஸ்லோவேனியா) , தோல்வி 2 (உருகுவே, ஐக்கிய அமெரிக்கா) , சமநிலை 1 (சேர்பியா) 

அயர்லாந்து:
உலக உதைபந்தாட்ட வரலாறுகளில் அதிகம் பேசப்படாத அணியாக இருப்பினும், சமீபகால ஆட்டம் பிரம்மிக்க வைகின்றது. கேன், டுன், கிவின் ஆகியோரது ஆட்டம் ரசிக்க வைக்கிறது. இத்தாலிக்கும், ஸ்பெயினுக்கும் ஒரு அழுத்தத்தை கொடுக்கக்கூடிய அணிதான்.

இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில்:-  வெற்றி 3 (அண்டோரா, எஸ்டானியா, ஆர்மேனியா) சமநிலை 3 (ரஸ்யா, எஸ்தோனியா, செக் குடியரசு)

 குரோஷியா:
சர்வதேச உதைபந்து உலகில் சொல்லும்படியாய் ஏது இதுவரை சாதிக்காத போதும் போட்டிகளின் போது எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருக்கக்கூடிய ஒரு அணி. நேயர்களின் விருப்பமாய், ஒரு உத்வேகத்துடன் ஆடும் அணி. இத்தாலிக்கு அதிர்ச்சி வைத்தியம் அலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவிக ஒலிச், சிர்னா, மொட்ரிச் ஆகியோரின் ஆட்டம் குரேஷியாவை இந்த ஐரோப்பா கிண்னத்தில பேசப்படும் அணியாக மாற்ற‌க்கூடிய வாய்ப்பு அதிகம்.

இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில்:-  வெற்றி 3 ( இஸ்ரேல் , லத்வியா, துருக்கி) , தோல்வி 2 ( கிரீஸ், சுவீடன்), சமநிலை 1 (துருக்கி)

இப்போது குழு D பக்கம் போகலாம்.

உக்ரேன்:
கத்துக்குட்டி அணிதான் என்றாலும் சந்தர்ப்பம் கிடைத்தால் இங்கிலாந்துக்கு கூட பாடம் கற்பிக்க தயங்காத ஆட்டமுறை இவர்களுடையது. திமொஸ்ஷொக்,ஷெவெஷென்கொ,யெர்மெலொன்கொ ஆகியோர் ஏமாற்றாத பட்சத்தில் உக்ரேன்ன் ரசிகர்களுக்கு இன்பாதிர்ச்சிகள் கிட்டலாம்.

இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில்:-  வெற்றி 4 (இஸ்ரேல், எஸ்டோனியா, பல்கேரியா, ஆஸ்ரியா), தோல்வி 1 (செக் குடியரசு) , சமநிலை 1 (ஜேர்மனி)

சுவீடன்:
கிரிக்கட்டில் நியூசிலாந்தை ஒத்த அணிதான் சுவீடன், அதிஉச்ச விளையாட்டும் இல்லை அதுபோல் காணாமல் போவதும் இல்லஒ. ஒரு உலகத்தரமான விளையாட்டு எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்கும். 1958 உலககிண்ணத்தில் இரண்டாமிடம்,1950,1994 ஆகிய உலககிண்ண போட்டிகளில் மூன்றாமிடமும் 1938 உலககிண்ன போட்டிகளில் நான்காம் இடமும் என்று தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துகொண்டுள்ளது. துரதிஷ்டவசமாக இதுவரை ஐரோப்பிய கிண்னத்தில் தான் எந்தவித பெறுபேறுகளும் கிடையாது. அதுவும் இந்த தடவை இப்ரஹிமோவிக், மெல்பேர்க், கல்ஸ்ட்ரோம் ஆகியோர் மனது வைத்தால் அதுவும் சாத்தியமாகிவிடும்.

இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில்:-  வெற்றி 4 (பின்லாந்து, நெதர்லாந்து, பஹ்ரையின், குரோஷியா), தோல்வி 2      (டென்மார்க் , இங்கிலாந்து)

பிரான்ஸ்:
ஸிடேன், ஹென்றி ஆகியோரின் ஓய்வுக்கு பின்னர் தடுமாறிய அணி தற்போது கொஞ்சம் சுதாகரித்து கொண்டுள்லது என்றுதான் சொல்லவேண்டும். 1998 உலககிண்ண சம்பியன், 2006இல் துரதிஷ்டவசமாக இரண்டாமிடம், 1958, 1986 ஆகிய உலககிண்ணங்களில் மூன்றாம் இடமும், 1982 உலககிண்னத்தில் நான்காம் இடமும் பெற்றுக்கொண்ட பிரான்ஸ் 1984, 2000 ஆகிய வருடங்களில் ஐரோப்பா கிண்னத்தையும் தனாதாக்கியது. ஸிடேன், ஹென்றி காலத்தில் கொடிகட்டி பறந்த பிரான்ஸ் , அவர்களது ஓய்வுக்கு பின்னர் பலத்த சரிவைக்கண்டது. இப்போது பென்ஸமா, றிபரி, எவ்ரா, மக்ஸிஸ், மலூடா,, நஸ்ரி ஆகியோரது ஆட்டத்தில் கொஞ்சம் மீண்டு உள்ளது. சுவீடன் , இங்கிலாந்து ஆகிய அணிகள் களத்தில் உள்ளபடியால் சூதானமாக ஆடவேண்டியது அவசியம்.

இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில்:-  வெற்றி  3 (அல்பேனியா, அமெரிக்கா, ஜேர்மனி) , சமநிலை 3 (பொஸ்னியா, பெல்ஜியம், பொஸ்னியா)



இங்கிலாந்து:
எப்போதும் சிறந்த தனிப்பட்ட வீரர்களை கொண்டிருக்கும் அணி, ஆனால் சிறந்த ஒரு அணியாக பரிமளிக்க தவறும் அணியாக் இருக்கிறது இங்கிலாந்து. 1966இல் உலககிண்னத்தை வென்றதன் பின்னர் 1990 உலககிண்ணத்தில் நான்காம் இடம். அதன் பின்பு ஒரு பப்படமும் சுடவில்லை இங்கிலாந்து. ஆனால் உலகுக்கு தலைசிறந்த வீரர்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. அணிக்குள் ஒரு கூட்டு முயற்சி இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம். இந்த தடவை அணியை பாருங்கள். ஆஸ்லே கோல், ஜோன் டெரி, பில் ஜோன்ஸ், ஸ்டீவன் ஜெராட், அஸ்லே யங், தியோ வோல்கொட் , ஸ்கொட் பார்க்கர், ரூனி, ஜோ ஹார்ட்,  அன்டி கரோல் என்று மிரட்டும் கூட்டணி. பார்க்கலாம் இப்போதாவது இங்கிலாந்து சாதிக்குமா என்று.

இறுதியாக ஆடிய ஆறு போட்டிகளில்:- வெற்றி 4 (பல்கேரியா, வேல்ஸ், ஸ்பெயின், சுவீடன்) தோல்வி 1 ( நெதர்லாந்து) சமநிலை 1 (மொனினேக்ரோ)

இப்போது எனது நாறவாயை திறக்கும் நேரம், அதுதாங்க இந்த குரூப் ஸ்டேஜில் இருந்து கால் இறுதி போட்டிக்கு (குவாட்டர் ஃபைனல்) எந்த எந்த அணிகள் தகுதி பெறும்னு இப்பொ கிளி ஜோசியர் கிஷோகர் கணித்து சொல்லுவார்.

சும்மா ஒரு ஜாலிக்குத்தான் கோவிக்காதிங்க!


குழு Aயிலிருந்து செக் குடியரசு, போலாந்து.

குழு Bயிலிருந்து ஜேர்மனி, நெதர்லாந்து

குழு Cயிலிருந்து ஸ்பெயின் , இத்தாலி ( சிலவேளை இத்தாலிக்கு குரோஷியா ஆப்பு அடிக்கலாம்)

குழு Dயிலிருந்து பிரான்ஸ் இங்கிலாந்து ( சிலவேளை பிரான்ஸுக்கு அல்லது இங்கிலாந்துக்கு சுவீடன் ஆப்பு அடிக்கலாம்).

டிஸ்கி: அவசர அவசரமாக தாயாரித்த பதிவு, சில நேரங்களில் தகவல் பற்றாக்குறையோ அல்லது தகவல்களில் சிறு பிழைகளோ இருக்கலாம், அப்படி ஏதும் நிகழ்ந்திருப்பின் இந்த சிறுவனை பெரியவா நீங்கள் மன்னிக்கவும்.

டிஸ்கி: விரிவான அலசல்கள், கிண்ணம் வெல்வது யார் ? வகையறா பதிவுகளை லீக் ஆட்டம் முடிய தருகிறேன். காரணம் இப்போது பதினாறு அணிகள், ஒவ்வொரு அணியையும் அலசி ஆராய எனக்கு நேரம் போதாது, ( ஹெவி புராஜக்ட்பா...) அது போக லீக் முடிவில் ஒவ்வொரு அணியின் ஆட்டத்தை வைத்துக்கொண்டு கணிப்பிடுவது கொஞ்சம் இலகுவாகவும் இருக்கும்.

தங்கமே உன்னய எந்த மவராசன் தள்ளிக்கிட்டு போக போறானோ?


22 comments:

  1. //எப்போதும் சிறந்த தனிப்பட்ட வீரர்களை கொண்டிருக்கும் அணி, ஆனால் சிறந்த ஒரு அணியாக பரிமளிக்க தவறும் அணியாக் இருக்கிறது//
    நான் இங்கிலாந்து பாலோவர்...உங்கள் கருத்துகள் 100% சரியே...இந்த முறையாவது இங்கிலாந்து சாதிக்க வேண்டும்.பார்க்கலாம்
    நல்ல அலசல்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ராஜ்! உங்கள் இங்கிலாந்து இந்த தடவையாவது சாதிக்க வாழ்த்தூக்கள். நல்ல பயலுக தான் மச்சி, டீம்ன்னு வந்த சொதப்பிடுறாய்ங்க!

      Delete
  2. //திறமையான அணியென்று அடையாளம் காணப்பட்ட போதிலும் இன்னமும் சர்வதேச அளவில் பேசும்படியாய் ஒன்றும் சாதிக்காத அணி.//
    அண்ணன் ரொனால்டோ இருப்பதே போர்த்துக்கலுக்கு மெகா சாதனை தாண்டா!!
    ஓங்கி அடிச்சா ஒண்டரை டஜன் கோலுடா... பார்க்குறியா? பார்க்குறியா??

    தம்பி.. உங்கள் நடையே நீங்கள் அதிகம் பக்கம் சாயும் அணியைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.. ஜேர்மனி டீம் மேல எனக்கு எந்த பகையும் இல்லாட்டிக்கும், நெதர்லாந்து, போர்த்துக்கல் உள்ளிட்ட தங்கக் குட்டிகள் வரவேண்டியுள்ளதால் அதை சிறிது எதிர்க்க வேண்டியுள்ளது...

    ReplyDelete
    Replies
    1. ///அண்ணன் ரொனால்டோ இருப்பதே போர்த்துக்கலுக்கு மெகா சாதனை தாண்டா!!
      ஓங்கி அடிச்சா ஒண்டரை டஜன் கோலுடா... பார்க்குறியா? பார்க்குறியா??///

      இப்பிடி சொல்லி சொல்லியே காலத்த ஓட்டுங்கடா, இங்க ஓர்சில் கிடையாது அத்த ரொனால்டோ மறக்காம இருந்தா சரித்தான். மொதல் மேச்சிலேயே பெப்பேவுக்கு ரெட்கார்ட். அண்ணன் மொரின்ஹோவின் பாசறையில் வளர்ந்தவன் அல்லவா?

      ////தம்பி.. உங்கள் நடையே நீங்கள் அதிகம் பக்கம் சாயும் அணியைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.. ஜேர்மனி டீம் மேல எனக்கு எந்த பகையும் இல்லாட்டிக்கும், நெதர்லாந்து, போர்த்துக்கல் உள்ளிட்ட தங்கக் குட்டிகள் வரவேண்டியுள்ளதால் அதை சிறிது எதிர்க்க வேண்டியுள்ளது...////

      நான் சாய்ந்து சொல்லவில்லை, எனக்கு ஜேர்மன் பிடிக்கும் அப்புறம் பிரான்ஸ். நெதர்லாந்து தங்க குட்டி தான் பச்சே அந்த போர்த்துக்கல்லு சாணிக் கட்டி மச்சி.....

      Delete
  3. ச்சும்மா ஒரு ஜாலிக்காக என் கணிப்புக்கள்-

    GROUP A -
    * ரஷ்யா வாழ்க !!! அர்ஷாவின் வாழ்க!!
    (சமீபத்துல எதுலயுமே தோக்காம undefeated formல இருக்கானுங்க.. இத்தாலியையும் வேற போட்டு வாங்கியிருக்கானுங்க.. கன்ஃபார்ம்!)

    * ரெண்டாவது எது வரும்னே யோசிக்க முடியலை மச்சி! அது மூணுலயும் பெருசா ஆர்வமும் இல்லை.. அதுனால நம்ம செல்சீ கோல்கீப்பருக்கே இடங் கொடுப்போம்.. செக்!

    ReplyDelete
    Replies
    1. ரஸ்யாவ கூட யோசிச்சேன் மச்சி, ஆனா அவனுகள விட செக் குடியரசோட ஆட்டம் கொஞ்சம் நல்லா இருக்கு, அது போக ரஸ்யா அடிச்சது எல்லாம் சப்ப டீமுக டென்மார்க் தவிர, இத்தாலியும் இப்போது வரைக்கும் சப்ப தான், யாரு கண்டா, இந்த கோப்பையில எப்புடி ஆடப் போறாய்ங்களோ. அப்புறம் போலாந்து சொந்த மண், வ்ருவாய்ங்கன்னு நம்புறன்!

      Delete
    2. எந்த தைரியமிருந்தா ரஷ்யாவை குறைச்சு எடை போடுவ?.. பார்த்தேல்ல நேத்து செக்குக்கு அடியை! அர்ஷாவின் ஆட்டம் க்ளிக்ஸ்.. 2 அஸிஸ்ட்!!

      போலந்து - க்ரீஸ் மேட்சு சுமாராத்தான் போச்சு.. மொத பாதியில கிக்கேயில்லை.. போலந்தும் நல்லா விளையாடுறாப்புலதான் தெரியுது.. வரலாம்! :)

      Delete
    3. இங்க இப்போதைக்கு நோ கொமெண்ட்ஸ்....

      Delete
  4. GROUP B -
    * தப்புத் தப்புத் தப்பு.. நெதர்லாந்தை தாண்டி எவன் வந்தாலும் தப்பு! நம்ம நாட்டு கிரிக்கெட் டீம் மாதிரி வேர்ல்டு கப் ஃபைனலுக்கு வரைக்கும் வந்து ஏமாத்திட்டாங்க.. இதுக்கு செமி ஃபைனல் மட்டுமாவது கட்டாயம் வருவானுங்க!

    * ஐ ஆம் வெரி சாரி மச்சி!! மொதல்லயே சொன்ன மாதிரிதான்.. ஜேர்மனி செம்ம டீம்! ஆனா போர்த்துக்கலை விட்டுக் கொடுக்க மனசு வர மாட்டேங்குது! வாழ்க அண்ணன் ரொனால்டோ!!!

    ReplyDelete
    Replies
    1. ///தப்புத் தப்புத் தப்பு.. நெதர்லாந்தை தாண்டி எவன் வந்தாலும் தப்பு! //

      எவன்டா இல்லேன்னது? நெதர்லாந்து நல்ல டீம் தான். அவனுக வருவானுக தான் , அத தானே நானும் பதிவுல சொல்லி இருகேன். சொட்டத்தலயன் ரொபனோட ஆட்டம் பாக்கவே அவனுகளுக்கு சப்போர்ட் பண்ணலாம். இந்த ஸ்னைடர் பயல் வேற அசத்துறான் இல்ல.

      ///
      * ஐ ஆம் வெரி சாரி மச்சி!! மொதல்லயே சொன்ன மாதிரிதான்.. ஜேர்மனி செம்ம டீம்! ஆனா போர்த்துக்கலை விட்டுக் கொடுக்க மனசு வர மாட்டேங்குது! வாழ்க அண்ணன் ரொனால்டோ!!!///

      இப்போ ஐ ஆம் வெரி சாரி மச்சி, ரொனால்டோவுக்காக என்னதான் நீயி அழுது வடிச்சாலும் ஜேர்மன் ரெண்டாவது ரவுண்டுக்கு நிச்சயம் வருவய்ங்க. சோ.... நெதர்லாந்து + ஜேர்மன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரொனால்டோ........ அடுத்த முறையாவது குழுA போல ஒரு குழு உங்களுக்கு அமையட்டும்.

      Delete
    2. இன்றுதான் கலாசலா ஆட்டங்கள்!!

      * நெதர்லாந்து ஜெயிப்பது உறுதி!!
      * ரெண்டாவது மேட்சுக்கு போர்த்துக்கல் சப்போர்ட்டு.. டிராவில் முடிந்தாலும் மிக்க மகிழ்ச்சி!

      Delete
    3. என்ன மாப்ள இப்போ உன்னோட பிரடிக்க்ஷன் எல்லாம் தல கீழா போவுது. நெதர்லாந்துக்கு டென்மார்க் ஆப்ஸ் ( நான் விரும்பாததும் கூட) , ஆனால் நான் விரும்பிய + எதிர் பார்த்த ஒன்று ந்டந்தது, என்ன ரொனால்டோவுக்கு வுட்டனுகளா? கண்ணா .. ரொனால்டோவும் நீயும் ஒண்ணு புரிஞ்சுக்கணும். ஓஸில் ஆடுறது இப்போ ஜேர்மன் பக்கம். பெபேவ வச்சி ஒரு பப்படமும் சுட முடியாது புரிஞ்சுக்கோ.

      Delete
  5. GROUP C -
    * ஸ்பெயின்னு நாம சொல்லித்தான் தெரியனுமா.. சூனியமே வைச்சாலும் அசராத பயலுங்க! டீமுல எவ்வளவு பேரு நின்னாலும் கேப்டன் கசியஸ்தான் என்னோட மோஸ்ட்டு ஃபேவரிட்டு.
    அப்புறம் ரேமோஸும், புயோலும் பக்கத்து பக்கத்துல நின்னுகிட்டு, ஒரே ஜெர்சி போட்டுகினு விளையாடும் அந்த கண்கொள்ளாக் காட்சி!!

    * இத்தாலி சாவுகிராக்கி பயலுங்க.. அவனுங்களுக்கு இப்போ இல்ல.. எப்பவுமே சப்போர்ட் பண்ண மாட்டேன்! அதுனால நம்ம பிக் அயர்லாந்து!!

    ReplyDelete
    Replies
    1. ////அப்புறம் ரேமோஸும், புயோலும் பக்கத்து பக்கத்துல நின்னுகிட்டு, ஒரே ஜெர்சி போட்டுகினு விளையாடும் அந்த கண்கொள்ளாக் காட்சி!!/////

      அந்த நாளுக்காக நானும் ஆவலோடு வெயிட்டிங், நமக்கு சாபி, இனெயெஸ்டா அப்புறம் சில்வா.

      இத்தாலி சொல்ல முடியாது, வந்தாலும் வந்துருவானுக. எனக்கென்னவோ அயர்லாந்தை விட குரோஷியா அதிர்ச்சி வைத்தியம் குடுப்பானுக என்று நம்புறேன்.

      Delete
  6. GROUP D -
    * பிரான்ஸ்! பிரான்ஸ்!! பிரான்ஸ்!!! பிரான்ஸ்!!!! பிரான்ஸ்!!!!!
    சப்பையா ஆடுனாலும், சப்புச்சப்புன்னு ஆடுனாலும் என்றும் எனக்கு முதல்நிலை அணி பிரான்ஸே!!!

    * இங்கிலாந்து எவ்வளவு டுபாக்கூர் அணியாவே இருந்தாலும், அவங்க மேட்சுல அவங்க பிளேயர்ஸை விட்டு கண்ணை நகர்த்தவே முடியாது. அதுனால இங்கிலாந்துக்கு ரூட் பண்றேன்!! (ஆனாலும் அந்த இப்ராஹிமுவிக் பய பேய் அடி ஆடிச்சு டீமோட முன்னேறுவான்னு உள்மனசு சவுண்டு வுடுது..)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஜேர்மன் + பிரான்ஸ் என் இரு கண்கள். ஸிடேன் , ஹென்றி போனதுக்கு அப்புறம் ஜேர்மன் ஒரு மார்க்கு கூட வாங்கிடிச்சி . எனது வோட்டு ஜேர்மன் 51% பிரான்ஸ் 49%. இந்த பிரான்ஸ் மேட்டரில‌ நம்ம ரெண்டு பேரு டேஸ்டும் கொஞ்சம் ஒத்துப்போகுது மச்சி...

      ////ஆனாலும் அந்த இப்ராஹிமுவிக் பய பேய் அடி ஆடிச்சு டீமோட முன்னேறுவான்னு உள்மனசு சவுண்டு வுடுது.///

      அதே நெனைப்பு தான் எனக்கும் , அது தான் பிரான்ஸுக்கோ, இங்கிலாந்துக்கோ சுவீடன் ஆப்பு அடிப்பதாக கனவு கண்டு பதிவு போட்டேன்.

      Delete
  7. நேற்றைக்குத்தான் தல யாருன்னு கண்ணுல பட்டது.எல்லா விளையாட்டிலும் ரொம்ப வெவரமான ஆளுதான் போல நீங்க:)

    ஐரோப்பா பந்தாட்ட குழுக்கள் பற்றிய வர்ணனைக்கு தனியாக பாராட்டுக்கள்.

    நமக்கும் கிரிக்கெட் கிறுக்கை விட கால் உதை பந்தாட்டம்தான் இனிப்பு.நேரம்,தொலைக்காட்சிகளையும் குறிப்பிட்டா நாங்களும் வண்டியை உக்ரைனுக்கு விடுவோமில்ல!

    ReplyDelete
    Replies
    1. அண்ணே வணக்கம், எப்பவும் ஈயாடும் நம்ம பிளாக்குக்கு வந்தது நீங்க முற்பொறப்பில பண்ணின பாவம். வேற என்னத்த சொல்ல?

      ஏது தலயா? அண்ணே இப்புடி ஏத்திவிட்டு உச்சாணி கொப்பில வுட்டு தள்ளிவுட்டுராதிக, நான் கணிப்பு சொல்லப் போயி எல்லாம் தல கீழா நடந்து, இந்த பதிவுலகத்தில இருக்கிற பய புள்ளைக எல்லாம் என்னய சாணிய கொண்டு அடிச்சது வரலாறு. என்னோட பெருமைய நான் சொல்லப்படாது நீங்க கேட்டதால சொன்னன் அம்புட்டுத்தான்.

      வெளையாட்டில வெவரம் எல்லாம் கெடயாது தலைவா, ஏதோ எனக்கு பட்டதை எழுதுறேன் அம்பிட்டுத்தான். நல்ல இருந்தா படிங்க , நல்லா இல்லன்னாலும் படிங்க ஆனா அடிக்காதிங்க.

      நேரம் இப்பிடித்தான் நண்பா, போட்டி நடக்கிறது உக்ரேன் மற்றும் போலாந்து . இலங்கை , இந்தியா நேரங்களில் இருந்து 3.30 மணத்தியாலங்கள் பின்னோக்கி இருக்கும். ( உதாரணம் அங்கே பிற்பகல் 12.00ன்னா நமக்கு இங்கே பிற்பகல் 3.30). இந்த பதிவில ஒரு போட்டி அட்டவணை இருக்கு பாருங்க. அதுல ஒவ்வொரு போட்டிக்கான நேரம் குறிப்பிட்டு இருக்கு. அப்புறம் என்ன அதிலிருந்து 3.30 மணத்தியாலத்த கூட்டி இந்திய நேரத்தை கணக்கிடுங்கள். என் ஜாய் பண்ணுங்கள். அனேகமாக போட்டிகள். இலங்கை மற்றும் இந்திய நேரப்படி 9.45 மற்றும் 12.45க்கு ஆரம்பிக்கின்றன.

      வீட்டில் அம்மாவோ, மனைவியோ சீரியல் பார்ப்பதை நிறுத்த தயார் என்றால் உடனே ESPN, STAR SPORTS அழுத்துங்கள். இல்லை சீரியல் உங்களை சீரியசாக்கி ஆஸ்பத்திரியில் போடுவது போல் இருந்தால் உடனே இந்த இணையத்துக்கு ஓடுங்கள். www.livetv.ru/en

      நண்பா நடராஜா விடுப்பா வண்டியா உக்ரேனுக்கு! வருகைக்கும் , பின்னூட்டத்துக்கும் நன்றிண்ணே!

      Delete
  8. எல்லாம் சரியப்பு. இந்த முறையும் அது வெல்லும் இது வெல்லும் எண்டு தப்பு தப்பா கட்டியம் சொன்னியோ கொலைவெறியாகிடுவன்.. :P :D

    அது எங்கிருந்துப்பா தலைப்பு தேடிப்பிடிக்கிற??? அசத்தல்

    ReplyDelete
    Replies
    1. அட அது நம்ம வாயோட முகூர்த்தம் நண்பா! அதுக்கு ஏத்தா போலா இந்த பக்கிபயலுவ வேற ஆடுறானுவ! இந்த மொற ரொம்ப அதிகமா சறுக்காது என நம்புவோம்!

      டைட்டிலா???? அது எல்லாம் தானா வருதுன்னு புழுக மாட்டேன், எல்லாம் நம்ம டாக்டர் டூலிட்டில பாத்து கொப்பி அடிக்கிறது தான் மச்சி, நேரகாலத்தோடு அட்டெண்டன்ஸ் போட்டதுக்கு தாங்கஸ்!

      Delete
  9. அந்த நான்கு அணி குழுவில் இலங்கை அணியும் அதை வழிநடத்தும் கிஷோகர் தலையையும் காணவில்லையே ? என்ன காரணம் ? யார் செய்த குற்றம் ?

    ReplyDelete
    Replies
    1. யோவ் டாக்டரே! உமக்கு வாய் சும்மா இருக்காதா? தெரியாத வேலைக்கு எல்லாம் நீர் ஏன் ஓய் வாறீர்? போய் குதிர ரேஸ் , கோழி சண்ட ஏதுனாச்சும் பாக்க வேண்டியது தானே? வந்துட்டாரு துவைக்காத அந்த்ய பழைய கோர்ட மாட்டிக்கிட்டு.....

      கிஷோகர் குஷ்புவுக்கு ஸ்ரீலங்காவில கோயில் கட்டுறது தொடர்பில் பேசுவதற்கு மஹிந்த மாமா வீட்டிற்கு போயிருப்பதாக பிந்திக்கிடைத்த விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...