உதைபந்து

Sunday, June 17, 2012

உங்களுக்கு எதுக்கடா தமிழீழம்? நாக்கு வழிக்கவா?


ஹீத்ரோ விமான நிலையத்தில் வரவேற்பு

தலைப்பை பார்த்ததும் என்னை "புல்' என்றும் "புலையன்" என்றும் திட்டித்தீர்த்து எத்தனை பேர் வந்தீர்கள். நெஞ்செங்கும் கோபம் எரிய இந்த புழுவை கொழுத்து என்றும் கொல் என்றும் அனல் கக்கும் கோப வெறியோடு வந்தீரோ? நல்லது வாருங்கள். உங்களைவிட அதிக கோபத்தில் தான் இந்த பதிவை எழுதுகிறேன். உங்களுக்குள் எரியும் கோபத்தைவிட சில அற்ப பதர்களின் செயல்களால் பெற்றோலில் விழுந்த பஞ்சைவிட அதிகமாகவே எரிகிறேன்.

சரி இப்போது விடயத்துக்கு வருகின்றேன். இலங்கையில் விடுதலைப் புலிகளின் தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டநிலையில் தமிழீழம் என்பது வெறும் பேப்பர்களில் மட்டுமே இருந்தது. அத்தோடு இலங்கையில் இருக்கும் தமிழர்களால் தமது தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதே சூனியமாகி போய்விட்டிருந்த காலகட்டத்தில் தமிழீழம் பற்றி அவர்கள் நினைத்துப் பார்பதே பூச்சிய நிகழ்தகவாகி போனது.

இந்த நிலையில் தான் தமிழீழம் என்ற கோட்பாட்டை தமது கையில் எடுத்தார்கள் புலம் பெயர் தமிழர்கள். விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டது பொறுக்காது அல்லது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் இல்லாத ஒரு சில தமிழர்களால் தமது மனதை தாமே சமாதானப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்றே இந்த புலம் பெயர் தமிழர்களின் தமிழீழ கோட்பாடு சகல தரப்பினராலும் பார்க்கப்பட்டது. ஆனால் 2009 மே மாதத்துக்கு பின்னர் இந்த நாள் வரை அவர்களது செயற்பாடு விஸ்வரூபமாய் யாரும் எதிர்பாத்திராத அளவு வளர்ந்து நிற்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசை பிரகடனம் செய்தார்கள், தமக்கென்று ஒரு பிரதமர் அமைச்சர் குழாம் உருவாக்கினார்கள், இலங்கையின் அல்லது இலங்கை அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளை தாம் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளில் முடக்கிப் போட்டார்கள். இலங்கையின் புலனாய்வு வட்டாரங்களும் , ராஜதந்திரிகளும் கணித்ததுக்கு மேலாய் இருந்தது புலம் பெயர் தமிழர்களின் நடவடிக்கை. உலகில் சுதந்திரமும், சமத்துவமும், பேச்சு சுதந்திரமும் , ஜனநாயகமும் மிகுந்த நாடுகளுள் ஒன்றான பிரித்தானியாவில் , இலங்கையின் அதிபரது ராஜதந்திர நகர்வுகளை கூட முடக்கி போட்டது யாருமே எதிர் பாத்திராத ஒரு நகர்வு. இவ்வாறாக தமது தமிழீழ கோட்பாட்டில் அடுத்தடுத்து முன்னேறி வரும் புலம் பெயர் தலமையிலான நாடுகடந்த தமிழீழ அரசு சமீப காலத்தில் வெளியுலகோடு பல்வேறு தொடர்புகளை பேணுவதற்கு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக வெகுஜன ஊடகங்களை பயன்படுத்துவதில் தொடங்கி விளையாட்டு நிகழ்வுகளை குறிவைத்தும் காய் நகர்த்தி வருகிறது.

இதன் ஒரு கட்டமாகத்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தமிழீழ உதைபந்தாட்ட அணியின் உதை பந்து பிரவேசம் அமைந்திருந்தது. ஒரு நாட்டுக்கு விளையாட்டு அவசியம் என்ற அடிப்படை தேவையைத் தாண்டி , உலகின் பிரபலமான ஒரு விளையாட்டில் இன்னமும் அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டின் அணியை களமிறக்குவதன் மூலம் , தமிழீழ‌ம் என்ற ஒரு நாட்டை உலகின் பேசுபொருளாக ஆக்குவது என்ற ராஜதந்திர வெற்றியை எட்டுவதற்கே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கணக்கிட்டு காய் நகர்த்தியது. இதை நாடுகடந்த தமிழீழ அரசின் விளையாட்டுத்துறை அமைச்சரும் தனது பேட்டியொன்றின் போது குறிப்பிட்டிருந்தார்.

அந்த அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்காக ஃபீபா நடாத்தும் வீவா உலக கிண்ணத்தில் தனது கன்னி பிரவேசத்தை கண்டது தமிழீழ அணி. செய்திகளிலும் , இணையத்திலும், அதுபோக நண்பர்களது பேஸ்புக்கிலும் இந்த கிண்ணம் தொடர்பாகவும், தமிழீழ அணி தொடர்பாகவும் செய்திகள் + புகைப்படங்களை நான் பார்த்து இருந்ததால் இந்த போட்டி பற்றி தேடவும், படிக்கவும் செய்தேன். எனது வேலைப்பழு காரணமாக போட்டி இடம்பெற்ற காலப்பகுதியில் அது தொடர்பான செய்திகளையோ , காணொளிகளையோ பார்ப்பதற்கு கிடைக்கவில்லை. அது போக இந்த போட்டியின் முடிவு பற்றியோ , மேலதிக விபரங்கள் தொடர்பிலோ எந்த நண்பர்களும் ஃபேஸ்புக்கில் ஏதும் பின்னர் பதிவிடவில்லை. சில நாட்களுக்கு முன்னர் யூரோ போட்டிகளுக்காக பதிவொன்றை தயார் செய்வதற்கு இணையத்தை மேய்ந்த போது தான் இந்த வருடத்துக்கான  வீவா உலககிண்ண போட்டிகளின் முடிவுகள் + காணொளிகள் என்பனவற்றை பார்க்க கிடைத்தது.

உலகம் முழுவதும் செறிந்து வாழும் ஒவ்வொரு தமிழனின் ஆர்வத்தை போலவே நானும் ஆர்வத்துடன் தமிழீழ அணியின் ஆட்டத்தை காண்பதற்கு காணொளிகளை தேடினேன். நான் தேடிய இணையங்களில் எந்த விதமான முழுமையான போட்டி  காணொளிகளும் இடம்பெற்றிருக்கவில்லை. "யூ டியூப்பில்" ஒரு சில வீடியோக்கள் மட்டுமே தரவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் என் ஆர்வம் அத்தனையும் செத்துப் போய் , சில நிமிடங்களுக்கு நான் கிட்டத்தட்ட ஒரு வெறி கொண்ட அகோரி போல் ஆகிவிட்டேன். எனக்கு தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் அந்த தமிழீழ அணிமீது உமிழ்ந்து தள்ளினேன்.  யூரோ கிண்ண பதிவை கைவிட்டு இந்த பதிவை எழுத தொடங்கி விட்டேன்.


இணைக்கபட்டிருந்த அநேகமான காணொளிகளில் விஷேடமாக வீரர்கள் பேசும் போது  பச்சையாய் ஆங்கிலம். பேட்டி கொடுக்கும் போது சரி , மைதானத்துள்ளே அணிவீரர்கள் குழு சபதத்தின் போதும் சரி பச்சையாய் கொச்சையாய் ஆங்கிலம். மருந்துக்கு ஒரு தமிழ் வார்த்தை கிடையாது. கேட்டால் தமிழீழ (?????) உதை பந்தாட்ட அணி!!!

முதலில் தயவுசெய்து யாராவது தமிழீழம் என்றால் என்னவென்று வரையறுப்பீர்களா? என்னடா இப்படி கேட்கிறானே என்று நினைக்க வேண்டாம், விடுதலைப் புலிகள் இருந்த வரையில் எனக்கு தமிழீழம் என்றால் என்னவென்று தெளிவான ஒரு அறிவு இருந்தது, ஆனால் இப்போது புலம் பெயர் தமிழர்களால் கொண்டு நடாத்தப்படும் இந்த தமிழீழம்  தொடர்பில் சமீப காலமாக எனக்கு மயக்க நிலை தோன்றி இருக்கின்றது.

எனக்கு தெரிந்து தமிழீழம் என்பது "தமிழர்களது" தேசம். தமிழர்கள் என்பவர்கள் யார்? தமிழர்கள் என்போர் உலகில் வழங்கிவரும் மொழிகளுள் ஒன்றான 'தமிழ்" என்ற மொழியை "பேசுகின்ற", "எழுத", "வாசிக்க" தெரிந்த ஒரு மக்கள் கூட்டம். இப்போது இந்த வரைவிலக்கணங்களின் அடிப்படையில் எத்தனை புலம் பெயர் தமிழர்கள் தமிழர்கள் என்ற பதத்துக்குள்  அடங்குகின்றீர்கள்? நீங்கள் அந்த தமிழர் என்ற வட்டத்துக்குள் அடங்கி விட்டீர்களானால் சந்தோஷப்பட்டுகொள்ளுங்கள். சரி இந்த எழுத, வாசிக்க வகையறாவுக்குள் நுளைவதற்கு முன்னர் இந்த தமிழீழ உதைபந்தாட்ட அணியுடன் மீதமிருக்கின்ற வாய்க்கால் தகராறை முடித்துக்கொண்டு வருகின்றேன்.

நீங்கள் தமிழீழ அணியை பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள் ஆனால் உங்களது எந்தவிதமான நடவடிக்கைகளிலும் நீங்கள் தமிழர் என்ற அடையாளத்தை காணமுடியவில்லையே! பேட்டி கொடுக்கிறீர்கள் ஆங்கிலத்தில்! சக வீரருடன் உரையாடுகிறீர்கள் ஆங்கிலத்தில் அட , அதை தான் மன்னித்துவிடுவோம் , ஆனால் போட்டி தொடங்கமுன்பு வீரர்கள் கூடி எடுக்கும் குழுசபதத்தை கூட ஆங்கிலத்தில் தான் எடுக்கிறீர்கள். இறுதியில் "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் " என்ற சப்பைகட்டு வேற! புலிகளின் தாரக மந்திரமான இதை நீங்கள் உங்கள் வாயால் சொன்னது அந்த கூற்றையே கொச்சை படுத்துவது போன்றது. இந்த மந்திரம் தமிழனுக்கு உரியது, தமிழன் என்பவன் தமிழை நேசிப்பவன் சுவாசிப்பவன். தன் இனத்தவனுடனேயே ஆங்கிலத்தில் குப்பை கொட்டும் சாக்கடைகள் எல்லாம் தமிழனாய் ஆகிவிட முடியாது. தமிழன் என்ற போர்வைக்குள் இருக்க உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் எல்லாம் தமிழ் அப்பனுக்கு பிறந்தவர்கள் தானா?

தமிழீழ உதைபந்தாட்ட அணி


சரி நீங்கள் ஆங்கிலத்தில்  கொடுத்த பேட்டியை கூட , நானாக ஒரு சமாதானத்துக்கு எடுத்துக்கொள்கிறேன் எவ்வாறெனில் அதாவது வேற்று மொழி எவனாவது இந்த காணொளியை பார்க்கும் போது உங்களது நோக்கங்களை , அனுபவங்களை நீங்கள் ஆங்கிலத்தில் கூறி இருப்பதால் தமிழீழம் தொடர்பான ஒரு அனுமானத்தை அவர்களால் மேற்கொள்ள முடியும் என்ற கோணத்தில் அந்த பேட்டி விடயத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் போட்டிக்குமுன்னரான குழுநிலை சபதம் ( அது தாம்பா போட்டி தொடங்க முன்னர் வட்டமாக நின்று அணிவீரர்கள் தங்களுக்குள்  பேசிக்கொள்வார்களே) என்பது ஒரு  போட்டிக்கு உத்வேகம்! ஒரு அணியின் அணியின் ஓர்மத்தின் வெளிப்பாடு, போட்டிக்கு முன்னர் ஒரு அணி களத்தில் தான் சாதிக்கவேண்டியதை வீரர்களை உசுப்பேற்றி விடுவதன் மூலம் சாதிக்க ஆரம்பிக்கும் முன்நிலை தருணம். அப்படியான இந்த குழுநிலை விவாதத்தில் தமிழீழ அணியென்று புறப்பட்டு போன நீங்கள் உங்களுக்குள் ஆங்கிலத்தில் பீற்றியதை என்னவென்று சொல்ல? என்ன சொல்லி இதற்கு சப்பைகட்டு கட்ட போகிறீர்கள்? நீங்கள் தமிழர்கள் தானே? அதுவும் தமிழீழம் என்ற தனிநாட்டுக்கான ராஜதந்திர நகர்வான நீங்கள் இப்படி வேறு தேசம் போய் நடுமைதானத்தில் நின்று ஆங்கிலத்தில் வாந்தி எடுத்ததை அந்நியன் எவனாவது  பார்த்தால் சிரிக்க மாட்டானா? சொந்த மொழி பேச கூசும் , அல்லது பேச தெரியாத உங்களுக்கு எதற்கடா தனி நாடு என்று அவனாவது ஒரு கேள்வியை கேட்டால் உங்கள் வாயையும் அதையும் எதை வைத்து பொத்துவீர்கள்?

ஆங்கில நாடாக இருந்த போதிலும், ஆங்கில வீரர்களே ஆடுகின்ற போதிலும் தங்களது பழமையை, பூர்வீக மக்களை மறக்காமல் போட்டிக்கு முன்னர் "ஹகா" பாடும் நியூசிலாந்தின் றக்பி அணி எங்கே? நேற்று பெய்த மழையில் இன்று முழைத்த காளான்கள் போல் தமிழனை பிரதிநிதுவப்படுத்தியும் கூட ஆங்கிலத்தில் மலம் கழிக்கும் நீங்கள் எங்கே?

இந்த உதைபந்தாட்ட விடயம் ஒரு பொறி தான், இந்த விடயத்துக்கு பின்னர் புலம் பெயர் தமிழர்களின் தனிநாட்டு கோசமும் , இவர்களது ஆர்ப்பாட்டங்களும் எந்தளவு அர்த்தமுடையாதாக இருக்கின்றது என்று சிந்திக்கவேண்டியுள்ளது. தொடர்ந்து நான் எழுதப் போவதில் ஒரு சில புலம் பெயர் தமிழர்களை தவிர அனேகமானோர் பலியாக போவதை நினைத்தால் தான் எனக்கு கவலையாக இருக்கிறது?

முதலில் உங்களில் எத்தனை பேருக்கு தமிழ் எழுத , வாசிக்க, பேச தெரியும்? இதை படித்துக்கொண்டு நீங்கள் இருப்பதால் நிச்சயம் உங்களுக்கு வாசிக்க தெரிந்திருக்க வேண்டும், எழுதவும் தெரிந்திருக்கும் அப்படியானால் நீங்கள் தமிழீழம் தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடாத்தவோ, தனிநாட்டுக்காக போராடவோ தகுதியானவர் தான். ஆனால் ஒன்று சொல்லுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கோ, சகோதரர்களுக்கோ, உறவினர்களுக்கோ தமிழ் எழுத , வாசிக்க , பேச தெரியுமா? அல்லது ஒரு மொழியாய் தமிழை நேசிக்க உங்களது சொந்தங்கள் தயாராய் இருக்கின்றார்களா? இந்த கேள்விக்கு நீங்கள் உதடு பிதுக்கினால் உங்கள் தமிழீழ கோசம் எல்லாம் வெறும் வேஷம் . அது அர்த்தமற்றது.

யாரெல்லாம் தமிழீழத்துக்கு குரல் கொடுக்கலாம்? யாரெல்லாம் போராடலாம் ? அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தமிழன் என்ற போர்வையில் இருப்பவன் தமிழீழத்துக்காக போராடுகின்றான் என்றால் அவனுக்கு மொழி அறிவும் தனது மொழி மேல் நேசமும் கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவன் தமிழனே கிடையாது, தமிழனே இல்லை என்று ஆகிவிட்ட பிறகு உனக்கு எதற்கடா தனிநாடு?

எனது சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். அதாவது நான் பார்த்தது கேட்டவைகளை வைத்துக்கொண்டு சொல்கிறேன். இன்று புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்களில் நூறுக்கு எண்பது வீதமானோர் தமிழை நேசிக்கவோ , தமிழில் பேசவோ தயாராய் இல்லை. அந்நிய நாகரீகத்தில் மூழ்கி கிடக்கும் இவர்களுக்கு தமிழீழ கோஷம் ஒரு கேடு! அதிலும் குறிப்பாக 1985களின் பின்பு பிறந்து புலம்பெயர் நாடுகளில் வாழும் தலைமுறையில் நூறுக்கு தொண்ணூறு சதவீதம்பேருக்கு தமிழ் முறையாக எழுத வாசிக்க தெரியாது, தெரிந்த ஒரு சிலருக்கும் தமிழில் பேசுவதற்கு வெட்கம். இப்படியான சாக்கடை புழுக்களுக்கு தமிழீழம் கோர என்ன தகுதி இருக்கிறது?

புலம்பெயர் தமிழர்களுள் தமிழில் பேசுவதை கௌரவகுறைச்சலாகவோ, அவமானமாகவோ கருதி அந்நிய மொழிகளில் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் தமிழரையும், "என்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாது" என்று சொல்வதில் அளப்பெரிய ஆனந்தம் அடையும் கும்பலுக்கு பிறந்த கும்பல்களையும், தனது பிள்ளைக்கு தமிழ் கற்றுத்தராமல் "அப்பம்மா ஸீ தெயா!. அப்பப்பா ஸீ தெயா " என்று பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் பரதேசி பெற்றோர்களையும், இலங்கைக்கு வந்து எமது கலாசாரத்துக்கு சற்றும் பொருந்தாத வகையில் மார்பையும், தொடையையும் திறந்துவிட்டு அலையும் தேவடியா தமிழச்சிகளையும் கண்கூடே பார்த்தவன் நான். இதே கூட்டம் தமிழீழம் வேண்டுமென்று இதே கோட்பாடுகள் , கொள்கைகளோடு ஆர்ப்பாட்டம் பண்ணியதையும் அறிவேன். சேற்றுப் பன்றிகளே நீங்கள் கோரும் தமிழீழம் நாசமாய் போக! அப்படியொரு தமிழீழம் அடைவதை விட‌ அடிமையாய் இருக்க நான் தயார்.

தமிழீழ உதைபந்தாட்ட அணியின் சீருடை

தமிழீழம் கோருவதற்கு முன்னர் நீங்கள் தமிழராக இருக்கிறீர்களா என பாருங்கள். உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தமிழ் தெரியுமா என சிந்தியுங்கள். தமிழீழ கோஷமிடும் எத்தனை பேர் தமிழில் பேசுவதற்கு தயாராய் இருக்கிறார்கள் என்று சோதியுங்கள். அப்புறம் பார்க்கலாம் தமிழீழம் பற்றி.

ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் இன உணர்வு என்பது அடிப்படையில் தனது மொழிப்பற்றின் மீது இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். மொழியின் மீது நேசமில்லாத இனப்பற்று அஸ்திவாரமில்லாத கட்டடம் போல, எந்த நேரத்திலும் மண்ணில் சரியும். நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் , என்முகத்தில் காறி உமிழ்ந்தாலும் உங்களுக்கு கசப்பான உண்மை ஒன்றை சொல்கிறேன். மொழிப்பற்றில்லாமல், மொழி அறிவில்லாமல் நீங்கள் தொடர்ந்து தமிழீழ போராட்டத்தை முன்னெடுப்பீர்களேயானால் அந்த போராட்டம் அந்நியர்களார் வீழ்த்தப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இனப்பற்றோ அல்லது இனம் மீதான பிடிப்போ அடிப்படையில் மொழியின் மீதான பற்றில் தான் இருந்து தான்  ஆரம்பிக்கிறது. மொழி மீது பற்ரில்லாமல் தமிழில் பேசுவதற்கு கூசி , குறுகி அதை ஒரு அவமானமாக கருதும் நீங்கள் நடாத்தும் தமிழீழ போராட்டம் அர்த்தமற்றதும் , தோல்வியில் முடிவடையப்போவதாகவும் தான் இருக்கும்.

எனது இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நீங்கள் நடாத்தும் இந்த போராட்டம் புலம் பெயர் தமிழரிடத்தில் எத்தனை காலம் நீடிக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா? இந்த தமிழின உணர்வு புலம்பெயர் தமிழரிடத்தில் இன்னமும் எத்தனை தலைமுறைக்கு நீடிக்கும்? உங்களைக் கேட்டால் கடைசி தமிழன் இருக்கும் வரை, வாழ்வின் எல்லை வரை, தமிழீழம் அடையும் வரை , உயிர் போய் உடல் மண்ணில் வீழும் வரை என்று பதில் சொல்வீர்கள். உண்மையில் இந்த எண்ணம் சரியானதும் , நியாயமானதும் தான். ஆனால் இப்போது பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் இருக்கும் நிலையிலும், இப்போது வளர்ந்துவரும் புலம்பெயர் தலைமுறையையும் வைத்துப் பார்க்கும் போது அடுத்த தலைமுறைக்கு இந்த போராட்டம் தாங்காது என்று தான் சொல்லுவேன்.


காரணம் இல்லாமல் நான் ஒன்றையும் சொல்லவில்லை. 1980களில் போராட்டம் உக்கிரமாக ஆரம்பித்தபோது அந்த காலப்பகுதியிலும் அதற்கு சற்று பிற்பட்ட காலப்பகுதியிலும் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களை புலம் பெயர் தமிழர்களின் முதலாம் சந்ததி எனலாம். அவர்களது பிள்ளைகளை அதாவது இப்போது இருக்கின்ற இளம் புலம்பெயர் தலைமுறையை இரண்டாம் தலைமுறை எனலாம். முதல் புலம்பெயர் தலைமுறையின்  இனப்பற்றையும், போராட்டத்தின் வலிகளையும், போராட்டம் தொடர்பான அறிவையும் பாதியாகத்தான் இந்த இரண்டாம் தலைமுறை சுமந்துகொன்டிருக்கிறது. இது அவர்களது பிளை அல்ல, காரணம் இந்த இரண்டாம் தலைமுறை பிறந்தது அல்லது சிறு வயதுமுதலே வளர்ந்தது எல்லாம் போராட்டத்தின் நேரடி நிழல்களில் அல்ல. 

இந்த இனப்பற்றும், போரட்டத்தின் வலிகளும் முதல் தலைமுறையுடமிருந்து கடத்தப்பட்டவை. ஆக ஒரு தலைமுறையால் தனக்கு அடுத்துவரும் தலைமுறைக்கு தனது வலிகளை அல்லது உணர்வுகளை தான் அனுபவித்தது போன்றோ அல்லது தான் உணருவது போன்றோ நூறு வீதம் அப்படியே கடத்துவதென்பது சாத்தியப்படாத ஒன்று. அது இயற்கையும் கூட.

அதுபோல் இப்போது புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற யௌவனர் சந்ததிக்கு இந்த முதல் தலைமுறை அனுபவித்த வலிகளிலும், இன உணர்விலும் பத்துசதவிகதம் கூட கிடையாது என்று ஆணித்தரமாக சொல்லுவேன். முதல், மற்றும் இரண்டாம் தலைமுறகளிடமிருந்து வாய்வழி கேட்ட கதைகள் வழியாகவும், சம காலத்தில் இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களின் போது அறியப்படுகின்ற ஒரு சில தகவல்களின் அடிப்படையில் தமிழரின் போராட்டத்தை ஒரு கதையாக அறிந்து வைத்திருக்கிறர்களே ஒழிய உணர்வு ரீதியாக அவர்களுக்கு தமிழர் போராட்டத்தின் தார்ப்பரியம் புரிந்திருக்கிறதா என்றால் விடை 0.01 சத‌விகிதமே! இதற்கு காரணம் மூன்றாம் தலைமுறைக்கு போராட்டம் பற்றிய வலிகளும் கனாகனமும் முந்தய தலைமுறையில் இருந்து கடத்தப்பட்டபோது அது வீரியம் மிக்கதாய் இல்லை. முதல் காரணம் அது இயற்கையான ஒரு விதி! அடுத்தது முதல் தலைமுறையில் பாதிப்பேரும் இரண்டாம் தலைமுறையில் ஏறக்குறைய அனைவரும் அந்நிய மொழிகளுக்கு பல்லக்கு தூக்க ஆரம்பித்ததும் தான். 

இப்போது இருக்கும் இந்த புலம்பெயர் யௌவன பருவத்து தலைமுறைக்கு தாங்கள் இனிவரும் காலங்களில் தங்களை தமிழராக அடையாளப்படுத்தி கொள்ளவோ, தமிழரது பாரம்பரியங்களில் வாழவோ அல்லது இலங்கை தமிழருடன் தொடர்புகளை பேணவோ நாட்டம் கிடையாது என்பதை பலபேரின் அனுபவத்திலும் எனது சொந்த அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் தங்களை அவர்கள் தமிழராய் உணர்வது கிடையாது. எப்படி உணருவார்கள்? இந்த யௌவன பருவ புலம்பெயர் தலைமுறையும் நூறுக்கு தொண்ணூறு சதவிகிதம் பேருக்கு தமிழ் எழுதவோ , வாசிக்கவோ, பேசவோ தெரியாது. அப்படி செய்வது அவமானம் என்றும் மேல்நாட்டு வாழ்க்கை தான் உத்தமம் என்றும் இவர்களது மானம்கெட்ட பெற்றோரும் , சுற்றாரும் இந்த பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைத்திருப்பது தான் இந்த விபரீதத்துக்கு காரணம்.

ஆக நான் ஏற்கனவே சொன்னது போல ஒரு உணர்வை, ஒரு வலியை அதே கனாகனத்தோடு தலைமுறை தலைமுறையாக கடத்துதல் என்பது சாத்தியம் இல்லாதது, ஆனால் இந்த தமிழின உணர்வு நீடிக்க வேண்டுமானால் செய்யவேண்டியது ஒன்று மட்டும் தான். எந்த தலைமுறையும் தன்னை ஒரு தமிழன் என்று உணரவைப்பது மட்டும் தான். எப்போது ஒருவன் தன்னை தமிழன் என்று உணருவான் என்றால் அவனுக்கு மொழி அறிவும் மொழிப்பற்றும் இருக்கின்ற போதுதான். இல்லை என்றால் இன்னும் இருபது வருடங்கள் கடந்தபின்பு புலம்பெயர் நாடுகளில் தமிழர் போராட்டம் என்றால் இப்போது ஒரு சிலர் செய்வது போல் பெண்களை பார்க்கவும், காதலிக்கவும், தமது சுய அரசியல் லாபத்துக்காக கோஷம் போடவும் என்று இந்த போராட்டங்கள் அர்த்தமற்றதாக ஆகிவிடும். ஏனென்றால் அப்போதுதான் பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் தெரியாமல் இருக்குமே! 

பின்னர் அந்த ஆர்ப்பாட்டத்தில் எந்த அந்நியனாவது வந்து "எவன்டா இதில் தமிழன்? தமிழ் எழுதவோ , வாசிக்கவோ தெரியாமல் ஆங்கிலத்தில் கூச்சல் போடும் நீங்கள் எல்லாம் ஒரு தமிழர்கள், உங்களுக்கெல்லாம் ஒரு தனி நாடு"? என்றொரு கேள்வியை கேட்டுவிட்டால்  விரல் சூப்பிக்கொண்டு வீடு திரும்பவேண்டிய நிலை வரும் என்பது நிச்சயம்.

ஆனால்  தலைமுறை தலைமுறையாக  புலம் பெயர் சமூகம் தங்களது சந்ததிக்கு தமிழ் அறிவையும் மொழிப்பற்றையும் அளித்துக்கொண்டுவருமானால் பின்னொரு காலத்தில் தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் எதிர் கால சந்ததிகள் ரத்தமும் சதையுமாய் அறியாமல் போனாலும் அல்லது முற்றாக‌  தெரியாமலே போனாலும் கூட தாம் தமது மொழி மீது கொண்டிருக்ககூடிய பற்றினாலும், அதன் மீது உள்ள பிடிப்பினாலும் பின்னாளில் எங்கேனும் தமிழனுக்கு ஏதேனும் அநீதிகள் இழைக்கப்படின் அவர்களால் இனஉணர்வோடு  அணிதிரளமுடியும், இல்லையென்றால் இப்போதே பெரும்பாலான இந்த புலம்பெயர் சமூகம் தாம் தமிழர் என்பதை மறைப்பதில் குறியாய் இருக்கின்றது, அப்படியானால் இன்னுமொரு பத்து வருடத்தில்? ??? நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. 

ஆகவே தான் சொல்கிறேன் வெங்காயங்களே எவனுக்கெல்லாம் தமிழ் தெரியாதோ இப்போதே போய் படித்துக்கொள்ளுங்கள். எந்த பன்றி பெத்த பிள்ளைகளுக்கு  தமிழ் எழுத வாசிக்க வராதோ போய் கற்றுக்கொள்ளுங்கள் , இல்லையென்றால் மொழியறிவு இல்லத நீங்கள் நடாத்தும் தமிழீழ போராட்டம் பெரியார் பாணியில் சொல்லப்போனால் வெறும் வெங்காயமே! 



சரி இன்னொரு வாதமும் இங்கு  வரலாம் சில விதண்டா வாதத்துக்கு பிறந்ததுகள் சொல்லலாம் நாங்கள் எப்படி இருந்தாலும் உனக்கென்ன ?தமிழீழத்தை பெற்றுத்தந்தால் சரி தானே என்று. அந்த விளக்கெண்ணைகளிடம் நான் கேட்கப்போவது என்னவென்றால் சரி நீங்கள் இப்படியே இருப்பது போலவே இருந்து கொண்டு தமிழீழத்தை பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த தமிழீழம் எப்படி தெரியுமா இருக்கும்?

ஒரு அந்நியன் தமிழீழம் தொடர்பில் அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவை சொடுக்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். அங்கு தகவல்கள் இப்படி இருக்கும்.

பெயர் : தமிழீழம்
சனத்தொகை:xxxxxxxxxxxx
அமைவிடம்:xxxxxx xxxxxx
ஆட்சி மொழிகள்: ஆங்கிலம் , பிரஞ்சு, டச்சு, நோர்வேஜியன், டெனிஸ் , ஜேர்மன்.

கலை மற்றும் கலாசாரம்:

முன்னொரு காலத்தில் இன்று உலகின் சிங்கபூர், மலேசியா , மொரீசியஸ் , இந்தியா ஆகிய நாடுகளிள் வழகில் இருக்கும் தமிழ் என்ர மொழி பேசப்பட்டு வந்தது. கலாசார ஆடைகளாக சேலை, வேட்டி, தாவணி, சல்வார் போன்ற ஆடைகள் இருந்தன. விடுதலை புலிகளின் ராணுவ தோல்விக்கு பின்னர் எழுப்பப்பட்ட தமிழீழத்தின் வீதிகளில் பிகினி மற்றும் அவுத்துவிட்ட ஆடைகளுடன் பெண்கள் அலைவதை சாதாரணமாக காணலாம். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இருக்கக்கூடிய ஒரு உணர்வை தரக்கூடிய ஒரு நாடாக இது இருக்கிறது.

இப்படியான ஒரு தமிழீழத்தை  தான் நீங்கள் அமைப்பீர்கள். இதுவல்ல விடுதலைப்புலிகள் கனவு கண்டது, விடுதலைப்புலிகள் இப்போது உயிரோடு இருப்பார்களேயானால் நீங்கள் தமிழீழம் என்று அடிக்கும் கூத்துக்கு உங்களை காலிடுக்கில் சுடுவார்கள். விடுதலை புலிகளின் ஆட்சி காலப்பகுதியில் ஒரு வெள்ளையனோடு ஆங்கிலத்தில் வீதியில் நின்று உரையாடியதற்கே எச்சரிக்கப்பட்டவன் நான். இதில் சரி பிழை இரண்டாம் பட்சம் என்றாலும் அவர்கள் தமிழ் மொழி மீது வைத்திருந்த மரியாதையும் மற்றும் மதிப்பு  அப்படிப்பட்டது.

முழங்காலுக்கு மேல் ஆடையணிந்த பெண்கள் எச்சரிக்கை செய்யப்பட்டதும், ஜட்டி தெரியும் படியாய் ஜீன்ஸ் போட்ட ஆண்கள் சில எச்சரிக்கைகளுக்கு பின்னர் செமத்தையாய் அடிவாங்கியதும்  நான் கண்கூடே பார்த்த நிஜங்கள். அப்படியானால் விடுமுறைக்கு நீங்கள் இங்கு வந்து அணியும் ஆடைகளுக்கு விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் உங்கள் அந்தரங்க உறுப்புக்களை வெட்டி காகத்துக்கு படைத்திருப்பார்கள்.

விடுதலைப் புலிகளின் ஆட்சியின் போது கடைகளுக்கு வணிக ஸ்தாபனங்களுக்கும் தூய தமிழில் அவர்கள் பெயர் சூட்டியது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இளம்பருதி குளிர்களி, தூயவன் மகிழுந்து நிலையம், மலரன்பன் உந்துருளி திருத்தகம், கலையரசன் ஈருருளி தரிப்பகம், நிலா வெதுப்பகம்  என்று அவர்கள் தூய தமிழில் பெயர்கள் சூட்டியது உயர் தமிழ் பற்றின் வெளிப்பாடு. யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் , உலகின் அத்தனை நாகரீகங்களும் முளைவிட்ட பின்பும் விடுதலை புலிகளின் கட்டுப்பாடின் கீழ் இருந்த மக்களின் வணிக ஸ்தாபனங்கள் இன்னமும் தூயதமிழிலேயே பெயர்ப்பலகை தாங்குகின்றன. புதிதாய் தொடங்கப்படும் வணிக நிலையங்களும் தமிழிலேயே பெயர்பலகை சுமக்கின்றன. இது நான் கண்ணால் பார்த்த நிஜம். விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பெயர்களும் தூய தமிழில் மாற்றப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்போது புரிகிறதா விடுதலை புலிகள் அடைய துடித்த தமிழீழமும் நீங்கள் நாடுகடந்த தமிழீழம் என்று பிரகடனம் செய்துவிட்டு அதன் கீழ் அடிக்கின்ற கூத்துக்களும் முற்றிலும் எதிரானவை என்று? 

நீங்கள் இப்போது இருக்கின்றவாறே இருந்துகொண்டு தமிழீழம் அடையமாட்டீர்கள் அப்படி அடைந்தாலும் அந்த தமிழீழம் இன்னுமொரு இந்தோனேசியாவின் "பாளி" நகரமாகித்தான் போகும்.

இப்போதும் சொல்கிறேன் தமிழர் போரட்டத்தில் புலம்பெயர் சமூகத்தின் பங்கு மறக்கமுடியாததும் முக்கியமானதும் தான். இப்போது கூட இயங்க வேண்டியவர்களாய் நீங்கள் தான் இருக்கிறீர்கள். ஆனால் இப்படியான ஒரு தமிழீழம்  என்ற கோட்பாட்டை வைத்துக்கொண்டு தமிழ் மொழி அறிவு இன்றியும், மொழி பற்று இன்றியும் , கலாசரம் பற்றிய கணக்கேதும் இன்றியும் நீங்கள் இருப்பீர்களேயானால் உங்கள் தமிழீழ போராட்டம் வெற்றிபெறப்பொவது இல்லை  பூக்கப்போவதும் இல்லை, அது கருகிவிடட்டும் என்றே நானும் பிரயாசைப்படுகிறேன். காரணம் தமிழ் வாழாத ஒரு தமிழீழம் கிடைப்பதைவிட கிடைக்காமல் போவது எவளவோ உத்தமம். 

தொன்னமை தமிழுக்கு இப்போதுதான் அர்த்தமே கண்டுபிடிக்க ஆரம்பித்திருக்கிறோம், அதற்குள் அது செத்துவிட வேண்டாமே!

தமிழீழத்தின் பிரதமர் என சொல்லிக்கொள்கின்ற திரு.உருத்திரகுமாரன் அவர்களே! தமிழீழத்துக்காக ஒன்று கூடுங்கள் என்ற அறைகூவலுக்கு முன்னர் புலம்பெயர் தமிழர்களே உங்களில் தமிழ் தெரியாத ஒவ்வொருவனும் தமிழை படியுங்கள் என்ற அறைகூவலை விடுங்கள். இல்லையென்றால் தமிழே இல்லாத ஒரு தமிழ் நாட்டுக்கு தலைமை தாங்குகின்ற வெட்கக்கேடான வேலையை நீங்கள் செய்வதாகி போய்விடும்.


இந்த பதிவு முழுக்க முழுக்க தமிழ் மற்றும் தமிழ் கலாசார கொலைகாரர்களாக இருக்கக்கூடிய பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களை பற்றியே! அங்கு வாழக்கூடிய ஒட்டுமொத்த புலம்பெயர் சமுதாயத்தையும் பற்றியது அல்ல. விரல்விட்டு எண்ணகூடிய தமிழ் மொழி பற்றுள்ள குடும்பங்கள் அங்கு வாழ்வதையும் நான் அறிவேன். இனிய புலம்பெயர் உறவுகளே உங்களது முயற்சிகள் போற்றுதலுக்குரியது , ஏற்றுக்கொள்ள‌த்தக்கது அவசியமானதும் கூட , ஆனால் இப்படியான ஒரு நுட்பமான ஒரு கோட்பாட்டை அடைய போராடும் நாங்கள் நூறுவீதம் உண்மையாய் பூரணமாய் இருப்பது அவசியம். அதைத்தான் எனது பதிவில் சுட்டிக்காட்ட முனைகிறேன். வேறு எந்த நோக்கங்களோ அல்லது  உங்களது அளப்பெரிய தியாகங்களை கொச்சை படுத்தும் நோக்கமோ எனக்கு கிடையாது. புலம் பெயர் நாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழ் உணர்வாலனுக்கும் எனது வாதத்தின் நியாயம் புரிந்திருக்கும்.



இல்லை நான் சொன்னதை ஏற்கமுடியாது என்று எவனாவது வாதிட வந்தால் தக்காளி வாடா! பழைய செருப்பை சாணியில் தோய்த்து வைத்து அடிப்பது போல  "நச்" என்று பதில் தருகிறேன். ஏனென்றால் தமிழ் "யாரும் யாரும் யாராகியரோ" என்று காதல் மட்டும் பழக்காது , ரௌத்திரமும் பழக்கும்.


முக்கிய குறிப்பு : சக பதிவர்களுக்கு! எனது பதிவுகளில் சிலவற்றை நான் கேட்காமலேயே உங்கள் தளங்களில் நீங்கள் பகிர்ந்து உள்ளீர்கள். அதற்கு நான் நன்றியுடையவனாக இருக்கின்றேன். ஆனால் இந்த பதிவு நிச்சயம் பலரிடத்தில் போய் சேர வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.  நான் ஒன்றும் நிறைய ஹிட்ஸ் வாங்கும் பதிவர் கிடையாது. உங்களில் தமிழ் மொழி பற்று  உள்ள எந்த பதிவராவது இதை பகிர்ந்தால் நான் மிகுந்த நன்றியுடையவனாக இருப்பேன். பகிர்பவர்கள் தயவு செய்து பகிர்வின் சுட்டியை () எனது பின்னூட்ட பெட்டியில் எழுதிச்செல்லவும்.நன்றி!

டிஸ்கி:நான் பார்த்த அந்த குழுநிலை விவாத வீடியோ இப்போது யூ டியூப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. மேலும் சில தமிழ் பேட்டி வீடியோக்கள் இப்போது இணைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எனது கருத்துக்களில் எந்த மாற்றமும் கிடையாது. காரணம் இன்னமும் அனேகர் அந்திய நாகரீக மோகம் கொண்டவர்களாகவே இருக்கிறீர்கள்.








20 comments:

  1. உங்கள் கேள்விகள் சரியானவை ஜோசிக்க வேண்டிய வாதங்கள் பதில் எனக்கும் தெரியாது ஆனால் தமிழை நானும் நேசிக்கின்றேன் ஆனால் பொருளாதாரம் தேட் வேற்றுமொழி தேவை என்பது தாயக்த்திலும் சரி புலம்பெயர்ந்த பின்னும் அறிந்த உண்மை.

    ReplyDelete
    Replies
    1. நண்பா உங்களது வாதத்தை ஏற்று கொள்கிறேன், எனது பதிவின் இறுதியில் ஒரு படம் போட்டிருந்தேனே அதை பார்க்கவில்லையா? எத்தனை மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள், ஆனால் தமிழை கொல்லாதீர்கள், தமிழையும் படியுங்கள், தமிழை நேசியுங்கள், தமிழ் கலாசாரத்துக்கு ஏற்ப வாழுங்கள் என்பதே எனது வாதம். வேற்று மொழி கற்கை என்பதுக்கும் தமிழ் மொழி பற்று என்பதற்கும் எந்த முரண்பாடும் கிடையாது. பொருளாதாரம் தேட தமிழ் கொலை அவசியமா என்ன?

      வருகைக்கும் பின்னூட்டத்துகும் நன்றி நண்பா!

      Delete
  2. உண்மைதான் இப்பொழுது இலங்கையில் உள்ளவர்கள் கூட தமிழுடன் அதிகமாக ஆங்கிலம் கலந்தே பேசுகின்றார்கள். அதற்கு காரணம் ஒன்று சமூகம், மற்றொன்று தற்பெருமை

    ReplyDelete
    Replies
    1. இலங்கையில் இருந்து கொண்டே ஆங்கிலத்தில் பீத்தும் அனைவருக்கும் ஆப்பு ஆன் தி வே! அடுத்த பதிவில் அவர்களுக்கும் அதிரடி தான், கடமை என்று வந்தால் மாமனாவது மச்சானாவது.

      வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி தல!

      Delete
  3. எனக்கு தெரிந்த சில உறவினர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. அல்லது கொஞ்சம் கதைக்க மட்டும் தெரியும்.

    எவன் எவனுக்கெல்லாம் உச்சியை குறிபார்த்து குண்டு விழும்போது பதுங்கு குழிக்குள் ஓடியொழித்த அனுபவம் இல்லையோ.... எவனுக்கெல்லாம் சகோதரிகள் சீரழிக்கப்பட்ட வலிகள் தெரியவில்லையோ அவனுக்கெல்லாம் தமிழீழம் என்பது ஒரு வார்த்தை அவ்வளவுதான்.

    ReplyDelete
    Replies
    1. அவர்களுக்கு எங்களது வலி புரிய வேண்டுமென்பது கூட இல்லை, நண்பா! அந்த வலியை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதும் எனது நோக்கம் இல்லை, அது போல் இந்த கோல் மால் நிர்வாகத்தின் கீழ் தமிழீழம் மலரும் என்று நம்பிக்கையும் இல்லை. எனது ஆதங்கம் எல்லாம் தமிழர் என்ற போர்வையில் தமிழ கொல்லாதீர். பின்னூட்டத்துக்கு நன்றி தல!

      Delete
  4. ////அண்ணாச்சி ! இந்த பக்கத்தில இருக்கிற பதிவுகளை பாத்துப்புட்டு, இது வரலாற்றுக்கு புறம்பானது, சமூகல்விக்கு அப்பாற்பட்டது, இது அந்த கல்வெட்டில குறிப்பிடபடவில்லை, இந்த இறுவெட்டில் இல்லை எண்ட கதையெல்லாம் கதைக்கப்படாது. இது சும்மா ஜாலிக்கு நான் எழுதுவது. வரலாறு,கல்வெட்டு கேப்பவனுக எல்லாம் அடுத்த பஸ் புடிச்சு ஓடிப்போயிருங்க பிளீஸ்.....! ஏன்னா...... ஒண்ணும் வெட்டி முறிக்க நான் வலைப்பூ ஆரம்பிலக்கல அண்ணாச்சி..! சும்மா வெட்டியா தானே இருக்கம் , மொக்க போடுவம் எண்ட நல்ல எண்ணத்தில தானுங்கோ...!////

    அண்ணாச்சி ஒங்க மொக்கை நல்லாருக்கு....! இதுபோல் மொக்கைப் பதிவுகள் அதிகம் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னய காலாச்சிட்டாராமா........

      Delete
  5. அவர்களின் ஆங்கில அலப்பறை கொஞ்சம் ஓவர் தான் , என்றாலும் தமிழ் ஈழ உணர்ச்சி செத்து விட வில்லை என்பது மகிழ்ச்சி தரும் செய்தி . அது உண்மையான தமிழ் நேசர்களிடம் இருந்து வெளிப்பட வேண்டும் என்பதே எல்லோரின் அவா . நல்லது நடக்கும் என நம்புவோம்

    ReplyDelete
    Replies
    1. ////அது உண்மையான தமிழ் நேசர்களிடம் இருந்து வெளிப்பட வேண்டும் என்பதே எல்லோரின் அவா////

      அதை தான் நாங்களும் எதிர் பார்க்கிறோம் நண்பா! , சாகாத தமிழீழ உணர்ச்சி இப்போது பெரிதல்ல செத்துக்கொண்டிருக்கும் தமிழ் தான் பெரிதாக படுகிறது எனக்கு.

      Delete
  6. மிக தெளிவாக தகவல்களை ஆதாரங்களுடன் தந்திருக்கிறீர்கள் என்னுடைய கருத்தும் அதுவே தான். தம்முடைய பொழுதுபோக்குக்காக தமிழ்ஈழம் என்று கூப்பாடு போடுவோர் தான் அதிகம் அங்கு இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. அது போக இப்போது அங்கே பதவி வெறியும் தலைதூக்கி இருப்பதாக எனது நண்பன் ஒருவன் சொன்னான், என்ன நடக்கப் போகுதோ? வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பா!

      Delete
  7. தமிழீழம் உதைபந்து அணி.. இப்பத்தான் கேள்விப்படுறேன் பாஸு! பதிவு ஆக்ரோஷம்!...

    * பதிவுக்கு சம்பந்தமில்லாமல்,
    நேத்து ரொனால்டோ போட்ட அடியை பார்த்தியாப்பு?? மொதல்ல எவரு பர்ஸ்டா போறாங்கறது முக்கியம் லேதுடா.. லாஸ்டுல எவரு பர்ஸ்டா வர்றங்கறதுதான் முக்கியாம்டா.... முக்கியாம்!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா ! ஆமா! அதையும் பாத்தேன் , அதுக்கு முன்னாடி டென்மார்க் கூட ஆடுறப்ப வெறும் கோல் போஸ்டுக்குள்ள கோல் அடிக்க தெரியாம அந்த சொத்தி கால வச்சுகிட்டு பந்தை வெளிய அடிச்சதையும் பாத்தேன். கண்ணா நீங்க மொதல் மட்டுமில்ல இப்போ வரைக்கும் படுகேவலமான ஆட்டம் தான் ஆடுறீங்க.... ஏதோ எவன் பண்ணின புண்ணியமோ அடுத்த ரவுண்டுக்கு போயிட்டீக! அடித்த ரவுண்டில தாக்கு பிடிக்கிற வழிய உக்கந்து யோசிக்கிறத விட்டுபுட்டு பேசுறதப் பாரு கப்பித்தனமா......

      அப்புறம் தல என்ன உனக்கு என்னோட வருத்தம் தொத்திடிச்சா? அது தான் பாஸு... அப்பப்போ பிளாக் போடுறது. எதையும் காணோமே!

      Delete
  8. Kishore,

    I understand your feelings and agree with most of your arguments. However, (with due respect) I want to raise the following questions:

    //தமிழர்கள் என்பவர்கள் யார்?
    தமிழர்கள் என்போர் உலகில் வழங்கிவரும் மொழிகளுள் ஒன்றான 'தமிழ்" என்ற மொழியை "பேசுகின்ற", "எழுத", "வாசிக்க" தெரிந்த ஒரு மக்கள் கூட்டம்.//
    Who gave this definition? I believe it is not correct especially in the current scenario.

    //பன்றி பெத்த பிள்ளைகள்
    நீங்கள் எல்லாம் தமிழ் அப்பனுக்கு பிறந்தவர்கள் தானா?
    தேவடியா தமிழச்சிகள்//
    What do you think about usage of these words? If my mother come to know that I wrote/spoke these words (even in anger) she will feel bad. So please, decide yourself that these are appropriate words.


    //ஆங்கிலத்தில் குப்பை கொட்டும் சாக்கடைகள் எல்லாம் தமிழனாய் ஆகிவிட முடியாது. தமிழன் என்ற போர்வைக்குள் இருக்க உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.//
    Again with due respect, Are you the certifying authority for Tamils?

    Mohan

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரிந்து ஒரு இனத்துக்கான வரைவிலக்கணங்கள் எந்த காலத்திலும் மாறிவிட முடியாது என்பது எனது கருத்தும், பல பேர் ஏற்றுக்கொண்ட கருத்தும். இல்லையென்று மறுப்பீர்களேயானால் ,அப்போ தமிழர்கள் என்போர் யார் என்று தயவு கூர்ந்து சொல்ல முடியுமா திரு மோகன் அவர்களே?

      வார்த்தை பிரயோகங்கள் பிழையானதாக இருந்தாலும் , எனது ரௌத்திர கோபத்துக்கு அது பொருந்துவதாகவே நான் நினைக்கின்றேன்.

      தமிழரை நான் ஒன்றும் குத்தகைக்கு எடுக்கவில்லை என்ற போதும் , எனது மொழி அழிகையில் அதனை தட்டிக்கேட்கும் உரிமை எனக்கு தாராளமாக உண்டு, அது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டியது. துரதிஷ்ட வசமாக பலபேருக்கு அது இல்லாமல் போனது சாபக்கேடு தான்!

      திரு.மோகன் அவர்களே நீங்கள் தமிழனுக்கு என்ன வரைவிலக்கணமும் கொடுத்துவிட்டு போங்கள், அது உங்களது தனிப்பட்ட விருப்பம், ஆனால் உலகு ஏற்றுக்கொண்ட வரைவிலக்கணம் என்று ஒண்டு உண்டல்லவா? http://en.wikipedia.org/wiki/Tamil_people ! இந்த பகுதியில் தமிழன் என்போன் ஆங்கிலத்தை வாந்தி எடுப்பவன் என்று எங்காவது குறிப்பிட்டிருக்கிறதா என்று பாருங்கள்!

      இன்னொன்று எனது தளத்தில் நீங்கள் இனிமேல் கருத்துரைப்பதாக இருந்தால் தயவுசெய்து தமிழில் கருத்துரைக்கவும், இனிமேல் ஆங்கிலத்தில் நீங்கள் கருத்துரைப்பீர்களாக இருந்தால், உங்களுக்கு பதில் தர வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்பதை விட , உங்களது பின்னூடத்தை அழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் உண்டாகலாம் .

      வருகைக்கும் , பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி !

      Delete
    2. Thanks for accepting and replying to my comment. Since you are still angry, I will keep silence and try practising to type in Tamil. However, I want to clarify my intent. I request you not to neglect or distance yourself from anybody. At this point, Tamils need to support and help each other. I just want to explain this scenario before leaving:

      In Norway or Sweden, one family takes their kid to Tamil Association to teach Tamil. Unfortunately, that kid is not bright enough to pick up Tamil (not all of them can learn multiple languaes).Please think about that kid, Do you think that kid is not a Tamil and the parents are not Tamils.

      I wish you all the best.

      Delete
  9. தனி நாட்டுக்கான தமிழீழப் போராட்டத்தில் மனித உயிர்களுக்கும் சாதாரண பொது
    மக்களுக்கும் எந்தவித மதிப்பும் கொடுக்கப்படவில்லை.

    பிணக்கணக்கு காட்டியே அரசாங்கமும் போராட்ட இயக்கங்களும் தமக்கான பிரச்சாரங்களை
    முன்னெடுத்தன.

    இதுதான் தமிழீழப் போராட்டம் வெற்றிபெறாது போனதுக்கு அடிப்படைக் காரணம்.

    பொருளீட்ட முயற்சி இல்லாதவனால் வெற்றிகரமாக வணிகம் செய்ய முடியாது. அதே போல
    மக்களை மதிக்காத மனித உயிர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத நபர்களால்
    விடுதலைக்கான ஒருபோராட்டத்தை வழி நடாத்த முடியாது.

    நீதிமன்றங்களால் வழங்கப்படும் கோரக் கொலையாளிகளின் மீதான மரண தண்டனைகளையே
    தடுப்பதற்கு நாகரிகம் அடைந்த மனித சமுதாயம் போராடிவரும் இன்றைய கால கட்டத்தில்
    ஆயிரக்கணக்கில் அப்பாவி மனித உயிர்களைப் பலியெடுத்து எதுவுமே சாதிகக் முடியாது.

    கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பது முதுமொழி. கடந்த 41 வருடங்களில்
    நமது நாட்டில் சகல இனத்தவரும் ஆயிரக்கணக்கில் படுகொலை
    செய்யப்பட்டிருக்கின்றார்கள். இக்கொலைகளுக்கு அரசாங்கங்கள் மட்டுமல்ல ஆயுதம்
    ஏந்திய இளைஞர்களும் அவர்களை வழி நடாத்தியவர்கள் பொறுப்பாளிகள்.

    எந்த நாட்டை ஆளும் அரசாங்கமும் தமக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களை
    கைது செய்வதும் சுற்றி வளைத்து தாக்கிக் கொல்வதும் சட்டபூர்வமான விடயங்களே.
    அதற்காகத்தான் முப்படைகளையும் வைத்திருக்கின்றன.

    ஆயுதம் ஏந்திய சிங்கள, தமிழ் மற்றும் வஹாபி முஸ்லீம்கள் இலங்கையில்
    ஆயிரக்கணக்கான கோரக் கொலைகளை மட்டுமல்ல படு மோசமான சித்திர வதை முகாம்களை
    நிர்வகித்து ஆயிரக்கனக்கனவர்களை எழுத்தில் வடிக்க முடியாத அளவுக்கு சித்திரவதை
    செய்து கொன்று புதைத்தனர்

    அரசாங்களில் பதவி வகித்தவர்களில் இருந்து ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் வரை அனைவரும்
    நமது நாட்டில் பிறந்து நமது நாட்டில் வளர்ந்த எங்கள் சமூகத்தில் இருந்த
    வந்தவர்களே.

    நாங்கள் அனைவரும் எம்மை ஒருகணம் திருப்பி பார்க்க வேண்டும்.

    ஏன் எங்களுக்கு இந்தக் கொலை வெறி?
    Nalliah Thayabharan

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாதமும் நியாயமானது தான். இந்த பதிவில் நான் குறிப்பிட நினைத்தது, தன் கண்ணில் துரும்பை வைத்துக்கொண்டு, அடுத்தவன் முதுகில் அழுக்கு இருக்கிறது என சொல்பவர்களை!

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...