உதைபந்து

Tuesday, October 9, 2012

கொழும்பில்...நாரேஹேன் பிட்டியவில்.... நடுச்சாமத்தில்.....!!!


*இந்த பதிவை  கடந்த பதிவின் தொடர்ச்சி என்று கூட வைத்துக்கொள்ளலாம்



நாரேஹேன் பிட்டி சந்தியிலுள்ள சமிக்கை விளக்கில் எரிந்துகொண்டிருந்த சிவப்பு நிறத்தை பார்த்தபடி எங்களது பேரூந்து நின்றுகொண்டிருந்த போது நேரம் சரியாக நள்ளிரவு 12.47........... சுத்தமாய் தூக்கம் வரவில்லை . காரணம் இரண்டு.... ஒன்று அன்றிரவு அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அடைந்த சுவாரசியமான வெற்றி, மற்றது முல்லைத்தீவு கடற்கரை சம்பவத்தை வைத்து இன்னமும் என்னை காய்ச்சி எடுத்துக்கொண்டிருந்த பேராசிரியர் ஃபெர்னாண்டோவின் தொணதொணப்பு.


எந்த அமைச்சரும் வராத அந்த நள்ளிரவு நேரத்தில் கூட , அமைச்சர்களின் பாதுகாப்புக்கான அதிரடிப்படை வண்டி ஒன்று அசுரகதியில் எங்களை கடந்து சென்றது சமிக்கை விளக்கில் கூட நிற்காமல். இப்படி போய் தான் ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனம் ஒன்று ரத்மலானையில் ஒரு அப்பாவியின் மீது ஏறி கொன்று போட்டது, இப்போது இங்கே...... யாருமே இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆத்தூறீங்கன்னு நினைத்துக்கொண்டேன். சமூகத்தின் மீது அக்கறை படும் நிலையில் நான் இல்லை...... 


பேரூந்து புறப்பட ஆய்த்தமானபோது தான் தோழி ஈஷி வந்தாள்.... தான் இங்கேயே இறங்கிவிட போவதாக ஓட்டுனருடன் பேசிக்கொண்டிருந்தாள். சற்றைக்கெல்லாம் அவளின் அப்பா ஒரு ஹுண்டாய் ரக காருடன் எங்கள் பேருந்தை நோக்கி வந்து சேர்ந்திருந்தார்.

பேராசிரியர் என்னை பார்த்தபடி தொடர்கிறார்.

"கிஷோகர்... போற வாற இடத்தில் எல்லாம் இந்த மாதிரி நடந்து கொண்டால் உனக்கு மட்டுமில்ல, நம்மோட கம்பஸுக்கும் தான் கெட்ட பேர்"


தலையை குனிந்தபடி நரேஹன்பிட்டி சந்தியில் வீடு போவதற்காக இறங்கிக்கொன்டிருந்த தோழி ஈஷியை பார்த்துக்கொண்ட்டே மௌனமாயிருந்தேன்.  பைகளை எல்லாம் அப்பாவின் காரில் ஏற்றிவிட்டு போய்ட்டு வாரேன் என்று அவள் கையசைக்கவும் அந்த பயங்கரம் நடக்கவும் சரியாய் இருந்தது.


ஒரு கண்டெய்னர் லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்து எங்கள் பேரூந்தை பக்கவாட்டாக மோதியது. ஒரு ரெண்டு அடி பக்கவாட்டில் தூக்கப்பட்டு தள்ளப்பட்ட எங்கள் பேரூந்து இடது புறமாக சரிய ஆரம்பித்தது. பஸ்ஸினுள் எழுந்த ஓலத்தில் மரண பயம் தெரிந்தது. பக்கவாட்டில் சரிந்த பேரூந்து அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி மீண்டும் இயல்புக்கு வந்தது. இவ்வலவும் நடந்தது இரண்டு மூன்று செக்கண்டுகளுக்கும் குறைவான நேரத்தில் தான். 


பேருந்தின் நடத்துனரும், பேராசிரியரும் முன்னால் சிக்னலில் மாட்டியிருந்த லாரியை மடக்குவதற்கு ஓடினார்கள்.


பேரூந்தினுள்ளே விரிவுரையாளர் ஷாலினியும் , கனிஷ்கவும் சேத நிலவரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். நான் முதலில் என்னை சோதித்துகொண்டேன். நடந்த த‌ள்ளுமுள்ளில் எங்கோயோ ஒட்டியிருந்த கிரீஸ் என் சட்டையை அழுக்காக்கி இருந்ததை தவிர வேறு சேதமில்லாததால் சமூக சேவைக்கு கிளம்பினேன். 


நதீஷவின் கைவிரல்கள் மடங்கியிருந்தது, டானியாவுக்கு நெத்தியில் அடிபட்டு லேசாக புடைக்க ஆரம்பித்திருந்தது,சஞ்சயவில் மூக்குகண்ணாடியில் மூக்கு மட்டும் தான் இருந்தது கண்ணாடியை காணோம், இடதுபக்க ஜன்னலோரமாய் இருந்தவர்கள் அனைவருக்கும் தோள்களில் இரண்டு மூன்று மூவ் தடவுமளவுக்கு வலி போக ரத்தப்பலி ஏதும் கிடையாது.



இடதுபக்க கண்ணாடி நாலைந்து போச்சே என்று ஓட்டுனர் கவலைப்பட்டார், தான் கடற்கரையில் சேர்த்த சிப்பிகள் காலில் மிதிபட்டு நொறுங்கிப்போச்சே என்று திலினி குறைப்பட்டுக்கொண்டிருந்தாள். அவனவனுக்கு அவனவன் கவலை!

நான் வெளியே எட்டி மோதியிருந்த மின்கம்பத்தை பார்க்கிறேன், அது படுமோசமாக உடைந்திருந்தது. சரி விடு..... அது நாளை காலை மின்சார சபையின் கவலை!


ஆனால் அந்த கம்பம் மட்டும் இல்லை என்றால் எங்களில் சிலருக்கு காலையில் கம்பு கட்டவேண்டி வந்திருக்கும்.

பஸ்ஸினுளே நிலமையை ஆராய்ந்த பின்னர் வெளியே எங்களை அடித்த லாரியை நோக்கி எங்களது கவனம் திரும்புகிறது.

பேராசிரியரும் , நடத்துனரும் அந்த லாரி ஓட்டுனரை வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வருமாறு அதட்டிக்கொண்டிருக்கின்றனர். இப்போது விளக்கு பச்சையாய் எரிகிறது, அவன் இவர்கள் யாரையும் சட்டை செய்யாமல் வாரியை கடுகதியில் கிளப்பிக்கொண்டு மறைகிறான்.


எங்கள் பேரூந்தின் முன்னால் நின்ற தனது காரை எடுத்துக்கொண்டு எங்களை பின்தொடருமாறு கூறிவிட்டு ஈஷியின் அப்பா அந்த லாரியை சேஸ் செய்ய தொடங்குகிறார்.


பேரூந்தின் வேகம் நூறைத்தொடுகிறது. அந்த சாமத்தில் யாருமில்லாத வீதியில் அந்த மாதிரியான ஒரு சேசிங் ஏதோ கொஞ்சம் சுவாரசியமாகத் தான் பட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை லாரியும் இல்லை, ஈஷியின் காரும் இல்லை. ஐந்துநிமிட சேசிங்கின் பின்னர் நரேஹேன் பிட்டி சுப்பர் மார்க்கெட்டின் முன்னால் அந்த லாரி நிற்கின்றது. லாரியின் முன்னே குறுக்காக ஈஷியின் கார் நிறுத்தப்பட்டிருக்கிறது.


பக்கவாட்டில் வேகமாக வந்து , குறுக்காக நிறுத்தி பிரேக் போடப்பட்டிருக்கிறது என்பதை தேய்ந்திருந்த காரின் தடம் பதிந்த வீதி சொல்லியது.


காருக்குள் இருந்து ஈஷியின் அப்பா மிகுந்த கோவத்தோடு கதை திறந்தபடி வெளியே வந்தார். என் ஃபோனில் மங்காத்தா தீம் சற்றுமுன் தான் ஒலித்து ஓய்ந்திருக்க , இப்போது இளையராஜாவின் 'ஆயிரம் மலர்களே" போய்க்கொண்டிருந்தது. கொஞ்சம் முன்னாடி விபத்து நடந்திருக்கலாம்...... இது சந்தர்ப்ப சதி வேறு என்ன சொல்ல?






ஈஷி மென்மையானவள். முறைத்து பார்த்துக்கொண்டு அவள் பெயரை உச்சரித்தால் கூட அழுதுவிடும் சுபாவம் கொண்டவள். ஆனால் அவளது அப்பா எதிர் மாறாய் இருந்தார். நரைக்காத முடி, கட்டுமஸ்தான் உடல் கட்டம் போட்ட சட்டையும் , அரைக்காற்சட்டையுமாக ஒரு எடுப்பில் பார்ப்பதற்கு மேர்வின் சில்வா போலவே இருந்தார். அவரது கோபம் கூட அந்த மாதிரியே இருந்தது. ஆனால் அது நியாயமான கோபம்.....


அவரும் நாங்களும் பேராசிரியருமாய் அந்த நடத்துனரை வண்டியை விட்டு கீழே இறங்குமாறு அதட்டிக்கொண்டிருந்தோம். எங்களில் ஆண்கள் மட்டுமே சுமார் பத்திற்கும் அதிகமாய் இருந்தோம். அது போக ஈஷியின் அப்பா வேறு கொஞ்சம் பல்க்காக இருந்தார். 


அந்த லாரியின் முகத்தில் பய ரேகை ஓடியது நன்றாகவே தெரிந்தது. வண்டியை விட்டு கீழே இறங்கினால் தனது அங்கத்தில் ஆங்காங்கே கட்டுப்போட வேண்டி வரும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. பொலிஸ் வந்தால் ஒழிய வண்டியை விட்டு நான் இறங்க மாட்டேன் என்று அவன் அடம்பிடித்தான்.

உம்ப பஹினவாத நத்த? ( நீ இறங்கிறியா இல்லையா?)

நண்பன் நதீஷ கேள்வியை கேட்டது அவனது பதிலுக்காக அல்ல..... எங்கிருந்து கொண்டுவந்தானோ தெரியாது, கையில் இருந்த ஒரு இரும்பு கம்பியால் அந்த லாரியின் ஹெட் லைட்டில் ஒரே போடாய் போட்டான். 

"சளீர்"..... அந்த லாரி இப்போது ஒரு கண் குருடாக நின்று கொண்டிருந்தது.

இதற்கு பின்னும் அந்த ஓட்டுனரோ நடத்துனரோ கீழே இறங்குவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?




பேராசிரியர் வந்து நதீஷவை தள்ளிவிட்டு `அந்த கம்பியை பறித்து தூர எறிந்து விட்டு.... "ஐ டோல்ட் யூ நோ......

விட்ட இடத்தில் இருந்து மங்களத்தை ஆரம்பித்தார் . நாசமா போக.... அப்பாட ஒருவழியாக இந்த விபத்தால் என்னை மறந்திடுவார் என்று நினைத்துக்கொண்டிருக்க, இந்த காலியின் மைந்தன் என்னை மொத்தமாய் காலி செய்துவிட்டான்.


பேராசிரியர் இப்போது லாரிக்காரனை மறந்துவிட்டார், எங்கல் இருவரையுமே ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருந்தார்.


"அது தான் சொன்னேனே , இந்த தலைமுறை பல்கலைகழக மாணவர்களுக்கு பொறுமை கிடையாது, எந்த சூழ் நிலையிலும் இலகுவாக இருக்கும் பக்குவம் தெரியாது, காட்டுமிராண்டிகள் போல ஆகிக்கொண்டு வருகிறீர்கள்."


என்னத்தை சொல்ல..... விடிந்திருந்தது...... ஓ! இன்று சனி அல்லவா? 


சைரன் அடித்தபடி 119இன் விசேட பொலிச் பிரிவு சம்பவ இடத்துக்கு வந்திருந்தது. சும்மா சொல்லக்கூடாது ஃபோன் பண்ணி ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்கவில்லை, அதற்குள் வந்திருக்கிறார்கள். ஆனாலும் காவல் துறையை பாராட்டும் மனநிலையின் நான் இல்லை. நானும் நதீஷவும் ஆளுக்காள் முகத்தை பார்த்துக்கொண்டோம்!


வந்து நின்ற பொலிஸ் காரர்களிடம் லாரிகாரன் எப்படி வேகமாய் வளைந்து வளைந்து ஓடினான், தங்களது கார் எவ்வளவு வேகத்தில் வந்து அவனை மடக்கிபிடித்தது, குறைந்த அளவு நேரத்தில் இவன் இவ்வளவு தூரம் வந்திருக்கின்றான் என்றால் அவன் எவ்வளவு வேகமாய் வந்திருப்பான் பாருங்கள் என்று பொலிஸ்காரன் மறந்து விட்ட கதி= தூரத்தின் கீழ் நேரம் என்ற வாய்ப்பாட்டை அவனுக்கு படிப்பித்துக்கொண்டிருந்தார் ஈஷியின் அம்மா.


அந்த களோபரத்தில் ஈஷின் அம்மாவை நான் கவனிக்கவேயில்லை. நதீஷவிடம் ஏதோ சொல்லுவதற்கு வாயெடுத்தேன். அதற்குள் அவன் சொன்னான்...

"மச்சான் ஈஷிய விட அவள்ட அம்மா நல்ல வடிவா இருக்கிறாடா...."

ஏதுமே சொல்லாமல் அவனை ஒருகணம் உற்று பார்த்தேன். உணர்ச்சி பொங்க அவனிடம் சொன்னேன்.

"என் இனமடா நீ....."


இந்த கால பல்கலைக்கழக மாணவர்கள் எப்போதுமே சீரியசாகவே இருக்கமாட்டார்கள் என்பதை அறிய முடியா தூரத்தில் நின்று பொலிசாருடன் உரையாடிக்கொண்டிருந்தார் பேராசிரியர் ஃபெர்னாண்டோ!


12 comments:

  1. "என் இனமடா நீ....///

    ஹி..ஹி.. என் இனமடா நீ....

    ReplyDelete
  2. டேய்.. நேத்து கதையைக் கூட நம்பிட்டேன்.. இது விட்டலாச்சார்யா ரகமப்பா!

    * இந்த கேஸ்லாம் நியூஸ் அலர்ட்ஸ்ல வராதா??

    ReplyDelete
    Replies
    1. அய்யா இது விட்டலார்ச்சாரியார் கதை எல்லாம் கிடையாது நெஜ கதை தான்.

      கேள்வி நியாயம் தான், சொன்னது தான் இவ்வளவும் சொல்லாதது இன்னொரு பதிவாவே போகலாம். தப்பு எங்கட ட்ரைவர் மேல தான், அந்தாளு பார்க்கிங் லேன இருந்து பின்னால வந்த வாகனத்த கவனிக்காம வண்டிய ரோட்டுக்கு திருப்பிட்டாரு, அவன் பஸ்ஸோட மூஞ்சிய பேத்துட்டு போய்ட்டான்.

      வந்த பொலிஸ் காரன் நீதான் கள்ளன் எண்டு எங்கள நோக்கி கைய காட்டிட்டான். கேஸ் போடவா நீங்களே பேசி தீர்க்கிறீங்களா எண்டு கேட்டதில , தன்ட வேல போயிடும் எண்ட பயத்தில எங்க ட்ரைவர் விட்ரோ பண்ணிட்டாரு, அது போக தன்ட கை காசில தான் பஸ்ஸை ரிப்பேர் பண்ணுறார். இன்னும் பஸ் கராஜ்ல தான் கிடக்கு. உடச்ச கண்ணாடிக்கு நதீஷ காசு குடுத்தது தனி கதை.

      பொலிஸ் கேஸ் எழுதினா தான் பேப்பருக்கு நியூஸ் போகும் தம்பி!

      Delete
  3. இரு இரு .... வீரகேசரி, தினக்குரலைப் பிரட்டிப் பாக்கணும். எங்காவது ஒரு மூலையில சரி இந்த விபத்தைப் பத்தி எழுதாமலா இருந்திருப்பாங்க?

    ReplyDelete
    Replies
    1. அந்த ஈஷிப் பொண்ணு உங்க ப்ளாக்லாம் படிக்க மாட்டாங்களா? :)

      Delete
    2. ///இரு இரு .... வீரகேசரி, தினக்குரலைப் பிரட்டிப் பாக்கணும். எங்காவது ஒரு மூலையில சரி இந்த விபத்தைப் பத்தி எழுதாமலா இருந்திருப்பாங்க?///

      மேலே ஜே.ஸட்டுக்கு குடுத்த பதில் தான் தலீவரே உங்களுக்கும்!

      ///அந்த ஈஷிப் பொண்ணு உங்க ப்ளாக்லாம் படிக்க மாட்டாங்களா? :)///

      கிரேட் எஸ்கேப்... அவளுக்கு சுத்தமா மட்டுமில்ல அசுத்தமா கூட தமிழ் தெரியாது...

      Delete
  4. நல்ல நடை..முடிவு இல்லாமல் சம்பவங்களின் கோர்வையாக கதை எழுதுவது அடுத்த சுஜாதா ஆவதற்க்காகவோ?
    அப்புறம் கூடிய சீக்கிரம் உங்க சிறுகதைகளை எல்லாம் ஒன்னா கோர்த்து ஒரு புத்தகமா வெளியிட்டு அத டிஸ்கவரி புக் பேலஸ்ல விற்பதற்கு ஏற்பாடு பண்ணுங்க..

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவா உன் செயலை என்னவென்று சொல்வேன்! இது தெரிந்து தானா சுஜாதாவை ஏற்கனவே உன்னிடம் அழைத்து கொண்டாய்... இதை கேட்டிருந்தால் அந்தாள் உத்தரத்தில் தொங்கியிருக்குமே!

      பதிவை படிச்சே பல பேருக்கு பேதியாகிரிச்சு, இதில புக்கு வேறையா?

      Delete
    2. //சுஜாதா ஆவதற்க்காகவோ?//

      இப்ப தான் அண்ணன் பெயருக்கு ஏத்த வேலை பண்ணி இருக்காரு

      Delete
    3. ஆண்டவா! இவனுக என்னய எங்க கொன்டுபோயி விடப்போறானுகளோ தெரியலயே!

      Delete
  5. ஒரு வரி கூட போர் அடிக்கவில்லை (அதாவது என்ன சொல்ல வாரேன்னா பதிவை முழுசா படிச்சேன் ஓகே)
    சில வேளைகளில் திகிலான அனுபவங்களில் சிக்கி கொள்ளும் நிலை அநேகருக்கு வரும்.. அது போலவே இதையும் உணருகிறேன்.. நண்பா யுத்தம் ஆரம்பம் அடுத்த பகுதியை நீங்களே எழுதுங்க.. பேஸ்புக்கில் தொடருகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. படிச்சிருப்பீகன்னு நம்புறேன்! ஹி..ஹி..ஹி..

      நிச்சயம் எழுதுகிறேன். உங்கள் தகவலுக்காய் காத்திருக்கிறேன்...

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...