உதைபந்து

Thursday, July 5, 2012

இருபதுவருட தமிழ்சினிமா மர்மம் அவிழ்ந்தது!



வலையுலகத்தில ஒரு பெரிய பதிவரா ஆயிட்டோம்!  ( இப்புடி நானா சொல்லிக்கிட்டா தான் உண்டு. என்னோட பதிவ படிச்சிட்டு அவனவன் அடுத்த பஸ்ஸ புடிச்சு ஓடுறானே தவிர எவனும் என்னய பிரபல பதிவர்ன்னு ஒத்துக்க மாட்டேங்கிறானே!). இப்போ லேட்டஸ்டா கூட வாண்டட்டா ஒருத்தரு என்னோட பிளாக்குக்கு வந்தாரு பேரு தினகரன். நம்ம தமிழ் நாட்டு நண்பரு, நான் குடுக்கிற பத்து ரூவா காசுக்கு "ஆள் பிடிச்சு அனுப்பும் படலம்" திட்டத்தின் கீழ் முகநூல் நண்பர் சரவணா அவர என்னோட பிளாக்குக்கு பிளாக்மெயில் பண்ணி அனுப்பியிருந்தாரு. வந்த மனுசன் என்னோட பதிவ பாத்துப்புட்டு ரூமில போயி கதவ சாத்திக்கிட்டவர் தானாம். ரெண்டு நாளா வெளியவே வரலயாம்! என்னோட பதிவுகள அவளவு தீவிரமா அனுபவிச்சிகிட்டு  இருக்காராம். ( ரெண்டு நாளா ரத்த வாந்தி எடுப்பதாகவும் , நம்ம டாக்டர் டூலிட்டில தான் வைத்தியம் பாக்குறதாகவும் இந்த JZ உம் கோபிநாத்தும்  , சரவணன் பயலும் பொரளிய கெளப்பி விட்டிருக்கானுக. நம்பாதீக!)

அப்பிடியாக ஒரு பிரபல பதிவராக ஆகிவிட்ட நான் இந்த பதிவுலகுக்காக, என்னை வாழ வைக்கும் தமிழுக்காக என்ன செய்தேன்  என்று பவர்ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு தூக்கம் வராமல் தவித்த ஒரு ராத்திரியில் புரண்டு புரண்டு யோசித்தேன். யோசித்ததன் விளைவாக ஒரு அற்புதமான சிந்தனை உதயமானது. அதாவது இந்த வரததாசனார், பாப்பய்யா , ஆறுமுகநாவலர் போன்ற தமிழ் பெரியார்கள் எல்லோரும் பிறமொழி நூல்களை அல்லது செய்யுள்ளகளை மொழிபெயர்த்து , அல்லது உரையெழுதி பிரபலமானதை போல நானும் ஒரு இறுக்கமான செய்யுளுக்கு பொருளெழுதி பிரபலமாகிறது என்று பக்கத்து வீட்டுக்காரனின் ரெண்டாவது மகள் மீது சத்தியம் செய்துவிட்டேன்.

சரி எந்த இறுக்கமான செய்யுளுக்கு அல்லது பாட்டுக்கு பொருள் எழுதலாம் என்று யோசித்ததில் ,  இதுவரை காலமாக தமிழ் சினிமாவால் பயன்படுத்தப்பட்டு சி.எஸ் அமுதனால் தமிழ் படத்தில் தொகுக்கப்பட்டு ஆனாலும் இதுவரை தமிழாக்கம் பண்ணப்படாத "ஓ மஹ ஸீயா........." என்ற பாடலை தமிழில் மொழியாக்கம் செய்து இந்த வருட இலக்கியத்துக்காக நோபல் பரிசை ரெண்டு மூட்டையில கட்டி வீட்டுக்கு கொண்டுவந்திடுறது என்று கங்கணம் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு இருக்கேன்.

இந்த பாடலை மொழி பெயர்ப்பதற்காக மாயன் கலண்டர், பேயன் டயரி, மொகஞ்சதாரோ ஹரப்பா ஓலைச்சுவடிகள், செத்துப்போன தாத்தாவோட வேட்டிகள் எல்லாவற்றையும் மிகக்கடுமையாக ஆரய்ந்திருப்பதற்கே கலைஞர் தலைமையில் பாராட்டுவிழா எடுப்பீர்கள் என எதிர் பார்க்கிறேன். விழா மேடைக்கு குஷ்பு வரலாமா இல்லையா என்பதை டூலிட்டில் தலைமையில் பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கலாம்



ஓ! மஹ ஸீயா ....... ஓ! மஹ ஸீயா.........

பொருள் : ஓ! உங்கப்பன் பெத்த மகளே ஸ்ரேயா....... உங்கப்பன் பெத்த மகளே ஸ்ரேயா.......


நக்கு முக்க நாக்கா

பொருள் : உன் மூக்குக்குள் உன் நாக்கை விட்டு சுத்தம் செய்பவளே!

ஓ! ஷகலாக்கா

பொருள் : நீ ! உன் அக்கா ஷகிலாவை மிஞ்சியவள்

ஓ! ரண்டக்கா

பொருள் : உனக்கு இருக்கும் ரெண்டு அக்காவுமே சப்ப ஃபிகருங்க!



ஓ! லாஹி ஓ! யாஹி

பொருள் : ஓ! நஷனல் பெர்மிட் லாரி ஏறி......  ஏறி.......

அயக்க யாஹி..... யாஹி....

பொருள் : செத்துப்போன உங்க ஆயா ஆவியாகி


மே ஹீ..... மே ஹீ.....

பொருள் : மே மாதத்தில் எனது வீட்டருகில் வந்து நின்று ஹீ.... ஹீ... என்று கத்தி கரைச்சல் கொடுக்கிறது.

டைலாமோ....... டைலாமோ.......

பொருள் : அந்த பயம் போக டைகட்டலாமோ அல்லது தைலம் தடவலாமோ சொல் கண்ணே!

ரஹதுல்லா சொனாலி ஹோ.......

பொருள் : ரத்தத்துக்குள் வந்த எலிக் காய்ச்சல் நீயடியோ!


ஓ! மஹ ஸீயா.... ஓ மஹ ஸீயா......
நாக்கு முக்க நாக்கா.....
ஓ! ஷகலாக்கா ! 
ஓ ! ரண்டக்கா.....!





சாம்ப சம்பாலே

பொருள் : சிரங்குவந்த கையாலே நீ அரைச்ச சம்பல் சாம்பலா போனாலும்

ஒசாசே சாயோ........  சாயோ........

பொருள் : பிசாசே ! நீ சாய மாட்டியோ சாய மாட்டியோ?


ஹசிலி பிசிலி

பொருள் : ஹசிலிகூடவும் பிசிலி கூடவும்

இல்லாஹி

பொருள் : எனக்கு கள்ளத்தொடர்பு இல்லன்னு சொன்னதுக்கு அப்புறமும்

ஜப்பா ஜிப்பா

பொருள் : நான் ஜப்பான்ல வாங்கில ஜிப்பாவ எதுக்காக கிழிச்ச?


டைலாமோ டைலாமோ பல்லேலக்கா

பொருள் : தைலம் தடவினாலும் டைகட்டி செண்ட் அடிச்சாலும் விளக்காத உன் பல்லோட நாத்தம் மட்டும் போகாது.



நாக்கு முக்க நாக்கா
ஓ! ஷகலாக்கா...!
ஓ! ரண்டக்கா!


ஏ! சாலா சாலா

பொருள் : ஏய் ! மாமா மாமா!

இஸ்கு பரோரா

பொருள் : இங்க வந்து பாருடா!

ஒசாக்கா மொராயா

பொருள் : எசக்கி பொண்ண்ட்டாட்டி மொக்கராசு கூட ஓடி போறாடா...,......

பூம் பூம் ஜக்காக்கா

பொருள்: பூம் பூம் மாட்டுகாரன் கூட ஜல்சா பண்ணும் போதே நெனச்சண்டா.......

முக்காலா

பொருள் : மொக்கராசு மூக்கால அழுவான்னு.........

மய்யா....... மய்யா........ 

பொருள் : கொய்யாத் தோப்புக்குள்ள கொண்டுபோவானோ......?  கொய்யாத் தோப்புக்குள்ள கொண்டுபோவானோ......?


லாலக்கு லாலக்கு டோல்டப் பீமா

பொருள் : பேட் லக்கு! பேட் லக்கு! டோமரு பீமா பட விக்ரம் மாதிரியே சாகப்போறான்!



நாக்கு முக்க நாக்கா
ஓ! ஷகலாக்கா...!
ஓ! ரண்டக்கா!


ஓ! லாஹி ஓ லாஹி !
அயக்க யாஹி யாஹி!
மே ஹீ... மே ஹீ....
டைலாமோ டைலாமோ
ரஹத்துல்லா சொனாலி ஹோ.......


ஓ! மஹ ஸீயா...............




டிஸ்கி 1: இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று ஆய்வுமுயற்சிக்கு பக்கபலமாய் இருந்த அல்லது பக்கா பலமாய் இருந்த பக்கத்து வீட்டுக்கார‌னின் ரெண்டாவது மகளுக்கும், ஆய்வின் போது எங்குதேடியும் கிடைக்காத அரிய புத்தகங்களையெல்லாம் தேடித்தந்த எங்கள் தெருவின் சொறிநாய் பீகிளுக்கும் எனது நன்றிகள். 

டிஸ்கி 2: இந்த மொழிபெயர்ப்பு முழுப்பதிப்புரிமை உடையது. மொத்தமாகவோ , சில்லறையாகவோ வாங்கவோ விற்கவோ முடியாது. எனது மறைவுக்கு பின்னால் இந்த மொழிபெயர்ப்பை பதிப்பு செய்யும் உரிமை ஒக்ஸ்போர்ட் நிறுவனத்தாருக்கும் முன்வீட்டு முனிம்மாவுக்கும் மட்டுமே உரியது.

டிஸ்கி 3: தமிழ் வளர்த்த என்னை வாழ்த்து "ஏதாவது கொடுக்க" நினைப்போர் இந்த அரிய முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த எனது நண்பர்களான JZ கோபிநாத் , டூலிட்டில், சரவணா ஆர்.எஸ்.கே, தினகரன் ரேனுகா ஆகியோருக்கு கொடுக்கவும். எனக்கு பாராட்டும் மாலையும் மட்டும் போதும்.

டிஸ்கி 4: பதிவோட முடிவில செமத்தியான ஒரு ஆண்டியோட படத்த போட்டிருக்கான்டா என்று "ஜொள்"  மற்றும் இன்ன பிற நொதியங்களை ஊத்திய அனைவரும்  துடைத்துக்கொள்ளுங்கள்.  அந்த படத்தில் இருக்கும் நபர் வேறு யாருமல்ல. பாடசாலை படிக்கும் போது மாறுவேட போட்டியில் தோன்றிய சச்சின் டெண்டுல்கர்.








18 comments:

  1. நான் இத பாக்கல :P

    ReplyDelete
    Replies
    1. ஆனா நீங்க வந்து போனதை நான் பாத்துட்டேன் தல!

      Delete
  2. ரணகளத்திலும் ஒரு குதுகலமான பதிவு நண்பரே.

    //பத்து ரூவா காசுக்கு "ஆள் பிடிச்சு அனுப்பும் படலம்" திட்டத்தின் கீழ் முகநூல் நண்பர் சரவணா// சரவணா இதைப்பற்றி சொல்லவே இல்லை. லாபம் அதிகமோ?

    //"ஓ மஹ ஸீயா........." என்ற பாடலை தமிழில் மொழியாக்கம் செய்து இந்த வருட இலக்கியத்துக்காக நோபல் பரிசை ரெண்டு மூட்டையில கட்டி வீட்டுக்கு கொண்டுவந்திடுறது// இதை மொழி பெயர்த்த உங்களுக்கு உலகத்தில இருக்கிற எல்லா விருதையும் மூட்டையா கட்டி உங்க வீட்டுக்கே இலவசமா அனுப்பலாம். தப்பே இல்ல. பாட்ட எழுதினவன் கூட இப்படி யோசிச்சிருக்க மாட்டான்.

    //கலைஞர் தலைமையில் பாராட்டுவிழா எடுப்பீர்கள் என எதிர் பார்க்கிறேன்.// கலைஞர், அந்தாளு அடுத்தவங்களுக்கு பாராட்டு விழா எடுத்து பழக்கம் இல்லையே. அவருக்கு அவரே பாராட்டு விழா நடத்திக்கிறதுதானே வழக்கம்.

    ReplyDelete
    Replies
    1. ///சரவணா இதைப்பற்றி சொல்லவே இல்லை. லாபம் அதிகமோ?////

      இல்லாம பின்ன தலைக்கு பத்து ரூபா! அது போக காலுக்கு கைக்கு கிட்னிக்குன்னு தனி தனி ரேட்டு! மனுஷர் ரொம்ப லம்பா சம்பாதிக்கிறார். இதைத்தான் இணையத்தில் சம்பாதிப்பது எங்கிறது.

      ///இதை மொழி பெயர்த்த உங்களுக்கு உலகத்தில இருக்கிற எல்லா விருதையும் மூட்டையா கட்டி உங்க வீட்டுக்கே இலவசமா அனுப்பலாம். தப்பே இல்ல. பாட்ட எழுதினவன் கூட இப்படி யோசிச்சிருக்க மாட்டான்.////

      நான் புகழ், பணம் , பதவிய எதிர்பாத்து இந்த இலக்கிய சேவைய செய்யல! ஆனா அவங்களாவே வந்து அடுத்த அமேரிக்க அதிபர் நீங்க தான்னு சொன்னா என்னால தட்ட முடியாது பாருங்க!

      /////கலைஞர், அந்தாளு அடுத்தவங்களுக்கு பாராட்டு விழா எடுத்து பழக்கம் இல்லையே. அவருக்கு அவரே பாராட்டு விழா நடத்திக்கிறதுதானே வழக்கம்.////

      ஒரு சேஞ்சுக்காக நாம இப்பிடி பண்ணித்தான் பாப்போமே! அது போக "கலைஞரது வாழ் நாளிலேயே முதன்முறையாக" அப்டீன்னு சன் டீவில வேற வெளம்பரம் பண்ணிடலாம் இல்ல! அதுக்கு தான்.

      Delete
  3. //அப்பிடியாக ஒரு பிரபல பதிவராக ஆகிவிட்ட நான் //

    தல ஆகிபோச்சு , அது பிரபல பதிவர் இல்ல, ப்ராப்ள பதிவர்

    ReplyDelete
    Replies
    1. கடகம் புற்றின் மூலம்'ன்னு ரெண்டு பதிவ போட்டுபுட்டு காணாம போனவன் எல்லாம் இந்த பிரபல பதிவரோட பிளாக்குக்கு வரவே கூடாது. எங்கேய்யா "தி நாய் ஸ்டோரி"? நீரெல்லாம் ஒரு மனுசரு! நீர் தான் ஓய் பிராப்ள பதிவரு!

      Delete
    2. உனக்கே தெரியும் நண்பா , குஞ்சாக்கோ செத்த சொகத்துல இருந்து நான் இன்னும் மீள வில்லை

      Delete
    3. சரி நண்பா! துயர் பகிர்ந்தது போதும்! நீ ஒரு திறமையான கதாசிரியன், ஆகவே அந்த சோகத்தையும் சுகமாய் மாற்றும் ஒரு பதிவை உடனடியாக எழுதும்படி அன்புக்கட்டளை இடுகிறேன்.

      Delete
  4. பல்லேலக்கா பாடல் உருவான விதம் பற்றி சொல்ல மறந்துட்டியே தல ..

    any way me telling

    ஒரு முறை சேலம் அருகில் ரஜினி படப்பிடிப்பின் போது ஏலக்காய் ஒன்றை மென்று கொண்டிருந்தார் , அந்த ஏலக்காய் அவரது பல்லில் மாட்டி கொண்டது , உடனே படக்குழுவினர் அந்த ஏலக்காயை நீக்குவதர்க்காக எந்த மருத்துவமனை செல்லலாம் என்று விவாதித்தனர் , ஒருவர் சேலம் செல்லலாம் என்றார் , இன்னொருவர் மதுரை என்றார் . தயாரிப்பாளர் பேசாம் மெட்ராஸ் திருச்சி போன்ற பெரிய நகரத்திற்கு செல்லலாம் என்றார் , இந்த சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு உருவாக்கப்பாது தான் பல்லில் ஏலகாய் என ஆரம்பிக்கும் இந்த பாடல்

    ReplyDelete
    Replies
    1. ஆமா இது வரலாற்றுக்கு ரொப்ம முக்கியம். சம்மந்தமே இல்லாத இடத்தில வந்து சமந்தமே இல்லாம மொக்க மட்டும் போடத் தெரியுது ஒழுங்கா உக்காந்து ரெண்டு மூணு போஸ்ட் போட துப்பு கெடையாது. இன்னும் ரெண்டு நாளுக்குள்ள தி நாய் ஸ்டோரி வரல , அப்புறம் நான் வெறிநாய் ஆயிடுவேன்!

      Delete
  5. முக்காலா முக்கா புல்லா லைலா

    முக்காலா - முக்காலமும் உணர்ந்தவனே

    முக்கா புல்லா - முக்காலமும் புல்லாக (fully - முழுவதுமாக ) உணர்ந்தவனே

    லைலா - பொய்யே இல்லாதவனே ( lie இல்லா ) ... இறைவனே

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போன்ற கருத்து ஒன்று மாயன் கலண்டரில் சில இடங்களில் இருக்கிறது , ஆனாலும் குறித்த பாடலில் நான் குறிப்பட்டது போல தான் கருத்து வரும் என்று மூத்திர சந்தில் நான் கண்டெடுத்த ஓலைச்சுவடி கூறுகிறது. இதனை முனைவர் மண்ட கசாயமும் ஒத்துக்கொண்டுள்ளார்.

      Delete
  6. அவிழ்ந்தது இந்த மர்மம்தானா??

    ReplyDelete
    Replies
    1. இது இப்போவாவது அவுழ்ந்துச்சேன்னு சந்தோஷ படுவியா?

      *காஜல் அகர்வாலோட போட்டோவ பாத்ததும் வேற ஏதோ அவுழ போவுதுன்னு விழுந்தடிச்சு வந்தியாக்கும்.....!

      Delete
  7. Replies
    1. என்ன அண்ணே பதிவு புடிக்கலியா? lolன்னு குலச்சிட்டு மட்டும் போய்ட்டீக! ( சும்மா வெளாட்டுக்கு சொன்னேண்ணே கோவிக்காதிக!!) இப்போ நான் குலைக்கிறேன் Lol. ஹி...ஹி....ஹி.... வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிண்ணே!

      Delete
  8. மச்சி எப்பிடி உன்னால மட்டும் முடியுது. யாரு சொல்லாட்டியும் பரவாயில்ல நான் சொல்லுறன் நீ பிரபல பதிவர்தான்டா. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப்போச்சு. டாக்டர் டூலிட்டில கூப்பிடு

    ReplyDelete
    Replies
    1. நீயாவது ஒத்துகொண்டியே மச்சி! நேரம் இருக்கும் போது வா ! ஏதோ நாலஞ்சு சில்லற காசு தாறேன்.ஹி...ஹி...ஹி..... அது சரி இங்க எதுக்கு மச்சி நம்ம டாக்டர ப‌ஞ்சாயத்துக்கு இழுக்குற?

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...